சிவனடியார் ஆறுமுகசாமி - சிதம்பரம் - தமிழ் வழிபாடு போன்றவற்றில் என் கருத்துக்கள் பெரியார்தாசனின் கருத்துக்களை ஓட்டியவை (நான் நாத்திகன். ஆனால், அதனை முன்னிருத்தாதவன்) . ஆனால், இந்த பதிவு பார்ப்பனியத்தை பற்றியோ அல்லது அதன் தீ விளைவுகளை பற்றியோ, அதற்கெதிரான போராட்டத்தை பற்றியோ அல்ல. அதனை நான் செய்யக்கூடியதை விட மிக சிறப்பாகவே பல பதிவர்கள் செய்துவருகின்றனர்.
ஆனால், இது சம்பந்தமாக மகஇக என்ற கம்யூனிஸ்டு இயக்கம் இதனை உபயோகித்து ஆள் சேர்க்க இறங்கியபோது, இதன் அபாயத்தை உணர்த்தும் விதமாக பதிவுகள் எழுதினேன். கம்யூனிஸ எதிர்ப்பை வழக்கம்போல, பார்ப்பன ஆதரவு, திராவிட எதிர்ப்பு என்று திரிக்கும் வேலைகள் நடந்துகொண்டிருப்பது எனக்கு அதிர்ச்சி இல்லை. இதனை எதிர்பார்த்தேன்.
சமீபகாலமாக ஒரு டிரண்ட் நட்ந்துவந்துகொண்டிருக்கிறது. அது திராவிட/பார்ப்பன எதிர்ப்பு பதிவர்களை குறி வைத்து அவர்களை கம்யூனிஸ்டு கட்சிக்குள் உள்ளிழுக்கும் விதமாக கம்யூனிஸ்டுகள் (ஒரே ஆளா, அல்லது கும்பலா என்று தெரியாது) பல பதிவுகளை துவங்கி ஒரே கட்டுரையை பல்வேறு இடங்களில் பதிந்தும் ஒரு திட்டமிட்ட அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதன் விளைவுகள் நீண்டவை.
கடந்த நூற்றாண்டில் ஒரு பெரிய வீழ்ச்சியை கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டில் சந்தித்தார்கள். அது பற்றி "கலைஞருக்கு பாரத ரத்னா" என்ற பதிவில் சுட்டியிருந்தேன்.
திராவிட முன்னேற்ற கழகமும், பெரியாரிய சிந்தனைகளும், அன்றைக்கு பிரபலமாக இருந்த கம்யூனிஸ்டு சிந்தனைகளுக்கும், காங்கிரஸ் சிந்தனைகளுக்கும் மாற்றாக வந்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இனத்தினரின் எழுச்சியாக வந்தது. அன்று காங்கிரஸ் கம்யூனிஸ்டு என்ற இரண்டு கட்சிகளுமே பார்ப்பனர்கள் தலைமையில் இருந்தன என்பது ஒரு உபரி செய்தி.
கம்யூனிஸ்டு கட்சியின் பக்கம் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் திராவிட முன்னேற்றக்கழகத்துக்குச் சென்றார்கள். அதனால், பெருத்த வீழ்ச்சியை சந்தித்தது கம்யூனிஸ்டு இயக்கம். ஏராளமான நக்ஸல்பாரி இளைஞர்கள் திராவிட முன்னேற்றக்கழகம் சென்றார்கள். தலைவர்கள் கம்யூனிஸ்டு கட்சியில் மீதமிருந்தாலும், மக்கள் ஆதரவு திமுகவுக்கே சென்றது. இதன் விளைவு, தமிழ்நாட்டில் தொழில்புரட்சி ஏற்பட்டது, நிறுவனங்கள் உருவாகின. இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு ஆனது. மேற்குவங்கம், கேரளா போன்ற சிபிஎம் மாநிலங்கள் அடைந்த பின்னடைவையோ, நக்ஸல்பாரி தீவிரவாதம் இருக்கும் ஜார்க்கண்ட், சட்டிஸ்கார்க், தெலுங்கானா போன்ற பகுதி மக்கள் அடைந்த பின்னடைவையோ தமிழக மக்கள் சந்திக்காமல் வெற்றிநடை போட்டார்கள்.
நக்ஸ்லைட்டுகளால் எந்த தொழில் முன்னேற்றம் இல்லையோ அதே தொழில் முன்னேற்றத்தை தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அடையும்போது அதனை கெடுக்கும் வேலையையும், அந்த தொழிற்துறையால் படித்து பட்டம் பெற்று வேலையில் இருக்கும் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்து தன்னை வளர்ப்பதையும் கம்யூனிஸ்டு இயக்கங்கள் செய்து வருகின்றன.
-
திமுகவுக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்ன என்பதை எண்ணிப்பார்ப்போமானால், இதனை ஓரளவுக்கு புரிந்த்கொள்ளலாம்.
திமுக பார்ப்பனரல்லாதாரின் உரிமை இயக்கம். அது பார்ப்பனரல்லாதார்கள் ஒடுக்கப்பட்டு உரிமை இழந்து இழிவு செய்யப்பட்டுக்கொண்டிருந்த சமூக சூழ்நிலையில் அவர்களது உரிமைகளை மீட்டெடுக்கவும், பரந்த தளத்தில் எல்லோருக்குமான உரிமைகளை பற்றி பேசவும் தொடங்கிய ஜனநாயக இயக்கம். இது அறவழியிலும், சட்டரீதியான போராட்டங்களிலுமே தன் உரிமைகளை நிலைநாட்டி வந்துள்ளது.
சட்டரீதியான போராட்டம் என்றால், யாரோ எழுதிய சட்டத்துக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்தில் ஈடுபட்டு தாங்கள் விரும்பிய புதிய சட்டங்களையும் உருவாக்கியிருக்கிறது. ஏராளமான மாறுதல்களை தமிழ்நாட்டில், மக்கள் உரிமைகளை பெற்றுத்தந்துள்ளது.
இந்த வழி மெதுவான வழியாக இருந்தாலும் சரியான வழி. இதே ஜனநாயக அமைப்புக்குள்ளான தனது பணியில் தவறுகள் நடந்திருக்கின்றன. அது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அறிஞர் அண்ணாவும் கலைஞரும் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
ஆனால், கம்யூனிஸ்டுகளின் நடைமுறையோ, நோக்கமோ, வழிமுறையோ இதுவல்ல.
முன்பு சீர்திருத்தமே கூடாது, நேராக புரட்சி பண்ணவேண்டும் என்று அழைப்பு விடுத்து பெரியாரின் சீர்திருத்த பாதையை புறக்கணித்தார்கள். புரட்சி வந்ததும் ஜாதிகள் எல்லாம் ம்றைந்துவிடும் என்று கதையளந்தார்கள்.
தற்போது, அந்த பருப்பு வேகவில்லை என்று கண்டவுடன், ஜாதிகளில் வர்க்கம் உறைந்துள்ளது என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போதும், பெரியாரின் வழியை மேற்கொள்ளாமல், பெரியாரின் வார்த்தைகளை மட்டும் எடுத்து, பெரியாரின் வழியில் செல்பவர்களிடம் பேசி தங்களுக்குள் இழுத்துக்கொள்ள அலைகிறார்கள்.
கம்யூனிஸ்டு இயக்கம் உரிமை இயக்கம் என்று பெயர் சொல்லி வந்தாலும், வார்த்தை ஜாலம் காட்டினாலும் அது உரிமை இயக்கம் அல்ல. அது எல்லோருடைய உரிமைகளையும் பறித்து ஒரு சிலரை பொலிட்பரோ ஆட்களாகவும் கட்சி ஆட்களாகவும் ஆக்கி அவர்களிடம் எல்லா அதிகாரத்தையும் குவிக்கும் ஒரு அமைப்பு என்பது தெளிவு.
கேரளாவிலும் மேற்குவங்காளத்திலும் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த மர்மம் என்ன? அது மேல்ஜாதிக்காரர்கள் சிறுபான்மையினரை அடக்கி அவர்களது ஓட்டுக்களையும் வாங்கி ஆட்சி செய்ய கிடைத்த உபகரணம் கம்யூனிஸ்டு இயக்கம்.
மிக எளிதில், யாரெல்லாம் கேரளாவிலும் மேற்குவங்காளத்திலும் ஆட்சியில் இருந்தார்கள் இருக்கிறார்கள் என்பதைபார்த்தால் இதனை அறிந்துகொள்ளலாம். ஜாதி, மதம் கடந்த கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கிறிஸ்துவரோ அல்லது முஸ்லீமோ ஆட்சி செய்ய ஆள் கிடைக்கவில்லையா? காங்கிரஸ் கிறிஸ்துவ முதலமைச்சர்களை கேரளாவில் பதவியில் அமர்த்தியது. காங்கிரஸ் பிகாரில் முஸ்லீம் முதலமைச்சர்களை பதவியில் அமர்த்தியது. மஹாராஷ்டிராவில் முஸ்லீம் முதலமைச்சர்களை அமர்த்தியது. அஸ்ஸாமில் ஒரு முஸ்லீம் ஆட்சியில் இருந்தார். 1977இலிருந்து ஆட்சியிலிருக்கும் கம்யூனிஸ்டு கட்சி எத்தனை முறை பிற்பட்டவரை, அல்லது மாற்று மதத்தினரை பதவியில் அமர்த்தியது? ஒரு ஈழவர் கேரளாவில் முதல்வராக ஆக எத்தனை உள்எதிர்ப்பு இருந்தது என்று கேரள அரசியலை தெரிந்தவர்களை கேளுங்கள்.
சிபிஎம் எல் என்ற மாவோயிஸ்டு தலைவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். எத்தனை பேர் பிற்பட்ட வகுப்பினர்? எத்தனைபேர் மாற்று மதத்தினர்? கேட்டால், எங்களுக்குள் ஜாதி மதம் வேறு பாடு இல்லை என்று பம்மாத்து பண்ணுவார்கள்.
அதுமட்டுமல்ல, கம்யூனிஸ சமுதாயத்தில் மத அடையாளம் உண்டா என்று கேளுங்கள். இல்லை, எல்லோருடைய தன் அடையாளங்களும் அழிக்கப்படும் என்று சொல்வார்கள். ராமன் இந்தியாவின் தேச நாயகன் (என்னவோ அது மாதிரி) என்று பாஜக சொன்னால், அதனை எதிர்க்கவேண்டும், ஆனால், கம்யூனிஸ்டு கட்சி எல்லோருடைய சுய அடையாளங்களையும் அழிப்பேன் என்று சொன்னால் ஆதரிக்கவேண்டுமா?
சுய அடையாளங்கள் அழிந்துவிடுமா? நிச்சயம் அழியாது. அழித்தாலும் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் அதுவே மனித குணம். அப்படியிருக்கும்போது, எல்லா அதிகாரங்களையும் "பாட்டாளிகளின்" பெயரில் தன் கையில் குவித்துக்கொண்டு வெறியாட்டம் ஆடப்போகிற கம்யூனிஸ்டுகளை யார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது? மக்களிடம் ஓட்டுக்கள் இராது. ஏனெனில், ஓட்டுப்பொறுக்கி அரசியலை அவர்கள் நம்புவதில்லையாம். மக்கள் தனியே தொழிற்சங்கங்கள் வைக்கமுடியாது. ஏனெனில், தொழிலாளிகளின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நடக்கும்போது எதற்கு தனியே தொழில்சங்கம்? ஏமாந்தா.. மொளகாய்தான்.
இன்றைக்கு பிற்பட்டவர்களின் உரிமைப்போராட்டம் திமுகவாக உருவாக இந்த ஜனநாயக அமைப்பில் இடம் இருக்கிறது. வன்னியர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று கருதும்போது அவர்கள் அரசியல் ரீதியில் ஒன்றிணைய இந்த ஜனநாயக அமைப்பில் இடம் இருக்கிறது. முஸ்லீம்கள் தங்கள் உரிமைக்காக ஒன்றிணைய இந்த அரசியல் அமைப்பில் இடம் இருக்கிறது. எதிர்காலத்தில் யார் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்று நாம் அறியமாட்டோம். ஒரு வினோதமான ஒரு பிரச்னையை சொல்லுகிறேன். ஸ்விட்ஜர்லாந்தில் கார் ஓட்டுபவர்கள் சங்கம் இருக்கிறது. கார் வைத்திருப்பவர்கள் மீது அதிகமான வரி விதிக்கிறார்கள் என்று அவர்கள் ஒன்றிணைந்து ஒரு அரசியல் கட்சி நடத்தி அவர்கள் ஸ்விர்சர்லாந்து பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். நாளை தமிழ்நாட்டில் தெருக்களில் எல்லோரும் கார்கள்தான் ஓட்டவேண்டும், சைக்கிள் ஓட்டக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால், சைக்கிள் ஓட்டுபவர்கள் போராட்டம் நடத்தலாம். யார் கண்டது?
இந்த ஜனநாயக அமைப்பு, பிரச்னைகளை பேசவும், அவற்றை பகிரங்கப்படுத்தவும், அதற்காக போராடவும், அவ்வாறு மக்கள் ஒன்றிணைந்து அரசியலில் ஈடுபட்டு பாதகமான சட்டங்களை மாற்றவும் வழி அமைத்து தருகிறது.
இந்த அமைப்பை ஒழித்து அதன் மீது தங்கள் சர்வாதிகாரத்தை கட்டத்தான் கம்யூனிஸ்டுகள் அலைகிறார்கள். ஆகவே, பார்வைக்கு வெளியே உரிமைகளுக்காக கோஷம் போடுவதையும், சிறுபான்மையினர் உரிமைகளுக்காக போராடுவதாகவும், தொழிலாளர் நலத்துக்காக போராடுவதாகவும் கதை பண்ணும் கம்யூனிஸ்டுகள், அப்படி உரிமை கேட்டு போராட அனுமதிக்கும் சமூக அடிப்படையையே அழிப்பதையே தங்கள் குறிக்கோளாக கொண்டுள்ளார்கள்.
உரிமைகள் கேட்டு போராடுவதில் கால தாமதம் ஆவதை வைத்து, இந்த அரசியல் அமைப்பே இப்படிப்பட்ட அமைப்புதான் என்று மக்களை நம்பவைத்து, அப்படி உரிமைகள் கேட்டு போராடவே முடியாத ஒரு சர்வாதிகார அமைப்பை உருவாக்க முனைபவர்கள்.
அத்னால்தான் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் எதுவாக இருந்தாலும் நான் எதிர்க்கிறேன். அப்படிப்பட்ட கம்யூனிஸ்டுகளோடு தற்காலிகமாக உறவு கொண்டாலும், அப்படி உறவு கொள்ளும் எந்த கட்சியையும் எதிர்ப்பேன்.
Donnerstag, 31. Januar 2008
| [+/-] |
பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரில் கம்யூனிஸ்டு ஆள்சேர்ப்பு திட்டம் பற்றி.. |
Mittwoch, 30. Januar 2008
| [+/-] |
நண்பர் சம்பூகனின் கேள்விகளும், அதற்கு பதில்களும். |
முதலில் தாமதமாக நண்பர் சம்பூகனின் பதிவை பார்த்ததற்கும், தாமதமாக மறுமொழி எழுதுவதற்கும் வருந்துகிறேன்.
--
நண்பர் சம்பூகன் கேட்டிருக்கும் கேள்விகளும் என் பதில்களும்.--
அனைத்து தமிழர்களுக்கும் கருவறையின் உள்ளே சென்று தனது மொழியில் வழிபட உரிமை இருக்கிறதா இல்லையா? இல்லை என்றால் ஏன்? இந்த போராட்டம் சரியா தவறா?
நிச்சயம் உண்டு. இருக்கவேண்டும்.
சிதம்பரம் கோவிலை ஏன் அரசுடைமையாக்கக்கூடாது?
அரசுடமை ஆக்குவதும் ஆக்காததும், அந்தந்த அரசாங்கத்தையும் அந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தவர்களையும் பொறுத்தது. எத்தனையோ கோவில்களை அரசுடமையாக்கியிருக்கிறார்கள். சிதம்பரத்தை ஆக்கினால் என்ன?
ஆனால், அரசுடமை என்ற பெயரில் திமுக அரசு செய்வது, செய்யக்கூடியது வேறு, கம்யூனிஸ்டுகளின் அரசுடமை கொள்கை வேறு. இதனை தனி பதிவாக எழுத முயற்சிக்கிறேன்.
கடவுள் பெயரை குறிப்பிடாத அந்த மிகச்சில சங்கத்தமிழ் பாடல்கள் எத்தனை?
எனக்கு தெரியாது. ஆனால், திமுகவுக்கு கடவுள் பெயர் வராத தமிழ் பாடல்களே தமிழ் பாடல்கள், மற்றவையெல்லாம் அழிக்கப்படவேண்டும் என்று எந்த விதமான கருத்தும் இல்லை. ஆனால், கம்யூனிஸ்டுகள், வரலாற்றிலேயே கை வைப்பவர்கள். இதெல்லாம் பூர்ஷ்வா கலாச்சாரம் என்று அழித்தொழிப்பில் இறங்கியவர்கள். உதாரணமாக கலைஞர் தஞ்சை பல்கலைக்கழகத்தை தஞ்சை கோவில் பாணியில் வடிவமைத்திருக்கிறார். ஆனால், அது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் பூர்ஷ்வா கலாச்சாரம் என்று இடிக்கப்படும். இதனையே சீன கம்யூனிஸ்டுகளும், போல்போட் கம்யூனிஸ்டுகளும் செய்தார்கள். அதனையே இவர்களும் செய்வார்கள்.
ராமனையும் கிருஷ்ணனையும் வசைமாறி பொழிவது தவறா?
மனிதர்களது கருத்துரிமையை எப்போதுமே நாம் உரத்த குரலெடுத்து காப்பாற்றவேண்டும். ராமனை கிருஷ்ணனை வசை மாறி பொழிவதற்கு தற்போது இருக்கும் உரிமை போலவே, கம்யூனிஸ்டுகளின் சாம்ராஜ்யத்தில் லெனின், மாவோ, போல்போட், ஸ்டாலின், மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோர் மீது வசை மாறி பொழிவதற்கு சுதந்திரம் வேண்டும். அது இருக்காது என்பதாலேதானெ நான் கம்யூனிஸ்டுகளை எதிர்க்கிறேன்? இந்த சுதந்திரம், கம்யூனிஸ்ட்கள் அமைக்கப்போகும் புரட்சி நாட்டில் இருக்குமா என்பதை அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். அப்படி குரலெடுத்து வசை மாறி பொழிபவர்களை எப்படி நடத்துவார்கள் என்பதையும் கேட்டுச் சொல்லுங்கள்.
நீங்கள் தன்மான தந்தை, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை ஏற்றுக் கொள்கிறீர்களா இல்லை? ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் எந்த வகையில்? மறுக்கிறீர்கள் என்றால் எந்த வகையில்?
ஏன் மறுக்கவோ ஏற்றுக்கொள்ளவோ வேண்டும்? எல்லோருக்கும் அவரும் நாமும் இணையும் புள்ளிகள் ஏராளம் இருக்கும். அவரும் நாமும் பிரியும் புள்ளிகளும் ஏராளம் இருக்கும். அதுதானே ஒவ்வொருவரின் தனி இருப்பை அடையாளப்படுத்துகிறது? (பிரியும் புள்ளிகளை விட இணையும் புள்ளிகள் ஏராளம் என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்)
தன் நீண்ட வாழ்வில் வரலாற்றில் வன்முறையை கையில் எடுக்காமல் தன் பிரச்சாரத்தின் மூலமே தமிழ்நாட்டை புரட்டி போட்டவர் என்ற வகையிலும், தன் தீவிர கருத்து எதிரிக்கும் தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பராக இருந்தவர் என்ற பண்பாளர் என்ற வகையிலும் அவர் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு.
அவரது இந்த போற்றத்தக்க குணங்கள் நம்மிடம் இருக்கிறதா என்பதையே நாம் ஒவ்வொரு வினாடியும் சிந்திக்க வேண்டும்.
Dienstag, 29. Januar 2008
| [+/-] |
கோவில்பட்டி தட்டியில் சமஸ்கிருத ஆதரவு வரிகள்! |
நண்பர் அசுரன் வழக்கம்போல, ஹை பிளட் பிரஷரில் பதிவு போட்டிருக்கிறார். கண்ணில் தென்படும் அனைத்தையும் நைய புடைப்பது, கொல்லுவது, கழுத்தை நெரிப்பது போன்றவைகளை செய்யவேண்டும் என்று மிகுந்த அவா கொண்டிருக்கிறார். அவரது வழக்கமான ஹை பிளட் பிரஷர் பதிவு கீழே.
அதற்கு பதில் ஊடாக.
//
கோவில்பட்டியில் பீறிட்டோடும் பார்ப்பன இன வெறி!!
Posted by newscap on January 28, 2008
//
பீறிட்டோடுவது ஏதோ ஆறோ, ஓடையோ என்று பார்த்தால் வெறும் போர்டு. நடுத்தெருவில் அனாதையாக போவோர் வருவோர் துப்புவதற்கும் காகம் பேளுவதற்கும் தோதாக நின்றுகொண்டிருக்கிறது.
//
தமிழ்நாட்டின் மொழியாம் தமிழ்மொழியில் வழிபடு என்று சொன்னால் அது மொழி வெறியாம் ஏனெனில் தமிழ் நம்முடைய மொழியாம் ஆனால் சமஸ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், உலகத்தவர்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய பொதுவான மொழியாம் அந்த வகையில் அது உயர்ந்ததாம்.கடவுளின் மொழி சமஸ்கிருதம் உலகம் முழுவதற்க்கும் புரிந்த மொழி அதுதான் எனவே அந்த மொழியில் கடவுளிடம் பேசு என்று மொழி வெறியில் அல்ல பார்ப்பன பண்பாட்டு வெறியில் ஒரு தட்டி போர்டு எழுதி அதை தைரியமாக பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர் கோவில்பட்டியில். எனது மொழி என்பது வெறும் எனது மொழி மட்டும்தானாம் அதில் அதற்க்கு மேல் ஒன்றும் கிடையாதாம். மாறாக சம்ஸ்கிருதம்தான் அதி சிறந்ததாம். ஏன் இந்த தட்டி போர்டையே சம்ஸ்கிருதத்தில் எழுதி வைத்திருக்கலாமே?
//
தமிழ்நாட்டின் மொழி தமிழா? அட எனக்கு தெரியவில்லையே? அட ஞான சூனியமே என்று என் தலையிலேயே தட்டிக்கொண்டேன். முஸ்லீம்கள் உருதுவில் பேசுகிறார்கள். அரபியில் சாமி கும்பிடுகிறார்கள். தெலுங்கு செட்டியார்கள் தெலுங்கும் தமிழும் கலந்த ஒரு கலவையில் பேசுகிறார்கள். தமிழ் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் அவ்வப்போது லத்தீன் பூஜை வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் கன்னடம் பேசும் மக்கள் வீட்டில் கன்னடம் பேசுகிறார்கள். கன்னட பாடல்களை பாடுகிறார்கள். ஈவே ராமசாமி கூட வீட்டில் அப்படி கன்னடம் பேசியவர்தான் என்று சொல்லுகிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகள் வீட்டில் மலையாளம் பேசுகிறார்கள். அது கிடக்கட்டும். என் நண்பர் பஞ்சாபி. வீட்டில் ஆங்கிலம் பேசுகிறார். ரஜினிகாந்த் ரசிகர். மனைவி தெலுங்கர். அவருக்கு தமிழும் தெரியாது, பஞ்சாபியும் தெரியாது. இருவருக்கும் பொதுமொழி ஆங்கிலம்தான். அவரது சகோதரர் தமிழ் தெரியாத ஆனால் கன்னடம் மட்டுமே பேசவும் எழுதவும் தெரிந்த தமிழ் பெண்ணை பெல்காமில் திருமணம் செய்திருக்கிறார். எல்லோரும் சென்னையில்தான் வசிக்கிறார்கள். இதுபோல தேடிப்பார்த்தால், தமிழ்நாட்டில் வீட்டிலும் வெளியிலும் தமிழ் மட்டுமே பேசத்தெரிந்த "தமிழர்கள்" தமிழ்நாட்டில் சிறுபான்மையாகத்தான் இருப்பார்கள். அப்படி பேசும் தமிழர்களின் பூர்வீகத்தை ஆராய்ந்தாலும், அது எங்கோ வடக்கில் சிந்து மாகாணத்திலோ, இன்னும் பின்னால் போனால், ஆப்பிரிக்காவிலோதான் நிற்கும். தமிழ்மொழி தமிழ்நாட்டில் வாழும் பெரும்பான்மையானவர்கள் புரிந்துகொண்டு ஒருவரோடு ஒருவர் உறவாட உள்ள மொழி.
அது மட்டுமல்ல, இதே விஷயம்தான் கேரளாவிலும், கர்நாடகாவிலும், ஆந்திராவிலும், ஏன் எல்லா இந்திய மாநிலங்களிலும் இருக்கும். மக்கள் சுதந்திரமாக எல்லா நகரங்களிலும் போய் வேலை தேடுகிறார்கள். மனைவி தேடுகிறார்கள். தங்குகிறார்கள். தங்கும் இடத்தை செழிப்பாக்குகிறார்கள்.
சன் டிவியிலும் விஜய் டிவியிலும் ஏன் முக்கால்வாசி பெண்களும் ஆண்களும் அரைகுறை தமிழும் அரைகுறை ஆங்கிலமும் கலந்து பேசுகிறார்கள் என்றால், ...
அதுதான் அவர்கள் மொழி. அது மக்களின் மொழி. மொழி புலவர்களுக்காகவோ, அல்லது அரசியல்வாதிகளுக்கோ காத்திருப்பதில்லை. அது ஒரு உயிருள்ள ஜீவன். அது தொடர்ந்து வளர்ந்து மாறுதல் அடைந்துகொண்டே செல்கிறது. உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் போடும் வெட்டி கோஷத்தால் வளர்ச்சியும் நிற்பதில்லை. மாறுதலும் நிற்பதில்லை.
தமிழ்நாட்டில் இருக்கும் குஜராத்தி ஜைனர்கள் குஜராத்தியில் கும்பிடுவார்கள். அவர்களிடம் போய் தமிழில் வழிபடு என்று சொன்னால், அது மொழி வெறி இல்லையா? முதலில் மனிதர்களின் சுய தேர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை பாடம். நீங்கள் கம்யூனிஸத்தை (அது எவ்வளவுதான் அராஜக, தவறான, குரூரமான, ஜனநாயக விரோத,மக்கள் விரோத கொள்கையாக இருந்தாலும்) நல்ல கொள்கை என்று நம்புவதற்கு உங்களுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அதன் கொள்கையைபிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறதோ அதே போல, சமஸ்கிருதம், அரபி ஆகியவற்றில்தான் இறைவனை தொழ வேண்டும் என்று கூறவும் மக்களுக்கு (அவர்கள் எந்த மக்களாக இருந்தாலும்) உரிமை உண்டு. அதனை பிரச்சாரம் செய்யவும் உரிமை உண்டு.
ஏன், தமிழ்மொழி தமிழ்நாட்டில் யாரும் பேசவேண்டாம், உங்கள் வீடுகளிலும், உங்கள் வேலைக்காரர்களிடமும் ஆங்கிலமே பேசுங்கள் என்று தமிழில் பிரச்சாரம் செய்யவும் ஒருவருக்கு இங்கே உரிமை உண்டு. (அவ்வாறு பேசிய தமிழ்நாட்டு பெருந்தலைவர் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்)
//யாருமே பேசாத மொழியாம் சம்ஸ்கிருதத்தில் வழிபடு என்று தைரியமாக சொல்வதோடல்லாமல் தமிழில் வழிபடு என்று சொல்வது இனதுவேசத்தால் என்கிறார்கள்? அதாவது எனது மொழியில் எனது கடவுளை கும்பிடுவேன் என்று விரும்புவது சம்ஸ்கிருத இனத்தின் மீதான துவேசத்தாலாம். அதாவது எனது மொழியை நான் விரும்பக் கூடாதாம். இனத் துவேசம் என்றால் எந்த இனத்தின் மீதான துவேசத்தால்? அப்படியானால் சம்ஸ்கிருதத்திற்க்கு என்று இனம் உள்ளதா? அப்படியானல் அந்த தட்டி போர்டே சொல்வது போல அது எல்லா இனத்திற்க்குமான மொழியில்லையா? யாருமே பேசாத மொழி எந்த இனத்திற்க்குரியாதாக இருக்க முடியும். பித்தலாட்டக்கார பார்ப்பன பண்பாட்டு வெறியர்களுக்கும் இவையெல்லாம் தெரியாமலில்லை. பார்ப்பன பண்பாட்டு அடிமைகளுக்கோ இவற்றை பகுத்தாராயும் மனிதனுக்குரிய அறிவு இல்லை.//
சமஸ்கிருதத்தில் வழிபடு என்று அவர்கள் சொல்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவுக்கு அதில் வழிபடாதே என்று சொல்லவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், வழிபடுபவன் எதனையாவது தேர்வு செய்யும்போது அதனை தடுக்கவோ, அல்லது அவனது உரிமையை பறிக்கவோ உங்கள் இருவருக்கும் இடமில்லை. சமஸ்கிருதத்திலோ, அல்லது அரபியிலோ, அல்லது லத்தீனிலோ வழிபடு என்று சொல்பவனை தெருவில் நைய புடைக்கவும் உங்களுக்கு உரிமை இல்லை.
//
எனது கடவுளை எனக்கு தெரிந்த மொழியில் வழிபடுவது எனது உரிமை என்று கோரினால் அவ்வாறு கேட்பவர்கள் கடவுள் பக்தியில்லாத அரசியல் பிழைப்புவாதிகளாம். சிதம்பரத்தில் தமிழில் வழிபடும் உரிமை கோரி போராடும் ஆறுமுகச்சாமி என்னும் சிவனடியாரும் இவர்கள் கணக்கில் கடவுள் பக்தியில்லாதவர். உண்மையில் அவரை அப்படித்தான் நடத்தினார்கள் தில்லைவாழ் தீட்சிதர்களும், அவர்களின் அல்லக்கையான நீதிமன்றமும். அதாவது பார்ப்பனியத்தின் பண்பாட்டு மேன்மையை ஏற்றுக் கொள்ளாத யாரும் இவர்கள் கணக்கில் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்தான். அதாவது பார்ப்பான்தான் கடவுள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த வெறியர்கள்.
//
ஆறுமுகசாமி செய்வது இன்னொரு அபத்தம். சிவாச்சாரியார் பூஜாரியாக இருக்கும் கோவிலில் நான் எப்படி என் கடவுளை வழிபடலாம் என்பது அவருக்கும் அவரது கோவிலுக்கு வருகிறவர்களுக்குமான ஒரு எழுதப்படாத ஒப்பந்தம். அந்த கோவிலில் இப்படி வழிபடுவேன் என்று தெரிந்துதான் பக்தன் அங்கே வருகிறான். அவனுக்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று போர்டு மாட்டியிருப்பது தெரியும். தமிழில் அர்ச்சனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டால், அந்த அர்ச்சகர் தமிழிலும் அர்ச்சனை செய்வார். மக இக ஆட்சிக்கு வந்ததும், அங்கு ரஷிய மொழியில் அர்ச்சனை செய்யப்படும் என்று வேண்டுமானாலும் போர்டு வைக்கச்சொல்லுங்கள். எந்த பக்தராவது கேட்டுக்கொண்டால், உங்களால் நியமிக்கப்படும் ரஷிய மொழி அர்ச்சகர் ரஷிய மொழியில் அர்ச்சனை செய்து தருவார்.
விளையாட்டுக்கோ அல்லது கேலிக்கோ சொல்லவில்லை. உண்மையிலேயே ரஷியாவில் இந்துமதம் பரவி அங்கிருந்து மயிலாப்பூர் கோவிலுக்கு ரஷிய மொழி பக்தர்கள் வந்தால் என்ன செய்வது? மக இக சொல்லாமலேயே திமுக அரசு அந்த போர்டை மாட்டும். கவலையே வேண்டாம்.
ஆறுமுகசாமிக்கு தமிழில் பாடவேண்டும் என்று ஆசையிருந்தால், அவருக்கு ஒரு சிதம்பர கோவில் கட்டித்தாருங்கள். அங்கு அவரை பாடச்சொல்லுங்கள்.
//தமிழ் வழிபடுவதற்க்கான மொழியில்லை என்று வரலாற்றை திரித்துக் கூறும் இந்த பார்ப்பனியர்கள் இதன் மூலம் தமிழ் நீச மொழி என்பதை வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள். தமிழ் வழிபாட்டு மொழி என்ற வரலாற்றிற்க்கும் கூட தில்லையே ஆதரமாக இருக்கிறது. சிவாலயங்கள் அங்கு வழிபடும் சைவர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் இவர்கள் சைவர்கள் என்று யாரைச் சொல்வார்கள் எனில் பார்ப்பனியத்தை சுவீகரித்துக் கொண்டவர்களைத்தான். ஏனேனில் பார்ப்பனியத்தை எதிர்த்து நிற்க்கும் ஆறுமுகச்சாமி என்ற சிவனடியாருக்கு இவர்கள் குரல் கொடுப்பதில்லை.
சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்குமான சநாதன தர்மம் என்று வெளிப்படையாக பார்ப்பனியத்தை பேசுகிறது இந்த தட்டி போர்டு.
மானங்கெட்ட இந்த தட்டி போர்டு ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும், அவர்களின் மொழியையும், பண்பாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொதுச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதை தட்டிக் கேட்பதுடன் அல்லாமல் பார்ப்பன் பண்பாட்டு வெறியர்களையும், அவர்களின் அல்லக்கை அடிமைகளையும் நடு ரோட்டில் வைத்து நையப் புடைக்க வகையின்றி தமிழ் சமுதாயம் இருப்பது ஆக அவமானகரமானது.
இமெயிலில் செய்தி: குருசாமி, கோவில்பட்டி.
செய்திரசம்.
//
ஏன் இஸ்லாம் பாரத தேச மக்களுக்கு அனைவருக்குமான அரபி மதம் என்றுகூட தட்டி வைக்கலாம். அல்லது எல்லோரும் மாவோ லெனின் ஸ்டாலின் வழியில் பக்கத்துவீட்டுக்காரர் எல்லோரையும் சுட்டுபொசுக்கவேண்டும் என்றுகூட நீங்கள் தட்டி வைக்கலாம். என்ன பிரச்னை? வையுங்கள். நாங்கள் விரும்பும் கம்யூனிஸ்டு புரட்சி நட்ந்தால், எல்லா எஞ்சினியர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், கல்வி கற்றவர்கள் எல்லோரையும் சுட்டுத்தள்ளுவோம் என்று தட்டி வையுங்கள். யார் கண்டார்? பைத்தியக்காரனை சுற்றியும் பத்துபேர் என்பார்கள். உங்களுக்கும் கூட்டம் வந்தால் வரலாம்.
தமிழில் வழிபடு என்று சொல்ல ராமானுஜருக்கு எப்படி உரிமை இருந்ததோ அதே போல அதனை பின்பற்றாமல் சமஸ்கிருதத்தில் வழிபடவும் மற்றவர்களுக்கு உரிமை உண்டு. ஆறுமுக சாமி தனியே கோவில்கட்டி அதில் அவர் தமிழில் பாசுரம் பாடட்டும். ராமானுஜர் தன்னை பின்பற்றியவர்களிடம் திருப்பாவை முதல் எடுத்து இறைவனை பாடச்சொன்னார். (தமிழில் பாடாதவர்களை நடுத்தெருவில் நையப்புடைத்து தன் ஆணைகளை நிறைவேற்றிக்கொள்ளவில்லை) ஆந்திராவில் தமிழ் ஒருவார்த்தை தெரிந்திராத தெலுங்கு பூசாரிகள் தமிழில் திருப்பாவை பாடித்தான் திருப்பதியில் ஆரம்பிக்கிறார்கள். அங்கு சென்று தெலுங்கில் பாடு, தமிழில் பாடாதே என்று போரிடப்போகிறீர்களா? அல்லது அந்த பூசாரிகளை நடுத்தெருவில் இழுத்து போட்டு நைய புடைக்கப்போகிறீர்களா? தமிழில் பாடியதற்காக அந்த பூசாரிகளை மாவோயிஸ்டுகள் செய்வது போல கழுத்தை வெட்டி துண்டாக்கப்போகிறீர்களா?
--
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்பது சரியான விஷயம். ஏனெனில், அதுவே பெரும்பான்மையான மக்களின் தொடர்பு மொழி.
அதே போல, பண்டைய இந்தியாவின் தொடர்பு மொழியாக இருந்தது சமஸ்கிருதம். இன்று தொடர்பு மொழியாக இருப்பது ஆங்கிலம். இரண்டின் மீது வெறுப்பு கொண்டிருப்பவர்களும் மக்கள் விரோதிகளே.
மொழிவெறி, இனவெறி என்று சிவாச்சாரியார்கள் எழுதியது உண்மைதான். தமிழ்நாட்டில் தமிழில்தான் பேசவேண்டும், கும்பிடவேண்டும் என்று ஆணையிட நீங்கள் யார்? தமிழ்நாட்டின் பன்மைத்தன்மையை, இந்தியநாட்டின் பன்மைத்தன்மையை மறுத்து அதன் மீது ஒற்றை அடையாளத்தை திணிக்கும் அனைத்து விஷயங்களும் எதிர்க்கப்படவேண்டியவையே.
ஆனால், மற்ற கட்சிகளுக்கும் உங்களுக்கும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. இதே போன்று ஒற்றை அடையாளத்தை தூக்கி நிறுத்தும் திமுக வன்முறை கட்சி அல்ல. அந்த கட்சியில் உள்ளவர்கள் சில வேளைகளில் வன்முறையில் இறங்கியிருக்கலாம். ஆனால், கட்சியின் கொள்கையில் வன்முறை இல்லை. வன்முறையை நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால், கம்யூனிஸ்டுகள் அப்படியல்ல. வன்முறையை நியாயப்படுத்துபவர்கள். கையில் ஏகே47 வைத்திருப்பவனிடம் என்ன வாதிட முடியும்? திமுக, பிரச்சாரம் செய்து தன் இருப்பை உறுதிசெய்கிறது. அந்த பிரச்சாரம் எடுபடவில்லை என்றால் தோற்கிறது. தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ள ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைக்கிறது. திமுகவின் கொள்கை சரி, அவர்கள் சொன்னது சரி என்று மக்கள் தேர்தலில் ஆமோதித்தால், திமுக என்ன வாக்குறுதியை மக்களிடம் கூறியதோ அதனை நிறைவேற்றலாம் (லாம்தான்).
நீங்களோ பாராளுமன்றம் பன்றித்தொழுவம், பாராளுமன்றத்துக்கு போகிறவர்கள் பன்றிகள். புரட்சிப்பாதையே (அதாவது ஏகே47, சுட்டுத்தள்ளும் பாதை) உங்கள் பாதை என்று பகிரங்கமாக அறிவிப்பவர்கள். மக்களின் பன்மைத்தன்மை, அவர்களது வெவ்வேறுவிதமான கருத்துக்கள், அந்த பன்மைத்தன்மையை பிரதிபலிக்கும் அவர்களது தேர்வுகள், ஓட்டுகள் அனைத்தையும் நிராகரிப்பவர்கள்.
அதனால்தான், நீங்கள் ஆபத்தானவர்கள், மக்கள் விரோதிகள், ஜனநாயக மறுப்பாளர்கள்.
இப்படிக்கு
செய்தி மோர்க்குழம்பு
//
தட்டி போர்டில் உள்ளது:
சைவப்பெரியோர்களே!
சமீப காலமாக தெய்வ நம்பிக்கை சிறிதும் இல்லாத நாத்திகர்கள் சிலர், தமிழ் வேதம் என்ற போர்வையில், சைவ சமயத்துள்ளும், சிவாலயங்களில் செய்யப்பட்டுவரும் ஆகம வழிபாட்டு முறைகளிலும், பல குழப்பங்களைச் செய்து வருகிறார்கள். நம்முடைய சைவ மடாதிபதிகளை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்தியும் வருகிறார்கள். இவர்கள் கூற்று, தமிழ் மொழியால் மட்டுமே அர்ச்சனை, மற்றும் நித்திய நைமித்திக பூஜைகள், கும்பாபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்பது. இவர்கள் கூற்று சைவ சமயப்பற்றினாலோ, தமிழ் மொழிப்பற்றினாலோ எழுந்தது அல்ல. சம்ஸ்கிருத மொழி துவேசத்தாலும், இன துவேசத்தாலும் எழுந்தது. தமிழ் மந்திரங்கள் தமிழ் அர்ச்சனை என்பது ஒரு மாயை.
சிவாலயங்கள் அங்கு வழிபாடு செய்யும் சைவர்களுக்கு மட்டுமே உரிமையுடையது. அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு தெய்வ நம்பிக்கையே இல்லாத இவர்கள் யார்? அவர்கள் நோக்கமெல்லாம் இது போன்ற குழப்பங்களைச் செய்து, மொழி வெறியைத் தூண்டி, சுய விளம்பரமும், அரசியல் ஆதாயமும் தேடுவது தான். இவர்களிடம் சைவ மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களின் சாதுர்யப் பேச்சுக்களை உதாசீனம் செய்யுங்கள்.
சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்கும் உரிய பொதுவான சநாதன தர்மம், அதைத் தோற்றுவித்தவரும், வேத ஆகமங்களை அருளிச் செய்தவரும், அனாதி மூத்த சித்துரு ஆகிய சிவபெருமானாரே.
சைவம் நம்முடைய சமயம், தமிழ் நம்முடைய மொழி, சமஷ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், எல்லா உலகத்தவர்களுக்கும், எல்லா இனத்தவர்களுக்கும் உரிய பொதுமொழி, மொழி வெறியைத் தூண்டி நம்முடய சமயத்தை அழிக்க முயலும் வேடதாரிகளை ஒதுக்கித் தள்ளுங்கள்.
இது பற்றிய விரிவான உண்மைகளை அடியோங்கள் 14-4-1998ல் வெளியிட்ட “சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்! ஏன்?” என்ற வெளியீட்டில் கண்டு தெளிக.
இப்படிக்கு
திருமறை மன்றம், கோவில்பட்டி
ஸ்ரீ அப்பரடிகள் சிவாலய உழவரப்பணித் திருக்கூட்டம், கோவில்பட்டி
ஸ்ரீ மாணிக்கவாசகர் சைவ சபை, கோவில்பட்டி
//
Freitag, 25. Januar 2008
| [+/-] |
தமிழ் ஆதரவு வேஷம் போடும் கம்யூனிஸ்டுகளிடம் கேள்விகள் |
தீட்சிதர் சொத்து அல்ல தில்லை கோவில்!!
கோவிலை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவோம்!!
திருசிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்!!
இந்த கூட்டம் ஜனவரி 26ஆம் தேதி பெரியார்திடல், மேலவீதி சிதம்பரத்தில் நடைபெறுகிறது.
அந்த அழைப்பிதழ் இங்கே.
அனைவரும் கலந்து கொண்டு கீழ்வரும் கேள்விகளை தமிழ் ஆதரவு வேஷம் போடும் கம்யூனிஸ்டுகளை கேட்க வேண்டுகிறேன்.
1) சிவனடியார் ஆறுமுகசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் பெரியார்தாசனும் மருதையனும் சிறப்புரை ஆற்றுகிறார்களே? பெரியார்தாசன் சிவனை கேவலமாக பேசியிருக்கிறார். மருதையன் நாத்திகர்.
சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலையிலேயே கடவுள் இல்லை, கடவுளை பரப்பியன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி போன்றவற்றை கூறப்போகிறீர்களா? சிவனெல்லாம் ஒரு கடவுளா என்பவற்றை பேசுவீர்களா?
2) இந்த கூட்டத்தை நடத்துவது அதிகாரப்பூர்வமான நாத்திக இயக்கமான மக்கள் கலை இலக்கிய கழகம். உங்களுக்கு கோவிலில் என்ன பாடினால் என்ன? அவர்கள் உருதுவில் பாடுகிறார்கள், ஸ்வாஹிலியில் பாடுகிறார்கள், அல்லது அல்லேலூயா என்று கத்துகிறார்கள்? அப்துல்காதருக்கும் அம்மாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பதுபோல, நாத்திகர்களுக்கும், கோவிலில் எந்த மொழியில் பாடுவதற்கும் என்ன சம்பந்தம்? புரியவில்லை என்றால் உதாரணம் தருகிறேன். என் வீட்டுக்குள் என் மனைவியை (பக்கத்து வீட்டுக்காரனுக்கு) புரியாத மொழியில் கொஞ்சுகிறேன் என்று பக்கத்து வீட்டுக்காரன் கேஸ் போடுவது போல இல்லை?
3) அதென்ன கோவிலை அரசுடைமையாக ஆக்குவது? அது காலம் காலமாக தனியார் கோவில். அதனை அவர்களே கட்டியிருக்கமாட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். எவனோ ராஜா அவர்களிடம் தாரை வார்த்தான் என்றே வைத்துக்கொள்வோம். அதற்கு என்ன இப்போது? இருந்துவிட்டு போகட்டுமே. பங்காரு அடிகளார் பிரம்மாண்டமாக கோவில் கட்டியிருக்கிறார். மக்களிடம் உண்டியல் வைத்து அவர்கள் கொடுத்த பணத்தில்தான் கட்டியிருக்கிறார். அதில் தமிழில் பஜனை பாடினால், அதன் உள்ளே போய் ரஷிய மொழியில் பாடு, அல்லது சீன மொழியில் பாடு என்று சொல்வீர்களா? முடிந்தால் நீங்கள் பக்கத்தில் ஒரு கோவிலை கட்டுங்கள். அதற்கு கூட்டம் சேருங்கள்.
4) உங்கள் பேராசான் மாவோ ஆட்சிக்கு வந்ததும் எல்லா பௌத்தக்கோவில்களையும், கன்பூசியஸ் கோவில்களையும் இடித்து தள்ளினார். மிச்சம் இருந்தவை கலாச்சார புரட்சியில் இடிக்கப்பட்டன. நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அதையேதானே செய்யபோகிறீர்கள்? நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல்நாள் எல்லா கோவில்களிலும் தமிழில் பாடவேண்டும் என்று சொல்லிவிட்டு மறுநாள் அனைத்தையும் இடித்துவிடுவீர்களா?
5) மாவோ செய்தது மாதிரி, நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் சிதம்பரம் நடராஜர் கோவிலை இடித்துவிடுவோம் என்று சிவனடியார் ஆறுமுகசாமியிடம் சொன்னீர்களா?
6) புரட்சி வந்து எவ்வளவு நாள் கழித்து பங்காரு அடிகளார் கட்டிய கோவிலை இடிப்பீர்கள்?
7) ராமன், கிருஷ்ணன், சிவன், முருகன் ஆகியோரை எல்லாம் தினந்தோறும் உங்கள் பத்திரிக்கையில் வசைமாறி பொழிந்துகொண்டிருக்கிறீர்களே? நீங்கள் ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பக்தி இலக்கியங்கள், கம்பராமாயணம், வில்லிப்புத்தூர் பாரதம், சீறாப்புராணம், தேம்பாவணி, தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை கொளுத்திவிடுவீர்கள், அப்படியும் மீறி பாடுபவர்களுக்கு வர்க்க எதிரி, அல்லது எதிர்புரட்சியாளன் பட்டம் கொடுத்து நடுத்தெருவில் சுருக்குமாட்டி தொங்க விடுவீர்கள் என்று சிவனடியார் ஆறுமுகசாமியிடம் சொன்னீர்களா?
8) சிவனடியார் ஆறுமுகசாமியை புரட்சி வந்ததும் எவ்வளவு நாள் உயிருடன் வைத்திருப்பீர்கள்?
9) சங்க இலக்கியங்களில் கடவுள் பெயர் குறிப்பிடாத பாடல்கள் மிகச்சில மட்டுமே மிஞ்சும் என்று நினைக்கிறேன். அவை என்ன என்ன என்று தணிக்கை செய்துவிட்டீர்களா?
10) உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியையும் இதே போல யாரோ வளர்த்து உங்களிடம் தாரை வார்த்த பணத்தில்தான் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் உண்டியல் குலுக்கி சேர்த்த பணத்தில்தான் கட்சி அலுவலகம், பத்திரிக்கை எல்லாம் நடத்துகிறீர்கள். உங்கள் உள் கட்சி ஆவணங்களை வெளியே வையுங்கள் என்று கேட்டிருக்கிறேன். எப்போது செய்யப்போகிறீர்கள்? மக்கள் விரோத ஜனநாயக விரோத உங்கள் கட்சியையும் கட்சி பணத்தையும் அரசுடமையாக ஆக்க வேண்டும் என்று கோருகிறேன். நீங்களே மனமுவந்து செய்கிறீர்களா?
--
கேள்விகளுக்குப் பிறகு சில வார்த்தைகள்.
எனக்கு பெரியார் தாசனின் பேச்சுகளிலோ, அல்லது அவரது கருத்துக்களிலோ மாறுபாடு இருக்கிறது அல்லது இல்லை என்பதனை விட அவர் ஜனநாயக வழியில் பிரச்சாரத்தின் மூலமே தன் விஷயங்களை பரப்புகிறார் என்பதனையே இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
அவர் பெரியார் வழியில் தனது பிரச்சாரத்தை செய்கிறார். அவர் கோவில்களை இடிக்கவும் போவதில்லை, அல்லது பிராம்மணர்களை கொல்லவும் போவதில்லை. அதுமட்டுமல்ல, கோவிலுக்கு போகும் சாதாரண தமிழர்களை கொல்லவும் போவதில்லை. கோவிலை நடத்தும் சாதாரண தமிழர்களை கொல்லவோ தடுக்கவோ போவதில்லை.
ஆனால், கம்யூனிஸ்டுகள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. தற்போது திராவிட கழகத்தின் பிராம்மண எதிர்ப்பு, தமிழ் ஆதரவு எல்லாவற்றுக்கும் தமிழ்நாட்டில் ஆதரவு இருக்கிறது என்று கண்டு, அந்த ஆதரவை தனக்கான ஆதரவாக மாற்றிக்கொள்ள இறங்கியிருக்கிறார்கள். அதனால்தான் தற்போது தமிழ், பிராம்மண எதிர்ப்பு என்று ஜல்லி அடிக்கிறார்களே தவிர, அவர்களுடைய நீண்டகால நோக்கில் இவற்றையெல்லாம் இடித்து, கோவில்கள அழித்து, கோவிலுக்கு போகும் சாதாரண தமிழர்களை கொல்லுவதுதான் கொள்கை. இதே கம்யூனிஸ்டுகள் "சீர்திருத்தம் செய்யாதே புரட்சி செய்" என்று கோஷம் போட்டு, இப்படிப்பட்ட சீர்திருத்த முயற்சிகளை எதிர்த்தவர்கள். புரட்சி வந்தால் தலித்துகளின் பிரச்னை, ஜாதி பிரச்னை, மொழி பிரச்னை எல்லாம் தானாக ஒழிந்துவிடும் ஆகவே புரட்சி செய்வோம் என்று கோஷமிட்டு வந்தவர்கள். (புரட்சி வந்தால், எவனாவது கம்யுனிஸ்டு கட்சிக்கு எதிர் கருத்து வைத்திருந்தால் ஆள் காலி. அதுதான் அவர்கள் பிரச்னையை தீர்க்கும் முறை)
நான் சொல்லுவது நகைப்புக்கிடமானது என்று நினைத்தால், இவர்கள் பேராசான் என்று தினந்தோறும் தொழுது வணங்கும் மாவோ, லெனின், ஸ்டாலின், போல்போட் போன்றோர் பண்ணியதை தயவு செய்து படியுங்கள்.
Donnerstag, 24. Januar 2008
| [+/-] |
ஆப்கானிஸ்தானில் கம்யூனிஸ்டு பிரட்சியின் புள்ளிவிவரங்கள் |
ஆப்கானிஸ்தானில் சோவியத் கம்யூனிஸ்டு பிரட்சியை ஏற்படுத்துவதற்காக பிரட்சி ஏற்றுமதியால் பலியானவர்கள் எண்ணிக்கை:
பதினெட்டு லட்சம் ஆப்கானிஸ்தானியர்கள்.
பத்து லட்சம் ஆப்கானிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர்.
சோவியத் ரஷிய கம்யூனிஸ்டு அரசாங்கத்தால் கட்டாயமாக போர் வீரராக்கப்பட்டு ஆப்கானிஸ்தானத்துக்கு அனுப்பப்பட்ட ரஷிய, உக்ரேன் குடிமக்களும் இந்த துயரத்தில் ஒரு பகுதி.
1970இலிருந்து 1089 வரைக்கும் 6 லட்சத்து 20 ஆயிரம் அப்பாவி சோவியத் வீரர்கள் ஆப்கானிஸ்தானத்துக்கு கம்யூனிஸ்டு போலிட்பரோ அக்யூஸ்டு தெருப்பொறுக்கி கும்பலால் அனுப்பப்பட்டார்கள்.
கம்யூனிஸ்ட் பொலிட்பரோ ஆட்கள் கடற்கரையோரத்தில் ஒயின் அருந்திகொண்டிருக்கும்போது, இந்த போர்வீரர்களில் 469,685 பேர் படுகாயமடைந்தனர்

14,453 பேர்கள் மரணமடைந்தனர். ஆனால் ஆப்கானிஸ்தானில் டைபாய்டு, ஹெபாடிடிஸ் ஆகியவற்றால், 415932 பேர் கடும் நோய்வாய்ப்பட்டனர்.
--
ஐம்பது லட்சம் ஆப்கானிஸ்தானியர்கள் சொந்த நாட்டை விட்டு சோவியத் கம்யூனிஸ்டுகளால் துரத்தப்பட்டு ஈரானிலும் பாகிஸ்தானிலும் அடைக்கலம் புகுந்தனர்.
இன்னும் இருபது லட்சம் ஆப்கானிஸ்தானியர்கள் சொந்த நாட்டுக்குள்ளேயே இடம் பெயர வைக்கப்பட்டு வேறு வேறு ஊர்களுக்கு துரத்தப்பட்டனர்.
1980களில் உலக அகதிகளில் இரண்டில் ஒருவர் ஆப்கானிஸ்தானியர்.
இது தவிர 12 லட்சம் ஆப்கானிஸ்தானிய போர்வீரர்கள் (முஜாஹிதீன் என்னும் சோவியத் எதிர்ப்பு போராளிகள்) கைகால்கள் இழந்து முடமானார்கள்.
30 லட்சம் ஆப்கானிய பொதுமக்கள் (பெண்கள் குழந்தைகள் ஆண்கள் முதியவர்கள்) படுகாயமடைந்தனர்.
சோவியத் கம்யூனிஸ்டு துருப்புகள் செய்த அட்டூழியங்களில் முக்கியமானவை.
மார்ச் 1979இல் ஹேரத் என்னும் நகரின் மீது கம்யூனிஸ்ட் சோவியத் ரஷிய விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 20000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
கோரானா மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் சோவியத் துருப்புகள் 1300 கிராமத்தினரை ஒரே நாளில் கொன்று தள்ளியது.
-
சோவியத் கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பின் விளைவுகள் எண்ணிப்பார்க்கவும் கடினமானவை.
1987இல் காந்தகார் என்ற நகரத்தின் மீது கம்யூனிஸ்ட் விமானங்கள் கார்ப்பெட் பாம்பிங் carpet bombing செய்ததில் மக்கள்தொகை 2 லட்சத்திலிருந்து 25ஆயிரமாக குறைந்து போனது.


10-15 மில்லியன் கண்ணிவெடிகளை ஆப்கானிஸ்தானெங்கும் கம்யூனிஸ்டுகள் நிலங்களில் விதைத்துள்ளனர். இதன் உடனடி விளைவுகளில் 25000 ஆப்கானிஸ்தானிய பெண்கள், ஆண்கள் உயிரிழந்துள்ளனர். இதன் விளைவுகள் இன்னமும் தெரிய வருகின்றன. இதில் கால் வைத்து காலையோ அல்லது உயிரையோ இழக்கும் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் பற்றிய செய்திகள் இன்னமும் வந்த வண்ணம் இருக்கின்றன.

பலகாலமாக தங்கள் அகதி முகாமே சிறைச்சாலையாகி லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் அகதிமுகாம்களில் வசித்தனர். இன்னும் பலர் வசிக்கின்றனர்.

நன்றி சோவியத் ஆக்கிரமிப்பு
-
ஒரு மனிதன் இறந்தால் அது துயரம். கோடிக்கணக்கானவர்கள் இறந்தால் அது வெறும் புள்ளிவிவரம்தான்
- கம்யூனிஸ்டுகளின் பேராசான் ஸ்டாலின்
Dienstag, 22. Januar 2008
| [+/-] |
பங்கு சந்தை விழும்போதெல்லாம் கும்மி அடிக்கும் கம்யூனிஸ்டுகள் |
நண்பர் அசுரன் பதிவில் இதனை எழுதியிருக்கலாம்தான். ஆனால், அவர் என்னுடைய பதில் எதனையும் அனுமதிக்கப்போவதில்லை என்று பின்வாங்கிவிட்டார். (முதலுக்கே மோசம் வருகிறதே.. pun intended)
1929இல் அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சியடைந்தது. அது கிரேட் டிப்ப்ரஷன் என்று அழைக்கப்படுகிறது. 1921இல் பங்கு சந்தை எண் டோ ஜோன்ஸ் 40ஆக இருந்து 1929இல் 600ஆக உயர்ந்திருந்தது. பங்கு சந்தை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லோரும் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தார்கள். சொந்த வீட்டை விற்றும், அடமானம் வைத்தும் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தார்கள். அது வீழ்ச்சியடைந்ததும் எல்லா கம்யூனிஸ்டுகளும் ஒரேயடியாக கும்மி அடித்து, இது முதலீட்டிய பொருளாதாரத்தின் வீழ்ச்சி. எல்லோருடைய சொத்துக்களையும் நாங்கள் நடத்தபோகிற அரசாங்கத்திடம் கொடுங்கள். நாங்கள் நன்றாக இருப்போம். நீங்கள் அடிமைகளாக இருக்கலாம் என்று சொன்னார்கள்.
அமெரிக்க மக்கள் கேட்கவில்லை.
அமெரிக்கர்கள் பங்கு சந்தையை ஒழுங்கு படுத்த அமைப்புக்களை உருவாக்கினார்கள்.
எல்லா தொழிலுக்குள்ளும் வரும் ஏமாற்றுபேர்வழிகளை கண்டுபிடிக்க போலீஸும் அரசாங்கமும் இருப்பது போல பங்கு சந்தை ஏமாற்று பேர்வழிகளை கண்டுபிடிக்கவும், தண்டிக்கவும் அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. எஸ்.ஈ.ஸி என்ற அமைப்பு அப்போது உருவாக்கப்பட்டதுதான்.
நண்பர் இரண்டாம் சொக்கன் சொன்னது போல, பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்ததுமே கம்யூனிஸ கும்மி அடிக்க தேவையில்லை.
பல்லாயிரம் கோடி இழப்பு என்று பத்திரிக்கைகள் எழுதுகின்றன. அது உண்மைதான். ஆனால், அது ஓரளவுக்கு பொய்யும் கூட.
அன்றைக்கு உச்ச நிலையில் இருக்கும் பங்கை எல்லோரும் வாங்கி அன்றைக்கே விற்றிருந்தால் மட்டுமே அத்தனை பல்லாயிரம் கோடி இழப்பு என்பது உண்மை.
ஆனால், யாருமே அப்படி வாங்கி விற்பதில்லை. பெரும்பாலானவர்கள் ஒரு வருடத்துக்கு முன்னரோ, அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னரோ வாங்கி பங்கு தற்போது விலை இறங்கியிருப்பதை பார்க்கிறார்கள்.
அந்த பங்கு 10 ரூபாயில் வாங்கி இன்று 1000 ரூபாயில் இருக்கும் (உதாரணம் இன்போஸிஸ் பங்குகள்) அது இன்று 900 ரூபாயாக இறங்கும். இந்த 100 ரூபாய் இழப்பு ஒரு பங்கில். ஒரு கோடி பங்குகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். எவ்வளவு இழப்பு? 100 கோடி ரூபாய்.
இதுவே எல்லா பங்குகளிலும் நடக்கிறது. இதே போல 100 பங்குகளில் இறங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். எவ்வளவு மொத்தம் இழப்பு? 10000 கோடி ரூபாய்.
பார்க்க பெரிய எண். உண்மையில் 10 ரூபாய்க்கு வாங்கிய பங்கு 1000 ரூபாய்க்கு போய் பின்னர் 900 ரூபாய்க்கு வந்ததுதான் இந்த எண்.
இந்த பங்கை வாங்கியவருக்கு என்ன இழப்பு? ஒன்றுமே இல்லை! அவர் 10 ரூபாய்க்கு வாங்கிய பங்கை 900 ரூபாய்க்கு கொண்டு வந்திருக்கிறார். இது லாபமா அல்லது நஷ்டமா?
--
எல்லா தொழில்களிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதுதான் பொருளாதாரத்தை முன்னேற்றுகிறது.
உதாரணமாக கம்ப்யூட்டரை எடுத்துக்கொள்வோம். ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர் கம்பெனிகள் வந்தன. ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர் மென்பொருள் கம்பெனிகள் வந்தன. அதில் பல்லாயிரக்கணக்கான கம்பெனிகள் மூடப்பட்டன. பல நின்றன. முந்தைய கம்பெனிகளில் வேலை செய்தவர்கள் வேலை இழந்தனர். அவர்கள் பல்வேறு புதிய வேலைகளில் ஈடுபட்டனர். புதிய கம்பெனிகளை உருவாக்கினர். அதில் பல கம்பெனிகள் நின்றன. பல கம்பெனிகள் மூடப்பட்டன. இது ஒரு தொடரும் முறை.
இதனால்தான், கோடிக்கணக்கான டாலர் செலவில் கட்டப்பட்ட முதலாவது கம்ப்யூட்டரை விட பல கோடி மடங்கு வலிமையான ஒரு கம்ப்யூட்டரை இன்று 200 டாலருக்கு வாங்க முடிகிறது.
இதுவே மனித சமூகம் முதன்முதலில் சக்கரம் செய்ததிலிருந்து, நெருப்பு உருவாக்கியதிலிருந்து தன்னுடைய தேவைக்கு அதிகமான பொருளை மற்றொரு பொருளுக்கு வியாபாரம் செய்ததிலிருந்து நடந்து வந்திருக்கிறது. இதுவே மனித சமூகத்தை முன்னேற்றியிருக்கிறது.
இந்த பொருளாதார சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் இல்லாத எந்த சர்வாதிகார சமூகமும் தேங்கிய குட்டையாகி நசிந்து மடிந்திருக்கிறது.
Samstag, 19. Januar 2008
| [+/-] |
ப சிதம்பரம் - Infant Mortality |
//
2. பாகிஸ்தான், இலங்கை, சோமாலியா முதலிய தேசங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு குழந்தைகள் சாவில் இந்தியாவை முன்னனிக்கு கொண்டுவந்து சாதனை படைத்துள்ளார்.
//
என்று ஒரு பொய்பிரச்சாரம் செய்யப்படுகிறது.
பார்க்க கீழ்க்கண்ட இணைப்புகள்.
http://www.indexmundi.com/g/g.aspx?c=in&v=29
http://www.indexmundi.com/g/r.aspx?c=in&v=29
மேலே இருக்கும் இணைப்பில் பார்த்தால்,
பாகிஸ்தானில் infant mortality எண்ணிக்கை ஆயிரம் பிறப்புகளில் 68வரிசை எண் 33
33 Pakistan 68.84
சோமாலியாவில் ஆயிரம் பிறப்புகளில் 113 பிறந்ததும் இறக்கின்றன. வரிசை எண் 6
6 Somalia 113.08
இந்தியாவில் ஆயிரம் பிறப்புகளில் 34 பிறந்ததும் இறக்கின்றன. வரிசை எண் 73
73 India 34.61
இலங்கையில் ஆயிரம் பிறப்புகளில் 19 பிறந்ததும் இறக்கின்றன
வரிசை எண் 113
113 Sri Lanka 19.45 (அங்கு இருக்கும் போர்ச்சூழலில், தமிழர் பக்கங்களில் உண்மையான எண்ணிக்கை இருக்குமா என்பது அய்யத்துக்குரியது)
இந்திய அரசியல்வாதிகளை எப்படியாவது திட்டவேண்டும் என்றால் நன்றாக திட்டுங்கள். ஆனால் எதற்கு பொய்?
பொய் பேசாமலேயே திட்டுவதற்கு நிறைய இருக்கிறது.
Donnerstag, 17. Januar 2008
| [+/-] |
கம்யூனிஸ்டுகளின் போலித்தனத்தை அறிந்துகொள்வோம். |
கம்யூனிஸ்டுகளை அறிந்துகொள்வோம்.
1. சித்தாந்தத்திற்குச் சொந்தக் காரர்கள் என்று தம்மைப் பற்றிப் பீற்றிக் கொள்வார்கள். ஆனால் நியாயமான வாதங்களை முன்வைத்தால், அல்பவாதி, அசடு என்று தூற்றுவார்களே தவிர பதில் சொல்ல் மாட்டார்கள்.
2. விஞ்ஞான சோஷலிசம் என்று பிதற்றுவார்கள். மாறிவரும் விஞ்ஞானப் பார்வையில் புதிய கோட்பாடுகளும் , புதிய கண்டுபிடிப்புகளும் வந்து எப்படி பழைய கம்யூனிச சித்தாந்தங்கள் பொய்த்துப் போயின என்று விளக்கிச் சொன்னால் அது பற்றி மூசு விடமாட்டாரகள்.
3. சொந்த நாட்டில் தோன்றிய மகாபுருஷர்களையும் , மகாத்மாக்களையும், சமூக சேவகர்களையும் தலவைர்களயும் ஏளனம் செய்வார்கள் . ஆனால் சீனாவின் தலைவரே என் தலைவர், பேராசான் மார்க்ஸ் , அஞ்சாநெஞ்சன் ஸ்டாலின் என்று வரலாறு தெரியாமல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.
4. தர்மபுரியில் மூன்று பேர் செத்தார்கள், குஜராத்தில் ஆயிரம் பேர் மரணம், தில்லியில் சீக்கியக் கலவரத்தில் 200 பேர் மரணம் என்று துக்கம் தரக் கூடிய நியாயம் கோரி நடக்க வேண்டிய போராட்டத்தை, திசை திருப்பி, இந்த அமைப்பில் நியாயம் கிடைக்காது என்று பிரச்சாரத்தில் இறங்கிவிடுவார்கள். இந்த துயர நிகழ்வுகள் தொடர்ந்த நிகழ்வல்ல, இந்த அமைப்பிலேயே இந்த துய்ரங்களுக்கு பரிகாரம் தேடவும், இந்த துயரங்கள் போல மீண்டும் நடக்காமல் இருக்க நாம் செய்யக்கூடியது பல இருக்கின்றன என்று பேசவே மாட்டார்கள். இந்த அமைப்பை அழித்து தங்கள்து எவரும் எதிர்த்து கேள்வி கேட்கமுடியாத அமைப்புக்கு ஆள் சேர்க்க, கேள்வி கேட்க உரிமையுள்ள அமைப்பை ஒழிக்க திட்டம் போடுவார்கள். ஆனால் ஸ்டாலினின் கீழ் , போல் போட்டின் கீழ் , மாவோவின் கீழ் நடந்த திட்டமிட்ட படுகொலைகளைப் பற்றி , தொடர்ந்து ஆட்சியாளர்களால் மக்கள் வேட்டையாடப் பட்டது பற்றி மூச்சு விட மாட்டார்கள்.
5. வாரிசு அரசியல் என்று கருணாநிதியையும், லாலு பிரசாதைட்யும் தூற்றுவார்கள். ஆனால் மாஓ தன் மனைவிக்கு அரசியலில் இடம் அளித்தது பற்றியோ, அதைத் கொடர்ந்து கலாசாரப் புரட்சி வெறியாட்டங்களைப் பற்றியோ எதுவும் பேச மாட்டார்கள். காஸ்ட்ரோ தன் தம்பிக்கு கியூபாவை தாரை வார்ப்பது பற்றியோ, கிம் இல் ஜாங் தன் மகனுக்கு வட கொரியாவைத் தாரை வார்த்தது பற்றியோ பேச மாட்டார்கள்.
6. ஜனநாயக மரபுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு , மக்கள் பிரதிநிதிகளை நாய்கள் பன்றிகள் என்று ஏசிவிட்டு , புதிய ஜனநாயகம், மக்கள் ஜனநாயகம் என்ற பெயரில் வேடமிட்டு நாடகமாடுவார்கள்.
7. வாழ்வாதாரம் பறிக்கப் படுகிறது என்று விவசாய மக்களைத் தூண்டிவிட்டு, தொழிற்சாலைகள் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போடுவிட்டு, அவர்கள் குலத்தொழிலை விட்டு விலகி படித்து வேறு வேலை தேடிக் கொள்ளும் முயற்சியில் மண்ணை அள்ளிப் போடுவார்கள். ஆனால் இவர்கள் மட்டும் படித்து, பட்டம் பெற்று சொகுசாக இருப்பார்கள்.
கம்யூனிஸ்டுகள் பற்றிய உங்களது கருத்துக்களையும் எழுதுங்கள்.
கம்யூனிஸ பயங்கரவாதம் உண்மையானது. கீழே இருக்கும் விக்கிபீடியா வரைபடத்தை காணுங்கள். இந்திய நாட்டு எல்லைகள் இங்கே குறித்துள்ளது போல இல்லை. (நக்ஸலைட்டு வேலை!) ![]()
Dienstag, 15. Januar 2008
| [+/-] |
ஏன் கலைஞர் தன்னை கம்யூனிஸ்டு என்று கூறிக்கொள்கிறார்? |
பொதுப்புத்தியில் கம்யூனிஸமும் கம்யூனிஸ்டுகளின் திட்டங்களும்.
இன்றைக்கு பலரும் தன்னை கம்யூனிஸ்டு என்று குறிப்பிட்டுக்கொள்வதை பார்க்கிறோம். என்ன காரணமாக இருக்கும்? முதலாவது இந்தியாவில் பலரும் கம்யூனிஸத்தை ஆழ்ந்து படித்து, அலசி, பல்வேறு சிந்தனையாளர்களுடன் விவாதித்து, அறிவியல் கண்டுபிடிப்புகளில் அவற்றை உரசிப்பார்த்து கம்யூனிஸமே சிறந்த தத்துவம் என்று கண்டடைந்தவர்கள் அல்ல. அப்படி உரசிப்பார்த்தவர்களில் ஒருவர் கூட கம்யூனிஸ்டாக தொடர்ந்ததும் இல்லை. ஆயிரக்கணக்கானவர்கள் அப்படி கம்யூனிஸ கொள்கையை துறந்து வெளியேறியிருக்கின்றனர். கம்யூனிஸ கொள்கையை துறந்த பலர் தீவிர வலதுசாரி என்று சொல்லும் அளவுக்கு திசை திரும்பியவர்களும் உள்ளனர்.
ஆனால், பொதுப்புத்தியில் கம்யூனிஸ்டு என்பவன் ஒரு நல்லவர், அவர் ஏழைகளுக்காக பாடுபடுகிறார், அவர் தொழிலாளர்கள் நல்ல ஊதியம் பெறவேண்டும் என்று போராடுகிறார், வலிமையுள்ள பணக்காரர்களை எதிர்த்து ஒரு ராபின்ஹூட் போல ஏழைகளுக்காக போராடி அவர்களுக்கான உரிமைகளை, பணத்தை நிலத்தை பெற்றுத்தருகிறார் என்ற பிம்பம் இருக்கிறது. இதுதான் கம்யூனிஸ தத்துவம் சொல்கிறது என்றும் பொதுப்புத்தியில் பிம்பம் இருக்கிறது.
இதனாலேயே கலைஞர் கருணாநிதியும், மற்றவர்களும், "இதுதான் கம்யூனிஸ்டு என்றால், நானும் ஒரு கம்யூனிஸ்டுதான்" என்று கூறுகிறார்கள். அவர் கூறுவது சரியானதும் உண்மையானதும் ஆகும்.
பொதுப்புத்தியில் இப்படி ஒரு பிம்பம் இருப்பதால், கம்யூனிஸ்டுகள் வன்முறையை கையில் எடுத்து கொலை, கொள்ளை, ரயில் தண்டவாள கவிழ்ப்பு, பொதுமக்களையும் போலீஸ்காரர்களையும் தாக்கி கொல்லுவது, பெரிய மக்கள்தலைவர்களை கொல்வது, சந்தையில் வெடிகுண்டு வெடிப்பது என்று ஆயிரக்கணக்கான பயங்கரவாத செயல்களை செய்தாலும், இதெல்லாம் ஏழைகளுக்காக, தொழிலாளர்களுக்காக என்ற பொதுபிம்பமும், அதன் ஊடாக, ராபின்ஹூடின் வன்முறையை நியாயப்படுத்தும் தொனியில் கட்டுரைகளும் எழுதப்படுகின்றன. அப்படி எழுதுபவர்கள் நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம் தாங்கள் இருக்கிறோம் என்றும் தங்களை தாங்களே நம்பிக்கொள்கிறார்கள்.
ஆனால், கம்யூனிஸ கட்சிகளில் உள்ளவர்கள் கலைஞர் கருணாநிதியை கம்யூனிஸ்டு என்று ஒப்புக்கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள். ஏன் சொல்லப்போனால், மற்ற கம்யூனிஸ்டு கட்சியில் உள்ளவர்களை, அவர்கள் கம்யூனிஸ்டு என்று கூட ஒப்புக்கொள்ளமாட்டார்கள். கம்யூனிஸ கட்சிகள் ஒரு கல்ட் போன்றவை என்பதற்கு அவைகள் எப்படி கட்சி கட்டுகின்றன என்பதை பார்த்தாலே தெரியும். தாங்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்துவ பிரிவில் உள்ளவர்கள் மட்டுமே உண்மையான கிறிஸ்துவர்கள், நாங்கள் மட்டுமே சொர்க்கத்துப் போவோம் என்று பேசும் கிறிஸ்துவர்கள் போல, தாங்கள் சார்ந்திருக்கும் இஸ்லாமிய பிரிவில் உள்ளவர்கள் மட்டுமே உண்மையான முஸ்லீம்கள், நாங்கள் மட்டுமோ சொர்க்கத்து போவோம் என்று பேசும் முஸ்லீம்கள் போல இவர்களிலும் ஏராளமான பிரிவுகள் உண்டு. தாங்கள் மட்டுமே உண்மையான மார்க்ஸிய கம்யூனிஸத்தை புரிந்துகொண்டுள்ளோம், எங்களால் மட்டுமே உண்மையான கம்யூனிஸ சமுதாயத்தை அமைக்கமுடியும் என்று பிதற்றி மற்றவர்களை வன்முறை மூலம் ஒடுக்கவும் முயல்வதை, முயன்றதை வரலாறு கூறுகிறது.
ஆனால், இன்றைக்கு கலைஞர் கருணாநிதி அவ்வாறு தன்னையும் கம்யூனிஸ்டு என்று கூறிக்கொள்வது கம்யூனிஸத்துக்கு ஒரு விளம்பரம், அது கம்யூனிஸத்தை புனிதப்பிம்ப இடத்தில் உட்கார வைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். அதனால், போர்த்தந்திர முறையில் திமுகவினரை அனுசரித்தும், திமுகவில் இருப்பவர்களை தங்கள் கட்சிக்குள் இழுப்பதற்காகவும், அதனை பயன்படுத்திக்கொள்வார்கள். இதுதான் கம்யூனிஸ்டுகளின் இரட்டை நாக்கு.
கம்யூனிஸ்டுகள் உலகெங்கும் ஒரு குறிப்பிட்ட செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அது என்னவென்று பார்த்தோமானால், அதன் மூலம் யார் பயன்பெறுவார்கள் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
அது திட்டமிட்ட பொருளாதாரம். அதாவது அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகள், எந்த பொருளை எந்த தொழிற்சாலை எவ்வளவு தயாரிக்க வேண்டும் என்று திட்டமிடுவார்கள். அதனை மக்கள் உற்பத்தி செய்யவேண்டும். அவ்வளவுதான். ஒரு மனிதனுக்கு பொருளாதார சுதந்திரம் இருக்கக்கூடாது. அவன் ஒரு பொருளை தயாரித்து மற்றவர்களிடம் விற்றால் அது தடைசெய்யப்படும். இதுதான் சோசலிஸ கட்டுமானம்.
இது எவ்வளவு பெரிய சீரழிவை உலகெங்கும் கம்யூனிஸ அமைப்புக்குள் சிக்கிக்கொண்ட மக்களுக்கு கொண்டுவந்தது என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. இதுதான் கம்யூனிஸம். இதனை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கலைஞரிடம் கேட்டுப்பாருங்கள். இல்லை என்று சொல்லிவிடுவார்.
இந்த கம்யூனிஸ சோசலிஸ அமைப்பின் மூலம் பலனடைவது யார்? கம்யூனிஸ்டு கட்சியிலும், மேல்மட்ட குழுவிலும், போலிட்பரோவிலும் உட்கார்ந்திருக்கும் அதிகார வர்க்கம் மட்டுமே இதன் மூலம் பலனடையும். மற்றவர்கள் எல்லோரும் இவர்களுக்கு அடிமைகள். எதிர்த்தால், வர்க்க எதிரி. ஒத்துழைக்கவில்லை என்றால் பிற்போக்குக்காரன். இந்த அதிகார வர்க்கத்தின் கீழ் அடக்குமுறையில் இருக்க முடியாது என்று தொழிலாளர்கள் தனியே தொழிற்சங்கம் வைக்க முடியாது. ஏதேனும் ஒரு அதிகாரி கிறுக்குத்தனமாக ஆணையிட்டு எத்தனையோ பொதுமக்கள் அழிந்தாலும், அது "ஆம்லெட் செய்யவேண்டுமென்றால், முட்டைகளை உடைத்துத்தான் ஆகவேண்டும்" என்று உதாசீனம் செய்யப்பட்டுவிடும். இதுதான் கம்யூனிஸம்.
மனிதனுக்கு கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் ஆகியவை அத்தியாவசியமானவை. என்னுடைய கருத்துக்களை சொல்லவும், என்னுடைய நேரத்தில் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவும் எனக்கு சுதந்திரம் வேண்டும். இரண்டையுமே முழுதாக மறுக்கிறது கம்யூனிஸம்.
கம்யூனிஸத்தை குப்பை என்று ஒதுக்க, கம்யூனிஸம் பற்றிய ஆழ்ந்த அறிவோ அல்லது பரந்த படிப்போ கூட தேவையில்லை. கம்யூனிஸ்டு நாடுகள் செய்த கூத்துக்கள் தமிழ்நாட்டில் பரவலாக தெரிய வந்தாலே போதுமானது. ஆனால், அப்படி பரவலாக தெரிய வரக்கூடாது என்று கம்யூனிஸ்டுகள் பெரும் சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால்தான், சோவியத் ஸ்டாலின் பற்றியோ, அல்லது போல்போட் பற்றியோ, மாவோவின் உண்மையான வரலாறோ தமிழில் வந்துவிடக்கூடாது, இந்திய ஊடகங்களில் வந்துவிடக்கூடாது என்று சிரத்தை எடுத்துக்கொண்டு அப்படி யாரேனும் ஏதேனும் ஒரு வரி எழுதிவிட்டால் கூட அந்த பத்திரிக்கை அலுவலகத்தின் முன்னே நின்று ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்று பிரச்னை பண்ணுகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ருசி என்பது தமிழ் பழமொழி. சோவியத் ரஷியா, கம்யூனிஸ்ட் சைனா, சிவப்பு கம்போடியா, வியத்நாம், கியூபா என்று உலகெங்கும் இந்த கொள்கை விளைவித்த கொடூரம் தெரிந்திருந்தும், இன்னமும் இதில் நம்பிக்கை வைத்திருப்பவர்களை கண்டால் பரிதாபமாகவே இருக்கிறது.
கம்யூனிஸம் ஒரு சர்வாதிகார சிந்தனை. ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்ற பெரும்பான்மையை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து அவர்களை நசுக்கி சக்கையாய் பிழிந்து ஆள ஒரு சிறு குழு போடும் திட்டம். அதுதான் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகளுக்கும் நல்லது என்று அவர்களிடமே பிரச்சாரம் செய்யும் ஒரு மனப்பிறழ்வு கொண்ட சிந்தனை.
உண்மையிலேயே கம்யூனிஸ்டுகளுக்கு தொழிலாளர்கள் மீதோ, விவசாயிகள் மீதோ, மக்கள் மீதோ ஏதேனும் நம்பிக்கையோ, பாசமோ உண்டா?
கம்யூனிஸ சிந்தனைகளை ஆழ படிப்பவர்கள் மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின் மாவோ போன்றோரின் வரிகளில் விவசாயிகள் மீது எப்படிப்பட்ட காழ்ப்புணர்வை கொண்டிருக்கிறார்கள் என்பதை படித்து திடுக்கிடலாம். தொழிலாளர்களுக்கு ஒன்றும் தெரியாது. மெத்த படித்த நாம்தான் அவர்களின் உள்ளே புகுந்து அவர்களை திசை திருப்பி அரசாங்கத்தை கவிழ்க்க அவர்களை தூண்டி நாம் ஆட்சியை கைப்பிடிக்க வேண்டும் என்று எழுதியிருப்பதை பார்த்து அதிரலாம். இவர்களது பொலிட்பரோவில் எவரும் விவசாயியோ, தொழிலாளரோ, நிலமற்ற கூலியோ கிடையாது. எல்லோரும் பெரிய குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து, துயரத்தின் வாடையே இல்லாமல் வளர்ந்தவர்கள். இது மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோவிலிருந்து இந்தியாவில் ஜோதிபாசு, புத்ததேவ பட்டாச்சாரியா, பிரகாஷ் காரத், பிருந்தா காரத், ராமமூர்த்தி, வினோத் மிஷ்ரா, நாகபூஷன் பட்நாயக், சிபிஎம்எல்லின் பட்டாச்சாரியா உட்பட அனைவரது பின்புலத்தை பார்த்தாலும் தெரியும். தொழிலாளர்களும், விவசாயிகளும் இவர்கள் ஆட்சிக்கு வர உதவிப்பொருள்களே அன்றி, ஆட்சியில் இருக்கப்போகிறவர்கள் அல்ல. இதனை வான்கார்ட் என்ற ஒரு கருத்தை வைத்து பூசி மொழுகுகிறார்கள். அதாவது இப்படி பணக்கார குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து விவசாயிகளுக்கு உழைப்பவர்கள் வான்கார்ட் என்ற முன்னோடிகளாம். விவசாயிகள் பிற்போக்கானவர்கள், தொழிலாளர்கள் விவரம் பத்தாதவர்கள். இவர்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும். ஆனால் காங்கிரஸில் காமராஜர் ஆட்சிக்கு வந்ததும், ஜனதாதளத்தில் தேவ கவுடா ஆட்சிக்கு வந்ததும், தொழிலாளராக இருந்து உயர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆட்சிக்கு வந்ததும், தலித்தாக கேரளாவில் பிறந்து ஜனாதிபதியாக உயர்ந்த நாராயணனும், கடற்கரை கிராமத்தில் பிறந்து இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல்கலாமும், தஞ்சாவூர் கிராமத்தில் பிறந்து தமிழக முதல்வராக உயர்ந்த கலைஞரும் கேவலமானவர்கள். இன்னும் கேட்டால், இவர் தரகு முதலாளி, அவர் அரைகாலனியவாதி, இவர் மடையன், அவர் முட்டாள், இவர் கோமாளி என்று அவதூறு மட்டும் அலுக்காமல் சலைக்காமல் திட்டுவார்கள்.
இன்னும் ஆழமாக பார்த்தோமானால், கம்யூனிஸ்டு கட்சி தொண்டனுக்குக் கூட தெரியாத விஷயங்கள் கம்யூனிஸ்டு கட்சிக்குள் ஒரு சிலரால் திட்டமாக வகுக்கப்படுகின்றன. இவை உள்கட்சி ஆவணங்கள் என்று அவர்களாலேயே அழைக்கப்படுகின்றன. இங்கு, கம்யூனிஸ்டு கட்சி தற்போது எந்த போர்த்தந்திர முறைகளை பயன்படுத்தி மக்கள் நடுவே பிரச்சாரம் செய்யவேண்டும், மக்களை உள்ளே இழுக்கவேண்டும் என்றெல்லாம் திட்டமிடப்படுகின்றன. இவைகள் கம்யுனிஸ்டு கட்சி தொண்டனுக்குக் கூட தெரியாதவை. மக்களை நம்புவோம், மக்களுக்காகவே போராட்டம் என்றெல்லாம் பிதற்றும் கம்யூனிஸ்டுகள் மக்களை நம்பி இந்த ஆவணங்களை வெளியே விட வேண்டியதுதானே? விட மாட்டார்கள். இதற்காகத்தான் ஒரு சில பிரச்சார போர்தந்திர உத்திகள் உருவாக்கப்படுகின்றன.
பிரச்சார உத்திக்கு ஒரு உதாரணமும், போர்தந்திர உத்திக்கு ஒரு உதாரணமும் தருகிறேன்.
1) பெரியார் இருந்தபோது அவரை கடுமையாக விமர்சித்த கம்யூனிஸ்டுகள் இன்று பெரியாரை அரவணைத்துக்கொள்வது. தற்போது, பார்ப்பனர்களது பூணூலை அறுக்கிறேன் என்று கிளம்பி திராவிட கழகத்தினரை விட தீவிரமாக பார்ப்பன எதிர்ப்பு கொண்டவர்கள் தாங்கள் என்று காட்டிக்கொண்டு திராவிட கழகத்தில் உள்ள இளைஞர்களை கவரும் திட்டம்.
2) சாதாரணமாக மக்கள் தங்கள் பிரச்னைகளுக்காக ஊர்வலம் சென்றாலோ அல்லது கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றாலோ, அதன் நடுவே ஊடுருவி இருந்துகொண்டு அரசாங்கத்து ஊழியர்களையும், போலீஸையும் ஆயுதங்கள் மூலம் தாக்குவது. இதன் மூலம், போலீஸ் திருப்பி தாக்குவதன் மூலம் பொதுமக்களை போலீஸ் தாக்க வைப்பது. இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிலிருந்து இளைஞர்களை தங்களது ஆயுத புரட்சிக்கு அழைத்துக்கொள்வது.
இது போன்ற கேவலமான உத்திகள் கட்சியின் உள்ளே பொலிட்பரோ என்னும் கும்பலால் திட்டமிடப்படுகின்றன. இது போன்ற பல்வேறு திட்டங்கள் இவற்றின் ஆவணங்களில் காணலாம். இந்த கட்சிகளுக்கு எங்கே யாரிடமிருந்து பணம் வருகிறது போன்றவைகளிலிருந்து ஆயிரக்கணக்கான விஷயங்கள் இந்த உள்கட்சி ஆவணங்களில் உள்ளன.
கம்யூனிஸ்டுகள் மட்டுமே தொழிலாளர்களுக்காக உழைக்கிறார்கள், அல்லது கம்யூனிஸ்டுகள் மட்டுமே விவசாயிகளுக்காக உழைக்கிறார்கள், ஏழைகளுக்காக பாடுபடுகிறார்கள் என்று மக்களுக்கு தோன்றவேண்டும் என்பதற்காக மிகவும் சிரத்தை எடுத்து, அப்படி தொழிலாளர்களுக்காக, விவசாயிகளுக்காக, ஏழைகளுக்காக பாடுபடுபவர்களை அவதூறு செய்வதும், அவர்களை கேவலப்படுத்துவதையும் ஒரு முக்கியமான தொழிலாகவே கம்யூனிஸ்டுகள் செய்கிறார்கள்.
ஆனால், கம்யூனிஸ்டுகளை அவ்வாறு திரும்பி அவதூறு செய்ய யாரும் விரும்புவதில்லை என்பதால், இவர்கள் தூற்றுவது மட்டுமே நிலைத்துவிடுகிறது.
இதனால்தான் ஏழைகளுக்கும் நிராதரவானவர்களுக்கும் உழைத்த, உழைக்கின்ற அன்னை தெரசா, ராமகிருஷ்ண மடம், திமுக அதிமுக தொழிற்சங்கங்கள், காங்கிரஸ் தொழிற்சங்கங்கள், கம்யூனிஸம் சாராத விவசாயிகள் சங்கங்கள் ஆகியவை இவர்களால் அவதூறு செய்யப்படுகின்றன.
உண்மையிலேயே மக்களுக்கு நலம் செய்யக்கூடிய பல திட்டங்கள் கம்யூனிஸ்டுகளால் அவதூறு செய்யப்படுகின்றன. இருக்கும் சமூக சூழ்நிலையிலேயே நாம் நன்றாக வாழ்ந்துவிட முடியும் என்று பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் நினைப்பது கம்யூனிஸ்டுகளுக்கு ஆபத்தானது. ஆகவே, அவர்கள் தற்கால சூழ்நிலை, சமூக நல திட்டங்கள், மக்களுக்கு நல்லது செய்வதன் மூலம் ஜனநாயக ரீதியில் வாக்குக்களை பெற்று ஆட்சி வரவும், மற்ற கட்சிகள் செய்யாத நல்ல விஷயங்களை செய்ய முனைகிற கட்சிகள் தொடர்ந்து அவதூறு செய்யப்படுகின்றன. அவர்களது குடும்ப விஷயங்கள், அவர்களது தனிமனித விஷயங்கள் (உதாரணம் -சரத்குமார் மது அருந்துபவர்) போன்ற விஷயங்கள் ஊதி பெரிதாக்கப்பட்டு ஜனநாயக அரசியல்வாதிகள் மீது வெறுப்பு மக்களிடையே வளர்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கம்யூனிஸ பிதாமகர்களான ஸ்டாலின், மார்க்ஸ், லெனின், மாவோ, போல்போட், கிம் இல் ஜுங் (இவர்கள் மது அருந்தமாட்டார்களா?) போன்ற அசிங்கங்கள் கையை தூக்கி போஸ் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள், அவர்கள் சொன்னதெல்லாம் வேதவாக்கு, அவர்கள் உலகமகா புனிதர்கள் என்பது போல எழுதப்படுகின்றன.
நாம் இவர்களும் ஒரு கட்சியினர் என்று நினைக்கிறோம். அதனால், இவர்களது கருத்துக்களை அனுமதிக்கிறோம். இவர்கள் மற்ற கட்சியினரை அவதூறு செய்வதையும், எல்லா கட்சியினரும் அவதூறு செய்கிறார்கள் அதே போல இவர்களும் செய்கிறார்கள் என்று அனுமதிக்கிறோம். இவர்கள் விளிம்புநிலையில் அரசியல் செய்பவர்களாக இருப்பதால், இவர்களை நாம் பொருட்டாக மதித்து பதிலும் சொல்வதில்லை. மற்ற கட்சியினரும் இவர்களுக்கு பதில் சொல்லி இவர்களை பெரிய ஆளாக ஆக்க விரும்புவதில்லை.
யாரும் இவர்களுக்கு பதில் சொல்வதில்லை என்பதால், தாங்கள் சொல்வதற்கு எவனாலும் பதில் சொல்ல முடியாது என்று இவர்களாக நினைத்துக்கொண்டுவிட்டார்கள். (ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும் என் பதில் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடிவிட்டார்கள். உண்மையிலேயே அதிமுகவினரும் திமுகவினரும் இவர்களது கொள்கையை ஆராய்ந்து கிண்டினால் இரண்டு நாள் தாங்குவார்களா?) இளையதாக முள்மரம் கொள்க என்று அய்யன் வள்ளுவன் வாக்கு. அதனால், வளரும்போதே, இந்த முள் மரத்தை வேரோடு பிடுங்கிவிடவேண்டும் என்று இந்த கட்டுரைகளை எழுதுகிறேன்.
Sonntag, 13. Januar 2008
| [+/-] |
மக்கள் கம்யூனிஸ எதிர்ப்பு கழகம் |
மக்கள் கம்யூனிஸ எதிர்ப்பு கழகம்
People's Anti Communism League (PACL)
இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் எண்ணற்ற துயரை கொண்டுவந்த இந்த கம்யூனிஸ சிந்தனை, "மக்கள் போராட்டம்", "தொழிலாளர்கள் உரிமை", "எதேச்சதிகார எதிர்ப்பு", "பாஸிஸ எதிர்ப்பு", "புதிய ஜனநாயகம்" போன்ற வார்த்தை ஜாலங்களால் மக்களிடம் ஆதரவு தேட முயல்கிறது.
இதுவரை நடந்த வரலாற்றை எடுத்து பார்க்கும்போது,
மக்கள் போராட்டம் என்ற பெயரில் மக்களை போராட வைத்து இறுதியில் மக்களை அடிப்படை தேவைகளுக்கே போராட வைத்துவிட்டதை பார்க்கிறோம்.
தொழிலாளர்கள் உரிமை என்று தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு தேடி ஆட்சிக்கு வந்த பின்னால், தொழிலாளர்களுக்கு முதலீட்டிய அமைப்பில் இருந்த ஒரு சில உரிமைகள் கூட பறிக்கப்பட்டு அடிமைகள் போல ஆக்கப்பட்டதை வரலாறு சொல்கிறது.
பாஸிஸ எதிர்ப்பு என்ற பெயரில் மக்களிடம் வார்த்தை ஜாலம் காட்டி மக்களை தங்கள் பின்னால் வரவழைத்த பின்னால், தங்கள் எதிர்ப்பு கருத்துக்களை "மக்கள்" பெயரிலேயே கடுமையாக ஒடுக்கி பாஸிஸ அமைப்பையே இவர்கள் உருவாக்கினர், அதன் பெயரிலேயே எண்ணற்ற கொலைகளை செய்தனர் என்பதையும் பார்க்கிறோம்.
எதேச்சதிகார எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று பேசுபவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னால், மற்ற நாடுகளை எவ்வளவு கீழ்த்தரமாகவும் சுரண்டல் முறையிலும் அடிமைகள் போல நடத்தினர் என்பதனை சோவியத் யூனியன் யுக்ரேன் மற்றும் இதர இனத்தவரை நடத்தியதையும் சீன கம்யூனிஸ்டுகள் திபெத் கம்போடியா வியத்நாம் ஆகிய நாடுகளை நடத்தியதையும், நடத்துவதையும் இன்றும் தனது விஷக்கரங்களை மற்ற நாடுகள் மீது வீசுவதையும் பார்க்கிறோம்.
இன்றும் தமிழ்நாட்டில் புதிய ஜனநாயகம் என்று ஆளை ஏமாற்றும் முயற்சிகள் நடந்துவருகின்றன. எந்த கம்யூனிஸ, சோசலிஸ நாட்டில் ஜனநாயகம் இருந்திருக்கிறது? புதிய ஜனநாயகம் என்பது ஜார்ஜ் ஆர்வெல் சொல்வது போல நேர் எதிரான பொருளை கொண்டது. இவர்களது ஜனநாயகத்தில் யாரும் ஓட்டுப்பொறுக்க மாட்டார்கள். ஓட்டு இருந்தால்தானே பொறுக்குவதற்கு? தங்களது ஜனநாயக விரோத போக்கை இவ்வளவு வெளிப்படையாக சொன்ன பின்னாலும், இவர்களை ஜனநாயகவாதிகள் என்று யார் அழைப்பார்கள்?
என்னுடைய இன்னொரு பக்கத்தில், கம்யூனிஸ கொள்கை ஆரம்பம் முதலே தவறான கருத்துக்களால், தவறான சிந்தனைகள் மூலம் உருவான தவறான கொள்கை என்பதை காட்டியிருக்கிறேன்.
விவாதிக்க வந்த அனைத்து கம்யூனிஸ்டுகளும் தோல்வியடைந்து பின்னால், தோல்வி அடைந்தோம் என்று உணர்ந்ததும் வெறும் அவதூறில் இறங்கினர்.
தனி மரம் தோப்பாகாது என்பதன் காரணமாக, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஒரு பரந்த இயக்கமாக இந்த மக்கள் இயக்கம் உருவாக வேண்டும் என்பதன் காரணமாகவும் எல்லா தரப்பு மக்களையும் இங்கே அழைக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள். நீங்கள் இந்த பதிவில் இணைய வேண்டும் என்பது என் அவா.
கம்யூனிஸ்டுகளது ஏ.கே.47களுடன் நாம் போராட முடியாது. ஆனால், அவர்களது தவறான கருத்துக்களுடன் போராட முடியும்.
அவர்கள் கொண்டுவரும் அபத்தமான கட்டுரைகளை கட்டுடைத்து அவர்களுக்கே காட்டுவோம்.
இதன் பின்னால் போய்விடக்கூடிய அப்பாவி இளைஞர்களை காப்பாற்றி தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் சுதந்திரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் அரணாய் விளங்குவோம்.
நீங்கள் திமுக ஆதரவாளராக இருக்கலாம், அதிமுக ஆதரவாளராக இருக்கலாம், காங்கிரஸ் ஆதரவாளராக இருக்கலாம், பாரதிய ஜனதா ஆதரவாளராக இருக்கலாம், அல்லது முன்னாள் கம்யூனிஸ்டாக இருக்கலாம்.
நாம் எல்லோரும் மற்றவர்களது ஜனநாயக உரிமைகளை மதிப்பவர்கள். மக்களது ஓட்டுக்களை, அவர்களது தேர்வுகளை மதிப்பவர்கள். மக்கள் ஓட்டுப்போடும் தேர்தலில் தோற்றால், அவர்களது எண்ணத்துக்கு செவி சாய்த்து மாற்றுகட்சியினர் பதவியில் இருக்கவும், அவர்கள் தங்களது செயல்திட்டங்களை நடத்தவும் அனுமதிப்பவர்கள். மாற்றுகட்சியினரது திட்டங்களில் குறை இருப்பதாக நாம் கருதினால் அந்த குறைகளை மக்களிடம் எடுத்துச் செல்பவர்கள். அதே போல நமது செயல்திட்டங்களில் குறை இருந்தால், மாற்றுகட்சியினர் நம்மைப் பற்றி குறை சொல்லவும் ஜனநாயக ரீதியில் அனுமதிப்பவர்கள்.
ஆனால், கம்யூனிஸ்டுகள் அப்படி அல்ல. தங்களது கருத்து ஒன்றே சரி. மற்றவர்கள் கருத்து அனைத்தும் தவறு. அதுமட்டுமல்ல, தங்களை தவிர வேறொருவரும் மக்களிடம் எந்த கருத்தையும் கூறக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் கொண்டவர்கள். இதனால் தான் அவர்களது ஆட்சிகள் உலகம் முழுவதும் சர்வாதிகாரத்தனம் கொண்டிருந்தன. அதனையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று வார்த்தைஜாலத்தில் மறைத்தவர்கள்.
தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பல்வேறு துறைகளில் இந்த கம்யூனிஸ்டுகள் ஊடுருவி தங்களது ஜனநாயக எதிர்ப்பு பிரச்சாரத்தையும், பயங்கரவாத பிரச்சாரத்தையும் செய்துவருகின்றனர். தங்களது பயங்கரவாத செயல்களை வார்த்தைஜாலங்களில் மறைத்து நியாயப்படுத்தியும் வருகின்றனர். அதுமட்டுமல்ல, இவர்களை தவிர மற்றவர்கள் அனைவரையும் பயங்கரவாதம் என்று கூசாமல் சொல்லவும் நியாயப்படுத்தவும் செய்கின்றனர்.
இவர்களது செயல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி இந்த கொள்கை குப்பை, ஜனநாயக விரோத, மக்கள் விரோத கொள்கை என்பதனை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.
வாருங்கள்.
இந்த பக்கத்தை குறித்துக்கொள்ளுங்கள்
http://anticommies.blogspot.com/
Donnerstag, 10. Januar 2008
| [+/-] |
கலைஞர் கருணாநிதிக்கு பாரதரத்னா கொடுக்க வேண்டும் - ஏன்? |
பாரதிய ஜனதா கட்சி தலைவர் லால் கிருஷ்ண அத்வானி அவர்கள் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களுக்கு பாரதரத்னா கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் அவர் ஒருவருக்கு பரிந்துரை செய்கிறார். நானும் ஒரு இந்தியக்குடிமகன் என்ற முறையில் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்களுக்கு பாரதரத்னா கொடுக்க பரிந்துரை செய்கிறேன்.
காரணம் என்ன?
திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் தோன்றியபோது காங்கிரசும், கம்யூனிஸ்டுகளுமே மிக முக்கிய சக்தியாக விளங்கினர். கம்யூனிஸ்டுகள் மிகவும் பரவலாக ஆதரவு பெற்று பெரும் தலைவர்களையும் கொண்டவர்களாக இருந்தனர். ஜீவா, ராமமூர்த்தி ஆகியோர் மக்கள் ஆதரவு பெற்ற பெரும் கம்யூனிஸ்டு தலைவர்களாக இருந்தனர்.
அந்த சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தோற்றால், கம்யூனிஸ்டு கட்சியே ஆட்சிக்கு வரும் என்ற நிலை இருந்தது.
அந்த சூழ்நிலையில்தான் அண்ணாவும், கலைஞரும் இதர திக தலைவர்களும் திமுகவை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். இதனால், காங்கிரஸ் தோற்றாலும், பெருத்த மரண அடி கம்யூனிஸ்டுகளுக்கு விழுந்தது. கம்யூனிஸ்டுகள், பெரிய எதிர்கட்சி என்ற தளத்தை இழந்து திமுகவிடம் முக்கிய எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கொடுத்தனர்.
இது தமிழ்நாட்டை காப்பாற்றியது என்று சொன்னால் மிகை அல்ல. கேரளாவும் மேற்கு வங்காளமும் தொழில்துறையிலும், மக்கள் வாழ்க்கையிலும் இழிந்து கேவலப்பட்டு விவசாயம் கூட செய்யப்பட முடியாமல் அசிங்கப்பட்டு போன நிலையில் தமிழ்நாடு இன்று உலகத்தரமுள்ள மாநிலமாகவும், கணினி தொழில்நுட்பம், கார் தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு, ஸ்டீல் உருவாக்கம், லாரி தொழில் என்று பரந்து தன் கால்களை பதித்துள்ளது. இதெல்லாம் கம்யூனிஸ்டுகளின் நெருக்குவளையிலும், வார்த்தை ஜாலங்களிலும் சாத்தியமாகியிருக்காது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலமாக இருந்த மேற்குவங்காளத்தில் இன்று தொழில்களே இல்லாமல் போனதன் காரணம் இந்த கம்யூனிஸ்டுகளே!
அதுமட்டுமல்ல, மேற்கு வங்கத்தில் சென்ற வருடம் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1800க்கும் மேல். கேரளாவில் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேல். ஆனால், எத்தனை விவசாயிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டார்கள்? ஏதேனும் கேள்விப்பட்டீர்களா? இல்லை!
இவ்வாறு தமிழ்நாட்டை கம்யூனிஸ்டுகளிடமிருந்து காப்பாற்றிக்கொடுத்த ஒரே காரணத்துக்காகவே திராவிட முன்னேற்றக்கழத்திற்கு பாரதரத்னா கொடுக்கப்பட வேண்டும். அதன் நிர்வாகியாகவும் தலைவராகவும் இருந்து, கம்யூனிஸ்டுகளை ஒரு விளிம்பு நிலை சக்தியாக தள்ளிய கலைஞர் மு கருணாநிதிக்கு நிச்சயம் பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.
வாழ்க கலைஞர்!
ஓங்குக அவர் புகழ்!!
Dienstag, 8. Januar 2008
| [+/-] |
ஜனவரி 8 1979 - கம்யூனிஸ்ட் கெமர்ரூஜின் வெறியாட்டம் முடிவுக்கு வந்த நாள் |
1.7 மில்லியன் கம்போடிய மக்களை (அன்றைய கம்போடிய நாட்டின் மக்கள்தொகையில் 21 சதவீதம்) கொன்று கம்யூனிஸ பொன்னுலகத்தை உருவாக்க பேயாட்டம் ஆடிய கெமர் ரூஜ் (சிவப்பு கம்போடியா) கட்சியின் தோல்விநாள் இன்று.
பொதுவுடமை நாட்டை உருவாக்குகிறேன் என்று மார்க்சும்,லெனினும் மாவோவும் உசுப்பேற்றி விட்டதை நம்பி போல்போட் என்ற கம்யூனிஸ சொறிநாய், கம்போடியாவில் ரத்த ஆறு ஓட வைத்து புராதன பொதுவுடமை நாட்டுக்காக சொந்த நாட்டு மக்களையே கொன்று (கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்தவர்கள் எல்லோரும் வர்க்க எதிரிதான்!) வெறியாட்டம் ஆடியது முடிவுக்கு வந்த நாள் இன்று.
வியத்நாம் அமெரிக்காவுடன் போரிட்டுக்கொண்டிருந்தபோது, சீனா வியந்நாமை கை கழுவியது. கம்போடியாவில் இருந்த வியத்நாமியர்கள் இந்த கம்யூனிஸ கட்சியால் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தனர். கம்போடியர்களை கொன்று குவிக்க செஞ்சீனம் ஏராளமான பண உதவியும் ஆயுத உதவியும் ராணுவ உதவியும் சிவப்பு கெமர் (கெமர் ரூஜ்) கட்சிக்கு அளித்து உதவியது. (நம் ஊர் நக்ஸலைட்டுகளுக்கும், மக இகவினருக்கும், சிபிஎம் கட்சிக்கும் சீனா உதவுவது போலத்தான்). அந்த கொடூரத்தை நிறுத்த வியத்நாம் கம்போடியாவுக்குள் புகுந்து இந்த அசுரர்களை ஓட ஓட துரத்திய நல்ல நாள்.
வர்க்க எதிரிகளின் தலைகளை (பலர் இதில் பச்சிளம் மாறாத சிறுவர்கள்!) சிவப்பு கெமர் கட்சியினர் அடுக்கி வைத்திருப்பதை பாருங்கள்.
இதுதான் கம்யூனிஸ சொர்க்கம்.
இதுதான் "புரட்சிகர இயக்கங்கள் பின்னால் அணிவகுப்பதன்" விளைவு.
--
கம்போடியாவின் கம்யூனிஸ்டு கட்சி முதலில் Communist Party of Kampuchea (CPK) என்று அழைக்கப்பட்டது. திடீரென்று ஜனநாயகம் என்று பேசுவோம் என்று "புதிய ஜனநாயகம்" பேர் போட்டுக்கொள்வோம் என்று "Party of Democratic Kampuchea." கம்போடிய ஜனநாயக கட்சி என்று பேர் மாற்றிக்கொண்டார்கள். அதே நேரத்தில் இதனை Khmer Communist Party என்றும் National Army of Democratic Kampuchea என்றும் கூறிக்கொண்டார்கள்.
நம் ஊரில் ஒரு பக்கம் மக்கள் போர் (peoples war) கம்யூனிஸ்டுகள் என்று கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் புதிய ஜனநாயகம் என்று உதார் விடுவதில்லையா. அது போலத்தான். நாமும் ஏமாந்து இவர்களும் ஜனநாயக வாதிகள் என்று ஏமாறுவோம் என்று கனவு காண்கிறார்கள்.
இந்த கம்யூனிஸ்டுகளால் கொல்லப்பட்ட கம்போடிய மக்களை ஆவணப்படுத்தும் முயற்சியில்
http://www.tuolsleng.com/ ட்வோல்ஸ்லெங் மியூஸியம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு விசிட் அடியுங்கள்.
இந்த சிறுமியும் வர்க்க எதிரிதானாம்!
மேலே காணும் அடையாளம் தெரியாத இந்த சிறுவனைப்போல லட்சக்கணக்கானவர்கள் பலியானவர்களின் போட்டோக்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
--
இந்த கம்யூனிஸ்டுகளை ஓட ஓட துரத்துங்கள்.
இது போன்ற ஒரு நாளை நாம் நம் எதிர்காலத்தில் கொண்டாட வேண்டாம். அப்படி கொண்டாடாமல் இருக்கவேண்டுமென்றால், இப்போதே இந்த கம்யூனிஸ்டுகள் ஓட ஓட துரத்தப்பட வேண்டும்.
அது உங்கள் கையில்தான் இருக்கிறது.
Samstag, 5. Januar 2008
| [+/-] |
மாற்று எரிபொருள் எதிர்ப்பு: இந்திய மக்களுக்கு எதிரான கம்யூனிஸ்டு துரோகத்தின் தொடர்ச்சி |
இந்தியாவில் மாற்று எரிபொருளாக பயோடீஸலை உற்பத்தி செய்ய காட்டாமணக்கு பயிர் செய்யவும், அதனை உபயோகித்து பயோடீஸலை உற்பத்தி செய்து கார்களுக்கு பெட்ரோலுக்கு மாற்றாக உபயோகிக்கவும் ஒரு திட்டம் உள்ளது. இது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.
அதற்குள்ளாகவே, இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் நல்லது நடந்துவிட்டால் என்ன செய்வது, ஏழைகள் குறைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டத்துடன் ஜூலை புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் கம்யூனிஸ்டுகள் அலறியுள்ளனர்.
அது இங்கே கீழே குறிப்பிடப்பட்டு அதன் விமர்சனமும் எழுதப்பட்டுள்ளது.
இந்த விமர்சனத்தை படிக்கும் முன்னர் வாசகர்கள் கீழ்க்கண்ட இணையப்பக்கங்களை படித்துக்கொள்வது நலம். ஏனெனில் அப்போதுதான், இந்த இந்திய மக்களின் துரோகிகள் எவ்வாறு உண்மையை திரிக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவியலும்.
பயோடீஸல் என்றால் என்ன?
http://en.wikipedia.org/wiki/Biodiesel
காட்டாமணக்கு எண்ணெய் பற்றி
http://en.wikipedia.org/wiki/Jatropha
காட்டமணக்கைவிட அதிகம் பயோடீஸல் செய்யக்கூடிய அல்கே
http://en.wikipedia.org/wiki/Algaculture
பிரேசிலில் மாற்று எரிபொருளான பயோடீஸல் (அல்கஹால்)உபயோகப்படுத்தும் கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை பற்றிய பிபிஸி கட்டுரை
http://news.bbc.co.uk/1/hi/business/4581955.stm
மாற்றுப் பயிர் - மாற்று எரிபொருள்:
ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும்
ஏகாதிபத்திய சதி!
காட்டாமணக்கு சாலையோரங்களில் கேட்பாரின்றி வளரும் புதர்செடி. கிராமங்களில் இதனை வேலியாக நட்டு வைப்பதுண்டு. அதன் நச்சுத் தன்மையை ஆடுமாடுகள் கூட அறிந்திருப்பதால், இச்செடியை முகர்ந்து கூட பார்க்காமல் விலகிச் சென்று விடும். அப்பேர்ப்பட்ட நச்சுச் செடியான காட்டாமணக்கைப் பயிரிட்டு பணம் சம்பாதியுங்கள் என்ற ஆட்சியாளர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
நச்சுச்செடியால் பூமி நஞ்சாகிவிடுமா என்ன? அல்லது விளக்கெண்ணெய் ஆமணக்கிலிருந்து உருவாக்கப்பட்டு இந்தியாவில் காலம் காலமாக உபயோகிக்கப்பட்டுவருவது உங்களுக்கு தெரியுமா? அது விஷம்தான். அதற்காக என்ன இப்போது? எல்லோரையும் அதனை குடிக்கவா சொல்கிறார்கள்?
மயிலாடுதுறையை சவூதி அரேபியாவாக மாற்றிக் காட்டப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர், நெல் பயிரிடுவதை விட்டு மாற்றுப் பயிர் முறைக்கு மாறச் சொல்லி விவசாயிகளுக்கு உபதேசிக்கிறார். 2004ஆம் ஆண்டிலேயே தஞ்சை மாவட்டத்தில் மக்காச்சோளமும், காட்டாமணக்கும் பயிரிட்டு விவசாயத்தை முன்னேற்றத் திட்டம் தீட்டினார், அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன், காட்டாமணக்கும் மக்கா சோளமும் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய சிறப்பு விவசாய மண்டலங்களை நிறுவ வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்.
நல்ல ஆலோசனை
விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்றி விடுவதில் ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்களே; ஒருவேளை, நாட்டு மக்களாகிய நாம்தான் இன்னமும் பத்தாம்பசலித்தனமாக இருக்கிறோமோ என்று எண்ணிக் கொண்டோம். அது ஒருபுறமிருக்கட்டும். ஆட்சியாளர்களும் வேளாண் விஞ்ஞானிகளும் எதற்காக காட்டாமணக்கைப் பயிரிடச் சொல்கிறார்கள்? காட்டாமணக்கு பயிரிட்டால் ஏழை விவசாயி எப்படி குபேரனாக முடியும்?
நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாம் ஆயிலையும், காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சோயா எண்ணெய், புங்கை எண்ணெய் முதலானவற்றை டீசலில் 5% வரை கலந்து எரிபொருளாகப் பயன்புடுத்தலாம். இதனை ""பயோடீசல்'' என்கின்றனர். இதுதவிர பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களில் எத்தனால் எனப்படும் எரிசாராயத்தைக் கலந்து பயன்படுத்துகின்றனர். எரிசாராயத்தை உருவாக்க கரும்பு, மக்காச்சோளம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாற்று வகை எரிபொருட்கள் தாவரங்களிலிருந்து உருவாக்கப்படுவதால் இவற்றை ""உயிர்ம எரிபொருட்கள்'' (ஆடிணிஞூஞுதடூ) என்கின்றனர்.
பொய். வெறும் 5 சதவீதம் என்பது முழுப்பொய். (வெறும் 5 சதவீதத்துக்கா எங்கள் நிலத்தை பாழ் பண்ணவேண்டும் என்று ஒரு விவசாயி யோசிக்க வேண்டும் என்று எழுதப்படும் பொய்கள் இவை)
முழுக்க முழுக்க ஆல்கஹாலிலேயே ஓடும் கார்கள் உண்டு. பிரேசிலில் 100 சதவீதம் பெட்ரோல், அல்லது 100 சதவீதம் ஆல்கஹாலில் அல்லது இரண்டின் கலவையில் ஓடக்கூடிய கார்கள் இருக்கின்றன. இவை பிரேசிலில் ஓடக்கூடிய கார்களில் 53 சதவீதம். பிபிஸி செய்தியை பார்க்கவும்.
//இத்தகைய உயிர்ம எரிபொருட்களுக்கும் பயோ டீசலுக்குமான தேவை உலகெங்கும் அதிகரித்துள்ளது. திடீரென இதற்கான தேவை அதிகரிக்கக் காரணம் என்ன?
ஆண்டுதோறும் பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. வரைமுறையின்றி நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களை எரித்து வருவதால்; அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் விளைவாக உலகம் மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே போகிறது. இதன் விளைவாக, வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள நிரந்தரப் பனிப் பாளங்கள் உருகத் தொடங்கி கடலை நோக்கி வேகமாக ஓடுகின்றன. இதனால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து பல சிறிய தீவுகள் கடலில் மூழ்கி அழிந்து போகும்; வளிமண்டல வெப்பநிலை உயர்வால் வறட்சியும் வெள்ளமும் அடுத்தடுத்து நிகழும்; காடுகள் பற்றியெரியும்; வளிமண்டலம் எங்கும் புகைமயமாகும்; பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முதல் மனிதன் வரை அழிய நேரிடும்.//
இதற்குக் காரணம், கிறிஸ்துவ இறையியலின் வழியே மேற்கத்தியர்கள், மனிதர்கள் சுரண்ட ஆண்டவன் கொடுத்ததுதான் இந்த பூமி என்ற நினைப்பும், இயற்கைக்கும் மனிதனுக்கு முரண்பாடு இருக்கும் என்றும் மனிதனை இயற்கையிலிருந்து பிரித்து அவனை இயற்கையை "வெல்லும்" சிந்தனையை கொண்டுவந்த மேற்கத்திய கம்யூனிஸ சிந்தனையும் தானே? இயற்கையோடு இணைந்து வாழக்கோரும் இந்திய சிந்தனையை பார்ப்பனிய பனியா என்று தினந்தோறும் காலைமுதல் மாலைவரை திட்டுவது நீங்கள்தானே?
அதனை இன்னொரு கட்டுரையில் விவரமாக எழுத முயல்கிறேன்.
//இப்பேரழிவைத் தடுக்க, பெட்ரோல்டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அல்லது அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் அளவையாவது மட்டுப்படுத்த வேண்டும் என்ற சுற்றுச்சூழல்வாதிகள் எச்சரித்து வருகின்றனர். புவி வெப்பநிலை அதிகரிப்புக்கும் சுற்றுச்சூழல் நஞ்சாகி பேரழிவின் விளம்பில் உலகம் தத்தளித்துக் கொண்டிருப்பதற்கும் ஏகாதிபத்தியங்களின் இலாபவெறி கொண்ட உற்பத்தி முறையும் போர்வெறியுமே முதன்மையான காரணம். சுற்றுச்சூழலால் நஞ்சாகிப் பேரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ள உலகைச் சீரமைக்க, ஏகாதிபத்திய நலனுக்கேற்ப ஏழை நாடுகளில் காடு வளர்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்திய ஏகாதிபத்தியங்கள், நச்சுச் சூழலிலிருந்து உலகைக் காப்பதில் தாங்கள் அக்கறை கொண்டிருப்பது போல் நாடகமாடின. இப்போது, பயோ டீசல் மற்றும் உயிர்ம எரிபொருட்களைக் கொண்டு, கரிம வாயுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கிளம்பியுள்ளன.//
அமெரிக்க அதிபர் புஷ் தனது 2007ஆம் ஆண்டின் அரசுக் கொள்கை உரையில், எரிபொருளுக்காக பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கும் நிலையை மாற்ற ""பத்துக்கு 20'' என்ற திட்டத்தைக் குறிப்பிட்டார். அதாவது, 2010ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா 20% வரை தனது பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதற்காக, உயிர்ம எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியமும் 2007 மார்ச்சில் நடந்த மாநாட்டில், போக்குவரத்துத் துறையில் உயிர்ம எரிபொருள் பயன்பாட்டை 2020க்குள் 10% அளவுக்கு உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் பின்னணியில்தான், ""சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்; புவி வெம்பலைத் தணிப்போம்; உயிர்ம எரிபொருளைப் பயன்படுத்துவேம்; காட்டாமணக்கைப் பயிரிடுவோம்'' என்ற கூச்சல் ஆரவாரமாக எழுப்பப்படுகிறது.
வளர்ந்த நாடுகள் பெட்ரோல் பயன்பாட்டை குறைத்துக்கொள்வதும் இறக்குமதியை குறைத்துக்கொள்வதும் நல்லதுதான்.
//புவி வெம்பலைத் தணித்து சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான நல்ல திட்டம் போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் மிகப் பெரிய ஏகாதிபத்திய சதி அரங்கேறி வருகிறது. இத்தகைய மாற்றுப் பயிர் மாற்று எரிபொருள் திட்டம் ஏகாதிபத்தியங்களின் அன்புக் கட்டளைப்படி உலகின் பல ஏழை நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் அனுபவம் என்ன?
மெக்சிகோ நாட்டில், அமெரிக்காவின் எரிசாராயத் தேவைக்காக இனிப்புச் சோளப் பயிரின் சாகுபடி பரப்பு அதிகரித்ததால், வெள்ளைச் சோளம் உற்பத்தி குறைந்தது. வெள்ளைச் சோளத்திலிருந்துதான் மெக்சிக மக்களின் அன்றாட உணவாகிய ""டார்ட்டில்லாஸ்'' தயாரிக்கப்படுகின்றது. எரிசாராயத்துக்கான இனிப்புச் சோள சாகுபடியானது இன்று ""டார்ட்டில்லாஸ்''இன் விலையை 37%க்கு உயர்த்தி விட்டது. அடிப்படை உணவின் தட்டுப்பாடு விலையேற்றத்தால் மெக்சிகோ உழைக்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.//
மற்றுமொரு பொய். உண்மை என்னவென்றால், நார்த் அமெரிக்கன் பிரீ ட்ரேடுக்கு முன்னால், மிகவும் மலிதான விலையில் மெக்ஸிகோவுக்கு சோளத்தை அமெரிக்கா கொடுத்துவந்தது. தற்போது அமெரிக்கா தனது சோளத்தை பயோடீஸலுக்கு திசை திருப்புவதால், மலிவான விலையில் மெக்ஸிகோவுக்கு கொடுக்கவில்லை. இதனால்தான் மெக்ஸிகோவில் டோர்ட்டியாவின் விலை ஏறுகிறது. மெக்ஸிகோ விவசாயிகள் தங்கள் சோளத்தை எடுத்து பயோடீஸல் பண்ணுவதாலோ, அல்லது அந்த சோளத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதாலோ அல்ல.
கீழே பிபிஸியில் மெக்ஸிகோ பொருளாதார மந்திரி சொல்வதை கவனியுங்கள்.
Under the 1994 North American Free Trade Agreement, Mexico used to get cheap corn imports from the US, but Mexico's Economy Minister Eduardo Sojo said that with more US corn being diverted into ethanol production, supply was dwindling.
//தென்னமெரிக்காவிலுள்ள பிரேசில் நாட்டில் அமெரிக்கத் தேவைக்காக விளைநிலங்களில் கரும்பும் இனிப்புச் சோளமும் பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது. அவற்றின் விளைபரப்பை அதிகரிக்க, ஏறத்தாழ 9 கோடி ஏக்கர் அளவுக்கு மழைக்காடுகளான அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. இன்னும் 15 கோடி ஏக்கர் காடுகளை அழிக்க அந்நாட்டின் "முற்போக்கு' அரசு தீர்மானித்துள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரித்ததும், தட்டுப்பாடு காரணமாக 2006இல் பிரேசில் நாட்டில் சர்க்கரை விலை இரண்டு மடங்கு அதிகரித்தது.//
பிரேசில் நாட்டில் சர்க்கரைவிலை இரண்டு மடங்காக அதிகரித்தாலும் பிரேசில் நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஏனெனில், பிரேசில் நாடு மிகப்பெரிய நாடு. அதன் அமேசான் காடுகள் அழிக்கப்படுவது சர்க்கரைக்காக இல்லை. அதன் காடுகள் உலகெங்கும் காகிதம் என்ற புராதனமான ஊடகக்கருவியை பண்ணுவதற்காக அழிக்கப்படுகின்றன. நவீன இணையம் வந்துதான், காகிதத்தின் தேவை குறைந்து காடுகள் அழிவது குறைக்கப்பட்டுள்ளது.
//பாமாயில் எனப்படும் பனை எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் டீசலுடன் கலந்து எரிப்பதால் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் எண்ணெய்ப் பனை சாகுபடிக்காக காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தியாகும் பாமாயில் 40%க்கு மேல் எரிபொருளுக்காக ஏற்றுமதி செய்யப்படுவதால், சமையலுக்கான பாமாயில் தட்டுப்பாடு காரணமாக விலையேறி விட்டது.
பிரேசிலில் இறைச்சித் தொழிலுக்கு உறுதுணையாகப் பயிரிடப்பட்டு வந்த சோயாபீன்ஸ், இன்று மாற்று எரிபொருளாக (எண்ணெயாக) மாற்றப்படுவதால், அந்நாட்டின் ஒட்டுமொத்த சோயா சாகுபடியே அமெரிக்காவுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக பிரேசிலில் பன்றி மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் பெரும் நெருக்கடியில் சிக்கி வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆடுமாடுகளின் மேய்ச்சலுக்கான நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சோயா பண்ணைகளாக மாற்றப்பட்டு விட்டதால் ஏழைநடுத்தர விவசாயிகள் ஆடுமாடுகளைக் கூட வளர்க்க முடியாமல் தத்தளிக்கின்றனர். ""நேற்று வரை சோயா எங்களுக்கு வாழ்வளித்த பயிர்; இன்று அது எங்கள் வாழ்வைப் பறிக்க வந்துள்ள கொலைகாரப் பயிர்'' என்று குமுறுகிறார்கள் பிரேசில் விவசாயிகள்.
இருக்கலாம். ஆனால், அந்த விவசாயிகள் மீது அரசாங்கம் எந்த கட்டுப்பாடுகளையும் விதித்து, அவர்கள் சோயாபீன்ஸை பயோடீஸலுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தமுடியாது.
//இந்த உண்மைகள் ஒருபுறமிருக்க, உலகின் பல ஏழை நாடுகளின் உணவுத் தட்டுப்பாடும் பட்டினிச் சாவுகளுக்கான பேரபாயம் இந்த மாற்றப் பயிர் மாற்று எரிபொருள் திட்டத்தால் உருவாகியுள்ளது. உலகெங்கிலுமுள்ள நிலங்களில் ஏறத்தாழ 40% பரப்பளவுக்கு பாரம்பரிய விவசாயம் நடந்து வருகிறது. இந்த விளைநிலங்களிலிருந்துதான் மாற்று எரிபொருள் மாற்றுப் பயிருக்கான நிலத்தை ஒதுக்க முடியும். அமெரிக்காவின் கனவுத் திட்டமான ""பத்துக்கு 20'' திட்டத்தில் பாதியளவுக்கு நிறைவேற்ற, அதாவது, அந்நாடு 10% அளவுக்கு மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டுமானால், உலகெங்கிலுமுள்ள விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள், உணவு தானிய உற்பத்தியைக் கைவிட்டாக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பட்டினி கிடக்க வேண்டும்!//
அமெரிக்காவின் மாற்று எரிபொருளுக்கு அமெரிக்கா வெளிநாடுகளை நம்பி இருக்கிறது என்பது மாபெரும் பொய். பெட்ரோலிலிருந்து அவர்கள் பயோடீஸலுக்கு போவதன் காரணமே, அமெரிக்காவின் எரிபொருள் தேவைக்கு அவர்கள் வெளிநாடுகளை நம்பி இருக்கக்கூடாது என்ற காரணமே. அமெரிக்காவின் mechanized agriculture மூலம் மிக அதிகமாக உற்பத்தியாகும் சோளத்தை விளைவிக்கும் விவசாயிகள் உண்மையில் ஏழைகள். ஏனெனில், அவர்கள் உற்பத்தி செய்யும் சோளத்துக்கு தேவை அமெரிக்காவில் இல்லை. அதனால், சோளத்தையும் கோதுமையையும் அமெரிக்கா, ஏழை நாடுகளுக்கு உதவி என்று வெளிநாடுகளில் கொட்டுகிறது. அவ்வாறு அந்த அமெரிக்க விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதால் வருடாவருடம் மானியம் வழங்குகிறது.
தற்போது அந்த சோளத்துக்கு பெட்ரோலாக மாற வாய்ப்பு இருப்பதால், ஏராளமான அமெரிக்க விவசாய சங்கங்கள் சோளத்திலிருந்து பெட்ரோல் எடுக்கும் தொழிற்சாலைகளை கட்டிவருகின்றன.
//ஒரு கார் டாங்கில் ஊற்றப்படும் எரிசாராயத்தை உருவாக்கத் தேவையான உணவு தானியத்தைக் (சோளம்) கொண்டு ஒரு வருடத்துக்கு ஒரு மனிதனின் பசியைப் போக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பல கோடி டன் உணவு தானியங்கள் கார்களில் ஊற்றப்படும் எரிசாராயமாக மாறும் என்றால், எஞ்சியிருக்கும் உணவு தானியங்களுக்காக உலகெங்குமுள்ள ஏழை மக்கள் அடித்துக் கொள்ளும் அபாய நிலை உருவாகும். எனவேதான், மார்ச் 2007இல் அமெரிக்க அதிபர் புஷ் மாற்று எரிபொருள் குறித்த ""பத்துக்கு 20'' திட்டத்தை அறிவித்தவுடனேயே, அமெரிக்க எதிர்ப்பாளரான கியூபா நாட்டின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, ""இத்திட்டத்தின் மூலம் மனித இனப் படுகொலைகளை அமெரிக்கா உலகமயமாக்கியுள்ளது'' என்று சாடினார்.//
பிடல் காஸ்ட்ரோ சொல்லிவிட்டார் இல்லையா? உங்களுக்கு வேதவாக்குதான்.
//உயிர்ம எரிபொருளுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தின் பின்னணியில் இன்று ஏழை நாடுகளின் உணவுப் பாதுகாப்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வசதி படைத்தவர்களின் சொகுசுக் கார்கள் சாலைகளில் சறுக்கிக் கொண்டு ஓடுவதற்காகவும், ஏகாதிபத்திய நாடுகளின் எரிபொருள் தாகம் தீர்வதற்காகவும், ஏழை நாடுகள் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் ஒழித்துக் கட்டும் இந்த ஏகாதிபத்திய சதிக்கு மைய மாநில அரசுகள் விசுவாசமாகச் சேவை செய்து வருகின்றன.//
இல்லை. இதுவும் இன்னொரு வடிகட்டின பொய். இந்தியாவில் உற்பத்தியாகக்கூடிய ஆல்கஹால் பெட்ரோலையோ அல்லது பயோடீஸலையோ வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் எந்த திட்டமும் இந்தியாவிடமோ அல்லது இந்திய மாநிலங்களிலோ இல்லை.
இந்தியாவே வருடாவருடம் பல்லாயிரம் கோடி ரூபாயை கொட்டி மத்தியகிழக்கிலிருந்து பெட்ரோலியம் இறக்குமதி செய்துகொண்டிருக்கும்போது இந்தியாவில் உருவாகும் பயோடீஸலை யாருக்கு ஏற்றுமதி செய்வார்கள்? ஏன் ஏற்றுமதி செய்வார்கள்?
//தமிழக அரசு 2004ஆம் ஆண்டிலேயே கரும்பாலைகளில் வடிக்கப்படும் சாராயத்தின் அளவைக் கூட்டிக் கொள்ளவும், புதிதாக வடிப்பாலைகள் நிறுவி எத்தனால் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. பயோ டீசல் உற்பத்திக்கு 5% வரிவிலக்கு அளித்துள்ளது. ஆந்திர அரசு, அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காட்டாமணக்கு மற்றும் காட்டாமணக்கு வகையைச் சேர்ந்த ""ஜெட்ரோபா'' முதலானவற்றைப் பயிரிட பல சலுகைகளை அறிவித்துள்ளது. பல வங்கிகள் இம்மாற்று எரிபொருள் உற்பத்திக்குக் கடன் வழங்குகின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பெரியார்புரா, ஆர்.எஸ்.எஸ்.புரா முதலான பெருந்தொண்டு நிறுவனங்களும் உயிர்ம எரிபொருள் திட்டங்களை விவசாயப் பகுதிகளில் செயல்படுத்தி வருகின்றன.
சுற்றுச் சூழலைக் காப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள உயிர்ம எரிபொருட்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுமா? இது குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் இதற்கு நேரெதிரான முடிவுகளையே வெளியிட்டுள்ளன.//
இன்னொரு வடிகட்டின பொய். உயிர்ம எரிபொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மண்ணிலிருந்து எடுக்கப்படும் பெட்ரோலிய பொருட்களால் ஆகும் சுற்றுச்சூழல் பாதிப்பை விட பல மடங்குகுறைவு. உதாரணமாக இதில் ஏதும் உலோக கனிமங்கள் மாசு இருக்காது.
//எரிசாராயம் கலந்த பெட்ரோல் வெளியிடும் கரிம வாயுக்களின் பருமம் ஒப்பீட்டளவில் குறைவு என்பது உண்மைதான். ஆனால், எரிசாராயத்துக்காக வளர்க்கப்படும் கரும்பு, இனிப்புச் சோளம் ஆகியவற்றுக்கு இடப்படும் பூச்சி மருந்துகள் உரங்கள்; கரும்பை ஆலையில் அரைத்து சாராயம் வடிக்கும் வரை எரிபொருள்கள் வெளியேற்றும் கரிம வாயுக்கள்; எரிசாராயத்தை விற்பனை நிலையம் வரை கொண்டு செல்லும் வாகனங்கள் வெளியேற்றும் புகை என ஒட்டு மொத்த கரிமவாயுக்களின் பருமத்தைக் கணக்கிட்டால் எல்லா கழுதையும் ஒன்றுதான்//
இல்லை. இதில் பெரிய அளவில் பெட்ரோலியத்தில் உள்ள உலோக கனிமங்கள் மூலம் வரும் மாசு ஆகியவை குறைவு.
//மேலும், மாற்றுப் பயிர் சாகுபடியானது சுற்றுச் சூழலைக் காப்பதற்கு மாறாக, பல நாடுகளில் சுற்றுச்சூழலையே நஞ்சாக்கி விட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தென்னமெரிக்காவில், அமெரிக்காவின் எரிபொருள் பசிக்காக தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதால், பூமி வெம்பல் மேலும் தீவிரமாகி விட்டது. அங்குள்ள ஆண்டேஸ் மலைத் தொடரின் பனி சூழ்ந்த சிகரங்கள் உருகத் தொடங்கி விட்டன. இந்தோனேஷியா முழுவதும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காக எண்ணெய்ப் பனையும் காட்டாமணக்கும் காடுகளை அழித்து பயிரிடப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் சீர்கேட்டில் அந்நாடு உலகின் மூன்றாவது இடத்தை எட்டி விட்டது.//
மேலும் தவறு. இந்தோனேஷியா தனது பயோடீஸலை ஏற்றுமதி செய்வதில்லை. இரண்டாவது இந்தோனேஷியாவில் பயோடீஸல் இந்தொனேஷிய பொதுமக்களால்தான் வாங்கப்படுகிறது.
//மாற்று எரிபொருளுக்காக காடுகள் அழிக்கப்படாமலிருந்தால், அந்தக் காடுகளே சுற்றுச்சூழலைக் காப்பதில் மாற்று எரிபொருளை விட முன்னணியில் இருந்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உயிர்ம எரிபொருளை உற்பத்தி செய்யப் பயிரிடப்படும் மாற்றுப் பயிர்களின் அமோக விளைச்சலுக்காகக் கொட்டப்படும் உரமும் பூச்சிக் கொல்லிகளும் பெட்ரோலியப் பொருட்கள்தான். பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு நிலத்தையும் நீரையும் அதே பெட்ரோலியப் பொருட்களால் நஞ்சாக்குவது எப்பேர்பட்ட புத்திசாலித்தனம்! மேலும், ஏகாதிபத்தியங்களின் எரிபொருள் தாகத்திற்காக காட்டாமணக்கு, ஜெட்ரோபா, சோயா, சோளம் என ஒற்றைப் பயிர் முறைக்கு நிலம் மாற்றப்பட்டால் நிலம் மலடாகிப் போகாதா?
உரமும் பூச்சிக்கொல்லியும் இன்று பெட்ரோலிய பொருட்களாகவே இருக்கலாம். ஆனால், வருங்காலத்தில் தாவர அடிப்படை பொருட்களாகவே இவை இருக்கலாமே? அதற்கான ஆய்வுகள் இந்தியாவில் விவசாய பல்கலைக்கழங்களில் நடத்தப்பட்டுவருகின்றன. இவற்றில் பல தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டும் இருக்கின்றன.
//பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, மராமத்துப் பணிகளை அறவே புறக்கணித்து, தனது வணிகத் தேவைக்காக பருத்தி, அவுரி முதலானவற்றைக் கட்டாயமாகப் பயிரிட வைத்து பெரும் உணவுப் பஞ்சத்தை விளைவித்து, நமது முன்னோர்களைக் காவு கொண்டது அன்றைய காலனியாதிக்கம். இன்று, தனியார்மய தாராளமயத் தாக்குதலால் விவசாயத்தைத் திவாலாக்கி, ஏகாதிபத்திய தேவைக்காக காட்டாமணக்கையும் இனிப்புச் சோளத்தையும் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்றி, உணவுக்காக நிரந்தரமாகக் கையேந்தும் நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டுள்ளது மறுகாலனியாதிக்கம். அன்று, கட்டபொம்மன் கோட்டையை இடித்த வெள்ளைக்காரன் அந்த இடத்தில் எள்ளையும் ஆமணக்கையும் விதைத்தான். இன்று, உணவுக்கான விவசாயத்தை ஒழித்து கள்ளியையும் காட்டாமணக்கையும் விதைக்கின்றன அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். மாற்று எரிபொருள் எனும் வஞ்சக வலை விரித்து ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ள ஏகாதிபத்திய சதியை அம்பலப்படுத்தி முறியடிப்பதும், விவசாயிகளை ஓரணியில் திரட்டிப் போராடுவதுமே புரட்சிகர ஜனநாயக சக்திகளின் இன்றைய அவசரக் கடமையாகியுள்ளது.//
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் என்று மேலே நீங்கள் எழுதியவை அனைத்தும் பொய்கள். அமெரிக்கா மாற்று எரிபொருள் என்று போவது மற்ற நாடுகளை சார்ந்து இருப்பதற்கு அல்ல. பெட்ரோலியத்தின் காரணமாக மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை நீக்கி சுய சார்பாக ஆவதற்காகத்தான் அது மாற்று எரிபொருள் என்று செல்கிறது.
அதனை பார்த்து இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளும் எரிபொருளில் தன்னிறைவை அடைய மாற்று எரிபொருளை தேடுகின்றன.
ஆனால் நீங்களோ "எவனுமே உருப்படக்கூடாது" என்ற உங்களது உயர்ந்த நோக்கத்தின் காரணமாக, வெறிகொண்ட நாய் நுரை கக்குவது போல, எல்லா இடங்களிலும் எல்லா விஷயங்களிலும் "அமெரிக்க ஏகாதிபத்தியம்" என்று கண்டுபிடித்து நுரை கக்கிவருகிறீர்கள்.
பெட்ரோலியம் விஷம் - அது கூடாது.
உரம், பூச்சிக்கொல்லி கூடாது.
மாற்று எரிபொருள் கூடாது.
அணு உலை கூடாது.
கணிணி தொழில்நுட்பம் கூடாது.
வெளிநாட்டு தொழில்நுட்பம் கூடாது.
தொழிற்சாலை துவங்கக்கூடாது.
நவீன விவசாய முறைகள் கூடாது.
பாரம்பரிய இந்திய ஞானமோ பார்ப்பன பனியா சமாச்சாரம்.
வெளிநாட்டு விஷயமோ அமெரிக்க ஏகாதிபத்திய சமாச்சாரம்.
எல்லோரும் பஞ்ச பன்னாடையாக ஆகி உங்கள் பின்னால் வந்து புரட்சி ஓங்குக என்று குரலெடுத்து பாடி ஏகே47 (அது மட்டும் வெளிநாட்டு தொழில்நுட்பம் இல்லை!) எடுத்து கண்ட இடத்தில் சுட்டால், அப்பாடா நிம்மதி என்று இருப்பீர்களா?
Dienstag, 1. Januar 2008
| [+/-] |
ஏழ்மையின் அரசியல்!! யார் இந்த மக இக மருதையன்? |
நண்பர் அசுரன், கிறிஸ்துவ சேவையாளர் மதர் தெரசா பற்றி மக இகவைச் சேர்ந்த மருதையன் என்பவர் எழுதிய கட்டுரையை தன் பதிவில் பதிந்துள்ளார்.
ஏழ்மையின் அரசியல்!! யார் இந்த அன்னை தெரசா???
//
""பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?''
""என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.''
""என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.''
துயரம் ததும்பும் இந்தச் சொற்கள் "அன்னை' தெரசாவின் இதயத்திலிருந்து கசிந்தவை.//
இந்த வரிகளை எழுதிய தெரசாவுக்காவது ஒரு சுய பரிசோதனை கேள்விகளும், அந்த கேள்விகளில் ஒரு நேர்மையும் இருக்கிறது. அந்த கேள்விகள் தன் வாழ்வின் ஆதார சுருதியாக இருக்கும் சில விஷயங்களை தயவு தாட்சணியமின்றி கேள்வி கேட்கும் தைரியமும் இருக்கிறது. அதனை பாராட்டுவோம்.
//1949இல் கல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற அமைப்பை அவர் தொடங்கியது முதல் 1997 இல் மரிக்கும் வரையில் இடையறாது அவரது இதயத்தை அரித்துக் கொண்டிருந்த "அவிசுவாசத்தை' எழுத்து பூர்வமாகவே பதிவு செய்திருக்கிறார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு "புனிதர்' பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள "அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு' என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
அதிக முக்கியத்துவமின்றி சில ஆங்கில நாளேடுகளில் மட்டும் தெரசா குறித்த இச்செய்தி வெளியாகியிருக்கிறது. தமிழ் ஊடகங்களில் இது பரவலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவுக்கு அடுத்தபடியாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் மதிக்கத்தக்க குறியீடாகவும், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்தின் சின்னமாகவும், ஐஸ்வர்யா ராய் முதல் அமெரிக்க அதிபர் வரை அனைவரும் போற்றிப் பணியும் தெய்வமாகவும் வனைந்து உருவாக்கப்பட்ட தெரசா என்ற திருஉரு, திடீரென்று நொறுங்கிச் சரிவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பாததில் வியப்பில்லை.//
இங்கே ஆளும் வர்க்கங்கள் என்று நீங்கள் கூறுவது யாரை? பார்ப்பன பனியா என்று தினந்தோறும் காலையில் எழுந்ததும் லட்சார்ச்சனை செய்வீர்களே அந்த ஆளும் வர்க்கமா? பார்ப்பன பனியா என்று நீங்கள் கூறும் ஆளும் வர்க்கம் இந்த விஷயத்தை தனது ஒவ்வொரு ஊடகத்திலும் பரப்புரை செய்து விளம்பரபடுத்தி கிறிஸ்துவ எதிர்ப்புணர்வை காட்டியிருக்கவேண்டுமே, ஏன் இல்லை?
ஆகவே, உண்மையிலேயே பார்ப்பன பனியா என்று நீங்கள் கூறுபவர்கள் ஆட்சி பீடத்திலும் ஊடக துறையிலும் பரவலாக இருந்திருந்தால், இந்த நிகழ்வு பிரம்மாதமான பிரச்சாரத்தில் கிறிஸ்துவ போலித்தனத்தை அம்பலப்படுத்த உபயோகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு நடக்கவில்லை. ஆகவே, கேள்வி தற்போதைய ஆட்சி பீடத்திலும் ஊடகத்துறையிலும் ஆட்சி செலுத்துவது யார் என்பதுதானே?
இன்று இந்திய ஊடகத்துறையிலும் ஆட்சி துறையிலும், கல்வி நிறுவனத்திலும் தனது குரல்வளை பிடிப்பில் ஆட்சி செலுத்துவது கம்யூனிஸ்டு, இடதுசாரி, மேற்கு சிந்தனைக்கு தங்களை அடகுவைத்துவிட்ட மெக்காலே பரம்பரை என்று இந்துத்வவாதிகள் கூறுவது உண்மையாக இருக்குமோ? :-)) ஸ்மைலிதான். நான் அவ்வாறு சொல்லவில்லை. நீங்கள் பதில் கூறுங்கள்.
//இக்கடிதங்களை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையே வெளியிட்டிருப்பதால் இதை விசுவாசிகள் யாரும் "நாத்திகர்களின் சதி' என்று கூறி மறுக்க முடியாது. தனது மரணத்துக்குப் பிறகு இக்கடிதங்களை அழித்துவிட வேண்டுமென்று தெரசா கோரியிருந்ததையும் மீறி இவை வெளியிடப்படக் காரணம் என்னவென்று தெரியவில்லை. சிலுவையின் முன்புறத்தில் இயேசுவையும் பின்புறத்தில் உண்மையையும் அறைந்து வைத்திருக்கும் திருச்சபை, உண்மையின் பால் கொண்ட காதலால் இவற்றை வெளியிட்டிருக்காது என்பதை மட்டும் நாம் நிச்சயமாகக் கூறலாம்.
""இக்கடிதங்களின் காரணமாகப் "புனிதர்' பட்டம் பெறும் தகுதியை தெரசா இழக்க மாட்டார்'' என்று கூறுகிறது வாடிகன். ""இயேசுவும் கூட சிலுவையில் மரிக்குமுன் தன்னைக் கைவிடப்பட்டவராகவே உணர்ந்தார்..... தெரசாவிடம் நாம் காணும் "விசுவாசம் நிரம்பிய மன உறுதி' என்பது ஒரு காப்பியச் சிறப்பு மிக்க ஆன்மீக வீரம்'' என்கிறார் இந்நூலாசிரியர் கலோடிஜெக்.//
உண்மையின் பால் கொண்ட காதல் இல்லை என்றாலும், அது உங்களை போன்றோரின் பிரச்சாரங்களுக்கு பயன்படும் என்று தெரிந்தே வெளியிட்ட கத்தோலிக்க திருச்சபையை பாராட்டலாம்தானே?
அவர்களுக்கு உண்மையின் பால் காதல் இல்லை என்று வைத்துக்கொண்டாலும், கம்யூனிஸ்டுகளுக்கு எப்போதேனும் உண்மையின் பால் காதல் இருந்திருக்கிறதா என்பதும் ஒரு நல்ல கேள்விதானே? போல்போட் அராஜகங்களையும், ஸ்டாலினின் அராஜகங்களையும் , லெனினின் குரூரங்களையும் பூசி மொழுகி, அவர்கள் நல்லவர்கள் உலகத்தை உய்விக்க பிறந்த புனிதர்கள் என்று கூசாமல் பொய் பேசுகிறீர்களே? அதனை விட கத்தோலிக்க திருச்சபை தனது கொள்கை கோட்டையில் ஒரு ஓட்டை என்று பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்படும் என்று தெரிந்தே தெரசாவின் கடிதங்களை வெளியிட்டதை பாராட்டலாம்தானே?
//ஆன்மீகத் துயரம் என்று கத்தோலிக்க குருமார்களால் வருணிக்கப்படும் தெரசாவின் இந்த உளவியல் வேதனை குறித்து பொருள் முதல்வாதிகளாகிய நாம் மகிழவும் தேவையில்லை, வருந்தவும் தேவையில்லை. தெரசாவிற்குள் "தேவன்' இறங்கியதெப்படி, வெளியேறியதெப்படி என்பதைப் புரிந்து கொள்வதுதான் நம் அக்கறை.
பின்தங்கிய நாடான அல்பேனியாவின் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தெரசா, பரிதாபத்துக்குரிய கன்னியா ஸ்திரீகளின் கூட்டத்தில் ஒருவராக இந்தியாவிற்கு வருகிறார். 1929 முதல் கல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த தெரசா, 1946இல் ஓய்வுக்காக டார்ஜிலிங் சென்றபோதுதான் அவரில் அந்த "அற்புதம்' நிகழ்ந்தது.
""இயேசு என்முன் தோன்றினார். "நீ திறமைகள் ஏதுமற்ற பலவீனமான பாவி என்பதை நான் அறிவேன். அதனால்தான் என்னுடைய புகழைப் பரப்ப உன்னைப் பயன்படுத்த விரும்புகிறேன். நீ மறுப்பாயா?' என்று கேட்டார். எனவே எனக்கு இந்த ஆசிரியைப் பணி வேண்டாம். நான் நிராதரவான ஆன்மாக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்'' என்று தனது திருச்சபை மேலிடத்திடம் கோரினார், தெரசா. "ஒரு உண்மையான விசுவாசி' கைவசம் இருப்பதைக் கண்டுகொண்ட ஆர்ச் பிஷப், வாடிகனின் அனுமதியைத் தெரசாவுக்குப் பெற்றுத் தந்தார். 1948இல் கல்கத்தாவில் தொடங்கியது தெரசாவின் "மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி.'
இரண்டே மாதங்களில் தெரசாவின் வெறுமையும் விசுவாசமின்மையும் தொடங்கி விட்டன. துன்பங்களற்ற வசதியான பள்ளி ஆசிரியை வாழ்க்கையை 16 ஆண்டு காலம் வாழ்ந்து விட்டு திடீரென தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்ற ஏழைகளின் "பொந்துக்குள்' வீழ்ந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியும், இந்தச் சூழலை வலியத் தருவித்துக் கொண்டதனால் தன்மீதே தோன்றியிருக்கக் கூடிய வெறுப்பும் தெரசாவிடம் "விசுவாசமின்மை' துவங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
""பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?'' என்று பின்னாளில் அவர் எழுதும் கடிதம் அந்த மனக்காயத்தின் ஆழத்தைக் காட்டுகிறது.
தமது விருப்பங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள இயலாமல் திருச்சபைச் சூழலில் நிரப்பப்பட்டிருக்கும் போலி ஒழுக்கப் புகைமூட்டம், தவறுகளை வெளிப்படையாகப் பரிசீலனைக்கு உட்படுத்துவதைத் தந்திரமாகத் தவிர்க்கும் பாவமன்னிப்பு முறை, அம்பலப்படாத தனது சுய ஆளுமையைப் பாதுகாத்துக் கொள்ளும் பதற்றம், நெஞ்சில் ஆழப்பதிய வைக்கப்பட்டிருக்கும் தேவதூஷணம் குறித்த அச்சம், ஊன்றி நிற்பதற்குத் தேவையான விசுவாசமோ, திரும்பச் செல்வதற்கான துணிவோ இல்லாததால் தோன்றக்கூடிய விரக்தி.. இத்தகைய சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு முதிர்கன்னி இதுதான் 1949இன் தெரசா.//
கம்யூனிஸ கட்சியில் இருக்கும் போலி ஒழுக்க புகை மூட்டம், தவறுகளை வெளிப்படையாக பரிசீலனைக்கு உட்படுத்துவதை தந்திரமாக தவிர்க்கும் கொலைவெறி அரசியல், அம்பலப்படாத தன் சுய ஆளுமையை பாதுகாத்துக்கொள்ளும் பதற்றம், நெஞ்சில் ஆழபதியவைத்திருக்கும் கம்யூனிஸ தூஷணம் குறித்த அச்சம், ஊன்றி நிற்பதற்கு தேவையான விசுவாசமோ அல்லது திரும்பிச் செல்ல துணிவோ இல்லாததால் தோன்றக்கூடிய விரக்தி.. இத்தகைய விஷச்சூழலில் சிக்கிக்கொண்ட முதிர்ந்த இலைதான் மருதையன் என்றும் கூறலாமா?
//தனது வெறுமை குறித்தும், நம்பிக்கையின்மை குறித்தும் தனக்கு உயர் தகுதியில் உள்ள அருட்தந்தைகளுக்கு தெரசா இடையறாமல் கடிதம் எழுதியிருக்கிறார் எனினும், பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்மணியை விடுவிக்க திருச்சபை முயலவில்லை. மாறாக, அவரைச் சிலுவையில் அறைவதற்கான ஆணியைத்தான் தயார் செய்தது. 1969இல் கத்தோலிக்க மத வெறியனான மால்கம் மக்கரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர் தெரசாவைப் பற்றிய செய்திப் படம் ஒன்றைத் தயாரித்தார். பி.பி.சி இதனை ஒளிபரப்பியது. இருட்டறையில் விளக்குகள் இல்லாமலேயே ஒரு காட்சி பதிவாகியிருப்பதாகவும், அது தெரசா நிகழ்த்திய அற்புதம் என்றும் கூவினார் மக்கரிட்ஜ். தனது விசுவாசமின்மை குறித்து கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்த தெரசாவும், "தானே அடிக்கடி பரிசுத்த ஆவியுடன் பேசுவதாக' அந்தப்படத்தில் பேட்டியளித்தார்.
1960களின் பிற்பகுதியில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எழுந்த வியத்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏகாதிபத்தியவாதிகளைத் தனிமைப்படுத்தியிருந்தன. மூன்றாம் உலக ஏழைகளுக்கு உதவும் ஒரு கருணை முகத்தை அவர்கள் காட்டவேண்டியிருந்தது. இப்படி உருவாக்கப்பட்டதுதான் தெரசாவின் ஒளிவட்டம். நோபெல் சமாதானப் பரிசு உள்ளிட்ட பரிசுகளை அவர் மீது பொழிந்தது ஏகாதிபத்தியம். தாட்சர், டயானா, ரீகன், பல்வேறு நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள்.. என்று தரிசனத்துக்கு வரும் பிரமுகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மெலிந்து சுருங்கிய தோற்றமும், வெள்ளைக் கைத்தறி ஆடையும், ஆதரவற்றோர் சேவையும் தெரசாவை மதச்சார்பு கடந்த ஒரு புனிதத் திரு உருவாக ஏகாதிபத்தியங்கள் முன்நிறுத்துவதற்குப் பயன்பட்டன.//
உண்மையே!
//ஆனால் உலகமே கொண்டாடிய அவரது சேவையோ, விருதுகளோ, பணிந்து வணங்கிய பல நாட்டு அதிபர்களோ, இவையனைத்தும் வழங்கியிருக்கக் கூடிய மனநிறைவோ தன்னிடம் இல்லை என்கின்றன தெரசாவின் கடிதங்கள். தெரசாவின் இறைநம்பிக்கை ஏன் தகரவேண்டும்? விசுவாசமில்லாத நிலையிலும் அவர் காட்டிய மன உறுதியை வியக்கிறார் கலோடிஜெக். அவருடைய விசுவாசத்தைப் பறித்தது எது? விசுவாசம் தளர்ந்த பின்னரும் அவருடைய மன உறுதியைத் தாங்கி நின்றது எது?
மாபெரும் தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும்கூட "கடவுள்' தோற்றுவிக்கும் இத்தகைய மனத்துயருக்கு ஆட்படுவதுண்டு. அது அறிவுத்தேடல் தோற்றுவிக்கும் மனத்துயர். அத்தகைய அறிவுத்தேடலின் சாயல் கூட தெரசாவின் கடிதங்களில் இல்லை. அவர் அறிவின் சாயல் கூட எஞ்சியிராத வண்ணம் கத்தோலிக்கத் திருச்சபையின் உலைக்களத்தில் உருக்கி அடிக்கப்பட்ட அடிமை.
நீதியற்ற உலகின் நீதியாய், இரக்கமற்ற உலகின் இதயமாய் கடவுளைச் சரணடையும் மக்களின் மத உணர்வு கூட ""கடவுளே உனக்குக் கண்ணில்லையா'' என்று குமுறி நம்பிக்கை இழக்கும். தெரசாவைச் சூழ்ந்திருந்த ஏழைகளும் நோயுற்றவர்களும் அநாதைகளும் வடித்த கண்ணீர் "தேவன் இருக்கிறானா' என்ற கேள்வியை அவருக்குள் எழுப்பவில்லை.
""ஏழ்மையைச் சகித்துக்கொள்வதும் கிறிஸ்துவின் துயரத்தோடு அதனைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அழகானது. ஏழை மக்களின் துயரம் இந்த உலகுக்கு பெரிதும் உதவுகிறது என்று நான் கருதுகிறேன்'' என்று 1981இல் ஒரு பேட்டியில் குறிப்பட்டார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் சகோதரி நிர்மலா இதை மேலும் தெளிவுபடுத்துகிறார், ""ஏழ்மை என்பது இருக்கத்தான் செய்யும். தங்களுடைய ஏழ்மையை சரியான கோணத்தில் ஏழைகள் புரிந்து கொள்ளவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்''. வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு புற்றுநோயாளியிடம் தெரசா பேசுவது படமாகப் பதிவாகியிருக்கிறது, ""சிலுவையில் இயேசு துன்புற்றதைப் போல நீ துன்புறுகிறாய். இயேசு உன்னை முத்தமிடுகிறார் என்று நினைக்கிறேன்'' என்கிறார் தெரசா. ஆனால், தான் நோய்வாய்ப்படும்போது இயேசுவால் முத்தமிடப்படுவதை தெரசா விரும்பவில்லை. மன உறுத்தல் ஏதுமின்றி அமெரிக்காவில் மருத்துவம் பார்த்துக் கொண்டார்.//
என்ன பொருத்தமான உவமை! கிறிஸ்துவ போலித்தனத்துக்கும் கம்யூனிஸ போலித்தனத்துக்கும் எவ்வளவு ஒற்றுமை! ஏழைகளை தங்களது அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்வதில்தான் இவர்களுக்குள் என்ன அழகான ஒற்றுமை! தங்கள் வாழ்க்கையையும் உயிரையும் கம்யூனிஸ கட்சிக்கு பலிகொடுப்பவர்களை, மக்களை உயிர்த்தியாகம் செய்ய வைக்க பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக்கொண்ட மாவோ, தனது உடல் நலத்துக்கு எவ்வாறு அமெரிக்க மருத்துவ பயிற்சி பெற்ற டாக்டர்களை அழைத்து சிகிச்சை செய்துகொண்டார் என்று படிக்கும்போது இதே போலித்தனத்தை உணர்ந்தீர்களா? எவ்வாறு சேர்மன் மாவோவுக்காக பல்லாயிரம் கன்னிகள் பலியிடப்பட்டனர் என்று படிக்கும்போது என்ன உணர்ந்தீர்கள்?
http://www.amazon.com/Private-Life-Chairman-Mao-traditional/dp/957131434X
//தெரசாவின் இல்லத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக உலகெங்கும் ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வடிகட்டிய பொய். அங்கே வலியால் துடிப்பவர்களுக்கு வலி நிவாரணி மருந்து கூடத் தரப்படுவதில்லை என்ற உண்மையை பல மருத்துவர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். கல்கத்தா இல்லத்தைக் காட்டி தெரசா உலகெங்கும் வசூலித்த பல நூறு கோடி ரூபாய்களில் ஒரு மருத்துவமனை கூட அங்கே கட்டப்படவில்லை. மாறாக, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒயினும் கறியும் புழங்கும் 500 செமினரிகளை அமைத்திருக்கிறார் தெரசா.//
நான் படித்த செய்திதான் என்றாலும், தற்போதுதான் ஒரு கம்யூனிஸ்ட் எழுதி நான் படிக்கிறேன். நமது இந்திய தமிழ் ஊடகங்களில் இப்படிப்பட்ட செய்திகள் கவனமாக மறைக்கப்படுவது யாருடைய ஆளும் வர்க்க சூழ்ச்சி என்று எழுதுவீர்களா?
//இந்த இரக்கமின்மை அவரது தனிப்பட்ட குணாதிசயம் அல்ல. இதுவே ஒரு சித்தாந்தமாக, மதக் கோட்பாடாக அவர் சிந்தனையில் பதிந்திருக்கிறது. இத்தகைய சிந்தனையின் மீதான விசுவாசமின்மை எதையும் அவரது கடிதங்கள் எழுப்பவில்லை என்பதும் கவனத்துக்குரியது.
தெரசாவை அம்பலப்படுத்தும் "நரகத்தின் தேவதை' என்ற செய்திப்படத்தைத் தயாரித்த கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் கூறுகிறார்: ""தெரசா ஒரு வெகுளி என்றோ புத்திசாலி என்றோ நான் நினைக்கவில்லை. சிக்கலான மனப்பாங்கும் அவருக்குக் கிடையாது. ஆனால் ஒரு வகையான சூழ்ச்சித் தன்மை அவரிடம் இருந்தது. அவர் கத்தோலிக்க வெறி பிடித்த ஒரு கடுங்கோட்பாட்டுவாதி, ஒரு மோசடிப் பேர்வழியும் கூட'' என்கிறார். தெரசாவின் மீது மதிப்புக் கொண்டவர்கள் இதனைப் படித்ததும் ஆத்திரப் படலாம். ஆனால் இக்கூற்று ஆதாரமற்றதல்ல.
ஹெய்தி நாட்டின் சர்வாதிகாரியும், அமெரிக்கக் கைக்கூலியுமான டுவாலியரை ""அற்புதமானவர். ஏழைகள் என்னமாய் அவரை நேசிக்கிறார்கள்'' என்று வியந்தார் தெரசா. போபால் விஷவாயுப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் ""இது ஒரு விபத்தாக இருக்கலாம். மன்னித்து விடுங்கள்'' என்று உபதேசித்தார். பங்குச் சந்தை மோசடி மூலம் அமெரிக்க சிறுமுதலீட்டாளர்களிடமிருந்து 250 மில்லியன் டாலர் பணத்தைச் சூறையாடிய கீட்டிங் என்பவனிடமிருந்து நன்கொடை வாங்கினார் தெரசா. ""பாவப்பட்ட மக்களிடம் திருடிய பணம் தன்னிடம் தரப்பட்டால் கிறிஸ்து என்ன செய்திருப்பாரோ அதைச் செய்யுங்கள். பணத்தை மக்களிடம் திருப்பிவிடுங்கள்'' என்று அமெரிக்காவிலிருந்து தெரசாவுக்குக் கடிதம் எழுதினார் அரசு வக்கீல். தெரசா பதிலளிக்கவில்லை. மாறாக, ""கீட்டிங்கின் தண்டனையை ரத்து செய்யுங்கள்'' என்று நீதிபதிக்குக் கடிதமெழுதினார் தெரசா. பெண்களுக்கு மணவிலக்கு உரிமை இல்லாத அயர்லாந்தில் அது தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது ""மணவிலக்குக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு தேவனிடம் மன்னிப்பே கிடையாது'' என்று பிரச்சாரம் செய்தார்; அடுத்த 2 மாதங்களில் டயானாவின் மணவிலக்கை ஆதரித்து கருத்து வெளியிட்டார்.
அரசியல் அறிவற்ற பரிதாபத்துக்குரிய ஒரு கன்னியாஸ்திரீயாக தோற்றம் தந்தாலும், திருச்சபையின் ஆதரவு பெற்ற கொடுங்கோலர்களின் பக்கம்தான் தெரசா எப்போதுமே நின்றார். போராடும் மக்களின் பக்கம் தவறிக்கூட அவர் நின்றதில்லை. அறமோ நேர்மையோ இல்லாத இந்த நடவடிக்கைகள் அவரது விசுவாசிகளையே துணுக்குறச் செய்தன. ஆனால் இவையெதுவும் தெரசாவிடம் மனப்போராட்டத்தைக் கூடத் தோற்றுவிக்கவில்லை.//
உண்மை. எவ்வாறு மேற்குலகின் ஏஜண்டாக தெரசாவும் கத்தோலிக்க திருச்சபையும், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவ என் ஜிஓக்களும் செயல்படுகின்றனவோ, அதே போல சீனாவின் ரஷியாவின் ஏஜண்டாக இந்தியாவின் கம்யூனிஸ்டு கட்சிகளும் அவர்களின் என் ஜி ஓக்களும் செயல்படுகின்றன என்பதையும் நேரடியாக எழுதியுள்ளீர்களா? படிக்க விரும்புகிறேன்.
என்னைப்பொருத்தமட்டில், எவ்வாறு தெரசாவின் புனித பிம்பம் மேற்குலகால் இந்தியாவில் கட்டமைக்கப்படுகிறதோ அதே போல, ரஷியர்களாலும் சீனர்களாலும், இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள், அறிவுஜீவிகள் புனித பிம்பமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய கருத்தாக்க நாணயத்தின் இரண்டு பக்கங்களே இவர்கள்.
ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. மேற்குலகின் புனித பிம்பங்கள் உருவாக்கத்தின் இடையில் ஒரு சிலருக்கு ஆறுதலோ, உணவோ பால்பவுடரோ, தற்காலிக மன ஆறுதலோ கிடைக்கிறது.
ஆனால், ரஷிய, சீன உலகு இந்தியாவில் உருவாக்கும் புனித பிம்பங்கள், நக்ஸலைட்டுகள் உருவாக்கத்தில் பல்லாயிரக்கணக்கானவர் கொல்லப்படுவதும், வன்முறையும், ரயில் தண்டவாள உடைப்பும்தானே கிடைக்கிறது.
இதனை பொறுத்தமட்டில், மேற்குலகின் புனித பிம்பங்கள் ஆபத்தானவையாக இருந்தாலும், அவை கம்யூனிஸ புனித பிம்பங்கள் அளவு தீயவை அல்ல என்று சொல்லலாமா?
//தெரசாவின் இதயத்தில் தேவன் இல்லையேயொழிய, ஏகாதிபத்தியங்களின் கைக்கருவியான "திருச்சபை' உறுதியாகவே அமர்ந்திருந்தது. எனவே, திருச்சபையின் ஊழல்கள், ஒழுக்கக் கேடுகள், அறம் வழுவிய செயல்கள் எதுவும் அவருடைய இந்த ஆன்மீக நெருக்கடிக்குக் காரணமாக அமையவில்லை. பிழைப்பதற்குரிய தொழிலாக தேவ ஊழியத்தைத் தெரிவு செய்து கொண்டிருக்கும் விசுவாசமற்ற பாதிரியார்களிடமிருந்து இந்த விசயத்தில் தெரசா எந்த வகையிலும் வேறுபட்டவராக இல்லை.
தனக்கே விசுவாசமில்லாத ஒன்றின்மீது மற்றவர்களை விசுவாசம் கொள்ளச் செய்யும் மோசடியில் தெரசாவும் ஈடுபட்டிருக்கிறார். தான் இறந்த பிறகும் தன்னிடம் நிலவிய விசுவாசமின்மையை வெளியிட வேண்டாமென்ற அவரது கோரிக்கை, அவரது சிந்தனையில் ஊறியிருந்த கூச்சமற்ற போலித்தனத்தையே காட்டுகிறது.//
தன்னுடைய நம்பிக்கையின்மையை வெளியிட வேண்டாமென்று கேட்டுக்கொண்டிருந்தாலும், நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் தனது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்த தயங்கவில்லை. அது ஓரளவுக்கு நேர்மையானதே. ஆனால், 18ஆம் நூற்றாண்டு பழங்கஞ்சியே நிரந்தர அறிவியல் கஞ்சி என்று தனது நம்பிக்கையின்மை வெளியிடப்படக்கூட வாய்ப்பில்லாத அளவுக்கு தன்னைத்தானே மூளைச்சலவை செய்துகொண்டு போஸ்ட்-லோபாட்டமி மனிதர்களாக உலவும் கம்யூனிஸ்டுகளை என்ன சொல்வது?
//ஆதரவற்றவர்கள் மீது அன்பு காட்டுவதற்காக அவர் தொடங்கிய சேவையே அவரது இதயத்திலிருந்து அன்பை உறிஞ்சி எடுத்துவிட்டது. ஏழ்மையை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை ஒழிக்கத் துடிப்பவர்களிடம் மட்டுமே ஏழைகள் மீதான அன்பு இடையறாமல் சுரக்க முடியும். ஏழ்மையின் துயரத்தில் கிறிஸ்துவைக் காண்பவர்களால் ஏழைகளை நேசிக்க முடியாது.//
ஏழைகளை நேசிக்கவேண்டாம். அய்யா தயவு செய்து ஏழைகளை வைத்து அரசியல் பண்ணுவதை நிறுத்துங்கள். உங்கள் அரசியல் ஏழ்மை மீதுதான் வரும் என்பதால், ஏழ்மையை வளர்ப்பதில் ஈடுபடுவதில் கிறிஸ்துவ பிரச்சாரகர்களுக்கும் கம்யூனிஸ பிரச்சாரகர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. நீங்களே சொன்னது போல மாவோயிஸ்டுகள் பொதுமக்கள் மத்தியிலிருந்து போலீஸை தாக்கி, போலீஸ் திரும்பித்தாக்கும்போது ஏராளமான பொதுமக்களும் ஏழைகளும் பாதிக்கப்படுவதை வைத்து தங்களுக்கு கூட்டம் சேரும் என்று அரசியல் நடத்துவதற்கும், ஏழ்மை, சுனாமி போன்ற இழிவுகள் நடப்பதை வைத்து அதன் மூலம் கிறிஸ்துவ அறுவடை செய்யும் கூட்டத்துக்கும் என்ன வித்தியாசம்?
//கிறிஸ்துவை நேசிக்கும் பொருட்டுத்தான் தெரசா ஏழைகளை நேசித்தார். எந்த அளவுக்கு ஏழ்மையும் துயரமும் அவருக்கு உணர்ச்சியற்றவையாக ஆகத்தொடங்கினவோ, அதே அளவுக்கு கிறிஸ்துவும் அவருக்கு உணர்ச்சியற்றவரானார். ஆனால், ""விசுவாசத்தை இழக்க இழக்க, மேலும் தீவிரமான விசுவாசியாகத் தன்னை அவர் காட்டிக்கொண்டார். தன்னைக் குணமாக்கிக் கொள்ள தெரசா செய்த இந்த முயற்சி, தனக்குத் தானே அவர் வெட்டிக் கொண்ட படுகுழியை மேலும் ஆழப்படுத்தியிருக்கும்'' என்கிறார் ஹிட்சென்ஸ்.
தன்னில் கிறிஸ்து இறங்கியதாக கருதிக்கொண்ட அந்த மாயக்காட்சி (Hallucination) அனுபவம் இன்னொரு முறை நிகழுமென்று தெரசா எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால் 1946இல் இருந்தது போல "திறமைகள் ஏதுமற்ற பரிதாபத்துக்குரிய முதிர்கன்னியாய்' தெரசா இல்லையே! நிர்வாகம், நன்கொடை, விருதுகள், விமானப்பயணங்கள், தொலைக்காட்சிக் காமெராக்கள், பிரமுகர்களுடனான சந்திப்புகள் என அவரது வாழ்க்கை விரிந்து விட்டது. பொய்மை, இரட்டை வேடம், நேர்மையின்மை, அநீதியை அரவணைத்தல் என எல்லாத் தீமைகளும் அவர் இயல்பில் சேர்ந்து விட்டன.
எனினும், தெரசாவுக்குள் மிச்சமிருந்த அந்த அல்பேனிய முட்டாள் பெண் அவ்வப்போது விழித்துக் கொண்டு ஏசுவைத் தேடியிருக்கிறாள். ஆனால், தேவனைக் கதறி அழைக்கத் தேவைப்படும் கையறு நிலை தெரசாவின் வாழ்க்கையிலிருந்து அகன்று விட்டது. எவ்வளவு முயன்றும் அந்த மாயக்காட்சியை இன்னொருமுறை அவரால் தன்னில் தருவிக்க முடியவில்லை.
· மருதையன்
புதிய கலாச்சாரம் //
எவ்வாறு தான் உருவாக்கிக்கொண்ட ஒரு மாயக்காட்சியில் தெரசா சிக்கிக்கொண்டு, பிறகு நிர்வாகம் விருதுகள் நன்கொடை, என்ற அமைப்புக்குள் சிக்கொண்டுவிட்டாரோ அதே போல, முப்பதாண்டு கட்சிப்பணியில் தனது வாழ்க்கையை இழந்துவிட்டு அந்த கொள்கை குப்பை என்றாலும் செலவழித்த வாழ்க்கையை நியாயப்படுத்த வேண்டி சிக்கிக்கொண்ட நீங்களும் பரிதாபத்துக்குரியவரே!


