தீட்சிதர் சொத்து அல்ல தில்லை கோவில்!!
கோவிலை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவோம்!!
திருசிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்!!
இந்த கூட்டம் ஜனவரி 26ஆம் தேதி பெரியார்திடல், மேலவீதி சிதம்பரத்தில் நடைபெறுகிறது.
அந்த அழைப்பிதழ் இங்கே.
அனைவரும் கலந்து கொண்டு கீழ்வரும் கேள்விகளை தமிழ் ஆதரவு வேஷம் போடும் கம்யூனிஸ்டுகளை கேட்க வேண்டுகிறேன்.
1) சிவனடியார் ஆறுமுகசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் பெரியார்தாசனும் மருதையனும் சிறப்புரை ஆற்றுகிறார்களே? பெரியார்தாசன் சிவனை கேவலமாக பேசியிருக்கிறார். மருதையன் நாத்திகர்.
சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலையிலேயே கடவுள் இல்லை, கடவுளை பரப்பியன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி போன்றவற்றை கூறப்போகிறீர்களா? சிவனெல்லாம் ஒரு கடவுளா என்பவற்றை பேசுவீர்களா?
2) இந்த கூட்டத்தை நடத்துவது அதிகாரப்பூர்வமான நாத்திக இயக்கமான மக்கள் கலை இலக்கிய கழகம். உங்களுக்கு கோவிலில் என்ன பாடினால் என்ன? அவர்கள் உருதுவில் பாடுகிறார்கள், ஸ்வாஹிலியில் பாடுகிறார்கள், அல்லது அல்லேலூயா என்று கத்துகிறார்கள்? அப்துல்காதருக்கும் அம்மாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பதுபோல, நாத்திகர்களுக்கும், கோவிலில் எந்த மொழியில் பாடுவதற்கும் என்ன சம்பந்தம்? புரியவில்லை என்றால் உதாரணம் தருகிறேன். என் வீட்டுக்குள் என் மனைவியை (பக்கத்து வீட்டுக்காரனுக்கு) புரியாத மொழியில் கொஞ்சுகிறேன் என்று பக்கத்து வீட்டுக்காரன் கேஸ் போடுவது போல இல்லை?
3) அதென்ன கோவிலை அரசுடைமையாக ஆக்குவது? அது காலம் காலமாக தனியார் கோவில். அதனை அவர்களே கட்டியிருக்கமாட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். எவனோ ராஜா அவர்களிடம் தாரை வார்த்தான் என்றே வைத்துக்கொள்வோம். அதற்கு என்ன இப்போது? இருந்துவிட்டு போகட்டுமே. பங்காரு அடிகளார் பிரம்மாண்டமாக கோவில் கட்டியிருக்கிறார். மக்களிடம் உண்டியல் வைத்து அவர்கள் கொடுத்த பணத்தில்தான் கட்டியிருக்கிறார். அதில் தமிழில் பஜனை பாடினால், அதன் உள்ளே போய் ரஷிய மொழியில் பாடு, அல்லது சீன மொழியில் பாடு என்று சொல்வீர்களா? முடிந்தால் நீங்கள் பக்கத்தில் ஒரு கோவிலை கட்டுங்கள். அதற்கு கூட்டம் சேருங்கள்.
4) உங்கள் பேராசான் மாவோ ஆட்சிக்கு வந்ததும் எல்லா பௌத்தக்கோவில்களையும், கன்பூசியஸ் கோவில்களையும் இடித்து தள்ளினார். மிச்சம் இருந்தவை கலாச்சார புரட்சியில் இடிக்கப்பட்டன. நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அதையேதானே செய்யபோகிறீர்கள்? நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல்நாள் எல்லா கோவில்களிலும் தமிழில் பாடவேண்டும் என்று சொல்லிவிட்டு மறுநாள் அனைத்தையும் இடித்துவிடுவீர்களா?
5) மாவோ செய்தது மாதிரி, நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் சிதம்பரம் நடராஜர் கோவிலை இடித்துவிடுவோம் என்று சிவனடியார் ஆறுமுகசாமியிடம் சொன்னீர்களா?
6) புரட்சி வந்து எவ்வளவு நாள் கழித்து பங்காரு அடிகளார் கட்டிய கோவிலை இடிப்பீர்கள்?
7) ராமன், கிருஷ்ணன், சிவன், முருகன் ஆகியோரை எல்லாம் தினந்தோறும் உங்கள் பத்திரிக்கையில் வசைமாறி பொழிந்துகொண்டிருக்கிறீர்களே? நீங்கள் ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பக்தி இலக்கியங்கள், கம்பராமாயணம், வில்லிப்புத்தூர் பாரதம், சீறாப்புராணம், தேம்பாவணி, தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை கொளுத்திவிடுவீர்கள், அப்படியும் மீறி பாடுபவர்களுக்கு வர்க்க எதிரி, அல்லது எதிர்புரட்சியாளன் பட்டம் கொடுத்து நடுத்தெருவில் சுருக்குமாட்டி தொங்க விடுவீர்கள் என்று சிவனடியார் ஆறுமுகசாமியிடம் சொன்னீர்களா?
8) சிவனடியார் ஆறுமுகசாமியை புரட்சி வந்ததும் எவ்வளவு நாள் உயிருடன் வைத்திருப்பீர்கள்?
9) சங்க இலக்கியங்களில் கடவுள் பெயர் குறிப்பிடாத பாடல்கள் மிகச்சில மட்டுமே மிஞ்சும் என்று நினைக்கிறேன். அவை என்ன என்ன என்று தணிக்கை செய்துவிட்டீர்களா?
10) உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியையும் இதே போல யாரோ வளர்த்து உங்களிடம் தாரை வார்த்த பணத்தில்தான் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் உண்டியல் குலுக்கி சேர்த்த பணத்தில்தான் கட்சி அலுவலகம், பத்திரிக்கை எல்லாம் நடத்துகிறீர்கள். உங்கள் உள் கட்சி ஆவணங்களை வெளியே வையுங்கள் என்று கேட்டிருக்கிறேன். எப்போது செய்யப்போகிறீர்கள்? மக்கள் விரோத ஜனநாயக விரோத உங்கள் கட்சியையும் கட்சி பணத்தையும் அரசுடமையாக ஆக்க வேண்டும் என்று கோருகிறேன். நீங்களே மனமுவந்து செய்கிறீர்களா?
--
கேள்விகளுக்குப் பிறகு சில வார்த்தைகள்.
எனக்கு பெரியார் தாசனின் பேச்சுகளிலோ, அல்லது அவரது கருத்துக்களிலோ மாறுபாடு இருக்கிறது அல்லது இல்லை என்பதனை விட அவர் ஜனநாயக வழியில் பிரச்சாரத்தின் மூலமே தன் விஷயங்களை பரப்புகிறார் என்பதனையே இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
அவர் பெரியார் வழியில் தனது பிரச்சாரத்தை செய்கிறார். அவர் கோவில்களை இடிக்கவும் போவதில்லை, அல்லது பிராம்மணர்களை கொல்லவும் போவதில்லை. அதுமட்டுமல்ல, கோவிலுக்கு போகும் சாதாரண தமிழர்களை கொல்லவும் போவதில்லை. கோவிலை நடத்தும் சாதாரண தமிழர்களை கொல்லவோ தடுக்கவோ போவதில்லை.
ஆனால், கம்யூனிஸ்டுகள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. தற்போது திராவிட கழகத்தின் பிராம்மண எதிர்ப்பு, தமிழ் ஆதரவு எல்லாவற்றுக்கும் தமிழ்நாட்டில் ஆதரவு இருக்கிறது என்று கண்டு, அந்த ஆதரவை தனக்கான ஆதரவாக மாற்றிக்கொள்ள இறங்கியிருக்கிறார்கள். அதனால்தான் தற்போது தமிழ், பிராம்மண எதிர்ப்பு என்று ஜல்லி அடிக்கிறார்களே தவிர, அவர்களுடைய நீண்டகால நோக்கில் இவற்றையெல்லாம் இடித்து, கோவில்கள அழித்து, கோவிலுக்கு போகும் சாதாரண தமிழர்களை கொல்லுவதுதான் கொள்கை. இதே கம்யூனிஸ்டுகள் "சீர்திருத்தம் செய்யாதே புரட்சி செய்" என்று கோஷம் போட்டு, இப்படிப்பட்ட சீர்திருத்த முயற்சிகளை எதிர்த்தவர்கள். புரட்சி வந்தால் தலித்துகளின் பிரச்னை, ஜாதி பிரச்னை, மொழி பிரச்னை எல்லாம் தானாக ஒழிந்துவிடும் ஆகவே புரட்சி செய்வோம் என்று கோஷமிட்டு வந்தவர்கள். (புரட்சி வந்தால், எவனாவது கம்யுனிஸ்டு கட்சிக்கு எதிர் கருத்து வைத்திருந்தால் ஆள் காலி. அதுதான் அவர்கள் பிரச்னையை தீர்க்கும் முறை)
நான் சொல்லுவது நகைப்புக்கிடமானது என்று நினைத்தால், இவர்கள் பேராசான் என்று தினந்தோறும் தொழுது வணங்கும் மாவோ, லெனின், ஸ்டாலின், போல்போட் போன்றோர் பண்ணியதை தயவு செய்து படியுங்கள்.
Freitag, 25. Januar 2008
தமிழ் ஆதரவு வேஷம் போடும் கம்யூனிஸ்டுகளிடம் கேள்விகள்
Eingestellt von தமிழ்மணி um 16:51
Abonnieren
Kommentare zum Post (Atom)
25 Comments:
//10) உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியையும் இதே போல யாரோ வளர்த்து உங்களிடம் தாரை வார்த்த பணத்தில்தான் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் உண்டியல் குலுக்கி சேர்த்த பணத்தில்தான் கட்சி அலுவலகம், பத்திரிக்கை எல்லாம் நடத்துகிறீர்கள். உங்கள் உள் கட்சி ஆவணங்களை வெளியே வையுங்கள் என்று கேட்டிருக்கிறேன். எப்போது செய்யப்போகிறீர்கள்? மக்கள் விரோத ஜனநாயக விரோத உங்கள் கட்சியையும் கட்சி பணத்தையும் அரசுடமையாக ஆக்க வேண்டும் என்று கோருகிறேன். நீங்களே மனமுவந்து செய்கிறீர்களா?//
வெவரம் இல்லாமல் எழுதுகிறீர்கள் தோழர் செல்வன். கம்யூனிச கட்சியே பார்ப்பன தலைமையில் தான் இயங்குகிறது, சோமநாத் சட்டர்ஜி ஒரு பார்ப்பனன். மக இக வுக்கும் தலைமை தாங்குவது மருதையன் என்னும் பாப்பான்.
வேறு யாரும் போராடினால் வெற்றிபெற்றாலும் பெற்றுவிடும் என்பதால் தடுப்பதற்காக பார்பனர்கள் சும்மா தூண்டிவிடுவது போன்று பின்னால் இருந்து இயக்குகிறார்கள். ஒன்னும் தெரியாமல் வந்து புலம்பாத ஓய்.
ஆறுமுகசாமிக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு அவருக்கு செவி சாய்த்தார்களா? அப்பறம் என்ன ஆத்திகன் தான் கேட்கனும் நாத்திகன் கேள்வி கேட்கக் கூடாது என்ற பம்மாத்து?
பழையபடி பாப்பானுக்கு அடிவருடியே பொழப்பை ஓட்டுங்கோ பேஷா!!! தோழர் அதியமானை கூப்பிட்டுக்கோங்க, அவாளும் நல்லா தாங்குவா!
//என் வீட்டுக்குள் என் மனைவியை (பக்கத்து வீட்டுக்காரனுக்கு) புரியாத மொழியில் கொஞ்சுகிறேன் என்று பக்கத்து வீட்டுக்காரன் கேஸ் போடுவது போல இல்லை?//
ஏங்க, உங்க மனைவியை பக்கத்துவீட்டுக்காரன் கொஞ்சுவதை எதிர்வீட்டுக்காரன் கேட்கப்படாதா? நல்லா இருக்குய்யா உம்ம நியாயம்? அப்போ உங்களவா கொல வழக்கப்படி பக்கத்து வீட்டுக்காரனோடு சேர்ந்து கொண்டு எதிர்த்த வீட்டுக்காரனும் கள்ள உறவு வெச்சுக்கனும்னு சொல்றேளா?
நன்றி ராகவன் அய்யங்கார், நன்றி ராமதாஸ் அய்யர்.
ராகவன் அய்யங்கார், நீங்கள் N.ராம்,வரதராஜன்,சங்கரையா .... என்ற பெரிய பட்டியலை விட்டு விட்டீர்களே! இன்றைய நிலவரப்படி TAMBRAS கூட்டத்துக்கு அடுத்தபடி அதிக பிராமணர்கள் கூடும் இடம் கம்யூனிச politbureau கூட்டம் தான்.
நண்பர்களே,
சிதம்பரம் கோவிலில் தமிழ்பாடலாமா இல்லையா என்பதல்ல இந்த பதிவின் விவாதக்களம்.
கம்யூனிஸ்டுகளின் போலித்தனத்தை பற்றியது.
சிதம்பரம் கோவிலில் தமிழில் பாடச்சொல்லும் இவர்கள் கோவிலையே அழிக்க திட்டம் போட்டிருப்பவர்கள்.
இது சிதம்பரம் கோவிலுக்கு மட்டுமல்ல.
இவர்களது ஆசான் மாவோ, எல்லா கோவில்களையும் சர்ச்சுகளையும் மசூதிகளையும் அழித்தவர்.
இன்றும் கூட சீனாவில் பாலுங்காங் மதப்பிரிவில் இருப்பவர்கள் கடும் சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.
கம்யூனிஸ்டுகள் இங்கே போட்டிருப்பது வேஷம்.
தங்கள் கருத்துக்கு நன்றி சதுக்கப்பூதம்
மனித உரிமை பாதுகாப்பு மையமும், கம்யுனிஸ்டுகளும் 'இணைவதே' ஒரு நகைமுரண் ; கம்யுனினிஸ்ட்கள் தான் மிக கொடிய மனித உரிமை மீறல்களை செய்தவர்கள் ; செய்பவர்கள். இந்த அடிப்படை உண்மை ஏன் 'மனித உரிமை பாதுகாப்பு மைய்ய ஆர்வல்ர்களுக்கு புரிவதில்லை ??? !!!!
மிக்க நன்றி அதியமான்
இந்த மனித உரிமை பாதுகாப்பு மையம் என்பதே இந்த மக இக கம்யூனிஸ்டுகளின் front முகமூடி என்று நான் நினைக்கிறேன். இவர்களே இந்த பெயரில் ஒன்றை உருவாக்கி தங்களை மனித உரிமை காவலாளிகள் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள்..
கேள்விகளுக்குப் பிறகு சில வார்த்தைகள்.
எனக்கு பெரியார் தாசனின் பேச்சுகளிலோ, அல்லது அவரது கருத்துக்களிலோ மாறுபாடு இருக்கிறது அல்லது இல்லை என்பதனை விட அவர் ஜனநாயக வழியில் பிரச்சாரத்தின் மூலமே தன் விஷயங்களை பரப்புகிறார் என்பதனையே இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
அவர் பெரியார் வழியில் தனது பிரச்சாரத்தை செய்கிறார். அவர் கோவில்களை இடிக்கவும் போவதில்லை, அல்லது பிராம்மணர்களை கொல்லவும் போவதில்லை. அதுமட்டுமல்ல, கோவிலுக்கு போகும் சாதாரண தமிழர்களை கொல்லவும் போவதில்லை. கோவிலை நடத்தும் சாதாரண தமிழர்களை கொல்லவோ தடுக்கவோ போவதில்லை.
ஆனால், கம்யூனிஸ்டுகள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. தற்போது திராவிட கழகத்தின் பிராம்மண எதிர்ப்பு, தமிழ் ஆதரவு எல்லாவற்றுக்கும் தமிழ்நாட்டில் ஆதரவு இருக்கிறது என்று கண்டு, அந்த ஆதரவை தனக்கான ஆதரவாக மாற்றிக்கொள்ள இறங்கியிருக்கிறார்கள். அதனால்தான் தற்போது தமிழ், பிராம்மண எதிர்ப்பு என்று ஜல்லி அடிக்கிறார்களே தவிர, அவர்களுடைய நீண்டகால நோக்கில் இவற்றையெல்லாம் இடித்து, கோவில்கள அழித்து, கோவிலுக்கு போகும் சாதாரண தமிழர்களை கொல்லுவதுதான் கொள்கை. இதே கம்யூனிஸ்டுகள் "சீர்திருத்தம் செய்யாதே புரட்சி செய்" என்று கோஷம் போட்டு, இப்படிப்பட்ட சீர்திருத்த முயற்சிகளை எதிர்த்தவர்கள். புரட்சி வந்தால் தலித்துகளின் பிரச்னை, ஜாதி பிரச்னை, மொழி பிரச்னை எல்லாம் தானாக ஒழிந்துவிடும் ஆகவே புரட்சி செய்வோம் என்று கோஷமிட்டு வந்தவர்கள். (புரட்சி வந்தால், எவனாவது கம்யுனிஸ்டு கட்சிக்கு எதிர் கருத்து வைத்திருந்தால் ஆள் காலி. அதுதான் அவர்கள் பிரச்னையை தீர்க்கும் முறை)
நான் சொல்லுவது நகைப்புக்கிடமானது என்று நினைத்தால், இவர்கள் பேராசான் என்று தினந்தோறும் தொழுது வணங்கும் மாவோ, லெனின், ஸ்டாலின், போல்போட் போன்றோர் பண்ணியதை தயவு செய்து படியுங்கள்.
Sharp and timely post.
I hope someone asked these guys at the meeting
Thanks ANony
இந்த கேள்விகளை கூட்டத்தில் கேட்டுவிட்டு...
எதற்கு வம்பு?
இவர்கள் விரும்புவது போலத் தில்லைக் கோயில் நிர்வாகத்தைக் கழக அரசு எடுத்துக்கொண்டு, பூஜை செய்யும் உரிமையை மகஇகவிடம் குத்தகைக்கு விட்டுவிட்டால், தலைமை அர்ச்சகராக யார் இருப்பார்கள்?
வீராச்சாமி என்கிற ரங்கராஜ அய்யங்கார் வைணவர் என்பதால் அவருக்கு வாய்ப்பிருக்காது.
மருதையன் என்கிற வல்லபேச குருக்களுக்குதான் சான்ஸ் அதிகம்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
மருதையன் பார்ப்பனர் இல்லை. (யார் வீராசாமி?) அவரும் பார்ப்பனர் இல்லை என்றே கருதுகிறேன்.
கம்யூனிஸ்டுகள்..என்ன வேசம் வேண்டுமானாலும் போடட்டும். நடக்கின்ற அநியாயத்தை வெளிச்சத்தில் உரக்கச் சத்தம் போட்டு ச் சொல்லுகிற எந்த ஒரு அமைப்பும் வரவேற்கத்தக்கதே. மேற்கு வங்காளத்தில், காம். ஆட்சியில், மத உரிமைக்கு பங்கம் வந்ததாக இது வரை நான் கேள்விப்பட்டதில்லை.
கேள்விகள் கேட்கவே கூடாதா..இல்லை கம். கேட்கக்கூடாதா..எது உங்கள் நிலைப்பாடு.
அவர்கள் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே படுகிறது.
//மருதையன் பார்ப்பனர் இல்லை.//
தவறான கருத்து.
(நான் கம்யூனிசித்தை நீங்கள் உண்மையிலேயே அவர்கள் கொள்கைக்காக தான் எதிர்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன் உண்மைதானே?)
tbcd உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அவர்கள் தாராளமாக மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கட்டும். ஆனால், அவர்கள் அஜெண்டா, மனித உரிமைகளுக்கு எதிரானது, ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதையும் யாரேனும் சொல்லவேண்டும் அல்லவா?
அதனைத்தான் நான் செய்கிறேன்.
நண்பர் சதுக்கப்பூதம்,
ஆமாம். அவர்களது கொள்கைகளுக்காக மட்டுமே அவர்களை எதிர்க்கிறேன்.
//அவர்கள் (கம்யூனிஸ்டுகள்) அஜெண்டா, மனித உரிமைகளுக்கு எதிரானது, ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதையும் யாரேனும் சொல்லவேண்டும் அல்லவா?
அதனைத்தான் நான் செய்கிறேன்.//
Adra sakka! Adra sakka!
//பழையபடி பாப்பானுக்கு அடிவருடியே பொழப்பை ஓட்டுங்கோ பேஷா!!! தோழர் அதியமானை கூப்பிட்டுக்கோங்க, அவாளும் நல்லா தாங்குவா!//
Dear duplicate ராகவன்,
Please take 2 tablets of Gelusil 3 times daily before food.
-Gelusil® Antacid and Anti-Gas Tablets are trademark of respective owners
I am a supporter of Periyar Dasan and his methods. There is a danger in associating with Communists in this regard.
as I wrote...
எனக்கு பெரியார் தாசனின் பேச்சுகளிலோ, அல்லது அவரது கருத்துக்களிலோ மாறுபாடு இருக்கிறது அல்லது இல்லை என்பதனை விட அவர் ஜனநாயக வழியில் பிரச்சாரத்தின் மூலமே தன் விஷயங்களை பரப்புகிறார் என்பதனையே இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
அவர் பெரியார் வழியில் தனது பிரச்சாரத்தை செய்கிறார். அவர் கோவில்களை இடிக்கவும் போவதில்லை, அல்லது பிராம்மணர்களை கொல்லவும் போவதில்லை. அதுமட்டுமல்ல, கோவிலுக்கு போகும் சாதாரண தமிழர்களை கொல்லவும் போவதில்லை. கோவிலை நடத்தும் சாதாரண தமிழர்களை கொல்லவோ தடுக்கவோ போவதில்லை.
ஆனால், கம்யூனிஸ்டுகள் அப்படிப்பட்டவர்கள் அல்ல.
--
So, Communists can try coming in various names such as Sampukan and twist my words, without any use...
நண்பர் சம்புகன் பதிவில் எழுதியது.
--
நண்பர் சம்புகன்,
உங்கள் பதிவுகளை இப்போதுதான் பார்த்தேன். அதனால், பதிவுக்கு பதில் எழுதாததற்கு மன்னிக்கவும்.
ஆனால், உங்களது இந்த கேள்விகளுக்கான பதில்களையும் ஏற்கெனவே பலர் கேட்டிருக்கின்றனர். அதற்கான பதிலையும் மறுமொழியாக என் பதிவிலேயே எழுதியிருக்கிறேன்.
நன்றி
Predilection casinos? agree to this late-model [url=http://www.realcazinoz.com]casino[/url] enchiridion and waver online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also into our up to occasion [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] disdain at http://freecasinogames2010.webs.com and be heiress to in indefatigable folding moolah !
another unsurpassed [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] value is www.ttittancasino.com , in lieu of of german gamblers, come well-wishing online casino bonus.
It isn't hard at all to start making money online in the undercover world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]blackhat hacking[/URL], Don’t feel silly if you don't know what blackhat is. Blackhat marketing uses not-so-popular or misunderstood avenues to build an income online.
Post a Comment