ஆப்கானிஸ்தானில் சோவியத் கம்யூனிஸ்டு பிரட்சியை ஏற்படுத்துவதற்காக பிரட்சி ஏற்றுமதியால் பலியானவர்கள் எண்ணிக்கை:
பதினெட்டு லட்சம் ஆப்கானிஸ்தானியர்கள்.
பத்து லட்சம் ஆப்கானிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர்.
சோவியத் ரஷிய கம்யூனிஸ்டு அரசாங்கத்தால் கட்டாயமாக போர் வீரராக்கப்பட்டு ஆப்கானிஸ்தானத்துக்கு அனுப்பப்பட்ட ரஷிய, உக்ரேன் குடிமக்களும் இந்த துயரத்தில் ஒரு பகுதி.
1970இலிருந்து 1089 வரைக்கும் 6 லட்சத்து 20 ஆயிரம் அப்பாவி சோவியத் வீரர்கள் ஆப்கானிஸ்தானத்துக்கு கம்யூனிஸ்டு போலிட்பரோ அக்யூஸ்டு தெருப்பொறுக்கி கும்பலால் அனுப்பப்பட்டார்கள்.
கம்யூனிஸ்ட் பொலிட்பரோ ஆட்கள் கடற்கரையோரத்தில் ஒயின் அருந்திகொண்டிருக்கும்போது, இந்த போர்வீரர்களில் 469,685 பேர் படுகாயமடைந்தனர்
14,453 பேர்கள் மரணமடைந்தனர். ஆனால் ஆப்கானிஸ்தானில் டைபாய்டு, ஹெபாடிடிஸ் ஆகியவற்றால், 415932 பேர் கடும் நோய்வாய்ப்பட்டனர்.
--
ஐம்பது லட்சம் ஆப்கானிஸ்தானியர்கள் சொந்த நாட்டை விட்டு சோவியத் கம்யூனிஸ்டுகளால் துரத்தப்பட்டு ஈரானிலும் பாகிஸ்தானிலும் அடைக்கலம் புகுந்தனர்.
இன்னும் இருபது லட்சம் ஆப்கானிஸ்தானியர்கள் சொந்த நாட்டுக்குள்ளேயே இடம் பெயர வைக்கப்பட்டு வேறு வேறு ஊர்களுக்கு துரத்தப்பட்டனர்.
1980களில் உலக அகதிகளில் இரண்டில் ஒருவர் ஆப்கானிஸ்தானியர்.
இது தவிர 12 லட்சம் ஆப்கானிஸ்தானிய போர்வீரர்கள் (முஜாஹிதீன் என்னும் சோவியத் எதிர்ப்பு போராளிகள்) கைகால்கள் இழந்து முடமானார்கள்.
30 லட்சம் ஆப்கானிய பொதுமக்கள் (பெண்கள் குழந்தைகள் ஆண்கள் முதியவர்கள்) படுகாயமடைந்தனர்.
சோவியத் கம்யூனிஸ்டு துருப்புகள் செய்த அட்டூழியங்களில் முக்கியமானவை.
மார்ச் 1979இல் ஹேரத் என்னும் நகரின் மீது கம்யூனிஸ்ட் சோவியத் ரஷிய விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 20000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
கோரானா மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் சோவியத் துருப்புகள் 1300 கிராமத்தினரை ஒரே நாளில் கொன்று தள்ளியது.
-
சோவியத் கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பின் விளைவுகள் எண்ணிப்பார்க்கவும் கடினமானவை.
1987இல் காந்தகார் என்ற நகரத்தின் மீது கம்யூனிஸ்ட் விமானங்கள் கார்ப்பெட் பாம்பிங் carpet bombing செய்ததில் மக்கள்தொகை 2 லட்சத்திலிருந்து 25ஆயிரமாக குறைந்து போனது.
10-15 மில்லியன் கண்ணிவெடிகளை ஆப்கானிஸ்தானெங்கும் கம்யூனிஸ்டுகள் நிலங்களில் விதைத்துள்ளனர். இதன் உடனடி விளைவுகளில் 25000 ஆப்கானிஸ்தானிய பெண்கள், ஆண்கள் உயிரிழந்துள்ளனர். இதன் விளைவுகள் இன்னமும் தெரிய வருகின்றன. இதில் கால் வைத்து காலையோ அல்லது உயிரையோ இழக்கும் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் பற்றிய செய்திகள் இன்னமும் வந்த வண்ணம் இருக்கின்றன.
பலகாலமாக தங்கள் அகதி முகாமே சிறைச்சாலையாகி லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் அகதிமுகாம்களில் வசித்தனர். இன்னும் பலர் வசிக்கின்றனர்.
நன்றி சோவியத் ஆக்கிரமிப்பு
-
ஒரு மனிதன் இறந்தால் அது துயரம். கோடிக்கணக்கானவர்கள் இறந்தால் அது வெறும் புள்ளிவிவரம்தான்
- கம்யூனிஸ்டுகளின் பேராசான் ஸ்டாலின்
Donnerstag, 24. Januar 2008
ஆப்கானிஸ்தானில் கம்யூனிஸ்டு பிரட்சியின் புள்ளிவிவரங்கள்
Eingestellt von தமிழ்மணி um 13:42
Labels: ஆப்கானிஸ்தான், கம்யூனிஸம், சோவியத்
Abonnieren
Kommentare zum Post (Atom)
37 Comments:
மீண்டும் கம்யூனிஸ்டுகளின் flooding
தமிழ்மணி
உலகெங்கும் புரட்சிகளை ஏற்படுத்தும் கம்யூனிஸ்டுகள் பதவிக்கு வந்தால் புரட்சியாளர்களை நசுக்கும் விதம் இப்படித்தான்.
ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்தில் செசென்யா என்ற மாநிலம் தனிநாடு கேட்டது.ஸ்டாலின் அந்த மாநில மக்கள் அனைவரையும் சைபீரியாவுக்கு நாடு கடத்தி வரலாற்று சாதனை படைத்தார்.சைபீரிய குளிரில் லட்சக்கணகான செசன்யர்கள் செத்தனர்.பல வருடங்கள் கழித்து அவர்களில் மிச்சமீதி இருந்தவரை போனால் போகட்டும் என்று செசென்யாவுக்கு திரும்பி வர அனுமதித்தார்.அப்புறம் தனிநாடாவது, மாநிலமாவது?
ஒரு நாட்டையே நாடு கடத்திய வரலாற்று சாதனைக்கு சொந்தமானவர் ஸ்டாலின்
//Notably, India, a close ally of Moscow during the Cold War, supported the Soviet invasion and provided crucial logistics and intelligence support to the Soviet army //
Shame of India. Because of India support for afghan invasion, muslims everywhere became enemy against her .
சோவியத் கம்யூனிஸ்டுகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கும்போது இந்தியாவின் சோசலிஸ்டு கம்யூனிஸ்டு காம்ரேட்டுகள் அதனை ஆதரித்தனர்.
ஆப்கானிஸ்தானத்தை கம்யூனிஸ்டுகள் ஆக்கிரமிப்பதை சிபிஎம். சிபிஐ, மாவோயிஸ்டு, மண்ணாங்கட்டிகள் ஆதரித்தனர். ஜவகர்லால் பல்கலைக்கழக கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ புரட்சி பரவுகிறது என்று புல்லரித்து அவர்கள் கொடுத்த ஆலோசனை பேரில் இந்திராகாந்தியும் இதனை ஆதரித்தார்.
ஆகவே இத்தனை முஸ்லீம்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது கம்யூனிஸ்டுகள்தான்.
நன்றி செல்வன், அனானிஸ்
//சோவியத் கம்யூனிஸ்டுகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கும்போது இந்தியாவின் சோசலிஸ்டு கம்யூனிஸ்டு காம்ரேட்டுகள் அதனை ஆதரித்தனர். //
the leftists forget or act like they don't about this when they talk about Israel. Rascals!
நன்றி அனானி
கண்களை திறக்கும் பதிவு.
அதனைவிட முக்கியமாக கம்யூனிஸ்டுகள் தலைப்பு வைப்பது போல வைக்க கற்றுக்கொள்ளுங்கள்.
"கம்யூனிஸ்டுகளால் கொல்லப்பட்ட 18 லட்சம் முஸ்லீம்கள்"
இப்படி தலைப்பு வையுங்கள்.
நன்றி வீரமணி
ஆமாம், உண்மையும் அதுதானே?
என்ன கொல்லப்பட்ட ஆப்கானியர்கள் எல்லாம் கிறிஸ்துவர்களா அல்லது இந்துக்களா?
கம்யூனிஸ்டுகள் ரொம்ப பதட்டப்படுகிறார்கள்..
என் பெயரை உபயோகப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். செல்வன் பெயரையும் அப்படியே உபயோகப்படுத்தி எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆகவே நீக்குகிறேன்
பரிதாபம்..
Thamizhmani,
This is not flooding and I'm not a communist. Please read below and allow my comments.
இதில் சொல்லப்பட்ட அவ்வளவு விஷயங்களும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியில் வந்தது. இதில் உண்மை சிறிதளவும் இல்லை. இப்படி புரட்டு பேசுவது பார்ப்பனர்களுக்கே உரிய கலை என்று ஜல்லியடிக்க கம்மூனிச தோழர்களான அசுரன், ஸ்டாலின் (ஒரு கொலைகாரனின் பெயரை எப்படித்தான் வெட்கமில்லாமல் வைத்துக்கொள்ளத் தோன்றியதோ) ஆகியோருக்கு வெற்றிலை - பாக்கு வைத்து அழைப்பு விடுக்கிறேன்.
அதெப்படிய்யா அத்தன பேரக் கொன்னுட்டு இப்டி ஜாலியா ஒயின் குடிக்கத் தோணுது உங்க தலைவனுங்களுக்கு? இதயேதான் நீங்க புரட்சி பண்ணி ஆச்சியக் கைப்புடிச்ச உடனே ...மன்னிச்சுருங்க ( அப்பச்சிமாருங்க குமுறுக்கஞ்சி காச்சீருவாங்க, ஜாக்கிரத!)...ஆட்சியக் கைப்பற்றின உடனே செய்வீங்களோ? அங்க விதம் விதமா ஒயின் வோட்கா கிடைக்கும். நம்ப ஊருல மிஞ்சிப்போனா கோல்கொண்டாவும் ரமனாவும் தான் கிடைக்கும். என்ன செய்யப் போறீங்க செஞ்சட்டை தோழர்களே? பேசாம இந்தியாவ அப்டியே அலேக்காத் தூக்கிட்டுப் போயி ரஷ்யா பக்கத்துல வச்சுரலாமா? (ஏதோ படத்துல வடிவேலு செய்யிற காமெடி மாதிரி)
சரியான கேள்விதான் அனானி,
ஒரு பிளாக்கர் கணக்கு போட்டுக்கொண்டு எழுதுங்களேன்.
நன்றி
அய்யனார் பதிவில் எழுதியது
//கம்யூனிசம் பற்றிய அறிமுகத்தை இவரது பின்தொடரும் நிழலின் குரலிலிருந்துதான் பெற்றுக்கொண்டேன் என்பது தீவிர சிந்தாந்தவாதிகளுக்கு கேலியாய் படலாம் ஆனால் என்னளவில் அதுதான் உண்மை.//
உண்மையை சொன்னதற்கு பாராட்டுகள். சொல்லப்போனால், நீங்கள் சொல்வதுதான் சரியான முறை. அறிவை விமர்சனத்தின் மூலமே அடைய முடியும். பெரியாரை யார் விமர்சனம் செய்திருக்கிறார்களோ அவர்களை எல்லாம் படிப்பதன் மூலமே பெரியாரை பற்றிய சுதந்திரமான தனிப்பட்ட உங்கள் பார்வையை அடையமுடியும். இல்லையென்றால், படிப்பதற்கும் மனனம் செய்வதற்கும் வித்தியாசம் இல்லாமல் போகும். ஒரு புத்தகத்தை படிக்கும்போது மனத்தில் தொடர்ந்து எதிர்வாதங்கள் எழுந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் புனித பிம்ப உருவாக்கமே நடைபெறும்
மீண்டும் flooding
கம்யூனிஸ்டு பிரட்சியின் விளைவுகளை பற்றி எழுதினால் கம்யூனிஸ்டுகளுக்கு இவ்வளவு கோபம் வருகிறது. கன்னாபின்னாவென்று என் பதிவில் எழுதுகிறீர்கள்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
இதே வேலையை வேறு யாராவது செய்திருந்தால் என்ன எழுதியிருப்பீர்கள், என்ன செய்திருப்பீர்கள், என்ன குதி குதித்திருப்பீர்கள் என்பதை தயவு செய்து யோசித்து பாருங்கள்.
நண்பர் மயூரன் கீழ்வருமாறு தன் தளத்தில் எழுதியுள்ளார்.
சிங்கள முப்பரிமாணக் கணினி விளையாட்டு : தொப்பிகலை நடவடிக்கை
//
அமெரிக்கா தனது மூலதன வளம், அதனால் பெற்று வைத்திருக்கும் மூளை வளம் போன்றவற்றைப் பயன்படுத்தி தமது அரசியல் நலன்களைக்காக்கும் விளையாட்டுக்களை, மென்பொருட்களை உருவாக்குகிறது. Red Alert, Age of Empires, IGI போன்றன ஒரு சில எடுத்துக்காட்டுக்கள்.
சோவியத் யூனியன், மூன்றாம் உலகின் போராட்டங்கள், இஸ்லாமிய அடிப்படைப் போராட்டங்கள் குறித்த அமெரிக்க சார்பான, ஏகாதிபத்திய நலன்களுக்குச்சார்பான சுயநலப்பார்வையினை அணுவணுவாக, மிகச்செறிவாக குழந்தைகள், இளைஞர்கள் மனதில் விதைப்பதே இவ்விளையாட்டுக்களின் முதன்மை நோக்கமாக அமைகிறது. உலகின் மற்றைய பாகங்களில் வாழ்பவர்களுக்கோ இதற்கு எதிராக இதே ஆயுதத்தை கையிலெடுப்பதற்கான மூலதன வளம் போதாது.
இந்த உளவியல் போராட்டத்துக்கென அமெரிக்க முதலாளிகள் கோடி கோடியாக டாலர்களைக் கொட்டுகிறார்கள்.
(இந்த உளவியல் போராட்டத்தின் பலிகடாக்களாகி உதிரிகளாக, ஏகாதிபத்திய முதலாளித்துவ சார்பு ஊடகங்களின் வாசகங்களை கேள்விகணக்கற்று ஏற்று ஓதிக்கொண்டு உலகெங்கும் தமிழ்மணி போன்ற பலர் உருவாக்கப்பட்டு நடமாடவிடப்படுகிறார்கள்.)
அதிகாரமும், பலமும் கையிலுள்ளவர்களுக்குச்சார்பாகவே தொழிநுட்பமும், எல்லாமும் ஆடுகின்றன. ஆகவே எல்லாவற்றையும்போல, கணினி விளையாட்டுக்களுக்கும் பின்னணி அரசியல்கள் உண்டு.
//
நான் நடமாட விட்டிருப்பதாக எழுதியிருப்பதால், என் முதுகுக்குப் பின்னே ஏதேனும் சாவி இருக்கிறதா என்று தடவிப்பார்த்தேன். அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
இங்கே ஒன்றை குறிக்கிறேன். என்னை எல்லோரும் பாராட்டவேண்டும், இருபது பேர் வந்து கும்மி அடிக்கவேண்டும் என்று கருதியிருந்தால், நான் இதே போல ஜல்லியடித்து அமெரிக்க ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், புரட்சி ஓங்குக, உடல் அரசியல், சொல்லாடல், புண்ணாக்கு என்று எழுதி கரகோஷம் வாங்கியிருப்பேன்.
அது எளிது. கூட்டத்தில் கோவிந்தா போடுவது எளிது. அப்போதுதான் என் மூளைக்குமேல் யாரோ சவாரி செய்திருப்பார்கள். நான் எழுதுவது இந்த நச்சு சூழலில் சொல்லப்படாதது.
நான் இங்கே எழுதியிருக்கும் எந்த கருத்தையும், factsஐயும் விவாதியுங்கள். பொய் என்று சொல்லுங்கள். காட்டுங்கள். தர்க்கம் செய்யுங்கள். தயாராகவே இருக்கிறேன். நான் தவறாக எழுதியிருந்தால் திருத்திக்கொள்ள தயாராகவே இருக்கிறேன்.
மொன்னையாக உளவியல் போராட்டத்தில் பலிகடா, ஆட்டுகிறான், மஞ்சம் விரிக்கிறான் போன்றவைகள் வாதங்கள் அல்ல. இவைகள்தாம் உங்கள் வாதங்கள் என்றால் பரிதாபமே என் பதில்
http://azer.com/aiweb/categories/magazine/ai141_folder/141_articles/141_sadikhli_siberia.html
There needs to be broad understanding of the atrocities of Communists in the world
Such books help
செல்வன் பதிவில் எழுதிய மறுமொழி
--
செல்வன்,
:-))
இது நியாயமா சொல்லுங்கள் :-))
நான் கஷ்டப்பட்டு இந்த கம்யுனிஸ்டுகளிடம் விவாதம் பண்ணி வைத்திருக்கிறேன்.
என்னுடைய கெட்ட பெயரை இப்படி லவுட்டிக்கொண்டு செல்கிறீர்களே?
--
கிடக்கட்டும்.
இந்த கட்டுரையை anticommies பதிவில் பதிந்து வைத்துக்கொள்ள அனுமதி உண்டா?
-
அடுத்து,
சந்திப்பு அவர்களுடன் விவாதத்துக்கு தயாராகவே இருக்கிறேன்.
மக இக நண்பர்களுடன் விவாதித்து அவர்கள் ஓடிவிட்ட விவாதத்தை சந்திப்பு தொடர்ந்து என்னை வாதத்தில் முறியடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி
சந்திப்பு அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி,
18 லட்சம் முஸ்லீம்களை கொன்றதற்கு என்ன சொல்கிறார்?
ஆமாம் நாங்கள் கொன்றோம். அதற்காக பெருமைப்படுகிறோம் என்று சொல்வாரா?
Post a Comment