Montag, 6. Oktober 2008

தமிழில் வரும் பிராவ்தா பத்திரிக்கை

தீக்கதிரின் தலையங்கம்.

டாடா தொழிற்சாலை வங்காளத்திலிருந்து வெளியேறுவதற்கு மம்தா பானர்ஜிதான் பொறுப்பேற்கவேண்டும் என்று தீக்கதிரில் வந்த தலையங்கம் இது.


பொறுப்பற்றவர்களே பொறுப்பேற்க வேண்டும்
மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் அமைய விருந்த நானோ கார் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றப்போவதாக டாடா நிறுவன உரி மையாளர் ரத்தன் டாடா அறிவித்துள்ளார். புத்த தேவ் பட்டாச்சார்யா தலைமையிலான இடது முன் னணி அரசு சிங்கூரில் இந்த தொழிற்சாலை அமைய அரும்பாடுபட்டது. ஆனால் மம்தா பானர்ஜி தலைமையிலான சீர்குலைவு கும்பலின் அடாவடி, அராஜகம், அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றின் காரணமாக மாநிலத்தின் தொழில் வளர்ச்சியின் ஒரு அங்கமாக அமையவிருந்த ஒரு அருமையான திட்டம் கைநழுவிப்போயுள்ளது.


ஏனுங்க, மற்ற மாநிலத்தில் தொழில் வளர்ச்சி நடந்தால் முட்டுக்கட்டை போடுவீர்கள். தொழிற்சாலை என்றாலே தொழிலதிபர்கள் ஓடவேண்டும் என்ற அளவுக்கு காலியில் ஸ்ற்றைக் மத்தியானம் ஹர்த்தால் என்று பண்ணுவீர்கள். அதெல்லாம் சரி, ஆனால், நீங்கள் ஆளும் மாநிலத்தில் மட்டும் யாரும் எதிர்கருத்து கூறக்கூடாதா?

உங்கள் மாநிலத்தில் தொழிற்சாலை துவங்கினால் அது அருமையான திட்டம், மற்ற மாநிலத்தில் துவங்கினால், தொழிலாளர் வயிற்றில் அடிக்க துவங்கிய திட்டமா?

நீங்கள் செய்தால் புரட்சி, மம்தா பானர்ஜி செய்தால் சீர்குலைவு கும்பலா?

மம்தா பானர்ஜி உங்களுக்கு ஆப்படிக்கும் போது எப்படி இருக்கிறது உங்களுக்கு?

அது மாதிரிதானே மற்ற மாநிலங்களில் தொழில்துவங்க முயற்சி செய்யும்போதெல்லாம் தகறாறு செய்யும் உங்களை பார்த்து மற்றவர்களுக்கு தோணும்?

தெரியுதா?

தங்களது இந்த முடிவுக்கு மாநில அரசு எந்த வகையிலும் காரணமல்ல என்றும் மம்தா பானர்ஜி யின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கலவ ரமே இந்த முடிவுக்கு காரணம் என்றும் ரத்தன் டாடா தெளிவுபடுத்தியுள்ளார். மாநில முதல்வரும் அரசும் தொழிற்சாலை அமைய அனைத்து வகை யிலும் உறுதுணையாக இருந்ததையும் டாடா உறுதி செய்துள்ளார்.


அடக்கூமுட்டையே! நீங்கள் சொல்லச்சொன்னதை அவர் சொல்லியிருக்கிறார். மவனே நீ வெளியில் போனாலும் எனக்கு ஆதரவாக சொல்லிவிட்டு போ என்று சொல்லியிருப்பீர்கள். அவர் சொல்லுகிறார்.

இருந்தாலும் அவர் சொன்னது உண்மைதான். டாடாவுக்கு தொழிற்சாலை வைக்க உறுதுணையாகத்தான் இருந்திருப்பீர்கள். அதனை மம்தா பானர்ஜி கெடுத்தார் என்பது உண்மைதான்.

இந்திய வரலாற்றில் ஒரு இணையற்ற சாத னையாக மக்களின் பேராதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தலைமையிலான இடது முன் னணி அரசு 1977 துவங்கி இன்று வரை தொடர்ந்து ஆட்சி புரிந்து வருகிறது. தீவிர நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக விவசா யத்துறை உற்பத்தியில் நாட்டின் முதல் மாநிலங் களில் ஒன்றாக மேற்குவங்கம் மாறியுள்ளது. விவ சாயத்துறை வளர்ச்சியில் அதிகபட்ச நிலையை எட்டிவிட்டதால் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


முதல்மாநிலங்களில் ஒன்றாகவா? ஏன் முதல் மாநிலமாக இல்லை? ஏன் முதல்மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது?

விவசாயத்துறை அதிகபட்ச நிலையை எட்டிவிட்டதா? எப்படி கண்டுபிடித்தீர்கள்?
திடீரென்று போலிட்பரோவில் முடிவு செய்தீர்களா?
திடீரென்று தொழில்வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் என்ன? அதற்கு டாடாவை அழைக்கவேண்டிய அவசியம் என்ன?
எல்லா தொழிலாளர்களும் காசு போட்டு தொழிற்சாலையை உருவாக்கவேண்டியதுதானே? யார் தடுக்கிறார்கள்?

கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி செய்வதால்தான் மேற்கு வங்கத்தில் தொழில்வளர்ச்சி இல்லை என்று எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பிவந்தன. ஆனால் தொழில் முதலீட்டுக்கான முயற்சிகளை இடதுமுன்னணி அரசு மேற்கொண்ட உடனேயே பீதியடைந்த திரிணாமுல் உள்ளிட்ட சீர்குலைவு கும்பல் பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்ப டுத்த துவங்கியுள்ளது. நந்திகிராமத்தில் வலதுசாரி பிற்போக்கு சக்தியான திரிணாமுல் காங்கிரஸ் துவங்கி, மதவெறி பாஜக, காங்கிரஸ், விரக்தி யடைந்துள்ள தீவிரவாத கும்பல்கள் என அனை வரும் கைகோர்த்து நடத்திய அட்டூழியங்களை நாடறியும்.


அவதூறா? அது உண்மை அய்யா.

1960இல் இந்தியாவிலேயெ மிக அதிகமாக தொழிற்சாலைகள் இருந்த மாநிலம் மேற்குவங்காளம்.
இப்போது இந்தியாவிலேயே மிகவும் தொழிற்சாலைகள் குறைவாக உள்ள (பெரிய மாநிலங்களில் ... கோவா சிக்கிம் என்று ஆரம்பிக்க வேண்டாம்) ஒன்று மேற்குவங்காளம்.

சாதனையில் திருப்திதானே?


சிங்கூர் கார் தொழிற்சாலை திட்டத்தை சீர்குலைக்கவும் மம்தா கும்பல் தொடர்ந்து சதிச் செயல்களில் ஈடுபட்டது. சிங்கூரில் கார் தொழிற் சாலை அமைக்க 997.11 ஏக்கர் நிலம் ஒதுக்கப் பட்டது. பல மாநிலங்களில் ஆயிரமாயிரம் ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு கம்பெனிகள் வாங்கி குவிக்கும் நிலையில் சிங்கூரில் அரசாங்கமே நேரடியாக நிலத்தை விவசாயிகளிடமிருந்து வாங்கி டாடா நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு தர முடிவு செய்தது. முன்னெப்போதும் இல்லாத நிலையில் நில உரிமையாளர்களுக்கு மட்டுமின்றி குத்தகைதாரர்களுக்கும் உரிய இழப்பீடு வழங் கப்பட்டது. நிலமளித்தவர்களுக்கு டாடா நிறு வனத்தில் வேலைவாய்ப்பு கிடைப்பதும் உத்தர வாதம் செய்யப்பட்டது.


இருந்தும் ஏன் நம்பவில்லை? நீங்கள் போராடினால் அது பிரட்சி. மற்றவர்கள் போராடினால் அது சீர்குலைவா? என்னடா கூத்து?

இதே வேலை, கர்னாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக நடைபெறும்போது ஏன் மேற்குவங்காளத்தில் மட்டும் செய்யமுடியவில்லை?

காரணம் உங்களுடைய குண்டர் படை. சிபிஎம்மை மக்கள் எதிர்ப்பதா? கொன்றுவிடுவதில்லை என்று வீறு கொண்டு எழுந்த உங்கள் செம்படை என்ற படைசொறி சிரங்கு.

மம்தா பானர்ஜி டாடாவை எதிர்க்கவில்லை என்று பலமுறை சொல்லிவிட்டார். உங்கள் குண்டர்கள் பண்ணும் அட்டூழியமே காரணம் என்று வங்காள அறிவுஜீவிகளே சொல்லிவிட்டார்கள்.

கையகப்படுத்தப்பட்ட 997 ஏக்கர் நிலத்தில் 992 ஏக்கர் நிலப்பரப்பை 12 ஆயிரம் விவசாயிகள் மனப்பூர்வமாக உரிய இழப்பீடு பெற்றுக் கொண்டு அரசுக்கு எழுதிக் கொடுத்தனர். மீதமுள்ள சிறு பகுதி நிலம் தொடர்பாகவே சர்ச்சை இருந்தது. அதையும் கூட சட்டப்பூர்வமாக சரிசெய்ய மாநில அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது.


மனப்பூர்வமாகவா? அதெப்படி? சோவியத் ஸ்டைல் மனப்பூர்வமா? இருக்கும் இருக்கும்!


ஆனால் இடதுமுன்னணி ஆட்சியில் மேற்கு வங்கம் தொழில்வளர்ச்சி அடையக்கூடாது என்ற கேடுகெட்ட எண்ணத்தின் காரணமாக இல்லாத பிரச்சனையை மம்தா கூட்டம் ஊதிப்பெரிதாக்கி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது.


ஹா ஹா. எப்படி இருக்கிறது உங்களுக்கு? இதே வேலையைத்தானே எல்லாவற்றிலும் செய்கிறீர்கள். அணுமின்சார அணு உலையிலிருந்து டைட்டானியம் தொழிற்சாலை வரைக்கும் இதே தானே நட்க்கிறது? நீங்கள் செய்தால் புரட்சி மற்றவர்கள் செய்தால் சீர்குலைவா?


இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக் கும் வகையில் அமையவிருந்த சிங்கூர் தொழிற் சாலை முடங்கிப்போனதற்கு மேற்குவங்கத்தின் வளர்ச்சியை விரும்பாத மம்தா உள்ளிட்ட எதிர்க் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும். தொழில் வளர்ச்சி என்று வாய்கிழிய பேசுகிற காங்கிரசார் மம்தாவின் சீர்குலைவு முயற்சிகளுக்கு மறைமுக மாக துணைநின்றனர். பாஜகவும் மம்தாவுக்கு பக்க பலமாக நின்றது.


மம்தா சந்தொஷமாக ஏற்றுக்கொண்டுவிட்டார். அதனை வைத்து அவரை அடுத்த தேர்தலிலும் தோற்கடியுங்கள்.. ஓ அதுவெல்லாம் வேணாமே! குண்டர்களை வைத்து கள்ள ஓட்டு போட்டால் மக்கள் மனப்பூர்வமாக வழக்கம்போல உங்களை தேர்ந்தெடுத்துவிடுவார்கள் இல்லையா?


இப்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு மாநில அரசை மம்தா கட்சி, காங்கிரஸ் , பாஜக போன்ற கட்சிகள் குறைகூறுவது அப்பட்டமான கயமைத் தனமாகும். இடதுமுன்னணி அரசு மக்களிடம் எதையும் மறைக்கவில்லை. நடந்தது அனைத் தையும் மேற்குவங்க மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல் முதிர்ச்சி மிக்க மேற்குவங்க மக்கள் இந்த சீரழிவு கும்பலை நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்.



அதே போல நிரந்தர சீரழிவு கும்பலான கம்யூனிஸ்டுகளை என்றென்றும் மறக்கக்கூடாது என்பதுதான் என் ஆசையும்.

3 Comments:

Anonym said...

நடத்துங்கள்.
இதற்கு சந்திப்பு பதில் எழுதுவார்.

Anonym said...

Good one

said...

நன்றி