Donnerstag, 25. Oktober 2007

நண்பர் தியாகுவுடன் விவாதம்

கீழ்க்கண்ட கதையை எனக்கு விளக்கமாக நண்பர் தியாகு எழுதியிருக்கிறார்.
அதனை இங்கே பதிந்துள்ளேன்.
இதில் எனக்கு இருக்கும் கேள்விகளை எழுதுவேன்.

நன்றி


புலிகேசியின் பயணத்தில் ஒரு நாள் -கம்யுனிச சமூகம்

ஒரு நாள் தனது டைம் மிசின் மூலம் சில பத்தாண்டுகள் கழித்து உலகின் அந்த நாளில் அதாவது அவன் விரும்பிய நாளில் போய் இறங்கினான் நம்ம புலிகேசி


கார்கள வரிசையாக செல்லும் மிக அகண்ட சாலையில் தானும் ரோட்டோரத்தில் நின்ற ஒரு காரை எடுத்து ஓட்ட துவங்கினான் .


காரில் ஏறி அமர்ந்ததும் அவனுக்கு அதில் இருந்த கணினி உத்தரவுகளை வழங்கியது .

நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்

இதென்னடா இப்படி கேட்குதேன்னு முழிச்சுட்டு

நான் முருகன் இட்லி கடைக்கு போகனும்

மன்னிக்கவும் கம்யூனிச சமூகம் ஏற்பட்டதும் பொது உணவு கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கு அங்கே அழைத்து செல்கிறேன் .


சரி போ என்றான் நம்ம புலிகேசி


ரோட்டில் நடப்பவர்கள் எச்சில் துப்ப அதற்கென இருக்கும் இடத்தில் துப்புகிறார்கள்

ரோட்டோரம் ஒரு போலீஸ்காரர் நிற்க வில்லை

(தவறி ரோட்டில் துப்புபவர்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அபராத தொகை அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்)

ஆகா வம்மா போச்சே நம்மாளு ஒரு வண்டி வெத்தலைய போட்டு துப்புவாங்களே என்ன செய்ய போறானுகளோன்னு நினைத்துகொண்டான் புலிகேசி போலீஸ் துறை என்ன செஞ்சுட்டு இருக்கானுககேட்டான் கணினியை

"குற்றம் நடப்பதை மட்டுமே கண்டறியும் துறையாக இருந்த அது இப்போது ஒரு கவுன்சிலிங் துறையாக மாறிவிட்டது குற்றத்தின் சதவீதம் புள்ளி ஒரு சதவீதத்துக்குமேல் குறைந்ததால் சிறை சாலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டன "

இன்னும் நிறைய சந்தேகம் வந்தது நம்ம ஆளுக்கு சரி இந்த ஊரில் உள்ள வயசான பெரியவர நம்ம வண்டியில் அழைத்து உக்காரவைச்சு சந்தேகத்தை எல்லாம் கேட்போம்னு நிறுத்த சொன்னான்.பெரியவர் காரில் ஏறியது தனது சந்தேக மூட்டையை அவிழ்த்து கொட்ட ஆரம்பித்தான் புலிகேசி

அய்யா பெரியவரே

"இன்னாய்யா வம்பா போச்சு போலீஸ் இல்லை லஞ்சம் இல்லை பிறகு அரசாங்கம் என்னா செய்யுது வரி எப்படி கிடைக்குது "


"மக்களின் மேல் வரியை சுமத்தி வர்க்க சார்பான அடக்குமுறை கொண்ட அரசு இல்லை இப்போ அரசு என்பது இப்போ கணினி களை நிர்வகிக்கும் நிறுவனம் மட்டுமே மேலும் அதன் அதிகார பல் புடுங்கப்பட்டு விட்டது "

(அரசு என நீங்கள் நினைத்து கொண்டு இருக்கும் அமைப்பு இப்போது இல்லவே இல்லை )


ஆகா அப்போ எம் எல் ஏ க்கள் சண்டை போடும் சட்டசபை , தேர்தல் எல்லாம் இல்லையா?

எவனும் கொள்ளை அடிக்க முடியாதா? நம்ம புலிகேசிக்கு ரொம்ப ஆச்சரியம்


அரசே இல்லை என்றாகிய பின் அரசியல் வாதிகளின் தேவை இல்லை. அறிக்கைகள விட்டு கூட்டனி மாறி காமெடி செய்வதெல்லாம் இல்லை

சரிப்பா கற்பழிப்பு எல்லாம் நடக்காதா தனது மன அரிப்பை காட்டியே விட்டான் நம்ம ஆளு

"பெண்களை ஆண்கள் புரிந்து கொள்ளவும் ஆண் பெண் எனும் பால் வேறுபாட்டை தீர்க்கவும் மான யோசனைகள் முறைகள் கொடுக்கப்பட்டு வேறுபாடுகளும் பெண் மீதான பாலியல் அத்துமீறல்களும் குறைக்கப்பட்டு இம்மாதிரி வன்புணர்ச்சி என்பது சோசலிச சமூகத்தில் தீர்க்கப்பட்டு விட்டது "
சரீ இதெல்லாம் யோசிச்சு செயல்படுவார்களே அவர்கள் தான் இந்த சமூகத்தில் பெரிய பதவியில் இருப்பார்களோ

"சிந்திக்கும் கூட்டத்துக்கு முதல் மரியாதை தரும் சமூகம் இல்லை உடல் உழைப்பு மூளை உழைப்புன் இடைவெளி குறைக்கபட்டது கம்யூனிச சமூகத்தில் இரண்டுக்கும் ஒரே மதிப்பும் ஒரே சம்பளமும் வழங்கப்படுகிறது அதாவது திறமைக்கேற்ற வேலை தேவை கேற்ற ஊதியம் வழங்கப்படும் போது இரண்டும் வித்தியாசத்தை இழந்து விட்டன "

அப்போ மருத்துவரும் கொசு மருந்தடிப்பவனும் ஒன்னா

"ஆமாம் ஏனெனில் ஒரு மனிதனை தன் வாழ்நாள் பூராவும் ஒரே வேலையை பார்க்கும் படி
நிர்பந்தித்த முதலாளித்துவ சமூகம் சோசலிசத்தில் மாற்றப்பட்டது

எல்லா மனிதர்களுக்கு சம அளவில் கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டதால் அவன் தனக்கு தேவையான துறையில் கல்வி கற்கவும் ஆராய்ச்சி செய்யவும் சோசலிச சமூகம் அனுமதித்ததால் ரொம்பவும் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகள் ரோபோட்களை கொண்டும் செய்யப்படுவதால் இங்கே வேலையை வைத்து ஒருவனின் வாழ்நிலை தீர்மானிக்கப்படுவதில்லை "

ஆகவே ஒப்பிட்டு நோக்கும் அளவு வேறு பாடே இல்லை என்ற இடத்தில் நீ ஏன் ஒப்பிட்டு பார்க்கிறாய் "

இருந்தாலும் நம்ம புலிகேசிக்கும் மூளை உழைப்பாளிகள் மதிக்கப்படனும்
எனும் சந்தேகமும் கோபமும் இருந்து கொண்டே இருந்தது இதுக்கு என்ன பதில் என அவன் கேட்க பெரியவர் சொன்னார் தம்பி நீ முதலாளித்துவ அழுக்கு சமூகத்தில் இருந்து நேரடியாக வந்தவன் முதலில் நீ சோசலிசத்துக்கு போ உனது மிசின் மூலம் பிறகு இங்கே வா

மேலும் ஒரு இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்திய ஒரு சமூகம் உனது செல்பேசியையோ தொலைக்காட்சியையோ புரிந்து கொள்ளவோ அல்லது ஓட்டு போட்டு ஆளும் உங்கள் ஜனநாயகத்தை அடிமை வர்க்கம் எப்படி புரிந்து கொள்ளாதோ அதை போல உற்பத்தி சக்திகளின் மாற்றத்தால் உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்பட்டு மாறிவரும் இந்த சமூக அமைப்புகளை புரிந்து கொள்ள முதலில் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் சமூகத்துக்கும் இடையிலான தொடர்புகளை பற்றி எழுதிய மார்க்சிய மூலவர்கள் எழுதிய போன நூற்றாண்டின் நூல்களை படி என சொல்லி இறங்கி போனார்

--
தியாகு


எழுதியவர் தியாகு


--
நண்பர் தியாகுவுக்கு என் கேள்விகள்

//(தவறி ரோட்டில் துப்புபவர்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அபராத தொகை அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்) //

இங்கே ரோட்டில் துப்புவது தவறு என்பது ஒரு விதிமுறை. அந்த விதிமுறையை உருவாக்கியது யார்? எந்த முறையில் (In what process) இந்த விதிமுறை உருவாக்கப்பட்டது?

அபராத தொகை என்பது பணமா? அப்படியானால் கம்யூனிஸ சமூகத்தில் பணம் உண்டா?

அந்த அபராத தொகை எங்கே அனுப்பி வைக்கப்படும்?

ரோட்டில் துப்புவதற்கு 100 ரூபாய் அபராதம் என்றால், 100 ரூபாய் என்று நிர்ணயித்தது யார்?



இரண்டாவது கேள்வி

//குற்றத்தின் சதவீதம் புள்ளி ஒரு சதவீதத்துக்குமேல் குறைந்ததால் சிறை சாலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டன //

குற்றத்தின் சதவீதம் புள்ளி ஒரு சதவீதத்துக்கு குறைந்தாலும், குற்றங்கள் இருக்கின்றன.
அந்த குற்றங்கள் என்ன?
இவை குற்றங்கள் என்று யார் விதிமுறை செய்தது?
எந்த பிராஸஸ் மூலம் இந்த விதிமுறைகள் உருவாயின?


மேலும் தொடரும்.
நன்றி நண்பர் தியாகு.

தமிழ்மணி said...
ரோட்டில் துப்புபவர்களுக்கு தண்டனை என்பது ஒரு அதிகாரத்தின் வெளிப்பாடு இல்லையா?


25. Oktober 2007 08:23

தமிழ்மணி said...
நன்றி தியாகு,
மேலும் ஒரு கேள்வி
//ரோட்டில் நடப்பவர்கள் எச்சில் துப்ப அதற்கென இருக்கும் இடத்தில் துப்புகிறார்கள்

ரோட்டோரம் ஒரு போலீஸ்காரர் நிற்க வில்லை

(தவறி ரோட்டில் துப்புபவர்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அபராத தொகை அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்//

அப்படியானால் ஸ்கேன்கள் கண்டுபிடிக்கப்படும்வரைக்கும் கம்யூனிஸம் வராதா?

ஸ்கேன்கள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் கம்யூனிஸம் வந்தால், அங்கே போலீஸ்காரர் நிற்பாரா?

நன்றி



தியாகு said...

உங்கள் கேள்விகளுக்கு நன்றி நண்பர்
தமிழ் மணி ,

கம்யூனிச விதிகளால் இயக்கப்படுவதில்லை

விதிகளும் விதிகளை பாதுகாக்கும் சட்டங்களும் சட்டங்களை நடைமுறை படுத்தும் காவல்துறையும்

நீதிமன்றங்களும் எனும் இந்த அமைப்பு

விதிகள் இல்லாமல் ஒரு சமூகம் இயங்க முடியாது எனும் கருத்தில் அடிப்படையில் வந்ததுதான் எனும் கேள்வியில் இருந்தே.

ஒரு கம்யூனிச சமூகம் எப்படி விதிகள் இல்லாமல் இயங்க முடியும் எனும் அடிப்படி கேள்விக்கு வந்து விட்டீர்கள்

உண்மைதான் விதிகள் இல்லாமல் எப்படி ஒரு சமுகம் இயங்கும்

ஆனால் நண்பரே இங்கே கம்யூனிச சமூகம் விதிகளால் இயக்கப்படுததில்லை


communist soceity not run by rules and laws

but run by principles

Scientific definition:

# A classless society with no exploitation. No state machine used by one section of the population to oppress another section. No need for professional armies or police forces. No use of production for profit or exchange. Society runs in accord with the principle: From each according to his ability, to each according to his need.

பிரின்ஸ்பில் என்பதன்

தமிழாக்க படுத்தினால்

ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை செயல்

இம்மாதிரி ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை செயல் இந்த சமூகத்திலும் நிறைய இருப்பதை காணலாம்

அவ்வாறு என்னென்ன நடைமுறை செயல் கள் இருக்கின்றன என சொல்லுங்கள் பார்ப்போம்

மேற்கொண்டு தொடரலாம்

October 26, 2007


என் பதில்
நன்றி நண்பர் தியாகு.

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் ஏதும் இல்லையா?

ஆனால், நீங்கள் குறிப்பிட்ட கம்யூனிஸ சமூக கதையில் எல்லாமே பிரின்ஸிபிள்களா?
எதுவுமே விதிகள் இல்லையா?

உதாரணமாக சாலையில் எச்சில் துப்பக்கூடாது என்று பிரிஸ்னிஸ்பிள் இருந்தால், அந்த பிரின்ஸிலிப்ளை நடைமுறைபடுத்த ஸ்கேன்களும் போலீஸ்காரர்களும் இருந்தால், அந்த குற்றத்துக்கு தண்டனையாக அபராத தொகை இருந்தால், பிரின்ஸிபிளுக்கும் விதிமுறைக்கும் என்ன வித்தியாசம் நண்பர் தியாகு?




தியாகு said...
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி
இது ஒரு கற்பனை இது போலத்தான்
கம்யூனிச சமூகம் இருக்கும் என நினைக்க கூடாது என்று

ஆனால் மீண்டும் மீண்டும் கற்பனை கதையில் கேள்வி கேட்கிறீர்கள்

அது புரியுதா தமிழ் மணி

உங்கள் ஒவ்வொரு கேள்வியும் ஒரு மைய்ய கேள்வியில் அடங்கி இருப்பதால்

நான் மைய்யமான கேள்விக்கு பதில் சொல்லி இருக்கேன் நான்
ஒரு கேள்வி கேட்டு இருக்கேன்

அதுக்கு பதில் சொல்லுங்க பிறகு உங்களுக்கு பதில் சொல்கிறேன்

October 26, 2007

தியாகு said...
/ஆனால், நீங்கள் குறிப்பிட்ட கம்யூனிஸ சமூக கதையில் எல்லாமே பிரின்ஸிபிள்களா?
எதுவுமே விதிகள் இல்லையா?

உதாரணமாக சாலையில் எச்சில் துப்பக்கூடாது என்று பிரிஸ்னிஸ்பிள் இருந்தால், அந்த பிரின்ஸிலிப்ளை நடைமுறைபடுத்த ஸ்கேன்களும் போலீஸ்காரர்களும் இருந்தால்,
அந்த குற்றத்துக்கு தண்டனையாக அபராத தொகை இருந்தால், பிரின்ஸிபிளுக்கும் விதிமுறைக்கும் என்ன வித்தியாசம் நண்பர் தியாகு?//

நன்பர் தமிழ்மணிக்கு, உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது. கற்றுக் கொள்ளும் உங்கள் ஆர்வத்துக்குப் பாராட்டுக்கள்!

உங்களது கேள்விகளின் அடிப்படையில் எனக்கு உங்களுடைய புரிதலின்மையின் மைய்யம் எதுவென்று புரிகிறது.

உங்களது இந்தக் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கும் முன்... மிக மிக சுருக்கமாக சில விஷயங்கள் உங்கள் புரிதலுக்காக -

இன்றைய சமுதாயம் வர்க்கங்களாகப் பிரிந்து கிடக்கிறது. கூடுதலாக இந்திய சமுதாயம் சாதிப்படி நிலைகளாக இருக்கிறது. இதில் இந்த சாதிகளை உறுதிப்படுத்துவது ஒருவன்
சார்ந்த வர்க்கமே. -- இப்போது நான் மேலே சொன்ன இந்த ஸ்டேட்மெண்ட்டே உங்களுக்கு புதிய குழப்பத்தை தோற்றுவிக்கலாம் -- உதாரணமாக ஒருவன் தலித்தாக இருக்கிறான்
ஒருவன் ஆண்டையாக இருக்கிறான்; இதில் தலித்துகள் தலித்துகளாகவே தொடர்வதற்கு சமூகக் காரணங்களைக் கடந்து பொருளாதாரக் காரணமும் இருக்கிறது. ஒரு வர்க்கம்
என்பது சமூகத்தில் நடக்கும் உற்பத்தியின் வெவ்வேறு கட்டத்தில் வெவ்வேறு மக்கள் கூட்டத்திற்கு இருக்கும் உறவுகளின் அடிப்படையில் அமைகிறது. இப்போது உழைக்கும் / நிலமற்ற
ஒரு வர்க்கமாக இருப்பதாலேயே தலித்துகளின் நிலை தொடர்ந்து ஒடுக்கப்படுவதாகவே இருக்கிறது.

ஏன் திராவிட இயக்கங்களின் தொடர் சமூகப் போராட்டங்களுக்குப் பின்னும் சாதி ஒழியவில்லை; ஏன் மார்க்சிய இயக்கங்களின் ( குறிப்பாக சிபிஎம் / சிபிஐ ) தொடர்ந்த
பொருளாதாரப் போராட்டங்களுக்குப் பின்னும் ஒடுக்கப்பட்ட/சுரண்டப்பட்ட வர்க்கங்கள் எழிச்சியுறவில்லை என்கிற கேள்விக்கு - திராவிட இயக்கங்கள் மக்களின் பொருளாதார
விடுதலையை கண்டுகொள்ளாமல் விட்டதும்.. மார்க்சிய இயக்கங்கள் மக்களின் சமூக நிலையைக் கண்டு கொள்ளாமல் விட்டதும் காரணம் என்று சொல்லலாம்..

இதனை இதற்கு மேலும் விரிவாகச் சொல்வது நீண்டு விடும்.. எனவே இது பற்றிய விவாதம் வேறு சமயத்தில் வைத்துக் கொள்வோம்.. இது வர்க்கம் பற்றி ஒரு சின்ன சித்திரத்தை
உங்களுக்கு தந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்றைக்கு நம்முடைய சூழலில் இருக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு காரணம் வர்க்கங்களின் முரண்பாடு ஒரு காரணம் என்கிறோம். இந்திய சூழலில் உழைக்கும் மக்களுக்கும்
நிலபிரபுத்துவ வர்க்கத்துக்குமான முரண்பாடும்.. தரகு முதலாளிகள் / அதிகார வர்க்கத்தினருடனான முரண்பாடும் பிரதானமாய் இருக்கிறது.

இன்றைய அரைகாலனிய அரை நிலப்பிரத்துவ சமூக அமைப்பு முறை நடக்கப் போகும் புதிய ஜனநாயகப் புரட்சியில் மாற்றியமைக்கப்படும் ( இதில் அரை நிலப்பிரபுத்துவம் என்றால் என்ன?
நிலப்பிரபுத்துவம் என்றால் என்ன? அரை காலனியம் என்றால் என்ன? புதிய ஜனநாயகப் புரட்சி என்றால் என்ன? போன்ற கேள்விகள் கேட்க உங்களுக்கு வாய்ப்புகள் இருக்கிறது
விட்டு விடாதீர்கள் :) )

புதிய ஜனநாயகப் புரட்சிக்குப் பிந்தைய சமூகத்தில் பிரதானமாய் ஆளும் வர்க்கமாக பாட்டாளி வர்க்கமே இருக்கும். ( பாட்டாளி வர்க்கத்திற்கு சோசலிசப் புரட்சி தானே
இலக்கு.. அப்புறம் ஏன் இங்கே ஜனநாகப் புரட்சியில் ஈடுபடுகிறார்கள்? என்கிற கேள்வியையும் உங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளவும்)
இந்த சமூகத்திலும் முரண்பாடுகள் இருக்கும்.. அதிகாரம் இழந்த பழைய தரகு முதலாளிகளுக்கும் -ஆளும் வர்க்கமான் பாட்டாளி வர்க்கத்திற்கும் / வேலைகளில் முரண்பாடுகள் இருக்கும்
புதிய ஜனநாயகப் புரட்சியில் தேசிய முதலாளிகள் என்போரின் பங்கும் பாத்திரம் வகிக்கும்.. அதன் பின்னான சமூகத்தில் இவர்களும் பாட்டாளி வர்க்கத்தோடு முரண்படுவர்..
இந்த சமூகத்தில் தனிச் சொத்துடைமை இருக்கும்..

அடுத்த சோசலிச சமூகத்தில் இந்த முரண்பாடுகள் கலைவதோடு.. தனிச்சொத்துடைமையில் இருந்து பொதுச்சொத்துடைக்குப் போவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்..
அதிகாரம் மைய்யப் படுத்தப்படுவதில் இருந்து பரவலாக்கப்படும்.. இங்கும் முரண்பாடுகள் இருக்கும். மூளை உழைப்பு - உடல் உழைப்பு.. பழைய தேசிய முதலாளிகள் - பாட்டாளி வர்க்கம்..
மற்றும் சர்வதேசிய அழுத்தங்களும் சேர்ந்து கொள்ளும்..

இதுவும் அடுத்தப் புரட்சியின் மூலம் பிற்போக்கு சக்திகள் தோற்கடிக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் சமூகத்தை கம்யூனிச சமுதாயம் நோக்கி வழி நடத்தும்.

இங்கே உங்கள் கேள்வியில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் இன்றைய சமூகத்தில் இருந்து நீங்கள் முன்னேறிய ஒரு சமூகத்தைக் கற்பனை செய்து பார்ப்பது தான்.

"கம்யூனிஸ சமுதாயத்தில் போலீஸ் இருக்காது" என்று நான் சொன்னால் "காவலர் உங்கள் நன்பர்" என்கிற வாசகத்தைக் கேட்டு வளரும் உங்களுக்கு அப்படியான கேள்விகள்
எழுவது இயல்பானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

உங்களுக்கு மேம்போக்காக.. " போலீஸ் குற்றம் நடக்கும் போது தான் தேவை.. குற்றம் இல்லாமை இருப்பதால் தான் வருகிறது.. இல்லாமையை ஒழித்து விட்டால் குற்றம்
நிகழாது.. குற்றம் இல்லாத சமுதாயத்தில் போலீசு தேவையில்லை" என்றும் பதில் சொல்லி இருக்கலாம்.. ஆனால் உங்களது ஆர்வம் என்னை இவ்வளவு நீளமான விளக்கத்தை
கொடுக்க தூண்டியது..

அடுத்து Rules & Principles... உங்கள் வீட்டில் பல்துலக்கியதும் பிரஷ்ஷை ஒரு இடத்தில் வைக்கும் வழக்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.. இது ஒரு ரூலாக
இருந்தால் கன்கானிக்க ஆள் தேவை.. தண்டிக்க சில முறைகள் தேவை.. ஆனால் அதுவே எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒரு நடைமுறையாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்
( அப்படித்தனிருக்கும் என்று நினைக்கிறேன் ;) ) அப்போது கண்கானிக்கும் ஆளுக்கும் வேலையில்லை.. தண்டிக்க சட்டமும் தேவையில்லை!

இந்த விளக்கங்கள் உங்களுக்கு புதிய சில கேள்விகளைத் தோற்றுவித்திருக்கும் என்று புரிகிறது.. அந்தக் கேள்விகளோடு மீண்டும் வாருங்கள்.. நானும் மார்க்சியத்தில் பண்டிதம்
பெற்றவனில்லை.. ஆனாலும் எனது புரிதல் மட்டத்திற்கு உட்பட்டு உங்களுக்கு விளக்க முயல்கிறேன். எங்கள் தோழர்களும் இந்த விவாதத்தில் பங்கு பெறுவார்கள்..

நாம் இனைந்து முன்னேறுவோம்!

வாழ்த்துக்கள்

October 26, 2007



என் பதில்.


//உங்கள் வீட்டில் பல்துலக்கியதும் பிரஷ்ஷை ஒரு இடத்தில் வைக்கும் வழக்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.. இது ஒரு ரூலாக
இருந்தால் கன்கானிக்க ஆள் தேவை.. தண்டிக்க சில முறைகள் தேவை.. ஆனால் அதுவே எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒரு நடைமுறையாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்
( அப்படித்தனிருக்கும் என்று நினைக்கிறேன் ;) ) அப்போது கண்கானிக்கும் ஆளுக்கும் வேலையில்லை.. தண்டிக்க சட்டமும் தேவையில்லை!
//

இது சின்னவயதிலிருந்தே வீட்டுக்குள் இருக்கும் அதிகாரத்தில் உள்ள பெற்றோர், முதியவர்கள் அடித்தும், சொல்லியும் உருவாகும் விதி.

இது எல்லோருக்கும் உபயோகமான விதி என்று வீட்டுக்குள் அதிகாரத்தில் உள்ள பெற்றோர் சொல்லி வருவது.
குழந்தைகள் அந்த விதியை பழகி அந்த விதியை தன்னுடையதாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

விதி என்று ஒன்று இருக்கிறது. அந்த விதியை நிறுவதற்கும், தொடர்ந்து அமல் படுத்துவதற்கும் அதிகாரமுள்ள ஒரு குழு இருக்கத்தான் செய்கிறது.
நீங்கள் சொல்கின்ற பழங்குடி சமுதாயத்திலும் கூட அதிகாரம், தலைவர் என்று இருந்தது.

அதிகாரம் இல்லாத மனிதக்குழு உலகத்தில் இருந்ததே இல்லை.

26. Oktober 2007 06:43




தியாகு said...


வீட்டில் இருப்பவர்கள் ஒப்பு கொண்ட நடைமுறைக்கு பேர் விதியல்ல

அதுக்கு பெயர் விதி அல்லவே அல்ல

அது ஒப்புகொள்ளப்பட்ட நடைமுறை

ஒரு சிறுவனுக்கு வேண்டுமானால் சின்ன வயதில் படுக்கையில் மூத்திரம் போகாதே எனும் விசயத்தை விதியாக சொல்வார்கள் அடிப்பார்கள் உதைப்பார்கள்

ஆனால் அவன் பெரியவன் ஆனதும் அவனே புரிந்து கொள்கிறான்

அவனே புரிந்து கொள்ளாதவரை விதிகள் தேவை ஒத்து கொள்கிறேன்

அதான் சோசலிசம் வரை விதிகள் இருக்கும்

ஆனால் அவனே எப்போது புரிந்து கொள்கிறானோ அப்போது விதிகள் இல்லாமல் போய்விடுகிறது

இப்போது அவன் படுக்கையில் மூத்திரம் இருப்பதில்லை ஏனெனில் அவனுக்கே அது தெரியும்

அதே நேரம் இந்த மாதிரி விசயத்துக்கு எப்படி அம்மாவும் அப்பாவும் அடித்து சொல்லவும் மாட்டார்கள்

இப்போது புரிகிறதா விதிகள் முழுமை பெறும் ஒரு காலம் சமூகத்தில் வரும்
என

அதுவரை விதிகள் இருக்கும்

நன்றி

October 26, 2007


என் பதில்
//
ஆனால் அவனே எப்போது புரிந்து கொள்கிறானோ அப்போது விதிகள் இல்லாமல் போய்விடுகிறது
//

ஒரு தனி மனிதன் புரிந்துகொள்ள வைக்கப்படுகிறான். அப்போது அவனுக்கு விதிகள் இல்லாமல் இல்லை. விதியை அவன் தன்னுடையதாக சுவீகாரம் செய்துகொள்கிறான்.

//
இப்போது அவன் படுக்கையில் மூத்திரம் இருப்பதில்லை ஏனெனில் அவனுக்கே அது தெரியும்

அதே நேரம் இந்த மாதிரி விசயத்துக்கு எப்படி அம்மாவும் அப்பாவும் அடித்து சொல்லவும் மாட்டார்கள்
//

எப்போதாவது படுக்கையில் மூத்திரம் போய்விட்டால் நிச்சயம் அவனதுஅப்பாவும் அம்மாவும் அவனை கண்டிப்பார்கள்

//
இப்போது புரிகிறதா விதிகள் முழுமை பெறும் ஒரு காலம் சமூகத்தில் வரும்
என

அதுவரை விதிகள் இருக்கும்

நன்றி
//

விதிகள் எப்போதும் முழுமை பெறாது. விதிகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். காலத்துக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப, புது தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்

நன்றி


தியாகு said...
தமிழ் மணி எந்த அடிப்படையில் விதிகள் எப்போதும் முடிவு பெறாது என சொல்கிறீர்கள் .

விளக்குங்கள்

October 27, 2007

என் பதில்
//தமிழ் மணி எந்த அடிப்படையில் விதிகள் எப்போதும் முடிவு பெறாது என சொல்கிறீர்கள் .

விளக்குங்கள்
//
விதிகள் எப்போதுமே முழுமை பெறாது. விதிகள், சட்டங்கள், ஆகியவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். மாறிக்கொண்டே இருக்கவேண்டும். தற்போது ஒரு நாட்டுக்கு ஒரு அரசியல் சட்ட அமைப்பு உருவானதால், அந்த சட்ட அமைப்பில் மாற்றமே நிகழக்கூடாது என்று பொருள் அல்ல. அந்த சட்ட அமைப்பை மாற்றக்கூடிய விதமும் அந்த சட்டத்திலேயே எழுதப்படவேண்டும்.
ஏன் எழுதுகிறார்கள். ஏனெனில், 1940இல் இருக்கும் சமூக சூழ்நிலைகள் போல, 2007இல் இருக்காது. எதிர்காலத்தில் என்ன என்ன சமூக பிரச்னைகள் வரும், வராது என்பதை 1940இலேயே கணிக்க எவராலும் முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலை மாறுதல்கள் ஆயிரக்கணக்கான விஷயங்களால் வரலாம். உதாரணமாக, செல்போனை பள்ளிக்கூடங்களுக்குள் உபயோகப்படுத்தக்கூடாது என்ற சட்டத்தை எடுத்துக்கொள்வோம். இந்த சட்டத்தை செல்போனே இல்லாத காலத்தில் யோசிக்க முடியுமா? முடியாது.
ஆகவே, காலத்துக்கு ஏற்றாற்போல தொழில்நுட்பத்துக்கு ஏற்றாற்போல புது சட்டங்களை உருவாக்கவும், பழைய சட்டங்களை மாற்றவும் வேண்டும்.

தியாகு said...
நண்பர் தமிழ் மணி

எல்லாமே மாறிக்கொண்டும் இயங்கிகொண்டும் இருக்கின்றன

விதி என்பது மாறாது என்பது இயக்க மறுப்பியல் வாதம்

சமூகத்தில் நடைமுறையில் இருக்கும் தற்போது இருக்கும் விதிகள் அப்படியே இருக்கும் என்று நீங்கள் சொன்னால்
சமூகம் மாறாது என்று அர்த்தமாகிறது .

ஆனால் சமூகம் மாறும் என்பதை ஒத்து கொள்கிறீர்கள்
ஆனால் இந்த விதிகள் அப்படியே தான் இருக்கும் என்று சொல்கிறீர்கள் .இதான் முரண்பாடு

ஒரு சமூகம் மாறும் போது விதிகளும் மாறும்

விதியே தன்னளவில் மாறும் போது அது "ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை எனும் நிலையை எடுக்கும் "

இதை விளக்கத்தான் உங்களுக்கு தூக்கத்தில உச்சா போற உதாரணத்த சொன்னேன்

சின்ன குழந்தையாக இருக்கும் போது உச்சா போற குழந்தையை சொல்லியும் அடித்தும் திருத்துகிறார்கள்

அதுவே அவன் பெரியவனானதும் அந்த விதியின் உண்மை நிலையை உணர்ந்து ஏற்று கொள்கிறான் .

திரும்ப அவன் தவறு செய்வதில்லை

அதைத்தான் ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறை என்றேன்

நீங்கள் திரும்ப செய்வான் என்கிறீர்கள்

இது விதண்டாவாதம் தானே

மேலும் கேள்விகள் இருந்தால் தர்க்கபூர்வமானதாக இருந்தால் கேளுங்கள்

October 27, 2007


என் பதில்
//சமூகத்தில் நடைமுறையில் இருக்கும் தற்போது இருக்கும் விதிகள் அப்படியே இருக்கும் என்று நீங்கள் சொன்னால்
சமூகம் மாறாது என்று அர்த்தமாகிறது .

ஆனால் சமூகம் மாறும் என்பதை ஒத்து கொள்கிறீர்கள்
ஆனால் இந்த விதிகள் அப்படியே தான் இருக்கும் என்று சொல்கிறீர்கள் .இதான் முரண்பாடு
//

நான் எங்கே சொன்னேன். விதிகள் மாறிக்கொண்டே இருக்கும். விதிகள் முழுமை பெறாது என்று சொன்னேன். நீங்கள்தான், விதிகள் முழுமை பெறும் காலம் வரும் என்று சொன்னீர்கள்.

//
ஒரு சமூகம் மாறும் போது விதிகளும் மாறும்

விதியே தன்னளவில் மாறும் போது அது "ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை எனும் நிலையை எடுக்கும் "

இதை விளக்கத்தான் உங்களுக்கு தூக்கத்தில உச்சா போற உதாரணத்த சொன்னேன்

சின்ன குழந்தையாக இருக்கும் போது உச்சா போற குழந்தையை சொல்லியும் அடித்தும் திருத்துகிறார்கள்

அதுவே அவன் பெரியவனானதும் அந்த விதியின் உண்மை நிலையை உணர்ந்து ஏற்று கொள்கிறான் .

திரும்ப அவன் தவறு செய்வதில்லை

அதைத்தான் ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறை என்றேன்
//
ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கும் விதிக்கும் வித்தியாசம் இல்லை என்று சொல்கிறேன்.
அது விதிதான். அந்த விதியோடு முழுவதும் ஒருவன் ஒத்துழைப்பதாலேயே, அது விதி அல்ல என்று கூற முடியாது.

//
நீங்கள் திரும்ப செய்வான் என்கிறீர்கள்

இது விதண்டாவாதம் தானே

மேலும் கேள்விகள் இருந்தால் தர்க்கபூர்வமானதாக இருந்தால் கேளுங்கள்
//
ஒரு பெரும் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் விதிமுறைகளுக்கு மாற்றாக செய்யக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள். எந்த சமூகத்திலும். அந்த நபர்களே அந்த சமூகம் மாறுதலடைய காரணமாக இருக்கிறார்கள்.


தியாகு said...
அப்போ சமூக மாற்றம் நடக்கும் என்கிறீர்கள்

அதாவது சமூகத்தின் விதிகளை அலட்சியம் செய்பவர்களால் அது நடக்கும் என்கிறீர்கள் சரிதானே


சமூகத்தின் விதிகளை அலட்சியம் செய்வது யார்

இதற்கு முன்பு அப்படி அலட்சியம் செய்தவர்களால்

சமூக மாற்றம் ஏற்பட்டு இருப்பின் அது எந்த சமூகம் எந்த சமூகத்தில் இருந்து மாறியது?\

நீங்கள் சொன்னதற்கேற்ப அலட்சிய படுத்தப்பட்ட விதி எது ? ஏன் அலட்சியபடுத்தப்பட்டது?

29. Oktober 2007 00:41





தமிழ்மணி said...
//நீங்கள் சொன்னதற்கேற்ப அலட்சிய படுத்தப்பட்ட விதி எது ? ஏன் அலட்சியபடுத்தப்பட்டது?//

அவற்றுக்கு பிறகு வரலாம்.
தற்போது, எந்த சமூகமாக இருந்தாலும் விதிகள் உண்டு, அவைகளை மாற்றவேண்டிய அவசியமும், புது விதிகளை உருவாக்கவேண்டியதும் உண்டு என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

நன்றி

29. Oktober 2007 05:12


தியாகு said...
தவறான புரிதல்
மேலும் அதையே சரியென சொல்ல சொல்லும் ஒரு கருத்து குருடு நிலைக்கு போய்விட்டீர்கள்

விதிகள் இயங்கியல் படி "ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறை"
என்ற வடிவம் அடையும்

அதாவது விதி சட்டம் -தண்டனை

எனும் வடிவங்கள் மாறிவிடும் கம்யூனிச சமூகத்தில் இதை ஒப்புகொள்கிறீர்களா இல்லையா?

29. Oktober 2007 05:15



தமிழ்மணி said...
//தவறான புரிதல்
மேலும் அதையே சரியென சொல்ல சொல்லும் ஒரு கருத்து குருடு நிலைக்கு போய்விட்டீர்கள்

விதிகள் இயங்கியல் படி "ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறை"
என்ற வடிவம் அடையும்

அதாவது விதி சட்டம் -தண்டனை

எனும் வடிவங்கள் மாறிவிடும் கம்யூனிச சமூகத்தில் இதை ஒப்புகொள்கிறீர்களா இல்லையா?//

இல்லை.
மீண்டும் சொல்கிறேன்.
விதிக்கும் ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறை என்பதற்கும் வித்தியாசம் கிடையாது.
எல்லா சமூகங்களிலும் விதிகள் உண்டு.

கம்யூனிஸ சமூகம் என்று நீங்கள் சொல்லும் கற்பனை சமூகத்திலும் விதிகள் இருந்தே ஆகவேண்டும். விதிகளை எல்லோரும் ஒப்புக்கொண்டாலும், விதிகள் இருக்கின்ற்ன.

29. Oktober 2007 05:20



தியாகு said...
இப்ப என்ன செய்யலாம்

29. Oktober 2007 05:22



தியாகு said...
சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் அதுதான் விவாதமா

நண்பரே புல்லரிக்குது

29. Oktober 2007 05:23

தமிழ்மணி said...
முன்பு விதிகள் முழுமையடையும் நாள் வரும் என்று சோன்னீர்கள்.
விதிகள் முழுமையடையாது என்று காட்டினேன்.
விதிகள் முழுமையடையாது என்றால், விதிகளை மாற்றவும், உருவாக்கவும் அமைப்பு வேண்டும்.
சிந்தித்துப்பாருங்கள்.

29. Oktober 2007 05:23


தியாகு said...
விதிகள் மாறாது விதியாத்தான் இருக்கும் என்றீர்கள்

நான் இயக்கவியல் முறைப்படி

எந்த ஒன்றும் நிலையானதல்ல என்றேன்

விதிகள் சட்டம் எனும் நிலை அரசு தோன்றும் போது தோன்றிய கருத்துரு

அரசு என்பது உதிரிம் போது விதிகள்

நிச்சயம் உதிரும் அதாவது விதிகள் தண்டனை எனும் நிலை மாறி

விதிகள் ஏற்று கொள்ளப்பட்ட நடைமுறை எனும் நிலைபாட்டுக்கு மாறும் இதன் மூலம் விதிகள் தனது வளர்ச்சியை நிறைவு செய்யும் என சொல்லியாச்சு

விதி மாறாது விதி மாறாது எனும் கிளிபிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லாதீங்க நண்பா


29. Oktober 2007 05:27

தமிழ்மணி said...
எல்லா சமூகங்களிலும் விதிகள் இருக்கும் என்பது ஒரு விதி அல்ல. அது வரைமுறை. தண்ணீர் ஹைட்ரஜன் இரண்டு மூலக்கூறுகளும் ஆக்ஸிஜனும் இணைந்தது என்பது போல.

எல்லா சமூகங்களிலும் விதிகள் என்பது இருக்கும். சமூகம் என்றால் விதிகளும் இருக்கும். சாலை என்றால், அதனை பலர் பயன்படுத்த வேண்டும் என்றால், அந்த சாலையை பயன்படுத்தும் விதிகள் உருவாக்கப்படவேண்டும், சமயத்துக்கு ஏற்ப மாற்றப்படவேண்டும். இதற்கும் நீங்கள் கூறும் வர்க்கம், உறவுமுறைகள், உற்பத்திக்கும் என்ன சம்பந்தம்?


நீங்கள் சொன்னது வேறு. விதிகள் முழுமையடைந்த பின்னால், அவை நடைமுறைகளாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொன்னீர்கள். அப்போது விதிகள் உதிர்ந்துவிட்டதாக கருதலாம் என்று சொன்னீர்கள்.

அப்போதும் விதிகள் உதிரவில்லை. அத்தோடு முழுமையாக ஒத்துழைப்பது விதிகள் உதிர்ந்துவிட்டதாக ஆகாது என்று காட்டினேன்.

அப்படி சமூகத்தில் விதிகளும் முழுமையடையாது என்றும் காட்டினேன்.

தொழில்நுட்பம், சமூக சூழ்நிலை, விபத்துகள் என்று ஆயிரம் காரணங்கள் காரணமாக விதிகள் மாறும், புதுவிதிகள் உருவாகும் என்றும் காட்டினேன்.

ஒரே ஒரு கோஷத்தை சுற்றி சுற்றி மீண்டும் மீண்டும் கூறுவது யார் என்று சிந்தித்துப்பாருங்கள்.


29. Oktober 2007 06:22

தியாகு said...
//எல்லா சமூகங்களிலும் விதிகள் என்பது இருக்கும். சமூகம் என்றால் விதிகளும் இருக்கும். சாலை என்றால், அதனை பலர் பயன்படுத்த வேண்டும் என்றால், அந்த சாலையை பயன்படுத்தும் விதிகள் உருவாக்கப்படவேண்டும், சமயத்துக்கு ஏற்ப மாற்றப்படவேண்டும். இதற்கும் நீங்கள் கூறும் வர்க்கம், உறவுமுறைகள், உற்பத்திக்கும் என்ன சம்பந்தம்?//

விதிகள் விதிகளாக இருப்பதில் இருந்து வளர்ச்சி அடையும் என்பது உற்பத்தி பொருத்து உற்பத்தி உறவுகள் மாறும் எனும் விதியை பொறுத்து அனைத்தும் மாறும்

விதிகள் அதன் இயக்கவியல் போக்கில் மாறி ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாக மாறும் அதான் பிரின்ஸ்பல் என்றேன்

ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறைகளால் இயங்கும் சமூகமாக இருக்கும்

ரோடு இருந்தா பஸ்சிருக்கும்
பெட்ரோல் இருக்கும்னு மீண்டும் அதையே பேசி போரடிக்காதீங்க தமிழ் மணி

ஒரு விதை தனது வளர்ச்சிப்போக்கில்
எப்படி மரம் எனும் நிலையை அடைகிற்தோ

அதேப் போல விதியும் தனது வளர்ச்சிப்போக்கில்

ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை எனும் இடத்தை அடையும்

ஆனா நீங்க மரத்தை விதைன்னுதான் சொல்லுவேன் என்றால் நான் ஒன்னும் சொல்லமுடியாது

நாய் குட்டி என்பது வேறு பெரிய நாய் என்பது வேறு நாய் வயிற்றில் இருக்கும் கரு என்பது வேறு

விதிகளும் ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறையும் இப்போ முரண்படும் உதாரணத்தை பார்போம்

வயது வந்த எல்லா ஆணும் பெண்ணும் திருமணம் செய்யலாம் என்பது சட்டவிதி

ஆனால் ஒரு சகோதரன் தன் உடன் பிறந்த சகோதரியை ஒரு தாய் தான் பெத்த மகனை மணம் முடிப்பதில்லை
இதற்க்கு பேர் தான் ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறை என்பது
ஆக இது ஒரு கட்டத்தில் விதியாக இருந்தது என்பதை நான் மறுக்கவில்லை ஆனால் இப்போ அது ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறையா ஆகிடுச்சு

யாரும் இதை நினைத்துகூட பார்ப்பதில்லை இது ஒரு விதியான்னு
\
உங்களுக்கு விதிக்கும் ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறைக்கும் வித்தியாசம் தெரியனும்

திறமைகேற்ற உழைப்பு
தேவைக்கேற்ற ஊதியம் என்பது

ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு நடைமுறையா கம்யூனிசத்தில் இருக்கும்


29. Oktober 2007 06:35

தமிழ்மணி said...
//ஆக இது ஒரு கட்டத்தில் விதியாக இருந்தது என்பதை நான் மறுக்கவில்லை ஆனால் இப்போ அது ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறையா ஆகிடுச்சு //
இன்னொரு உதாரணம் கொடுத்துள்ளீர்கள்.
தயவு செய்து இதனை எடுத்துச்சென்று உங்கள் தோழர்களிடம் கேளுங்கள்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை என்பது மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட விதி. அவ்வளவுதான்.
இன்றும் செய்தித்தாளில் சகோதரனை திருமணம் செய்துகொண்ட சகோதரி விஷயம் வந்திருக்கிறது. அது சட்டபூர்வமல்ல என்று நீதிமன்ற்ம் கூறும்.


29. Oktober 2007 06:47

தியாகு said...
உங்களுடன் பேசிகொண்டு இருந்தால்

என் விதி மாறிடும் என்பது மட்டும் தெரியுது

வேற எதாவத் பேசலாமா நண்பரே :))


29. Oktober 2007 06:49
தமிழ்மணி said...
//ரோடு இருந்தா பஸ்சிருக்கும்
பெட்ரோல் இருக்கும்னு மீண்டும் அதையே பேசி போரடிக்காதீங்க தமிழ் மணி
//
போரடிப்பதற்கு மன்னிக்கவும்.
ஆனால், நான் அதனை சொல்லவில்லை. நான் சொல்வது வேறு.
கார் இருந்தால், கார் ஓட்ட சாலை வேண்டும். பலர் ஒரு சாலையை உபயோகப்படுத்த வேண்டுமெனில், அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விதிமுறைகள் உருவாக்கப்படவேண்டும். அவை enforce செய்யப்படவேண்டும். அப்போதுதான் எல்லோரும் சாலையில் கார் ஓட்டமுடியும்.
எல்லோரும் ஒப்புக்கொள்வதாலேயே அவை விதிமுறைகள் அல்லாமல் போய்விடாது. எல்லோரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒரு சிலர், இங்கே ஏன் ஸ்டாப் சிக்னல் இருக்கவேண்டும். இங்கே ஸ்டாப் சிக்னல் இருப்பது மக்களுக்கு இடையூறு என்று குரல் எழுப்புவார்கள். அதனால், அது விசாரணை செய்யப்படும். அதன் பின்னால், அந்த ஸ்டாப் சைன் அங்கிருந்து நீக்கப்படலாம். அல்லது அங்கேயே இருக்கலாம். அல்லது இந்த நேரங்களில் இங்கே சிக்னல் இருக்காது என்று மாறுதல் அடையலாம்.
இதனைத்தான் சொல்கிறேன்.


29. Oktober 2007 06:53

தமிழ்மணி said...
ஆகவே, பலர் பங்கு பெறும் எந்த சமூகமாக இருந்தாலும் விதிமுறைகள் வேண்டும்.

அந்த விதிமுறைகள் ஏதேனும் ஒரு வகையில் உருவாக்கப்படவேண்டும்.
அந்த விதிமுறைகள் ஏதேனும் ஒரு வகையில் மறு பரிசீலனை செய்யப்படவும் வேண்டும்.
அந்த விதிமுறைகளை enforce செய்ய அமைப்பு வேண்டும்.
அந்த விதிமுறைகளை தவறுபவர்களுக்கு தண்டனை வேண்டும்.


29. Oktober 2007 07:02

தியாகு said...
நண்பர் தமிழ் மணி,
நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து விட்டேன் .

வேறு கேள்விகள் இருந்தால் கேளுங்கள்
மேலும் நானும் இடையே உங்களை கேள்வி கேட்பேன் என்பதை மறக்காதீங்க

விதி பற்றிய உங்கள் இயக்கவியல் முரண்பாட்டோடு என்னால் ஒத்துபோக முடியாது .

29. Oktober 2007 21:39

தமிழ்மணி said...
//கார் இருந்தால், கார் ஓட்ட சாலை வேண்டும். பலர் ஒரு சாலையை உபயோகப்படுத்த வேண்டுமெனில், அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விதிமுறைகள் உருவாக்கப்படவேண்டும். அவை enforce செய்யப்படவேண்டும். அப்போதுதான் எல்லோரும் சாலையில் கார் ஓட்டமுடியும்.
எல்லோரும் ஒப்புக்கொள்வதாலேயே அவை விதிமுறைகள் அல்லாமல் போய்விடாது. எல்லோரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒரு சிலர், இங்கே ஏன் ஸ்டாப் சிக்னல் இருக்கவேண்டும். இங்கே ஸ்டாப் சிக்னல் இருப்பது மக்களுக்கு இடையூறு என்று குரல் எழுப்புவார்கள். அதனால், அது விசாரணை செய்யப்படும். அதன் பின்னால், அந்த ஸ்டாப் சைன் அங்கிருந்து நீக்கப்படலாம். அல்லது அங்கேயே இருக்கலாம். அல்லது இந்த நேரங்களில் இங்கே சிக்னல் இருக்காது என்று மாறுதல் அடையலாம்.
இதனைத்தான் சொல்கிறேன்.
//

நண்பர் தியாகு,
மேற்கண்ட process உங்களது கற்பனை சமூகத்தில் இருக்காது என்று சொல்கிறீர்களா?

நன்றி

30. Oktober 2007 06:49

64 Comments:

said...

நண்பர் தியாகுவுக்கு என் கேள்விகள்

//(தவறி ரோட்டில் துப்புபவர்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அபராத தொகை அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்) //

இங்கே ரோட்டில் துப்புவது தவறு என்பது ஒரு விதிமுறை. அந்த விதிமுறையை உருவாக்கியது யார்? எந்த முறையில் (In what process) இந்த விதிமுறை உருவாக்கப்பட்டது?

அபராத தொகை என்பது பணமா? அப்படியானால் கம்யூனிஸ சமூகத்தில் பணம் உண்டா?

அந்த அபராத தொகை எங்கே அனுப்பி வைக்கப்படும்?

ரோட்டில் துப்புவதற்கு 100 ரூபாய் அபராதம் என்றால், 100 ரூபாய் என்று நிர்ணயித்தது யார்?




//குற்றத்தின் சதவீதம் புள்ளி ஒரு சதவீதத்துக்குமேல் குறைந்ததால் சிறை சாலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டன //


குற்றத்தின் சதவீதம் புள்ளி ஒரு சதவீதத்துக்கு குறைந்தாலும், குற்றங்கள் இருக்கின்றன.
அந்த குற்றங்கள் என்ன?
இவை குற்றங்கள் என்று யார் விதிமுறை செய்தது?
எந்த பிராஸஸ் மூலம் இந்த விதிமுறைகள் உருவாயின?



மேலும் தொடரும்.
நன்றி நண்பர் தியாகு.

Anonym said...

1. எச்சில் துப்புபவர்களை ஸ்கேன் செய்யவேண்டும் என்றால், 24 மணிநேரமும் ஒவ்வொரு மனிதனும் கண்காணிக்கப் படுவானா? ஜார்ஜ் ஆர்வெல் 1984-ல் கம்யூனிச சமூகம் பற்றி சொன்னதை எதிரொலிப்பது போல் உள்ளதே.
2. கணிணி என்பதே மூலதனத்தை அடிப்படையாய்க் கொண்ட சமூகம் செழுமை செய்து அளித்த விஷயம் அல்லவா? கணிணி மயமாதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இல்லையா?
3.
"அதாவது திறமைக்கேற்ற வேலை தேவை கேற்ற ஊதியம் வழங்கப்படும் போது இரண்டும் வித்தியாசத்தை இழந்து விட்டன "

தேவை என்பதை யார் நிர்ணயிப்பார்கள்? ஒருவனுக்கு அரிசி தேவை, ஒருவனுக்கு கோதுமை தேவை. ஒருவனுக்கு பழம் பிடிக்கும். ஒருவனுக்கு இசை பிடிக்கும். யாருக்கு எது தேவை என்று நிர்ணயிக்கும் அமைப்பு எது? தன்னுடைய முழுத் திறமையையும் ஒருவன் வெளிகாட்டி உழைக்கிறான் என்று எப்படி கண்டுபிடிப்பது?
தியாகு Ayn Rand படிக்க சிபாரிசு செய்கிறேன். 18-ம் நூற்றாண்டிலிருந்து மீண்டு 21-ம் நூற்றாண்டிற்கு வரவும்.

said...

ரோட்டில் துப்புபவர்களுக்கு தண்டனை என்பது ஒரு அதிகாரத்தின் வெளிப்பாடு இல்லையா?

Anonym said...

கமெண்ட் மாடரேஷன் போடாதீர்கள்.

said...

நன்றி தியாகு,
மேலும் ஒரு கேள்வி
//ரோட்டில் நடப்பவர்கள் எச்சில் துப்ப அதற்கென இருக்கும் இடத்தில் துப்புகிறார்கள்

ரோட்டோரம் ஒரு போலீஸ்காரர் நிற்க வில்லை

(தவறி ரோட்டில் துப்புபவர்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அபராத தொகை அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்//

அப்படியானால் ஸ்கேன்கள் கண்டுபிடிக்கப்படும்வரைக்கும் கம்யூனிஸம் வராதா?

ஸ்கேன்கள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் கம்யூனிஸம் வந்தால், அங்கே போலீஸ்காரர் நிற்பாரா?

நன்றி

Anonym said...

//தேவை என்பதை யார் நிர்ணயிப்பார்கள்? ./

இது கேள்வி.

said...

//1. எச்சில் துப்புபவர்களை ஸ்கேன் செய்யவேண்டும் என்றால், 24 மணிநேரமும் ஒவ்வொரு மனிதனும் கண்காணிக்கப் படுவானா? ஜார்ஜ் ஆர்வெல் 1984-ல் கம்யூனிச சமூகம் பற்றி சொன்னதை எதிரொலிப்பது போல் உள்ளதே.///

ஸ்கேன் இயந்திரம் ஒரு பாதையில் வைப்பது என்பது அந்த சமூகம் தீர்மானிக்கும் அல்லது அதற்கு மாற்றான ஒன்றை அந்த சமூகம் தான் தீர்மானிக்கும் இது முழுக்க என்னோட கற்பனை
நான் இன்னும் முதலாளித்துவ சமூகத்தில் தான் இருக்கிறேன்
எனவே என்னால் இதிலிருந்து கற்பித்து இப்படி ஒரு தீர்வு தரமுடிகிறது அது தவறாக இருக்கலாம் அல்லது சரியாக இருக்கலாம் தவறு என்றோ சரியென்றோ இந்த கதை மூலம்
விவாதிக்க வேண்டாம் இதை என் கமெண்டில் போட்டு இருக்கேன் பார்க்கவும் அனானி

//2. கணிணி என்பதே மூலதனத்தை அடிப்படையாய்க் கொண்ட சமூகம் செழுமை செய்து அளித்த விஷயம் அல்லவா? கணிணி மயமாதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இல்லையா?//

அட கணினி என்பது கம்யூனிச சமூகத்தின் கண்டு பிடிப்பு என்று யார் சொன்னது .
கணினி மயமாதலுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்
என்றால் கணினி வேலையாளர்களை குறைக்கும் ஒரு முதலாளித்துவ சமூகத்தில் அந்த வேலைக்குத்தான் பயன்படுகிறது

எந்த கருவியும் தவறானதல்ல ஆனால் அது எந்த சமூகத்துக்கு சேவை செய்கிறது என்பதுதான் முக்கியம்

//"அதாவது திறமைக்கேற்ற வேலை தேவை கேற்ற ஊதியம் வழங்கப்படும் போது இரண்டும் வித்தியாசத்தை இழந்து விட்டன "//

தேவை என்பதை யார் நிர்ணயிப்பார்கள்?

உனக்கு தேவை என்ன வென்பதை நீதான் தீர்மானிப்பாய்
இப்போது எப்படி இருக்கு அப்படித்தானே

ஒருவனுக்கு அரிசி தேவை, ஒருவனுக்கு கோதுமை தேவை. ஒருவனுக்கு பழம் பிடிக்கும். ஒருவனுக்கு இசை பிடிக்கும். யாருக்கு எது தேவை என்று நிர்ணயிக்கும் அமைப்பு எது?

அட என்னக்க நீங்க மறுபடியும் என் பிளாக்கில் இருக்கும்

எனது பதிலை படிச்சிட்டு வாங்க மையப்படுத்தப்பட்ட
ஒரு அமைப்பு உக்காந்து கொண்டு யாருக்கு எது தேவை என
தீர்மானிப்பது இல்லை கம்யூனிசத்தில்

தனது உழைப்பை செலுத்தி
தனக்கு தேவையானதை எடுத்து கொள்வான்

விதிகளால் ஆளப்படும் சமூகம் அல்ல
principle களால் நடக்கும் சமூகம் இதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

அரிசியோ கோதுமையோ பழமோ எல்லாம் கிடைக்கு ஒரு சமூகத்தில் அடிதடி எப்படி நடக்கும்


//தன்னுடைய முழுத் திறமையையும் ஒருவன் வெளிகாட்டி உழைக்கிறான் என்று எப்படி கண்டுபிடிப்பது?
தியாகு Ayn Rand படிக்க சிபாரிசு செய்கிறேன். 18-ம் நூற்றாண்டிலிருந்து மீண்டு 21-ம் நூற்றாண்டிற்கு வரவும்.//

அடுத்து 21 ம் நூற்றாண்டுக்கு வருவேன் இன்னும் 20 நூற்றாண்டிலும் சில வேலைகள் இருக்கு

Anonym said...

நாம் primitive communism என்று அழைத்த சமூகங்கள் கூட primitive ஆகவும் இல்லை கம்யூனிஸ்டாகவும் இல்லை என்பது சமூகவியல் ஆய்வாளர்களின் முடிவு. உற்பத்தி உறவுகள் என்ற சொற்றொடரே மீண்டும் பரிசீலிக்கத்தக்கது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. அதுவும் சேவையயும், கணிணியையும் மையம் கொண்ட ஒரு நிலையில் எங்கிருந்து உற்பத்தி உறவு வருகிறது. தேவைகளையும், சப்ளையையும் அடிப்படையாய்க் கொண்டு தான் எல்லா சமூகங்களும் இயங்கி வருகின்றன. இனியும் இயங்கி வரும். அந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் தலிகீழ்ப் புரிதலில் இயங்கிய சோஷலிஸ்ட் சமூகங்கள் வீழ்ச்சியுற்றது, மூலதனத்தை அடிப்ப்டையாய்க் கொண்ட சமூகங்களில் தனிமனித சுதந்திரமும், அடிப்படை வாழ்க்கை வசதிகளும் கிடைப்பதை கண்கொண்டு பார்க்க மறுக்கும் கருத்துக் குருடர்கள் சோஷலிசம் , கம்யூனிசம் என்ற சொர்க்கத்தைக் காட்டி இன்றைய மனித வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறர்கள்.

கம்யூனிசம் என்பது உங்கள் கற்பனையில் உதித்த சொர்க்க லோகம் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி. அதையே தான் நானும் சொல்கிறேன். கற்பனாவாதம் கனவுலகிலும், மதவாதிகளின் ஆசைகாட்டலிலும் , சினிமா டூயட்டிலும் வரலாமே தவிர சமூக அலசலில் வரலாகாது.
கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் வீழ்ச்சியிலும், ரோமானியாவின் சோஷலிச ஆளும் வர்க்கம் நடத்திய அராஜகத்திலும், கம்யூனிஸ்ட் போல் போட் நடத்திய படுகொலை மைதானங்களுக்கு அப்புறமும், ஒரு படித்த அன்பர் கம்யூனிசம் பேசும் வேதைனையை என்ன சொல்ல?

Anonym said...

//அரிசியோ கோதுமையோ பழமோ எல்லாம் கிடைக்கு ஒரு சமூகத்தில் அடிதடி எப்படி நடக்கும்
//

stradivari என்று ஒரு வயலின் இருக்கிறது. அது உலகத்திலேயே 10 வயலின்கள்தான் இருக்கின்றன.
அந்த வயலின் தனக்கு வேண்டும் என்று பெரும் இசை மேதைகள் போட்டி போடுகிறார்கள். பெரும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.

தனக்கு அந்த வயலின் வேண்டும் என்று கேட்டால், ஆரம்பநிலை வயலின் கற்றுக்கொள்பவரும், உச்ச நிலை வயலின் வாசிப்பாளர்கள் 100 நூறு பேரும் கேட்டால் யாருக்கு கிடைக்கும்?

Anonym said...

// கற்பனாவாதம் கனவுலகிலும், மதவாதிகளின் ஆசைகாட்டலிலும் , சினிமா டூயட்டிலும் வரலாமே தவிர சமூக அலசலில் வரலாகாது.
//
அதனால்தான் கம்யூனிஸத்தை மதம் என்று கூறுகிறார்கள்.

said...

அனானிக்கு நன்றி


//நாம் primitive communism என்று அழைத்த சமூகங்கள்

கூட primitive ஆகவும் இல்லை கம்யூனிஸ்டாகவும்

இல்லை என்பது சமூகவியல் ஆய்வாளர்களின் முடிவு. //
இதை பற்றி பேசுவோம்


//உற்பத்தி உறவுகள் என்ற சொற்றொடரே மீண்டும்

பரிசீலிக்கத்தக்கது என்பது பொருளாதார நிபுணர்களின்

கருத்து. அதுவும் சேவையயும், கணிணியையும் மையம்

கொண்ட ஒரு நிலையில் எங்கிருந்து உற்பத்தி உறவு

வருகிறது.//

சேவையையும் கணினியையும் சாப்பாட்டுக்கு என்ன செய்ய போகிறது உணவோ ,உடையோ உற்பத்தி செய்யாமல் ஒரு சமூகம் வாழும் என்பது உங்கள் கற்பனையா
// தேவைகளையும், சப்ளையையும்

அடிப்படையாய்க் கொண்டு தான் எல்லா சமூகங்களும்

இயங்கி வருகின்றன. இனியும் இயங்கி வரும்.
செம ஜோக்

உற்பத்தியை அடிபடியில் இருந்து எடுத்துவிட்டது நீங்கள்
தமாஸ் பேர்வழி என்பதை காட்டுகிறது அல்லது அதை
தேவைக்குள் ஒழித்து விட்டீர்களா?

// அந்த

அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் தலிகீழ்ப் புரிதலில்

இயங்கிய சோஷலிஸ்ட் சமூகங்கள் வீழ்ச்சியுற்றது,//

இதை மறுக்கிறேன் அடிப்படை புரிதல் இல்லாமல் வீழ்ச்சியுறவில்லை எதிர்சக்திகளின் கைக்கு சமூகம் போயிடுச்சு இதான் உண்மை


//மூலதனத்தை அடிப்ப்டையாய்க் கொண்ட சமூகங்களில்

தனிமனித சுதந்திரமும், அடிப்படை வாழ்க்கை

வசதிகளும் கிடைப்பதை கண்கொண்டு பார்க்க மறுக்கும்

கருத்துக் குருடர்கள் சோஷலிசம் , கம்யூனிசம் என்ற

சொர்க்கத்தைக் காட்டி இன்றைய மனித வாழ்க்கையை

நரகமாக்கிக் கொண்டிருக்கிறர்கள்.//

மூலதனம் அடிப்படை வாழ்க்கை வசதியை வழங்கிடுச்சு என்று சொல்லும் நீங்கள் உற்பத்தி செய்யாமல் எப்படி வழங்குச்சு நண்பரே

முரண்பாடாக இல்லை

//கம்யூனிசம் என்பது உங்கள் கற்பனையில் உதித்த

சொர்க்க லோகம் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

அதையே தான் நானும் சொல்கிறேன். கற்பனாவாதம்

கனவுலகிலும், மதவாதிகளின் ஆசைகாட்டலிலும் ,

சினிமா டூயட்டிலும் வரலாமே தவிர சமூக அலசலில்

வரலாகாது.//

நான் எழுதிய கதை கற்பனையானது என்று சொன்னேன்

கருத்து திரிபுதான் உங்கள் வாதமுறையோ
வருத்தப்படுகிறேன்

//கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் வீழ்ச்சியிலும், ரோமானியாவின்

சோஷலிச ஆளும் வர்க்கம் நடத்திய அராஜகத்திலும்,

கம்யூனிஸ்ட் போல் போட் நடத்திய படுகொலை

மைதானங்களுக்கு அப்புறமும், ஒரு படித்த அன்பர்

கம்யூனிசம் பேசும் வேதைனையை என்ன சொல்ல?//

கம்யூனிசம் கம்யூனிசம் என்று சொல்வது நீங்கள் இன்னும் சோசலிசத்தில் ஏற்பட்ட சண்டைகளை கம்யூனிசம் என்று புரிந்து கொண்டு ரொம்ப வருத்தபடாதீங்க அனானி

ஒரு படித்த அன்பர் மூலதனத்தின் கேட்டை ஏற்றுகொள்வதை
நான் மிகவும் வருத்ததுடன் பார்கிறேன்

said...

//stradivari என்று ஒரு வயலின் இருக்கிறது. அது உலகத்திலேயே 10 வயலின்கள்தான் இருக்கின்றன.
அந்த வயலின் தனக்கு வேண்டும் என்று பெரும் இசை மேதைகள் போட்டி போடுகிறார்கள். பெரும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.
//

அதனால் வயலின் வித்துவான்களிடையே சண்டை வைப்போம்

யார் சண்டையில் ஜெயிக்கிறார்களோ அவருக்கு கொடுப்போம்

பகடி செய்யாதீர்கள் அனானி

சோற்றை பத்தி பேசினால் வயலின் பற்றி பேசுவாய்

வயலின் பத்தி பேசினால் இன்னும் உலகில் ஒரே ஒரு பொருள் எதேனும் இருக்கா என தேடுவீரா

உங்கள் வாதம் உங்களுக்கே ஜோக்கா இல்லை

Anonym said...

1. சோஷலிசத்தின் தோல்விகள் : சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியில் பிற நாடுகளின் பங்கு இருக்கலாம் என்று ஒப்புக் கொண்டாலும் கூட போல் போட்டின் படுகொலைகளுக்கும், மாஓவின் படுகொலைகளுக்கும், ஸ்டாலினின் படுகொலைகளுக்கும், ஹங்கேரி, ஆஃப்கானிஸ்தானை சோவியத் யூனிய்ன ஆக்கிரமித்ததற்கும் யார் காரணம்? திபெத்தை சீனா ஆக்கிரமித்ததற்கும், வடகொரியவும், கியூபாவும் அடக்குமுறை நாடுகளாய் இருப்பதற்கும் யார் காரணம் என்று தெரிவியுங்கள்.

2. சோஷலிசத்தின் தவறுகளைக் காட்டி கம்யூனிசத்தின் மீது தவறு சொல்லாதீர்கள் என்று சொல்வது எனக்குப் புரியவில்லை. சோஷலிசத்தைத் தாண்டித்தான் கம்யூனிசம் சென்றடைய வேண்டும் என்று மார்க்சிய பாலபாடத்தை அடியொற்றி மாஓ, ஸ்டாலின், கிம் இல் ஜாங், போல் போட் போன்றோரின் சோஷலிச உலகைத் தாண்டி மக்கள் உயிருடன் இருக்க மாட்டார்களே என்று தான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

3.நான் உற்பத்தி இருக்காது என்று கூறவில்லை. என் குறிப்பை கவனமாய்ப் படியுங்கள். மார்க்ஸ் கோட்பாட்டின் அடிப்ப்டையான உற்பத்தி உறவுகள் தான் சமூகத்தின் நிர்ணய சக்தி என்பதையும், இந்த் தவறான அடிப்படையில் ஏற்பட்ட வர்க்கக் கோட்பாட்டையும் தான் தவறென்று சுட்டிக் காட்டியிருக்கிறேன். உற்பத்தி என்பது உற்பத்தி சாதனங்களின் உடைமையை மட்டுமல்லாமல், உற்பத்தியின் பிற கூறுகளான், தேவை, சப்ளை, ஆகியற்றையும் உள்ளடக்கியது , சமூக அமைப்பின் நிர்ணய சக்திகளாய் மற்ற கூறுகளான, இயற்கை வளம், ஜனநாயக அமைப்பு, அதிகாரப் பரவலை சாத்தியமாக்கும் அரசியல் அமைப்பு, உரிமைகளை மதிக்கும் கலாசாரப் பின்னணி என்று பல காரணிகள் உள்ளன.

said...

என் பதில்
//சமூகத்தில் நடைமுறையில் இருக்கும் தற்போது இருக்கும் விதிகள் அப்படியே இருக்கும் என்று நீங்கள் சொன்னால்
சமூகம் மாறாது என்று அர்த்தமாகிறது .

ஆனால் சமூகம் மாறும் என்பதை ஒத்து கொள்கிறீர்கள்
ஆனால் இந்த விதிகள் அப்படியே தான் இருக்கும் என்று சொல்கிறீர்கள் .இதான் முரண்பாடு
//

நான் எங்கே சொன்னேன். விதிகள் மாறிக்கொண்டே இருக்கும். விதிகள் முழுமை பெறாது என்று சொன்னேன். நீங்கள்தான், விதிகள் முழுமை பெறும் காலம் வரும் என்று சொன்னீர்கள்.

//
ஒரு சமூகம் மாறும் போது விதிகளும் மாறும்

விதியே தன்னளவில் மாறும் போது அது "ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை எனும் நிலையை எடுக்கும் "

இதை விளக்கத்தான் உங்களுக்கு தூக்கத்தில உச்சா போற உதாரணத்த சொன்னேன்

சின்ன குழந்தையாக இருக்கும் போது உச்சா போற குழந்தையை சொல்லியும் அடித்தும் திருத்துகிறார்கள்

அதுவே அவன் பெரியவனானதும் அந்த விதியின் உண்மை நிலையை உணர்ந்து ஏற்று கொள்கிறான் .

திரும்ப அவன் தவறு செய்வதில்லை

அதைத்தான் ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறை என்றேன்
//
ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கும் விதிக்கும் வித்தியாசம் இல்லை என்று சொல்கிறேன்.
அது விதிதான். அந்த விதியோடு முழுவதும் ஒருவன் ஒத்துழைப்பதாலேயே, அது விதி அல்ல என்று கூற முடியாது.

//
நீங்கள் திரும்ப செய்வான் என்கிறீர்கள்

இது விதண்டாவாதம் தானே

மேலும் கேள்விகள் இருந்தால் தர்க்கபூர்வமானதாக இருந்தால் கேளுங்கள்
//
ஒரு பெரும் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் விதிமுறைகளுக்கு மாற்றாக செய்யக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள். எந்த சமூகத்திலும். அந்த நபர்களே அந்த சமூகம் மாறுதலடைய காரணமாக இருக்கிறார்கள்.

said...

என் பதில்
//தமிழ் மணி எந்த அடிப்படையில் விதிகள் எப்போதும் முடிவு பெறாது என சொல்கிறீர்கள் .

விளக்குங்கள்
//
விதிகள் எப்போதுமே முழுமை பெறாது. விதிகள், சட்டங்கள், ஆகியவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். மாறிக்கொண்டே இருக்கவேண்டும். தற்போது ஒரு நாட்டுக்கு ஒரு அரசியல் சட்ட அமைப்பு உருவானதால், அந்த சட்ட அமைப்பில் மாற்றமே நிகழக்கூடாது என்று பொருள் அல்ல. அந்த சட்ட அமைப்பை மாற்றக்கூடிய விதமும் அந்த சட்டத்திலேயே எழுதப்படவேண்டும்.
ஏன் எழுதுகிறார்கள். ஏனெனில், 1940இல் இருக்கும் சமூக சூழ்நிலைகள் போல, 2007இல் இருக்காது. எதிர்காலத்தில் என்ன என்ன சமூக பிரச்னைகள் வரும், வராது என்பதை 1940இலேயே கணிக்க எவராலும் முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலை மாறுதல்கள் ஆயிரக்கணக்கான விஷயங்களால் வரலாம். உதாரணமாக, செல்போனை பள்ளிக்கூடங்களுக்குள் உபயோகப்படுத்தக்கூடாது என்ற சட்டத்தை எடுத்துக்கொள்வோம். இந்த சட்டத்தை செல்போனே இல்லாத காலத்தில் யோசிக்க முடியுமா? முடியாது.
ஆகவே, காலத்துக்கு ஏற்றாற்போல தொழில்நுட்பத்துக்கு ஏற்றாற்போல புது சட்டங்களை உருவாக்கவும், பழைய சட்டங்களை மாற்றவும் வேண்டும்.

said...

நண்பர் தியாகு,
கம்யூனிஸ சமூகமாக இருந்தாலும் விதிகள் இருக்கும்.
விதிகளை மாற்றவேண்டிய தேவையும் இருக்கும்
புது விதிகள உருவாக்கவேண்டிய தேவையும் இருக்கும்

காத்திருக்கிறேன்.
நன்றி

said...

அப்போ சமூக மாற்றம் நடக்கும் என்கிறீர்கள்

அதாவது சமூகத்தின் விதிகளை அலட்சியம் செய்பவர்களால் அது நடக்கும் என்கிறீர்கள் சரிதானே


சமூகத்தின் விதிகளை அலட்சியம் செய்வது யார்

இதற்கு முன்பு அப்படி அலட்சியம் செய்தவர்களால்

சமூக மாற்றம் ஏற்பட்டு இருப்பின் அது எந்த சமூகம் எந்த சமூகத்தில் இருந்து மாறியது?\

நீங்கள் சொன்னதற்கேற்ப அலட்சிய படுத்தப்பட்ட விதி எது ? ஏன் அலட்சியபடுத்தப்பட்டது?

said...

அனானி

கடைசியில் உங்களிடம் இருக்கும் ஒரே ஆயுதமாம் ஸ்டாலின் தவறு செய்தார் அல்லது படுகொலை செய்தார்
மேலும் மாவோ தவறு செய்தார் படுகொலை செய்தார் எனும் அதே புரளியை பேச துவங்கி விட்டீர்க்

இந்த செய்திகள் பரப்பிய நிறுவனங்கள் முதலாளித்துவ குஞ்சுகளான கான்குவஸ்டும் இன்னும் பல முதலாளித்துவ ஆதரவு இதழ்கள் தான் என்பதையும் உண்மையிலேயே அங்கு நடந்தவை எதிர்புரட்சியை அடக்கிய செயல்தான் அன்றி வேறில்லை ..

நிற்க இதில் சோசலிசத்தின் தத்துவத்தின் மீது குறைகூற என்ன முகாந்திரம் இருக்குன்னு தெரியலை .


நிறைய பேர கொன்னுட்டாங்கடா சோசலிசத்தின் என்றால்

ஏன் கொன்னாங்க அது உண்மையா இதெல்லாம் கேட்பதில்லை
அவசரத்தின் ஒன்னுக்கு இருப்ப்வன் போலத்தான் பேசிவீர்கள்

ஆ சோசலிசம் அடிப்படை தவறுன்னு

என்ன அடிப்படை தவறுன்னா

உற்பத்தியும் உற்பத்தி உறவுகளும்

தீர்மான கரமான சக்தி இல்லை

தேவையும் சப்ளையும்தான் சொல்றீங்க

சரி தேவையை சப்ளையும் மாறும் போது ஒரு சமூகம் மாறுமா

இதை மற்ற சமூக மாற்றத்துக்கு பொருத்தி நிரூபியுங்கள் பார்க்கலாம்

said...

//நீங்கள் சொன்னதற்கேற்ப அலட்சிய படுத்தப்பட்ட விதி எது ? ஏன் அலட்சியபடுத்தப்பட்டது?//

அவற்றுக்கு பிறகு வரலாம்.
தற்போது, எந்த சமூகமாக இருந்தாலும் விதிகள் உண்டு, அவைகளை மாற்றவேண்டிய அவசியமும், புது விதிகளை உருவாக்கவேண்டியதும் உண்டு என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

நன்றி

said...

தவறான புரிதல்
மேலும் அதையே சரியென சொல்ல சொல்லும் ஒரு கருத்து குருடு நிலைக்கு போய்விட்டீர்கள்

விதிகள் இயங்கியல் படி "ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறை"
என்ற வடிவம் அடையும்

அதாவது விதி சட்டம் -தண்டனை

எனும் வடிவங்கள் மாறிவிடும் கம்யூனிச சமூகத்தில் இதை ஒப்புகொள்கிறீர்களா இல்லையா?

said...

//தவறான புரிதல்
மேலும் அதையே சரியென சொல்ல சொல்லும் ஒரு கருத்து குருடு நிலைக்கு போய்விட்டீர்கள்

விதிகள் இயங்கியல் படி "ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறை"
என்ற வடிவம் அடையும்

அதாவது விதி சட்டம் -தண்டனை

எனும் வடிவங்கள் மாறிவிடும் கம்யூனிச சமூகத்தில் இதை ஒப்புகொள்கிறீர்களா இல்லையா?//

இல்லை.
மீண்டும் சொல்கிறேன்.
விதிக்கும் ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறை என்பதற்கும் வித்தியாசம் கிடையாது.
எல்லா சமூகங்களிலும் விதிகள் உண்டு.

கம்யூனிஸ சமூகம் என்று நீங்கள் சொல்லும் கற்பனை சமூகத்திலும் விதிகள் இருந்தே ஆகவேண்டும். விதிகளை எல்லோரும் ஒப்புக்கொண்டாலும், விதிகள் இருக்கின்ற்ன.

said...

இப்ப என்ன செய்யலாம்

said...

சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் அதுதான் விவாதமா

நண்பரே புல்லரிக்குது

Anonym said...

1. முதலில் தேவை சப்ளையின் மாற்றங்கள் பற்றி. தேவை, சப்ளை என்பது அடிப்ப்டையான சமூக பொருளாதாரச் சித்தாந்தம் .உடலின் அடிப்படையான பசியைப் போல. எந்தப் பொருளின் தேவை, எந்த பொருளின் சப்ளை என்பது நிச்சயம் மாறுபடத்தான் செய்யும். உதாரணமாக நம் நாட்டில் கட்டடம் கட்ட சிமெண்ட் தேவை. சில நாடுகளில் மரம் தேவை. சில நாடுகளில் செங்கள்ளாலும், சில நாடுகளில் கன் கிரீட் சிலாப்களாலும் கட்டுகிறார்கள். மர வீடுகள் கட்டப் படும் நாடுகளில் சிமெண்டுக்குத் தேவை இல்லை. அங்கு அதை உற்பத்தி செய்ய மாட்டார்கள். நம்முடைய உணவுப் பழக்கங்களும் கூட மாறி வருகின்றன. அரிசி சாதம் சாப்பிடாத வட இந்தியாவில் கோதுமைக்கு டிமாண்ட் அதனால் கோதுமை தான் சப்ளை உண்டு. அங்கு அரிசி போக வேண்டும் என்றால், அரிசியின் பயணத்துக்கான செலவும் உற்பத்திச் செலவு போல அதன் விலையைப் பாதிக்கும். போக்குவரத்தில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்கள் கரிக்கும், பிறகு மின்சார உற்பத்திக்கும் டிமாண்ட் ஏற்படுத்தி அதனால், கரிச் சுரங்கங்கள், மின்சக்தி உற்பத்தியின் தொழில் நுணுக்கங்கள் என்று மாறுதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் ந்ம கண்கள் முன்பு நடந்த மாறுதல்களைப் பார்த்தாலே அதன் உண்மை தெரியும்.

2. ஸ்டாலின் , மாவின் படுகொலைகள் பற்றி ஸ்டாலினுக்கு பின்பு வந்த கம்யூனிஸ்ட் தலைவர்களே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஸ்டாலினின் "தவறுகளை" (வேறென்ன படுகொலைகளும், ஆட்கள் மறைவதும் தான்) சுட்டிக் காட்டியதால், குருஷ்சேவ் திரிபுவாதி என்று தீ கம்யூனிஸ்டுகளால் பட்டம் சூட்டப் பட்டது உங்களுக்க்த் தெரியாவிடில் வரலாற்றை படித்து அறிந்து கொள்ளுங்கள். சீனாவும், சோவியத்தும் மூடிய சமூகங்களாய் இருந்ததால் அதன் செய்திகள் கசிவுகளாய்த் தான் வெளி வந்தன. ஆனால் அந்தக் காலத்திலேயே, சகாரோவ், அன்ன அக்மதோவா(கவிஞர் , பெண்), நடாஷா (பாஸ்டர்நாக் என்ற நாவலாசிரியரின் மனைவி) என்று பலரும் ஸ்டாலின் பற்றி ஆவணப் படுத்தியுள்ளார்கள். மாவோவின் பிற்பாடு சீனாவிலிருந்து வெளியேறியவர்களின் ஆவணங்களும் உள்ளன. வெறும் பிரசாரப் புத்தகங்களையே மட்டும் படிக்காமல், கண்ணையும், காதுகளையும் மனத்தையும் திறந்து வைத்துக் கொண்டு சுய சிந்தனையை மேற்கொள்ளுங்கள். வேத புத்தகங்கள் மட்டுமே உண்மை அல்ல.
3. இன்று சோஷலிச நாடுகள் என்று அழைக்கப் படும் சமூகங்களும் கூட தேவை, சப்ளை அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன. மூலதன நாடுகளுக்கு முறைந்த செலவில் உழைப்பை வழங்கித்தான் சீனா வளர்ந்து வருகிறது. "காகிதப் புலி" அமெரிக்காவுடன் உறவு நிக்சனால் தொடங்கி வைக்கப் பட்டபோது, நிக்சனின் நோக்கம் சோவியத் யூனியனைத் தனிமைப் படுத்துவதாய் இருந்தது. சீனாவிற்கு "சகோதர" சோஷலிச நாட்டிற்கு எதிராய் காகிதப் புலியுடன் கூட்டுச் சேர்ந்து, சீனவை பொருளாதார ரீதியாய் உயர்த்த முயல்வதில் எந்த நெருடலும் இல்லை. முழுக்க மூலதன நாடாகியும், கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை, சீனாவின் ஆளும் "வர்க்கம்" தாங்குவதில் உள்ள சுயநலம் இது தான்: கம்யூனிஸ்டுக் கட்சியின் பெயரை வைத்துக் கொண் டு மற்ற எந்த மாறுபட்ட கருத்தும் எழாமல் செய்துவிட முடியும். பாலுன் காங் அடக்கு முறை, தியனமன் சதுக்கம் என்று அடக்குமுறைக்கு உதாரணங்கள் உள்ளன. காஸ்ட்ரோ தன் ஆட்சியை 40 வருடமாய் விடாப்பிடியாய் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்த சமூகமும் தேவை சப்ளையை அடிப்படையாய்க் கொண்டு தான் இயங்குகிறது. அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கியூபாவின் சுருட்டும், கரும்பும் ஐரோப்பாவிற்கு ஏறுமதி செய்து தான் கியூபா இயங்கி வருகிறது. ஸோஷலிச சொர்க்கத்தை விட்டு , உயிரைப் பணயம் வைத்து கள்ளத் தோணியில் அமெரிக்காவிற்கும்பயணப்படும் சோஷலிச விரோதிகள், துரோகிகள் கியூபாவிற்கு அனுப்பும் டாலர்களும் கூட கியூபாவின் பொர்ருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிறது.
3. ஸ்டாலின் , மாஓவின் தவறுகள் மூலதன நாடுகளின் பிரசாரம் என்று வைத்துக் கொண்டாலும், சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததும், சீனா கியூபாவை ஆக்கிரமித்தது, சோவியத் ஹங்கேரியை ஆக்கிரமித்ததும் மூலதனப் பிரசாரம் அல்லவே. யோசித்துப் பாருங்கள்.

said...

முன்பு விதிகள் முழுமையடையும் நாள் வரும் என்று சோன்னீர்கள்.
விதிகள் முழுமையடையாது என்று காட்டினேன்.
விதிகள் முழுமையடையாது என்றால், விதிகளை மாற்றவும், உருவாக்கவும் அமைப்பு வேண்டும்.
சிந்தித்துப்பாருங்கள்.

said...

விதிகள் மாறாது விதியாத்தான் இருக்கும் என்றீர்கள்

நான் இயக்கவியல் முறைப்படி

எந்த ஒன்றும் நிலையானதல்ல என்றேன்

விதிகள் சட்டம் எனும் நிலை அரசு தோன்றும் போது தோன்றிய கருத்துரு

அரசு என்பது உதிரிம் போது விதிகள்

நிச்சயம் உதிரும் அதாவது விதிகள் தண்டனை எனும் நிலை மாறி

விதிகள் ஏற்று கொள்ளப்பட்ட நடைமுறை எனும் நிலைபாட்டுக்கு மாறும் இதன் மூலம் விதிகள் தனது வளர்ச்சியை நிறைவு செய்யும் என சொல்லியாச்சு

விதி மாறாது விதி மாறாது எனும் கிளிபிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லாதீங்க நண்பா

said...

எல்லா சமூகங்களிலும் விதிகள் இருக்கும் என்பது ஒரு விதி அல்ல. அது வரைமுறை. தண்ணீர் ஹைட்ரஜன் இரண்டு மூலக்கூறுகளும் ஆக்ஸிஜனும் இணைந்தது என்பது போல.

எல்லா சமூகங்களிலும் விதிகள் என்பது இருக்கும். சமூகம் என்றால் விதிகளும் இருக்கும். சாலை என்றால், அதனை பலர் பயன்படுத்த வேண்டும் என்றால், அந்த சாலையை பயன்படுத்தும் விதிகள் உருவாக்கப்படவேண்டும், சமயத்துக்கு ஏற்ப மாற்றப்படவேண்டும். இதற்கும் நீங்கள் கூறும் வர்க்கம், உறவுமுறைகள், உற்பத்திக்கும் என்ன சம்பந்தம்?


நீங்கள் சொன்னது வேறு. விதிகள் முழுமையடைந்த பின்னால், அவை நடைமுறைகளாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொன்னீர்கள். அப்போது விதிகள் உதிர்ந்துவிட்டதாக கருதலாம் என்று சொன்னீர்கள்.

அப்போதும் விதிகள் உதிரவில்லை. அத்தோடு முழுமையாக ஒத்துழைப்பது விதிகள் உதிர்ந்துவிட்டதாக ஆகாது என்று காட்டினேன்.

அப்படி சமூகத்தில் விதிகளும் முழுமையடையாது என்றும் காட்டினேன்.

தொழில்நுட்பம், சமூக சூழ்நிலை, விபத்துகள் என்று ஆயிரம் காரணங்கள் காரணமாக விதிகள் மாறும், புதுவிதிகள் உருவாகும் என்றும் காட்டினேன்.

ஒரே ஒரு கோஷத்தை சுற்றி சுற்றி மீண்டும் மீண்டும் கூறுவது யார் என்று சிந்தித்துப்பாருங்கள்.

said...

முதலில் தேவை சப்ளையின் மாற்றங்கள் பற்றி. தேவை, சப்ளை என்பது அடிப்ப்டையான சமூக பொருளாதாரச் சித்தாந்தம் //
அப்படியா உற்பத்தி என்னாச்சுங்க :)
அனானி முதலில் கம்யூனிசத்தையும் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் குழப்பி கொள்ளவேண்டாம்
உலகில் இன்னும் எங்குமே கம்யூனிசம் வரவில்லை என்பதை அறிந்து பின் இதெல்லாம் கம்யூனிசம் என
நீங்க தப்பா புரிஞ்சி பேசுகிறதென்றால் எல்லாமே அடிபட்டு போகும் :))



//.உடலின் அடிப்படையான பசியைப் போல. எந்தப் பொருளின் தேவை, எந்த பொருளின் சப்ளை என்பது நிச்சயம் மாறுபடத்தான் செய்யும். உதாரணமாக நம் நாட்டில் கட்டடம் கட்ட சிமெண்ட் தேவை. சில நாடுகளில் மரம் தேவை. சில நாடுகளில் செங்கள்ளாலும், சில நாடுகளில் கன் கிரீட் சிலாப்களாலும் கட்டுகிறார்கள். மர வீடுகள் கட்டப் படும் நாடுகளில் சிமெண்டுக்குத் தேவை இல்லை. அங்கு அதை உற்பத்தி செய்ய மாட்டார்கள். //

தேவை சப்ளை என்பது முக்கிய மல்லவென நான் எங்காவது சொல்லி இருக்கேனா.

ஆனால் உற்பத்திதான் அடிநாதம்

ஓ சில நாடுகளில் சில பொருட்கள் உற்பத்தி செய்வதில்லை ஆனால் உற்பத்தி என்கிற நடைமுறை வேற நாட்டில் இருந்து கிடைக்கிறது என்பதற்காக
உற்பத்தி உறவோ உற்பத்தியோ தீர்மான கரமான
பங்கு வகிக்கலைன்னு சொல்லமுடியுமா?

கம்யூனிச சமூகத்தில் இந்த எல்லைகள் மதிப்பிழந்து விடும் என்பதை உணருங்கள்

கோதுமை அதிகமாக விளையும் நாடு தனது தேவைக்கு போக மீதமானதை கடலில் கொட்டாமல் தேவையான
நாட்டுக்கு அனுப்பும் .
முதலாளித்துவ நாட்டில் இதெல்லாம் பிசினஸ் ட்ரான்சாக்சன் மற்றும் அந்த நாட்டுடன் இருக்கும் உறவுகளை வைத்து தீர்மானிக்கப்படுகிறது

//நம்முடைய உணவுப் பழக்கங்களும் கூட மாறி வருகின்றன. அரிசி சாதம் சாப்பிடாத வட இந்தியாவில் கோதுமைக்கு டிமாண்ட் அதனால் கோதுமை தான் சப்ளை உண்டு. அங்கு அரிசி போக வேண்டும் என்றால், அரிசியின் பயணத்துக்கான செலவும் உற்பத்திச் செலவு போல அதன் விலையைப் பாதிக்கும்.//

முழுக்க புரிஞ்சது சந்தையின் விலையை நிர்ணயிக்கும் கூறுகள் மட்டுமே முக்கியம் அதன் உற்பத்திக்கும் இதுக்கும் சம்ப்ந்தம் இல்லை என்கிறீர்கள்
இதன் மூலமெல்லாம் உற்பத்தி செயல்பாடு எந்த விதத்தில் பாதிப்படையும் அல்லது தேவையற்று போகும் என்பதை கூறமுடியாதே



// போக்குவரத்தில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்கள் கரிக்கும், பிறகு மின்சார உற்பத்திக்கும் டிமாண்ட் ஏற்படுத்தி அதனால், கரிச் சுரங்கங்கள், மின்சக்தி உற்பத்தியின் தொழில் நுணுக்கங்கள் என்று மாறுதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் ந்ம கண்கள் முன்பு நடந்த மாறுதல்களைப் பார்த்தாலே அதன் உண்மை தெரியும்.//

//2. ஸ்டாலின் , மாவின் படுகொலைகள் பற்றி ஸ்டாலினுக்கு பின்பு வந்த கம்யூனிஸ்ட் தலைவர்களே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஸ்டாலினின் "தவறுகளை" (வேறென்ன படுகொலைகளும், ஆட்கள் மறைவதும் தான்) சுட்டிக் காட்டியதால், குருஷ்சேவ் திரிபுவாதி என்று தீ கம்யூனிஸ்டுகளால் பட்டம் சூட்டப் பட்டது //
குருசேவ் அதனால இல்லை தனது திரிபு வாதத்தை மறைக்க தான் ஸ்டாலினின் தவறு செய்தார் என சொன்னார்

அவரது பெரிஸ்ட்ரெக்கா போன்ற திட்டங்கள் ஜனநாயகபடுத்தல் எனும் பேரில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சி கடைசியில் அது கோர்பசேவ் காலத்தில் திரிபு வாதம் வெற்றி பெற்றது

//உங்களுக்க்த் தெரியாவிடில் வரலாற்றை படித்து அறிந்து கொள்ளுங்கள். சீனாவும், சோவியத்தும் மூடிய சமூகங்களாய் இருந்ததால் அதன் செய்திகள் கசிவுகளாய்த் தான் வெளி வந்தன. ஆனால் அந்தக் காலத்திலேயே, சகாரோவ், அன்ன அக்மதோவா(கவிஞர் , பெண்), நடாஷா (பாஸ்டர்நாக் என்ற நாவலாசிரியரின் மனைவி) என்று பலரும் ஸ்டாலின் பற்றி ஆவணப் படுத்தியுள்ளார்கள். மாவோவின் பிற்பாடு சீனாவிலிருந்து வெளியேறியவர்களின் ஆவணங்களும் உள்ளன. வெறும் பிரசாரப் புத்தகங்களையே மட்டும் படிக்காமல், கண்ணையும், காதுகளையும் மனத்தையும் திறந்து வைத்துக் கொண்டு சுய சிந்தனையை மேற்கொள்ளுங்கள். வேத புத்தகங்கள் மட்டுமே உண்மை அல்ல.//

நீங்களும் எதிர் பிரசாரத்தை மட்டும் படிக்காமல்
உற்பத்தி தேவை இல்லை அது முக்கியமில்லை எனும்
காமெடி புத்தகங்களை படிப்பதை நிறுத்துங்கள்.

பெட்ரண்டு ரஸ்ஸலை விட மிக தீவிரமா கம்யூனிச எதிர் பிரசாரம் செய்த நபரை சொல்ல முடியாது
சமீபத்தில் நடந்த ஆய்வி இங்கிலாந்து உளவாளிகளிடம் இவர் பணம் வாங்கித்தான் இந்த பிரசாரம் செய்தார் எனும் உண்மை அம்பலமாகி உள்ளாது

இதெல்லாம் படிங்க

//3. இன்று சோஷலிச நாடுகள் என்று அழைக்கப் படும் சமூகங்களும் கூட தேவை, சப்ளை அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன. மூலதன நாடுகளுக்கு முறைந்த செலவில் உழைப்பை வழங்கித்தான் சீனா வளர்ந்து வருகிறது. "காகிதப் புலி" அமெரிக்காவுடன் உறவு நிக்சனால் தொடங்கி வைக்கப் பட்டபோது, நிக்சனின் நோக்கம் சோவியத் யூனியனைத் தனிமைப் படுத்துவதாய் இருந்தது. சீனாவிற்கு "சகோதர" சோஷலிச நாட்டிற்கு எதிராய் காகிதப் புலியுடன் கூட்டுச் சேர்ந்து, சீனவை பொருளாதார ரீதியாய் உயர்த்த முயல்வதில் எந்த நெருடலும் இல்லை. முழுக்க மூலதன நாடாகியும், கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை, சீனாவின் ஆளும் "வர்க்கம்" தாங்குவதில் உள்ள சுயநலம் இது தான்: கம்யூனிஸ்டுக் கட்சியின் பெயரை வைத்துக் கொண் டு மற்ற எந்த மாறுபட்ட கருத்தும் எழாமல் செய்துவிட முடியும். பாலுன் காங் அடக்கு முறை, தியனமன் சதுக்கம் என்று அடக்குமுறைக்கு உதாரணங்கள் உள்ளன.//
சீனா அதிகார வர்க்க சோசலிசமாக மாறிவிட்டதுன்னு ஏற்கனவே சொல்லி இருக்கோம் டெங் கும்பல் வந்ததும் இது நடந்தது அது அமெரிக்காவுடன் கூட்டி சேர்ந்து மூலதன வளர்ச்சீக்கு பாடுபடுவதெல்லம் இதனால்தான்


//காஸ்ட்ரோ தன் ஆட்சியை 40 வருடமாய் விடாப்பிடியாய் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்த சமூகமும் தேவை சப்ளையை அடிப்படையாய்க் கொண்டு தான் இயங்குகிறது. அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கியூபாவின் சுருட்டும், கரும்பும் ஐரோப்பாவிற்கு ஏறுமதி செய்து தான் கியூபா இயங்கி வருகிறது. ஸோஷலிச சொர்க்கத்தை விட்டு , உயிரைப் பணயம் வைத்து கள்ளத் தோணியில் அமெரிக்காவிற்கும்பயணப்படும் சோஷலிச விரோதிகள், துரோகிகள் கியூபாவிற்கு அனுப்பும் டாலர்களும் கூட கியூபாவின் பொர்ருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிறது.//

ந்ல்ல ஜோக் உங்களை பொருளாதார மேதை எனலாம்
எப்படின்னா முழு பூசனிக்காயை மறைக்கப் பார்கிறீர்களே

//3. ஸ்டாலின் , மாஓவின் தவறுகள் மூலதன நாடுகளின் பிரசாரம் என்று வைத்துக் கொண்டாலும், சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததும், சீனா கியூபாவை ஆக்கிரமித்தது, சோவியத் ஹங்கேரியை ஆக்கிரமித்ததும் மூலதனப் பிரசாரம் அல்லவே. யோசித்துப் பாருங்கள்.//

ஸ்டாலின் தவறு செய்தார் என அவருக்கு பின் வந்ததிருத்தல் வாதிகள் சொல்வதிலும்
கம்யூனிசத்தை அழிக்க கம்யூனிஸ்டு கொடியை ஆட்டியதிலும் வியப்பில்லையே .


ஏற்றுமதி என்பதே கப்பல் கண்டு பிடிக்கு முன்பு வரவில்லை அப்படி எனில் அதற்கு முன்புள்ள சமூகங்கள் மாற்றம் அடையாமல் இருந்ததா

இந்தியாவின் அரிசி தேவையை ஆப்பரிக்கா செய்யவில்லை அந்த நாடு எப்படி உயிர்வாழ்ந்து இருக்கும்

வெறும் தேவை சப்ளையை வைத்து முந்திய் டசமூகங்கள் எப்படி மாறின என ஒரு விளக்கம் கொடுங்கள் பாவம் கம்யூனிஸ்டுகள் பிழைச்சு போகட்டும்

said...

//எல்லா சமூகங்களிலும் விதிகள் என்பது இருக்கும். சமூகம் என்றால் விதிகளும் இருக்கும். சாலை என்றால், அதனை பலர் பயன்படுத்த வேண்டும் என்றால், அந்த சாலையை பயன்படுத்தும் விதிகள் உருவாக்கப்படவேண்டும், சமயத்துக்கு ஏற்ப மாற்றப்படவேண்டும். இதற்கும் நீங்கள் கூறும் வர்க்கம், உறவுமுறைகள், உற்பத்திக்கும் என்ன சம்பந்தம்?//

விதிகள் விதிகளாக இருப்பதில் இருந்து வளர்ச்சி அடையும் என்பது உற்பத்தி பொருத்து உற்பத்தி உறவுகள் மாறும் எனும் விதியை பொறுத்து அனைத்தும் மாறும்

விதிகள் அதன் இயக்கவியல் போக்கில் மாறி ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாக மாறும் அதான் பிரின்ஸ்பல் என்றேன்

ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறைகளால் இயங்கும் சமூகமாக இருக்கும்

ரோடு இருந்தா பஸ்சிருக்கும்
பெட்ரோல் இருக்கும்னு மீண்டும் அதையே பேசி போரடிக்காதீங்க தமிழ் மணி

ஒரு விதை தனது வளர்ச்சிப்போக்கில்
எப்படி மரம் எனும் நிலையை அடைகிற்தோ

அதேப் போல விதியும் தனது வளர்ச்சிப்போக்கில்

ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை எனும் இடத்தை அடையும்

ஆனா நீங்க மரத்தை விதைன்னுதான் சொல்லுவேன் என்றால் நான் ஒன்னும் சொல்லமுடியாது

நாய் குட்டி என்பது வேறு பெரிய நாய் என்பது வேறு நாய் வயிற்றில் இருக்கும் கரு என்பது வேறு

விதிகளும் ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறையும் இப்போ முரண்படும் உதாரணத்தை பார்போம்

வயது வந்த எல்லா ஆணும் பெண்ணும் திருமணம் செய்யலாம் என்பது சட்டவிதி

ஆனால் ஒரு சகோதரன் தன் உடன் பிறந்த சகோதரியை ஒரு தாய் தான் பெத்த மகனை மணம் முடிப்பதில்லை
இதற்க்கு பேர் தான் ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறை என்பது
ஆக இது ஒரு கட்டத்தில் விதியாக இருந்தது என்பதை நான் மறுக்கவில்லை ஆனால் இப்போ அது ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறையா ஆகிடுச்சு

யாரும் இதை நினைத்துகூட பார்ப்பதில்லை இது ஒரு விதியான்னு
\
உங்களுக்கு விதிக்கும் ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறைக்கும் வித்தியாசம் தெரியனும்

திறமைகேற்ற உழைப்பு
தேவைக்கேற்ற ஊதியம் என்பது

ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு நடைமுறையா கம்யூனிசத்தில் இருக்கும்

said...

//ஆக இது ஒரு கட்டத்தில் விதியாக இருந்தது என்பதை நான் மறுக்கவில்லை ஆனால் இப்போ அது ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறையா ஆகிடுச்சு //
இன்னொரு உதாரணம் கொடுத்துள்ளீர்கள்.
தயவு செய்து இதனை எடுத்துச்சென்று உங்கள் தோழர்களிடம் கேளுங்கள்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை என்பது மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட விதி. அவ்வளவுதான்.
இன்றும் செய்தித்தாளில் சகோதரனை திருமணம் செய்துகொண்ட சகோதரி விஷயம் வந்திருக்கிறது. அது சட்டபூர்வமல்ல என்று நீதிமன்ற்ம் கூறும்.

said...

உங்களுடன் பேசிகொண்டு இருந்தால்

என் விதி மாறிடும் என்பது மட்டும் தெரியுது

வேற எதாவத் பேசலாமா நண்பரே :))

said...

//ரோடு இருந்தா பஸ்சிருக்கும்
பெட்ரோல் இருக்கும்னு மீண்டும் அதையே பேசி போரடிக்காதீங்க தமிழ் மணி
//
போரடிப்பதற்கு மன்னிக்கவும்.
ஆனால், நான் அதனை சொல்லவில்லை. நான் சொல்வது வேறு.
கார் இருந்தால், கார் ஓட்ட சாலை வேண்டும். பலர் ஒரு சாலையை உபயோகப்படுத்த வேண்டுமெனில், அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விதிமுறைகள் உருவாக்கப்படவேண்டும். அவை enforce செய்யப்படவேண்டும். அப்போதுதான் எல்லோரும் சாலையில் கார் ஓட்டமுடியும்.
எல்லோரும் ஒப்புக்கொள்வதாலேயே அவை விதிமுறைகள் அல்லாமல் போய்விடாது. எல்லோரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒரு சிலர், இங்கே ஏன் ஸ்டாப் சிக்னல் இருக்கவேண்டும். இங்கே ஸ்டாப் சிக்னல் இருப்பது மக்களுக்கு இடையூறு என்று குரல் எழுப்புவார்கள். அதனால், அது விசாரணை செய்யப்படும். அதன் பின்னால், அந்த ஸ்டாப் சைன் அங்கிருந்து நீக்கப்படலாம். அல்லது அங்கேயே இருக்கலாம். அல்லது இந்த நேரங்களில் இங்கே சிக்னல் இருக்காது என்று மாறுதல் அடையலாம்.
இதனைத்தான் சொல்கிறேன்.

said...

ஆகவே, பலர் பங்கு பெறும் எந்த சமூகமாக இருந்தாலும் விதிமுறைகள் வேண்டும்.

அந்த விதிமுறைகள் ஏதேனும் ஒரு வகையில் உருவாக்கப்படவேண்டும்.
அந்த விதிமுறைகள் ஏதேனும் ஒரு வகையில் மறு பரிசீலனை செய்யப்படவும் வேண்டும்.
அந்த விதிமுறைகளை enforce செய்ய அமைப்பு வேண்டும்.
அந்த விதிமுறைகளை தவறுபவர்களுக்கு தண்டனை வேண்டும்.

Anonym said...

1. டெங் கும்பல் வருவதற்கு முன்பே, அமெரிக்காவுடன் சீனா நல்லுறவு ஏற்படுத்தத் தொடங்கி விட்டது. வரலாற்றைப் படியும்ங்கள். நிக்சன் சீன விஜயத்தின் போது இருந்தவர்கள் மாஓ கும்பலும் சௌ என் லாய் மற்றும் அவர் கும்பல். அவர்களும் அமெரிக்க அடைவருடி என்பதைப் புரிந்து கொண்டேன் உங்கள் பதிவைப் பார்த்து.
2. கியூபா பற்றி நான் சொன்னதில் "முழு பூசணிக்காயை" மறைக்கப் பார்க்கிறேன் என்கிறீர்கள். எப்படி என்று தெரிவியுங்கள்.
3.பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவது என்று எழுதியிருக்கிறீர்கள். அது சர்வாதிகாரம் என்பதில் ஐயம் இல்லை. அது எப்படி தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகிற்று என்று விளக்குங்கள். எப்படி தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், மற்ற சர்வாதிகாரத்தையும் வேறுபடுத்திக் காண்பது. லெனின், ஸ்டாலின் தொழிலாளர் வர்க்கமா? மொத்த வர்க்கமும் இந்த இரண்டு பேரும் பொலிட்பீரோ ஆட்கள் மட்டும் தானா? மற்ற தொழிலாளிகள் இருந்தார்களா? இருந்தால் அவர்கள் எப்படி சர்வாதிகாரி ஆனார்கள்?
4. உற்பத்தியா உற்பத்தி உறவுகளா? என்று தெளிவு பெறுங்கள். உற்பத்தி என்பது இருக்கும் அதன் பின்னணியில் வெறும் உற்பத்தி செய்பவன், உடைமையாளன் மட்டுமில்லை என்பது தான் அடிப்ப்டை பொருளாதாரம். ஆனால், உற்பத்தி உறவுகளை மையப்படுத்டும்போது, மற்ற காரணிகளை மறைத்து விட முயல்வது சோஷலிச பொருளாதாரக் கோட்பாட்டின் தவறு என்று சொல்கிறேன்.
5.கம்யூனிச சமூகத்தில் எப்படி எல்லைகள் மதிப்பிழந்து விடும்? ஓர் இடத்தில் உற்பத்தி செய்யப் படும் பொருட்கள் மந்திரம் போல பறந்து போய் தேவைகள் உள்ளவர்களை அடைந்து விடுமா? அதைக் கொண்டு செல்ல ஆட்கள் வேண்டாமா? அதைக் கொண்டு செல்லும் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டாமா? அந்த வாகனங்களுக்கு கச்சாப் பொருட்கள், ஸ்பேர் பார்ட்ஸ் தேவைப் படாதா?

said...

நண்பர் தமிழ் மணி,
நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து விட்டேன் .

வேறு கேள்விகள் இருந்தால் கேளுங்கள்
மேலும் நானும் இடையே உங்களை கேள்வி கேட்பேன் என்பதை மறக்காதீங்க

விதி பற்றிய உங்கள் இயக்கவியல் முரண்பாட்டோடு என்னால் ஒத்துபோக முடியாது .

said...

அனானி ,

உற்பத்தி சக்தி என்பதைத்தான் சொல்கிறேன்

அதாவது உற்பத்தியில்

உற்பத்தி கருவி
உற்பத்தி செய்யும் மனிதனின் வேலைதிறன் செயல் ஊக்கம்

எல்லாம் சேர்ந்து உற்பத்தி சக்தி

அவன் சமூகத்தில் கொள்ளும்

உறவு உற்பத்தி உறவு ஆக அனைத்தும்
சேர்ந்ததுதான் உற்பத்தி நடைமுறை என சொன்னேன்

மேலும் நான் கேட்டு இருக்கும் கேள்விகளை தவிர்க்காமல் அதற்கு விடை சொல்லுங்கள் பிறகு பேசுவோம்

said...

//கார் இருந்தால், கார் ஓட்ட சாலை வேண்டும். பலர் ஒரு சாலையை உபயோகப்படுத்த வேண்டுமெனில், அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விதிமுறைகள் உருவாக்கப்படவேண்டும். அவை enforce செய்யப்படவேண்டும். அப்போதுதான் எல்லோரும் சாலையில் கார் ஓட்டமுடியும்.
எல்லோரும் ஒப்புக்கொள்வதாலேயே அவை விதிமுறைகள் அல்லாமல் போய்விடாது. எல்லோரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒரு சிலர், இங்கே ஏன் ஸ்டாப் சிக்னல் இருக்கவேண்டும். இங்கே ஸ்டாப் சிக்னல் இருப்பது மக்களுக்கு இடையூறு என்று குரல் எழுப்புவார்கள். அதனால், அது விசாரணை செய்யப்படும். அதன் பின்னால், அந்த ஸ்டாப் சைன் அங்கிருந்து நீக்கப்படலாம். அல்லது அங்கேயே இருக்கலாம். அல்லது இந்த நேரங்களில் இங்கே சிக்னல் இருக்காது என்று மாறுதல் அடையலாம்.
இதனைத்தான் சொல்கிறேன்.
//

நண்பர் தியாகு,
மேற்கண்ட process உங்களது கற்பனை சமூகத்தில் இருக்காது என்று சொல்கிறீர்களா?

நன்றி

Anonym said...

//அனானி ,உற்பத்தி சக்தி என்பதைத்தான் சொல்கிறேன். அதாவது உற்பத்தியில் உற்பத்தி கருவி உற்பத்தி செய்யும் மனிதனின் வேலைதிறன் செயல் ஊக்கம் எல்லாம் சேர்ந்து உற்பத்தி சக்தி அவன் சமூகத்தில் கொள்ளும் உறவு உற்பத்தி உறவு ஆக அனைத்தும் சேர்ந்ததுதான் உற்பத்தி நடைமுறை என சொன்னேன். மேலும் நான் கேட்டு இருக்கும் கேள்விகளை தவிர்க்காமல் அதற்கு விடை சொல்லுங்கள் பிறகு பேசுவோம்//

தியாகு அவர்களுக்கு,
உங்கள் கேள்விகள் ஒன்றே ஒன்று தவிர வேறு எந்தக் கேள்வியையும் நான் தவிர்க்க வில்லை. ரஸ்ஸல் பற்றிய உங்கள் குற்றச்சாட்டு பற்றிய செய்தி எனக்குக் கிட்டவில்லை. எங்கு வந்தது என்று தெரிவிக்கவும்.ஆனால் நீங்கள் உண்மை சொல்கிறீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் இது உண்மையாய் இருந்தாலும் அவர் மீது எனக்கு மதிப்புக் குறைந்திடாது. காரணம் : அவர் சோவியத்தை விமர்சனம் செய்தது நடைமுறைகளுக்காகவும், மார்க்ஸியத்தின் தத்துவ ஓட்டைகளுக்காகவும் தான். சோவியத் தமக்குச் சார்பாக உள்ள அறிவுஜீவிகளுக்கு உதவுவதும், மேற்கு நாடுகள் தமக்குச் சார்பான அறிவுஜீவிகளுகு உதவுவதும் வழக்கமாக நடைபெற்று வருவது தான். தமக்கு ஒரு லாபியை உருவாக்க அவர்கள் முயலுகிறார்கள். சோவியத் யூனியன் என் சி பி எச்-க்கு ஆதரவு தந்ததும், அமெரிக்கா இம்ப்ரிண்ட் போன்ற ஏடுகளுக்கும், மினு மசானி போன்றோருக்க்கும் உதவியதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

அதில்லாமல், இடது சாரிகள் அமெரிக்கா மீது தாக்கி விமர்சனம் செய்ய , வியத்நாம் போரைப் பயன்படுத்திக்கொண்ட போது - சோவியத் தவ்றுகளுக்கு மௌனம் சாதித்தபோது - அவர் உலக அளவில் சார்த்ரே போன்ற பல அறிவுஜீவிகளைத் திரட்டி அமெரிக்கா மீது குற்றம் சாட்டியவர். அவர் நாத்திகக் கருத்துகளுக்காக, அமெரிக்க பல்கலைக் கழகதில் அவருடைய் பணிநீக்கம் செய்யப்பட்டது பற்றி நீங்கள் அறிவீர்களா என்று எனக்குத் தெரியாது.

2. உற்பத்தி உறவுகள் என்ற சொற்றொடரைக் கைவிட்டு உற்பத்தி நடைமுறைகளுக்கு நீங்கள் மாறியிருப்பது பற்றி மகிழ்ச்சி. உற்பத்தி உறவுகள் தான் சமூக நிர்ணயிப்பு என்ற உங்கள் கருத்து மாறியிருக்கிறதா என்று தெரியவில்லை.

உற்பத்தியா தேவையா எது முதல் என்பது கோழியா, முட்டையா எது முதலில் என்பது போன்ற கேள்வி அல்ல. மார்க்சியம் உற்பத்தியை முதன்மைப் படுத்துவதும், உற்பத்தி - உடைமை சமூக நிர்ணயிப்பு என்பது குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டுவதற்குச் சமம். உதாரணமாக ஒன்று சொல்கிறேன். தமிழ் நாட்டில் வெட் கிரைண்டர் மிகவும் உற்பத்தி கொண்டுள்ள சாதனம். நம் உணவுப் பழக்கம் இட்லி, தோசை என்றிருப்பதால் , தேவையை முன்னிட்டு இது உற்பத்தி செய்ய்ப்படுகிறது. இதையே அமெரிக்கவில் விற்க முடியுமா? முடியாது ஏனென்றால் அங்கு அதற்கான தேவை இல்லை.

டெலிபோன் என்ற கண்டுபிடிப்பை எடுத்துக் கொள்வோம். அது ஒரு கண்டுபிடிப்பாக தொடங்கி தேவையை உருவாக்கியது. இதன் கண்டுபிடிப்புக்கு "மக்களோ" , "பாட்டாளி வர்க்கமோ" காரணம் அல்ல. கிரஹாம் பெல் என்ற தனி மனிதரின் படைப்பாற்றல் தான் காரணம். ஆனால் எல்லா கண்டுபிடிப்புகளுமே தேவையை உருவாக்கி விடுவதில்லை. பெர்சனல் கம்யூட்டர் கண்டுபிடிப்பின் முன் அதற்கான தேவையைக் கூட யாரும் உணரவில்லை. பில் கேட்சும், அவருடன் இருந்த சிறு குழுவின் படைப்பாற்றலும், ஆய்வு மனநிலையுமே காரணம். தஞ்சைப் பெரியகோவிலின் ஆக்கத்தில் கொத்தனார்கள் பங்கு பெற்றிருக்கலாம், ஆனால் அதன் வடிவமைப்பும், திட்டமிடலும் ஒரு சிறு குழுவின் சாதனை தான்.

தேவை, உற்பத்தி என்று ஒரு சரடு இருப்பது போல், கண்டுபிடிப்பு, தேவையை உற்பத்தி செய்தல், தேவையைப் பூர்த்தி செய்தல் என்று ஒரு சரடு இருக்கிறது. யோசித்துப் பாருங்கள்.

புத்தகத்தைப் படிப்பது மட்டும் போதாது, சுயசிந்தனையுடன் அந்தப் புத்தகத்தின் கருத்துகளை சிந்தனைக்கு அடித்தளமாய்க் கொண்டு முன்னெடுத்துச் செல்லுங்கள்

நன்றி.

said...

மேலே பதிவில் கேள்விகளையும் பதில்களையும் சேர்த்துள்ளேன்.

said...

இந்த பதிவில் உள்ள அனானி - தியாகு உரையாடலை தனியாக பதிவாக கொடுத்துள்ள்ளேன்

Anonym said...

The Moscow Times RSS >> PDA >>
Wednesday, October 31, 2007 / Updated Moscow Time
News

Wednesday, October 31, 2007. Issue 3776. Page 1.
Ceremony at Butovo a First for Putin
By Anna Smolchenko
Staff Writer

Mikhail Metzel / AP
Putin hugging Alexy II while visiting the site at Butovo where tens of thousands of people were shot in the 1930s.

President Vladimir Putin paid a rare tribute to victims of Soviet-era repression Tuesday, using the opportunity to call for political pluralism and say that differing opinions should be able to coexist peacefully.

Putin's visit to a firing range in Butovo, in the south of Moscow, where more than 20,000 people were killed during the peak years of Stalin's terror in 1937 and 1938, was the first time he has attended ceremonies on the official day of remembrance for the victims of political repression.

It was also a rare attempt by the Kremlin to address Stalin-era crimes.

"Political disputes, battles and a struggle between opinions are necessary, but this process should be creative rather than destructive," Putin said, adding that such conflicts "should not leave the cultural and educational context."

Putin's address came minutes after he and Russian Orthodox Church Patriarch Alexy II had laid flowers at the foot of a small wooden cross at the site of mass graves.

The field containing the graves was the property of the FSB -- the successor agency to the feared NKVD and KGB -- before being handed over to the Orthodox Church in the mid-1990s.

Putin, himself a former FSB head, has in the past acknowledged the repressions as one of the worst episodes of the Soviet era, while apparently trying to cushion the blow by saying worse incidents have occurred in other countries.


On Tuesday, however, he skipped mention of other countries, focusing instead on the "colossal scale" of Russia's tragedy.

In a brief address to reporters, Putin said such tragedies "occur when ostensibly attractive but empty ideas are placed above the fundamental human values of rights and freedom."

He eulogized the victims as "people with their own opinions" and "the cream of the nation."

While an accurate number of those killed or sent to the camps by Stalin's regime remains a subject for argument, the Memorial human rights group puts the figure at 12.5 million.

Putin, who famously described the collapse of the Soviet Union as a "catastrophe," chose not to dwell too long on history Tuesday.

"While remembering this tragedy, we should focus on what is best in the country and unite our efforts for the country's development," he said.

Earlier, Putin attended a ceremony conducted by Alexy and lit a candle at the nearby Church of Christ's Resurrection and New Martyrs and Confessors.

"Mindboggling, this is incredible" he said, surveying a collection of photos of victims, Interfax reported. "Why?"

The resting place of more than 20,760 people, the Butovo firing range is the second-largest Soviet-era execution ground in Russia, according to Memorial. The largest is near St. Petersburg. Local priests say people from all walks of life were shot and buried at the site in the 1930s.

"There was a whole theatrical troupe from the Baltics executed here," said Deacon Dmitry, a priest at the church. He said people of 60 nationalities, including Japanese, Greeks and an Ethiopian, were buried there. The bodies were packed so tightly in 6-meter-deep trenches that as many as 60,000 might be buried there, he said.

Memorial services were held Tuesday across Russia, including outside the former KGB -- and now FSB -- headquarters on Lubyanskaya Ploshchad, where human rights organizations and others have traditionally gathered to mark the event.

Memorial's Yan Rachinsky said that even if Putin's motives were political and calculated for effect ahead of parliamentary elections in December, it was still positive that he had for the first time "not only celebrated the day of the Chekist, but also paid tribute to the victims of the Chekists." The term "Chekist" comes from the name of the first Soviet secret police.

Rachinsky, whose grandfather is buried at the site, said that although the state had acknowledged past atrocities, it has still shied away from responsibility and that many of the estimated 70,000 survivors of the camps struggle today to eke out a ragged existence.

Rostislav Kandaurov, the son of a priest buried at the site, said his family had not known what happened to his father for decades, and only learned of his fate in the early 1990s. His father, who stubbornly restored churches after the Soviets shut them down, was arrested in January 1937 and executed along with 500 other people on a day in February.

Kandaurov said FSB officials had helped him get lists identifying the victims.

He welcomed Putin's visit, saying that he wanted "as many people as possible to know about Butovo."

"The memory should be kept alive and people should know what happened," he said.

Anonym said...

Putin honors Stalin victims 70 years after terror

By Oleg Shchedrov Tue Oct 30, 1:53 PM ET

BUTOVO, Russia (Reuters) - Russian President Vladimir Putin paid his respects on Tuesday to millions of people killed under Soviet dictator Josef Stalin and called for the country to unite to prevent a repeat of its tragic past.
ADVERTISEMENT

Putin, a former KGB spy, marked Russia's annual day of remembrance for the victims of Stalin's purges with a visit to Butovo, a military training ground near Moscow where tens of thousands of people were executed by firing squads.

Millions were executed under Stalin and many more perished from abuse and disease in a vast network of prison camps, known as the Gulags.

Victims included priests and royalists but also huge numbers of people who were simply caught up in an indiscriminate spiral of killing. This year Russia marks the 70th anniversary of the bloodiest period of the purges.

Putin attended a memorial service with Patriarch Alexiy II, head of the Russian Orthodox Church, after passing a field criss-crossed with mass graves.

"We know very well that 1937 was the peak of the purges but this year was well prepared by years of cruelty," Putin said beside a mass grave after laying flowers at a memorial.

He said such tragedies "happen when ostensibly attractive but empty ideas are put above fundamental values, values of human life, of rights and freedom."

"Hundreds of thousands, millions of people were killed and sent to camps, shot and tortured," he said. "These were people with their own ideas which they were unafraid of speaking out about. They were the cream of the nation."

Historians estimate that between 20 million and 40 million died during Stalin's rule, tearing families apart and creating a climate of fear that haunted the Soviet Union.

A new history teaching manual partly authored by a top Putin strategist described Stalin as brutal, but also "the most successful leader of the USSR."

GREAT TERROR

Dozens of mainly older Russians laid flowers at a stone memorial outside the Moscow headquarters of the former KGB -- now the Federal Security Service -- to remember his victims.

Klavdia Suravykh came to see a small panel of photographs in memory of victims of Stalin's purges, and said she was the only survivor of a mass execution near Orlov, some 360 km (220 miles) south of Moscow, in 1941.

She said she lined up at the edge of a ditch with 300 other people. Gunfire killed her mother and everybody else, and the next line of victims fell on top of her.

"Everybody was killed there. Everybody. I was the only one..." she said, blinking back tears.

Stalin, who succeeded Vladimir Lenin, started a series of purges in the 1930s that became known as the Great Terror. The NKVD security service, the predecessor to the KGB, killed hundreds of thousands of people on trumped-up charges.

Butovo was just one of hundreds of killing grounds. More than 20,000 people are known to have been executed there between August 1937 and October 1938 alone.

(Additional reporting by Chris Baldwin)

said...

// உற்பத்தி உறவுகள் என்ற சொற்றொடரைக் கைவிட்டு

உற்பத்தி நடைமுறைகளுக்கு நீங்கள் மாறியிருப்பது பற்றி

மகிழ்ச்சி. உற்பத்தி உறவுகள் தான் சமூக நிர்ணயிப்பு

என்ற உங்கள் கருத்து மாறியிருக்கிறதா என்று

தெரியவில்லை./

உங்கள் சரடை முதலில் நிரூபியுங்கள்

எந்த சமூகத்தில் என்ன தேவைக்கு என்ன கண்டுபிடிப்பு வந்தது

அதனால் என்ன சப்ளை நடைபெற்று சமூகம்

எப்படி மாறியது

இதை அடிப்படையாக கொண்டு மார்க்சியர்கள் விளக்குவதுபோல விளக்குங்கள்

நீங்களும் எவனாவது எழுதினா சமூகத்தின் மீது
அவன் சொல்வது பொருந்தி வருதான்னு பார்க்காம
சும்மா எதாவது பேசனுமேன்னு பேசாதீர்கள்

உங்கள் சரடை விளக்குங்கள்

பிறகு பேசலாம்

மொத்தமாக உங்கள் பேச்சில் ரஸ்யாவில் நடந்த கொலைகள் ஸ்டாலின் அவதூறு

இதை தவிர வேற ஒன்னும் பெருசா இல்லையே

இந்த அம்சத்தில் சரடு விட எதேனும் சரக்கு இல்லைன்னா

said...

தமிழ்மணி said...
//கார் இருந்தால், கார் ஓட்ட சாலை வேண்டும். பலர் ஒரு சாலையை உபயோகப்படுத்த வேண்டுமெனில், அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விதிமுறைகள் உருவாக்கப்படவேண்டும். அவை enforce செய்யப்படவேண்டும். அப்போதுதான் எல்லோரும் சாலையில் கார் ஓட்டமுடியும்.
எல்லோரும் ஒப்புக்கொள்வதாலேயே அவை விதிமுறைகள் அல்லாமல் போய்விடாது. எல்லோரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒரு சிலர், இங்கே ஏன் ஸ்டாப் சிக்னல் இருக்கவேண்டும். இங்கே ஸ்டாப் சிக்னல் இருப்பது மக்களுக்கு இடையூறு என்று குரல் எழுப்புவார்கள். அதனால், அது விசாரணை செய்யப்படும். அதன் பின்னால், அந்த ஸ்டாப் சைன் அங்கிருந்து நீக்கப்படலாம். அல்லது அங்கேயே இருக்கலாம். அல்லது இந்த நேரங்களில் இங்கே சிக்னல் இருக்காது என்று மாறுதல் அடையலாம்.
இதனைத்தான் சொல்கிறேன்.
//

நண்பர் தியாகு,
மேற்கண்ட process உங்களது கற்பனை சமூகத்தில் இருக்காது என்று சொல்கிறீர்களா?

நன்றி

said...

நண்பர் தியாகு,
இங்கே நான் எழுதிய பின்னூட்டம், நீங்கள் எழுதிய பின்னூட்டம் எல்லாவற்றையும் உங்களது பதிவிலும் பதிந்திருக்கிறேன்.
தொடரலாம்

நன்றி

said...

நண்பர் தியாகு,
நான் எழுதிய பின்னூட்டத்தை உங்கள் பதிவில் அனுமதித்ததற்கு நன்றி
விவாதத்தை தொடரலாமே?

நன்றி

Anonym said...

// உற்பத்தி உறவுகள் என்ற சொற்றொடரைக் கைவிட்டு உற்பத்தி நடைமுறைகளுக்கு நீங்கள் மாறியிருப்பது பற்றி

மகிழ்ச்சி. உற்பத்தி உறவுகள் தான் சமூக நிர்ணயிப்பு என்ற உங்கள் கருத்து மாறியிருக்கிறதா என்று
தெரியவில்லை./

உங்கள் சரடை முதலில் நிரூபியுங்கள்

எந்த சமூகத்தில் என்ன தேவைக்கு என்ன கண்டுபிடிப்பு வந்தது

அதனால் என்ன சப்ளை நடைபெற்று சமூகம்

எப்படி மாறியது

இதை அடிப்படையாக கொண்டு மார்க்சியர்கள் விளக்குவதுபோல விளக்குங்கள்

நீங்களும் எவனாவது எழுதினா சமூகத்தின் மீது அவன் சொல்வது பொருந்தி வருதான்னு பார்க்காம
சும்மா எதாவது பேசனுமேன்னு பேசாதீர்கள்

உங்கள் சரடை விளக்குங்கள் பிறகு பேசலாம்

மொத்தமாக உங்கள் பேச்சில் ரஸ்யாவில் நடந்த கொலைகள் ஸ்டாலின் அவதூறு
இதை தவிர வேற ஒன்னும் பெருசா இல்லையேஇந்த அம்சத்தில் சரடு விட எதேனும் சரக்கு இல்லைன்னா
//

அன்புள்ள தியாகு,
நான் ஒரிஜினல் அனானி.

(ஸ்டாலின் பற்றிய ஆங்கிலப் பதிவு என்னுடையதல்ல. ஸ்டாலின் பற்றியும் அவனைப் போன்ற பிறரைப் பற்றியும் வேறு சந்தர்ப்பத்தில் விவரமய் பதிவு இடுகிறேன். இபோதைக்கு "உற்பத்தி உறவு", "உபரி மதிப்பு" என்ற கருத்தாக்கத்தின் ஓட்டை பற்றி மட்டும் பேசுவோம். )

அதற்கான விளக்கத்தைத் தானே நான் அடிநாள் முதலாகத் தந்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் எரிச்சல் கொள்கிறீர்களே தவிர என் வாதங்களை எதிர்கொண்டு என் தர்க்கத்தில் என்ன தவறு என்று கூறுவதில்லை.

நிலப் பிரபுத்துவம் என்பது கூட ஒரு வகையில் தவறு தான். அதுவும் கூட ஒரு வகையில் மூலதனத்தை அடிப்ப்டையாய்க் கொண்டது தான்.

ஒரு பொருளின் உபயோகம், கண்டுபிடிப்பு, அதன் தொடர்ச்சியாக தேவை உருவாதல், சில தேவைகளின் தொடர்ந்த இருப்பு, சில தேவைகள் தன்னால் விட்டுப்போதல், தேவைகளுக்கான உற்பத்தி, சப்ளை, அதொலிருந்து இன்னொரு கண்டுபிடிப்பு என்று தொடர்ச்சியாக இயங்கி வரும் சமூகத்திற்கு மூலதனம் தான் அடிப்ப்டை என்பது தான் நான் திரும்பத் திரும்பச் சொல்வது. சோஷலிசமும் கூட மூலதனத்தை அடிப்ப்டையாய்க் கொண்டு தான் உருவாகிறது. சோஷலிசம் என்பது அரசாங்க மூலதனம் அன்றி வேறென்ன? எந்த வடிவிலான மூலதன்ம் ஆனாலும், அதன் உபரி மதிப்பு, மூலதனம் இட்டவர்களுக்கோ அல்லது அரசாங்கம் மூலதனம் இட்டிருந்தால் அரசாங்கத்திற்கோ போய்ச் சேர்கிறது.

சிலரின் முதலீட்டில் ஏற்பட்ட குறை பதிப்பு- உபரி மதிப்பு லாபம் என்றால், குறை மதிப்பு அல்லது நட்டம், உபரி மதிப்புக்கு எதிரிடையான குறை மதிப்பு என்று குறிப்பிட்டுள்ளேன். லாபம் நட்டம் என்ற சொற்கள் மார்க்சிய அகராதியில் பாவப்பட்ட சொற்களாகி விட்டன என்பதால் என் சொல்லாக்கம் இது.) சிலரை மட்டும் பாதிக்கிறது. ஆனால், அரசாங்க நிறுவனங்களின் குறை மதிப்பு அர்சாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் பாதிக்கிறது. நட்டத்தில் ஓடும் ஒரு அரசாங்க நிறுவனம் அதை ஈடு செய்ய வேண்டும் என்றால், சம்பளத்தைக் குறைக்கிறது அல்லது வேலையை நீக்கி வீட்டுக்கு அனுப்புகிறது. சீனா போன்ற நாடுகளிலும், அமெரிக்க போன்ற நாடுகளிலும் வேலையை விட்டு அனுப்புவது சுலபம், ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் தொழிற்சங்கங்கள் பிரசினை செய்யும். அதைக் காட்டிலும் பாதிப்பு, இந்த நட்டத்தால் , மக்கள் நலன் நோக்கிய முயற்சிகளுக்குக் கிடைக்க வேண்டிய நிதி கிடைப்பதில்லை.

சோஷலிச நாடுகளில் உழைப்பு முகாம்களை ஏற்படுத்தலாம். குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் உபரி மதிப்பை ஏற்படுத்தினால் தான் அந்த தொழில் முனைப்பு பயனுள்ளதாய் இருக்கும். அது தான் நடந்ததும். சோஷலிச நாடுகளில் உபரி மதிப்பு இருந்ததால் தான் அந்த நாடுகள் விண்வளிப் பயணம் மேற்கொள்ள முடிந்தது என்று நான் முன்னால் கூறியிருந்ததும் இதன் விரிவு தான்.

சோஷலிச நாடுகளின் அர்சாங்கம் மக்களுடையது அதனால் அரசாங்க நிறுவனங்களில் தொழில் செய்பவர்கள் அதன் உரிமையாளர்கள் என்ற முறையில் உற்பத்தி உறவு மாற்றி அமைக்கப் படுகிறது என்பது சோஷலிஸ்டுகளின் வாதம். இந்த வாதத்தின் பிரசினை என்னெவென்றால், அரசாங்கம் எனபது மக்களுக்குச் சொந்தமானது சோஷலிசத்தின் கீழ் என்ற பொய் தான். உண்மையில் மக்களுக்குச் சொந்தமான அரசு என்பது என்ன? அரசினால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களால் நடத்தப் படும் அரசு என்று வைத்துக் கொண்டாலும் கூட - அப்படி இல்லை என்றாலும் - ஒரு சிறு குழு தான் அங்கேயும் ஆட்சியில் உள்ளது. ஒரு சிறு முடிவைக் கூட எடுக்க எல்லோரிடமும் வாக்கெடுப்பு நடத்த முடியாது. அதனால் அங்கேயும் சிறு குழு ஆட்சி தான் இல்லையா?

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது உண்மையில் சிறு குழுவின் ஆட்சி தான் என்றால்,அந்தக் குழுவின் சர்வாதிகாரம் எப்படி ஜனநாயக ரீதியாய் இருக்க முடியும்? வெவேறு குழுக்களிடையே எழுட்ந்த பொருளாதாரப் பிரசினைகள் எப்படி தீர்க்கப் பட்டன? ரஷ்ய மேலாண்மையாளர்களின் மற்ற பிரிவுகள் ஒடுக்கப் பட்டதும் நடந்ததில்லையா?
***


கண்டுபிடிப்புகள் சமூக மாறுதலுக்கு வித்திட்டது உங்கள் கண்முன்னாலேயே நட்ந்திருக்கிறதே. ரேடியோவும் டெலிவிஷனும், டெலிஃபோன் போன்ற தொடர்புச் சாதனங்களும் உலகத்தையே சுருக்கி விட்டன. யோசித்துப் பாருங்கள். முதன் முதலில் மனித குலம் கண்டுபிடுத்த சக்கரம் இன்று எப்படி பரிணமித்திருக்கிறது. சக்கரத்தைக் கொண்டும், ஒரு மாட்டைக் கொண்டும் மனித உழைப்பை எப்படி எளிமைப் படுத்தலாம் என்பது எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு. அதனால் கிராம சமுதாயமே மறிவிடவில்லையா? கடந்த நூற்றாண்டில் உருவாக்கப் பட்ட நீராவி இயந்திரம் எப்படி சமூகத்தைப் புரட்டிப் போடுவிட்டது. இந்த மாற்றத்திற்கும் உற்பத்தி உறவுக்கும் எந்த தொடர்புமில்லை. இது டெக்னாலஜி மாற்றம் அதன் மூலமாக மனித சமூகம் அடைந்த மாற்றம். இதில் உற்பத்தி உறவு எங்கிருந்து வந்தது?
நன்றி
பழைய அனானி

Anonym said...

நான் இன்னொரு இடத்தில் இந்த ப்ளாகில் விளக்கியபடி, நான் அனானி-2. இங்கு அனானி என்ற சொல்லால் எழுந்த குழப்பத்துக்கு வருந்துகிறேன். நான் தான் ஸ்டாலினின் படுகொலைகள் பற்றிய மாஸ்கோ டைம்ஸின் நேற்றைய செய்தியைப் பதிந்தேன். அதைத் தியாகு மிக வசதியாகப் பார்க்கக் கூட மறுத்தது அவரது மொத்தக் கூட்டத்தின் காமாலைப் பார்வையையும், காரியக் குருட்டுத்தனத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
புடின் ஒரு முன்னாள் உயர் நிலை கேஜிபி அதிகாரி. வெகுநாளாக அதில் பணியாற்றியவர். மேலை முதலாளியத்துக்கு ரஷ்யா அடிமையாகக் கூடாது என்ற தேசியக் கண்ணோட்டம் உள்ளவர். இதற்காக மட்டும் நான் அவரைப் பாராட்டவே செய்கிறேன்.
[இங்கு வாதிடும் இதர மாவோயிஸ்டுகளைப் போல சீனாவுக்கும் அரேபிய ஏகாதிபத்தியத்துக்கும் இந்தியாவை அடிமையாக்கத் துடிக்கும் தேசத் துரோகி இல்லை. அது போகட்டும்.]

புடின் தன் நாட்டுத் தலைவர்களைத் தவிர வேறு நாட்டு அரசியல்வாதிகளைத் தலைவராகவும் ஏற்பதில்லை.
தன் நாட்டை உடைக்கவும், அதைக் கீழே சரிக்கவும் அதை ஒழிக்கவும் முயற்சி செய்கிற இன்னொரு நாட்டின் படுகொலை நாயகனைத் தன் கட்சியின் பெயரிலேயே பதாகையாகவும் சூடவில்லை. அந்த அண்டை நாட்டு ஏகாதிபத்திய முயற்சியைத் தன் நாட்டின் குற்றமாகப் பொது அரங்கில் வாதிடவும் இல்லை.
பெருந்திரளான மக்களைக் கொலை செய்த இரண்டு பெரும் மாபாதகர்களைத் தம் தலைவராகக் கொண்ட இழிசெயலைச் செய்வது மட்டுமல்லாமல் அந்த மாபாதகர்களை விமர்சித்து எழுதப்பட்ட அனைத்து புத்தகங்களும் ஜோடனை என்று கதை விடும் மட்டித் தனத்தையும் புடின் செய்யவில்லை. மாறாக எத்தனை கசப்பாக இருந்தாலும் வேறு வழியில்லை என்ற நிலையில் இருந்து செய்தாலும், கடைசியில் ஸ்டாலினிய ஆட்சி ரஷ்ய மக்களில் ஏராளமான நபர்களை ஒரு காரணமும் இன்றிப் படுகொலை செய்தது என்ற மறுக்க முடியாத உணமையை அந்தப் படுகொலைக்கு ஆளான குடும்பங்களின் வாரிசுகளான ரஷ்யர்களே முன்னின்று நடத்தும் பொது ஜன இயக்கங்களை உதாசீனம் செய்ய முடியாது, கம்யூனிஸ்டு அரசாங்கத்தின் கயமையை ஒப்புக் கொண்டு அதற்கு வருத்தம் தெரிவிக்க முன் வந்திருக்கிறார்.
ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியான மிகச்சாதாரண நரேந்திர மோடியை பெரும் கொலைபாதகன் என்று வருணித்துக் கவிதை எழுதி ஏதோ சில நூறு மக்களின் சாவு தம்மை உருக்குவது போலப் பகல் வேடம் போடும் இந்தத் தியாகு, அவரது கட்சியின் மையக் கொள்கையே பல மிலியன் மக்களைப் பலி போடும் அரக்கத் திட்டம்தான் என்பதை எவ்வளவு வசதியாக மறைக்கிறார் என்று பாருங்கள்! நாமெல்லாம் மடையர்கள், இவருடைய கோமாளித்தனமான உருக்க நாடகத்தை நம்பி விடுவோமாம்.

பல மிலியன் மக்களை ஈ, எறும்பு போலப் பாவித்துத் தன் பூட்சின் கீழ் போட்டுத் தேய்த்த இரண்டு பெருந்திரள் கொலை வெறியர்களைப் பற்றி ஒரு வரி கூட வருத்தம் தெரிவித்து எழுத வக்கில்லாத கெடுமதிக் கூட்டம் இது. அதை விடக் கேவலம் அந்த இருவரின் கொலை வெறி அரசியல் கொள்கைகளையே தன் முக்கியக் கொள்கையாகவும் வைத்திருக்கிறது.
இந்த அளவு கேவலமான போலித்தனம் இனவெறி அரசியல் இயக்கமான திராவிட இயக்கத்தால்தான் சாத்தியம். ஆனல் தியாகுவின் கூட்டம் அந்த அரசியலிலும் ஊறித்தானிருக்கிறது. அதனால் நான் மேலே சொல்லும் எதுவும் இந்தக் கூட்டத்தின் அமானுஷ்ய மனதை, காலனியாதிக்கத்துக்கு கிருத்தவ ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்ட சிந்தனையைத் தொடாது என்று எனக்குத் தெரியும்.
ஆனால் கேள்வி கேட்க யாருமில்லை என்று நினைத்து மேலும் மேலும் எகிறிக் குதித்து தாம் ஏதோ பெரு நாயகர்கள் என்றும் உலக மகா அறிவு ஜீவிகள் என்றும் காருண்யத்தின் திரூ உருக்கள் என்றும் பாசாங்கு செய்வதை அவ்வளவு எளிதாகத் தொடர்ந்து செய்தால் வலையுலக வாசகர்களுக்கு மாற்றுக் கருத்துகள் கிட்டட்டும் என்று கருதியே இதையெல்லாம் எழுதுகிறேன்.
அல்லது இத்தனை நாள் நன்மை அறியாத மூடர்கள் என்று விட்டு விட்டுப் போன மாதிரியே இப்போதும் போயிருப்பேன்.
யாரும் தவறாகக் கருத வேண்டாம். புடினை நான் ஆமோதிப்பதில்லை. ஏனெனில் அவர் ரஷ்ய மக்களைக் கொடுமைப் படுத்த ஸ்டாலினிய வாதிகள் பயன்படுத்திய ஒரு மோசமான அரசுக் கருவியான கேஜிபியின் உயரதிகாரி. ஆனால் 60 வயதுக்குக் கீழே உள்ள புடின் ஸ்டாலினியம் ஆண்ட காலங்களில் சிறுவராகத்தான் இருந்தார் என்பதால் ஸ்டாலினைப் போன்ற கயவர்களின் ரத்தக் கறை இவர் மேல் பூசப் படவில்லை என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். ஆனால் லெனின், ஸ்டாலின் ஆகியோரின் பிரத்தியேகச் சமையற்காரராக புடினுடைய பாட்டனார் பணியாற்றியிருக்கிறார் என்பதால் புடினின் மீது நாம் களங்கம் சுமத்த முடியாது. அந்த வகைச் சிந்தனை மாவோயிசக் கொலைகாரர்களுக்கும், ஸ்டாலினியப் பாதகர்களுக்கும், அருகே தமிழகத்தில் இனவெறித் திராவிட அரசியல்வாதிகளுக்கும்தான் உரித்தானது. நவீன ஜனநாயக வாதிகளுக்கு இந்த வகைச் சிந்தனை வெறுப்பூட்டுவது.
ஏற்கனவே பெருங்கொலைகாரகளான லெனின், ஸ்டாலின், ட்ராட்ஸ்கி, பெரியா, மேலும் பெரும் ஊழல் பெருச்சாளிகளான ப்ரெஷ்னெவ் போன்ற அ-மனிதரைத் தலைவர்களாகச் சுமந்த பெரும் துரதிருஷ்டம் ரஷ்ய மக்களை ஒரு நூறாண்டு காலம் வாட்டி இருக்கிறது. அதற்கு முன்னால் பல நூறாண்டுகள் உலகக் கொடுங்கோலர்களில் முக்கியமான பல கொடுங்கோலர்களையும் அரசர்களாக (ஜார்) அது பாரமாகச் சுமந்திருக்கிறது.
அந்த மக்களின் வாழ்வில் மேலும் கொடுமைகளைச் சுமத்த முன்னாள் கேஜிபியின் குற்றவாளிக் கூட்டமான அதிகாரிகளாலான ஒரு பெருந்திருடர் கூட்டம் இன்று புடினின் தலைமையில் கீழ் ரஷ்ய மக்களைச் சுரண்டிக் கொண்டு இருக்கிறது.
புடின் மீதே ரஷ்யப் பணக்காரத்திருடர்களோடு கூட்டாளி என்ற குற்றச்சாட்டு பலமுறை சுமத்தப் பட்டிருக்கிறது. ஸ்டாலினிய ரகசிய அரசமைப்பு 50 ஆண்டு ஆண்ட ஒரு நாட்டில் குற்றவாளிகளின் கூட்டம் அதிகாரி வர்க்கமாகத்தான் இருக்கும். என்னதான் சோவியத் அரசு வீழ்ந்து போனாலும் இந்தத் திருட்டு அதிகாரிகள் கூட்டம் அழியாது. அதில் ஒருவரான புடினுக்கு புதிதாய் ரஷ்ய மக்களைச் சுரண்ட எழுந்த கூட்டத்தோடு தொடர்பு இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஆனால் நமக்கு உண்மைகள் தெரியப் பலகாலம் ஆகும்.
ஆனாலும் புடின் இத்தனை குற்றச் சாட்டுகளுக்கும் மேலே ரஷ்ய நாட்டின் மீதும் அதன் மக்களின் மீதும் பற்றுள்ளவர் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
இந்தியக் கம்யூனிஸ்டுகளைப் போலப் பிற நாட்டுக்கு அடிமை வேலை செய்யவும், தம் மக்களைக் காட்டிக் கொடுக்கவும் தயாரான கோழையோ, அல்லது கருங்காலியோ இல்லை அவர்.
அந்த ரஷ்ய அதிபரே, புஷ், ப்ளேர், மேலும் இதர ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குச் சிறிதும் தலை வணங்காத முடி, தம் நாட்டு வரலாற்றின் காரிருள் பக்கத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கோருகிறார்.
அவர் சொல்வது உண்மை இல்லையாம், அவருக்கு உண்மை தெரியாதாம் ரஷ்ய இருட்டு வருடங்கள் பற்றி. நேற்று மழையில் முளைத்த காளான்களான இந்த மாவொயிஸ்டுகளுக்குத்தான் ரஷ்யா பற்றிய உண்மை எல்லாம் தெரியுமாம்.

இங்கு தம் பங்குக்கு உள் நாட்டுப் போரைக் கொண்டு வந்து, அதில் பல மிலியன் மக்களைக் கொல்லவும், அதன் மூலம் இந்தியாவைத் துண்டாடவும், பெரும் அதிகாரத்தைக் கைப்பற்றிப் பெரும் மக்கள் திரளை நசுக்கி ஆளவும் கனவு கண்டபடி உட்கார்ந்திருக்கும் இந்த ஏட்டுச் சுரைக்காய், மண்ணாந்தைகள் (புடின்) யாரைக் குற்றவாளி என்று ஒத்துக் கொள்கிறாரோ அதே அற்பரைத் தம் கதாநாயகனாகப் பாவித்துக் கொண்டாடுகிறார்கள்.
ஏனெனில் இவர்களுக்கு மட்டும்தான் உண்மை தெரியுமாம்.
ரஷ்ய மொழி தெரியுமா என்று கேட்டால் பதில் இல்லை. தெரியாது என்று உண்மையை ஒப்ப வேண்டியது தானே? எந்த ரஷ்யப் புத்தகங்களை, வரலாற்று ஆவணங்களை, அல்லது ரஷ்ய வரலாற்று ஆசிரியர்களை நீங்கள் படித்தீர்கள்? நீங்கள் உண்மை என்று கருதுவது சரியா என்று எப்படி ஐயா சந்தேகமின்றி இருக்கிறீர்கள் என்று கேட்டால், உடனே நாடகமாடத் தொடங்குகிறார்கள்.
ஆமாம், நாங்கள் உங்களைப் போல படிப்பாளி இல்லை, சாமானியர்தான், ஆனால் எங்களுக்கு யார் ஓநாய், யார் ஆடு என்று தெரியும் என்று சாமியாடுகிறார்கள்.
எதுவும் தெரியாது, எங்கள் கட்சியின் துண்டுப் பிரசுரம்தான் படித்தோம், அதை நாங்கள் நம்புகிறோம் என்று உண்மையை ஒப்புக் கொண்டால் தொலைகிறது இன்னொரு மதவெறிக் கூட்டம், religious fundamentalist, அறிவுக்கும், ஆய்வுக்கும் தொடர்பற்ற வெறியர் கூட்டம் என்று என் வழியில் போயிருப்பேன்.
இல்லையாம். நான் ஒரு முதலாளியச் சிந்தனைக்காரனாம். ஏன், என்ன ஆதாரத்தோடு இதையெல்லாம் உளறுகிறீர்கள் என்று கேட்பதனாலா? ரஷ்ய மொழியும் தெரியாது, ரஷ்யாவுக்குப் போனதில்லை, உலகப் புத்தகங்கள் அனைத்தும் முதலாளியச் சதி என்று சொன்னவர் ஏதோ அசாதாரணமாகக் கட்டுரைகள் வரைந்து தள்ளி இருக்கிறாரம், அவருடைய வலைப் பக்கத்தில் நான் அங்கு போய்ப் படித்துப் புண்ணியனாக வேண்டுமாம். இதற்கு ஒரு ஜாலரா ஏய் உங்கள் முகரையைப் பேர்த்து விடுவேன் என்று மிரட்டல் வேறு போடுகிறது.
வெறும் தற்குறித்தனமான அரசியல் ஞானத்தை வைத்துக் கொண்டா இந்த ஆட்டம் போடுகிறீர்கள்? எதற்கு? அதற்குத்தான் திராவிட இயக்கம் என்ற ஒரு நாணமற்ற கூட்டம் இருக்கிறதே. நீங்கள் எதற்குத் தனி இயக்கம் நடத்த வேண்டும். அவர்களோடு சேர்ந்து கொண்டு தமிழக மக்களைச் சுரண்ட வேண்டியதுதானே? ஏற்கனவே அவர்களுடைய இனவெறி கோஷங்களை எல்லாம்தான் கைவசம் வைத்திருக்கிறீர்களே? கூட்டத்தோடு கோவிந்தா போடலாமே?

ரஷ்யாவில் அசாதாரணமான துக்கங்களுக்குப் பலியான ரஷ்ய மக்களுக்கு தம் நாட்டின் வரலாறும் சோகமும், கொடுமைகளும் தெரியாதாம். கும்மிடிப் பூண்டியிலும், வறட்டுக்காற்று மங்கலத்திலும் வாழும் இவர்களுக்குத்தான் சைபீரிய ரஷ்யா பற்றி அனைத்தும் தெரியுமாம்.

என்ன ஒரு மதர்ப்பு, என்ன ஒரு மெத்தனம், என்ன ஒரு அரக்க ம்னப் பான்மை.
மேலும், such an amazing, bottomless stupidity!

What a fall for India, after getting rid of 1000 years of colonialism that its youth are again a prey to stupid colonialand racist ideologies of the west and east!
இந்தியாதான் எவ்வளவு துர்பாக்கியம் உள்ள நாடாகப் போயிற்று! இந்த மண்ணின் மக்கள் வாழ்வில் இவ்வளவு கருமேகங்கள் ஏன் சூழ்கின்றன? விடிவுதான் என்று வரும் இந்த ஒரு பிலியன் மக்களுக்கு? இந்தத் துரோகிக் கூட்டங்கள் என்று திருந்துவர்?
அனானி-2

Anonym said...

நண்பர் ஓசை செல்லா,

நீங்கள் தமிழ்மணி என்ற பேரில் அந்த உண்டியல் குலுக்கும் பார்ட்டியான தியாகுவுக்கு செம செக் வைத்துள்ளீர்கள். பார்ப்போம் பதில் சொல்கிறாரா இல்லை ஓடி ஒளிகிறாரா என!

அன்புடன்,
அய்யா தொண்டர்படை

Anonym said...

அசுரன் என்றொரு மேதை, மார்க்சியம், ரஷ்ய வரலாறு, மேலும் உலக கம்யூனிசம் எல்லாவற்றிலும் கரைகண்டவர் தன் ப்ளாகில் ஸ்டாலினுக்குப் புகழாரம் சூடி மகிழ்கிறார். யாரைக் கொலை செய்தால் தம் 'புரட்சி' முன்னேறுவதாகக் கருதலாம் என்று அரசியல் நடத்தும் ஒருவரின் கூட்டம் பிறரைக் கண்டபடி பழி சாட்டும் வேடிக்கை ஒரு புறம் இருக்க, தம் ஸ்டாலின் புகழ் குறித்த கருத்துகளுக்கு ஆதாரமாக அவர் காட்டுவது யாரென்று பார்த்தால் இன்னொரு ஸ்டாலினிய வாதி- ஜ்யார்ஜ் தாம்ஸன் என்ற மூளை மழுங்கிய பிரிட்டிஷ் 'தத்துவாசிரியர்'. என்னடா இது, தமிழக மார்க்சிஸ்டு கட்சிகளில் ரஷ்ய வரலாற்றை ஒழுங்காகப் படித்தவர்களை விரல் விட்டு எண்ணலாமே, இவர் யாரிடம் போய் எல்லா சூட்சுமங்களையும் கற்று விட்டார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு மாணவர் ஜ்யார்ஜ் தாம்சனைப் பற்றி எழுதுவது இது.
மேற்கோள்:
Also published by Lawrence and Wishart is Marxism and Poetry, a 1945 pamphlet by George Thomson. This provides a convenient reference for the possible opinions of Marxist poets in the decades on either side of 1945. Thomson is the archetypal Stalinist. He dismisses all poetry since the Renaissance as a product of the bourgeois era; leaving folk-song, which is classless. Song is inherently better than poetry. All art reflects the economic interests of a class; the categories of the imaginary derive from social organisation. Anticipating a torrent of neo-Stalinist attacks on human awareness, he denies the individual any right to consciousness. To be sure, he gives the mind its validity back as soon as it submits to the Justified Masses, whose rightful voice is the Communist Party; a concession which not all followers of the same path were to tolerate. Your lyric feelings become true so long as you have the government behind you; a kind of majority rule. His proofs are gaudy in their variety; Assyria, Ancient Greece, the West of Ireland, Kazakhstan, Black Australia, etc. It emerges after a while that this is a flashback to the style of Ebenezer Jones: the same figures are present in the same parts of the canvas, but the whole is dressed as a piece of rational prose instead of an opening of the vials and flight through the violet smoke of Apocalypse. It is striking that he quotes no contemporary poetry, no episodes from contemporary Britain, no example of the culture of the masses in Britain; he is only convinced by things he has never experienced, which appear to him as a kind of exotic, veridical dream. He makes much of a Kazakh bard, Djambul, who wrote many panegyrics to Stalin. This 'great poetry' is supposed to be a model for regressive and disobedient English bards; what Thomson does not know is that Lenin, irritated by a Kazakh revolt against Bolshevik brutality, confiscated their flocks as 'state property', depriving them of their food supplies; about a quarter of the Kazakhs died in the subsequent famine, one of Lenin's more notorious acts of genocide. Lenin's career makes Radovan Karadzic look like Mother Teresa. For a Kazakh to praise Bolshevism was a cringing hypocrisy and treachery of no mean order. Thomson knew nothing about the history of the Soviet Union; his invocation of the whole of human culture as pieces of one vast pattern is only made possible by ignorance and fantasy.

மேற்கோள் முடிவு.
சுட்டி இதோ:
http://www.pinko.org/70.html

இன்னொரு சுட்டியையும் படியுங்கள். பிரிட்டிஷ் மார்க்சியத்தின் திருகலான வரலாறு விறுவிறுப்பாகக் கிட்டுகிறது.
http://archives.econ.utah.edu/archives/marxism/2003w09/msg00252.htm

ஸ்டாலினியம் இந்த மாவோயிஸ்டுகளுக்கு மட்டும்தான் உதவுமா? இல்லை. மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் செயல்படுத்தப்படும். இதோ ஸ்டேஸ்மென் 2006 இல் எழுதிய ஒரு தலையங்கம். என்னைப் பொறுத்தவரை எல்லா மார்க்சிஸ்டுகளும் அடிப்படையில் ஸ்டாலினியவாதிகள்தான். இருந்தாலும் வங்க ஸ்டாலினியர்களின் நடத்தையே தனி முறை. ஒரே நேரம் ஜனநாயக அபிமானிகள் போல நடித்துக் கொண்டு இந்தியாவின் ஒரு மாநிலத்தையே தம் குத்தகை நிலமாக மாற்றி வேற்றுக் கருத்துகள் உள்ளே நடமாட விடாமல் பார்த்துக் கொள்வது என்ன சாதாரண செயலா?
சரி படித்துப் பாருங்கள்.
Back to archives for 2006-12-13



Marxist & Maoist

December 10 was observed as Human Rights Day all over the world. In West Bengal the programme was organised by the State Human Rights Commission. In the presence of Shyamal Kumar Sen, the chairperson of the Human Rights Commission, the Chief Minister explained that there is a difference between preserving human rights and hobbling the police. When it is a matter of fighting terrorists, police should not be demoralised by criticisms. Excesses against terrorists should not be viewed as human rights abuse.
Buddhadeb Bhattachar-jee’ speech came just five days after an English daily in an editorial advocated a very hard line against Maoists.

The pattern

There is a pattern in this approach. And that pattern is called drive to authoritarianism. It is possible to conduct seemingly democratic elections, when an organised cadre force, backed by the police at need, threatens the whole of rural Bengal, as well as greater parts of cities, before election time. At that stage, a few protests do emerge, and of necessity, some of them become violent. Every violent protest can then be labelled Maoist, or terrorist. If this sounds too outlandish, we should remember some news that an English daily and Ganashakti never published. A few years back, there was a panic (and manic) arrest of people suspected to be Maoists. Now the CPI(Maoist) or its predecessors, the CPI(ML) PW and the MCC, were not banned organisations in West Bengal. But people were picked up on suspicion and tortured and harassed.
One man named Abhijit Sinha was so shattered by his experiences that he committed suicide. An Association for the Protection of Democratic Rights activist was arrested for possessing, among other things, a copy of From Marx to Mao Tse-tung, written by George Thomson. This is a book any political science M.A. student might consult. In May 2002, Sheila Roy and Mamata Ray in North Bengal were suspected of being close to the Kamtapur Liberation Organisation, and were made to stand in the courtyard of their own house and brutally beaten up. Mithu Roy and Shampa were two of the urban women arrested in this phase. Shampa, a first year student of Gurudas College, was arrested for being a member of the Peoples’ War Group.On 16th August 2002, she was presented before the Beharampur Court, and told the judge that for the past four days she had been kept in the police lock- up without any food.
Coming to recent events, like the peasant protest at Singur, we have had a very interesting development. First, a sizeable part of the mass media (not The Statesman and Dainik Statesman) has been supporting the ruling party and the government to such an extent that even honest reporting of news has been given a go by. Just like the CPI-M, these papers went on repeating that only outsiders were fomenting trouble. An English daily even sought to link up every issue in West Bengal with Singur. A train hijack was associated with Singur. And the responsibility for the violence in Singur was laid on the doors of Maoists coming from outside. As a matter of fact, the Chief Minister was even more explicit. According to him, these were Maoists from Jadavpur University. Yet, eyewitness accounts, police arrest lists, all show that in fact, most of the people were locals, and it was a massive police force that committed violence, entering peoples’ houses, often helped by local members or supporters of a particular party, and dragging out and beating up people. One woman, Swapna Banerjee of Nari Nirjatan Pratirodh Mancha, was arrested, and an English daily promptly turned her to be the key Maoist organiser. The police also treated her in the same way. So she was taken to police station, and according to her own testimony, was locked up inside the toilet. Even after the bail petition was granted by Calcutta High Court, it took nearly 48 hours before she was released. In another case, Abhishek Mukherjee, a young man who had suposedly attacked a Tata showroom, was charged with ‘Conspiracy Against the State’.
Just these few cases give an indication of the utter lawlessness of the police in West Bengal. If some minister or CPI-M functionary turns up to say, as they are doing these days, that the police always behaves like this, we need to turn to the Chief Minister’s comments. We do not, at least according to the Constitution, live in a police state. We live in a democratic state, says the Constitution. There is a rule of law, not a rule by the police, says the Constitution. Every person is presumed innocent, till found guilty by a court of law, in a trial where proper procedures are followed and the accused have full rights to defend themselves. The elected government is supposed to represent the people, not rule it like a medieval ruler with his soldiers.
If our “Marxists” wish to show contempt for the Constitution, we should pay heed to the attitude of Marx and Engels. Writing to August Bebel in 1874, Engels commented: a free state is one in which the state is free vis-a-vis its citizens, a state, that is, with a despotic government. So for Marx and Engels, the aim was to maximize democratic popular control over the state. As Marx put it about the same time: Freedom consists in converting the state from an organ superimposed upon society into one completely subordinate to it. And near the end of his life, Engels dotted the ‘i’s and crossed the ‘t’s when he explained that the dictatorship of the proletariat he and Marx had talked about was realised by the Paris Commune.
So what is Mr. Bhattacharjee arguing for? What are certain newspapers urging him to do? We can now put it down in simple terms. Mr Bhattacharjee believes that if he wins elections, this gives him a mandate for riding roughshod over every oppositional viewpoint, emerging from all layers of society. He and his government are willing to allow people the right to protest if police have actually beaten a suspected thief to death. But for any matter relating to government policy, civil society protest will not be tolerated. First, it will be branded anti-development.
Then there will be the charge of being ‘outsiders’. And finally terrorism related accusations would be brought forth. Once that is done, the police would have the right to apply any manner of brutality, without being challenged. For after all, the Chief Minster says criticising them when they are fighting terrorists will break their morale. And then they will shoot people in the back, claiming these were encounter deaths. This was how the Naxalite movement was broken in the early 1970s.

The motivations

We can of course understand the motivations. Hailing from a Stalinist tradition, Mr Bhattacharjee and his party are people who never recognised real right to dissent. They remain one of the few big political parties in the world that even today believes that the genocide (of communists, of peasants not willing to hand over land for collectivisation, of national minorities) carried out by Josef Stalin was really good, and it “built socialism”. So even when they give up socialism and opt for globalised capitalism, they have not changed their methodology.
As for that section of the media yelling for blood, we can understand their motives too. Liberalism comes in two basic forms, within which there has always been a contradiction. Political liberalism stresses civil liberties. Economic liberalism stresses the right of capital above all. If, to uphold that, political rights like civil liberties have to be jettisoned, so be it. Behind the seemingly proper words “counter-violence” lies the reality that the state is being asked to ignore all constitutional guarantees. We have, under the tender ministrations of Mr Bhattacharjee, already slipped a long way down that road. Unless we act at once, the result will be terrible, not just for Maoists, but for all of us who value our democratic rights.
இதற்கு வலை முகவரி:
http://thestatesman.net/page.arcview.php?date=2006-12-13&usrsess=1&clid=3&id=167165

இதை எழுதியது அனானி2

Anonym said...

ஏண்டா அய்யா படை சொறி

உங்க தலைவன் ஓசை செல்லாவுக்கு

சொந்த பேரில் வரமுடியாதா

வந்தா காயடிச்சுடுவாங்க தோழர்கள்

said...

அனானி -1

உங்களுக்கு என் தளத்தில் பதில் கொடுத்து இருக்கேன்

http://thiagu1973.blogspot.com/2007/10/blog-post_31.html

Anonym said...

//நாம் primitive communism என்று அழைத்த சமூகங்கள் கூட primitive ஆகவும் இல்லை கம்யூனிஸ்டாகவும் இல்லை என்பது சமூகவியல் ஆய்வாளர்களின் முடிவு.
உற்பத்தி உறவுகள் என்ற சொற்றொடரே மீண்டும் பரிசீலிக்கத்தக்கது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து//

இதில் இவர் குறிப்பிடும் பொருளாதார நிபுணர் யார் என்று எனக்கு விளங்கவில்லை. அனேகமாக இவர் தன்னையே குறிப்பிடுகிறாரோ என்னவோ. கம்யூனிஸ சமுதாயம் என்பது
தனிச் சொத்துரிமை இல்லாத ( ஒழிக்கப்பட்ட ), வர்கங்கள் அற்ற சமுதாயம். இவர் குறிப்பிடும் primitive communism என்னும் புராதனப் பொதுவுடைமைச் சமூகத்தில்
தனிச் சொத்து இருந்தது அல்லது வர்கங்கள் இருந்தது என்பதற்கு இவர் எந்த ஒரு தரவும் வைக்கவில்லை. அதே நேரம் மார்க்ஸிய விஞ்ஞானம், தக்க சான்றுகளோடு புராதனப்
பொதுவுடைமைச் சமூதாயத்தை விளக்கி இருக்கிறது. அதனை தரவுகளின் அடிப்படையில் உடைக்கும் எந்த வாதமும் நமது அனானி நன்பரிடம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
அதே போன்றது தான் இவர் சொல்லும் "உற்பத்தி உறவுகள்" குறித்தான வாதங்களும். முதலில் உற்பத்தி உறவு என்றால் என்ன என்கிற குறைந்த பட்ச அறிவு நமது
அனானி நன்பருக்கு இருக்கிறதா என்பதே சந்தேகத்துக்குறியது என்பது அவரது வாதங்களில் இருந்தே தெளிவாகிறது. உற்பத்தி வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு மக்கள் கூட்டத்திற்கு
இருக்கும் உறவுகள் எல்லா காலங்களிலும் எல்லாவித உறவுகளிலும் இருந்தே தீரும். அது கணிணி யுகமான இன்றைக்கும் மிக அழகாகப் பொருந்தியே வருகிறது. இதனை
எந்த முதலாளித்துவ பொருளாதார நிபுணரும் கூட இதுவரையில் உடைக்க முடிந்ததில்லை. //
புராதன கம்யூனிச சமுதாயம் என்பதற்கு ஆதாரஙள் மார்க்ஸ் உட்பட யாராலும் தரமுடியாது என்றும், புராதன சமூகங்களை ஒத்த , இன்றுள்ள நாகரிகம் தொடாத சமூகக் குழுக்களை ஆய்ந்து எழுதப்பட்ட நூல்களும் கூட கம்யூனிசம் அங்கே இருப்பதாய்ச் சொல்லவில்லை என்று மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன். ஐரோப்பிய படையெடுப்பில் அழிக்கப்பட்ட , அமெரிக்கப் பழங்குடி மக்களும் கூட ஓரளவு புராதன நிலையில் வாழ்ந்தவர்கள் தான். அவர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்தல பற்றியும் பல குறிப்புகள் உள்ளன. அவர்கள் கம்யூனிச சமூகத்தில் வாழ்ந்திருக்க வில்லை. நீங்கள் மீண்டும் மீண்டும் மார்க்ஸ்வேதமே சரி என்று வாதிடுகிறீர்கள்.
அதே போல் தான் உற்பத்தி உறவும். மார்க்ஸ் எழுதிய காலகட்டம் கைவினைப் பொருட்களிலிருந்து சிறு தொழில்களை நோக்கியும், ஓரளவு பெரும் தொழிற்சாலைகளை நோக்கியும் நகர்ந்த காலகட்டம். அந்த வெளிப்ப்டையாய்த் தெரிந்த மாறுதலை வைத்து எழுதப் பட்டது மூலதனம். பெரும் உற்பத்தியும், கணிணி மையப்படுத்திய உற்பத்தியும், அசெம்ப்ளி லைன் உற்பத்தி முறைகளும், நிர்வாகவியலில் ஏற்பட்ட மாற்றங்களும் என்று தொழில் உற்பத்தி இன்று சம்பிரதாயமான தொழிலாளி- முக்தலாளி உறவைத்தாண்டி தொழில் முனைப்பு வளர்ந்துவிட்டது. ஒரு பொருளின் மதிப்புக் கூட்டுதல் வெறும் தொழிலாளியின் உழைப்பினால் மட்டுமல்லாமல், சந்தை சக்திகளான தேவை, சப்ளை, உற்பத்தியிடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் பொருளின் தேவை இருக்கிறது என்பதைப் பொறுத்டு மாறுபடும். அதனால் உபரி மதிப்பு தொழிலாளிக்குச் சேரவேண்டியது, அதனால் அவன் சுரண்டப் படுகிறான் என்ற வாதமே ஒரு அபத்தம் என்பது தான் நான் மீண்டும் மீண்டும் சொல்வது. இதனை நம்பினால், நட்டம் ஈட்டும் தொழில்களில் தொழிலாளி முதலாளியைச் சுரண்டுகிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்ளவேண்டும். அது தான் உங்கள் நிலை பாடா?


//மூலதனத்தை அடிப்ப்டையாய்க் கொண்ட சமூகங்களில் தனிமனித சுதந்திரமும், அடிப்படை வாழ்க்கை வசதிகளும் கிடைப்பதை கண்கொண்டு பார்க்க மறுக்கும் கருத்துக்
குருடர்கள் சோஷலிசம் , கம்யூனிசம் என்ற சொர்க்கத்தைக் காட்டி இன்றைய மனித வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறர்கள்//

//இவர் குறிப்பிடுவது போல மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் தனிமனித சுதந்திரமும் அடிப்படை வாழ்க்கை வசதிகளும் எங்கே நிறைவு செய்யப்பட்டிருக்கிறது என்கிற
தகவலோ உதாரணங்களோ இல்லாததே இவர் எப்பேர்பட்ட பொய்யர் என்பதை நமக்குப் புரியவைக்கிறது. மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட / இன்னும் சொல்லப் போனால்
தனது மூலதன நலனுக்கும் விரிவாக்கத்திற்கும் அடுத்த நாடுகளைக் கூட சுரண்டவும், போர்கள் மூலம் அடிபணியவும் வைக்கத் துணிந்த அதே அமெரிக்காவில் தான் இன்னும் பெருவாரியான
மக்கள் அடிப்படை மருத்துவ வசதி கூட கிடைக்காமல் அல்லலுரும் செய்திகள் வந்தவன்னம் உள்ளது. குறைந்த பட்சம் நமது அரைகுறை அனானியை செய்தித் தாள்களாவது படிக்குமாறு
கேட்டுக் கொள்கிறேன். கையில் காசு வாயில் தோசை என்பது போல மக்களின் அடிப்படை உரிமைகளான மருத்துவம், கல்வி - ஏன் தண்ணீரைக் கூட வியாபாரமாக்கி வைத்திருக்கும்
மூலதனத்தை உயர்த்திப்பிடிப்பதே அனானியின் மக்கள் விரோத வர்க்க குணாம்சம் வெளிப்படையாகிறது. //

உங்களுக்கு அமெரிக்கா அல்லது மற்ற மூலதனவாத நாடுகள் பற்றி என்ன தெரியும்? மூலதனவாதத்தை முழுமையாய் ஒப்புக் கொண்ட நாட்கள் எல்லாமே சொர்க்கலோகம் என்று எவரும் சொல்லவில்லை. மக்கள் முன்னேற்றத்துக்கான தொடர்ந்த முயற்சியில் பல காரணிகள் உள்ளன. பொருளாதாரம், அரசியல், சமூகக் கலாசாரப் பின்னணி என்ற பல விஷயங்கள் சேர்ந்து தான் ஒரு நாட்டின் தகுதியையும் அவற்றின் முனேற்றத்தையும் நிர்ணயிக்கிறது. சோஷலிசம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு பகல் கனவு. சோஷலிச சமூகத்தின் அரசியல் சர்வாதிகாரத்தை நியாயப் படுத்த ஒரு கருத்தியலைப் பிடித்துத் தொங்குகிறீர்கள். மூலதன நாடுகளும் அராஜக நாடுகளாய் இருக்கலாம். அது வேறு பிரசினை. ஆண் தப்பினால் பெண் என்று சோஷலிசம் தப்பினால் மூலதனம் என்று சமூகத்தின் பிற அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், மூலதனப் பூச்சாண்டி காட்டி கம்யூனிஸ்டுக் கட்சிக்கு ஆள் சேர்க்கலாம். ஆனால் அதில் எந்த அறிவுபூர்வமான அணுகலும் இல்லை. கியூபா, சீனா போன்ற சோஷலிச சொர்க்க புரியை விட்டு, உயிரைப் பணயம் வைத்து ஏன் மக்கள் கள்ளத்தோணியிலும், கப்பலில் கண்டெஇயினர்களிலும் அடைந்து கொண்டு அமெரிக்காவையும், ஐரோபிய நாடுகளையும் நோக்கி வருகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி அதற்கு விடை காண முயன்றால் உங்களுக்கு இதன் பதில் கிடைக்கும்.

மூலதனத்தை யாரும் உயர்த்திப் பிடிக்க வேண்டியதில்லை. அதுதான் பொருளாதாரச் செயல்பாட்டின் அடிப்படையே.

//கம்யூனிசம் என்பது உங்கள் கற்பனையில் உதித்த சொர்க்க லோகம் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி. அதையே தான் நானும் சொல்கிறேன். கற்பனாவாதம் கனவுலகிலும்,
மதவாதிகளின் ஆசைகாட்டலிலும் , சினிமா டூயட்டிலும் வரலாமே தவிர சமூக அலசலில் வரலாகாது. கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் வீழ்ச்சியிலும், ரோமானியாவின் சோஷலிச
ஆளும் வர்க்கம் நடத்திய அராஜகத்திலும், கம்யூனிஸ்ட் போல் போட் நடத்திய படுகொலை மைதானங்களுக்கு அப்புறமும், ஒரு படித்த அன்பர் கம்யூனிசம் பேசும்
வேதைனையை என்ன சொல்ல?//

இன்றைய சமுதாய வளர்ச்சிப் போக்கினை ஆய்வு செய்து இன்றைய பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்று அனானி முன்வைத்தால் மேற்கொண்டு விவாதிக்க நன்றாக இருக்கும். கம்யூனிச
சமுதாயம் என்பது கற்பனாவதமல்ல, மாறாக அதனை நோக்கிய பயணத்தை மார்க்ஸிய அறிஞர்கள் படிப்படியாக விஞ்ஞானப்பூர்வமாக எழுது வைத்திருக்கிறார்கள். அந்தப் பயண்த்தில்
ஒரு இடைப்பட்ட கட்டம் தான் சோசலிஸ சமுதாயம். அனானி குறிப்பிடுவது போல ரஷ்யா ஒரு கம்யூனிஸ சமுதாயமாக இருக்கவில்லை. மேலும் உலகில் ஒரே ஒரு நாட்டில் கம்யூனிஸ
சமுதாயம் அமைய வாய்ப்பும் இல்லை. எல்லா நாடுகளும் சோசலிச கட்டுமானத்தில் உறுதிப்பட்டவுடன் தான் கம்யூனிச சமுதாயத்திற்கான பாய்ச்சல் ஒரே நேரத்தில் நிகழும். அப்புறம்,
போல்பாட் கம்யூனிஸ்ட் என்பது எனக்கு புதிய செய்தி - குறைந்த பட்சம் அதற்காவது ஏதாவது தரவுகளை முன்வைத்தி வாதாடும் நேர்மை இல்லாமல் போனது வருத்ததிற்கு உரியது.//

மார்க்ஸிய அறிஞர்கள் விஞ்ஞா பூர்வமாக படிப்படியாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று படித்து மெய் சிலிர்த்துப் போனேன். இது எப்படி விஞ்ஞானம் ஆயிற்று என்று தெரியவில்லை. இந்த் மார்க்ஸிய அறிஞர்கள் ஐன்ஸ்டீனிடமும், அப்துல் கலாமிடமும் பாடம் பயின்றார்களா? விஞ்ஞான அணுகல் முறை என்பதை கட்சி பாஸ்களிடம் இல்லாமலெந்த விஞ்ஞாயிடம் கற்றார்கள்? சமூகவியல் , பொருளாதாரம், மானிடவியல் என்பவை விஞ்ஞானம் அல்ல. அவற்றை சமூக விஞ்ஞானம் (socail science) என்று அழைப்பது, அவை விஞ்ஞானம் அல்ல என்று அழுத்திச் சொல்வதற்காகத் தான்.

மார்க்ஸிய விஞ்ஞானம் என்பது பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி போன்றதல்ல. இந்து விஞ்ஞானம், கிருஸ்துவ விஞ்ஞானம் என்பது போலத்தான் இது. சமூக விஞ்ஞானத்தில் கடந்த காலத்தை ஆய்ந்து தான் சொல்ல முடியுமே தவிர எதிர்காலத்தைப் பற்றி சொல்ல முடியாது. கலிலியோவை நம்பாமல் பூமியைத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று சாதித்து கலிலியோவிற்கு தண்டனை கொடுத்த கிருஸ்துவமதப் பாதிரிகள் மாதிரி கம்யூன்ஸ்டுகளும் புராதன கம்யூனிசம் ,முதலாளித்துவம், வருது பார் சோஷலிசம், உலகின் எல்லா நாடுகளும் சோஷலிசம் பூத்துக் குலுங்கி , கம்யூனிசம் மலர்ந்து அரசு உதிர்ந்து, எல்லா மக்களும் அச்சில் வார்த்தாற்போல ஆறடி உயரம், ஒரே மாதிரி அறிவு, ஒரே மாதிரி பொறுப்புணர்வு என்று சொல் கொண்டே இருக்கிறீர்கள். இதையும் நம்ப ஒரு கூட்டம் தயாராய் இருக்கிறது. இதற்கு விஞ்ஞானம் என்று பெயரில்லை. சோதிடம் அல்லதெ நம்பிக்கை. விஞ்ஞானம் நம்பிக்கை அல்ல. தரவுகள், நிரூபணங்கள். விஞ்ஞானத்தின் மிக முக்கியமான தேவை கருதுகோள்கள். hypothesis.அதாவது எந்தச் சூழ்நிலையில் ஒரு விஞ்ஞான உண்மை பொருந்தி வரும் எனப்து. எல்லாச் சூழ்நிலையிலும் உண்மையாய் இருக்கும் என்ற ஓர் விஞ்ஞானக் கோட்பாடு கிடையாது. உதாரணமாய் எளிய உதாரணமாய் , நீரின் கொதி நிலை கூட காற்றழுத்தத்தைப் பொறுத்தது.

எதிர்காலத்தை கணிக்கிற விஞ்ஞானம் இருக்கிறது. உதாரணமாய் ஒரு எரி நட்சத்திரம் எப்போது பூமியின் பயணப் பாதையை எப்போது கடக்கும் என்று விஞ்ஞானிகள் துல்லியமாய்ச் சொல்கிறார்கள் ஆனால் அதற்குக் கணக்குகள் உள்ளன. முன்னே எப்போது கடந்தது , அதன் பயணப் பாதை என்ன , அதன் வேகம் என்ன என்று கணக்குடன் அவர்களால் சொல்ல முடியும். ஆனால் சோஷலிசம், கம்யூனிசம், பரலோகம், கிறுஸ்து மீண்டும் வருவார், கன்னிமேரி, இறைத்தூதர் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைகள். இறை நம்பிக்கை போலத்தான் எங்கள் கம்யூனிச நம்பிக்கை என்று சொல்லிவிட்டீர்களானால், இன்னொரு லாபமும் இந்தியாவில் இருக்கிறது. மைனாரிடி அந்தஸ்தும் , ரிசர்வேஷனும் கிடைக்கலாம். விஞ்ஞானம் என்ற அடைமொழியைச் சேர்த்ததாலேயே மார்க்ஸியம், இந்து, இஸ்லாம், கிறூஸ்துவம் போன்றவை விஞ்ஞானமாகிவிடாது.

எல்லா நாடுகளும் சோசலிச கட்டுமானத்தில் உறுதிப்பட்டவுடன் தான் கம்யூனிச சமுதாயத்திற்கான பாய்ச்சல் ஒரே நேரத்தில் நிகழும்.
என்று இறுதிதீர்ப்பு நாள் வடிவில் உங்கள் சோதிடத்தைச் சொல்லிவிட்டீர்கள். இதை எப்படி அறிவுபூர்வமாய் எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. என் பிள்ளை நாளைக்கு இரண்டடி வளர்ந்து விடுவான் என்று ஒரு தகப்பன் சொன்னால் அடுத்த நாள் அவன் முன்னால் போய் நின்று அய்யா உன் பையன் இரண்டடி வளரம் முடியாது என்று அளந்து காட்டலாம். 2000-ம் ஆண்டு பிறந்த வுடன் உலகம் அழிந்துவிடும் என்று சோதிடம் சொன்னவ்ர்களிடம் , 2001-ல் போய் நின்று அபத்தத்தைச் சுட்டிக் காட்டலாம். எல்லா நாடுகளும் சோஷலிசம் ஆகி - எப்போது 6000 ஆண்டுகள் கழித்தா?- அப்புறம் கம்யூனிசம் மலரும் என்று விஞ்ஞான ரீதியாய் சொல்லும் ஒருவரிடம் என்ன அறிவுபூர்வமான விவாதங்கள் நடத்த முடியும்? சற்றே யோசித்துப் பாருங்கள். இன்னமும் கூட எல்லா சமூகங்களையும் பற்றிய உணர்வு நமக்கு இல்லை. உலகின் பாதி நாடுகள் இஸ்லாமிய நாடுகள் கம்யூனிஸ்ட் என்று பெயரைச் சொனாலே கடவுள் மறுப்புக்காகக் கழுவில் ஏற்விடுவார்கள். பாகிஸ்தான் உருவாக தேசிய சுய நிர்ணயக் கோட்பாட்டின் கீழ் கம்யூனிஸ்டுகள் ஆதரவு தெரிவித்தார்கள். பாகிஸ்தான் பிறந்த வுடன் ஜனாப் ஜின்னா செய்த முதல் காரியமே கம்யூனிஸ்டுக் கட்சியைத் தடை செய்தது தான். ஐரோபிய நாடுகள் இடதுசாரி , கம்யூனிசம் என்று பேசுவார்களே தவிர தம்முடைய சுடக்ந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் சோஷலிசம் மலர்ந்த சீன உங்கள் ஆருடத்தைப் பொயாக்கிக் கொண்டு மீண்டும் மூலதனப் பாதைக்குப் போய்விட்டது. சோவிய்டத் ரஷயாவிலோ, கமுயூனிஸ்ட் காலத்திய நீண்ட வரிசைகளும், ஸ்டால்னியக் கொடுங்கோன்மைகளும் இன்னும் மறந்து விடவில்லை. இருப்பது ஒரு நேபாளம், இந்தியாவில் கேரளா, மேற்கு வங்கத்தின் இடது சாரிக் கட்சிகள் என்ற ப்யரில் சாதி மற்றும் தனிமனிதச் செல்வாக்கினால் கட்டப் பட்ட உதிரிக் கட்சிகள். இதில் எங்கே சோஷலிசம் வந்து, கம்யூனிசம் வந்து. என்ன தோழரே நீங்க காமெடி கீமெடி பண்ணலியே?

//சோஷலிசத்தின் தோல்விகள் : சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியில் பிற நாடுகளின் பங்கு இருக்கலாம் என்று ஒப்புக் கொண்டாலும் கூட போல் போட்டின் படுகொலைகளுக்கும்,
மாஓவின் படுகொலைகளுக்கும், ஸ்டாலினின் படுகொலைகளுக்கும், ஹங்கேரி, ஆஃப்கானிஸ்தானை சோவியத் யூனிய்ன ஆக்கிரமித்ததற்கும் யார் காரணம்? திபெத்தை சீனா
ஆக்கிரமித்ததற்கும், வடகொரியவும், கியூபாவும் அடக்குமுறை நாடுகளாய் இருப்பதற்கும் யார் காரணம் என்று தெரிவியுங்கள்.//

//ஒரு அரசு அமைப்பு எப்போது தோல்வியுறுகிறது? அது தனது மக்களுக்கான தேவைகளையும் அபிலாஷைகளையும் நிறைவு செய்யும் கடமையில் இருந்து தவறும் போது தான். அப்படியானால்
இன்றைக்கு உலகில் எல்லா போர்களுக்கும் காரணமான ஏகாதிபத்தியம் ( முதலாளித்துவத்தின் முன்னேறிய வடிவம் ) படுதோல்வியடைந்துள்ளதோடு, உலகின் அமைதிக்கு பெரும்
கேடாகவும் மக்கள் விரோதமானதாகவும் இருந்து வருகிறது. சோவியத்தின் முதலாளித்துவ மீட்சியில் பிற நாடுகளின் பங்கு என்பதையும் தாண்டி வேறு பல காரணங்களும் உண்டு.
இது பற்றி தோழர் அசுரன் பல்வேறு கட்டங்களில் பல்வேறு பதிவுகள் எழுதி இருக்கிறார். மாவொவின் பாய்ச்சல் பொருளாதாரம் பற்றியும், தோழர் ஸ்டாலின் மேலான அவதூறுகளை உடைக்க்கும் விதத்தில்
மறுக்கவியலாத தரவுகளின் அடிப்படையில் பல கட்டுரைகள் தமிழ்மணத்தில் எழுதப்பட்டு விட்டது. (கீழே சுட்டி இருக்கு)அப்போதெல்லாம் நமது அன்புக்குரிய அனானி எங்கே இருந்தார் என்ன செய்து
கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போதும் அவர் விரும்பினால் அது சம்பந்தமான சுட்டிகளை தர நாம் தயார். ஆனால் அதே அறிவு நாணயத்தோடு
நமது அனானி அந்தப் பதிவுகளுக்கு வந்து தனது மறுப்பு வாதங்களை முன் வைக்கத் தயாரா என்பதை சொல்ல வேண்டும். இங்கே வேறு இழையில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்
சூழலில் ஏற்கனவே பதிலளிக்கப்பட்ட விஷயங்களைக் கிளறுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும் நான் சந்தேகிக்கிறேன். இதே அம்சத்திலான உரையாடலைத் தொடர அது சம்பந்தமான
பதிவுகளுக்கு வருமாறு அனானி நன்பரை அன்புடன் அழைக்கிறேன்.//
உலகின் எல்லா போர்களுக்கும் காரணமான ஏகாதிபத்தியம் என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டீர்கள். சர்வரோக நிவாரணி கம்யூனிசம், சூப்பர் வைரஸ் முதலாளித்துவம் என்ற எளிய சூத்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் சுயசிந்தனையற்ற கூட்டம் நம்பலாம். ஆனால் சிலுவைப் போர்களுக்கு எந்த முதலாளித்துவ ஏகாதிபத்தியம் காரணம்? ஹிட்லர் தொடுத்த போருக்கு எந்த முதலாளித்துவம் காரணம்? சீனா இந்தியாவின் மீது போர் தொடுத்ததற்கு எந்த ஏகாதிபத்தியம் காரணம். பாகிஸ்தான் தம்முடைய மக்கள் மீதே போர் தொடுத்ததற்கு எந்த ஏகாதிபத்தியம் காரணம்?

//கிம் இல் ஜாங், போல் போட் போன்றோரின? // -

//இவர்கள் யார்? இவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று நம் அனானி எப்படி சொல்கிறார்? இவர்களது அரசியல் நடவடிக்கைகள்
கம்யூனிஸ சித்தாந்தங்களை அடியொற்றியது தான் என்று நிறுவ அனானியிடம் தரவுகளும் அசைக்க முடியாத ஆதாரங்களும் இருந்தால் மேற் சொன்ன பதிவுகள் ஏதாவது ஒன்றில்
அனானியைச் சந்திக்க நானும் ஆவலாய் இருக்கிறேன்.//
வட கொரியாவும், போல் போட்டும் கம்யூனிஸ்டுகள் இல்லை என்று நீங்கள் சொன்னால் நான் ஏற்றுக் கொள்ளவேண்டியது தான். இஸ்லாமிய பயங்கர வாதத்திற்கு மக்கள் பலியாகும் போதெல்லாம், அவர்களை இஸ்லாமிய பெயர்தாங்கிகள் என்று கூறும் இஸ்லாமிய மேதாவிகள் மாதிரி நீங்கள் போல் போட்டும், வடகொரியாவும் கம்யூனிஸ்டுகள் இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் ஸ்டாலின், மாஒவின் படுகொலைகள் வெறுமே களையெடுத்தல் என் கிறீர்கள். பாருங்கள் உங்களுக்கும் கிறுஸ்துவத்திற்கும் உள்ள ஒற்றுமையை. போப் ஆசியாவில் கிறுஸ்துவிற்காக அறுவடை செய்ய வேண்டும் என்கிறார். நீங்கள் களை எடுத்தோம் என்கிறீர்கள். மக்கள் தாவரங்களாய்த்தான் நாங்கள் கருதுவோம் என்று சொன்னால், அமெரிக்காவில் உள்ள மக்கள் பொய் மக்கள் என்றால் நீங்களும், ஸ்டாலினும் தான் உண்மையான மனிதர்களாய் இருக்க வேண்டும்.

//மார்க்ஸ் கோட்பாட்டின் அடிப்ப்டையான உற்பத்தி உறவுகள் தான் சமூகத்தின் நிர்ணய சக்தி என்பதையும், இந்த் தவறான அடிப்படையில் ஏற்பட்ட வர்க்கக் கோட்பாட்டையும்
தான் தவறென்று சுட்டிக் காட்டியிருக்கிறேன்.//

எப்படித் தவறானதென்று சொல்லாமல் வெறுமே தவறு தவறு என்று நீங்கள் சொல்லிவிட்டால் நாங்கள் எந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்வது? நீங்கள் என்ன கருத்து நாட்டாமையா?

இதே விதமாக என்னாலும் பல "தவறுகளையும்" "கருத்துக்களையும்" முன்வைக்க முடியும்... உதாரணத்துக்கு சில

1) ஹெட்கேவாருக்கும் கோல்வால்கருக்கும் ஹோமோ உறவு இருந்தது
2) பின்னூட்ட பாலாவும் டோ ண்டு ராகவனும் ஒருவர் தான்
3) கோல்வால்கர் செத்த போது அவருக்கு எய்ட்ஸ் இருந்ததாக பல அறிஞர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதே ரீதியில் என்னாலும் "வாதாட" முடியும். ஆனால் நாம் கேட்பது என்னவென்றால் நீங்கள் தவறு என்று குறிப்பிடும் மார்க்ஸிய விஞ்ஞானம் எந்த அடிப்படையில் தவறு என்று
விளக்க வேண்டும் என்பதே!

//முதலில் தேவை சப்ளையின் மாற்றங்கள் பற்றி. தேவை, சப்ளை என்பது அடிப்ப்டையான சமூக பொருளாதாரச் சித்தாந்தம் .உடலின் அடிப்படையான பசியைப் போல. எந்தப்
பொருளின் தேவை, எந்த பொருளின் சப்ளை என்பது நிச்சயம் மாறுபடத்தான் செய்யும். உதாரணமாக நம் நாட்டில் கட்டடம் கட்ட சிமெண்ட் தேவை. சில நாடுகளில் மரம்
தேவை. சில நாடுகளில் செங்கள்ளாலும், சில நாடுகளில் கன் கிரீட் சிலாப்களாலும் கட்டுகிறார்கள். மர வீடுகள் கட்டப் படும் நாடுகளில் சிமெண்டுக்குத் தேவை
இல்லை. அங்கு அதை உற்பத்தி செய்ய மாட்டார்கள். நம்முடைய உணவுப் பழக்கங்களும் கூட மாறி வருகின்றன. அரிசி சாதம் சாப்பிடாத வட இந்தியாவில் கோதுமைக்கு
டிமாண்ட் அதனால் கோதுமை தான் சப்ளை உண்டு. அங்கு அரிசி போக வேண்டும் என்றால், அரிசியின் பயணத்துக்கான செலவும் உற்பத்திச் செலவு போல அதன்
விலையைப் பாதிக்கும். போக்குவரத்தில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்கள் கரிக்கும், பிறகு மின்சார உற்பத்திக்கும் டிமாண்ட் ஏற்படுத்தி அதனால், கரிச்
சுரங்கங்கள், மின்சக்தி உற்பத்தியின் தொழில் நுணுக்கங்கள் என்று மாறுதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் ந்ம கண்கள் முன்பு நடந்த மாறுதல்களைப்
பார்த்தாலே அதன் உண்மை தெரியும். //

மீண்டும் அ.உ.அ.பொ! எல்லாச் சமூகங்களிலும் தேவை இருக்கவே செய்யும். கம்யூனிஸ்ச சமுதாயமாக இருந்தாலும் தேவைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் முதலாளித்துவ
சமுதாயத்தில் உற்பத்தி என்பது தேவைக்காக அல்லாமல் மூலதனத்தின் நலனுக்காவே இருக்கும். மாறாக ஒரு சோசலிச சமூகத்திலும் கம்யூனிச சமூகத்திலும் உற்பத்தி என்பது
மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதாயும், எல்லா தரப்பு மக்களுக்குமானதாகவும் இருக்கும். ஒரு முதலாளித்துவ உற்பத்தி முறையானது மக்களின் வாங்கும் திறனை
அதிகரிப்பதில்லை என்பதொருபுறமும், வாங்கும் திறன் கொண்ட புதிய சந்தைகளுக்கான போட்டியும் கொண்டதாக இருக்கும். உதாரணமாக, கோடிக்கணக்கான மக்கள் பட்டினியில்
வாடும் நிலையில், உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்வார்கள். விலையை நிலைநிறுத்த, உபரி உற்பத்தியான தானியங்களை ( உற்பத்தி சக்திகளை) கடலில் கொட்டி அழிப்பார்கள்.//
//முதலாளித்துவ சமுதாயத்தில் உற்பத்தி என்பது தேவைக்காக அல்லாமல் மூலதனத்தின் நலனுக்காவே இருக்கும். மாறாக ஒரு சோசலிச சமூகத்திலும் கம்யூனிச சமூகத்திலும் உற்பத்தி என்பது மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதாயும், எல்லா தரப்பு மக்களுக்குமானதாகவும் இருக்கும். //

நீங்கள் சொல்வது உங்களுக்கே புரிகிறதா? மூலதனத்தின் நலனை மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் எப்படி பேண முடியும். சோஷலிசத்தில் மக்கள் தேவையை யார் நிர்ணயிப்பார்கள்? பொலிட் பீரோவா? காஸ்ட்ரோவா? ஸ்புட்னிக்கை செலுத்தப் போகிறோம் என்று பாட்டாளி மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தினார்களா? ஸ்புட்னிக்கின் தேவை மக்களுக்கு என்ன?


//இன்று சோஷலிச நாடுகள் என்று அழைக்கப் படும் சமூகங்களும் கூட தேவை, சப்ளை அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன. மூலதன நாடுகளுக்கு
முறைந்த செலவில் உழைப்பை வழங்கித்தான் சீனா வளர்ந்து வருகிறது. "காகிதப் புலி" அமெரிக்காவுடன் உறவு நிக்சனால் தொடங்கி வைக்கப் பட்டபோது, நிக்சனின்
நோக்கம் சோவியத் யூனியனைத் தனிமைப் படுத்துவதாய் இருந்தது. சீனாவிற்கு "சகோதர" சோஷலிச நாட்டிற்கு எதிராய் காகிதப் புலியுடன் கூட்டுச் சேர்ந்து, சீனவை
பொருளாதார ரீதியாய் உயர்த்த முயல்வதில் எந்த நெருடலும் இல்லை. முழுக்க மூலதன நாடாகியும், கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை, சீனாவின் ஆளும் "வர்க்கம்"
தாங்குவதில் உள்ள சுயநலம் இது தான்: கம்யூனிஸ்டுக் கட்சியின் பெயரை வைத்துக் கொண் டு மற்ற எந்த மாறுபட்ட கருத்தும் எழாமல் செய்துவிட முடியும்.
பாலுன் காங் அடக்கு முறை, தியனமன் சதுக்கம் என்று அடக்குமுறைக்கு உதாரணங்கள் உள்ளன. காஸ்ட்ரோ தன் ஆட்சியை 40 வருடமாய் விடாப்பிடியாய் தக்க
வைத்துக் கொண்டுள்ளார். இந்த சமூகமும் தேவை சப்ளையை அடிப்படையாய்க் கொண்டு தான் இயங்குகிறது. அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடையை
ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கியூபாவின் சுருட்டும், கரும்பும் ஐரோப்பாவிற்கு ஏறுமதி செய்து தான் கியூபா இயங்கி வருகிறது. ஸோஷலிச சொர்க்கத்தை விட்டு ,
உயிரைப் பணயம் வைத்து கள்ளத் தோணியில் அமெரிக்காவிற்கும்பயணப்படும் சோஷலிச விரோதிகள், துரோகிகள் கியூபாவிற்கு அனுப்பும் டாலர்களும் கூட கியூபாவின்
பொர்ருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிறது. //

"இன்றைய சோஷலிச நாடுகள்" என்று அனானி குறிப்பிடும் நாடுகள் சோசலிச நாடுகள் இல்லை. சீனாவில் முதலாளித்துவ மீட்சியானது மாவோவின் காலத்துக்கு பின்னே
உடனடியாகத் தொடங்கி விட்டது. இந்த சமூகம் தேவை சப்ளையை அடிப்படையாகக் கொண்டு தான் இயங்குகிறது - ஆனால் அதன் நலன் யாருக்கானதாய் இருக்கிறது?
என்பது தான் கேள்வி! தேவை சப்ளையை அடிப்படையாய்க் கொண்டு தான் உற்பத்தி நிகழ்கிறது - ஆனால் அது யாரை ஊதிப் பெருக்க வைக்கிறது / யாரை சுரண்டுகிறது?
இன்றைய சமூகத்தில் நிச்சயமாக சப்ளை என்பது சமச்சீராக இல்லை. இந்த உண்மையை மறைத்துக் கொண்டு தான் அனானி வாதாடி வருகிறார். எல்லோருக்குமான தேவை என்பது
தேவைக்கான விதத்தில் பூர்த்தி செய்யப்படுகிறதா என்றால் இல்லை என்பதே பதில். பருத்தி விதைக்கும் விவசாயியும் / நெய்து துணியாக்கும் நெசவாளியும் தங்களது சொந்த
தேவையைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் கந்தலைத் தான் உடுத்தித் திரிகிறார்கள். இன்று வினியோகம் என்பது சர்வ நிச்சயமாக சமச்சீராக இல்லை என்பதும்
இந்த முரண்பாடு தான் சோசலிசத் தீர்வை நோக்கி மக்களைத் தள்ளும் காரணி என்பதையும் நான் இங்கே முன்வைக்கிறேன். இதன் அடிப்படையில் வாதாடுமாறும் அனானி நன்பரைக்
கேட்டுக் கொள்கிறேன்.
//
சோஷலிசத்தை நோக்கி மக்களைத் தானாக முரண்பாஅடுகள் தள்ளும் என்றால் ஏன் நீங்கள் கட்சி கட்டிக் கொண்டு பிரசாரம் செய்கிறீர்கள் . அரசு தானாக் உதிரும், மக்கள் தானாக சோஷலிசம் வேண்டி தள்ளப் படுவார்கள், என்றால் தானாய் நடக்க்ற ஒன்றுக்கு போராட்டமும், மண்ணாங்கட்டியும் எதற்கு. கட்சியைக் கலைத்துவிட்டு நிம்மதியாய் உட்கார்ந்திருங்கள்.சோஷலிசம் வரும்போது உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன். வந்து கொண்டாடுங்கள்.

நன்றி
பழைய அனானி

said...

காத்திருக்கிறேன்.. நண்பர்களே.

இதற்கு பதில் எழுதியிருந்தீர்கள் என்றால், இங்கே பதியுங்கள்

said...

நண்பர் ஸ்டாலின் தன் பதிவில், எனக்கு கம்யூனிச சமூகத்தை விளக்குவது, கம்யூனிஸம் என்பது குருடனுக்கு வெள்ளை நிறத்தை கற்றுத்தர முயலும் செயல் என்று கூறுகிறார்.

"வெள்ளை என்பது கொக்கு நிறத்தில் இருக்கும்" என்று விளக்கியதால், குருடர் அதனை தடவிப்பார்த்து, இதனை எப்படி குழந்தைக்கு கொடுக்கலாம் என்று கோபித்துகொண்டதாக ஒரு கதை எழுதியிருக்கிறார்.

இங்கே உவமை தான் பிரச்னை. பாலுக்கு உவமை கொக்கு அல்ல.

பாலுக்கு உவமை தண்ணீர். அந்த தண்ணீரை குருடரின் கையில் கொட்டி இது போல இருக்கும் என்று சொல்லியிருந்தால், அவர் குழம்பியிருக்க மாட்டார்.

ஆகவே, ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்துடன் ஒப்பிட்டு கேள்விகள் எழுவது சரியானதுதான்.

சொல்லப்போனால், இந்த கேள்விகள் கம்யூனிச சமூகம் இப்படி இருக்கும் என்று தியாகுவே எழுதிய கட்டுரை/கதையின் அடிப்படையில் எழுந்த கேள்விகளே.

எல்லா விதிமுறைகளும் சட்டங்களும் அடக்குமுறைதான் என்ற அபத்தமான வாதத்தை கட்டுடைக்கவே இந்த கேள்விகள்.

சிந்தித்து பார்ப்பவர்களுக்கு அது புலப்படும்.

Anonym said...

ஸ்டாலின் எழுதுகிறார்
//தமிழ்மணி ஒன்றுமே அறியாத பச்சைமண்ணாக இது எப்படி இருக்கும், அது எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பிகிறார், நமது தோழர்களும் அதற்க்கு நேர்மையான பதிலளிக்கின்றனர், தமிழ்மணியோ கருத்து குருடர் என்றாலும் காரியக் குருடர்.

அவர் ஒரு பக்கம் ஏதோஅறிந்து கொள்ள விருப்பப்படுபவர் போல் கேள்விஎழுப்பிகொண்டே, இன்னொரு பக்கம் அனானியாகாவும் இன்னும் பல பெயர்களிலும் மார்க்சியத்தை அவதூறு செய்து வரும் பின்னூட்டங்களை அயோக்கியதனமாக அனுமதித்துக்கொண்டிருக்கிறார்.

//
பழைய அனானி:

அன்புள்ள ஸ்டாலின், மார்க்சியத்தைக் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் கருத்துக் குருடர்கள், அயோக்கியர்கள் என்றால் அது அவதூறு இல்லை. உங்கள் கருத்தில், நாகரிகமாக மார்க்ஸின் கோட்பாடுகளை முன்வைத்து தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இன்னமும் என் கேள்விகளுக்கு, மார்க்சியக் கோட்பாடு மீதான என் விமர்சனத்திற்கு உங்களிடமிருந்தோ, ஜமாலன், அசுரன், தியாகு, இன்னபிற எவரிடமிருந்தும் ஒழுங்கான பதில் இல்லை.

நான் சொன்னதைத் தொகுத்து :

1. புராதனக் கம்யூனிசம் என்பது தவறு. அப்படி ஒரு கம்யூனிசச் சமூகம் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. பிறக்கும் போதே இருப்பவன் இல்லாதவன் என்று தான் பிறந்தானா மனிதன் என்று தியாகு கேட்டிருந்தார். ஆமாம். ஏனென்றால் ஒரு குழந்தை பிறக்கும் போதே அதன் தாய், தந்தை குடும்பம் என்று கொண்டு தான் பிறக்கிறது. ஆதிகாலச் சமூகத்திலும் ஓர் இனக்குழு இயற்கை வளங்களில் உடைமையால் வளம் பெற்றிருக்கும். வேறு சில இனக்க்குழுக்கள் வசதிக் குறைவாய்த்தான் இருந்திருக்கும்.



2. உற்பத்தி உறவுகள் சமூகச் சூழலைத் தீர்மானிக்கின்றன என்பதும் தவறு. சமூக சூழலுக்கு பல காரணிகள் இருக்கலாம். இயற்கை வளம், தொழில் நுட்ப வளர்ச்சி, கல்வி, ஜனநாயகப் பண்பு, வலுவான அரசு என்று பல காரணிகள் உண்டு. உற்பத்தியில் வெறுமே மூலதனம், தொழிலாளியின் உழைப்பு மட்டுமே காரணிகள் அல்ல. பொருளாதாரத்தில் Components Theory என்று ஒன்று உண்டு. உதாரணமாக ஒரு தேநீர்க் கடையில் தேநீர் தயாரிக்க பால், சர்க்கரை, தேயிலை என்ற பயன் பொருட்கள் இல்லமல், கடை வாடகை, மூலதனத்டிற்கான வட்டி என்று பல உண்டு. தொழிலாளியின் உழைப்பினால் தான் உபரி மதிப்புத் தோன்றுகிறது என்பது அபத்தம். என்றும் கூறியிருந்தேன். தொழிலாளி தன் உழைப்பை விற்கிறான் அதன் கூலியைப் பெற்றவுடன் உற்பத்திக்கும், அவனுக்கும் இருக்கும் தொடர்பு முடிந்து போகிறது. இன்றைய தொழிற்சாலைகளில் பல தொழிலாளர்களின் வேலை வெறுமே நட் போல்டுகளை பாவிப்பதோடு நின்று விடுகிறது.



3. கண்டுபிடிப்புகளுக்கு தொழிலாளி காரணம் என்று தியாகு சொல்வதும் தவறு. உதாரணமாக டெலிபோன் கண்டுபிடிப்புக்கு கிரகாம் பெல் காரணம். அவர் தொழிலாளியல்ல. இன்று உள்ள செல்பேசி தொழில் நுட்பம் எந்தத் தொழிலாளியும் கண்டுபிடித்ததல்ல. ஒரு விஞ்ஞானக் கதைகள் எழுதியவரின் கற்பனையில் உதித்து , விஞ்ஞான அடிப்படையின் உண்மையால் ஆய்வுக்கூடத்திற்கு கண்டுபிடிப்பு சென்று உருவானது. கணிதக் கண்டுபிடிப்புகள் பல தனிமனிதனின் சிந்தனை சாதனைகளே. சந்திரசேகர், தொடங்கி, ராமானுஜம் வரையில் இதற்கான உண்மைகளைக் காணலாம். தொழிலாளி தன் செயலில் உள்ள சில நுணுக்கங்களை எப்படி சீர் செய்ய முடியும் என்று சொல்லலாம் அவ்வளவு தான். மார்க்ஸில் இந்த கண்டுபிடிப்பு- தொழிலாளி உறவு பற்றி எங்கும் சொல்லப் படவில்லை. தொழிலாளியை வியந்து ஏத்தும் வகையில் தியாகு இந்த குறிப்பை சொல்லியிருக்கலாம்.


ஸ்டாலின்:
//
இது ஏதோ தற்செயலாய் நடக்கவில்லை, தோழர்.ஆசாத்தினுடைய தளத்தில் துவங்கப்பட்ட விவாதத்தை கட்-காப்பி-பேஸ்ட் செய்து தனது தளத்தில் போட்டு அங்கு அனானிகள் வந்து ஆட்டம் போடுவதற்கு முதலில் வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தார் தமிழ்மணி.

மார்க்சியத்தை பற்றி ஏற்கனவே அவதூறு செய்ய முயன்று தோற்க்கடிக்கப்பட்டதுகளும், மூக்குடைபட்டு போனதுகளும், அனானிகளாக வந்து அங்கு மூக்கை சிந்தி போட்டன‌, இப்பேர்பட்ட அரசியல் நேர்மை கொண்ட, ஒன்றுமறியாத பச்சைமண்ணான தமிழ்மணிக்கு நமது தோழர்களும் சலிக்காமல் பதில் சொல்லிகொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்மணி மார்க்சியத்தை பற்றி என்னவிதமான அடிப்படை புரிதல்களை வைத்திருக்கிறார். சமூகங்கள் வர்க்கங்களாக பிரிந்திருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொள்கிறாரா, இல்லையா? வர்க்க சுரண்டல்கள் இருப்பதை ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா? இது போன்ற அடிப்படையான கேள்விகளை நமது தோழர்கள் அவரிடம் எழுப்பியிருக்க வேண்டும்.
//

பழைய அனானி:

அனானியாய் வந்து ஆட்டம் போடுவது என்பதன் பொருள் எனக்குப் புரியவில்லை. வலையுலகில் எல்லோருமே அனானிகள் தான். கருத்துகள் தான் முக்கியம். மெய்ப்பொருள் காண்போமே. நான் இதுவரை வலைப்பக்கம் வந்ததில்லை.

வர்க்கங்களாய் பிரிந்திருப்பதை ஏற்றுக் கொள்கிறோமா என்ற கேள்விக்கு பகில் : ஆமாம். ஆனால் மார்க்சிய வாதிகள் சொல்லும் வர்க்கமும் நான் சொல்லும் வர்க்கமும் ஒன்றல்ல்ல. கீழ் மத்தியதரவர்க்கம், மேல் மத்தியதர வர்க்கம் என்று நகர்ப்புற மக்களை பிரிக்கலாம். முதலாளி தொழிலாளி வர்க்கம் என்ற கருத்தாக்கத்திற்கு இன்றைய நிலையில் எந்தப் பொருளும் இல்லை. தன் உழைபையும் ஒரு பொருள் போலச்சந்தையில் விற்கும் தொழிலாளிதான் இங்கே உண்டே தவிர தொழிலாளி வர்க்கம் என்று எதுவும் இல்லை. அதனால் தான் உபரி மதிப்பு என்ற கருத்தாக்கமும் பொருளற்றது என்று சொன்னேன்.

சுரண்டல் என்பது மார்க்சியக் களிம்பேறிய அர்த்தமற்ற வார்த்தை. ஆனால் அநீதிகள் இருக்கின்றன என்று ஒப்புக் கொள்கிறேன். இந்த அநீதிக்கு பொருளாதாரத்தால் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் தான் காரணம் என்று ஒப்புக்கொள்ளமாட்டேன். சமூக ஆக்கத்தில் இந்த அநீதிகளைப் போக்கத்தான், நமக்கு நாமே ஒரு ஜனநாயக அமைப்பைக் கட்டி எழுப்பி, பிரதிநிதிகளை நியமித்து நம்மை நாமே ஆண்டுகொள்கிறோம். சட்டரீதியாகவும், ஜனநாயகமுறையில் வன்முறை தவிர்த்தும் இந்த அநீதிகளைக் களைய முயன்று வருகிறோம். இது ஒரு முடிவில்லாத பயணம். ஆனால் ஜனநாயக மறுப்பும், சர்வாதிகாரமும், சோஷலிசக் கனவுகளும் நீதி நோக்கிய இந்தப் பயணத்தில் தடைக்கல்களே ஆகும்.

ஸ்டாலின் :
//
மேலும், இன்றைய சமூக அமைப்பு முறையை கேள்விக்குட்படுத்தாமல், கம்யூனிச சமூக அமைப்பு முறையை பற்றி பேசுவதென்பதோ, புரிந்து கொள்ள முற்படுவதோ இயங்கியலுக்கே எதிரானதாகும்.அது ஒரு நிகழ்ச்சி போக்கிலிருந்து அந்த நிகழ்ச்சியை துண்டித்து பார்ப்பதை போன்றதாகும்.
//
பழைய அனானி:

பதில்களைத் தயாராக வைத்துக் கேள்விகளைக் கேட்கிற நண்பரே, இயங்கியல் என்பது என்ன? ஹெகல் கருத்தாக்கத்தில் மூன்று நிலைகளைச் சொன்னார். இதன் வழியாக ஒரு சமூக அமைப்பு முனே தான் செல்ல முடியும் என்பது அவர் இயங்கியல் பார்வையாய் இருந்தது. அபப்டி பார்க்கப் போனால், ரஷ்யாவில் சோஷலிசம் தோல்வியுற்றது கூட முன்னேறிய இயங்கியல் பாய்ச்சல் என்று தான் சொல்ல வேண்டும். அதை ஏற்றுக் கொள்வீர்களா?

சும்மா இயங்கியல் என்று ஒரு அர்த்தமற்ற வார்த்தையைப் போட்டு பயமுறுத்தாதீர்கள். ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுக்கும், பாகிஸ்தான் ராணுவ அரசிற்கும் என்ன இயங்கியல் விளக்கம் உள்ளது?

ஸ்டாலின்:
//
மார்க்சையும் அவரது வரலாறு பொருள்முதல்வாத ஆய்வு முறையையும், சமூக வரையறுப்புகளையும் பற்றி எங்கெல்சு குறிப்பிடும் போது, உயிரியல் துறையில் டார்வினுடைய பரிணாமவாததத்துடன் ஒப்பிடக்கூடியது மார்க்சினுடைய சமூக பரிணாமவாதம் என்று குறிப்பிட்டார். இப்படிப்பட்ட பரிணாம வழிவருகின்ற உச்சமான உயர்ந்ததொரு சமூகத்தை அதற்கு முந்தைய‌ மற்றைய சமூகத்திலிருந்து துண்டித்து பார்க்கவோ இந்த அமைப்பு முறைகள் மாறிவந்த‌ சமூக மாற்றத்துக்கு அடிப்படையான அம்சத்தை தவிர்த்துவிட்டு பார்க்கவோ முடியாது.

ஆனால் அப்படி பார்ப்பதற்குத்தான் தமிழ்மணி ஆசைப்படுகிறார். அவர் கம்யூனிஸ்டுகள் படைக்க விரும்பும் பொன்னுலகம் எப்படியிருக்கும் என்பதுதான் அவருடைய ஆசையாக இருக்கிறதேயொழிய, அது எதிலிருந்து எப்படி முகிழ்த்தெழுகிறது, என்னவிதமான தீமைகளையெல்லாம் துடைத்தழிககிறது. மார்க்சியம் முன்வைக்கும் விஞ்ஞான சோசலிச கோட்பாடு எப்படிப்பட்டது இது எதுவும் அவருக்கு தேவையில்லை அவருக்கு வேண்டியதெல்லாம் கம்யூனிச சமூகம் எப்படியிருக்கும் என்பதுதான்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகம், சுதந்திரம், சட்டநெறிகள், சமூக ஒழுக்கங்கங்கள் பற்றி இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் மதிப்பீடுகளிலும் கருத்துருவாக்கங்களும்தான் எல்லா காலங்களிலும் இருந்து வந்திருக்கின்றதா என்பதனை நாம் யோசிக்க வேண்டும், மாறி வந்திருக்கிறது என்றால் எப்படி மாறியது என்பதனையும் யோசிக்க வேண்டும், இப்படி நம்முடைய பழைய மதிப்பீடுகளையும் இன்றைய சமூகத்தையும் பற்றி கேள்வி எழுப்பாமல் கம்யூனிச சமூகத்தை பற்றி பேசுவது என்பது வெற்று அரட்டையாகத்தான் இருக்கும்.
//
பழைய அனானி:

எங்கல்ஸ் சொல்லிவிட்டால் அது வேதவாக்கா? ஏங்கல்சிற்குப் பின்னால் வந்த தத்துவவாதிகள், பொருளாதார நிபுணர்கள் சொன்னதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டீர்களா? நிய்யுட்டனுடன் நின்றிருந்தால் விஞ்ஞானம் வளர்ந்திருக்குமா?

ஸ்டாலின் :
//
எனவேதான்

"முதலாளித்துவ சொத்துடைமையின் மீது கட்டி எழுப்பட்டிருக்கின்ற, சட்ட நெறிமுறைக‌ளையும், சுத‌ந்திர‌ம் போன்ற‌வ‌ற்றை ப‌ற்றி உங்க‌ள் ம‌திப்பீடுக‌ளை கேள்விக்குட்ப‌டுத்தாம‌ல் எங்க‌ளிட‌ம் வாய்ச்ச‌ண்டைக்கு வராதீர்க‌ள்” என்று மார்க்சிய ஆசான்கள் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் குறிப்பிட்டார்கள்.

நாம் இதுவரை என்னென்ன சமூக அமைப்பு முறைகளை கடந்து வந்திருக்கிறோம், இப்போது எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம், மார்க்சும் எங்கெல்சும் இந்த சமூக அமைப்பு முறைகளை எப்படி வரையறுத்தார்கள், எதன் அடிப்படையில் அதனை பெயரிட்டு அழைத்தார்கள்? உதாரணமாக முதலாளித்துவ சமூகம் என்றால் அதனை ஏன் அப்படிச் சொல்கிறார்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய சமூகம் என்பது எல்லா மனிதர்களும் வாழக்கூடிய அளவில் திருப்திகரமானதாக இருக்கிறதா? இல்லை இது மாற வேண்டுமா? மாற்றம் என்றால் எப்படிப்பட்ட மாற்றம்? சோசலிச மாற்றம் என்று குறிப்பிட்டால் அதன் அம்சம் என்ன? முதலாளித்துவ சமூக அமைப்பு முறைக்கு பிறகு கம்யூனிசம் என்றால் இடையில் எதற்கு சோசலிசம்?

இப்படி பல கேள்விகளுக்கு பதில் தேடாமல், கம்யூனிச சமூகத்தை பற்றி அறிந்து கொள்ள ஆசைபடுகிறேன் என்று தமிழ்மணி சொல்வதில் ஒரு கதை கேட்கும் மனோபாவம்தான் இருக்கிறதேயொழிய தர்க்கபூர்வமான தேடல் இல்லை.
//
பழைய அனானி:

சமூக மாற்றம் என்பது பெரிய வார்த்தை. அப்படிப் பட்ட மாற்றங்கள் யாரும் விரும்பைல்லை. நிச்சயமாய் சோஷலிச மாற்றத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அல்பேனிய, ரஷ்யா, சீனா, கொரியா என்று பல நிரூபணங்கள் வந்துவிட்டன. மனிதர்களின் வாழ்க்கையில் அவர்கள் பொருளாதார நிலை உயர , கண்டுபிடிப்புகளும் தொழில் அபிவிருத்தியும் தான் ஒரே வழி.

Anonym said...

சமீபத்தில் படித்த மிகச்சிறப்பான விவாதம்.

நன்றி

said...

நண்பர் ஸ்டாலின் பதிலெழுதியிருந்தால் இங்கே குறிப்பிடலாமே?

Anonym said...

பாவம்பா பிச்சை காரன் நிலமைக்கு கெஞ்சுகிறார் தமிழ் மணி

யாராவது கமெண்டு போடுங்களேன்

Anonym said...

அட நீங்க வேற பிச்சை போட்டால் அதை காப்பி பேஸ்டு செய்து

தனது கருத்துன்னு சொல்லிடுவாருங்க

Anonym said...

இரா பிச்சை கேள்வி பட்டு இருக்கேன்

இதென்ன கமெண்டு பிச்சையா

ரொம்ப நல்லா இருக்கு ஸ்டார்ட் மியூசிக்

said...

இவ்வளவுதான் உங்களால் முடிந்த மறுபதில்களா?

Anonym said...

அனானி-2
ஏதோ மார்க்சிசம், பொருளாதாரம், இந்திய அரசியல், ரஷ்ய அரசியல், லெனினியம் இன்னும் காக்னிடிவ் சைகாலஜி, அணு சக்தி உற்பத்தி என்று தமக்குத் தெரியாத துறைகளே இல்லை, தம்மைத் தவிர மற்றெல்லாரும் முழு மூடர்கள் என்று மார்தட்டிய கூட்டமா இப்படி ஏதோ தற்குறிகள் போல கமெண்ட் எல்லாம் எழுதுகிறது?
பின் எதற்கு சவாலெல்லாம் விடுவது? வழக்கம் போல பஸ்ஸ்டாண்டு, குட்டிச் சுவர் என்று யாரும் எதிர்த்துப் பதில் சொல்ல முடியாதபடி ராவோடு ராவாக அர்த்தமே இல்லாத கோஷங்களை எழுதி விட்டு மாபெரும் போராட்டம், பூமி பிளந்த புரட்சி என்றெல்லாம் தம் முதுகைத் தாமே தட்டிக் கொண்டு வழக்கம் போல 'புரட்சி' செய்யலாமே? ஏன் இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம்?

Anonym said...

அன்புள்ள தமிழ்மணி,
பழைய அனானி மீண்டும்.
மாஓயிஸ்டுகளின் உத்தி இது தான் என்பது இன்னமுமா உங்களுக்கு விளங்கவில்லை?
அவர்கள் மற்றவர்களை நாயே பேயே, பன்றிக் கூடாரம், தொங்குசதை என்றெல்லாம் திட்டுவார்கள். அதனால் ஆத்திரமடைந்து எதிராளி அவர்கள் நிலைக்குக் கீழிறங்கியவுடன், ஆகா நம்முடன் இவர்களையும் சாக்கடையில் இழுத்துப் போட்டுவிட்டோம் என்று உள்ளூர மகிழ்ந்து கொள்வார்கள். ஆனால் , வெளியே தாங்கள் மற்ற்வர்களால் தாக்கப் படுகிறோம் என்று புகார் செய்வார்கள்.

நந்திகிராமத்திலும், பீஹாரிலும் , ஜார்க்கண்டிலும் தினமும் நடக்கும் நிகழ்ச்சி அல்லவா இது? மக்களை கேடயம் மாதிரி வைத்துக் கொண்டு காவல் துறையினர் மீது குண்டு எறிவார்கள். அவர்கள் திரும்பித் தாக்கினாலோ, அல்லது கூட்டத்தைக் காப்பாற்ற இவர்கள் மீது தடியடி நடத்தினாலோ , அல்லது என்கவுண்டர்கள் நடத்தினாலோ உடனே மனித உரிமை, மக்கள் மீது போலிஸ் அராஜகம் என்று பேச ஆர்ம்பித்துவிடுவார்கள். இது தான் அவர்கள் வர்க்க முரண்பாட்டை மக்களை பலியிட்டு கூர்மைப் படுத்தும் உத்தி. பிர்சினைகளைத் தீர்ப்பதல்ல, பிரசினைகளை இன்னமும் பெரிதாக்கி மக்கள் கஷ்டப் பட்டால் இவர்களுக்குக் கொண்டாட்டம். புரட்சிக்கு ஆள் சேர்க்கலாமே?

பெரியார் முட்டாள்கள் வேண்டும் என்று சொல்லவில்லை என்று தெரிவித்திருந்தால் நன்றி. நானும் அப்படித் தான் பெரியார் சொல்லியிருக்க மாட்டர் என்று நினைத்தேன். ஆனால் பெரியாரின் சீடர்கள் சிலரைக் காணும்போது, அப்படிச் சொல்லியிருப்பாரோ என்ற ஐயம் ஏற்படுவது தவிர்க்க முடியவில்லை.
பழைய் அனானி