Montag, 18. Februar 2008

நேபாள மாவோயிஸ்டுகளுக்கு பண உதவி எங்கிருந்து வருகிறது?

சீனா என்று நீங்கள் நினைத்தால் தவறு!

பிரசண்டாவை பிபிஸியில் பேட்டி கண்டபோது, "இவ்வளவு பெரிய போரை நடத்துவது மிகவும் பணம் தேவைப்படும் விஷயம். ஆனால் நீங்களோ மிகவும் ஏழ்மையான நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான பிரதேசங்களிலிருந்து உங்கள் ஆதரவாளர்கள் வருகிறார்கள். எங்கிருந்து பணத்தை பெறுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது.

சத்திய சந்தர் பிரசண்டா பதில் கூறியது இப்படி.."We are certainly fighting for the rights of poor people in Nepal. We are the children of Nepali citizens. The main source of our income is the same people we are fighting for. As a secondary source, we used to extract from our enemies; but now, our main source is the support from the people�. It's been well established that no government anywhere has financially supported our revolution�. We are free to make decisions."

நேபாள மாவோயிஸ்டுகளிடம் 40000 போர் வீரர்கள் உள்ளனர். இவர்களுக்கு பணம், ஆயுதம், உடைகள் உணவுக்கு எவ்வளவு ஆகும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். எப்படிப்பட்ட உடைகள், ஆயுதங்களை கொண்டிருக்கிறார்கள் என்பதை நண்பர் அசுரன் பதிவில் பார்க்கலாம்.

எங்கிருந்து பணம் வருகிறது?

ஆரம்பகாலத்தில் சீனாவின் புரட்சி ஏற்றுமதி திட்டத்தின் கீழ் நேபாள மாவோயிஸ்டுகளுக்கு பணம் அனுப்பட்டு வந்தது. டெங்கின் காலத்திலும் பிறகும் இது வேறு திசைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது தங்களது எதிரி நாடுகளில் தங்களுக்கு ஒரு ஆதரவு கட்சியையும் ஆதரவு பகுதியையும் உருவாக்குவதிலும், பிறகு அந்த நாடுகளில் புரட்சி என்ற பெயரில் பதட்டத்தையும், கொலைகளையும் உருவாக்கி அவற்றின் பொருளாதாரத்தை நாசம் செய்யவும் இந்த அமைப்பு பண உதவி அளிக்க ஆரம்பித்தது. நேபாளத்தில் இந்த அமைப்பு பண உதவி கொடுக்க ஆரம்பித்த முதல் காரணம், நேபாளம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே buffer state போல செயல்பட்டதுதான். அதுவும் நேபாள அரசு வெகுவாக இந்திய சார்புடன் இருந்ததும் காரணம்.

ஆனால், பண உதவியை தாண்டி நேபாள கம்யூனிஸ்டு கட்சி சீனாவின் டெங் நிலைப்பாடுகளை எதிர்க்கவேண்டிய கட்டாயத்தில் (புரட்சியை டெங் நிலைப்பாடுகளை வைத்து உருவாக்க முடியாதே!) மாறியபோது அங்கு ரிம் என்னும் RIM Revolutionary Internationalist Movement கீழ் வந்தது.

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கப்போகும் செய்தி அடுத்தது. இந்த RIM அமைப்பின் தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது தெரியுமா?

அமெரிக்காவில் சிக்காகோவில்!

பெப்ருவரி 1, 1998இல் றிம் கமிட்டி எழுதியது
The participation of the Communist Party of Nepal (Maoist) in the Revolutionary Internationalist Movement, the concern and assistance given by your Party to the advance of the Communist movement in the South Asia region and throughout the world, even at difficult moments in your struggle, inspire us. The Committee of RIM and the CPN (M) will continue to march forward as in the past -- united by our all-powerful ideology.

2001இல் பிரச்சண்டா
The present rapid pace of development would have been inconceivable without the support of Communist revolutionaries, particularly the Revolutionary Internationalist Movement, during the period of the historic initiation of the People's War.

RIM வெளிப்படையாகவே நேபாள கம்யூனிஸ்டு கட்சியை ஆதரிக்கிறது. ஆனால், ஆச்சரியம், நேபாள கம்யூனிஸ்டு கட்சியை அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக "பயங்கரவாத குழுவாக" அறிவித்துள்ளது.

ஆனால், RIM வெளிப்படையாகவே இன்னும் தொடர்ந்து அமெரிக்காவில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது! இந்த அமைப்பின்மீது எந்த ஒரு அமெரிக்க அரசு "அடக்குமுறை"யும் இல்லை!

ஆகவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு வெளிப்பாடுதான் நேபாள கம்யூனிஸ கட்சி! ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் உண்மை!

ஏன் அமெரிக்கா நேபாளத்தில் கைப்பொம்மையாக கம்யூனிஸ்டுகளை உருவாக்குகிறது என்பது ஆச்சரியமாக இருந்தாலும், அமெரிக்காவின் நீண்டகால திட்டம் என்று ஏதும் இல்லை என்பது புரிந்தாலே அதன் விடை தெரியும். ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் ஆக்கிரமிப்பின்போது, தீவிரவாத பாப்டிஸ்டு கிறிஸ்துவர்களான அமெரிக்கர்கள் ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவித்தார்கள் என்பதை புரிந்துகொள்வதுதான். ஏனெனில் அமெரிக்கர்களுக்கு நீண்டகால திட்டம் என்று ஏதும் இல்லை. தற்காலிக நோக்கங்களுக்காக எது கையில் கிடைக்கிறதோ அதனை எடுத்துக்கொண்டு தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதுதான் அவர்கள் வழிமுறை.

அமெரிக்க பாப்டிஸ்டு கிறிஸ்துவ மிஷனரிகள் ஏன் தமிழ்நாட்டில் கம்யூனிஸ இயக்கங்களுக்கு பணப்பட்டுவாடா செய்தார்கள், செய்கிறார்கள் என்ற கேள்வியின் விடையும் இதில்தான் இருக்கிறது.

அதனை பிறகொரு நேரத்தில் விரிவாக எழுதுகிறேன்.

13 Comments:

ரகமி said...

நல்ல பதிவு.

அமெரிக்காவின் மிகப்பெரிய கம்பெனிகள் சீன மிலிட்டரியால் நடத்தப்படும் கம்பெனிகளுடன் தான் நெருங்கிய உறவு கொண்டிருக்கின்றன.
--

கூட்டிக்கழித்து பார்த்தால் தெரியும் ...

said...

உண்மைதான்.

அமெரிக்காவின் வெளிநாட்டு அரசியல் எப்போதுமே அமெரிக்காவின் தொழில்நிறுவனங்களின் அரசியல்தான்

Anonym said...

//ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் ஆக்கிரமிப்பின்போது, தீவிரவாத பாப்டிஸ்டு கிறிஸ்துவர்களான அமெரிக்கர்கள் ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவித்தார்கள் என்பதை புரிந்துகொள்வதுதான். //

To the point!

விக்ரம் said...

//அமெரிக்க பாப்டிஸ்டு கிறிஸ்துவ மிஷனரிகள் ஏன் தமிழ்நாட்டில் கம்யூனிஸ இயக்கங்களுக்கு பணப்பட்டுவாடா செய்தார்கள், செய்கிறார்கள்//

இதனால்தான் கத்தோலிக்க தெரசாவை மருதையன் சவட்டினாரா?

ம்ம்

said...

என்ன‌ பெரிய‌ண்ணேன்
எங்க‌ நேப்பாள் தோழ‌ர்க‌ளை பார்த்தியா ?
பாக்காத‌ பேதியாகிடும் :)

said...

வருகைக்கு நன்றி சூரியன்,

15-16 வருடங்களுக்கு முன்னரே திருவான்மியூரில் அவர்களை பார்த்து பேசிவிட்டேன்.

புதியதாக பார்க்கவேண்டிய அவசியமில்லை.

Anonym said...

தமிழ் மணி அண்ணே ! அதான் உன் பதிவுல யாரும் கமன்டே போடலயே !

நீ மட்டும் தான் கமன்டே போட்டுககிற ! ஆள் இல்லாத கடையில யாருக்குன்னே டீ ஆத்துற ! வீட்டுல போய் சமத்தா தூங்குன்னே....

said...

படிக்கவேண்டிய நீங்கள் எல்லாம் படித்துவிடுகிறீர்களே

பிறகென்ன?

:-))

said...

விக்ரம், ரகமி, சூரியன் ஆகியோருக்கும் நன்றி

Anonym said...

எங்க கூட்டத்துக்கு வாங்கன்னு கையப் பிடிச்சு இழுக்கறாங்க. ஏம்ப்பா, இலங்கைத் தமிழருக்கு மொதல்ல ஆதரவு தாருங்கோ அப்படின்னு பின்னூட்டம் போட்டா கமுக்க இருக்கானுவொ.

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

மாவோயிஸ்டுகள் ஏதோ 1992இல்தான் பிறந்தமாதிரி அசுரன் எழுதியுள்ளார். நேபால் கம்யூனிஸ்ட் பார்ட்டி மஷல் 80களிலிருந்து இருந்துவருகிறது. அதன் தலைவராக இருந்தவரும் பிரசண்டாதான். பல்வேறு கட்சி பெயர்கள் வந்தாலும் மறைந்தாலும் சேர்ந்தாலும் உள்ளே இருப்பது ஒரே கும்பல்தான்.

Anonym said...

நன்றி.

இப்போது எதிர்பார்த்தது போலவே முதலாளித்துவத்தை கட்டி அணைக்கப்போகிறார்களாம். எல்லாம் தனியார் உடமை ஆகப்போகிறதாம்.