Dienstag, 20. November 2007

மகஇக விவாதம் - நண்பர் தியாகுவுக்கு என் பதில்கள்

நண்பர் தியாகு எனக்கு எழுதிய பதிலுக்கு நன்றிகள்.
அவருக்கு என் பதில்கள்

மக இக அவதூறுக்கு பதில் - தமிழ் மணிக்கு

//அதாவது பு.ஜவில் மரியாதை குறைவா யாரை திட்டுறாங்க ஓட்டு பொறுக்கிகளான சுயநல அரசியல் வாதிகளை மக்கள் விரோதிகளை அவனை திட்டுனா உனக்கு ஏய்யா கோபம் வருது இதான் கேள்வி நீ யாரு மக்கள் விரோதியா உன் சித்தாந்தம் என்ன என்று எங்காவது சொல்லி இருக்கியா பெரிசா பேச வந்துட்டாரு டவுசர் பாண்டி மாதிரி
//

அதே!
நீங்கள் இந்த மக்கள் பிரதிநிதிகளை மரியாதை குறைவாக திட்டலாம்
ஆனால், மக்கள் பிரதிநிதிகளின் பத்திரிக்கைகள், பெரும்பான்மை மக்களின் பத்திரிக்கைகள் நக்ஸல்பாரி பயங்கரவாதிகளை மரியாதை குறைவாக திட்டுவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது!

டவுசர் பாண்டி என்றால் என்ன?

//
ஆகா சொல்லிட்டாரய்யா சொல்லிட்டாரு

அதாவது மக்கள் ஆயுதம் தூக்கிடுவாங்களாம் எங்கள் பின்னே வந்து சரி ஏன் ஆயுதமோ அல்லது ஒரு எதிர்கருத்தோ உருவாகிறது அத பத்தி இந்த கட்டுரையில் எங்கயாவது அய்யா நீங்க அறிவுக்கண்ண தொரந்து பேசி இருக்கீங்களா?
//

இல்லை மக்கள் ஆயுதம் தூக்கமாட்டார்கள்.
எதிர்கருத்து உருவாவது எல்லா ஜனநாயகத்திலும் உள்ள ஒரு விஷயம். எதிர்கருத்து இல்லையேல் ஜனநாயகம் இல்லை. ஏன் மனிதனே இல்லை. ஆனால், எதிர்கருத்து இருப்பவனை சுட்டுத்தள்ளவேண்டும் என்பது இந்திய குணமும் அல்ல, மனித குணமும் அல்ல.

//
ஏன் உருபெருக்கி காட்டுகிறார்கள் என கேட்டு அதற்கு விடையும் கொடுத்து இருக்கு ஆசிரியர் குழு இவரது காமாலை கண்ணுக்கு தெரியலை.

சித்தாந்தாத்துடன் ஆயுதம் தாங்க முற்பட்ட குழுவின் மேல் உங்க எரிச்சல் தற்செயலானது இல்லை தேவை ப்படும் போது ஆயுதம் தாங்க இந்து வெறி குழுவான உங்களுக்கு ஒரே ஒரு நக்சல் பாரி இருக்கான்னாலே பேதி ஆகிடுது அதுக்கு என்ன செய்வது. நாங்க எதிர் புரட்சியை
அடக்குவது பற்றி பேசுகிறீர்கள் பரவாயில்லை அப்போ உங்க வாயால இதை புரச்சிகர கும்பல் என ஒத்துகிட்டதுக்கு .( மக்களை திரட்டாமல் ஆயுதம் தூக்குவது உதவாது என்ற நிலைபாட்டை மக இக கொண்டி ருந்தாலும் . ஆயுதம் தாங்கும் குழுக்களின் மேல் அவுத்து விடப்படும் அதி பயங்கர அடக்குமுறையும் அச்சுருத்தலும் தனது ஓட்டை மொள்ளமாறித்தனத்தை மறைப்பதற்குத்தான் என சொல்லத்தான் இந்த கட்டுரையே எழுதப்பட்ட்டு உள்ளது.)

கவலை படாதீங்க கைத்துப்பாக்கிகளின் எண்ணிக்கை உங்களை மாதிரி ஆட்களாலலதிகமாக்கப்படும்
//

"எதிர்புரட்சி" என்பது உங்களது வார்த்தை. அப்படித்தான் நீங்கள் கூறுவீர்கள் என்று எனக்கு தெரியும். உங்களை எதிர்ப்பவர் எல்லோரும் "புரட்சிக்கு" எதிரானவர்கள் என்றுதானே கூறுவது வழக்கம்? அதனால்தான் அப்படி எழுதினேன். அது உங்களை "புரட்சியாளர்கள்" என்று நான் கூறுவதாக தயவு செய்து எடுத்துக்கொள்ளவேண்டாம்.

மக்களை திரட்டி ஆயுதம் தூக்கவைக்கவேண்டும் என்று மக இகவின் நிலைப்பாடு என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி. அதனைத்தான் நீங்கள் பதிலெழுதாக என்னுடைய பதில்களிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அதனைத்தான் இப்போது கொல்வதா பின்னாலே கொல்வதா என்பதுதான் இரண்டு கொலைகார கூட்டங்களுக்கு இடையேயான வித்தியாசம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

//
தீவிர வாதம் என்பது அய்யா என்ன சொல்றீங்க அறிவால எடுத்துட்டு போயி கூட்டத்துல பேரணிபோறவங்களை வெட்டினாங்களே அது மிதவாதமா
அமைதியா பேரணி நடத்திய மருத்துவ மாணவர்களை போலீஸை ஏவி அடிட்த்து நொருக்க சொன்னால் அது மிதவாதமாம்.இந்த மிதவாதத்தைதான் அரசியல் கட்சிகள் செய்கிறதாம் .
அப்புறம் வெடிகுண்டு வீசி கொல்றாங்களே ஒரு கட்சிக்குள்ளயே இருக்கும் ஆட்களை இதெல்லாம் எந்த வகையான மிதவாதம்னு அய்யாதான் சொல்லனும் அய்யா தமிழ் பெல்லு சரியா சொல்லு?

தீவிர வாதம் என்றால் என்னன்னு மொதல்ல சொல்லிடுங்க ஏன்னா பு,ஜவில் எழுதப்பட்ட கட்டுரை தீவிர வாதத்தை ஆதரிப்பதல்ல .
ஆனால் அரசு அமைப்பு அதை ஏன் உருபெருக்கி காட்டுது என்பதை பற்றியகேள்வி எழுப்பு அதுக்கு பதில் அளித்து உள்ளது .

அய்யா நீங்க என்ன செய்து இருக்கீங்கன்னா . இந்த கட்டுரை என்னமோ தீவிர வாதத்தை ஆதரித்தூ எழுதப்பட்டதா எடுத்து உங்க மூளையை செலவழிச்சுட்டீங்க
//


புதிய ஜனநாயகம் என்ற பத்திரிக்கையில் எழுதப்பட்ட கட்டுரை, தீவிரவாதத்தை ஆதரிக்காத கட்டுரை என்பது பொய். தாங்கள் பின்னாலே ஆயுதம் தூக்கும் பயங்கரவாதிகள் ஆவோம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள கட்டுரை. நீங்களே அதனை மேலே ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.

//தீவிரவாதநிலை பாட்டை யாருங்க ஆதரிப்பாங்க உங்க்களுக்கென்ன லூசா
//

மிகச்சரியான கேள்வி. தீவிரவாத நிலைப்பாட்டை யார் ஆதரிப்பார்கள்? ஆதரிக்கும் புஜ, நீங்கள் எல்லோரும் லூஸா என்பது நீங்கள்தான் கூறவேண்டும்.

//
அய்யா என்னங்க சொல்றீங்க தீவிரவாதம் இருக்குன்னா அதை வெளிய ககாட்டாதாமாம் அப்படியே அமுத்தி வச்சுக்குமாம் இதெல்லாம் அரசின் கையில் இருக்கு என்று நீங்க சொன்னா நாங்க கேட்டுகனுமா ? தனது மகன் அழகிரியின் ஆட்கள் செய்த அட்டூலியத்தையே இந்த அரசு மூடவோ மறைக்கவோ முடியாமல் தவித்ததை நாம் பார்த்தோமே?
//

காரணம் ஜனநாயகமும் சுதந்திர பத்திரிக்கைகளும்.

//
தீவிரவாதம் உருவானது ஏன் என்றேல்லாம் யோசிக்காமல் அதை பெரிதாக்குவதற்கு செய்யும்
செயலில் அதன் காரணங்களில் ஏன் அக்கரை காட்டவில்லை என்பதுதான் கேள்வி.

தீவிரவாதம் தவறுதான் அதன் காரணங்கள் தவறல்ல
அதை மறைக்கும் மறுக்கும் நீங்கள்தான் தீவிரவாதி
//


அழகிரி செய்தது தீவிரவாதம் என்று நீங்கள்சொன்னால், அதனை தண்டிக்காமல், அவர் என்ன காரணங்களால் அதனை செய்யும்படி தூண்டப்பட்டார் என்று கட்டுரை எழுதி, அவரை விடுதலை செய்வீர்களா?

தீவிரவாதத்தின் காரணங்கள் என்னவாக இருந்தாலும், நியாயமான காரணங்களாகவே இருந்தாலும், ஒரு அப்பாவியின் உயிரை எடுக்க எந்த ஒரு தீவிரவாதிக்கும் உரிமை இல்லை.


//
போலீசைப் பொறுத்தவரை தனது கேள்விக்கிடமற்ற அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும், தனது கிரிமினல் நடவடிக்கைகளை மறைத்துக் கொள்வதற்கும் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் அது பயன்படுத்திக் கொள்கிறது. மிகவும் அபாயகரமான பணியில் இராப்பகலாக ஈடுபட்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே, காடுகளிலும் மலைகளிலும் ""அவுட்டோர் ஷூட்டிங்'' நடத்துகிறது. தான் நடத்திய, நடத்தப் போகிற எல்லா "போலி மோதல்' கொலைகளையும் மறைப்பதற்கான திரைச்சீலைகளாக இவற்றைப் பயன்படுத்துகிறது.
//


போலீஸ் கட்டற்ற அதிகாரம் கொண்டதல்ல. அது ஆளும் மக்கள் பிரதிநிதிகளின் சொல்லுக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டது. போலீஸ் கட்டற்று மக்களை அச்சுறுத்தினால், ஓட்டுக்களை இழக்கப்போவது ஆளும் கட்சிதான். ஆகவே, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால், மக்கள் நிச்சயம் ஆளும் கட்சியை தூக்கி எறிவார்கள். இது பலமுறை தமிழ்நாட்டில் நடந்துள்ளது. ஆகவே மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு அஞ்சுகிறார்கள். மக்கள் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என்பதால், தீவிரவாதத்தை ஒடுக்க மக்கள் பிரதிநிதிகள் முனைகிறார்கள்.


//ஹய்யோ ஹய்யோ போலீசின் அடக்குமுறை எத்தனை தடவை இந்த நாட்டில் நடந்து இருக்கு எத்தனை முறை மக்கள் தூக்கி எறிந்து இருக்காங்கன்னு ஒரு லிஸ்டு போட்டு சொல்லுங்க பார்ப்போம்
//


நிறைய. போலீஸ் பேயாட்டம் ஆடினார்கள் என்பதால், பல தொகுதிகளில் பல கட்சிகள் தோற்றிருக்கின்றன.

//
திமூக ஆட்சியில் போலீஸ் அராஜகம் என்று அதிமுக சொல்லும்
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா இருக்கிற போலிஸை எல்லாம் பந்தாடும்
அதே மாதிரி அதிமுக ஆட்சியில் போலீஸ் அராஜகம் னு திமுக சொல்லும்
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா இருக்கிற போலிஸை எல்லாம் பந்தாடும்

இது ஒரு ஜெயின் மாதிரிதான் போகுதுன்னு உங்க மண்டையில் ஏறவில்லையா

இடையில் பாதிக்கப்படும் சாதாரண தொண்டன் சாகிரது கண்ணுக்கு தெரியலையா?

வாச்சாத்தியில் பெண்கள் கற்பழிக்கப்பட்டதற்கு என்ன எதிர்வினை மக்கள் செய்தார்கள்
//


உண்மைதான். அதற்காகத்தான் ஜனநாயகம் தேவை.
அதிமுக ஏன் போலீஸ் அராஜகம் என்று சொல்கிறது? அதன் மூலம் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்க முயல்கிறது. திமுக அரசை போலீஸை கட்டுப்படுத்த வைக்கிறது. இப்படி எதிர்கட்சிகள் சுதந்திரமாக குரல் எழுப்பவும், பத்திரிக்கைகள் அராஜகத்தை வெளிப்படுத்தவும் இருக்கும் சூழ்நிலைதான் ஜனநாயகம்.
மக்களுக்கு எது தேவை என்று எனக்குத்தெரியும் என்றுதான் எல்லா கட்சிகளும் சொல்லும்.

அது உண்மையிலேயே மக்களுக்கு தேவையா இல்லையா என்று உரசிப்பார்க்க எதிர்கட்சியும், பத்திரிக்கைகளும் வேண்டும்.

எதிர்கட்சியே இல்லாத ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்கவே கூடாது. சோசலிசம், கம்யூனிஸம், பாஸிஸம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், ஈரானின் மத அரசு, போப்பாண்டவரின் புனித அரசு என்று எந்த பெயரில் சர்வாதிகாரம் வந்தாலும் எதிர்க்கவேண்டும்.

//
இத்தனை பயங்கரமாகச் சித்தரிக்கப்படும் பெரியகுளம் சம்பவத்தில் நடந்திருப்பது என்ன? 3 பேர் சில ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குண்டு வெடிப்பு, போலீசுடன் மோதல், உயிரிழப்பு என்று எதுவும் நிகழவில்லை. கைது செய்த போலீசாருக்கோ ஒரு சிராய்ப்புக் காயம் கூட ஏற்படவில்லை. போலீசின் சட்டம் ஒழுங்கு பார்வையின் படியேகூட இது மிகவும் சாதாரணமான குற்றம்தா ன்.
//




இல்லை. நிச்சயம் இல்லை. ஆயுதம் ஏந்தியவனை தண்டிப்பது வேறு. ஆயுதம் ஏந்துவதை தன் கொள்கையாக கொண்ட இயக்கத்தினை ஒடுக்குவது வேறு. இதில் போலிசாரை நோக்கிச் சுட்டு அதில் இருவர் உயிரிழக்கவில்லையே என்று உங்களுக்கு மிக வருத்தம் போலிருக்கிறது. நீங்கள் என்ன போன பிறவியில் ரத்தக் காட்டேரியாக இருந்தீர்களோ? அல்லது இப்போதுமே அப்படித்தானா? சாதாரண மனிதரைக் கேட்டால் 'நல்ல வேளை யாரும் யாரையும் சுடவில்லை. அதற்கு முன் ஆயுதங்களைக் கைப்பற்றி விட்டார்கள்' என்று போலிசாரைப் பாராட்டவே செய்வார்.

//
ஒடுக்குவது சரி என சொல்லும் நீங்கள் தான் அவர்களை விட இரத்த காட்டேறியின் தந்தையாக இருந்து இருக்கீங்க்க. இங்கே நீங்க பயப்படுவது ஆயுதத்துக்கு இல்லை சித்தாந்தத்துக்கு என புரிய வச்சா புரிஞ்சுப்பீங்களா
ஆனா ஒடுக்குவது ஆயுதத்தை என்ற பேரால் சித்தாந்தை என்பதையும் புரிய வச்சால் புரிஞ்சுப்பீங்களா?
//

அதனைத்தான் நானும் சொல்கிறேன். மக்கள அஞ்சுவது ஆயுதத்துக்கு இல்லை. கொலைவெறி சித்தாந்தத்துக்கு.

//
மாட்டீங்க மாட்டீங்க ஏன்னா ஒரே போடாக ஆயுதம் தூக்குபவன் தீவிரவாதி இதான் பேசுவீங்க
கீறல் விழுந்தா ரெக்காடு மாதிரி
//

ஆயுதம் தூக்குபவன் எல்லோரும் தீவிரவாதி அல்ல. தீவிரவாத சித்தாந்ததின் கீழ் மக்களை ஆயுதம் தூக்கவைப்பவன் தான் தீவிரவாதி.

//
அதாவது வன்முறைக்கு தனிநபர் வன்முறை கூட்டு வன்முறை பொரியல் வன்முறை என என்னென்ன பேரெல்லாம் வச்சு இருக்கீங்க .

அதாவது அப்பாவிகளை ரெளடிகளை அனுப்ப்பி கொல்லும் கயவாளித்தனத்தை மன்னித்து விடுவீர்Kஆள் அது அபாயமானதல்ல. இதானே உங்க கருத்து என்னய்யா நியாயம்.

வன்முறை மூலம் போலிஸ் அதிகாரத்தை கைப்பற்ற கூடாதுன்னு சொல்றீங்களே

மதுரையில் அதைத்தானே அழகிரி செய்துகிட்டு இருக்கான் .

அவரது ஆட்கள் அடித்து நொருக்க போலீஸ் வேடிக்கை பார்க்க இதெல்லாம்

ஆட்சியை மக்களில் பேரால் ஆட்சிக்கு வந்தவர்கள் செய்யும் வேலையா

இது சகஜம் போல உங்க அகராதியில்

நீங்க நியாயமான ஆளுன்னா இதையும் அல்லவா கண்டிக்க வேண்டும்

அதெப்படி தனிநபர் பயங்கரவாதம் என சொல்றீங்க

தினகரன் ஆபிசுக்கு போனது தனிநபரா.

தன் அப்பா ஆட்சியில் இருக்கிறார் என்ன செய்தாலும் கேட்க ஆள் இல்லை என
ஆணையிடும் ஒரு தனிமனிதனா அங்கே சென்றால் இல்லையே ?

ஆட்சி அதிகாரத்தை கையில் வச்சுகிட்டு என்னவேணா செய்யலாம் என செய்யும் ஒரு கும்பலே அல்லவா போயிருக்கு அது இன்னைக்கு மட்டுமா போகுது அன்று சேலத்தில் மாணவிகளை பஸ்சோடு எரித்தது மதுரை வில்லாபுரத்தில் கவுன்சிலர் லீலாவதியை கொன்றது. ஒரு முன்னாள் அமைச்சரை வான்க்கிங் போகையில் போட்டு தள்ளிய
இதுக்கு பேர் தனிநபர் பயங்கர வாதமா ? நல்ல கூத்து தமிழ் பெல்

ஆக இதெல்லாம் சமூகத்தின் கேன்சராக உங்களுக்கு ஏன் தெரியவில்லை
//

மேலே நீங்கள் எழுதியதை படியுங்கள். மக்கள் அஞ்சுவது அழகிரிக்கு அல்ல. திமுகவின் கொள்கையும் வன்முறை கொள்கை அல்ல. காங்கிரஸின் கொள்கையும் வன்முறை கொள்கை அல்ல. மக்கள் ஓட்டுப்போட்டு திமுகவை பதவியிலிருந்து நீக்கினால், அவர்கள் மௌனமாக "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று இறங்கி வெற்றிபெற்ற கட்சிக்கு வழி விடுகிறார்கள். ஆனால் அழகிரி விஷயம் எதிர்கட்சியால் உபயோகப்படுத்தப்படும். அழகிரியை காப்பாற்றிய தந்தை கருணாநிதியால் தமிழ்நாட்டுக்கு நீதி கிட்டுமா? என்று எதிர்கட்சியால் பேசப்படும். அதனால், திமுகவுக்கு கிடைக்கும் வாக்குக்கள் குறையும். இதுதான் ஜனநாயகம்.

திமுக தோற்றதும், திமுகவுக்கு ஓட்டுப்போட்ட அனைவரையும் திமுக தலைவர் ஆயுதம் தூக்க சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நாடு தாங்குமா? அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் அவர் வைத்துக்கொள்ளலாம். பாட்டாளிவர்க்க புரட்சி, சோசலிஸ கட்டுமானத்துக்கான புரட்சி என்று ஏதோ குப்பை பெயர். இருந்துவிட்டு போகட்டும். அவர் கூப்பிடுகிறார் என்றால் உயிரை விட இன்று கோடிக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். 30 சதவீத ஓட்டுக்களை அவர் தமிழ்நாட்டில் பெறுகிறார். அவர் அழைத்தால் எத்தனை பேர் ஆயுதம் தூக்க தயாராக இருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். ஆனால், அவர் அவ்வாறு கூப்பிடுவதில்லை. தன்னுடைய கருத்துக்களை நம்பி, மீண்டும் தேர்தலில் நின்று மக்கள் நம்பிக்கையை பெற்று ஆட்சிக்கு வரத்தான் அவர் விரும்புகிறார். அதே போலத்தான் அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும்.

கருத்துக்கள் மூலம் வெல்லமுடியாதவனே ஆயுதம் தூக்குகிறான். உங்கள் கருத்துக்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் ஆயுதத்தின் மூலம் அரசதிகாரம் என்று பேசுகிறீர்கள். உங்கள் கொள்கை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை. அதனால்தான் நீங்கள் இப்படி என்னை தமிழ் பெல் என்று எழுதுகிறீர்கள். இவ்வாறு எழுதுவதன் மூலம் என்னை அவமானப்படுத்தி, நீங்கள் வெற்றிபெற்றுவிட்டதாக நினைத்துக்கொள்கிறீர்கள்.

//
அய்யா நீங்க சொல்றீங்க எந்த ஆட்சி அதுக்காக நீக்கப்பட்டதுன்ற விபரத்தை தரமுடியுமா
சும்மா ஜோசியக்காரன் மாதிரி படும் டும் டும் ன்னு பேசபடாது.

மக்கள் கையில் கன்ரோல் எல்லாம் இல்லை . ஓட்டு போட்டது ஒருத்தனுக்கு அவன் கட்சி மாறி போனா ஒன்னும் செய்யமுடியாது அதான் நிலை இன்று
//


இருந்தது. இருக்கிறது.
எதிர்காலத்திலும் இருக்கும் என்று நம்புகிறேன்.
விவசாயிகள் தற்கொலைக்காக தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை அடைந்தது. காங்கிரஸ் வெற்றிபெற்றது.
பட்டினி சாவுக்காக காங்கிரஸ் ஒரிஸ்ஸாவில் தோல்வியுற்றது. பிஜு ஜனதாதளம் ஆட்சி பெற்றது.
பட்டினி சாவுக்காக காங்கிரஸ் தோற்று, திமுக ஆட்சி பெற்றது. எத்தனை எத்தனையோ நடந்திருக்கிறது.

//
முதல்ல உனக்கு வெக்கம் இருக்கா இல்லையா நாட்டில் லஞ்சம் மொள்ளமாரித்தனம் எல்லாம் இருக்கு அதை தட்டிகேட்காதேன்னு சொல்வதற்கு .

எல்லாம் மாறும் மாறும் ஓட்டு மட்டும் போடுங்கன்னு சொல்வதற்கு உனக்கு சொரணை இல்லையா?
//

ஓட்டுப்போடுவது மட்டுமே ஜனநாயகம் அல்ல. அவ்வாறு புரிந்துக்கொண்டதுதான் நீங்கள் செய்யும் முதல் தவறு. ஜனநாயகம் என்பது, லஞ்ச ஊழலை வெளிக்கொணரும் பத்திரிக்கைகள், வேலை நிறுத்தம் செய்ய உரிமை உள்ள தொழிலாளர்கள், பொருளாதார சுதந்திரம் கொண்ட மனிதர்கள், அரசியல் சுதந்திரம் கொண்ட மனிதர்கள், அந்த சுதந்திரத்தை சுதந்திரமாக ஓட்டுக்களில் பதிவு செய்ய உரிமை உள்ள மக்கள் இதுதான் ஜனநாயகம்.

//
அட தமிழ் பெல்லே தமிழ் நாட்டில் நடப்பதை பத்தி கருத்து சொன்னா நீ ஏன் லெனினிசம் சோசலிசம் என ஜல்லி அடிக்கிற .

தமிழ் நாட்டில் நடக்கும் பிரச்சனைக்கு பதில் சோவியத்தில் நடந்த விசயங்கள

இதுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை வந்துட்டு சோவியத் இரஸ்யாவை தூக்கிட்டு
//

லெனினிசம் சோசலிஸம்தான் குறிக்கோள் என்றுதானே அதன் அடிப்படையில்தானே நீங்கள் இந்திய அமைப்பை விமர்சனம் செய்கிறீர்கள்? அப்போது அதனை பேசுவதில் என்ன தவறு?

இதற்கு வரிக்கு வரி பதில் கூறியுள்ளேன்.


//
அம்பது வருசம உங்களை மாதிரி நாதாறி பயலுவ பேச்சை கேட்டு சீரழிந்து விட்டது நாடு எலிக்கறி சாப்பிட்டு சாகும் விவசாயிகளிம் ஓட்டு போடுன்னா அவன் உன் மண்டையில் நச்சுன்ன்னு போடுவான். வங்கிக்க.

மக்களிடம் என்ன பேசவேண்டும் என்பதை நீ கத்து தந்து பேசும் நிலமையிலா தோழர்கள் இருக்கிறார்கள் .
//

மக்களில் ஒருவன் நான் பேசுவதற்கு நீங்கள் கூறும் பதில்களே எந்த அளவுக்கு மக்களை மதிக்கிறீர்கள் என்பதை காட்டுகிறதே.
எலிக்கறி சாப்பிட்ட தமிழர்கள் காங்கிரஸை தூக்கி எறிந்து திமுகவை உட்காரவைத்தார்கள். அது ஜனநாயகத்தின் மூலம்தான் சாத்தியமாயிற்று. மனிதக்கறியை சாப்பிடும் நிலைக்கு சீன மக்களை தள்ளிய மாவோ சாகும் வரைக்கும் அரசிலிருந்து தள்ள முடியவில்லையே?

//
சுதந்திரம் இருக்கிறதாம் சுதந்திரம் தொழில் முனைவோரும் தொழிலும் ஆகாதென்று சொல்வதாகவும் . நாட்டை உடனே சோசலிச கொள்கை புகுத்தனும் என்றும் எவன் சொன்னது .

உனக்கு நாடு எப்படி இருக்குதுன்னு தெரியுமா அரை முதலாளித்துவம் அரை நிலபிரபுத்துவம் எனும் வரையறைக்கு இந்தியா இருக்கு எனவும் மூன்றாம் உலக நாடுகளுக்கு புதிய ஜனநாயக புரட்சி மட்டுமே தீர்வாக இருக்கும் என்றும் மாவோ சொன்னதை படிச்சாவது இருக்கியா.

சீனா அதிகாரவர்க்க கும்பல் கையில் போயிட்டா எல்லாமே பொய்யாகிடுமா
//

சீனாவும் இப்போது கம்யூனிஸ்டு இல்லை என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. மனிதக்கறி சாப்பிடும் அவலத்துக்கு சீன மக்கள் தள்ளப்பட்ட நிலைக்கு பின்னர்தான் சீனர்கள் முழித்துக்கொண்டார்கள். சோசலிஸம், மாவோயிஸம் பேசினால், சீனாவே அழிந்துவிடும் என்றுதான் அமெரிக்காவுக்கு போய் பிச்சை எடுத்தார்கள். அவ்வாறு அமெரிக்காவில் பிச்சைஎடுக்கவேண்டாம் என்று எதிர்கருத்து சொல்லக்கூட சீனாவில் மக்களுக்கு உரிமை இல்லை. அந்த நிலைக்குத்தான் மாவோ சீனாவை தள்ளி வைத்திருந்தான்.

//
விபத்து நடந்தால் போக்குவரத்து விதிகள் தப்புன்னு சொல்லுவாய் போலிருக்கு
//

அதே.
ஜனநாயகத்தினால், பத்திரிக்கை சுதந்திரத்தால், வெளியே வரும் ஊழல்களையும் அராஜகங்களையும் காட்டி, இந்திய ஜனநாயகமே தப்பு என்று நீங்கள் வாதிடுவதும் அதே.

//
வார்த்தைகள் மூலம் சொன்னாத்தான் ஓட்டு போடு சரியா போகும்னு சொல்ற
ஓட்டு போட்டா சரியாகலை வேற என்ன தீர்வுன்னா சோசலிட இரஸ்யா தப்புங்கிற
சரிடா என்னதான் தீர்வு வச்சு இருக்கன்னு கேட்டா நான் விமர்சனக்காரன் என்னிடம் சித்தாந்தம் தீர்வு எல்லாம் இல்லைங்கிற அப்புறம் என்ன மயிருக்கு நீ அடுத்தவனுக்கு புத்தி சொல்ல வந்துட்டன்னு கேட்கிறேன்.
//


மீண்டும் சொல்கிறேன். வெறும் ஓட்டு மட்டுமல்ல ஜனநாயகம்.
நான் எப்போது என்னிடம் தீர்வு இல்லை என்று சொன்னேன்? அது என்னுடைய தீர்வும் அல்ல. சாதாரண பொதுமக்களின் சாதாரண அறிவு.
நீங்கள் பதில் கூறிய இந்த பதிவின் இறுதியிலேயே அதனையும் குறித்திருந்தேன். படித்துப்பாருங்கள் மீண்டும்.


//
அடப்பாவி விவசாயிகள் தற்கொலை செய்துகிட்டா அராங்கத்த கலைச்சு இருக்காங்க
எப்ப எங்க ஏப்பா தமிழ் மணி கஞ்சா கிஞ்சா அடிச்சுட்டு இத எழுதினியா ?

இனிமே உனக்கு பதில் கொடுத்தேன் நான் டாராகிடுவென் போல
//

மேலே எழுதியிருக்கிறேன். ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் இந்த காரணத்தினாலேயே அரசுகள் மக்களால் கலைக்கப்பட்டுள்ளன.

மேலே தொடர்ந்து எழுதிய என்னுடைய பதில்களுக்கும் பதில் எழுதியிருக்கலாம். ஆனால், அந்த பதில்கள் உங்களை "டாரா" ஆக்கிவிடும் என்றால், உங்களது விரக்தியை புரிந்துகொள்ள முடிகிறது.

15 Comments:

Anonym said...

நல்ல பொறுமையான விளக்கமான பதில்கள்
தியாகுவின் வாதத்தில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதையும் சரியாகவே பிடித்துள்ளீர்கள்

said...

ரா
உங்கள் மறுமொழிக்கு நன்றி

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...

நேர்மையாக விவாதம் செய்கிறீர்கள்.
விளம்பர கமெண்டுகளை நீக்கிவிடலாமே?

Anonym said...

//தோழர் கார்கி கூறியதைப்போல.. செய்வதுதான் சரி.//

தமிழ்மணி அய்யா,

ம க இ க கும்பல் தோழர் கார்க்கி கூறியதைப் போல் செய்வது தான் சரி என்ற உன்னத கொள்கையை கொண்டவார்களாம்;அப்படி கார்க்கி அய்யா என்ன தான் செய்ய சொன்னார்?நந்தி கிராமத்தில் சி பி எம் பொரிக்கி கும்பல் பி யு எம் ஸி பொரிக்கி கும்பலை,கார்க்கி அய்யா சொன்னது போல் செய்வது தான் சரி என்று அடித்து விரட்டியதே;அந்த வீரச் செயலுக்கு நம்மூர் ம க இ க குஞ்சுகள் வீர வணக்கம் போடுமா?

பாலா

said...

நண்பர் தியாகுவின் பதிவில் இந்த பதிவுக்கு சில எதிர்கருத்துகள் உள்ளன.

வாசகர்கள் படிக்கலாம்.

நன்றி

Anonym said...

உங்களை மொள்ளமாறி, முட்டாள், சொந்தமாக எழுதத்தெரியாதவன், என்று அர்ச்சனை செய்திருக்கிறார்கள்.
அதுதான் எதிர்வினை என்று சொல்கிறீர்களா?

:-))

said...

அதற்கென்ன செய்வது?
அவர்களது "விவாதம்" எப்போதுமே அப்படிப்பட்ட வார்த்தைகளால் நிரம்பியதுதானே?

இருப்பினும், அந்த வார்த்தைகளுக்குப் பின்னே ஒரு விவாதக்கருத்து இருக்கிறதா என்பதையே நான் பார்க்கிறேன்.

Anonym said...

இதற்கு தியாகு பதிலெழுதியிருக்கிறாரா?

Anonym said...

பதில் இருந்தால் எழுதுவார் :-)

said...

தியாகு said...
புராதண பொதுவுடமை சமூகத்துக்கு எங்கெல்ஸ் சிறந்த ஆதாரங்களை முன்வைக்கிறார்.

பழைய அனானி பார்வை இடவும் சுட்டி இதோ

http://www.marxists.org/archive/marx/works/1884/origin-family/index.htm


23. November 2007 03:09
தமிழ்மணி said...
நண்பர் தியாகு,
இந்த புத்தகம் 18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
புராதன பொதுவுடமை சமுதாயம் என்று ஏதும் இருப்பதாக எந்த ஒரு சமூகவியல் ஆய்வாளரும் சொல்வதில்லை.
சொல்லப்போனால், குரங்குகளில் கூட பொதுவுடமை சமுதாயம் இல்லை. குரங்குகளில் கூட தலைமை குரங்கு உண்டு. (அதெல்லாம் 18ஆம் நூற்றாண்டு எஞ்கல்ஸுக்கு தெரிந்திருக்காது) ஏன் தமிழ்நாட்டில் பொதுவுடமை சமுதாயத்தில் வாழும் ஒரு நாயைக்கூட கண்டுபிடிக்கமுடியாது.

நாய்கள் தனியுடமை மிருகங்கள். ஒரு நாயின் ஏரியாவுக்குள் வரும் இன்னொரு நாயை எப்படி குலைத்துசண்டை போட்டு துரத்துகிறது என்பதை பார்த்திருப்பீர்களே?


23. November 2007 19:03
தமிழ்மணி said...
http://www.animalplanetasia.com/primates/social_life/how_do_they_live/index.shtml

dominance hierarchies என்பது பிரைமேட்ஸ்களின் சமூக வாழ்வில் முக்கியமான ஒன்று.

இது என்ன என்று படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
பொதுவுடமை சமுதாயம் என்பது கற்பனை.

அது அமீபாவாக உயிரினம் இருக்கும்போது கூட இருந்திருக்காது. ஒரு அமீபா மற்றொரு அமீபாவுக்கு கொடுத்துவிட்டு தின்னாது.

அல்டுரூயிஸம் என்பது நல்ல ஒரு குணம். அதுவும் மனிதனின் பரிணாமத்தில் தோன்றுவதுதான்


23. November 2007 19:54

Anonym said...

அந்த குரங்குகள் dominance hierarchies களில் இருந்தால், அதுவும் வர்க்க பேதமே!

அவைகளையும் அழித்தே தீருவோம்.
:-)))))

Anonym said...

அழிப்பை அமீபாக்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் தோழர்!
:-)))

Anonym said...

சிரிப்பதற்கு ஒன்றுமில்லை அனானி நண்பர்களே.

வரட்டு கொள்கை அடிப்படையில் எத்தனையோ மனிதர்களை கொன்றவர்கள் அமீபாவிலிருந்து ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள்.

said...

நண்பர் ஸ்பார்டகஸ் பதிவில் மறுமொழி எழுதினேன்.
(மருத்துவர் ராமதாஸை விமர்சித்த பதிவு)

நண்பர் வெளியிடவில்லை.