Anonym said...
அசுரன் சொன்னது இது:
//முதல் விசயம், மனிதர்களிடையே வேறுபாடு இருந்திருக்குமா? இருந்திருக்கலாம். ஆனால் இங்கு புரதான கம்யுனிச சமூகம் என்ற அம்சத்தில் நாம் குறிப்பிடும் விசயம் இவர்கள் சொல்கின்ற வேறுபாடுகள் அல்ல. ஒரு புரதான பொதுவுடைமை சமூக கூட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினனும் கிட்டத்தட்ட ஒரே விதமான உடல், அறிவு பலமே கொண்டிருப்பர். பெரிய வேறுபாடெல்லாம் வெளி தெரிந்திருக்கக் கூடிய அளவு அங்கு நவீனமான உற்பத்தியோ வேறு நடவடிக்கைகளோ கிடையாது என்கிற போது இவர்கள் குறிப்பிடுகிற வேறுபாடுகள் குறித்த கேள்விக்கே இடமில்லை. இதே விசயம் நவீன விஞ்ஞான பொதுவுடைமை சமுதாயத்தில் எப்படி இருக்கும் என்பதை தனியாக பார்க்கலாம். புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை அப்படியே பயன்படுத்திக் கொள்வதும், வேட்டைத் திறன், இயற்கை குறித்த அறிவு உள்ளிட்டதும் மட்டுமே அங்கு அவர்களிடையே ஏற்படுத்தும் வேறுபாடு. இதுவும் பிரதானமாக அனுபவம் சார்ந்தது.//
_________________________________
என் பதில்:
பழைய அனானிக்கு நாகரிகமாகச் சர்ச்சை செய்தால்தான் பிடிக்கிறது. ஆனால் அசுரனுக்கோ வசவுகள் இல்லாமல் சர்ச்சை செய்வது பிடிப்பதில்லை. பழைய இந்திய வாத முறைகளில் எதிராளி மனம் நோகாமல், அதுவும் அவர்களுடைய முறையையே பின்பற்றி வாதிட வேண்டும் என்று சொன்னதாகப் படித்திருக்கிறேன். அசுரன் முறையில் அசுரனுடன் வாதிடுவதுதான் அவருக்கு மிகப் பிடிக்கும் என்பதால் கீழ்க்கண்ட பதிவை ஒரு விதமாக மிகத் துன்பப்பட்டு அவர் விரும்பும் முறையிலேயே எழுதி இருக்கிறேன். என்றாலும் அசுரன் போல வசவுகளை அள்ளி வீச எளிதில் கை வரமாட்டேனென்கிறது. இன்னும் கொஞ்சம் அவர் எழுதியதைப் படித்தால் தேறி விடுவேனோ என்னவோ. நான் இங்கே எழுதியதைப் படித்து நீங்களெல்லாம் பாஸ் மார்க் போடுவீர்கள் என்று நம்புகிறேன். அசுரனின் அளவு திறமை ஒரே எட்டில் வராதுதான். இப்படித் தொடர்ந்து எழுதினால் அவரளவு எழுத வருமா என்று பார்க்கலாம் என்றுதான்! :)
பொதுவாக எல்லாம் தெரிந்த, தன்னைத் தவிர வேறெவனுக்கும் எதுவும் தெரியாது என்ற குரலில் பேசுவதே அசுரனின் பாணி. மனிதன் எப்போதும் பாடம் நடத்தியே காலம் கழிக்கிறார் போலிருக்கிறது. நாமானால் படித்ததெல்லாம் போதும்னுதானே ஓடிப் போயிருக்கோம். இவரானா பண்டை சமுதாயம், எதிர்கால சமுதாயம்னுட்டு உயிர வாங்குறாரு. இப்ப சும்மா வார்த்தையால பின்னி எடுக்கிறாரு, பின்னாடி பதவியில் உட்கார்ந்தவுடன் நெஜமாகவே பின்னி எடுப்பார் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் இப்போதே கொஞ்சம் மரியாதை கொடுத்துப் பேசுகிறேன்.
இருந்தாலும் அசுரன் எழுதுவதைப் படித்துக் கொண்டே இருந்தால் எனக்கும் அவரே போல எழுத வந்து விடுமோ என்னவோ!
அசுரன் சொன்னதில் இருந்து சிலதை எல்லாம் எடுத்து, ஏற்கனவே தமிழ் மணி பதில் சொல்லி இருக்கிறார். தமிழ்மணி வார்த்தைச் சிக்கனம் கடைப் பிடிப்பவர் என்று தோன்றுகிறது. சிறிது விளக்கமாகச் சொன்னால் என்ன ஆகி விடும்? பேசினால் கூட அளந்துதான் பேசுவாரா என்று தெரியவில்லை. ஜெர்மனியில் இருந்தால் அப்படித்தான் கணக்குப் பார்த்துப் பேசத் தோன்றுமோ என்னவோ. தமிழ் நாட்டு வழக்கப்படி வளவளவென்று எழுதுவது எனக்குப் பிடிக்கும். அதனால் அசுரனைப் பிரதி எடுக்க முயல்கிறேன்.
எனக்கு என்ன சந்தேகம் வந்ததென்றால், புராதனப் பொதுவுடைமை சமுதாயத்துக்கு அசுரன் எப்படிப் போனார் என்றுதான். ஒரு வேளை, இந்த பைபிளில் வருமே ஆதாமுடைய சந்ததிகள் முதல் கட்ட வாரிசுகள் எல்லாம் பல நூறு வருடங்கள் இருந்தாரென்று, அது போல ஒரு மனிதரா இவர் என்று ஒரு சந்தேகம். பேச்சிலேயிருந்து பார்த்தால், அசுரன் பைபிளுக்கும் முந்தைய மனிதர் என்பது தெரிகிறது. ஒரு விதத்தில் அதைக் கேட்க நன்றாக இருக்கிறது.
என்னதான் காலனி ஆதிக்க காலத்து வெள்ளையர் கருத்தியலுக்குக் கொடி பிடித்தாலும், அவரே சொல்கிற மாதிரி அதன் விளைவாகச் சொந்த செலவில் தன் மக்களுக்கே வேட்டு வைக்கிற அரசியலைக் கடைப் பிடித்தாலும், குறைந்தது தன் மூலக் கருத்துகளெல்லாம் விவிலிய நூலில் இருந்துதான் வருகிறது என்று பூடகமாக ஒத்துக் கொள்கிறார் பாருங்கள், அந்த நாசூக்கு பிரமாதம். தமிழ்மணிக்கு இதெல்லாம் ஏன் புரிய மாட்டேனென்கிறது? எனக்கே புரிகிறதே?
(ஆமாம் அசுரன் சூனியம் வைக்கிறது என்று தொடர்ந்து எழுதுகிறாரே, இவரோ பகுத்தறிவாளர், ஏன் சூனியத்தில் அத்தனை பிடிப்பு, நம்பிக்கை இருக்கிறது இவருக்கு? ஒரு வேளை இவர் இன்று 'நம்புகிற' மார்க்சிய விவிலியம் இன்னும் உள்ளே நெடுங்காலமாக இருக்கும் பழங்குடி நம்பிக்கைகளை அழித்து விடவில்லையோ? அதிலும் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது என்பது இவருக்கு மிகவுமே பிடிக்கும் போலிருக்கிறது. அடிக்கடி எதிராளிகளைத் தாக்க அதைப் பயன்படுத்துகிறார். ஒரு புறம் பார்த்தால் அது விசித்திரமாகத்தான் இருக்கிறது. எதிராளியின் அழிவில் மகிழும் இவருக்கு, அவர் தன் செலவிலேயே தன்னை அழித்துக் கொள்வது என்பது இன்னமும் கூடுதலாகவே பிடிக்கும் போலிருக்கிறது.
மற்றவரைத் தாக்கி அழிப்பதில்தானே வீரம், போராட்டம் எல்லாம் இருக்கிறது என்பார்கள் மார்க்சியர்கள், இவரானால் எதிராளி தன்னைத் தானே அழிப்பதைப் பாராட்டுகிறாரே, இது வேறு மார்க்சியமா என்று யோசித்தேன். பின்னால் மார்க்சியம் கிருத்தவம், இஸ்லாம் மாதிரி எந்தப் பிளவுமே இல்லாத ஒரே நம்பிக்கை உள்ள மதம் என்று என் மரமண்டையில் கருத்து வெளிச்சம் பரவியது. அதனால் இவர் சொல்வதும் மார்க்சின் விவிலிய நூல் கருத்துதான், ஆனால் இவர் ரொம்ப அட்வான்ஸ்ட் மார்க்சியம் போலிருக்கிறது, மற்றவர் தம்மைத் தாமே அழிக்கக் காத்திருந்து கை மாத்திரம் கொட்டுவாராக்கும்! ஓ, புரிகிறது. உலக மார்க்சியர் எல்லாருமே போராட்டப் புருடாவை எல்லாம் விட்டு விட்டு உலக முதலியம் இதோ அழிய இருக்கிறது, நாளை சோசலிசப் புரட்சி வருகிறது என்று பைபிள் பிரச்சாரகர்கள் மாதிரி நாளைக்காகக் காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள் இல்லையா, அதே கோஷ்டியில் இவரும் சேர்ந்திருப்பார் போலிருக்கிறது. )
5000- 10,000 வருடம் வாழ்ந்திருப்பார் போலிருக்கிறது. மனிதர் தன் வாழ்ந்த அனுபவத்தைப் பிட்டுப் பிட்டு வைக்கிறார். பொதுவுடைமை சமுதாயத்தில் யாருக்கும் உடல் வலுவில் கூட வேறுபாடெல்லாம் இராது என்று.
யப்பா, என்ன விரிவான உடற்கூறியல் அறிவு இவருக்கு! விவிலிய நூலில் ஆதாம் என்ற ஒற்றை மனிதனின் சந்ததியாகப் பிறந்தவருக்குக் கூட பல விதமான உடல், அறிவு வேறுபாட்டுடன் சந்ததியர் வந்தார்கள் என்று ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதே விவிலிய நூல், டோரா கருத்தியலில் பிறந்த அதே மாதிரி கனவுச் சமுகங்களில் தன் அறிவை நட்டு வைத்துக் கொண்டிருக்கும் மார்க்சிய விவிலியத்திற்கு ஒரு புதுமாதிரி விளக்கம் சொல்கிறார் இவர். என்ன ஆழம், என்ன கூர்மை, உண்மையிலேயே மூச்சு முட்டுகிறது.
இந்தத் தமிழ் மணியானால் பிறக்கும்போதே கருப்புச் சட்டை போட்டுப் பிறந்திருப்பார் போலிருக்கிறது- எல்லாத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார். ஏனையா, அவர்தான் 10000 வருடம் வாழ்ந்து அனுபவத்தில் பழுத்த பலா, சாரி, மனிதர்- சொல்கிறார். கை கட்டிக் கேட்டுக் கொண்டால் உங்களுக்கு என்ன வந்தது?
பெயரை வேறு எல்லா புராணங்களுக்கும் முந்தைய கால மனிதன் என்று தெரியும் படி வைத்துக் கொண்டிருக்கிறார். இதை விட என்ன ப்ரூப் (proof) வேண்டுமாம்? இந்தியாவுக்கே ஆதி மனிதரின் குடியில் வந்தவர் என்பதை இதை விடத் தெளிவாக உமக்கு எப்படிச் சொல்ல முடியும். அசுரனின் அறிவியல் முறைப்படி, அவர் சொல்லி விட்டால், அதுதான் இறுதி ஆதாரம் இல்லையா? எனவே இந்தியாவின் முதல் குடியில் பிறந்து பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து அனைத்தையும் பார்த்த அனுபவத்தை அறிவியல் பூர்வமாகச் சொல்கிறார்.
இதை ஏற்காமல் புராதனப் பொதுவுடைமை சமுதாயமே கிடையாது என்று வாதிடுகிறீர்.
அவர்தான் சொல்கிறாரே, உடைமை என்றெல்லாம் ஏதுமே இல்லாத சமுதாயம் அது என்று. குரங்குக்கு அடுத்த கட்ட சமுதாயம் இல்லையா, அதைச் சொல்கிறார். அது அதில் ஆடை கூட இருந்திருக்குமா என்று தெரியவில்லை கல், கம்பு ஆகியனதான் கருவி, ஆயுதம். இதில் என்ன உடைமை பாழாகப் போகிறது? உற்பத்தி என்பதே கிடையாது என்று தெளிவாகச் சொல்கிறார் அது போதாதா? சரி, பெரிய குரங்கு, தலைமைக் குரங்கு, சண்டை போடுகிற குரங்கு, வெறி பிடித்த குரங்கு, ஓடி ஒளியும் குரங்கு, கோழைக் குரங்கு, அமைதியான குரங்கு, ஆண் குரங்கு, பெண் குரங்கு, இளம் குரங்கு, கிழக் குரங்கு, சொறி பிடித்த குரங்கு, வியாதி வந்த குரங்கு, நொண்டிக் குரங்கு, சண்டிக் குரங்கு, கூட்டுச் சமுதாயக் குரங்கு, தனியாகச் சிலம்பம் சுற்றும் குரங்கு, பெண் பித்துக் குரங்கு, பெண்ணைக் கண்டாலே பிடிக்காது ஆணையே நாடும் குரங்கு என்றெல்லாம் குரங்குகளிடையே ஏதும் வேறுபாடு உண்டா ஐயா என்று கேட்க ஆரம்பிக்காதீர்? முன்னமே சோல்லி விடுகிறேன்.
'அடிப்படை அறிவு கூட இல்லாது பேசுகிறீரே?' என்று அசுரன் கேட்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. திரும்பத் திரும்பவா சொல்வது ஒரு விசயத்தை? அதுவும் அசுரன் எது சொன்னாலும் அது அடிப்படை வாதமாகத்தானே இருக்கும், இன்னமுமா புரியவில்லை?
அசுரனின் இயற்கை பற்றிய அறிவு எத்தனை ஆழமான வேரோடியது? 10,000 ஆண்டு- என்ன ஆயிற்று எனக்கு-10,000 என்ன 10,000? 30,000 ஆண்டுகளாவது இருக்காது?- நுட்ப அறிவை இப்படியா குறைத்து மதிப்பிடுவது?
அவர் குரங்குகள் சிரஞ்சீவியாக வாழ்ந்த தங்கக் குரங்கு காலத்தைச் சொல்கிறாரென்று நினைக்கிறேன். அதுதான் அவருடைய ஹீரோ மாவோ மெச்சினாரே தங்கக் குரங்கு அதைச் சொல்கிறாராயிருக்கும். தங்கக் குரங்குகள் நடுவே ஏது வசதி அல்லது வலிமை வேறுபாடு. ஒரு தங்கக் குரங்கைப் பார்த்தால் இன்னொன்று அதே போலத்தானே இருக்கும்.
அடுத்து, இது ஏதோ அனுமார் கதை போலிருக்கிறதே, அவதாரம், மாயாஜாலம் என்று பார்ப்பினியம்தானே ஜிகினா சுற்றும், மாவோவும் ஜிகினா சுற்றினாரா என்று தமிழ் மணி கேட்காமல் இருந்தால் நல்லது.
மாவோவும் அனுமாரைத்தான் உபாசனை செய்தாரா என்று கேட்க மாட்டீர் என்று நினைக்கிறேன். கருப்பு சட்டைக்குத்தான் ‘பார்ப்பினியம்’ கட்டிய புராணக் கதைகள் பிடிக்காதே? அதனால் கருப்பு சட்டையைத் தன் சிவப்பு சட்டைக்குள்ளே பத்திரமாகப் போட்டிருக்கும் அசுரனுக்கும் அனுமாரைப் பிடிக்க வாய்ப்பில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கும் ‘பார்ப்பினியம்’ என்றாலே வாந்தி வரும். ஆனால் தங்கக் குரங்குக்கு அவர் மறுப்பு சொல்ல மாட்டார். மாவோவே புகழ் பாடி இருப்பதால் அது உண்மையாகத்தான் இருக்கும். சீனாவின் பொலிட்பீரோவில் இருக்கும் பார்ப்பனர்கள் மஞ்சள்தோல் பார்ப்பனர்கள். கறுப்புத் தோல் பார்ப்பனரும், இந்தியப் பார்ப்பனரும்தான் கைபர் கணவாய் வழியே துரத்தப் பட வேண்டியவர். சீனாவின் புதுப் பார்ப்பனரை அசுரன் ஆரத்தி, பூமாலை எல்லாம் போட்டு வரவேற்று சிம்மாதனத்தில் அமர்த்தி அழகு பார்ப்பார்.
ஏதோ, தமிழ்மணி அய்யா, நான் இந்த அசுரன் கட்சியில் போய்ச் சேரலாம் என்று இருக்கிறேன். அவர் சொல்லும் ஒவ்வொரு மேதையும் தாமாக யோசித்து வெளி உலகின் மோசமான தாக்கம் ஏதும் இல்லாமல் தான் நம்புவதை மாத்திரம் உண்மை என்று உறுதியாக நம்பும் ‘கொள்கைப் பிடிப்பும்’ தீவிரப் பற்றும் கொண்டு விளங்குவது எனக்குப் பிடிக்கிறது. அந்தக் கட்சியில் இருந்தால் நானும் எனக்கு உறுதியாகத் தோன்றுவதை எல்லாம், மார்க்சு, லெனினு, மாவோவு எல்லாம் சொன்னாங்க என்று சொல்லி விட்டு அதுதான் அறிவியல் உண்மை என்றும் அறிவித்து விடலாம். ராமர் பெட்ரோல் போலத்தான் மாவோயிசம், மார்க்சியம் என்று இப்போது எனக்குத் தெளிவாயிற்று.
நீங்களும் வந்து மாதக் கப்பம் கட்டினால் பின்னால் ஏதோ மாவட்டச் செயலாளர் பதவியாவது கொடுப்பார்கள். முந்திக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சொல்வேன். அப்புறம் சீனாக்காரங்க வந்து ஆட்சியில் அமர்ந்த பிறகு வங்காளிங்க, கேரளாக்காரங்க, அப்புறம் அசுரன் மாதிரி அட்வான்ஸ்ட் மார்க்சியம் பேசுறவங்கதான் எல்லா பதவிலெயும் இருப்பாங்க. இடம் கெடக்காமப் போயிரும். சீட்ல துண்டாவது போட்டு வையுங்க. கேள்வி எல்லாம் கேட்டுகிட்டே இருக்காதீங்க. அவ்வளவுதான். அடுத்த தடவை உறுப்பினர் ஃபாரம் எங்க கெடக்கும்னு கேட்கலாமா என்றுயோசிக்கிறேன். நீங்கள் ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தா சொல்லுங்க. ஒரு வேளை இந்தக் குரான் கட்சிதான் ஜெயிக்கும்னுட்டு சொல்லுவீங்களோ?
அனானி-2
-
(நீண்டமான சுவாரஸ்யமான ஏராளமான விஷயங்களுடன் உள்ள இந்த பதிலை தனி பதிவாக ஆக்குகிறேன். என்னையும் அங்கங்கே கலாய்த்திருக்கிறார்.)
8 Comments:
I wish to contact u. Can u provide me ur mail id?
or can u contact me at harivenkatram@gmail.com
அவர்தான் அனானியாயிற்றே, அவரது ஈமெயிலை எப்படி தருவார் ?
:-D
Thamizmani, it was for u, not for the anony. once again, Can u provide me ur mail id?
or can u contact me at harivenkatram@gmail.com
விவாதிப்பதை பொதுவிலேயே விவாதிக்கலாமே?
ஒரு சில கருத்துக்களை பொதுவில் வைத்தால் அது நடைபெறும் விவாதத்தை திசை திருப்ப கூடியாதாக இருக்கிறது. மேலும், கருத்து பரிமாற்றத்திற்க்கும் ,விவாதத்திற்க்கும் இருக்கும் மெல்லிய இடைவெளியை இது போன்ற வலைபூக்கள் பெரும்பாலும் உறுதிபடுத்துவதில்லை. அதனால் தான் தனி அஞ்சல் குறித்து பேசினேன்.
It's ok. Still I have no probs in keeping my points here. Thanks
தமிழ்மணி.. விவாதத்துக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்... பொதுவுடைமை நல்லதோ கெட்டதோ.. சாத்தியமோ இல்லையோ.. ஆரோக்கியமான விவாதங்களின் மூலம் நிறைய புதிய விஷயங்கள் அறிய முடிகிறது..
தோழர்கள் அசுரன், ஜமாலன், செல்லா, தியாகு மற்றும் விவாதிக்கும் அனானிகள் உட்பட அனைவருக்கும் நன்றிகள்..
நன்றி மாயன்,
படிக்கும் வாசகர்களும் இந்த விவாதத்தில் தங்கள் கருத்துக்களை கூறுவது, நலமாகவே இருக்கும்.
எனது தவறுகள் ஏதேனும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.
தவறெனில் திருத்திக்கொள்கிறேன்
நன்றி
என்ன ஆச்சு?
விவாதத்துக்கு வா ரிவிட்டு அடிக்கிறேன் என்று வீராப்பு பேசியவர்கள் எங்கே?
Post a Comment