Dienstag, 15. Juli 2008

பீப்பிள்ஸ் டெமாக்ரஸி மொந்தையில் புதிய கலாச்சார கள்ளுதான். ஒரே துரோகம்தான்

பீப்பிள்ஸ் டிமாக்ரஸி என்ற சிபிஎம் பத்திரிக்கையில் வந்த தலையங்கத்தை நண்பர் வீரமணி தமிழில் மொழிபெயர்த்ததை நண்பர் சந்திப்பு தன் பதிவில் பதிந்துள்ளார்.

அவருக்கு நன்றிகள்.

அதன் விமர்சனத்தை இங்கே எழுதுகிறேன்.

விமரிசனம் என்றதும் இதற்காக புதியதாக எழுத வேண்டுமா என்று யோசித்தேன். பிறகு படித்து பார்த்தால் ஏற்கெனவே மருதைய்யர் நடத்தும் புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரைக்கு பதில் எழுதியாயிற்று என்று கண்டுபிடித்தேன். இரண்டும் ஒரே அச்சில் வார்த்த கட்டுரைகள். ஒரே கம்யூனிஸ்டு கட்சி. ஒரே துரோகம், ஒரே பதில். புதிய கலாச்சார மொந்தையில் பீப்பிள்ஸ் டெமாக்ரஸி பழைய கள்ளுதான்.

http://santhipu.blogspot.com/2008/06/blog-post.html
யாருக்கு வால் பிடிக்க இடதுசாரிகள் மீது பாய்வது!

இந்திய - அமெரிக்க இராணுவம் சாரா அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்ப தற்காக, இடதுசாரிகள் மீது, அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது சேற்றை வாரி வீசுவதென்பது ஓர் உச்சநிலைக்கு வந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஊதுகுழலாகச் செயல்படுபவர்கள் மற்றும் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகப் பொய் யும் புனைசுருட்டும் கலந்து மிகவும் கீழ்த்தரமான தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ் வாறான இழிவான பிரச்சாரத்தில் கடை சியாக வந்திருப்பது, பாகிஸ்தானில் இந்தியாவின் ஹை கமிஷனராக இருந்த ஜி. பார்த்தசாரதி கட்டுரையாகும். இவர் 2008 ஜூன் 9, ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’, நாளிதழில் ‘ரெட் ஸ்டார் ஓவர் சவுத் பிளாக்’ (சவுத் பிளாக்- புதுடில்லி யில் பிரதமர் அலுவலகமும், பாதுகாப்புத் துறை அலுவலகமும் இயங்கும் இடம்) என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டு ரையில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முட்டுக்கட்டை போட் டுக் கொண்டிருப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது மிகவும் கீழ்த்தர மான முறையில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். அவருடைய அவதூறின் அடிநாதமாக இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘இந்தியாவை சீனாவின் சார்பு நாடாக மாற்ற உறுதி பூண்டி ருக்கிறது’ என்பதாகும்.


இல்லை. சீனாவின் அடிமை நாடாக இந்தியாவை ஆக்க கம்யூனிஸ்டுகள் உறுதி பூண்டுள்ளனர் என்றுதான் எல்லோரும் புரிந்துகொள்கிறோம்.

மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக இவ்வாறான தாக்குதல்கள் இதற்கு முன்பும் வந்திருக்கின்றன. மார்க்சிஸ்ட் கட் சிக்கு எதிராக எழுதிக்கொண்டே, இந்திய ஆளும் வர்க்கங்களையும் அ-ரிக்க ஏகாதிபத்தியத்தையும் துதி பாடு பவர்களுக்கு, பிற்போக்கு சக்திகளிடமிருந்தும், கணிசமான அளவில் ஆதாயம் வருவதால், இவ்வாறு கூலிக்கு மாரடிக் கும் கூட்டம் தொடர்ந்து நம்மீது அவ தூறை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்று மில்லை. “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் நலன்களுக்காகவே செயல்படுகிறது” என்று கூட ஓய்வு பெற்ற இந்திய உளவு ஸ்தாபன அதிகாரி ஒருவர் மார்க்சிஸ்ட் கட்சி மீது வசைமாரி பொழிந்திருந்தார். (‘இந்துஸ்தான் டைம்ஸ்’ 2007 ஆகஸ்ட் 21 நாளிதழில் பி.ராமன் என்பவர் ‘மஞ்சூரியன் வேட் பாளர்கள்’ என்ற தலைப்பிலான கட்டுரையில்) மேற்படி கட்டுரையில் அந்தப் பேர்வழி, ‘‘மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் தற்போதைய ஐ.மு.கூட்டணி அர சாங்கத்தை நிர்ப்பந்தித்து ஆயிரம் சீனப் பொறியாளர்களுக்கு விசா வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்’’ என்று அபாண்டமான முறையில் கட்சி மீது குற்றச்சாட்டுகளை ஏவியிருக்கிறார். அவ்வாறு அவர் எழுதியதற்கு ஒரு மயி ரிழை ஆதாரத்தைக் கூட காட்டவில்லை, காட்ட வேண்டும் என்று கருதவும் இல்லை. இத்தகைய பேர்வழிகளின் கூடார மாக நம் உளவு ஸ்தாபனங்கள் கடந்த காலங்களில் விளங்கியதால்தான், இந்தியா ஒரு பிரதமரை இழந்தது, ஒரு முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் பேர்வழி இப்போது ஓய்வு பெற்று விட்டார். ஆயினும் இவ்வாறு நம் மீது சேற்றை அள்ளிவீசுவதன் மூலம், ஓய்வுக் காலத்தில் மிகவும் சுகபோகத்தில் திளைக்க வாய்ப்புகள் தன்னைத் தேடி வரலாம் என்ற நப்பாசை இவருக்கு இருக்கக் கூடும். இதேபோன்ற குற்றச்சாட்டுகளை நம்மீது சுமத்துவதற்கு இந்திய கார்ப்ப ரேட் நிறுவனங்களும் இப்போது முன்வந் துள்ளன. பிக்கி (FICCI) பொதுச்செய லாளர், டாக்டர் அமித் மித்ரா, தி டைம்ஸ் ஆப் இந்தியா, 2008 ஏப்ரல் 10 நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில், இதேபோன்ற குற்றச் சாட்டுகளை அள்ளிவீசியிருக்கிறார்.


நன்றாக கவனித்து பார்த்தீர்கள் என்றால், அந்த குற்றச்சாட்டோடு ஆதாரங்களும் அளிக்கப்பட்டுள்ளன என்பதும் தெரியும்.

உதாரணத்துக்கு காரத் கூறியது இது.

Indo-US ties anti-China, so we will oppose: Karat
Friday November 2 2007 00:00 IST

KOLKATA: The CPM vowed to oppose a strategic alliance between India and the United States saying such a move is aimed at countering China.

''We shall not rest in our fight till the strategic ties with the US is snapped out,'' Karat said speaking at a CPM-sponsored programme to celebrate October Revolution day in Kolkata.

He said the US was trying to make India its strategic ally in countering China, "the most powerful socialist country capable of challenging the might of the USA".

''USA has also changed its tactics of making Pakistan its strategic ally as it has now realised that if it can get India as a strategic ally, the balance will be tilted in favour of imperialism and neo-colonialism'', he said.

Karat said that people of India would fight against imperialism ‘'and cannot accept the design to convert us as a subordinate ally of the US’.

The strategic document of the US administration recognised China as a major threat to the US hegemony, Karat said.

India, with its potential for development, ‘is preferred as an ideal ally of the US. If it can get India as its ally, it can be a big game for the imperialists’, the CPM leader said.

''India is a prize for the US and not Pakistan because of its market. Developed India can be useful for counter-balancing China. This is a game the US is trying to play which has to be foiled'', he said.

The CPM general secretary said Latin American and socialist countries were looking to India for the fight against imperialism as India had a past record to fight colonialism during the Independence movement.

''When Bush administration is threatening that the Third World war will be waged against Iran for its challenge against the US might, the Indian government remained silent and that is surprising'', he said.

There was continuous threat and intimidation to Iran by Washington. ''It is regrettable that there was no word of protest against the USA''.

The ruling class in India, he said, believed that there would be development if India be on the right side of the USA.

''West Bengal is the advanced post for the fight against imperialism and in the coming days, it will continue to put up its resistance", he said.

Throughout his speech, Karat made no reference to the Indo-US nuclear deal issue.

போதுமா?

இவை அனைத்துமே கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருப்பதால், இவர்கள் நம்மீது வீசியுள்ள குற்றச்சாட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பரிசீலிப் போம். முதலில் சீனாவிற்கு ஆதரவாகத் தான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு கொடுத்து வருகிறோம் என்பதை எடுத்துக்கொள்வோம். கட்சி உருவான, முதல் இருபதாண் டுகளில், உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை எதிர்த்தன என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான வரலாறு தெரிந்த அனைவருக்கும் தெரி யும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைத் திசைவழிகள், நாட்டு நலனுக்கும் நாட்டு மக்களின் நலன்களுக்கும் எது சரியென்று உணர்கிறதோ அதன் அடிப்படையில்தான் எப்போதுமே தீர்மானிக்கப்பட்டு வந்திருக்கின்றன. எனவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடிகளில் இந்தியாவின் இறையாண்மையை சரண் செய்திட ஆவலுடன் துடித்துக் கொண்டிருக்கும் பேர்வழி கள், நாட்டுப்பற்று குறித்து நமக்குச் சான்றிதழ் வழங்குவதிலிருந்தும், நமக்கு தேவையற்ற முறையில் அறிவுரை வழங் குவதிலிருந்தும் தங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. நம்மீது பழிதூற்றுவோர் உண்மையிலேயே யோக்கியமானவர்களாக இருப்பின், நாம் வைத்திடும் விமர்சனங்களுக்கு நேர்மையான முறையில் பதில் கூற வேண்டுமேயொழிய, நய வஞ்சக வேலைகளில் ஈடுபடக்கூடாது.


நயவஞ்சக துரோக வெலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் நீங்கள்தாம். இந்த விமர்சனம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இங்கும் கேள்விகள் உள்ளன. அதற்கு சந்திப்போ அல்லது வேறு யாருமோ கூட பதிலளிக்கலாம்.

இந்தியாவின் அணுசக்தி இராணுவ வல்லமையை மட்டுப்படுத்திட செய்திடும் எந்த முயற்சியும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கே மிகப்பெரிய அளவில் உதவிடும் என்று ஆவேசமாக அவர்க ளால் வாதிடப்படுகிறது.


உண்மைதான்.

இந்திய - அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை தீவிர மாக ஆதரித்து நிற்போர், அவ்வாறு செய்வதன் மூலமாக நம் அண்டை நாட் டுக் காரர்களுக்குத்தான் அனுகூலத்தை அளித்திட விரும்புகிறார்கள் என்று நாம் அவர்களுக்கு எதிராகத் திருப்பிக் கேட் கலாமா? இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்ப வர்கள்தான் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் கட்டளைக்கிணங்க செயல்படுகிறார்கள் என்று நாமும் குற்றம் சுமத்த முடியும்.


அப்படியா? எப்படி? எனக்கு சுத்தமாக புரியவில்லை. இந்தியா அணுகுண்டு வெடித்தபோது கூக்குரலிட்டு ஒப்பாரி வைத்தவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்த அணுசக்தி ஒப்பந்தம் அந்த அணுகுண்டு வெடிப்பினால்தான் சாத்தியாகி உள்ளது. தற்போது மிக அதிகமாக வலிமையுடன் இந்தியா இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வது அவ்வாறு அணுகுண்டு வெடித்ததன் மூலமாகவும் சாத்தியமாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும், பாகிஸ்தானுக்கும் கொடுக்கப்படவில்லை என்பதும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

இத்தகைய அவதூறுப் பிரச்சாரம் அன்னியில், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதன் மூலம் நாம் இந்தியாவின் எரிசக்தி வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருக் கிறோம் என்றும் நம்மீது குற்றம் சுமத்தப் படுகிறது.


ஆமாம் அதனைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

குறிப்பாக, உலக அளவில் எண்ணெய் விலைகள் வானத்தை நோக்கி உயர உயரப் போய்க்கொண் டிருக்கும் சமயத்தில்தான் இவ்வாறு குற்றம் சுமத்தப்படுகிறது.

ஆமாம் அதனால்தான் இந்த ஒப்பந்தம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது

ஆயினும், கீழ்க்கண்ட உண்மைகளைச் சற்றே பரி சீலனை செய்திடுங்கள். இந்தியாவின் தற்போதைய மின் உற்பத்தியின் அளவு 127 ஜிகா வாட்ஸ்களாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்போதைய வளர்ச்சிவிகிதத்தின்படி, இது 2016-17 வாக்கில் 337 ஜிகா வாட்ஸ்களாக வளரவேண்டியது அவசியம். இதனை நாம் எய்திடாவிட்டால், இந்தியாவில் போடப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் கடுமையாக சுருக்கப்பட வேண்டியிருக் கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆயினும் அணுசக்தி மூலம் மின் உற்பத் தியை விரிவாக்கம் செய்திடுவதுதான் சிறந்ததோர் வழியா என்பதே நாம் முன்வைத்திடும் கேள்வியாகும்.2006இல் அணுசக்தி மூலம் 3.9 ஜிகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யப் பட்டது. இது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 3 சதவீதமாகும். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறை வேறி, அமல்படுத்தப்பட்டால், இவ்வாறு அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வ தென்பது 2016 வாக்கில் அதிகபட்சமாக 20 ஜிகா வாட்ஸ் இருந்திடலாம் அல்லது நம் நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள மொத்த மின் உற்பத்தியில் 6 சதவீதத்திற்கும் சற்றுக் கூடுதலாக இது அமைந்திடலாம்.


அதெப்படி புதிய கலாச்சாரமும் பீப்பீள்ஸ் டெமாக்ரஸியும் ஒரே பல்லவி பாடுகிறீர்கள்?


மேலும், அணுசக்தி மூலம் மின் உற் பத்தி செய்வது சிக்கனமானதா? நிச்சயமாகக் இல்லை. மாறாக இது தான் மிகவும் செலவுபிடிக்கக்கூடியது. நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுவது டன் ஒப்பிடுகையில், அதைவிட ஒன் றரை மடங்கு செலவு பிடிக்கக்கூடியது. எரிவாயு மூலமாக மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தியோடு ஒப்பிட்டால், அணு சக்தி மூலமான மின் உற்பத்தி இரு மடங்கு செலவு பிடிக்கக்கூடியது. இதேபோன்றதுதான் நீர் மின் உற்பத்தி செலவினமும். இந்தியாவில் நிலக்கரி இருப்பு அபரிமிதமான அளவில் இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்தி யாவில் அனல் மின்சார உற்பத்தி முறை தான் மின் உற்பத்திக்கு மிகச்சிறந்த முறை என்று திட்டக் கமிஷன் மதிப்பிட் டிருக்கிறது. நீர்மின் உற்பத்தியைப் பொறுத்த வரை நாட்டில் சுமார் 150 ஜிகாவாட்ஸ் அளவிற்கு மின் உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றுள்ள போதிலும், 2006இல் 33 ஜிகாவாட்ஸ் உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்குத்தான் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின் றன. கூடுதலாக, மேலும் 55 ஆயிரம் மெகா வாட் நேபாளம் மற்றும் பூடானி லிருந்து நாம் இறக்குமதி செய்திட முடி யும்.


இதற்கு பதில் முன்பு புதிய காலக்கேடுவுக்கு எழுதிய பதிலில் உள்ளது.

இவ்வாறு நீர் மின் உற்பத்தியை அதிகப் படுத்துவதன் மூலமாக, அணு சக்தி மூலம் மின் உற்பத்தி செய்திடும் செலவினத்தில் பாதியளவு மட்டும் செலவு செய்து, நம்முடைய எரிசக்திக் கொள்ள ளவை அதிகரித்திடலாம் என்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வோராண்டும் ஆயி ரக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கும் ஆறுகளின் ஆக்ரோஷத் தையும் பணிய வைத்து வசப்படுத்திட முடியும்.


சுத்தமாக நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்பவர்கள் கம்னீஸ்டுகள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்தியாவில் எங்கு அணை கட்டினாலும், எரி மின்சார நிலையம் வைத்தாலும் அங்கு எப்பாடு பட்டாவது எதிர்த்து பொய் புரளி செய்து ஒழிப்பதே ஒரே வேலையாக இருக்கும் கம்யூனிஸ்டுகள், எரிமின்சார நிலையம் வைக்கவும், நீர் மின்சார நிலையம் வைக்கவும் இப்போது பரிந்துரைக்கிறார்களாம்.

தூ..

இவ்வாறாக, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமானது இந்தியா வின் எரிசக்தி வள ஆதாரங்களை அதி கரித்திட உதவும் என்கிற அரசுத்தரப்பு வாதத்தில் பசையேதும் இல்லாததால் அதனை ஏற்றுக்கொள்வதற்கில்லை. இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந் தம் நிறைவேறினால், அணு ஈனுலை களை வாங்குவதற்காக, அமெரிக்க நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியா அளித்திட வேண்டும்.


எதுவும் ஓசியில் வராது. இதுஒரு வியாபாரம். அணு உலைகளை அமெரிக்க கம்பெனிகளும் பிரஞ்சு கம்பெனிகளும் இந்தியாவில் விற்க, அரசாங்கம் தகுந்த அணுப்பரவல் தடுப்பு ஏற்பாடுகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துகொள்வதற்கான ஒப்பந்தம்.

இதனால் மிகப்பெரிய அள வில் இலாபம் ஈட்டும் அமெரிக்கப் பன் னாட்டு நிறுவனங்கள் அவற்றில் ஒரு சிறு துளியை இந்தியாவில் உள்ள கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு அளித்திட லாம். அமெரிக்கா, தன்னுடைய சொந்த நாட்டில், கடந்த முப்பதாண்டுகளில் ஓர் அணு ஈனுலையைக் கூட நிறுவிடவில் லை என்பதை நினைவில் கொள்ளுங் கள். பின் ஏன் நாம் அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்கு முட்டுக் கொடுப்பதற்காக இந்த ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?


அணு உலைகளுக்கு வேறு வழியின்றி அமெரிக்கர்களும் வர ஆரம்பித்துள்ளார்கள். ஜப்பானின் வானளவு முன்னேற்றம் அணு உலைகளின் விலைகுறைந்த மின்சாரத்தால்தான் சாத்தியமாகிஉள்ளது. ஏன் ஐரோப்பாவின் வலிமைக்கும் பொருளாதாரத்துக்கும் அங்கு உள்ள அணு உலைகளின் விலைகுறைந்த மின்சாரமே காரணம்.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்டால் அதில் நாம் முதலீடு செய்திடும் தொகையை, நம் நாட்டில் நீர், நிலக்கரி, வாயு, சுத்தமான புதுப்பிக்கப் படாத (ஊடநயn nடிn-சநநேறயடெந) மற்றும் சூரியஒளி ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தியில் ஈடுபட்டோ மானால் நம் நாட்டின் எரிசக்தி வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்திடும்


தூ.. சொல்ற மூஞ்சைப்பாரு. இந்தியாவில் என்ன முன்னேற்றத்தை நீங்கள் எதிர்க்கவில்லை? எந்த இடத்தில் மின்சார உலை கட்டினாலும், அணை கட்டினாலும் கூட்டம் போட்டு எதிர்க்கும் கூட்டம், எந்த முகத்தோடு வந்து அணு உலை வேண்டாம், நீர்மின்சாரம் பண்ணு என்று சொல்கிறது?

இவ்வாறு, அணுசக்தி ஒப்பந்தமானது இந்தியா விற்கு, இராணு வம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களிலும் சுயேட்சையான அயல்துறைக் கொள் கையிலும் மிகப்பெரிய அளவிற்கு ஊனப்படும் நிலையை உருவாக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், நம்முடைய அற்ப அளவிலான வள ஆதாரங்களை யும் பெருமளவிற்கு வற்ற வைத்துவிடும். இந்த ஒப்பந்தமானது, எதிர்காலத் திலும் இந்தியாவின் இறையாண் மைக்கு நிலையான பாதிப்புகளைக் கொண்டுவந்திடும். இதுபோன்ற பிரச் சனைகள் எதைப்பற்றியும் கவலைப்படா மல், இவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்ற கவலையும் இல்லாமல், இடதுசாரிகள் மீது சீனாவுக்கும் பாகிஸ் தானுக்கும் விசுவாசமாக இருக்கிறார் கள் என்று அவதூறை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவும் சமீ பத்தில் நடைபெற்ற அதன் தேசிய செயற் குழுக் கூட்டத்தில் இதேபோன்று நம்மீது அவதூறை அள்ளிவீசியது.


அவதூறு தவறு என்று நீங்கள் நிரூபிக்கலாமே? அமெரிக்காவை திட்டி எழுதப்படும் கோடிக்கணக்கான பக்கங்களில் ஒரு சில பக்கங்களில் சீனாவையும் பாகிஸ்தானையும் திட்டியிருந்தீர்கள் என்றால் நீங்கள் சொல்வதில் ஒரு நியாயம் இருக்குமே?

இன்றைய சூழ்நிலையில், ஒரு பல் துருவ உலகக் கோட்பாட்டை நோக் கியே சர்வதேச உறவுகள் அமைந்திட வேண்டும் என்பதே இயற்கையான போக்காகும். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதனை ஓர் ‘ஒருதுருவ உலகக் கோட்பாடாக’ சீர்குலையச் செய்து, உலக நாடுகளை தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர அனைத்து விதமான சாகசங்களையும் செய்து கொண்டிருக்கிறது. வளர்முக நாடுக ளின் தலைவனாக கடந்த காலங்களில் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து செயல்பட்டு வந்த இந்தியா, அதில் உறுதியாக நின்று பல்துருவ உலகக் கோட்பாட்டை உயர்த் திப்பிடித்திட உறுதியாக இருந்திட வேண் டும். அதைவிடுத்து, அமெரிக்க ஏகாதி பத்தியத்துடன் இணைந்துகொண்டு, ‘ஒருதுருவ உலகக் கோட்பாட்டை’த் திணித்தால், உலக அரசியலில் இந்தியா விற்கு இருந்து வந்த தனித்தன்மை கரைந்து காணாமல் போய்விடும். நாட்டின் நலன்களையும், நாட்டு மக் களின் நலன்களையும் பாதுகாத்திட இடதுசாரிகள் கோருவது இதுதான்.

தமிழில்: ச.வீரமணி


ஏனெனில் இந்தியா நிரந்தர "வளர்முக நாடாகவே" இருந்து நிரந்தரமாக பிச்சைப்பாத்திரத்தை கையிலேந்திக்கொண்டு சிபிஎம்முக்கும் இதர கம்யூனிஸ்டுகளுக்கும் பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால் சாதாரண இந்தியர்களுக்கு அதில் எந்த விதமான ஆர்வமும் இல்லை

ஆமா சீனாக்காரனிடம் இதெல்லாம் சொல்லலாமே? அமெரிக்கா அணு ஆயுதம் வைத்திருக்கிறது என்று அலம்புகிறீர்களே, போராட்டம் பண்ணுகிறீர்களே, எப்போதாவது சீனா அணு ஆயுதம் வைத்திருப்பதையும், சீனா அமெரிக்காவின் அணு உலைகளை பில்லியன் டாலர்கள் கணக்கில் பணம் கொடுத்து வாங்கி அமைப்பதையும் எதிர்த்தீர்களா? அல்லது முனகவாவது செய்தீர்களா?

Westinghouse wins massive China nuclear deal

China's second AP1000 reactor construction to start end-July - report


பாருங்கள். சீனா வெஸ்டிங்ஹவுஸ் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் 8 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள அணு உலைகளை வாங்கி நிறுவுவதை!

இது பற்றி இந்த பீப்பிள்ஸ் டெமாக்ரஸி கட்டுரையில் மூச்சு விட்டீர்களா?

24 Comments:

Anonym said...

இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று நிரூபித்துவிட்டீர்கள்.

சூப்பர்

Ranga

said...

1. In the Karat speech, no where he mentioned that he is supporting China...
2. He said, US is trying to get India to counterbalance their presence in this part.. because US fears China will be a big power soon.. As we all know China already competing with US & Allies for natural resources in Africa.
3. If you are opposing China, then are you supporting US...
4. If US offers some technology to India, you are supporting.. Similarly If china gives some technology to India.. do u support..? If not why.. You support Imperialistic, human rights destroyer US, but you wont support capitalistic China.
5. But having said that, I am not a supporter of CPI or CPM or whatever CP parties in India..
6. Dont oppose anything for the sake of opposing

said...

//சீனாக்காரனிடம் இதெல்லாம் சொல்லலாமே? அமெரிக்கா அணு ஆயுதம் வைத்திருக்கிறது என்று அலம்புகிறீர்களே, போராட்டம் பண்ணுகிறீர்களே, எப்போதாவது சீனா அணு ஆயுதம் வைத்திருப்பதையும், சீனா அமெரிக்காவின் அணு உலைகளை பில்லியன் டாலர்கள் கணக்கில் பணம் கொடுத்து வாங்கி அமைப்பதையும் எதிர்த்தீர்களா? அல்லது முனகவாவது செய்தீர்களா?
//
1. I support these... Whoever care for humanity should oppose all the things that will destroy human race in the future... But let me ask you.. one thing.. How many times have you opposed Global warming or the activites which are destorying nature...
2. You oppose communist for protesting against new hydro power plant or raising dam levels... Ok but how often the displaced people have got compensation.. Take the example of Bobal gas tragedy.. when did they get the compensation.. Do u oppose, the government in power either BJP/Congres.. or whatever government?

Anonym said...

இடதுசாரிகள் சீனா அருணாச்சல பிரதேசம் தனது என்று கூறிவருவதை
எதிர்த்து ஏன் அறிக்கை விடவில்லை,
ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.
இந்தியாவின் பகுதிகள் தனது என்று அது உரிமை கோர முடியாது என்று ஏன் அறிக்கை விடவில்லை, ஏன் சீனாவினை அறிவுறுத்தவில்லை.

said...

//இடதுசாரிகள் சீனா அருணாச்சல பிரதேசம் தனது என்று கூறிவருவதை
எதிர்த்து ஏன் அறிக்கை விடவில்லை,
ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.
இந்தியாவின் பகுதிகள் தனது என்று அது உரிமை கோர முடியாது என்று ஏன் அறிக்கை விடவில்லை, ஏன் சீனாவினை அறிவுறுத்தவில்லை.

//
Its a good point.. but how many times, BJP, Comgress, Left parties had given their support for the poor people who were rapped and molested by Indian army..
Have anyone here remember the Nude agitation done by North east asian woman in Delhi... How many polical parties supported them?
How many of us are ashamed about these incidents.. ?
First ask all the parties to protect the poeple in North east.. then we can all blame the parties for not opposing china in this issue...

said...

அன்பு நண்பர் பகத்,
//1. In the Karat speech, no where he mentioned that he is supporting China...
2. He said, US is trying to get India to counterbalance their presence in this part.. because US fears China will be a big power soon.. As we all know China already competing with US & Allies for natural resources in Africa.
//

என்று கேட்டிருக்கிறீர்கள்.
இது காரத் சொன்னது.

//India its strategic ally in countering China, "the most powerful socialist country capable of challenging the might of the USA". //

இதற்கு என்ன அர்த்தம்? சீனா பவர்புல் சோசலிஸ்டு நாடா? அல்லது அமெரிக்க அடிவருடி வால்மார்ட் பொம்மை உற்பத்தி செய்து தரும் நாடா?

எங்கே சீனாவின் வளர்ச்சிக்கு போட்டியாக இந்தியா அமெரிக்க ஆதரவில் வளர்ந்துவிடுமோ என்ற பயமா?

அமெரிக்க மார்க்கெட்டில் கால் வைத்துத்தான் ஜப்பான் வளர்ந்தது. பிறகு அது தனது வியாபாரத்தை ஐரோப்பாவில் பெருக்கிக்கொண்டது. அதே வழியில்தான் சீனாவும் செல்கிறது. இதில் என்ன சோசலிஸ புண்ணாக்கு?

இங்கே பகத்தும் காரட்டும் செய்வது சீனாவின் வளர்ச்சிக்கு ஒத்து ஊதுவதும், இந்தியாவின் வியாபார வளர்ச்சிக்கு வேட்டு வைப்பதும்.
இதில் என்ன சோசலிஸ மண்ணாங்கட்டி வார்த்தைகள்?
//. If you are opposing China, then are you supporting US...
//
இல்லை நான் சீனாவையும் எதிர்க்கவில்லை. சீனாவோடு இந்தியா நல்ல நட்புறவு கொள்ள வேண்டும். ஆனால், அமெரிக்காவை எதிர்த்தும், அமெரிக்காவுடன் உறவுகளை கத்தரித்துக்கொண்டுதான் சீனாவுடன் உறவு கொள்ளவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், அனைத்தான் மக இக, எஸ்.ஓஸி. மாவோயிஸ்டு, கம்யூனிஸ்டு மண்ணாங்கட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.

//4. If US offers some technology to India, you are supporting.. Similarly If china gives some technology to India.. do u support..? If not why.. You support Imperialistic, human rights destroyer US, but you wont support capitalistic China.//

சீனாவை கேப்பிடலிஸ்டு என்று சொல்வதற்கு நன்றி. அது கேபிடலிஸ்டு அல்ல. அது பாஸிஸ்டு நாடு. பாஸிஸம் என்றால் உங்கள் வார்த்தையில் எவரையும் திட்ட உபயோகப்படுத்தும் வார்த்தை அல்ல. பாஸிஸம் என்று உண்மையான அர்த்தத்தில். சீனா மனித உரிமைகளை போற்றி பாதுகாக்கிறதா? கேலிக்கூத்து. அப்படி சூப்பர் புனிதமாக உலகில் எந்த நாடும் இல்லை. எந்த நாடுகளில் அப்படி மனித உரிமை மீறல் இருந்தால், அது கருத்து சுதந்திரத்தில் வெளிவருகிறது என்பதும், அதனை நீக்க ஒரு சட்டப்பூர்வமான வழிகள் இருக்கின்றன என்பதுமே முக்கியம்.

//
5. But having said that, I am not a supporter of CPI or CPM or whatever CP parties in India..//
கம்யூனிஸ்டு கட்சிகளை ஆதரிக்காமலேயே அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறீர்க்ளே. பரவாயில்லை.
//
6. Dont oppose anything for the sake of opposing
//
எனக்கு அறிவுரை தரும் முன்னர் அதனை உங்களுக்கே பிரயோகித்துக்கொள்ள கோருகிறேன்.

said...

அன்பின் பகத்

அருணாசல பிரதேசம் பற்றி ஏன் இடத்சாரிகள் தங்கள் வாயை திறக்கமாட்டேன் என்கிறார்கள் என்று கேட்டதற்கு...
//Its a good point.. but how many times, BJP, Comgress, Left parties had given their support for the poor people who were rapped and molested by Indian army..
Have anyone here remember the Nude agitation done by North east asian woman in Delhi... How many polical parties supported them?
How many of us are ashamed about these incidents.. ?
First ask all the parties to protect the poeple in North east.. then we can all blame the parties for not opposing china in this issue...//

என்று எழுதுகிறீர்கள்

ஆகவே, அது குட் பாயிண்டு என்று சொல்லிவிட்டு, பிறகு இந்தியாவில் நடக்கும் அவலங்களை பட்டியல் போட்டால் என்ன அர்த்தம்?
இது போன்ற அவலங்கள் இருப்பதால், அருணாசலம் சீனாவுக்கு போனால் பரவாயில்லை என்பது உங்கள் உள் நோக்கமா?

சரி எந்த நாட்டில் இந்த அவலங்கள் இல்லை? சீனாவில் பட்டியல் போட்டிருக்கிறேனே? அதை விட கேவலம், அந்த விஷயங்கள் நடந்ததே வெளியில் வராமல் எப்போதும் தலைவர்கள் கையை நீட்டி போஸ் கொடுத்தும், மக்கள் எப்போதும் இளித்த முகத்தோடேயே இருக்கிறார்கள் என்று செய்தி வாசிப்பதும் தானே?

இந்தியாவில் செய்தி வெளிவருகிறது. அது தேர்தல் பிரச்னை ஆகிறது. அந்த பிரச்னைகளை தீர்க்க அரசியல்வாதிகள் முயல்கிறார்கள். இது மனித பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்றபடி அந்த துயர நிகழ்ச்சிகள் வெளிவரவேண்டும் என்று அமைக்கப்பட்ட அமைப்பு.

நீங்கள் கனவு காணும் அமைப்போ, எந்த கேடு நடந்தாலும், பத்திரிக்கை ஊடகங்களில் எல்லோரும் சிரித்து போஸ் கொடுத்ததுதான் வரவேண்டும் என்று விரும்பும் அமைப்பு.

எது உண்மையில் மக்களுக்கு வேண்டும் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

said...

அருணாசலம் பற்றி கேள்வி கேட்ட அனானிக்கு நன்றி

said...

// இது போன்ற அவலங்கள் இருப்பதால், அருணாசலம் சீனாவுக்கு போனால் பரவாயில்லை என்பது உங்கள் உள் நோக்கமா?

சரி எந்த நாட்டில் இந்த அவலங்கள் இல்லை? சீனாவில் பட்டியல் போட்டிருக்கிறேனே? அதை விட கேவலம், அந்த விஷயங்கள் நடந்ததே வெளியில் வராமல் எப்போதும் தலைவர்கள் கையை நீட்டி போஸ் கொடுத்தும், மக்கள் எப்போதும் இளித்த முகத்தோடேயே இருக்கிறார்கள் என்று செய்தி வாசிப்பதும் தானே?

இந்தியாவில் செய்தி வெளிவருகிறது. அது தேர்தல் பிரச்னை ஆகிறது. அந்த பிரச்னைகளை தீர்க்க அரசியல்வாதிகள் முயல்கிறார்கள்.//
1. I dont support North east states to be part of India or part of China.. It should be decided by the people of the North east.. Not you or me...
2. I never said China does not have all these problems.. Then why are you assuming yourself like that.. For me China & US both are capitalistic countries.. Killing people in Africa.. ( In this matter US gets 1st position in killing people all over the world)
3. Oh.. realy, Elections came and gone.. but these matters discussed probablu only for vote during elections... Once the government (BJP/Congrss/left) comes into power all these matters vanish and only money matters for them...
4. Please tell me any one incident in this democratic country where poor people who were affected by Polic/Military has got their compensation or else military/police got punishment...

//இந்தியாவில் செய்தி வெளிவருகிறது. அது தேர்தல் பிரச்னை ஆகிறது. அந்த பிரச்னைகளை தீர்க்க அரசியல்வாதிகள் முயல்கிறார்கள். இது மனித பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்றபடி அந்த துயர நிகழ்ச்சிகள் வெளிவரவேண்டும் என்று அமைக்கப்பட்ட அமைப்பு.
//
According to u molesting poor people is human weakness? or arrogant animal act...

How often this present system save people.. India's one of the most corrupted departments are Police and Judiciary..

said...

//Please tell me any one incident in this democratic country where poor people who were affected by Polic/Military has got their compensation or else military/police got punishment...//

Chidambaram Padmini incident.

This is the incident that comes to my mind immediatly. In countless other incidents, policemen have been punished.They have escaped in many other cases, but this doesnt mean that there is no justice for poor in India.

Whatever weaknesses we have in the present system can be repaired through the democratic process.We are a republic, which is just 60 years old.It will take time.USA took more than a century to build itself into an economic power.In the meanwhile, it saw a civil war too!!!Any country has to face such challenges.

Finally, I would say that people can be angry at the government,but they should love their country.If hatred towards government blinds us from seeing the difference between government and nation, then we will be colonized again by foreign powers.

Thamizmani is doing a very good job here.Keep up the good work Thamizmani.

said...
Dieser Kommentar wurde vom Autor entfernt.
said...

//1. I dont support North east states to be part of India or part of China.. It should be decided by the people of the North east.. Not you or me...//

Oh..yeah!!!

kashmir breaks away from India.pakistan annexes it in next 24 hours.North east breaks away from India,china annexes it within next 24 hours.

Not a single commie will flip an eyelid if all these things happen.Then punjab,Tamilnadu, Assam, Goorkaland all break away and are annexed by neighboring countries. Again not a single commie bats an eyelid.

Finally all Indian states are colonized and we start another Independence war and go back in history to 1675 AD.

Some people never learn from history, do they?

said...

//India its strategic ally in countering China, "the most powerful socialist country capable of challenging the might of the USA". //
1. If Karat thinks that China is socialistic country.. then pitty on him..
2. We both agreed China is capitalistic country.. Then whats the point in arguing.. I dont support US or China... both are trying for power and expanding market and land for resources...

//இங்கே பகத்தும் காரட்டும் செய்வது சீனாவின் வளர்ச்சிக்கு ஒத்து ஊதுவதும், இந்தியாவின் வியாபார வளர்ச்சிக்கு வேட்டு வைப்பதும்.
இதில் என்ன சோசலிஸ மண்ணாங்கட்டி வார்த்தைகள்? //
3. I dont care about karat.. but What makes you think that I am against India's development.. Your words are same like Bush statement "If you are not with us, then you are against us".. If I dont support US - India ties.. that makes me enemy to India... ?
4. Can I assume that : You are happy with Indian system that atleast in India all the news are coming out in Media..as compared to other countries.
//இந்தியாவில் செய்தி வெளிவருகிறது. அது தேர்தல் பிரச்னை ஆகிறது. அந்த பிரச்னைகளை தீர்க்க அரசியல்வாதிகள் முயல்கிறார்கள்.//
5. If any wrong thing happens to people after Election.. then people have to wait for 5 years to make politicians to talk and them take action...
6. Even after proven by Judiciary and Some Investigating commision, people living in the hills of TN, karnataka border didnt get the compnesation for the rape and torture done by arrogant police force... but soon after they killed or put drama about veerapan.. All the police officers got prize from TN government...
7. Please dont tell these things happen in democratic system, this is same like economic growth, we need to wait, so few people should be ready for sacrifising their life untill our system corrects itself...

said...

//This is the incident that comes to my mind immediatly. In countless other incidents, policemen have been punished.They have escaped in many other cases, but this doesnt mean that there is no justice for poor in India.

Whatever weaknesses we have in the present system can be repaired through the democratic process.We are a republic, which is just 60 years old.It will take time.USA took more than a century to build itself into an economic power.In the meanwhile, it saw a civil war too!!!Any country has to face such challenges.

Finally, I would say that people can be angry at the government,but they should love their country.If hatred towards government blinds us from seeing the difference between government and nation, then we will be colonized again by foreign powers.
//
Oh realy...
1. Then go and see the Bihar, where landlords army kill the innocent people during midnight and dont get caught by police... Are they more powerful than police?
2. First of all why the states should leave the country... If the governments treats them well. You want the North east to be part of India.. but No any economic growth or education will be provided to them.... If and only if the people wants to be an independant country.. then let them have it.. For the people who can fight and get away from one country.. should know how to defend them from other countries....
3. You are all dont even talk about these human right abuses... You all keep your eyes shut thinking that, these are all the process of repulic, democratic country... What kind of efforts people like you did to oppose these human right abuses...
4. Almost all the political parties dont take these things seriously.. And mostly they talk about abuses and killings only to gain vote... Most of the people like you dont care about this unless or otherwise it affects you..
5. Caring for each other as human beings ... has got any meaning now a days?
6. When USSR was ther amny countries joined in USSR and later they split it to different countries..and people are living normaly there.. If few india states wants a seperate country ...Why are you opposing... What is the solotution you are giving to the affected people.. We are undergoing a republic process... Why can you accepts this peoples protest for the new country also one among the republic process...

said...

அன்பின் பகத்,

இந்தியாவில் அநியாயமே நடக்கவில்லை என்பதோ அல்லது எல்லா அநியாயங்களுக்கும் சரியான தீர்ப்பு வழங்கப்படுகிறது என்றோ நான் சொல்லவில்லை.

இங்கே இருக்கும் அமைப்பில் குறைகள் இருக்கின்றன என்றும் மறுக்கவில்லை.

ஆனால், இன்றைய ஜனநாயகத்தின் குறைகளை தீர்க்கவேண்டுமென்றால் மேலும் அதிக ஜனநாயகமே வேண்டுவது. சர்வாதிகாரமல்ல.

இங்கு மத்தியிலும் மாநிலத்திலும் குவிந்திருக்கும் அதிகாரங்கள் இன்னும் பரவலாக்கப்பட வேண்டும் என்று ராஜீவ்காந்தி போன்றோர் கூட முயற்சி செய்துள்ளனர். இது ஒரு கன்சென்ஸஸ் முயற்சி. ஊர் கூடி தேர் இழுக்கும் முயற்சி.

இங்கே எந்த ஒரு அநியாய செய்தி வெளிவந்தாலும் அது அலையை ஏற்படுத்துகிறது. அதற்கு நீதி கிடைக்கவில்லை என்று மக்களை பேச வைக்கிறது. போராட்டம் நடத்த வழி இருக்கிறது.

அடிப்படையில் அதுதான் வேண்டுவது.

Anonym said...

இங்கே துரோகம் என்று தலைப்பு வைத்திருப்பதற்கு பொருத்தமாகத்தான் பகத் பேசுகிறார்.

அது கிடக்கட்டும், என் தெருவுக்கு தனிநாடு கிடைக்குமா?

சீனாவில் ஏன் தைவானை தனி நாடு என்று அங்கீகரிக்க மாட்டேன் என்று கூறுகிறார்கள்?

ஓ.. ஒருவேளை இந்தியாவுக்குத்தான் உபதேசமோ?

said...

செல்வனுக்கும் ரங்காவுக்கும் நன்றிகள்

said...

//சீனாவில் ஏன் தைவானை தனி நாடு என்று அங்கீகரிக்க மாட்டேன் என்று கூறுகிறார்கள்?//
1. My stands clear , if people of that region wants a seperate country, then let them have it.. Either its Taiwan or Kosovo.
(Mister clean your own dirt first before cleaning others...)

2. Why India and most of the International communities took double stance for kosovo and Taiwan. They support for Kosovo but not realy for Taiwan or Srilanka...

//இங்கே எந்த ஒரு அநியாய செய்தி வெளிவந்தாலும் அது அலையை ஏற்படுத்துகிறது. அதற்கு நீதி கிடைக்கவில்லை என்று மக்களை பேச வைக்கிறது. போராட்டம் நடத்த வழி இருக்கிறது.
//
Here people are protesting for their rights.. but are they getting their rewards..? Even peaceful hunger strike is cracked down by rulers...
If the Justice is delayed.. What are the options are left infront of the people...
Can you all say to them, this is democratic process even US had gone through these things 100 years back.. So please prepare to sacrifice yourself and your next generation..
Step into Assam, Megalaya, Nagaland, Sikkim.. Most of the people dont consider themself as Indians... Why like this.. Is this happend in one day.. They expected a lot from India but they are mostly betrayed by Indian goverment... What do u say to them..
Take an example of Chirapunji.. Worlds highest rainfall place.. but people dont have drinking water during summer there... If I say this you are saying we are only 60 years old republic.. these things takes time.. I want only basic needs for myself and fellow peoples... How long u will serve the master, when he is not paying you... The same thing happening for those people... They looked to India for help so long.. after dissapoinment.. they are showing their anger... If I say this.. I will be potrayed as traitor.. If you guys want these people and land in India then do something in your way to get these people their basic needs.... If you succeed in this then you have proved me and others like me wrong...
We also dont want to fight or protest... All the people has same desire like you to live peacefuly..
We are not asking the land whic is 100% fault free, we are asking justice for the crime or the mistakes commited.. Immediately and fairly without any partiality..
How many of our minister spent time in Jail for corruption.. As per this statistics... India is more than 99% corruption free country...
How long should we have to wait... before the correct system has been implemented in India.. If you are delaying justice and basic needs for the people for long time.. they will ulmtimately get those things in whatever possible way...
Thats what happening now.. So if you want revolutionaries to stop their activity.. then all the people who are advicing here please put your effort to improve India's democratic system... Better get down to public and work...

said...

அன்பின் பகத்,
//
//சீனாவில் ஏன் தைவானை தனி நாடு என்று அங்கீகரிக்க மாட்டேன் என்று கூறுகிறார்கள்?//
1. My stands clear , if people of that region wants a seperate country, then let them have it.. Either its Taiwan or Kosovo.
(Mister clean your own dirt first before cleaning others...)
//
எனக்கும் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், இவ்வாறு தனிநாடு கேட்பதோ கொடுப்பதோ மக்கள் பிரச்னைகளை தீர்க்காது. தனிநாடு இருந்தால் மட்டுமே எல்லோரும் சந்தோஷமாக வாழ்ந்துவிடுவார்கள் என்றும் பொருளில்லை. ஒரு ஜனநாயக நாட்டிலிருந்து பிரிந்து ஒரு பகுதி தனிநாடு ஆனதாக வரலாறு இருக்கிறதா? ஆனால், பாகிஸ்தான், சீனா போன்ற சர்வாதிகார நாடுகள் இந்தியா போன்ற ஜனநாயக ஏழை நாடுகளுக்குள் குழப்பம் விளைவிக்கத்தான் இந்த தனிநாடு பிரச்னைகளை உருவாக்குகின்றன. அதனால்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது. அதற்கு ஒத்து ஊதும் போலி அறிவுஜீவிகளையும் போலி புரட்சியாளர்களையும் எதிர்க்க வேண்டியுள்ளது.

//2. Why India and most of the International communities took double stance for kosovo and Taiwan. They support for Kosovo but not realy for Taiwan or Srilanka...//

தாய்வானுக்கு ஏன் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் குரல் கொடுக்கவில்லை என்றால் ஒரே ஒரு பயம்தான். அதற்கு காரணம் சீனா. இது வெறுமே தடியெடுத்தவன் தண்டல்காரன் சமாச்சாரம்தான். வலிமையும் அணு ஆயுதமும் வைத்திருக்கும்/வைத்திருந்த அமெரிக்காவிலும், சோவியத் யூனியனிலும் எந்த பிரிவினை வாதம் இருந்தது? ஏனெனில், அங்கு பிரிவினை வாதத்தை ஊக்குவிக்க எவருக்கும் தைரியம் இல்லை. சோவியத் யூனியனில் எந்த நாடும் தானாக போய் சேர்ந்துகொள்ளவில்லை. சோவியத் யூனியன் உடைந்தது காரணம் அது ஒரு சர்வாதிகார மக்கள் விரோத வெறிபிடித்த அமைப்பு. இருந்தும், அது உடையும் போதும் எவ்வளவு அதளபாதாளத்துக்கு மக்களின் வாழ்வு சென்றது என்று படித்துப்பாருங்கள்.

//
//இங்கே எந்த ஒரு அநியாய செய்தி வெளிவந்தாலும் அது அலையை ஏற்படுத்துகிறது. அதற்கு நீதி கிடைக்கவில்லை என்று மக்களை பேச வைக்கிறது. போராட்டம் நடத்த வழி இருக்கிறது.
//
Here people are protesting for their rights.. but are they getting their rewards..? Even peaceful hunger strike is cracked down by rulers...
//

நிச்சயமாக நீங்கள் சொல்வது சரியே. ஆனால் அரசாங்க்த்தை எதிர்த்து அல்லது அதிகாரிகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கக்கூட உரிமை இல்லையென்றால் இன்னும் மோசமல்லவா? அதுதானே "புரட்சியாளர்கள்" கட்டமைக்க விரும்பும் "சோசலிஸ" நாடுகளின் நிலை?

இங்கே ரூலர்ஸ் என்று யாரும் இல்லை. இங்கே போட்டி ரூலர்கள்தான் இருக்கிறார்கள். திமுக- அதிமுக- பாமக- மதிமுக-தெமுதிக மாதிரி இன்னொரு பகத் கட்சி உருவாக்கவும் யாதொரு தடையும் இல்லை. உங்களுக்கு என்று ஒரு குரல் இருக்கிறது. அதனை சொல்லுங்கள். நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க, மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்க உங்களது கருத்துக்களை சொல்லுங்கள். அல்லது முடிந்தால் நீங்களே வேலை வாய்ப்பை பெருக்குங்கள். குறைந்த விலையில் மின்சாரம் தயாரித்து வினியோகிக்க ஏதேனும் சாதனம் கண்டுபிடியுங்கள்.

// If the Justice is delayed.. What are the options are left infront of the people...
Can you all say to them, this is democratic process even US had gone through these things 100 years back.. So please prepare to sacrifice yourself and your next generation..
//
இல்லை. எதனையும் தியாகம் செய்யவேண்டாம். போராடுபவர்கள் மத்தியிலிருந்து புதிய தலைவர்கள் உருவாகிறார்கள். எவர் தம்மை பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பது மக்களுக்கு தெரியும். எவர் செய்யவில்லை என்பதும் தெரியும். இருப்பினும் தவறான எம்.எல்.ஏக்களுக்கு இங்கே ஓட்டு விழுகிறது. தெரிந்தே அந்த ஓட்டு விழுகிறது. இந்த ஜனநாயக அமைப்பில் இருக்கும் சில மயக்கங்கள் அதற்கு காரணம். இங்கே எம்.எல்.ஏக்கள்க்கு ஓட்டு போடுவதன் மூலம் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கிறார்கள் மக்கள்.

//Step into Assam, Megalaya, Nagaland, Sikkim.. Most of the people dont consider themself as Indians...//

இல்லை. நான் அங்கு சென்றிருக்கிறேன். அங்கிருக்கும் மக்கள் தங்களை இந்தியர்களாகத்தான் கருதுகிறார்கள். உதாரணமாக நாகாலாந்தில் எனக்கு நண்பர்களே உண்டு. இந்தியாவில் இருப்பதால்தான் இரண்டு தீவிரவாத குழுக்கள் ஒன்றோடு ஒன்று போரிட்டு நாகாலாந்தையும் நாகா மக்களையும் அழிக்காமல் இருக்கிறார்கள் என்றே அவர்கள் சொல்கிறார்கள்.

// Why like this.. Is this happend in one day.. They expected a lot from India but they are mostly betrayed by Indian goverment... What do u say to them..//

நான் சொல்லவேண்டியதில்லை. அங்கிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் சொல்லவேண்டும். அந்த மாநிலத்தை ஆளுபவர்கள் தமிழ் பேசுபவர்களோ இந்தி பேசுபவர்களோ அல்ல. நாகா மக்களேதான் நாகாலாந்தை ஆள்கிறார்கள். மிசோரம் மக்களேதான் மிசோரத்தை ஆள்கிறார்கள். சீனாவில் செய்வது போல, திபெத்தை ஆள ஹான் சைனீஸ் ஆளை அனுப்புவதில்லை. இந்திய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் மக்களை ஆள்கிறார்கள்.

//Take an example of Chirapunji.. Worlds highest rainfall place.. but people dont have drinking water during summer there... If I say this you are saying we are only 60 years old republic.. these things takes time.. I want only basic needs for myself and fellow peoples...//

இது ஒரு பிச்சைக்கார மனப்பான்மை. உங்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டுமென்றால் நீங்களேதான் உருவாக்கிக்கொள்ளவேண்டும். உங்கள் வீட்டையும் தெருவையும் நீங்களேதான் சுத்தம் செய்யவேண்டும். சுத்தம் செய்வதற்கு வரி கொடுக்கிறீர்கள். அந்த வரி சரியாக செலவு செய்யப்படுகிறதா என்று நீங்கள்தான் பார்க்கவேண்டும். அரசாங்கம் என்பது வேற்றுகிரக பிரகிருதி இல்லை. அது நீங்கள்தான்.

//
How long u will serve the master, when he is not paying you...
//
அரசாங்கம் மாஸ்டரும் அல்ல, நீங்கள் அதற்கு சேவகமும் செய்யவில்லை.

// The same thing happening for those people... They looked to India for help so long.. after dissapoinment.. they are showing their anger... If I say this.. I will be potrayed as traitor.. If you guys want these people and land in India then do something in your way to get these people their basic needs.... If you succeed in this then you have proved me and others like me wrong...//

இல்லை. ஜனநாயகம் என்பது ஒரு கருவி. உங்களுக்கு தேவையான விஷயங்களை நீங்களே செய்துகொள்ள உருவாக்கப்பட்ட கருவி. அது அட்சய பாத்திரமல்ல. அதிலிருந்து நிரந்தரமாக சோறு கொட்டிக்கொண்டே இருக்காது. மேலே பிக் பிரதர் உடகார்ந்துகொண்டு எனக்கு வேளாவேளைக்கு சோறு போட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்ற மனப்பான்மை கம்யூனிஸ்டுகள் உருவாக்குவது. ஏனெனில், அதனைத்தான் தாங்கள் செய்யப்போகிறோம் என்று சொல்கிறார்கள். ஒரு பகுதியில் ஏழ்மை இருக்கிறது என்றால், அங்கு சரியாக திட்டமிடும் தலைவர்கள் இல்லை என்பதையும், அப்படிப்பட்ட தலைவர்களை தேர்ந்தெடுக்காத மக்களுமே இருக்கிறார்கள் என்றே பொருள்.

//We also dont want to fight or protest... All the people has same desire like you to live peacefuly..//

போராட வேண்டிய இடத்தில் போராடித்தான் ஆகவேண்டும். அதற்காக கட்சியின் எதிரி எல்லோரையும் வர்க்க எதிரி என்று பெயர் சூட்டி கொல்லவேண்டுமென்று பொருளில்லை.

//We are not asking the land whic is 100% fault free, we are asking justice for the crime or the mistakes commited.. Immediately and fairly without any partiality..//

எல்லோருக்குமே இதுதான் குறிக்கோள். நீதியில்லாத நாடு அழியும். நீதியை நோக்கிய பாதைதான் ஜனநாயகம். இங்கு நீதியற்றவர்களுக்கு சுதந்திரமான குரல் இருக்கிறது. அவர்கள் உண்ணாவிரதம் இருக்கவோ, அல்லது தெருவில் இறங்கி போராடவோ செய்யலாம். தங்கள் குறைகளை எல்லா மக்களும் அறிய வைக்கலாம். பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கலாம். விரும்பினால் தானே ஒரு பத்திரிக்கையும் ஆரம்பிக்கலாம். அந்த கோரிக்கைகளை வற்புறுத்தி தேர்தலிலும் நிற்கலாம். வெற்றி பெற்று அந்த குறைகளை தீர்க்கவும் செய்யலாம். எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.

//
How many of our minister spent time in Jail for corruption.. As per this statistics... India is more than 99% corruption free country...
//
மினிஸ்டர் வேறு யாருமல்ல. நீங்கள்தான். நீங்கள் ஏன் மினிஸ்டராக ஆகக்கூடாது.
உங்கள் குறைகளை கூறுங்கள். இந்த குறைகளை நீக்குவேன் என்று மக்களிடம் வாக்குறுதி அளியுங்கள். வீடு வீடாக சென்று உங்களது ஐடியாக்களை கூறுங்கள். மக்களை உங்களுக்கு ஓட்டுபோட வையுங்கள். வெற்றி பெறுங்கள். எந்த குறைகளை நீக்கவேண்டும் என்று விரும்பினீர்களோ அந்த குறைகளை நீக்குங்கள்.

//
How long should we have to wait... before the correct system has been implemented in India.. If you are delaying justice and basic needs for the people for long time.. they will ulmtimately get those things in whatever possible way...//
ஏன் காத்திருக்க வேண்டும். இன்றே தொடங்கலாமே உங்களது வேலையை.
கரெக்ட் சிஸ்டம் வேண்டுமென்றால், உங்களது குழுவோடு எந்த ஸிஸ்டம் உங்களுக்கு வேண்டும் என்று மக்களிடம் சொல்லுங்கள். மக்களோடு விவாதியுங்கள். அவர்களது வாக்குக்களையும் ஆதரவையும் பெறுங்கள். வெற்றி பெறுங்கள். வேண்டிய சட்டதிருத்தங்களை செய்யுங்கள்.

//Thats what happening now.. So if you want revolutionaries to stop their activity.. then all the people who are advicing here please put your effort to improve India's democratic system... Better get down to public and work...//

என்னுடைய வேலைதான் இது. இந்தியாவின் ஜனநாயகத்தை கேலி பேசுவதும், அதனை கீழ்த்தரமாக வசை பாடுவதும் செய்பவர்களிடம் விவாதித்து, அவர்கள் கூறுவது பொய் என்று நிரூபிப்பதுதானே முதல் வேலை? இவ்வாறு ஜனநாயகத்தை கேலி செய்பவர்களது முதல் நோக்கம், புரட்சி என்ற பெயரில் எதிர்க்கட்சியினரை கொன்று, சர்வாதிகாரத்தை கொண்டுவந்து அதன் மூலம் சாதாரண மக்கள் மீது ரத்தவெறியாடியதுதானே வரலாறாக இருக்கிறது?

கம்யூனிஸம் என்பது குரூரமான கொலைவெறி தத்துவம். அதனை பேசுபவர்கள் அனைவரும் போலிகள். அவர்களில் ஒரு சிலர் உண்மையிலேயே ஏழைகள் மீது இரக்கம் கொண்டவர்களாகவும், அவர்களது நிலையை உயர்த்த பாடுபடுபவர்களாகவும் இருக்கலாம். ஆனால், அது அந்த கொலைவெறி தத்துவத்தை சரி என்று ஆக்கிவிடாது. இறுதியில் முடியப்போவது போல்போட், மாவோ, ஸ்டாலின், ஹோக்ஸா வகையறாதான்.

இன்றிருக்கும் ஜனநாயகத்தின் மூலமாக மட்டுமே இந்திய மக்களுக்கு விடிவு என்று இந்திய மக்களுக்கு புரிய வைப்பதும், ஜனநாயகத்தின் மூலமாகவே குறைகள் தீர்க்கப்பட முடியும் என்று வாதிடுவதுமே முதலாவது வேலை.

அதனைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்.

Anonym said...

தமிழ்
முத்தானபதில்

ரெங்கா

said...

1. If people in one area does not get basic needs that means people are not good enough to push the government... How do u plan to give them awareness.. After we changed the people, if one politician cought in corruption, how is our judiciary sytem treating them...How long will it take him to get inside the bar? So we need to change the politician, judiciary, party memebers who will do strike and kill the innocent people like TNAU girls, the doctor who will certify the politician that he has got heart problems... etc..
Hmm quite simple task..
2. How can single man can correct the system... Is it not sounds like a typical Indian cinema story.. Single man, becoming a minister and changing the nation... Any examples?
3. I am little shock to hear from you that Communism and Communist are the main threat to the nation..
Lets not argue for sometime about Communism or capitalism... This is country where human waste is cleaned by human... People are seperated as untouchables from their birth... Mal nutrition children in India are more than Africa...Yearly more than 1000 farmers do sucide.. Different education, health care system for the person who has money and the person who is poor.. (CBSE-state board, Appolo-GH)...etc
The above problems are not hurting you.. If you think this country is great... Cant it be the greatest without these problems..?
4. You are advicing everyone to love the country, not to love the people live in there..
5. For you may be communism is the greatest threat.. I dont want to argue in that.. but anytime have you writen any blog for the people who clean the human waste still in 21st century...? Dont you have 5 minutes for that...
6. The people who have protested for their rights like Tribals who affected in veerapan search.. or the criminals who killed 3 innocent TNAU girls.. These exapmples shows that all the system like police, political party, judiciary all are corrupted to the most... You are again and again saying here people atleast has got the right to raise their voice... but my question is do they get the justice soon enough...
can you explain me why in tribals case... even after the protest of the people... the government didnt give them compensation.. but the police has got thier reward alomost next day...
//கம்யூனிஸம் என்பது குரூரமான கொலைவெறி தத்துவம். அதனை பேசுபவர்கள் அனைவரும் போலிகள். அவர்களில் ஒரு சிலர் உண்மையிலேயே ஏழைகள் மீது இரக்கம் கொண்டவர்களாகவும், அவர்களது நிலையை உயர்த்த பாடுபடுபவர்களாகவும் இருக்கலாம். ஆனால், அது அந்த கொலைவெறி தத்துவத்தை சரி என்று ஆக்கிவிடாது. இறுதியில் முடியப்போவது போல்போட், மாவோ, ஸ்டாலின், ஹோக்ஸா வகையறாதான்.

இன்றிருக்கும் ஜனநாயகத்தின் மூலமாக மட்டுமே இந்திய மக்களுக்கு விடிவு என்று இந்திய மக்களுக்கு புரிய வைப்பதும், ஜனநாயகத்தின் மூலமாகவே குறைகள் தீர்க்கப்பட முடியும் என்று வாதிடுவதுமே முதலாவது வேலை//

7.You say communism in cruel method.. ok no argument for that for sometime.. but taking the lots of examples which I have given above.. Can I say democratic system is also cruel.. in which police or military or landlords army can kill the people and still can escape from justice...
What do u say to this as a neutral person... I bet you if i do some crime and if i have money i can escape the from justice with no punishment or minimum punishemnt..
Can you deny this...?
8. You write blogs against communism, its ok.. you can express your views... But I havent seen any article from you that feels for the poor people who live in that country... if you think you can change poor people life by opposing communism.. then I am afraid I dont have much to discuss with you...

said...

அன்பின் பகத்,

//1. If people in one area does not get basic needs that means people are not good enough to push the government... How do u plan to give them awareness.. After we changed the people, if one politician cought in corruption, how is our judiciary sytem treating them...How long will it take him to get inside the bar? So we need to change the politician, judiciary, party memebers who will do strike and kill the innocent people like TNAU girls, the doctor who will certify the politician that he has got heart problems... etc..
Hmm quite simple task.. //

எதுவுமே சிம்பிள் டாஸ்க் இல்லை. எதுவுமே. புரட்சி செய்வதும் சிம்பிள் டாஸ்க் இல்லை. ஆனால், ஒரு தெருவில் லைட் இல்லை என்றால், பத்துபேரிடம் கேட்டு, நச்சரித்து, இல்லையென்றால் ஓட்டு விழாது என்று பயமுறுத்தி அந்த தெரு லைட்டை போடுவது புரட்சி செய்வதை விட எளிதானது இல்லையா?

ஏன் இந்த வேலையை நான் எங்கள் ஊரிலேயே செய்திருக்கிறேன்.

இது செய்வதற்கு புரட்சிகர இளைஞர்கள் கூட வேண்டாம். என் பக்கத்து ஊரில் ரஜினிகாந்த் நற்பணி மன்றத்து இளைஞர்கள் முயற்சித்து தெருக்களில் விளக்கு போட வைத்தார்கள். ஊருக்குள் நல்ல தண்ணீர் எடுக்க மூன்று கிணறுகள் வெட்டினார்கள். இவையெல்லாம் செய்யவேண்டுமென்றால் புரட்சி வந்தால்தான் முடியும் என்று வாய் உதார் விட்டு, இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்து ஆயிரக்கணக்கானவர்களை கொல்வதை விட எளிய விஷயம் இல்லையா இது?

//
2. How can single man can correct the system... Is it not sounds like a typical Indian cinema story.. Single man, becoming a minister and changing the nation... Any examples?//

மேலே இருக்கிறது உதாரணம். அமைச்சராக ஆனால்தான் செய்யமுடியும் என்பதும் இல்லை.

//3. I am little shock to hear from you that Communism and Communist are the main threat to the nation..//

ஆமாம்

//Lets not argue for sometime about Communism or capitalism... This is country where human waste is cleaned by human... People are seperated as untouchables from their birth... Mal nutrition children in India are more than Africa...Yearly more than 1000 farmers do sucide.. Different education, health care system for the person who has money and the person who is poor.. (CBSE-state board, Appolo-GH)...etc
The above problems are not hurting you.. If you think this country is great... Cant it be the greatest without these problems..?//

நிச்சயம் நீங்கள் சொல்வதெல்லாம் பிரச்னைகள்தான். அவைகள் எல்லாம் ஒரே நாளில் தீர்த்துவிடக்கூடியவையும் அல்ல. புரட்சி வந்தால் தெருக்களெங்கும் பாலும் தேனும் ஓடும் என்ற கற்பனைகளை நம்பினால், தெருக்களில் ரத்த ஆறுதான் ஓடுவதை காண்பீர்கள். எந்த பிரச்னையும் தீர்க்கப்படக்கூடியவைதான். எல்லாவற்றையும் சட்டம் எழுதினால் மட்டும் தீர்ந்துவிடாது. பொருளாதார சுதந்திரம் மக்களுக்கு கிடைக்கும்போது ஏராளமான பிரச்னைகள் தீரும். அந்த பொருளாதார சுதந்திரத்தின் முதல் எதிரி கம்யூனிஸ்டுகளும், பிங்கோக்களுமே.

//4. You are advicing everyone to love the country, not to love the people live in there..//

இங்கே இருக்கும் மக்களை நேசிப்பதால்தான் அவர்களை கொல்ல விரும்பும் தத்துவத்தை எதிர்க்கிறேன்.

//5. For you may be communism is the greatest threat.. I dont want to argue in that.. but anytime have you writen any blog for the people who clean the human waste still in 21st century...? Dont you have 5 minutes for that...//

அதனை பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது. நான் செய்பவற்றையும் செய்தவற்றையும் சொல்லி விளம்பரம் தேடுவதில் ஆர்வமில்லை.

//6. The people who have protested for their rights like Tribals who affected in veerapan search.. or the criminals who killed 3 innocent TNAU girls.. These exapmples shows that all the system like police, political party, judiciary all are corrupted to the most... You are again and again saying here people atleast has got the right to raise their voice... but my question is do they get the justice soon enough... //

காலதாமதமான நீதி தவறானதுதான். ஆனால், காலதாமதமானாலும் நீதி கிடைத்தால், கிடைக்காத நீதியைவிட மேலானது.

//can you explain me why in tribals case... even after the protest of the people... the government didnt give them compensation.. but the police has got thier reward alomost next day...//

அதற்கான awarenessஐ உருவாக்க வேண்டும். அது ஒரு தேர்தல் பிரச்னையாக ஆகவேண்டும். பின்னர் அது தீர்க்கப்படும். அந்த தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்காவிட்டால் தற்போதைய எம்பிக்கும். எம் எல் ஏவுக்கும் ஓட்டு போட மாட்டோம் என்றுஅறிவித்தால் தானாக நடக்கும்.

//7.You say communism in cruel method.. ok no argument for that for sometime.. but taking the lots of examples which I have given above.. Can I say democratic system is also cruel.. in which police or military or landlords army can kill the people and still can escape from justice...//

எல்லா அமைப்புகளிலுமே குரூரமான கொடூரமான விஷயங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும். அரசாங்கத்தில் உள்ளவர்கள் பேயாட்டம் ஆடுவதுஅவ்வப்போது நடக்கத்தான் செய்யும். ஆனால், ஜனநாயகத்தில் மட்டுமே அந்த விஷயங்கள் பொதுமக்களால் அறியப்படும், பேசப்படும், விவாதிக்கப்படும், அந்த தலைவனுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ எதிரான ஒரு போராட்டத்துக்கான தளம் இருக்கும்.

//
What do u say to this as a neutral person... I bet you if i do some crime and if i have money i can escape the from justice with no punishment or minimum punishemnt..
Can you deny this...?//

இந்தியாவோ அல்லது எந்த நாடுமோ புனிதமானது அல்ல, அல்லது எந்த மனிதர்களும் உத்தமர்கள் 100 சதவீடதமும் அல்ல. 100 கோடி மக்கள் உள்ள நாட்டில் ஒரு திருட்டு, ஒரு கொலை, ஒரு தப்பிப்பு, ஒரு ஊழல், ஒரு அராஜமும் இல்லாது இருக்கும் என்று நம்ப முடியுமா? அல்லது நம்புவதுதான் நேர்மையானதா?
மக்களுக்கான நீதி என்பது ஒரு புரட்சியின் மூலம் சாதிக்கப்பட்டுவிடுவதில்லை. எதிர் வர்க்கத்தினர் என்று பெயர் சூட்டி ஒரு இனம் கொல்லப்பட்டதும் அது முடிந்துவிடப்போவதுமில்லை. அது மக்கள் வாழும் வரைக்கும் தொடர்ந்த ஒரு போராட்டம்.
"நீ சுதந்திரத்தை காப்பாற்று. சுதந்திரம் உன்னை காப்பாற்றும்." என்றோர் மேதை சொன்னார்.

//8. You write blogs against communism, its ok.. you can express your views... But I havent seen any article from you that feels for the poor people who live in that country... if you think you can change poor people life by opposing communism.. then I am afraid I dont have much to discuss with you...
18. Juli 2008 04:50
//

பொருளாதார சுதந்திரத்தையும் அரசியல் சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் மனிதனிடம் கொடுத்தாலே போதுமானது.

மனிதன் தன்னைத்தானே கவனித்துக்கொள்வான்.

இந்த மூன்றுக்கும் எதிரி கம்யூனிஸம்.

அன்புடன்
தமிழ்

said...

//இங்கே இருக்கும் மக்களை நேசிப்பதால்தான் அவர்களை கொல்ல விரும்பும் தத்துவத்தை எதிர்க்கிறேன்.
//
1. You are worried about the people might have killed by the communism in near future.. Ok.. But I am asking you what about the people who are dying and suffering from various factors..
What kind of humanity is this saving the people from threat which might kill them in future and not talking about the problems which are killing peoples...
Even with your point of view, the present problems are mostly not caused by the Communism...
You are brave enough to talk about the problem of the future, and coward enough to not to talk about the present and past problems...
2. You are saying election is one of the main source to make things happen for the people.. but in thep resent system, there no way people can bring down the minister or some authority from his power.. Mostly they rule and earn money for 5 years...
//தலைவனுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ எதிரான ஒரு போராட்டத்துக்கான தளம் இருக்கும்.
//
Thats what I am saying, we lost many things lets get together and protest against these criminal politicians and this system which hardly punish them for their mistak. I dont want to people unite in the name of communism.. I want them unite in the name of humanity, carring for each other.. If that starts among people then people will choose which way is offering best solution for them communism, capitalism or something else...
//
பொருளாதார சுதந்திரத்தையும் அரசியல் சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் மனிதனிடம் கொடுத்தாலே போதுமானது.

மனிதன் தன்னைத்தானே கவனித்துக்கொள்வான்.

இந்த மூன்றுக்கும் எதிரி கம்யூனிஸம்.//
Ok for sake of argument lets assume 20% of political, economic freedom and freedom expression is affected by communism...
What about the rest of the 80%,, which are affected by the present system...
You are aggreing present system is having lot of faults, why cant you talk about how to improve/correct that...As I said earlier
You are talking about the problems which were/are/will be caused by communism.. but why cant you talk about the problems which were, are and will be caused by this present system... Please dont say election are the only way, what if all the political parties are in the elections are corrupted... Is there anyway people can bring down the government or minister from power when they are ruling apart from peoples protest...

said...

அன்பின் பகத்
//1. You are worried about the people might have killed by the communism in near future.. Ok.. But I am asking you what about the people who are dying and suffering from various factors..
What kind of humanity is this saving the people from threat which might kill them in future and not talking about the problems which are killing peoples...
Even with your point of view, the present problems are mostly not caused by the Communism...
You are brave enough to talk about the problem of the future, and coward enough to not to talk about the present and past problems...//

கம்யூனிஸம் ஏற்கெனவே இந்திய மக்களை கொன்றுதான் வருகிறது. அதன் சோசலிஸ மாயையில் சிக்கிய இந்திய அரசியல்வாதிகள் நேரு முதற்கொண்டு, பொருளாதார சுதந்திரத்தை நசுக்கினார்கள். அதனால்தான் இந்தியாவில் பட்டினியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. மனிதன் தனது சுற்றுப்புற பிரச்னைகளை தானே தீர்த்துக்கொள்ள வல்லவன். அவனிடம், அரசாங்கத்துக்குதான் அந்த பொறுப்பு என்று அவனது தன்னார்வத்தை ஒழித்து, இன்றைக்கு வேலையிலிருந்து சாப்பாடுவரை, டிவியிலிருந்து வேட்டி புடவை வரை அரசாங்கத்தை நம்பி இருக்கும் ஒரு பிச்சைக்கார மனப்பான்மையை உருவாக்கியது இந்த சோசலிஸமே.

//2. You are saying election is one of the main source to make things happen for the people.. but in thep resent system, there no way people can bring down the minister or some authority from his power.. Mostly they rule and earn money for 5 years...//

காரணம் இந்த சோசலிஸ அணுகுமுறை. சோசலிஸ அணுகுமுறையின் ஆதார விஷயமான அதிகார குவிப்பு. எல்லா அதிகாரத்தையும் தன் கையில் குவித்து வைத்திருக்கும் மந்திரி, அடிப்படை தேவைகளை தீர்க்கக்கூட காசு கேட்கிறான். இதுதான் சோசலிஸத்தின் விளைவு.

//Thats what I am saying, we lost many things lets get together and protest against these criminal politicians and this system which hardly punish them for their mistak. I dont want to people unite in the name of communism.. I want them unite in the name of humanity, carring for each other.. If that starts among people then people will choose which way is offering best solution for them communism, capitalism or something else...//

ஒழிக்கவேண்டியது சோசலிஸமும், அது உருவாக்கிய பிச்சைக்கார மனப்பான்மையும், அது உருவாக்கிய கருத்தாக்கங்களுமே.

//Ok for sake of argument lets assume 20% of political, economic freedom and freedom expression is affected by communism...
What about the rest of the 80%,, which are affected by the present system...//

80 சதவீத பிரச்னைகளுக்கும் காரணமும் சோசலிஸமே. அது உருவாக்கிய கருத்தாக்கங்கள், அதிகாரக்குவிப்பு, மக்களை நம்பாமை, மக்களிடம் உருவாக்கும் பிச்சைக்கார மனப்பான்மை.

//You are aggreing present system is having lot of faults, why cant you talk about how to improve/correct that...As I said earlier
You are talking about the problems which were/are/will be caused by communism.. but why cant you talk about the problems which were, are and will be caused by this present system... Please dont say election are the only way, what if all the political parties are in the elections are corrupted... Is there anyway people can bring down the government or minister from power when they are ruling apart from peoples protest...
//

மக்களிடம் பிச்சைக்கார மனப்பான்மையை ஒழித்தாலே மக்கள் தானாக முன்னேறுவார்கள். அவர்கள் மூளையில்லாத சோம்பிகளல்ல. அவர்களது மூளையை கொண்டு உலகத்தின் பிரச்னைகளையும் தங்கள் பிரச்னைகளையும் தீர்ப்பார்கள். அரசாங்கமே வேலை கொடு என்று ஒரு மனிதன் தெருவில் ஊர்வலம் போவதை விட கேவலம் கிடையாது. அதற்கு காரணமான இந்த சோசலிஸ மன்ப்பான்மை, அமைப்பை ஒழிக்கவேண்டுமென்றால், அந்த கருத்தாக்கங்களின் மீதான நேரடியான தாக்குதல்களை சிந்தனையாளர்கள் மேற்கொள்ளவேண்டும்.