Dienstag, 22. Januar 2008

பங்கு சந்தை விழும்போதெல்லாம் கும்மி அடிக்கும் கம்யூனிஸ்டுகள்

நண்பர் அசுரன் பதிவில் இதனை எழுதியிருக்கலாம்தான். ஆனால், அவர் என்னுடைய பதில் எதனையும் அனுமதிக்கப்போவதில்லை என்று பின்வாங்கிவிட்டார். (முதலுக்கே மோசம் வருகிறதே.. pun intended)

1929இல் அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சியடைந்தது. அது கிரேட் டிப்ப்ரஷன் என்று அழைக்கப்படுகிறது. 1921இல் பங்கு சந்தை எண் டோ ஜோன்ஸ் 40ஆக இருந்து 1929இல் 600ஆக உயர்ந்திருந்தது. பங்கு சந்தை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லோரும் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தார்கள். சொந்த வீட்டை விற்றும், அடமானம் வைத்தும் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தார்கள். அது வீழ்ச்சியடைந்ததும் எல்லா கம்யூனிஸ்டுகளும் ஒரேயடியாக கும்மி அடித்து, இது முதலீட்டிய பொருளாதாரத்தின் வீழ்ச்சி. எல்லோருடைய சொத்துக்களையும் நாங்கள் நடத்தபோகிற அரசாங்கத்திடம் கொடுங்கள். நாங்கள் நன்றாக இருப்போம். நீங்கள் அடிமைகளாக இருக்கலாம் என்று சொன்னார்கள்.

அமெரிக்க மக்கள் கேட்கவில்லை.

அமெரிக்கர்கள் பங்கு சந்தையை ஒழுங்கு படுத்த அமைப்புக்களை உருவாக்கினார்கள்.

எல்லா தொழிலுக்குள்ளும் வரும் ஏமாற்றுபேர்வழிகளை கண்டுபிடிக்க போலீஸும் அரசாங்கமும் இருப்பது போல பங்கு சந்தை ஏமாற்று பேர்வழிகளை கண்டுபிடிக்கவும், தண்டிக்கவும் அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. எஸ்.ஈ.ஸி என்ற அமைப்பு அப்போது உருவாக்கப்பட்டதுதான்.

நண்பர் இரண்டாம் சொக்கன் சொன்னது போல, பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்ததுமே கம்யூனிஸ கும்மி அடிக்க தேவையில்லை.

பல்லாயிரம் கோடி இழப்பு என்று பத்திரிக்கைகள் எழுதுகின்றன. அது உண்மைதான். ஆனால், அது ஓரளவுக்கு பொய்யும் கூட.

அன்றைக்கு உச்ச நிலையில் இருக்கும் பங்கை எல்லோரும் வாங்கி அன்றைக்கே விற்றிருந்தால் மட்டுமே அத்தனை பல்லாயிரம் கோடி இழப்பு என்பது உண்மை.

ஆனால், யாருமே அப்படி வாங்கி விற்பதில்லை. பெரும்பாலானவர்கள் ஒரு வருடத்துக்கு முன்னரோ, அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னரோ வாங்கி பங்கு தற்போது விலை இறங்கியிருப்பதை பார்க்கிறார்கள்.

அந்த பங்கு 10 ரூபாயில் வாங்கி இன்று 1000 ரூபாயில் இருக்கும் (உதாரணம் இன்போஸிஸ் பங்குகள்) அது இன்று 900 ரூபாயாக இறங்கும். இந்த 100 ரூபாய் இழப்பு ஒரு பங்கில். ஒரு கோடி பங்குகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். எவ்வளவு இழப்பு? 100 கோடி ரூபாய்.
இதுவே எல்லா பங்குகளிலும் நடக்கிறது. இதே போல 100 பங்குகளில் இறங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். எவ்வளவு மொத்தம் இழப்பு? 10000 கோடி ரூபாய்.

பார்க்க பெரிய எண். உண்மையில் 10 ரூபாய்க்கு வாங்கிய பங்கு 1000 ரூபாய்க்கு போய் பின்னர் 900 ரூபாய்க்கு வந்ததுதான் இந்த எண்.

இந்த பங்கை வாங்கியவருக்கு என்ன இழப்பு? ஒன்றுமே இல்லை! அவர் 10 ரூபாய்க்கு வாங்கிய பங்கை 900 ரூபாய்க்கு கொண்டு வந்திருக்கிறார். இது லாபமா அல்லது நஷ்டமா?

--

எல்லா தொழில்களிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதுதான் பொருளாதாரத்தை முன்னேற்றுகிறது.

உதாரணமாக கம்ப்யூட்டரை எடுத்துக்கொள்வோம். ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர் கம்பெனிகள் வந்தன. ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர் மென்பொருள் கம்பெனிகள் வந்தன. அதில் பல்லாயிரக்கணக்கான கம்பெனிகள் மூடப்பட்டன. பல நின்றன. முந்தைய கம்பெனிகளில் வேலை செய்தவர்கள் வேலை இழந்தனர். அவர்கள் பல்வேறு புதிய வேலைகளில் ஈடுபட்டனர். புதிய கம்பெனிகளை உருவாக்கினர். அதில் பல கம்பெனிகள் நின்றன. பல கம்பெனிகள் மூடப்பட்டன. இது ஒரு தொடரும் முறை.

இதனால்தான், கோடிக்கணக்கான டாலர் செலவில் கட்டப்பட்ட முதலாவது கம்ப்யூட்டரை விட பல கோடி மடங்கு வலிமையான ஒரு கம்ப்யூட்டரை இன்று 200 டாலருக்கு வாங்க முடிகிறது.

இதுவே மனித சமூகம் முதன்முதலில் சக்கரம் செய்ததிலிருந்து, நெருப்பு உருவாக்கியதிலிருந்து தன்னுடைய தேவைக்கு அதிகமான பொருளை மற்றொரு பொருளுக்கு வியாபாரம் செய்ததிலிருந்து நடந்து வந்திருக்கிறது. இதுவே மனித சமூகத்தை முன்னேற்றியிருக்கிறது.

இந்த பொருளாதார சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் இல்லாத எந்த சர்வாதிகார சமூகமும் தேங்கிய குட்டையாகி நசிந்து மடிந்திருக்கிறது.

26 Comments:

said...

பங்குச்சந்தை குருடர்களான என்போன்றோருக்கு சிறிய ஒளிக்கீற்றை காட்டியிருக்கிறீர். நன்றி.

Anonym said...

அட, இவ்வளவுதான் விஷயமா? நான் கூட பங்கு சந்தை விழுந்துடுச்சே, என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்!
:-)))

said...

தமிழ்மணி

நல்ல விளக்கம்.

பங்கு சந்தை என்பது கத்திரிக்கா மார்க்கட் மாதிரி.இன்றைக்கு கத்திரிக்கா கிலோ ஐம்பது ரூபா.நாளைக்கு ஐந்து ரூபா.விலை ஏற்றமும் இறக்கமும் இல்லாத தொழில் எதுவுமே கிடையாது

பங்கு சந்தையை சூதாட்டமாக நினைத்து பத்து நாளில் பணத்தை டபிள் செய்ய நினைக்கும் முட்டாள்கள் தான் வருத்தப்படவேண்டும்.நல்ல வியாபாரி விலை ஏறினாலும் காசு பார்ப்பான், இறங்கினாலும் காசு பார்ப்பான்.அதனால் அவன் வருத்தப்பட வேண்டியதில்லை:-))

said...

நன்றி கருப்பன் அய்யா,
நன்றி அனானி அய்யா,
நன்றி செல்வன் அய்யா,

இந்தியர்கள் நல்ல வியாபாரிகள். நல்ல தொழில்முனைபவர்கள், நல்ல ரிஸ்க் எடுப்பவர்கள். சிறந்த புத்திசாலிகள்.

ஆனால், என்ன சோசலிஸ புத்தி கழண்டதில், கொஞ்சம் தடுமாறிவிட்டார்கள். இப்போது தெளிந்து கொண்டிருக்கிறது.

பங்குச் சந்தை கத்திரிக்கா மார்க்கெட் மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனை பற்றி தனியே எழுத வேண்டும்.

அது மட்டும் இல்லையென்றால், அமெரிக்காவோ, ஐரோப்பாவோ ஆயிரக்க்கணக்கான தொழில்களை தொடங்க முடியாது,ஆயிரக்கணக்கான புத்தம்புது பொருட்களை உற்பத்தி செய்யமுடியாது.

உருவாக்கப்படும் அந்த பொருட்கள் மிக மலிவான விலையில் மக்களை அடையமுடியாது.

said...

தமிழ்மணி

விலை,டிமாண்ட்,சப்ளை,சந்தை,யூக வணிகம்,முதலீடு போன்ற பல வணிக தந்திரங்கள் கத்திரிக்கா மார்க்கட்டுக்கும் பங்கு சந்தைக்கும் பொது.பொருளாதார கோணத்தில் பங்கு சந்தை ஒப்பீட்டளவில் கத்திரிக்காயை விட முக்கியம்தான்.ஆனால் நாம் இப்போது பேசும் விஷயம் "விலை வீழ்ச்சி".அது கத்திரிக்கா மார்க்கட்டுக்கும், பங்கு சந்தைக்கும் பொதுதான்.டிமாண்டும்,சப்ளையுமே இரண்டின் விலையையும் நிர்ணயிக்கின்றன.

பங்குசந்தை உயர்ந்தால் முதலீடுகள் அதிகரித்து வேலை வாய்ப்புகள் பெருகும்.சான்றாக பங்கு சந்தையில் ரிலையன்ஸ் பவர் அதிக முதலீட்டை திரட்ட காரணம் அதன் விலை உயர்வே.அதனால் ரிலைய்னஸ்பவருக்கு அதிக பணம் கிடைத்து புதிய தொழிற்சாலைகளை நிறுவும் வாய்ப்பு அதிகரிக்கிறதல்லவா?

பங்கு விலை உயர முதலீடு உயரும்
முதலீடு உயர தொழிற்சாலைகள் பெருகும்
தொழிற்சாலை பெருக வேலை வாய்ப்பு உயரும்
வேலை வாய்ப்பு உயர வறுமை அழியும்

இதுதான் விதி.

இதுபுரியாத காம்ரேடுகள் "பங்கு சந்தை உயர்கிறது,ஏழைகள் வாழ்வு வீழ்கிறது" என கோஷம் போடுவார்கள்.இப்போது பங்குசந்தை வீழ்ந்ததால் ஏழைகள் வாழ்வு உயரபோகிறதா என்ன?:-))

said...

மிக்க நன்றி செல்வன்,

அசுரன் பதிவில் அவருக்கு பதில் எழுத முனையும் நண்பர் மங்களூர் சிவா, இரண்டாம் சொக்கன் ஆகியோருக்கும் நன்றி

Anonym said...

//இதுபுரியாத காம்ரேடுகள்//

அதெல்லாம் அவர்களுக்கு புரியும். தனிப்பட்ட முறையில் தங்கள் மகன் மகளுக்கு உதவும் என்று பங்கு சந்தையில் முதலீடும் செய்வார்கள்.

ஆனால், ஒழுங்கு செய்யப்பட்ட பங்கு சந்தை நல்லது என்று ஒப்புக்கொண்டால், கம்யூனிஸ கொள்கையை காட்டி மக்களை ஏமாற்றுவது நடக்காதே...

said...

//அசுரன் said...
எபா... யாராச்சும் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கபா....

//அது இருக்கட்டும். இந்த முதலீட்டு பிரச்சினையில் இங்கு குறிப்பாக பேசியுள்ள விசயம் அன்னிய முதலீடு ஏன் உற்பத்திக்கானதாக இல்லாமல் வெறுமே சூதாட்டத்திற்க்கு என்று வந்து சென்றது? என்பதைத்தான்.//

அசுரன்

January 22, 2008 10:25 AM //

என்று நண்பர் அசுரன் எழுதியிருக்கிறார்.

எல்லா முதலீடும் உற்பத்திக்குத்தான் வருகிறது. பங்கு சந்தை என்பது உற்பத்தி செய்யும் தொழில்களது பங்குகள் விற்கப்படும் இடம். அதில் எந்த உற்பத்திக்கு மக்களிடத்தில் தேவை இருக்கிறதோ அந்த பங்குகளே வாங்கப்படும். அதில் வரும் பணத்தை கொண்டு தொழில்கள் தங்கள் முதலீட்டை விஸ்தரிக்கவும், தங்களது தொழில்களை விஸ்தரிக்கவும் செலவழிக்கப்படும்.

ஆகவே, அது மேம்போக்கில் சூதாட்டம் போல தெரிந்தாலும், பங்கு சந்தையில் போடும் பணம் உற்பத்திக்குத்தான் வருகிறது.

said...
Dieser Kommentar wurde vom Autor entfernt.
said...
Dieser Kommentar wurde vom Autor entfernt.
said...

//அன்னிய முதலீடு ஏன் உற்பத்திக்கானதாக இல்லாமல் வெறுமே சூதாட்டத்திற்க்கு என்று வந்து சென்றது? என்பதைத்தான்.//

அன்னிய முதலீட்டில் சூதாட்டத்துக்கு அதாவது யூக வணிகத்துக்கு வரும் முதலீடும் உண்டு.நீண்டகால அடிப்படையில் வரும் long term inverstmentம் உண்டு.

அன்னிய வங்கிகள்,நிதி நிறுவனங்கள் நமது பங்கு சந்தையில் செய்யும் முதலீடு முதல் வகையை சார்ந்தது.அன்னிய கம்பனிகள் இங்கே கம்பனி ஆரம்பிப்பது இரண்டாம் வகையை சார்ந்தது.

கோக்,பெப்சி ஆகியவை இங்கே கோடிகளை கொட்டி தொழிற்சாலைகளை ஆரம்பித்திருக்கின்றன.பங்கு விலை குறைந்ததால் அவர்கள் பாக்டரிகளை விற்றுவிட்டு தமது முதலீட்டை திரும்ப எடுத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடப்போகிறார்களா?இல்லையே?ஆக நீண்டகால அன்னிய முதலீடும் அதனால் வரும் வேலைவாய்ப்பும் பங்கு சந்தை உயர்வை பொறுத்ததல்ல.

குறைந்த கால அன்னிய முதலீடு பங்குசந்தையில் liquidity அதிகரிக்கும்.பங்கு சந்தை விலை வீழ்ச்சியால் கம்பனிகளுக்கு கிடைக்கும் liquidity குறையும்.வங்கியில் over draft வசதியை குறைப்பதால் வணிகர்களுக்கு ஏற்படும் சிரமத்தை போன்றதுதான் இது.

ஆக சூதாட்டத்துக்கும், உற்பத்திபெருக்கத்துக்கும் அன்னிய முதலீடு பயன்படும்.இரண்டுமே நமது தொழில்துறைக்கு நல்லதுதான்.

பங்கு சந்தை சூதாட்டத்தால் ( speculation) கம்பனிகளுக்கு எந்த லாபமும் நஷ்டமும் இல்லை.ரிலையன்ஸ் 450 ரூபாய்க்கு பங்கை சந்தையில் விற்று முதலீட்டை பெறுகிறது என வைத்துக்கொள்வோம்.பங்கை வாங்கிய முதலீட்டாளர் அதை 300க்கோ அல்லது 1500க்கோ விற்றால் ரிலையன்ஸுக்கு அதனால் லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை அல்லவா?அதனால் வரும் லாபமும் நஷ்டமும் வணிகர்களையே சாரும்.கம்பனியை அல்ல.

யூகவணிகத்தில் அன்னிய முதலீடு வருவதாலும் போவதாலும் கம்பனிகளுக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை.அந்த லாபமும் நஷ்டமும் முதலீட்டாளர்களுக்குத்தான். தொழிற்துறைக்கல்ல.

said...

நன்றி செல்வன்,

அந்நிய முதலீடுகள் நீங்கள் சொல்வது போல பல வகை உண்டு. கோக் பெப்ஸி மட்டுமல்ல, கம்ப்யூட்ட சிப் தயாரிக்கும் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் பல வருடங்களுக்கு முன்னரே பெங்களூர் வந்துவிட்டது. இண்டல், ஏஎம்டி ஆகியவை, போர்டு போன்ற கார் கம்பெனிகள், விவசாய உற்பத்தி பொருட்களை வெகுகாலம் சேமித்து வைக்கும் கேன்னிங் தொழில்நுட்பம் போன்றவை எல்லாம் வந்திருக்கின்றன. இந்தியா உலகத்தின் உற்பத்தி ஸ்தானம் என்ற நிலையை வெகு விரைவில் அடையும். சீனாவை விட இந்தியாவில் இருக்கும் சட்டரீதியான பாதுகாப்பு (சீனாவில் கமிஷன், லஞ்சம்மட்டுமே. சட்டரீதியான பாதுகாப்பு இல்லை) நீண்டகால முதலீட்டுக்கு நல்லது என்று பல அறிக்கைகள் கூறியுள்ளன.

இந்த முதலீடுகளின் தேவை ஏன் வந்தது?

இந்தியாவில் சோசலிஸ்டுகளின் ஆட்சியில் எல்லா தொழில்முனைப்பும் நிறுத்தப்பட்டது. தனியே தொழில் துவங்க வேண்டுமென்றாலோ, சைக்கிள் உற்பத்தி செய்யவேண்டுமென்றாலும் டெல்லிக்கு படையெடுத்து சோசலிஸ்டு அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்கவேண்டும்.

அரசாங்கமே நடத்தும் தொழில்களுக்கு போட்டி கிடையாது. போட்டி போட தனியார் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அறிவியல் துறை அரசாங்கமயமாக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டது.

இதெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால், இந்தியாவில் உண்மையான் முதலீட்டிய பொருளாதாரம் இருந்திருந்தால், நமது முதலீட்டை மற்ற நாடுகள் எதிர்பார்த்திருக்கும்.. இல்லையா?

said...
Dieser Kommentar wurde vom Autor entfernt.
said...

தமிழ்மணி

கலப்பு பொருளாதாரம் எனும் குட்டிசுவரான பொருளாதார கொள்கையை நமது அரசு 40 ஆண்டுகள் கடைபிடித்தன. இந்த கொள்கை முதாலாளித்துவத்தில் சோஷலிசத்தை முக்காலே மூணுவிசம் கலந்த ஒரு கிராக்குத்தனமான கொள்கை.

இந்த கொள்கை நமது நாட்டை 44 வருஷம் பாடாய் படுத்தியது.இதற்கு முழுமுதல் காரணமும் மேற்குவங்கத்தை சார்ந்த கம்யூனிச அறிஞர்களே ஆவார்கள்.குறிப்பாக ஸ்டாலினிஸ ரஷ்யாவை பின்பற்றி ஐந்தாண்டு திட்டம் எனும் கொள்கையை இந்திய அரசு பின்பற்றியது.அந்த கொள்கையை வகுத்தவர்கள் அனைவரும் மேற்குவங்க காம்ரேடுகள்.குறிப்பாக சொல்லவேண்டுமானால் இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் மகளனோபிஸ் திட்டம் என்றே அழைக்கப்படுகிறது.மகளனோபிஸ் மேற்குவங்க காம்ரேட்.வரிக்கு வரி,அச்சுக்கு அச்சு ரஷ்ய ஐந்தாண்டு திட்டத்தை காப்பி அடித்து அதில் இந்திய சூழலுக்கேற்ப சில மாற்றங்கள் செய்து இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் தயாரிக்கப்பட்டது.

இந்த மாதிரி கேனத்தனம் உலகின் வேறு எந்த நாட்டிலும் நடக்குமா என்று தெரியவில்லை.நம் நாட்டில் நடந்தது என்பதுதான் சோகம்.ஐந்தாண்டு திட்டத்தை கூடவா ரஷ்யாவிடமிருந்து காப்பி அடிப்பது?:-(

மேலும் விவரங்களுக்கு நான் திண்னையில் எழுதிய இந்த கட்டுரையை படிக்கவும்

http://holyox.blogspot.com/2006/06/98_05.html

said...

அட நீங்க வேற இன்னிக்கு என்னோட முதலீடு அதிகம்ங்க. காரணம் உங்களுக்கே தெரியுமே...

said...

வாருங்கள் இளா,

நீங்கள் சொல்வது தெரியவில்லையே.

said...

நிறைய தகவல்கள். அசுரன் பதிவில் அவர் கேட்ட கேள்விக்கெல்லாம் அருமையான பதில்கள்.

நன்றி

said...

நன்றி மங்களூர் சிவா

Anonym said...

அன்புள்ள தமிழ்மணி,
நான் பழைய அனானி.
பொருளாதாரச் செயல்பாடுகளின் அரிச்சுவடி கூட அறியாத அசுரன் மற்றும் தோழர்களின் தவறுகளை உங்களின் முதல் பதிவிலிருந்து நான் சுட்டிக் காட்டியுள்ளேன்.
கம்யூனிஸ்டுகளின் மையம் வினியோகமே தவிர உற்பத்தியல்ல, செல்வப் பெருக்கு மற்றும் மூலதன உருவாக்கமும் அல்ல. உருவான செல்வத்தைப் பங்கீடு செய்வதே அவர்களின் முதல் பிரசினை. இந்தப் பிரசினையையும் அவர்கள் மூலதனநாடுகளில் தான் முன்வைப்பார்கள். சோஷலிச நாடுகளில் அதிகாரவர்க்கமும், பொலிட்பீரோவும் அடிக்கும் கொள்ளைகள் பற்றியும் மூச்சு விட மாட்டார்கள்.

இந்த வெட்கங்கெட்ட தனத்திற்கு தத்துவ முலாம் பூசி மக்கள் முன்னால், டாட்டா பிர்லா, பணக்காரன், சுரண்டல், அரைக்காலனியம், முக்காலே மூணு வீசம் நிலப் பிரபுத்துவம் என்று அர்த்தமில்லாமல் பிதற்றுவார்கள். தம் வாழ்வில் உயர்கல்வி பெற்று, தொழில் நுட்மப் பயிற்சிகள் மேற்கொண்டு முன்னேறத் துடிக்கும் மக்களை போராடு, ஆயுதம் ஏந்து என்று ஒன்றுக்கும் உதவாதபடி செய்தபின்னால் தான் அவர்களுக்குத் திருப்தி.

ஏன் சூதாட்டத்தில் அன்னிய முதலீடு என்ற கேள்வியும் இப்படிப் பட்ட அறியாமையால் விளைந்தது தான். எல்லா பொருளாதாரச் செயல்பாடுமே ஒரு விதத்தில் சூதாட்டம் தான். பல காரணிகளால் உற்பத்தி பாதிக்கப் அப்டலாம். தேவைகளில் மாறுதல், இயற்கையின் சீற்றம், புதிய தொழில் நுட்பம் என்று பல காரணங்களா ஒரு குறிப்பிட்ட துறை / தொழில் வளரலாம் தேயலாம்.

நன்றி.
பழைய அனானி

said...

நன்றி பழைய அனானி

said...

நல்லாருக்கு.

said...

வாருங்கள் சாமானியன்,

நன்றி உங்கள் கருத்துக்கு

said...

இந்த கட்டுரையை சில மாற்றங்களுடன் திண்ணை இணையப்பத்திரிக்கைக்கு அனுப்பி வைத்தேன்.

பிரசுரித்த ஆசிரியர் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டியத்தின் தோல்வியா?

Anonym said...

பாராட்டுகள்.
இந்த கம்யூனிஸ்டுகளை பரந்த தளத்தில் எதிர்கொள்ளும் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

Anonym said...

அம்மம்மா

அம்மம்மா..... அண்ணி
என்று எண்ணி
நான் உன்னை அணைத்தேன்..........


ஜாக்கெட்டில் கையைவிட்டு
முலையைப்
பிடித்தேன்........................................ ........


அது காய் போன்றது..........
இது கனி போன்றது............................( அம்மம்மா




அண்ணி குளிக்கையினில்
ஒளிந்து மறைந்து நின்று
முலையைப் பார்த்தேனே.............


சித்தி வீட்டினிலே
மூன்று தங்கைகளின்
சிதியைக் கண்டேனே....................


அன்று கையடித்தேன்......
இன்று காய்பிடித்தேன்.......

அன்று கையடித்தேன்......
இன்று காய்பிடித்தேன்.......


என்றும் உன்னைத்தான்....... சூத்தடிக்க
நாளும் துடித்தேன்.........


முடியாமல்........ சுன்னியை..... என்கையில்........ பிடித்தேன்.......

.................................................. .................................................. ........................(( அம்மம்மா



தத்தி நடக்கையினில்
குலுங்கும் குண்டி கண்டு
என் தண்டு துடிக்கிறது........

முந்தி நழுவுகையில்
முலையின் வடிவம் கண்டு
நாளும் விரைக்கிறது............

பத்து ஆண்டாக
உன்னை எண்ணி நாளும் துடித்தேன்......

பார்த்து.... பார்த்து........ கையடித்து....... கஞ்சி வடித்தேன்.

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.