கீழ்க்கண்டவாறு மக இக தலைமை ஆசிரியர் குழு எழுதியதை நண்பர் அசுரன் மறுபதிப்பு செய்திருக்கிறார்.
அதன் விமரிசனம் இங்கே எழுதப்படுகிறது
பாமக பச்சோந்தியும் சில 'கூஜா'க்களும்!!
ஒரு பச்சோந்தியும் சில 'கூஜா'க்களும்
உருட்டல் - மிரட்டலால் உண்மையை மறைக்க முடியுமா?
""அடுத்த தேர்தலில் ஆட்சி: பச்சோந்தி இராமதாசின் பகல் கனவு''
அவராவது அடுத்த தேர்தலில் ஆட்சி என்று பகல்கனவு காண்கிறார். அல்லது திட்டம் போடுகிறார். அதனை பகல்கனவு என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் கனவு காணும் புரட்சி மட்டும் பகல் கனவு இல்லையா?
என்ற தலைப்பில் ""புதிய ஜனநாயகம்'' ஆகஸ்டு இதழில் அட்டைப்படச் சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கு, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நல்ல வரவேற்பு இருந்தது. ""பாரபட்சமின்றி'' அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி வரும் ""புதிய ஜனநாயகம்'', பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் இராமதாசின் சந்தர்ப்பவாத, மோசடி அரசியலை உரிய நேரத்தில் உரிய வகையில் அம்பலப்படுத்தியிருப்பதாகப் பலரும் வரவேற்றுள்ளனர்.
அப்படியா? எத்தனை பேர்? உங்கள் பத்திரிக்கையை கூவி விற்றாலும் வாங்க ஆளில்லை. இதில் நீங்களாக கற்பனை செய்துகொள்வது "பலரும் வரவேற்றுள்ளனர்" என்று.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் என்ற ஊரில் இருந்து முரளி என்ற வாசகர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழக ஆட்சியாளரின் பச்சோந்தித்தனத்தை அம்பலப்படுத்தி வருவதற்கு மனமார்ந்த பாராட்டுதலைத் தெரிவித்திருக்கிறார்.
நம் ஊர் பத்திரிக்கைகளுக்காகவது வாசகர்கள் இருக்கிறார்கள். படித்துவிட்டு கருத்து எழுதுவார்கள். உங்கள் பத்திரிக்கைக்கு வாசகர்களே கிடையாதே. நீங்களே பாராட்டி நீங்களே எழுதிக்கொள்வதுவா?
ஆனால், இக்கருத்துக்கு நேர்மாறாக சென்னை வடபழனியில் இருந்து கி.ராம் (செட்டியார்) என்பவர், தன்னை ஒரு புதிய ஜனநாயகம் வாசகர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொண்டு மிகவும் கீழ்த்தரமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பு.ஜ. வாசகர் என்றும், ம.க.இ.க. காரன் என்று புளுகிக் கொண்டு வடபழனி கி.ராம் எழுதிய இந்தக் கடிதத்தைப் படித்ததும் ஒரு பழைய நினைவுதான் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், பண்ருட்டி இராமச்சந்திரன் பா.ம.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவராக இருந்தார். அப்போது அவரை விமர்சித்து எழுதியதற்காக, அப்போது இராமதாசு கட்சி நடத்தி வந்த ""தினப்புரட்சி'' நாளேட்டிலும், கடிதம் மூலமாகவும் ""புதிய ஜனநாயகம்'' பத்திரிக்கையாளரைக் கேவலமாக திட்டி எழுதியிருந்தனர். பு.ஜ. அதற்குப் பதிலடியும் எழுதியிருந்தது. பா.ம.க.வினரால் அன்று தாங்கிப் பிடிக்கப்பட்ட ""பண்ருட்டியார்'' பின்னர் என்ன ஆனார், பா.ம.க.வினராலேயே எவ்வளவு தூரம் வசைபாடப்பட்டார் என்பதும், அக்கட்சியினர் இப்போது மறந்து போன சங்கதி.
உண்மை என்றே வைத்துகொள்வோம். உங்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு உங்கள் கட்சியில் என்ன மரியாதை இருக்கும் என்று சொல்வீர்களா? லெனின் காலத்திலிருந்து மாவோ காலத்திலிருந்து, இந்திய கம்யூனிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் வரைக்கும், சொல்லடியாலும் துப்பாக்கியடியாலும் தானே மாற்றுக்கருத்தை வரவேற்றிருக்கிறீர்கள்?
இந்தியாவில் நடப்பது ஜனநாயக அரசியல். மாற்றுகருத்துக்காக பண்ருட்டியாரை பாமகவினர் கொன்றுவிடவில்லை.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் பு.ஜ. விற்றுக் கொண்டிருந்த இரண்டு தோழர்களை சூழ்ந்து கொண்ட பா.ம.க.காரர்கள் சிலர் இதழ்களைப் பிடுங்கி கிழித்து வீசினர். வேறு சிலரோ தோழர்களின் விளக்கத்துக்குப் பிறகு இதழ்களை வாங்கிச் சென்றனர்.
இருக்கட்டும். துப்பாக்கியாலா மக இகவினரை சுட்டுத்தள்ளினார்கள்? இல்லை அல்லவா? பிறகென்ன? அவர்கள் தங்கள் எதிர்ப்புணர்வை ஜனநாயக முறையில் காட்டுகிறார்கள். அவ்வளவுதானே?
இப்போது, பா.ம.க. "பசுமைத் தாயக'த்தின் நிர்வாகிகள் என்று கூறிக் கொண்டு ""புதிய ஜனநாயகம்'' தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு உருட்டுவதும், புலம்புவதும், மிரட்டுவதும் வசவுபாடுவதுமாக உள்ளனர்.
""எங்க அய்யாவைப் பத்தி என்னய்யா இப்படி அநாகரிகமாக எழுதியிருக்கீங்க? பத்திரிகைன்னா என்ன வேணாலும் எழுதறதா? மத்த கட்சிக்காரனெல்லாம் பண்ணாததையா எங்கய்யா பண்ணிட்டாரு? எங்க அய்யாவை மட்டும் ஏன் எழுதற? எல்லா விசயத்திலும் மக்களுக்காக எங்கய்யாதான் போராடிக்கிட்டு இருக்காரு, முன்மாதிரியா தொலைக்காட்சி கூட எப்படி நடத்தலாம்னு நடத்திக் காண்பிக்கிறாரு, அவரப்பத்தி இப்படி இழிவுபடுத்தி எழுதலாமா?''
இவர்களில் யாருமே அரசியலுக்காக பா.ம.க.வில் உள்ளவர்கள் அல்ல; பிழைப்புக்காக அக்கட்சியில் இருப்பவர்கள் என்பது அவர்கள் எழுப்பும் கேள்விகளில் இருந்தே தெரிகிறது. ""எங்கய்யாவைப் பச்சோந்தின்னு எப்படி எழுதலாம்? மத்த கட்சிக்காரனெல்லாம் யோக்கியமா? ஏன் எங்கய்யாவை மட்டும் எழுதற? பொன்முடிகிட்ட தி.மு.க. கிட்ட "சூட்கேசு' வாங்கிக் கிட்டுதானே இப்படி எழுதறே? நேத்து வந்த விஜயகாந்த் எல்லாம் கனவு காண்றப்ப மக்களுக்காக உயிரைக் கொடுத்துப் போராடுற எங்கய்யா கனவு காணக்கூடாதா?'' என்றவாறான இந்தக் கேள்விகளில் எங்காவது அரசியல் இருக்கிறதா? எல்லா ஓட்டுக் கட்சிகளைப் போலத்தான் பா.ம.க.வும் என்று இவர்களின் வாக்குமூலமே அக்கட்சி மற்றும் தலைமையின் யோக்கியதையை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது.
அடங்கொய்யாலே! பிழைப்புக்காக கட்சியில் இருப்பது சரியானதுதானே? நம் பிழைப்புக்காகவும், நமது மக்கள் பிழைக்கவும் கட்சியில் இருப்பது எப்படி தவறாகும்? அதுதானே அரசியல்? நாமும் நம் மக்களும், இந்திய மக்களும் தமிழக மக்களும் நன்றாக பிழைக்கவேண்டும் என்று தானே எல்லா அரசியலும் நடக்கிறது?
உங்கள் கருத்து என்ன? அரசியலுக்காக கட்சியில் இருக்கவேண்டுமா? என்ன அரசியல் அது? எவனும் பிழைத்து இருக்கக்கூடாது என்ற அரசியலா?
இவர்களில் ""புதிய ஜனநாயகம்'' எழுதியுள்ள அரசியல் மீது எந்தக் கேள்வியும் எழுப்புவதற்கு யோக்கியதை உண்டா? நாடாளுமன்றத்துக்கு பா.ம.க. அனுப்பியுள்ள புதுவை எம்.பி.யான இராமதாசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஆதரித்து, வரவேற்று அங்கே பேசுகிறார். இங்கே இந்த "ஐயா' இராமதாசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்துப் பேசுகிறார். எது பா.ம.க.வின் நிலை? இதைப் புரிந்து கொள்ளும், கேள்வி கேட்கும் பா.ம.க.காரர்களைத்தாம் அரசியலுக்காக அக்கட்சியில் இருப்பவர்களாகக் கருதமுடியும். அப்படி இல்லாமல் வெறுமனே இராமதாசுக்குத் துதிபாடும் பிழைப்புவாதிகள்தாம் ""புதிய ஜனநாயகம்'' பத்திரிகையை உருட்டி, மிரட்டிப் பார்க்கிறார்கள்.
ஏன் இவர்களுக்கு யோக்கியதை இல்லை? இவர்களை விமர்சிக்க உங்களுக்கு என்ன யோக்கியதை? எவனுமே தனியே சிந்திக்கக்கூடாது. கருத்து வேறுபாடு கொண்டிருப்பவன் எல்லோருமே வர்க்க எதிரி (அதாவது கம்யூனிஸ்டு கட்சி எதிரி) என்று தீர்த்துக்கட்டுவதை கொள்கையாக வைத்திருக்கும் உங்களுக்கு ஜனநாயக முறைப்படி கருத்துக்களை பொதுவில் பேசி, இந்நாட்டு மன்னர்களான பொதுமக்கள் வீசும் வாக்குக்களை பொறுக்கி ஆட்சி நடத்தும் ஜனநாயக அரசிய்லவாதிகளையும் பொதுமக்களையும் விமர்சிக்க உங்களுக்கு என்ன அருகதை?
யார் இந்த இராமதாசு? பா.ம.க.வில் அவருக்கு என்ன பொறுப்பு? தனக்குக் கட்சியில் பதவி வேண்டாம் என்று தியாகியைப் போல நாடகமாடிக் கொண்டே, ஜெயலலிதாவைப் போல யாரோ எழுதித்தரும் அறிக்கைகளுக்கு கையெழுத்துப் போட்டு வெளியிடுவதைத் தவிர கட்சியில் எந்தப் பொறுப்பும் ஏற்காது, அடிமுதல் முடி வரை கட்சிப் பொறுப்பாளர்களை நியமிக்கவும், அவர்களின் விசுவாசத்தை சந்தேகித்தால் தூக்கியடிக்கவும் வாய்ப்புக் கிடைத்தால் அன்பு மகன், மனைவி, மருமகள், பேத்தி எல்லோருக்கும் ""பதவி'' வழங்குவதை யும் இவர்கள் கேள்வி கேட்கிறார்களா? ""பத்து நாட்களில் ரிலையன்சு கடைகளை மூடாவிட்டால் இழுத்துப் பூட்டுவோம்'' என்று இராமதாசால் எச்சரிக்கை விடப்பட்ட ரிலையன்சு ஃபிரெஷ் கடைகள் இன்னமும் திறந்தே கிடக்கிறது பா.ம.க வீரர்கள் அங்கே போவார்களா?
— ஆசிரியர் குழு
பாமகவில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா? நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமா?
பாமகவுக்கு ஓட்டுபோடுபவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா? நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமா?
இருப்பினும் ஏன் ஓட்டுப்போடுகிறார்கள். சற்றே சிந்தித்துப்பாருங்கள். தெரியும்.
அதே நேரத்தில், காஸ்ட்ரோவின் தம்பி கியூபாவின் தலைவரானது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்குமே. நீங்கள்தான் மாஸ்கோவில் மழை பெய்தால் மந்தைவெளியில் குடைபிடிக்கும் ஆசாமிகளாயிற்றே.
காஸ்ட்ரோவின் தம்பி ஏன் கியூபாவின் தலைவரானார்? அது தவறு என்று எங்காவது உங்களது அர்தபழசான கலாச்சாரத்தில் எழுதினீர்களா?
22 Comments:
What right do these commies have to denigrate the democratic leaders or voters?
yay..
Good question regarding Castro!
வன்னியர்களை திட்டி இங்கே எழுதப்பட்டிருந்த அபத்தமான மறுமொழி நீக்கப்பட்டுள்ளது
ஜனநாயகத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்த பதிவு எழுதப்பட்டிருந்தாலும், பா.ம.க கம்யூனிஸ்ட்டுகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. ஜாதி அரசியலை கையாளும் ஒரு கட்சியை, "பாசிசத்தின் ஒரு கூறு" என்ற வகையில் தான் அடையாளபடுத்தப்பட வேண்டும்.
காஸ்ட்ரோ குறித்தான தங்களது கேள்வி அருமை. இதற்கெல்லாம் பதில் வராது அவர்களிடம். இத்தனை வருட கம்யூனிச ஆட்சியில் இன்னுமா சோசியலிச சமுதாயத்தை காஸ்ட்ரோவால் உருவாக்க முடியவில்லை? சித்தாந்த கல்வியை ஊட்டி, அரசு அமைப்பை உதிர செய்யும் வித்தையை கியூபாவால் ஏன் செயல்படுத்த முடியவில்லை? கம்யூனிஸ்ட்டுகள் பதில் சொல்வார்களா?
நன்றி ஹரி,
//ஜாதி அரசியலை கையாளும் ஒரு கட்சியை, "பாசிசத்தின் ஒரு கூறு" என்ற வகையில் தான் அடையாளபடுத்தப்பட வேண்டும்.
//
கம்யூனிஸ்டுகள் பாஸிஸ்டுகள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், பாமக பாஸிஸ்டு கட்சி அல்ல.
அது வன்னியர்களது பிரதிநிதியாக தங்களை காட்டிக்கொண்டாலும், வன்னியரல்லாத மக்கள் மீது வெறுப்பையோ அல்லது வன்முறையையோ தங்கள் கொள்கையாக கொண்டிருக்கவில்லை.
ஒரு குழு தங்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டி அரசியலில் ஈடுபடுவது பாஸிஸம் அல்ல.
தமிழ்மணி
வடகொரிய கம்யூனிஸ்ட் கட்சியிலும் வாரிசு முறை இருக்கிறது.தாத்தா,மகன்,பேரன் என்று ஜனாதிபதி முறை அங்கே தொடர்கிறது.
கியூபாவை விட உண்மையான கம்யூனிசத்தை பேணும் நாடு வடகொரியாதான்.கம்யூனிஸ்டுகள் ஏனோ ரஷ்யா,சீனா,கியூபாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடகொரியாவையும், போல்பாட்டையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். படுகொலைகளில் ஸ்டாலின்,மாவோ ரேஞ்சுக்கு போல்பாட்டும்,கிம் டே ஜங்கும் வர முடியாதது ஒரு காரணமாக இருக்கலாம்:-)
பண்ருட்டியார் கதையை சொன்னதும் எனக்கு ஏனோ ட்ராட்ஸ்கி நினைவுக்கு வருகிறார்.அவரும் கட்சிமாறிதான்.அதுக்காக லெனின் அவரை கூலிப்படையை வைத்து போட்டுத் தள்ளிவிட்டார்:-)
நன்றி செல்வன்,
பாவம் இடதுசாரிகள்.
இப்படி ரவுண்டு கட்டி அடிக்கிறீர்களே.
//ஒரு குழு தங்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டி அரசியலில் ஈடுபடுவது பாஸிஸம் அல்ல.//
பாஸிசம் அல்ல என்பதுவரையில் உண்மைதான். ஆனால் இது ஒரு மோசமான முன்னுதாரணம். இவ்வாறு ஒவ்வொரு ஜாதியும் ஆரம்பித்தால் அது சரியாகுமா? ஜாதிகள் ஒழிய வேண்டிய நேரத்தில் ஜாதியின் பெயரால் அரசியல்வரை செல்வது கோட்பாட்டளவில் மிகவும் எதிர்க்கப்பட வேண்டியதாகும்.
இடதுசாரி கொள்கைகளை எதிர்க்கும் உங்கள் நிலைப்பாட்டின்படி பாமகவின் எல்லா கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ள முடியுமா? அக்கட்சியின் பெயரிலுள்ள பாட்டாளி என்ற பெயரே வர்க்க பேதத்தின் பலனை அடையவேண்டி என்பது என் கருத்து. வர்க்கங்களற்ற சூழலை உருவக்கும் வலதுசாரி சிந்தனையை அக்கட்சியின் கொள்கைகளிலும் செயல்பாட்டிலும் என்னால் அதிகமாகக் காண இயலவில்லை.
பாமக அன்பர்கள்(தமிழ்மணி உட்பட) என் புரிதலில் உள்ள குறைகளை சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.
தமிழ்மணி அய்யா,
பா ம க ஜாதி வெறி கும்பல் கல்லால் அல்ல,செருப்பால் அடிக்கப் பட வேண்டியவர்கள்;தி மு க/தி க ஜாதி வெறி கும்பலை துடப்பைக்கட்டயால் அடிக்காலாம்;ஆனால் இந்த ம க இ க என்னும்,பொறிக்கி கம்யூனிஸ கும்பலை கல்லால் அடித்து துரத்த வேண்டும்.தமிழக மக்கள் இதை செய்வார்களா?
பாலா
ஓகை,
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஒரு குழுவுக்கு ஆயிரக்கணக்கான வரைமுறைகள் இருக்கலாம். தமிழ்மொழியால் இணைபவர்கள், மதத்தால் இணைபவர்கள், இனத்தால் இணைபவர்கள் என்று ஆயிரக்கணக்கான வகையில் மக்கள் தங்களை சுய அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். அது சரியா தவறா என்ற வாதத்தை பிறகு வைத்துக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் தங்களை இவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள் அல்லது படுத்திக்கொள்ள வைக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதானே?
அப்படியிருக்கும்போது அந்த அடையாளத்தின் பேரில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று அவர்கள் நினைக்கும்போது அரசியல்ரீதியாக ஒருங்கிணைவது எப்படி தவறாகும்? இது ஒரு கலெக்டிவ் பார்கெயினிங். இது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு வழிமுறை.
தங்களுக்கு நீதி என்பது தாண்டி அவர்கள் மற்றவர்களை கொடுமைப்படுத்தவோ வன்முறையில் இறங்கி மற்றவர்களது உரிமைகளை மறுக்கவோ கிளம்பினால் அது தடுக்கப்பட வேண்டியது. அதில் மாற்றுக்கருத்து இல்லை.
பாமக முழுவதும் தம் குழுவினருக்காக மட்டும் என்று பாடுபடவில்லை என்பதை நாம் சிறிதாவது ஏற்க நேரிடும். அவர்கள் தலித்துகளை ஓரம் கட்ட முயல்கிறார்கள்- செயலளவில் என்று ஒரு கருத்தை தலித் இயக்கத்தினர் குற்றச் சாட்டாக முன்வைத்துக் கேட்டிருக்கிறேன். இது உண்மையா பொய்யா என்று களத்தில் இருப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். வன்னியர்கள் கோலோச்சும் பகுதிகளில் எனக்குப் பரிச்சயம் இல்லை.
அதே நேரம் தமிழரல்லாதவர்கள் மீதும், இதர இந்தியர் மீதும் பாமக வெறுப்பைக் காட்டுகிறது, தம் மொழி விசுவாசத்தை அவர்கள் மீது திணிக்க முயல்கிறது, அதை ஒரு காரணியாக முன்வைத்து தமிழகத்தில் இந்தியரை பிரஜை உரிமை இல்லாத இரண்டாம்தர மக்களாக்க முயல்கிறது என்று கூட நாம் சுட்ட முடியும். தனித் தமிழ் நாடு என்ற ஒரு இந்திய ஒருமையை எதிர்க்கும் அரசியல் கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் மதில் சுவரில் முளைத்த ஆலம் செடியாக வளர்ந்து இந்திய ஒருமை என்ற அரசியல் அமைப்பை (மதிலை) உடைக்கும் அபாயம் பெருகி வருகிறது. இந்த இந்திய எதிர்ப்பு அரசியலுக்கு பாமக உடந்தை என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையாயின் அதை நாம் எதிர்க்க வேண்டி இருக்கிறது.
எனக்கு என்ன புரியவில்லை என்றால் இந்தியாவை உடைக்க பெரிதும் ஆசைப்படும், இந்தியாவை அந்நிய ஏகாதிபத்தியத்துக்கு அடகு வைப்பதையே தம் முழு முதல் கடமையாக நினைத்து சீனாவின் தலைவருக்கு பாதுகா பூசை செய்யும் மாவோயிசங்கள் பாமகவினருக்குக் கும்பிடு போட்டு மாலையிட்டு தழுவிக் கொள்ளாமல் ஏன் வசவு மாலை போடுகிறார்கள் என்பதுதான். என் எதிரியின் எதிரி என் நண்பன் என்ற கணக்கில் பாமக, தனித் தமிழ் நாட்டு டெர்ரரிஸ்டுகள், தீவிர திராவிட இயக்க வெறியர்கள், அராபிய ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான இஸ்லாமிஸ்டுகள், மேற்கின் ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான எவாங்கலியர்கள் ஆகியோருடன் மக இக உடன்படிக்கைதானே போட வேண்டும் ஏன் எதிர் கட்சி போல நடிக்கிறார்கள்?
ஒரு வேளை நான் அடிப்பது போல அடிக்கிறேன், நீ அழுவது போல அழு, மக்கள் ஏமாந்தால் இருவருமாகச் சேர்ந்து மக்களுக்குத் திருப்பதி மொட்டை, தவறு சீன மொட்டை போடலாம் என்று கணக்கா? அல்லது வழக்கம் போல கூட்டுக் களவாணிகளிடையே ஏதும் அரசியல் கொள்ளை பிரிப்பில் பங்குச் சண்டையா?
தமிழ்மணி அதை ஆராய்ந்தால் ஏதும் பலன் கிட்டும்.
அனானி-2
செல்வன் சொன்னதில் ஒரு தகவல் பிழை உள்ளது. ட்ராட்ஸ்கிக்கு லெனின் இருந்த வரை ஓரளவு மரியாதை இருந்தது. லெனின் சாவதற்கு சிறிது முன் ஒரு கட்டத்தில் ட்ராட்ஸ்கி கடும் நடவடிக்கை ஒன்றை எடுக்க கட்சியை (அதான் வேறு என்ன, லெனின் என்ற சர்வாதிகாரியை, கட்சி என்பது சும்மா ஒரு ஜோடனைதானே? உள்ளே பொலிட்பீரோவில் இருந்த 10 ஜால்ராக்கள் என்ன கட்சியா? ) ஊக்குவிக்க முயன்றபோது லெனின் ட்ராட்ஸ்கியைப் போட்டுக் கொடுத்து தாம் தாராளமனதுள்ளவர், மக்களுடைய சார்பில் நிற்பவர் என்பது போல ஒரு முடிவை எழுதினார். ட்ராட்ஸ்கிக்கு அப்போதே ஏதோ புரிந்திருக்க வேண்டும், ஆனால் சில கொள்கை வெறியர்களுக்கு, அதாவது தான் பிடித்த முயல் மூன்றேகாலுடையது என்று என்ன சான்று வைத்தாலும் ஏற்காத மூடர்களுக்கு, இந்த மாதிரி சின்ன கோடி காட்டல் எல்லாம் புரியாது. ஸ்டாலினுக்கோ படு குஷி.
இப்படி விரிந்த விரிசல் மரணப் படுக்கையில் இருந்த லெனினை ஸ்டாலின் அழகாக ஓரம் கட்டி யாரும் பார்க்க முடியாமல் ஆக்கி, பத்திரிகைகள் கூட லெனினுக்குக் கிட்டாமல் ஆக்கி, லெனின் தன் மனைவியை விட்டுத் தொலை பேசியில் கெஞ்சும்படி ஆக்கியபோது லெனினுக்குத் தெரிந்தது என்ன மடத்தனம் செய்து கம்யூனிஸ்டு கட்சிக்கே வேட்டு வைத்தோம் என்று. அதற்குள் வெள்ளம் அணையை உடைத்து, ஒரு கிரிமினல் ரஷ்ய மக்களின் எழுச்சியைத் தன் அதிகார வெறிக்குப் பலியாக்கிய நிகழ்ச்சி பேரியாவின் உதவியோடு அரங்கேறியாயிற்று. ட்ராட்ஸ்கியை ஓட ஓட விரட்டி மெக்சிகோவில் ஒரு கொலையாளியை வைத்துத் தலையில் கோடாலியால் வெட்டிக் கொல்லச் செய்த 'புண்ணியம்' ஸ்டாலினைச் சேரும், லெனினை அல்ல. லெனின் ஏதோ புனிதர் அல்ல. பல்லாயிரக்கணக்கான அப்பாவி ரஷ்யர்களின் படுகொலைக் கறை படிந்த கை, உடல், மூளை, ஆவி, அனைத்தும் லெனினுடையது. ஸ்டாலின் லெனினைப் போல ஒரு நூறு மடங்கு கூடுதலான மக்களைக் கொன்று குவித்த புல்லுருவி.
என்றாலும் பழியைச் சேரிடத்தில் சேர்க்கக் கோரி இந்தத் தகவல் திருத்தத்தை முன்வைக்கிறேன். வேடிக்கை என்னவென்றால், இந்த பஞ்ச மா பாதகர்களின் பெயரைச் சொல்லி இயக்கம் நடத்தும் கொலைவெறியர்கள் ஒரு சாதாரண மரம் வெட்டி பாதை மறியல் நடத்தும் குட்டி சர்வாதிகாரி மருத்துவரய்யாவை ஏதோ நியாயம் கேட்டு விமர்சனம் செய்வது போல நாடகம் நடத்துவதுதான்.
இவர்களிடம் முகம் பார்க்கும் கண்ணாடியே இருக்காது போலிருக்கிறது.
அனானி-2
நன்றி இரண்டாம் அனானி,
ட்ராட்ஸ்கி விஷயமும், ஸ்டாலினின் அராஜகங்களும், லெனினின் குரூரங்களும் மெத்தப்படித்த மூஞ்சூறு கம்யூனிஸ்டுகளுக்கு தெரியாமல் இருக்கமுடியாது.
ஆனால், தெரிந்திருந்தும், மனதறிந்து பொய் பேசி உத்தம வாரிசாக தங்களை காட்டிக்கொண்டு பம்மாத்து பண்ணும் இவர்கள் மிக மிக ஆபத்தானவர்கள்.
/எனக்கு என்ன புரியவில்லை என்றால் இந்தியாவை உடைக்க பெரிதும் ஆசைப்படும், இந்தியாவை அந்நிய ஏகாதிபத்தியத்துக்கு அடகு வைப்பதையே தம் முழு முதல் கடமையாக நினைத்து சீனாவின் தலைவருக்கு பாதுகா பூசை செய்யும் மாவோயிசங்கள் பாமகவினருக்குக் கும்பிடு போட்டு மாலையிட்டு தழுவிக் கொள்ளாமல் ஏன் வசவு மாலை போடுகிறார்கள் என்பதுதான்/
காரணம் ரொம்ப சிம்பிள்.
புரட்சிக்கு ஆள்பிடிக்கத்தான் பாமக, திமுக, திக என ஒருத்தர் விடாமல் திட்டுகிறார்கள்.இந்த கட்சிகளின் அடிப்படை கொள்கையை அவர்களை விட தீவிரத்துடன் பேசியாகிவிட்டது.ஆட்சியில் இருப்பதால் அவர்களால் வெட்டுவேன்,குத்துவேன் என்று பேசமுடியாது.இவர்களுக்கு அப்படி எல்லாம் பிரச்சனை எதுவும் கிடையாது.எதை வேண்டுமானாலும் பேசலாம்.என்ன வாக்குறுதி வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
திராவிட கட்சிகளின் கொள்கைகளை அவர்களுக்கு மேல் தீவிரமாக வெட்டுவேன் குத்துவேன் என பேசி அதை ஆட்சியில் இருக்கும் அந்த கட்சிகள் கண்டிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தி,அந்த கண்டனத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, அந்த கட்சிகளில் உள்ள தீவிர உறுப்பினர்களை புரட்சிக்கு ஆதரவாக இழுப்பது தான் டெக்னிக்.
பெரியார் சிலை உடைப்பின்போது திமுக கைவிட்ட பூணூல் அறுப்பை ம.க.இ.கவினர்
கையில் எடுத்து ஆட்சியில் இருக்கும் திமுகவை அதை கண்டிக்க வைத்து திமுக அனுதாபிகளிடம் ஆதரவு பெற்றர்கள் அல்லவா?அது இந்த டெக்னிக்கை பயன்படுத்தித்தான்
If u say u won't call PMK as a fascist stance, I would wish to recollect its claim for "Vanniya Desam". Also I would wish to recall their stance on Harijan's. recently Mr.Krishnaswamy spoke abt this in an interview with a blogger.
/*அடையாளத்தின் பேரில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று அவர்கள் நினைக்கும்போது அரசியல்ரீதியாக ஒருங்கிணைவது எப்படி தவறாகும்? இது ஒரு கலெக்டிவ் பார்கெயினிங். இது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு வழிமுறை.*/
post-modernism talks abt it, "identity politics". But now-a-days it is not been accepted to follow such a way of politics, as It is evident that these type of politics have led to Fascism.
நன்றி விக்ரம்.
கூர்மையான பதில்.
=
நன்றி ஹரி,
நான் முன்னமே எழுதியதுபோல அவர்களுக்கு நீதிக்காக ஒருங்கிணைவது என்னைப்பொறுத்தமட்டில் தவறல்ல.
அதுவே மற்றவர்கள் மீது வன்முறையாகவும் ஒடுக்குமுறையாகவும் ஆகும் எனில் அது எதிர்க்கப்பட்டவேண்டியது.
இதனை அசுரன் பதிவில் மறுமொழியாக எழுதினேன்.
அவர் அனுமதிக்கவில்லை.
பாவம் விட்ருங்கய்யா. ஏதோ சீனாக்காரன் கொடுக்கிற காசுக்கு பாலிடிக்ஸ் பண்ணிகிட்டிருக்கானுங்க்.
அவன் பொழப்புல மண்ண போடறீங்களே.
'ஓட்டுப் பொறுக்கி அரசியல்' என்று வசைபாடும் மா.க.இ.காவினர், பர்மா, சவுதி அரேபியா, வட கொரியா போன்ற நாடுகளில் வாழ நேர்ந்தால் ? ! ; அங்கு ஓட்டுப்பொறுக்கி அரசியலே கிடையாது. காரணம் தேர்தலே இல்லை. கடுமையான
சர்வாதிகார ஆட்சி. இப்படி எல்லாம் பிரச்சாரம் செய்தால், உள்ள தள்ளி நல்லா 'கவனிப்பாங்க' ; ஜனனாயகத்தின் அருமை புரியவில்லை இவர்களுக்கு..
நன்றி அதியமான்,
ஜனநாயகம் இருப்பதால்தான் தங்களால் புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் என்று சர்வாதிகாரத்துக்கு பிரச்சாரம் செய்ய முடிகிறது என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
கருத்து சுதந்திரத்துக்காக குரல் கொடுத்த பெரியாரை, கருத்து சுதந்திரத்தை நசுக்குவதற்கு அவர்கள் உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள் அல்லவா?
அது போலத்தான் இதுவும்.
குரூரமான சிந்தனை இவர்களுக்கு.
Post a Comment