Mittwoch, 7. November 2007

நண்பர் ஸ்டாலினுடன் பழைய அனானி விவாதம்

இந்த பதிவில் நடக்கும் விவாதம் பற்றி நண்பர் ஸ்டாலின் இந்த பதிவு எழுதியிருக்கிறார்

அந்த பதிவு இங்கே
கம்யூனிச சமூகம்: ஒரு கண்ணாமூச்சி விவாதம்

அதற்கு பதிலாக நண்பர் தியாகு விவாத பின்னூட்டத்தில் எழுதியது இங்கே தனி பதிவாக தரப்படுகிறது
----
ஸ்டாலின் எழுதுகிறார்


//தமிழ்மணி ஒன்றுமே அறியாத பச்சைமண்ணாக இது எப்படி இருக்கும், அது எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பிகிறார், நமது தோழர்களும் அதற்க்கு நேர்மையான பதிலளிக்கின்றனர், தமிழ்மணியோ கருத்து குருடர் என்றாலும் காரியக் குருடர்.

அவர் ஒரு பக்கம் ஏதோஅறிந்து கொள்ள விருப்பப்படுபவர் போல் கேள்விஎழுப்பிகொண்டே, இன்னொரு பக்கம் அனானியாகாவும் இன்னும் பல பெயர்களிலும் மார்க்சியத்தை அவதூறு செய்து வரும் பின்னூட்டங்களை அயோக்கியதனமாக அனுமதித்துக்கொண்டிருக்கிறார்.

//


பழைய அனானி:

அன்புள்ள ஸ்டாலின், மார்க்சியத்தைக் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் கருத்துக் குருடர்கள், அயோக்கியர்கள் என்றால் அது அவதூறு இல்லை. உங்கள் கருத்தில், நாகரிகமாக மார்க்ஸின் கோட்பாடுகளை முன்வைத்து தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இன்னமும் என் கேள்விகளுக்கு, மார்க்சியக் கோட்பாடு மீதான என் விமர்சனத்திற்கு உங்களிடமிருந்தோ, ஜமாலன், அசுரன், தியாகு, இன்னபிற எவரிடமிருந்தும் ஒழுங்கான பதில் இல்லை.

நான் சொன்னதைத் தொகுத்து :

1. புராதனக் கம்யூனிசம் என்பது தவறு. அப்படி ஒரு கம்யூனிசச் சமூகம் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. பிறக்கும் போதே இருப்பவன் இல்லாதவன் என்று தான் பிறந்தானா மனிதன் என்று தியாகு கேட்டிருந்தார். ஆமாம். ஏனென்றால் ஒரு குழந்தை பிறக்கும் போதே அதன் தாய், தந்தை குடும்பம் என்று கொண்டு தான் பிறக்கிறது. ஆதிகாலச் சமூகத்திலும் ஓர் இனக்குழு இயற்கை வளங்களில் உடைமையால் வளம் பெற்றிருக்கும். வேறு சில இனக்க்குழுக்கள் வசதிக் குறைவாய்த்தான் இருந்திருக்கும்.



2. உற்பத்தி உறவுகள் சமூகச் சூழலைத் தீர்மானிக்கின்றன என்பதும் தவறு. சமூக சூழலுக்கு பல காரணிகள் இருக்கலாம். இயற்கை வளம், தொழில் நுட்ப வளர்ச்சி, கல்வி, ஜனநாயகப் பண்பு, வலுவான அரசு என்று பல காரணிகள் உண்டு. உற்பத்தியில் வெறுமே மூலதனம், தொழிலாளியின் உழைப்பு மட்டுமே காரணிகள் அல்ல. பொருளாதாரத்தில் Components Theory என்று ஒன்று உண்டு. உதாரணமாக ஒரு தேநீர்க் கடையில் தேநீர் தயாரிக்க பால், சர்க்கரை, தேயிலை என்ற பயன் பொருட்கள் இல்லமல், கடை வாடகை, மூலதனத்டிற்கான வட்டி என்று பல உண்டு. தொழிலாளியின் உழைப்பினால் தான் உபரி மதிப்புத் தோன்றுகிறது என்பது அபத்தம். என்றும் கூறியிருந்தேன். தொழிலாளி தன் உழைப்பை விற்கிறான் அதன் கூலியைப் பெற்றவுடன் உற்பத்திக்கும், அவனுக்கும் இருக்கும் தொடர்பு முடிந்து போகிறது. இன்றைய தொழிற்சாலைகளில் பல தொழிலாளர்களின் வேலை வெறுமே நட் போல்டுகளை பாவிப்பதோடு நின்று விடுகிறது.



3. கண்டுபிடிப்புகளுக்கு தொழிலாளி காரணம் என்று தியாகு சொல்வதும் தவறு. உதாரணமாக டெலிபோன் கண்டுபிடிப்புக்கு கிரகாம் பெல் காரணம். அவர் தொழிலாளியல்ல. இன்று உள்ள செல்பேசி தொழில் நுட்பம் எந்தத் தொழிலாளியும் கண்டுபிடித்ததல்ல. ஒரு விஞ்ஞானக் கதைகள் எழுதியவரின் கற்பனையில் உதித்து , விஞ்ஞான அடிப்படையின் உண்மையால் ஆய்வுக்கூடத்திற்கு கண்டுபிடிப்பு சென்று உருவானது. கணிதக் கண்டுபிடிப்புகள் பல தனிமனிதனின் சிந்தனை சாதனைகளே. சந்திரசேகர், தொடங்கி, ராமானுஜம் வரையில் இதற்கான உண்மைகளைக் காணலாம். தொழிலாளி தன் செயலில் உள்ள சில நுணுக்கங்களை எப்படி சீர் செய்ய முடியும் என்று சொல்லலாம் அவ்வளவு தான். மார்க்ஸில் இந்த கண்டுபிடிப்பு- தொழிலாளி உறவு பற்றி எங்கும் சொல்லப் படவில்லை. தொழிலாளியை வியந்து ஏத்தும் வகையில் தியாகு இந்த குறிப்பை சொல்லியிருக்கலாம்.


ஸ்டாலின்:
//
இது ஏதோ தற்செயலாய் நடக்கவில்லை, தோழர்.ஆசாத்தினுடைய தளத்தில் துவங்கப்பட்ட விவாதத்தை கட்-காப்பி-பேஸ்ட் செய்து தனது தளத்தில் போட்டு அங்கு அனானிகள் வந்து ஆட்டம் போடுவதற்கு முதலில் வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தார் தமிழ்மணி.

மார்க்சியத்தை பற்றி ஏற்கனவே அவதூறு செய்ய முயன்று தோற்க்கடிக்கப்பட்டதுகளும், மூக்குடைபட்டு போனதுகளும், அனானிகளாக வந்து அங்கு மூக்கை சிந்தி போட்டன‌, இப்பேர்பட்ட அரசியல் நேர்மை கொண்ட, ஒன்றுமறியாத பச்சைமண்ணான தமிழ்மணிக்கு நமது தோழர்களும் சலிக்காமல் பதில் சொல்லிகொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்மணி மார்க்சியத்தை பற்றி என்னவிதமான அடிப்படை புரிதல்களை வைத்திருக்கிறார். சமூகங்கள் வர்க்கங்களாக பிரிந்திருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொள்கிறாரா, இல்லையா? வர்க்க சுரண்டல்கள் இருப்பதை ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா? இது போன்ற அடிப்படையான கேள்விகளை நமது தோழர்கள் அவரிடம் எழுப்பியிருக்க வேண்டும்.
//

பழைய அனானி:

அனானியாய் வந்து ஆட்டம் போடுவது என்பதன் பொருள் எனக்குப் புரியவில்லை. வலையுலகில் எல்லோருமே அனானிகள் தான். கருத்துகள் தான் முக்கியம். மெய்ப்பொருள் காண்போமே. நான் இதுவரை வலைப்பக்கம் வந்ததில்லை.

வர்க்கங்களாய் பிரிந்திருப்பதை ஏற்றுக் கொள்கிறோமா என்ற கேள்விக்கு பகில் : ஆமாம். ஆனால் மார்க்சிய வாதிகள் சொல்லும் வர்க்கமும் நான் சொல்லும் வர்க்கமும் ஒன்றல்ல்ல. கீழ் மத்தியதரவர்க்கம், மேல் மத்தியதர வர்க்கம் என்று நகர்ப்புற மக்களை பிரிக்கலாம். முதலாளி தொழிலாளி வர்க்கம் என்ற கருத்தாக்கத்திற்கு இன்றைய நிலையில் எந்தப் பொருளும் இல்லை. தன் உழைபையும் ஒரு பொருள் போலச்சந்தையில் விற்கும் தொழிலாளிதான் இங்கே உண்டே தவிர தொழிலாளி வர்க்கம் என்று எதுவும் இல்லை. அதனால் தான் உபரி மதிப்பு என்ற கருத்தாக்கமும் பொருளற்றது என்று சொன்னேன்.

சுரண்டல் என்பது மார்க்சியக் களிம்பேறிய அர்த்தமற்ற வார்த்தை. ஆனால் அநீதிகள் இருக்கின்றன என்று ஒப்புக் கொள்கிறேன். இந்த அநீதிக்கு பொருளாதாரத்தால் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் தான் காரணம் என்று ஒப்புக்கொள்ளமாட்டேன். சமூக ஆக்கத்தில் இந்த அநீதிகளைப் போக்கத்தான், நமக்கு நாமே ஒரு ஜனநாயக அமைப்பைக் கட்டி எழுப்பி, பிரதிநிதிகளை நியமித்து நம்மை நாமே ஆண்டுகொள்கிறோம். சட்டரீதியாகவும், ஜனநாயகமுறையில் வன்முறை தவிர்த்தும் இந்த அநீதிகளைக் களைய முயன்று வருகிறோம். இது ஒரு முடிவில்லாத பயணம். ஆனால் ஜனநாயக மறுப்பும், சர்வாதிகாரமும், சோஷலிசக் கனவுகளும் நீதி நோக்கிய இந்தப் பயணத்தில் தடைக்கல்களே ஆகும்.

ஸ்டாலின் :
//
மேலும், இன்றைய சமூக அமைப்பு முறையை கேள்விக்குட்படுத்தாமல், கம்யூனிச சமூக அமைப்பு முறையை பற்றி பேசுவதென்பதோ, புரிந்து கொள்ள முற்படுவதோ இயங்கியலுக்கே எதிரானதாகும்.அது ஒரு நிகழ்ச்சி போக்கிலிருந்து அந்த நிகழ்ச்சியை துண்டித்து பார்ப்பதை போன்றதாகும்.
//

பழைய அனானி:

பதில்களைத் தயாராக வைத்துக் கேள்விகளைக் கேட்கிற நண்பரே, இயங்கியல் என்பது என்ன? ஹெகல் கருத்தாக்கத்தில் மூன்று நிலைகளைச் சொன்னார். இதன் வழியாக ஒரு சமூக அமைப்பு முனே தான் செல்ல முடியும் என்பது அவர் இயங்கியல் பார்வையாய் இருந்தது. அபப்டி பார்க்கப் போனால், ரஷ்யாவில் சோஷலிசம் தோல்வியுற்றது கூட முன்னேறிய இயங்கியல் பாய்ச்சல் என்று தான் சொல்ல வேண்டும். அதை ஏற்றுக் கொள்வீர்களா?

சும்மா இயங்கியல் என்று ஒரு அர்த்தமற்ற வார்த்தையைப் போட்டு பயமுறுத்தாதீர்கள். ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுக்கும், பாகிஸ்தான் ராணுவ அரசிற்கும் என்ன இயங்கியல் விளக்கம் உள்ளது?

ஸ்டாலின்:
//
மார்க்சையும் அவரது வரலாறு பொருள்முதல்வாத ஆய்வு முறையையும், சமூக வரையறுப்புகளையும் பற்றி எங்கெல்சு குறிப்பிடும் போது, உயிரியல் துறையில் டார்வினுடைய பரிணாமவாததத்துடன் ஒப்பிடக்கூடியது மார்க்சினுடைய சமூக பரிணாமவாதம் என்று குறிப்பிட்டார். இப்படிப்பட்ட பரிணாம வழிவருகின்ற உச்சமான உயர்ந்ததொரு சமூகத்தை அதற்கு முந்தைய‌ மற்றைய சமூகத்திலிருந்து துண்டித்து பார்க்கவோ இந்த அமைப்பு முறைகள் மாறிவந்த‌ சமூக மாற்றத்துக்கு அடிப்படையான அம்சத்தை தவிர்த்துவிட்டு பார்க்கவோ முடியாது.

ஆனால் அப்படி பார்ப்பதற்குத்தான் தமிழ்மணி ஆசைப்படுகிறார். அவர் கம்யூனிஸ்டுகள் படைக்க விரும்பும் பொன்னுலகம் எப்படியிருக்கும் என்பதுதான் அவருடைய ஆசையாக இருக்கிறதேயொழிய, அது எதிலிருந்து எப்படி முகிழ்த்தெழுகிறது, என்னவிதமான தீமைகளையெல்லாம் துடைத்தழிககிறது. மார்க்சியம் முன்வைக்கும் விஞ்ஞான சோசலிச கோட்பாடு எப்படிப்பட்டது இது எதுவும் அவருக்கு தேவையில்லை அவருக்கு வேண்டியதெல்லாம் கம்யூனிச சமூகம் எப்படியிருக்கும் என்பதுதான்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகம், சுதந்திரம், சட்டநெறிகள், சமூக ஒழுக்கங்கங்கள் பற்றி இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் மதிப்பீடுகளிலும் கருத்துருவாக்கங்களும்தான் எல்லா காலங்களிலும் இருந்து வந்திருக்கின்றதா என்பதனை நாம் யோசிக்க வேண்டும், மாறி வந்திருக்கிறது என்றால் எப்படி மாறியது என்பதனையும் யோசிக்க வேண்டும், இப்படி நம்முடைய பழைய மதிப்பீடுகளையும் இன்றைய சமூகத்தையும் பற்றி கேள்வி எழுப்பாமல் கம்யூனிச சமூகத்தை பற்றி பேசுவது என்பது வெற்று அரட்டையாகத்தான் இருக்கும்.
//


பழைய அனானி:

எங்கல்ஸ் சொல்லிவிட்டால் அது வேதவாக்கா? ஏங்கல்சிற்குப் பின்னால் வந்த தத்துவவாதிகள், பொருளாதார நிபுணர்கள் சொன்னதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டீர்களா? நிய்யுட்டனுடன் நின்றிருந்தால் விஞ்ஞானம் வளர்ந்திருக்குமா?

ஸ்டாலின் :
//
எனவேதான்

"முதலாளித்துவ சொத்துடைமையின் மீது கட்டி எழுப்பட்டிருக்கின்ற, சட்ட நெறிமுறைக‌ளையும், சுத‌ந்திர‌ம் போன்ற‌வ‌ற்றை ப‌ற்றி உங்க‌ள் ம‌திப்பீடுக‌ளை கேள்விக்குட்ப‌டுத்தாம‌ல் எங்க‌ளிட‌ம் வாய்ச்ச‌ண்டைக்கு வராதீர்க‌ள்” என்று மார்க்சிய ஆசான்கள் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் குறிப்பிட்டார்கள்.

நாம் இதுவரை என்னென்ன சமூக அமைப்பு முறைகளை கடந்து வந்திருக்கிறோம், இப்போது எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம், மார்க்சும் எங்கெல்சும் இந்த சமூக அமைப்பு முறைகளை எப்படி வரையறுத்தார்கள், எதன் அடிப்படையில் அதனை பெயரிட்டு அழைத்தார்கள்? உதாரணமாக முதலாளித்துவ சமூகம் என்றால் அதனை ஏன் அப்படிச் சொல்கிறார்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய சமூகம் என்பது எல்லா மனிதர்களும் வாழக்கூடிய அளவில் திருப்திகரமானதாக இருக்கிறதா? இல்லை இது மாற வேண்டுமா? மாற்றம் என்றால் எப்படிப்பட்ட மாற்றம்? சோசலிச மாற்றம் என்று குறிப்பிட்டால் அதன் அம்சம் என்ன? முதலாளித்துவ சமூக அமைப்பு முறைக்கு பிறகு கம்யூனிசம் என்றால் இடையில் எதற்கு சோசலிசம்?

இப்படி பல கேள்விகளுக்கு பதில் தேடாமல், கம்யூனிச சமூகத்தை பற்றி அறிந்து கொள்ள ஆசைபடுகிறேன் என்று தமிழ்மணி சொல்வதில் ஒரு கதை கேட்கும் மனோபாவம்தான் இருக்கிறதேயொழிய தர்க்கபூர்வமான தேடல் இல்லை.
//

பழைய அனானி:

சமூக மாற்றம் என்பது பெரிய வார்த்தை. அப்படிப் பட்ட மாற்றங்கள் யாரும் விரும்பைல்லை. நிச்சயமாய் சோஷலிச மாற்றத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அல்பேனிய, ரஷ்யா, சீனா, கொரியா என்று பல நிரூபணங்கள் வந்துவிட்டன. மனிதர்களின் வாழ்க்கையில் அவர்கள் பொருளாதார நிலை உயர , கண்டுபிடிப்புகளும் தொழில் அபிவிருத்தியும் தான் ஒரே வழி.

13 Comments:

Anonym said...

பழைய அனானிக்கு நன்றிகள்.

ஏராளமான "கலைச்சொற்கள்" தெளிவு பெறுகின்றன

said...

பின்னூட்டத்துக்கு நன்றி.

நண்பர் ஸ்டாலின்,

உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

said...

நண்பர் ஸ்டாலின் உங்கள் கருத்துக்களை இந்த பதிவிலேயே எழுதுங்கள்.

நன்றி

Anonym said...

ஸ்டாலின்
உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்துள்ளேன்.

நன்றி

Anonym said...

புரட்சி வரும் வரை எந்த கண்டுபிடிப்புகளும் கூடாது என்பதுதான் கம்யூனிஸ்டுகளின் கொள்கை. அப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளால் வேலையில்லா திண்டாட்டம்தான் அதிகமாகும் என்பதே கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடு.

சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதால், மாட்டுவண்டி வந்து தலையில் எடுத்துக்கொண்டு போய் வந்த மக்களின் வேலை பாதிக்கப்பட்டது.

ஏர் கண்டுபிடிக்கப்பட்டதால், கையாலேயே நோண்டி விவசாயம் செய்துவந்த உழைப்பாளிகள் வேலை இழந்தார்கள்.

ரயில்வண்டி வந்ததால், மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் ரயில்வண்டி ஓட்டும் முதலாளித்துவ பாசிச டிரைவர்களால் வேலை இழந்தார்கள்.

எக்ஸட்ரா எக்ஸட்ரா...
ஆகவே எல்லா பணக்காரர்களையும் கொல்லுவோம். புரட்சி புரட்சி...

said...

நண்பர் ஸ்டாலின் அவரது பதிவில் கொடுத்த பின்னூட்டங்களை இங்கே வாசகர்கள் படிப்பதற்காக இணைத்துள்ளேன்.

---

அசுரன் said...
இந்த விவாதங்களை இடையிலிருந்து கவனித்து வருகிறேன். ஒரு குறிப்பான விசயத்தில் ஊன்றி விவாதம் செய்து அவர்களது போலி மேதாவித்தனத்தை அம்பலப்படுத்துவதே சரி மாறாக தோழர்கள் அவர்கள் இழுத்த இழுப்புக்கேல்லாம் சென்று பதில் சொல்வதும் அவர்களும் இதை சொல்வது அதைச் சொல்வது என்று நேரத்தை வீணடிக்கும் வேலையை தமது நோக்கத்தை வெகு திறமையாக நிறைவேற்றிக் கொண்டார்கள். தமிழ்மணியின் சமீபத்திய பதிவை மேலேழுந்தவாரியாக அதில் எதுவும் உருப்படியான விசயம் உள்ளதா என்று பார்த்த பொழுது இயங்கியல் முழுவதையும் கரைத்து குடித்தது போல அனானி பதில் போட்டிருந்தது பளீச்சென்று தெரிந்தது. ஆனால் அந்த பதிலே அவர் ஒரு அரைகுறை எனப்தை காட்டுகிற்து. வளர்ச்சி என்பது ஸைபைரல் வடிவில் இருக்கும் என்பதும் இயங்கியல்தான் என்பதை அவருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மற்றபடி அவர்களுடன் விவாதம் நடத்துவதில் ஒரு சிறு துளீ கூட பிரோயோசனம் இல்லை. ஏனேனில் அவர்களது கட்டுரையை நாமும் அவ்ரகளூம் மட்டும்தான் படிக்கிறோம்.

நேரத்தை வீணடிப்பது மட்டுமே அவர்களது நோக்கம். அது மட்டுமே நிறைவேறும்.

அதை விடுத்து நடைமுறையில் பல்வேறு பிரச்சனைகளை மார்க்ஸிய ஒளியில் அறிமுகப்படுத்துவதே சாலச் சிறந்தது. அது போல கட்டுரை எழுதும் பொழுது இந்த அரைவேக்காட்டுகளின் வண்டவாளமும் வெகு விமரிசையாக அம்பலப்படும்.

அசுரன்

November 12, 2007 5:57 AM


ஸ்டாலின் said...
வருகைக்கு நன்றி தோழர். அசுரன், இந்த பதிவு, கம்யூனிச சமூகம் பற்றி தமிழ்மணியுடன் தோழர்கள் உரையாடிய போது எழுதப்பட்டது, இந்து மதவெறியர்களின் குஜராத் கொலைவெறியாட்டங்கள், கொல்லைப்புற வெளியாக தமிழகத்தில் நுழைய நினைக்கும் அவர்களது நரித்தனம் என்று இந்த நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பன பயங்கரவாத சூழலில் இதனை பதிவிடுவது கிஞ்சிற்றும் பொருத்தமற்றதாக இருக்கும் என்பதால் இதனை கேடயத்தில் பதிவிடாமல் இங்கு பதிந்தேன்.,

தமிழ்மணி போன்ற அரட்டை கச்சேரி ரசிகர்களோடு நாம் நடத்தும் விவாதம், எந்த வகையிலும் உபயோகப்படாது, ஒரு கட்டுரையின் சாரம்சத்தை கூட புரிந்து கொள்ளாமல் பின்னூட்ட பிச்சை என்பதை மட்டுமே குறியாய் வைத்து பதிவிடும் இது போன்றவர்களிடம் விவாதிப்பதால் என்ன பலன் ஏற்படப்போகிறது. இதனால்தான் தமிழ்மணத்தில் இணைக்கப்படாத இந்த தளத்தில் இந்த கட்டுரையை போட்டுவைத்தேன்.,


இவர்களது இயங்கியல் அறிவும், ஒவ்வொரு பின்னூட்டத்திலும் கூட பல்லிளித்துக் கொண்டிருக்கிறது தோழர்.

இந்த முட்டாள்களுக்கு மார்க்சியத்தின் மீது சேறுவாரி அடிக்க வேண்டுமென்கிற நினைப்புதான் இருக்கிறதேயொழிய அதனை செய்யக்கூட அவர்கள் வக்கற்றவர்களாய் இருக்கிறார்கள், அதனால்தான் தனக்கு தெரிந்து மார்க்சியவாதிகளின் பெயரையெல்லாம் போட்டு அவர்களை சர்வாதிகாரிகள் என்று கூறுகிறார்கள், அதில் ரோசா லுக்சம்பர்க் பெயரை கூட சேர்த்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது இவர்கள், மார்க்சிய புத்தகத்தின் பெயர் குறிப்பகராதியை படித்துதான் இந்த பட்டியலில் பெயர் சேர்க்கிறார்கள், வரலாற்றை படித்தல்ல என்பது தெரிகிறது....

November 13, 2007 3:16 AM

said...

//அசுரன் said...
இந்த விவாதங்களை இடையிலிருந்து கவனித்து வருகிறேன். ஒரு குறிப்பான விசயத்தில் ஊன்றி விவாதம் செய்து அவர்களது போலி மேதாவித்தனத்தை அம்பலப்படுத்துவதே சரி //

நண்பர் அசுரன்,

நான் விவாதத்துக்கு தயாராகவே இருக்கிறேன்.

தொடரலாமே?

நன்றி

Anonym said...

அன்புள்ள அசுரன், ஸ்டாலின்
நான் பழைய அனானி.
இயங்கியல் என்ற தத்துவப் பார்வையை சமூக மாற்றங்களுக்குப் பொருத்திப் பார்ப்பதில் உள்ள பிரசினைகளை நான் பேசுகிறேன். ஸ்பைரல் வடிவில் இயங்கியல் இருக்கும் என்று நீங்கள் ஜோக் அடிக்கிறீர்கள். குஜராத் , பார்ப்பன பயங்கரவாதம் என்றெல்லாம் எழுதும் போது அதன் மீது மார்க்சிய ஒளியைப் பாய்ச்சுங்கள். என்ன செய்யப் போகிறீர்கள் குஜராத்தில்? இந்துத்துவ வாலிப வயோதிக அன்பர்களே , உங்களுக்கு வன்முறைக்குக் காரணங்கள் வேண்டும். கோத்ரா, ராம ஜன்ம பூமி என்று எப்போதாவது நடக்கும் விஷயத்தை எதிர்பார்க்க வேண்டாம். எங்களுடன் இணைந்து விடுங்கள். வன்முறையே வாழ்க்கை எங்களுக்கு. நீங்கள் செய்த அதே வன்முறைகளை எங்களுடன் இணைந்து செய்தீர்கள் என்றால் உங்களை தண்டிக்க வேண்டும் என்று கொக்கரிக்கிற மனித உரிமை வாதிகள் உங்களுக்காகப் போராடுவார்கள். தெஹல்கா எல்லாம் உங்கள் பின்னால் வராது என்று சொல்லப் போகிறீர்களா? இப்படிச் சொல்லி உங்கள் கட்சிக்கு ஆள் சேர்க்கப் போகிறீர்களா?

வரலாற்றுப் பார்வையில், சமூக மாற்றப் பார்வையில், பொருளாதாரப் பார்வையில் எப்படி மார்க்சியம் என்று நீங்கள் அழைக்கும் தத்துவம் பிழைபட்டது என்று தானே நான் வரிந்து வரிந்து எழுதியிருக்கிறேன். அதன் ஒரு வாதத்தையும் எதிர் கொள்ளாமல், கிளிப்பிள்ளை மாதிரி சொல்வதில் என்ன பயன்? பெரியார் மாதிரி எங்கள் பின்னால் முட்டாள்கள் தான் வரவேண்டும் வெளிப்படையாகவே அறிவித்து விடலாமே.

கம்ப்யூட்டர் யுகத்திலும் மிக அழக்ககப் பொருந்தி வருகிரது என்று வேறு மார்தட்டிக் கொள்கிறீர்கள். எங்கே பொருந்தி வருகிறது? மென்பொருள் எழுதுபவ்ரின் உழைப்பும், மென்பொருளை சந்தையில் விற்பவர் உழைப்பும், மென்பொருள் தகடுகளை பெட்டியில் அடைத்து வைப்பவர்களின் உழைப்பும் ஒன்றே தானா? என்ன உளறல் இது? இதில் என்ன உபரி மதிப்பு எங்கே கிடைக்கிறது?

அரைவேக்காடுகளின் , முட்டாள்களின் கேள்விகளுக்கே உங்களால் பதில் சொல்ல முடியாத போது முழு வேக்காடுகளையும், அறிவாளிகளையும் எப்படி எதிர் கொள்வீர்கள்? விமர்சனம் என்றால் சேறு அடிப்பதா? அதைத்தான் நீங்கள் உங்கள் விமர்சனங்களில் செய்து கொண்டு இருக்கிறீர்களா?
நன்றி
பழைய அனானி.

Anonym said...

Asuran will come and answer.

said...

Thanks Anony

I am waiting.

Anonym said...

They do not have any arguments?

said...

பதிலெழுதிக்கொண்டிருப்பார்கள் என்று கருதுகிறேன்.

Anonym said...

It does not look like it

They are trying to locate the escape hatch