Freitag, 8. Februar 2008

ஒடுக்கப்பட்ட ஆண்களே, பொங்கியெழுங்கள். இழப்பதற்கு மனைவியை தவிர வேறில்லை. வெல்வதற்கு ஒரு ஆம்லெட் உண்டு.

ஒடுக்கப்பட்ட ஆண்களே, பொங்கியெழுங்கள். இழப்பதற்கு மனைவியை தவிர வேறில்லை. வெல்வதற்கு ஒரு ஆம்லெட் உண்டு.

ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக கேட்கிறேன்.. ஆம்லெட் ஆம்லெட்

நசுக்கப்பட்டவர்கள் சார்பாக கேட்கிறேன்... ஆம்லெட் ஆம்லெட்

குத்தப்பட்டவர்கள் சார்பாக கேட்கிறேன்... ஆம்லெட் ஆம்லெட்

இன்று ஒரு ஆம்லெட் தின்ன முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. காரணம் என்ன? மனைவிகளின் ஏகாதிபத்தியம் நம் நெஞ்சில் குத்துகிறது.

தரகு முதலாளிகள் விற்கும் முட்டையை ஆம்லெட்டாக நாம் அடைய முடியாமல் இன்று மனைவிகளின் அரைக்காலனியவாதம் சதி செய்கிறது. நாம் வாங்கிக்கொடுக்கும் காலணியில் அரைக்காலணி நம்மையே பதம் பார்ப்பதையே அரைக்காலனியவாதம் என்று ஆசான் எங்கல்ஸ் அன்றே முழங்கியிருக்கிறார்.

ஒரு தனிமனிதனுக்கு ஆம்லெட் இல்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்று புறப்படுவோம் முனியாண்டி விலாஸ் நோக்கி.

ஆம்லெட் புரட்சி பொங்கி எழும் இந்த வேளையில் ஆம்லெட்டுக்காக குத்துப்பட்ட தோழர் ரவிக்கு நமது வீர வணக்கத்தை செலுத்துவோம்

வாருங்கள் தோழர்களே.. ஒன்றிணைவோம். போராடுவோம்.. ஆம்லெட் நமக்கே!

7 Comments:

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam said...

ஹா ஹா ஹா...

தமிழ்மணி said...

ஞாயிறு,
ஒடுக்கப்பட்ட ஆண்கள் ஒரு ஆம்லெட் இன்றி படும் துயரம் உங்களுக்கு நகைப்பாக இருக்கிறது!

மங்களூர் சிவா said...

இந்த செய்தி இப்பதான் குசும்பன் பதிவில ஒரு அனானி, துளசி டீச்சர் லிங்க் குடுத்திருந்தாங்க :(

ஒரு ஆம்லெட்டுக்காக குத்துபட்டிருக்கானே படுபாவி பய :(

bala said...

தமிழ்மணி அய்யா,
அடப்பாவி, இந்த அரைக்காலணி ஆதிக்க மோகினி ஆட்டத்துல மயங்கி ஆடுவது எம் குலப் பெண்களா?என்ன கொடுமை இது?இந்த சதி வேலை செய்வது யார்?தரகு முதலாளித்துவ திராவிட சக்திகளா?
தமிழ் சமுதாயத்தின் அடிப்படை விதிகளை மாற்றி எழுதப் போவதா கூப்பாடு போட்டாங்களே இந்த ம க இ க பொலிட் பீரோ ஆசாமிகள்?இப்படி கேவலமா மாத்திட்டாங்களேடா?

பாலா

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam said...

ஆஆஆஆ..........
ஆஆஆஆ...............
ஆ..
ஆஅ..

( நாயகன் கமல் பாணியில் அழறேன்... )

bala said...

தமிழ்மணி அய்யா,
எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்.
அது எப்படி,இந்த மயங்க வைக்கும் நடனம் ஆடும் ,மறுகாலனி ஆதிக்க சக்தி மோகினி,பசுத்தோல் போர்த்திய பார்ப்பனீய ஓநாய்,பசுத்தோல் போர்த்தாத பார்ப்பனீய குள்ளநரி போன்றவைகள் இந்த ம க இ க பொலிட் பீரோ ஆசாமிகளோட கண்களுக்கு மட்டும், காட்சி தருகின்றன?ஒருவேளை இந்த மூஞ்சிகளுக்கு இருப்பது எக்ஸ்ரே கண்களோ அல்லது இந்த மூஞ்சிகள், இவையெல்லாம் நிஜமாகவே தாங்கள் பார்ப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் paranoid schiziphrenia பிடித்தலையும் ,பைத்தியக்கார கும்பலா அல்லது பாவ்லா காட்டி,தீவிர வாதம் செய்ய மக்களை ஊக்குவிக்கும், கடைந்தெடுத்த அயோக்யப் பசங்களா?விளக்கமா சொன்னால் தெரிந்து கொள்வோம்.

பாலா

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.