Montag, 3. Dezember 2007

டோண்டு- அசுரன் தமிழ்மணி- தொடரும் கம்யூனிஸ விவாதம்

டோண்டுவின் போலித்தனம் - கம்யுனிசம்
பார்ப்பினியத்துடன் முரன்படும் கம்யுனிசம்

என்ற தலைப்பில் நண்பர் அசுரன் எழுதிய பதிவை ஒரு நண்பர் மேற்கோள் காட்டியிருந்தார்.
அதற்கான பதில்கள் இங்கே.

அசுரனும் விவாதிக்க வரலாம்.

//டோண்டுவின் போலித்தனம் - கம்யுனிசம்
பார்ப்பினியத்துடன் முரன்படும் கம்யுனிசம
போலி என்று பரவலாக அறியப்படுபவரால் அவதியுற்றதாக பிரபலமான டோண்டு அவர்கள் கம்யுனிசம் பற்றிய எனது சமீபத்திய பதிவிற்க்கு எதிர்வினையாக ஒரு பதிவை இட்டிருந்தார். அது மிகச் சிறப்பாக பார்ப்பினியம் என்பதன் மக்கள் விரொத தன்மையை அம்பலப்படுத்தும் விதமாக, பார்பினியம் சொந்த செல்வில் சூனியம் வைத்துக் கொள்ளும் விதமாக இருந்தது. அதே போன்ற வேறு சில சொ.செ.சூ டைப் டோண்டுவின் பழைய பதிவுகளை ஏதோ மிகச் சிறந்த கம்யுனிச எதிர் வாதமாகக் கருதி டாலர் செல்வன் அவர்களும் முத்தமிழ் குழுமத்தில் இட்டிருந்தார். சொ.செ.சூவை வேறு யாரையும் விட மிகச் சிறப்பாக டாலர் செல்வன் தனக்குத்தானே செய்கிறார் என்பதை அவரே ஒத்துக் கொண்டதுதான். ஆனால் இந்த தடவை தான் மட்டும் இல்லாமல் தனது நண்பர்களுக்கும் இந்த விசயத்தில் அவர் உதவி செய்து அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டார். திரு டாலர் செல்வன் செய்வது பல நேரங்களில் - அவரை அம்பலப்படுத்துவதாகட்டும், அவரது நண்பர்களை அம்பலப்படுத்துவதாகட்டும் - நமது வேலையை பாதியாக குநந்த்துவிடுகிறது. ஆகவே அவருக்கு முதற்கண் எனது நன்றிகளை தெரிவித்து டோண்டுவின் கட்டுரைகளில் எந்த இடங்களிலெல்லாம் சொ.செ.சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்பதை கீழே பார்ப்போம். //


நண்பர் டோண்டு என்ன எழுதினார் என்பது எனக்கு தெரியவில்லை. மேலும், இந்த பதில்கள் நண்பர் அசுரன் கொடுத்திருக்கும் பதில்களுக்கு மறுமொழியாக எழுதப்பட்டுள்ளன.
அந்த இணைப்பை நண்பர்கள் தெரிவித்தால் நலமுண்டு.

//**************************
இயற்கை முரனும், பார்ப்பினியமும்:
டோண்டுவின் வாதப்படி கம்யுனிசம் மனிதனின் இயற்கை பண்புக்கு மாறாக செல்கிறது என்கிறார். இப்படி மொக்கையாகத்தான் சொல்கிறாரே ஒழிய குறிப்பாக எந்த விசயத்தில் என்று சொல்லவில்லை. ஏனெனில் கம்யுனிசம் சில விசயங்களில் இயற்கை இயல்புக்கு மாறாகத்தான் செல்கிறது. ஆனால் கம்யுனிசம் மட்டும் அப்படிச் செல்லவில்லை. கம்யுனிசத்தைவிட ஏகாதிபத்திய முதலாளித்துவம் இன்னும் பல மடங்கு இயற்கை இயல்புகளூக்கு மாறாக செல்கிறது. இன்னும் சொன்னால் இயற்கையுடன் முரன்பட்டு அதன் மீது எதிர்வினைகளைச் செலுத்தி தனது வாழ்க்கையை வசதி செய்து கொள்வதில் தான் மனிதன் மற்ற மிருகங்களிடமிருந்து வேறுபடுகிறான். ஆக மனித நாகரிமடைந்ததன் அடிப்படையே இயற்கையுடன் முரன்பட்டதுதான்.
மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்பதை கம்யுனிசம் மறுக்கிறது என்பதுதான் டோ ண்டு சொல்லும் கம்யுனிசத்தின் இயற்கை மறுப்பு போக்கு என்றால், இந்த வாதத்தில் அம்பலமாவது பார்ப்பினியம்தான். அதுதான் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்று வரையறுத்து இன்றுவரை ஒரு பெரும்பகுதி மக்களை அடிமை சிந்தனையில் பூட்டிவைத்துள்ளது. அனைவரும் அர்ச்சகர் பற்றிய கருத்து கேட்டபொழுது பிற சாதி ஆட்களே கூட புனிதம் சுத்தம் என்று பிறப்பால் தம்மை தாழ்த்திக் கொண்டார்கள். இந்த சமூக அபிப்ராயத்தின் மூல வேர் பல்லாயிரமாண்டு பார்ப்பினிய கொடுங்கோன்மையில் புதைந்துள்ளதை மனதில் கொள்க.//

சமத்துவம் என்பது பல்வேறு விதங்களில் வரையறுக்கப்படலாம். உதாரணமாக சட்டத்தின் முன்னால் அனைத்து மனிதர்களும் சமம். அல்லது கடவுளின் முன்னால் அனைத்து மனிதர்களும் சமம். அல்லது கட்சியின் முன்னால் அனைத்து மனிதர்களும் சமம் என்று பலவேறு சமத்துவங்களை கொண்டுவரலாம்.
இது செயற்கையான சமத்துவம். அல்லது ஒரு வசதிக்காக நமக்கு நாமே செய்துகொள்ளும் சமத்துவம்.
ஆனால், இயற்கையில் மனிதர்கள் சமம் அல்ல. அது ரியாலிட்டி. அசுரனும் நானும் ஒன்றல்ல. அல்லது டோண்டுவும் அசுரனும் சமமல்ல. ஒரு காட்டில் பிறந்த இரு மனிதர்கள் கூட ஒன்றல்ல. ஒரே குடும்பத்தில் ஒரே டி.என்.ஏவை கொண்டு பிறக்கும் இரட்டையரும் கூட சமமல்ல. இயற்கையில் ஒரு நாயும் மற்றொரு நாயும்கூட சமமல்ல.
சமமில்லாத இந்த குணம்தான் நம்மை ஒவ்வொரு தனிமனிதராகவும் ஆக்குகிறது.
எல்லோரும் மற்றவர்களின் குளோனாக இருந்தால் கூட ஒரு காலத்துக்கு பின்னால், ஒவ்வொருவரும் ஒரே மாதிரி ஒரே வேலையை செய்து ஒரே மாதிரி சிந்தித்து ஒரே மாதிரி ஒரே நேரத்தில் பாத்ரூம் போவதில்லை.
//ஆக அந்த விசயத்தில்தான் கம்யுனிசம் இயற்க்கையை மீறுகிறது எனில் நல்லதுதானே. இது ஒரு வகை justification. இந்த வாதம் சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது. அவர்களுக்காக நியுட்ரல் ground-ல் இருந்து கொண்டு வேறுவிதமான வாதத்தை வைக்கிறேன். அதவாது இந்த பார்ப்பினியம், கோப்பினியம் போன்ற வாதங்களை விடுத்து பொதுவாக இயற்கையை மீறிப் போவது புதிய விசயமா அல்லது ஏற்கனவே பரவலாக பழக்கத்தில் உள்ள விசயமா அல்லது கெட்ட விசயமா அல்லது நல்ல விசயமா என்பதை பார்ப்போம்.
ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல, இயற்கையுடன் முரன்பட்டு அதன் மீது எதிர்வினைகளைச் செலுத்தி தனது வாழ்க்கையை வசதி செய்து கொள்வதில் தான் மனிதன் மற்ற மிருகங்களிடமிருந்து வேறுபடுகிறான். ஆக, அது ஒன்றும் புதிய விசயமல்ல. நெருப்பு கண்டுபிடித்த காலத்தில் ஆரம்பித்தது இந்த முரன்பாடு. இன்னும் கோட்பாடக சொன்னால் மனித சமூகத்தின் வளர்ச்சியின் ரகசியமே அவன் இயற்கையுடன் முரன்பட்டு தன்னை தொடர்ந்து வளர்த்துக் கொள்வதில்தான் உள்ளது.//

இல்லை. மிருகங்கள் கூட இயற்கையை உபயோகப்படுத்தவும், வளைக்கவும், தெரிவு செய்யவும், அதனோடு முரண்படவும் முனைகின்றன. விவசாயம் செய்யும் எறும்புகள் உண்டு http://en.wikipedia.org/wiki/Leafcutter_ant
குச்சியை உபயோகப்படுத்தும் காகங்கள் உண்டு. இன்னும் உருவாக்கப்பட்ட கருவிகளை உபயோகப்படுத்தும் கொரில்லாக்களும் உண்டு.
//இதே விசயத்தை(அதாவது இயற்கை உணர்வுகளுக்கு மாறாக மனித சமூகம் செல்வதை) இன்னுமொரு சென்சிடிவான விசய்த்தை எடுத்து விளக்குகிறேன். அந்த காலத்தில், புரதான பொதுவுடமை சமூகத்தில் கூட்டமாக புணர்வதுதான்(உடலுறுவு கொள்ளூதல்) மனித சமூகத்தின் இயல்பு. அதாவது இஸ்டம் போல, எப்பல்லாம் தோணுதோ அப்போ, யாருடனும்.//

இல்லை. சுத்த பேத்தல். இது எந்த காலகட்டத்திலும் இருந்ததில்லை.
கூட்டமாக புணரும் பழங்குடியினர் என்பது மேற்கத்திய மானுடவியலாளர்களின் ஃபேண்டசியில் உதித்த ஒன்று. உதாரணமாக லூயிஸ் மார்கன் என்ற (தற்போது முழுவதுமாக உதாசீனம் செய்யப்படும் ) ஆய்வாளர் கூறிய தவறான தகவல்கள் அடிப்படையிலேயே எங்கல்ஸ் தன்னுடைய இந்த பிதற்றலை எழுதினார்.
மனிதர்கள் குரங்குகளிடமிருந்து வந்திருந்தால், குரங்குகளின் ஏதேனும் ஒரு வழியில்தான் மனிதர்கள் வந்திருக்கவேண்டும்.
எந்த குரங்குகளிலும் இப்படிப்பட்ட கட்டற்ற பாலுறவு கிடையாது.
திடீரென்று இவர்கள் கற்பனையில் உதிக்கும் புராதன பழங்குடி கட்டற்றபாலுறவு வந்து திரும்ப காணாமல் போகும் மாயம் என்ன என்று தெரியவில்லை.
//குடும்பம் உருவான கதை:
இந்த உடலுறுவு அல்லது இனப்பெருக்க உறவு விசயத்தில் மனிதனின் இயற்கையான உணர்வு எதிர் பாலினம் யாராயிருந்தாலும் உறவு கொள்வது. நாம் கூட தெருக்களில் பார்க்கலாம். நேற்றுவரை பால் கொடுத்த தாய் பன்றியை கொஞ்சம் வயதுக்கு வந்தவுடன் விடலைப் பன்றிகள் உறவுக்கு கூப்பிடுவதை. இந்த இயற்கை உணர்வுக்கு மாறனதுதான் குடும்பம் என்ற கட்டமைப்பு. சமூகம் என்பது எல்லா விலங்குகளுக்கும் பொருந்தும் விசயம் ஆனால் குடும்பம் எனும் நாகரிக அடையாளம் மனிதனுக்கு மட்டுமே உரிய விசயம். அது மனிதனின் ஆரம்ப கால உணர்வுக்கு மாறான, இயற்கை உணார்வுக்கு மாறான விசயம். //

விலங்குகள் என்று எல்லா விலங்குகளையும் ஒரே கூண்டில் அடைக்கமுயலும் அசட்டுத்தனம் இது. நாம் சற்றே வந்த பாதையைத்தான் பார்க்கவேண்டுமே தவிர, அமீபாக்களுக்கா நாம் போக முடியும்?
குடும்பம் என்பது குரங்களிலேயே இருக்கும்போது அது எப்படி மனிதர்களிடம் இயற்கைக்கு மாறான விஷயமாக இருக்கும்? மறுபடி லூயிஸ் மார்கன் பிதற்றியது இன்னும் தொடர்கிறது.
குடும்பம் / குடும்ப உறவுகள் ஆகியவை குழந்தைகளை பாதுகாப்பதற்கு உதவுவதற்காக உருவானவை. அதனை கட்சி கொள்கைக்காக தனியுடமை பொதுவுடமை என்று பிதற்றி திரிந்தால் என்ன செய்வது?
//இந்த இயற்கை உணர்வை மீறுவதில் மனித சமூகம் நமது டோ ண்டுவைப் போல உப்பிச் சப்பில்லாத வாதம் செய்து கொண்டிருக்கவில்லை. பல்வேறு அனுபவங்களுக்கு பிறகு தாய் வழியில், தந்தை வழியில், ஒன்னு விட்ட தங்கை, ஒன்னு விட்ட தம்பி என்று பல வடிவங்களில் பால் உறவு கொள்ளவதை மனிதன் கட்டுப் படுத்தி இயற்கைக்கு முரனாக சென்றான். அதாவது ஒட்டு மொத்த சமூகத்துக்கு அனுகூலமாக இருப்பதற்க்காக பாலுறுவுகளில் மனிதன் இயற்கைக்கு முரனாக சென்றான், கட்டுப்பாடுகளை கொண்டு வந்தான். இங்குதான் குடும்பம் என்ற அமைப்புக்கான மூல வேர் உயிரியல் ரீதியாக ஆரம்பமாகிறது. அப்புறம் குடும்பம் என்பது தனியுடமை சமூகத்தில் ஆழமாக வேரூன்றியது வேறு வரலாறு.//

டாபூ என்பது ஒவ்வொரு பழங்குடிக்கும் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறானது. அதற்கும், தனியுடமை/ பொதுவுடமை கற்பனைகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை.
குரங்குகளிலேயே இன்ஸஸ்ட் அவாய்டன்ஸ் உண்டு. சற்றே அறிவியல் புத்தகங்களை படித்து பார்த்தால் தெரியும். இது ஜெனடிக். சும்மா கற்பனைகளிலும் பேண்டஸிகளிலும் உலவுபவர்கள், பாலுறவுக்கு இணை கிடைக்காதவர்கள் பாண்டஸி செய்துகொள்வதுதான் இதெல்லாம்.
இன்ஸஸ்ட் அவாய்டன்ஸ் உள்ள குரங்குகள் எல்லாம் தனியுடமை குரங்குகளா அல்லது பொதுவுடமை குரங்குகளா? நான் முன்னமே சொன்னது போல ஒரு பொதுவுடமை நாயைக்கூட கண்டுபிடிக்க முடியாது. நாய்கள் எவ்வளவு டெரிடோரியலான விலங்குகள் என்பது தமிழ்நாட்டு தெருக்களில் பார்த்தாலே தெரியுமே? இதெற்கெதற்கு ஜெர்மானிய மாட்டுச்சாணம்?
//டோண்டு அவர்கள் இந்த விசயத்தில்(குடும்பம், பாலுறவு விசய்த்தில்) மீண்டும் நாம் இயற்கை உண்ர்வுக்கு மாறலாம என்று வாதிட்டு அறிவுரை சொல்லட்டும் அதை அவரது தொண்டரடி பொடிகள் வேண்டுமானால் follow செய்யட்டும். நமக்கு கவலையில்லை.
இப்படி ஒரு அதி முக்கியமான விசயத்திலேயே அட்ஜெஸ்ட் செய்துதான், இயற்கை உணர்வுக்கு மாறாக சென்றுதான் மனித சமூகத்தின் வரலாறே ஆரம்பிக்கிறது. குடும்பம் எனும் ஒரு அதி உன்னதமான ஒரு மனித சமூக அமைப்பு/இயற்கை உணர்வுக்கு மாறான அமைப்பு நடைமுறைக்கு வந்த கதையே இப்படித்தான் இருக்கிறது. கம்யுனிசம் மனித சமூகம் மொத்ததையும் ஒரே குடும்பமகா மாற்றும் ஒரு super குடும்பம். இதுவும் நீண்ட காலப் போக்கில் தான் ஏற்ப்படும். புரட்சி நடந்த மறு நிமிடே கம்யுனிசம் வந்துவிடும் என்பது டூபாக்கூர். அதனடிப்படையில் செய்யப்படும் வாத, எதிர் வாதங்களை புறக்கணீக்கவும்.//

பேண்டஸி இன்னும் பிய்த்துக்கொண்டு ஊற்றுகிறது. எளிய ஆங்கிலத்தில் மரபணு அறிவியல் எவ்வாறு சமூகத்தையும், சமூக பழக்க வழக்கங்களையும் பாதிக்கிறது என்று படித்து பார்க்கலாம். ஒரு குரங்கு தன்னுடைய குழந்தையைத்தான் பார்த்துக்கொள்ளும். எந்த காலத்திலும் மற்ற குரங்கின் குழந்தையை தன்னுடைய குழந்தையாக பார்த்துக்கொள்ளாது. ஒரு குரங்கு தனக்கு குழந்தை இல்லாத போது, ஜீன்கள் உருவாக்கும் தன்னுடைய தாய்மை உணர்வை./தந்தைமை உணர்வை தணித்துக்கொள்ள ஒரு குட்டியை அடாப்ட் செய்யலாம். ஆனால், எப்போதுமே தன்னுடைய ஜீன்கள் எந்த குழந்தையிடம் அதிகம் இருக்கிறதோ அதனை கவனிப்பதுதான் ஜீன்களின் ஆணை. மீறிப்பார்க்கலாம். அல்லது எதிர்கால கம்யூனிஸ்ட் சமூகத்தில் எல்லோரும் ஜீன் மாற்று அறுவை சிகிச்சை செய்து எல்லோரும் எல்லோருடைய குழந்தையையும் தன்னுடைய குழந்தையாக கருதும் படி மூளை சலவை செய்யலாம்.
//ஆக, உடலுறவு விசயத்தில் இயற்கைக்கு மாறாக சென்று அது இன்றைய குடும்பமாக பரிணமித்து, பிறகு இன்று வரை மனித சமூகம் பல வித மாற்றங்களைக் கண்டு, இன்றைக்கு தனியுடமை சமூகத்தின் கடைசி கட்டத்தில் வந்து நிற்கிறது. இந்த நேரத்தில் வந்து ஒரு அரதப் பழசான வாதத்தை வைத்து தானும் அம்பலமாகி, தனது தத்துவமும் அம்பலமாகி, வாதத்திலும் தோல்வியடையும் டோண்டுவின் நிலை உண்மையில் பரிதாபத்திற்க்குரியதுதான். //

இது போன்ற அரதப்பழசான வாதத்துக்கு என்ன செய்வது?
//நியுட்ரல் க்ரவுண்டிலும்கூட அவரது வாதம் ஒரு இட்லி, கெட்டி சட்னிக்கே ஆப்(off) ஆகி விட்டது. ஆம்லெட் ஆப்பாயில், சில பல புல் மீல்ஸ்கள் ரேஞ்சுக்கேல்லாம் தேறாதா கேசாக அவரது வாதம் உள்ளது.
சரி, இவ்வளவு வாதம் செய்து இயற்கை முரனாகா செல்வது மனித இயல்புதான் என்பதை நிறுவிய பிற்ப்பாடு இன்னொரு விசயம் சொல்லவேண்டியுள்ளது.//

சொல்லுங்கள
//அதாவது ஒரு கம்யுனிச சமூகத்தில் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு இருக்கும் என்பது ஒரு பொய். ஆக இந்த விசயத்தில் கம்யுனிச சமூகம் இயற்கைக்கு விரோதமாக செல்கிறது என்பதே டூபாக்கூர்த் தனமான ஒரு கற்பனைதான். அப்படிச் சென்றாலும் தவறில்லை என்று கூறத்தான் மேலெயுள்ள வாதங்கள்.
ஒரு கம்யுனிச சமூகத்தில் ஏற்றத்தாழ்வு என்பது பூகோளம், நிறம், உடலியல் ரீதியாகத்தான் இருக்குமேயொழிய. அறிவு விசய்த்தில், அனைவருக்கும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதால், வள்ரும், வாழும் சூழ் நிலைக்கேற்ப்ப எந்த துறையில் வேண்டுமானாலும் கற்று எல்லாருமே தான் சம்பந்தப்பட்ட துறையில் சூப்பர் ஜினியஸாகத்தான் இருப்பார்கள். அதனால் இவர் கூறுவது போன்ற(திறமை) ஏற்றத்தாழ்வு இருக்காது. இதுவும் சிறிது காலம் எடுத்து சில, பல தலைமுறைகள் கடந்த பிற்ப்பாடு ஏற்ப்படும் ஒரு நிலை. அதனால் இன்றைய ஏற்றத்தாழ்வான சுரண்டல், சமூகத்தை வைத்து அந்த முன்னேறிய சமூகத்தை எடைப் போட்டால் திருவாளர் டோ ண்டுவைப் போல பார்ப்பினியப் பார்வையில் போய் விழுந்து கிடப்பீர்கள். //


பூகோளம், நிறம், உடலியல் ரீதியான சிறுசிறு மாற்றங்களே, ஏற்றத்தாழ்வுகளே, மிகப்பெரிதாக ஆம்ப்ளிபை ஆகி பெரிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். கடந்த கால சரித்திரத்தை படித்தவர்கள் இதுபோன்ற தவற்றினை செய்யமுடியாது. வெறும் கற்பனை கோட்டைகளில் வசிப்பவர்களுக்கு என்ன சொன்னாலும், எத்தனை புத்தகங்களை எடுத்துக்கொடுத்தாலும் புரியாது.
அறிவு விசயத்தில் எல்லோரும் ஒரே மாதிரியாக என்னாளும் இருக்க முடியாது. அறிவு என்பது வெறுமே படிப்பதும், ஞாபகம் வைத்துக்கொள்வதும் மட்டுமல்ல. என்னதான் பல கோடி தலைமுறைகள் கழித்து பார்த்தாலும் எல்லோரும் சூப்பர் ஜீனியஸாக இருக்கவே முடியாது. எல்லோரும் சூப்பர் ஜீனியசாக இருந்தால், எல்லோருமே முட்டாள்களாகத்தான் இருப்பார்கள். ஏனெனில், சூப்பர் ஜீனியஸ் என்பது மற்றவர்களை வைத்துத்தான்.
ஒரு கூட்டத்தில் 100 பேர்கள் இருந்தால், அவர்களில் அறிவுத்திறனை அளந்தால், 95 சதத்தினர் சராசரியாகவும், மிக அதிக புத்திசாலியாக இரண்டு புள்ளி ஐந்தும், முட்டாளாக இரண்டு புள்ளி ஐந்தும் இருப்பார்கள். எல்லோருமே மிகச்சரியாக ஒரே அளவு புத்திசாலித்தனத்துடன் இருக்கவே முடியாது. வெறும் வசதி வாய்ப்புகளும் ஆர்வமும் மட்டுமே சூப்பர் ஜீனிஸஸ்களை உருவாக்கிவிடும் என்றால், ராமானுஜத்தை விட வசதி வாய்ப்பும், அவரை விட மிக அதிக அளவு கணித ஆர்வமும் கொண்டவர்கள் அவர் கண்டுபிடித்ததை ஏன் கண்டுபிடிக்கவில்லை?
மீண்டும் குரங்குகளுக்கு போவோம். எல்லா குரங்குகளும் ஒரே மாதிரியான வாய்ப்புகளையே ஒரே மாதிரியான கல்வியையே பெற்றாலும், நூறு குரங்குகளில் இரண்டு குரங்குகள் தவறு செய்யத்தான் செய்யும். இறந்து போகும். இரண்டு குரங்குகள் மற்ற குரங்குகளை விட புத்திசாலியாக இருக்கலாம். இதனால்தான் செக்சுவல் செலக்ஷன் வேலை செய்கிறது. குரங்குகளில் எந்த குரங்கு வலிமையானதாகவோ அல்லது அந்த சூழ்நிலையில் சந்ததியை உற்பத்தி செய்ய வலிமை கொண்டதாக பெண் குரங்குகளால் பார்க்கப்படுகிறதோ அந்த குரங்கிடமே பெண் குரங்குகள் செல்லும். இந்த சூழ்நிலையே, இப்போதுள்ள வலிமையான (most adoptive) குரங்குகள் அடுத்த சந்ததிக்கு தங்கள் ஜீனை அனுப்ப வாய்ப்பு பெறும்.
இப்படிப்பட்ட செக்சுவல் செலக்ஷ்னும், நேச்சுரல் செலக்ஷனும் எல்லா காலத்திலும் ஏதேனும் ஒரு வகையில் இருந்துகொண்டே இருக்கும். அது இருக்காது என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். இதே போலத்தான் ஜெஹோவாவின் சாம்ராஜ்யத்தில் எல்லோரும் சுபிட்சமாக இருப்பார்கள் என்று இன்னும் பலர் பேசிக்கொண்டுள்ளார்கள். நீங்கள் எழுதியதை ஒப்புக்கொள்வதற்கும் அவர்கள் கூறுவதை ஒப்புக்கொள்வதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
எல்லோருக்கும் வசதி வாய்ப்புகள் கிடைக்க வழி செய்யவேண்டும் என்பது நல்ல கோரிக்கை. அது சாக்ரடிஸிலிருந்து, பிளேட்டோவிலிருந்து, ராமனுஜரிலிருந்து, ஆடம்ஸ் ஸ்மித்திலிருந்து எல்லோரும் கூறியது.
//அடிமைச் சமூதாயத்தில் கூட அடிமைகளுக்கு சம உரிமை கொடுப்பதை ஏதோ இயற்கைக்கு மாறாக செல்லும் விசயம் என்பதாக பேசியிருப்பார்கள். நிலவுகின்ற ஒரு அமைப்பில் மாற்றம் கோரும் போதெல்லாம் அழுகிய பழைய சமுதாயத்தின் பிரதி நிதிகள் அவலட்சணமாக பேசுவது இயல்புதான். இதே கூட்டம் தலித்துக்களுக்கு உரிமை கேட்டு இந்தியாவில் போன நூற்றாண்டின் ஆரம்பத்தில் விவாதங்கள் எழுந்த போதும் இயற்கைக்கு முரனான கோரிக்கை என்பது போன்ற எதிர் வாதங்களை வைத்தனர். ஆகவே இதையேல்லாம் சட்டை செய்யாமல் எந்த ஒரு விசயத்தையும் அது மனித குலத்துக்கு அனுகூலமா இல்லையா என்ற ஒரு அளவுகோலைக் கொண்டு மதிப்பிடுவதுதான் சரியாக இருக்கும். //

அந்த வகையில் பார்த்தால் கம்யூனிஸம் நிச்சயம் மனித குலத்துக்கு அனுகூலமானது அல்ல.
//இது தவிர்த்து இன்னொரு விசயததையும் இயற்கைக்கு மாறான போக்கு என்று வாதிட்டார்கள் சிலர். அந்த பகுதிகளையும் இங்கு பகிர்ந்து கொண்டால் சரியாக இருக்கும்.
தனியுடமை மனிதனின் இயற்கையான உணர்வா?
இது தவறான ஒரு கூற்று. மனித குல வரலாற்றை எடுத்துக் கொண்டால், பொது வுடைமைதான் அவனது இயல்பான உணர்வாக இருக்கிறது. வேட்டையாடி உணவு தேடும் பண்டைய புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் மனிதன் குலமாக, கூட்டமாக வாழ்ந்தான். அங்கு ஒவ்வொரு மனிதனும் தான் சேகரித்து வந்த உணவை பொதுவில் வைத்துத்தான் பகிர்ந்தனர்.
//

ஆதாரம்?
மீண்டும் குரங்கையே எடுக்கிறேன். ஒரு பொதுவுடமை குரங்கை காட்டமுடியுமா? குரங்கு தேடி தின்கிறது. அது பகிர்ந்து உண்பதில்லை. ஒரு பறவை தான் தின்று மீதத்தை தான் தன் சகோதரர்களுக்கு தருகிறது. பகிர்ந்து உண்பதில்லை. கூட்டமாக தேடி உண்ணும் விலங்குகளையே எடுத்துக்கொள்வோம். வேட்டையாடும் ஓநாய்கள் ஒரு விலங்கை அடித்து கொன்று தின்கின்றன. பொதுவாகவேதான். ஆனால், கொன்ற பின்னால், தின்பதற்கு ஒவ்வொரு ஓநாயும் ஒன்றோடு ஒன்று அடித்துக்கொள்ளும். அதே போல வயது முதிர்ந்த, வலிமையற்ற ஓநாய்களுக்கு வேட்டையாடிய ஓநாய்கள் மாமிசத்தை கொண்டுவந்தும் கொடுக்காது.
விலங்குகளே அப்படி இருக்கும்போது, தானாக மனித சமுதாயம் உருவானபோது பொதுவுடமை சமுதாயத்தில் இருந்தார்கள் என்பது வெறும் கற்பனை.
//மனித மூளை வளர்ச்சி அடைந்ததில், இவ்வாறு பகிர்ந்து கொடுப்பதற்க்காக அவன் சிந்தித்தது(மூளையை கசக்கி) ஒரு முக்கிய காரணீயாக இருந்தது என்பது ஆய்வு முடிவுகள்(டார்வினின் கட்டுரை), இந்த விசயத்தில் தவறு செய்யாமல் இருக்க கடவுளர்களை உருவாக்கி பகிர்ந்து கொடுப்பது சரிசமமாக எல்லருக்கும் கிடைக்க அந்த குறிப்பிட்ட கடவுள் உதவ வேண்டும் என்று வேண்டுகிறார்கள். இது குறித்த தோ. பரமசிவனின் 'பண்பாட்டு அசைவுகள்' என்னும் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைத் தருகிறேன்:
""ஒவ்வொரு கட்டத்திலும் சமூகச் தேவைகள் மாற மாற, தெய்வங்களும் அவற்றின் பண்புகளும் மாறின, உதாரணமாக, வேட்டைச் சமூகத்தில் வேட்டையாடப்பட்ட விலங்குகள் ஊர்ப் பொது மன்றத்தில் கொண்டு வரப்பட்டு அந்த இனக்குழு மக்களால் தமக்குள் சமமாக அல்லது வேலைக்குத் தகுந்த அளவில் பங்கீடு செய்யப்பட்டன, இப்பங்கீடு தெய்வத்தின் பெயரால் செய்யப்பட்டது. பங்கீடு சரியாக இல்லாவிட்டால் தெய்வம் தண்டிக்கும் என்பது இனக்குழு மக்களின் நம்பிக்கை. இப்பங்கீட்டுத் தெய்வத்தைப் பற்றிய தொல்லெச்சம் போன்ற செய்திகள் பழைய இலக்கியங்களிலும் புராணங்களிலும் காணப்படுகின்றன, தமிழிலக்கியத்தில் இத்தெய்வம் பால்வரை தெய்வம் (பால்-பிரிவு) என்று கூறப்பட்டுள்ளது. இத்தெய்வத்தின் விருப்பத்தின் பேரில்தான் ஒர் ஆணும் பெண்ணும் சந்தித்து உறவு கொள்கின்றனர் என்பது பழந்தமிழர் நம்பிக்கை. ஆரியரின் ரிக் வேதத்தில் 'ரித' என்னும் பங்கீட்டுத் தெய்வம் மறைந்தது பற்றிய புலம்பல்கள் இடம் பெறுகின்றன. கிரேக்கர் இப்பங்கீட்டுத் தெய்வத்தை 'மீர'(more) என்று அழைத்ததாகக் கிரெக்கத்தின் பழைய புராணங்கள் பேசுகின்றன.""
//

இன்னொரு கற்பனை. வேட்டையாடியவர்கள் தங்கள் உணவை பகிர்ந்து உண்டிருக்கலாம். ஆனால், அதிலும் எது ருசியான பாகமோ அதற்கு போட்டி இருந்திருக்கத்தான் செய்யும்.
rita பற்றிய பக்கம் http://www.purifymind.com/EasternIdeas.htm
We notice some very important concepts developing during this period, which provide the bedrock of later philosophy. The concept of Rita, which literally means the "course of things", with Varuna as its custodian, is the precursor to monotheism and monism. It stands for inviolable cosmic order or the law in general and the immanence of justice. Dr. Radhakrishnan compares it to the universals of Plato. The universal is prior to the particular, and so Vedic seer thinks that Rita exists before the manifestation of all phenomena. The "shifting, series of the world are the varying expressions of the constant Rita". The word Dharma subsequently subsumes this concept and, in a way, replaces the word Rita.
இதற்கும் பங்கீடுக்கும் என்ன சம்பந்தம்? பொதுவுடமை சமுதாய வேர்களை கண்டுபிடிக்கவேண்டும் என்று அலைந்து லூயிஸ் மார்கனில் எங்கல்ஸ் தேடுவதற்கும், ரிக் வேதத்தில் பரமசிவன் தேடுவதற்கும் வித்தியாசமில்லை.

//
Quote from Darwin:
""In this book I argue that the origins of human intelligence are linked to the acquisition of meat, especially through the cognitive capacities necessary for the strategic sharing of meat with fellow group members. Important aspects of the behavior of some higher primates--hunting and meat sharing and the social and cognitive skills that enable these behaviors--are shared evolved traits with humans and point to the origins of human intelligence.""
டார்வின் அத்தனைக்கும் ஒரு முதலாளித்துவ அறிஞர்.//

அதென்ன முதலாளித்துவ அறிஞர்? அறிவியலில் முதலாளித்துவம் கம்யூனிஸம் என்றெல்லாம் ஏதும் இல்லை.
//மனிதன் மந்தை உணர்ச்சி உடையவன், தனி மனித வாதம் என்பது தனியுடைமை சமூகத்தின் உத்திரவாதமில்லா நிலை உருவாக்கிய ஒரு இயல்பை மீறிய உணர்ச்சிதான். அதனால்தான் பாதுகாப்பான உணர்வடையும் போதெல்லாம் மனிதன் தனது பொதுமை நாட்டத்தை வெளிப்படுத்துகிறான்.
ஆக, மீண்டும் அதே விசயம்தான். பிரச்சனை இயற்க்கைக்கு மாறாக போவதா அல்லது இயந்து போவதா என்பது அல்ல. மனித குலத்தின் நலனை அடகு வைத்துச் செல்வதா அல்லது அதை முன்னிறுத்தும் விசயங்களை செய்வதா என்பதுதான்.//

தனிச்சொத்து எது, பொதுச்சொத்து எது என்பது மனிதனின் பொது அறிவிலேயே தோன்றும் விஷயம். தன்னுடைய வீடு தனிச்சொத்து, தான் இருக்கும் வீதி பொதுச்சொத்து என்பது அவனுக்கு தெரியும்.
தமிழ்நாட்டு கிராமங்களில் வீட்டின் அமைப்பை பார்த்தால் இன்னொன்றும் தெரியும். தனிச்சொத்தான திண்ணை பொதுச்சொத்தாக வைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். இன்னொன்றும் தெரியும், பொதுச்சொத்தும் இல்லாமல் தனிச்சொத்தும் இல்லாமல் இரண்டு வீடுகளுக்கு இடையேயான இடம் பெண்கள் கூடிப்பேசும் இடமாக பயன்படுத்தப்படுவதையும் பார்க்கலாம்.
இதெல்லாம், ஜெர்மனியிலிருந்து வந்த மாட்டுச்சாணங்கள் சொல்லித்தான் தெரியவேண்டும் என்று இல்லை.
மிக வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அரசாங்கம் செய்யவேண்டிய வேலைகளை தனியார் மயப்படுத்திவருகிறார்கள். ஏனெனில், அங்கு தனியார் மயமாக்கப்பட்டபின், மக்களுக்கு சேவைகள் அதிகம் கிடைக்கின்றன என்று கண்டிருக்கிறார்கள். மேலும் வெறும் தனிச்சொத்தெல்லாம் கொடுமையும் இல்லை. பொதுச்சொத்தெல்லாம் புனிதமும் இல்லை. எது பொதுச்சொத்தாகும் எது தனிச்சொத்தாகும் என்பதெல்லாம், வசதியையும் சந்தர்ப்ப சூழ்நிலையையும், வளர்ச்சியையும், pragmatism ததையும் பொறுத்தது.
parting shot
"Good people will do good things, and bad people will do bad things. But for good people to do bad things -- that takes religion. -- Steven Weinberg"
அதனையே சற்று மாற்றி
Good people will do good things, and bad people will do bad things. But for good people to do bad things -- that takes ideology. - Thamizmani
என்று சொல்கிறேன

49 Comments:

said...

இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பதிலளித்த உங்களை உண்மையாகவே பாராட்டத்தோன்றுகிறது ஆனால் பாவமாகவும் இருக்கிறது. தேவையில்லாமல் மெனக்கெடாதீர்கள். ஜென் தத்துவம் சொல்வதைப்போல, முட்டாளிடம் தத்துவத்தை பேசுவதைப்போல ஆபத்தான காரியம் எதுமில்லை தமிழ். :)

said...

Dontdoவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பதிலளித்த உங்களை உண்மையாகவே பாராட்டத்தோன்றுகிறது ஆனால் பாவமாகவும் இருக்கிறது. தேவையில்லாமல் மெனக்கெடாதீர்கள். ஜென் தத்துவம் சொல்வதைப்போல, முட்டாளிடம் தத்துவத்தை பேசுவதைப்போல ஆபத்தான காரியம் எதுமில்லை தமிழ். :)

said...

மறுமொழிக்கு நன்றி

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

பதிவையே படிக்காமல் எழுதப்பட்ட தேவையற்ற உளறல் இங்கே நீக்கப்பட்டுள்ளது.

Anonym said...

கலகம் பிறந்திருக்கு. நியாயங்கள் பேசப்படுவது நல்லது.

புள்ளிராஜா

said...

நிகழ் நின்று பின்நோக்கி கருத்துக்களை சிதைப்பதிலும், வரலாற்றை திரித்து சிந்துசமவெளி ஆரிய கலாச்சாரம் என நிறுவுவதிலும் வந்தேறிகள் மிகவும் கைதேர்ந்தவர்கள். பிராமணத்தை பொதுமைவாத முகமூடி கொண்டு மறைத்து இவர்கள் மன்றத்தில் உலவுவதும், ஓவ்வாத கழிவுகளை வாந்தியெடுப்பதிலும் தொக்கி நிற்பது, பிராமண வெறியை/ஆற்றாமையை நிலைநிறுத்திடவே... இரண்டு மூன்று வலைத்தளங்களை புரட்டி அதை மொழிமாற்றம் செய்து அதில் பார்ப்பன துவேசத்தை குழைத்து கக்கும் இத்தகைய ஓநாய்களின் தோலுரிப்பது நம்முன் வைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவால்.

Anonym said...

Sharp writeup
Keep it up

It is the leftists who have to answer.

வெங்காயம் said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

பதிவையே படிக்காமல் எழுதப்பட்ட மேலும் ஒரு தேவையற்ற உளறல் இங்கே நீக்கப்பட்டுள்ளது.

said...

முதலில் சிறு வேண்டுகோள் ஒன்று. உங்கள் பின்னூட்டம் இடும் பக்கத்தில் ஃபோட்டோ வரும் ஏற்பாட்டை செயலாக்கவும்.

இப்போது பதிவுக்கு:
//நண்பர் டோண்டு என்ன எழுதினார் என்பது எனக்கு தெரியவில்லை.//
அதையும் பார்த்து விடுங்களேன்:
http://dondu.blogspot.com/2006/09/blog-post_115807685840498511.html
http://dondu.blogspot.com/2005/10/blog-post_17.html
http://dondu.blogspot.com/2006/01/blog-post_113698740632092609.html
எனது வலைப்பூவில் பொருளாதாரம் என்ற லேபல் கீழ் உள்ள பதிவுகளையும் நேரம் இருந்தால் பாருங்கள்.

பொதுவுடைமையை எதிர்ப்பவர்கள் பார்பினியத்தின் ஆதரவாளர்கள் என்பது போன்ற அற்புதமான அபத்த வாதத்தை வைப்பவர்களுடன் பேசத்தான் வேண்டுமா?

எது எப்படியிருப்பினும், புத்தகத்தில் என்னவெல்லாம் வாதித்திருந்தாலும், இட்டலியின் சுவை அதை சாப்பிடும்போதுதான் நிரூபிக்கப்பட வேண்டும். (The proof of the pudding is in the eating).

அந்தக் கணக்கில் தூக்கி எறியப்பட்ட கம்யூனிச கொள்கை மற்றும் அதை பின்பற்றிய நாடுகள் வரைபடத்திலிருந்தே மறைதல் எல்லாமே இந்த குறிப்பிட்ட கம்யூனிச இட்டிலி ஊசிப் போனது என்பதை விளக்குகின்றன.

என்னவெல்லாம் சொல்லி ஒப்பாரி வைத்தாலும் அது அப்படித்தான்.

தாங்களே ஒரு பன்னாட்டு நிறுவனத்திலிருந்து கொண்டு கம்பெனி நேரத்தில் கம்யூனிசத்துக்கு கொடி பிடிப்பவர்களுக்கு இதனால் எல்லாம் என்ன பலன் இருக்கும்?

ஒரு வேளை அவர்தம் தமிழ் தட்டச்சு பழக்கத்தால் இன்னும் சீரடையக் கூடும். ஏதாவது ஜாப் டைப்பிங் வேண்டுமானால் சைட் பிசினஸ் செய்து பிழைக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

நன்றி நண்பர் டோண்டு,
இட்டலி ஊசி விட்டது என்பதை ஒப்புக்கொள்ள இயலாது.
இட்டலி எப்போதாவது நன்றாக இருந்தால்தான் ஊசிப்போக வாய்ப்பு இருக்கும்.

இது ஆரம்பமே தவறான புரிதலில் (மண்ணை மாவென்று போட்டு வார்க்கமுயலும்) இட்டிலி

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

மேலும் ஒரு மறுமொழி நீக்கப்பட்டுள்ளது

said...

//
அசுரன் said...
இந்த கட்டுரையை எழுதிய நோக்கம் சரியே ஆயினும் இன்னும் பொறுமையாக சரியான சொற்பிரயோகத்துடன் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இவர் போன்றவர்களுக்கு அவ்ரகளது அல்பத்தனத்தை, முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதுடன் பிறருக்கும் இவரது மோசடியான நோக்கத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுவதன் மூலம் நேர்மையில்லாத இது போன்ற பிராணிகளை விரட்டியடிக்க முடியும். அந்த வகையில் இந்த கட்டுரை ஓரளவு பங்காற்றுகிறது.

ஆயினும் முதலில் சொன்ன விமர்சனத்தை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

தங்கமணீ உள்ளிட்டவர்களின் உள் நோகத்தை ஓரளவு இந்த கட்டுரை அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆயுதம் தாங்கிய வன்முறை என்பது நக்சல்பாரிகளைவிட அதி பயங்கரமாக வோட்டு அரசியல் மாபியா கும்பலினாலேயும், இந்து பார்ப்பன பயங்கரவாதிகளாலேயுமே நடைமுறைப்படுத்துப்படும் போது மாவோயிஸ்டுகளை ஒன்றுமில்லாத சப்பை மேட்டருக்கு கைது செய்ததுடன் இல்லாமல் அதை மிகப் பெரியதாக பீதி கிளப்பினார்கள் எனில் அது வேறொன்றூம் இல்லை அது நக்சல்பாரி அரசியல்தான் - This what the whole PuJa article is about. இதை மறுத்து தஙக்மணீ எதுவுமே எழுதவில்லை இன்னும் சொன்னால் தங்கமணியும் இதைத்தான் சொல்கிறார். ஆக, தங்கமணியின் கட்டுரை அதன் தர்க்க அடிப்படையில் புஜாவின் கட்டுரையை எதிர்த்து எழுதப்படவில்லை என்பதும் அவரது நோக்கம் வெறுமே சேறு வாரியிறைப்பதும் என்பதே அவரது கேடு கெட்ட எண்ணத்திற்க்கு சான்று. இதில் குழலி போன்ற அரசியல் ஓட்டாண்டிகள் அங்கு சென்று தமது ஆதங்கத்தை சொறிந்து விட்டுக் கொண்டு சுகம் காணுவது சீரியஸ் படத்தில் வரும் காமெடி டிராக் போல உள்ளது.


ஒரு சாதாரண சின்ன கட்டுரையின் கருத்தை செறித்து அதனை சரியான தர்க்க அடிப்படையில் விமர்சனம் செய்ய தெரியாமல் பிதற்றியுள்ள இந்த தங்கமணிதான் ஏங்கெல்ஸின் குடும்பம் தனிசொத்து புத்தகத்தை பற்றியும் எழுதியுள்ளது. அவரது கட்டுரையின் ஆரம்ப கட்டங்களீலேயே அவரது உள் நோக்கம் மொத்தமும் அம்பலமாகிவிடுகீற்து. இவரை போன்றவர்கள் சமூக மன்நோயாளிகள். இனி அவர் ஒரு செத்த பாம்பு. அடிக்க ஒன்றுமில்லை. இத்தோடு விடுங்கள் அவரை குழலி போன்ற அரசியல் ஓட்டாண்டிகள் சொறிந்த கொள்ள இவரை போன்ற ஒரு போன்ற உடைந்த பானை சில்லுகளையாவது விட்டு வைப்போம்.


அசுரன்

November 30, 2007
//
இதனை நண்பர் தியாகுவில் பதிவில் நண்பர் அசுரன் எழுதியுள்ளார்.

said...

தற்போதைக்கு ஒரு பதில்.

என் பெயர் தங்கமணி அல்ல.
தமிழ்மணி!

said...

அன்பு நண்பர் அசுரன்,

என்னுடைய பெயரை தங்கமணி என்று எழுதியது இன்னோசண்ட் மிஸ்டேக். அது கிடக்கட்டும்.

//அசுரன் said...
இந்த கட்டுரையை எழுதிய நோக்கம் சரியே ஆயினும் இன்னும் பொறுமையாக சரியான சொற்பிரயோகத்துடன் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இவர் போன்றவர்களுக்கு அவ்ரகளது அல்பத்தனத்தை, முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதுடன் பிறருக்கும் இவரது மோசடியான நோக்கத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுவதன் மூலம் நேர்மையில்லாத இது போன்ற பிராணிகளை விரட்டியடிக்க முடியும். அந்த வகையில் இந்த கட்டுரை ஓரளவு பங்காற்றுகிறது.
//

தாராளமாக என்னை விரட்டியடியுங்கள். பிரச்னையே இல்லை. ஆனால், சரியான வாதத்தின் மூலம் அதனை செய்யுங்கள். நான் இங்கே ஒரு வரியை கூட விடாமல் எடுத்து பதில் எழுதுகிறேன். அவற்றில் எங்கே தவறு இருக்கிறது என்பதினை சுட்டிக்காட்டுங்கள். ஆனால், பிராணி,
ஆட்டுவது, மஞ்சம் விரிப்பது போன்ற வார்த்தைகளால் நான் ஓடிப்போய்விடுவேன் என்று நினைக்காதீர்கள். ஓடமாட்டேன்.

//ஆயினும் முதலில் சொன்ன விமர்சனத்தை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

தங்கமணீ உள்ளிட்டவர்களின் உள் நோகத்தை ஓரளவு இந்த கட்டுரை அம்பலப்படுத்தியுள்ளது.
//
இல்லை. தியாகுவின் பதில்களுக்கு ஏற்கெனவே மறுமொழி எழுதப்பட்டுவிட்டது. முந்தைய பதிவில் பார்க்கலாம்.
அதற்கான பதில்கள் இன்னும் வரவில்லை.

//
குறிப்பாக ஆயுதம் தாங்கிய வன்முறை என்பது நக்சல்பாரிகளைவிட அதி பயங்கரமாக வோட்டு அரசியல் மாபியா கும்பலினாலேயும், இந்து பார்ப்பன பயங்கரவாதிகளாலேயுமே நடைமுறைப்படுத்துப்படும் போது மாவோயிஸ்டுகளை ஒன்றுமில்லாத சப்பை மேட்டருக்கு கைது செய்ததுடன் இல்லாமல் அதை மிகப் பெரியதாக பீதி கிளப்பினார்கள் எனில் அது வேறொன்றூம் இல்லை அது நக்சல்பாரி அரசியல்தான் - This what the whole PuJa article is about. இதை மறுத்து தஙக்மணீ எதுவுமே எழுதவில்லை இன்னும் சொன்னால் தங்கமணியும் இதைத்தான் சொல்கிறார். ஆக, தங்கமணியின் கட்டுரை அதன் தர்க்க அடிப்படையில் புஜாவின் கட்டுரையை எதிர்த்து எழுதப்படவில்லை என்பதும் அவரது நோக்கம் வெறுமே சேறு வாரியிறைப்பதும் என்பதே அவரது கேடு கெட்ட எண்ணத்திற்க்கு சான்று. இதில் குழலி போன்ற அரசியல் ஓட்டாண்டிகள் அங்கு சென்று தமது ஆதங்கத்தை சொறிந்து விட்டுக் கொண்டு சுகம் காணுவது சீரியஸ் படத்தில் வரும் காமெடி டிராக் போல உள்ளது.
//

ஆமாம். சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். மக இகவை தொடாத ஒரு போலீஸ் ஏன் ஆயுதம் தாங்கிய நக்ஸல் பாரிகளை தேடினார்கள் என்பதன் விடையும் இதுதான்.
இரண்டுக்கும் கொள்கை ஒன்றுதான் என்றாலும், தற்போது ஆயுதம் தாங்காத மக இகவை போலீஸ் துரத்தவில்லை.
ஆயுதம் தாங்கிய விஜிலண்ட் குழுக்களை அனுமதிப்பது மக்கள் விரும்பும் சட்டம் ஒழுங்குக்கு கேடு.

//ஒரு சாதாரண சின்ன கட்டுரையின் கருத்தை செறித்து அதனை சரியான தர்க்க அடிப்படையில் விமர்சனம் செய்ய தெரியாமல் பிதற்றியுள்ள இந்த தங்கமணிதான்
//
காட்டுங்களேன். எங்கே பிதற்றியுள்ளேன் என்பதை.
இந்த கட்டுரைகளுக்கு பதிலே எழுதாமல் மறைந்து மறைந்து ஓடுவது யார்?

// ஏங்கெல்ஸின் குடும்பம் தனிசொத்து புத்தகத்தை பற்றியும் எழுதியுள்ளது.
//
அஃறிணையில் திட்டினாலும் ஓடமாட்டேன்.
அதற்கான விமர்சனத்துக்கும் பதில் ஏதும் இல்லை.
எங்கல்ஸ் போன்ற சப்பை மேட்டரை வைத்துக்கொண்டு தொங்கினால் இதுதான் நடக்கும்.


//
அவரது கட்டுரையின் ஆரம்ப கட்டங்களீலேயே அவரது உள் நோக்கம் மொத்தமும் அம்பலமாகிவிடுகீற்து. இவரை போன்றவர்கள் சமூக மன்நோயாளிகள். இனி அவர் ஒரு செத்த பாம்பு.
//
அப்படியா? என்னுடைய வாதங்கள் தவறு என்று நிரூபியுங்களேன்.


// அடிக்க ஒன்றுமில்லை. இத்தோடு விடுங்கள் அவரை குழலி போன்ற அரசியல் ஓட்டாண்டிகள் சொறிந்த கொள்ள இவரை போன்ற ஒரு போன்ற உடைந்த பானை சில்லுகளையாவது விட்டு வைப்போம்.
அசுரன்
//


அடிக்கமுடியவில்லை என்பதை "அடிக்க முடியவிலலை.. சீச்சீ இந்த பழம் புளிக்கும்" என்று எட்டாத கனியை திட்டிவிட்டு ஓடுவது யார்?

Anonym said...

தமிழ்மணி,

ம.க.இ.கவினர் வலைபதிய வந்தது பிரசாரம் செய்யத்தான்.விவாதம் செய்ய அல்ல.விவாதம் செய்ய அறிவு வேண்டும்,வாதத்திறன் வேண்டும்.பிரச்சாரம் செய்ய சத்தம்போட்டு பேசதெரிந்தால் போதும்.

அவர்களுடன் நீங்கள் விவாதம் செய்வது வீண்.கம்யூனிசத்தை தோலுரிக்கும் கட்டுரைகள் ஸ்டாலின்,மாவோ ஆகியோரின் ஆட்சிகளை பற்றிய உண்மைகளை எழுதினாலே போதும், அவர்கள் ஆட்டம் தானாக முடிவுக்கு வந்துவிடும்.

said...

பின்னூட்டத்துக்கு நன்றி அனானி

ஸ்டாலின் லெனின் மாவோ வகையறாக்கள் செய்ததை எல்லாம் செய்யவே இல்லை என்று புளுகிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆகவேதான், அடிப்படையையே கேள்வி கேட்கிறேன்.

பதில்தான் சொல்வாரில்லை.

Anonym said...

என்னய்யா இது?
அவனவன் தனக்கு அறிவுஜீவி பட்டம் வேண்டுமென்பதற்காக இடதுசாரி, கம்யூனிஸ்டு என்று அலம்பல் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

ஒருவர் கூடவா உங்களோடு விவாதிக்க வரவில்லை?

இவ்வளவுதானா இந்த இடதுசாரித்தனம்?
இவ்வளவுதானா கம்யூனிஸம்?

said...

உங்களது இப்பதிவு அசுரனுக்கான பதில் என்பதை கூட புரிந்து கொள்ளாது இது ஏதோ டோண்டுவுக்கான பதில் என்று எண்ணி பின்னூட்டம் இட்டவர்கள் சிலர். அதாவது இந்த ஒரு பதிவைக் கூட சரியாக படிக்காதவர்கள்.

இவர்களுடன் எல்லாம் விவாதித்து என்ன ஆகப்போகிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

நன்றி நண்பர் டோண்டு ராகவன்,

அவர்கள் முக்கியமல்ல.

அசுரன், தியாகு,ஜமாலன், இன்னும் இதர இடதுசாரிகளே நோக்கம்.

இவர்கள் இடதுசாரி சித்தாந்தங்களை கூர்ந்து படித்தவர்கள். மார்க்ஸ், எங்கல்ஸ் என்று மேற்கோள் காட்டக்கூடியவர்கள்

அவர்களுடன் தான் வாதம்

நன்றி

அனானி said...

அதாவது அறிவுஜீவியான தமிழ் மணியை யாரும் ஜெயிக்க முடியலையாம்

ஹ ஹா நல்ல ஜோக் தமிழ் மணி உனக்கு நீயே அனானியா வந்து பின்னூட்டி கிட்டா நீ அறிவாளிய அறிவு ஜீவி

வாழ்க உன் விவாத முறை

உங்க அக்கா புருசன் said...

/விலங்குகள் என்று எல்லா விலங்குகளையும் ஒரே கூண்டில் அடைக்கமுயலும் அசட்டுத்தனம் இது. நாம் சற்றே வந்த பாதையைத்தான் பார்க்கவேண்டுமே தவிர, அமீபாக்களுக்கா நாம் போக முடியும்?
குடும்பம் என்பது குரங்களிலேயே இருக்கும்போது அது எப்படி மனிதர்களிடம் இயற்கைக்கு மாறான விஷயமாக இருக்கும்? மறுபடி லூயிஸ் மார்கன் பிதற்றியது இன்னும் தொடர்கிறது.
குடும்பம் / குடும்ப உறவுகள் ஆகியவை குழந்தைகளை பாதுகாப்பதற்கு உதவுவதற்காக உருவானவை. அதனை கட்சி கொள்கைக்காக தனியுடமை பொதுவுடமை என்று பிதற்றி திரிந்தால் என்ன செய்வது?//

அடே லூசு

குரங்கு புணர்வது போல புணரனும்னு சொல்லியா கம்யுனிஸ்டு கட்சி சொல்லுது அல்லது அசுரந்தான் சொன்னாரா என்ன எழுதி இருக்குன்னு படிக்காம்
உங்க ஆயா இதுல சொறி வந்ததுன்னு ஏண்டா எழுதுற

said...

நண்பர் "அக்கா புருஷன்" அவர்களே,

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், உண்மையில் கம்யூனிஸ்டு கட்சி அப்படித்தான் சொல்கிறது.

கம்போடியாவில் போல்பாட் என்ற கேனக்கிறுக்கன் செய்த விஷயங்களை சற்றே படித்துப்பாருங்கள்.

குடும்பம் ஆகியவை எல்லாம் தனியுடமைக்கு வழிகோலும் என்பதால் குடும்பத்தை அழிக்க சகோதர சகோதரிகள், தாய் மகன் ஆகியோரை ஒரே அறைக்குள் நிர்வாணமாய் அடைத்து வைத்தவன் அவன்.

தமிழ்நாட்டு பத்திரிக்கைகளில் இந்த விஷயங்கள் எல்லாம் வரவில்லை என்ப்தால், அவை வரலாறு அல்ல என்று ஆகிவிடாது.

கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று பிதற்றாதீர்கள்.

said...

//அதாவது அறிவுஜீவியான தமிழ் மணியை யாரும் ஜெயிக்க முடியலையாம்
//

அன்பான கம்யூனிச அனானி நண்பரே,

நான் தோல்வி அடைய தயாராக இருக்கிறேன்.

வாதிட வாருங்களேன். ஏன் உங்களது பக்கங்களில் வெறும் அவதூறான வார்த்தைகளை எழுதிவிட்டு போகிறீர்கள்?

வத்தலகுண்டு said...

//நான் தோல்வி அடைய தயாராக இருக்கிறேன்.

வாதிட வாருங்களேன//

முட்டாலை தோற்கடிச்சும் பிரயோசனம் இல்லை
ஜெயித்தும் பிரயோசனம் இல்லை

said...
Dieser Kommentar wurde vom Autor entfernt.
said...

மனிதரிடையே ஏற்றத்தாழ்வுகள் என்றுமே இருக்கதான் செய்யும். அதை சமபடுத்தும் முயற்சியாக அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்க சக மனிதர்கள் உதவவேண்டும். கம்யூனிஸம் இதை தான் வழியுறுத்துகிறது. இது வரை சரிதான். ஆனால், சம வசதி-வாய்ப்புகளை வழங்கினால் போதும் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு முற்றிலும் உதிர்ந்து விடும் என்று கனவு காணும் இடம் தான் கம்யூனிஸ்ட்டுகள் தடுக்கி விழும் இடம். அவர்களின் முதிர்ச்சியற்ற தன்மையை தான் இது போன்ற சிந்தனைகள் காட்டுகிறது. ஒருவரால் மற்றொருவரை போலவே சிறப்பாக செயல்பட முடியும் என்பது தவறான எண்ணம். அனைவரும் ஒரே அளவிலான திறமையானவர்கள் என்று கூறுவது அபத்தம். ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய திறமை மிகுந்தவர்கள் தங்களை விட திறமை குறைந்தவர்களை பார்த்து "ஓரம் போ" என்று கூறாமல், அவர்களையும் மேலே உயர்த்துவதை பற்றி சிந்தித்தாலே போதும். எல்லா கலாச்சாரங்களும், ஏதோ ஒரு வகையில் இந்த சிந்தனையைத்தான் வலியுறுத்துகின்றது. அதனால், இது போன்ற சிந்தனைகளை மனிதரிடையே விதைப்பதற்க்கு கம்யூனிஸம் அவசியமல்ல.

மேலும், "ஒருவரால் மற்றொருவரை போல் சிறப்பாக செயல்பட முடியும் என்பது தவறான எண்ணம்" என்று ஒருவர் கூறினால், அப்படி கூறுபவர்களை "பார்ப்பனீயம்" என்று முத்திரை குத்தி வசதியாக ஒதுக்குவது தான் கம்யூனிஸ்ட்டுகளின் இயல்பு.

பிற்காலத்தின் மரபணுவியலை டார்வினின் தத்துவம் உள்வாங்கி நியோ-டார்வினியமாக பரிணமிக்கிறது. ஆனால், கம்யூனிஸம் இன்னும் பழைய டார்வினியத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. விமர்சத்து யாராவது பேசினால், ஸ்டாலினுக்கு ஒரு லைசென்கோ கிடைத்ததை போல இவர்களுக்கு வேறு யாரும் கிடைக்கமாட்டார்களா என்ன?

said...

//வத்தலகுண்டு said...
முட்டாலை தோற்கடிச்சும் பிரயோசனம் இல்லை
ஜெயித்தும் பிரயோசனம் இல்லை
//

இங்கே யார் முட்டாள் என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டுமே.

கையில் ஆயுதத்தோடுதான் நான் விவாதிப்பேன்.
ஒத்துக்கொள்வதும் ஒத்துக்கொள்ளாததும் உன் பிரச்னை என்றா நான் சொல்கிறேன்?
:-))

said...

நன்றி அரி,

//அதை சமபடுத்தும் முயற்சியாக அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்க சக மனிதர்கள் உதவவேண்டும். கம்யூனிஸம் இதை தான் வழியுறுத்துகிறது. //

அப்படியா என்று கம்யூனிஸ்டுகள்தான் கூற வேண்டும்.

ஆனால் நடைமுறையில் அப்படி நடக்கவில்லை.
எல்லோரையும் சமமாக ஆக்க வேண்டும் என்று திறமை படைத்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.

உதாரணமாக, போல்போட்டின் கம்யூனிஸ்ட் சமூகத்தில், யாரெல்லாம் படித்தவர்களோ அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டார்கள். இதில் எஞ்சினியர்கள், டாக்டர்கள், கல்லூரி பேராசிரியர்கள், எல்லோரும் அடக்கம்.

மற்றவர்கள் எல்லோரும் "புராதன பொதுவுடமை சமுதாயத்திற்கு" கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டார்கள்.

(ஆனால், போல்போட்டின் சிவப்பு கெமர் கட்சி ஆட்கள் மட்டும் எல்லா மேலைநாட்டு தொழில்நுட்ப தயாரிப்புகளை பயன்படுத்தினார்கள்! மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது!)

Anonym said...

//மற்றவர்கள் எல்லோரும் "புராதன பொதுவுடமை சமுதாயத்திற்கு" கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டார்கள்.//

புராதன பொதுவுடமை சமுதாயத்துக்கு இவர்கள் செய்யும் வக்காலத்தை பார்த்தால், இவர்கள் போல் போட் செய்ததை திரும்பியும் செய்யக்கூடியவர்கள் போலத்தான் தோன்றுகிறது

said...

/* நன்றி அரி,*/

தனி தமிழ் கோஷ்டியில் நீங்களும் ஒருவரா? :)

"ஹரி" எனறு தட்டச்சுங்கள் என்று கேட்டு கொள்கிறேன்.

சிறப்பான பணியை செய்து வருகிறீர்கள், தொடருங்கள். எனக்கு தெரிந்ததை அவ்வப்போது நானும் பேசுகிறேன்.

பரி said...

//"ஹரி" எனறு தட்டச்சுங்கள் என்று கேட்டு கொள்கிறேன்.//

ஏன் ஹரி என்று எழுதினால்தான் இந்த பாப்பார பன்னாடைக்கு இனிக்குமோ?

said...

/*ஏன் ஹரி என்று எழுதினால்தான் இந்த பாப்பார பன்னாடைக்கு இனிக்குமோ?*/

இது என்ன கம்யூனிஸ பத்வா-வா?

என் பெயர் எப்படி எழுதப்பட வேண்டும் என்று கூற எனக்கு உரிமை உண்டு. அதை கூறினால் உங்களுக்கு ஏன் ஐயா பொத்துக் கொண்டு வருகிறது.

நல்லா இருக்குப்பா உங்க "முற்போக்கு" சமூகம்.

said...

சரி நண்பர் ஹரி,
அப்படியே எழுதுகிறேன்.
உங்கள் விருப்பம்.

Anonym said...

எங்கல்"ஸ்", மார்க்"ஸ்", கம்யூனி"ஸ"ம் ஆகியவற்றை எழுதும்போது பரிக்கு ஏன் கோபம் வரவில்லை?

said...

நண்பர் அசுரன் இந்த பதிவுக்கு பதில்
எழுதியுள்ளார்.

பதிலுக்கு மிகுந்த நன்றி!


---

பொதுவுடமை சமூகமும், அல்பவாத தவளையின் கிணற்று விட்டமும்!!
தமிழ்மணி என்பவர் பொதுவுடமை சமூகம் குறித்து அசுரனில் வந்த கட்டுரை ஒன்றுக்கு பதில் என்ற பெயரில் ஒரு எதிர்வினை எழுதியுள்ளார். அவரது இன்னபிற உளறல்களுடன் ஒப்பிடும் பொழுது இந்த கட்டுரையில் ஓரளவு முயற்சி செய்துள்ள அதே வேளையில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் வேலையையும் செய்துள்ளார் என்பதால் இந்த வாய்ப்பை பய்ன்படுத்திக் கொள்ளும் முகமாக இந்த எதிர் கட்டுரை. அவரது சேறடிக்கும் கயமையான முயற்சி குறித்து நாம் வைத்த அனைத்து விமர்சனங்களையும் உண்மையாக்கும் வகையில் அவரது இந்த கட்டுரை இருப்பதுடன். பொதுவுடமை குறித்து அவர் எழுப்பிய அல்பத்தனமான கேள்விகளின் அடிப்படையில் ஒரு உருப்படியான சுற்றுலா செல்லும் வகையிலும் இருப்பதால இந்த கட்டுரை. மற்றபடி விவாதம் செய்யும் நோக்கம் அவருக்கு கிஞ்சித்தும் கிடையாது. அப்படி ஒரு நேர்மையான அணுகுமுறையில் இருப்பவர் என்றால் ஸ்திரமாக நின்று விசயங்களில் விவாதம் செய்ய வேண்டும். அப்படி ஒரு நடைமுறையை அவர் இது வரை காட்டவில்லை. இந்த கட்டுரையில் எழுப்பியுள்ள அடிப்படை கேள்விகளில் விவாதம் செய்ய இங்கேயே வரலாம். பிறரது பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது. அவர் வரலாம். ஏனேனில் அவரது எதிர்வினைகளைப் போலவே அவரது அனானி ஆட்டங்களும் நேர்மையின்றி உள்ளன.

தமிழ்மணியின் கட்டுரை: http://thamizmani.blogspot.com/2007/12/blog-post.html

எனது பழைய கட்டுரை: டோண்டுவின் போலித்தனம் - கம்யுனிசம்

மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு என்பதை ரொம்ப மேலோட்டமாக புரிந்து கொண்டு அவர் முதலில் பதில் சொல்கிறார். அவர் எதிர்வினை புரிந்த அசுரன் கட்டுரையின் கீழேயே கம்யுனிச சமூகத்தில் மனிதர்களிடையே எந்த அம்சங்களில் வேறுபாடு இருந்தது என்பதும் எந்த அம்சத்தில் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்(இதற்க்கும் தமிழ்மணி எதிர்வினை புரிந்துள்ளார்). குறிப்பாக ஏற்றத்தாழ்வு என்ற சொல்லாடலே தவறு.

முதல் விசயம், மனிதர்களிடையே வேறுபாடு இருந்திருக்குமா? இருந்திருக்கலாம். ஆனால் இங்கு புரதான கம்யுனிச சமூகம் என்ற அம்சத்தில் நாம் குறிப்பிடும் விசயம் இவர்கள் சொல்கின்ற வேறுபாடுகள் அல்ல. ஒரு புரதான பொதுவுடைமை சமூக கூட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினனும் கிட்டத்தட்ட ஒரே விதமான உடல், அறிவு பலமே கொண்டிருப்பர். பெரிய வேறுபாடெல்லாம் வெளி தெரிந்திருக்கக் கூடிய அளவு அங்கு நவீனமான உற்பத்தியோ வேறு நடவடிக்கைகளோ கிடையாது என்கிற போது இவர்கள் குறிப்பிடுகிற வேறுபாடுகள் குறித்த கேள்விக்கே இடமில்லை. இதே விசயம் நவீன விஞ்ஞான பொதுவுடைமை சமுதாயத்தில் எப்படி இருக்கும் என்பதை தனியாக பார்க்கலாம். புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை அப்படியே பயன்படுத்திக் கொள்வதும், வேட்டைத் திறன், இயற்கை குறித்த அறிவு உள்ளிட்டதும் மட்டுமே அங்கு அ செவர்களிநயே ஏற்படுத்தும் வேறுபாடு. இதுவும் பிரதானமாக அனுபவம் சார்ந்தது.

அதாவது வளங்களின் மீதான பகிர்வு, பொது அறிவு இவை குறித்தானதாக இருக்கீறது சம்த்துவம் என்ற வார்த்தைப் பயன்பாடு. தமிழ்மணியோ அவற்றை பாத்ரூம் போவது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தி அதனை வாதம் என்ற பெயரில் வைக்கீறார். இந்த அம்சத்தில்தான்(வளங்களின் மீதான பகிர்வு, பொதுஅறிவு) மனிதர்களிடையேயான வேறுபாடு தனியுடைமை சமூகத்தில் ஏற்படுகீறது. இந்த வேறுபாடு பொதுவுடைமை சமூகத்தில் இருக்காது. பொது அறிவு விசயத்தில் இன்றைய சமூக அளவுகோல் கொண்டே அவரும் பேசுகிறார். அதாவது மனிதர்களிடையே அறிவு ஓப்பீடை வைத்து புத்திசாலி, முட்டாள் என்று பிரிக்கும் தனியுடைமை சமூக ஒப்பீடு அவரது சிந்தனைக்கு அடிப்படை. உண்மையில் இந்த ஒப்பீடு மனிதர்களிடையே முரன்பாடு இருப்பதானேலேயே உருவாகிறது. பொதுவுடைமை சமூகத்தில் இயற்கையுடனே முரன்பாடு இருக்கும். அங்கு புத்திசாலி, முட்டாள் என்று மனித்ர்களை த்ரம் பிரிக்கும் அவசியம் இருக்காது. ஏனேனில் அங்கு தனிமனிதன் என்று ஒருவனை அடையாளப்படுத்துவதற்க்கான் சமூக பொருளாதார அடிப்படைகள் தகர்க்கப் பட்டிருக்கும். அந்தளவில் அந்த சமூகத்தினுடைய பண்பாட்டு வளர்ச்சியிருக்கும்(ஒரு ஆண்டான் அடிமை சமூக பண்பாடுகள் எப்படி நமக்கு ஒவ்வாத பண்பாடோ அப்படி).

ஒரு குரங்கு நெருப்பில் விழுந்த கறியின் சுவை அறிந்து அதனை விரும்பி உண்ணும் அறிவை கற்றுக் கொள்ளலாம் ஆனால் நெருப்பில் வெந்த கறியை சுவைத்த பிற்பாடு அது ஏன் அவ்வாறு சுவைக்கீறது என்று ஆய்வு செய்து நெருப்பை உருவாக்க குரங்கால் முடியுமா? மிருகங்கள் இயற்கையுடன் முரன்படுவதும் அதனை தமது தேவைக்காக வளைப்பதும் முற்றிலும் வெளி சூழ்நிலைகளால் அவற்றின் ஜீன்களில் திணிக்கப்பட்டவை. ஆனால் மனிதன் அவ்வாறல்ல வெளிச் சூழ்நிலையின் பல்வேறு அனுபவங்களை தொகுத்து ஒரு கலெக்டிவ் அனுபவத்தை வந்தடையும் ஆறாவது அறிவு பெற்றவன். இதுதான் இய்ற்கையுடன் அவன் முரன்படுவது என்ற சொற்றொடரின் அர்த்தம். இயற்கையுடன் மனிதன் முரன்படுவது என்ற இந்த கேள்வி குழந்தைகளுக்கான அறிவியல் பாடங்களில் கூட விரிவாக எளிமையாக விவரிக்கப்படும் விசயம்தான். இவையெல்லாம் தமிழ்மணிக்கு தெரியுமா என்றால், பதில் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவருககு இல்லை. ஏனேனில் நேர்மையாக விவாதம் செய்பவனுக்குத்தான் அது அவசியம். சும்மா வார்த்தைகளின் மீது தமது கருத்துக்களை திணித்து அழிவு வேலை செய்ய உத்தேசித்தவர்களுக்கு அது தேவையில்லை.

குடும்பம் என்கிற விசயத்தில் அந்த கட்டுரையிலிருந்த மைய்யமான ஒரு விசயத்தை வெகு வசதியாக மறைத்துவிட்டே அவர் பேசுகிறார். இதற்க்கு குரங்குகளிடையே கட்டற்ற பாலுறவு கிடையாது என்று வாதம் வைக்கிறார். ஆனால் அசுரன் கட்டுரை எந்த அம்சத்தில் பேசுகிறது என்பதை வார்த்தைகளை பிய்த்து போட்டு மறைக்கிறார். மிருகங்கள் இயற்கை தேர்வின் அடிப்படையில் பல்வேறு வடிவங்களில் தமது சமூக அமைப்புகளையும் உட்பிரிவுகளையும் வைத்துக் கொள்கின்றன. ஆனால் உடலுறவு விசயத்தில் தாயை புணர்வது தவறு, தந்தையை புண்ரக் கூடாது, தங்கை தம்பியை புணரக்கூடாது என்று விதிகள் வகுத்துக் கொண்ட வளர்ச்சி என்பதே இன்றைய குடும்பம் என்ற வடிவத்தின் ஆதி வடிவம். இந்த வடிவம் மனிதனையும் மிருகங்களையும் பிரித்துக் காட்டும் முக்கிய அம்சம் என்ற அடிப்படையில் அந்த வாதத்தை வைத்திருந்தேன். ஆனால் அதனை தனது திரிபுக்காக பயன்படுத்திக் கொண்டார் தமிழ்மணீ. எதையும் ஆழமாக படிக்காமல் சேறடிக்கும் நோக்கத்துடன் அவர் பேசுகிறார் என்று அவர் மீது வைத்த விமர்சனத்தை மேலும் மேலும் உண்மையாக்கி வருகிறார் தமிழ்மணி. கட்டற்ற பாலுறவு என்கிற அம்சத்தை எந்த விதத்தில் அசுரன் கட்டுரை அணுகுகிறது. அதை எப்படி மிருகங்களுக்கும் மனிதனுக்கும் பொருத்தி வேறுபடுத்துகிறது என்பதையெல்லாம் உள்வாங்காமலேயே வார்த்தைகளை பார்த்தவுடன் சேறடிக்க வாய்ப்பு கிடைத்த பரவசத்தில் எழுதி இப்படி அசிங்கப்படுகீறார் தமிழ்மணி. ஆக, இந்த உடலுறவு கட்டுப்பாடுகளில் மனிதன் அது வரையில் இயற்கையிலிருந்த வழக்கத்துக்கு மாறாக சென்றான் என்பதை குறித்தே இந்த பகுதி வருகிறது.

//பூகோளம், நிறம், உடலியல் ரீதியான சிறுசிறு மாற்றங்களே, ஏற்றத்தாழ்வுகளே, மிகப்பெரிதாக ஆம்ப்ளிபை ஆகி பெரிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். //

ஆம் உண்மை இது ஆதிகால இயற்கைக்கு உட்பட்டு வாழ்ந்த மனிதனிடம் இன்றைய மனிதன் இயற்கையை ஆளுமை செய்யும் அளவு வலிமை பெற்றவன். எனவே இந்த அம்சம் அவனிடம் ஏற்படுத்தும் பாதிப்பு ஓப்பிட்டளவில் குறைவே. இத்தனைக்கும் இன்றைய சமூகத்தில் மனிதன் இயற்கையுடன் முரன்படுவது தனது அறிவியல் பலத்திலும் ஓரளவு அமைப்பாக திரண்ட சமூக பலத்திலுமே. விஞ்ஞான பொதுவுடைமை சமூகத்தில் இந்த இரண்டு அம்சத்திலும் மனிதன் ஒரு சமூகமாக இன்னும் அதீதமான பலம் பெற்றிருப்பான் எனும் பொழுது இந்த அவரது எதிர் வாதத்தின் பொருத்தப்பாடு இல்லாமல் போகிறது. அவர் வரலாற்று பொருள்முதல்வாதம், இயங்கியல் குறித்து படித்தால் ஆய்வு செய்யும் முறை குறித்த அறிவு ஓரளவு கிட்டும். மற்றபடி பொதுவுடமை சமூகம் என்பதே இயற்கையுடனான முரன்பாட்டை மட்டுமே கொண்ட ஒரு சமூகம் என்ற அடிப்படையிலேயே இந்த கட்டுரை முழுவதும் உள்ளது. இதன் அர்த்தம் இயற்கையின் நேச்சுரல் செலக்ஸனுக்கும் மனிதன் ஒரு சமூகம் என்ற அளவில் அவனது அறிவு பலத்திற்க்குமான முரன்பாடே கம்யுனிச சமூக வளர்சிக்கான அடிப்படை இயங்கியல் என்பதே ஆகும்.

இங்கு தனியுடைமை என்பதை மனிதன் ஒரு சமூகம் என்ற அளவில் பொருத்திக் காட்டியே குறிப்பிடுகிறேன். ஒரு சமூக கூட்டம் என்ற அளவில் மனிதன் தனது சமூகத்துக்கு உட்பட்ட எல்லா வளங்களையும் பொதுவிலேயே வைத்துக் கொண்டான். யாரும் எதற்க்கும் சொந்தம் கொண்டாடவில்லை. ஆக இந்த அம்சத்திலும் பரவசத் திலகம் தமிழ்மணி அவுட் ஆப் கண்டக்ஸ்டிலேயே பேசுகிறார். இதனை குறிப்பிட்டு டார்வினுடைய கட்டுரை பகுதி ஒன்றையும் குறிப்பிட்டுருந்தேன். அதிலுள்ள கருத்தை விமர்சிக்க பயந்த தமிழ்மணி அதனை முன்னிட்டு முதலாளித்துவம் என்று நான் குறிப்பிட்டிருந்ததை மட்டும் சுட்டி செல்கிறார். ஒருவேளை டார்வின் அசுரனைப் போல அனானி அல்ல என்ற பயமாக இருக்கலாம். அதாவது அசுரனைப் பேசினால் அசுரன் சார்ந்த ஆட்கள் மட்டுமே வாதாடுவார்கள் டார்வினை விம்ர்சிப்பது என்பது அப்படிப்பட்டதல்ல அல்லவா?

கடைசிவரை அசுரன் கட்டுரை எந்த அம்சங்களில் பேசுகீறதோ அது எதையும் பேசாமல் வெறுமே வார்த்தைகளை பிய்த்துப் போட்டு கம்யுனிசத்துக்கு எதிரான தனது மன அரிப்பை சொறிந்து தீர்த்து கொள்ளும் ஒரு மனநோயாளியாகவே தெரிகிறார் தமிழ்மணி.


அசுரன்

Anonym said...

அன்புள்ள அசுரன்

நான் பழைய அனானி.
உங்கள் குறிப்பு :
//அவரது எதிர்வினைகளைப் போலவே அவரது அனானி ஆட்டங்களும் நேர்மையின்றி உள்ளன.//

என் பின்னூட்டத்தில் எங்கே, எப்படி நேர்மையில்லை என்று தெரிவிக்கவும்.
நன்றி

பழைய அனானி

said...

முதலில் நன்றி

//முதல் விசயம், மனிதர்களிடையே வேறுபாடு இருந்திருக்குமா? இருந்திருக்கலாம். ஆனால் இங்கு புரதான கம்யுனிச சமூகம் என்ற அம்சத்தில் நாம் குறிப்பிடும் விசயம் இவர்கள் சொல்கின்ற வேறுபாடுகள் அல்ல. ஒரு புரதான பொதுவுடைமை சமூக கூட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினனும் கிட்டத்தட்ட ஒரே விதமான உடல், அறிவு பலமே கொண்டிருப்பர். பெரிய வேறுபாடெல்லாம் வெளி தெரிந்திருக்கக் கூடிய அளவு அங்கு நவீனமான உற்பத்தியோ வேறு நடவடிக்கைகளோ கிடையாது என்கிற போது இவர்கள் குறிப்பிடுகிற வேறுபாடுகள் குறித்த கேள்விக்கே இடமில்லை. இதே விசயம் நவீன விஞ்ஞான பொதுவுடைமை சமுதாயத்தில் எப்படி இருக்கும் என்பதை தனியாக பார்க்கலாம். புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை அப்படியே பயன்படுத்திக் கொள்வதும், வேட்டைத் திறன், இயற்கை குறித்த அறிவு உள்ளிட்டதும் மட்டுமே அங்கு அ செவர்களிநயே ஏற்படுத்தும் வேறுபாடு. இதுவும் பிரதானமாக அனுபவம் சார்ந்தது.//

இந்த வரி வரைக்கும் அவர் என்னை திட்டிக்கொண்டுதான் இருந்தாரே தவிர, வாதத்தை வைக்கவில்லை. இந்த வரி முதல்தான் அவர் வாதம் ஆரம்பிக்கிறது. ஆகவே அவர் சொல்லும் "முதல் விஷயம்" தொட்டு, என் மறுமொழியை ஆரம்பிக்கிறேன்.
முதலில் புராதன பொதுவுடமை சமுதாயம் என்பதே இல்லை என்பதுதான் என் வாதம். ஆனால் இருப்பது போல கற்பனை செய்துகொண்டு அவர் எழுதுவதை எடுத்துக்கொண்டாலும், அவர் சொல்லும் புராதன் பொதுவுடமை சமுதாயத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரே விதமான உடல், அறிவு பலமே கொண்டிருப்பர் என்று கூறுகிறார். இது நடந்திருக்கக்கூடியதா என்று சற்றே சிந்தித்துப்பாருங்கள். இன்றைக்கும் ஒரே வீட்டில் பிறக்கும் மூன்று சகோதரர்கள் ஒரே மாதிரியான உடல் பலமோ அல்லது அறிவு பலமோ கொண்டிருக்கிறார்களா? இப்படிப்பட்ட தடாலடி வரிகள் மீதுதான் கம்யூனிஸ சித்தாந்தமே அமைக்கப்பட்டிருப்பதால்தான், முதல் கோணல் முற்றும் கோணலாகிறது.
அடுத்து "பெரிய வேறுபாடெல்லாம் வெளி தெரிந்திருக்கக் கூடிய அளவு அங்கு நவீனமான உற்பத்தியோ வேறு நடவடிக்கைகளோ கிடையாது என்கிற போது இவர்கள் குறிப்பிடுகிற வேறுபாடுகள் குறித்த கேள்விக்கே இடமில்லை." என்று இன்னொரு தடாலடி வார்த்தை. ஹண்டர் கேதரர் என்று வழங்கப்படும் பழங்குடி சமூகத்திலும் ஒரு சிலரிடமே (ஷாமன்) தாவரங்கள், மிருகங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு இருக்கிறது. அது அவர்கள் வழியாக பரம்பரை பரம்பரையாகவும், அவர்கள் தலைமையின் கீழும், அந்த அறிவு மற்றவர்களிடம் கொடுக்கப்படுகிறது.

//அதாவது வளங்களின் மீதான பகிர்வு, பொது அறிவு இவை குறித்தானதாக இருக்கீறது சம்த்துவம் என்ற வார்த்தைப் பயன்பாடு. தமிழ்மணியோ அவற்றை பாத்ரூம் போவது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தி அதனை வாதம் என்ற பெயரில் வைக்கீறார். இந்த அம்சத்தில்தான்(வளங்களின் மீதான பகிர்வு, பொதுஅறிவு) மனிதர்களிடையேயான வேறுபாடு தனியுடைமை சமூகத்தில் ஏற்படுகீறது. இந்த வேறுபாடு பொதுவுடைமை சமூகத்தில் இருக்காது. பொது அறிவு விசயத்தில் இன்றைய சமூக அளவுகோல் கொண்டே அவரும் பேசுகிறார். அதாவது மனிதர்களிடையே அறிவு ஓப்பீடை வைத்து புத்திசாலி, முட்டாள் என்று பிரிக்கும் தனியுடைமை சமூக ஒப்பீடு அவரது சிந்தனைக்கு அடிப்படை. உண்மையில் இந்த ஒப்பீடு மனிதர்களிடையே முரன்பாடு இருப்பதானேலேயே உருவாகிறது. பொதுவுடைமை சமூகத்தில் இயற்கையுடனே முரன்பாடு இருக்கும். அங்கு புத்திசாலி, முட்டாள் என்று மனித்ர்களை த்ரம் பிரிக்கும் அவசியம் இருக்காது. ஏனேனில் அங்கு தனிமனிதன் என்று ஒருவனை அடையாளப்படுத்துவதற்க்கான் சமூக பொருளாதார அடிப்படைகள் தகர்க்கப் பட்டிருக்கும். அந்தளவில் அந்த சமூகத்தினுடைய பண்பாட்டு வளர்ச்சியிருக்கும்(ஒரு ஆண்டான் அடிமை சமூக பண்பாடுகள் எப்படி நமக்கு ஒவ்வாத பண்பாடோ அப்படி).//

ஏதோ ஒரு பழங்குடி சமூகத்தில் வளங்களின் மீதான பகிர்வு. பொது அறிவு என்பதில் சமத்துவம் இருக்கிறது என்று இன்னொரு தடாலடி அடிக்கிறார்கள். அப்படி இருக்குமாயின், ஏன் பல்வேறு பழங்குடி சமூகங்களின் மத்தியில் போர்கள் தோன்றுகின்றன? ஒரு பழங்குடி இனமும் மற்றொரு பழங்குடி இனமும் தங்களது ஏரியாவுக்காகவும், வளங்களுக்கான போட்டிகளுக்காகவும் போரில் இறங்குகிறார்கள். இத்தனைக்கும் ஹண்டர் கேதரர் சமூகங்கள். ஒவ்வொரு பழங்குடி சமூகமும் தங்கள் பரப்புக்காக போரில் இறங்கவும், தங்கள் ஏரியாவை காப்பாற்றிக்கொள்ளவும் போரில் இறங்கும் நிலை இருக்கும்போது, எவ்வாறு வளங்களின் மீதான பகிர்வு எண்ணமோ, அல்லது பொது அறிவில் இருக்கும் சமத்துவமோ இருக்கிறது என்று கூறவியலும்?

//ஒரு குரங்கு நெருப்பில் விழுந்த கறியின் சுவை அறிந்து அதனை விரும்பி உண்ணும் அறிவை கற்றுக் கொள்ளலாம் ஆனால் நெருப்பில் வெந்த கறியை சுவைத்த பிற்பாடு அது ஏன் அவ்வாறு சுவைக்கீறது என்று ஆய்வு செய்து நெருப்பை உருவாக்க குரங்கால் முடியுமா? மிருகங்கள் இயற்கையுடன் முரன்படுவதும் அதனை தமது தேவைக்காக வளைப்பதும் முற்றிலும் வெளி சூழ்நிலைகளால் அவற்றின் ஜீன்களில் திணிக்கப்பட்டவை. ஆனால் மனிதன் அவ்வாறல்ல வெளிச் சூழ்நிலையின் பல்வேறு அனுபவங்களை தொகுத்து ஒரு கலெக்டிவ் அனுபவத்தை வந்தடையும் ஆறாவது அறிவு பெற்றவன். இதுதான் இய்ற்கையுடன் அவன் முரன்படுவது என்ற சொற்றொடரின் அர்த்தம். இயற்கையுடன் மனிதன் முரன்படுவது என்ற இந்த கேள்வி குழந்தைகளுக்கான அறிவியல் பாடங்களில் கூட விரிவாக எளிமையாக விவரிக்கப்படும் விசயம்தான். இவையெல்லாம் தமிழ்மணிக்கு தெரியுமா என்றால், பதில் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவருககு இல்லை. ஏனேனில் நேர்மையாக விவாதம் செய்பவனுக்குத்தான் அது அவசியம். சும்மா வார்த்தைகளின் மீது தமது கருத்துக்களை திணித்து அழிவு வேலை செய்ய உத்தேசித்தவர்களுக்கு அது தேவையில்லை.//

இயற்கையுடன் முரண்படுவது என்பதற்கான புது விளக்கத்தை அவர் அளித்துள்ளார். ஜீன்கள் மூலம் கொடுக்கப்பட்டால் அது இயற்கையுடன் முரண்படுவது இல்லை. தன் அனுபவ ரீதியாக ஒருவன் கற்றறிந்த விஷயங்களை வைத்து அதன் மூலமாக அவன் செய்யும் விஷயங்கள்தான் இயற்கையுடன் முரண்படுவது என்று கூறுகிறார். நமது மூளையும் ஜீன்களால் கொடுக்கப்பட்டதுதான். அனுபவங்களை தொகுத்து சிந்திக்கும் அமைப்பும் ஜீன்களால் கொடுக்கப்பட்டதுதான். அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட கற்றுக்கொள்ளும் திறன் மனிதர்களுக்கு மட்டுமல்ல, குரங்குகளுக்கும், யானைகளுக்கும்,மற்ற விலங்கினங்களுக்கும் உண்டு. தன் அனுபவத்தின் வழியே எந்த வழியை தேர்ந்தெடுப்பது தனக்கு பிரயோசனமானது என்பது நாய்களுக்கும் தெரியும். பாவ்லோவ் பரிசோதனைகளை ஞாபகப்படுத்துகிறேன்.

//குடும்பம் என்கிற விசயத்தில் அந்த கட்டுரையிலிருந்த மைய்யமான ஒரு விசயத்தை வெகு வசதியாக மறைத்துவிட்டே அவர் பேசுகிறார். இதற்க்கு குரங்குகளிடையே கட்டற்ற பாலுறவு கிடையாது என்று வாதம் வைக்கிறார். ஆனால் அசுரன் கட்டுரை எந்த அம்சத்தில் பேசுகிறது என்பதை வார்த்தைகளை பிய்த்து போட்டு மறைக்கிறார். மிருகங்கள் இயற்கை தேர்வின் அடிப்படையில் பல்வேறு வடிவங்களில் தமது சமூக அமைப்புகளையும் உட்பிரிவுகளையும் வைத்துக் கொள்கின்றன. ஆனால் உடலுறவு விசயத்தில் தாயை புணர்வது தவறு, தந்தையை புண்ரக் கூடாது, தங்கை தம்பியை புணரக்கூடாது என்று விதிகள் வகுத்துக் கொண்ட வளர்ச்சி என்பதே இன்றைய குடும்பம் என்ற வடிவத்தின் ஆதி வடிவம். இந்த வடிவம் மனிதனையும் மிருகங்களையும் பிரித்துக் காட்டும் முக்கிய அம்சம் என்ற அடிப்படையில் அந்த வாதத்தை வைத்திருந்தேன். ஆனால் அதனை தனது திரிபுக்காக பயன்படுத்திக் கொண்டார் தமிழ்மணீ. எதையும் ஆழமாக படிக்காமல் சேறடிக்கும் நோக்கத்துடன் அவர் பேசுகிறார் என்று அவர் மீது வைத்த விமர்சனத்தை மேலும் மேலும் உண்மையாக்கி வருகிறார் தமிழ்மணி. கட்டற்ற பாலுறவு என்கிற அம்சத்தை எந்த விதத்தில் அசுரன் கட்டுரை அணுகுகிறது. அதை எப்படி மிருகங்களுக்கும் மனிதனுக்கும் பொருத்தி வேறுபடுத்துகிறது என்பதையெல்லாம் உள்வாங்காமலேயே வார்த்தைகளை பார்த்தவுடன் சேறடிக்க வாய்ப்பு கிடைத்த பரவசத்தில் எழுதி இப்படி அசிங்கப்படுகீறார் தமிழ்மணி. ஆக, இந்த உடலுறவு கட்டுப்பாடுகளில் மனிதன் அது வரையில் இயற்கையிலிருந்த வழக்கத்துக்கு மாறாக சென்றான் என்பதை குறித்தே இந்த பகுதி வருகிறது.//

அதற்குத்தான் மீண்டும் வருகிறேன். மிருகங்கள் போலவே மனிதனும் இயற்கை தேர்வின் அடிப்படையில்தான் தன் குடும்பத்தை அமைத்துக்கொண்டான். ஏதோ மனிதனுக்கு இயற்கை தேர்வின் தேவைகள், கட்டுப்பாடுகள் இல்லாமல் தானாக சிந்தித்து குடும்ப விதிகளை அமைத்துக்கொண்டான் என்று நினைப்பது பேதைமை. அவனது சிந்தனையும் ஜீன்களின் கட்டளைகள் மூலம் தான் அடிப்படையும் வடிவமைப்பும் நடத்தபப்டுகின்றன.


//
//பூகோளம், நிறம், உடலியல் ரீதியான சிறுசிறு மாற்றங்களே, ஏற்றத்தாழ்வுகளே, மிகப்பெரிதாக ஆம்ப்ளிபை ஆகி பெரிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். //

ஆம் உண்மை இது ஆதிகால இயற்கைக்கு உட்பட்டு வாழ்ந்த மனிதனிடம் இன்றைய மனிதன் இயற்கையை ஆளுமை செய்யும் அளவு வலிமை பெற்றவன். எனவே இந்த அம்சம் அவனிடம் ஏற்படுத்தும் பாதிப்பு ஓப்பிட்டளவில் குறைவே. இத்தனைக்கும் இன்றைய சமூகத்தில் மனிதன் இயற்கையுடன் முரன்படுவது தனது அறிவியல் பலத்திலும் ஓரளவு அமைப்பாக திரண்ட சமூக பலத்திலுமே. விஞ்ஞான பொதுவுடைமை சமூகத்தில் இந்த இரண்டு அம்சத்திலும் மனிதன் ஒரு சமூகமாக இன்னும் அதீதமான பலம் பெற்றிருப்பான் எனும் பொழுது இந்த அவரது எதிர் வாதத்தின் பொருத்தப்பாடு இல்லாமல் போகிறது. அவர் வரலாற்று பொருள்முதல்வாதம், இயங்கியல் குறித்து படித்தால் ஆய்வு செய்யும் முறை குறித்த அறிவு ஓரளவு கிட்டும். மற்றபடி பொதுவுடமை சமூகம் என்பதே இயற்கையுடனான முரன்பாட்டை மட்டுமே கொண்ட ஒரு சமூகம் என்ற அடிப்படையிலேயே இந்த கட்டுரை முழுவதும் உள்ளது. இதன் அர்த்தம் இயற்கையின் நேச்சுரல் செலக்ஸனுக்கும் மனிதன் ஒரு சமூகம் என்ற அளவில் அவனது அறிவு பலத்திற்க்குமான முரன்பாடே கம்யுனிச சமூக வளர்சிக்கான அடிப்படை இயங்கியல் என்பதே ஆகும்.//

எப்போதும் இருக்கமுடியாது. கற்பனையில் உருவாகும் கம்யூனிஸ சமூகங்களில் கூட சூழ்நிலை, பௌதீக பாதிப்பில்லாத மனிதன் இருக்கமுடியாது. சமூக விதிகள் பலம் பெற பெற, மனிதனின் பலம் குறைந்துகொண்டேதான் போகுமே அன்றி அதிகரிக்காது. சோசலிஸ சமூகங்களில் மனிதன் பலம் பெறுவான் என்ற வாதம், அந்த சோசலிஸ தலைவர்கள் அதிகமான சர்வாதிகாரம் பெற்றதில்தான் முடிந்ததே தவிர மனிதன் பலம் பெறவும் இல்லை. ஏன் அடிப்படை சுதந்திரம் கூட மறுக்கப்பட்டான்.

//இங்கு தனியுடைமை என்பதை மனிதன் ஒரு சமூகம் என்ற அளவில் பொருத்திக் காட்டியே குறிப்பிடுகிறேன். ஒரு சமூக கூட்டம் என்ற அளவில் மனிதன் தனது சமூகத்துக்கு உட்பட்ட எல்லா வளங்களையும் பொதுவிலேயே வைத்துக் கொண்டான். யாரும் எதற்க்கும் சொந்தம் கொண்டாடவில்லை. ஆக இந்த அம்சத்திலும் பரவசத் திலகம் தமிழ்மணி அவுட் ஆப் கண்டக்ஸ்டிலேயே பேசுகிறார். இதனை குறிப்பிட்டு டார்வினுடைய கட்டுரை பகுதி ஒன்றையும் குறிப்பிட்டுருந்தேன். அதிலுள்ள கருத்தை விமர்சிக்க பயந்த தமிழ்மணி அதனை முன்னிட்டு முதலாளித்துவம் என்று நான் குறிப்பிட்டிருந்ததை மட்டும் சுட்டி செல்கிறார். ஒருவேளை டார்வின் அசுரனைப் போல அனானி அல்ல என்ற பயமாக இருக்கலாம். அதாவது அசுரனைப் பேசினால் அசுரன் சார்ந்த ஆட்கள் மட்டுமே வாதாடுவார்கள் டார்வினை விம்ர்சிப்பது என்பது அப்படிப்பட்டதல்ல அல்லவா?//

அது டார்வின் எழுதியது என்று முதலில் நிரூபியுங்கள். அது டார்வின் எழுதியது அல்ல என்று நான் நிரூபிக்கிறேன்

அது டார்வின் கட்டுரையின் பகுதி அல்ல. டார்வினின் கட்டுரையாக இருந்தாலும் கூட, டார்வின் சொன்னார் என்பதாலேயே அதனை ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் எவருக்கும் இல்லை. அறிவியல் மத வெறி அல்ல. டார்வின் எழுதியது வேதமும் அல்ல.

//கடைசிவரை அசுரன் கட்டுரை எந்த அம்சங்களில் பேசுகீறதோ அது எதையும் பேசாமல் வெறுமே வார்த்தைகளை பிய்த்துப் போட்டு கம்யுனிசத்துக்கு எதிரான தனது மன அரிப்பை சொறிந்து தீர்த்து கொள்ளும் ஒரு மனநோயாளியாகவே தெரிகிறார் தமிழ்மணி.//

தவறான மேற்கோள்கள், அவசரகுடுக்கை புரிதல்கள், அறிவியல் ஆய்வை சமூகத்தின் மீது சர்வாதிகாரம் செலுத்தவும், மக்களது தனித்தன்மையை மறுத்து அவர்களை எந்திரங்களாக பார்க்கும் சமூக பரிசோதனைகளுக்கும் உபயோகப்படுத்தும் கூறுகெட்ட தனம் இவையெல்லாம் கொண்ட மனநோயாளிகளான போல்போட், ஹிட்லர், லெனின், மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரை பார்க்கும் போது என்னை மனநோயாளி என்பதை சொல்லும் இவர் நகைப்புக்கிடமானவராகத்தான் தெரிகிறார்

Anonym said...

இணைய ரஜினியாகவேண்டுமென ஆசைப்பட்ட அசுரனை மன்னாரன் கம்பெனி டணால் தங்கவேலுவாக ஆக்கிவிட்டீர்களே!

வத்தலகுண்டு said...

எக்ஸ்கூஸ் மீ இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கேட்கும் காமடியன் தான் தமிழ் மணி

நீங்கள் வந்து என்ன விளக்கம் சொன்னாலும் உங்களை லூசாக்கிடுவார்

அசுரன் ஓடிப்போய் இந்த லூசுக்கு பதில் அளிக்காமல் இருப்பது நீங்கள் போட்டிருக்கும் சட்டைக்கு நல்லது

வத்தலகுண்டு said...

//எப்போதும் இருக்கமுடியாது. கற்பனையில் உருவாகும் கம்யூனிஸ சமூகங்களில் கூட சூழ்நிலை, பௌதீக பாதிப்பில்லாத மனிதன் இருக்கமுடியாது. சமூக விதிகள் பலம் பெற பெற, மனிதனின் பலம் குறைந்துகொண்டேதான் போகுமே அன்றி அதிகரிக்காது. சோசலிஸ சமூகங்களில் மனிதன் பலம் பெறுவான் என்ற வாதம், அந்த சோசலிஸ தலைவர்கள் அதிகமான சர்வாதிகாரம் பெற்றதில்தான் முடிந்ததே தவிர மனிதன் பலம் பெறவும் இல்லை. ஏன் அடிப்படை சுதந்திரம் கூட மறுக்கப்பட்டான்.
//
அட இந்த தமிழ் மணி லூசு பயதான் என்பதை நிரூபிக்கிறான் அசுரன் .

இயற்கைக்கு மனிதனுக்கும் இருக்கும் முரண்பாடுகள் நவீன பொதுவுடமை சமூகத்தில் இருக்கும் ஆனால் மனிதனுக்கும் மனிதனுக்கும் இருக்கும் முரண்பாடு இருக்காது அது சோசலிசத்தில் மறைந்து விடும் என அழகாக விளக்கி சொல்கிறது .

ஆனால் இந்த செவுட்டு முண்டம் மீண்டும் மீண்டும் அவங்க அப்பத்தா கோமணம் மாதிரி காதில வாங்கமத்தான் பேசுது பாருங்க

இடையில் இந்த கிறுக்கன் பழைய அனானி வேற , இரண்டு லூசுகிட்டயும் மாட்டிகிட்டு தவிக்க போறீங்க போங்க

வத்தலகுண்டு said...

//தவறான மேற்கோள்கள், அவசரகுடுக்கை புரிதல்கள், அறிவியல் ஆய்வை சமூகத்தின் மீது சர்வாதிகாரம் செலுத்தவும், மக்களது தனித்தன்மையை மறுத்து அவர்களை எந்திரங்களாக பார்க்கும் சமூக பரிசோதனைகளுக்கும் உபயோகப்படுத்தும் கூறுகெட்ட தனம் இவையெல்லாம் கொண்ட மனநோயாளிகளான போல்போட், ஹிட்லர், லெனின், மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரை பார்க்கும் போது என்னை மனநோயாளி என்பதை சொல்லும் இவர் நகைப்புக்கிடமானவராகத்தான் தெரிகிறார்//

சரி நீ என்ன புரிதல் வைச்சுருக்கே அதை சொல்லுடா சோமாறி

நீ மனநோயாளிதானே ஏனென்றால் லூசுதான் எதை சொன்னாலும் மறுத்துகிட்டே இருக்கும் பதில் சொல்ல தெரியாது .

டார்வின் சொன்னத இவரு மறுப்பாராம் ஆனா சமூகத்தின் வளர்ச்சி பற்றி பேச தெரியாதாம்

ஏண்டா எங்கிருந்துட கிளம்பினீங்க

இதுவரை நீ பேசியதில் கைப்பிடி அளவுகூட கோர்வையான கருத்து எதாவது இருக்கா .

எல்லாம் பொய் எல்லாம் பிதற்றல்

சரி நீயும் உன் நண்பன் லூசு தமிழ்மணியும் சமூகத்தின் முரண்பாடுகளை சொல்லுங்க என்ன தீர்வுன்னு சொல்லுங்க கேட்டுகிறேன்.

said...

//இயற்கைக்கு மனிதனுக்கும் இருக்கும் முரண்பாடுகள் நவீன பொதுவுடமை சமூகத்தில் இருக்கும் ஆனால் மனிதனுக்கும் மனிதனுக்கும் இருக்கும் முரண்பாடு இருக்காது அது சோசலிசத்தில் மறைந்து விடும் என அழகாக விளக்கி சொல்கிறது .
//

நண்பர் வத்தலகுண்டு,

அப்படியே மாவோவின் வேத பித்தகத்திலிருந்து வாந்தி எடுத்தாயிற்றா?

வாந்தி எடுக்குமுன் என்னத்தை வாந்தி எடுக்கிறோம், அதில் ஏதேனும் பொருள் இருக்கிறதா என்று யோசித்துவிட்டு வாந்தி எடுத்தால் நலமாக இருக்கும்.

said...

//டார்வின் சொன்னத இவரு மறுப்பாராம் ஆனா சமூகத்தின் வளர்ச்சி பற்றி பேச தெரியாதாம்

ஏண்டா எங்கிருந்துட கிளம்பினீங்க//

நண்பர் வத்தலகுண்டு,
அந்த மேற்கோளே டார்வினுடையது அல்ல என்று சேலஞ்ச் செய்திருக்கிறேன்.

முதலில் அது டார்வினுடையது என்று நிரூபியுங்கள்.

சரியா?

Bruno said...

//லூசுதான் எதை சொன்னாலும் மறுத்துகிட்டே இருக்கும் பதில் சொல்ல தெரியாது .//

You have based your theory on certain fundementals.

Thamil is showing all your fundementals are wrong.

So where is your theory?

He does not have to have an answer for all the social problems.

But he can say, your solution is wrong, because your fundementals are wrong.

Do you get it?

said...

தமிழ்மணி said...
This is posted again in Asuran blog waiting for approval :-)

நான் மறுமொழி எழுதி நீங்கள் பிரசுரிக்காததை மீண்டும் பதிப்பிக்கிறேன்


தமிழ்மணி said...
நண்பர் அசுரன் நான் எழுதியதை சரியாக படிக்கவில்லை போலிருக்கிறது.

அவர் இப்படி கேட்டிருக்கிறார்/
//ஒரு சமூகம் என்று புரதான பொதுவுடமை காலத்தில் அவர் எதை குறிப்பிடுகிறார் என்று அவர் விளக்கினால் சிறப்பாக இருக்கும். ஏனேனில் அவர் அதிகம் படித்தவர் போல தெரிகீறது.

அல்லது இன்னும் குறிப்பாக ஒரு புரதான பொதுவுடமை சமூகத்தில் ஒரு உறுப்பினன் சமூகம் என்று எதை கருதியிருப்பான் என்று அவர் விளக்கினால் நாங்கள் புரிந்து கொண்டு வினையாற்று சிறப்பாக இருக்கும்.
//

புராதன பொதுவுடமை காலம் இருந்தது என்று எங்காவது கூறியிருக்கிறேனா?

திரும்பத்திரும்ப அப்படிப்பட்ட புராதன் பொதுவுடமை காலம் இல்லை இல்லை என்றுதானே கூறி வருகிறேன்.

"உன் மனைவியை அடிப்பதை நிறுத்திவிட்டாயா?" போன்ற loaded கேள்விகளை கேட்காமல் இருங்கள்.

புராதன் பொதுவுடமை காலம் என்று ஒன்றும் இல்லை என்பதுதான் என் கருத்து.

புராதன பொதுவுடமை காலம் இருந்தது. அது இத்தனை வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் இருந்தது, அதில் இத்தனை பேர்கள் (சுமாராக) இருந்தார்கள் என்று என்னிடம் ஆதாரம் காட்டுங்கள். பிறகு பேசுவோம்.

மீண்டும் சொல்கிறேன். புராதன பொதுவுடமை காலம் என்பது கற்பனை. குரங்குகளில் கூட ஒவ்வொரு குரங்கும் தனியாக ஒரு ஏரியாவை வளைத்து அதற்காக சண்டை போட்டு காப்பாற்றிக்கொண்டு மனைவியை தேடுகிறது.

அப்படி மூதாதையரை கொண்ட மனிதன், திடீரென்று பொதுவுடமைகாலத்துக்கு சென்று பிறகு தனியுடமை காலத்துக்கு போனான் என்று கதை விடுகிறீர்கள்.

11. Dezember 2007 07:26


12. Dezember 2007 05:25

said...

இந்த செய்தி தற்போது வந்திருக்கிறது.
அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

எலிகளிடமும் கூட இன்ஸஸ்ட் அவாய்டன்ஸ் உண்டு.

மிக நெருங்கிய உறவினர்களையும், நெருங்கிய உறவினர்கள் மூலம் பிறந்த ஆண்களுடனும் பெண் எலிகள் ஜோடி சேர்வதை தவிர்க்கின்றன

இந்த மறைகழண்ட கும்பல், 18ஆம் நூற்றாண்டில் மார்க்ஸ் அப்படி சொன்னார், எங்கல்ஸ் இப்படி சொன்னார், லெனின் இப்படி சொன்னார் என்று பிதற்றிக்கொண்டு அலைகின்றன.

--
http://www.sciencedaily.com/releases/2008/04/080417130603.htm


Inbred Males' Scent Gives Them Away, So Female Mice Stay Away
ScienceDaily (Apr. 21, 2008) — Female mice can steer clear of inbred males on the basis of their scent alone, according to evidence presented online on April 17th in Current Biology.


--------------------------------------------------------------------------------
See also:
Plants & Animals
Mice
Biology
Mating and Breeding
Evolutionary Biology
Genetically Modified
Genetics
Reference
Inbreeding
House mouse
Sex linkage
Spaying and neutering
The researchers found that female mice chose to associate with males producing a greater diversity of major urinary proteins (MUPs), even when all else was held equal. An earlier study by the same team had shown that wild mice also rely on MUPs to recognize and avoid mating with their close relatives.

"We conclude that female mice can identify more outbred males by the higher diversity of urinary proteins they produce," said Michael Thom of the University of Liverpool. "In addition to the multiple signaling roles already identified for MUPs, these proteins may also act as a signal of inbreeding. More outbred animals produce a greater number of different protein forms, and females may be able to recognize these superior males simply by 'counting' the number of proteins they produce, without waiting to see which might win in a fight."

The findings offer the first evidence that females can recognize inbred males by using a signal that does not directly affect male health, he added. The results in mice raise the possibility that similar behaviors could be widespread in other species.

Inbreeding is often avoided in animals because it can lead faulty, otherwise hidden (or recessive) traits to surface in their offspring. Nevertheless, Thom said, inbreeding does sometimes occur.

" We wanted to know whether females would prefer to associate with stronger, more outbred males over inbred individuals," and if so, how they tell the difference between them, he said.

The researchers--led by Jane Hurst, who is also at the University of Liverpool--carefully bred mice to remove the intrinsic correlation between genome-wide heterozygosity and heterozygosity at two gene clusters that they thought might allow direct assessment of genetic diversity through scent: an extremely variable set of immunity genes previously implicated in scent recognition known as the major histocompatibility complex (MHC) and the MUPs. Heterozygosity means that animals' two copies of a gene are represented by different variants; the extent of an individual's heterozygosity across the genome provides a measure of their inbreeding.

When other sources of variation were controlled and competition was kept to a minimum, the female mice under study preferred to associate with MUP heterozygous over MUP homozygous males, they found. MHC heterozygosity, on the other hand, did not influence the females' preference for nesting partners.

"We now have evidence that females are sensitive not only to the degree of MUP matching with potential mates, but also to genetic heterozygosity at this region within individual males," Hurst's team concluded. "The central role of MUPs in individual recognition, kin avoidance, and heterozygosity assessment make this an ideal system for addressing the function of genetic signals in social and mate choice in vertebrates."

The researchers include Michael D. Thom, Mammalian Behaviour and Evolution Group, Department of Veterinary Preclinical Science, University of Liverpool, Leahurst, Neston, UK; Paula Stockley, Mammalian Behaviour and Evolution Group, Department of Veterinary Preclinical Science, University of Liverpool, Leahurst, Neston, UK; Francine Jury, Centre for Integrated Genomic Medical Research, University of Manchester, Manchester, UK; William E.R. Ollier, Centre for Integrated Genomic Medical Research, University of Manchester, Manchester, UK; Robert J. Beynon, Proteomics and Functional Genomics Group, Department of Veterinary Preclinical Sciences, University of Liverpool, Liverpool, UK; and Jane L. Hurst, Mammalian Behaviour and Evolution Group, Department of Veterinary Preclinical Science, University of Liverpool, Leahurst, Neston, UK.

Adapted from materials provided by Cell Press, via EurekAlert!, a service of AAAS.