http://www.marxists.org/archive/marx/works/1884/origin-family/index.htm
The Origin of the Family, Private Property and the State
என்ற அபத்தமான புத்தகத்தை என்னிடம் நண்பர் தியாகு பரிந்துரைத்துள்ளார்.
படித்தேன்.
அதுவே நான் சில நாட்கள் எழுதாமல் இருந்த காரணம்.
இந்த புத்தகத்தின் விமர்சனம் இங்கே
.
முதலாவது
I. Stages of Prehistoric Culture என்ற அத்தியாயம் அப்படியே Lewis H. Morgan என்ற அமெரிக்க ஆய்வாளரின் புத்தகத்தினை அப்படியே ஒப்புக்கொண்டு எழுதப்பட்டுள்ளது.
இந்த அத்தியாயத்தில் மனித வரலாற்றின் சமூகம் மூன்று நிலைகளில் உள்ளது என்று கூறுகிறார்.
முதலாவது சேவேஜரி Savagery என்னும் நிலை. இந்த கால கட்டத்தில் மனிதன் உணவை அதன் அடிப்படை அமைப்பிலேயே சாப்பிடுகிறானாம் . அதாவது பழத்தை பழமாகவே, கனியை கனியாகவே சாப்பிடுகிறான் . குரங்கிலிருந்து சற்றே முன்னேறிய நிலை.
அடுத்து பார்பரிஸம்
Barbarism இந்த காலத்தில் கால்நடைகளை பழக்கி விவசாயம் செய்கிறான். மேன்மேலும் அதிக பொருட்களை மனித செயல்பாட்டின் மூலம் உருவாக்குகிறான்
அடுத்து சிவிலைசேசன்
- தொழில்சாலை ஆகியவற்றை செய்வது
இது சுத்த பேத்தல் என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும்
. முதலாவது இவ்வாறு மாறுவதை சமூக பரிணாமம் என்று கூறுவதை போல பேத்தல் எதுவும் இல்லை .
ஏனெனில், பரிணாமம் என்பது வளர்ச்சியை கூறுவதல்ல. மாறாக எந்த சூழ்நிலையில் அந்த பொருள் இருக்க வசதியாக இருக்கிறது என்பதை பொறுத்தது . தொழிற்சாலைகள் வைத்திருந்த நாட்டில் மீண்டும் சேவேஜரி வரலாம். விவசாயம் வைத்திருக்கும் சமூகம் (இது பார்பாரிசமாம் அதாவது காட்டுமிராண்டித்தனம் என்ற் தமிழில் சொல்வது ) தொழில்ற்சாலைகள் இருக்கும் சிவிலைசேசனுக்குத்தான் போகவேண்டும் என்ற் ஒரு கட்டாயமும் இல்லை. அது அப்படியே இருக்கவும் இருக்கலாம் . ஏன் சாவேஜரி நிலைக்கு போகவும் போகலாம்.
நேர்கோட்டில் பரிணாமம் வேலை செய்யாது.
இதில் நண்பர் தியாகு கூறிக்கொண்டிருந்த புராதன பொதுவுடமை சமுதாயம் என்பது சேவேஜரி என்பதுதான் என்று கூறுகிறார்.
பொதுவுடமை சமுதாயம் என்ற "உன்னதமான" நிலையிலிருந்து ஏன் இழிந்து பார்பாரிசம் ஆகும் என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை . முதலில் அது பொதுவுடமை சமுதாயமே அல்ல. ஆயிரக்கணக்கான பழங்குடி சமுதாயங்கள் எதிலும் பொதுவுடமை சமுதாயம் என்று இவர்கள் கற்பனை செய்யும் எதனையும் பார்க்கவே முடியாது .
அடுத்து குடும்பத்தின் தோற்றம் என்று எங்கல்ஸ் பிதற்றுவதை பார்ப்போம்.
இதுவும் லூயிஸ் மார்கன் கூறியதே. இதுவும் எங்கல்ஸ் சொந்தமாக கண்டுபிடித்ததோ அல்லது ஆராய்ந்ததோ அல்ல .
லூயிஸ் மார்கன் கூறியது வெறும் அறிவியல் தேற்றம் என்று மட்டுமே இருந்தால் யாரும் அதனை எவ்விதமாகவும் மாற்றலாம், தொடர்ந்து அதனை விவாதிக்கலாம் . அது குப்பை என்று தூக்கிப்போட்டுவிட்டும் போகலாம். சொல்லப்போனால் , லூயிஸ் மார்கனை இப்போது எத்தனை பேருக்குத் தெரியும்? ஏனெனில் அது குப்பை என்று அவருக்கு பின்னே வந்த ஏராளமான ஆய்வாளர்கள் தூக்கி எறிந்துவிட்டு போய்விட்டார்கள் .
ஆனால், அது ஒரு அரசியல் கட்சியின் கொள்கையின் அடித்தளமாக ஆகிவிட்டது என்றால், எங்கல்ஸ் ஞான திருஷ்டியில் கண்டுபிடித்து கூறியதை அப்படியே ஒப்புக்கொள்ளவும், அது விஞ்ஞானம் என்று வாதிடவும் , ஒரு பெரும் கூட்டம் கிளம்பிவிடும்.
சரி மார்கன் கூறியதை பார்ப்போம். (அதாவது எங்கல்ஸ் சுட்டு போட்டதை பார்ப்போம்)
The Consanguine Family
This is the first stage of the family and as such a primary indicator of our superior nature in comparison with animals. In this state marriage groups are separated according to generations. The husband and wife relationship is immediately and communally assumed between the male and female members of one generation. The only taboo is a sexual relationship between two generations (ie father and daughter, grandmother and father)..
எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் கூட்டாக யார் வேண்டுமானாலும் யாருடனும் செல்லலாம் என்ற நிலையில் உள்ள குடும்ப அமைப்பாம். பெற்றோர் குழந்தைகளுடன் உறவு வைத்துக்கொள்வது மட்டும் தடை செய்யப்பட்டதாம் . அதாவது ஒரு பழங்குடி சமூகத்தில் உள்ள எல்லோரும் யாருடன் வேண்டுமானாலும் இன்று படுத்துக்கொள்ளலாம். நாளை இன்னொருவருடன் படுத்துக்கொள்ளலாமாம்.
இது குடும்ப அமைப்பின் முதல் படியாம். இதுதான் புராதன பொதுவுடமை சமுதாயமான சேவேஜரி சமூகத்தின் குடும்ப அமைப்பாம் .
என்ன எழவுடா சாமி இது? பறவைகள் கூட ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பதை பார்க்கிறோம். குரங்குகளில் பல இனங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்கிறது. அதெல்லாம் தனியுடமை சமுதாயத்தின் கீழேதான் வருகிறதா ? என்ன எழவுடா இது?
The Punaluan Family
The second stage extends the incest taboo to include sexual intercourse between siblings, including all cousins of the same generation. This prevents most incestuous relationships. The separation of the patiarchal and matriarchal lines divided a family into gentes. Interbreeding was forbidden within gens, although first cousins from separate gentes could still breed.
சகோதர சகோதரிகளுடன் உறவை தடுக்கும் உறவுமுறை
The Pairing Family
The first indications of pairing are found in families where the husband has one primary wife. Inbreeding is practically eradicated by the prevention of a marriage between two family members who were even just remotely related, while relationships also start to approach monogamy. Property and economics begin to play a larger part in the family, as a pairing family had responsibility for the ownership of specific goods and property. Polygamy is still common amongst men, but no longer amongst women since their fidelity would ensure the child's legitimacy. Women have a superior role in the family as keepers of the household and guardians of legitimacy. The pairing family is the form characteristic of barbarism, as group marriage is characteristic of savagery and monogamy of civilization. However, at this point, when the man died his inheritance was still given to his gens, rather than to his offspring. Engels refers to this economic advantage for men coupled with the woman's lack of rights to lay claim to possessions for herself or her children (who became hers after a separation) as the overthrow of mother-right which was "the world historical defeat of the female sex". For Engels, ownership of property created the first significant division between men and women in which the woman was inferior.
The Monogamous Family
This form evolved out of the pairing family in the transitional period between the middle and upper stages of barbarism at the dawn of civilization. It is based on the supremacy of the man, the express purpose being to produce children of undisputed paternity. Such paternity is demanded because these children are later to come into their father's property as his natural heirs. The wife has become more subservient and the dissolution of the marriage is only possible by the will of the husband. While we cannot speak of monogamy yet in the modern sense of the word, since men were still free to have extra-marital sex as much as they wished to, Xenophon in his Oeconomus pointed out that such behavior was seen as degrading for men, and that it could harm their public image as it was frowned upon. While the Monogamous Family is not yet based on "sex-love", and is better referred to as hetaeristic, its emphasis on legitimacy and inheritance did form the basis for the monogamous relationship.
மேலே எல்லாம்
stages என்று எழுதியிருப்பதை பாருங்கள். இவ்வாறு குடும்ப அமைப்புகளை பிரிப்பதே தவறு . குடும்ப அமைப்புகள் ஒரே காலகட்டத்தில் பல்வேறுவிதமான முறைகளில் இருக்கலாம். இப்போதும் உலகெங்கும் பல்வேறுவிதமான குடும்ப அமைப்புகள் இருக்கின்றன. ஏன் தொழில்மயமான ஐரோப்பாவிலும் , அமெரிக்காவிலும் பல்வேறுவிதமான திருமண உறவுகளை பார்க்கலாம். polyandry, polygamy, polyamorous என்று பலவிதமான முறைகளில் திருமணமும் குடும்பங்களும் இருக்கின்றன . ஏன் ஓரின சேர்க்கையாளர்கள் திருமண உறவுகொண்டு குடும்பம் நடத்துவதும் அமெரிக்காவில் காணக்கூடியதே .
இவைகளை குடும்பத்தின் பரிணாம நிலைகள் என்று சொல்வது போல அபத்தம் ஏதுமில்லை!
இதைவிட பெரும் அபத்தம், குடும்பத்தையும் சொத்தையும் இணைத்து, தனியுடமைக்காகத்தான் குடும்பம் உருவானது என்ற் பிதற்றுவது.
சுருக்கமாக விக்கியில் உள்ளதை இங்கே மேற்கோள்
Family and property
Engels' ideas on the role of property in the creation of the modern family and as such modern civilization begin to become more transparent in the latter part of Chapter 2 as he begins to elaborate on the question of the monogamous relationship and the freedom to enter into (or refuse) such a relationship. Bourgeois law dictates the rules for relationships and inheritances. As such, two partners, even when their marriage is not arranged, will always have the preservation of inheritance in mind and as such will never be entirely free to choose their partner. For Engels, a relationship based on property rights and forced monogamy will only lead to the proliferation of immorality and prostitution.
The only class, according to Engels, which is free from these restraints of property, and as a result from the danger of moral decay, is the proletariat, as they lack the monetary means that are the basis of (as well as threat to) the bourgeois marriage. Without property to consider, the proletariat (male and female) is free to enter as well as dissolve any marriage whenever they wish to. Monogamy is therefore guaranteed by the fact that theirs is a voluntary sex-love relationship.
The social revolution which Engels believed was about to happen would eliminate class differences, and therefore also the need for prostitution and the enslavement of women. If men needed only to be concerned with sex-love and no longer with property and inheritance, then monogamy would come naturally.
தனியுடமைக்கும் குடும்பத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த கற்பனைகள் எங்கல்ஸ் தன்னுடைய பொதுவுடமை கனவுக்காக , கிடைத்த ஆராய்ச்சிகளை கழுத்தை பிடித்து நெரித்து வளைத்து தன் கொள்கைக்கு ஆதாரம் காட்டுகிறார்.
கணவன் மனைவி விவாகரத்து ஆகும்போது யாரிடம் என்ன சொத்து போகலாம் என்று
"பூர்ஷ்வா" க்கள் சட்டம் எழுதுவது, தனியுடமையை காப்பாற்றுவதற்காக குடும்பம் இருக்கிறது என்பதன் நிரூபணமாம் . அட கண்றாவியே.
குழந்தைகள் , பெண்கள் ஆகியோரை பாதுகாக்கத்தானே இந்த சட்டங்கள் இருக்கின்றன?
இதிலும் பெரிய கண்றாவி இருக்கிறது. அதாவது தொழிலாளர்கள் கையில் எந்த விதமான சொத்தும் இல்லாமல் இருப்பதால் , அவர்கள் திருமண உறவு கொள்வது மட்டுமே அன்பு, காதல், பாலுறவு மீது அமைந்த புனிதமான திருமணமாக இருக்குமாம்.
எப்போதையா தொழிலாளர்கள் எந்தவிதமான சொத்தும் இல்லாமல் இருந்தார்கள்?
எப்போதையா தொழிலாளர்கள் எந்தவிதமான சொத்தும் இல்லாமல் இருப்பார்கள்
( ஓகே ஓகே, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் போலிட்பரொ உறுப்பினர்கள் தவிர மற்றெல்லோருக்கும் சொத்து கிடையாது .. சரியா ?)
எத்தனைதான் சொத்து இல்லாமல் இருந்தாலும், கணவன் மனைவி உழைத்து சேமித்த பணத்தில் வாங்கிய பொருட்களை பிரித்துக்கொள்ள ஒரு அமைப்பும் சட்டமும் விதிமுறைகளும் வேண்டுமே ?
கம்யூனிஸ புரட்சி வந்ததும், வர்க்க பேதங்கள் அழிந்து, விபச்சாரம் செய்வதற்கு தேவையில்லாமல் , பெண்ணடிமை இல்லாமல் போய்விடுமாம்.
போனபோ என்று ஒரு குரங்கினம் இருக்கிறது. அந்த குரங்கினத்தில் பெண் குரங்குகள் பாலுறவை தங்களுக்கு வேண்டிய பொருட்களை பெற்றுக்கொள்ள உபகரணமாக உபயோகிக்கிறார்கள் . படித்துப்பாருங்கள்.
அந்த குரங்கினங்களில் வர்க்க பேதம் இருக்கிறதா? என்னய்யா கூத்து இது?
இந்த உளறலையா இந்த கம்யூனிஸ்டுகள் தினந்தோறும் தெண்டனிட்டு வணங்குகிறார்கள்? கஷ்டம் கஷ்டம் !
Dienstag, 27. November 2007
குடும்பம் தனியுடமை அரசு ஆகியவற்றின் தோற்றம்- எங்கல்ஸ் புத்தக விமர்சனம்
Abonnieren
Kommentare zum Post (Atom)
26 Comments:
டுபுக்கு தமிழ்மணி
எல்லாவற்றையும் பேத்தல் என சொல்வது நீ பெரிய பேத்தல் வாதி என்பதை நிரூபிக்கிறது
நன்றி நண்பர் வத்தலகுண்டு,
நான் கூறுவது பேத்தல் என்றால், நான் குறிப்பிட்டுள்ள ஆதாரங்கள் தவறு என்று நிரூபிக்கலாமே?
Engels's views are outdated now.
Anthropologists and feminsts have rejected them long ago.The defects in Morgan's analysis was exposed. As a result this book also lost its
importance.Still in tamil intellectual world this book enjoys support, partly due to the
ignorance and partly due to the
classic status accorded to this
book by marxists. Marxist feminism
has gone much beyond and so is the
anthropological scholarship on
family,kinship and marriage in
ancient societies.
நன்றி அனானி
அது எனக்கு தெரிகிறது உங்களுக்கு தெரிகிறது.
Nice reply
Good Job Tamilmani!
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி அனானி
This reality check is long due.
Kudos to you, Tamil.
அன்புள்ள தமிழ் மணி,
ஏங்கல்ஸ் அன்று கிடைத்த ஆய்வுகளின் அடிப்ப்டையில் எழுதினார். மறைமுகமாக அதில் செயல்படும் இனவாதம் போன்றவை இன்று நிராகரிக்கப் படுகின்றன. சமூகவியல் ஆய்வு என்பது கருத்தியல் ஆய்வு அல்ல.
சமூகவியல் ஆய்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த ஆய்வு , என்றும் பொருந்திவரும் ஒரு கருத்தியலுக்கு அடிப்படை என்று சொல்வது அபத்தம் . அதுவும் மார்க்ஸ் மாறாதது மாற்றம் ஒன்று தான் என்று சொன்னார் என்று சொல்லிக் கொண்டேஎ 150 வருடம் முந்திய ஆய்வுகளை இன்றும் பொருந்தி வரும் என்று சொல்வதும், அத்னால் எதிர்காலக் கணிப்புகளை முன்வைப்பதும் அபத்தம்.
ஒரு வளரும் துறையின் அன்றைய ஆய்வுகளை முன்னிறுத்தி ஒரு பெரும் கருத்துக் களனை அமைத்தது தான் ஏங்கல்ஸும் ஏங்கள்ஸ் அடிப்பொடிகளும் செய்த தவறு. அதனால் தான் நான் மார்கரட் மீட் போன்ற ஆய்வாளர்களைக் குறிப்பிட்டேன். சமோவாவில் உள்ள பழங்குடிகளைப் பற்றி அவர் எழுத்தப்பட்ட புத்தகத்திற்குப் பிறகு, பழங்குடிகளை நாகரிகமற்ற்வர்கள் என்று தீர்ப்பு வழங்கும் ஆய்வுகளின் இனவாதம் கண்டறியப் பட்டிருக்கிறது. மானுடவியல் எப்படி, பூகோளத்தால், இயற்கைச் சூழ்நிலைகளால் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது என்று இன்றைய ஆய்வுகள் - ஜேரட் டயமண்ட்- போன்றோரும், எப்படி உடலின் மூலக்கூறுகளால் நிர்ணயம் கொள்கிறது என்று டாகின்ஸ் போன்றோரும் எழுதியுள்ளனர்.
குடும்பத்துக்கும் தனிச் சொத்துக்கும் முடிச்சுப் போடும் ஒரு ஆய்வில் ஆரம்பித்து, குடும்பம் ஒழிந்தால் தனிச்சொத்து ஒழிந்து விடும் என்று நிஜமாகவே நம்பி செயல்பட்ட கம்யூன்கள் எல்லாம் எப்படி பிளவுண்டு பொறாமையினாலும், காதலினாலும் அழிந்து பட்டன என்பகற்குச் சான்றுகள் உள்ளன.
அதேபோல் குடும்பத்தின் வரையறைகள் மாறி வந்திருக்கின்றன. ஒருவர் மட்டுமே உள்ள குடும்பம், ஓரினக் காதலர்கள் உள்ள குடும்பம் என்று வழங்கும் பல அமைப்புகளும் ஒருசேர உள்ளன. இதில் தனிச்சொத்து எங்கே வந்தது. இது இன்றைய மாற்றம் கூட அல்ல. பழங்கால கிரேக்க சமூகம ஓரினப் பாலுறவை வெறுத்து ஒதுக்கவில்லை.
ஆனால் தான் பிடித்த கருத்தியலுக்கு மூன்றே கால் தான் என்று சாத்திப்பவர்களிடம் எப்படி உரையாடல் நிகழ்த்த முடியும்?
பழைய அனானி
உங்களை இந்த பதிவில் தோழர்கள் புகழ்ந்து இருக்கிறார்கள் தமிழ்மணி அய்யா
http://kaargipages.wordpress.com/
அன்புள்ள தமிழ்மணி, "குடும்பம் தனியுடைமை அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்கிற எங்கல்ஸ் எழுதிய புத்தகத்திற்கான உங்களின்விமர்சனத்தை ஒரு நண்பர் கொடுத்த ப்ளோக் லிங்க் முலம் படிக்க முடிந்தது.அதில் நிங்கள் எங்கல்ஸ் ஒரு அமெரிக்க ஆய்வாளரின் ஆராய்ச்சி முடிவை சுட்டு எழுதியுள்ளார் எனகுரிப்பிட்டுள்ளிர்கள்.யாரும் எதையுமே தானாக கண்டு பிடித்து எழ்துவதில்லை அவர்களுக்கு முன்பு விட்டு சென்றவர்களின் தொடர்சியாக தான் அனைத்தும் இருக்கும்,அனால் அந்த தொடர்சி விஞ்ஞான முறைப்படியான விளக்கமும் சமூக நன்மைக்கான கருத்தும் சமூகத்தின் நல்ல மாறுதலுக்கான திட்டம் வழிகாட்டுதல் உண்டா என்பதே கேள்வி.ஆனால் அதற்கெல்லாம் பதிலை நிங்கள் தரவில்லை.அபத்தமான புத்தகம் என்கிரிர்கள்.எனில் எப்படி இன்றைய அமைப்பு உருப்பெற்றது என்பதை சொல்விர்களா?
தொடர்ந்து ஜனநாயகத்திற்காக உங்களின் ஆற்றல் முழமையாக எடுத்து வார்த்தைகளால் விளாசுகிரிஇர்கள். இன்றைய இந்திய ஜனநாயகம் இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வலுவுள்ளதாக இருக்கிறதா? துப்பாக்கி தூக்கும் கம்யுநிச்ட்கள் மட்டுமே குற்ற வாளிகள் என்பதை போல் பெசுகிரிஇர்களே அவர்களை அந்த நிலைமைக்கு இட்டு சென்றது நிங்கள் குறிப்பிடும் ஜனநாயகம் என்றால் அதற்கு என்ன பதில்?
உலகமயம் பற்றிய உங்களின் பார்வை சரி ஆனால் அது உலகமயம் என்கிற போது பெயருடன் வளர்ந்த நாடுகள் மற்ற நாட்டு மக்களின் உழைப்பு செல்வம் அனைத்தையும் சுரையாடுவதை என் கண்டு கொள்ள மறுக்கிரிஇர்கள்?
அய்யோ அய்யொ சிராஜுக்கு ஒன்றுமே தெரியாது போல இந்த தமிழ்மனி ஒரு காமெடியன் என்று
உங்கள் மறுமொழிக்கு நன்றி சிராஜ்,
அனானி, உங்கள் கிண்டலுக்கும் நன்றி.
--
சிராஜ், உங்கள் மேலான மறுமொழிக்கு நன்றி கூறி, என்னுடைய மறுமொழியையும் கூறுகிறேன்.
//அன்புள்ள தமிழ்மணி, "குடும்பம் தனியுடைமை அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்கிற எங்கல்ஸ் எழுதிய புத்தகத்திற்கான உங்களின்விமர்சனத்தை ஒரு நண்பர் கொடுத்த ப்ளோக் லிங்க் முலம் படிக்க முடிந்தது.அதில் நிங்கள் எங்கல்ஸ் ஒரு அமெரிக்க ஆய்வாளரின் ஆராய்ச்சி முடிவை சுட்டு எழுதியுள்ளார் எனகுரிப்பிட்டுள்ளிர்கள்.யாரும் எதையுமே தானாக கண்டு பிடித்து எழ்துவதில்லை அவர்களுக்கு முன்பு விட்டு சென்றவர்களின் தொடர்சியாக தான் அனைத்தும் இருக்கும்,அனால் அந்த தொடர்சி விஞ்ஞான முறைப்படியான விளக்கமும் சமூக நன்மைக்கான கருத்தும் சமூகத்தின் நல்ல மாறுதலுக்கான திட்டம் வழிகாட்டுதல் உண்டா என்பதே கேள்வி.//
பாதி உண்மை. ஆனால், 18ஆம் நூற்றாண்டு மானுடவியல் ஆய்வை வைத்துக்கொண்டு 21 ஆம் நூற்றாண்டுவரை ஒரே கொள்கை என்று கூறுவது அபத்தம் இல்லையா? ஏனெனில் 18ஆம் நூற்றாண்டு மானுடவியல் ஆய்வுகள் காலனிய நோக்கில், இனவெறி அடிப்படையில் எழுதப்பட்டவை. தொழில்சாலை வைத்திருக்கும் ஐரோப்பிய சமூகமே சிவிலைசேசன் மற்றதெல்லாம் காட்டுமிராண்டித்தனம் என்று எழுதப்பட்டவை. அதன் அடிப்படையை வைத்துக்கொண்டு எங்கல்ஸ் எழுதும் இந்த புத்தகமும் அதே அடிப்படையை கொண்டுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது, மானுடவியலும் அகழ்வராய்ச்சிகளும், சமூகவியலும், பரிணாமவியலும், பல்வேறு திசைகளில், பல்வேறு களப்பணி ஆய்வுகள் மூலம் அடிப்படை மாறுதல்களை பெற்றுவிட்டன. அவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், இன்னும் குடுமபம், அரசு பற்றிய விதண்டாவாத கருதுகோள்களையே பிடித்துத்தொங்குவேன் என்று சொன்னால் விமர்சனம் வராமல் இருக்குமா?
//ஆனால் அதற்கெல்லாம் பதிலை நிங்கள் தரவில்லை.அபத்தமான புத்தகம் என்கிரிர்கள்.எனில் எப்படி இன்றைய அமைப்பு உருப்பெற்றது என்பதை சொல்விர்களா?//
நான் மானுடவியலாளன் அல்ல. ஆனால், நான் மானுடவியலை அவ்வப்போது படிப்பவன். சமூக அமைப்பு எவ்வாறு தொடர்ந்து மாறிவருகிறது, அதன் காரணிகள் என்பன வெறு வரட்டு சூத்திரங்களில அடக்கிவிட முடியாது என்பதை தெரிந்தவன். எதற்கெடுத்தாலும் தனியுடமை பொதுவுடமை என்று பிதற்றுவதால் நாம் பதில் கூறிவிட்டோம் என்று நினைத்துக்கொள்பவர்களை பார்த்து பரிதாபமே படமுடியும். இன்றைய அமைப்பு என்றால் இந்திய அமைப்பா, தமிழக அமைப்பா, அல்லது இந்தோனேஷிய பழங்குடி அமைப்பா, அல்லது ஹவாய் தீவின் பழங்குடியினர் அமைப்பா, அல்லது தற்போதைய ஹவாயின் சமூக அமைப்பா, ஆஸ்திரேலிய பழங்குடியினர் எவ்வாறு ஆஸ்திரேலிய ஆங்கிலர்களுடன் கொள்ளும் உறவா என்பது ஆழமான ஆராய்ச்சிகளுக்கும், பல்வேறு எண்ணற்ற காரணிகளும் கொண்டது. இவற்றை கொச்சையாக வெற்று சூத்திரங்களில் அடக்கிவிடலாம் என்று பேசுவது பாமரத்தனமானது.
//தொடர்ந்து ஜனநாயகத்திற்காக உங்களின் ஆற்றல் முழமையாக எடுத்து வார்த்தைகளால் விளாசுகிரிஇர்கள். இன்றைய இந்திய ஜனநாயகம் இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வலுவுள்ளதாக இருக்கிறதா?//
நிச்சயம் வலுவுள்ளதாக இருக்கிறது.
//துப்பாக்கி தூக்கும் கம்யுநிச்ட்கள் மட்டுமே குற்ற வாளிகள் என்பதை போல் பெசுகிரிஇர்களே அவர்களை அந்த நிலைமைக்கு இட்டு சென்றது நிங்கள் குறிப்பிடும் ஜனநாயகம் என்றால் அதற்கு என்ன பதில்? //
இல்லை. கம்யூனிஸ்டுகள், அதோ ரஷ்யாவை பார், இதோ சீனாவை பார் என்று அங்கு நடந்த வன்முறைகளையும் ஆட்சி கைப்பற்றியதையும் பார்த்து காப்பிஅடித்து இங்கும் வன்முறை மூலம் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று அலையும் கூட்டம். இவர்களுக்கு சொந்த புத்தியும் கிடையாது. மாவோ அப்போது அப்படி எழுதியிருக்கிறார், லெனின் இப்படி எழுதினார் என்று மதப்புத்தகங்களை மத அடிப்படைவாதிகள் மேற்கோள் காட்டுவது போல காட்டும் கூட்டம். இவர்கள் போன்ற மத அடிப்படைவாதிகளிடம், அறிவியல் இப்படி கூறுகிறதே என்று கேட்டால், வளைத்து வளைத்து பதில்வருமே தவிர, தங்கள் மதப்புத்தகங்களில் தவறு இருக்கலாம் என்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள். வேண்டுமானால் ஒரு கிறிஸ்துவரிடம் சென்று பைபிளில் உலகம் தட்டை என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ளதே என்று கேட்டுப்பாருங்கள். அதே போலத்தான் கம்யூனிஸ்டு கட்சிக்காரர்களும். கொள்கைக்காக அறிவியலை தியாகம் செய்துவிடுவார்கள். அல்லது அறிவியல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று பேசுவார்கள். இவர்கள் போன்ற கொள்கைக்காரர்கள், பழம் புத்தகத்தை கட்டி அழும் கொள்கைக்காரர்கள் ஆட்சிக்கு வந்தால், தங்கள் கொள்கைக்கு எதிராக அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்துவிட்டால் அறிவியலையும் அறிவியலறிஞர்களையும்தான் முதலில் கொளுத்துவார்கள்.
ஆகவே இவர்கள் என்னை காமெடியன் என்றோ அல்லது கோமாளி என்றோ கிண்டல் செய்யத்தான் முடியுமே தவிர, நேர்மையாக வாதிட முடியாது.
//உலகமயம் பற்றிய உங்களின் பார்வை சரி ஆனால் அது உலகமயம் என்கிற போது பெயருடன் வளர்ந்த நாடுகள் மற்ற நாட்டு மக்களின் உழைப்பு செல்வம் அனைத்தையும் சுரையாடுவதை என் கண்டு கொள்ள மறுக்கிரிஇர்கள்?//
நிச்சயம் கண்டுகொள்ளத்தான் வேண்டும். அதற்கான போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும். அது எப்போதும் முடிவடையாது. அதற்காகத்தான் கலெக்டிவ் பார்கெயினிங் தேவை. அவ்வாறு மற்ற நாடுகளுடன் பொருளாதார துறையில் போட்டியிட வலிமையான இந்திய அரசு தேவை. அதற்கு மக்களுக்கு பொருளாதார் சுதந்திரம் தேவை. இந்திய மக்களின் நலனை கருத்தில் எடுத்துக்கொள்ளும் இந்திய அரசு தேவை. சீனாவுக்கு நல்லது, சீனாவுக்கு இந்தியா வாரி வழங்கவேண்டும், சீனா அணு ஆயுதம் வைத்திருப்பது நல்லது. இந்தியா வைத்திருக்கக்கூடாது, சீனாவை விட நாம் அதிகம் வளரக்கூடாது, ரஷ்யாவை விட நாம் அதிகமாக பணக்காரர்களாக ஆகிவிடக்கூடாது என்று பேசும் கம்யூனிஸ்டுகள் ஆபத்தானவர்கள்.
கார்க்கி பேஜஸ் என்று நண்பர் கார்க்கி இந்த பக்கங்களை விமர்சித்திருக்கிறார்.
நேர்மையாக வாதங்களை எடுத்து வைத்தால் விமர்சிக்கிறேன்.
என்னை கோமாளி, காமெடியன் என்று கூறுவது விமர்சனம் என்றால் என்ன செய்வது?
இங்கே விமர்சனங்களை வைத்துள்ளேன். எவ்வாறு குரங்குகளிலும் இதர விலங்குகளிலும் குடும்பம் ஆகியவை உள்ளன என்று காட்டியிருக்கிறேன்.
பிறகு திரும்பத்திரும்ப, தனியுடமை, பொதுவுடமையால்தான் குடும்பம் வருகிறது என்று கூறினால் என்ன செய்வது?
கிப்பன் குரங்குகள் டெரிடோரியல் விலங்குகள். தங்கள் சொத்தாக ஒரு ஏரியாவை வகித்து அதனை பாதுகாக்கின்றன.
http://en.wikipedia.org/wiki/Gibbon
Gibbons are social animals. They are strongly territorial, and defend their boundaries with vigorous visual and vocal displays. The vocal element, which can often be heard for distances of up to 1 km, consists of a duet between a mated pair, their young sometimes joining in.
பபூன்கள்களும் அப்படியே.
http://en.wikipedia.org/wiki/Baboon
Most baboons live in hierarchical troops of 5 to 250 animals (50 or so is common), depending on specific circumstances, especially species and time of year. The structure within the troop varies considerably between Hamadryas Baboons and the remaining species, sometimes collectively referred to as savanna baboons. The Hamadryas Baboon has very large groups comprised of many smaller harems (one male with four or so females), to which females from elsewhere in the troop are recruited while still too young to breed.
இது அரசா இல்லையா?
கொரில்லா
http://en.wikipedia.org/wiki/Gorilla
Silverbacks are the strong, dominant troop leaders. Each typically leads a troop of 5 to 30 gorillas and is the center of the troop's attention, making all the decisions, mediating conflicts, determining the movements of the group, leading the others to feeding sites and taking responsibility for the safety and well-being of the troop. Yonger males called blackbacks may serve as backup protection.
இது அரசா இல்லையா?
--
இப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து மனித குலம் தோன்றி திடீரென்று புராதன பொதுவுடமை சமுதாயத்துக்கு போய்விட்டு திரும்ப தனியுடமை சமுதாயமாக ஆயிற்று என்று கதை விடுகிறீர்கள்.
தியாகு எனக்கு அவர் பதிவில் சொன்ன பதில்களைத் தொடர்ந்து இங்கே, சில பதிவுகள் என்னுடையவை.
1. ஏங்கெல்ஸ் புத்தகம் பற்றி நான் மேலே எழுதியுள்ளேன். மற்ற உங்கள் குறிப்புகளைப் பற்றி கீழே.
2//கடைசியில் மனிதர்கள் சமூகமாய் வாழவில்லை என்ற நிலைபாட்டுக்கு வந்தால்தான் நீங்கள் சமூக ஆய்வை மறுக்க முடியும் என்று
அந்த நிலைபாட்டுக்கு வந்து விட்டீர்கள் ரொம்ப கொடுமைசார் இது
உங்களோட தேவை சப்ளை கோட்பாடு இதான் எல்லா சமூக மாற்றத்துக்கும் அடிப்படை என்று சொன்னீங்க
அதற்கு பதில் வந்தது அதை அம்போன்னு விட்டு விட்டு
மூலதனம்தான் சமூக மாற்றத்துக்கு காரணம்னு சொன்னீங்க
அதுக்கு பதில் அளித்தேன்
அதையும் அம்போன்னு விட்டுட்டு இப்போ சமூகம் என்பதே இல்லை சும்மா தனிமனிதந்தான் இருந்தால்
சில தேவைகளுக்காக மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தான்னு ஒரே போடா போடுறீங்க
அய்யா இது உங்களுக்கு புரியுது நீங்க் எங்க ஓடிப்போய் நிக்கிறீங்கன்னு//
முரண்பாடு என்னிடம் இல்லை. மனிதர்கள் சமூகமாய் வாழவில்லை என்று நான் சொல்லவில்லை. சமூகமாய் வாழ்ந்த கரணத்தினாலேயெ, அதை இழுத்து வர்க்கம், சுரண்டல் என்று பிதற்றுவதைப் பற்றித் தான் நான் சொல்லிகொண்டே இருக்கிறேன். தேவை ,சப்ளை, மூலதனம் என்பது ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த விஷயங்கள். மூலதனம் வெறும் சொத்தாகவோ, இடமாகவோ கிடந்தால் அதன் சமூகப் பயன் இல்லை. ஆனால் அது மூலதனமாய் மாறி உற்பத்திக்கு வழி வகுக்கும்போது, லாபம் ஒரு தொடர்சங்கிலி போல பல தொடர்புள்ள பொருளாதார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. சமூக மாற்றத்திற்கு மூலதனம் காரணம் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஏனென்ட்றால் சமூக மாற்றம் என்பது மார்க்சிய அர்த்தத்தில் தான் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி இல்லை. தன்னுடைய தேவைகளுக்காக இணைந்து வாழும் மனிதர் கூட்டம் மற்றவர்களின் தேவையையும் பூர்த்தி செய்யவேண்டும் என்ற ஓர் இணைந்த செயல்பாடு தானே சமூக வரலாறே.
3. //
அனானி முதல் பாராவில் தனிமனிதர்களா வாழ்ந்தார்கள் என சொல்லிட்டு மார்க்ஸ் சொன்ன அர்த்தத்தில் வர்க்கம் தோன்றவில்லைன்னா முரண்பாடுதானே. வர்க்கம் என்பது நிரந்தரமானதுன்னு சொல்றீங்க ஆனா வர்க்கம் என்பது இல்லை என்கிறீங்க தனிமனிதனா வாழ்ந்தான் என்றும் சொல்றீங்க ஒரு முடிவோட தான் பேசுரீங்கன்னு புரியுது அதாவது சொல்வதெல்லாம் மறுப்பது தக்க தர்க்க ரீதியான பதில் இல்லாமல் .
இரண்டே வர்க்கங்கள் என்று எந்த புத்தகத்தில் மார்க்சியம் சொல்லுதுன்னு தயவு செய்து சொல்லுங்கள் அய்யா
பல வர்க்கங்கள் இருக்கும் ஆனா இரண்டே வர்க்கம்தான் போராடுகிறது
முதலாளித்துவத்தில் முதலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என இரண்டே வர்க்கம் மட்டுமா இருக்கு
குட்டி முதலாளி இருக்கான் நடுத்தர வர்க்கம் இருக்கு என பல்வேறு வர்க்கங்கள் இருக்கு ஆனால் ஆகப்பெரிய முரண்பாடு
இரண்டு வர்க்கங்களிடம் இருக்கு அந்த இரண்டு வர்க்கத்துக்குள் எல்லாத்தையும் அடைக்க நினைப்பதும் இல்லை இது மிகப்பெரிய தவறான
புரிதல் முதலில் மார்க்சியம் என்ன சொல்லுதுன்னு நல்லா படிங்க//
"பல வர்க்கங்கள் இருக்கும். ஆனால் இரண்டு வர்க்கம் தான் போராடும்" என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டீர்கள். இந்தப் பல வர்க்கங்கள் எனப்து என்ன? ஒரே வீட்டில் தொழிற்சாலையில் பணி புரிபவனும், காலேஜில் பணி புரிபவனும் இருந்தால், அந்த வீட்டில் இருவரும் வெவ்வேறு வர்க்கத்தைச் சார்ந்து இருப்பார்களா? வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் எந்த வர்க்கம்? குழந்தைகள் எந்த வர்க்கம்? தொழிலாளி வர்க்கம் என்பதே தவறு என்பது உங்களுக்குப் புரிபடவில்லையா? ஒரு கனரகத் தொழிற்சாலையில் வேலை செய்பவனும், காப்பிக் கடையில் வேலை பார்ப்பவனும் ஒரே வர்க்கமா? அவர்களுடைய நலனை ஒரே மாதிரி செயல்களால் பாதுகாக்க முடியுமா? அந்தப் பல வர்க்கங்களைப் பட்டியலிட்டுச் சொல்லுங்கள்.
4. குட்டி முதலாளி இருக்கான் - என்று சொல்கிறீர்கள். யார் இந்த குட்டி முதலாளி. பூர்ஷ்வா என்பது முதலாளி அல்ல என்று முன்னமே சொன்னேன். ஆனால் முதலாளி என்று தான் குறிப்பிடுவேன் என்று அடம் பிடிக்கிறீர்கள். யார் குட்டி முதலாளி? பெட்டிக் கடை வைத்திருப்பவரா? பீச்சில் சுண்டல் விற்பவரா?
தொழிலாளர்களே ஒருவருக்கொருவர் முரண்படுவது என்பது காலந்தோறும் நடந்து வருவது. அதனால் தான் சக்கரத்தைப் பற்றிக் குறிப்பிட்டே. சக்கரம் கண்டுபிடிக்கப் பட்டால், முதுகில் சுமையேற்றிக் கொண்டு போனவர்களுக்குப் பாதிப்பு. ஆனால் தச்சர்களுக்கு வேலை வாய்ப்பு. கார்கள் அதிகமானால், பஸ் தொழிலாளர்களுக்கு பாதிப்பு. ஆனால் கார் மெகானிக்குகளுக்கு வேலை வாய்ப்பு.
வெறுமனே மார்க்சிய வாய்ப்பாடுகளை மட்டும் பார்க்கமல், உங்கள் கண்களையும் அறிவையும் விசாலமாகத் திறந்து வையுங்கள்.
பழைய அனானி
நன்றி பழைய அனானி
குரங்குகளில் இருக்கும் தலைவர், குழு, டெரிடோரியல் ஆகியவை புதிய விஷயங்கள்.
நன்றி
Very good critique of Engels.
Excellent.
டோண்டுவின் போலித்தனம் - கம்யுனிசம்
பார்ப்பினியத்துடன் முரன்படும் கம்யுனிசம்
என்று அசுரன் எழுதியிர்க்கிறார்
படித்து கருத்து சொல்லுங்கள்
https://www.blogger.com/comment.g?blogID=19063577&postID=8010176810232530327
இந்த தியாகு என்னமோ சொல்லி இருக்கார் பாருங்க அனானி
//தொழிலாளர்களே ஒருவருக்கொருவர் முரண்படுவது என்பது காலந்தோறும் நடந்து வருவது. அதனால் தான் சக்கரத்தைப் பற்றிக் குறிப்பிட்டே. சக்கரம் கண்டுபிடிக்கப் பட்டால், முதுகில் சுமையேற்றிக் கொண்டு போனவர்களுக்குப் பாதிப்பு. ஆனால் தச்சர்களுக்கு வேலை வாய்ப்பு. கார்கள் அதிகமானால், பஸ் தொழிலாளர்களுக்கு பாதிப்பு. ஆனால் கார் மெகானிக்குகளுக்கு வேலை வாய்ப்பு.
//
அனானி என்னய்யா சொல்ற உனக்கு முதலில் புரியுதா கோர்வையா படிச்சு பாரு நீ சொல்வதை
இதென்ன கம்யூனிஸ்டுகள் எழுதுவது போன்று புரிவதற்கு கஷ்டமாகவா இருக்கிறது?
கம்யூனிஸ்டுகள் ஆட்டமேஷனை எதிர்க்கிறார்கள். ஆட்டமேஷன் வந்தால், தொழிலாளர்களுக்கு வேலை போகிறது என்று கதறுகிறார்கள்.
புதிய தொழில்நுட்பமான கம்ப்யூட்டர் வந்தால், தொழிலாளர்களுக்கு வேலை போகிறது, வங்கி குமாஸ்தாக்களுக்கு வேலை போகிறது என்று தொழிற்சங்கம் அமைத்து கம்யூனிஸ்டு புரட்சி பேசுகிறார்கள்.
இவ்வாறு பிதற்றும் கம்யூனிஸ்டுகளை நோக்கி பழைய அனானி கேட்கிறார்.
சக்கரம் வந்ததால் மாட்டுவண்டி வந்து, தலைச்சுமை ஏற்றிக்கொண்டு போகிறவர்களின் வேலை பாதிக்கப்பட்டது.
மோட்டார் வாகனங்கள் வந்ததால், மாட்டுவண்டி ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மனித வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா கண்டுபிடிப்புகளையும் எதிர்க்கலாம்.
ஆனால், புது கண்டுபிடிப்புகள் மூலம் வேலை வாய்ப்பு போவதில்லை. புது கண்டுபிடிப்புகள் மூலம் வேலைவாய்ப்பு புதிய புதிய இடங்களில் உருவாகிறது. உதாரணமாக மாட்டுவண்டி கண்டுபிடிக்கப்பட்டால் தச்சர்கள் உருவாகிறார்கள்.
மோட்டார் வாகனம் வந்தால் மெக்கானிக்குகளும், மோட்டார் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளும் தொழிலாளர்களும் உற்பத்தியாகிறார்கள்.
இவ்வளவுதான் அவர் சொல்வது.
ஆகவே கம்யூனிஸ்டுகள் பேசுவது பேத்தல்.
அன்புள்ள வத்தல குண்டு,
தியாகு பின்னூட்ட சுட்டிக்கு நன்றி.
தொழிலாளி வர்க்கம் என்பது எல்லாத் தொழிலாளர்களையும் ஒரு கூடைக்குள் அடைத்து பிணைத்து அவர்களின் பொது நலன் என்று பேசுவது எப்படி தவறு என்று விளக்கத்தான் விபரமாக, எப்படி ஒரு தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களின் நலனும், வேறு தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களின் நலனும் முரண்படக் கூடும் என்று விளக்கியிருந்தேன். நம் நாடிலேயே எடுத்துக் கொண்டால், டாடா இரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கும், கொல்லன் பட்டறையில்தொழில் செய்யும் ஒரு தொழிலாளிக்கும் சம நலன் இருக முடியாது அல்லவா?
இனி தியாகுவின் பின்னூட்டம் :
//
அடிமைகள் ஆண்டான்களிடம் எந்த தேவைக்காக சேர்ந்து வாழ்ந்தார்கள் அந்த தேவை என்ன அதன் அதிகாரம் என்னவாய் இருந்தது அது சமூகத்தில்
என்னவகை பாதிப்பை ஏற்படுத்தியது அடிமைகளுக்கு இருந்த தேவை ஆண்டான்களுக்கு இருந்த தேவை என இரண்டும் உங்களால் விளக்கப்படவேண்டும்
அதிகாரத்தை கையில் எடுத்த ஒரு வர்க்கம் ஆண்டான்களாக உருவாகி அடிமைகளை வைத்து வாழ்க்கைக்கு தேவையானதை உற்பத்தி செய்தது
இது ஒரு பொருள் உற்பத்தி நடவடிக்கை இது ஒரு கட்டத்தில் மாறியது என்கிறோம் அங்கே புரட்சி நடந்துதான் மாறி இருக்கிறது என்கிறோம்
நீங்கள் மொட்டையாக தேவை இருந்தது சமுகமாய் வாழ்ந்தார்கள்னா என்னப்பா தேவை அதை விளக்கனும் அல்லவா வர்க்கத்தை விட்டு விட்டு பொருள் உற்பத்தி நடவடிக்கையை விட்டுவிட்டு தனியே தொங்கி கொண்டு என்ன விளக்கம் கொடுப்பீர்களோ கொடுங்கள் நாங்க
கேட்டுகொள்கிறோம் அய்யா//
அடிமை சமுதாயம் என்பது அடிப்படையில் பொருளாதார சுரண்டலுக்கான வழி என்பது உண்மையே. ஆனால், முழுக்க முழுக்க பொருளாதாரத்தை மட்டும் வைத்து விளக்கிவிடமுடியாது. கிறுஸ்துவம், பழைய ரோம சாம்ராஜ்யம், இந்தியாவின் சில பகுதிகள், இஸ்லாமிய உலகு , சீனாவில் இன்று மேற்குலகின் சந்தைக்காக கிட்டத்தட்ட அடிமைமுறையில் செய்யப் படும் உற்பத்தி, சென்ற நூற்றாண்டு வரையில் என்று பலவாறாக அதிகார வேட்கையில் அமெரிக்காவில் நிக்ழ்ந்து வந்த அடிமை முறை, சோவியத் குலாக்குகளில் அடிமைகளாய் வேலை வாங்கப் பட்ட மக்கள் , ஹிட்லரின் கீழ் உழைப்பு முகாம்களுக்க் அனுப்பப்பட்ட யூதர்கள் என்று உலகு முழூதும் நீண்ட வரலாறு இருக்கிறது. அதன் அடிப்படையான கருத்து ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரை விடச் சிறந்தவர் எனப்தாகவும், அரசியல் மேலாண்மையற்றாவர்களாகவும் இருப்பது தான். எகிப்தியர்களின் கீழ் யூதர்கள் அடிமைகளாய் இருந்த வரலாறு உள்ளது. ஆனல் யூதர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு , அடிமைத்தனம் வேறு உருவில் வரத்தான் செய்தது. இஸ்லாமிய இலக்கியங்களும், விவிலியமும் அடிமைஅதனத்தை வெறுத்து ஒதுக்கவில்லை. போரில் வீழ்ந்த நாட்டு மக்களை அடிமையா நடத்துவதில் எல்லா அரசுகளும் ஈடுபட்டு வந்திருக்கின்றன. எனவே அடிமை முறைகு வெறும் பொருளாதார விளககத்தை மட்டும் அளித்துவிட முடியாது.
அமெரிக்காவிலேயே அடிமைத்தந்தை ஆதரித்த தென்மானிலங்களின் மீது போர் தொடுத்த ஆப்ர-காம் லிங்கனின் நோக்கம் உன்னதமானதாய் இருந்தாலும், வடகிழக்கு மானிலங்களில் தொழிலாளர் போதாமையை ஈடுகட்டத் தான் இந்த போர் நிகழ்த்தப் பட்டது என்று ஓர் ஆய்வு உண்டு. இந்த அடிமை முறை நிறுத்தம் , அடிமைகளின் புரட்சியினால் அல்ல, அப்ரஹாம் லிங்கனின் கீழ் இருந்த அமெரிக்க ஆட்சியின் முனைப்பால் நிகழ்த்தப் பட்ட ஒன்று. சுதந்திர வர்த்தகம் தான் அடிமை முறை போன்ற கொடுமைகளுக்கு முடிவு கட்டும் என்பதே இதிலிருந்து பெறவேண்டிய பாடம். சோவியத், சீன முயற்சிகள் சோஷலிசம் என்ற பெஅய்ரில் புதிய அடிமை முறையை ஸ்தாபித்ததை நினைவிற் கொள்ளுங்கள்.
//மூலதனம் வெறும் சொத்தாகவோ, இடமாகவோ கிடந்தால் அதன் சமூகப் பயன் இல்லை. ஆனால் அது மூலதனமாய் மாறி உற்பத்திக்கு வழி வகுக்கும்போது, லாபம் ஒரு தொடர்சங்கிலி போல பல தொடர்புள்ள பொருளாதார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. //
டாஸ் கேபிடலில் பண்டம் பரிவர்த்தனை மதிப்பை பெறும்போது அந்த பண்டமாக பயன்பாட்டு மதிப்பும்
பரிவர்த்தனை மதிப்பும் உள்ள ஒரு பண்டமாக உழைப்பு சக்தி இருக்கும் போதுதான் ஒரு பரிவர்த்தனையில்
முடிவில் ஒரு மாற்றம் இருக்கிறது
அதாவது பொருள் -பணம்-பொருள் இதை விட பணம் -பொருள் -பணம் இந்த பரிவர்த்தனையில் தான் பரிமாற்ற மதிப்பு தோற்றுவிக்கப்படுகிறது
முதலாளிகள் பணத்தை போட்டு -பொருளை வாங்கி -பணத்தை ஈட்டும் நடவடிக்கையில் எப்படி மிகுதி லாபம் ஏற்படும் . 50 ரூபாய்க்கு வாங்கிய பொருளை 40 ரூபாய்க்கு விற்றால் 10 ரூபாய் நட்டம் அதே 60 ரூபாய்க்கு விற்றாலும் 10 ரூபாய் லாபம் இந்த பத்து ரூபாய் என்பது வெறும் லாபம் என்கிறார்கள் முதலாளிகள் அதெப்படி எனில் உலகில் ஒரு பக்கம் முழுக்க விற்பவனும் ஒரு பக்கம் முழுக்க வாங்குபவனும் இருந்தால் சமமதிப்புள்ளவை பரிவர்த்தனை செய்யப்பட்டால் மொத்த மதிப்பு கூடுவதோ குறைவதோ இல்லை.
முதலாளிவர்க்கம் ஒருவரை ஒருவர் ஏமாற்றி உயிர்வாழமுடியாது. இடையில் ஒரு பண்டம் இருக்கிறது அதுதான் உழைப்பு சக்தி .அதுதான் உபரி மதிப்பை உருவாக்கும் பண்டம் .
நீங்க சொன்னமாதிரி மூலதனத்தை வச்சு ஒன்னும் செய்ய முடியாது அண்ணே ஈ தான் ஓட்டனும்
உழைப்பு சக்தி உபரியை சிருஸ்டி செய்யாட்டி இதைத்தான் அந்த கிழவன் மார்க்ஸ் கண்டு பிடிச்சான்.
டாஸ்கேபிடல் வந்ததும் ஒரு பயலும் ரொம்ப நாளைக்கு வாய திறக்காம் அமுக்கிகிட்டு இருந்தானுக ரொம்ப
நாளைக்கு ஆனா உண்மையை மூடி மறைக்க முடியாதே ரொம்ப நாளைக்கு .
ஆனால் இந்த உழைப்பு சக்தியை பத்தியே வாய திறக்காம் வேற என்னெல்லாம் உண்டோ அதை எல்லாம் அவுத்து உட்டீங்க முதலில் தேவை சப்ளைன்னு சொன்னீங்க ,கண்டுபுடிப்புன்னு சொன்னீங்க மூலதனம்மு சொன்னீங்க அடுத்து சமூகமா இருந்ததுன்னு சொல்வது வர்க்கமா பிரிந்ததுன்னு சொல்வது தப்புன்னு சொல்றீங்க
இப்படி நீங்களே திவாலாகி போனது வருத்தப்படவேண்டியதுதான்.//
"அதாவது பொருள் -பணம்-பொருள் இதை விட பணம் -பொருள் -பணம் இந்த பரிவர்த்தனையில் தான் பரிமாற்ற மதிப்பு தோற்றுவிக்கப்படுகிறது " என்று தியாகு சொல்கிறார். பரிவர்த்தனை என்பது தேவை இருந்தாலன்றி எப்படி சாத்தியமாகும். தேவைகள் அற்ற ஒரு பொருளுக்கு தொழிலாளி உழைப்பை வழங்கியிருந்தாலும், சந்தையில் விற்க முடியாமல் போனால், அந்த உழைப்பிற்கு எப்படி உபரி மதிப்பு உருவாகும். ஒரே உழைப்பை நல்கும் இரு வேறு தொழிலாளிகளில் ஒருவர் உழைப்பில் உருவான பொருள் தேவையைப் பொறுத்து அதிக மதிப்புள்ளதாகவும், இன்னொரு பொருள் குறைந்த மதிப்புள்ளதாகவும் இருக்கும் நிலையில் , உபரி மதிப்பு என்ற ஒன்றை எப்படி வெறும் உழைப்பைக் கொண்டு மட்டும் அளவிட முடியும்?
சிந்தியுங்கள்.
நன்றி
பழைய அனானி
மீண்டும் பழைய அனானி. தியாகுவிற்கு எழுதுவது.
இன்னும் இரண்டு விஷய்ங்கள். வங்கித் தொழிலை எடுத்துக் கொன்டால், பணமே பண்டமாய் இருக்க காணலாம். அதாவது பனத்தின் உபயோகம் ஒரு பண்டமாகவும், அதன் உபயோக விலையாக வட்டியும் செயல் படுகிறது. இங்கு உற்பத்தி செயல்படுவதில்லை. Money is the commodity
இரண்டாவது : பரிவர்த்தனை என்பதும் அடிப்படையில் மதிப்பீடு கொண்டு தான் செயல்பட முடியும். இரு பொருள்கைன் பரிவர்த்தனை என்னும்போது அதன் மதிப்புகள் சமப்படுத்தக் கூடியதாய் இருக்க வேண்டும். கிட்டத்தட்ட Rupee Roulbe Parityபரிவர்த்தனை யாக செயல்பட்ட சோவியத் யூனியனுக்கும் இந்தியாவிற்கு நிகழ்ந்த வியாபாரத்தில் மதிப்புச் சமன்பாடு இந்தியாவிற்கு பாதகமாய் இருந்த பிரசினை எழுந்ததுண்டு.
நன்றி
பழைய அனானி
Surplus value theory fails to take into account the efforts of the capitalist / manager ; MOTIVE power is the most basic issue here. all capitalists and great industrial captains like Ford, Rockfeller, Carneige, Birla, etc started as workers (in any one generation ago) and there are no permanent super rich family for thousand years or so. All these people, thru their industry, skill and strong organising power rose to the top.
Unlike caste in India, class as understood by marxists is not a fixed and inflexible division. workers can become capitalists and vice versa thru indiviual efort or folly. hence the rigid division of class is not scientific or valid.
What prevents all the workers to turn into entrepreners and make it big ? only a few are able to it inspite of severe hardships. G.D.Birla's grandfather was a ordinary worker in the 19th cent.
now we have Bill Gates, N.R.Narayamurthy, Sameer Bhatia, textile barons in Karur, Thirupur, etc. all started with nothing and bare hands and made it to the top while their peers remained in their worker status. so what is the compasision ?
the term expolitation is a misnomer. huge population (which increases supply of labour to high volumes), govt deficts which erode real wages, high taxes, etc are major reasons for worker 'exploitations'
The organising power and the ability to motivate, manage and uplift a industrial unit cannot be quanitfied easily like the hours or amount of labour a worker puts in. Marxisim fails to understand this vital aspect of human nature.
The drive and involvement needed to build up a business. hence most communist factories are less efficent and crumbled in the long run as histroy proves repeatedly.
there may be exceptions where exceptionally driven and talented individuals, who were genuine communists (that is they are ready to put in their best effort for the betterment of the 'commune') create efficient eneterprises.
For such efficency and sucess, all the palyers must be motivated to do their best in return for minimum salary (to each according to his needs).
the crux of the problem is 'from each according to his ability' ;
without proper and logical rewards (as in a free market economy) such output of individual is simply not possible.
humans are ego centric and will put in their best efforts and drive only when there is a proper reward or profit.
நன்றி அதியமான்
Post a Comment