Montag, 12. November 2007

நண்பர் ஜமாலனுடன் அனானி1இன் கம்யூனிஸ விவாதம்

ஜமாலனின் பின்னூட்டம் இங்கே. (முந்தைய பதிவிலும் அவரது பின்னூட்டம் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளது)
அதற்கான அனானி 1இன் பதில் இங்கே

Anonym said...
அன்புள்ள ஜமாலன்,
வணக்கம். நான் பழைய அனானி.
அனானிகளையும் இந்தப் பின்னூட்டத்தில் நீங்கள் இழுத்து ரெண்டு சாத்து சாத்தியிருப்பதால் இந்தக் கடிதம்.
உங்கள் பின்னூட்டத்தின் முதல் பாரா தி மு க மேடைப்பேச்சின் "அழகையும்" " ஆணவத்தையும்", " அவசரத்தையும் " ஒருங்கே கொண்டிருந்தது. அபத்தத்தைக் கூட ரசிக்கும்படியாய் வெளிப்படுத்தமுடியும் என்ற தி மு க தத்துவத்தை முதல் பாராவில் நிரூபித்திருக்கிறீர்கள்.

1. ஓட்டை ஜனநாயகத்தின் கீழ் தான் "தெஹல்கா" நடத்திய ஆய்வு வெளிவந்திருக்க முடிந்திருக்கிறது. ரஷ்யாவில் ஓட்டை ஜனநாயகம் வந்தபிறகு தான் கொஞ்சமேனும் ஸ்டாலின், லெனின் அட்க்குமுறைகள் "தெஹல்கா" ஆய்வு போல வெளிவந்திருக்கின்றன. எனவே ஓட்டை ஜனநாயகம் ஆதரிக்கத் தக்கதே. சர்வாதிகாரத்தின் கீழ் சீனாவில் தியனன்மன் அடக்குமுறை, ஃபலுன் காங் அடக்குமுறை , திபெத் ஆக்கிரமிப்பு பற்றிய "தெஹல்கா" ஆய்வு வரவேண்டுமெ என்றால் சீனாவில் குறைந்தபட்ச ஓட்டை ஜனநாயகமாவது வரவேண்டும் என்று நீங்கள் சொல்வதாய் இதை நான் புரிந்து கொள்கிறேன். அதற்கு முயலுங்கள் அல்லது முயலும் சக்திகளுக்குத் துணையாய் இருங்கள். சர்வாதிகாரத்துக்கும் , ஓட்டை ஜன்நாயகத்திற்கு போட்டி என்றால் ஓட்டை ஜனநாயகத்திற்கே நாம் ஓட்டுப் போட வேண்டும் இல்லையா? ஏனென்றால் ஓட்டை ஜனந்நயகத்திலிருந்து உண்மையான ஜனநாயகத்திற்கு எப்போதாவது போகலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சர்வாதிகாரத்தின் கீழ் அந்த வாய்ப்பு இல்லை.

2. பொது மக்கள் என்று யாரும் இல்லை என்று தெரிவித்த கருத்துக்கு நன்றி. இனிமேலேனும், மக்கள் கலை இலக்கியம், மக்கள் ஜனநாயகம் என்ற வார்த்தையை விட்டு விடச் சிபாரிசு செய்யுங்கள். சோஷலிசத்தின் கீழ் யாருமே மலம் அள்ள வேண்டியிருக்காது, ஏனென்றால் எல்லொருக்குமே நிரந்தர மலச்சிக்கல் இருக்கும் என்று புரிந்து கொண்டேன்.

3. அப்பாவி மக்களை நக்சல்பாரிகள் கொன்றதில்லை என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டீர்கள். செத்தவர்களை விசாரிக்கவா முடியும்? நக்சல்பாரிகள் கொன்றால் அவர்கள் மக்கள் விரோதிகள் தான் என்று லேபல் ஒட்டிவிடலாம்.

4. உங்கள் வன்முறைப் பட்டியல் சுவாரஸ்யமானது. இந்திய சர்வதேச கொலைப் பட்டியலை விடவும் ஸ்டாலின் , மாஒ கொன்றவர்களின் எண்ணிக்கை அதிகம் அல்ல என்பதால், மாஒ ஸ்டாலின் செய்த கொலைகளைப் பற்றிப் பேசக் கூடாது என்பதும் கூட தர்க்க ரீதியாய்ச் சரியாய்த்தானிருக்கும். ஆனால் உங்கள் பட்டியலில் பாருங்கள் மிக கவனமாக தாலிபன் அரசு நிஅகழ்த்திய படுகொலைகளும், பாகிஸ்தானிலும் காஷ்மீரிலும் ஜிகாதிகள் பண்ணிய கொலைகளும் விடுபட்டிருக்கின்றன. ஒருவேளை ஸ்டாலின் ,மாஒ போல இஸ்லாமிய பயங்கரவாதிகளும் "எதிரிகளை" உன்னத நோக்கத்திற்காகக் கொல்வதாய் நீங்கள் நினைக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளலாமா?

5. நீங்கள் இட்ட கொலைப் பட்டியலில் இரண்டு விதமான கொலைகள் உள்ளன. ஒன்று போரின் போது நிகழ்ந்த கொலைகள் . இரண்டாவது தன்னுடைய மக்களை - ஏதோ ஒரு காரணத்திற்காக, முக்கியமாய் தம்மைக் காட்டிலும் கீழானவர்கள் (யூதர்கள், நாட்டின் பூர்வகுடிகள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் ) என்ற இனவாதக் காரணத்திற்காகக் கொல்லப் பட்டவர்கள். இப்படிப் பட்ட இனவாதக் கோட்பாட்டின் ஓர் அங்கம் தான் கம்யூனிசக் கொலைகள். யூதன் என்று ஒரு லேபிளுக்காக அல்லது சோஷலிச விரோதி என்ற லேபிலுக்காகக் கொல்லப் பட்டவர்கள் எல்லாம் தனக்குத் தான் மற்றவனின் உயிரை எடுத்து உலகைக் காப்பாற்றும் உரிமை இருக்கிறது , என்ற கோட்பாட்டின் கீழ்க் கொல்லப் பட்டவர்கள். போரில் கொல்லப் பட்டவர்களை இந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. ஏனென்றால் போர்க் கொலைகள் வரலாற்றில் நெடுக நிகழ்ந்து வருபவை.

6. மக்கள் நலனில் நாட்டம் உள்ள அரசு ராணுவத்திற்கும், காவல் துறைக்கும் எப்படி செலவு செய்யாமல் இருக்க முடியும்? நக்சல்பாரிகளின் கொலை வெறியிலிருந்து, திருட்டு, கொள்ளை போன்றவற்றிலிருந்தும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இல்லையா? சோஷலிச அரசில் ராணுவமும், காவல்துறையும் உதிர்ந்து போயிற்றா? சிறைச்சாலைகள் மூடப்பட்டு விட்டனவா?

7. இன்றைய வாழ்கை சிறந்தது என்று யாரும் வாதிடவில்லை. நிச்சயம் உழைக்கும் மக்கள் மட்டுமல்ல எல்ல மக்களும் வாழ்க்கை வசதிகள் பெற்று வாழ உரிய முயற்சிகள் செய்யப் படவேண்டும். ஆனால் வன்முறை மூலம் அந்த முயற்சிக்கான தடைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதால், மக்கள் வரிப்பணம், மக்கள் நலனிற்குச் செலவிட வேண்டிய வரிப்பணம், காவல் துறை முயற்சிகளில் வீணாகிறது.

8. என் கேள்வி ஏன் வாக்குரிமை அரசியலையும் உங்கள் ஆயுதமாய் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான். ஏற்கனவே பீஹார் போன்ற மாநிலங்களில் நக்சல்பாரிகள் வாக்குப்பெட்டி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்களே.

9. மார்க்சியம் மத நம்பிக்கையாய் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று நீங்கள் சொல்வது ஒப்புக் கொள்ளத்தக்கதே. மதம் வெறியாய் மாறி பயங்கரவாத தாலிபனாய் உருவாகாத வரையில் நிச்சயம் நம்பிக்கைகளுக்கு - அவை மூட நம்பிக்கையாய் இருந்தாலும் - ஜனநாயகத்தின் கீழ் இடம் உண்டு. ஜனநாயக சமூகம் நம்பிக்கைகளில் எது சரி எது தவறு என்று தீர்மானிப்பதில்லை.

நன்றி


பழைய அனானி.

12. November 2007 08:05

8 Comments:

said...

அனானி1 அவர்களின் சிறப்பான பதிலை இங்கே தனி பதிவாக கொடுத்திருக்கிறேன்.

நண்பர்களை விவாதிக்க அழைக்கிறேன்.

said...

ஜமாலன் said...
//உங்களைப்போல வரிக்குவரி எதிர்த்து எழுதுவது என்பது நேரவிரயம்தான். காரணம் விவாதத்திற்கானதோ அல்லது உரையாடுவதற்கானதோ அல்ல உங்கள் மறுப்பு. அது தனது கருத்தை திணிப்பதற்கான முயற்சி. அது பேச்சல்ல போதணை. அதை கேட்டு திருந்தக்கூடிய அணாணிகளும் அல்லக்கைகளும் அல்ல நாங்கள். நாங்கள் என்பது மார்க்சியம் என்கிற நீங்கள் ஒவ்வா என ஒதுக்கும் மதத்தை நம்புபவர்கள். அழகாக திருவண்ணாமலையில் ஒரு தோட்டம் வாங்கி ஆசிரமம் நடத்தலாம். வரிவிலக்கும் உண்டு. நீங்கள்லாம் கூறி திருந்துற ஜன்மங்கள் நாங்க கிடையாது. அம்புடுத்தான். அதுக்கமேலே ஒரு வார்த்தைய நான் நகட்டுல//

தனிப்பதிவில் கூவி அழைப்பதால் ஒரு சில வார்த்தைகளை எனது ஒப்பந்தத்தைமீறி இங்கு நகட்டுவதற்கு மன்னிக்கவும்.
உங்கள் அளவிற்கு எனக்கு கோணார் உரை எல்லாம் வரிக்கு வரி எழுத தெரியாது. அதியமான் துவங்கி அணாணி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்....

இவ்வளவு தெளிவாக கூறியும் மல்லுக்கட்டுவதன் அடிப்படை என்ன? உங்களை நீங்கள் நிரூபித்துக் கொள்ள உங்கள் அணாணிகள் என்கிற அணாமதேயங்கள் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் உங்களுடன் மல்லுக்கு நிற்பதில் அர்த்தமில்லை.

வயிற்றுக்கு சோரிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என்கிற பாரதியின் கனவை நிறைவேற்றக்கூடிய எந்த ஒரு அமைப்பையும் ஆதரிப்பதே எனது நிலைப்பாடு. அது சர்வாதிகாரமா? அல்லது ஜனநாயகமா? என்கிற பெயர் குறித்த பிரச்சனை அல்ல. தவிரவும் ஜனாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. சிறுபான்மை பெரும்பான்மையை ஆண்டால் அது சர்வாதிகாரம். பெரும்பான்மை சிறுபான்மையை ஆண்டால் அது ஜனநாயகம். அடிப்படையில் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனைதான். இந்த எண்ணிக்கையும் இந்திய ஜனநாயகத்தில் சாத்தியமில்லை. காரணம்..36 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சிகள்தான் 64 சதவீதம் மக்களை ஆள்கிறது. சாதியும் மதமும் அதிக்கம் வகிக்கும் ஒரு அடிப்படை ஜனநாயகமற்ற ஒரு சமூகத்தில் மக்கள் பிரதிநிதித்துவம் என்பதன் கேலிக்கூத்தைதான் இட ஒதக்கீடு துவங்கி எல்லா பிரச்சனைகளையிலும் பார்க்கிறோமே. உயர்நீதி மன்றம் துவங்கி எல்லாவற்றிலும் இந்த பிரதிநிதித்துவ அரசியல் எப்படி ஆள்கிறது என்று.

அடிபபடைப் பிரச்சனைகளை விட்டுவிட்டு மேலோட்டமாக பேசுவது பயனற்ற வாதம். இந்திய மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்வதற்கான அதாவது 3 வேளை சாப்பாடு ஏற்றத்தாழ்வற்ற பொரளாதாரம் இப்படி... இவற்றை தீர்க்க உங்களது வழி என்ன? திட்டம் என்ன? மனிதனை மனிதன் கொல்லாத ஒரு வன்முறையற்ற மாற்று சமூகத் திட்டத்தை கூறுங்கள். நக்சல்பாரிகளின்அடிப்படைக் கோட்பாடு இவைதான். உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்கான ஏற்பாடுகள் துவங்கி... எல்லோருக்குமான சமத்துவம் உள்ள வாழ்க்கை. தீண்டாமை என்றும் சாதி என்றும் மனிதர்களை வாழும் சமூகத்திலேயே கீழானவர்களாக ஒடுக்கி வைத்திருக்கும் இந்த ஜனநாயகத்தைவிட சமத்துவமான வாழ்வு ஒரு சர்வாதிகாரத்தால்தான் சாத்தியம் எனில் அந்த சர்வாதிகாரம் ஆதரிக்கப்பட வேண்டியதே.

சமத்துவமற்ற மனிதனை மனிதன் சுரண்டுகிற தீண்டாமை துவங்கி அனைத்து சாதியக் கொடுமைகளும் ஒழிக்கப்பட்டு மதத்தின்பேரால் இனத்தின் பேரால் நடைபெறும் மனித அழிவுகள் அனைத்தும் நிறுத்தப்படும்வரை புரட்சியும் மக்கள் எழுச்சியும் வெவ்வேறு வடிவங்களில் வந்துகொண்டுதான் இருக்கும். காரணங்களைவிட்டுவிட்டு காரியங்களை பற்றி பேசுவதில் பயனில்லை. நக்சலபாரிகள் முன்வைக்கும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வழி உண்டா சொல்லுங்கள். பிரச்சனை நக்சல்பாரிகள் நல்லவர்களா? கெட்டவர்களா? கிரிமினல்களா? என்பதல்ல.. அவர்கள் உருவான காரணம் என்ன? அது தீர்க்கப்ட்டும் அவர்கள் தங்களது வன்முறையை தொடர்கிறார்களா? என்பதுதான். ஒடுக்கப்பட்டு கிடக்கும் ஆகக்கீழான மக்களைக்கூற மலம் அள்ளுதலை கூறினால் அதனை நக்கலுடன் அனுகும் உங்கள் அனுகுமுறைகள் தானெ அம்பலப்பட்டுவிட்டதை உணருங்கள் நீங்கள் யாருக்காக வாதாடகிறீர்கள் என்று.

அதனால் இந்த விவாதமே உங்களை நீங்கள் நிரூபித்துக்கொள்வதற்கான ஒரு உத்திதான். அதற்காக அங்கீகாரம் தேடி அலைவதே இதில் வெளிப்படுகிறது. அதனால் இந்த விவாதத்தை அல்லது உங்கள் முன்முடிவுகளை தொடர்பவர்கள் தொடரட்டும். திரும்பவும் இது நேர விரயம்தான். நான் முன்பே கூறியபடி.. உங்களது இந்த விளையாட்டிற்கு நான் ஆளில்லை. ஒன்று செய்யுங்கள் உங்களது இந்த சமூகப்பணியை தொடர்ந்து செய்யுங்கள். சீனாவின் மாபெரும் மக்கள் தலைவர் அல்லது உங்களது பாணியில் சர்வாதிகாரி கூறியுள்ளார் "நூறு பூக்கள் மலரட்டும் நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்" என்று. அப்பொழுதுதான் மற்றவர்களுக்கும் தெளிவு பிறக்கும். உங்களது ஆழ்ந்த புலமையுடன் ஆன அமைதியான இந்த விவாதமுறைக்கு பாராட்டுக்கள். இந்த அமைதியான முறையிலேயே தொடர்ந்து எல்லாவற்றிற்கும் மறுப்பு கருத்துகள் வரிக்கு வரிக்கு எழுதுங்கள். தனிப்பதிவுகளாக போட்டு திரும்பவும் ஒன்டே மேட்சைத் துவங்காதீர்கள். இது ஒரு விவாத முறை அல்ல. மற்றவர்களுக்கு படம் காட்டவதற்கான ஒரு எளியமுறை அவ்வளவே. வாசிப்பவாக்ளுக்கு புரியும்.

எனது பெயரைப்போட்டு தமிழ்மணத்தில் பரப்புரை செய்தமைக்கு நன்றி. தனிமனிதர்களை தாக்காத பதறாத உங்கள் எழுத்து முறைக்கு பாராட்டுகள். எனது முந்தைய பதிவில் உள்ள முன்னுரை உங்களை வருத்தப்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். மற்றபடி.. உங்கள் விவாதம் தொடர்ந்து கம்யூணிஸத்தையும் நக்சலிஸத்தையும் வேரடி மண்ணோடு ஒழித்துவிட்டால் அதைவிட சந்தோஷம் இந்த உலகில் வேறு என்னதான் இருக்கும் சொல்லுங்கள். அதன்பின் பாலாறு தேனாறுதான். அதை ஓவராகக் குடித்து இந்திய ஜனநாயகத்தில் மலச்சிக்கல் வராமல் எல்லோரும் கழிந்து தள்ள வேண்டியதுதான் பாக்கி.. இப்பொழுது நாம் எழுதிக் கொண்டிருப்பதைப் போலவும் இதற்கு வரப்போகும் பின்னோட்டங்களைப் போலவும்.

நன்றிகளுடன்.


12. November 2007 15:03

said...

Anonym said...
அன்புள்ள ஜமாலன் ,

மீண்டும் பழைய அனானி.

1. நான் சோஷலிச உலகின் மலச்சிக்கல் பற்றி எழுதியது உங்களுக்குச் சினம் ஊட்டியுள்ளது என்று தெரிகிறது. எனில் வருந்துகிறேன். ஆனால் இந்த விவாதத்தில் மலத்தைக் கொணர்ந்தது நீங்கள் தான். மலம் அள்ள ஒருவர் மலர்படுக்கையில் ஒருவர் என்பது கேட்க உணர்ச்சி பூர்வமாய் உள்ளது. ஆனால் பிரசினையின் ஆழத்துக்குச் செல்ல உதவாது. மக்கள் மலம் அள்ளுவது நாகரிக உலகில் ஒவ்வாத ஒழிக்கப் படவேண்டிய ஒரு தொழில் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்தப் பிரசினை தீரக் கூட நக்சலைட்டுகளுக்கு கம்யூனிசம் வர வேண்டும் என்பதும், அது வரையில் இவர்கள் மலம் அள்ளிக் கொண்டே வர்க்க முரண்பாட்டைக் கூர்மைப் படுத்தவேண்டும் என்பதும் தான் நிலைபாடு என்றால் அது பற்றி என்ன சொல்ல முடியும்? தி க வின் சுவரொட்டிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். "மலம் அள்ளும் பாப்பாத்தி கண்டதுண்டா?" என்று பிராமணர்களை இதற்கும் காரணகர்த்தாக்களாய் ஆக்கும் அசிங்கம் அது. உங்களைப் போன்ற பொறுப்புள்ளவர்கள் திருப்பிக் கேட்டிருக்க வேண்டும்- எந்த செட்டியார், கவுண்டர் சகோதரி மலம் அள்ளுகிறார் என்று? சுற்றிலும் பாருங்கள் மலம் அள்ளும் தொழில் ஈடுபட்டிருக்கும் மக்கள் ஏன் தெலுங்கு பேசுகிறார்கள்? பழங்கால இலக்கியங்களில் மலம் அள்ளும் சாதியினருக்கு வார்த்தை கூட இல்லை. ஏன் என்று யோசியுங்கள். இஸ்லாமியக் கலாசாரம் வந்து பெண்கள் வீட்டில் சிறை வைக்கப் பட்டபின்னால் ஏற்பட்ட தொழில் இது. இன்னொரு காரணம் நகர்ப்புறத்து வளர்ச்சி. இந்தப் பிரசினையை முதன்முதலில் பேசியது எந்தக் கொம்பாதி மார்க்சிய அறிஞரும் இல்லை. பார்பபன, பனியா , தரகு முதலாளி என்றெல்லாம் உங்கள் தோழர்களால் தூற்றப் படும் மஹாத்மா காந்தி தான் பங்கி நிவாரண் சங்காங்கள் அமைத்து இந்தப் பழக்கத்தை முற்றுப்பெற வைக்க முயன்றார். உச்சாணிக் கொம்பில் நின்ற மற்ற மேல்சாதியார் விடுதலைப் போராட்டத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டதைப் பொருட்படுத்தவில்லை. இந்திய மரபினூடே முன்னே செய்தது போல் ஆசிரமத்தில் குழி தோண்டி அதைப் பயன்படுத்தி சிறுகச்சிறுக மண் போட்டு அதை மூடி , அது தரை மட்டம் ஆனவுடன் அதில் செடிகொடிகள் நடப்படும்.

இன்றைய நகர்ப்புற உலகில் இது சாத்தியம் இல்லை. அதனால், முடிந்த வரையில் ஃப்லஷ் அவுட் கழிப்பறைகள் கட்டுவதும், இந்த மக்களுக்கு கல்வி அளித்து முன்னேற்றுவதும் தான் இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரும். உடனடியாய்ச் செய்ய வேண்டிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்லாமல், உணர்ச்சி பூர்வமாய் மக்களுக்கு வெறியேற்ற வெறும் கோஷங்களைப் பயன்படுத்துவதில் என்ன பயன்?

2. வன்முறையற்ற சமூகம் சர்வாதிகாரத்தின் மூலமோ அல்லது மதவாதத்தின் மூலமோ கிட்டவே கிட்டாது. மக்களிடையே ஜனநாயக உணர்வை வளர்த்தெடுக்கும் முயற்சியும், பொதுச் சொத்துக்கு ஊறு விளைவிக்காத போராட்ட வழிகளும், எந்தப் பிரசினையையும் பேசித் தீர்த்துக் கொள்கிற ஒரு பரஸ்பர மரியாதையும் சர்வாதிகாரத்தில் எப்படி கிட்டும்?

3. ஏற்றத்தாழ்வற்ற பொருளாதாரம் என்பது ஒரு மாயை. அர்த்த்தமற்ற இலக்கு ஆனால் எல்லோருக்கும் சமவாய்ப்பும், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்கிற இலக்க்கும் நிச்சயம் அடையக் கூடிய ஒன்றுக்தான். அதற்கு திறந்த சமூகமும், சமவாய்ப்புகளும், கல்வி மற்றும் தொழில் தொடங்க எல்லோருக்கும் வாய்ய்புகளும் வழங்கப் படும் சூழ்நிலை வரவேண்டும். இதற்காகத் தான் வரிப்பணம் செலவழிக்கப் படவேண்டும். வரிப்பணம் வேண்டும் என்றால் பொருளாதார விரிவாக்கம் நிகழவேண்டும். அதற்கு மூலதனமும் அது சார்ந்த கண்டுபிடிப்புகளும் , சந்தைகளும் வேண்டும். எனில் கட்டுப் பாடற்ற தொழில் முனைப்புக்கு வசதி செய்து தருகிர சூழ்நிலை வேண்டும்.

4. வலது சாரி, இடது சாரி என்பதற்கு இன்றைய உலகில் பொருள் பலவாறாய் மாறியுள்ளது. உதாரணமாக சாவேஸ் செய்யும் சீர்திருத்தங்களை நான் பாராட்டுவேன். சொந்த மக்களின் நலனுக்கு அந்தந்த நாட்டின் செல்வ வளம் முதன்மையாய்ப் பயன்படவேண்டும் என்ற நோக்கில் சாவெஸ் செய்யும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஆனால் எல்லா நாடுகளிலும் இது சாத்தியம் இல்லை. வெனிசுலாவின் எண்ணெய் வளம், இந்தவளத்தை வளர்த்தெடுக்க ஏற்கனவே பிற வெளிநாட்டுக் கம்பெனிகள் செய்த முயற்சிகள் , இன்றைய சந்தையில் எண்ணெய் விலை உயர்வு என்று பல காரணிகளால் அவர் முயற்சி இப்போது வெற்றி அடைந்துள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் இந்த வசதி இல்லை. இதை சோஷலிசத்தின் வெற்றி என்று கொண்டாட எந்த காரணமும் இல்லை.

5. எந்த சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவம் சாத்தியமாகியுள்ளது? உலக வரலாற்றில் எங்கேயாவது இதற்கு உதாரணம் உண்டா? பினோஷெ, போல் போட், மாவோ, லெனின், ஸ்டாலின், முசோலினி, ஃப்ராங்கோ என்று நீளும் சர்வாதிகாரர்களின் பட்டியலில் சமத்துவம் எங்கே சாத்தியமாகியுள்ளது? தெரிவியுங்கள்.

உங்கள் நேரத்திற்கு நன்றி

பழைய அனானி


13. November 2007 11:34

Anonym said...

good debate

Anonym said...

விவாதத்துக்கு வருமாறு அழைத்தவர்கள் அவர்கள்.

தற்போது விவாதத்திலிருந்து ஓடும் காரணம் என்ன?

அவர்களது உதார், ஓட்டை உதார் என்று காட்டியதற்கு நன்றி

said...

பின்னூட்டங்களுக்கு நன்றி

ஜமாலன் பதிலெழுதியிருந்தால் இங்கே பதியலாமே?
நன்றி

Raj said...

Pazhaya Anani is very sharp and clean.

Let the commies answer him.

Anonym said...

நேரக்கொலையாம்.! அதனால் பதில் சொல்லமாட்டார்களாம்..

பதில் சொல்ல முடிந்தால், சும்மா வூடு கட்டிவிடுவார்கள்.

பதில் சொல்லமுடியவில்லை என்றதும், நேரக்கொலை, வெட்டிவேலை என்று பம்முகிறார்கள்..

மக இக தலைமை எழுதிக்கொடுத்ததையாவது போடலாமே?

பாவம்.
தோல்வியை ஒப்புக்கொள்ளமுடியாமல் நேர விரயம், நேரக்கொலை என்று ஓடுகிறார்கள்.