Montag, 29. Oktober 2007

அனானியுடன் நண்பர் தியாகுவின் சோசலிஸ விவாதம்

வாசகர்கள் கவனிக்கவும்.
சமீபத்தியது மேலே வரும்படி பதிவு அமைக்கப்பட்டுள்ளது.

தியாகு தன் பதிவில் எழுதியது இங்கே பதியப்பட்டுள்ளது. அதற்கு முதல் அனானி எழுதியது இங்கே
Anonym said...

1.புராதன கம்யூனிச சமுதாயம் என்பதற்கு ஆதாரஙள் மார்க்ஸ் உட்பட யாராலும் தரமுடியாது என்றும், புராதன சமூகங்களை ஒத்த , இன்றுள்ள நாகரிகம் தொடாத சமூகக் குழுக்களை ஆய்ந்து எழுதப்பட்ட நூல்களும் கூட கம்யூனிசம் அங்கே இருப்பதாய்ச் சொல்லவில்லை என்று மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன். ஐரோப்பிய படையெடுப்பில் அழிக்கப்பட்ட , அமெரிக்கப் பழங்குடி மக்களும் கூட ஓரளவு புராதன நிலையில் வாழ்ந்தவர்கள் தான். அவர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்தல பற்றியும் பல குறிப்புகள் உள்ளன. அவர்கள் கம்யூனிச சமூகத்தில் வாழ்ந்திருக்க வில்லை. நீங்கள் மீண்டும் மீண்டும் மார்க்ஸ்வேதமே சரி என்று வாதிடுகிறீர்கள்.
அதே போல் தான் உற்பத்தி உறவும். மார்க்ஸ் எழுதிய காலகட்டம் கைவினைப் பொருட்களிலிருந்து சிறு தொழில்களை நோக்கியும், ஓரளவு பெரும் தொழிற்சாலைகளை நோக்கியும் நகர்ந்த காலகட்டம். அந்த வெளிப்ப்டையாய்த் தெரிந்த மாறுதலை வைத்து எழுதப் பட்டது மூலதனம். பெரும் உற்பத்தியும், கணிணி மையப்படுத்திய உற்பத்தியும், அசெம்ப்ளி லைன் உற்பத்தி முறைகளும், நிர்வாகவியலில் ஏற்பட்ட மாற்றங்களும் என்று தொழில் உற்பத்தி இன்று சம்பிரதாயமான தொழிலாளி- முக்தலாளி உறவைத்தாண்டி தொழில் முனைப்பு வளர்ந்துவிட்டது. ஒரு பொருளின் மதிப்புக் கூட்டுதல் வெறும் தொழிலாளியின் உழைப்பினால் மட்டுமல்லாமல், சந்தை சக்திகளான தேவை, சப்ளை, உற்பத்தியிடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் பொருளின் தேவை இருக்கிறது என்பதைப் பொறுத்டு மாறுபடும். அதனால் உபரி மதிப்பு தொழிலாளிக்குச் சேரவேண்டியது, அதனால் அவன் சுரண்டப் படுகிறான் என்ற வாதமே ஒரு அபத்தம் என்பது தான் நான் மீண்டும் மீண்டும் சொல்வது. இதனை நம்பினால், நட்டம் ஈட்டும் தொழில்களில் தொழிலாளி முதலாளியைச் சுரண்டுகிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்ளவேண்டும். அது தான் உங்கள் நிலை பாடா?2. உங்களுக்கு அமெரிக்கா அல்லது மற்ற மூலதனவாத நாடுகள் பற்றி என்ன தெரியும்? மூலதனவாதத்தை முழுமையாய் ஒப்புக் கொண்ட நாட்கள் எல்லாமே சொர்க்கலோகம் என்று எவரும் சொல்லவில்லை. மக்கள் முன்னேற்றத்துக்கான தொடர்ந்த முயற்சியில் பல காரணிகள் உள்ளன. பொருளாதாரம், அரசியல், சமூகக் கலாசாரப் பின்னணி என்ற பல விஷயங்கள் சேர்ந்து தான் ஒரு நாட்டின் தகுதியையும் அவற்றின் முனேற்றத்தையும் நிர்ணயிக்கிறது. சோஷலிசம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு பகல் கனவு. சோஷலிச சமூகத்தின் அரசியல் சர்வாதிகாரத்தை நியாயப் படுத்த ஒரு கருத்தியலைப் பிடித்துத் தொங்குகிறீர்கள். மூலதன நாடுகளும் அராஜக நாடுகளாய் இருக்கலாம். அது வேறு பிரசினை. ஆண் தப்பினால் பெண் என்று சோஷலிசம் தப்பினால் மூலதனம் என்று சமூகத்தின் பிற அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், மூலதனப் பூச்சாண்டி காட்டி கம்யூனிஸ்டுக் கட்சிக்கு ஆள் சேர்க்கலாம். ஆனால் அதில் எந்த அறிவுபூர்வமான அணுகலும் இல்லை. கியூபா, சீனா போன்ற சோஷலிச சொர்க்க புரியை விட்டு, உயிரைப் பணயம் வைத்து ஏன் மக்கள் கள்ளத்தோணியிலும், கப்பலில் கண்டெஇயினர்களிலும் அடைந்து கொண்டு அமெரிக்காவையும், ஐரோபிய நாடுகளையும் நோக்கி வருகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி அதற்கு விடை காண முயன்றால் உங்களுக்கு இதன் பதில் கிடைக்கும்.

மூலதனத்தை யாரும் உயர்த்திப் பிடிக்க வேண்டியதில்லை. அதுதான் பொருளாதாரச் செயல்பாட்டின் அடிப்படையே.3.மார்க்ஸிய அறிஞர்கள் விஞ்ஞா பூர்வமாக படிப்படியாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று படித்து மெய் சிலிர்த்துப் போனேன். இது எப்படி விஞ்ஞானம் ஆயிற்று என்று தெரியவில்லை. இந்த் மார்க்ஸிய அறிஞர்கள் ஐன்ஸ்டீனிடமும், அப்துல் கலாமிடமும் பாடம் பயின்றார்களா? விஞ்ஞான அணுகல் முறை என்பதை கட்சி பாஸ்களிடம் இல்லாமலெந்த விஞ்ஞாயிடம் கற்றார்கள்? சமூகவியல் , பொருளாதாரம், மானிடவியல் என்பவை விஞ்ஞானம் அல்ல. அவற்றை சமூக விஞ்ஞானம் (socail science) என்று அழைப்பது, அவை விஞ்ஞானம் அல்ல என்று அழுத்திச் சொல்வதற்காகத் தான்.

மார்க்ஸிய விஞ்ஞானம் என்பது பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி போன்றதல்ல. இந்து விஞ்ஞானம், கிருஸ்துவ விஞ்ஞானம் என்பது போலத்தான் இது. சமூக விஞ்ஞானத்தில் கடந்த காலத்தை ஆய்ந்து தான் சொல்ல முடியுமே தவிர எதிர்காலத்தைப் பற்றி சொல்ல முடியாது. கலிலியோவை நம்பாமல் பூமியைத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று சாதித்து கலிலியோவிற்கு தண்டனை கொடுத்த கிருஸ்துவமதப் பாதிரிகள் மாதிரி கம்யூன்ஸ்டுகளும் புராதன கம்யூனிசம் ,முதலாளித்துவம், வருது பார் சோஷலிசம், உலகின் எல்லா நாடுகளும் சோஷலிசம் பூத்துக் குலுங்கி , கம்யூனிசம் மலர்ந்து அரசு உதிர்ந்து, எல்லா மக்களும் அச்சில் வார்த்தாற்போல ஆறடி உயரம், ஒரே மாதிரி அறிவு, ஒரே மாதிரி பொறுப்புணர்வு என்று சொல் கொண்டே இருக்கிறீர்கள். இதையும் நம்ப ஒரு கூட்டம் தயாராய் இருக்கிறது. இதற்கு விஞ்ஞானம் என்று பெயரில்லை. சோதிடம் அல்லதெ நம்பிக்கை. விஞ்ஞானம் நம்பிக்கை அல்ல. தரவுகள், நிரூபணங்கள். விஞ்ஞானத்தின் மிக முக்கியமான தேவை கருதுகோள்கள். hypothesis.அதாவது எந்தச் சூழ்நிலையில் ஒரு விஞ்ஞான உண்மை பொருந்தி வரும் எனப்து. எல்லாச் சூழ்நிலையிலும் உண்மையாய் இருக்கும் என்ற ஓர் விஞ்ஞானக் கோட்பாடு கிடையாது. உதாரணமாய் எளிய உதாரணமாய் , நீரின் கொதி நிலை கூட காற்றழுத்தத்தைப் பொறுத்தது.

எதிர்காலத்தை கணிக்கிற விஞ்ஞானம் இருக்கிறது. உதாரணமாய் ஒரு எரி நட்சத்திரம் எப்போது பூமியின் பயணப் பாதையை எப்போது கடக்கும் என்று விஞ்ஞானிகள் துல்லியமாய்ச் சொல்கிறார்கள் ஆனால் அதற்குக் கணக்குகள் உள்ளன. முன்னே எப்போது கடந்தது , அதன் பயணப் பாதை என்ன , அதன் வேகம் என்ன என்று கணக்குடன் அவர்களால் சொல்ல முடியும். ஆனால் சோஷலிசம், கம்யூனிசம், பரலோகம், கிறுஸ்து மீண்டும் வருவார், கன்னிமேரி, இறைத்தூதர் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைகள். இறை நம்பிக்கை போலத்தான் எங்கள் கம்யூனிச நம்பிக்கை என்று சொல்லிவிட்டீர்களானால், இன்னொரு லாபமும் இந்தியாவில் இருக்கிறது. மைனாரிடி அந்தஸ்தும் , ரிசர்வேஷனும் கிடைக்கலாம். விஞ்ஞானம் என்ற அடைமொழியைச் சேர்த்ததாலேயே மார்க்ஸியம், இந்து, இஸ்லாம், கிறூஸ்துவம் போன்றவை விஞ்ஞானமாகிவிடாது.

எல்லா நாடுகளும் சோசலிச கட்டுமானத்தில் உறுதிப்பட்டவுடன் தான் கம்யூனிச சமுதாயத்திற்கான பாய்ச்சல் ஒரே நேரத்தில் நிகழும்.
என்று இறுதிதீர்ப்பு நாள் வடிவில் உங்கள் சோதிடத்தைச் சொல்லிவிட்டீர்கள். இதை எப்படி அறிவுபூர்வமாய் எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. என் பிள்ளை நாளைக்கு இரண்டடி வளர்ந்து விடுவான் என்று ஒரு தகப்பன் சொன்னால் அடுத்த நாள் அவன் முன்னால் போய் நின்று அய்யா உன் பையன் இரண்டடி வளரம் முடியாது என்று அளந்து காட்டலாம். 2000-ம் ஆண்டு பிறந்த வுடன் உலகம் அழிந்துவிடும் என்று சோதிடம் சொன்னவ்ர்களிடம் , 2001-ல் போய் நின்று அபத்தத்தைச் சுட்டிக் காட்டலாம். எல்லா நாடுகளும் சோஷலிசம் ஆகி - எப்போது 6000 ஆண்டுகள் கழித்தா?- அப்புறம் கம்யூனிசம் மலரும் என்று விஞ்ஞான ரீதியாய் சொல்லும் ஒருவரிடம் என்ன அறிவுபூர்வமான விவாதங்கள் நடத்த முடியும்? சற்றே யோசித்துப் பாருங்கள். இன்னமும் கூட எல்லா சமூகங்களையும் பற்றிய உணர்வு நமக்கு இல்லை. உலகின் பாதி நாடுகள் இஸ்லாமிய நாடுகள் கம்யூனிஸ்ட் என்று பெயரைச் சொனாலே கடவுள் மறுப்புக்காகக் கழுவில் ஏற்விடுவார்கள். பாகிஸ்தான் உருவாக தேசிய சுய நிர்ணயக் கோட்பாட்டின் கீழ் கம்யூனிஸ்டுகள் ஆதரவு தெரிவித்தார்கள். பாகிஸ்தான் பிறந்த வுடன் ஜனாப் ஜின்னா செய்த முதல் காரியமே கம்யூனிஸ்டுக் கட்சியைத் தடை செய்தது தான். ஐரோபிய நாடுகள் இடதுசாரி , கம்யூனிசம் என்று பேசுவார்களே தவிர தம்முடைய சுடக்ந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் சோஷலிசம் மலர்ந்த சீன உங்கள் ஆருடத்தைப் பொயாக்கிக் கொண்டு மீண்டும் மூலதனப் பாதைக்குப் போய்விட்டது. சோவிய்டத் ரஷயாவிலோ, கமுயூனிஸ்ட் காலத்திய நீண்ட வரிசைகளும், ஸ்டால்னியக் கொடுங்கோன்மைகளும் இன்னும் மறந்து விடவில்லை. இருப்பது ஒரு நேபாளம், இந்தியாவில் கேரளா, மேற்கு வங்கத்தின் இடது சாரிக் கட்சிகள் என்ற ப்யரில் சாதி மற்றும் தனிமனிதச் செல்வாக்கினால் கட்டப் பட்ட உதிரிக் கட்சிகள். இதில் எங்கே சோஷலிசம் வந்து, கம்யூனிசம் வந்து. என்ன தோழரே நீங்க காமெடி கீமெடி பண்ணலியே?4. உலகின் எல்லா போர்களுக்கும் காரணமான ஏகாதிபத்தியம் என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டீர்கள். சர்வரோக நிவாரணி கம்யூனிசம், சூப்பர் வைரஸ் முதலாளித்துவம் என்ற எளிய சூத்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் சுயசிந்தனையற்ற கூட்டம் நம்பலாம். ஆனால் சிலுவைப் போர்களுக்கு எந்த முதலாளித்துவ ஏகாதிபத்தியம் காரணம்? ஹிட்லர் தொடுத்த போருக்கு எந்த முதலாளித்துவம் காரணம்? சீனா இந்தியாவின் மீது போர் தொடுத்ததற்கு எந்த ஏகாதிபத்தியம் காரணம். பாகிஸ்தான் தம்முடைய மக்கள் மீதே போர் தொடுத்ததற்கு எந்த ஏகாதிபத்தியம் காரணம்?5. வட கொரியாவும், போல் போட்டும் கம்யூனிஸ்டுகள் இல்லை என்று நீங்கள் சொன்னால் நான் ஏற்றுக் கொள்ளவேண்டியது தான். இஸ்லாமிய பயங்கர வாதத்திற்கு மக்கள் பலியாகும் போதெல்லாம், அவர்களை இஸ்லாமிய பெயர்தாங்கிகள் என்று கூறும் இஸ்லாமிய மேதாவிகள் மாதிரி நீங்கள் போல் போட்டும், வடகொரியாவும் கம்யூனிஸ்டுகள் இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் ஸ்டாலின், மாஒவின் படுகொலைகள் வெறுமே களையெடுத்தல் என் கிறீர்கள். பாருங்கள் உங்களுக்கும் கிறுஸ்துவத்திற்கும் உள்ள ஒற்றுமையை. போப் ஆசியாவில் கிறுஸ்துவிற்காக அறுவடை செய்ய வேண்டும் என்கிறார். நீங்கள் களை எடுத்தோம் என்கிறீர்கள். மக்கள் தாவரங்களாய்த்தான் நாங்கள் கருதுவோம் என்று சொன்னால், அமெரிக்காவில் உள்ள மக்கள் பொய் மக்கள் என்றால் நீங்களும், ஸ்டாலினும் தான் உண்மையான மனிதர்களாய் இருக்க வேண்டும்.4. நீங்கள் சொல்வது உங்களுக்கே புரிகிறதா? மூலதனத்தின் நலனை மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் எப்படி பேண முடியும். சோஷலிசத்தில் மக்கள் தேவையை யார் நிர்ணயிப்பார்கள்? பொலிட் பீரோவா? காஸ்ட்ரோவா? ஸ்புட்னிக்கை செலுத்தப் போகிறோம் என்று பாட்டாளி மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தினார்களா? ஸ்புட்னிக்கின் தேவை மக்களுக்கு என்ன?6.சோஷலிசத்தை நோக்கி மக்களைத் தானாக முரண்பாடுகள் தள்ளும் என்றால் ஏன் நீங்கள் கட்சி கட்டிக் கொண்டு பிரசாரம் செய்கிறீர்கள் . அரசு தானாக் உதிரும், மக்கள் தானாக சோஷலிசம் வேண்டி தள்ளப் படுவார்கள், என்றால் தானாய் நடக்க்ற ஒன்றுக்கு போராட்டமும், மண்ணாங்கட்டியும் எதற்கு. கட்சியைக் கலைத்துவிட்டு நிம்மதியாய் உட்கார்ந்திருங்கள்.சோஷலிசம் வரும்போது உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன். வந்து கொண்டாடுங்கள்.

நன்றி
பழைய அனானி
2. November 2007 12:52

தியாகு said... November 02, 2007

//ஒரு பொருளின் உபயோகம், கண்டுபிடிப்பு, அதன் தொடர்ச்சியாக தேவை உருவாதல், சில தேவைகளின் தொடர்ந்த இருப்பு, சில தேவைகள் தன்னால் விட்டுப்போதல், தேவைகளுக்கான உற்பத்தி, சப்ளை, அதொலிருந்து இன்னொரு கண்டுபிடிப்பு என்று தொடர்ச்சியாக இயங்கி வரும் சமூகத்திற்கு மூலதனம் தான் அடிப்ப்டை என்பது தான் நான் திரும்பத் திரும்பச் சொல்வது. சோஷலிசமும் கூட மூலதனத்தை அடிப்ப்டையாய்க்
கொண்டு தான் உருவாகிறது. சோஷலிசம் என்பது அரசாங்க மூலதனம் அன்றி வேறென்ன? எந்த வடிவிலான மூலதன்ம் ஆனாலும், அதன் உபரி மதிப்பு, மூலதனம் இட்டவர்களுக்கோ அல்லது அரசாங்கம் மூலதனம் இட்டிருந்தால் அரசாங்கத்திற்கோ போய்ச் சேர்கிறது.//

தேவை சப்ளை என்பதன் அடிப்படையில் சமூக வளர்ச்சி கட்டத்தை விளக்குங்கள் என நான் சொன்னேன் அதன் மூலம் விளக்குவதை விடுத்து திடீரென மூலதனத்தில் குதித்துவிட்டீர்கள் அனானி ரொம்ப நகைசுவை மனிதர் நீங்கள் . சமூகத்தை விளக்க உங்களுக்கு மூலதனம் ஏன் தேவை படுதுன்னு தெரியலை :)
தேவை சப்ளை இது மட்டும் பத்தாதா ?
தேவை -சப்ளை கூட நான் சொன்ன உற்பத்தி நடைமுறைக்கு வெளியே தொங்கவில்லை என்ன பரிதாபமான உண்மையை சொல்லி உங்கள் பழைய விவாதம் இத்துடன் முடிகிறது என அறிவிக்கிறேன்

எப்படி என்று சொன்னால்

மூலதனமும் &உபரி உழைப்பும்:
----------------------------------------------------------
மூலதனம் அதன் வளர்ச்சி முதலாளித்துவ காலகட்டத்தில் சிறப்பாக மார்க்ஸால் விரித்துரைக்கப்பட்டது உபரி மதிப்புதான் மூலதன திரட்சிக்கு வழிவகுக்கிறது என்று மார்க்ஸ்தான் அறிந்து சொன்னார் அந்த உபரி மதிப்பு சம்பளம் கொடுக்கப்படாத உழைப்பு நாள் என்பதுதான் மார்க்சின் கண்டு பிடிப்பு இது உங்களுடைய அல்லது வேறு எந்த ஒரு முதலாளித்துவ வாதியின் கண்டு பிடிப்பும் அல்ல (இப்போ தேவை சப்ளை என்ற உங்கள் பழைய வாதத்தில் இருந்து உற்பத்தி மூலதனம் என்ற புதிய நிலைபாட்டுக்கு வந்து இருக்கீங்க)

உற்பத்தி கருவிகள் அதன் வளர்ச்சியை தீர்மானிப்பது எது?
------------------------------------------------------------------------------
ஆனால் பாருங்கள் உற்பத்தி நடைமுறையில் கருவிகள் படைக்கிறார்களே தவிர
கருவிகள் படைப்பது என்ற சமூக நடைமுறை ஒரு தனியான விசயம் அல்ல

உற்பத்திக்கும் உற்பத்தி உறவுகளுக்கு உள்ள விதி என்ன? -நிலவுடமை சமூகத்தில்
--------------------------------------------------------------------------
நிலபிரபுத்துவ சமூகத்தில் இருந்த உற்பத்தி உறவுகளை தீர்மானிப்பது அங்கே நிலம் நிலவுடமையாளர் கையிலும் உற்பத்தி கருவிகள் உழைப்பாளர் கையிலும் இருப்பதை உணருங்கள் நிலம் வைத்திருப்பவன் நிலபிரபு நிலம் அவனுக்கு சொந்தம் ஆனால் கலப்பையும் மற்ற கருவிகளும் வைத்திருக்கும் விவசாயி அவனுக்கு அடிமை இல்லை \மாறாக தனது துண்டு நிலத்தில் தன் சொந்த கருவிகளை கொண்டு அவன் உற்பத்தியில் ஈடுபடுகிறான் உற்பத்திக்கும் உற்பத்தி உறவுகளுக்கு உள்ள விதி என்ன?

முதலாளித்துவசமூகத்தில்
-------------------------------------------------------------------------------------முதலாளித்துவத்தில் உற்பத்தி கருவிகள் முதலாளிக்கு சொந்தம் உழைப்பாளியிடம் தன் சொந்த உழைப்பை தவிர விற்பதற்கு வேறொன்றும் இல்லை எனவே அவன் வாழ்நிலை அதுக்கு தகுந்தால் போல மாறுகிறது மூலதனம் பற்றிய விதிகள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது
அதற்கான சமூக முன்நிபந்தனைகள் என்ன?
------------------
இதே மூலதனம் எனும் தியரி முதலாளித்துவம் வருவதற்கு முன்பு ஏன் யாராலும் கணிக்க முடியவில்லை

நீங்கள் சொல்வது மாதிரி இருந்தால் லாபம் லாபம் என கூவிகொண்டு இருந்த உங்கள் அறிஞர்கள்
உபரி மதிப்பை கண்டு பிடிக்கவில்லை என்பதை கவனியுங்கள்
உபரி மதிப்பெ முதலாளித்துவ சமுகத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டு விரித்துரைக்கப்பட்டது
(மார்க்சை இந்த வேலையை செய்ய சொன்னதே மூலதனம் தான் என சொல்ல மாட்டீங்களே) அன்றைய சமூக அமைப்பு அவரை டாஸ்கேபிடலை படைக்க உந்தியதே தவிர
கண்டுபிடிக்கவேண்டும் என்ற ஒற்றை ஆராய்ச்சி மனப்பான்மை மட்டும் இல்லை
ஆக மூலதனம் என்ற விசயம் மார்க்ஸால் மூலதனத்தின் தன்மை
ஒரு பொருளின் மதிப்பு என்பது அதன் உற்பத்தி செலவின் பரிமாணம் என்பதும்
மார்க்ஸால் சொல்லப்பட்டது . நீங்கள் சொல்வதுபோல தேவை -சப்ளை -கண்டுபிடிப்பு - உற்பத்திக்கு மூலதனம் அடிப்படை இல்லை மாறாக உற்பத்தி நடைமுறை நிலபிரவுத்துவத்தில் மூலதனம் இல்லை நிலபிரவு கையில் நிலம் இருந்தது உற்பத்தி கருவிகள் விவசாயிகளிடம் இருந்தது .

(இங்கே கண்டுபிடிப்பு எனும் நிகழ்ச்சி போக்கை உற்பத்தி சாராத தனியே நிகழும் ஒன்றாக
அதுவே தீர்மானகரமான விசயமான நீங்கள் சொல்வது நடைபெற்ற இரண்டு முதலாளித்து புரட்சிகளை மறுப்பதாகும் )

///சிலரின் முதலீட்டில் ஏற்பட்ட குறை பதிப்பு- உபரி மதிப்பு லாபம் என்றால், குறை மதிப்பு அல்லது நட்டம், உபரி மதிப்புக்கு எதிரிடையான குறை மதிப்பு என்று குறிப்பிட்டுள்ளேன். லாபம் நட்டம் என்ற சொற்கள் மார்க்சிய அகராதியில் பாவப்பட்ட சொற்களாகி விட்டன என்பதால் என் சொல்லாக்கம் இது.) சிலரை மட்டும் பாதிக்கிறது. ஆனால், அரசாங்க நிறுவனங்களின் குறை மதிப்பு அர்சாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் பாதிக்கிறது. நட்டத்தில் ஓடும் ஒரு அரசாங்க நிறுவனம் அதை ஈடு செய்ய வேண்டும் என்றால், சம்பளத்தைக் குறைக்கிறது அல்லது வேலையை நீக்கி வீட்டுக்கு அனுப்புகிறது. சீனா போன்ற நாடுகளிலும், அமெரிக்க போன்ற நாடுகளிலும் வேலையை விட்டு அனுப்புவது சுலபம், ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் தொழிற்சங்கங்கள் பிரசினை செய்யும். அதைக் காட்டிலும் பாதிப்பு, இந்த நட்டத்தால் , மக்கள் நலன் நோக்கிய முயற்சிகளுக்குக் கிடைக்க வேண்டிய நிதி கிடைப்பதில்லை.//

(இந்த இடத்தில் ஒரு சோசலிச நாடும் லாபத்துக்காக இயங்கும் என சொல்லி அதன் உற்பத்தி நடைமுறையை கொச்சை படுத்தாதீர்கள்
தேவைக்கான திட்ட மிட்ட உற்பத்தி இங்குதான் நடக்கும் உற்பத்தியின் முழு நோக்கம் லாபமல்ல தேவையை பூர்த்தி செய்தல் )

லாபம் என்ற கருத்துக்கும் உபரி என்பதற்கு பெரிய வித்தியாசம் இருக்கு அண்ணே அங்கேதான் பாரிய வேறுபாடு உங்களுக்கும் எனக்கும் இருக்கு சம்பளம் கொடுக்கப்படாத உழைப்பான உபரி ஒரு தனிமனிதனுக்கு போவதை சோசலிசம் தடை செய்கிறது ஏனெனில் லாபத்துக்காக உற்பத்தி செய்யும் முதலாளியால் அதே போல லாபத்துக்க உற்பத்தி செய்யும் இன்னொரு முதலாளி இப்படி ஒரு போட்டி நிலவுது அது சந்தையின் விலையில் விளைவுகளை ஏற்படுத்த அந்த விளைவுதான் கூலி குறைப்பு ஆள்வெளியேற்றம்
இன்னபிறா( அய்யா இதெல்லம்ரொம்ப நாளைக்கு முன்பே நிரூபிச்சுட்டாங்கய்யா என்னைய விடுங்க சாமி)

ஆக மூலதனத்தை ஆட்டம் போட விட்டால் முக்கியமாக அந்த ஆட்டம் தனிமனிதனிடம் லாபநோக்கில் அமைந்தால் சமூகத்தில் அது பாரிய இழப்புகளை ஏற்படுத்துகிறது (அமெரிக்க்கா போன்ற நாடுகளின் எல்லாரும் சுகமா இருகாங்களே என்பதற்கு அசுரன் ஒரு விளக்கம் கொடுத்து இருக்கார் பாருங்க லெனின் ஏற்கனவே சொன்னார் தனது மக்களுக்கு ஏகதிபத்தியம் எழும்புத்துண்டுகளை வீசவே செய்யும் என்று ) லாபத்துக்கான உற்பத்தியை தேவைக்கான உற்பத்தி என சொல்வதா?
---------
சரி தேவைக்கேற்ற சப்ளை இல்லாமல் லாபத்தின் மூலம் நிர்ணயிக்கப்படுவதாக சந்தையின் போக்கை மாற்றிவிடும் முதலாளிகள் சந்தையில் கிடைக்கும் லாபத்துக்கான உற்பத்தி என்பது தேவைக்கான உற்பத்தி என ஜோக்கடிக்காதீங்க ஆகவே தேவை -கண்டுபிடிப்பு -உற்பத்தி -சப்ளை என மீண்டும் ஜோக்கடிக்காதீங்க

//சோஷலிச நாடுகளில் உழைப்பு முகாம்களை ஏற்படுத்தலாம். குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் உபரி மதிப்பை ஏற்படுத்தினால் தான் அந்த தொழில் முனைப்பு பயனுள்ளதாய் இருக்கும். அது தான் நடந்ததும். சோஷலிச நாடுகளில் உபரி மதிப்பு இருந்ததால் தான் அந்த நாடுகள் விண்வளிப் பயணம் மேற்கொள்ள முடிந்தது என்று நான் முன்னால் கூறியிருந்ததும் இதன் விரிவு தான்.//

சோசலிச முகாம்கள் கூலியை குறைக்க ஏற்படுத்தப்பட்டது எனும் உங்கள் பார்வையை என்ன சொல்ல முடியும் :))
உழைப்பின் பயனை சமூகப்படுத்ததான் ஏற்படுத்தப்பட்டது .

//சோஷலிச நாடுகளின் அர்சாங்கம் மக்களுடையது அதனால் அரசாங்க நிறுவனங்களில் தொழில் செய்பவர்கள் அதன் உரிமையாளர்கள் என்ற

முறையில் உற்பத்தி உறவு மாற்றி அமைக்கப் படுகிறது என்பது சோஷலிஸ்டுகளின் வாதம். இந்த வாதத்தின் பிரசினை என்னெவென்றால், அரசாங்கம் எனபது மக்களுக்குச் சொந்தமானது சோஷலிசத்தின் கீழ் என்ற பொய் தான். உண்மையில் மக்களுக்குச் சொந்தமான அரசு என்பது என்ன? அரசினால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களால் நடத்தப் படும் அரசு என்று வைத்துக் கொண்டாலும் கூட - அப்படி இல்லை என்றாலும் - ஒரு சிறு குழு தான் அங்கேயும் ஆட்சியில் உள்ளது. ஒரு சிறு முடிவைக் கூட எடுக்க எல்லோரிடமும் வாக்கெடுப்பு நடத்த முடியாது. அதனால் அங்கேயும் சிறு குழு ஆட்சி தான் இல்லையா?//

அய்யா அரசங்கம் மக்களால் அமைக்கப்பட்டதுன்னு நீங்க சொல்லி வறீங்களே இப்போ இருக்கிற முதலாளித்துவ அரசாங்கம் அதான் பொய் மக்களால் அமைக்கப்பட்ட அமெரிக்க அரசாங்கம் ஏன் மக்க்களை கொல்லுகிறது இதை பத்தி ஏன் பேச மறுக்கிறீகள் மக்களுக்கு சொந்த மான அரசு சோமாலியாவிலும் இன்னும் மூன்றாம் உலகநாடுகளிலும் மக்கள் பட்டிவியால் சாவதை கூட கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் இன்றுள்ள முதலாளித்துவ அவலத்துக்கெல்லாம் உங்கள் பதில் அல்லது தீர்வு என்ன?

//பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது உண்மையில் சிறு குழுவின் ஆட்சி தான் என்றால்,அந்தக் குழுவின் சர்வாதிகாரம் எப்படி ஜனநாயக ரீதியாய் இருக்க முடியும்? வெவேறு குழுக்களிடையே எழுட்ந்த பொருளாதாரப் பிரசினைகள் எப்படி தீர்க்கப் பட்டன? ரஷ்ய மேலாண்மையாளர்களின் மற்ற பிரிவுகள் ஒடுக்கப் பட்டதும் நடந்ததில்லையா?//

பாட்டாளிகளால் தீர்மானிக்கப்படும் அரசாங்கம் சிறு குழு என்பது முதலாளிகளில் வாதம்தான் தலைமைஇயில் ஒரு லெனில் தான் இருக்கமுடியும் 3 கோடி பாட்டாளியுமா இருக்க முடியும் இதை வச்சி அது சிறு குழுன்னு சொல்லாம வேற காரணம் இருந்தா பேசுங்க
***

//கண்டுபிடிப்புகள் சமூக மாறுதலுக்கு வித்திட்டது உங்கள் கண்முன்னாலேயே நட்ந்திருக்கிறதே. ரேடியோவும் டெலிவிஷனும், டெலிஃபோன் போன்ற தொடர்புச் சாதனங்களும் உலகத்தையே சுருக்கி விட்டன.//

உற்பத்தி நடைமுரை கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது ஒரே விதமான கண்டுபிடிப்புகள் வெவ்வேறு நபர்களால் ஒரே சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்ற உண்மை இதைத்தான் காட்டுது கண்டுபிடிக்கு என்பது சமூக உற்பத்தி நடைமுறையில் தொடர்ச்சி தான் மாறாக மூலதனத்தின் வால் அல்ல

// யோசித்துப் பாருங்கள். முதன் முதலில் மனித குலம் கண்டுபிடுத்த சக்கரம் இன்று எப்படி பரிணமித்திருக்கிறது. சக்கரத்தைக் கொண்டும், ஒரு மாட்டைக் கொண்டும் மனித உழைப்பை எப்படி எளிமைப் படுத்தலாம் என்பது எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு. //

ஆமாம் இந்த கண்ட்புடிப்பு அந்த உற்பத்தியில் ஈடுபட்டவர்களால் வந்து இருக்க முடியுமே தவிர வேறு எப்படி

அந்தகாலத்திலே எந்த விஞ்ஞானி கண்டுபிடிச்சான் சக்கரத்தை உற்பத்தியில் ஈடுபட்ட வர்கள் கண்டுபிடிச்சார்கள் அதே கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சி முதலாளித்துவ சமூகத்தில் டிராக்டராகவும் பரிணமித்தது நீராவி இயந்திரங்கள் கண்டு பிடிச்சது ஒரு பெரிய புரட்சியை முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படுத்தியது என்றால் கண்டுபிடிப்புகள் தனியா சமூகத்தின் உற்பத்தி நடைமுறைக்கு வெளியே தொங்குதுன்னு அர்த்தாமா அதுவே சமூக வளர்ச்சியை தீர்மானிக்குதுன்னு அர்த்தமா அதுவே சமூக மாற்றத்தை கொண்டு வரும்னு அர்த்தாம் இல்லை இல்லை

//அதனால் கிராம சமுதாயமே மறிவிடவில்லையா? கடந்த நூற்றாண்டில் உருவாக்கப் பட்ட நீராவி இயந்திரம் எப்படி சமூகத்தைப் புரட்டிப் போடுவிட்டது. இந்த மாற்றத்திற்கும் உற்பத்தி உறவுக்கும் எந்த தொடர்புமில்லை. இது டெக்னாலஜி மாற்றம் அதன் மூலமாக மனித சமூகம் அடைந்த மாற்றம். இதில் உற்பத்தி உறவு எங்கிருந்து வந்தது?
நன்றி
பழைய அனானி
//

உங்கள் மொத்த புரட்டலையும் உடைச்சாச்சு வேற விசயம் பேசுங்க

November 02, 2007

Anonym said... 31. Oktober 2007 05:53
அன்புள்ள ஸ்டாலின் : நான் ஒரிஜினல் அனானி. வேறொரு நண்பர் இங்கே அனானியாய்ப் பதிவு செய்திருக்கிறார் அவருக்குஎ என் நன்றி.
1. புராதன சமூகம் கம்யூனிச சமூகமா இல்லையா என்பது பற்றி. பிறக்கும்போதே கம்யூனிஸ்டாகவோ, இருப்பவனாகவோ, இல்லாதவனாகவோ பிறக்க வில்லை. பரிணாமத்தின் முதல் நிலைகளில் மனித சமூகம் எப்படி இருந்தது என்று யாருக்கும் - மார்க்ஸ் உட்பட- தெரியாது. அது ஊகமாகவே இருக்கும். ஆனால் மனிதன் தனிமனிதனாகத் தான் பிறந்தான். அவனுடைய பசி மற்றும் உடல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வன்முறையும், போட்டியும் நிச்சயம் நிலவியிருக்கும். முதலில் உடைமை சமூகம் அப்படித்தான் உருவாகியிருக்கும். புராதன சமூகங்கள் எப்படி இருக்கக்கூடும் என்று மார்கரட் மீட் போன்ற மானிடவியல் ஆய்வாளர்கள், இப்போதும் நாகாரீகம் தொடாத சமூகக் குழுக்களை ஆய்வு செய்து பல புத்தகங்கள் எழுதியுள்ளனர். அவை நிச்சயம் கம்யூனிச சமூகங்கள் அல்ல.
2.முதலாளித்துவம் என்ற வார்த்தையே பிரசினைக்குரியது. எந்த முட்டாள் "கேபிடலிசம்" என்ற வார்த்தையை முதலாளித்துவம் என்று முழி பெயர்த்தான் என்று தெரியவில்லை. இதை மூலதனவாதம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். இந்தி மொழியில் சரியாக இதனை "பூஞ்சிவாத்" என்று மொழியாக்கம் செய்துள்ளனர். முதலாளித்துவம் என்ற வார்த்தை , யாரோ ஒரு முதலாளி எங்கேயோ உட்கார்ந்து கொண்டு நாட்டாமை செய்யும் எதிர்மறை பிம்பத்தை உருவாக்குகிறது.

3.மூலதனவாதத்து உற்பத்தி திட்டமிட்ட உற்பத்தி என்று சொல்லவில்லை. தேவைகளை முன்னிறுத்திய உற்பத்தி என்று சொன்னேன். சொல்லப் போனால சோஷலிச சமூகங்களின் உற்பத்தியும் கூட தேவையை முனிறுத்தி செய்யப்படுவது தான். தேவையற்ற பொருள்களை உற்பத்தி செய்து என்ன பயன் விளையும்?

4. சந்தையில் தேக்கம் என்பது தேவைகளை முன்னிறுத்திய உற்பத்தியாலும், தேவைகளை சரியாக முன் கூட்டி அறிந்துகொள்வதில் ஏற்பட்ட பிரசினைகளாலும், தேவைகளின் மாற்றத்தாலும் நிகழ்வது. சில சமயம் எதிர்காலத் தேவைக்கான உற்பத்தியாகவும் இருக்கலாம். ஆனால் இதனால் எப்படி தொழிலாளர்கள் பாதிக்கப் படுவார்கள். உற்பத்திக்கான சம்பளம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அல்லவா?

5. மார்க்ஸின் மூலதன ஆய்வுகளை நான் மறுக்கிறென். தொழிற்புரட்சியின் ஆரம்ப கால கட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்களைக் கணக்கில் கொண்டு எழுதப்பட்ட மூலதனம் எழுதி வ்ளிவந்ததற்குள்ளாகவே தொழிற்துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இருபதாம் நூற்றாண்டில் அசெம்ப்ளி லைன் போன்ற நிர்வாக மாற்றங்கள், போக்குவரவு மாற்றங்கள் , உலகமயமாதலில் ஏற்பட்ட சந்தை விரிவுகள் என்று பல காரணிகள் உற்பத்தி மற்றும் வினியோக நடைமுறைகளை முற்றிலும் மாற்றி விட்டன. உபரி மதிப்பு பற்றிய அபத்தம் தனியாக நிகழ்த்தப் படவேண்டிய விவாதம். சோஷலிச சமூகத்தில் உபரி மதிப்பு என்பது இருக்காது என்று ஒரு அபத்தம். ஒரு சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவதே உபரி மதிப்பு தான். உபரி மதிப்பு தொழிலாளர்களுக்கு நியாமாய்ச் சேரவேணிட்யது என்பதும் இன்னொரு அபத்தம். சோஷலிச சமூகத்தில் உபரி மதிப்பு இல்லை என்றால், விண்வெளிப் பயணங்களுக்கு எங்கிருந்து மூலதனம் கிடைத்தது?

4. கணிணி ஒரு விதத்த்தில் உற்பத்திக்கு உதவும் சாதனம் தான். சேவை என்பதும், உற்பத்தி என்பதும் தனித்தனியாய்ப் பிரித்துக் காண்பதும் கடினமே. உதாரணமாக வங்கி என்பது சேவை என்று கொள்ளலாம். ஆனால் மூலதன உருவாக்கத்தில் பங்கு பெறுவதால், உற்பத்திக்குத் துணை புரிவதால் மறைமுக உற்பத்திச் சாதனமாகவும் அது இயங்குகிறது.

5.தடால் என்று மூலதனச் சுரண்டலை கணிணி அதிகமாக்குகின்றது என்று ஒரே போடாகப் போட்டு கம்யூனிஸ்டுகளின் சிந்தனையற்ற ,தடாலடி வாதத்தை முன் வைக்கிறீர்கள். நீங்கள் சொன்ன புராதன சமூகத்திற்கு செல்வோம். முதன் முதலில் நெருப்பும், சக்கரமும் கண்டுபிடிக்கப் பட்ட நாளுக்குச் செல்வோம் என்று வைத்துக் கொள்வோம். சக்கரங்களைக் கொண்டு பத்து மனிதர்கள் செய்த வேலையை ஒரு மனிதன் செய்யலாம் என்பதால், உங்களைப் போன்ற ஒரு கம்யூனிஸ்டு "ஒழிக" கோஷ்ம் போட்டும் இருக்கலாம். ஒன்று செய்யுங்கள்; சக்கரங்களையும் மாட்ட்டு வண்டி உட்பட எல்லா சக்கர ஊர்திகளையும் தடை செய்யப் போராடுங்கள். எல்லோருக்கும் மூட்டை தூக்கும் வேலை கிடைக்கும். வேலையின்மைப் பிரசினை சுத்தமாய்த் தீர்ந்து விடும். அதேபோல் உங்கள் வீட்டில் உள்ள கிரைண்டர்களையும், மிக்சிகளையும் தூக்கிப் போட்டுவிட்டு மாவாட்டும் வேலையை அள்ளி வழங்குங்கள். வேலையின்மைப் பிரசினை சுத்தமாய்த் தீர்ந்துவிடும்.அப்படியே போனையும் வீசி விடுங்கள். எல்லோரும் தந்தி அனுப்பிக் கொள்ளலாம். தந்தி ஆபிசில் பலருக்கும் வேலை கிடைக்கும். ஒரு வழியாக உங்கள் கனவான கற்கால கம்யூனிச சமுதாயமும் சாத்தியமாகி விடும். நான் சொல்ல வருவது இது தான்: டெக்னாலஜி வளர்ச்சி என்பது மனிதகுலத்தின் எதிரி அல்ல. அதுதான் நாகரிகத்தை முன்னோக்கி செலுத்தியுள்ளது. மூல தனத்தை அடிப்படையாய்க் கொண்ட சமூகங்கள் தான் நோய் தீர்க்கும் மருந்துகளை உலகிற்கு அளித்துள்ளது. சோஷலிச சமூகங்கள் மனித குலத்திற்கு அளித்த கொடை என்ன? உங்களைச் சுற்றியுள்ள யதார்த்தைப் பாருங்கள். கிரைன்டரும், கணிணியும் மனித உழைப்பை அதிகப் படுத்தியுள்ளதா, எளிமைப் படுத்தியுள்ளதா?

6. உற்பத்தியை நான் மறைக்கவில்லை. உற்பத்திக்கு தொழிலாளர் மட்டுமே காரணம் என்பதித் தான் நான் மறுக்கிறேன். உற்பத்தியோடு பொருளாதார செயல்பாடு முடிந்து விடுவதில்லை. தேவை,கண்டுபிட்ப்புகள் என்று தொடங்கி, உற்பத்தி வழியாக் வினியோகம் என்று அடையும் ஒரு தொடர்ச்சியை முழுமையாய்ப் பாருங்கள் என்று தான் நான் சொல்கிரேன்.

7. 80 சதவீதத்திற்கும் மேல் மக்கள் ஒரு வேளை உணவு இல்லாமல் வாடுகிறார்கள் என்ற புள்ளி விவரம் எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. தெரிவியுங்கள். இந்தியாவின் மக்கள் தொகை கடந்த ஐம்பதாண்டுகளில் மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இறப்பு விகிதங்கள் குறைந்துள்ளன. குழந்தி மரணங்கள் குறைந்துள்ளன. கல்வி பெறுவோர் தொகை அதிகரித்துள்ளது.வறுமைக் கோட்டின் கீழே வாழ்பவர்களின் விகிதாசாரம் குறைந்துள்ளது. பிரசினைகள் முழுமையாய்த் தீர்ந்து விடவில்லை. ஆனால் முன்னேற்றமே இல்லை என்று சொல்லிவிடமுடியாது.

யோசியுங்கள்.
பழைய அனானி

31. Oktober 2007 05:53அசுரன் said... 31. Oktober 2007 00:28
//அனானிக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது, பாவம் மிகவும் குழம்பி போய்விட்ட அனானி படபடப்பில் முதலாளித்துவ பிரச்சார புத்தகங்களால் மூளைக்குள் திணிக்கப்பட்ட ஸ்டாலின், மாவோ அவதூறுகள் பற்றி தொடர்ந்து உச்சாடனம் செய்ய தொடங்கியிருக்கிறார். ஆனால் நான் மேலே போட்டிருக்கும் பின்னூட்டத்தில் மார்க்சியத் தத்துவத்தை பற்றி இவர் வைத்த விமர்சனத்திற்குத்தான் பதிலளித்திருக்கிறேன், அதனை மேற்சென்று தொடர முடியாத அனானி, மார்க்சியம் தத்துவார்த ரீதியாக அடிப்படையிலேயே தவறு, புராதான பொதுவுடைமை சமூகமே இல்லை என்றெல்லாம் வாதிட்ட அனானி இப்போது அதை தொடராமல் ஸ்டாலின் அவதூறு என்ற புதரில் போய் பத்திரமாக் பதுங்கி கொள்ள பார்க்கிறார், விவாதத்தினுடைய மையமான விசயத்தை விட்டு ஒதுங்கி ஸ்டாலின் அவதூறில் பதுங்கிறார்.

நீ எவ்வளவு புத்தகம் படித்திருப்பாய், உனக்கு ரசிய மொழி தெரியுமா, ரசிய நூலகத்திற்கு சென்று ஆய்வு செய்திருக்கிறாயா, உனக்கு ஸ்டாலின் பற்றி தெரிந்ததெல்லாம் எப்படி? என்று நம் மீது கேள்விக்கணைகளை தொடுக்கிறார், இனி நாம் அவரிடம் இந்திய அரசியல் கூட பேச முடியாது போல,உனக்கு இந்தி தெரியுமா டெல்லி போயிருக்கிறயா என்று கேட்பார், இனி எப்படி வாதிப்பது என்று எனக்கு கவலையாய் இருக்கிறது. இராமன் பாலத்தை பற்றி பேச வேண்டுமென்றால் கூட இராமேஸ்வரம் போய் பார்த்துவிட்டுதான் வரவேண்டும் போலிருக்கிறது.

ஆனால் அனானி ஸ்டாலினை எனக்கு அறிமுகப்படுத்தியது எங்களுடைய பாட்டாளி வர்க்க அரசியலின் பிரச்சார புத்தகங்களாகவே இருக்கட்டும், ஆனால் உங்களுக்கு ஸ்டாலின் எப்படி அறிமுகமானார், நேராக போய் பார்த்து வந்தீர்களா? ஸ்டாலினின் சாதனைகளை பேசுவது பாட்டாளி வர்க்கத்தின் பிரச்சார புத்தகம் என்று நீங்கள் சொல்வீர்களேயானால், அவரை அவதூறு பேசுவதை நான் முதலாளித்துவ பிரச்சார புத்தகங்கள் என்று சொல்லமுடியாதா? நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை என்பது ஒருபுறமிருக்கட்டும். மேலே உள்ள என்னுடைய பின்னூட்டத்தில் ஸ்டாலினை பற்றியோ, மாவேவை பற்றியோ எதுவும் பேசவில்லையே, எதற்கு உங்கள் முன்னோர்களின் புழுகுகளையெல்லாம் கடைவிரிக்க ஓடிவருகிறீர்கள்.

அய்யா அனானி நாங்கள் பிரமாதமான படிப்பாளிகள் இல்லைதான, ஆனால் இலாபவெறி பிடித்த அருவெறுப்பான முதலாளித்துவ முகத்தை அலங்கரித்து காட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை, நாங்கள் படித்தது குறைவாய் இருக்கலாம், ஆனால் நீங்கள் உங்கள் ஊடகங்களால் ஏற்படுத்தி வைத்திருக்கும் மாயையான பிம்பங்களை தாண்டியும் எங்களை வழிநடத்தும் நாயகர்களையும், எங்கள் வாழ்வை பறிக்கும் நாய்களையும் எங்களால் பிரித்து அறிய முடியும்.

நீங்கள் என்ன பெரிதாக படித்து கிழித்து விட்டீர்கள் என்று கேட்கின்ற உங்களுடைய முதலாளித்துவ மிதப்புதான் மார்க்சியத்தை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்ல வைக்கிறது, இது தனியொரு குழூவிடம் மந்திர குளிகையாக மாறிவிடும் என்று சொல்ல வைக்கிறது. நாங்கள் மக்களின் புரிதல் மட்டத்தை உயர்த்துவோம், மார்க்சியத்தை புரிந்து விவாதிக்கவும், வளர்த்தெடுக்கவும் அறிவு கொண்டவர்களாக மக்களின் வாழ்நிலையை மாற்றுவோம் என்பதெல்லாம் இருக்கட்டும், உங்கள் முதலாளித்துவ சமூகத்தில் இன்று ஜி.டி.பி, ஷேர் மார்கெட், சென்செக்ஸ் என்று தொண்டை கிழிய கத்துகிறீர்களே, அது படித்தவர்களுக்கே எத்தனை பேருக்கு புரிகிறது என்று கூறுங்களேன், அல்லது அப்படி புரிந்து கொள்ள கூடியவர்களாக முதலாளித்துவ சமூகம் மக்களை உருவாக்குமா என்றாவது கூறுங்களேன்.

ஸ்டாலின்

//

தேவை தேவை என்று அனானி குறிப்பிடுகிறார். தேவை என்பதை யார் முடிவு செய்கிறார்கள்?
மக்களின் அடிப்படைத் தேவைக்கான உற்பத்தியா இன்று நடக்கிறது. 1 லிட்டர் கோகோ கோலாவுக்காக 8 லிட்டர் தண்ணீரை நஞ்சாக்கி அது மண்ணீல் இறங்கி இன்னுமொரு 47 லிட்டர் நிலத்தடி நீரை நஞ்சாக்குகீறதே இது யாருடைய தேவைக்கானது என்று அனானி சொன்னால் புண்ணீயமாகப் போகும்.

அல்லது முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறி இன்று மேல்நிலை வல்லரசு, உலக மேலாதிக்க ஒற்றை துருவ வல்லரசாக பரிணமித்துக் கொண்டிருக்கும் கடந்த 100 வருடங்களில் இன்று வரை உலகம் முழுவதும் யாருடைய தேவைக்காக யுத்தங்களும், பகுதியளவிலான முரன்பாடுகளும் கூர் தீட்டப்பட்டு மோதவிடப்படுகின்றன என்று அனானி சொன்னால் வசதியாக இருக்கும்.

அல்லது இவர் குறிப்பிடும் சோவியத் ரஸ்யாவும் சரி சீனாவும் சரி மிக மிக மோசமான நிலையிலிருந்து வல்லரசுகளாக குறுகிய காலத்தில் எந்த நாட்டையும் சுரண்டாமல் வளர்ந்த மர்மம் குறித்து சொல்லலாம். குறிப்பாக 300 வருடம் உலகை ஆண்ட பிரிட்டன் இரண்டாம் உலக் யுத்த முடிவில் ஓட்டாண்டியாக வெளி வந்த பொழுது, ரஸ்யா 50 வருடங்களாக யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு போர், பஞ்சம், உள்நாட்டு சதி இவற்றை கடந்து இரண்டாம் உலகப் போரில் வேறு எந்த நாட்டையும் விட மிக மிக பேரிய அழிவிற்க்கு ஆளாகி போரின் முடிவில் உலக வல்லரசக வந்த அதிசயம் குறித்தும் அனானி நமக்கு பாடம் நடத்தலாம்.

ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் சுக வாழ்வு குறித்து நமக்கு புதிதாக அறிமுகப்படுத்துகிறார் அனானி. இந்த விசயத்தையெல்லாம் உள்ளடக்கியதுதான் லெனினின் ஏகாதிபத்திய வரையறை. லெனின் இதனை எழுதும் முன்பாகவே முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணாமிப்பது குறித்து முதலாளீத்துவ பொருளாதார நிபுணர்களே அந்த காலத்தில் பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ளனர்(இவற்றின் உதவியுடனேயே லெனினும் தனது ஆய்வை வளர்த்துச் செல்கிறார்).

மாறாக, ஏகா/முதலாளித்துவ நாடுகள் தமது நாட்டில் புரட்சி நடப்பதை தவிர்ப்பதற்க்கே தனது தொழிலாளிகளுக்கு குறைந்த பட்ச சுக வாழ்வை ஊர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது. இந்த தேவைக்கும் சேர்த்து இந்தியா போன்ற காலனி நாடுகள் சுரண்டப்படுகின்றன.

எப்படி? இந்தியா போன்ற நாடுகளில் குறை கூலி உழைப்பு, மூல வளங்கள் மூலம் தமது நாட்டுக்கு தேவையான பொருட்களையும், உலக சந்தைக்கு தேவையான பொருட்களையும் மலிவு விலையில் உற்பத்தி செய்து லாபம் பார்ப்பதுடன், தமது நாட்டு மக்களையும் திருப்திப் படுத்துகிறான். அதனால் ஏகா நாட்டு தொழிலாளியின் சுக வாழ்வு என்பது ஒன்று ஆச்சர்யமான விசயம் அல்ல.

இந்தியாவில் ஒரு எ-காவுக்கு அசோக் லேலாண்டின் உற்பத்தி 3 மடங்கு அதிகரித்துள்ளது சமீப ஆண்டுகளின் ஆனால் தொழிலாளர் எண்ணிக்கை பாதியளவுக்கு குறைந்து விட்டது. இதே போல சிறு தொழில் துறையில் ஏற்ப்பட்டுள்ள தன்மை மாற்றம், இந்தியாவின் GDP, பங்கு சந்தை குறியீட்டு எண், இன்பேலேசன் ரேட், அன்னிய செலவானி இவை குறித்த மோசடிகளையும் விரிவாக இந்திய தரகு அதிகார வர்க்கம் மற்றும் ஏகாதிபத்திய பிரதிநிதிகளின் சொந்த வாக்குமூலங்கள் மூலம் சிறப்பாக் அம்பலப்படுத்தலாம். ஆனால் அதற்க்கு முன்பு அடிப்படையான சில விசயங்களில் அனானி ஸ்திரப்படுத்திவிட்டு செல்வதே சரி. ஏனேனில் அனானி அவர்கள் கீறல் விழுந்த ரிக்கார்டு போல ஆரம்பம் முதல் சில விச்யங்களையே மீண்டும் மீண்டும் பேசுவருகிறார்.

புரதான பொதுவுடைமை சமூகம் குறித்தோ அல்லது முதலாளித்துவ சந்தை/உற்பத்தி விதி குறித்தோ, அல்லது அவரது இன்னபிற அடிபப்டையற்ற புரிதல் குறித்தோ ஸ்டாலின் உள்ளிட்டவர்களீன் எதிர்வினைகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஒரே வாதத்தை வேறு வார்த்தைகளீல் வைத்து செல்கிறார் அனானி.

ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் குறித்த புரளிகளுக்கு அனானி தயவு செய்து பின்வரும் கட்டுரைகளில் வந்து உரையாடினால் அவரது தார்மீக நேர்மையை நாம் பாராட்டக் கடைமைப் பட்டவர்களாக இருப்போம்.பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_27.html

சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html

தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_24.html

மாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_22.html

«ÍÃý

31. Oktober 2007 00:28

ஸ்டாலின் said... 30. Oktober 2007 22:05

அனானிக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது, பாவம் மிகவும் குழம்பி போய்விட்ட அனானி படபடப்பில் முதலாளித்துவ பிரச்சார புத்தகங்களால் மூளைக்குள் திணிக்கப்பட்ட ஸ்டாலின், மாவோ அவதூறுகள் பற்றி தொடர்ந்து உச்சாடனம் செய்ய தொடங்கியிருக்கிறார். ஆனால் நான் மேலே போட்டிருக்கும் பின்னூட்டத்தில் மார்க்சியத் தத்துவத்தை பற்றி இவர் வைத்த விமர்சனத்திற்குத்தான் பதிலளித்திருக்கிறேன், அதனை மேற்சென்று தொடர முடியாத அனானி, மார்க்சியம் தத்துவார்த ரீதியாக அடிப்படையிலேயே தவறு, புராதான பொதுவுடைமை சமூகமே இல்லை என்றெல்லாம் வாதிட்ட அனானி இப்போது அதை தொடராமல் ஸ்டாலின் அவதூறு என்ற புதரில் போய் பத்திரமாக் பதுங்கி கொள்ள பார்க்கிறார், விவாதத்தினுடைய மையமான விசயத்தை விட்டு ஒதுங்கி ஸ்டாலின் அவதூறில் பதுங்கிறார்.

30. Oktober 2007 22:05

வேறொரு அனானி
Anonym said... 30. Oktober 2007 21:33

ஸ்டாலின் என்று பெயர் சொல்லும் நபருக்கு:
இது உங்கள் பதிலில் இருந்த மேற்கோள்.
"கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிடும் போது "தொழில்கள் மேலும் மேலும் நவீனமயப்படும் போது தொழிலாளியின் வேலை மேலும் மேலும் அதிகமாக்கப்படுகிறது" என்று குறிப்ப்பிட்டார்."
மொத்த ஐரோப்பாவிலும் உள்ள தொழிலாளிகளின் வாழ்வில் அவர்கள் வாரத்துக்கு எத்தனை மணி நேரம் உழைக்கிறார்கள் என்று போய்க் கேளுங்கள் அல்லது குறைந்தது தற்கால 21ஆம் நூற்றாண்டுப் பொருளாதாரத்தையாவது படியுங்கள்.
ஒருங்கிணைக்கப் படாத முதலாளியத்தின் மீது அரசு கண்டிப்பு செலுத்த இயலாத ஓட்டை நாடுகளில்தான் நீங்கள் சொல்லும் அளவிறந்த உழைப்பு இன்னமும் இருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப் பட்ட இருண்ட பகுதிகள் இருக்கும். இருக்கலாம். ஏனெனில் அமெரிக்கா சோவியத் அரசைப் போல இன்னமும் முழுக் கண்காணிப்பு அரசாக மாறவில்லை. ஐரோப்பாவும் அப்படி மாறவில்லை. மாறாக 18 மணி நேர வேலையை சகஜமாகத் தொழிலாளர் மேல் திணிக்கும் அற்புத நடவடிக்கை உங்களுக்கெல்லாம் ஒரு காலத்தில் சொர்க்கமாகத் தெரிந்த மாவோயிசக் கூட்டுப் பண்ணை சமூக்ங்களில் அன்றாட வற்புறுத்தலாக இருந்தும் உற்பத்தி கூடவில்லை. அடிமை உற்பத்தி என்றுமே நல்ல தரமாகவும் இராது, உருப்படியாகவும் அமையாது.

உலகில் எங்குமே கம்யூனிச சமுதாயம் இல்லை என்பது ரொமப வசதியான தப்புதல் வாதமாக இல்லை? அதற்கான பிரும்மாண்டமான முயற்சிகள் என்று செகப்புக் கொடி பிடித்து உலகெங்கும் ரத்த ஆறை ஓட விட ஆசையாக அலைந்தார்களே உங்களுக்கு முந்தைய தலைமுறை நம்பிக்கையாளர்கள், அவர்களின் முயற்சிகள் என்ன மாதிரி முடிந்தன, ஒப்பீட்டில் கொடுங்கோலரான முதலாளிகள் நடத்தும் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் என்ன மாதிரி இருக்கிறார் என்று நீங்களே சொல்கிற 'நேர்மை' யோடு மஞ்சள் கண்ணாடியை எல்லாம் விலக்கி விட்டுப் பாருங்கள். உலகின் முதல் பத்து நாடுகள்- எல்லா அளவைகளையும் வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்- அவை எல்லாமே முதலாளிய நாடுகளாகத்தான் இருக்கும்.
முதலில் உலகப் பொருளாதார அளவைகள் வழியே தரம் பிரிந்த நாடுகளைப் பாருங்கள். பிறகு
உளுத்துப் போன மார்க்சிய சூத்திரங்களை எடுத்து அவையில் வைக்கலாம்.
அடுத்து, கணிணி ஒரு சேவைக்கான எந்திரம் என்று மடத்தனமாக வாதம் செய்யாதீர்கள். இந்த உருப்படாத வாதத்தை வைத்துக் கொண்டுதான் இந்தியப் 'பொதுவுடைமை'க் கட்சிகள் இரண்டு மூன்று தலைமுறை இந்தியரின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டார்கள். இன்னமுமா இந்த குருட்டுத் தனம்?
ஜி.எம் தொழிற்சாலையில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான கார்களுக்கு எஞ்ஜின்களை இறக்கிப் பொருத்துவது, வெல்டிங் செய்வது, பெயிண்ட் அடிப்பது போன்ற பல முக்கியமான வேலைகளைச் செய்வன ரோபட்டுகள். அவற்றை இயக்குவன கணிணிகள்.
பெருவாரியான ரசாயனப் பொருட்கள் உற்பத்தி சாலைகளில் இன்று 'processing' செய்வனவே automated machines. இந்த automated என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதை நான் விளக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.
இந்தியாவும் சீனாவும் உலகத்தின் அடி நிலைத் தொழில்களைச் செய்கின்றன என்பதால் உலகில் எங்குமே அப்படித்தான் உற்பத்தி இருக்கிறது என்று கருத வேண்டாம். தரத்தில் கீழ் மட்டத்து வேலைகளை ஆட்கள் அதிகம் உள்ள பொருளாதாரத்தில் செய்வது சிக்கனம் என்று அங்கு அனுப்பி விட்டு உயரிய தரப் பொருளுற்பத்தியை auto- productivity மூலம் தங்கள் நாடுகளில் செய்கிறார்கள். இன்று ஒரு பல அடுக்குக் கட்டிடத்தை ஒரு சில வாரங்களில் கட்டி முடிக்கிறார்கள்- சீனாவில் கூட. இது என்ன வெறும் உடலுழைப்பாலா நடந்தது?
கட்டிடத்தின் வரைபடத்தைக் கொடுத்தால் போதும். அனைத்துச் சுவர்களுக்கும் ஜன்னல்களுக்கும், மேலும் இதர ஃபிட்டிங்குகளுக்கும் தேவையான பாகப் பிரிப்பைச் சாதித்து பெரும்பாலான பாகங்களை automated production மூலமாகச் செய்து களத்துக்கு அனுப்புகிறார்கள். அவை அங்கே சும்மா எளிதில் இணைக்கப் பட்டு விடுகின்றன.
காடர்பில்லரின் ராட்சத எந்திரங்களில் இருப்பது உறைந்த மனித உழைப்பு என்று ஏதோ வறட்டு சூத்திரத்தை எடுத்து முன் வைக்க முயல வேண்டாம்.

ரோபட்டுகளைச் செய்தவர்கள் யார் என்று மூலத்துக்குப் போனால், உங்களைச் செய்தது உங்கள் அம்மா, அப்பா, அதனால் நீங்கள் படித்தது இன்று வாதம் செய்வது எல்லாம் உங்கள் அம்மா அப்பா அல்லது அவர்களுடைய அம்மா அப்பாதான் என்று வாதம் செய்ய முடியுமா என்று யோசியுங்கள்.
அந்த ரோபட்டுக்ளுக்கு ஆணைகள் எழுதியது எல்லாம் உங்கள் அபிமானப் பாட்டாளிகள் இல்லை. புஷ்ஷின் பாதந்தாங்கிகள் என்று வசவை அள்ளி வீசுகிறீர்களே அந்த வர்க்கத்தின் சாதாரண பொறியியல் பட்டதாரிகள்தான்.
உடலுழைப்பு என்பதை ஏதோ மந்திரக் கோல் போல ஆட்டினால் எல்லாரும் மயங்கிக் கீழே விழுந்து விட மாட்டார்கள். உடலுழைப்பு என்பதை ஒரு வரலாற்றுக் கட்டத்தில் அவசியமாகக் கருதி இருக்கலாம். இன்று வளர்ந்த சிக்கலான பொருளாதாரங்களில், சமுகங்களில் உடலுழைப்பு என்பது தவிர்க்க முடியாத அவலமாகக் கருதப் படுவது சகஜமாகி இருக்கிறது.
உடலுழைப்பு என்பதை உடலை வருத்தும் பயிற்சி என்று கேளிக்கை மாதிரி, leisure activity ஆக மாற்றிக் கொண்டு வருகிறது முதலாளியம்.
பரிணாமத்தில் நம்பிக்கை உள்ளவரா என்று அனானிகளை எல்லாம் கேட்கும் முன் அதில் நம்பிக்கை உள்ளவரா நீங்கள் என்று தெளிவு செய்யுங்கள். உடலுழைப்பு என்பது குறைந்து மூளை உழைப்பு அதிகரிப்பதுதான் பரிணாமம். வெறும் தசை செய்த வேலையை கருவி செய்ய வைத்ததுதான் பரிணாமம்.
இது இன்னொரு மேற்கோள்:
புராதான பொதுவுடைமை சமூகத்தை மறுக்கின்ற நீங்கள் அப்போது எப்படிப்பட்ட சமூக அமைப்பு இருந்ததென்று எடுத்துச் சொல்ல முடியுமா?
ஏன் நீங்களே யோசியுங்களேன். அப்படி ஒரு அழகான பொதுவுடைமை சமுதாயம் உலகெங்கும் இருந்ததென்றால் ஏன் அது உடைந்தது? ஏன் வளர வேண்டும் என்ற அவசியமே எழுந்தது?
ஏன் இன்று உலக நாகரிகத்தோடு அதிகம் தொடர்பில்லாது வாழும் பல ஆதி குடிகளில் பெரும் போர்களும், வன்முறையும் கொண்ட சமுகங்கள் காணப்படுகின்றன?
பண்பாட்டு மார்க்சியம் என்று ஒரு மானுடவியல் துறை இருக்கிறது. தேடி நூல்களைப் படியுங்கள். நீங்கள் கதை கட்டுகிற மாதிரி பாலும் தெளி தேனும் ஓடிய பொதுவுடைமை சமுதாயங்கள் வைக்கோல் போரில் ஊசி போல. பாதிரிமார்கள் ஏசு சொர்க்கத்துக்கு நடந்து போனார் என்று புராணக் கதை சொல்லி மக்களை மூளை மழுங்க அடித்தார்கள். அடுத்து நீங்கள் கிளம்பி இருக்கிறீர்கள் போலிருக்கிறது.
எந்தப் பொதுவுடைமை சமுதாய்த்திலும் தலைமை, தலைமைக்கான போட்டி, வீரம், சாகசம், காதல், தியாகம், பழி, குற்றம், வரம்பு மீறல், அழிச்சாட்டியம், அக்கிரமம், வெளித்தள்ளால் என்று எல்லா சாதாரண மனித நடவடிக்கைகளும் இருக்கத்தான் செய்யும், அதில் இருந்து- மோதலும் இணைப்பும் அருகருகே இருந்து பல வரலாற்றுக் கட்டங்களில் ஒவ்வொன்று மேலோங்கி க் கிழிறங்கித்தான் மனிதர் நகர்ந்து வந்திருக்கிறார்.
மனிதரிடம் குரங்கு இன்னும் செத்து விடவில்லை. விலங்கு உள்ளே இல்லாத மனிதருக்குத் தம்மைப் பிரதி செய்யும் ஊக்கம் இருக்குமா என்றே எனக்கு ஐயம் இருக்கிறது. மிருகத்தைக் குறைவாக மதிப்பிடாதீர்கள். சோவியத் ரஷ்யாவில் நிறையவே அவை பொலிட் பீரோவில் இருந்தன.

30. Oktober 2007 21:33

ஸ்டாலின் said... 30. Oktober 2007 18:54

அடடே அனானி புதிய கண்டுபிடிப்புகளோடுதான் அனானி களமிறங்கியிருக்கிறார், புராதான சமூகம் ஒரு பொதுவுடமை சமூகமல்ல? முதலாளித்துவ உற்பத்தியே தேவைக்கான உற்பத்திதான் சந்தை உற்பத்தி என்று பொருளாதாரவாதிகள் பேசுவதெல்லாம் சும்மா சரடு, மேலும் அது கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கிறது. உற்பத்தி உறவுகள் மட்டுமே சமூக மாற்றத்துக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொன்னார், குருசேவ் மட்டுமே நல்ல கம்யூனிஸ்டு, அவரை விமர்சித்தவர்களெல்லாம் தீ கம்யூனிஸ்டுகள் என்று அனானியின் கண்டுபிடிப்புகள் அதன் எல்லையை விரித்துக் கொண்டே போகிறது, ஆனாலும் அந்தோ பரிதாபம் அது எல்லாமே எதார்த்தத்தை மீறியதாக இருக்கிறது. அய்யா அனானி புராதான பொதுவுடைமை சமூகத்தை மறுக்கின்ற நீங்கள் அப்போது எப்படிப்பட்ட சமூக அமைப்பு இருந்ததென்று எடுத்துச் சொல்ல முடியுமா, அப்படியானால் அப்போது பொதுவுடைமை சமூகம் இல்லையென்றால் மனிதன் பரிணமிக்கும் போதே இருப்பவனாகவும் இல்லாதவனாகவும் பரிணமித்தானா? கேட்க மறந்துவிட்டேனே பரிணாமவாதத்தையாவது ஏற்றுக்கொள்கிறீர்களா? இது ஒருபுறம் இருக்கட்டும் முதலாளித்துவ உற்பத்தி திட்டமிட்ட உற்பத்தி அதாவது தேவைக்கான உற்பத்தி என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள், இன்றும் கூட சந்தையில் தேங்கி கிடக்கும் பொருள்களும் அதனால் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும், அதனால் தொழிலாளியின் வாழ்வில் அடிக்கும் புயல்களூம் உங்களுக்கு தெரியவில்லையா? இதற்கு எத்தனையோ உதாரணங்களை கூற முடியும் இந்த சந்தை உற்பத்தி, அதாவது அராஜக உற்பத்திதானே முதலாளித்துவத்தினுடைய அடிப்படையான, எளிமையான முரண்பாடுகளின் கூறாக இருக்கிறது. மேலும் இந்த சந்தை உற்பத்தி அதாவது அபரிமிதமான உபரி உற்பத்தி மேலும் மேலும் மூலதனத்தைதான் பெருக்குகிறதேயொழிய அதனை உற்பத்தி செய்யும் தொழிலாளிக்கு வாழ்வதற்கான ஆதாரத்தை தவிர எதனையும் கொடுப்பதில்லை, இதுதானே மூலதனத்தின் தத்துவம் இதனையும் மறுதலிக்கிறீர்களா, அதாவது முதலாளித்துவத்தின் ஆக உயர்ந்த இடமாக இருந்த இங்கிலாந்தின் பொருளாதர நிலைமைகளையும் அடிப்படைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டும் மார்க்ஸ் மேற்கொண்ட மூலதன ஆய்வுகளை மறுதலிக்கிறீர்களா? கணினி ஒரு சேவைத்துறைதானேயொழிய அது உற்பத்தி சாதனமில்லை என்பதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள், உற்பத்தியின் அக்கம்பக்கமாக அதற்கு உதவியாக இயங்கும் சேவைத்துறை என்பது எல்லாகாலத்திலும் இருந்துதான் வந்திருக்கிறது அதன் உயர்ந்த வடிவம் கணிப்பொறி, சரி கணிப்பொறியின் வளர்ச்சி கூட உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியோடினைந்தத்துதான், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, உற்பத்தியில் பெருக்கத்தையும் மூலதனச் சுரண்டலையும் அதிகமாக்குகிறது அதாவது இப்போது வளர்ந்த கணிப்பொறி துறையில் 12 மணி நேரம் வேலை செய்வது போல, இதனைத்தான் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிடும் போது "தொழில்கள் மேலும் மேலும் நவீனமயப்படும் போது தொழிலாளியின் வேலை மேலும் மேலும் அதிகமாக்கப்படுகிறது" என்று குறிப்ப்பிட்டார், இது தொழில்நுட்பத்தை தனது இலாப உற்பத்திக்கு சந்தை உற்பத்தி பயன்படுத்தி கொள்ளும் முதலாளித்துவத்தின் விதி, இந்த நிலையில் தொடரும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, சந்தையில் ஏற்படும் தேக்கமும், புதிய சந்தைகளுக்கான போட்டியும்தான், உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் ஏற்படும் பெரிய முரண்பாடாக வெடித்தெழுந்து ஒரு புதிய உற்பத்தி உறவினை ஒரு உற்பத்தி முறையினை கோருகிறது, இதனையெல்லாம் விட்டுவிட்டு உற்பத்தி உறவு மட்டும் சமூக மாற்றத்திற்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொன்னதாக நீங்கள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக பேசுவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. அது சரி எதற்காக ஆரம்பத்திலிருந்து உற்பத்தி சக்திகளையும், உற்பத்தியையும் மறைப்பதிலும் நீங்கள் முனைப்பாய் இருக்கிறீர்கள், அதற்கு அடிப்படையான தொழிலாளிகளை பற்றி பேச வேண்டும் என்பதாலா?

தலைகீழ் புரிதல்களில் சோசலிச சமூகம் வீழ்ச்சியுற்றுவிட்டதாம், குறி சொல்கிறார் அனானி, சரியான புரிதலில் முதலாளித்துவம் தழைத்தோங்கி கொண்டிருக்கிறதா? தனக்கான சவக்குழியை நன்கு ஆழமாக வெட்டிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் குறிப்பிடும் இந்த பொற்காலத்தின் இந்திய நிதியமைச்சர் உலக வங்கியிடம் கடன் கோருகிறார் "இந்தியாவிற்கு அதிகமான கடன் கொடுங்கள், நாங்கள் ஜி.டி.பி பத்து சதவீதம் உயர்ந்துவிட்டதாக சொல்கிறோம், ஆனால் உண்மைலில் அது பத்து பணக்காரர்களுக்குத்தான் பத்து சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரு வேளை உணவுக்கு துன்பப்படுகிறார்கள், அவர்களுடைய் ஜி.டி.பி 3 சதவீதம்தான்.. அதனால் எங்களுக்கு அதிகமான கடன் கொடுங்கள்" என்று உலக வங்கியிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து மன்றாடுகிறார் மானங்கெட்ட சிதம்பரம்... இதுதான் நீங்கள் விதந்தோதும் பொற்காலத்தின் இலட்சனம், இதற்கு என்ன காரணம், 10 பேருக்கு 10 சதவீத ஜி.டி.பி வளர்ச்சி, 80 சதவீதத்திற்க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லை இதற்கு என்ன காரணம் சொல்லுங்கள்!! 80 சதவீதம் மக்கள் உழைக்கவில்லை, 10 சதவீதம் பேர்தான் பாடுபட்டுழைக்கிறார்களா?

மேலும் அனானி குறிப்பிட்ட பல விசயங்களை பேசலாம், ஆனால் நேர நெருக்கடியின் காரணமாக சிலவற்றை பற்றி இங்கு பேசியிருக்கிறேன், வாய்ப்பிருக்குமானால், விவாதத்தில் நேர்மை இருக்குமானால், விவாதம் தொடருமானால், விவாதத்தின் போக்கில் மேலும் விரிவாக பேசலாம்.

ஸ்டாலின்

30. Oktober 2007 18:54

--

Anonym said...
நாம் primitive communism என்று அழைத்த சமூகங்கள் கூட primitive ஆகவும் இல்லை கம்யூனிஸ்டாகவும் இல்லை என்பது சமூகவியல் ஆய்வாளர்களின் முடிவு. உற்பத்தி உறவுகள் என்ற சொற்றொடரே மீண்டும் பரிசீலிக்கத்தக்கது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. அதுவும் சேவையயும், கணிணியையும் மையம் கொண்ட ஒரு நிலையில் எங்கிருந்து உற்பத்தி உறவு வருகிறது. தேவைகளையும், சப்ளையையும் அடிப்படையாய்க் கொண்டு தான் எல்லா சமூகங்களும் இயங்கி வருகின்றன. இனியும் இயங்கி வரும். அந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் தலிகீழ்ப் புரிதலில் இயங்கிய சோஷலிஸ்ட் சமூகங்கள் வீழ்ச்சியுற்றது, மூலதனத்தை அடிப்ப்டையாய்க் கொண்ட சமூகங்களில் தனிமனித சுதந்திரமும், அடிப்படை வாழ்க்கை வசதிகளும் கிடைப்பதை கண்கொண்டு பார்க்க மறுக்கும் கருத்துக் குருடர்கள் சோஷலிசம் , கம்யூனிசம் என்ற சொர்க்கத்தைக் காட்டி இன்றைய மனித வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறர்கள்.

கம்யூனிசம் என்பது உங்கள் கற்பனையில் உதித்த சொர்க்க லோகம் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி. அதையே தான் நானும் சொல்கிறேன். கற்பனாவாதம் கனவுலகிலும், மதவாதிகளின் ஆசைகாட்டலிலும் , சினிமா டூயட்டிலும் வரலாமே தவிர சமூக அலசலில் வரலாகாது.
கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் வீழ்ச்சியிலும், ரோமானியாவின் சோஷலிச ஆளும் வர்க்கம் நடத்திய அராஜகத்திலும், கம்யூனிஸ்ட் போல் போட் நடத்திய படுகொலை மைதானங்களுக்கு அப்புறமும், ஒரு படித்த அன்பர் கம்யூனிசம் பேசும் வேதைனையை என்ன சொல்ல?

26. Oktober 2007 07:56

தியாகு said...
அனானிக்கு நன்றி

//நாம் primitive communism என்று அழைத்த சமூகங்கள் கூட primitive ஆகவும் இல்லை கம்யூனிஸ்டாகவும் இல்லை என்பது சமூகவியல் ஆய்வாளர்களின் முடிவு. //

இதை பற்றி பேசுவோம்

//உற்பத்தி உறவுகள் என்ற சொற்றொடரே மீண்டும் பரிசீலிக்கத்தக்கது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. அதுவும் சேவையயும், கணிணியையும் மையம் கொண்ட ஒரு நிலையில் எங்கிருந்து உற்பத்தி உறவு வருகிறது.//

சேவையையும் கணினியையும் சாப்பாட்டுக்கு என்ன செய்ய போகிறது உணவோ ,உடையோ உற்பத்தி செய்யாமல் ஒரு சமூகம் வாழும் என்பது உங்கள் கற்பனையா

// தேவைகளையும், சப்ளையையும் அடிப்படையாய்க் கொண்டு தான் எல்லா சமூகங்களும் இயங்கி வருகின்றன. இனியும் இயங்கி வரும்.

//

செம ஜோக்

உற்பத்தியை அடிபடியில் இருந்து எடுத்துவிட்டது நீங்கள் தமாஸ் பேர்வழி என்பதை காட்டுகிறது அல்லது அதை தேவைக்குள் ஒழித்து விட்டீர்களா?

// அந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் தலிகீழ்ப் புரிதலில் இயங்கிய சோஷலிஸ்ட் சமூகங்கள் வீழ்ச்சியுற்றது,
//

இதை மறுக்கிறேன் அடிப்படை புரிதல் இல்லாமல் வீழ்ச்சியுறவில்லை எதிர்சக்திகளின் கைக்கு சமூகம் போயிடுச்சு இதான் உண்மை

//மூலதனத்தை அடிப்ப்டையாய்க் கொண்ட சமூகங்களில் தனிமனித சுதந்திரமும், அடிப்படை வாழ்க்கை வசதிகளும் கிடைப்பதை கண்கொண்டு பார்க்க மறுக்கும் கருத்துக் குருடர்கள் சோஷலிசம் , கம்யூனிசம் என்ற சொர்க்கத்தைக் காட்டி இன்றைய மனித வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறர்கள்.
//

மூலதனம் அடிப்படை வாழ்க்கை வசதியை வழங்கிடுச்சு என்று சொல்லும் நீங்கள் உற்பத்தி செய்யாமல் எப்படி வழங்குச்சு நண்பரே

முரண்பாடாக இல்லை

//கம்யூனிசம் என்பது உங்கள் கற்பனையில் உதித்த சொர்க்க லோகம் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி. அதையே தான் நானும் சொல்கிறேன். கற்பனாவாதம் கனவுலகிலும், மதவாதிகளின் ஆசைகாட்டலிலும் , சினிமா டூயட்டிலும் வரலாமே தவிர சமூக அலசலில் வரலாகாது.
//

நான் எழுதிய கதை கற்பனையானது என்று சொன்னேன்

கருத்து திரிபுதான் உங்கள் வாதமுறையோ வருத்தப்படுகிறேன்

//கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் வீழ்ச்சியிலும், ரோமானியாவின் சோஷலிச ஆளும் வர்க்கம் நடத்திய அராஜகத்திலும், கம்யூனிஸ்ட் போல் போட் நடத்திய படுகொலை மைதானங்களுக்கு அப்புறமும், ஒரு படித்த அன்பர் கம்யூனிசம் பேசும் வேதைனையை என்ன சொல்ல?
//

கம்யூனிசம் கம்யூனிசம் என்று சொல்வது நீங்கள் இன்னும் சோசலிசத்தில் ஏற்பட்ட சண்டைகளை கம்யூனிசம் என்று புரிந்து கொண்டு ரொம்ப வருத்தபடாதீங்க அனானி

ஒரு படித்த அன்பர் மூலதனத்தின் கேட்டை ஏற்றுகொள்வதை நான் மிகவும் வருத்ததுடன் பார்கிறேன்

26. Oktober 2007 23:22

Anonym said...
1. சோஷலிசத்தின் தோல்விகள் : சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியில் பிற நாடுகளின் பங்கு இருக்கலாம் என்று ஒப்புக் கொண்டாலும் கூட போல் போட்டின் படுகொலைகளுக்கும், மாஓவின் படுகொலைகளுக்கும், ஸ்டாலினின் படுகொலைகளுக்கும், ஹங்கேரி, ஆஃப்கானிஸ்தானை சோவியத் யூனிய்ன ஆக்கிரமித்ததற்கும் யார் காரணம்? திபெத்தை சீனா ஆக்கிரமித்ததற்கும், வடகொரியவும், கியூபாவும் அடக்குமுறை நாடுகளாய் இருப்பதற்கும் யார் காரணம் என்று தெரிவியுங்கள்.

2. சோஷலிசத்தின் தவறுகளைக் காட்டி கம்யூனிசத்தின் மீது தவறு சொல்லாதீர்கள் என்று சொல்வது எனக்குப் புரியவில்லை. சோஷலிசத்தைத் தாண்டித்தான் கம்யூனிசம் சென்றடைய வேண்டும் என்று மார்க்சிய பாலபாடத்தை அடியொற்றி மாஓ, ஸ்டாலின், கிம் இல் ஜாங், போல் போட் போன்றோரின் சோஷலிச உலகைத் தாண்டி மக்கள் உயிருடன் இருக்க மாட்டார்களே என்று தான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

3.நான் உற்பத்தி இருக்காது என்று கூறவில்லை. என் குறிப்பை கவனமாய்ப் படியுங்கள். மார்க்ஸ் கோட்பாட்டின் அடிப்ப்டையான உற்பத்தி உறவுகள் தான் சமூகத்தின் நிர்ணய சக்தி என்பதையும், இந்த் தவறான அடிப்படையில் ஏற்பட்ட வர்க்கக் கோட்பாட்டையும் தான் தவறென்று சுட்டிக் காட்டியிருக்கிறேன். உற்பத்தி என்பது உற்பத்தி சாதனங்களின் உடைமையை மட்டுமல்லாமல், உற்பத்தியின் பிற கூறுகளான், தேவை, சப்ளை, ஆகியற்றையும் உள்ளடக்கியது , சமூக அமைப்பின் நிர்ணய சக்திகளாய் மற்ற கூறுகளான, இயற்கை வளம், ஜனநாயக அமைப்பு, அதிகாரப் பரவலை சாத்தியமாக்கும் அரசியல் அமைப்பு, உரிமைகளை மதிக்கும் கலாசாரப் பின்னணி என்று பல காரணிகள் உள்ளன.

27. Oktober 2007 06:21

தியாகு said...
அனானி

கடைசியில் உங்களிடம் இருக்கும் ஒரே ஆயுதமாம் ஸ்டாலின் தவறு செய்தார் அல்லது படுகொலை செய்தார் மேலும் மாவோ தவறு செய்தார் படுகொலை செய்தார் எனும் அதே புரளியை பேச துவங்கி விட்டீர்க்

இந்த செய்திகள் பரப்பிய நிறுவனங்கள் முதலாளித்துவ குஞ்சுகளான கான்குவஸ்டும் இன்னும் பல முதலாளித்துவ ஆதரவு இதழ்கள் தான் என்பதையும் உண்மையிலேயே அங்கு நடந்தவை எதிர்புரட்சியை அடக்கிய செயல்தான் அன்றி வேறில்லை ..

நிற்க இதில் சோசலிசத்தின் தத்துவத்தின் மீது குறைகூற என்ன முகாந்திரம் இருக்குன்னு தெரியலை .

நிறைய பேர கொன்னுட்டாங்கடா சோசலிசத்தின் என்றால் ஏன் கொன்னாங்க அது உண்மையா இதெல்லாம் கேட்பதில்லை அவசரத்தின் ஒன்னுக்கு இருப்ப்வன் போலத்தான் பேசிவீர்கள்

ஆ சோசலிசம் அடிப்படை தவறுன்னு என்ன அடிப்படை தவறுன்னா உற்பத்தியும் உற்பத்தி உறவுகளும் தீர்மான கரமான சக்தி இல்லை

தேவையும் சப்ளையும்தான் சொல்றீங்க

சரி தேவையை சப்ளையும் மாறும் போது ஒரு சமூகம் மாறுமா

இதை மற்ற சமூக மாற்றத்துக்கு பொருத்தி நிரூபியுங்கள் பார்க்கலாம்

29. Oktober 2007 01:28

Anonym said...
1. முதலில் தேவை சப்ளையின் மாற்றங்கள் பற்றி. தேவை, சப்ளை என்பது அடிப்ப்டையான சமூக பொருளாதாரச் சித்தாந்தம் .உடலின் அடிப்படையான பசியைப் போல. எந்தப் பொருளின் தேவை, எந்த பொருளின் சப்ளை என்பது நிச்சயம் மாறுபடத்தான் செய்யும். உதாரணமாக நம் நாட்டில் கட்டடம் கட்ட சிமெண்ட் தேவை. சில நாடுகளில் மரம் தேவை. சில நாடுகளில் செங்கள்ளாலும், சில நாடுகளில் கன் கிரீட் சிலாப்களாலும் கட்டுகிறார்கள். மர வீடுகள் கட்டப் படும் நாடுகளில் சிமெண்டுக்குத் தேவை இல்லை. அங்கு அதை உற்பத்தி செய்ய மாட்டார்கள். நம்முடைய உணவுப் பழக்கங்களும் கூட மாறி வருகின்றன. அரிசி சாதம் சாப்பிடாத வட இந்தியாவில் கோதுமைக்கு டிமாண்ட் அதனால் கோதுமை தான் சப்ளை உண்டு. அங்கு அரிசி போக வேண்டும் என்றால், அரிசியின் பயணத்துக்கான செலவும் உற்பத்திச் செலவு போல அதன் விலையைப் பாதிக்கும். போக்குவரத்தில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்கள் கரிக்கும், பிறகு மின்சார உற்பத்திக்கும் டிமாண்ட் ஏற்படுத்தி அதனால், கரிச் சுரங்கங்கள், மின்சக்தி உற்பத்தியின் தொழில் நுணுக்கங்கள் என்று மாறுதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் ந்ம கண்கள் முன்பு நடந்த மாறுதல்களைப் பார்த்தாலே அதன் உண்மை தெரியும்.

2. ஸ்டாலின் , மாவின் படுகொலைகள் பற்றி ஸ்டாலினுக்கு பின்பு வந்த கம்யூனிஸ்ட் தலைவர்களே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஸ்டாலினின் "தவறுகளை" (வேறென்ன படுகொலைகளும், ஆட்கள் மறைவதும் தான்) சுட்டிக் காட்டியதால், குருஷ்சேவ் திரிபுவாதி என்று தீ கம்யூனிஸ்டுகளால் பட்டம் சூட்டப் பட்டது உங்களுக்க்த் தெரியாவிடில் வரலாற்றை படித்து அறிந்து கொள்ளுங்கள். சீனாவும், சோவியத்தும் மூடிய சமூகங்களாய் இருந்ததால் அதன் செய்திகள் கசிவுகளாய்த் தான் வெளி வந்தன. ஆனால் அந்தக் காலத்திலேயே, சகாரோவ், அன்ன அக்மதோவா(கவிஞர் , பெண்), நடாஷா (பாஸ்டர்நாக் என்ற நாவலாசிரியரின் மனைவி) என்று பலரும் ஸ்டாலின் பற்றி ஆவணப் படுத்தியுள்ளார்கள். மாவோவின் பிற்பாடு சீனாவிலிருந்து வெளியேறியவர்களின் ஆவணங்களும் உள்ளன. வெறும் பிரசாரப் புத்தகங்களையே மட்டும் படிக்காமல், கண்ணையும், காதுகளையும் மனத்தையும் திறந்து வைத்துக் கொண்டு சுய சிந்தனையை மேற்கொள்ளுங்கள். வேத புத்தகங்கள் மட்டுமே உண்மை அல்ல.
3. இன்று சோஷலிச நாடுகள் என்று அழைக்கப் படும் சமூகங்களும் கூட தேவை, சப்ளை அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன. மூலதன நாடுகளுக்கு முறைந்த செலவில் உழைப்பை வழங்கித்தான் சீனா வளர்ந்து வருகிறது. "காகிதப் புலி" அமெரிக்காவுடன் உறவு நிக்சனால் தொடங்கி வைக்கப் பட்டபோது, நிக்சனின் நோக்கம் சோவியத் யூனியனைத் தனிமைப் படுத்துவதாய் இருந்தது. சீனாவிற்கு "சகோதர" சோஷலிச நாட்டிற்கு எதிராய் காகிதப் புலியுடன் கூட்டுச் சேர்ந்து, சீனவை பொருளாதார ரீதியாய் உயர்த்த முயல்வதில் எந்த நெருடலும் இல்லை. முழுக்க மூலதன நாடாகியும், கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை, சீனாவின் ஆளும் "வர்க்கம்" தாங்குவதில் உள்ள சுயநலம் இது தான்: கம்யூனிஸ்டுக் கட்சியின் பெயரை வைத்துக் கொண் டு மற்ற எந்த மாறுபட்ட கருத்தும் எழாமல் செய்துவிட முடியும். பாலுன் காங் அடக்கு முறை, தியனமன் சதுக்கம் என்று அடக்குமுறைக்கு உதாரணங்கள் உள்ளன. காஸ்ட்ரோ தன் ஆட்சியை 40 வருடமாய் விடாப்பிடியாய் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்த சமூகமும் தேவை சப்ளையை அடிப்படையாய்க் கொண்டு தான் இயங்குகிறது. அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கியூபாவின் சுருட்டும், கரும்பும் ஐரோப்பாவிற்கு ஏறுமதி செய்து தான் கியூபா இயங்கி வருகிறது. ஸோஷலிச சொர்க்கத்தை விட்டு , உயிரைப் பணயம் வைத்து கள்ளத் தோணியில் அமெரிக்காவிற்கும்பயணப்படும் சோஷலிச விரோதிகள், துரோகிகள் கியூபாவிற்கு அனுப்பும் டாலர்களும் கூட கியூபாவின் பொர்ருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிறது.
3. ஸ்டாலின் , மாஓவின் தவறுகள் மூலதன நாடுகளின் பிரசாரம் என்று வைத்துக் கொண்டாலும், சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததும், சீனா கியூபாவை ஆக்கிரமித்தது, சோவியத் ஹங்கேரியை ஆக்கிரமித்ததும் மூலதனப் பிரசாரம் அல்லவே. யோசித்துப் பாருங்கள்.

29. Oktober 2007 05:23

தியாகு said...
//
முதலில் தேவை சப்ளையின் மாற்றங்கள் பற்றி. தேவை, சப்ளை என்பது அடிப்ப்டையான சமூக பொருளாதாரச் சித்தாந்தம் //

அப்படியா உற்பத்தி என்னாச்சுங்க :)

அனானி முதலில் கம்யூனிசத்தையும் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் குழப்பி கொள்ளவேண்டாம் உலகில் இன்னும் எங்குமே கம்யூனிசம் வரவில்லை என்பதை அறிந்து பின் இதெல்லாம் கம்யூனிசம் என நீங்க தப்பா புரிஞ்சி பேசுகிறதென்றால் எல்லாமே அடிபட்டு போகும் :))//.உடலின் அடிப்படையான பசியைப் போல. எந்தப் பொருளின் தேவை, எந்த பொருளின் சப்ளை என்பது நிச்சயம் மாறுபடத்தான் செய்யும். உதாரணமாக நம் நாட்டில் கட்டடம் கட்ட சிமெண்ட் தேவை. சில நாடுகளில் மரம் தேவை. சில நாடுகளில் செங்கள்ளாலும், சில நாடுகளில் கன் கிரீட் சிலாப்களாலும் கட்டுகிறார்கள். மர வீடுகள் கட்டப் படும் நாடுகளில் சிமெண்டுக்குத் தேவை இல்லை. அங்கு அதை உற்பத்தி செய்ய மாட்டார்கள். //

தேவை சப்ளை என்பது முக்கிய மல்லவென நான் எங்காவது சொல்லி இருக்கேனா.

ஆனால் உற்பத்திதான் அடிநாதம்

ஓ சில நாடுகளில் சில பொருட்கள் உற்பத்தி செய்வதில்லை ஆனால் உற்பத்தி என்கிற நடைமுறை வேற நாட்டில் இருந்து கிடைக்கிறது என்பதற்காக உற்பத்தி உறவோ உற்பத்தியோ தீர்மான கரமான பங்கு வகிக்கலைன்னு சொல்லமுடியுமா?

கம்யூனிச சமூகத்தில் இந்த எல்லைகள் மதிப்பிழந்து விடும் என்பதை உணருங்கள்

கோதுமை அதிகமாக விளையும் நாடு தனது தேவைக்கு போக மீதமானதை கடலில் கொட்டாமல் தேவையான நாட்டுக்கு அனுப்பும் .

முதலாளித்துவ நாட்டில் இதெல்லாம் பிசினஸ் ட்ரான்சாக்சன் மற்றும் அந்த நாட்டுடன் இருக்கும் உறவுகளை வைத்து தீர்மானிக்கப்படுகிறது

//நம்முடைய உணவுப் பழக்கங்களும் கூட மாறி வருகின்றன. அரிசி சாதம் சாப்பிடாத வட இந்தியாவில் கோதுமைக்கு டிமாண்ட் அதனால் கோதுமை தான் சப்ளை உண்டு. அங்கு அரிசி போக வேண்டும் என்றால், அரிசியின் பயணத்துக்கான செலவும் உற்பத்திச் செலவு போல அதன் விலையைப் பாதிக்கும்.//

முழுக்க புரிஞ்சது சந்தையின் விலையை நிர்ணயிக்கும் கூறுகள் மட்டுமே முக்கியம் அதன் உற்பத்திக்கும் இதுக்கும் சம்ப்ந்தம் இல்லை என்கிறீர்கள்
இதன் மூலமெல்லாம் உற்பத்தி செயல்பாடு எந்த விதத்தில் பாதிப்படையும் அல்லது தேவையற்று போகும் என்பதை கூறமுடியாதே

// போக்குவரத்தில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்கள் கரிக்கும், பிறகு மின்சார உற்பத்திக்கும் டிமாண்ட் ஏற்படுத்தி அதனால், கரிச் சுரங்கங்கள், மின்சக்தி உற்பத்தியின் தொழில் நுணுக்கங்கள் என்று மாறுதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் ந்ம கண்கள் முன்பு நடந்த மாறுதல்களைப் பார்த்தாலே அதன் உண்மை தெரியும்.//

//2. ஸ்டாலின் , மாவின் படுகொலைகள் பற்றி ஸ்டாலினுக்கு பின்பு வந்த கம்யூனிஸ்ட் தலைவர்களே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஸ்டாலினின் "தவறுகளை" (வேறென்ன படுகொலைகளும், ஆட்கள் மறைவதும் தான்) சுட்டிக் காட்டியதால், குருஷ்சேவ் திரிபுவாதி என்று தீ கம்யூனிஸ்டுகளால் பட்டம் சூட்டப் பட்டது //

குருசேவ் அதனால இல்லை தனது திரிபு வாதத்தை மறைக்க தான் ஸ்டாலினின் தவறு செய்தார் என சொன்னார்

அவரது பெரிஸ்ட்ரெக்கா போன்ற திட்டங்கள் ஜனநாயகபடுத்தல் எனும் பேரில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சி கடைசியில் அது கோர்பசேவ் காலத்தில் திரிபு வாதம் வெற்றி பெற்றது

//உங்களுக்க்த் தெரியாவிடில் வரலாற்றை படித்து அறிந்து கொள்ளுங்கள். சீனாவும், சோவியத்தும் மூடிய சமூகங்களாய் இருந்ததால் அதன் செய்திகள் கசிவுகளாய்த் தான் வெளி வந்தன. ஆனால் அந்தக் காலத்திலேயே, சகாரோவ், அன்ன அக்மதோவா(கவிஞர் , பெண்), நடாஷா (பாஸ்டர்நாக் என்ற நாவலாசிரியரின் மனைவி) என்று பலரும் ஸ்டாலின் பற்றி ஆவணப் படுத்தியுள்ளார்கள். மாவோவின் பிற்பாடு சீனாவிலிருந்து வெளியேறியவர்களின் ஆவணங்களும் உள்ளன. வெறும் பிரசாரப் புத்தகங்களையே மட்டும் படிக்காமல், கண்ணையும், காதுகளையும் மனத்தையும் திறந்து வைத்துக் கொண்டு சுய சிந்தனையை மேற்கொள்ளுங்கள். வேத புத்தகங்கள் மட்டுமே உண்மை அல்ல.//

நீங்களும் எதிர் பிரசாரத்தை மட்டும் படிக்காமல் உற்பத்தி தேவை இல்லை அது முக்கியமில்லை எனும் காமெடி புத்தகங்களை படிப்பதை நிறுத்துங்கள்.

பெட்ரண்டு ரஸ்ஸலை விட மிக தீவிரமா கம்யூனிச எதிர் பிரசாரம் செய்த நபரை சொல்ல முடியாது சமீபத்தில் நடந்த ஆய்வி இங்கிலாந்து உளவாளிகளிடம் இவர் பணம் வாங்கித்தான் இந்த பிரசாரம் செய்தார் எனும் உண்மை அம்பலமாகி உள்ளாது

இதெல்லாம் படிங்க

//3. இன்று சோஷலிச நாடுகள் என்று அழைக்கப் படும் சமூகங்களும் கூட தேவை, சப்ளை அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன. மூலதன நாடுகளுக்கு முறைந்த செலவில் உழைப்பை வழங்கித்தான் சீனா வளர்ந்து வருகிறது. "காகிதப் புலி" அமெரிக்காவுடன் உறவு நிக்சனால் தொடங்கி வைக்கப் பட்டபோது, நிக்சனின் நோக்கம் சோவியத் யூனியனைத் தனிமைப் படுத்துவதாய் இருந்தது. சீனாவிற்கு "சகோதர" சோஷலிச நாட்டிற்கு எதிராய் காகிதப் புலியுடன் கூட்டுச் சேர்ந்து, சீனவை பொருளாதார ரீதியாய் உயர்த்த முயல்வதில் எந்த நெருடலும் இல்லை. முழுக்க மூலதன நாடாகியும், கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை, சீனாவின் ஆளும் "வர்க்கம்" தாங்குவதில் உள்ள சுயநலம் இது தான்: கம்யூனிஸ்டுக் கட்சியின் பெயரை வைத்துக் கொண் டு மற்ற எந்த மாறுபட்ட கருத்தும் எழாமல் செய்துவிட முடியும். பாலுன் காங் அடக்கு முறை, தியனமன் சதுக்கம் என்று அடக்குமுறைக்கு உதாரணங்கள் உள்ளன.//

சீனா அதிகார வர்க்க சோசலிசமாக மாறிவிட்டதுன்னு ஏற்கனவே சொல்லி இருக்கோம் டெங் கும்பல் வந்ததும் இது நடந்தது அது அமெரிக்காவுடன் கூட்டி சேர்ந்து மூலதன வளர்ச்சீக்கு பாடுபடுவதெல்லம் இதனால்தான்

//காஸ்ட்ரோ தன் ஆட்சியை 40 வருடமாய் விடாப்பிடியாய் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்த சமூகமும் தேவை சப்ளையை அடிப்படையாய்க் கொண்டு தான் இயங்குகிறது. அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கியூபாவின் சுருட்டும், கரும்பும் ஐரோப்பாவிற்கு ஏறுமதி செய்து தான் கியூபா இயங்கி வருகிறது. ஸோஷலிச சொர்க்கத்தை விட்டு , உயிரைப் பணயம் வைத்து கள்ளத் தோணியில் அமெரிக்காவிற்கும்பயணப்படும் சோஷலிச விரோதிகள், துரோகிகள் கியூபாவிற்கு அனுப்பும் டாலர்களும் கூட கியூபாவின் பொர்ருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிறது.//

ந்ல்ல ஜோக் உங்களை பொருளாதார மேதை எனலாம் எப்படின்னா முழு பூசனிக்காயை மறைக்கப் பார்கிறீர்களே

//3. ஸ்டாலின் , மாஓவின் தவறுகள் மூலதன நாடுகளின் பிரசாரம் என்று வைத்துக் கொண்டாலும், சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததும், சீனா கியூபாவை ஆக்கிரமித்தது, சோவியத் ஹங்கேரியை ஆக்கிரமித்ததும் மூலதனப் பிரசாரம் அல்லவே. யோசித்துப் பாருங்கள்.//

ஸ்டாலின் தவறு செய்தார் என அவருக்கு பின் வந்ததிருத்தல் வாதிகள் சொல்வதிலும்
கம்யூனிசத்தை அழிக்க கம்யூனிஸ்டு கொடியை ஆட்டியதிலும் வியப்பில்லையே .

ஏற்றுமதி என்பதே கப்பல் கண்டு பிடிக்கு முன்பு வரவில்லை அப்படி எனில் அதற்கு முன்புள்ள சமூகங்கள் மாற்றம் அடையாமல் இருந்ததா

இந்தியாவின் அரிசி தேவையை ஆப்பரிக்கா செய்யவில்லை அந்த நாடு எப்படி உயிர்வாழ்ந்து இருக்கும் வெறும் தேவை சப்ளையை வைத்து முந்திய் டசமூகங்கள் எப்படி மாறின என ஒரு விளக்கம் கொடுங்கள் பாவம் கம்யூனிஸ்டுகள் பிழைச்சு போகட்டும்

29. Oktober 2007 06:26

Anonym said...
1. டெங் கும்பல் வருவதற்கு முன்பே, அமெரிக்காவுடன் சீனா நல்லுறவு ஏற்படுத்தத் தொடங்கி விட்டது. வரலாற்றைப் படியும்ங்கள். நிக்சன் சீன விஜயத்தின் போது இருந்தவர்கள் மாஓ கும்பலும் சௌ என் லாய் மற்றும் அவர் கும்பல். அவர்களும் அமெரிக்க அடைவருடி என்பதைப் புரிந்து கொண்டேன் உங்கள் பதிவைப் பார்த்து.
2. கியூபா பற்றி நான் சொன்னதில் "முழு பூசணிக்காயை" மறைக்கப் பார்க்கிறேன் என்கிறீர்கள். எப்படி என்று தெரிவியுங்கள்.
3.பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவது என்று எழுதியிருக்கிறீர்கள். அது சர்வாதிகாரம் என்பதில் ஐயம் இல்லை. அது எப்படி தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகிற்று என்று விளக்குங்கள். எப்படி தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், மற்ற சர்வாதிகாரத்தையும் வேறுபடுத்திக் காண்பது. லெனின், ஸ்டாலின் தொழிலாளர் வர்க்கமா? மொத்த வர்க்கமும் இந்த இரண்டு பேரும் பொலிட்பீரோ ஆட்கள் மட்டும் தானா? மற்ற தொழிலாளிகள் இருந்தார்களா? இருந்தால் அவர்கள் எப்படி சர்வாதிகாரி ஆனார்கள்?
4. உற்பத்தியா உற்பத்தி உறவுகளா? என்று தெளிவு பெறுங்கள். உற்பத்தி என்பது இருக்கும் அதன் பின்னணியில் வெறும் உற்பத்தி செய்பவன், உடைமையாளன் மட்டுமில்லை என்பது தான் அடிப்ப்டை பொருளாதாரம். ஆனால், உற்பத்தி உறவுகளை மையப்படுத்டும்போது, மற்ற காரணிகளை மறைத்து விட முயல்வது சோஷலிச பொருளாதாரக் கோட்பாட்டின் தவறு என்று சொல்கிறேன்.
5.கம்யூனிச சமூகத்தில் எப்படி எல்லைகள் மதிப்பிழந்து விடும்? ஓர் இடத்தில் உற்பத்தி செய்யப் படும் பொருட்கள் மந்திரம் போல பறந்து போய் தேவைகள் உள்ளவர்களை அடைந்து விடுமா? அதைக் கொண்டு செல்ல ஆட்கள் வேண்டாமா? அதைக் கொண்டு செல்லும் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டாமா? அந்த வாகனங்களுக்கு கச்சாப் பொருட்கள், ஸ்பேர் பார்ட்ஸ் தேவைப் படாதா?

29. Oktober 2007 07:45

தியாகு said...
அனானி ,

உற்பத்தி சக்தி என்பதைத்தான் சொல்கிறேன்

அதாவது உற்பத்தியில்

உற்பத்தி கருவி
உற்பத்தி செய்யும் மனிதனின் வேலைதிறன் செயல் ஊக்கம்

எல்லாம் சேர்ந்து உற்பத்தி சக்தி

அவன் சமூகத்தில் கொள்ளும்

உறவு உற்பத்தி உறவு ஆக அனைத்தும்
சேர்ந்ததுதான் உற்பத்தி நடைமுறை என சொன்னேன்

மேலும் நான் கேட்டு இருக்கும் கேள்விகளை தவிர்க்காமல் அதற்கு விடை சொல்லுங்கள் பிறகு பேசுவோம்

29. Oktober 2007 21:41

Anonym said...

//அனானி ,உற்பத்தி சக்தி என்பதைத்தான் சொல்கிறேன். அதாவது உற்பத்தியில் உற்பத்தி கருவி உற்பத்தி செய்யும் மனிதனின் வேலைதிறன் செயல் ஊக்கம் எல்லாம் சேர்ந்து உற்பத்தி சக்தி அவன் சமூகத்தில் கொள்ளும் உறவு உற்பத்தி உறவு ஆக அனைத்தும் சேர்ந்ததுதான் உற்பத்தி நடைமுறை என சொன்னேன். மேலும் நான் கேட்டு இருக்கும் கேள்விகளை தவிர்க்காமல் அதற்கு விடை சொல்லுங்கள் பிறகு பேசுவோம்//

தியாகு அவர்களுக்கு,
உங்கள் கேள்விகள் ஒன்றே ஒன்று தவிர வேறு எந்தக் கேள்வியையும் நான் தவிர்க்க வில்லை. ரஸ்ஸல் பற்றிய உங்கள் குற்றச்சாட்டு பற்றிய செய்தி எனக்குக் கிட்டவில்லை. எங்கு வந்தது என்று தெரிவிக்கவும்.ஆனால் நீங்கள் உண்மை சொல்கிறீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் இது உண்மையாய் இருந்தாலும் அவர் மீது எனக்கு மதிப்புக் குறைந்திடாது. காரணம் : அவர் சோவியத்தை விமர்சனம் செய்தது நடைமுறைகளுக்காகவும், மார்க்ஸியத்தின் தத்துவ ஓட்டைகளுக்காகவும் தான். சோவியத் தமக்குச் சார்பாக உள்ள அறிவுஜீவிகளுக்கு உதவுவதும், மேற்கு நாடுகள் தமக்குச் சார்பான அறிவுஜீவிகளுகு உதவுவதும் வழக்கமாக நடைபெற்று வருவது தான். தமக்கு ஒரு லாபியை உருவாக்க அவர்கள் முயலுகிறார்கள். சோவியத் யூனியன் என் சி பி எச்-க்கு ஆதரவு தந்ததும், அமெரிக்கா இம்ப்ரிண்ட் போன்ற ஏடுகளுக்கும், மினு மசானி போன்றோருக்க்கும் உதவியதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

அதில்லாமல், இடது சாரிகள் அமெரிக்கா மீது தாக்கி விமர்சனம் செய்ய , வியத்நாம் போரைப் பயன்படுத்திக்கொண்ட போது - சோவியத் தவ்றுகளுக்கு மௌனம் சாதித்தபோது - அவர் உலக அளவில் சார்த்ரே போன்ற பல அறிவுஜீவிகளைத் திரட்டி அமெரிக்கா மீது குற்றம் சாட்டியவர். அவர் நாத்திகக் கருத்துகளுக்காக, அமெரிக்க பல்கலைக் கழகதில் அவருடைய் பணிநீக்கம் செய்யப்பட்டது பற்றி நீங்கள் அறிவீர்களா என்று எனக்குத் தெரியாது.

2. உற்பத்தி உறவுகள் என்ற சொற்றொடரைக் கைவிட்டு உற்பத்தி நடைமுறைகளுக்கு நீங்கள் மாறியிருப்பது பற்றி மகிழ்ச்சி. உற்பத்தி உறவுகள் தான் சமூக நிர்ணயிப்பு என்ற உங்கள் கருத்து மாறியிருக்கிறதா என்று தெரியவில்லை.

உற்பத்தியா தேவையா எது முதல் என்பது கோழியா, முட்டையா எது முதலில் என்பது போன்ற கேள்வி அல்ல. மார்க்சியம் உற்பத்தியை முதன்மைப் படுத்துவதும், உற்பத்தி - உடைமை சமூக நிர்ணயிப்பு என்பது குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டுவதற்குச் சமம். உதாரணமாக ஒன்று சொல்கிறேன். தமிழ் நாட்டில் வெட் கிரைண்டர் மிகவும் உற்பத்தி கொண்டுள்ள சாதனம். நம் உணவுப் பழக்கம் இட்லி, தோசை என்றிருப்பதால் , தேவையை முன்னிட்டு இது உற்பத்தி செய்ய்ப்படுகிறது. இதையே அமெரிக்கவில் விற்க முடியுமா? முடியாது ஏனென்றால் அங்கு அதற்கான தேவை இல்லை.

டெலிபோன் என்ற கண்டுபிடிப்பை எடுத்துக் கொள்வோம். அது ஒரு கண்டுபிடிப்பாக தொடங்கி தேவையை உருவாக்கியது. இதன் கண்டுபிடிப்புக்கு "மக்களோ" , "பாட்டாளி வர்க்கமோ" காரணம் அல்ல. கிரஹாம் பெல் என்ற தனி மனிதரின் படைப்பாற்றல் தான் காரணம். ஆனால் எல்லா கண்டுபிடிப்புகளுமே தேவையை உருவாக்கி விடுவதில்லை. பெர்சனல் கம்யூட்டர் கண்டுபிடிப்பின் முன் அதற்கான தேவையைக் கூட யாரும் உணரவில்லை. பில் கேட்சும், அவருடன் இருந்த சிறு குழுவின் படைப்பாற்றலும், ஆய்வு மனநிலையுமே காரணம். தஞ்சைப் பெரியகோவிலின் ஆக்கத்தில் கொத்தனார்கள் பங்கு பெற்றிருக்கலாம், ஆனால் அதன் வடிவமைப்பும், திட்டமிடலும் ஒரு சிறு குழுவின் சாதனை தான்.

தேவை, உற்பத்தி என்று ஒரு சரடு இருப்பது போல், கண்டுபிடிப்பு, தேவையை உற்பத்தி செய்தல், தேவையைப் பூர்த்தி செய்தல் என்று ஒரு சரடு இருக்கிறது. யோசித்துப் பாருங்கள்.

புத்தகத்தைப் படிப்பது மட்டும் போதாது, சுயசிந்தனையுடன் அந்தப் புத்தகத்தின் கருத்துகளை சிந்தனைக்கு அடித்தளமாய்க் கொண்டு முன்னெடுத்துச் செல்லுங்கள்

நன்றி.

30. Oktober 2007 07:21

26 Comments:

மணிமொழி said...

அனானியின் எழுத்துக்களை புரிந்துகொள்ளாமல் தியாகு பதிலளிக்க முயல்கிறார்.

said...

மேலே விவாதத்தை முந்தைய விவாதத்தின் பின்னூட்டங்களிலிருந்து அப்டேட் செய்துள்ளேன்.

said...

அடடே அனானி புதிய கண்டுபிடிப்புகளோடுதான் அனானி களமிறங்கியிருக்கிறார், புராதான சமூகம் ஒரு பொதுவுடமை சமூகமல்ல? முதலாளித்துவ உற்பத்தியே தேவைக்கான உற்பத்திதான் சந்தை உற்பத்தி என்று பொருளாதாரவாதிகள் பேசுவதெல்லாம் சும்மா சரடு, மேலும் அது கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கிறது. உற்பத்தி உறவுகள் மட்டுமே சமூக மாற்றத்துக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொன்னார், குருசேவ் மட்டுமே நல்ல கம்யூனிஸ்டு, அவரை விமர்சித்தவர்களெல்லாம் தீ கம்யூனிஸ்டுகள் என்று அனானியின் கண்டுபிடிப்புகள் அதன் எல்லையை விரித்துக் கொண்டே போகிறது, ஆனாலும் அந்தோ பரிதாபம் அது எல்லாமே எதார்த்தத்தை மீறியதாக இருக்கிறது. அய்யா அனானி புராதான பொதுவுடைமை சமூகத்தை மறுக்கின்ற நீங்கள் அப்போது எப்படிப்பட்ட சமூக அமைப்பு இருந்ததென்று எடுத்துச் சொல்ல முடியுமா, அப்படியானால் அப்போது பொதுவுடைமை சமூகம் இல்லையென்றால் மனிதன் பரிணமிக்கும் போதே இருப்பவனாகவும் இல்லாதவனாகவும் பரிணமித்தானா? கேட்க மறந்துவிட்டேனே பரிணாமவாதத்தையாவது ஏற்றுக்கொள்கிறீர்களா? இது ஒருபுறம் இருக்கட்டும் முதலாளித்துவ உற்பத்தி திட்டமிட்ட உற்பத்தி அதாவது தேவைக்கான உற்பத்தி என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள், இன்றும் கூட சந்தையில் தேங்கி கிடக்கும் பொருள்களும் அதனால் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும், அதனால் தொழிலாளியின் வாழ்வில் அடிக்கும் புயல்களூம் உங்களுக்கு தெரியவில்லையா? இதற்கு எத்தனையோ உதாரணங்களை கூற முடியும் இந்த சந்தை உற்பத்தி, அதாவது அராஜக உற்பத்திதானே முதலாளித்துவத்தினுடைய அடிப்படையான, எளிமையான முரண்பாடுகளின் கூறாக இருக்கிறது. மேலும் இந்த சந்தை உற்பத்தி அதாவது அபரிமிதமான உபரி உற்பத்தி மேலும் மேலும் மூலதனத்தைதான் பெருக்குகிறதேயொழிய அதனை உற்பத்தி செய்யும் தொழிலாளிக்கு வாழ்வதற்கான ஆதாரத்தை தவிர எதனையும் கொடுப்பதில்லை, இதுதானே மூலதனத்தின் தத்துவம் இதனையும் மறுதலிக்கிறீர்களா, அதாவது முதலாளித்துவத்தின் ஆக உயர்ந்த இடமாக இருந்த இங்கிலாந்தின் பொருளாதர நிலைமைகளையும் அடிப்படைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டும் மார்க்ஸ் மேற்கொண்ட மூலதன ஆய்வுகளை மறுதலிக்கிறீர்களா? கணினி ஒரு சேவைத்துறைதானேயொழிய அது உற்பத்தி சாதனமில்லை என்பதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள், உற்பத்தியின் அக்கம்பக்கமாக அதற்கு உதவியாக இயங்கும் சேவைத்துறை என்பது எல்லாகாலத்திலும் இருந்துதான் வந்திருக்கிறது அதன் உயர்ந்த வடிவம் கணிப்பொறி, சரி கணிப்பொறியின் வளர்ச்சி கூட உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியோடினைந்தத்துதான், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, உற்பத்தியில் பெருக்கத்தையும் மூலதனச் சுரண்டலையும் அதிகமாக்குகிறது அதாவது இப்போது வளர்ந்த கணிப்பொறி துறையில் 12 மணி நேரம் வேலை செய்வது போல, இதனைத்தான் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிடும் போது "தொழில்கள் மேலும் மேலும் நவீனமயப்படும் போது தொழிலாளியின் வேலை மேலும் மேலும் அதிகமாக்கப்படுகிறது" என்று குறிப்ப்பிட்டார், இது தொழில்நுட்பத்தை தனது இலாப உற்பத்திக்கு சந்தை உற்பத்தி பயன்படுத்தி கொள்ளும் முதலாளித்துவத்தின் விதி, இந்த நிலையில் தொடரும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, சந்தையில் ஏற்படும் தேக்கமும், புதிய சந்தைகளுக்கான போட்டியும்தான், உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் ஏற்படும் பெரிய முரண்பாடாக வெடித்தெழுந்து ஒரு புதிய உற்பத்தி உறவினை ஒரு உற்பத்தி முறையினை கோருகிறது, இதனையெல்லாம் விட்டுவிட்டு உற்பத்தி உறவு மட்டும் சமூக மாற்றத்திற்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொன்னதாக நீங்கள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக பேசுவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. அது சரி எதற்காக ஆரம்பத்திலிருந்து உற்பத்தி சக்திகளையும், உற்பத்தியையும் மறைப்பதிலும் நீங்கள் முனைப்பாய் இருக்கிறீர்கள், அதற்கு அடிப்படையான தொழிலாளிகளை பற்றி பேச வேண்டும் என்பதாலா?

தலைகீழ் புரிதல்களில் சோசலிச சமூகம் வீழ்ச்சியுற்றுவிட்டதாம், குறி சொல்கிறார் அனானி, சரியான புரிதலில் முதலாளித்துவம் தழைத்தோங்கி கொண்டிருக்கிறதா? தனக்கான சவக்குழியை நன்கு ஆழமாக வெட்டிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் குறிப்பிடும் இந்த பொற்காலத்தின் இந்திய நிதியமைச்சர் உலக வங்கியிடம் கடன் கோருகிறார் "இந்தியாவிற்கு அதிகமான கடன் கொடுங்கள், நாங்கள் ஜி.டி.பி பத்து சதவீதம் உயர்ந்துவிட்டதாக சொல்கிறோம், ஆனால் உண்மைலில் அது பத்து பணக்காரர்களுக்குத்தான் பத்து சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரு வேளை உணவுக்கு துன்பப்படுகிறார்கள், அவர்களுடைய் ஜி.டி.பி 3 சதவீதம்தான்.. அதனால் எங்களுக்கு அதிகமான கடன் கொடுங்கள்" என்று உலக வங்கியிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து மன்றாடுகிறார் மானங்கெட்ட சிதம்பரம்... இதுதான் நீங்கள் விதந்தோதும் பொற்காலத்தின் இலட்சனம், இதற்கு என்ன காரணம், 10 பேருக்கு 10 சதவீத ஜி.டி.பி வளர்ச்சி, 80 சதவீதத்திற்க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லை இதற்கு என்ன காரணம் சொல்லுங்கள்!! 80 சதவீதம் மக்கள் உழைக்கவில்லை, 10 சதவீதம் பேர்தான் பாடுபட்டுழைக்கிறார்களா?

மேலும் அனானி குறிப்பிட்ட பல விசயங்களை பேசலாம், ஆனால் நேர நெருக்கடியின் காரணமாக சிலவற்றை பற்றி இங்கு பேசியிருக்கிறேன், வாய்ப்பிருக்குமானால், விவாதத்தில் நேர்மை இருக்குமானால், விவாதம் தொடருமானால், விவாதத்தின் போக்கில் மேலும் விரிவாக பேசலாம்.

ஸ்டாலின்

Anonym said...

தொடர்ந்து விவாதத்தில் நேர்மை நேர்மை இல்லை, தேவை என்று கம்யூனிசம் என்ற மதத்தை ஒற்றைக் கண்ணோடு பார்த்துக் கொண்டிருக்கும் உங்களிடம் இருந்து கேட்பது வேடிக்கையாக இருக்கிறது.
தங்களுடைய கொள்கைகளுக்காக எந்தப் படுகொலையையும் செய்யலாம் என்ற மனப்பாங்கு உள்ளவர்கள் நீங்கள். சோவியத் பொலித் பீரோவில் நேற்று வரை ஸ்டாலினுடம் விருந்து உண்டு கொண்டிருந்தவரையெல்லாம் அடுத்த நாள் காலை சைபீரியாவுக்கு அனுப்புவதையோ அல்லது firing squad முன் நிறுத்திச் சுடுவதையோ சிறிதும் வெட்க உணர்வோ அல்லது குற்ற உணர்வோ இன்றிச் செய்த ஒரு படுகொலை வெறியன் ஸ்டாலின் என்பது ரஷ்யர்களே இன்று தெளிவாக ஒத்துக் கொள்கிறார்கள்.
ரஷ்ய மொழியும் உங்களுக்குத் தெரியாது. ரஷ்யாவுக்கு நீங்கள் போனதும் கிடையாது. ரஷ்ய மக்களுடன் உறவாடி நெடுநாள் அந்தப் பண்பாட்டு வரலாறாவது தெரியுமா என்றால் அதுவும் கிடையாது. என்ன ஆதாரத்தை வைத்து நீங்கள் ஸ்டாலினை ஒரு ம்காநாயகர் என்று நம்புகிறீர்கள்? உங்கள் துண்டுப் பிரச்சாரப் புத்தகங்களை வைத்துத் தானே? வேறேது தனியாக உங்களுக்கு ஆதாரம் கிட்டியது மற்றவர்களை எல்லாம் கருத்து நேர்மை அற்றவர் என்று குற்றம் சாட்ட?
என்ன பிரமாதப் படிப்பாளி அல்லது வரலாற்று ஆய்வாளர்கள் நீங்கள் எல்லாம் மற்றவர்களை எல்லாம் கைக்கூலி என்று பழி சாட்ட? எத்தனை வருடம் சோவியத் நூலகங்களில் ஆராய்ச்சி செய்தீர்கள் நீங்களேல்லாம்? ஒரு நாள் கூட இருக்குமா?
ரஷ்யாவில் இருக்கும் ஒரு ஐம்பது நகரங்களின் பெயர்களை உங்களால் சொல்ல முடியுமா? ராபர்ட் சர்வீசால் சொல்ல முடியும்.
Ivan's War : Life and Death in the Red Army என்ற 2006 ஆம் வருடத்துப் புத்தகத்தை எழுதி ஸ்டாலினின் முட்டாள்தனமான அரசியல் கொள்கைகள், மேலும் பல மிலியன் ரஷ்யர்களின் தேவையற்ற சாவுகளுக்குக் காரணமான idiotic military tactics ஆகியவற்றை அப்பட்டமாக்கிய Catherine Merridale ஐப் போய்க் கேளுங்கள். ரஷ்யாவை வரைபடமாகவே எழுதிக் கொடுப்பார்.
ஏதோ ஸ்டாலினின் அந்தரங்கச் செயலாளராகப் பணியாற்றி பெரும் ரகசியங்களை எல்லாம் சேமித்து வைத்திருப்பவரைப் போலச் சும்மா உதார் விடுவதை நிறுத்துங்கள்.
ஃபார்முலாவை சும்மாச் சும்மா அள்ளி வீசாதீர்கள்.
சோசலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்று அற்பத்தனமாக வாதம் செய்யாதீர்கள். எதோ க்வாண்டம் ஃபிசிக்ஸ் இல்லை மார்க்சியம் அல்லது கம்யூனிசக் கொள்கைகள். அப்படி ஒரு மர்மமாக அது இருந்தால் அந்தக் கொள்கையின் அடி வேரை அதுவே அறுத்து விடும். உலகப் பாட்டாளிகள் அனைவருக்கும் போய்ச் சேர வேண்டுமென்றால் இதன் மையம் ஏதும் பெரும் கார்டியன் முடிச்சாக இருக்க வழியில்லை. அப்படி இருந்தால் இது ஒரு சிறு குழு பாதிரிமார்கள் கையில் மற்றவர்களுக்கு எதிரான ஒரு மந்திரக் குளிகையாக மாறும் விபத்தும் அபாயமும் இருக்கிறது.
நேர்மையை நீங்கள் கடைப் பிடித்து விட்டுப் பிறகு பிறரிடம் அதைக் கேளுங்கள்.
ஸ்டாலின் மாவோ மேலும் பால்பாட் போன்ற மனித ரத்தம் உறிஞ்சிகளை விலக்கும் சாதாரண மனிதத் தன்மை உங்களிடம் இருக்கிறதா என்று வெளிக்காட்டுங்கள். பிறகு மற்றவர்களைப் பார்த்து ஏளனமாக எழுதுவதைச் செய்யலாம்.

Anonym said...

ஸ்டாலின் என்று பெயர் சொல்லும் நபருக்கு:
இது உங்கள் பதிலில் இருந்த மேற்கோள்.
"கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிடும் போது "தொழில்கள் மேலும் மேலும் நவீனமயப்படும் போது தொழிலாளியின் வேலை மேலும் மேலும் அதிகமாக்கப்படுகிறது" என்று குறிப்ப்பிட்டார்."
மொத்த ஐரோப்பாவிலும் உள்ள தொழிலாளிகளின் வாழ்வில் அவர்கள் வாரத்துக்கு எத்தனை மணி நேரம் உழைக்கிறார்கள் என்று போய்க் கேளுங்கள் அல்லது குறைந்தது தற்கால 21ஆம் நூற்றாண்டுப் பொருளாதாரத்தையாவது படியுங்கள்.
ஒருங்கிணைக்கப் படாத முதலாளியத்தின் மீது அரசு கண்டிப்பு செலுத்த இயலாத ஓட்டை நாடுகளில்தான் நீங்கள் சொல்லும் அளவிறந்த உழைப்பு இன்னமும் இருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப் பட்ட இருண்ட பகுதிகள் இருக்கும். இருக்கலாம். ஏனெனில் அமெரிக்கா சோவியத் அரசைப் போல இன்னமும் முழுக் கண்காணிப்பு அரசாக மாறவில்லை. ஐரோப்பாவும் அப்படி மாறவில்லை. மாறாக 18 மணி நேர வேலையை சகஜமாகத் தொழிலாளர் மேல் திணிக்கும் அற்புத நடவடிக்கை உங்களுக்கெல்லாம் ஒரு காலத்தில் சொர்க்கமாகத் தெரிந்த மாவோயிசக் கூட்டுப் பண்ணை சமூக்ங்களில் அன்றாட வற்புறுத்தலாக இருந்தும் உற்பத்தி கூடவில்லை. அடிமை உற்பத்தி என்றுமே நல்ல தரமாகவும் இராது, உருப்படியாகவும் அமையாது.

உலகில் எங்குமே கம்யூனிச சமுதாயம் இல்லை என்பது ரொமப வசதியான தப்புதல் வாதமாக இல்லை? அதற்கான பிரும்மாண்டமான முயற்சிகள் என்று செகப்புக் கொடி பிடித்து உலகெங்கும் ரத்த ஆறை ஓட விட ஆசையாக அலைந்தார்களே உங்களுக்கு முந்தைய தலைமுறை நம்பிக்கையாளர்கள், அவர்களின் முயற்சிகள் என்ன மாதிரி முடிந்தன, ஒப்பீட்டில் கொடுங்கோலரான முதலாளிகள் நடத்தும் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் என்ன மாதிரி இருக்கிறார் என்று நீங்களே சொல்கிற 'நேர்மை' யோடு மஞ்சள் கண்ணாடியை எல்லாம் விலக்கி விட்டுப் பாருங்கள். உலகின் முதல் பத்து நாடுகள்- எல்லா அளவைகளையும் வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்- அவை எல்லாமே முதலாளிய நாடுகளாகத்தான் இருக்கும்.
முதலில் உலகப் பொருளாதார அளவைகள் வழியே தரம் பிரிந்த நாடுகளைப் பாருங்கள். பிறகு
உளுத்துப் போன மார்க்சிய சூத்திரங்களை எடுத்து அவையில் வைக்கலாம்.
அடுத்து, கணிணி ஒரு சேவைக்கான எந்திரம் என்று மடத்தனமாக வாதம் செய்யாதீர்கள். இந்த உருப்படாத வாதத்தை வைத்துக் கொண்டுதான் இந்தியப் 'பொதுவுடைமை'க் கட்சிகள் இரண்டு மூன்று தலைமுறை இந்தியரின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டார்கள். இன்னமுமா இந்த குருட்டுத் தனம்?
ஜி.எம் தொழிற்சாலையில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான கார்களுக்கு எஞ்ஜின்களை இறக்கிப் பொருத்துவது, வெல்டிங் செய்வது, பெயிண்ட் அடிப்பது போன்ற பல முக்கியமான வேலைகளைச் செய்வன ரோபட்டுகள். அவற்றை இயக்குவன கணிணிகள்.
பெருவாரியான ரசாயனப் பொருட்கள் உற்பத்தி சாலைகளில் இன்று 'processing' செய்வனவே automated machines. இந்த automated என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதை நான் விளக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.
இந்தியாவும் சீனாவும் உலகத்தின் அடி நிலைத் தொழில்களைச் செய்கின்றன என்பதால் உலகில் எங்குமே அப்படித்தான் உற்பத்தி இருக்கிறது என்று கருத வேண்டாம். தரத்தில் கீழ் மட்டத்து வேலைகளை ஆட்கள் அதிகம் உள்ள பொருளாதாரத்தில் செய்வது சிக்கனம் என்று அங்கு அனுப்பி விட்டு உயரிய தரப் பொருளுற்பத்தியை auto- productivity மூலம் தங்கள் நாடுகளில் செய்கிறார்கள். இன்று ஒரு பல அடுக்குக் கட்டிடத்தை ஒரு சில வாரங்களில் கட்டி முடிக்கிறார்கள்- சீனாவில் கூட. இது என்ன வெறும் உடலுழைப்பாலா நடந்தது?
கட்டிடத்தின் வரைபடத்தைக் கொடுத்தால் போதும். அனைத்துச் சுவர்களுக்கும் ஜன்னல்களுக்கும், மேலும் இதர ஃபிட்டிங்குகளுக்கும் தேவையான பாகப் பிரிப்பைச் சாதித்து பெரும்பாலான பாகங்களை automated production மூலமாகச் செய்து களத்துக்கு அனுப்புகிறார்கள். அவை அங்கே சும்மா எளிதில் இணைக்கப் பட்டு விடுகின்றன.
காடர்பில்லரின் ராட்சத எந்திரங்களில் இருப்பது உறைந்த மனித உழைப்பு என்று ஏதோ வறட்டு சூத்திரத்தை எடுத்து முன் வைக்க முயல வேண்டாம்.

ரோபட்டுகளைச் செய்தவர்கள் யார் என்று மூலத்துக்குப் போனால், உங்களைச் செய்தது உங்கள் அம்மா, அப்பா, அதனால் நீங்கள் படித்தது இன்று வாதம் செய்வது எல்லாம் உங்கள் அம்மா அப்பா அல்லது அவர்களுடைய அம்மா அப்பாதான் என்று வாதம் செய்ய முடியுமா என்று யோசியுங்கள்.
அந்த ரோபட்டுக்ளுக்கு ஆணைகள் எழுதியது எல்லாம் உங்கள் அபிமானப் பாட்டாளிகள் இல்லை. புஷ்ஷின் பாதந்தாங்கிகள் என்று வசவை அள்ளி வீசுகிறீர்களே அந்த வர்க்கத்தின் சாதாரண பொறியியல் பட்டதாரிகள்தான்.
உடலுழைப்பு என்பதை ஏதோ மந்திரக் கோல் போல ஆட்டினால் எல்லாரும் மயங்கிக் கீழே விழுந்து விட மாட்டார்கள். உடலுழைப்பு என்பதை ஒரு வரலாற்றுக் கட்டத்தில் அவசியமாகக் கருதி இருக்கலாம். இன்று வளர்ந்த சிக்கலான பொருளாதாரங்களில், சமுகங்களில் உடலுழைப்பு என்பது தவிர்க்க முடியாத அவலமாகக் கருதப் படுவது சகஜமாகி இருக்கிறது.
உடலுழைப்பு என்பதை உடலை வருத்தும் பயிற்சி என்று கேளிக்கை மாதிரி, leisure activity ஆக மாற்றிக் கொண்டு வருகிறது முதலாளியம்.
பரிணாமத்தில் நம்பிக்கை உள்ளவரா என்று அனானிகளை எல்லாம் கேட்கும் முன் அதில் நம்பிக்கை உள்ளவரா நீங்கள் என்று தெளிவு செய்யுங்கள். உடலுழைப்பு என்பது குறைந்து மூளை உழைப்பு அதிகரிப்பதுதான் பரிணாமம். வெறும் தசை செய்த வேலையை கருவி செய்ய வைத்ததுதான் பரிணாமம்.
இது இன்னொரு மேற்கோள்:
புராதான பொதுவுடைமை சமூகத்தை மறுக்கின்ற நீங்கள் அப்போது எப்படிப்பட்ட சமூக அமைப்பு இருந்ததென்று எடுத்துச் சொல்ல முடியுமா?
ஏன் நீங்களே யோசியுங்களேன். அப்படி ஒரு அழகான பொதுவுடைமை சமுதாயம் உலகெங்கும் இருந்ததென்றால் ஏன் அது உடைந்தது? ஏன் வளர வேண்டும் என்ற அவசியமே எழுந்தது?
ஏன் இன்று உலக நாகரிகத்தோடு அதிகம் தொடர்பில்லாது வாழும் பல ஆதி குடிகளில் பெரும் போர்களும், வன்முறையும் கொண்ட சமுகங்கள் காணப்படுகின்றன?
பண்பாட்டு மார்க்சியம் என்று ஒரு மானுடவியல் துறை இருக்கிறது. தேடி நூல்களைப் படியுங்கள். நீங்கள் கதை கட்டுகிற மாதிரி பாலும் தெளி தேனும் ஓடிய பொதுவுடைமை சமுதாயங்கள் வைக்கோல் போரில் ஊசி போல. பாதிரிமார்கள் ஏசு சொர்க்கத்துக்கு நடந்து போனார் என்று புராணக் கதை சொல்லி மக்களை மூளை மழுங்க அடித்தார்கள். அடுத்து நீங்கள் கிளம்பி இருக்கிறீர்கள் போலிருக்கிறது.
எந்தப் பொதுவுடைமை சமுதாய்த்திலும் தலைமை, தலைமைக்கான போட்டி, வீரம், சாகசம், காதல், தியாகம், பழி, குற்றம், வரம்பு மீறல், அழிச்சாட்டியம், அக்கிரமம், வெளித்தள்ளால் என்று எல்லா சாதாரண மனித நடவடிக்கைகளும் இருக்கத்தான் செய்யும், அதில் இருந்து- மோதலும் இணைப்பும் அருகருகே இருந்து பல வரலாற்றுக் கட்டங்களில் ஒவ்வொன்று மேலோங்கி க் கிழிறங்கித்தான் மனிதர் நகர்ந்து வந்திருக்கிறார்.
மனிதரிடம் குரங்கு இன்னும் செத்து விடவில்லை. விலங்கு உள்ளே இல்லாத மனிதருக்குத் தம்மைப் பிரதி செய்யும் ஊக்கம் இருக்குமா என்றே எனக்கு ஐயம் இருக்கிறது. மிருகத்தைக் குறைவாக மதிப்பிடாதீர்கள். சோவியத் ரஷ்யாவில் நிறையவே அவை பொலிட் பீரோவில் இருந்தன.

said...

அனானிக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது, பாவம் மிகவும் குழம்பி போய்விட்ட அனானி படபடப்பில் முதலாளித்துவ பிரச்சார புத்தகங்களால் மூளைக்குள் திணிக்கப்பட்ட ஸ்டாலின், மாவோ அவதூறுகள் பற்றி தொடர்ந்து உச்சாடனம் செய்ய தொடங்கியிருக்கிறார். ஆனால் நான் மேலே போட்டிருக்கும் பின்னூட்டத்தில் மார்க்சியத் தத்துவத்தை பற்றி இவர் வைத்த விமர்சனத்திற்குத்தான் பதிலளித்திருக்கிறேன், அதனை மேற்சென்று தொடர முடியாத அனானி, மார்க்சியம் தத்துவார்த ரீதியாக அடிப்படையிலேயே தவறு, புராதான பொதுவுடைமை சமூகமே இல்லை என்றெல்லாம் வாதிட்ட அனானி இப்போது அதை தொடராமல் ஸ்டாலின் அவதூறு என்ற புதரில் போய் பத்திரமாக் பதுங்கி கொள்ள பார்க்கிறார், விவாதத்தினுடைய மையமான விசயத்தை விட்டு ஒதுங்கி ஸ்டாலின் அவதூறில் பதுங்கிறார்.

நீ எவ்வளவு புத்தகம் படித்திருப்பாய், உனக்கு ரசிய மொழி தெரியுமா, ரசிய நூலகத்திற்கு சென்று ஆய்வு செய்திருக்கிறாயா, உனக்கு ஸ்டாலின் பற்றி தெரிந்ததெல்லாம் எப்படி? என்று நம் மீது கேள்விக்கணைகளை தொடுக்கிறார், இனி நாம் அவரிடம் இந்திய அரசியல் கூட பேச முடியாது போல,உனக்கு இந்தி தெரியுமா டெல்லி போயிருக்கிறயா என்று கேட்பார், இனி எப்படி வாதிப்பது என்று எனக்கு கவலையாய் இருக்கிறது. இராமன் பாலத்தை பற்றி பேச வேண்டுமென்றால் கூட இராமேஸ்வரம் போய் பார்த்துவிட்டுதான் வரவேண்டும் போலிருக்கிறது.

ஆனால் அனானி ஸ்டாலினை எனக்கு அறிமுகப்படுத்தியது எங்களுடைய பாட்டாளி வர்க்க அரசியலின் பிரச்சார புத்தகங்களாகவே இருக்கட்டும், ஆனால் உங்களுக்கு ஸ்டாலின் எப்படி அறிமுகமானார், நேராக போய் பார்த்து வந்தீர்களா? ஸ்டாலினின் சாதனைகளை பேசுவது பாட்டாளி வர்க்கத்தின் பிரச்சார புத்தகம் என்று நீங்கள் சொல்வீர்களேயானால், அவரை அவதூறு பேசுவதை நான் முதலாளித்துவ பிரச்சார புத்தகங்கள் என்று சொல்லமுடியாதா? நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை என்பது ஒருபுறமிருக்கட்டும். மேலே உள்ள என்னுடைய பின்னூட்டத்தில் ஸ்டாலினை பற்றியோ, மாவேவை பற்றியோ எதுவும் பேசவில்லையே, எதற்கு உங்கள் முன்னோர்களின் புழுகுகளையெல்லாம் கடைவிரிக்க ஓடிவருகிறீர்கள்.

அய்யா அனானி நாங்கள் பிரமாதமான படிப்பாளிகள் இல்லைதான, ஆனால் இலாபவெறி பிடித்த அருவெறுப்பான முதலாளித்துவ முகத்தை அலங்கரித்து காட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை, நாங்கள் படித்தது குறைவாய் இருக்கலாம், ஆனால் நீங்கள் உங்கள் ஊடகங்களால் ஏற்படுத்தி வைத்திருக்கும் மாயையான பிம்பங்களை தாண்டியும் எங்களை வழிநடத்தும் நாயகர்களையும், எங்கள் வாழ்வை பறிக்கும் நாய்களையும் எங்களால் பிரித்து அறிய முடியும்.

நீங்கள் என்ன பெரிதாக படித்து கிழித்து விட்டீர்கள் என்று கேட்கின்ற உங்களுடைய முதலாளித்துவ மிதப்புதான் மார்க்சியத்தை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்ல வைக்கிறது, இது தனியொரு குழூவிடம் மந்திர குளிகையாக மாறிவிடும் என்று சொல்ல வைக்கிறது. நாங்கள் மக்களின் புரிதல் மட்டத்தை உயர்த்துவோம், மார்க்சியத்தை புரிந்து விவாதிக்கவும், வளர்த்தெடுக்கவும் அறிவு கொண்டவர்களாக மக்களின் வாழ்நிலையை மாற்றுவோம் என்பதெல்லாம் இருக்கட்டும், உங்கள் முதலாளித்துவ சமூகத்தில் இன்று ஜி.டி.பி, ஷேர் மார்கெட், சென்செக்ஸ் என்று தொண்டை கிழிய கத்துகிறீர்களே, அது படித்தவர்களுக்கே எத்தனை பேருக்கு புரிகிறது என்று கூறுங்களேன், அல்லது அப்படி புரிந்து கொள்ள கூடியவர்களாக முதலாளித்துவ சமூகம் மக்களை உருவாக்குமா என்றாவது கூறுங்களேன்.

ஸ்டாலின்

said...

தமிழ்மணி அய்யா,
நீங்க எழுப்பிய எல்லா கேள்விகளுக்கும் எங்க புரட்சிகர கட்சியின் தலைவர் அசுரன் அய்யா ஏற்கெனவே செம்மையா பலமுறை பதில் சொல்லியிருக்காரு.அவர் எழுதிய 100x100 பதிவுகளை நல்லா உள்வாங்குங்க.அப்புறமும் உங்களுக்கு புரியவில்லை என்றால், கட்சி கொள்கை படி நீங்க ஒன்றுக்கும் உதவாத வர்க்கததை சேர்ந்தவர் என்று தீர்மானிக்கப்பட்டு சைபீரியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள்.தீர்மானிப்பது அசுரன்,ஜமாலன்,தியாகு,ஆசாத்,மருதையன்,ஸ்டாலின் போன்றோர் அடங்கிய குழு.ஆனா நீங்க அவங்களை தீர்மானிக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று தூற்றக்கூடாது.எங்க கட்சியில,ஆட்சியில, வர்க்க பேதமே கிடையது.மேலே சொன்ன ஆட்களைத் தவிர மற்ற எல்லாருமே உழைத்து பிச்சை எடுத்து வாழும் வர்க்கம் தான்.மேலே சொன்ன கும்பல் மட்டும் உழைக்காம மத்தவங்களுக்கு எல்லாம் பிச்சை போடும் அதிகார வர்க்கம்.அதாவது யாருக்கு என்ன பிச்சை போடுவது என்று தெரிந்த வர்க்கம்.

பாலா

said...

பாலா போன்ற அவதூறு பேர்வழிகளை அனுமதிக்கத்தான் இங்கே விவாதத்தை தொடர்ந்தீர்கள் எனில் இனிமேல் என் தளத்தில் வந்து விவாதம் செய்யுங்கள்

அங்கே மட்டுமெ பதில் அளிப்பேன்

கூப்பிட்டு காறி துப்புறது என்பது தமிழ்மணி நீங்க செய்வதுதான்

said...
Dieser Kommentar wurde vom Autor entfernt.
said...

//அனானிக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது, பாவம் மிகவும் குழம்பி போய்விட்ட அனானி படபடப்பில் முதலாளித்துவ பிரச்சார புத்தகங்களால் மூளைக்குள் திணிக்கப்பட்ட ஸ்டாலின், மாவோ அவதூறுகள் பற்றி தொடர்ந்து உச்சாடனம் செய்ய தொடங்கியிருக்கிறார். ஆனால் நான் மேலே போட்டிருக்கும் பின்னூட்டத்தில் மார்க்சியத் தத்துவத்தை பற்றி இவர் வைத்த விமர்சனத்திற்குத்தான் பதிலளித்திருக்கிறேன், அதனை மேற்சென்று தொடர முடியாத அனானி, மார்க்சியம் தத்துவார்த ரீதியாக அடிப்படையிலேயே தவறு, புராதான பொதுவுடைமை சமூகமே இல்லை என்றெல்லாம் வாதிட்ட அனானி இப்போது அதை தொடராமல் ஸ்டாலின் அவதூறு என்ற புதரில் போய் பத்திரமாக் பதுங்கி கொள்ள பார்க்கிறார், விவாதத்தினுடைய மையமான விசயத்தை விட்டு ஒதுங்கி ஸ்டாலின் அவதூறில் பதுங்கிறார்.

நீ எவ்வளவு புத்தகம் படித்திருப்பாய், உனக்கு ரசிய மொழி தெரியுமா, ரசிய நூலகத்திற்கு சென்று ஆய்வு செய்திருக்கிறாயா, உனக்கு ஸ்டாலின் பற்றி தெரிந்ததெல்லாம் எப்படி? என்று நம் மீது கேள்விக்கணைகளை தொடுக்கிறார், இனி நாம் அவரிடம் இந்திய அரசியல் கூட பேச முடியாது போல,உனக்கு இந்தி தெரியுமா டெல்லி போயிருக்கிறயா என்று கேட்பார், இனி எப்படி வாதிப்பது என்று எனக்கு கவலையாய் இருக்கிறது. இராமன் பாலத்தை பற்றி பேச வேண்டுமென்றால் கூட இராமேஸ்வரம் போய் பார்த்துவிட்டுதான் வரவேண்டும் போலிருக்கிறது.

ஆனால் அனானி ஸ்டாலினை எனக்கு அறிமுகப்படுத்தியது எங்களுடைய பாட்டாளி வர்க்க அரசியலின் பிரச்சார புத்தகங்களாகவே இருக்கட்டும், ஆனால் உங்களுக்கு ஸ்டாலின் எப்படி அறிமுகமானார், நேராக போய் பார்த்து வந்தீர்களா? ஸ்டாலினின் சாதனைகளை பேசுவது பாட்டாளி வர்க்கத்தின் பிரச்சார புத்தகம் என்று நீங்கள் சொல்வீர்களேயானால், அவரை அவதூறு பேசுவதை நான் முதலாளித்துவ பிரச்சார புத்தகங்கள் என்று சொல்லமுடியாதா? நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை என்பது ஒருபுறமிருக்கட்டும். மேலே உள்ள என்னுடைய பின்னூட்டத்தில் ஸ்டாலினை பற்றியோ, மாவேவை பற்றியோ எதுவும் பேசவில்லையே, எதற்கு உங்கள் முன்னோர்களின் புழுகுகளையெல்லாம் கடைவிரிக்க ஓடிவருகிறீர்கள்.

அய்யா அனானி நாங்கள் பிரமாதமான படிப்பாளிகள் இல்லைதான, ஆனால் இலாபவெறி பிடித்த அருவெறுப்பான முதலாளித்துவ முகத்தை அலங்கரித்து காட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை, நாங்கள் படித்தது குறைவாய் இருக்கலாம், ஆனால் நீங்கள் உங்கள் ஊடகங்களால் ஏற்படுத்தி வைத்திருக்கும் மாயையான பிம்பங்களை தாண்டியும் எங்களை வழிநடத்தும் நாயகர்களையும், எங்கள் வாழ்வை பறிக்கும் நாய்களையும் எங்களால் பிரித்து அறிய முடியும்.

நீங்கள் என்ன பெரிதாக படித்து கிழித்து விட்டீர்கள் என்று கேட்கின்ற உங்களுடைய முதலாளித்துவ மிதப்புதான் மார்க்சியத்தை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்ல வைக்கிறது, இது தனியொரு குழூவிடம் மந்திர குளிகையாக மாறிவிடும் என்று சொல்ல வைக்கிறது. நாங்கள் மக்களின் புரிதல் மட்டத்தை உயர்த்துவோம், மார்க்சியத்தை புரிந்து விவாதிக்கவும், வளர்த்தெடுக்கவும் அறிவு கொண்டவர்களாக மக்களின் வாழ்நிலையை மாற்றுவோம் என்பதெல்லாம் இருக்கட்டும், உங்கள் முதலாளித்துவ சமூகத்தில் இன்று ஜி.டி.பி, ஷேர் மார்கெட், சென்செக்ஸ் என்று தொண்டை கிழிய கத்துகிறீர்களே, அது படித்தவர்களுக்கே எத்தனை பேருக்கு புரிகிறது என்று கூறுங்களேன், அல்லது அப்படி புரிந்து கொள்ள கூடியவர்களாக முதலாளித்துவ சமூகம் மக்களை உருவாக்குமா என்றாவது கூறுங்களேன்.

ஸ்டாலின்

//

தேவை தேவை என்று அனானி குறிப்பிடுகிறார். தேவை என்பதை யார் முடிவு செய்கிறார்கள்?
மக்களின் அடிப்படைத் தேவைக்கான உற்பத்தியா இன்று நடக்கிறது. 1 லிட்டர் கோகோ கோலாவுக்காக 8 லிட்டர் தண்ணீரை நஞ்சாக்கி அது மண்ணீல் இறங்கி இன்னுமொரு 47 லிட்டர் நிலத்தடி நீரை நஞ்சாக்குகீறதே இது யாருடைய தேவைக்கானது என்று அனானி சொன்னால் புண்ணீயமாகப் போகும்.

அல்லது முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறி இன்று மேல்நிலை வல்லரசு, உலக மேலாதிக்க ஒற்றை துருவ வல்லரசாக பரிணமித்துக் கொண்டிருக்கும் கடந்த 100 வருடங்களில் இன்று வரை உலகம் முழுவதும் யாருடைய தேவைக்காக யுத்தங்களும், பகுதியளவிலான முரன்பாடுகளும் கூர் தீட்டப்பட்டு மோதவிடப்படுகின்றன என்று அனானி சொன்னால் வசதியாக இருக்கும்.

அல்லது இவர் குறிப்பிடும் சோவியத் ரஸ்யாவும் சரி சீனாவும் சரி மிக மிக மோசமான நிலையிலிருந்து வல்லரசுகளாக குறுகிய காலத்தில் எந்த நாட்டையும் சுரண்டாமல் வளர்ந்த மர்மம் குறித்து சொல்லலாம். குறிப்பாக 300 வருடம் உலகை ஆண்ட பிரிட்டன் இரண்டாம் உலக் யுத்த முடிவில் ஓட்டாண்டியாக வெளி வந்த பொழுது, ரஸ்யா 50 வருடங்களாக யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு போர், பஞ்சம், உள்நாட்டு சதி இவற்றை கடந்து இரண்டாம் உலகப் போரில் வேறு எந்த நாட்டையும் விட மிக மிக பேரிய அழிவிற்க்கு ஆளாகி போரின் முடிவில் உலக வல்லரசக வந்த அதிசயம் குறித்தும் அனானி நமக்கு பாடம் நடத்தலாம்.

ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் சுக வாழ்வு குறித்து நமக்கு புதிதாக அறிமுகப்படுத்துகிறார் அனானி. இந்த விசயத்தையெல்லாம் உள்ளடக்கியதுதான் லெனினின் ஏகாதிபத்திய வரையறை. லெனின் இதனை எழுதும் முன்பாகவே முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணாமிப்பது குறித்து முதலாளீத்துவ பொருளாதார நிபுணர்களே அந்த காலத்தில் பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ளனர்(இவற்றின் உதவியுடனேயே லெனினும் தனது ஆய்வை வளர்த்துச் செல்கிறார்).

மாறாக, ஏகா/முதலாளித்துவ நாடுகள் தமது நாட்டில் புரட்சி நடப்பதை தவிர்ப்பதற்க்கே தனது தொழிலாளிகளுக்கு குறைந்த பட்ச சுக வாழ்வை ஊர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது. இந்த தேவைக்கும் சேர்த்து இந்தியா போன்ற காலனி நாடுகள் சுரண்டப்படுகின்றன.

எப்படி? இந்தியா போன்ற நாடுகளில் குறை கூலி உழைப்பு, மூல வளங்கள் மூலம் தமது நாட்டுக்கு தேவையான பொருட்களையும், உலக சந்தைக்கு தேவையான பொருட்களையும் மலிவு விலையில் உற்பத்தி செய்து லாபம் பார்ப்பதுடன், தமது நாட்டு மக்களையும் திருப்திப் படுத்துகிறான். அதனால் ஏகா நாட்டு தொழிலாளியின் சுக வாழ்வு என்பது ஒன்று ஆச்சர்யமான விசயம் அல்ல.

இந்தியாவில் ஒரு எ-காவுக்கு அசோக் லேலாண்டின் உற்பத்தி 3 மடங்கு அதிகரித்துள்ளது சமீப ஆண்டுகளின் ஆனால் தொழிலாளர் எண்ணிக்கை பாதியளவுக்கு குறைந்து விட்டது. இதே போல சிறு தொழில் துறையில் ஏற்ப்பட்டுள்ள தன்மை மாற்றம், இந்தியாவின் GDP, பங்கு சந்தை குறியீட்டு எண், இன்பேலேசன் ரேட், அன்னிய செலவானி இவை குறித்த மோசடிகளையும் விரிவாக இந்திய தரகு அதிகார வர்க்கம் மற்றும் ஏகாதிபத்திய பிரதிநிதிகளின் சொந்த வாக்குமூலங்கள் மூலம் சிறப்பாக் அம்பலப்படுத்தலாம். ஆனால் அதற்க்கு முன்பு அடிப்படையான சில விசயங்களில் அனானி ஸ்திரப்படுத்திவிட்டு செல்வதே சரி. ஏனேனில் அனானி அவர்கள் கீறல் விழுந்த ரிக்கார்டு போல ஆரம்பம் முதல் சில விச்யங்களையே மீண்டும் மீண்டும் பேசுவருகிறார்.

புரதான பொதுவுடைமை சமூகம் குறித்தோ அல்லது முதலாளித்துவ சந்தை/உற்பத்தி விதி குறித்தோ, அல்லது அவரது இன்னபிற அடிபப்டையற்ற புரிதல் குறித்தோ ஸ்டாலின் உள்ளிட்டவர்களீன் எதிர்வினைகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஒரே வாதத்தை வேறு வார்த்தைகளீல் வைத்து செல்கிறார் அனானி.

ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் குறித்த புரளிகளுக்கு அனானி தயவு செய்து பின்வரும் கட்டுரைகளில் வந்து உரையாடினால் அவரது தார்மீக நேர்மையை நாம் பாராட்டக் கடைமைப் பட்டவர்களாக இருப்போம்.பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_27.html

சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html

தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_24.html

மாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_22.html

«ÍÃý

said...

//மார்க்சியம் தத்துவார்த ரீதியாக அடிப்படையிலேயே தவறு, புராதான பொதுவுடைமை சமூகமே இல்லை என்றெல்லாம் வாதிட்ட//

இது எனது முந்தைய பதிவுகளிலும் நான் வாதிடுவது.

அதில் உங்களது கருத்துக்களை கூறலாமே?

நன்றி

said...

//பாலா போன்ற அவதூறு பேர்வழிகளை அனுமதிக்கத்தான் இங்கே விவாதத்தை தொடர்ந்தீர்கள் எனில் இனிமேல் என் தளத்தில் வந்து விவாதம் செய்யுங்கள் //

நான் முன்னமே கூறியதுபோல தயவு செய்து நீங்கள் பதிலளிக்க விரும்பாத பின்னூட்டங்களை உதாசீனம் செய்யுங்கள்.
நன்றி

said...

கமெண்டு மாடரேசன் போடமாட்டேன் என உறுதியாக இருக்கிறீர்கள்

நன்றி

இனிமேல் எனது தளத்தில் வந்து விவாதிக்கலாம்

Anonym said...

அன்புள்ள ஸ்டாலின் : நான் ஒரிஜினல் அனானி. வேறொரு நண்பர் இங்கே அனானியாய்ப் பதிவு செய்திருக்கிறார் அவருக்குஎ என் நன்றி.
1. புராதன சமூகம் கம்யூனிச சமூகமா இல்லையா என்பது பற்றி. பிறக்கும்போதே கம்யூனிஸ்டாகவோ, இருப்பவனாகவோ, இல்லாதவனாகவோ பிறக்க வில்லை. பரிணாமத்தின் முதல் நிலைகளில் மனித சமூகம் எப்படி இருந்தது என்று யாருக்கும் - மார்க்ஸ் உட்பட- தெரியாது. அது ஊகமாகவே இருக்கும். ஆனால் மனிதன் தனிமனிதனாகத் தான் பிறந்தான். அவனுடைய பசி மற்றும் உடல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வன்முறையும், போட்டியும் நிச்சயம் நிலவியிருக்கும். முதலில் உடைமை சமூகம் அப்படித்தான் உருவாகியிருக்கும். புராதன சமூகங்கள் எப்படி இருக்கக்கூடும் என்று மார்கரட் மீட் போன்ற மானிடவியல் ஆய்வாளர்கள், இப்போதும் நாகாரீகம் தொடாத சமூகக் குழுக்களை ஆய்வு செய்து பல புத்தகங்கள் எழுதியுள்ளனர். அவை நிச்சயம் கம்யூனிச சமூகங்கள் அல்ல.
2.முதலாளித்துவம் என்ற வார்த்தையே பிரசினைக்குரியது. எந்த முட்டாள் "கேபிடலிசம்" என்ற வார்த்தையை முதலாளித்துவம் என்று முழி பெயர்த்தான் என்று தெரியவில்லை. இதை மூலதனவாதம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். இந்தி மொழியில் சரியாக இதனை "பூஞ்சிவாத்" என்று மொழியாக்கம் செய்துள்ளனர். முதலாளித்துவம் என்ற வார்த்தை , யாரோ ஒரு முதலாளி எங்கேயோ உட்கார்ந்து கொண்டு நாட்டாமை செய்யும் எதிர்மறை பிம்பத்தை உருவாக்குகிறது.

3.மூலதனவாதத்து உற்பத்தி திட்டமிட்ட உற்பத்தி என்று சொல்லவில்லை. தேவைகளை முன்னிறுத்திய உற்பத்தி என்று சொன்னேன். சொல்லப் போனால சோஷலிச சமூகங்களின் உற்பத்தியும் கூட தேவையை முனிறுத்தி செய்யப்படுவது தான். தேவையற்ற பொருள்களை உற்பத்தி செய்து என்ன பயன் விளையும்?

4. சந்தையில் தேக்கம் என்பது தேவைகளை முன்னிறுத்திய உற்பத்தியாலும், தேவைகளை சரியாக முன் கூட்டி அறிந்துகொள்வதில் ஏற்பட்ட பிரசினைகளாலும், தேவைகளின் மாற்றத்தாலும் நிகழ்வது. சில சமயம் எதிர்காலத் தேவைக்கான உற்பத்தியாகவும் இருக்கலாம். ஆனால் இதனால் எப்படி தொழிலாளர்கள் பாதிக்கப் படுவார்கள். உற்பத்திக்கான சம்பளம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அல்லவா?

5. மார்க்ஸின் மூலதன ஆய்வுகளை நான் மறுக்கிறென். தொழிற்புரட்சியின் ஆரம்ப கால கட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்களைக் கணக்கில் கொண்டு எழுதப்பட்ட மூலதனம் எழுதி வ்ளிவந்ததற்குள்ளாகவே தொழிற்துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இருபதாம் நூற்றாண்டில் அசெம்ப்ளி லைன் போன்ற நிர்வாக மாற்றங்கள், போக்குவரவு மாற்றங்கள் , உலகமயமாதலில் ஏற்பட்ட சந்தை விரிவுகள் என்று பல காரணிகள் உற்பத்தி மற்றும் வினியோக நடைமுறைகளை முற்றிலும் மாற்றி விட்டன. உபரி மதிப்பு பற்றிய அபத்தம் தனியாக நிகழ்த்தப் படவேண்டிய விவாதம். சோஷலிச சமூகத்தில் உபரி மதிப்பு என்பது இருக்காது என்று ஒரு அபத்தம். ஒரு சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவதே உபரி மதிப்பு தான். உபரி மதிப்பு தொழிலாளர்களுக்கு நியாமாய்ச் சேரவேணிட்யது என்பதும் இன்னொரு அபத்தம். சோஷலிச சமூகத்தில் உபரி மதிப்பு இல்லை என்றால், விண்வெளிப் பயணங்களுக்கு எங்கிருந்து மூலதனம் கிடைத்தது?

4. கணிணி ஒரு விதத்த்தில் உற்பத்திக்கு உதவும் சாதனம் தான். சேவை என்பதும், உற்பத்தி என்பதும் தனித்தனியாய்ப் பிரித்துக் காண்பதும் கடினமே. உதாரணமாக வங்கி என்பது சேவை என்று கொள்ளலாம். ஆனால் மூலதன உருவாக்கத்தில் பங்கு பெறுவதால், உற்பத்திக்குத் துணை புரிவதால் மறைமுக உற்பத்திச் சாதனமாகவும் அது இயங்குகிறது.

5.தடால் என்று மூலதனச் சுரண்டலை கணிணி அதிகமாக்குகின்றது என்று ஒரே போடாகப் போட்டு கம்யூனிஸ்டுகளின் சிந்தனையற்ற ,தடாலடி வாதத்தை முன் வைக்கிறீர்கள். நீங்கள் சொன்ன புராதன சமூகத்திற்கு செல்வோம். முதன் முதலில் நெருப்பும், சக்கரமும் கண்டுபிடிக்கப் பட்ட நாளுக்குச் செல்வோம் என்று வைத்துக் கொள்வோம். சக்கரங்களைக் கொண்டு பத்து மனிதர்கள் செய்த வேலையை ஒரு மனிதன் செய்யலாம் என்பதால், உங்களைப் போன்ற ஒரு கம்யூனிஸ்டு "ஒழிக" கோஷ்ம் போட்டும் இருக்கலாம். ஒன்று செய்யுங்கள்; சக்கரங்களையும் மாட்ட்டு வண்டி உட்பட எல்லா சக்கர ஊர்திகளையும் தடை செய்யப் போராடுங்கள். எல்லோருக்கும் மூட்டை தூக்கும் வேலை கிடைக்கும். வேலையின்மைப் பிரசினை சுத்தமாய்த் தீர்ந்து விடும். அதேபோல் உங்கள் வீட்டில் உள்ள கிரைண்டர்களையும், மிக்சிகளையும் தூக்கிப் போட்டுவிட்டு மாவாட்டும் வேலையை அள்ளி வழங்குங்கள். வேலையின்மைப் பிரசினை சுத்தமாய்த் தீர்ந்துவிடும்.அப்படியே போனையும் வீசி விடுங்கள். எல்லோரும் தந்தி அனுப்பிக் கொள்ளலாம். தந்தி ஆபிசில் பலருக்கும் வேலை கிடைக்கும். ஒரு வழியாக உங்கள் கனவான கற்கால கம்யூனிச சமுதாயமும் சாத்தியமாகி விடும். நான் சொல்ல வருவது இது தான்: டெக்னாலஜி வளர்ச்சி என்பது மனிதகுலத்தின் எதிரி அல்ல. அதுதான் நாகரிகத்தை முன்னோக்கி செலுத்தியுள்ளது. மூல தனத்தை அடிப்படையாய்க் கொண்ட சமூகங்கள் தான் நோய் தீர்க்கும் மருந்துகளை உலகிற்கு அளித்துள்ளது. சோஷலிச சமூகங்கள் மனித குலத்திற்கு அளித்த கொடை என்ன? உங்களைச் சுற்றியுள்ள யதார்த்தைப் பாருங்கள். கிரைன்டரும், கணிணியும் மனித உழைப்பை அதிகப் படுத்தியுள்ளதா, எளிமைப் படுத்தியுள்ளதா?

6. உற்பத்தியை நான் மறைக்கவில்லை. உற்பத்திக்கு தொழிலாளர் மட்டுமே காரணம் என்பதித் தான் நான் மறுக்கிறேன். உற்பத்தியோடு பொருளாதார செயல்பாடு முடிந்து விடுவதில்லை. தேவை,கண்டுபிட்ப்புகள் என்று தொடங்கி, உற்பத்தி வழியாக் வினியோகம் என்று அடையும் ஒரு தொடர்ச்சியை முழுமையாய்ப் பாருங்கள் என்று தான் நான் சொல்கிரேன்.

7. 80 சதவீதத்திற்கும் மேல் மக்கள் ஒரு வேளை உணவு இல்லாமல் வாடுகிறார்கள் என்ற புள்ளி விவரம் எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. தெரிவியுங்கள். இந்தியாவின் மக்கள் தொகை கடந்த ஐம்பதாண்டுகளில் மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இறப்பு விகிதங்கள் குறைந்துள்ளன. குழந்தி மரணங்கள் குறைந்துள்ளன. கல்வி பெறுவோர் தொகை அதிகரித்துள்ளது.வறுமைக் கோட்டின் கீழே வாழ்பவர்களின் விகிதாசாரம் குறைந்துள்ளது. பிரசினைகள் முழுமையாய்த் தீர்ந்து விடவில்லை. ஆனால் முன்னேற்றமே இல்லை என்று சொல்லிவிடமுடியாது.

யோசியுங்கள்.
பழைய அனானி

said...

////பாலா போன்ற அவதூறு பேர்வழிகளை அனுமதிக்கத்தான் இங்கே விவாதத்தை தொடர்ந்தீர்கள் எனில் இனிமேல் என் தளத்தில் வந்து விவாதம் செய்யுங்கள் //

நண்பர் தியாகு,
உங்கள் பதிவில் மூன்றுநாள்களாக நான் எழுதிய பின்னூட்டங்களை தயவு செய்து ரிலீஸ் செய்யுங்கள்.
நன்றி

said...

நீங்கள் எழுதிய அனைத்து கமெண்டுகளையும் நான் விடுவித்துதான் விவாதம் செய்தேன்

கமெண்டுகள் விடவில்லை என்பது நல்ல கூத்து

அதாவது அங்கே வந்தூ வாதாட முடியாது என சொல்லாமல் சொல்கிறீர்கள் சரியா

said...

அப்படியானால் நன்றி நண்பர் தியாகு,

இங்கே நான் எழுதியவற்றுக்கு பதில் கூறலாமே?

நான் அங்கேயும் என் கருத்துக்களை பதிகிறேன்.

நன்றி

said...

தியாகு
உங்கள் தளத்திலும் என் கருத்துக்களை பதிந்துள்ளேன்.

அப்படி என் கருத்துக்கள் பதியப்படவில்லை என்று நீங்கள் கருதினால்,தயவு செய்து இங்குள்ள விவாதத்தை அங்கே சேமியுங்கள்.

நன்றி

மூணாவது அனானி said...

முதலில் ஒரு டிஸ்கி: நான் ஒரு பொருள்முதல்வாதி.

1. கம்யூனிச ஆதரவாளர்களும், பொருள்முதல் வாத ஆதரவாளர்களும் வெவ்வேறு புள்ளிகளில் இருந்து வாதிடுகிறார்கள். ஒருவர் வட்டத்தை சதுரமாக்க முயற்சிக்கிறார். இன்னொருவர் சதுரத்தை வட்டமாக்க முயற்சிக்கிறார். இரண்டிலுமே, ஒன்று இன்னொன்றாக முடியாது என்பது கணித விதி. எனவே, இவ்விவாதங்கள் முடிவிலாமல் நீண்டுகொண்டே செல்லும்.

2. வெளியுலகிற்கு, கம்யூனிசம், சோசியலிசம், மாவோயிசம் மற்றைய மாமன் மச்சான் கொள்கைகளின் வேறுபாடு புரியாது. இவர்கள் அவர்களைப் போலி என்பார். அவர்கள் இவர்களைப் போலி என்பார். ஆக மொத்தம் எப்படியாவது புரட்சியை ஏற்படுத்திவிட்டால், பிறகு எல்லோரும் ஒன்றாகிவிடுவார்கள்போல.

3. நக்சல்பாரிகள் கம்யூனிஸ்டு கட்சிகளை போலிகள் என்பார்கள். கம்யூனிஸ்டு கட்சிகள் நக்சல்பாரிகளை ஆதரிப்பதில்லை என்பார்கள். பொருள்முதல்வாதிகள் நக்சல் தீவிரவாதத்தை பேசினால், சந்திப்பு, தியாகு போன்றோர் எங்களுக்கு சம்பந்தமில்லை என்பார்கள். cpm, cpi பற்றிப் பேசினால், அசுரன் போன்றோர் எங்களுக்கு சம்பந்தமில்லை என்பார்கள். இது மற்றவர்களைக் குழப்பவே என எண்ணுகிறேன். கடேசியில் மற்றவர்கள் முடியை பிய்த்துக்கொள்வதில்தான் முடியும். எங்களுக்கு எல்லோரும் ஒன்றுதான் ஐயா.

4. ஒரு பேச்சுக்கு, CPM (&CPI&RSP&FB) ஜனநாயக வழியில் பாராளுமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், இந்த நாடு பல கட்சி சனநாயகத்தோடு இருக்குமா? இல்லை ஒரு கட்சி சர்வாதிகார நாடு ஆகிவிடுமா?

5. கம்யூனிசம்தான் உலகை உய்விக்கும் வழி என்றால் அதை ஏன் ஆயுதம்கொண்டு தூக்கிப் பிடிக்கவேண்டும்? தானாக அதனால் நிற்கமுடியாதா?

6. கம்யூனிஸ்டுகள் பார்வையில் இந்தியா இதுவரை ஒரு அரைகுரை பொருள்முதல்வாத கொள்கையைக் கடைபிடித்து வந்துள்ளது. அது நல்ல நிலையை அடைய முழு கம்யூனிசக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பார்கள். பொருள்முதல்வாதிகள், இந்தியா இதுவரை ஒரு அரைகுரை கம்யூனிசக் கொள்கையைக் கடைபிடித்து வந்துள்ளது. அது நல்ல நிலையை அடைய முழு பொருள்முதல்வாத கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பார்கள். ஆக, இந்தியா இதுவரை கடைபிடித்து வந்த பொருளாதாரக் கொள்கைதான் என்ன ஐயா?

7. ரஷ்யாவும், சீனாவும் ஏன் கம்யூனிசத்தைக் கை கழுவியது என்றால், அது பொருள்முதல்வாத நாடுகளின் சதி என்பார். 80கள் வரை ரஷ்யாவிலும், சீனாவிலும் பாலாறும், தேனாறும் ஓடியது என்றால் மக்கள் ஏன் அந்தத் தத்துவத்தை தூக்கி வீசினார்கள்? சீனாவில் இன்று இருப்பது பொய்யான சோசலிசம் என்றால் அசுரன்களும், தியாகுகளும் அவர்களின் உள்ளங்கவர்கள்வன் சே குவாராவைப்போல் சீனாவுக்கு சென்று புரட்சியை மீண்டும் மலர வைப்பார்களா? ஹூ ஜிண்டாவ் தலைமையிலான CPC Pvt Ltd இவர்களை கொசுவைப் போல ஊதித்தள்ளிவிடும்.

8. இந்தக் கம்யூனிச ஆதரவாளர்களின் பக்திப் பிரச்சாரத்தைப் பார்த்தால், ஆபிரகாமிய மதங்களின் பிரச்சாரம் தோற்றுவிடும்.

said...

ஒரு சிறு குறிப்பு:

நண்பர் மூணாவது அனானி,

தன்னை பொருள்முதல் வாதி என்று கூறிக்கொள்கிறார். (தன்னை முதலாளித்துவவாதி அல்லது மூலதனவாதி) என்று குறிப்பிடுவதற்கு பதிலாக அப்படி கூறுகிறார் என்று நினைக்கிறேன்.

பொருள்முதல்வாதம் vs கருத்துமுதல்வாதம் என்பது பழைய விவாதம்,
கம்யூனிஸ்டுகள் தங்களை பொருள்முதல்வாதிகள் என்று கூறிக்கொள்வார்கள்.
ஆனால் கருத்துமுதல்வாதிகள் சொல்லும் "இயேசுவின் இரண்டாம் வருகை சொர்க்கபூமி" போல கம்யூனிஸ சமுதாயம் என்ற கற்பனைக்கதையை நம்பி ஆற்றில் இறங்குகிறார்கள்.

முதலாளித்துவவாதி, அல்லது மூலதனவாதிதான் உண்மையான பொருள்முதல்வாதி என்று சொல்வதாக புரிந்துகொள்கிறேன்
நன்றி

மூணாவது அனானி said...

//முதலாளித்துவவாதி, அல்லது மூலதனவாதிதான் உண்மையான பொருள்முதல்வாதி என்று சொல்வதாக புரிந்துகொள்கிறேன்.//

'மூலதனவாதி' என்ற சொல் பொருத்தமானதாக நினைக்கிறேன். நேற்று சட்டென நினைவுக்கு வரலை.

said...

தியாகு தன் பதிவில் எழுதியது இங்கே பதியப்பட்டுள்ளது.

நன்றி

Anonym said...

1.புராதன கம்யூனிச சமுதாயம் என்பதற்கு ஆதாரஙள் மார்க்ஸ் உட்பட யாராலும் தரமுடியாது என்றும், புராதன சமூகங்களை ஒத்த , இன்றுள்ள நாகரிகம் தொடாத சமூகக் குழுக்களை ஆய்ந்து எழுதப்பட்ட நூல்களும் கூட கம்யூனிசம் அங்கே இருப்பதாய்ச் சொல்லவில்லை என்று மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன். ஐரோப்பிய படையெடுப்பில் அழிக்கப்பட்ட , அமெரிக்கப் பழங்குடி மக்களும் கூட ஓரளவு புராதன நிலையில் வாழ்ந்தவர்கள் தான். அவர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்தல பற்றியும் பல குறிப்புகள் உள்ளன. அவர்கள் கம்யூனிச சமூகத்தில் வாழ்ந்திருக்க வில்லை. நீங்கள் மீண்டும் மீண்டும் மார்க்ஸ்வேதமே சரி என்று வாதிடுகிறீர்கள்.
அதே போல் தான் உற்பத்தி உறவும். மார்க்ஸ் எழுதிய காலகட்டம் கைவினைப் பொருட்களிலிருந்து சிறு தொழில்களை நோக்கியும், ஓரளவு பெரும் தொழிற்சாலைகளை நோக்கியும் நகர்ந்த காலகட்டம். அந்த வெளிப்ப்டையாய்த் தெரிந்த மாறுதலை வைத்து எழுதப் பட்டது மூலதனம். பெரும் உற்பத்தியும், கணிணி மையப்படுத்திய உற்பத்தியும், அசெம்ப்ளி லைன் உற்பத்தி முறைகளும், நிர்வாகவியலில் ஏற்பட்ட மாற்றங்களும் என்று தொழில் உற்பத்தி இன்று சம்பிரதாயமான தொழிலாளி- முக்தலாளி உறவைத்தாண்டி தொழில் முனைப்பு வளர்ந்துவிட்டது. ஒரு பொருளின் மதிப்புக் கூட்டுதல் வெறும் தொழிலாளியின் உழைப்பினால் மட்டுமல்லாமல், சந்தை சக்திகளான தேவை, சப்ளை, உற்பத்தியிடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் பொருளின் தேவை இருக்கிறது என்பதைப் பொறுத்டு மாறுபடும். அதனால் உபரி மதிப்பு தொழிலாளிக்குச் சேரவேண்டியது, அதனால் அவன் சுரண்டப் படுகிறான் என்ற வாதமே ஒரு அபத்தம் என்பது தான் நான் மீண்டும் மீண்டும் சொல்வது. இதனை நம்பினால், நட்டம் ஈட்டும் தொழில்களில் தொழிலாளி முதலாளியைச் சுரண்டுகிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்ளவேண்டும். அது தான் உங்கள் நிலை பாடா?2. உங்களுக்கு அமெரிக்கா அல்லது மற்ற மூலதனவாத நாடுகள் பற்றி என்ன தெரியும்? மூலதனவாதத்தை முழுமையாய் ஒப்புக் கொண்ட நாட்கள் எல்லாமே சொர்க்கலோகம் என்று எவரும் சொல்லவில்லை. மக்கள் முன்னேற்றத்துக்கான தொடர்ந்த முயற்சியில் பல காரணிகள் உள்ளன. பொருளாதாரம், அரசியல், சமூகக் கலாசாரப் பின்னணி என்ற பல விஷயங்கள் சேர்ந்து தான் ஒரு நாட்டின் தகுதியையும் அவற்றின் முனேற்றத்தையும் நிர்ணயிக்கிறது. சோஷலிசம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு பகல் கனவு. சோஷலிச சமூகத்தின் அரசியல் சர்வாதிகாரத்தை நியாயப் படுத்த ஒரு கருத்தியலைப் பிடித்துத் தொங்குகிறீர்கள். மூலதன நாடுகளும் அராஜக நாடுகளாய் இருக்கலாம். அது வேறு பிரசினை. ஆண் தப்பினால் பெண் என்று சோஷலிசம் தப்பினால் மூலதனம் என்று சமூகத்தின் பிற அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், மூலதனப் பூச்சாண்டி காட்டி கம்யூனிஸ்டுக் கட்சிக்கு ஆள் சேர்க்கலாம். ஆனால் அதில் எந்த அறிவுபூர்வமான அணுகலும் இல்லை. கியூபா, சீனா போன்ற சோஷலிச சொர்க்க புரியை விட்டு, உயிரைப் பணயம் வைத்து ஏன் மக்கள் கள்ளத்தோணியிலும், கப்பலில் கண்டெஇயினர்களிலும் அடைந்து கொண்டு அமெரிக்காவையும், ஐரோபிய நாடுகளையும் நோக்கி வருகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி அதற்கு விடை காண முயன்றால் உங்களுக்கு இதன் பதில் கிடைக்கும்.

மூலதனத்தை யாரும் உயர்த்திப் பிடிக்க வேண்டியதில்லை. அதுதான் பொருளாதாரச் செயல்பாட்டின் அடிப்படையே.3.மார்க்ஸிய அறிஞர்கள் விஞ்ஞா பூர்வமாக படிப்படியாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று படித்து மெய் சிலிர்த்துப் போனேன். இது எப்படி விஞ்ஞானம் ஆயிற்று என்று தெரியவில்லை. இந்த் மார்க்ஸிய அறிஞர்கள் ஐன்ஸ்டீனிடமும், அப்துல் கலாமிடமும் பாடம் பயின்றார்களா? விஞ்ஞான அணுகல் முறை என்பதை கட்சி பாஸ்களிடம் இல்லாமலெந்த விஞ்ஞாயிடம் கற்றார்கள்? சமூகவியல் , பொருளாதாரம், மானிடவியல் என்பவை விஞ்ஞானம் அல்ல. அவற்றை சமூக விஞ்ஞானம் (socail science) என்று அழைப்பது, அவை விஞ்ஞானம் அல்ல என்று அழுத்திச் சொல்வதற்காகத் தான்.

மார்க்ஸிய விஞ்ஞானம் என்பது பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி போன்றதல்ல. இந்து விஞ்ஞானம், கிருஸ்துவ விஞ்ஞானம் என்பது போலத்தான் இது. சமூக விஞ்ஞானத்தில் கடந்த காலத்தை ஆய்ந்து தான் சொல்ல முடியுமே தவிர எதிர்காலத்தைப் பற்றி சொல்ல முடியாது. கலிலியோவை நம்பாமல் பூமியைத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று சாதித்து கலிலியோவிற்கு தண்டனை கொடுத்த கிருஸ்துவமதப் பாதிரிகள் மாதிரி கம்யூன்ஸ்டுகளும் புராதன கம்யூனிசம் ,முதலாளித்துவம், வருது பார் சோஷலிசம், உலகின் எல்லா நாடுகளும் சோஷலிசம் பூத்துக் குலுங்கி , கம்யூனிசம் மலர்ந்து அரசு உதிர்ந்து, எல்லா மக்களும் அச்சில் வார்த்தாற்போல ஆறடி உயரம், ஒரே மாதிரி அறிவு, ஒரே மாதிரி பொறுப்புணர்வு என்று சொல் கொண்டே இருக்கிறீர்கள். இதையும் நம்ப ஒரு கூட்டம் தயாராய் இருக்கிறது. இதற்கு விஞ்ஞானம் என்று பெயரில்லை. சோதிடம் அல்லதெ நம்பிக்கை. விஞ்ஞானம் நம்பிக்கை அல்ல. தரவுகள், நிரூபணங்கள். விஞ்ஞானத்தின் மிக முக்கியமான தேவை கருதுகோள்கள். hypothesis.அதாவது எந்தச் சூழ்நிலையில் ஒரு விஞ்ஞான உண்மை பொருந்தி வரும் எனப்து. எல்லாச் சூழ்நிலையிலும் உண்மையாய் இருக்கும் என்ற ஓர் விஞ்ஞானக் கோட்பாடு கிடையாது. உதாரணமாய் எளிய உதாரணமாய் , நீரின் கொதி நிலை கூட காற்றழுத்தத்தைப் பொறுத்தது.

எதிர்காலத்தை கணிக்கிற விஞ்ஞானம் இருக்கிறது. உதாரணமாய் ஒரு எரி நட்சத்திரம் எப்போது பூமியின் பயணப் பாதையை எப்போது கடக்கும் என்று விஞ்ஞானிகள் துல்லியமாய்ச் சொல்கிறார்கள் ஆனால் அதற்குக் கணக்குகள் உள்ளன. முன்னே எப்போது கடந்தது , அதன் பயணப் பாதை என்ன , அதன் வேகம் என்ன என்று கணக்குடன் அவர்களால் சொல்ல முடியும். ஆனால் சோஷலிசம், கம்யூனிசம், பரலோகம், கிறுஸ்து மீண்டும் வருவார், கன்னிமேரி, இறைத்தூதர் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைகள். இறை நம்பிக்கை போலத்தான் எங்கள் கம்யூனிச நம்பிக்கை என்று சொல்லிவிட்டீர்களானால், இன்னொரு லாபமும் இந்தியாவில் இருக்கிறது. மைனாரிடி அந்தஸ்தும் , ரிசர்வேஷனும் கிடைக்கலாம். விஞ்ஞானம் என்ற அடைமொழியைச் சேர்த்ததாலேயே மார்க்ஸியம், இந்து, இஸ்லாம், கிறூஸ்துவம் போன்றவை விஞ்ஞானமாகிவிடாது.

எல்லா நாடுகளும் சோசலிச கட்டுமானத்தில் உறுதிப்பட்டவுடன் தான் கம்யூனிச சமுதாயத்திற்கான பாய்ச்சல் ஒரே நேரத்தில் நிகழும்.
என்று இறுதிதீர்ப்பு நாள் வடிவில் உங்கள் சோதிடத்தைச் சொல்லிவிட்டீர்கள். இதை எப்படி அறிவுபூர்வமாய் எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. என் பிள்ளை நாளைக்கு இரண்டடி வளர்ந்து விடுவான் என்று ஒரு தகப்பன் சொன்னால் அடுத்த நாள் அவன் முன்னால் போய் நின்று அய்யா உன் பையன் இரண்டடி வளரம் முடியாது என்று அளந்து காட்டலாம். 2000-ம் ஆண்டு பிறந்த வுடன் உலகம் அழிந்துவிடும் என்று சோதிடம் சொன்னவ்ர்களிடம் , 2001-ல் போய் நின்று அபத்தத்தைச் சுட்டிக் காட்டலாம். எல்லா நாடுகளும் சோஷலிசம் ஆகி - எப்போது 6000 ஆண்டுகள் கழித்தா?- அப்புறம் கம்யூனிசம் மலரும் என்று விஞ்ஞான ரீதியாய் சொல்லும் ஒருவரிடம் என்ன அறிவுபூர்வமான விவாதங்கள் நடத்த முடியும்? சற்றே யோசித்துப் பாருங்கள். இன்னமும் கூட எல்லா சமூகங்களையும் பற்றிய உணர்வு நமக்கு இல்லை. உலகின் பாதி நாடுகள் இஸ்லாமிய நாடுகள் கம்யூனிஸ்ட் என்று பெயரைச் சொனாலே கடவுள் மறுப்புக்காகக் கழுவில் ஏற்விடுவார்கள். பாகிஸ்தான் உருவாக தேசிய சுய நிர்ணயக் கோட்பாட்டின் கீழ் கம்யூனிஸ்டுகள் ஆதரவு தெரிவித்தார்கள். பாகிஸ்தான் பிறந்த வுடன் ஜனாப் ஜின்னா செய்த முதல் காரியமே கம்யூனிஸ்டுக் கட்சியைத் தடை செய்தது தான். ஐரோபிய நாடுகள் இடதுசாரி , கம்யூனிசம் என்று பேசுவார்களே தவிர தம்முடைய சுடக்ந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் சோஷலிசம் மலர்ந்த சீன உங்கள் ஆருடத்தைப் பொயாக்கிக் கொண்டு மீண்டும் மூலதனப் பாதைக்குப் போய்விட்டது. சோவிய்டத் ரஷயாவிலோ, கமுயூனிஸ்ட் காலத்திய நீண்ட வரிசைகளும், ஸ்டால்னியக் கொடுங்கோன்மைகளும் இன்னும் மறந்து விடவில்லை. இருப்பது ஒரு நேபாளம், இந்தியாவில் கேரளா, மேற்கு வங்கத்தின் இடது சாரிக் கட்சிகள் என்ற ப்யரில் சாதி மற்றும் தனிமனிதச் செல்வாக்கினால் கட்டப் பட்ட உதிரிக் கட்சிகள். இதில் எங்கே சோஷலிசம் வந்து, கம்யூனிசம் வந்து. என்ன தோழரே நீங்க காமெடி கீமெடி பண்ணலியே?4. உலகின் எல்லா போர்களுக்கும் காரணமான ஏகாதிபத்தியம் என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டீர்கள். சர்வரோக நிவாரணி கம்யூனிசம், சூப்பர் வைரஸ் முதலாளித்துவம் என்ற எளிய சூத்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் சுயசிந்தனையற்ற கூட்டம் நம்பலாம். ஆனால் சிலுவைப் போர்களுக்கு எந்த முதலாளித்துவ ஏகாதிபத்தியம் காரணம்? ஹிட்லர் தொடுத்த போருக்கு எந்த முதலாளித்துவம் காரணம்? சீனா இந்தியாவின் மீது போர் தொடுத்ததற்கு எந்த ஏகாதிபத்தியம் காரணம். பாகிஸ்தான் தம்முடைய மக்கள் மீதே போர் தொடுத்ததற்கு எந்த ஏகாதிபத்தியம் காரணம்?5. வட கொரியாவும், போல் போட்டும் கம்யூனிஸ்டுகள் இல்லை என்று நீங்கள் சொன்னால் நான் ஏற்றுக் கொள்ளவேண்டியது தான். இஸ்லாமிய பயங்கர வாதத்திற்கு மக்கள் பலியாகும் போதெல்லாம், அவர்களை இஸ்லாமிய பெயர்தாங்கிகள் என்று கூறும் இஸ்லாமிய மேதாவிகள் மாதிரி நீங்கள் போல் போட்டும், வடகொரியாவும் கம்யூனிஸ்டுகள் இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் ஸ்டாலின், மாஒவின் படுகொலைகள் வெறுமே களையெடுத்தல் என் கிறீர்கள். பாருங்கள் உங்களுக்கும் கிறுஸ்துவத்திற்கும் உள்ள ஒற்றுமையை. போப் ஆசியாவில் கிறுஸ்துவிற்காக அறுவடை செய்ய வேண்டும் என்கிறார். நீங்கள் களை எடுத்தோம் என்கிறீர்கள். மக்கள் தாவரங்களாய்த்தான் நாங்கள் கருதுவோம் என்று சொன்னால், அமெரிக்காவில் உள்ள மக்கள் பொய் மக்கள் என்றால் நீங்களும், ஸ்டாலினும் தான் உண்மையான மனிதர்களாய் இருக்க வேண்டும்.4. நீங்கள் சொல்வது உங்களுக்கே புரிகிறதா? மூலதனத்தின் நலனை மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் எப்படி பேண முடியும். சோஷலிசத்தில் மக்கள் தேவையை யார் நிர்ணயிப்பார்கள்? பொலிட் பீரோவா? காஸ்ட்ரோவா? ஸ்புட்னிக்கை செலுத்தப் போகிறோம் என்று பாட்டாளி மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தினார்களா? ஸ்புட்னிக்கின் தேவை மக்களுக்கு என்ன?6.சோஷலிசத்தை நோக்கி மக்களைத் தானாக முரண்பாடுகள் தள்ளும் என்றால் ஏன் நீங்கள் கட்சி கட்டிக் கொண்டு பிரசாரம் செய்கிறீர்கள் . அரசு தானாக் உதிரும், மக்கள் தானாக சோஷலிசம் வேண்டி தள்ளப் படுவார்கள், என்றால் தானாய் நடக்க்ற ஒன்றுக்கு போராட்டமும், மண்ணாங்கட்டியும் எதற்கு. கட்சியைக் கலைத்துவிட்டு நிம்மதியாய் உட்கார்ந்திருங்கள்.சோஷலிசம் வரும்போது உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன். வந்து கொண்டாடுங்கள்.

நன்றி
பழைய அனானி

said...

காத்திருக்கிறேன்.. நண்பர்களே.

இதற்கு பதில் எழுதியிருந்தீர்கள் என்றால், இங்கே பதியுங்கள்

said...

Post a Comment On: செம்மலர்"தமிழ்மணி / அனானிக்கு மறுப்புக் கடிதம்"
5 Comments - Show Original Post
Collapse comments

தியாகு said...
அசுரன் அனானிக்கு அளித்த பதிலை

இங்கேயும் பதிகிறேன்

--------தியாகு

//அனானிக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது, பாவம் மிகவும் குழம்பி போய்விட்ட அனானி படபடப்பில் முதலாளித்துவ பிரச்சார புத்தகங்களால் மூளைக்குள் திணிக்கப்பட்ட ஸ்டாலின், மாவோ அவதூறுகள் பற்றி தொடர்ந்து உச்சாடனம் செய்ய தொடங்கியிருக்கிறார். ஆனால் நான் மேலே போட்டிருக்கும் பின்னூட்டத்தில் மார்க்சியத் தத்துவத்தை பற்றி இவர் வைத்த விமர்சனத்திற்குத்தான் பதிலளித்திருக்கிறேன், அதனை மேற்சென்று தொடர முடியாத அனானி, மார்க்சியம் தத்துவார்த ரீதியாக அடிப்படையிலேயே தவறு, புராதான பொதுவுடைமை சமூகமே இல்லை என்றெல்லாம் வாதிட்ட அனானி இப்போது அதை தொடராமல் ஸ்டாலின் அவதூறு என்ற புதரில் போய் பத்திரமாக் பதுங்கி கொள்ள பார்க்கிறார், விவாதத்தினுடைய மையமான விசயத்தை விட்டு ஒதுங்கி ஸ்டாலின் அவதூறில் பதுங்கிறார்.

நீ எவ்வளவு புத்தகம் படித்திருப்பாய், உனக்கு ரசிய மொழி தெரியுமா, ரசிய நூலகத்திற்கு சென்று ஆய்வு செய்திருக்கிறாயா, உனக்கு ஸ்டாலின் பற்றி தெரிந்ததெல்லாம் எப்படி? என்று நம் மீது கேள்விக்கணைகளை தொடுக்கிறார், இனி நாம் அவரிடம் இந்திய அரசியல் கூட பேச முடியாது போல,உனக்கு இந்தி தெரியுமா டெல்லி போயிருக்கிறயா என்று கேட்பார், இனி எப்படி வாதிப்பது என்று எனக்கு கவலையாய் இருக்கிறது. இராமன் பாலத்தை பற்றி பேச வேண்டுமென்றால் கூட இராமேஸ்வரம் போய் பார்த்துவிட்டுதான் வரவேண்டும் போலிருக்கிறது.

ஆனால் அனானி ஸ்டாலினை எனக்கு அறிமுகப்படுத்தியது எங்களுடைய பாட்டாளி வர்க்க அரசியலின் பிரச்சார புத்தகங்களாகவே இருக்கட்டும், ஆனால் உங்களுக்கு ஸ்டாலின் எப்படி அறிமுகமானார், நேராக போய் பார்த்து வந்தீர்களா? ஸ்டாலினின் சாதனைகளை பேசுவது பாட்டாளி வர்க்கத்தின் பிரச்சார புத்தகம் என்று நீங்கள் சொல்வீர்களேயானால், அவரை அவதூறு பேசுவதை நான் முதலாளித்துவ பிரச்சார புத்தகங்கள் என்று சொல்லமுடியாதா? நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை என்பது ஒருபுறமிருக்கட்டும். மேலே உள்ள என்னுடைய பின்னூட்டத்தில் ஸ்டாலினை பற்றியோ, மாவேவை பற்றியோ எதுவும் பேசவில்லையே, எதற்கு உங்கள் முன்னோர்களின் புழுகுகளையெல்லாம் கடைவிரிக்க ஓடிவருகிறீர்கள்.

அய்யா அனானி நாங்கள் பிரமாதமான படிப்பாளிகள் இல்லைதான, ஆனால் இலாபவெறி பிடித்த அருவெறுப்பான முதலாளித்துவ முகத்தை அலங்கரித்து காட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை, நாங்கள் படித்தது குறைவாய் இருக்கலாம், ஆனால் நீங்கள் உங்கள் ஊடகங்களால் ஏற்படுத்தி வைத்திருக்கும் மாயையான பிம்பங்களை தாண்டியும் எங்களை வழிநடத்தும் நாயகர்களையும், எங்கள் வாழ்வை பறிக்கும் நாய்களையும் எங்களால் பிரித்து அறிய முடியும்.

நீங்கள் என்ன பெரிதாக படித்து கிழித்து விட்டீர்கள் என்று கேட்கின்ற உங்களுடைய முதலாளித்துவ மிதப்புதான் மார்க்சியத்தை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்ல வைக்கிறது, இது தனியொரு குழூவிடம் மந்திர குளிகையாக மாறிவிடும் என்று சொல்ல வைக்கிறது. நாங்கள் மக்களின் புரிதல் மட்டத்தை உயர்த்துவோம், மார்க்சியத்தை புரிந்து விவாதிக்கவும், வளர்த்தெடுக்கவும் அறிவு கொண்டவர்களாக மக்களின் வாழ்நிலையை மாற்றுவோம் என்பதெல்லாம் இருக்கட்டும், உங்கள் முதலாளித்துவ சமூகத்தில் இன்று ஜி.டி.பி, ஷேர் மார்கெட், சென்செக்ஸ் என்று தொண்டை கிழிய கத்துகிறீர்களே, அது படித்தவர்களுக்கே எத்தனை பேருக்கு புரிகிறது என்று கூறுங்களேன், அல்லது அப்படி புரிந்து கொள்ள கூடியவர்களாக முதலாளித்துவ சமூகம் மக்களை உருவாக்குமா என்றாவது கூறுங்களேன்.

ஸ்டாலின்

//

தேவை தேவை என்று அனானி குறிப்பிடுகிறார். தேவை என்பதை யார் முடிவு செய்கிறார்கள்?
மக்களின் அடிப்படைத் தேவைக்கான உற்பத்தியா இன்று நடக்கிறது. 1 லிட்டர் கோகோ கோலாவுக்காக 8 லிட்டர் தண்ணீரை நஞ்சாக்கி அது மண்ணீல் இறங்கி இன்னுமொரு 47 லிட்டர் நிலத்தடி நீரை நஞ்சாக்குகீறதே இது யாருடைய தேவைக்கானது என்று அனானி சொன்னால் புண்ணீயமாகப் போகும்.

அல்லது முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறி இன்று மேல்நிலை வல்லரசு, உலக மேலாதிக்க ஒற்றை துருவ வல்லரசாக பரிணமித்துக் கொண்டிருக்கும் கடந்த 100 வருடங்களில் இன்று வரை உலகம் முழுவதும் யாருடைய தேவைக்காக யுத்தங்களும், பகுதியளவிலான முரன்பாடுகளும் கூர் தீட்டப்பட்டு மோதவிடப்படுகின்றன என்று அனானி சொன்னால் வசதியாக இருக்கும்.

அல்லது இவர் குறிப்பிடும் சோவியத் ரஸ்யாவும் சரி சீனாவும் சரி மிக மிக மோசமான நிலையிலிருந்து வல்லரசுகளாக குறுகிய காலத்தில் எந்த நாட்டையும் சுரண்டாமல் வளர்ந்த மர்மம் குறித்து சொல்லலாம். குறிப்பாக 300 வருடம் உலகை ஆண்ட பிரிட்டன் இரண்டாம் உலக் யுத்த முடிவில் ஓட்டாண்டியாக வெளி வந்த பொழுது, ரஸ்யா 50 வருடங்களாக யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு போர், பஞ்சம், உள்நாட்டு சதி இவற்றை கடந்து இரண்டாம் உலகப் போரில் வேறு எந்த நாட்டையும் விட மிக மிக பேரிய அழிவிற்க்கு ஆளாகி போரின் முடிவில் உலக வல்லரசக வந்த அதிசயம் குறித்தும் அனானி நமக்கு பாடம் நடத்தலாம்.

ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் சுக வாழ்வு குறித்து நமக்கு புதிதாக அறிமுகப்படுத்துகிறார் அனானி. இந்த விசயத்தையெல்லாம் உள்ளடக்கியதுதான் லெனினின் ஏகாதிபத்திய வரையறை. லெனின் இதனை எழுதும் முன்பாகவே முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணாமிப்பது குறித்து முதலாளீத்துவ பொருளாதார நிபுணர்களே அந்த காலத்தில் பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ளனர்(இவற்றின் உதவியுடனேயே லெனினும் தனது ஆய்வை வளர்த்துச் செல்கிறார்).

மாறாக, ஏகா/முதலாளித்துவ நாடுகள் தமது நாட்டில் புரட்சி நடப்பதை தவிர்ப்பதற்க்கே தனது தொழிலாளிகளுக்கு குறைந்த பட்ச சுக வாழ்வை ஊர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது. இந்த தேவைக்கும் சேர்த்து இந்தியா போன்ற காலனி நாடுகள் சுரண்டப்படுகின்றன.

எப்படி? இந்தியா போன்ற நாடுகளில் குறை கூலி உழைப்பு, மூல வளங்கள் மூலம் தமது நாட்டுக்கு தேவையான பொருட்களையும், உலக சந்தைக்கு தேவையான பொருட்களையும் மலிவு விலையில் உற்பத்தி செய்து லாபம் பார்ப்பதுடன், தமது நாட்டு மக்களையும் திருப்திப் படுத்துகிறான். அதனால் ஏகா நாட்டு தொழிலாளியின் சுக வாழ்வு என்பது ஒன்று ஆச்சர்யமான விசயம் அல்ல.

இந்தியாவில் ஒரு எ-காவுக்கு அசோக் லேலாண்டின் உற்பத்தி 3 மடங்கு அதிகரித்துள்ளது சமீப ஆண்டுகளின் ஆனால் தொழிலாளர் எண்ணிக்கை பாதியளவுக்கு குறைந்து விட்டது. இதே போல சிறு தொழில் துறையில் ஏற்ப்பட்டுள்ள தன்மை மாற்றம், இந்தியாவின் GDP, பங்கு சந்தை குறியீட்டு எண், இன்பேலேசன் ரேட், அன்னிய செலவானி இவை குறித்த மோசடிகளையும் விரிவாக இந்திய தரகு அதிகார வர்க்கம் மற்றும் ஏகாதிபத்திய பிரதிநிதிகளின் சொந்த வாக்குமூலங்கள் மூலம் சிறப்பாக் அம்பலப்படுத்தலாம். ஆனால் அதற்க்கு முன்பு அடிப்படையான சில விசயங்களில் அனானி ஸ்திரப்படுத்திவிட்டு செல்வதே சரி. ஏனேனில் அனானி அவர்கள் கீறல் விழுந்த ரிக்கார்டு போல ஆரம்பம் முதல் சில விச்யங்களையே மீண்டும் மீண்டும் பேசுவருகிறார்.

புரதான பொதுவுடைமை சமூகம் குறித்தோ அல்லது முதலாளித்துவ சந்தை/உற்பத்தி விதி குறித்தோ, அல்லது அவரது இன்னபிற அடிபப்டையற்ற புரிதல் குறித்தோ ஸ்டாலின் உள்ளிட்டவர்களீன் எதிர்வினைகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஒரே வாதத்தை வேறு வார்த்தைகளீல் வைத்து செல்கிறார் அனானி.

ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் குறித்த புரளிகளுக்கு அனானி தயவு செய்து பின்வரும் கட்டுரைகளில் வந்து உரையாடினால் அவரது தார்மீக நேர்மையை நாம் பாராட்டக் கடைமைப் பட்டவர்களாக இருப்போம்.பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_27.html

சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html

தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_24.html

மாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_22.html

«ÍÃý

October 31, 2007

தியாகு said...
//ஒரு பொருளின் உபயோகம், கண்டுபிடிப்பு, அதன் தொடர்ச்சியாக தேவை உருவாதல், சில தேவைகளின் தொடர்ந்த இருப்பு, சில தேவைகள்

தன்னால் விட்டுப்போதல், தேவைகளுக்கான உற்பத்தி, சப்ளை, அதொலிருந்து இன்னொரு கண்டுபிடிப்பு என்று தொடர்ச்சியாக இயங்கி வரும்

சமூகத்திற்கு மூலதனம் தான் அடிப்ப்டை என்பது தான் நான் திரும்பத் திரும்பச் சொல்வது. சோஷலிசமும் கூட மூலதனத்தை அடிப்ப்டையாய்க்

கொண்டு தான் உருவாகிறது. சோஷலிசம் என்பது அரசாங்க மூலதனம் அன்றி வேறென்ன? எந்த வடிவிலான மூலதன்ம் ஆனாலும், அதன் உபரி

மதிப்பு, மூலதனம் இட்டவர்களுக்கோ அல்லது அரசாங்கம் மூலதனம் இட்டிருந்தால் அரசாங்கத்திற்கோ போய்ச் சேர்கிறது.//

தேவை சப்ளை என்பதன் அடிப்படையில் சமூக வளர்ச்சி கட்டத்தை விளக்குங்கள் என நான் சொன்னேன்
அதன் மூலம் விளக்குவதை விடுத்து திடீரென மூலதனத்தில் குதித்துவிட்டீர்கள் அனானி
ரொம்ப நகைசுவை மனிதர் நீங்கள் .
சமூகத்தை விளக்க உங்களுக்கு மூலதனம் ஏன் தேவை படுதுன்னு தெரியலை :)
தேவை சப்ளை இது மட்டும் பத்தாதா ?
தேவை -சப்ளை கூட நான் சொன்ன உற்பத்தி நடைமுறைக்கு வெளியே
தொங்கவில்லை என்ன பரிதாபமான உண்மையை சொல்லி உங்கள் பழைய விவாதம் இத்துடன் முடிகிறது
என அறிவிக்கிறேன்

எப்படி என்று சொன்னால்

மூலதனமும் &உபரி உழைப்பும்:
----------------------------------------------------------
மூலதனம் அதன் வளர்ச்சி முதலாளித்துவ காலகட்டத்தில் சிறப்பாக மார்க்ஸால் விரித்துரைக்கப்பட்டது
உபரி மதிப்புதான் மூலதன திரட்சிக்கு வழிவகுக்கிறது என்று மார்க்ஸ்தான் அறிந்து சொன்னார்
அந்த உபரி மதிப்பு சம்பளம் கொடுக்கப்படாத உழைப்பு நாள் என்பதுதான் மார்க்சின் கண்டு பிடிப்பு
இது உங்களுடைய அல்லது வேறு எந்த ஒரு முதலாளித்துவ வாதியின் கண்டு பிடிப்பும் அல்ல
(இப்போ தேவை சப்ளை என்ற உங்கள் பழைய வாதத்தில் இருந்து
உற்பத்தி மூலதனம் என்ற புதிய நிலைபாட்டுக்கு வந்து இருக்கீங்க)

உற்பத்தி கருவிகள் அதன் வளர்ச்சியை தீர்மானிப்பது எது?
------------------------------------------------------------------------------
ஆனால் பாருங்கள் உற்பத்தி நடைமுறையில் கருவிகள் படைக்கிறார்களே தவிர
கருவிகள் படைப்பது என்ற சமூக நடைமுறை ஒரு தனியான விசயம் அல்ல

உற்பத்திக்கும் உற்பத்தி உறவுகளுக்கு உள்ள விதி என்ன? -நிலவுடமை சமூகத்தில்
--------------------------------------------------------------------------
நிலபிரபுத்துவ சமூகத்தில் இருந்த உற்பத்தி உறவுகளை தீர்மானிப்பது அங்கே நிலம் நிலவுடமையாளர்
கையிலும் உற்பத்தி கருவிகள் உழைப்பாளர் கையிலும் இருப்பதை உணருங்கள்

நிலம் வைத்திருப்பவன் நிலபிரபு நிலம் அவனுக்கு சொந்தம்

ஆனால் கலப்பையும் மற்ற கருவிகளும் வைத்திருக்கும் விவசாயி அவனுக்கு அடிமை இல்லை \

மாறாக தனது துண்டு நிலத்தில் தன் சொந்த கருவிகளை கொண்டு அவன் உற்பத்தியில் ஈடுபடுகிறான்

உற்பத்திக்கும் உற்பத்தி உறவுகளுக்கு உள்ள விதி என்ன?முதலாளித்துவசமூகத்தில்
---------------------------------------------------------------------------------------------------------------
முதலாளித்துவத்தில் உற்பத்தி கருவிகள் முதலாளிக்கு சொந்தம் உழைப்பாளியிடம் தன் சொந்த உழைப்பை தவிர

விற்பதற்கு வேறொன்றும் இல்லை எனவே அவன் வாழ்நிலை அதுக்கு தகுந்தால் போல மாறுகிறது

மூலதனம் பற்றிய விதிகள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது அதற்கான சமூக முன்நிபந்தனைகள் என்ன?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதே மூலதனம் எனும் தியரி முதலாளித்துவம் வருவதற்கு முன்பு ஏன் யாராலும் கணிக்க முடியவில்லை

நீங்கள் சொல்வது மாதிரி இருந்தால் லாபம் லாபம் என கூவிகொண்டு இருந்த உங்கள் அறிஞர்கள்
உபரி மதிப்பை கண்டு பிடிக்கவில்லை என்பதை கவனியுங்கள்
உபரி மதிப்பெ முதலாளித்துவ சமுகத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டு விரித்துரைக்கப்பட்டது
(மார்க்சை இந்த வேலையை செய்ய சொன்னதே மூலதனம் தான் என சொல்ல மாட்டீங்களே)
அன்றைய சமூக அமைப்பு அவரை டாஸ்கேபிடலை படைக்க உந்தியதே தவிர
கண்டுபிடிக்கவேண்டும் என்ற ஒற்றை ஆராய்ச்சி மனப்பான்மை மட்டும் இல்லை
ஆக மூலதனம் என்ற விசயம் மார்க்ஸால் மூலதனத்தின் தன்மை
ஒரு பொருளின் மதிப்பு என்பது அதன் உற்பத்தி செலவின் பரிமாணம் என்பதும்
மார்க்ஸால் சொல்லப்பட்டது . நீங்கள் சொல்வதுபோல தேவை -சப்ளை -கண்டுபிடிப்பு - உற்பத்திக்கு
மூலதனம் அடிப்படை இல்லை மாறாக உற்பத்தி நடைமுறை நிலபிரவுத்துவத்தில் மூலதனம் இல்லை நிலபிரவு கையில் நிலம் இருந்தது உற்பத்தி

கருவிகள் விவசாயிகளிடம் இருந்தது .

(இங்கே கண்டுபிடிப்பு எனும் நிகழ்ச்சி போக்கை உற்பத்தி சாராத தனியே நிகழும் ஒன்றாக
அதுவே தீர்மானகரமான விசயமான நீங்கள் சொல்வது நடைபெற்ற இரண்டு முதலாளித்து புரட்சிகளை மறுப்பதாகும் )

///சிலரின் முதலீட்டில் ஏற்பட்ட குறை பதிப்பு- உபரி மதிப்பு லாபம் என்றால், குறை மதிப்பு அல்லது நட்டம், உபரி மதிப்புக்கு எதிரிடையான குறை

மதிப்பு என்று குறிப்பிட்டுள்ளேன். லாபம் நட்டம் என்ற சொற்கள் மார்க்சிய அகராதியில் பாவப்பட்ட சொற்களாகி விட்டன என்பதால் என்

சொல்லாக்கம் இது.) சிலரை மட்டும் பாதிக்கிறது. ஆனால், அரசாங்க நிறுவனங்களின் குறை மதிப்பு அர்சாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும்

மக்களையும் பாதிக்கிறது. நட்டத்தில் ஓடும் ஒரு அரசாங்க நிறுவனம் அதை ஈடு செய்ய வேண்டும் என்றால், சம்பளத்தைக் குறைக்கிறது அல்லது

வேலையை நீக்கி வீட்டுக்கு அனுப்புகிறது. சீனா போன்ற நாடுகளிலும், அமெரிக்க போன்ற நாடுகளிலும் வேலையை விட்டு அனுப்புவது சுலபம்,

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் தொழிற்சங்கங்கள் பிரசினை செய்யும். அதைக் காட்டிலும் பாதிப்பு, இந்த நட்டத்தால் , மக்கள் நலன்

நோக்கிய முயற்சிகளுக்குக் கிடைக்க வேண்டிய நிதி கிடைப்பதில்லை.//
(இந்த இடத்தில் ஒரு சோசலிச நாடும் லாபத்துக்காக இயங்கும் என சொல்லி அதன் உற்பத்தி நடைமுறையை கொச்சை படுத்தாதீர்கள்
தேவைக்கான திட்ட மிட்ட உற்பத்தி இங்குதான் நடக்கும் உற்பத்தியின் முழு நோக்கம் லாபமல்ல தேவையை பூர்த்தி செய்தல் )

லாபம் என்ற கருத்துக்கும் உபரி என்பதற்கு பெரிய வித்தியாசம் இருக்கு அண்ணே அங்கேதான் பாரிய வேறுபாடு உங்களுக்கும்
எனக்கும் இருக்கு சம்பளம் கொடுக்கப்படாத உழைப்பான உபரி ஒரு தனிமனிதனுக்கு போவதை சோசலிசம் தடை செய்கிறது
ஏனெனில் லாபத்துக்காக உற்பத்தி செய்யும் முதலாளியால் அதே போல லாபத்துக்க உற்பத்தி செய்யும் இன்னொரு முதலாளி
இப்படி ஒரு போட்டி நிலவுது அது சந்தையின் விலையில் விளைவுகளை ஏற்படுத்த அந்த விளைவுதான் கூலி குறைப்பு ஆள்வெளியேற்றம்

இன்னபிறா( அய்யா இதெல்லம்ரொம்ப நாளைக்கு முன்பே நிரூபிச்சுட்டாங்கய்யா என்னைய விடுங்க சாமி)

ஆக மூலதனத்தை ஆட்டம் போட விட்டால் முக்கியமாக அந்த ஆட்டம் தனிமனிதனிடம் லாபநோக்கில் அமைந்தால் சமூகத்தில் அது பாரிய

இழப்புகளை ஏற்படுத்துகிறது (அமெரிக்க்கா போன்ற நாடுகளின் எல்லாரும் சுகமா இருகாங்களே என்பதற்கு அசுரன் ஒரு விளக்கம் கொடுத்து

இருக்கார் பாருங்க லெனின் ஏற்கனவே சொன்னார் தனது மக்களுக்கு ஏகதிபத்தியம் எழும்புத்துண்டுகளை வீசவே செய்யும் என்று )

லாபத்துக்கான உற்பத்தியை தேவைக்கான உற்பத்தி என சொல்வதா?
--------------------------------------------------------------------------------------------
சரி தேவைக்கேற்ற சப்ளை இல்லாமல் லாபத்தின் மூலம் நிர்ணயிக்கப்படுவதாக சந்தையின் போக்கை
மாற்றிவிடும் முதலாளிகள் சந்தையில் கிடைக்கும் லாபத்துக்கான உற்பத்தி என்பது தேவைக்கான உற்பத்தி என ஜோக்கடிக்காதீங்க
ஆகவே தேவை -கண்டுபிடிப்பு -உற்பத்தி -சப்ளை என மீண்டும் ஜோக்கடிக்காதீங்க

//சோஷலிச நாடுகளில் உழைப்பு முகாம்களை ஏற்படுத்தலாம். குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் உபரி

மதிப்பை ஏற்படுத்தினால் தான் அந்த தொழில் முனைப்பு பயனுள்ளதாய் இருக்கும். அது தான் நடந்ததும். சோஷலிச நாடுகளில் உபரி மதிப்பு

இருந்ததால் தான் அந்த நாடுகள் விண்வளிப் பயணம் மேற்கொள்ள முடிந்தது என்று நான் முன்னால் கூறியிருந்ததும் இதன் விரிவு தான்.//

சோசலிச முகாம்கள் கூலியை குறைக்க ஏற்படுத்தப்பட்டது எனும் உங்கள் பார்வையை என்ன சொல்ல முடியும் :))
உழைப்பின் பயனை சமூகப்படுத்ததான் ஏற்படுத்தப்பட்டது .

//சோஷலிச நாடுகளின் அர்சாங்கம் மக்களுடையது அதனால் அரசாங்க நிறுவனங்களில் தொழில் செய்பவர்கள் அதன் உரிமையாளர்கள் என்ற

முறையில் உற்பத்தி உறவு மாற்றி அமைக்கப் படுகிறது என்பது சோஷலிஸ்டுகளின் வாதம். இந்த வாதத்தின் பிரசினை என்னெவென்றால்,

அரசாங்கம் எனபது மக்களுக்குச் சொந்தமானது சோஷலிசத்தின் கீழ் என்ற பொய் தான். உண்மையில் மக்களுக்குச் சொந்தமான அரசு என்பது

என்ன? அரசினால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களால் நடத்தப் படும் அரசு என்று வைத்துக் கொண்டாலும் கூட - அப்படி இல்லை என்றாலும் - ஒரு

சிறு குழு தான் அங்கேயும் ஆட்சியில் உள்ளது. ஒரு சிறு முடிவைக் கூட எடுக்க எல்லோரிடமும் வாக்கெடுப்பு நடத்த முடியாது. அதனால்

அங்கேயும் சிறு குழு ஆட்சி தான் இல்லையா?//

அய்யா அரசங்கம் மக்களால் அமைக்கப்பட்டதுன்னு நீங்க சொல்லி வறீங்களே இப்போ இருக்கிற முதலாளித்துவ அரசாங்கம்
அதான் பொய் மக்களால் அமைக்கப்பட்ட அமெரிக்க அரசாங்கம் ஏன் மக்க்களை கொல்லுகிறது இதை பத்தி ஏன் பேச மறுக்கிறீகள்
மக்களுக்கு சொந்த மான அரசு சோமாலியாவிலும் இன்னும் மூன்றாம் உலகநாடுகளிலும் மக்கள் பட்டிவியால் சாவதை கூட கண்டு கொள்ளாமல்
இருப்பது ஏன் இன்றுள்ள முதலாளித்துவ அவலத்துக்கெல்லாம் உங்கள் பதில் அல்லது தீர்வு என்ன?

//பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது உண்மையில் சிறு குழுவின் ஆட்சி தான் என்றால்,அந்தக் குழுவின் சர்வாதிகாரம் எப்படி ஜனநாயக

ரீதியாய் இருக்க முடியும்? வெவேறு குழுக்களிடையே எழுட்ந்த பொருளாதாரப் பிரசினைகள் எப்படி தீர்க்கப் பட்டன? ரஷ்ய

மேலாண்மையாளர்களின் மற்ற பிரிவுகள் ஒடுக்கப் பட்டதும் நடந்ததில்லையா?//

பாட்டாளிகளால் தீர்மானிக்கப்படும் அரசாங்கம் சிறு குழு என்பது முதலாளிகளில் வாதம்தான் தலைமைஇயில் ஒரு லெனில் தான் இருக்கமுடியும்
3 கோடி பாட்டாளியுமா இருக்க முடியும் இதை வச்சி அது சிறு குழுன்னு சொல்லாம வேற காரணம் இருந்தா பேசுங்க
***

//கண்டுபிடிப்புகள் சமூக மாறுதலுக்கு வித்திட்டது உங்கள் கண்முன்னாலேயே நட்ந்திருக்கிறதே. ரேடியோவும் டெலிவிஷனும், டெலிஃபோன் போன்ற

தொடர்புச் சாதனங்களும் உலகத்தையே சுருக்கி விட்டன.//
உற்பத்தி நடைமுரை கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது
ஒரே விதமான கண்டுபிடிப்புகள் வெவ்வேறு நபர்களால் ஒரே சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டது
என்ற உண்மை இதைத்தான் காட்டுது கண்டுபிடிக்கு என்பது சமூக உற்பத்தி நடைமுறையில் தொடர்ச்சி தான் மாறாக மூலதனத்தின் வால் அல்ல

// யோசித்துப் பாருங்கள். முதன் முதலில் மனித குலம் கண்டுபிடுத்த சக்கரம் இன்று எப்படி பரிணமித்திருக்கிறது. சக்கரத்தைக் கொண்டும், ஒரு

மாட்டைக் கொண்டும் மனித உழைப்பை எப்படி எளிமைப் படுத்தலாம் என்பது எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு. //

ஆமாம் இந்த கண்ட்புடிப்பு அந்த உற்பத்தியில் ஈடுபட்டவர்களால் வந்து இருக்க முடியுமே தவிர வேறு எப்படி

அந்தகாலத்திலே எந்த விஞ்ஞானி கண்டுபிடிச்சான் சக்கரத்தை உற்பத்தியில் ஈடுபட்ட வர்கள் கண்டுபிடிச்சார்கள்

அதே கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சி முதலாளித்துவ சமூகத்தில் டிராக்டராகவும் பரிணமித்தது நீராவி இயந்திரங்கள் கண்டு பிடிச்சது ஒரு பெரிய
புரட்சியை முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படுத்தியது என்றால் கண்டுபிடிப்புகள் தனியா சமூகத்தின் உற்பத்தி நடைமுறைக்கு வெளியே தொங்குதுன்னு

அர்த்தாமா அதுவே சமூக வளர்ச்சியை தீர்மானிக்குதுன்னு அர்த்தமா அதுவே சமூக மாற்றத்தை கொண்டு வரும்னு அர்த்தாம் இல்லை இல்லை

//அதனால் கிராம சமுதாயமே மறிவிடவில்லையா? கடந்த நூற்றாண்டில் உருவாக்கப் பட்ட நீராவி இயந்திரம் எப்படி சமூகத்தைப் புரட்டிப்

போடுவிட்டது. இந்த மாற்றத்திற்கும் உற்பத்தி உறவுக்கும் எந்த தொடர்புமில்லை. இது டெக்னாலஜி மாற்றம் அதன் மூலமாக மனித சமூகம்

அடைந்த மாற்றம். இதில் உற்பத்தி உறவு எங்கிருந்து வந்தது?
நன்றி
பழைய அனானி

உங்கள் மொத்த புரட்டலையும் உடைச்சாச்சு வேற விசயம் பேசுங்க

November 02, 2007

Anonymous said...
.புராதன கம்யூனிச சமுதாயம் என்பதற்கு ஆதாரஙள் மார்க்ஸ் உட்பட யாராலும் தரமுடியாது என்றும், புராதன சமூகங்களை ஒத்த , இன்றுள்ள நாகரிகம் தொடாத சமூகக் குழுக்களை ஆய்ந்து எழுதப்பட்ட நூல்களும் கூட கம்யூனிசம் அங்கே இருப்பதாய்ச் சொல்லவில்லை என்று மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன். ஐரோப்பிய படையெடுப்பில் அழிக்கப்பட்ட , அமெரிக்கப் பழங்குடி மக்களும் கூட ஓரளவு புராதன நிலையில் வாழ்ந்தவர்கள் தான். அவர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்தல பற்றியும் பல குறிப்புகள் உள்ளன. அவர்கள் கம்யூனிச சமூகத்தில் வாழ்ந்திருக்க வில்லை. நீங்கள் மீண்டும் மீண்டும் மார்க்ஸ்வேதமே சரி என்று வாதிடுகிறீர்கள்.
அதே போல் தான் உற்பத்தி உறவும். மார்க்ஸ் எழுதிய காலகட்டம் கைவினைப் பொருட்களிலிருந்து சிறு தொழில்களை நோக்கியும், ஓரளவு பெரும் தொழிற்சாலைகளை நோக்கியும் நகர்ந்த காலகட்டம். அந்த வெளிப்ப்டையாய்த் தெரிந்த மாறுதலை வைத்து எழுதப் பட்டது மூலதனம். பெரும் உற்பத்தியும், கணிணி மையப்படுத்திய உற்பத்தியும், அசெம்ப்ளி லைன் உற்பத்தி முறைகளும், நிர்வாகவியலில் ஏற்பட்ட மாற்றங்களும் என்று தொழில் உற்பத்தி இன்று சம்பிரதாயமான தொழிலாளி- முக்தலாளி உறவைத்தாண்டி தொழில் முனைப்பு வளர்ந்துவிட்டது. ஒரு பொருளின் மதிப்புக் கூட்டுதல் வெறும் தொழிலாளியின் உழைப்பினால் மட்டுமல்லாமல், சந்தை சக்திகளான தேவை, சப்ளை, உற்பத்தியிடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் பொருளின் தேவை இருக்கிறது என்பதைப் பொறுத்டு மாறுபடும். அதனால் உபரி மதிப்பு தொழிலாளிக்குச் சேரவேண்டியது, அதனால் அவன் சுரண்டப் படுகிறான் என்ற வாதமே ஒரு அபத்தம் என்பது தான் நான் மீண்டும் மீண்டும் சொல்வது. இதனை நம்பினால், நட்டம் ஈட்டும் தொழில்களில் தொழிலாளி முதலாளியைச் சுரண்டுகிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்ளவேண்டும். அது தான் உங்கள் நிலை பாடா?2. உங்களுக்கு அமெரிக்கா அல்லது மற்ற மூலதனவாத நாடுகள் பற்றி என்ன தெரியும்? மூலதனவாதத்தை முழுமையாய் ஒப்புக் கொண்ட நாட்கள் எல்லாமே சொர்க்கலோகம் என்று எவரும் சொல்லவில்லை. மக்கள் முன்னேற்றத்துக்கான தொடர்ந்த முயற்சியில் பல காரணிகள் உள்ளன. பொருளாதாரம், அரசியல், சமூகக் கலாசாரப் பின்னணி என்ற பல விஷயங்கள் சேர்ந்து தான் ஒரு நாட்டின் தகுதியையும் அவற்றின் முனேற்றத்தையும் நிர்ணயிக்கிறது. சோஷலிசம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு பகல் கனவு. சோஷலிச சமூகத்தின் அரசியல் சர்வாதிகாரத்தை நியாயப் படுத்த ஒரு கருத்தியலைப் பிடித்துத் தொங்குகிறீர்கள். மூலதன நாடுகளும் அராஜக நாடுகளாய் இருக்கலாம். அது வேறு பிரசினை. ஆண் தப்பினால் பெண் என்று சோஷலிசம் தப்பினால் மூலதனம் என்று சமூகத்தின் பிற அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், மூலதனப் பூச்சாண்டி காட்டி கம்யூனிஸ்டுக் கட்சிக்கு ஆள் சேர்க்கலாம். ஆனால் அதில் எந்த அறிவுபூர்வமான அணுகலும் இல்லை. கியூபா, சீனா போன்ற சோஷலிச சொர்க்க புரியை விட்டு, உயிரைப் பணயம் வைத்து ஏன் மக்கள் கள்ளத்தோணியிலும், கப்பலில் கண்டெஇயினர்களிலும் அடைந்து கொண்டு அமெரிக்காவையும், ஐரோபிய நாடுகளையும் நோக்கி வருகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி அதற்கு விடை காண முயன்றால் உங்களுக்கு இதன் பதில் கிடைக்கும்.

மூலதனத்தை யாரும் உயர்த்திப் பிடிக்க வேண்டியதில்லை. அதுதான் பொருளாதாரச் செயல்பாட்டின் அடிப்படையே.3.மார்க்ஸிய அறிஞர்கள் விஞ்ஞா பூர்வமாக படிப்படியாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று படித்து மெய் சிலிர்த்துப் போனேன். இது எப்படி விஞ்ஞானம் ஆயிற்று என்று தெரியவில்லை. இந்த் மார்க்ஸிய அறிஞர்கள் ஐன்ஸ்டீனிடமும், அப்துல் கலாமிடமும் பாடம் பயின்றார்களா? விஞ்ஞான அணுகல் முறை என்பதை கட்சி பாஸ்களிடம் இல்லாமலெந்த விஞ்ஞாயிடம் கற்றார்கள்? சமூகவியல் , பொருளாதாரம், மானிடவியல் என்பவை விஞ்ஞானம் அல்ல. அவற்றை சமூக விஞ்ஞானம் (socail science) என்று அழைப்பது, அவை விஞ்ஞானம் அல்ல என்று அழுத்திச் சொல்வதற்காகத் தான்.

மார்க்ஸிய விஞ்ஞானம் என்பது பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி போன்றதல்ல. இந்து விஞ்ஞானம், கிருஸ்துவ விஞ்ஞானம் என்பது போலத்தான் இது. சமூக விஞ்ஞானத்தில் கடந்த காலத்தை ஆய்ந்து தான் சொல்ல முடியுமே தவிர எதிர்காலத்தைப் பற்றி சொல்ல முடியாது. கலிலியோவை நம்பாமல் பூமியைத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று சாதித்து கலிலியோவிற்கு தண்டனை கொடுத்த கிருஸ்துவமதப் பாதிரிகள் மாதிரி கம்யூன்ஸ்டுகளும் புராதன கம்யூனிசம் ,முதலாளித்துவம், வருது பார் சோஷலிசம், உலகின் எல்லா நாடுகளும் சோஷலிசம் பூத்துக் குலுங்கி , கம்யூனிசம் மலர்ந்து அரசு உதிர்ந்து, எல்லா மக்களும் அச்சில் வார்த்தாற்போல ஆறடி உயரம், ஒரே மாதிரி அறிவு, ஒரே மாதிரி பொறுப்புணர்வு என்று சொல் கொண்டே இருக்கிறீர்கள். இதையும் நம்ப ஒரு கூட்டம் தயாராய் இருக்கிறது. இதற்கு விஞ்ஞானம் என்று பெயரில்லை. சோதிடம் அல்லதெ நம்பிக்கை. விஞ்ஞானம் நம்பிக்கை அல்ல. தரவுகள், நிரூபணங்கள். விஞ்ஞானத்தின் மிக முக்கியமான தேவை கருதுகோள்கள். hypothesis.அதாவது எந்தச் சூழ்நிலையில் ஒரு விஞ்ஞான உண்மை பொருந்தி வரும் எனப்து. எல்லாச் சூழ்நிலையிலும் உண்மையாய் இருக்கும் என்ற ஓர் விஞ்ஞானக் கோட்பாடு கிடையாது. உதாரணமாய் எளிய உதாரணமாய் , நீரின் கொதி நிலை கூட காற்றழுத்தத்தைப் பொறுத்தது.

எதிர்காலத்தை கணிக்கிற விஞ்ஞானம் இருக்கிறது. உதாரணமாய் ஒரு எரி நட்சத்திரம் எப்போது பூமியின் பயணப் பாதையை எப்போது கடக்கும் என்று விஞ்ஞானிகள் துல்லியமாய்ச் சொல்கிறார்கள் ஆனால் அதற்குக் கணக்குகள் உள்ளன. முன்னே எப்போது கடந்தது , அதன் பயணப் பாதை என்ன , அதன் வேகம் என்ன என்று கணக்குடன் அவர்களால் சொல்ல முடியும். ஆனால் சோஷலிசம், கம்யூனிசம், பரலோகம், கிறுஸ்து மீண்டும் வருவார், கன்னிமேரி, இறைத்தூதர் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைகள். இறை நம்பிக்கை போலத்தான் எங்கள் கம்யூனிச நம்பிக்கை என்று சொல்லிவிட்டீர்களானால், இன்னொரு லாபமும் இந்தியாவில் இருக்கிறது. மைனாரிடி அந்தஸ்தும் , ரிசர்வேஷனும் கிடைக்கலாம். விஞ்ஞானம் என்ற அடைமொழியைச் சேர்த்ததாலேயே மார்க்ஸியம், இந்து, இஸ்லாம், கிறூஸ்துவம் போன்றவை விஞ்ஞானமாகிவிடாது.

எல்லா நாடுகளும் சோசலிச கட்டுமானத்தில் உறுதிப்பட்டவுடன் தான் கம்யூனிச சமுதாயத்திற்கான பாய்ச்சல் ஒரே நேரத்தில் நிகழும்.
என்று இறுதிதீர்ப்பு நாள் வடிவில் உங்கள் சோதிடத்தைச் சொல்லிவிட்டீர்கள். இதை எப்படி அறிவுபூர்வமாய் எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. என் பிள்ளை நாளைக்கு இரண்டடி வளர்ந்து விடுவான் என்று ஒரு தகப்பன் சொன்னால் அடுத்த நாள் அவன் முன்னால் போய் நின்று அய்யா உன் பையன் இரண்டடி வளரம் முடியாது என்று அளந்து காட்டலாம். 2000-ம் ஆண்டு பிறந்த வுடன் உலகம் அழிந்துவிடும் என்று சோதிடம் சொன்னவ்ர்களிடம் , 2001-ல் போய் நின்று அபத்தத்தைச் சுட்டிக் காட்டலாம். எல்லா நாடுகளும் சோஷலிசம் ஆகி - எப்போது 6000 ஆண்டுகள் கழித்தா?- அப்புறம் கம்யூனிசம் மலரும் என்று விஞ்ஞான ரீதியாய் சொல்லும் ஒருவரிடம் என்ன அறிவுபூர்வமான விவாதங்கள் நடத்த முடியும்? சற்றே யோசித்துப் பாருங்கள். இன்னமும் கூட எல்லா சமூகங்களையும் பற்றிய உணர்வு நமக்கு இல்லை. உலகின் பாதி நாடுகள் இஸ்லாமிய நாடுகள் கம்யூனிஸ்ட் என்று பெயரைச் சொனாலே கடவுள் மறுப்புக்காகக் கழுவில் ஏற்விடுவார்கள். பாகிஸ்தான் உருவாக தேசிய சுய நிர்ணயக் கோட்பாட்டின் கீழ் கம்யூனிஸ்டுகள் ஆதரவு தெரிவித்தார்கள். பாகிஸ்தான் பிறந்த வுடன் ஜனாப் ஜின்னா செய்த முதல் காரியமே கம்யூனிஸ்டுக் கட்சியைத் தடை செய்தது தான். ஐரோபிய நாடுகள் இடதுசாரி , கம்யூனிசம் என்று பேசுவார்களே தவிர தம்முடைய சுடக்ந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் சோஷலிசம் மலர்ந்த சீன உங்கள் ஆருடத்தைப் பொயாக்கிக் கொண்டு மீண்டும் மூலதனப் பாதைக்குப் போய்விட்டது. சோவிய்டத் ரஷயாவிலோ, கமுயூனிஸ்ட் காலத்திய நீண்ட வரிசைகளும், ஸ்டால்னியக் கொடுங்கோன்மைகளும் இன்னும் மறந்து விடவில்லை. இருப்பது ஒரு நேபாளம், இந்தியாவில் கேரளா, மேற்கு வங்கத்தின் இடது சாரிக் கட்சிகள் என்ற ப்யரில் சாதி மற்றும் தனிமனிதச் செல்வாக்கினால் கட்டப் பட்ட உதிரிக் கட்சிகள். இதில் எங்கே சோஷலிசம் வந்து, கம்யூனிசம் வந்து. என்ன தோழரே நீங்க காமெடி கீமெடி பண்ணலியே?4. உலகின் எல்லா போர்களுக்கும் காரணமான ஏகாதிபத்தியம் என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டீர்கள். சர்வரோக நிவாரணி கம்யூனிசம், சூப்பர் வைரஸ் முதலாளித்துவம் என்ற எளிய சூத்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் சுயசிந்தனையற்ற கூட்டம் நம்பலாம். ஆனால் சிலுவைப் போர்களுக்கு எந்த முதலாளித்துவ ஏகாதிபத்தியம் காரணம்? ஹிட்லர் தொடுத்த போருக்கு எந்த முதலாளித்துவம் காரணம்? சீனா இந்தியாவின் மீது போர் தொடுத்ததற்கு எந்த ஏகாதிபத்தியம் காரணம். பாகிஸ்தான் தம்முடைய மக்கள் மீதே போர் தொடுத்ததற்கு எந்த ஏகாதிபத்தியம் காரணம்?5. வட கொரியாவும், போல் போட்டும் கம்யூனிஸ்டுகள் இல்லை என்று நீங்கள் சொன்னால் நான் ஏற்றுக் கொள்ளவேண்டியது தான். இஸ்லாமிய பயங்கர வாதத்திற்கு மக்கள் பலியாகும் போதெல்லாம், அவர்களை இஸ்லாமிய பெயர்தாங்கிகள் என்று கூறும் இஸ்லாமிய மேதாவிகள் மாதிரி நீங்கள் போல் போட்டும், வடகொரியாவும் கம்யூனிஸ்டுகள் இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் ஸ்டாலின், மாஒவின் படுகொலைகள் வெறுமே களையெடுத்தல் என் கிறீர்கள். பாருங்கள் உங்களுக்கும் கிறுஸ்துவத்திற்கும் உள்ள ஒற்றுமையை. போப் ஆசியாவில் கிறுஸ்துவிற்காக அறுவடை செய்ய வேண்டும் என்கிறார். நீங்கள் களை எடுத்தோம் என்கிறீர்கள். மக்கள் தாவரங்களாய்த்தான் நாங்கள் கருதுவோம் என்று சொன்னால், அமெரிக்காவில் உள்ள மக்கள் பொய் மக்கள் என்றால் நீங்களும், ஸ்டாலினும் தான் உண்மையான மனிதர்களாய் இருக்க வேண்டும்.4. நீங்கள் சொல்வது உங்களுக்கே புரிகிறதா? மூலதனத்தின் நலனை மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் எப்படி பேண முடியும். சோஷலிசத்தில் மக்கள் தேவையை யார் நிர்ணயிப்பார்கள்? பொலிட் பீரோவா? காஸ்ட்ரோவா? ஸ்புட்னிக்கை செலுத்தப் போகிறோம் என்று பாட்டாளி மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தினார்களா? ஸ்புட்னிக்கின் தேவை மக்களுக்கு என்ன?6.சோஷலிசத்தை நோக்கி மக்களைத் தானாக முரண்பாடுகள் தள்ளும் என்றால் ஏன் நீங்கள் கட்சி கட்டிக் கொண்டு பிரசாரம் செய்கிறீர்கள் . அரசு தானாக் உதிரும், மக்கள் தானாக சோஷலிசம் வேண்டி தள்ளப் படுவார்கள், என்றால் தானாய் நடக்க்ற ஒன்றுக்கு போராட்டமும், மண்ணாங்கட்டியும் எதற்கு. கட்சியைக் கலைத்துவிட்டு நிம்மதியாய் உட்கார்ந்திருங்கள்.சோஷலிசம் வரும்போது உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன். வந்து கொண்டாடுங்கள்.

நன்றி
பழைய அனானி

November 03, 2007

தியாகு said...
அனானிகளுக்கு பதில் அளிப்பது முழு நேரக்கொலை என சொல்லி வந்தேன் .

இருந்தாலும் இந்த அனானிக்கு கொஞ்சம் அதி மேதாவின்ற நினைப்பு இருக்கு தமிழ் மணிக்கு உலக இரட்சகன் என்ற நினைப்பு இருப்பதால் .

கொஞ்சம் பதில் அளிக்க துணிந்து வந்து இருக்கேன் .

மேலும் சாரமற்ற இவரது விவாதத்தின் வரிக்கு வரி நமது தோழர்களுக்கு பதில் அளிக்க முடியாமல் எல்லாம் இல்லை.

மாறாக இன்றைக்கு சமூகத்தின் மாபெரும் அவலங்களை குறித்து சிந்தித்து அவர்கள் எழுதும் பொன்னான நேரத்தை இந்த அவதூறு பார்டிகளிடம் வீணாக்காமல் இருக்க நினைத்து இருக்கலாம்.அதுதான் நல்லது .

--------------------------------
விமர்சனம் வைப்பது மட்டும் என் வேலை என கிளம்பிய

அனானிக்கு (பழைய அனானி)

1.புராதன கம்யூனிசம் இல்லை அப்படி ஒன்று இருந்து

இருக்க முடியாது என்பது இவரது வாதம்
சமூக வளர்ச்சியை ஆய்வு செய்த மார்க்ஸ் புராதண

சமூக அதாவது தான் வேட்டை ஆடிய உணவை

அப்போதே தமக்குள் பங்கிட்டுத்தான் வாழ்ந்திருக்க

முடியும் என சொல்லி இருந்தார் கருவிகள்

கண்டறியப்படாதா அந்த கால கட்டம் தனியுடமை

இல்லாத அந்த கால கட்டம் மனிதன் கூட்டாக

வாழ்ந்தாலே ஜீவிக்க முடியும் என்ற கால கட்டம்

இருந்து இருக்கத்தான் வேண்டும் .

ஆதாரம் கேட்டால் என்ன தரலாம் சொல்லுங்கள்
இந்த சமூகம் அதன் பதிவுகளை செய்ய ஆரம்பித்ததே
கொஞ்ச நாளைக்கு முன்னால்தான் எங்கிருந்து ஆதாரம்

கிடைக்கும் .

ஆனால் தர்க்க ரீதியில் பார்த்தால்

தன்னை தாக்க வரும் விலங்குகள் எதிர்கொள்ளும்

போராட்டம் ஆகியவற்றை தனிமனிதனாக தனி

குடும்பமாக இருந்த மனிதன் நிச்சயம் எதிர்க்க திராணி

அற்றவன். இது ஒன்று

மேலும் வேட்டை ஆடப்படும் விலங்குகளின் தசையை
வைத்து இருந்து உண்ண அவனுக்கு அப்போதைய

அறிவு இல்லாமல் இருந்து இருக்கும்போதும்
அவன் தனி உடைமையாளனாக இன்னும் வளராத
காலகட்டத்தின் போதும் பொதுவுடமை இருந்தது.

குடும்பமாக வாழ்ந்து இருப்பான் எனும் இவரது வாதம்
தவறு குடும்ப அமைப்புகள் தோன்றியது பிற்பாடுதான்

//ஏனென்றால் ஒரு குழந்தை பிறக்கும் போதே அதன்

தாய், தந்தை குடும்பம் என்று கொண்டு தான் பிறக்கிறது//

தாய் தந்தை நிச்சயம் தேவை ஆனால் குடும்ப அமைப்பு
இருக்காது என்பது உண்மை.
(இங்கு நான் எங்கெல்ஸில் குடும்பம் தனிசொத்து பற்றிய

நூலை பரிந்துரைக்கிறேன்)
ஆதியில் தோன்றிய மனித குழுக்களில் குடும்பம்

இருந்தது என்பதற்கு இவர்தான் ஆதாரம் தரவேண்டும்.

ஏனெனில் வரைமுறை அற்ற புணர்ச்சியின் பிற்பாடு தாய்

வழி சமூகம் தோன்றி அதன் பின் தான் தந்தை வழி

சமூகம் தோன்றியது எனும் உண்மையை இவர் மறந்து
அல்லது அதற்கான ஆதாரங்களாக எங்கெல்ஸ்

கொடுத்து இருக்கும் தகவல்களை பாராமல் கண்ணை

மூடி கொண்டு பேசுவது தவறு

//ஆதிகாலச் சமூகத்திலும் ஓர் இனக்குழு இயற்கை

வளங்களில் உடைமையால் வளம் பெற்றிருக்கும். வேறு

சில இனக்க்குழுக்கள் வசதிக் குறைவாய்த்தான்

இருந்திருக்கும்./

இவரும் ஆதாரம் தரவில்லை க்க்கும் க்கும் தான்

இன குழுதான் என்பதையும் குடும்பம் அல்ல

என்பதையும் ஒத்து கொள்கிறார்.

உடமை என்றால் என்னவென சொல்லாமல்

உடமை வளம் என பேசுவது இவர் அந்த

காலகட்டத்துக்கு அடுத்த காலகட்டத்தில் இருந்து

பேசுகிறார் என்பதை காட்டுகிறது

உடமை என்றால் என்ன வளம் என்றால் என்ன ஆதி

கால சமூகத்தில் உடமையும் வளமும் என்னவாக

இருக்கும் அய்யா பழைய அனானி ?

2. உற்பத்தி உறவுகள் சமூக சூழ்நிலையை தீர்மானிக்கும்

என்கிறோம் இல்லை என்கிறார்
ஆதாரம் இவர்தான் தரணும்

//சமூக சூழலுக்கு பல காரணிகள் இருக்கலாம். இயற்கை

வளம், தொழில் நுட்ப வளர்ச்சி, கல்வி, ஜனநாயகப்

பண்பு, வலுவான அரசு என்று பல காரணிகள் உண்டு//

ஆதி பொதுவுடமையில் முன்பாராவில் சொன்னமாதிரி

என்ன வளம் இருந்ததுன்னு முதல்ல சொல்லுங்க
அடுத்து தொழில் நுட்பமே இல்லாத காலமான ஆதி

பொதுவுடமையில் அந்த சமூக சூழலை

அவனது உற்பத்தி நடவடிக்கை அல்லாது தொழில்

நுட்படும் கண்டுபிடிப்பும் எப்படி தீர்மானித்து

அடுத்த கட்டமான ஆண்டான் அடிமை சமூகத்துக்கு

நகர்த்தி இருக்கும் அய்யா நீங்கதான் விளக்கனும்

அரசு சமூகம் தோன்றிய உடனே அரசு தோன்றியதா

அரசு தோன்ற வேண்டிய காரணம் என்ன

இதெல்லாம் கொஞ்சம் சொல்லுங்க

எதன் அடிப்படையில்னா நீங்க சொன்ன அதே தொழில்

நுட்பம் வளர்ச்சி , இன்ன பிற வெங்காயங்களினா

ஆமா உங்க பழைய தேவை சப்ளையை விட்டுடீங்க

அதன் அடிப்படையில் சமூகத்தை விளக்குங்கன்னு

கேட்டது ஞாபகம் இருக்கா?

//பொருளாதாரத்தில் Components Theory என்று ஒன்று

உண்டு. உதாரணமாக ஒரு தேநீர்க் கடையில் தேநீர்

தயாரிக்க பால், சர்க்கரை, தேயிலை என்ற பயன்

பொருட்கள் இல்லமல், கடை வாடகை, மூலதனத்டிற்கான

வட்டி என்று பல உண்டு. தொழிலாளியின் உழைப்பினால்

தான் உபரி மதிப்புத் தோன்றுகிறது என்பது அபத்தம். //

ஆமாம் டீ மாஸ்டரை தவிர கடை பையனை தவிர
அனைத்தும் முக்கியம் ஆனா அந்த தொழிலாளியும்
அந்த முதலாளியும் முக்கியம் இல்லை

அதாவது இந்த உற்பத்தி சக்தி உற்பத்தி உறவு
இரண்டும் சேர்ந்த உற்பத்தி நடைமுறை முக்கியமில்லை
என்றி எவனாவது கேணையன் இருந்தா போய்

சொல்லுங்க.

இன்னொன்னு தொழிலாளியின் உழைப்பினால் உபரி

மதிப்பு தோன்றாமா பால் சட்டியில் இருந்து உபரி மதிப்பு

தோன்றுதோ .நல்ல தமாஸ் ஆனா சிரிக்காம அடிக்கும்
ஜோக்கின் தலைவர் நீங்கதான்.

3.கண்டு பிடிப்பு என்பது என்ன

சக்கரம் என்பதை எந்த விஞ்ஞானி கண்டு பிடிச்சான்

இன்னைக்கு அல்லாய் வீல்னு சொல்வதை விஞ்ஞானி

கண்டு பிடிச்சான்

அன்னைக்கு சக்கரம் என்பதை கண்டு பிடிச்ச விஞ்ஞானி

யார்.

விஞ்ஞானம் எனும் துறை உருவாகும் முன்பு கண்டு

பிடிப்புக்கான பேடன் எல்லாம் இல்லை என்பதற்கு

முன்பு கண்டு பிடிப்பு இல்லையா

உண்மைதான் தனி துறையாக அது இல்லாமல் இருந்தது

உற்பத்தி நடவடிக்கையில் கண்டுபிடிப்பு இணைந்து

இருந்தது .

ஒரு கல்லை நகர்த்த ஒரு பெரிய மரம் உதவும் என்பதை

கையால் கல்லை நகர்த்த முயற்சித்தவன் கண்டுபிடித்தான்

நெம்புகோல் தத்துவம் வருதற்கு முன்னாலேயே

நெம்பிக்கிட்டு இருந்தாய்ங்க நம்ம பயலுக அப்பு

எல்லாமே அப்படித்தான் தொழிலாக அது பிரிந்த

காலங்கள் என்று ஒன்று உண்டு

வாளை கண்டு பிடிச்சதும் தான் போருக்கு போனான்

என்பது மாதிரி அபத்தமா பேசாதிங்க

சண்டை எனும் தொடர் நிகழ்வில் ஒரு கட்டம்தான் வாள்

கண்டு பிடிப்பு

துப்பாக்கி கண்டு பிடிப்பு

ஆனா சண்டையை தீர்மானிப்பஹ்டு வாளும்

துப்பாக்கியுமா

அல்ல வர்க்க போராட்டம்

அடிமையாக வைச்சு அடிமைக்குள்ளயே சண்டை

போடச்சொல்லி வேடிக்கை பார்க்கும் ஆண்டான்களுக்கு
எதிராக செய்த கிளர்ச்சிதான் ஆண்டான் அடிமை

போராட்டம் ஸ்பார்டகஸ் செய்தது

சரி வாள் கண்டு பிடிச்சாச்சு ஒரு சண்டை போடுவமா

துப்பாக்கி கண்டு பிடிச்சாச்சு ஒரு சண்டை

போடுவமான்னு எவனும் கிளம்ப மாட்டான்

அடுத்து , நீராவி எஞ்சின்களை கண்டு பிடிச்சது பெரிய

விசயம்தான் அதா முக்கியம்

ஒரு சமூக ஆய்வு என்பது கண்டு பிடிப்புகளின்

அடிப்படையிலா செய்யப்பட வேண்டும் இல்லை

நீராவி எஞ்சினை வைச்சு அந்த உற்பத்தி சக்திகளை

வைத்து எம்மாதிரியான உற்பத்தி உறவுகள் ஏற்பட்டன

என பார்க்கனும்

இயந்திரங்கள் வந்துதான் நமக்கு பிழைப்பு போச்சுன்னு

கூட முந்திய தொழிலாளிகள் எந்திரத்தை

உடைத்தார்கள் அது தவறு இதை தீர்மானிப்பது உற்பத்தி

சக்திகளும் உற்பத்தி உறவுகளும்தான் என அய்யா

மார்க்ஸ் வந்தவுடன் .

உற்பத்தி கருவி யார்கிட்ட இருக்கு என்பதுதான்

முக்கியம் எனப்தை புரிந்து கொண்டார்கள்.

அனானிகிட்ட கொஞ்சம் பயமா இருக்கு

டெலிபோன் கண்டுபிடிக்கும் முன்பு சமூகமே இல்லைன்னு

சொன்னாலும் சொல்லிடுவார்.

கிரகாம்பெல் ஒரு தொழிலாளி அல்ல என்ன ஒரு கண்டு

பிடிப்பு .

அனானி உற்பத்தி நடைமுறையிலன்றி கண்டு பிடிப்புகள்

உருவாகுதுன்னு சொன்னேன்..

ஆனா கிரகாம்பெல் எந்த உற்பத்தி நடைமுறையில்

இருந்தார் என கேட்பார் .

விஞ்ஞானம் எனும் துறை இருக்கே அது தனித்து

உருவாகலை வளரவில்லை

உற்பத்தியில் இருந்து உருவாகி பிறகு தனி துறையானது.

(இப்ப கண் டாக்டர்கள்னு தனியா ஒரு துறை உருவாகி

வளர்ந்து பலன் அளிக்கவில்லையா அம்மாதிரி )

அது பல பொருட்களை கண்டுபிடிக்கிறது .

அப்படித்தானே நடக்கும் நடக்கனும் .

ஆனால் மீண்டும் சமூக மாற்றத்தில் டெலிபோன் என்ன

பங்காற்றியதுன்னு அனானிதான் விளக்கனும்

ஏன்னா கண்டுபிடிப்பினால் சமூகம் மாறுதுன்னு

கண்டுபிடிப்பு எந்த சமூகத்தில் இருந்து எந்த சமூகமா

மாத்தியதுன்னு அவரே சொல்லவேண்டும் .

(ஆனால் மீண்டும் எந்த கண்டுபிடிப்பும் உற்பத்தி

நடைமுறையில் உபயோகப்படும் போதுதான் உற்பத்தி

சக்தியில் -உற்பத்தி நடைமுறையில் அது புகும் போது
சமூக மாற்றத்தை உண்டாக்குது)

அண்ணே தலையை விட்டு வால பிடிச்சு தொங்குறார்

இந்த இடத்தில என்னா ஓட்டை விடுகிறார்னா

நான் கண்டுபிடிப்பு என்பதே தொழிலாளிகள்

செய்வதுதான் என்றும் வேற யாருக்கும் கண்டு பிடிக்க

முடியாதுன்னும் சொன்னதாக அர்த்த படுத்திகிறார்.

இதெல்லாம் சமூகத்தை மாற்றியதா இல்லையே

கண்டுபிடிப்பு என்பதும் ஒரு உற்பத்தி நடவடிக்கையாக

தனிதுறையாக பரிணாமம் அடைகிறது.

தனி திறமையான ஒரு துறையை R & D க்கு எங்க

கம்பெனியில் வச்சு இருக்கோம் இவங்க பொழுதுக்கும்

எதாவது புதுசா கண்டுபிடிச்சுட்டே இருப்பாங்கன்னு

வையுங்க

இவங்கதான் கம்பெனியின் வளர்ச்சி காரணம்னா இல்லை

இவங்க கண்டுபிடிச்சு சொல்வதை உற்பத்தியில்

உபயோகபடுத்தி அதன் தரம் சோதிக்கப்பட்டு

நிலைநாட்டப்படும்போதுதான் வளர்ச்சி என்பது வரும்.

(ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா இப்பவே கண்ண கட்டுதே ஏன்

இவ்ளோ சிரமப்பட்டு விளக்கம் கொடுக்கிறேன்னா
ரோட்ல போறவன் வாரவன் எல்லாம் கம்யூனிசம்

தப்புன்னுட்டு போறதுக்கும் நாம எதுக்கு

இருக்கனும்னுதான் அண்ணாச்சி )

ஆகவே உற்பத்தி நடைவடிக்கை சாராமல் இருப்பதல்ல

கண்டுபிடிப்பு என்பதே ஒரு துறையாக உற்பத்தி

நடவடிக்கையாக உருவாகிறது . போதுமாப்பா

இராமானுஜத்தை சொல்கிறார்

அவர் பெரிய மேதைதான் அவரோட இரட்டைகள்
ஆச்சரியம் தரும் விசயம்தான் . கணிதம் எனும் துறை

வளர்ந்து அதற்கான பங்கை அவர் கணித நூலை

கற்காமல் திடீரென செய்தார் என்றும் சமூகத்தின் முன்பு இருந்த விசயங்கள் அவர் பார்க்கவே இல்லை என்றும்
சொல்லி விடாமல் இருக்க அந்த இராமானுஜனை பிராத்திக்கிறேன் :)

November 19, 2007

தியாகு said...
//2. சமூக வளர்ச்சியை மார்க்ஸ் ஆய்வு செய்யவில்லை. சமூகவியல், மானுடவியல், மானுடவியல் அகழ்வாராய்ச்சி போன்றவை மார்க்ஸுக்குப் பிற்காலத்தில் தான் வளரத் துவங்கின. மார்க்ஸ் இப்படி இருந்திருக்கலாம் என்று சொன்னதாகச் சொல்லியிருக்கிறீர்கள். இருந்திருக்கலாம் என்பது ஆய்வு முடிவல்ல. ஆதாரம் ஒன்றும் இல்லை என்றால், அதை முடிந்த முடிவாக வைத்து விவாதிப்பது பயனற்றது என்பது தான் நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் ஆதாரம் இல்லை என்று சொல்கிற நீங்களே, மார்க்ஸ் அன்றே சொல்லிவிட்டார் அதனால் அது தான் உண்மை என்று சின்னக் குழந்தை போல அடம் பிடிக்கிறீர்கள்.//

அனானி மார்க்ஸ் ஆதாரம் எந்த நூலிலும் காட்டவில்லை ஒரு விசயம் தெரியுமா எங்கெல்ஸுக்கும் மார்க்ஸுக்கும் இடையே ஒரு வேலை பிரிவினை இருந்தது அரசு குடும்பம் தனிசொத்து என்னும் நூலை எழுதிய எங்கெல்ஸ் புராதண சமூகம் எப்படி இருந்தது என்பதற்கான பல ஆதாரங்களை தறுகிறார்
அதை படித்து பாருங்கள் .(அவர் அதில் கொடுத்து இருக்கும் ஆதாரங்களை முடிந்தால் மறுத்து பாருங்கள் ) நீங்க சொல்லி கிட்டே இருக்காம இல்லை என சொல்வதற்கு ஆதாரம் கொடுங்கள்

1.மனிதன் ஆதியில் குழுக்களாக வாழ்ந்தான் என்கிற
எங்கெல்ஸ் அவனிடம் அப்போது குடும்பம் தோன்றவில்லை என்கிறார்

2.ஆதியில் தோன்றியது தாய்வழி சமூகம்
ஒரு தாய் பலகணவன்கள் பல மகன்கள்

3வேட்டையாடி வரும் இறைச்சியை ஒரு தாய் சமமாகவே பங்கிட்டு கொடுப்பாள் கொடுத்து இருக்கிறாள்

// கூட்டாக வாழ்ந்து வந்தது கம்யூனிசம் அல்ல.//
இதுல தெரியுதுங்க நீங்க தப்பா புரிஞ்சது வர்க்கங்கள் அற்ற சமூகத்தை தான் நாங்கள் கம்யூனிசம் என்கிறோம் வர்க்கங்கள் தோன்றியது இடைகட்டத்தில்தான் ஆதி கட்டத்தில் வர்க்கம் தோன்றவில்லை என்பதைத்தான் அதை வர்க்கங்கள் அற்ற ஆதி பொதுவுடமை என்கிறோம்.

இனிமேலும் அத்தகைய பொதுவுடமை அமையுமான்னா
அமையும் அது விஞ்ஞான அடிப்படையிலானா
பொதுவுடமையா இருக்கும்

// மனிதன் இன்றும் கூட கூட்டாகத் தான் வாழ்ந்திருக்கிறான் அன்றைய வேட்டையாடும் சமூகத்திலும், சில திறமைகளௌக்கு மதிப்பு நிறைய இருந்திருக்கும். மிகச் சரியாக குறிபார்த்து விலங்குகளைக் கொல்லத் தெரிந்தவனுக்கு, மற்றவர்களைக் காட்டிலும் அதிக பங்கு கிஅடித்திருக்கும்.//

இந்த இடத்தில் கூட்டாக வாழ்வதை கம்யூனிசம் என நான் சொன்னதாக நினைத்து நீங்கள் அளிக்கும் விளக்கங்கள் இவை

//3. புராதன கம்யூனிஸ்ட் சமுதாயம் இருக்கவே செய்தது என்று கம்யூனிஸ்டுகள் பிடிவாதம் பிடிப்பதற்கு என்ன காரணம் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால், கடந்தகாலம் என்பது வெறும் வரலாறு தானே. புராதன கம்யூனிசம் இருந்ததா இல்லையா என்பது வெறும் அகடமிக் கேள்வி இல்லையா? யோசிக்கையில் ஒரு காரணம் புலப்படுகிரது. உளவியல் ஆய்வாளர்கள் தாய் மடிக்குத் திரும்புதலுக்கான விருப்பம் என்று ஒரு மன நிலையைக் குறிப்பிடுவார்கள். அதாவது தாயின் மடியில் மிகப் பாதுகாப்பாக, சந்தோஷமாக, கவலைகள் அற்று இருந்ததாய் கற்பனை செய்து கொண்ட மனிதன், மீண்டும் அந்தப் பழங்காலத்திற்குத் திரும்பினால் எல்லாப் பிரசினைகளும் தீர்ந்து ,//

மார்க்ஸ் தரவில்லை என சொன்னதும் ஆன்மீக வாதம் பேச ஆரம்பித்து விட்டீர்கள்

மார்க்சியமே விஞ்ஞான அடிப்படையில் தான் இருக்கிறது
இதில் யூகத்துக்கு வேலை இல்லை

மார்க்ஸ் நூலில் நேரடி ஆதாரம் இல்லை என நான் சொன்னதுமே உங்க வேலைய காட்ட ஆரம்பிச்சுடீங்களே

தாயின் மடி என்பது முதலாளித்துவத்தில் எப்படி கிடைக்கும் கம்யூனிசத்தில்தான் கிடைக்கும்

காலை எழுந்தது தாய் கூலி வேலைக்கு போகவேண்டும்
வரப்பில் தொட்டி கட்டி தொங்க விடப்பட்ட குழந்தை
தாய் மடிக்காக தொண்டை வத்த கத்தினால்தான் கிடைக்கும் கொஞ்சூண்டு பால் இதுதான் நிலபிரபுத்துவம்
இதுதான் முதலாளித்துவம்

//4.தாய் தந்தை இருந்தால் குடும்ப அமைப்பும் இருக்கும். ஒருவன் சேகரித்து வந்த உணவை முதலில் அவன் அளிப்பது அவன் மனைவி, தாய் என்பதாய்த்தான் இருக்கும். குடும்பம் என்று பெயரிடாவிட்டாலும் அது குடும்பம் தான்.//

இதற்கு பதில் சொல்லிட்டேன் தாய் தந்தை என்ற அமைப்பு குடும்ப அமைப்பு பிறகுதான் உண்டானது முன்பு இருந்து தாய் வழி சமூகமே தந்தை யாரென
யாருக்கும் தெரியாது அது முக்கியமும் அல்ல அப்போது

//5.ஆதிகாலத்தில் உடைமையும் வளமும், குழுக்கள் நீர்நிலைக்கு அருகில் இருக்கின்றனவா? எளிதாய்க் கொல்லக் கூடிய விலங்கினக்கள் அருகில் உள்ளனவா? மனிதக் கொல்லிகளான மிருகங்களிலிருந்து தூரத்தில் விலகி அந்தக் குழு நிற்கிறதா என்பதிப் பொருத்து அமையும்.//

சூழ்நிலையை விளக்க இதை எழுதினீர்கள் என நினைக்கிறேன் , இதெல்லாம் வர்க்கமாக இருக்க ஒரு பெரிய காரணமாக இருக்க முடியாது

//6.ஆதி காலத்திலும் தொழில் நுட்பம் இருந்தது. விலங்கினக்களின் எழ்லுமுகளிலிருந்தும், மரங்களிலிருந்தும், ஆயுதங்கள், அணிகள், பாத்திரங்கள் செய்ய்ப்பட்டதற்கான ஆதரங்கள் உள்ளன்.//

ஆதிகால மனிதன் குரங்கிலிருந்து உருவானவன்
அவனது உருவாக்கமே உழைப்பை அடிப்படையாக கொண்டது அதாவது அவனது கை முகம் காலை தரையில் ஊண்டி எழுந்து நடத்தல் முதுகு தண்டு நேராதல் எல்லாவற்றிலும் தொழில் நுட்பம் அல்ல
உழைப்பின் பாத்திரம் அதிகம்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் குரங்கில் இருந்து பிறந்தவுடன் அடுத்தநாளே குடும்பமாகவும் வர்க்கமாகவும் பிரிந்து அதிகாரம்படைத்தவன் உருவானான் என்பீர்கள் போலிருக்கு

//7.இடுபொருள்கள் போலவே, உழைப்பும் ஒரு இடுபொருள் தான் என்று தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன். பாலை வாங்கிவந்து ஒருவன் டீ தயாரிக்கிறான் என்றால், அதன் மூலம் அந்த டீக்கடைக் காரர் சம்பாதித்த லாபத்தில், பாலை அளித்தவர் உரிமை கொண்டாட முடியாது.//

கூலி விலை லாபம் எனும் புத்தகத்தில் மார்க்ஸ் விரித்துரைக்கும் உழைப்பு

அந்த தொழிலாளிக்கு கூலி கொடுத்த உழைப்பல்ல

கூலி கொடுக்கப்படாத உழைப்பு அதைத்தான் உபரி என்கிறோம்

இந்த உபரிக்கான உரிமை போராட்டம்தான்

உங்களுக்கும் எங்களுக்கமான போராட்டம்

நீங்கள் எந்தகாலத்திலும் அதை ஏற்று கொள்ள மாட்டீர்கள்
நாங்கள் எந்த காலத்திலும் அதை விடமாட்டோம்

// அதே போல் உழைப்பை அளித்தவர், உழைப்புக்கானை விலையைப் பெற்றவுடன் அவர் உரிமை நிண்று விடுகிறது.//

//8.விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு பல நிலைகள் , பல வடிவங்கள் உண்டு. முக்கியமாய் மூன்று வேறு வேறு தளத்தில் உள்ள விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைச் சொல்லலாம். ஒன்று : படிப்படியான வளர்ச்சி. இரண்டு பாய்ச்சல். மூன்று : மேதைகளின் குறுக்கு வெட்டு.//

படிப்படியான வளர்ச்சியோ
பாய்ச்சல் வளர்ச்சியோ
மேதைகளின் குறுக்கு வெட்டோ
சமூகத்துக்கு வெளியே நிகழ முடியாது

சமூகத்தில் பிறந்து சமூகத்தில் இருந்து ஓன்றை கற்று அதிலிருந்து தான் ஒரு முடிவை பெற முடியும்
கற்பக வள்ளி தாயார் வந்தார் கணக்கு சொல்லி கொடுத்தார் என்பதெல்லாம் இந்தியா போன்ற மூட நம்பிக்கை நிறைந்த நாட்டில் சகஜம்
அதுக்காக ராமானுஜத்தின் மேதமையை குறைக்கவில்லை
அவரது ஆராய்ச்சிக்கு அவர் படித்த நூல்கள் அடிப்படை அதை தாண்டி சிந்தித்தது அவரது மூளை
தனியான சிந்திக்கும் அமைப்பு (கற்பகவள்ளி தாயார் ) தந்தது கிடையாது

//படிப்படியான வளர்ச்சி தாம் மிகுந்த அளவில் நடைபெறும் வளர்ச்சிகள். ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குச் செல்வதில் , அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லுபவை இவை.//

பாய்ச்சல் : இது படிப்படியான வளர்ச்சி இல்லாமல் , பலபடிகளைத் தாண்டிய ஒரு முன்னோக்கு வளர்ச்சி.

மேதைகளின் குறுக்கு வெட்டு : இது மிக அரிதாக நிகழ்வது. ஐன்ஸ்டீன், நியூட்டன் , ராமானுஜம் போன்றோரின் சாதனைகள் இப்படிப் பட்டவை. ராமானுஜம் படித்த கணிதப் புத்தகம் ஒரு பாடப் புத்தகம் தான். அது லட்சம் பேர் படித்திருந்தார்கள் ஆனால் படித்தவர்களெல்லாம் ராமானுஜம் ஆகவில்லை. மனித மூளையின் விசித்திரமான மர்மங்களின் வெளிப்பாடு தான் நியூட்டன், ஐன்ஸ்டின், ராமனுஜன் போன்றோரின் பங்களிப்பு. இந்தப் பங்களிப்புகள் இதுவரை வந்த விஞ்ஞானத்தைப் புரட்டிப் போட்டு விடுகிற தன்மை பெற்றவை.

ராமானுஜத்தின் வரலாறு தமிழில் ரகமி எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் "

The Man Who Knew Infinity"
நூலும் உள்ளது.

இராமானுஜனின் இரட்டை:

இக்குறிப்பு சொல்வது: (நன்றி தமிழ் விக்கி)=

இக்குறிப்பின் விசேஷமே இது எழுதப்பட்டு அடிக்கப்பட்டும் இருப்பதுதான். இராமானுசன் எதற்கு இதை எழுதினார், எதற்கு அடித்தார் என்பதை சற்று தீர ஆராய்ந்தால் தான் புரியும்.

சமன்பாட்டின் இருபக்கங்களிலுமுள்ள கோவைகளை x இன் அடுக்குகளடங்கிய தொடர்களால் விரிப்பதாகக் கொள்வோம். அப்பொழுது நமக்குக் கிடைக்கக் கூடியது:

1 + c2x2 + c3x3 + c4x4 + ...... = 1 + d2x2 + d3x3 + d4x4 + ......
இதனில் எல்லா ci ம் அவைகளுக்கொத்த di க்கு சமமாயிருந்தால் தான் சமன்பாட்டின் இருபக்கக்கோவைகளும் சமம் என்பது உறுதியாகும். இராமானுசன் அவைகள் சமம் என்று நினைத்துத்தான் நோட்புக்கில் எழுதியிருக்க வேண்டும். மேலுள்ள சமன்பாட்டில் நாமே c1 = d1,c2 = d2... என்று முதல் சில ci,di க்களை சரிபார்க்கலாம். c20 = d20 வரையில் இது உண்மை. ஆனால்

இராமானுசன் எதையும் தனியாக ஒரு கரும்பலகையிலோ காகிதத்திலோ எழுதிச் சரிபார்த்து அதற்குப் பிறகு தன் நோட்புக்கில் எழுதிவைத்ததாகத் தெரியவில்லை. அவர் நோட்புக்கைப் பார்த்தால் அவ்வப்பொழுது மனதில் தோன்றுவதை அதில் அப்படியப்படியே எழுதிவைத்ததாகத் தான் தெரிகிறது. அதனால் இந்த சமன்பாட்டை எழுதிக்கொண்டே போகும்போதே மனதால் அவர் சரிபார்த்துக் கொண்டே போயிருக்கவேண்டும். சமன்பாட்டை எழுதிமுடித்த அந்த நேரத்திற்குள் அவர் 21 வது கெழுக்கள் சமமில்லை என்று மனதில் தெரிந்துகொண்டிருக்கவேண்டும். உடனே அந்த சமன்பாட்டை அடித்திருப்பார் என்று தான் நாம் ஊகிக்கவேண்டியிருக்கிறது! அல்லது அவருக்கென்று தனியாக வேறு முறையில் அச்சமன்பாட்டைச் சரிபார்க்கும் வழி இருந்திருக்கவேண்டும். எப்படியிருந்தாலும் அவருடைய கணிதக் கணிப்புத் திறனுக்கு இது ஒரு சிறிய சான்று.

அடித்த குறிப்பிற்கும் ஆய்வுப்பயன்:
----------------------------------------------------
சமன்பாடு அடிக்கப்பட்டாலும் ஆய்வாளர்கள் அதை விடவில்லை. இரண்டு தொடர்களை இராமானுசன் இரட்டை என்று எப்பொழுது சொல்லலாம் என்று ஓர் இலக்கணம் வகுத்தார்கள். சமன்பாட்டின் இடது பக்கத்திலுள்ள 2,3,5,7,11 ... முதலியவைகளை αi களாலும் வலது பக்கத்திலுள்ள 2,3,5,7,11 ... முதலிய எண்களை βi களாலும் பதிலீடு செய்தால் எப்பொழுதெல்லாம் அச்சமன்பாடு சரியாகிறதோ அந்த தொடர் இரட்டை {αi},{βi}ஐ இராமானுசன் இரட்டை என்று பெயரிட்டார்கள். இப்பொழுது ஆய்வுக்குகந்த கேள்வி: இராமானுசன் இரட்டைத் தொடர்கள் எவை? {2,3,5,7,11,...},{2,3,5,7,11...} நிச்சயமாக இராமானுசன் இரட்டை இல்லை.

இராமானுசனுடைய நோட்புக்குகளைப் பற்றி பெர்ண்ட் எழுதிய புத்தகத்தில் (பாகம் 1, பக்கம் 130)இராமானுசன் இரட்டைகளின் அதிசயத்தைப் பற்றி எழுதும்போது ஜி.ஈ.ஆண்ட்ரூஸ் 4 இரட்டைகளும், ஹிர்ஷ்ஹோர்ன் 2 இரட்டைகளும், ப்ளெக்ஸ்மித், ப்ரில்ஹரி, கெர்ஸ்ட் இம்மூவரும் சேர்ந்து 2 இரட்டைகளும் கண்டுபிடித்திருக்கிறர்கள் என்றும், ப்ளெக்ஸ்மித் பிற்பாடு கணினியில் சோதித்துப் பார்த்ததில் இந்தப் பத்து இரட்டைகளைத் தவிர வேறு இரட்டைகள் இருக்கமுடியாது என்று தெரியவந்ததாகவும் கூறியிருக்கிறார்.

// ஆகவே கணிதம் எனும் தொடர் சங்கிலியில் அவர் பங்கு குறிப்பிட தகுந்தது ஆனால் எதுவும் அதிசயமாக நடந்து விடாது சமூகத்தில் கணித வளர்ச்சியில் முன்பிருந்த நிலையை துண்டித்துவிட்டு பார்க்கவே முடியாது

November 22, 2007