சிவனடியார் ஆறுமுகசாமி - சிதம்பரம் - தமிழ் வழிபாடு போன்றவற்றில் என் கருத்துக்கள் பெரியார்தாசனின் கருத்துக்களை ஓட்டியவை (நான் நாத்திகன். ஆனால், அதனை முன்னிருத்தாதவன்) . ஆனால், இந்த பதிவு பார்ப்பனியத்தை பற்றியோ அல்லது அதன் தீ விளைவுகளை பற்றியோ, அதற்கெதிரான போராட்டத்தை பற்றியோ அல்ல. அதனை நான் செய்யக்கூடியதை விட மிக சிறப்பாகவே பல பதிவர்கள் செய்துவருகின்றனர்.
ஆனால், இது சம்பந்தமாக மகஇக என்ற கம்யூனிஸ்டு இயக்கம் இதனை உபயோகித்து ஆள் சேர்க்க இறங்கியபோது, இதன் அபாயத்தை உணர்த்தும் விதமாக பதிவுகள் எழுதினேன். கம்யூனிஸ எதிர்ப்பை வழக்கம்போல, பார்ப்பன ஆதரவு, திராவிட எதிர்ப்பு என்று திரிக்கும் வேலைகள் நடந்துகொண்டிருப்பது எனக்கு அதிர்ச்சி இல்லை. இதனை எதிர்பார்த்தேன்.
சமீபகாலமாக ஒரு டிரண்ட் நட்ந்துவந்துகொண்டிருக்கிறது. அது திராவிட/பார்ப்பன எதிர்ப்பு பதிவர்களை குறி வைத்து அவர்களை கம்யூனிஸ்டு கட்சிக்குள் உள்ளிழுக்கும் விதமாக கம்யூனிஸ்டுகள் (ஒரே ஆளா, அல்லது கும்பலா என்று தெரியாது) பல பதிவுகளை துவங்கி ஒரே கட்டுரையை பல்வேறு இடங்களில் பதிந்தும் ஒரு திட்டமிட்ட அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதன் விளைவுகள் நீண்டவை.
கடந்த நூற்றாண்டில் ஒரு பெரிய வீழ்ச்சியை கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டில் சந்தித்தார்கள். அது பற்றி "கலைஞருக்கு பாரத ரத்னா" என்ற பதிவில் சுட்டியிருந்தேன்.
திராவிட முன்னேற்ற கழகமும், பெரியாரிய சிந்தனைகளும், அன்றைக்கு பிரபலமாக இருந்த கம்யூனிஸ்டு சிந்தனைகளுக்கும், காங்கிரஸ் சிந்தனைகளுக்கும் மாற்றாக வந்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இனத்தினரின் எழுச்சியாக வந்தது. அன்று காங்கிரஸ் கம்யூனிஸ்டு என்ற இரண்டு கட்சிகளுமே பார்ப்பனர்கள் தலைமையில் இருந்தன என்பது ஒரு உபரி செய்தி.
கம்யூனிஸ்டு கட்சியின் பக்கம் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் திராவிட முன்னேற்றக்கழகத்துக்குச் சென்றார்கள். அதனால், பெருத்த வீழ்ச்சியை சந்தித்தது கம்யூனிஸ்டு இயக்கம். ஏராளமான நக்ஸல்பாரி இளைஞர்கள் திராவிட முன்னேற்றக்கழகம் சென்றார்கள். தலைவர்கள் கம்யூனிஸ்டு கட்சியில் மீதமிருந்தாலும், மக்கள் ஆதரவு திமுகவுக்கே சென்றது. இதன் விளைவு, தமிழ்நாட்டில் தொழில்புரட்சி ஏற்பட்டது, நிறுவனங்கள் உருவாகின. இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு ஆனது. மேற்குவங்கம், கேரளா போன்ற சிபிஎம் மாநிலங்கள் அடைந்த பின்னடைவையோ, நக்ஸல்பாரி தீவிரவாதம் இருக்கும் ஜார்க்கண்ட், சட்டிஸ்கார்க், தெலுங்கானா போன்ற பகுதி மக்கள் அடைந்த பின்னடைவையோ தமிழக மக்கள் சந்திக்காமல் வெற்றிநடை போட்டார்கள்.
நக்ஸ்லைட்டுகளால் எந்த தொழில் முன்னேற்றம் இல்லையோ அதே தொழில் முன்னேற்றத்தை தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அடையும்போது அதனை கெடுக்கும் வேலையையும், அந்த தொழிற்துறையால் படித்து பட்டம் பெற்று வேலையில் இருக்கும் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்து தன்னை வளர்ப்பதையும் கம்யூனிஸ்டு இயக்கங்கள் செய்து வருகின்றன.
-
திமுகவுக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்ன என்பதை எண்ணிப்பார்ப்போமானால், இதனை ஓரளவுக்கு புரிந்த்கொள்ளலாம்.
திமுக பார்ப்பனரல்லாதாரின் உரிமை இயக்கம். அது பார்ப்பனரல்லாதார்கள் ஒடுக்கப்பட்டு உரிமை இழந்து இழிவு செய்யப்பட்டுக்கொண்டிருந்த சமூக சூழ்நிலையில் அவர்களது உரிமைகளை மீட்டெடுக்கவும், பரந்த தளத்தில் எல்லோருக்குமான உரிமைகளை பற்றி பேசவும் தொடங்கிய ஜனநாயக இயக்கம். இது அறவழியிலும், சட்டரீதியான போராட்டங்களிலுமே தன் உரிமைகளை நிலைநாட்டி வந்துள்ளது.
சட்டரீதியான போராட்டம் என்றால், யாரோ எழுதிய சட்டத்துக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்தில் ஈடுபட்டு தாங்கள் விரும்பிய புதிய சட்டங்களையும் உருவாக்கியிருக்கிறது. ஏராளமான மாறுதல்களை தமிழ்நாட்டில், மக்கள் உரிமைகளை பெற்றுத்தந்துள்ளது.
இந்த வழி மெதுவான வழியாக இருந்தாலும் சரியான வழி. இதே ஜனநாயக அமைப்புக்குள்ளான தனது பணியில் தவறுகள் நடந்திருக்கின்றன. அது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அறிஞர் அண்ணாவும் கலைஞரும் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
ஆனால், கம்யூனிஸ்டுகளின் நடைமுறையோ, நோக்கமோ, வழிமுறையோ இதுவல்ல.
முன்பு சீர்திருத்தமே கூடாது, நேராக புரட்சி பண்ணவேண்டும் என்று அழைப்பு விடுத்து பெரியாரின் சீர்திருத்த பாதையை புறக்கணித்தார்கள். புரட்சி வந்ததும் ஜாதிகள் எல்லாம் ம்றைந்துவிடும் என்று கதையளந்தார்கள்.
தற்போது, அந்த பருப்பு வேகவில்லை என்று கண்டவுடன், ஜாதிகளில் வர்க்கம் உறைந்துள்ளது என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போதும், பெரியாரின் வழியை மேற்கொள்ளாமல், பெரியாரின் வார்த்தைகளை மட்டும் எடுத்து, பெரியாரின் வழியில் செல்பவர்களிடம் பேசி தங்களுக்குள் இழுத்துக்கொள்ள அலைகிறார்கள்.
கம்யூனிஸ்டு இயக்கம் உரிமை இயக்கம் என்று பெயர் சொல்லி வந்தாலும், வார்த்தை ஜாலம் காட்டினாலும் அது உரிமை இயக்கம் அல்ல. அது எல்லோருடைய உரிமைகளையும் பறித்து ஒரு சிலரை பொலிட்பரோ ஆட்களாகவும் கட்சி ஆட்களாகவும் ஆக்கி அவர்களிடம் எல்லா அதிகாரத்தையும் குவிக்கும் ஒரு அமைப்பு என்பது தெளிவு.
கேரளாவிலும் மேற்குவங்காளத்திலும் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த மர்மம் என்ன? அது மேல்ஜாதிக்காரர்கள் சிறுபான்மையினரை அடக்கி அவர்களது ஓட்டுக்களையும் வாங்கி ஆட்சி செய்ய கிடைத்த உபகரணம் கம்யூனிஸ்டு இயக்கம்.
மிக எளிதில், யாரெல்லாம் கேரளாவிலும் மேற்குவங்காளத்திலும் ஆட்சியில் இருந்தார்கள் இருக்கிறார்கள் என்பதைபார்த்தால் இதனை அறிந்துகொள்ளலாம். ஜாதி, மதம் கடந்த கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கிறிஸ்துவரோ அல்லது முஸ்லீமோ ஆட்சி செய்ய ஆள் கிடைக்கவில்லையா? காங்கிரஸ் கிறிஸ்துவ முதலமைச்சர்களை கேரளாவில் பதவியில் அமர்த்தியது. காங்கிரஸ் பிகாரில் முஸ்லீம் முதலமைச்சர்களை பதவியில் அமர்த்தியது. மஹாராஷ்டிராவில் முஸ்லீம் முதலமைச்சர்களை அமர்த்தியது. அஸ்ஸாமில் ஒரு முஸ்லீம் ஆட்சியில் இருந்தார். 1977இலிருந்து ஆட்சியிலிருக்கும் கம்யூனிஸ்டு கட்சி எத்தனை முறை பிற்பட்டவரை, அல்லது மாற்று மதத்தினரை பதவியில் அமர்த்தியது? ஒரு ஈழவர் கேரளாவில் முதல்வராக ஆக எத்தனை உள்எதிர்ப்பு இருந்தது என்று கேரள அரசியலை தெரிந்தவர்களை கேளுங்கள்.
சிபிஎம் எல் என்ற மாவோயிஸ்டு தலைவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். எத்தனை பேர் பிற்பட்ட வகுப்பினர்? எத்தனைபேர் மாற்று மதத்தினர்? கேட்டால், எங்களுக்குள் ஜாதி மதம் வேறு பாடு இல்லை என்று பம்மாத்து பண்ணுவார்கள்.
அதுமட்டுமல்ல, கம்யூனிஸ சமுதாயத்தில் மத அடையாளம் உண்டா என்று கேளுங்கள். இல்லை, எல்லோருடைய தன் அடையாளங்களும் அழிக்கப்படும் என்று சொல்வார்கள். ராமன் இந்தியாவின் தேச நாயகன் (என்னவோ அது மாதிரி) என்று பாஜக சொன்னால், அதனை எதிர்க்கவேண்டும், ஆனால், கம்யூனிஸ்டு கட்சி எல்லோருடைய சுய அடையாளங்களையும் அழிப்பேன் என்று சொன்னால் ஆதரிக்கவேண்டுமா?
சுய அடையாளங்கள் அழிந்துவிடுமா? நிச்சயம் அழியாது. அழித்தாலும் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் அதுவே மனித குணம். அப்படியிருக்கும்போது, எல்லா அதிகாரங்களையும் "பாட்டாளிகளின்" பெயரில் தன் கையில் குவித்துக்கொண்டு வெறியாட்டம் ஆடப்போகிற கம்யூனிஸ்டுகளை யார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது? மக்களிடம் ஓட்டுக்கள் இராது. ஏனெனில், ஓட்டுப்பொறுக்கி அரசியலை அவர்கள் நம்புவதில்லையாம். மக்கள் தனியே தொழிற்சங்கங்கள் வைக்கமுடியாது. ஏனெனில், தொழிலாளிகளின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நடக்கும்போது எதற்கு தனியே தொழில்சங்கம்? ஏமாந்தா.. மொளகாய்தான்.
இன்றைக்கு பிற்பட்டவர்களின் உரிமைப்போராட்டம் திமுகவாக உருவாக இந்த ஜனநாயக அமைப்பில் இடம் இருக்கிறது. வன்னியர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று கருதும்போது அவர்கள் அரசியல் ரீதியில் ஒன்றிணைய இந்த ஜனநாயக அமைப்பில் இடம் இருக்கிறது. முஸ்லீம்கள் தங்கள் உரிமைக்காக ஒன்றிணைய இந்த அரசியல் அமைப்பில் இடம் இருக்கிறது. எதிர்காலத்தில் யார் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்று நாம் அறியமாட்டோம். ஒரு வினோதமான ஒரு பிரச்னையை சொல்லுகிறேன். ஸ்விட்ஜர்லாந்தில் கார் ஓட்டுபவர்கள் சங்கம் இருக்கிறது. கார் வைத்திருப்பவர்கள் மீது அதிகமான வரி விதிக்கிறார்கள் என்று அவர்கள் ஒன்றிணைந்து ஒரு அரசியல் கட்சி நடத்தி அவர்கள் ஸ்விர்சர்லாந்து பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். நாளை தமிழ்நாட்டில் தெருக்களில் எல்லோரும் கார்கள்தான் ஓட்டவேண்டும், சைக்கிள் ஓட்டக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால், சைக்கிள் ஓட்டுபவர்கள் போராட்டம் நடத்தலாம். யார் கண்டது?
இந்த ஜனநாயக அமைப்பு, பிரச்னைகளை பேசவும், அவற்றை பகிரங்கப்படுத்தவும், அதற்காக போராடவும், அவ்வாறு மக்கள் ஒன்றிணைந்து அரசியலில் ஈடுபட்டு பாதகமான சட்டங்களை மாற்றவும் வழி அமைத்து தருகிறது.
இந்த அமைப்பை ஒழித்து அதன் மீது தங்கள் சர்வாதிகாரத்தை கட்டத்தான் கம்யூனிஸ்டுகள் அலைகிறார்கள். ஆகவே, பார்வைக்கு வெளியே உரிமைகளுக்காக கோஷம் போடுவதையும், சிறுபான்மையினர் உரிமைகளுக்காக போராடுவதாகவும், தொழிலாளர் நலத்துக்காக போராடுவதாகவும் கதை பண்ணும் கம்யூனிஸ்டுகள், அப்படி உரிமை கேட்டு போராட அனுமதிக்கும் சமூக அடிப்படையையே அழிப்பதையே தங்கள் குறிக்கோளாக கொண்டுள்ளார்கள்.
உரிமைகள் கேட்டு போராடுவதில் கால தாமதம் ஆவதை வைத்து, இந்த அரசியல் அமைப்பே இப்படிப்பட்ட அமைப்புதான் என்று மக்களை நம்பவைத்து, அப்படி உரிமைகள் கேட்டு போராடவே முடியாத ஒரு சர்வாதிகார அமைப்பை உருவாக்க முனைபவர்கள்.
அத்னால்தான் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் எதுவாக இருந்தாலும் நான் எதிர்க்கிறேன். அப்படிப்பட்ட கம்யூனிஸ்டுகளோடு தற்காலிகமாக உறவு கொண்டாலும், அப்படி உறவு கொள்ளும் எந்த கட்சியையும் எதிர்ப்பேன்.
Donnerstag, 31. Januar 2008
பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரில் கம்யூனிஸ்டு ஆள்சேர்ப்பு திட்டம் பற்றி..
Eingestellt von தமிழ்மணி um 18:02
Abonnieren
Kommentare zum Post (Atom)
39 Comments:
arumai.
Explains a lot.
Very good replies. Hope kammis will respond to this.
They would not respond. They dont have anything to respond.
Asuran is writing as sampoogan.
Their language is so same..
I accecpt everything you said in this post and other previous posts.
But one can not imagine the politics before Marx that was extreme rightwing and feudal.Had Marx thesis been democracy of prolateriate rather than dictatorship of prolateriate then history woluld have been different altogether.
Thanks Anonys.
Thanks Ragami
I will respond in a day or two. My machine has problem with ekalappai now.
ஒரு ஈழவர் கேரளாவில் முதல்வராக ஆக எத்தனை உள்எதிர்ப்பு இருந்தது என்று கேரள அரசியலை தெரிந்தவர்களை கேளுங்கள்.
//
The cheifminister candidate was refused MLA seat! Just because he was an ezhava!
This is communists after 60 years!
I accecpt everything you said in this post and other previous posts.
But one can not imagine the politics before Marx that was extreme rightwing and feudal.Had Marx thesis been democracy of prolateriate rather than dictatorship of prolateriate then history woluld have been different altogether.//
Yes I agree. But Marx never promoted "Dictatorship of the Proletariat" . He was never for one party rule. He was never against curbing press freedom.
Old anony
thanks for the comments again.
I dont have unicode writer in my machine as of now.
I will later come back and thank in tamil
நான் பழைய அனானி,
சம்பூகன் என்ற பெயரில் எழுதும் அசுரக் குஞ்சுகளுக்கு,
வணக்கம்.
உங்கள் பிரசினை எனக்குப் புரிகிறது. கருத்தாடல், சித்தாந்தம், இயங்கியல் பொருள்முதல்வாதம் என்று கரடி விடுக் கொண்டு ஏமாந்தவர்களின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கலாம் என்றால் அடிப்படைகள் எப்படி தவறு என்று நிரூபிக்கும் பதிவுகளைக் கண்டால் எரிச்சல் வருகிறது எப்படி இந்த ஆள் வாயை அடைப்பது என்று கேட்டிருப்பீர்கள் உங்கள் தலைமை பீடத்தில் உள்ளவர்களை. அவ்ர்களும் பதில் சொல்லியிருப்பார்கள் " சித்தாந்தம் எல்லாம் குப்பை என்று தான் நமக்கெல்லாம் தெரியுமே தோழரே. தத்துவம் என்று பேசுவதெல்லாம் வேலைக்காகாது. தமிழ்நாட்டில் ஒருவன் வாயை அடைக்க வேண்டும் என்றால் ஒரே வழி அவனை பார்ப்பன அடிவருடி என்று சொல்வது தான். அதனால் இந்த வசையைத் தூக்கிப் போடுங்கள்" என்று சொல்லியிருப்பார். உடனே நீங்களும் அதையே திருப்பிச் சொல்கிறீர்கள்.
நீங்கள் என்னதான் இழிவாய்த் திட்டி பொய்களை அடுக்கினாலும், நான் சமநிலையை இழக்க மாட்டேன். ஏனென்றால் நான் மனிதப் பிறவி.
கிருஸ்துவ, முஸ்லீம் எதிரி என்று ஒரு பொய்யை வீசி எறியலாம். கிருஸ்துவ, முஸ்லீம் மதங்களின் வழிபாட்டு முறையைப் பற்றி எழுதப் பட்டது . அதற்குப் பெயர் மார்சியப் பார்வையில் சொல்வதென்றால் - மார்கிச்யத்தின் மிக முக்கியமான விஷயம் - வரலாற்றுப் பார்வை. அது மார்க்சைச் சரியாய்ப் படித்தவர்களுக்குத் தானே தெரியும்.பொலிட்பீரோவின் பொய்களையும் தந்திரோபாயங்களையும் மனனம் செய்கிறவர்களுக்கு மார்கிச்யம் புரியுமா என்ன? சரி மார்க்சியம் புரியவில்லை என்றாலும் தமிழ் புரியவேண்டாமா? தமிழை வளர்க்கிறேன் என்று வேடம் போடுவதற்கு முன்பு, தமிழைப் படித்துப் புருந்து கொள்ளுங்கள் . புரியாத மாதிரி நடிப்பது தான் வழி என்று பொலிட்பீரோ சொல்லிற்றா?
கம்யூனிஸ்டுகள் முஸ்லீம்கள் கொண்டிருக்கும் அன்பை ஆஃப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பில் உயிர் இழந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களின் குடும்பத்தினரிடமும், கம்யூனிஸ்டுகள் விதைத்த கண்ணி வெடிகளால் கால்களையும் உறுப்புகலையும் இழந்த முஸ்லிம் மக்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கிருஸ்துவர்கள் மீது கம்யூனிஸ்டுகள் கொண்டிருக்கும் அன்பை சீனாவில் சிறையில் வாடும் கிருஸ்துவ பாதிரியார்களிடமும், வாடிகன் நியமித்த பாதிரியார்கலை அங்கீகாரம் பண்ணாமல் , கம்யூனிஸ்டுக் கட்சி நியமித்த கிருஸ்துவ பாதிரியார்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். சீனத்தின் மதச் சுந்தந்திரத்தைப் பற்றி பாலுன் காங் இயக்கம் சார்ந்த மக்களையும், திபெத்தில் உயிரிழந்த பௌத்தர்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இந்த விளையாட்டை வரலாறு அறியாத பாமரர்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்.
பெரியார் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பெரியார் பற்றி நீங்கள் கொலைகளமாய் மாற்றியிருக்கும் ஜார்கண்டில் என்ன பிரசாரம் செய்கிறீர்கள்? பெரியார் வழியில் கன்சிராம் பிற்படுத்தப் பட்ட மக்களை இணைத்து போராடி ஜனநாயக வழியில் ஆட்சிக்கு வர முயன்றபோது அவருக்கு ஆதரவு அளித்து, வன்முறையை நிறுத்தினீர்களா? தமிழ்நாட்டைத் தவிர பெரியார் பற்றி வேறு எங்கும் பேசினீர்களா? பெரியாரைப் பயன் படுத்தி தி க போன்ற இயக்கங்களில் உள்ளவர்களை மாற்ற நீங்கள் செய்யும் நாடகத்தைச் சுட்டிக் காட்டினால், உண்மையைச் சொல்வதால் என் மீது கோபம் வருகிறது, அல்லவா?
பழைய அனானி
Wrote this in Paarpana mani post of Thamizarangam.
--
Thanks for the free advt
//கம்யூனிஸ்டுகள் அரசியலை நடத்த முடியாத வகையில், சகல சமூக அநீதிகளையும் ஒழித்துக் கட்டலாமே.//
As you might have guessed. I am talking about ways to remove the injustices. And there will never be a world in which all the people feel that they have complete justice. But Commies are using the injustices to come to power and heap million injustices on the people. Capice?
I also clicked on the thumpsup sign for your post..
By the way, when are you going to reply to the globalization post?
Sorry. Please do not post personal information on the pages.
நீங்கள் செய்தது சரியானது.
நீக்குங்கள் என்று சொல்ல வந்த நான் நீக்கியதை கண்டு மகிழ்ந்தேன்.
பழைய அனானி சொன்னதுபோல, வாதிட முடியவில்லை என்றதும் உங்களை பார்ப்பன அடிவருடி என்று ஒதுக்க முயல்கிறார்கள். இவ்வாறு முத்திரை குத்து ஒதுக்குவதை பல ஆண்டுகளாகவே செய்துவருகிறார்கள்.
இந்த பதிவுக்கு பிறகும் உங்களை பார்ப்பன அடிவருடி என்று அவர்கள் சொன்னால், அவர்களுக்கு மூளை சுத்தமாக கழண்டுவிட்டது என்றுதான் கூறவேண்டும்.
தொடருங்கள்.
Again communists are "debating" in a language they know.
The comments are removed.
Please see the sampoogan's post here.
http://sampoogan.blogspot.com/
2008/02/blog-post.html
Hats off to you for your dedicated work. I can only appreciate your hard work in reading all my posts and taking this much notes on them.
This shows how much communists are scared of my blog.
Even if Periyar has supported communism, I would oppose it. There is no question about it.
For a new person who had to know about communism from Asuran, your knowledge about communism is amazing. :-))
But do not think, I would run away.
I will write reply to you and will show how disingenous your argument is.
But that assuming you are a communist in the garb of Periarist.
if you are really a Periarist, I have no arguments with you.
Let me tell you again. I have no interest in talking to Periarists. My debate is against communists. Whatever you feel about languages and races and castes are immaterial to me. You are part of the normal process of the democracy.
--
If communists want to have a debate about the merits of communism, I am always available.
Again Flooding
Communists are proving what they are good at
:-)))))))
I wrote this in thamizarangam's blog like this..
//
--
Thanks for the free advt
//கம்யூனிஸ்டுகள் அரசியலை நடத்த முடியாத வகையில், சகல சமூக அநீதிகளையும் ஒழித்துக் கட்டலாமே.//
As you might have guessed. I am talking about ways to remove the injustices. And there will never be a world in which all the people feel that they have complete justice. But Commies are using the injustices to come to power and heap million injustices on the people. Capice?
I also clicked on the thumpsup sign for your post..
By the way, when are you going to reply to the globalization post?
3. Februar 2008 17:44
//
this is thamizarangam's reply to the reply i wrote in his blog!
//At 7:44 AM, தமிழரங்கம் அனுப்பியது ...
தமிழ்மணி என்ற பார்ப்பனமணி போட்டட பதிவும் அனுமதிக்கப்படமாட்டது. சமூத்ததை இழிவுபடுத்தி அடிமைப்படுத்தி வைத்திருபவனுக்கு, கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் மக்களை மீள மீள இழிவுபடுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது.
//
:-)))
I am really amazed at their horrendous self delusion!
I am posting Old Anony's comment from anticommies blog.
--
1 Comment - Show Original Post
Anonymous said...
நான் பழைய அனானி.
வணக்கம்.
பெரியார் எப்படி கம்யூனிஸ்டுகளை ஆதரித்தார் என்று அசுரன் அல்ல்து அசுரனின் வேறொரு பெயர் /ஆள் எழுதியிருப்பதைப் படித்தேன்.
பெரியாரின் வாழ்க்கையில் அவர் ஆதரவு தந்தவை கம்யூனிஸ்டுகள் மட்டும் அல்ல். 20 வருடங்கள் அவர் தி மு கவை எதிர்த்து காமராஜர் ஆட்சிக்காக காங்கிரசுக்கு பிரசார செய்தார். அதனால் அவர் காங்கிரஸ் ஆதரவாளர் , தி மு கவின் எதிரி என்று சொல்ல வேண்டும். பிறகு அவரே காங்கிரஸை விட்டு தி மு கவை ஆதரிதார் அதனால் வரை திமுகவுக்குச் சொந்தம், காங்கிரஸ் எதிரி என்று சொல்லவேண்டும். அவர் ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயர் விடுதலை அளிக்கக் கூடாது என்று வாதிட்டார் அதனால் அவரை பிரிட்டிஷ் ஆதரவாளர் என்று சொல்ல வேண்டும். கீழ்வெண்மணிபிரசினையின் போது கம்யூனிஸ்டுகளை எதிர்த்தார் அதனால் அவரை கம்யூனிஸ்டு எதிரி என்று சொல்ல வேண்டும்.
இப்படிப் பட்ட முரணபாடுகளை அவரே அறிந்திருந்தார். அந்தந்த காலகட்டத்தில் , எதுமக்களுக்கு நல்லது என்று தோன்றுகிறதோ அதைச் செய்வது தான் தன் வேலை என்றும் , முன்னுக்குப் பின் முரணாய் இருப்பது பற்றி தனக்குக் கவலை இல்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அவர் பகத் சிங்கையும், கம்யூனிச விளக்கத்தையும் வெளியிட்டுரிக்கிறார் தான் ஆனால், அதன் அடிப்படை காரணம் என்ன என்பது நாம் ஆராய வேண்டும். அவர் தன்னளவில் நாத்திகக் கருத்துகளையும் , மனித ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் மதச் சிந்தனைகளையும் எதிர்த்தார். அவருக்கு முன்பு ஸ்தூலமாய் இருந்த இந்து மதத்தின் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.
அவரே பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் "நான் ஏன் கிருஸ்துவன் அல்ல" நூலையும் வெளியிட்டிருக்கிறார். ரஸ்ஸல் கம்யூனிச சித்தாந்தத்தை எதிர்த்தவர். அதனால். பெரியாரும் அதனால் கம்யூனிச எதிரி என்று சொல்லலாமா? இல்லை. ரஸ்ஸலை அவர் எடுத்துக் கொண்டது அவர் நாத்திகக் கருத்துகளுக்காக.
இதெல்லாம் தெரியாமல் பெரியாரைக் கம்யூனிஸ்டாய்க் காண்பித்து பெருமைப் பட்டுக் கொள்வது கம்யூனிஸ்டுகளின் தந்திரம் தானே தவிர வேறில்லை.
அவர் அந்தக் காலகட்டத்தில் கம்யூனிசக் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்ததில் வியப்பில்லை. அந்தக் காலகட்டத்தில் , ரஷ்யப் புரட்சி வெகுவாக கால்னியாதிக்க நாடுகளிடையே நம்பிக்கையை விதைத்திருந்தது. ஸ்டாலினின் கொலைகள் இன்னமும் பரவ்லாய்த் தெரிய ஆரம்பிக்கவில்லை. அமெரிக்கா வியத்நாமை ஆக்கிரமித்தது கம்யூனிச ஆதரவு அலை வீச இன்னொரு முக்கிய காரணம். ஆனால் காலப் போக்கில் கம்யூனிஸ்டுகளின் கொடூரங்கள் வெளியே தெரியவரலாயின. ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் நடந்தவையும், சைபீரியா சிறைச்சாலைக் கொடுமைகளும், ஆள்மறைதல் போன்ற எதேச்சாதிகாரமும் தெரிய வந்த பிறகு, ஐரோப்பாவில் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த ஆதரவு குறைந்தது. சோஷல் டெமாக்ரடிக் கட்சிகள் உருவாயின. மக்களின் நலத்திட்டங்களுக்கு மூலதன் வளர்ச்சியும் அதனால் கிடைக்கும் வரிப்பணமும் மிக அவசியம் என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். இதாலி , ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகளும் கூட புரட்சி போன்ற கையாலாகாத கோரிக்கையைக் கைவிட்டு , மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தலாயினர். கிட்டத்தட்ட அதே போல் இந்தியாவிலும், வலது இடதுசாரி கம்யூனிஸ்டுகளும் தேர்தலில் பங்கு பெற்று வளர்ந்தனர்.
இந்த வரலாறு தி கவினருக்குத் தெரியும். அவர்கள் சட்டரீதியாகவும், வன்முறை தவிர்த்த போராட்டங்களையும் கைக்கொண்டு பெரியார் வழியில் போராடுகிறவர்கள். அவர்களுடன் இணைகிற கம்யூனிஸ்டுகள் தி க வினரை வளைத்துப் போட எண்ணி தி க வினரைவிட அதிகமாய் பிராமண எதிர்ப்பு வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த கருத்துகளுக்கு, அசுரன் போன்றவர்களிடமிருந்தும், திராவிட வேடம் போடும் அசுரக் குஞ்சுகளிடமிருந்தும் பதில் வருகிரது. தி க வினர் உண்மையை உணர்ந்து மௌனம் சாதிக்கின்றனர்.
பழைய அனானி.
Thamiz,
No need to worry or bother too much about Communists. The possiblity of revolution in India was less even in the turbulent 60s when Naxalism peaked and Vietnam war and cold war were on.
Now there is no chance of any form of 'revolution' here or anywhere in the world.
and as the MaKaIKa correctly say, the CPM / CPI are pseudo and have no commitments or sincerity in their ideals. the great majortiy of the left leaning people are with only these kind of pseudo communists and only very young and idealistic (as opposite to cynical)
persons are with MakaIKa, etc.
As long as they do not take law into their hands and act violently, they can preach and act as at present in any forums, etc.
it is their democratic right and harmless.
Naxalism in central India is there for decades and it will continue to be there in future with no clear
results. and most of those armed groups have become armed extortionists and thugs with little idealism or long term strategy. may be this economic boom which, if it 'trickles down' properly will slowly make them redundant. but no need to worry too much in TN, where all govts will try to stop such fanatics who kill aimlessly.
See the recent warning of MuKa about LTTE supporters. expediancy of politcs will win over any 'sympathy' or idealogy.
did you see my lenghty arguments with Asurn in his post about IBM layoffs ?
anbudan
Athiyaman
I did. He would not allow my comments in his blog or his "friends" blog.
So I just watch.
Thanks for the fight.
On reason the communists such as Asuran/Thiagu/Azath/Thamizarangam do not allow my comments to be posted in their blog.
Simone de Beauvoir to enlighten you.... it often springs to mind ....
“No one is more arrogant toward women, more aggressive or scornful, than the man who is anxious about his virility”
To paraphrase that...
“No one is more arrogant toward fellow humans, more aggressive or scornful, than the one who is anxious about his failure”
i am professional potographer, possibly you like to use some of my photographs? i guess it would be cool and fit on your site :-)
totally admire your blog! send me a mail please in case you want to see my photgraphs
Post a Comment