கீழ்க்கண்டவாறு மக இக தலைமை ஆசிரியர் குழு எழுதியதை நண்பர் அசுரன் மறுபதிப்பு செய்திருக்கிறார்.
அதன் விமரிசனம் இங்கே எழுதப்படுகிறது
பாமக பச்சோந்தியும் சில 'கூஜா'க்களும்!!
ஒரு பச்சோந்தியும் சில 'கூஜா'க்களும்
உருட்டல் - மிரட்டலால் உண்மையை மறைக்க முடியுமா?
""அடுத்த தேர்தலில் ஆட்சி: பச்சோந்தி இராமதாசின் பகல் கனவு''
அவராவது அடுத்த தேர்தலில் ஆட்சி என்று பகல்கனவு காண்கிறார். அல்லது திட்டம் போடுகிறார். அதனை பகல்கனவு என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் கனவு காணும் புரட்சி மட்டும் பகல் கனவு இல்லையா?
என்ற தலைப்பில் ""புதிய ஜனநாயகம்'' ஆகஸ்டு இதழில் அட்டைப்படச் சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கு, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நல்ல வரவேற்பு இருந்தது. ""பாரபட்சமின்றி'' அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி வரும் ""புதிய ஜனநாயகம்'', பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் இராமதாசின் சந்தர்ப்பவாத, மோசடி அரசியலை உரிய நேரத்தில் உரிய வகையில் அம்பலப்படுத்தியிருப்பதாகப் பலரும் வரவேற்றுள்ளனர்.
அப்படியா? எத்தனை பேர்? உங்கள் பத்திரிக்கையை கூவி விற்றாலும் வாங்க ஆளில்லை. இதில் நீங்களாக கற்பனை செய்துகொள்வது "பலரும் வரவேற்றுள்ளனர்" என்று.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் என்ற ஊரில் இருந்து முரளி என்ற வாசகர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழக ஆட்சியாளரின் பச்சோந்தித்தனத்தை அம்பலப்படுத்தி வருவதற்கு மனமார்ந்த பாராட்டுதலைத் தெரிவித்திருக்கிறார்.
நம் ஊர் பத்திரிக்கைகளுக்காகவது வாசகர்கள் இருக்கிறார்கள். படித்துவிட்டு கருத்து எழுதுவார்கள். உங்கள் பத்திரிக்கைக்கு வாசகர்களே கிடையாதே. நீங்களே பாராட்டி நீங்களே எழுதிக்கொள்வதுவா?
ஆனால், இக்கருத்துக்கு நேர்மாறாக சென்னை வடபழனியில் இருந்து கி.ராம் (செட்டியார்) என்பவர், தன்னை ஒரு புதிய ஜனநாயகம் வாசகர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொண்டு மிகவும் கீழ்த்தரமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பு.ஜ. வாசகர் என்றும், ம.க.இ.க. காரன் என்று புளுகிக் கொண்டு வடபழனி கி.ராம் எழுதிய இந்தக் கடிதத்தைப் படித்ததும் ஒரு பழைய நினைவுதான் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், பண்ருட்டி இராமச்சந்திரன் பா.ம.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவராக இருந்தார். அப்போது அவரை விமர்சித்து எழுதியதற்காக, அப்போது இராமதாசு கட்சி நடத்தி வந்த ""தினப்புரட்சி'' நாளேட்டிலும், கடிதம் மூலமாகவும் ""புதிய ஜனநாயகம்'' பத்திரிக்கையாளரைக் கேவலமாக திட்டி எழுதியிருந்தனர். பு.ஜ. அதற்குப் பதிலடியும் எழுதியிருந்தது. பா.ம.க.வினரால் அன்று தாங்கிப் பிடிக்கப்பட்ட ""பண்ருட்டியார்'' பின்னர் என்ன ஆனார், பா.ம.க.வினராலேயே எவ்வளவு தூரம் வசைபாடப்பட்டார் என்பதும், அக்கட்சியினர் இப்போது மறந்து போன சங்கதி.
உண்மை என்றே வைத்துகொள்வோம். உங்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு உங்கள் கட்சியில் என்ன மரியாதை இருக்கும் என்று சொல்வீர்களா? லெனின் காலத்திலிருந்து மாவோ காலத்திலிருந்து, இந்திய கம்யூனிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் வரைக்கும், சொல்லடியாலும் துப்பாக்கியடியாலும் தானே மாற்றுக்கருத்தை வரவேற்றிருக்கிறீர்கள்?
இந்தியாவில் நடப்பது ஜனநாயக அரசியல். மாற்றுகருத்துக்காக பண்ருட்டியாரை பாமகவினர் கொன்றுவிடவில்லை.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் பு.ஜ. விற்றுக் கொண்டிருந்த இரண்டு தோழர்களை சூழ்ந்து கொண்ட பா.ம.க.காரர்கள் சிலர் இதழ்களைப் பிடுங்கி கிழித்து வீசினர். வேறு சிலரோ தோழர்களின் விளக்கத்துக்குப் பிறகு இதழ்களை வாங்கிச் சென்றனர்.
இருக்கட்டும். துப்பாக்கியாலா மக இகவினரை சுட்டுத்தள்ளினார்கள்? இல்லை அல்லவா? பிறகென்ன? அவர்கள் தங்கள் எதிர்ப்புணர்வை ஜனநாயக முறையில் காட்டுகிறார்கள். அவ்வளவுதானே?
இப்போது, பா.ம.க. "பசுமைத் தாயக'த்தின் நிர்வாகிகள் என்று கூறிக் கொண்டு ""புதிய ஜனநாயகம்'' தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு உருட்டுவதும், புலம்புவதும், மிரட்டுவதும் வசவுபாடுவதுமாக உள்ளனர்.
""எங்க அய்யாவைப் பத்தி என்னய்யா இப்படி அநாகரிகமாக எழுதியிருக்கீங்க? பத்திரிகைன்னா என்ன வேணாலும் எழுதறதா? மத்த கட்சிக்காரனெல்லாம் பண்ணாததையா எங்கய்யா பண்ணிட்டாரு? எங்க அய்யாவை மட்டும் ஏன் எழுதற? எல்லா விசயத்திலும் மக்களுக்காக எங்கய்யாதான் போராடிக்கிட்டு இருக்காரு, முன்மாதிரியா தொலைக்காட்சி கூட எப்படி நடத்தலாம்னு நடத்திக் காண்பிக்கிறாரு, அவரப்பத்தி இப்படி இழிவுபடுத்தி எழுதலாமா?''
இவர்களில் யாருமே அரசியலுக்காக பா.ம.க.வில் உள்ளவர்கள் அல்ல; பிழைப்புக்காக அக்கட்சியில் இருப்பவர்கள் என்பது அவர்கள் எழுப்பும் கேள்விகளில் இருந்தே தெரிகிறது. ""எங்கய்யாவைப் பச்சோந்தின்னு எப்படி எழுதலாம்? மத்த கட்சிக்காரனெல்லாம் யோக்கியமா? ஏன் எங்கய்யாவை மட்டும் எழுதற? பொன்முடிகிட்ட தி.மு.க. கிட்ட "சூட்கேசு' வாங்கிக் கிட்டுதானே இப்படி எழுதறே? நேத்து வந்த விஜயகாந்த் எல்லாம் கனவு காண்றப்ப மக்களுக்காக உயிரைக் கொடுத்துப் போராடுற எங்கய்யா கனவு காணக்கூடாதா?'' என்றவாறான இந்தக் கேள்விகளில் எங்காவது அரசியல் இருக்கிறதா? எல்லா ஓட்டுக் கட்சிகளைப் போலத்தான் பா.ம.க.வும் என்று இவர்களின் வாக்குமூலமே அக்கட்சி மற்றும் தலைமையின் யோக்கியதையை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது.
அடங்கொய்யாலே! பிழைப்புக்காக கட்சியில் இருப்பது சரியானதுதானே? நம் பிழைப்புக்காகவும், நமது மக்கள் பிழைக்கவும் கட்சியில் இருப்பது எப்படி தவறாகும்? அதுதானே அரசியல்? நாமும் நம் மக்களும், இந்திய மக்களும் தமிழக மக்களும் நன்றாக பிழைக்கவேண்டும் என்று தானே எல்லா அரசியலும் நடக்கிறது?
உங்கள் கருத்து என்ன? அரசியலுக்காக கட்சியில் இருக்கவேண்டுமா? என்ன அரசியல் அது? எவனும் பிழைத்து இருக்கக்கூடாது என்ற அரசியலா?
இவர்களில் ""புதிய ஜனநாயகம்'' எழுதியுள்ள அரசியல் மீது எந்தக் கேள்வியும் எழுப்புவதற்கு யோக்கியதை உண்டா? நாடாளுமன்றத்துக்கு பா.ம.க. அனுப்பியுள்ள புதுவை எம்.பி.யான இராமதாசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஆதரித்து, வரவேற்று அங்கே பேசுகிறார். இங்கே இந்த "ஐயா' இராமதாசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்துப் பேசுகிறார். எது பா.ம.க.வின் நிலை? இதைப் புரிந்து கொள்ளும், கேள்வி கேட்கும் பா.ம.க.காரர்களைத்தாம் அரசியலுக்காக அக்கட்சியில் இருப்பவர்களாகக் கருதமுடியும். அப்படி இல்லாமல் வெறுமனே இராமதாசுக்குத் துதிபாடும் பிழைப்புவாதிகள்தாம் ""புதிய ஜனநாயகம்'' பத்திரிகையை உருட்டி, மிரட்டிப் பார்க்கிறார்கள்.
ஏன் இவர்களுக்கு யோக்கியதை இல்லை? இவர்களை விமர்சிக்க உங்களுக்கு என்ன யோக்கியதை? எவனுமே தனியே சிந்திக்கக்கூடாது. கருத்து வேறுபாடு கொண்டிருப்பவன் எல்லோருமே வர்க்க எதிரி (அதாவது கம்யூனிஸ்டு கட்சி எதிரி) என்று தீர்த்துக்கட்டுவதை கொள்கையாக வைத்திருக்கும் உங்களுக்கு ஜனநாயக முறைப்படி கருத்துக்களை பொதுவில் பேசி, இந்நாட்டு மன்னர்களான பொதுமக்கள் வீசும் வாக்குக்களை பொறுக்கி ஆட்சி நடத்தும் ஜனநாயக அரசிய்லவாதிகளையும் பொதுமக்களையும் விமர்சிக்க உங்களுக்கு என்ன அருகதை?
யார் இந்த இராமதாசு? பா.ம.க.வில் அவருக்கு என்ன பொறுப்பு? தனக்குக் கட்சியில் பதவி வேண்டாம் என்று தியாகியைப் போல நாடகமாடிக் கொண்டே, ஜெயலலிதாவைப் போல யாரோ எழுதித்தரும் அறிக்கைகளுக்கு கையெழுத்துப் போட்டு வெளியிடுவதைத் தவிர கட்சியில் எந்தப் பொறுப்பும் ஏற்காது, அடிமுதல் முடி வரை கட்சிப் பொறுப்பாளர்களை நியமிக்கவும், அவர்களின் விசுவாசத்தை சந்தேகித்தால் தூக்கியடிக்கவும் வாய்ப்புக் கிடைத்தால் அன்பு மகன், மனைவி, மருமகள், பேத்தி எல்லோருக்கும் ""பதவி'' வழங்குவதை யும் இவர்கள் கேள்வி கேட்கிறார்களா? ""பத்து நாட்களில் ரிலையன்சு கடைகளை மூடாவிட்டால் இழுத்துப் பூட்டுவோம்'' என்று இராமதாசால் எச்சரிக்கை விடப்பட்ட ரிலையன்சு ஃபிரெஷ் கடைகள் இன்னமும் திறந்தே கிடக்கிறது பா.ம.க வீரர்கள் அங்கே போவார்களா?
— ஆசிரியர் குழு
பாமகவில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா? நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமா?
பாமகவுக்கு ஓட்டுபோடுபவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா? நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமா?
இருப்பினும் ஏன் ஓட்டுப்போடுகிறார்கள். சற்றே சிந்தித்துப்பாருங்கள். தெரியும்.
அதே நேரத்தில், காஸ்ட்ரோவின் தம்பி கியூபாவின் தலைவரானது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்குமே. நீங்கள்தான் மாஸ்கோவில் மழை பெய்தால் மந்தைவெளியில் குடைபிடிக்கும் ஆசாமிகளாயிற்றே.
காஸ்ட்ரோவின் தம்பி ஏன் கியூபாவின் தலைவரானார்? அது தவறு என்று எங்காவது உங்களது அர்தபழசான கலாச்சாரத்தில் எழுதினீர்களா?