Mittwoch, 30. Januar 2008

நண்பர் சம்பூகனின் கேள்விகளும், அதற்கு பதில்களும்.

முதலில் தாமதமாக நண்பர் சம்பூகனின் பதிவை பார்த்ததற்கும், தாமதமாக மறுமொழி எழுதுவதற்கும் வருந்துகிறேன்.

--
நண்பர் சம்பூகன் கேட்டிருக்கும் கேள்விகளும் என் பதில்களும்.--

அனைத்து த‌மிழ‌ர்க‌ளுக்கும் க‌ருவ‌றையின் உள்ளே சென்று த‌ன‌து மொழியில் வ‌ழிப‌ட‌ உரிமை இருக்கிற‌தா இல்லையா? இல்லை என்றால் ஏன்? இந்த போராட்டம் சரியா தவறா?


நிச்சயம் உண்டு. இருக்கவேண்டும்.

சித‌ம்ப‌ர‌ம் கோவிலை ஏன் அரசுடைமையாக்க‌க்கூடாது?


அரசுடமை ஆக்குவதும் ஆக்காததும், அந்தந்த அரசாங்கத்தையும் அந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தவர்களையும் பொறுத்தது. எத்தனையோ கோவில்களை அரசுடமையாக்கியிருக்கிறார்கள். சிதம்பரத்தை ஆக்கினால் என்ன?
ஆனால், அரசுடமை என்ற பெயரில் திமுக அரசு செய்வது, செய்யக்கூடியது வேறு, கம்யூனிஸ்டுகளின் அரசுடமை கொள்கை வேறு. இதனை தனி பதிவாக எழுத முயற்சிக்கிறேன்.

க‌ட‌வுள் பெய‌ரை குறிப்பிடாத‌ அந்த‌ மிக‌ச்சில‌ ச‌ங்க‌த்த‌மிழ் பாட‌ல்க‌ள் எத்த‌னை?


எனக்கு தெரியாது. ஆனால், திமுகவுக்கு கடவுள் பெயர் வராத தமிழ் பாடல்களே தமிழ் பாடல்கள், மற்றவையெல்லாம் அழிக்கப்படவேண்டும் என்று எந்த விதமான கருத்தும் இல்லை. ஆனால், கம்யூனிஸ்டுகள், வரலாற்றிலேயே கை வைப்பவர்கள். இதெல்லாம் பூர்ஷ்வா கலாச்சாரம் என்று அழித்தொழிப்பில் இறங்கியவர்கள். உதாரணமாக கலைஞர் தஞ்சை பல்கலைக்கழகத்தை தஞ்சை கோவில் பாணியில் வடிவமைத்திருக்கிறார். ஆனால், அது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் பூர்ஷ்வா கலாச்சாரம் என்று இடிக்கப்படும். இதனையே சீன கம்யூனிஸ்டுகளும், போல்போட் கம்யூனிஸ்டுகளும் செய்தார்கள். அதனையே இவர்களும் செய்வார்கள்.

ராம‌னையும் கிருஷ்ண‌னையும் வ‌சைமாறி பொழிவ‌து த‌வ‌றா?


மனிதர்களது கருத்துரிமையை எப்போதுமே நாம் உரத்த குரலெடுத்து காப்பாற்றவேண்டும். ராமனை கிருஷ்ணனை வசை மாறி பொழிவதற்கு தற்போது இருக்கும் உரிமை போலவே, கம்யூனிஸ்டுகளின் சாம்ராஜ்யத்தில் லெனின், மாவோ, போல்போட், ஸ்டாலின், மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோர் மீது வசை மாறி பொழிவதற்கு சுதந்திரம் வேண்டும். அது இருக்காது என்பதாலேதானெ நான் கம்யூனிஸ்டுகளை எதிர்க்கிறேன்? இந்த சுதந்திரம், கம்யூனிஸ்ட்கள் அமைக்கப்போகும் புரட்சி நாட்டில் இருக்குமா என்பதை அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். அப்படி குரலெடுத்து வசை மாறி பொழிபவர்களை எப்படி நடத்துவார்கள் என்பதையும் கேட்டுச் சொல்லுங்கள்.

நீங்கள் தன்மான தந்தை, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை ஏற்றுக் கொள்கிறீர்களா இல்லை? ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் எந்த வகையில்? மறுக்கிறீர்கள் என்றால் எந்த வகையில்?


ஏன் மறுக்கவோ ஏற்றுக்கொள்ளவோ வேண்டும்? எல்லோருக்கும் அவரும் நாமும் இணையும் புள்ளிகள் ஏராளம் இருக்கும். அவரும் நாமும் பிரியும் புள்ளிகளும் ஏராளம் இருக்கும். அதுதானே ஒவ்வொருவரின் தனி இருப்பை அடையாளப்படுத்துகிறது? (பிரியும் புள்ளிகளை விட இணையும் புள்ளிகள் ஏராளம் என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்)

தன் நீண்ட வாழ்வில் வரலாற்றில் வன்முறையை கையில் எடுக்காமல் தன் பிரச்சாரத்தின் மூலமே தமிழ்நாட்டை புரட்டி போட்டவர் என்ற வகையிலும், தன் தீவிர கருத்து எதிரிக்கும் தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பராக இருந்தவர் என்ற பண்பாளர் என்ற வகையிலும் அவர் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு.

அவரது இந்த போற்றத்தக்க குணங்கள் நம்மிடம் இருக்கிறதா என்பதையே நாம் ஒவ்வொரு வினாடியும் சிந்திக்க வேண்டும்.

7 Comments:

Anonym said...

அன்புள்ல தமிமணி,
உங்கள் பதிவையும், சம்புகன் பதிவையும் படித்தேன்.

இரண்டு விஷயங்கள் இதில் கருதவேன்டியுள்ளது.

ஒன்று : தில்லை கோவிலில் தமிழ் வழிபாடு

இரண்டு : தமிழ் வழிபாட்டிற்கு கம்யூனிஸ்டுகளின் ஆதரவும் போராட்டமும்.

முதல் விஷயம் பற்றி : ஒரு குறிப்பிட்ட மொழியில் வழிபடுவது என்பது இந்து மதத்தில் அந்தந்தக் கோவிலின் சட்ட திட்டங்களையும், மற்ற மதங்களில் அந்த மதங்களின் தலைவர்களையும் பொறுத்த விஷயம். வழிபாட்டு முறைகளையும் பொறுத்த விஷயம். மதம் என்ற நிறுவனம் ஒவ்வொன்றும் வேறு வேறு விதிகளையும், நடைமுறைகளையும் கொண்டவை. கிருஸ்துவ கத்தோலிக்க மதத்தில் பைபிள் மத குருமார்கள் தவிர யாரும் படிக்கக் கூடாது என்றிருந்த காலம் ஒன்றும் உண்டு. லத்தீன் மொழி தவிர வேறு மொழிகளில் தொழுகை செய்யக் கூடாது என்று இருந்த காலமும் உண்டு. அதன் பின் மர்ட்டின் லூதர் மற்றும் பலரின் விமர்சனத்தால் அவை சிறிது சிறிதாக மாறி வந்துள்ளன. மாற்றத்திற்கான போராட்டத்தில் கிருஸ்துவை அடிப்ப்டையாய்க் கொண்ட ஆனால் வாடிகனின் தலைமையை ஏற்றுக் கொள்ளாமல் பல மதன்கள் தோன்றியதுண்டு. முஸ்லீம்களும் உள்ளூர் மொழிகளில் தொழுகை நடத்த விரும்புவடில்லை. பொதுவாகவே புத்தகத்தை அடிப்படையாய்க் கொண்ட மதங்களில் அடிப்படை கோட்பாடுகள் மொழிபெயர்ப்பில் பிறழ்ந்து போக வாய்ப்புண்டு என்பதால் இந்த நடைமுறை பழக்கத்தில் இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்றால், முஸ்லீம்கள் தான் போராட வேண்டுமே தவிர , முஸ்லிம் நம்பிக்கை அற்றவர்களுக்கு அந்தப் போராட்டத்தில் இடம் இல்லை. ஆனால் முஸ்லிம் சட்டதிட்டங்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக் குரல் கொடுக்க எல்லா தரப்பினருக்கும் உரிமை உண்டு. மாற்றப் பட வேண்டும் என்றால் அவற்றின் மாற்றத்தில் அக்கறை உள்ள வழிபாட்டளர்கள் செய்வது தான் முறை. மதத்தின் மற்ற கூறுகளான மனித உரிமைகள், பெண் குழந்தைகளுக்கான உரிமைகள் என்பவற்றிற்கான போராட்டம் எல்லோராலும் இணைந்து செய்யப் படவேன்டியது.

உணர்ச்சி பூர்வமாய் தமிழுக்காகக் குரல் கொடுப்பதாய் நினைத்துக் கொண்டு, சில அடிப்படைகளை நாம் மறந்து விடுகிறோம். இந்து மதம் வழிபாட்டு முறையில் ஜனநாயகத் தன்மை கொண்டது. ஓர் ஊரின் கோவிலில் என்ன மொழியில் வழிபாடு எம்று தீர்மானிக்கும் தலைமைப் பீடம் வாடிகன் போன்று எதுவும் இல்லை. ஒவ்வொரு கோவிலும் ஒரு தனி நிறுவனம். தில்லையில் தமிழ் வழிபாடு நடத்த வேண்டும் என்றால் அந்த நிர்வாகத்துடன் உட்கார்ந்து வழிபாட்டாளர்கள் பேசுவது தான் முறை. அதை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று கோருவது அர்த்தமற்ற செயல். நாட்டுடைமை ஆக்கி என்ன செய்யப் போகிறர்கள்? தீட்சிதர்களின் பிழைப்பில் மண்னைப் போடுவதுதான் குறிக்கோளா? ஆலயப் பிரவேசம் என்பது மனித உரிமைப் போராட்டம். வழிபாடு என்பது ந்டைமுறை சார்ந்த விஷ்யம். பெரியார் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர் நாத்திகரா என்று எனக்கத் தெரியாது. அவர் காங்கிரஸ் கட்சியின் போராட்ட வீரராய்த்தான் அங்கே சென்றார் என்று எண்ணுகிறேன். சரியான விவரம் தெரிந்தவர்கள் சொல்லலாம். அவர் மதுரை ஆலயப் பிரவேசத்தில் கலந்து கொள்ளவில்லை எனப்தும் இங்கே குறிக்கப் படவேண்டும்.

2. கம்யூனிஸ்டுகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்கள். தமிழ் மொழி இலக்கியம் எல்லாம் குப்பை, நிலப்பிரபுத்துவம் என்பவர்கள். வள்ளுவரையே ஆதிக்க சாதி என்று சொல்பவர்கள். பாராளுமன்றத்தினை பன்றித் தொழுவம் என்று அழைப்பவர்கள். அண்ணா, காமராஜர் போன்று சட்டசபைக்குச் சென்றவர்களைப் பற்றிய அவர்கள் கருத்து என்ன என்பது வெளிப்படை. ஆனால் பெரியார் சட்டசபைக்குச் செல்லவில்லையே தவிர ஒவ்வொரு தேர்தலிலும் யார் மக்கள் நலனுக்காக உழைப்பார்கள் என்று அவர் கருதிய தலைவர்களுக்காக விடாமல் பிரசாரம் செய்து அவர்களுக்கு வெற்றி தேடித் தந்தவர். பெரியாரின் பின்னால் கம்யூனிஸ்டுகள் அணி திரள்வது ஜனநாயகப் பண்பு கொண்ட பெரியாரின் சீடர்களைத் தம் பக்கம் இழுக்கும் தந்திரோபாயமே தவிர வேறு எதுவும் இல்லை. சட்ட பூர்வமாய் தீர்வு காணப்படவேன்டும் என்று சட்டங்கள் இயற்றப் பாடுபட்டவர் பெரியார். ஆனால் கம்யூனிஸ்டுகள் புரட்சி செய்கிறோம் என்று வன்முறையை அவிழ்த்து விட்பவர்கள். பெரியார் தாசன் போன்றவர்களிடம் , கம்யுனிஸ்டுகளின் இந்த விளையாட்டு பற்றித் தெரிவிக்க வேண்டும்.

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

Communists,
you can do better..

said...

Too mathamatical to find fault with... just like Sanskrit! A dead language!

said...

Answers to Sampookan.

//நமது கேள்வி: அனைத்து த‌மிழ‌ர்க‌ளுக்கும் க‌ருவ‌றையின் உள்ளே சென்று த‌ன‌து மொழியில் வ‌ழிப‌ட‌ உரிமை இருக்கிற‌தா இல்லையா? இல்லை என்றால் ஏன்? இந்த போராட்டம் சரியா தவறா?
தமிழ்மணி பதில் : நிச்சயம் உண்டு. இருக்கவேண்டும்.
நமது குறிப்பு: நிச்ச‌ய‌ம் உரிமை உண்டு, கருவறையின் உள்ளே சென்று தனது மொழியில் வழிபடும் உரிமை இருக்க‌ வேண்டும் என்று ம‌ட்டும் கூறியிருக்கும் த‌மிழ்ம‌ணி இந்த‌ போராட்ட‌ம் ச‌ரியா? த‌வ‌றா? என்ற‌ கேள்விக்கும் ப‌தில‌ளித்திருந்தால் ந‌ன்றாக‌ இருந்திருக்கும் என்ப‌தோடு, த‌மிழ் வ‌ழிபாட்டுரிமையை ம‌றுத்து அராஜகம் செய்துவரும் சிதம்பரம் தீட்சித‌ ரெள‌டிக‌ளை க‌ண்டித்திருந்தால் இன்னும் இன்னும் சிற‌ப்பாக‌ இருந்திருக்கும். என்றோ வரப்போகும் கம்யூனிச வன்முறை குறித்து கவலைப்படும் தமிழ்மணி, இன்று நடந்து கொண்டிருக்கும் தீட்சிதர்களின் வன்முறை குறித்து கவலைப்படவேண்டாமோ?
//
அதற்கு அறவழிப்போராட்டத்தில், நேர்மையான போராட்டத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. பெரியார்தாசன் செய்வது போன்ற பிரச்சார உத்தியும், கலைஞர் போன்று அதிகாரத்தை ஜனநாயக வழியில் கைப்பற்றி அவற்றை மாற்றுவதிலும் எனக்கு நம்பிக்கை உண்டு.
//
நமது கேள்வி: சித‌ம்ப‌ர‌ம் கோவிலை ஏன் அரசுடைமையாக்க‌க்கூடாது?
தமிழ்மணி பதில்: அரசுடமை ஆக்குவதும் ஆக்காததும், அந்தந்த அரசாங்கத்தையும் அந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தவர்களையும் பொறுத்தது. எத்தனையோ கோவில்களை அரசுடமையாக்கியிருக்கிறார்கள். சிதம்பரத்தை ஆக்கினால் என்ன?
ஆனால், அரசுடமை என்ற பெயரில் திமுக அரசு செய்வது, செய்யக்கூடியது வேறு, கம்யூனிஸ்டுகளின் அரசுடமை கொள்கை வேறு. இதனை தனி பதிவாக எழுத முயற்சிக்கிறேன்.
நமது குறிப்பு: அர‌சுடைமை ஆக்குவ‌தும், ஆக்காத‌தும் அந்தந்த‌ அர‌சாங்க‌த்தையும், தேர்தெடுத்த‌வ‌ர்க‌ளையும் பொறுத்த‌து என்று இப்பொழுது எழுதும் திருவாள‌ர் தமிழ்மணி(எ)'பார்ப்ப‌ன‌'ம‌ணி இர‌ண்டுநாட்க‌ளுக்கு முன்பு என்ன‌ எழுதினார் தெரியுமோ, இதோ பாருங்க‌ள்
//அதென்ன கோவிலை அரசுடைமையாக ஆக்குவது? அது காலம் காலமாக தனியார் கோவில். அதனை அவர்களே கட்டியிருக்கமாட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். எவனோ ராஜா அவர்களிடம் தாரை வார்த்தான் என்றே வைத்துக்கொள்வோம். அதற்கு என்ன இப்போது? இருந்துவிட்டு போகட்டுமே//
"நேற்று தீட்சிதர்களிடமே இருந்துவிட்டு போக‌ட்டுமே" என்று க‌ருத்து சொல்லிவிட்டு இன்று "அது அந்த‌ அர‌சாங்க‌த்தை பொறுத்தது" என்று ப‌தில் சொல்கிறார் இந்த இர‌ட்டை நாக்கு அம்பி. அதோடு "அரசுடைமை என்ற‌ பெய‌ரில் தி.மு.க‌ அர‌சு செய்வ‌து வேறு, க‌ம்யூனிச‌ அர‌சு செய்வ‌து வேறு" என்ற‌ த‌ன‌து வ‌ழ‌க்க‌மான கம்யூனிச எதிரிப்பு ஜ‌ல்லியையும் அவிழ்த்துவிடுகிறார் தமிழ்மணி.,
அய்யா தமிழ்ம‌ணி இப்போது என்ன‌ த‌மிழ்நாட்டில் க‌ம்யூனிச‌ அர‌சாங்க‌மா ந‌ட‌க்கிறது? தி.மு.க‌ அர‌சாங்க‌ம்தானே ந‌ட‌க்கிற‌து, இப்போது அர‌சுடைமையாக்குவ‌தால் என்ன‌ ஆப‌த்து வ‌ந்துவிட‌ப்போகிற‌து, இதுவ‌ரை ப‌ல‌ இல‌ட்ச‌ம் பொருட்க‌ள் அங்கிருக்கும் திருட்டு தீட்சித‌ர்க‌ளால் அபேஸ் செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து மேலும் அந்த‌ தீட்சித‌ர் கும்ப‌ல் இன்றைய‌ நிலையில் பெரிய‌ வ‌ன்முறை கூட்ட‌மாக‌ இருக்கிறது, இப்படியிருக்கும் பொழுது அந்த கோவிலை காப்பாற்ற வேண்டுமானால் அரசுடைமையாக்குவது அவசியமல்லவா? நாளை ப‌க்தி செலுத்துப‌வ‌ர்க‌ள் மீது க‌ம்யூனிஸ்ட்க‌ள் வ‌ன்முறையை ஏவிவிடுவார்க‌ள் என்று க‌வ‌லை கொள்ளும் நீங்க‌ள், ப‌க்தி செலுத்தி இறைவ‌னை பாட‌த்துடிக்கும் சிவனடியார் ஆறுமுக‌சாமி மீது வ‌ன்முறையை ஏவி கையை முறித்‌ததோடு அவரை கொல்லவும் சமயம் பார்த்துக்கொண்டிருக்கும் தீட்சித‌ர் கூட்ட‌த்தை அல்ல‌வா க‌ண்டிக்க‌ வேண்டும், இந்த‌ வ‌ன்முறை கும்ப‌லை நினைத்த‌ல்ல‌வா க‌வ‌லை கொள்ள‌ வேண்டும். அதை விட்டுவிட்டு என்றோ வரப்போகும் கம்யூனிச வன்முறை குறித்துமட்டும் நீங்கள் கவலை கொள்வதன் மர்மம் என்ன?
//
கம்யூனிஸ்டுகள் கேட்டால் எதிர்ப்பேன். திமுக கேட்டால் ஆதரிப்பேன். இரண்டுக்கும் எனக்கு வித்தியாசம் உண்டு.
//
நமது குறிப்பு: தெரியாம‌லேயே "க‌ட‌வுள் பெய‌ர் குறிப்பிடாத‌ ச‌ங்க‌த்த‌மிழ்பாட‌ல்க‌ள் மிக‌ச்சில‌" என்று எவ்வாறு கூறினீர்க‌ள் த‌மிழ்ம‌ணி. க‌ம்யூனிஸ்ட்க‌ள் வ‌ர‌லாற்றிலேயே கைவைப்ப‌வ‌ர்க‌ள் என்று க‌வ‌லை கொள்ளும் நீங்கள், 'அந்த‌ண‌ர் வ‌ர‌லாறு' என்ற‌ பெய‌ரில் புத்த‌க‌ம் எழுதி, ஆரிய‌ர்க‌ள் இந்த‌ நாட்டின் பூர்வ‌குடிக‌ள் என்று வரலாற்றையே இன்று திரித்து எழுதிக்கொண்டிருக்கும் பார்ப்ப‌ன‌ர்க‌ள் கும்ப‌லை க‌ண்டிக்காம‌ல் என்றோ வ‌ந்து க‌ம்யூனிஸ்ட்க‌ள் திருத்திவிடுவார்க‌ள் என்று க‌வ‌லை கொள்வ‌து ஏன்? அந்த‌ பார்ப்ப‌ன‌ கும்ப‌லும், சித‌ம்ப‌ர‌ம் தீட்சித‌ பொறுக்கி கும்ப‌லும் நெருங்கிய‌ தொட‌ர்பு கொண்ட‌வைதானே, NCERT புத்த‌க‌ங்க‌ளில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்ப‌ல் கைவைத்து திருத்தியதைவிட‌வா, க‌ம்யூனிஸ்ட்க‌ள் செய்துவிட‌ப்போகிறார்க‌ள்? இன்றும் இந்துத்துவவாதிகள் ந‌ட‌த்திக்கொண்டிருக்கும் ப‌ள்ளிக்கூட‌ங்க‌ளில் பிள்ளைகளுக்கு அ-என்றால் அயோத்தி, ஆ-என்றால் ஆரிய‌ன் என்றும் கூட சொல்லித்தரப்படுகிறதுதானே. இன்றைய‌ நிலையில் தொட‌ரும் இந்த‌ பாசிச‌ அட்டூழிய‌ங்க‌ளை க‌ண்டிக்க‌ வ‌க்கில்லாத‌ நீங்க‌ள் என்றோ வ‌ர‌ப்போகும் க‌ம்யூனிச‌ம் குறித்து ப‌தைப்ப‌து ஏன்?
//
இந்துத்துவவாதிகள் இந்தியாவில் தேர்தலில் நின்று ஜெயித்தாலும் அடுத்து தேர்தலில் நின்று தோற்றாலும் எனக்கு பிரச்னை இல்லை. ஜனநாயகம் இருக்கும் வரைக்கும், கருத்து சுதந்திரம் இருக்கும் வரைக்கும் அவர்கள் தோற்பதும், அவர்கள் தவறுகளை திருத்திக்கொள்வதும் நடக்கும். அவர்கள் செய்த தவறுகளை மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்து திருத்துவதும் நடக்கும். ஏனெனில், சுதந்திரத்தை நாம் பாதுகாத்தால், சுதந்திரம் நம்மை பாதுகாக்கும். அந்த சுதந்திரம் கொடுக்கும் சூழ்நிலையில் இருந்து கொண்டு, வாழ்ந்து கொண்டு, சுதந்திரம் இல்லாத ஒரு நாடு எப்படி இருந்தது என்று நம்மால் கற்பனை செய்யமுடியாது. அதனை குறைந்தது, அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தவர்களது எழுத்துக்களை படித்தாவது புரிந்துகொள்ளவேண்டும் இல்லையா?
//
மேலும் "கம்யூனிஸ்ட்கள் வந்து த‌ஞ்சை தமிழ் ப‌ல்க‌லை க‌ழ‌கத்தை இடித்துவிடுவார்கள்" என்ற உங்கள் பூச்சாண்டி இருக்கட்டும், முதலில் அந்த பல்கலை கழகம் பெரிய கோவில் போன்று வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்டிருக்கிறது என்று ஆதார‌மில்லாமல் எப்ப‌டி உங்களால் புளுக‌முடிகிறது.,
தமிழறிஞ‌ர்க‌ள் அம‌ருகின்ற‌ இட‌மாத‌லால் அந்த‌ ப‌ல்கலைக‌ழ‌க‌ம் ஒரு அர‌ண்மனையின் தோற்ற‌த்தில் கோட்டை போன்று வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்ட‌து, அதற்கு மைசூர் அர‌ண்மனையை மாதிரியாக‌ எடுத்துக்கொண்டிருக்கிறார்க‌ள், மேலும் அங்கிருக்கும் பெரிய‌ நூல‌க‌ம் பாராளூம‌ன்ற‌ வ‌டிவ‌த்தில் வ‌ட்ட‌மாக‌ வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து, இத‌னை நான் அந்த‌ ப‌ல்க‌லை க‌ழ‌க‌த்திற்கு சென்று பார்த்தவன் என்ற முறையிலும், அங்கிருக்கும் நூலகத்தில் ப‌டித்த‌வ‌ன், ஊழிய‌ர்களோடு உரையாடிய‌வ‌ன் என்கிற‌ முறையிலும் கூறுகிறேன், அந்த‌ ப‌ல்க‌லை க‌ழ‌க‌த்தின் வெளியே சோழ‌ர் கால‌த்தை நினைவுப‌டுத்தும் வ‌கையில் புலி சிலைக‌ள் நிறுவ‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன, நல்ல‌ வேளையாக‌ அது அய்ய‌ப்ப‌னின் வாக‌னம் அதனால் பொறித்து வைத்திருக்கிறார்கள் என்று க‌தைய‌ள‌க்காம‌ல் இருந்தீர்களே, அதுவரையில் மகிழ்ச்சி!!
நீங்க‌ள் எந்த‌ அடிப்ப‌டையில் அத‌னை கோவில் வ‌டிவில் க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்று கூறினீர்க‌ள் அது கோபுர‌ம் போன்ற‌ வ‌டிவ‌த்தை மேலே கொண்டிருக்கிற‌து என்ப‌தாலா? ம‌ன்ன‌ர் கால‌த்து கோட்டைக‌ள் எப்ப‌டி இருந்த‌து என்று உங்க‌ளால் கூற‌முடியுமா த‌மிழ்ம‌ணி, சில‌ப்ப‌திகார‌த்தை ப‌டித்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் விவ‌ர‌ம் புரியும், ம‌ன்ன‌ர் கால‌த்து அர‌ண்ம‌னைக‌ளும் கூட‌ கோபுர‌ம் போன்ற‌ வ‌டிவில்தான் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ன‌, இன்னும் சொல்ல‌ப்போனால் அந்த‌ கோபுர‌ங்க‌ளும் கூட‌ திராவிட‌ முறையிலான‌ அமைப்பு என்று சொல்ல‌ப்ப‌டுகிற‌து, இங்கிருக்கும் கோபுர‌ங்க‌ளும், வ‌ட‌நாடுக‌ளில் இருக்கும் கோபுர‌ங்க‌ளும் வ‌டிவ‌த்தில் ஒத்திருப்ப‌தில்லை, அத‌ற்கு கார‌ண‌ம் நான் முன்பே கூறிய‌து போல‌ இங்கிருக்கும் கோபுரங்க‌ள் திராவிட‌ முறைப்ப‌டி க‌ட்ட‌ப்ப‌ட்டவை என்ப‌துதான், இது குறித்து ஒரு க‌ட்ட‌ட‌க‌லை மாண‌வ‌ரை நான் தொட‌ர்பு கொண்டு கேட்ட பொழுது அவ‌ர் இங்கிருக்கும் க‌ட்ட‌ட‌ங்க‌ள் நான்கு வ‌கையில் ப‌குக்க‌ப்ப‌டுவ‌தாக‌ கூறினார், திராவிட‌ம், வேச‌ர‌ம், நாக‌ரம் என்று அவ‌ற்றின் மூன்று வ‌கைகளின் பெய‌ரை குறிப்பிட்ட‌தோடு தூக்கம் கலையாமலிருந்த காரணத்தால் அந்த‌ இன்னொரு வகையை புத்த‌க‌த்தை பார்த்து பிற‌கு கூறுவ‌தாக‌ கூறிச்சென்றார்.
//
நல்லது. அது தமிழ்நாட்டுபாரம்பரிய கோவில்கள் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது என்று நான் எப்போதோ படித்ததைதான் கூறினேன். அது இல்லையென்றால், கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வரும்போது அவர்களிடம் கூறுங்கள். பழங்கால மன்னர் அரண்மனை வடிவா? என்று அந்த காரணத்துக்காகவே இடிக்கப்படும்.

//ஆக‌ இங்கிருக்கும் க‌ட்ட‌ட‌ங்க‌ள் எல்லாம் இப்ப‌டி க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும் பொழுது அது கோவில் வ‌டிவில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌தாக‌ கூசாம‌ல் வ‌ரலாற்றை புர‌ட்டி, வ‌ர‌லாற்றிலேயே கைவைக்கிறீர்க‌ளே த‌மிழ்ம‌ணி, க‌ம்யூனிஸ்ட்க‌ள் வ‌ந்தால் வ‌ர‌லாற்றில் கைவைத்துவிடுவார்க‌ள் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டே த‌மிழ் ப‌ல்க‌லை க‌ழ‌க‌த்தின் வ‌ர‌லாற்றையே புர‌ட்டுகிறீர்க‌ளே த‌மிழ்ம‌ணி உங்க‌ளுக்கு வெட்க‌மாக‌ இல்லையா? தெரியாம‌ல் கூறின‌தாக‌ எடுத்துக்கொண்டாலும், எதுவும் தெரியாம‌லேயே இவ்வ‌ள‌வு ஆணித்த‌ரமாக‌ பேசுகிறீர்க‌ளே, அதுவும் க‌ண்ணுக்கு முன்னால் தெரியும் ஒரு க‌ட்ட‌ட‌ அமைப்ப்பு விசயத்திலேயே புரளி கிளப்பி புளுகும் நீங்கள், க‌ண்ணுக்கே தெரியாத‌ தூர‌தேச‌த்தில் க‌ம்யூனிஸ்ட்க‌ளால் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ கொலைக‌ள் ப‌ற்றி தின‌ம் தின‌ம் க‌தைய‌ள‌க்கிறீர்க‌ளே அதில் எந்த‌ அள‌வுக்கு உண்மை இருக்கும்.
//
நான் சொல்லுவதை நீங்கள் ஏன் நம்பவேண்டும்? அவற்றுக்கான இணைப்புகள் கொடுத்திருக்கிறேன். நீங்களே படித்துப்பாருங்கள். தமிழில் இல்லை என்றால், அது நடக்கவில்லை என்று பொருளல்ல.
//
நமது குறிப்பு: ம‌க்க‌ள‌து க‌ருத்துரிமையை காப்பாற்ற‌த்துடிக்கும் உங்க‌ள‌து ஜ‌ன‌நாய‌க‌ ப‌ண்பை நினைத்தால் அப்ப‌டியே புல்ல‌ரித்து போகிற‌து த‌மிழ்ம‌ணி, உண்மையில் நீங்க‌ள் க‌ருத்துரிமைக்கு குர‌ல் கொடுக்க‌ வேண்டும் என்று நினைத்தால் இன்றைய‌ நிலையில் இராம‌னையும், கிருஷ்ண‌னையும் விமர்சிப்பவர்களுக்காகத்தான் குர‌ல் கொடுக்க‌ வேண்டும்.,
"இராம‌ன் ஒரு குடிகார‌ன்" என்று வால்மீகி இராம‌ய‌ண‌த்தில் இருக்கும் ஒரு உண்மையை கூறிய‌ கார‌ண‌த்திற்காக‌ இங்கிருக்கும் ஒரு முத‌ல்வ‌ரின் த‌லையே விலை பேச‌ப்ப‌டுகிற‌து என்றால் பார்த்துக்கொள்ளுங்க‌ளேன் இன்று இந்தியாவில் இருக்கும் கருத்துரிமையின் இலட்சனத்தை., மேலும் இன்றைய‌ நிலையில் இந்தியாவில் இராம‌னை தேசிய‌ நாய‌க‌னாக‌ ஏற்றுக்கொள்ள‌வில்லை என்றால் முஸ்லீம்க‌ள் ஆயிர‌க்க‌ண‌க்கில் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌டுகிறார்க‌ள், முஸ்லீம‌க‌ள் இராம‌னை ஏற்றுக்கொள்ள‌ சொல்லி க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகிறார்க‌ள், ஆக‌வே திருவாள‌ர் த‌மிழ்ம‌ணி அவ‌ர்க‌ளே க‌ம்யூனிச‌ ஆட்சி வ‌ந்து அதில் ஸ்டாலின், லெனின், மாவோ குறித்து விம‌ர்சிக்க‌ க‌ருத்துரிமை கேட்டு இன்று போராடுவ‌தை காட்டிலும் இராம‌னையும், கிருஷ்ண‌னையும் விம‌ர்சிக்க‌வும் அந்த பார்ப்பன‌ கடவுளர்களை பற்றி உண்மைக‌ளை எடுத்துச் சொல்ல‌வும் கூடிய‌ நாத்திக‌ர்க‌ளின் க‌ருத்துரிமைக்காக‌வும், த‌ன‌து க‌ட‌வுளை ந‌ம்ப‌ வாய்ப்ப‌ளிக்கிற‌ முஸ்லீம்க‌ளின் சுத‌ந்திர‌த்திற்காக‌வும் குர‌ல் கொடுங்க‌ள்., இப்ப‌டி விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ளையும், வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ளையும் இன்று ஆர்.எஸ்.எஸ்கார‌ர்க‌ள் எப்ப‌டி ந‌ட‌த்திக்கொண்டிருக்கிறார்க‌ள் என்ப‌தையும் என‌க்கு கொஞ்ச‌ம் கேட்டு சொல்லுங்க‌ள்.
//
ராமனை கிருஷ்ணனை விமர்சிக்க இந்த நாட்டில் உரிமை இருக்கிறது. அதுமட்டுமல்ல, அம்பேத்கார் விமர்சித்து எழுதிய புத்தகம் நாட்டுடைமையாகி அது அரசாங்கத்தாலேயே பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. அதனால்தான், வேதாந்தி அவ்வாறு உளறியதற்கு எதிர்ப்பு பாஜகவிலிருந்தே வந்தது. வேதாந்தியின் கருத்து தங்களது கருத்து இல்லை என்று கை கழுவினார்கள். இராமனை தேசிய நாயகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பாஜக பேசுவதற்கும், அது தவறு என்று எதிர்த்து பேசுவதற்கும் இங்கு உரிமை உள்ளது. இரண்டு உரிமைகளும் இங்கே காப்பாற்றப்படவேண்டும். ஏனெனில் இரண்டு உரிமைகளும் ஒன்றே. அது வன்முறை மூலம் திணிக்கப்படும் போது கடுமையாக எதிர்க்கப்படவேண்டும். அதனை இங்கே அனைத்து சமூகத்தினரும் செய்துவருகிறார்கள்.
இந்துக்கடவுள்களை முஸ்லீம்கள் விமர்சிக்கவும், முஸ்லீம் கடவுள்களை இந்துக்கள் விமர்சிக்கவும் இங்கே உரிமை வேண்டும். கிறிஸ்துவ கடவுள்களை இந்துக்கள் விமர்சிக்கவும், நாத்திகர்கள் விமர்சிக்கவும் இங்கே உரிமை வேண்டும். நாத்திகர்களை ஆத்திகர்கள் விமர்சிக்கவும் உரிமை வேண்டும். கம்யூனிஸ்டுகளை விமர்சிக்கவும் உரிமை வேண்டும். ஏனெனில் கருத்துரிமை என்பது பொதுவானது. அது ஒரு தலைபட்சமாக ஆகும் சூழ்நிலை ஆபத்தானது. அது ஒருபக்கத்தில் தீவிரவாதத்தை வளர்க்கும்.
//
நமது குறிப்பு: தமிழ்மணி இது போன்ற பூடகமான பதில்கள் தேவையில்லை, நேரடியாக பேசுங்கள்? உங்க‌ளிடம் கேட்ப‌து என்ன‌வென்றால், பெரியாரை ப‌ற்றிய‌ உங்க‌ள் விம‌ர்ச‌ண‌ங்க‌ள் என்ன‌ என்ப‌துதான்? அதாவ‌து பிரியும் அந்த‌ சில‌ புள்ளிக‌ள் என்ன‌ என்ப‌துதான் என‌து கேள்வி. நேற்று எழுதிய‌ ப‌திவுக‌ளில் ஈ.வெ.இராம‌சாமி என்று ஆர்.எஸ்.எஸ்கார‌ர்க‌ள் போல‌ வ‌ன்ம‌ம் தெரிக்க‌ எழுதிய‌ நீங்கள், எங்க‌ளின் விடிய‌லுக்கு திசை காட்டிய‌ அந்த‌ கிழ‌வ‌னை ப‌ற்றி என்ன‌ விம‌ர்ச‌ண‌ம் வைத்துக்கொண்டிருக்கிறீர்க‌ள் என்று தெரிந்து கொள்ள‌த்தான் கேட்கிறேன், சொல்லுங்க‌ள்., பெரியார் வீட்டில் க‌ன்ன‌ட‌ம் பேசினார் என்று அப‌த்த‌ங்க‌ளை அவிழ்த்துவிடும் அயோக்கிய‌ சிகாம‌னியாகிய‌ நீங்க‌ள் எங்க‌ள் ப‌குத்த‌றிவு ப‌க‌ல‌வ‌னை ப‌ற்றி என்ன‌ குறை சொல்ல‌ப்போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள‌வே கேட்கிறேன் ப‌தில் சொல்லுங்க‌ள்.
//
அவரை பற்றி எனக்கென்ன விமர்சனம் இருக்கிறது? கருத்துரிமையின் காவலர் அவர். எந்த மதமானாலும், எந்த அராஜகமானாலும் எதிர்த்து குரலெடுத்து பேசியவர். தன் மனதுக்கு பட்டதை தெளிவாக உரைத்தவர். தன்னுடைய குரல் தற்போதைக்கு கூட்டம் சேர்க்குமா சேர்க்காதா? தனக்கு ஆதரவு பெருகுமா குறையுமா என்றெல்லாம் கவலைப்படாமல் தன் மனதுக்கு பட்டதை உரைத்தவர்.
நீண்டகால நோக்கில் மக்களுக்கு எது நல்லது என்று சிந்தித்தவர். ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்தவர். ஜனநாயகத்தை அழிக்கக்கூடியவர்கள் என்று அவர் கருதியவர்களை கடுமையாக எதிர்த்தவர்.
அவர் என் வழிகாட்டி.

Anonym said...

உங்களை பார்ப்பன ஆதரவாளராக காட்டி ஒழிக்க முடிவு செய்து துவங்கப்பட்ட பதிவுதான் தோழர் பெரியார் பதிவு

எப்போதையா பெரியார் "தோழராக" ஆனார்? கம்யூனிஸ்டுகளை கடுமையாக எதிர்த்தவர் மீது தோழர் பெரியார் பட்டமா?

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.