Freitag, 17. Oktober 2008

அறிவியல் முறையும் கம்யூனிஸ முறையும்எதிரே இருக்கும் facts களை எல்லாவற்றையும் - முக்கியமான வார்த்தை எல்லாவற்றையும்- எடுத்துக் கொண்டு அவைகளை வைத்து முடிவுக்கு வருவது அறிவியல் முறை.

ஆனால், கம்யூனிஸ, கிறிஸ்துவ, இஸ்லாமிய முறை என்பது வேறுவிதமானது.

இங்கே முடிவு முன்னாலேயே சொல்லப்பட்டுவிட்டது. ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு வேத புத்தகம், ஒரு தீர்க்கதரிசி. இஸ்லாமுக்கு குரான், குரான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. நபிகள் நாயகம் எல்லாவற்றையும் சொல்லித்தந்துவிட்டார். இனி நாம் அது படி நடப்பதுதான் பாக்கி. இறுதித்தீர்ப்பு நாளுக்காக காத்திருந்து சுவனம் செல்லவேண்டும். முஸ்லீம்களை சுவனத்துக்கு அழைத்துச்செல்வார். மற்றவர்களை சுடும் எண்ணெயில் வறுத்தெடுப்பார்.

கிறிஸ்துவர்களுக்கு பைபிள், இயேசு கிறிஸ்து. இறுதித்தீர்ப்பு நாளுக்காக காத்திருக்கவேண்டும். கிறிஸ்துவர்கள் எல்லோரையும் சொர்க்க பூமிக்கு அழைத்துசெல்வார். மற்றவர்களை சுட்டு பொசுக்குவார்.

கம்யூனிஸ்டுகளுக்கு தாஸ் காபிடல், கார்ல் மார்க்ஸ். இறுதியில் கம்யூனிஸ பொன்னுலகம் பூக்கும். அந்த நாளுக்காக இன்று பழையவற்றையெல்லாம் சுட்டு பொசுக்கி, நாமும் தியாகம் செய்து புரட்சி செய்யவேண்டும். வர்க்க எதிரிகள் எல்லோரும் கொல்லப்படுவார்கள். உண்மையான கம்யூனிஸ தோழர்கள் பொன்னுலகை காண்பார்கள், அல்லது பொன்னுலகுக்காக தியாகம் செய்வார்கள். அவர்களை உழைக்கும் பாட்டாளி வர்க்கம் போற்றும்.

ஆகவே இவர்களுக்கு ஏற்கெனவே முடிவு எழுதப்பட்டுவிட்டது. இனி இந்த முடிவுக்கு ஒப்பாக factகளை தேடி பொருத்தி பிரச்சாரம் செய்யவேண்டியதுதான் பாக்கி.

இவர்களிடம் எந்த அளவுக்கு இப்படி ஒரு விஷயம் இருக்கிறதே, அல்லது அப்படி ஒன்று நடந்ததே என்று கேட்க முடியாது. பைபிளில் உலகம் தட்டை என்று சொல்கிறதே என்று கேட்க முடியாது. தாஸ் காபிடல் சிந்திக்காத சிந்திக்க முடியாத விஷயங்கள் கூட இன்றைய உலகத்தில் உள்ளதே, ஓப்பன் சோர்ஸ் மூலம் பணம் பண்னக்கூடிய காலம் வருகிறதே. இது என்ன மாதிரி கேப்பிடலிஸம் என்றெல்லாம் கேட்க முடியாது. ஏன் ஓப்பன் சோர்ஸ் கூட கேபிடலிஸம் என்று நீங்கள் திட்டும் நாடுகளில்தான் உருவானது, ஏன் சோசலிஸ நாடுகளில் உருவாகவில்லை என்று கேட்கமுடியாது. ஏன் கார்ல் மார்க்ஸ் இனவெறியோடு கறுப்பினத்தவரை கேவலமாக எழுதியிருக்கிறார் என்று கேட்க முடியாது. ஏன் எங்கல்ஸ் வெள்ளை இனவெறியராக இருக்கிறார் என்று கேட்கமுடியாது. ஏன் கியூபாவின் சொந்தக்காரன் போல பிடல் கேஸ்ற்றோ சொந்த தம்பிக்கு கியூபாவை தாரை வார்த்தான் என்று கேட்க முடியாது. சே மாதிரி ஆட்கள் தியாகம் பண்ணினால்தான் பிடல் தன் தம்பிக்கு தாரை வார்க்க முடியும். அதனை கியூபா மக்கள் கேள்வி கேட்கவும் முடியாது. அதற்கும் இந்திய அரசியல்வாதிகள் தங்களது போராட்டங்களில் இறப்பவர்களை பூவுடல் நீத்து புகழுடம்பு எய்தினார்கள் என்று பாராட்டி போற்றி அதன் மூலம் அடையும் அரசியல் லாபங்களை தங்கள் சொந்த பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு போவதற்கும் என்ன வித்தியாசம்? குறைந்தது இந்தியாவில் அதனை கேள்வி கேட்கலாம், கிண்டல் செய்யலாம், எதிர்த்து ஊர்வலம் கூட போகலாம். போடா என்று வேறொரு கட்சிக்கு ஓட்டுக்கூட போடலாம். கியூபாவில் என்ன முடியும்?

கேள்வி கேட்டால் நீ விரோதி, கடவுள் சொன்ன வார்த்தையை நம்பாதவன், வர்க்க எதிரி, இது மாதிரி ஏதாவது ஒரு வசை வார்த்தை விழும்.

மிகவும் புத்திசாலியான பலர் இந்த மாயையில் விழுந்துவிடுகிறார்கள். (நானே ஒருகாலத்தில் அப்படித்தான் இருந்தேன்)

படித்து புரிந்துகொள்ளக்கூடியவர்கள் கூட ஸ்டாலின், லெனின் என்று உளறும்போது பரிதாபமாகவே இருக்கிறது.

இவர்களிடம் என்ன சொன்னாலும் எடுபடப்போவதில்லை. பட்டு அறிந்து வெளியே வரும்போது, இதனால் வீணாய்ப்போன காலங்கள் சுடும்.

3 Comments:

Anonym said...

//அதற்கும் இந்திய அரசியல்வாதிகள் தங்களது போராட்டங்களில் இறப்பவர்களை பூவுடல் நீத்து புகழுடம்பு எய்தினார்கள் என்று பாராட்டி போற்றி அதன் மூலம் அடையும் அரசியல் லாபங்களை தங்கள் சொந்த பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு போவதற்கும் என்ன வித்தியாசம்? //

நல்லா குத்துறீங்க.

மரத்தமிழர்களுக்கு புரியுமா என்றுதான் தெரியவில்லை.

said...

புரியும்,
புரிய வேண்டும்

நன்றி அனானி
வருகைக்கும் கருத்துக்கும்

said...

Pls see this panbudan thread for an excellent and lenghty debate with Comrade Jamalan

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/a8fe1f37bbfb6912?pli=1