Donnerstag, 25. Oktober 2007

நண்பர் ஜமாலனுடன் விவாதம்

ஜமாலன் said...

//கம்யூனிஸ அமைப்பில்
சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்?

மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், "மக்கள்" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்?//

இது எனது பதில்:..

கம்யூனிஸ சமுகம் என்பது மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சமூகம். அதில் இதுபோன்ற அபத்தமான விதிமுறை பிரச்சனைகள் எல்லாம் வராது. மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வது என்றால்.. அறங்களை ஒழுங்குகளை தாங்களே பயின்றவர்கள் அல்லது அதற்கான சிந்தனை முறைகளைக் கொண்டவர்கள் என்று பொருள். வர்க்க சமூகம்தான் இதுபோன்ற ஏற்றத்தாழ்வான பொருத்ததமற்ற சிந்தனைகளை உருவாக்கும். அரசற்ற புராதன சமூகங்களில் மனிதகுலம் வாழ்ந்து தழைத்ததால்தான் இன்று இங்கு வந்து நம்மால் மணி ஆட்ட முடிகிறது. அல்லது கடவுள் படைக்கம்போதே ஆரசன் அடிமை என்று இரண்ட மனிதனை படைத்திருக்க வேண்டும். ஏன் அவர் ஒன்ற படைத்தாராம்? அன்றே ஒருவரை ஒருவர் இன்றுபோல் காலை வாருவது உயர்வு தாழ்வு பார்ப்பது சுரண்டுவது என்கிற வர்க்க அமைப்பாக இருந்தால் குறைவான மக்களைக் கொண்ட அந்த சமூகம் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு செத்திருக்கும். இப்ப யாரும் இங்கு வந்து அணாணியாகி ஜோக் அடித்துக் கொண்டு சைபீரியா என சல்லி அடித்துக் கொண்டிருக்க முடியாது.

நன்றி.


24. Oktober 2007 06:53


என் பதில்
தமிழ்மணி said...
ஜமாலன்,
உங்கள் கருத்துக்கு நன்றி
//
கம்யூனிஸ சமுகம் என்பது மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சமூகம். அதில் இதுபோன்ற அபத்தமான விதிமுறை பிரச்சனைகள் எல்லாம் வராது.
//

வரலாமே? ஒரு கார் அல்லது ஒரு பொருள் என்று வந்துவிட்டால், அதனை எப்படி உபயோகிப்பது என்பது எல்லோரும் எப்படி தெரிந்திருக்க முடியும்?
இப்படித்தான் இந்த கருவி உபயோகிக்கப்படவேண்டும் என்று விதிமுறைகளை எழுதித்தானே ஆகவேண்டும்?

//
மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வது என்றால்.. அறங்களை ஒழுங்குகளை தாங்களே பயின்றவர்கள் அல்லது அதற்கான சிந்தனை முறைகளைக் கொண்டவர்கள் என்று பொருள்.
//
ஒன்றே போல அறங்களையும் சிந்தனை முறைகளையும் பயின்றவர்கள் ஒரே கருத்து கொண்டவர்களாக இருக்க முடியுமா?
ஒரே இயற்பியல் பயின்றவர்கள் கருந்துளைபோன்ற விஷயங்களில் வெவ்வேறு கருத்து கொண்டிருந்ததை பார்த்தோமே? அந்த கருத்துக்கள் அவர்கள் எந்த வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்பதாலா வந்தது? சாதாரண கருத்து வேறுபாடு தானே?

// வர்க்க சமூகம்தான் இதுபோன்ற ஏற்றத்தாழ்வான பொருத்ததமற்ற சிந்தனைகளை உருவாக்கும்.
//
கருத்து வேறுபாடு என்று இருந்தாலே ஒருவருக்கு மற்றவர் கருத்து பொறுத்தமற்ற்தாகத்தானே தெரியும்.

// அரசற்ற புராதன சமூகங்களில் மனிதகுலம் வாழ்ந்து தழைத்ததால்தான் இன்று இங்கு வந்து நம்மால் மணி ஆட்ட முடிகிறது.
//

புராதன சமூகங்களில் எத்தனை பேர் வாழ்ந்தார்கள் ?
நவீன சமூகங்களில் எத்தனைபேர் வாழ்கிறார்கள்?
இன்றைக்கும் இருக்கும் புராதன சமூகங்களில் எத்தனை பேர் வாழ்கிறார்கள்?
எந்த சமூகத்தில் மக்கள் பெருக்கம் ஏற்படுகிறது என்பதை ஆதாரத்துடன் காட்டுங்கள்.


24. Oktober 2007 10:53


ஜமாலன் said...
இங்கு நடப்பது விவாதமல்ல.. முன்முடிவுகளை தீர்மானமாக பிறர் மண்டைக்குள் திணிக்கும் ஆத்திரமும் அவசரமும்தான். எதற்கும் ஆதாரம் காட்டாதபோது... விவாதிப்பதில் அர்த்தமில்லை.

சோற்றுக்கு வழியற்ற நிலையில் கார் பற்றி விவாதம் துவக்கியபோதே.. இதனை நிறத்தியிருருக்க வேண்டும். தோழர் ஆசாத் உணர்ச்சி வசப்பட்டு விட்டார்.

தியாகு கூறியதுபோல். மாற்று என்ன என்பது குறித்து விவாதியுங்கள் அதைவிட்டவிட்டு அவதூறு பரப்ப வேண்டாம். கம்யூணிஸம் இல்லாமல் மக்கள் 'சுபிட்சமாக' வாழ என்ன திட்டம் உள்ளது?

நன்றி.


24. Oktober 2007 23:37



தமிழ்மணி said...
ஜமாலன்,
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

//ஜமாலன் said...
இங்கு நடப்பது விவாதமல்ல.. முன்முடிவுகளை தீர்மானமாக பிறர் மண்டைக்குள் திணிக்கும் ஆத்திரமும் அவசரமும்தான். எதற்கும் ஆதாரம் காட்டாதபோது... விவாதிப்பதில் அர்த்தமில்லை.
//
எனக்கு அவசரமில்லை. மெதுவாகவே விவாதிக்கலாம்.

//
சோற்றுக்கு வழியற்ற நிலையில் கார் பற்றி விவாதம் துவக்கியபோதே.. இதனை நிறத்தியிருருக்க வேண்டும். தோழர் ஆசாத் உணர்ச்சி வசப்பட்டு விட்டார்.
//

கார் வெறும் உதாரணம் மட்டுமே.

//
தியாகு கூறியதுபோல். மாற்று என்ன என்பது குறித்து விவாதியுங்கள் அதைவிட்டவிட்டு அவதூறு பரப்ப வேண்டாம். கம்யூணிஸம் இல்லாமல் மக்கள் 'சுபிட்சமாக' வாழ என்ன திட்டம் உள்ளது?

நன்றி.
//
கம்யூனிஸத்தின் மூலம் மக்கள் சுபிட்சமாக வாழ முடியுமா என்று நான் தெரிந்துக்கொள்ளலாமே?

நன்றி


25. Oktober 2007 12:57

8 Comments:

Anonym said...

நண்பர் ஜமாலன் சிறந்த எழுத்தாளர்.
உங்கள் கேள்விகளுக்கு நல்ல பதில்களை தருவார் என்று எதிர்பார்க்கிறேன்

said...

காத்திருக்கிறேன்.

said...

தமிழ்மணி அய்யா,
நீங்க எழுப்பிய எல்லா கேள்விகளுக்கும் எங்க புரட்சிகர கட்சியின் தலைவர் அசுரன் அய்யா ஏற்கெனவே செம்மையா பலமுறை பதில் சொல்லியிருக்காரு.அவர் எழுதிய 100x100 பதிவுகளை நல்லா உள்வாங்குங்க.அப்புறமும் உங்களுக்கு புரியவில்லை என்றால், கட்சி கொள்கை படி நீங்க ஒன்றுக்கும் உதவாத வர்க்கததை சேர்ந்தவர் என்று தீர்மானிக்கப்பட்டு சைபீரியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள்.தீர்மானிப்பது அசுரன்,ஜமாலன்,தியாகு,ஆசாத்,மருதையன்,ஸ்டாலின் போன்றோர் அடங்கிய குழு.ஆனா நீங்க அவங்களை தீர்மானிக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று தூற்றக்கூடாது.எங்க கட்சியில,ஆட்சியில, வர்க்க பேதமே கிடையது.மேலே சொன்ன ஆட்களைத் தவிர மற்ற எல்லாருமே உழைத்து பிச்சை எடுத்து வாழும் வர்க்கம் தான்.

பாலா

said...

my old nayyandi :

சூரசம்காரம் அல்லது அசுரவதை..

அசுரரே,

உண்மை கம்யுனிசம் வரவேண்டும் என்றால், அனைவரும் உம்மை போல் அசுரனாக வேண்டும். மனித முயற்சியால் முடியாது என்று சரித்திரம் கூறுகிறது.

எனவே பிரம்ம தேவனை வரம் வேண்டி கடுந்தவம் செய்யலாம். ஆனால் அதில் ஒரு டேஞ்சர் இருக்கிது. இந்திரலோகத்தில் இருக்கும் தேவர்கள், அசுர கூட்டம் பெருகுவதை பார்து பயந்து, லார்ட் பரமசிவனிடம் பெட்டிசன் இடுவர். அவரும் லார்ட் முருகனை அனுப்பி அசுரனை சூரசம்காரம் செய்வார். மக்கள் புது தீபாவளி கொண்டாடுவர். என்ன செய்ய ?

மங்கலம் உண்டாகட்டும்...

said...

மேற்கண்ட கிண்டல்கள் காரணமாக ஜமாலன் இங்கே விவாதிக்க விரும்பாமல் இருக்கலாம்.

ஜமாலன் அவர்கள் இவற்றை உதாசீனம் செய்து விவாதிக்க வரும்படி அழைக்கிறேன்.
நன்றி

Anonym said...

யோவ் வெங்காயம் தமிழ் மணி

முதலில் நீ என்ன சொல்ற அத்த சொல்லு

சும்மா நைநைன்னுட்டு

இந்த முதலாளித்துவ புடுங்கிகள் என்ன தீர்வு வச்சு இருக்காங்கன்னு சொல்லு

இல்லாட்டி மூடிகிட்டு இரு.

said...

அன்புள்ள கம்யூனிஸ அனானி,

முதலாளித்துவ சார்பாளர்கள் என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள் என்பதை பிறகு பார்ப்போம்.

முதலில் நீங்கள் சொல்லும் கம்யூனிஸ சமுதாயத்தை அலசுவோம்.
அதற்காகத்தானே இந்த விவாதம் நடைபெறுகிறது.

said...

காத்திருக்கிறேன்.. நண்பர்களே.

இதற்கு பதில் எழுதியிருந்தீர்கள் என்றால், இங்கே பதியுங்கள்