பொய் பித்தலாட்டத்துக்கு பெயர் பெற்ற மக இகவின் இன்னொரு கட்டுரை இங்கே விமர்சிக்கப்படுகிறது.
அதற்கு முன் இரண்டு இணைப்புகள்
Westinghouse wins massive China nuclear deal
China's second AP1000 reactor construction to start end-July - reportஅணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்?
புதிய ஜனநாயகம் - 2008
Written by புதிய ஜனநாயகம்
Thursday, 03 July 2008 21:03
"கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணமேடையில் வை'' என்பதைப் போல நடந்து கொள்கிறது, அமெரிக்க மேலாதிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமையான மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசு. நாடு மீளமுடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாதவாறு ஜூன் மூன்றாம் வாரம் பணவீக்கம் பதினொரு சதவீதத்துக்கும் மேலே எகிறி விட்டது. இதனால் அடிப்படைத் தேவைகளான உணவு தானியங்கள், விவசாய இடுபொருட்கள் முதல் இரும்பு, சிமெண்ட் மற்றும் பெட்ரோலிய எரிசக்திப் பொருட்கள் வரை அனைத்தின் விலையும் நாளும் எகிறிக் கொண்டே போகி றது.
கரெக்ட். அதனால்தான் எதிர்கால மின்சார தேவையை கருதி இன்றே அணுசக்தி உலைகளை எப்பாடுபட்டாலும் கொண்டுவரவேண்டும் என்று மன்மோகன்சிங் அரசு ஒற்றைக்காலில் இருக்கிறது. பெட்ரோலிய எரிசக்தி விலையை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாது. அதனால், தொடர்ந்து எகிறப்போகும் பெட்ரோலிய விலை இந்தியாவின் மக்களை மேலும் மேலும் ஏழைகளாக்கும். விவசாய இடுபொருட்களிலிருந்து உணவுப்பொருட்கள் விலை, இரும்பு சிமெண்ட் விலை எல்லாமும் இன்னும் அதிகவேகத்தில் விலை ஏறும். பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே மின்சாரத்தை குறைந்த விலையில் கொண்டுவர வேண்டுமென்றால், அணுசக்திஉலையை தவிர வேறு வழியில்லை.
விவசாயப் பொருளாதார நெருக்கடியும் உணவு நெருக்கடியும் முற்றி, அவற்றின் விளைவாக விவசாயிகளின் எழுச்சியும் உணவுக் கலகங்களும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் படுதோல்விகளைக் கண்டு வருகிறது. இன்னும் பத்து மாதங்களில் கிரமமான கால முறைப்படியே தேர்தல்கள் வந்தால் கூட, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பும் அருகிப் போய்விட்டது.
காங்கிரஸ் அரசுக்கு ஆட்சியை தக்கவைப்பதைவிட இந்திய மக்களுக்காக ஒரு நல்ல வேலையை செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதற்காக பாராட்டவே வேண்டும்.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட, மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம்; ஆட்சி கவிழ்ந்து விடும் என்று "இடதுசாரி'க் கூட்டணிக் கட்சிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? சீனாவின் சேர்மனே எங்கள் சேர்மன் என்று சத்தம் போட்டு நக்ஸல்பாரிகள் சொன்னார்கள். "சீனாவின் நலனே எங்கள் நலன்" என்று சத்தம் போடாமல் மார்க்ஸிஸ்டு கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் சொல்கின்றன. ஒரே குட்டையில் ஊறிய இந்திய மக்கள் நலனுக்கு எதிரான மட்டைகள்தானே நீங்கள் இருவரும்?
இருந்தபோதும், ""என்ன ஆனாலும் சரிதான்; பிரதமர் பதவியிலிருந்து விலக நேர்ந்தாலும், ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டாலும் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை அமலாக்கியே தீரவேண்டும்'' என்பதில் உறுதியாக இருக்கிறார், மன்மோகன் சிங்.
பாராட்ட வேண்டியவர் மன்மோகன்சிங்
முதுகெலும்பே இல்லாத இந்த மண் புழுவுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு துணிச்சல்? உலகையே கட்டி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர் ஆணவத்தோடு அது கொடுக்கும் நிர்பந்தம், அதனிடம் இந்த அடிமை காட்டும் விசுவாசம் இவற்றின் வெளிப்பாடுதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்பõடுபட்டாவது நிறைவேற்றியே தீருவோம் என்று மன்மோகன் சிங் சோனியா கும்பல் அடம்பிடிப்பதன் இரகசியம். இதற்காக அந்தக் கும்பல் அடைந்த ஆதாயம் பற்றிய உண்மை பின்னொரு காலத்தில் அம்பலமாகும். அல்லது அணுசக்தி ஒப்பந்தத்தினால் போர்வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பீரங்கி வண்டிச் சக்கரத்தில் பிணைக்கப்பட்டு இந்த நாடு இழுபடும்போது பல உண்மைகள் தெரிய வரும்.
பாவம் நீங்கள். அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று இன்னும் எவ்வளவுகாலம் வாய்ப்பாடு ஒப்பிக்கப்போகிறீர்கள்? ஏகாதிபத்தியம் என்றால் அர்த்தம் என்னவென்றாவது இன்னும்ஞாபகம் இருக்கிறதா? இல்லை அதுவும் மறந்துவிட்டு வெறும் வாய்ப்பாடாக ஆகிவிட்டதா? அமெரிக்கர்கள் வியாபாரிகள். தங்களது தொழில்நுட்பத்தை விற்க முயல்கிறார்கள். அந்த தொழில்நுட்பம் இந்தியாவில் தேவைப்படுகிறது. இது மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் ஈரானிலிருந்தும் பெட்ரோல் வாங்குவதை விட நலல்து. ஏனெனில், பெட்ரோல் வாங்குவதன் மூலம் பெட்ரோலை நீங்கள் உற்பத்தி செய்ய முடியாது. ஆனால், அணுசக்தி உலைகளை வாங்குவதன் மூலம், அணுசக்தி உலைகளை உற்பத்தி செய்வதை கற்றுக்கொள்ளலாம். (மீன் வாங்குவதை விட மீன் பிடிக்க கற்றுக்கொள்வதை வாங்குவது மாதிரி இது)
அதுசரி, இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கு சீனாவின் பினாமியாக, இந்திய கம்யூனிஸ்டு கும்பல்கள் அடைந்த ஆதாயம் பற்றிய உண்மை எப்போதாவது அம்பலமாகுமா? அல்லது அதுவும் உள்கட்சி ஆவணங்களில் ஒன்றாய் மறைக்கப்பட்டுவிடுமா?
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நலன்களுக்கு மிகமிக இன்றியமையாதது என்றும், இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலாக்கப்படாவிட்டால் இந்தியா ஒரு உலகப் பொருளாதார வல்லரசாக பாய்ந்து முன்னேறுவது தடைப்பட்டுப் போகும் என்றும் மன்மோகன் சோனியா கும்பல் மட்டுமல்ல, அதற்கு எதிர்த்தரப்பில் நிற்கும் அரசியல் எதிரிகளான அத்வானி மோடி கும்பல் கூட வாதிடுகிறது.
அது உண்மைதான் என்று நீங்கள்தானே இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கூறினீர்கள்? பெட்ரோலிய விலை ஏறுகிறது. இதனால், உணவுப்பொருட்கள் விவசாய இடுபொருட்கள் விலை ஏறுகின்றன. இவ்வாறு பெட்ரோலியத்தோடு இந்தியாவின் எதிர்காலத்தை இணைப்பதுபோல ஆபத்து வேறு எதுவுமில்லை. அப்படியென்றால், அணுசக்தி போன்ற பெட்ரோலியம் சாராத தொழில்நுட்பங்களோடுதானே இந்தியாவின் எதிர்காலத்தை இணைகக்வேண்டும்?
ஆனால் உண்மையோ வேறுவிதமாக உள்ளது.
எப்படி?
""இந்தியா தற்போது மொத்தம் 1,27,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு நிகர உற்பத்தி வளர்ச்சி விகிதப்படி 201617 ஆம் ஆண்டு 3,37,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையை எட்டிவிட வேண்டும். இந்த அளவு மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (யாருடைய நலனுக்கான பொருளாதார வளர்ச்சி என்பது ஒருபுறம் இருந்த போதிலும்) கடுமையாக பாதிக்கப்படும். கடுமையான எரிசக்தி (மின்சார) பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும்; அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அதாவது நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவையை நிறைவேற்றுவதற்கான அவசியத்துக்காகத்தான் அமெரிக்காவுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தம். இது முழுக்க முழுக்க பொருளாதார ரீதியிலான சிவிலியன் தேவைக்கான ஒப்பந்தம்தான். இராணுவ ரீதியிலானதோ, அரசு தந்திர ரீதியிலானதோ பிற பொருளாதார ரீதியிலானதோ இல்லை. அணுஆயுதத் தயாரிப்புக்கான சோதனை உட்பட இந்தியாவின் உள்நாட்டுவெளிநாட்டுக் கொள்கைகளைக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடியதோ அல்ல'' என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.
சரியானதுதானே?
இவர்கள் வாதிடுவதைப் போல அமெரிக்காவுடனான இந்திய அணுசக்தி ஒப்பந்தம் இந்திய நாட்டு நலன்களுக்கானது தான் என்றால், அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்போ, பின்போ நாட்டு மக்கள் முன் பகிரங்கமாக வைத்து, நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் திறந்த, விரிவான வாதங்கள் நடத்துவதற்கு பதில் முற்றிலும் இரகசியமாக சதித்தனமாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டது ஏன்?
இல்லையே? பாராளுமன்றத்துக்கு தெரிவித்து, ஏன் ஆளும்கட்சியில் உள்ளவர்களுக்கும் தெரிவித்துத்தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இந்தியாவின் அறிவியல் அமைப்பில் உள்ளவர்கள் பரிசோதித்துத்தான் கையெழுத்தாகிறது. சோனியாவுக்கும், மன்மோகன்சிங்குமே இதில் பங்கு பெற்றவர்கள் என்று நீங்கள் நினைத்தால் வருத்தமே பட முடியும். முன்பு இந்திய விஞ்ஞானிகள் எதிர்த்தார்கள். பிறகு அவர்களது கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டதும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உட்பட பலரும் இதனை ஆதரிக்கிறார்கள்.
ஜூன் 25க்குள் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும் என்று துடித்த மன்மோகன் சோனியா கும்பல், அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குக் கூட காட்ட மறுப்பது ஏன்?
ஒப்பந்தத்தின் முழு வடிவத்தையும் காட்டுவது சரியல்ல. எந்த புள்ளியில் தற்போது இந்திய தொழில்நுட்பம் இருக்கிறது என்பதை உலகத்தில் உள்ள இந்தியாவின் எதிர்களுக்கு தெரிவித்துவிடும். இதிலுள்ள ஷரத்துகள் எங்கெங்கு இந்தியாவின் அணு உலைகள் இருக்கின்றன எங்கு என்ன தேவைப்படுகிறது போன்ற துல்லியமான விஷயங்களை கொண்டவையாக இருக்கலாம். அந்த ஷரத்துக்களும் இரண்டு நாட்டுக்கு இடையேயான ஒப்பந்தம். இரண்டு நாடுகளின் அனுமதியும் இந்த ஷரத்துகளை வெளியிட அனுமதிக்க வேண்டும்.
மேலும், ஷரத்துக்களை இடதுசாரி, நக்ஸலைட் கும்பலிடம் காட்டினால், நேராக கொண்டுபோய் சீனாவிடம் கொடுத்துவிடுவார்கள் என்று பயம் காரணமாக இருக்கலாம்.
அந்நிய ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும் அந்த இரகசிய ஒப்பந்த விவரம் இவர்களுக்கு தெரியக் கூடாதா? ""தேசிய நலன்களுக்கான இரகசிய உடன்பாடுகள் நிறைந்த'' தாகக் கூறப்படும் அந்த ஒப்பந்தம், உண்மையில் ஒரு தேசத் துரோக ஒப்பந்தம்தான். அதனால் மன்மோகன் சோனியா கும்பல் அதை இரகசியமாக வைப்பதிலும் அமலாக்குவதிலும் இவ்வளவு அக்கறை காட்டுகிறது.
ரகசியமாக இருக்கிறது என்பதாலேயே அது தேச துரோக ஒப்பந்தமா? எந்த அணுசக்தி ஒப்பந்தத்தையும் பகிரங்கமாக ஆக்க முடியாது. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் புரியும்.
அது சரி, இதே கருத்தை சீனா, ரஷியா போன்ற கம்யூனிஸ பொன்னுலக நாடுகளுக்கு அப்ளை பண்ணுவீர்களா?
சீனா அமெரிக்காவுடன் அணுசக்தி கூட்டு வைத்தபோதும், மாவோ அமெரிக்காவின் காலடியில் விழுந்தபோதும் சீன மக்களிட்ம் அனுமதி கேட்டார்களா? அவர்களிடம் பொது வாக்கெடுப்பு வைத்தார்களா?
சீன மக்களை புழுவுக்கும் கீழாக மதித்து அவர்களின் உடலின் மீது ரத்தவெறி ஆடிய சீன கம்யூனிஸ்டுகள் எப்போதாவது சீன மக்களின் கருத்துக்களை கேட்டார்களா? அல்லது கருத்துக்களைத்தான் மதித்தார்களா?
ஏன் இப்போதாவது அந்த ஷரத்துக்களை சீனா பகிரங்கப்படுத்த அழைப்பு விடுப்பீர்களா?
இந்த உண்மை இந்து மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் தெரியும். ஆனால், ""இந்திய தேசிய நலன்களுக்கான''தென்று ஏகபோக உரிமை கொண்டாடும் இந்த கும்பல், உண்மையில் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை. இதைப் பகிரங்கமாகவே ஒப்புக் கொள்ளும் அக்கும்பல் அந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் தனக்கும் ஒரு பங்கு வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறது. ஒப்பந்தத்துக்குத் தாங்கள் எதிரானவர்கள் அல்ல; தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அணுஆயுதப் பரிசோதனைக்கான இந்தியாவின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் மறுபரிசீலனைக்குப் பிறகு ஒப்பந்தத்தை முடிப்போம் என்கிறது.
பாஜக கூறுவது அதன் நிலைப்பாட்டின் படி சரியானது. இதில் ஒரே ஒரு ஷரத்தை சேர்க்கவேண்டும் என்று கோருகிறது. இந்தியா அணு ஆயுதங்களை பரிசோதிப்பதை இந்த ஒப்பந்தம் தடை செய்யக்கூடாது என்று கோருகிறது. தற்போதைய ஒப்பந்தம் தடை செய்யவில்லை. ஆனால் அப்படி அணு ஆயுத பரிசோதனை நிகழ்த்தினால் இந்த ஒப்பந்தத்தை நீக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை நீக்கவில்லை.
இதைப் போலத்தான், நாட்டின் மின் உற்பத்தித் தேவைக்கு மிகவும் இன்றியமையாதது என்று கூறி அமெரிக்காவின் ""என்ரான்'' நிறுவனத்துடன் (ஜனநாயக முற்போக்கு சக்திகளின்) கடும் எதிர்ப்பையும் மீறி ஒரு துரோகத்தனமான ஒப்பந்தம் போட்டுக் கொண்டது, மகாராட்டிராவிலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு. அந்த ஒப்பந்தம் இலஞ்சஊழல் நிறைந்த தேச துரோகமென்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பல் என்ரானுடன் மறுபேரம் பேசி மறுஒப்பந்தம் போட்டுக் கொண்டது. பின்னர் அந்தத் திட்டமே, இந்திய நாட்டை அமெரிக்க மின்நிறுவனம் பகற்கொள்ளையடிப்பது என்று நிரூபணமாகியது. இதைப்போன்றே துரோகமிழைத்து அமெரிக்காவுடனான மறுபேரம், மறுஒப்பந்தம் போட்டு ஆதாயம் அடையவே இந்து பாசிச ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பல் துடிக்கிறது. அதனால், தற்போதைய ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே, ஒப்பந்தத்தை அமலாக்காமல் போனால் மன்மோகன் சிங்கின் நம்பகத்தன்மையும் அதிகாரமும் ஆளுமையும் பறிபோய் விடும் என்று உசுப்பேற்றி வருகிறது.
ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்னும் உங்கள் மூளை அபாரமானது. என்ரான் என்ற ஒரு தனியார் நிறுவனம் இந்தியாவோடு செய்த ஒப்பந்தம் மோசமானதால், எந்த தனியார் நிறுவனம் செய்யும் ஒப்பந்தமும் மோசடியானது என்று கம்யூனிஸ்டு மூளைக்குத்தான் தெரியும்.
நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பராமரிப்பதற்கு மின் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்க வேண்டும் என்பது உண்மைதான் என்றபோதும், அதற்கு அணுசக்தி மின்உற்பத்திதான் ஒரே வழி, சிறந்த வழி என்பதும், அதையும் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்நாட்டிலிருந்து அணு உலைகளையும் அணுசக்திக்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்துதான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் உண்மையல்ல.
அப்படியா? பரவாயில்லையே? கம்யூனிஸ்டு எஞ்சினியர்கள் என்ன யோசனை கூறுகிறார்கள்?
2006ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி நாட்டின் மொத்த மின்உற்பத்தியில் 3 சதவீதம். அதாவது 3,900 மெகாவாட் மட்டுமே அணு மின்சக்தி ஆகும். இந்தியஅமெரிக்க அணுமின்சக்தி ஒப்பந்தம் முழுமையாகவும் சரியாகவும் அமலானால் கூட, 2016ஆம் ஆண்டில் மொத்த மின் உற்பத்தியான 3,36,000 மெகாவாட் என்ற அளவில் 6 சதவீதம் மட்டுமே — அதாவது 20,000 மெகாவாட் தான் அணு மின்சக்தியாக இருக்கும். இதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும் இன்றியமையாததாகவும் இருக்கும் என்று அமெரிக்க தாசர்கள் புளுகித் தள்ளுகிறார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய அணு உலைகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இதனால் அமெரிக்க ஏகபோக முதலாளிகளும் அவர்களின் கூட்டாளிகளான இந்தியத் தரகு முதலாளிகளும் கொழுப்பதற்கான வழிவகை செய்யப்படும்.
பிதற்றல். 6 சதவீதம் என்பது குறைந்த எண்ணிக்கை அல்ல. இந்தியா 9 சதவீத வேகத்தில் வளர்கிறது. ஆகவே மின்சாரத்தின் தேவை அதைவிட அதிமாக வேகத்தில் வளரும். எல்லா வகையிலும் மின்சாரத்தேவையை சந்திப்பதுதான் சரியான முறை. இரண்டாவது அணு உலைகள் வருவது மேலும் அணு உலைகளை உருவாக்கும் தொழில்நுட்ட்பத்தையும் கொண்டுவருகிறது. ஆகவே, 6 சதவீதம் என்பது குறைவான அளவும் அல்ல, அது ஆறு சதவீதத்திலேயே நிற்கப்போவதும் இல்லை.
கம்யூனிஸ்டுகள் ஆற்றில் அணை கட்டி மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
பயோடீஸல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
பெட்ரொல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இன்னும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கும், கடற்பாசி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கும், சூரிய வெளிச்சம் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கும்தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த தொழில்நுட்பம் சீனாவின் எதிர்ப்பு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருமென்றால் அதனையும் எதிர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அதுமட்டுமல்ல, அணு மின் உற்பத்தி அமெரிக்காவிலேயே இலாபகரமானதாயில்லை என்பதால், கடந்த 30 ஆண்டுகளில் புதிய அணுமின் திட்டங்கள் எதுவும் அங்கு நிறுவப்படவேயில்லை. அங்கேயே காலாவதியாகிப்போன தொழில்நுட்ப அடிப்படையிலான கழித்துக் கட்டப்பட்ட அணுமின் உலைகளை நமது நாட்டின் தலையில் கட்டுவதற்கு அமெரிக்கா எத்தணிக்கிறது. அதோடு, இந்தியாவின் அணுமின் உற்பத்தி, மற்றும் அணுஆயுதச் சோதனை மற்றும் தயாரிப்புக்கான மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தி ஆகிய அனைத்தையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, உலகப் போர் வெறியனான அமெரிக்காவின் உலக மேலாதிக்க யுத்ததந்திரத்தின் சேவகனாக இந்தியாவை மாற்றிக் கொள்வது ஆகிய உள்நோக்கங்களுக்காகவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈடேற்றிக் கொள்ள முயலுகிறது.
அணுசக்தி லாபகரமானது அல்ல என்பதால், அணு சக்தி நிலையங்கள் நிறுவப்படாமல் இருக்கின்றன் என்று கூறுவது தவறு. தற்போது அணு சக்தி நிலையங்களை மீண்டும் நிறுவ வேண்டும் என்று பலத்த குரல் எழுந்துள்ளது.
மேலும் காலாவதியான அணு உலைகளை பெயர்தெடுத்து இந்தியாவில் நடமுடியாது. அமெரிக்காவில் தற்போது அணு உலைகள் மூலம் மின்சாரம் என்பது மீண்டும் புழக்கத்துக்கு வந்திருக்கிறது. அமெரிக்காவும் ரஷியாவும் பலவேறு விபத்துக்களை சந்தித்தே இந்த தொழில்நுட்பத்தை துல்லியமாக்கியிருக்கிறார்கள். அந்த விபத்துக்களை சந்திக்காமலேயே சரியாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை இந்தியா பெறுகிறது. இந்த விபத்துகளே அமெரிக்காவில் அணு உலைக்கு எதிரான மக்கள் கருத்தை தோற்றுவித்திருந்தது. தற்போது பாதுக்காப்பான அணு சக்தி உத்திரவாதம் வழங்கப்படுகிறது.
தற்போது அமெரிக்காவில் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்ய எதிர்ப்பு இருக்கிறது. ஏனெனில் அது மிகவும் அதிகமான கரியமிலவாயுவையும், நைட்ரஸ் ஆஸிட், பாதரசம் போன்றவற்றை சுற்றுசூழலில் கலந்து விஷமாக்குகிறது என்று எதிர்ப்பு இருக்கிறது. ஆகவே அவர்களே தற்போது பாதுகாப்பான அணுமின்சக்தி உற்பத்திக்கு ஆதரவுதெரிவித்துவருகின்றனர். அதற்கு காரணம் ஏறும் பெட்ரோல் விலை என்பதும் ஒரு உண்மை.
இந்தியாவில் பாதுகாப்பாகத்தான் அணுசக்தி உற்பத்தி நடந்துவந்திருக்கிறது.
இதற்கு நேர்மாறாக ஒப்பீட்டு ரீதியில் மலிவான செலவில், நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையானவாறு நீர்மின் சக்தி, அனல் மின்சக்தி மற்றும் சொந்த தொழில்நுட்ப அடிப்படையிலான அணு மின்சக்தி ஆகியவற்றை நமது நாடு சுயசார்பாகவே வளர்த்துக் கொள்ள முடியும் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
என்னய்யா ஆகாச புளுகு?
எந்த நீர் மின் சக்தி திட்டம் கம்யூனிஸ்டுகளால் அதுவும் மாவோயிஸ்டுகளால் ஆதரிக்கப்பட்டிருக்கிறது என்று பட்டியல் தரமுடியுமா? எல்லா இடங்களிலும் நீர்மின்சார மின்சக்தி அணைகளை எதிர்ப்பதன் முதல் ஆளாக நிற்பது நீங்கள்தானே? இப்போது திடீரென்று அதனை ஆதரிக்கிறீர்களா?
சொந்த தொழில்நுட்ப அடிப்படையிலான அணு மின்சக்தி என்பது இந்தியாவின் கனவாக இவ்வளவு காலம் இருந்தது. அதனை சரி செய்ய இன்னும் ஏராளமான பொருள் செலவு செய்யவேண்டும். தற்காலிகமாக இந்த ஒப்பந்தங்கள் மூலம் மின்சார தேவையை சரி கட்டி அதற்குள் சுயசார்புள்ள அணு சக்தி திட்டங்களை உருவாக்குவதுதான் இந்தியாவின் நோக்கம்.
அனல்மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி ஆதாரம் நமது நாட்டிலேயே இருக்கும் அதேசமயம், மொத்தம் 1,50,000 மெகாவாட் அளவு நீர்மின் உற்பத்திக்கான வாய்ப்பிருந்த போதும் 33,000 மெகாவாட் அளவே நீர்மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நேபாளம், பூட்டானுடன் தகுந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் 55,000 மெகாவாட் நீர்மின் சக்தியை இறக்குமதி செய்து கொள்ளவும் முடியும். ஈரானுடனான குழாய் வழி பெட்ரோலிய எரிவாயு இறக்குமதி திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் நாட்டின் எரிசக்தித் தேவையை முற்றிலுமாகச் சமாளித்துவிட முடியும்.
நேபாளில்? ஹா ஹா? நிச்சயம் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அவை அமைந்திருக்கும் இடங்கள் நிலநடுக்கத்துக்கும் மண்சரிவுக்கும் பெயர் பெற்றவை. ஆகவே வாய்ப்பிருந்தபோதும் உபயோகிக்க முடியாத மின்சார சக்தி அது. உத்தரகண்டில் இப்படிப்பட்ட ஒரு நீர் மின்சார திட்டத்துக்கு பலத்த கம்யூனிஸ்டு எதிர்ப்பு!
சரி ஈரானிடமிருந்து எரிவாயு இறக்குமதி வந்தால், எரிபொருள் தன்னிறைவை அடையமுடியுமா? அது பாகிஸ்தான் வழியாகத்தான் வரவேண்டும். அது நிலையற்ற நாடு. ஆகவே எப்போதும் அது தடைபடக்கூடும். ஏன் அது ஒரு மிரட்டலுக்கும் உபயோகப்படுத்தப்படலாம். அப்படியிருக்கும்போது அது எப்படி நல்ல தீர்வாகும்? ஒருவேளை சீனா பாகிஸ்தானுடன் நல்ல உறவுடன் இருந்துகொண்டு இருப்பதால், சீனா இந்தியாவை பாகிஸ்தான் மூலம் கட்டுப்படுத்த இப்படி யோசனை கூறுகிறீர்களா?
இவ்வளவு இருந்தபோதும், அமெரிக்காவுடனான அடிமைத்தனமான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என்று மன்மோகன் சோனியா மட்டுமல்ல. அத்வானி மோடி முதலிய துரோகிகளும் உறுதியாக இருக்கின்றனர். யார் அமெரிக்க எஜமானனுடன் விசுவாசமாக நடந்து கொண்டு பேரங்கள் பேசி அதிக ஆதாயம் அடைவது என்பதில்தான் இவ்விரு கும்பல்களுக்கிடையில் வேறுபாடு உள்ளது. ஆனால் மதவாத சக்திகளை எதிர்ப்பதுதான் முதன்மையானது என்று கூறிக் கொண்டு போலி சோசலிச, போலி கம்யூனிச, போலி மார்க்சிச இடதுசாரிக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் ஊடலும் கூடலுமான உறவு வைத்துக் கொண்டு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் அதேசமயம், இந்த அரசு கவிழ்ந்து போகவும் விடமாட்டோம் என்று சந்தர்ப்பவாத நாடகமாடுகிறது. ஆரம்பத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகத் தொடங்கிய இடதுசாரி கூட்டணி, பிறகு அதன் அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், ஒப்பந்தம் குறித்த தமது கவலைகளை சந்தேகங்களைப் போக்க வேண்டும் என்றும் இறங்கி, இதற்காக ஒப்பந்தத்தையும், அமெரிக்காவின் ""ஹைட்'' சட்டத்தையும் ஆராய்வதற்கான கூட்டுக் கமிட்டி அமைப்பது என்பதை ஏற்றுக் கொண்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் நிபந்தனைகளை ஏற்கும் ஒப்பந்த நகல் தயாரிப்பதையும் ஏற்றுக் கொண்டது. இப்போது இந்த நகலை இறுதியாக்கி இந்தியா கையொப்பமிட்டு விட்டால் போதும்; அமெரிக்க நாடாளுமன்றம் இந்தியாவுடனான தனது அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி விடும். அப்புறம் அது அமலுக்கு வந்துவிடும். இப்போது இந்த இறுதி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவிடத்தான் இடதுசாரிக் கூட்டணி எத்தணிக்கிறது.
இடதுசாரி கூட்டணிக்கு சீனாதான் ஒரே தாய்நாடு. உங்களுக்கும் அதே. ஆகவே காரணம் வேறு.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தித் தேவையை எப்படி உத்தரவாதப்படுத்துவது என்ற அமெரிக்கத் தாசர்களின் வாதத்துக்குள் அரசியல் நிர்பந்தம் காரணமாக சிக்கிக் கொண்டு விட்ட இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த விவகாரத்திலும் சமசரசரணடைவு தவிர வேறு வழி கிடையாது. ஆனால், நாட்டுக்குத் தேவையானது எரிசக்தித் தேவையை உத்தரவாதப்படுத்துவதல்ல; எரிசக்தித் துறையின் சுயசார்பும் இறையாண்மையும், மறுகாலனியாதிக்கத்திலிருந்து விடுதலையும்தான்.
· ஆர்.கே.
ஓகே வாய்ப்பாடு வந்துவிட்டது. இறுதியில் ஒரு கோஷம் போடவேண்டும். போட்டாய்விட்டது.
எரிசக்தி துறையின் சுயச்சார்பு என்றால், பெட்ரோலிய இறக்குமதியை முழுவதும் நிறுத்தவேண்டும். சரியா? உடனே செய்யவேண்டுமா அல்லது இன்னும் ஒரு பத்துவருடம் கழித்து செய்யலாமா? நீங்களே சொல்லுங்கள் அய்யா.
ஆமாம் இறையாண்மை பற்றி பேசுவது யார்? கம்யூனிஸ்டுகளா? சீனாவின் சேர்மனே எங்கள் சேர்மன் என்று வசந்த இடி முழக்கமிட்ட நக்ஸல்களா? அடடா... என்ன ஆச்சரியம்!
தூ.. உங்களையெல்லாம் இன்னும் இந்தியாவில் பச்சை துரோக அரசியல் பண்ண அனுமதிக்கும் இந்திய மக்களை என்ன சொல்வது?
24 Comments:
அருமையான பதிவு, உங்கள் பழைய சில பதிவுகளையும் படித்திருக்கிறேன் மிக நன்றாக எதிர்வாதங்களை எடுத்து வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
நிச்சயமாக அவர்கள் உணரமாட்டர்கள் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். உணராதது மட்டும் இன்றி அதை இளைஞர்களிடம் பரப்பவவும் செய்வர், ஏன் என்பதும் உங்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன் அவர்கள் அதிகாரத்தை குறுக்கு வழியில் (வன்முறையில்) அடைய நினைப்பவர்கள்.
வரலாற்றின் மிக நீளமான காமெடி எது தெரியுமா?
74 வருட ரஷ்ய கம்யூனிசம்
சரவணன்
சரியன எதிர்வாதங்கள் அல்ல அவர்கள் கேள்விக்கு உங்களிடம் நேர்மையான பதில் இல்லை
இது ஜனநாயக நாடு இவர்களால் பத்திரிகை நடத்தமுடியும், தெருமுனைக் கூட்டம் போட முடியும், கலாச்சாரக் கட்டவிழ்ப்பு கவிதை எழுத முடியும், மாநாடு நடத்தமுடியும் உணர்ச்சி ததும்ப பேசி (காமெடி பண்ணி என்றும் படிக்கலாம்) இளைஞர்களை அவர்கள் பின் சேர்க்க முடியும்.
இதில் ஏதாவது ஒன்றை கம்யூனிஸம் நடக்கும் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக செய்ய முடியுமான்னு கேட்டு சொல்லுங்க தமிழ்மணி சார். இதுல ஒண்ணு செய்ய முடியும்னாலும் அப்புரம் பேசலாம்.
சரவணன்
//Anonym hat gesagt...
சரியன எதிர்வாதங்கள் அல்ல அவர்கள் கேள்விக்கு உங்களிடம் நேர்மையான பதில் இல்லை//
ஐ லைக் திஸ் காமெடி வெரி மச்...
நேர்மையான பதில் என்பது நீங்கள் விரும்பும் பதில் எனக்கொள்ளவேண்டுமா.
ஏன் வர்க வெறியர்கள், அமெரிக்க ஏகாதிபத்திய அடிமைகள் அப்படின்னு சொல்லாம கமென்ட் போட்டுருக்கீங்க. உணர்ச்சி ததும்ப பேசாததால் நீங்கள் உண்மைத்தோழர் அல்ல என எடுத்துக்கொள்ளலாமா ,
சரவணன்
did you knew about the story of Enron in maharastraa...?
and the failures of Atomic power stations...? if it is positive why we cant use thorium which got from our east coast area.
Naxalpari movement except sarumachumthaar didnt accept mao as their chairman.
Saravan..did u mean short-cut way = violence. r u remember 2002 gujarath and cosequtive assembly election.?
You cant understand about communism. Bcause communism is not a party. it represent the civilised system. it is advanced one like science. if anybody against sciece has metaphysist like rss. For your kind information, communism didnt came yet in any part of the world.
India naturaly has got lot of "Thorium" one of the radio active material can be used for "Atomic energy"..
If we speed up our research then in 5 years time, we can attain the Thorium reactor technology.. It will put India in a far greater position...
But now with these aggrement, India can not test new nuclear fuels and since aggrement states the 'India will have unlimited access to the nuclear fule from other countries such as Australia, US'.. India are forced to use their technology and buy fuel from them...
One more thing, Only very few countries going for Nuclear enery.. for their energy needs.. SO FAR THERE IS NO SAFE WAY OF KEEPING NUCLEAR WASTE... And all the world scientists are not positivie about finding one such method to store nuclear waste in near future...
Since nuclear waste can emite Radiation.. thousands of years.. If we think about next 50 years growth of Indian economy.. After 1 or 2 generations.. nuclear waste will be a biggest problem.. After all we have got only one earth...
So those who care for human race...Thorium or Uranium.. say No to nuclear energy.. Go Green and Use Solar, Wind, Water energies...
சரியன எதிர்வாதங்கள் அல்ல அவர்கள் கேள்விக்கு உங்களிடம் நேர்மையான பதில் இல்லை//
ஐ லைக் திஸ் காமெடி வெரி மச்...
நேர்மையான பதில் என்பது நீங்கள் விரும்பும் பதில் எனக்கொள்ளவேண்டுமா.
ஏன் வர்க வெறியர்கள், அமெரிக்க ஏகாதிபத்திய அடிமைகள் அப்படின்னு சொல்லாம கமென்ட் போட்டுருக்கீங்க. உணர்ச்சி ததும்ப பேசாததால் நீங்கள் உண்மைத்தோழர் அல்ல என எடுத்துக்கொள்ளலாமா ,
சரவணன் நான் உண்மைத்தோழரும் அல்ல பொய் தோழரும் அல்ல அவர்கள் கேள்விக்கு உங்களிடம் நேர்மையான பதில் இல்லை என தமிழ்மணியின் பதிவை படித்த பின் எனக்கு தோன்றியது எனவே பின்னூட்டமிட்டேன் தமிழ்மணிக்கு பதில் சரவணன் ஏன் உணர்ச்சிவசப்படுகிறீர்
//You cant understand about communism. Bcause communism is not a party. it represent the civilised system. it is advanced one like science.//
எனக்கு தெரிஞ்சு அறிவியல் அப்படின்னா knowledge attained through study or practice நீங்க வேற கம்யூனிஸம் எங்கயும் இன்னும் வரலன்னுட்டீங்க அப்புறம் எப்படிங்க அது அறிவியல் ஆகும். ப்ரூஃப் கேக்கறான் பாரு பார்ப்பானா பாருன்னுட போறீங்க.
//if anybody against sciece has metaphysist like rss.//
அய்யய்யோ சொல்லிட்டீங்க.. நெம்ப டேங்க்ஸ்
//communism didnt came yet in any part of the world.//
அப்படியா நெம்ப டேங்க்ஸ் கம்யூனிஸத்து பேரால கொல்லப்பட்டவங்களுக்குலாம் இது தெரியுமா. அவர்கள் களைதானே எடுக்கப்பட்டார்கள் சோ நோ ப்ராப்ளம்.
//For your kind information, communism didnt came yet in any part of the world.//
அய்யய்யோ.. நெம்ப நெம்ப டேங்க்ஸுங்க..
இது நம்பள்து, and communism will never come to power in India .. Thank GOD
வலையில் நிறைய கம்யூனிஸம் பற்றிய ஆதரவு வலைப்பதிவுகள் உள்ளன அதை படியுங்கள் அப்பொழுது நீங்கள் அதை ஆதரித்து எழுதும்போது கொஞ்சமாச்சும் காமெடி இல்லாமல் உண்மை போல எழுத முடியும். இது உங்களை கிண்டல் செய்ய அல்ல, அவர்கள் பதிவுகளை படித்து உணருங்கள் அதன் பிறகு எது சிறந்தது என முடிவெடுங்கள்
சரவணன்
//சரவணன் நான் உண்மைத்தோழரும் அல்ல பொய் தோழரும் அல்ல அவர்கள் கேள்விக்கு உங்களிடம் நேர்மையான பதில் இல்லை என தமிழ்மணியின் பதிவை படித்த பின் எனக்கு தோன்றியது எனவே பின்னூட்டமிட்டேன் தமிழ்மணிக்கு பதில் சரவணன் ஏன் உணர்ச்சிவசப்படுகிறீர்//
சரவணன் ???????
அண்ணா மன்னிச்சுகங்கன்னா சும்மா கிண்டலா எழுதனுங்க,
//சரவணன் நான் உண்மைத்தோழரும் அல்ல பொய் தோழரும் அல்ல அவர்கள் கேள்விக்கு உங்களிடம் நேர்மையான பதில் இல்லை என தமிழ்மணியின் பதிவை படித்த பின் எனக்கு தோன்றியது எனவே பின்னூட்டமிட்டேன் தமிழ்மணிக்கு பதில் சரவணன் ஏன் உணர்ச்சிவசப்படுகிறீர்//
நான் உணர்ச்சி வசப்படலைங்க ஜஸ்ட் கம்யூனிஸத்துக்கு ஒரு கிண்டல், பெர்ஸனலா எடுத்துகிடாதீங்க, தப்பா நெனச்சுகிட்டீங்கன்னா மன்னிச்சுடுங்கண்ணா
சரவணன்
மக்களே நான் இங்க கம்யூனிஸத்தை கிண்டல் பண்ணி பின்னூட்டம் போட்ட தனிப்பட்ட முறையில் உங்களை கிண்டல் பண்ணுவதாக எடுத்துக்கொள்ளவேண்டாம் எனக்கேட்டுகொள்கிறேன்
சரவணன்
சரவணன், மற்றும் அனானியின் மறுமொழிகளுக்கு நன்றி.
அனானி ஏன் அனானியாகவே எழுதவேண்டும் என்று தெரியவில்லை.
ஒரு ஐடி எடுத்துக்கொண்டு எழுத கோருகிறேன்.
பின்னர் விவாதம் செய்ய ஏதுவாக இருக்கும்.
//You cant understand about communism. Bcause communism is not a party. it represent the civilised system. it is advanced one like science. if anybody against sciece has metaphysist like rss. For your kind information, communism didnt came yet in any part of the world.
//
இதனை கேட்டு புளித்துவிட்டது.
இயேசுவின் இரண்டாம் வருகை, கல்கி அவதாரம், இஸ்லாமிய ஷாரியா படி நடக்கும் நாடு போன்ற கற்பனைகளோடு சேர்த்து வைக்க வேண்டிய புளுகு.
///சரி ஈரானிடமிருந்து எரிவாயு இறக்குமதி வந்தால், எரிபொருள் தன்னிறைவை அடையமுடியுமா? அது பாகிஸ்தான் வழியாகத்தான் வரவேண்டும். அது நிலையற்ற நாடு. ஆகவே எப்போதும் அது தடைபடக்கூடும். ஏன் அது ஒரு மிரட்டலுக்கும் உபயோகப்படுத்தப்படலாம். அப்படியிருக்கும்போது அது எப்படி நல்ல தீர்வாகும்? ஒருவேளை சீனா பாகிஸ்தானுடன் நல்ல உறவுடன் இருந்துகொண்டு இருப்பதால், சீனா இந்தியாவை பாகிஸ்தான் மூலம் கட்டுப்படுத்த இப்படி யோசனை கூறுகிறீர்களா?
//
ஆஹா இப்போது புரிகிறது
ஏண்டா ஈரானிடமிருந்து வாங்கு என்று இந்தியாவை கம்மூனிஸ்டுகள் படுத்தி எடுக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
இப்போல்ல தெரிகிறது.
IAEAஉடனான பாதுகாப்பு வரைவு
IAEAஉடனான பாதுகாப்பு வரைவு
நல்ல பதிவுங்க...
அணு சக்தி நாட்டிற்கு தேவையான ஒன்று.
இன்னிக்கு IAEA Draft version
MEAINDIA.NIC.INல வெளியிட்டு இருக்காங்க..
It looks fair and consistent with what Manmohan singh is saying so far..
Even PM said sarcastically said two days before..
"Lefts are Patriots, We will discuss with him and clear out all their concerns"..
language English or tamil? பண்ணமுடியுமா..
நன்றி வழிப்போக்கன்
அதுவாக அப்படி ஜெர்மனில் வருகிறது.
தமிழ்மணி
அசுரன், ஏகலைவன் கும்பல் யார் யாரிடமோ வா. விவாதிக்கலாம் என்கிறார்கள்.
நீங்கள் இப்படி வலிந்து கூப்பிடுகிறீர்கள்.
ஓடுகிறார்கள்..
:-))
//தமிழ்மணி
அசுரன், ஏகலைவன் கும்பல் யார் யாரிடமோ வா. விவாதிக்கலாம் என்கிறார்கள்.
நீங்கள் இப்படி வலிந்து கூப்பிடுகிறீர்கள்.
ஓடுகிறார்கள்..
:-))//
என்ன இப்படி சொல்லிட்டீங்க. தமிழ்மணி அல்பவாதி, பார்பனீயர், அமெரிக ஏகதிபத்திய அடிவருடி, வர்க வெறியர் இன்னும் நாக்கு சுளுக்குற மாதிரி நிரைய சொல்லி அதனால விவாதிக்க விரும்பவில்லை அவர்களே போட்டுருப்பாங்க பார்கலியா... :-)
சிலர் தமிழ்மணி தோத்து ஓடிவிட்டார் அப்படின்னு போட்டுருப்பாங்க அந்த காமெடி இதை விட நல்லா இருக்கும்
இவர் அவர்களை நண்பர்கள் என்று விளித்து லின்க் கொடுத்துள்ளார்.
வாழ்க கருத்துச்சுதந்திரம்
சரவணன
நன்றி சரவணன்.
இதனை ஒரு முறையாகவே செய்து வருகின்றனர்.
விவாதத்துக்கு வாருங்கள் என்று விவாதத்துக்கு அழைக்கிறேன்.
ஏராளமான கேள்விகள் கேட்டிருக்கிறேன்.
இதுவரை ஒரு கேள்விக்குக் கூட பதிலில்லை.
நன்றி
////You cant understand about communism. Bcause communism is not a party. it represent the civilised system. it is advanced one like science.//
எனக்கு தெரிஞ்சு அறிவியல் அப்படின்னா knowledge attained through study or practice நீங்க வேற கம்யூனிஸம் எங்கயும் இன்னும் வரலன்னுட்டீங்க அப்புறம் எப்படிங்க அது அறிவியல் ஆகும். ப்ரூஃப் கேக்கறான் பாரு பார்ப்பானா பாருன்னுட போறீங்க.
\\
saravanan science have 2 things ie practical and theory. But which one become first in mind. By which way?
You listen and study the invented science. You are not the inventor. if u want to be a inventor you should travel on the sharpest mountains (philosophical path). Do you know perodi table in chemistry. They have alloted the space for forthcoming invented elements based on the atomic number. They decided the physical and chemical properties of that element. Is it science or pseudo science
அனானி,
ஒரு ஐடி எடுத்துக்கொண்டு வாருங்கள்.
உங்கள் கோல்மாலை விவாதிக்கலாம்.
Post a Comment