Dienstag, 11. August 2009

மையன்மாரில் ஆங் சான் சூ சியின் காவல் சிறையும், இந்திய கம்யூனிஸ்டுகளின் மவுனமும்

ஒருவரை ஒருவர் போலி கம்யூனிஸ்டுகள் என்று குறை கூறிக்கொண்டு நான் தான் சீனாவின் முதன்மை அடிவருடி என்று போட்டு போடும் எச்சக்கலை கம்யூனிஸ்டுகள் சமீபத்தில் வாய் திறக்காத ஒரு விஷயம் பர்மா என்ற மையன்மாரின் ஆங் சான் சூ சியின் சிறை தண்டனை பற்றிய விஷயம்.

நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுக்கு நான் தான் முதலில் கூஜா தூக்குவேன், அவர்களை நேபாளத்தில் ஆள விட வேண்டும் என்று கொடி பிடிக்கிற சிபிஎம் சிபிஐ, மக இக, மாவோயிஸ்டு நக்ஸலைட்டு ட்யூட்லைட்டுகள் எல்லாம் பர்மா என்று வந்தால் எந்த ஓட்டையை முதலில் அமுக்கு மூடுவது என்று போட்டி போட்டு மூடிக்கொண்டு கிடக்கின்றன.

பாலஸ்தீனத்தில் யாசர் அராபத் எதாவது சொல்லிவிட்டால் துடித்து எழுந்து குரல் கொடுக்கும், கும்மிடிப்பூண்டி கம்யூனிஸ்டுகள், ஆங் சான் சூ சியின் சிறை தண்டனையை பற்றி கருத்து ஏதும் சொல்வதில்லை.

ஈராக்கின் சதாம் உசேன் என்ன, லிபியாவின் முவம்மார் கடாபி என்ன, க்யூபாவின் அண்ணன் தம்பி காஸ்ட்ரோக்கள் என்ன, கொரியாவின் கிம் இல் சுங் காமெடி சர்வாதிகாரிகள் என்ன, சீனாவின் ஹூ ஜிந்தாவ் என்ன என்று உலகின் எல்லா சர்வாதிகாரிகளுக்கும் உடனே கொடி தூக்கும் நம்ம்மூர் கம்மூனிஸ்டுகள், ஆங் சான் சூ சியின் சிறை தண்டனைக்கு ஒன்றும் சொல்வதில்லை.

காரணம் ரொம்ப சிம்பிள். சீனா அதிகாரப்பூர்வமாக பர்மாவின் சர்வாதிகாரிகளை ஆதரிக்கிறது. அவர்களுக்கு பண உதவி ஆயுத உதவி அளித்து அந்த ராணுவ சர்வாதிகாரத்தை தாங்குகிறது. இந்த ஆங் சான் சூ சி விவகாரத்திலும், அவர்கள் மட்டுமே பர்மாவை கண்டிக்கவில்லை என்பதும் வெளிப்படை.

இந்தியாவை துண்டாடுவதற்கு இங்கே பண உதவியும் ஆயுத உதவியும் எச்சில் இலையாக தூக்கிப்போடடிருக்கும் சீனா என்ன சொல்கிறதோ அதற்கு தலையாட்டுவது தானே எச்சக்கலைகளின் கம்யூனிஸ புத்தி?

அதுதான் இங்கே பட்டொளி வீசி பறக்கும் மௌனத்தின் காரணம்.

அதனால்தான் புதிய மக்களாட்சி (அதுதாங்க புதிய ஜனநாயகம்!) பத்திரிக்கையில் ஈழத்தில் தமிழர்கள் சாவதற்கு இந்திய மேலாதிக்கம்(!!!)தான் காரணம் என்று ஒருவார்த்தை கூட ஆயுதங்களையும் பணத்தையும் அள்ளிக்கொடுத்த சீனாவை பற்றி எழுதாமல் எழுதுவதன் ரகசியம்!

சீன தேசியத்தால் காயடிக்கப்பட்ட மருதய்யர்களும் பிரகாஷ் காரத்துகளும் இந்து என் ராம்களும் சீனா தூக்கி எறியும் எச்சில் இலைகளை நக்குவதை சற்று .. ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு... மூளையை கசக்கி யோசிக்க வேண்டும்.

இவ்வளவு பச்சையாகவா உங்களை எச்சக்கலை பொறுக்கிகள் என்று காட்டிக்கொள்ள வேண்டும்? கொஞ்சம் நாசூக்காக செய்யக்கூடாதா?

4 Comments:

நண்பன் said...

இவ்வளவு கேவளமான முறையில் திட்டி எழுதுவதால் நீங்கள் மற்றும் உங்களது அபிமான பதிவாளர்கள்தான் உங்களை மெச்சிக்கொள்ள முடியும். வார்த்தைகளை கொஞ்சமாவது அளந்து எழுதினால்தானே எதிர் தரப்பு பதிவர்கள் தங்கள் கருத்தினால் வாதாட வருவார்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களை சீண்டிக்கூட பார்க்கமாட்டார்கள்.

சொல்ல வந்ததை கன்னியமான முறையில் சொல்லிவிட்டு போங்கள். இத்தனைக்கும் உங்கள் பதிவில் வாதிக்கப்பட வேண்டிய ஆழக்கருத்துக்கள் நிறையவே இருக்கின்றன.

நன்றி.

said...

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பன்.

ஆனால் இதில் விவாதிக்க ஒன்றுமில்லை.

தெரிந்துகொள்ளவேண்டியதுதான் இருக்கிறது.

அவர்கள் என்ன நாகரிகமாக எழுதினாலும் விவாதிக்க வரமாட்டார்கள்.

காரணம் வெளிப்படை.

ரகுவீர் said...

தமிழ்,

கடுமையான பதில் அல்ல இது.
இதே மொழியில்தான் கம்யூனிஸ்டு மாவோயிஸ்டு கும்பல் எழுதுகிறது. அதே மருந்தை அவர்களுக்கு தருகிறீர்கள்.

ஆனால், இது அவர்கள் எழுதுவதை விட உண்மை நிறைந்தது.

நன்றி

said...

Thanks Raguvir
Even now that is their language.