Donnerstag, 10. Januar 2008

கலைஞர் கருணாநிதிக்கு பாரதரத்னா கொடுக்க வேண்டும் - ஏன்?

பாரதிய ஜனதா கட்சி தலைவர் லால் கிருஷ்ண அத்வானி அவர்கள் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களுக்கு பாரதரத்னா கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.



அவர் ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் அவர் ஒருவருக்கு பரிந்துரை செய்கிறார். நானும் ஒரு இந்தியக்குடிமகன் என்ற முறையில் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்களுக்கு பாரதரத்னா கொடுக்க பரிந்துரை செய்கிறேன்.

காரணம் என்ன?

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் தோன்றியபோது காங்கிரசும், கம்யூனிஸ்டுகளுமே மிக முக்கிய சக்தியாக விளங்கினர். கம்யூனிஸ்டுகள் மிகவும் பரவலாக ஆதரவு பெற்று பெரும் தலைவர்களையும் கொண்டவர்களாக இருந்தனர். ஜீவா, ராமமூர்த்தி ஆகியோர் மக்கள் ஆதரவு பெற்ற பெரும் கம்யூனிஸ்டு தலைவர்களாக இருந்தனர்.

அந்த சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தோற்றால், கம்யூனிஸ்டு கட்சியே ஆட்சிக்கு வரும் என்ற நிலை இருந்தது.

அந்த சூழ்நிலையில்தான் அண்ணாவும், கலைஞரும் இதர திக தலைவர்களும் திமுகவை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். இதனால், காங்கிரஸ் தோற்றாலும், பெருத்த மரண அடி கம்யூனிஸ்டுகளுக்கு விழுந்தது. கம்யூனிஸ்டுகள், பெரிய எதிர்கட்சி என்ற தளத்தை இழந்து திமுகவிடம் முக்கிய எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கொடுத்தனர்.

இது தமிழ்நாட்டை காப்பாற்றியது என்று சொன்னால் மிகை அல்ல. கேரளாவும் மேற்கு வங்காளமும் தொழில்துறையிலும், மக்கள் வாழ்க்கையிலும் இழிந்து கேவலப்பட்டு விவசாயம் கூட செய்யப்பட முடியாமல் அசிங்கப்பட்டு போன நிலையில் தமிழ்நாடு இன்று உலகத்தரமுள்ள மாநிலமாகவும், கணினி தொழில்நுட்பம், கார் தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு, ஸ்டீல் உருவாக்கம், லாரி தொழில் என்று பரந்து தன் கால்களை பதித்துள்ளது. இதெல்லாம் கம்யூனிஸ்டுகளின் நெருக்குவளையிலும், வார்த்தை ஜாலங்களிலும் சாத்தியமாகியிருக்காது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலமாக இருந்த மேற்குவங்காளத்தில் இன்று தொழில்களே இல்லாமல் போனதன் காரணம் இந்த கம்யூனிஸ்டுகளே!

அதுமட்டுமல்ல, மேற்கு வங்கத்தில் சென்ற வருடம் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1800க்கும் மேல். கேரளாவில் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேல். ஆனால், எத்தனை விவசாயிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டார்கள்? ஏதேனும் கேள்விப்பட்டீர்களா? இல்லை!

இவ்வாறு தமிழ்நாட்டை கம்யூனிஸ்டுகளிடமிருந்து காப்பாற்றிக்கொடுத்த ஒரே காரணத்துக்காகவே திராவிட முன்னேற்றக்கழத்திற்கு பாரதரத்னா கொடுக்கப்பட வேண்டும். அதன் நிர்வாகியாகவும் தலைவராகவும் இருந்து, கம்யூனிஸ்டுகளை ஒரு விளிம்பு நிலை சக்தியாக தள்ளிய கலைஞர் மு கருணாநிதிக்கு நிச்சயம் பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.

வாழ்க கலைஞர்!
ஓங்குக அவர் புகழ்!!

50 Comments:

Anonym said...

வாழ்க பாரத்ரத்னா டாக்டர் கலைஞர் மு கருணாநிதி!

said...

தமிழ், இப்பொ தான் மொக்க TஆG ஆரம்பிச்சேன், நீங்களாகவே வந்துட்டிங்க. நம்ம பதிவை கொஞ்சம் பார்க்கவும். உங்கள் வாதம் மொக்கை அல்ல என்றாலும் அடிப்படையில் ஆய்ந்தறியக்கூடியது. கலைஞர் மறைவுக்கு பின்வருமென நினைக்கிறேன். அவருக்கு டராமல் இருந்தாலே அது அவருக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய கவுரவமாக இருக்கும். கலைஞர் என்ற ஒரு பதமே அடைவதற்கறிய விருதென நினைக்கிறேன்.

said...

எம்.ஜி.ஆர் க்கு தந்தவர்கள் கருணாநிதிக்கு தருவதில் தவறில்ல். ஒருவர் நடிகர் ஒருவர் கதை வசனக்கர்த்தா. பங்காளிகள் தானே

நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி இவர்களுக்கு கிடைத்ததால் வாஜ்பாய்க்கு தருவதில் தவறில்லை. இவர்களும் பங்காளிகள் தானே

said...

நன்றி இசை
நன்றி கால்கரி சிவா

இசை,
இந்த பதிவு மொக்கை பதிவு அல்ல. சீரியஸ் பதிவு.

நன்றி

Anonym said...

அன்புள்ள தமிழ்மணி,
நான் பழைய அனானி.

உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது.
கருணாநிதிக்கு பாரத ரத்னா பட்டம் வழங்குவது ஆறு கோடி தமிழர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம். சிறு தொழில் வளர்ச்சி, போக்கு வரவுத் துறையில் பிரமிக்கத்த் தக்க வளர்ச்சி, நகர்மயமாதலில் சிறந்த முன்னேற்றம், வகுப்புவாதம் வளராமல் பார்த்துக் கொள்வது, சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லும் போக்கு, பாரம்பரிய தமிழ் கோவில்களுக்குப் புத்துயிர் அளித்தது, தமிழ் மொழிக்கும் , மொழியை வளர்த்த ஆய்வாளர்களுக்கும் கிடைத்த அங்கீகாரம், இதுவும் இன்ன பிறவும் கருணாநிதியின் சாதனைகள். ஓர் எளிய பின்னணியில் பிறந்து தம்முடைய கொள்கைப் பிடிப்பாலும் அனைவைரையும் அரவணைத்துப் போகும் போக்காலும் இன்று தமிழ் நாட்டை அனைத்து துறையிலும் முன்னேற்றிய ஜாம்பவான் அவர்.

கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக அவர் ஒரு அணையாக விளங்கினார் என்பதில் பெருமளவு உண்மை உள்ளது. எளிய மக்களை கம்யூனிஸ்டு வன்முறை நோக்கித்தள்ளாமல், தொழில் முனைப்பினாலும், உழவர் சந்தை மற்றும் நில வினியோகம் என்று சாதாரண மக்களின் உடைமைகளின் விரிவாக்கம் மூலம் அவர்களை முன்னேற்றிய பெருமைக்குரிய கலைஞர் நிச்சயம் பாரத ரத்னாவிற்குத் தகுதி பெற்றவரே. அவ்ருடைய கொள்கையான் "வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வொஇஒம்" என்ற கோட்பாடும் கூட கம்யூனிஸ்டுகளின் வெறிக்கு எதிரான நிலை பாடே ஆகும்.

எம் ஜி ஆருக்கு பரத ரத்னா கொடுத்தது பற்றி எள்ளலாய்ப் பதிவு செய்திருப்பது தவறென்று சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எம் ஜி ஆர் நடிகர் என்று சொல்வதன் மூலம் அவருடைய சாதனைகளைக் குறைத்து மதிப்பிட முயல்கிறார்கள். இது தவறு. சத்துணவுத் திட்டம் விரிவாக்கம் ஒன்றே போதும் அவர் சாதனையைச் சொல்ல. அதில்லாமல் நீங்கள் கமுயூனிஸ்டுகளுக்கு எதிராக ஒரு அர்க்தமுள்ள அரணாக விளங்கினார் என்று கருணாநிதி பற்றிச் சொல்வது போலவே எம் ஜி ஆர் குறித்தும் சொல்லலாம். இத்தனைக்கும் கம்யூனிஸ்டுகள் தான் அவரை முன்னிறுத்தி கலைஞரை வலுவிழக்கத் திட்டம் தீட்டியவர்கள். ஆனால் அவர்களைப் பய்னபடுத்திக் கொண்ட எம் ஜி ஆர் அவர்களுக்கு எந்த இடமும் கொடுக்காமல் ஜாக்கிரதையாகக் கையாண்டார். இன்று காணும் கல்விச்சாலைகள் தனியார் மயம் அவர் காலத்தில் தொடங்கப் பட்டது தான். இதில் சில குறைகள் இருந்தாலும், கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதும், வேறு மானில மாணவர்கள் இங்கு வருவதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு அடைதும் அவர் தூண்டிய விதாகளினால் தான்.

இதன் மூலம் கல்வி ஜனநாயகப் ப்டுத்தியதும், தனியார் துறை கல்விக்குப் பங்களிப்புச் செய்வதும் நிகழ்ந்தது.

இன்னும் ஒன்று : அவர் இருக்கும் வரை சாதிக் கட்சிகள் தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியவில்லை. சாதி அரசியலுக்கு ஒரு மாற்றாக அவர் விளங்கினார்.

எனவே வாழ்க பாரத ரத்னா எம் ஜிஆர்.

வாழ்க எதிர்கால பாரத ரத்னா கலைஞர்.
நன்றி
பழைய அனானி.

said...

மிக மிக நன்றி பழைய அனானி!

எம்ஜியார் பற்றி கேவலமாக எழுதியிருந்தபோது ரத்தம் கொதித்தது.

எம்ஜியார் பற்றி பேச கொஞ்சமேனும் தகுதி உண்டா இந்த ஸ்டாலினிஸ்டுகளுக்கு?

நன்றி நன்றி!

Anonym said...

குடும்ப அரசியலை நன்கு வளர்த்தற்க்காகவும் கொடுக்கலாம்!!

said...

குத்தூசி,
குடும்ப அரசியலை பற்றி இங்கே என்ன எழுத அவசியம்?

அவரது சாதனைகளை முதலில் அங்கீகரியுங்கள்.

கியூபாவை ஒன்றுமில்லாத மண்ணாக ஆக்கி அதற்கு சொந்த தம்பியை அரசனாகவும் ஆக்கிய பிடல் காஸ்ட்ரோவுக்கு பாராட்டு விழா நடத்தும் கம்யூனிஸ்டுகளை கண்டித்துவிட்டு குடும்ப அரசியலை பற்றி இங்கே பேசுங்கள்.

ஸ்டாலின் தேர்தலில் நின்று மக்களது வாக்குக்களை வாங்கி ஜெயித்துதான் முதல்வராக ஆக முடியும். நேபாள மாவோயிஸ்டு பிரசந்தா தனது மகனை அடுத்த தலைவராக ஆக்குவது போல இங்கே இல்லை. கண்டோ!

said...

டாக்டர் கலைஞருக்கு இந்தியாவின் மிக உயரிய விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட வேண்டும் என்று கருதுபவர்கள் இந்த பதிவில் + குத்தி தங்கள் ஆதரவை தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

said...

மேலே இடதுபக்கம் உங்கள் பொன்னான வாக்குக்களை அளித்து டாக்டர் கலைஞரை கவுரவிக்க வேண்டுகிறேன்

said...

எனக்கு கலைஞரின் பல அரசியல் நிலைப்படுகளில் உடன்பாடு கிடையாது. ஆயினும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் அவர் செய்த அரும்பணிகளுக்காக நிச்சயம் பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கலாம்.

இதைப் பற்றிய என்னுடைய ஒரு மொக்கைப் பதிவு http://uraiyurkaran.blogspot.com/2008/01/tag.html

said...

//அந்த சூழ்நிலையில்தான் அண்ணாவும், கலைஞரும் இதர திக தலைவர்களும் திமுகவை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். இதனால், காங்கிரஸ் தோற்றாலும், பெருத்த மரண அடி கம்யூனிஸ்டுகளுக்கு விழுந்தது. கம்யூனிஸ்டுகள், பெரிய எதிர்கட்சி என்ற தளத்தை இழந்து திமுகவிடம் முக்கிய எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கொடுத்தனர்//


இந்த இடத்தில் சில மறைந்த/இருட்டடிக்கப்பட்ட திராவிடத் தலைவர்களை நினைவு கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நாவலர் இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், என்.வி.நடராசன், ஈ.வி.கே.சம்பத், சத்தியவாணிமுத்து, எஸ்.டி.சோமசுந்தரம், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பார்த்தசாரதி, அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, எம்.ஜி.இராமச்சந்திரன், ப.உ.சண்முகம், பேராசிரியர் க.அன்பழகன், நாஞ்சில் கே. மனோகரன். இவர்களையும் சேர்த்துக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்.


அன்புடன்,
ஜோதிபாரதி.

said...

நன்றி உறையூர்காரன்,
நன்றி ஜோதிபாரதி.

நீங்கள் சொல்வது ஏற்புடையதுதான்.

said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

தமிழர்களுக்கு பட்டங்கள் கொடுக்கும் அள்விற்கு இந்தியா இன்னும் முன்னேறி விடவில்லை.ஆதிக்க சக்திகள் இன்னும் உள்ளே ஒளிந்து கொண்டுதான் உள்ளன.சிவாஜி கணேசனுக்கே எவ்வளவு காலந்தாழ்த்திக் கொடுத்தார்கள்.
பத்மஸ்ரீ காஞ்சிபுரத்திலே விற்பனையாகி வந்தது ஒரு வழியாக ஒழிந்துள்ளது.

தமிழினத் தலைவர்கட்கு இந்த விருதுகள் தேவையில்லை.தமிழர்கள் தந்த பெரியார்,அறிஞர்,கலைஞர்,சிவாஜி ,நாவலர் ,ஆசிரியர் என்பவைதான் அர்த்தமுள்ள உள்ளந்தொடும் விருதுகள்.

Anonym said...

கலைஞருக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும்.

இதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

said...

//தமிழினத் தலைவர்கட்கு இந்த விருதுகள் தேவையில்லை.தமிழர்கள் தந்த பெரியார்,அறிஞர்,கலைஞர்,சிவாஜி//

எனக்கென்னவோ தமிழன் அய்யா சொல்வது சரியென்றே படுகிறது;இந்த மூஞ்சிங்க தான் ஆளாளுக்கு பட்டம் கொடுத்து மகிழும் கும்பல் ஆயிற்றே.இதுகளுக்கு அகில இந்திய அளவுல பட்டம் வேற கொடுத்து இந்தியாவை கொச்சைப் படுத்த வேண்டுமா?

பாலா

said...

Thamizmani,
Kalignar had always identified himself as a communist. He openly declared that "If Periyar wouldn't been there, I would be a communist & I am a communist still be heart".

Also, if u want him to be awarded only bcoz of stopping Commies getting the power, then what is ur stand abt him, when he tactically avoided Mr.Moopanaar getting as Prime Minister of India? After all, Moopanar himself was a Tamilian & a veteran National leader.

Moreover, TN has grown alot, I agree. But most of the revenue sectors have been degraded in the last 20-30 years. Moreover, his actions remainds me the act of a fascist. For example,most of his press meets & the recent Madurai violence.

said...

கலைஞரை இவ்வளவு குறைத்து மதிப்பிட்டதற்கு வருந்துகிறேன்.
நோபல் பரிசுக்குக் குறைந்த எதுவுமே, அவரைக் கேவலப்படுத்தும் பரிசே....
அவரைக் கேவலப்படுத்துவதை அனுமதியோம்.
தாமதியாமல் நோபல் குழுவுக்கு பரிந்துரை செய்யுங்கள்....
இல்லையேல் எதுவுமே அவருக்கு வேண்டாம்.
அவர் கூறுவது போல் ' தொண்டர்கள் இதய சிம்மாசனம்' அவருக்குப் போதும்

Anonym said...

Thalai ezhuthuda sami
2000 crore for kalanidhi
2000 crore for stalin
2000 crore for azagiri
2000 crore for rest all

yes Kalaignar deserves not only nobel something more than that
mayilsamy

Anonym said...

கலைஞர் க்கு நோபெல் பரிசுக்கு குறைந்து எதுவும் கொடுக்கக்கூடாது. ஏனென்றால் அவர் தன் தமிழ் நாட்டில் லஞ்சம், ஊழல், குடும்ப அரசியல், கரை வேட்டி ரவ்டிசம், மதவாதம் மற்றும் ஜாதி வெறி பரப்பி மக்களை சுரண்டுவதில் அவரை மீற யாரும் இல்லை.

said...

We should abolish all these awards like Bharath Ratana, etc as they are rountinely abused and given to
DISHONEST people, as a great leader suggested in 1950..

The worst case was awarding bharath rathana to MGR and Nethaji in the same year. Shame on us.
are both of them eqaul ?

Fisrt qualification for this award should be personal integrety and honesty. that is one who never misused offical power or accepted bribes. this is how the awardees are choosen in more enilghtened Western democracies.

for e.g Abdul Kalam can be called a HONEST person who deserves the award. without basic honesty, mo person can ever be called a great man, whatever the other 'acheivements' may be.

In these cycnical and dishonest times, anything goes...

said...

கருத்துக்களுக்கு நன்றி

Anonym said...

முந்நாள் நாஜியும் இந்நாள் போலி முற்போக்குமான குந்தர் க்ராசுக்கு நோபல் பரிசு கொடுக்கும்போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குறியீடான கோர், கார்டர் ஆகியோருக்கு நோபல் கொடுக்கப் படும்போது, மு.கருணாநிதி அவர்களுக்கு நோபல் மட்டுமல்ல வேறு ஏதாவது உலகப் பரிசுகள் இருந்தால் அவற்றையும் கொடுக்கலாம். அவருக்கோ ஆசை அளப்பரியது. இவ்வளவு அனுபவித்தவர் உலக அரங்குகளில் கைதட்டலை அனுபவிக்கட்டுமே. கைலி, ஸ்பைஸ் கேர்ல்ஸ், பியான்ஸ் போன்ற வளப்பமான பின்புறம் உள்ள பெண் பாடகர்களின் நடனத்தோடு ஒரு கொண்டாட்டத்தை ஆம்ஸ்டர்டாம், ஃப்ராங்க்ஃபர்ட் போன்ற நகரங்களில் நடத்த யாழ்த் தமிழர்கள் நிச்சயமாக நிதி உதவி செய்வார்கள். அதுவும் ஃபெட்னா அமெரிக்கா குட்டிக் க்ரணம் அடித்து வந்து உதவி செய்யும், சும்மாவா இருக்கும் தமிழ்ப் பாசம். பெரியாரியப் பாசம் வேறு உண்டே. கலக்குகிறீர்கள். கருத்துக் கணிப்பில் உலகத் தமிழர்களைக் கலந்து கொள்ள் அழைப்பு விட்டால் ப்ளாக்ஸ்பாட் உடைய சர்வர் இடிந்து போய் உட்காரும். அவர்களுக்கு முன் எச்சரிக்கை செய்து விட்டு, கணிப்பின் முடிவுகளை நோபல் பரிசு கமிட்டிக்கு எப்படி அனுப்புவது என்று யோசியுங்கள்.
சும்மா நீ குப்பை அவன் குப்பை என்று சொல்வதை நிறுத்தி விட்டு ஆக்க பூர்வமாக இப்படிச் செய்வது நல்லது. 5 கோடி தமிழர்களின் வாழ்வில் இன்று மழை.
செந்துருத்தியான்

Anonym said...

//Kalignar had always identified himself as a communist. He openly declared that "If Periyar wouldn't been there, I would be a communist & I am a communist still be heart".
//

நானும் ஒரு கம்யூனிஸ்டுதான் என்று சொல்வதன் மூலமே கம்யூனிஸ கொள்கைக்கு மரண அடி கொடுத்ததற்காகவே அவருக்கு பாரத ரத்னா கொடுக்கலாமே!

said...

தமிழ்மணி அய்யா,

மஞ்ச துண்டு அய்யாவுக்கு "பாரத ரத்னா" என்ற வடமொழிப் பட்டம் வழங்குவது சரியல்ல.அதனால் அவருக்கு "திராவிட தகரம்" என்ற தூய திராவிடப் பட்டம் வழங்கலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.கொடுத்துவிடுங்கள்.

பாலா

said...

அனானி, ரகமி, பாலா
உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.

உங்கள் கருத்துக்களுடன் மாறுபடுகிறேன்.

கலைஞர் தனது ஜனநாயக உரிமையையும் சுதந்திரத்தையும் சிறப்பாகவே வெளிக்காட்டியுள்ளார். தனது கருத்தை உரத்து கூறவும் தயங்கியதில்லை.

கம்யூனிஸ்டுகளின் பேச்சைகேட்டுக்கொண்டு சோசலிஸ்டு இந்திரா அம்மையார் எமர்ஜன்ஸி கொண்டுவந்தபோது கூட கலைஞர் ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்து தனது ஆட்சியை இழந்து, தன் குடும்பத்தினர் மிசாவால் சித்திரவதை செய்யப்படும்போதுகூட வலிமையாக உறுதியாக நின்று சர்வாதிகாரத்தை எதிர்த்திருக்கிறார்.

அன்றைய காலத்தில் இந்தியாவின் ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்த ஒரே முதலமைச்சர் அவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இந்தியாவை கம்யூனிஸ சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்றிய கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுப்பது மிகவும் பொருத்தமுடையது.

Anonym said...

கலைமாமணி விருது கொடுப்பது தான் சரியாக இருக்கும்!

Anonym said...

bharatha ratna allathu kalaimaamani viruthu kodutthu atharkku edukkum vizhavil tamilu nadiga nadigaigalin kutthattatthukku erppadu panninaal 3 1/2 mani neeramum okkanthu rasicchu patthuttu poovaar.

nantri!

Anonym said...

Ulaga panakkaaran karunaanithi kasu kodutthu bhaaratha ratna vannki vidakkoodum. adalerugal kavalaippada vendiyathillai.

said...

அநாகரீக வாந்தி எடுப்பவர்களே, வயிற்றெரிச்சலுக்கு ஜெலுசில் போடுங்கள்..
கலைஞருக்கு பாரத் ரத்னாவை விட பெரியது தழிழர்கள் தந்திருக்கும் பட்டமான 'தமிழினத்தலைவர் கலைஞர்'. பின்னூட்டத்தில் வயத்தெரிச்சல்கள் நன்றாக தெரிகிறது. உங்கள் வயத்தெரிச்சல் அவரை ஒன்றும் செய்யபோவதில்ல..

இதுவே சட்டசபையில் பாப்பாத்தி என சொல்லிக்கொண்ட செயாவுக்கு தரச்சொல்லி பதிவு வந்திருந்தால் புல்லரித்துப்போய் இருக்கும் இந்த கூட்டம்..

Anonym said...

சர்வாதிகாரத்தை எதிர்ப்பது என்பது அவரது தமிழ் ரத்தத்தில் ஊறியது.

எவ்வாறு எமர்ஜன்ஸி சர்வாதிகாரத்தை எதிர்த்தாரோ அதே போல, மக்கள் விரோத, சர்வாதிகார நக்ஸலைட்டுகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதையும் கடுமையாக எதிர்த்து அவர்களை ஒழித்து தமிழகத்தை காத்திருக்கிறார் என்பதையும் இங்கே குறிக்கவேண்டும்

தமிழ் ரத்தம் என்றென்றைக்கும் சர்வாதிகார எதிர்ப்பு கொண்டது. ஜனநாயக பண்பு கொண்டது. அது என்றைக்கும் கம்யூனிஸ பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று குறிக்கவேண்டுகிறேன்

Anonym said...

//கலைஞருக்கு பாரத் ரத்னாவை விட பெரியது தழிழர்கள் தந்திருக்கும் பட்டமான 'தமிழினத்தலைவர் கலைஞர்'//

இதயத்தில் இடம் கொடுப்பாரே அது மாதிரியா?

Anonym said...

//எவ்வாறு எமர்ஜன்ஸி சர்வாதிகாரத்தை எதிர்த்தாரோ அதே போல, மக்கள் விரோத, சர்வாதிகார நக்ஸலைட்டுகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதையும் கடுமையாக எதிர்த்து அவர்களை ஒழித்து தமிழகத்தை காத்திருக்கிறார் என்பதையும் இங்கே குறிக்கவேண்டும் //

I think under MGR Govt, Dewaram took control of Naxel issue .

He is new Sanakya , there is no doubt but he was the worst administrator in case of South district's caste riots .


No one can apply / recommend him for the award as he never saluted IPKF return from Srilanka ( dont bring all justification . being a CM he failed to do his duty ) .

said...

எம்ஜியார் நக்ஸலைட்டுகளை கடுமையாக ஒழித்தார் என்பது உண்மைதான். அதனால்தான் இணைய நக்ஸலைட்டுகள் கலைஞரின் நண்பர் எம்ஜியாரை அவ்வளவு வசைபாடுகிறார்கள். ஆனால், கலைஞர் நக்ஸலைட்டுகளை ஒழித்ததில் எம்ஜியாருக்கு சளைத்தவர் அல்ல.

said...

http://www.hindu.com/2007/12/21/stories/2007122159910800.htm

நக்ஸலைட்டுகளை ஒழிப்பது பற்றிய கலைஞரின் பேச்சு
“Activities of naxalites, maoists under check in Tamil Nadu”



Special Correspondent







NEW DELHI: Tamil Nadu Chief Minister M. Karunanidhi on Thursday said that the government was able to ensure that “no major disturbance is caused to public order and tranquility in the State.”

In his speech read out by the PWD Minister Durai Murugan at the conference of Chief Ministers on internal security, Mr. Karunanidhi said: “The recent success we have had in apprehending certain dreaded Maoists and our constant and effective vigil of the coast line, in coordination with the Coast Guard and the navy have encouraged the State Police to function even more effectively.”

He said: “Tamil nadu is one of the few States with a separate ‘Q’ wing in the intelligence set up to monitor the activities of extremist organisations. The effective system of information gathering developed by this wing, has helped the State to keep activities of naxalites, Maoists, other fundamentalist groups under check.”

Mr. Karunanidhi said the State was equipped to tackle instances of hijacking, armed militancy, insurgency and kidnapping of VIPs for ransom.

said...

எப்பிடியோ கருநாநிதியை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக திருப்பிவிட்டீர்கள்?

ஐயா தாங்கள் சதுரங்கத்தில் புலியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் சரியா?

சரியான அரசியல்வாதி ஐயா தாங்கள்

said...

நன்றி கால்கரி சிவா,

அவர் பெயர் கருநாநிதி அல்ல, கருணாநிதி. தவறாக எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

கலைஞர் எப்போதுமே தீ.கம்யூனிஸ்டுகளுக்கு எதிரிதான்.

தமிழர்களை தீ.கம்யூனிஸ்டுகள் பக்கம் செல்லவிடாமல் காத்து, தீ.கம்யூனிஸ்டுகளை அழித்தவர், அழிப்பவர்.

நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை!

said...

//தமிழ் ரத்தம் என்றென்றைக்கும் சர்வாதிகார எதிர்ப்பு கொண்டது. ஜனநாயக பண்பு கொண்டது. அது என்றைக்கும் கம்யூனிஸ பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று குறிக்கவேண்டுகிறேன்//

நன்றி அனானி
உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன்

said...

ஆரம்ப காலங்களில் உண்மையிலேயே ஜனநாயகத்தை அடிமட்ட மக்களிடம் எடுத்து சென்றதில் கருணாநிதிக்கும் முக்கிய பங்கு உள்ளது. அதற்கு முன்பு வரை ஆட்சி மற்றும் கட்சியில் முக்கிய பங்கு வகிப்பது பணக்காரர்கள் மட்டுமே (காமராஜர்,கக்கன் போன்ற விதி விலக்கு இருந்தாலும்) .இந்த நிலையை மாற்றி ஏழை மக்களையும் அரசியலில் ஈடுபட வைத்து, பதவிக்கு (கட்சி மற்றும் ஆட்சியில்) வர வைத்து அனைவரிடமும் மக்களாட்சியில் நம்பிக்கை வர வைததில் அவருக்கு பங்கு உள்ளது.நன் கூறுவது கருணாநிதியின் ஆரம்ப கட்ட அரசியல் பற்றி. அவருடைய கடந்த ஆட்சி காலம்(last govt) உண்மையிலேயே அருமையாக இருந்தது. அது போல் இனி எவரும் ஆட்சி புரிவது கடினம் .

Anonym said...

// சதுக்க பூதம் said...
அதற்கு முன்பு வரை ஆட்சி மற்றும் கட்சியில் முக்கிய பங்கு வகிப்பது பணக்காரர்கள் மட்டுமே (காமராஜர்,கக்கன் போன்ற விதி விலக்கு இருந்தாலும்) .இந்த நிலையை மாற்றி ஏழை மக்களையும் அரசியலில் ஈடுபட வைத்து, பதவிக்கு (கட்சி மற்றும் ஆட்சியில்) வர வைத்து அனைவரிடமும் மக்களாட்சியில் நம்பிக்கை வர வைததில் அவருக்கு பங்கு உள்ளது.நன் கூறுவது கருணாநிதியின் ஆரம்ப கட்ட அரசியல் பற்றி.//

முன்பெல்லாம் ஆட்சியில் பங்கு வகிப்பது பணக்காரர்கள். கலைஞர் போல ஏழைகள் ஆட்சிக்கு வந்து பணக்காரர்கள் ஆனவர்கள். பாரத ரத்னாவும் கொடுத்திடலாம். அதையும் பணத்தோடு சேர்த்து வைக்கட்டும்.

said...

//அன்பழகன், நாஞ்சில் கே. மனோகரன். இவர்களையும் சேர்த்துக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்//

ஜோதிபாரதி அய்யா,

சரியாக சொன்னீங்க.ஆனா மீசை வீரப்பன்,பங்க் குமார்,சோடா சோமு,கில்லி கதிர்வேலு போன்ற திராவிட சிங்கங்களை சேத்துக்கலாம்னு சொல்ல மறந்துட்டீங்களே?

பாலா

said...

//bala said...
//அன்பழகன், நாஞ்சில் கே. மனோகரன். இவர்களையும் சேர்த்துக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்//

ஜோதிபாரதி அய்யா,

சரியாக சொன்னீங்க.ஆனா மீசை வீரப்பன்,பங்க் குமார்,சோடா சோமு,கில்லி கதிர்வேலு போன்ற திராவிட சிங்கங்களை சேத்துக்கலாம்னு சொல்ல மறந்துட்டீங்களே?

பாலா//


நான் சொன்னது அப்போதைய தி.மு.க Pioneers(சகாக்கள்). நீங்கள் சொல்வது இப்போதைய தி.மு.க சகாக்களாக இருக்கக்கூடும். எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்.


அன்புடன்,
ஜோதிபாரதி.

Anonym said...

கேபினட் பரிந்துரைத்தால் உடனே கொடுக்கிறேன்

Anonym said...

கேபினட் பரிந்துரைத்தால் உடனே கொடுக்கிறேன்

said...

பாரத் ரத்னா கொடுத்து கலைஞருக்கு அங்கீகாரம் வரத்தேவையில்லை. ஒரு வேளை பாரத்ரத்னா அளித்து அதன் மூலம் அந்த பட்டம், தனக்கு ஒரு பன்முக அடையாளத்தை, எல்லா தரப்பினரையும் அங்கீகரிக்கும் ஜனநாயக தன்மையை தேடிக்கொள்ளலாம். மற்றபடி இந்த பதிவின் உட்கருத்திற்கு (குறிப்பாக இந்திய கம்யூனிஸ்டுகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்து, அதே நேரம் காங்கிரஸ் மற்ற தேசிய கட்சிகளையும் காலி செய்த திமுகவை அங்கீகரிப்பதற்கு) என் ஆதரவை அளிக்கிறேன். நன்றி!

said...

நன்றி சதுக்கப்பூதம், அனானி, பாலா, ஜோதிபாரதி, ரோசாவசந்து

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

Anonym said...

Here is a proposal.

2008 - MK
2009 - Rajathi Ammal
2010 - Dayalau Ammal
2011 - Alagiri
2012 - Stalin
..
..
2020 - Aligiri's mother in law
..
goes on and on.

Anonym said...

இந்தியாவை கம்யூனிஸ சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்றிய கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுப்பது மிகவும் பொருத்தமுடையது.
so true

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.