Montag, 16. November 2009

தியாகுவும் அருண்பாரதியும் நடத்தும் காமெடி கலாட்டா.


http://thiagu1973.blogspot.com/2009/10/blog-post_24.html

தியாகு: எந்த முரண்பாடுகள் முதன்மையானது தோழர் வர்க்க முரண்பாடா இன
முரன்பாடா

(அதெல்லாம் இல்லை தோழர். உங்கள் மூளைக்கும் உங்கள் வாய்க்கும் உள்ள
முரண்பாடே முதன்மை முரண்பாடு)

அருணபாரதி: ஓர் இனம் தன்னைத் தானே ஆளக்கூடிய உரிமையல்லாத எல்லா
இடத்திலும், அவர்களை ஒடுக்கக்கூடியவர்களிடத்திலிருந்து பிறக்கும் இன
முரண்பாடே முதன்மை முரண்பாடு...
ஓர் இனம் தன்னைத் தானே ஆளக்கூடிய ஒர் தேசிய அரசில், அம்மக்களுக்கும்
அவர்களை ஒடுக்கும் தேசிய முதலாளிகளுக்குமான வர்க்க முரண்பாடே முதன்மை
முரண்பாடு..
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தொடர்ந்து தில்லியால் ஒடுக்கப்படுவதால் ஆரியப்
பார்ப்பனிய இந்து மதவெறி இந்திய அரசுக்கும், தமிழ்த் தேசிய இனத்திற்குமான
இன முரண்பாடே முதன்மையானது...
அதே போல், ஈழத்தமிழர்களை ஒடுக்கும் சிங்கள அரசுக்கும்
ஈழத்தமிழர்களுக்குமான முதன்மை முரண்பாடும், இனமே ஆகும்..
புரிகின்றதா,..?
(அருண்பாரதியின் சூப்பர் காமெடி கதம்பம் இது. தமிழ்நாட்டில் யாரும் ஓட்டு
போட்டு தேர்தல் நடப்பதில்லை. எல்லாமே டெல்லியிலிருந்து
நியமிக்கப்படுபவர்களே ஆள்கின்றனர் இல்லையா? தமிழ்நாட்டு மந்திரிகள்
டில்லியில் யாருமே இல்லை. தமிழர்கள் என்றாலே சிறையில்
அடைக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டை விட்டு எந்த தமிழரும் வெளியேற
முடியாது. தமிழ் பேசினாலெ சிறை! அவர்களுக்கு எழுத்துரிமைபேச்சுரிமை
அனைத்தும் மறுக்கப்படுகின்றன. இல்லையா? இணையத்தில் கூட
எழுதமுடியவில்லைங்கண்ணா.. அது ஏன் கேக்கறீங்க? தமிழ்நாட்டு தமிழர்கள்
தில்லிக்கு சென்றாலே ஒடுக்கப்படுகிறார்கள். இதுக்குன்னே ஒரு ரூம் கட்டி
அது ஓரத்தில போலீஸை வச்சி ஒடுக்குறாய்ங்க.. இதில முக்கியமான ஆளு இந்து
மதவெறி புடிச்ச சோனியாவும், பார்ப்பன மதவெறி புடிச்ச மன்மோகன்சிங்கும்,
ஆரிய பார்ப்பனனான ஏ கே அந்தோனியும், பார்ப்பன பயங்கரவாதி
சிதம்பரமும்தானுங்க.. சிதம்பரம் ஒரு தமிழரில்லைங்கற ரகசிய விஷயம்
இவனுங்களுக்கு கிடைச்சிருக்கு.. அத தக்க நேரத்தில் வெளியிடுவானுங்க்)

தியாகு: ம்ம்
ஆகவே இனவிடுதலைக்குத்தான் முதலில் போராடனுமா அதற்கு வர்க்க போராட்டம்
அடுத்த கட்டமா அப்படியெனில் எப்போ வர்க்க போராட்டம் நடத்துவது

(இது காமெடி 101. வர்க்கபோராட்டம் இங்கே சொல்லித்தரப்படும்னு உஸ்மான்
சாலையில் பெரிய போர்டு போட்டு சொல்லித்தந்துகிட்டுருக்கும்போது இப்படி
ஒருகேள்வி.. “எப்போ வர்க்கப்போராட்டம் நடத்துவது?” வாங்கண்ணா.. நூறு
ரூபாய்தான். காலையில கரீக்டா 7 மணிக்கு வந்துடணும்.)


அருணபாரதி: முதலில் உங்களுக்கென ஒரு நாடு, வரையறுக்கப்பட்ட எல்லைப்
பகுதியை உருவாக்குங்கள்.. அந்நாட்டில் உள்ள தேசிய அரசை, அரசு என்ற
ஒடுக்குமுறைக் கருவியைக் கைப்பற்றுங்கள்..
(அதுக்கு முதலாளிங்கள, குட்டி முதலாளிங்கள, குட்டிங்கள வச்சி பிஸினஸ்
பண்ற முதலாளிங்களையெல்லாம் திரட்டி நமக்கு சார்பா ஆக்கிக்கணும்ங்கண்ணா..
அரசுங்கற ஒடுக்குமுறை கருவியை நம்ம கைப்பற்றிண உடனே அது சூப்பர்
ஒடுக்குமுறை கருவியா மாத்திடணும்னா.. எப்படீன்னா.. வர்க்க எதிரின்னு பெர்
வைச்சி டப் டப் டப்னு சுட்டுப்புடணும்.)

அதை விடுத்துவிட்டு, எல்லையே இல்லாத ஓர் பகுதியில், முதலில் யாரை
யாரையெல்லாம் திரட்டி புரட்சி நடத்துவீர்கள்..?
(எல்லைன்னா என்னாங்கண்ணா? தற்போதைய தமிழ்நாட்டு மாநிலத்தின் எல்லையை,
நம்ம தமிழ் தேசியத்தின் எல்லைன்னு அறிவிச்சிடமுடியாதா?.. தமிழ்நாட்டு
எல்லைக்கோடு நீங்க ஒத்துகிறதில்லை. சரி மும்பையில தாராவியில நெறய
தமிழர்கள் இருக்கிறதா சொல்லிக்கிறாய்ங்க.. அதுவும் உங்க தமிழ்நாட்டுல
சேருமாண்ணா? கோலார்ல நிறைய தமிழர்கள் இருக்கறாங்க. ஆனா பாருங்க,
கோலாருக்கும் தமிழ்நாட்டுக்கும் நடுவுல கன்னடர்கள் வந்து
உக்காந்துட்டாங்க். அதனால், அந்த கன்னடர்களையும் இன எதிரிகள்னு
சுட்டுப்போடணும்ங்கண்ணா. இதே மாதிரி டெல்லியில ராமகிருஷ்ணாபுரம்,
கல்கத்தா இப்படீன்னு இன்னும் நெறய சேத்துகிட்டே போலாங்கண்ணா.. அது
பாருங்க.. கர்னாடகாவுல பெல்லாரி பக்கம் நிறைய தமிழர்கள் இருக்கிறாங்க.
ஆனா பாருங்க.. அங்க விவசாயம்ச் செய்யறாங்க. கன்னடர்களுக்கு நட்ட நடுவுல
உட்கார்ந்திருக்காங்க. அவுங்களையும் நம்ம தமிழ்நாட்டுல சேத்துக்கலாமா
இல்லை அவ்னுங்கள கன்னடிகான்னு அடிச்சி துவச்சிடுவமா? சரி தமிழ்நாட்டிலயே
இருக்கிற தெலுங்கு பேசற நாயுடுக்களையும் உருது பேசற முஸ்லீம்களையும் என்ன
செய்யலாம்ங்கண்ணா? ட் மாமன் மச்சானுன்னு என்னடா பேசறீங்கன்னு
அவனுங்களையும் அடிச்சி ஓட உட்டுடுவோமா? தெலுங்கு பேசற அருந்ததியரையும்
அடிக்கறதுக்குஆள் ரெடி பண்ணுங்கண்ணா.. இன விடுதலை வேணும்னா இன போராட்டம்
பண்ணித்தான் ஆகணும். இன போராட்டம்னா, தமிழ் இனம் இல்லாதவங்களை எல்லாம்
சுட்டுத்தள்ளணும்.. இல்லையா?)


கேரளமும், கன்னடமும், ஆந்திரமும் என்றைக்காவது தமிழகத்தைப் போல தில்லி
எதிர்ப்புக் கருத்தியலைக் கொண்டிருந்ததா..?
ஆரிய மொழியான சமஸ்கிருதத்துடன் மட்டுமல்லஆரிய இந்தியத் தேசியத்துடனும்
சமரசம் கொண்ட அவர்கள் நம்மோடு இணைந்து போராட முதலில் முன் வருவார்களா...?
(ஆரிரிச்சி ஆரிரிச்சின்னு நீங்க சொல்றீங்க. அது ஆறலைன்னு அவனுங்க
சொல்றானுங்க.. சமஸ்கிருதம் ஆரிய மொழிங்க.. தமிழ் ஆராத மொழிங்கண்ணா.
இங்கிலீஸ் ஆரிய மொழியா ஆராத மொழியான்னு கொஞ்சம் வெளக்கினா, நல்லா
வெளிக்கி போகுங்கண்ணா.. பிளீஸ்)

தமிழ்நாட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டும்
என சொல்லும் தமிழரல்லாத ஒரு இந்தியத் தேசியரை எங்காவது நீங்கள்
கண்டதுண்டா..?
(ஏனுங்கண்ணா. நம்மதான் லூஸுன்னா, எல்லாரும் லூஸாகணும்னு நினைக்கிறீங்க?
அவனுங்களாவது பொழச்சி போவட்டுங்கண்ணா.. நம்ம காமெடியை அவனுங்களால தாங்க
முடியாது.. பிளீஸ்)

கேரளப் பாட்டாளி வர்க்கமும், தமிழ்த் தேசியப் பாட்டாளி வர்க்கமும்,
இன்னபிற பாட்டாளி வர்க்கங்களும் இணைந்து இந்திய முதலாளிகளை முறியடிக்க
வேண்டும் என்கிற இந்தியப் புரட்சிக்கு, இன்றைய சூழ்நிலையில் ஏதேனும்
சாத்தியமிருக்கிறதா...?
கேரளாவில் உள்ளப் பாட்டாளி வர்க்கம் எவ்வளவு புரட்சிகரமானதாக
இருந்தாலும், முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமை சரி தான்
என்று அறிவிக்குமா..
(ஏனுங்கண்ணா இப்படி.. நாப்பது வருசமா கம்யூனிஸம் கேரளாவில
தழைத்தோழ்ங்கினாலும், அவனுங்க தனி கேரளா கேக்க மாட்டேங்கறான். அது
மட்டுமில்ல, தமிழ்நாட்டு தொழிலாளிக்கு ஆதரவா பேசமாட்டேங்கறான்.
தமிழ்நாட்டு விவசாயிக்கு தண்ணி தரமாட்டேங்கறான்.. ஏனுங்கண்ணா இப்படி?
ஒருவேளை அவனும் உங்களை மாதிரியே பொழப்புக்கு கம்யூனிஸம் பேசறானோ? )

தியாகு: ம்ம்
அறிவிக்காது
(அறிவிக்கொழுந்துங்கண்ணா இது. “ம்ம்”னு சொன்னா அது கார்ல் மார்க்ஸே
“ம்ம்”னு சொன்ன மாதிரி.. )


அருணபாரதி: சேகுவேரா வழிவந்த கியுபா, சாவேஸ், மாவோ வழிவந்த சீனா என
வர்க்கப் புரட்சி வெற்றி பெற்ற எல்லா பொதுவுடைமை நாடுகளும் அவரவர் சொந்த
நலனில் அக்கறை காட்டி சர்வதேசியத்தை அழித்துவிட்ட பிறகு, புதிய பாட்டாளி
வர்க்க சர்வதேசியம் தோற்றம் பெற வேண்டிய அவசியம் உள்ளது..
(அடேங்கப்பா.. பொதுவுடமை நாடா?? அது என்னாங்கண்ணா அது? இதுக்கு எதுக்கு
பொதுவுடமை? கம்யூனிஸம்னு.. பேசாம இனவெறி அரசியல்னு ஹிட்லர் பாணிக்கு
வரதுக்கு ஏன் உங்களுக்கு சேகுவாரா? மாவோன்னு? பேசாம ஹிட்லரை படமா
வச்சிகிட்டு போஸ் குடுத்தீங்க்ன்னா இன்னும் நேர்மையா இருக்குமே?
கியூபாக்காரன் அமெரிக்காகாரனுக்கு மாமா வேலை பாத்து கியூபா பொண்ணுங்களை
வித்துத்தான் பொழப்பே ஓடுதுன்னு சொல்றாங்களே. அதப்பத்தியும் பேசுங்கண்ணா)

தியாகு: அப்போ பொதுப்படையான் இராணுவமும் பொது அரசாங்கமும் கொண்டிருக்கும்
இந்திய அரசை துண்டு துண்டாக இருக்கும் புரட்சிகர சக்திகல் இணைந்து எப்படி
எதிர்க்க முடியும்
(தியாகு.. அப்பவே சொன்னேன். உஸ்மான் சாலையில வகுப்பெடுக்கிறாய்ங்கன்னு..
இல்லைன்னா, மருதையன்கிட்ட கேட்டுப்பாருங்க.. அவருதான் சீனாவோட ஏஜண்ட்)

அருணபாரதி: அதற்கு இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒர் இனமாவது தமக்கான
சுயநிர்ணய உரிமையைப் பெற தீர்க்கமாக போராடி, மற்ற இனங்களை அத்துடன்
இணைத்துக் கொள்ள வேண்டும்..
(அப்படீங்கறீங்க.. ஆனா ஆந்திராவுல இருக்கற பொரட்சிக்காரவுங்களுக்கு நீங்க
தமிழ்நாட்டுல இருந்து நாயுடுக்களையும் அருந்ததியரையும்
கொல்லப்போறீங்கன்னு தெரியுமா?)

தியாகு: இந்திய தேசிய புரட்சியின் மூலம் இந்திய அரசை தூக்கி எறிய
வேண்டாமா
அருணபாரதி: தமிழ்த் தேசியப் பாட்டாளி வர்க்கம் இதற்குத் தயார்...
(அடேங்கப்பா.. தமிழ் தேசிய் பாட்டாளி வர்க்கம் தயாராமே? அது எத்தனை
பேருங்கண்ணா? நீங்க இலங்கை அரசுகு எதிரா ஊர்கோலம் போனப்ப ரோட்டை அடைச்சி
ஊர்கோலம் போனீங்களே.. பத்து பேரு! அவனுங்களா? காமெடி
தாங்கமுடியலைங்கண்ணா)

ஆனால், மற்ற தேசிய இனங்களில் யார் இதற்கு தயார்..?
(ஏனுங்க.. கர்னாடகா ஒடுக்குமுறை அரசு நடத்தும் பைத்தியக்கார
ஆஸ்பத்திரியிலேர்ந்து உங்களை மாதிரி பத்து பேரை புடிக்க முடியாதா?
நம்பிக்கை வயுங்கண்ணா)

அவர்கள் தயராகி வரும் வரை நாம் இந்தியத் தேசிய அரசின் இன ஒடுக்குமுறையை
அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமா..?
நல்லாயிருக்கிறது ஞாயம்..
தமிழ்நாட்டில் ஓரளவு தற்பொழுது மெல்ல எழுந்துள்ள இந்தியத் தேசிய
எதிர்ப்பு நிலை, காசுமீர், மணிப்புர், அசாம், மிசோரம் தவிர வேறு எந்த
மாநிலத்திலாவது எழுந்திருக்கிறதா..?
முதலில் அதனை எழச் செய்யுங்கள்..
கேரளாவிலும் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும், மகாராட்டிரத்திலும் முதலில்
இந்தியப் புரட்சிக்கான விதையை விதையுங்கள்..
தமிழ்நாட்டில் ஏற்கெனவே புரட்சித் தேவை என்ற உணர்வு எழுந்து விட்டது..
(அடேங்கப்பா.. புரட்சி தேவை என்ற உணர்வு எழுந்துவிட்டதாமே? அப்போது ஒன்னு
செய்யுங்க.. தேர்தலை பகிஷ்கரிப்போம்னு ஒரு அறிக்கை விடுங்க.. எத்தனை பேர்
ஓட்டு போடறான் எத்தனை பேர் ஓட்டு போடலைன்னு பாப்போம். ஒரே ஒரு கிராமத்தில
ஓட்டு போடலைன்னா, உடனே, “ஆ புரட்சி புரட்சி”ன்னு அறிக்கை உடற காமெடியை
கொஞ்சம் தள்ளி வையுங்கண்ணா... இது ரொம்ப பழைய காமெடி.... கிராமத்தில
இருக்கறவங்களுக்கெல்லாம் தேர்தல் வரதாலதான் கொஞ்சமாவது ஏதாவது நடக்குது.
அதனாலதான் தேர்தல் சமயத்தில இப்படி அறிக்கை உடறாங்க. உடனே அதிகாரிங்க
வந்து கிணறு வெட்டித்தருவாங்க. தேர்தலும் இல்லையண்ணா, இப்படி மிரட்ட
முடியுமா.. உங்க ஆட்சியில இப்படி எந்த கிராமமாவது எதிர்த்தா என்னா
செய்வீங்க? மூணாவது ஆளுக்கு தெரியாம சுட்டுத்தள்ளிடுவீங்க...இல்லையா?)

தமிழ்நாடு மட்டுமே விடுதலை பெற வேண்டுமென புரட்சியை முன்னெடுக்கும்
பொழுது தான் கேரளம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் புரட்சிக்கான ஆதரவு,
எதிர்ப்புக் குரல்கள் எழும்பி, ஒருவேளை சாத்தியப்பட்டால் அதுவே இந்திய
புரட்சிக்கு இட்டு செல்லும்..
(ஹெஹ்ஹே.. கிளப்புங்க.. )

தியாகு: ம்ம்
(!!!)
அருணபாரதி: ஆனால், வெறும் தமிழ்த் தேசியப் புரட்சியை மட்டுமே குறை கூறிக்
கொண்டிருந்தால், நீங்கள் நம்பியிருக்கும், கனவுகாணும், இந்திய
புரட்சிக்கும் அது ஆப்பு வைக்கும்..
(கனவு காணும் வாழ்க்கை யாவும்... அருண்பாரதியும் தியாகுவும் கை
கோர்த்துக்கொண்டு ஸ்லோ மோஷனில், மோஷன் போகிறார்கள்)

தியாகு: ம்ம்
அருணபாரதி: தமிழ் இனம் மற்றும் அனைத்துப் பிற இனங்களின் சுயநிர்ணய
உரிமைகளையும் மதிக்கும், அதற்கு மதிப்பளிக்கும் இந்திய அரசு என்பது
சாத்தியமே இல்லை..
(தமிழ்நாட்டில இருக்கிற மற்ற இனத்தினரின் உரிமையாயவது மொதல்ல மதிங்கண்ணா.
அப்புறம் தமிழர்களை டெல்லிக்காரன், பெங்காலிக்காரன், ராஜஸ்தான்காரன்,
கேரளாக்காரன் மதிக்கிறானான்னு பாப்போம்)

அதனை வரலாற்றில் பின்னால் தான் நீங்கள் உணர்வீர்கள்..
தமிழகத்தைத் தவிர வேறு எங்குமே இவ்வாறான புரட்சிகர சக்திகளை
வளர்த்தெடுக்காமல் இது சாத்தியப்படாது..
முதலில் அதற்கான முன்முயற்சியை எடுங்கள்..
(வளர்த்தெடுக்கிறதுன்னா என்னா? “தெருவை அடைச்சி” ஊர்வலம் போறதா?)

தியாகு: ரச்யா போன்ற நாடுகலில் நடந்த புரட்சி இப்படித்தான் தனிதனியாக
நடந்ததா
(போச்சுடா. ரசியாவே புரட்சியாவது மண்ணாவதுன்னு ஓடிட்டானுங்க.. இவரு. ரசிய
பொரட்சி பத்தி ஆராய்ராரு)

அருணபாரதி: இந்தியாவில் தற்பொழுது இருக்கும் நிலை ரசியாவில் அன்று
இல்லை..
(இவரு இன்னொரு அறிவுக்கொழுந்து.. குப்புற படுத்து புல்லைபுடுங்கி
ஆராய்ச்சி செய்யும் செந்தில் நினைவுக்கு வருகிறாரா?)

அருணபாரதி: ரசியா மன்னராட்சியின் கீழ் ஒன்றுபட்டிருந்த நேரத்தில்,
அங்குள்ள பல்வேறு இன மக்களும் இணைந்து போராடுவதற்கான ஒரே இயக்கமாக
லெனினின் இயக்கம் வளர்ந்திருந்தது..?
இந்தியாவில் அது போன்ற இயக்கத்தை கட்டி எழுப்புவது சாத்தியமா முதலில்...?
(இயக்கத்தை கட்டி எழுப்புறீங்களா! அடேங்கப்பா. ரொம்ப கட்டிராதீங்க..
நொறுங்கிறப்போவது)

தியாகு: அத்தகைய ஒரு இயக்கத்தை நாம் இந்ஹியாவில் கட்ட முடியாமைக்கு என்ன
காரணம்
(அவனவன் தன்னோட பொழப்பை பாக்க ஆரம்பிச்சிட்டான்ங்கறதுதான் காரணம்..)

அருணபாரதி: முல்லைப் பெரியாற்றை விட்டு கொடுக்க மறுக்கும் மலையாளிகளும்,
காவிரியை மறுக்கும் கர்நாடகமும், நமக்கு எதிரிகளல்ல.. அவர்களை தூண்டி
விட்டு தேசிய இனங்களின் புரட்சிகர சக்திகளை இணைந்து விடாமல் தடுக்கும்
இந்திய ஆரிய இனவெறி அரசே இதற்கு முதல் எதிரி..
மலையாளிகள் உள்ளிட்ட இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களும்,
தமிழர்களுக்கும் வேறுபாடு உள்ளது..
தமிழர்கள் இத்துணைக் கண்டத்தின் மூத்தக் குடிமக்கள்..
தமிழர் அல்லாத அனைத்து இனங்களும் ஆரிய இனத்துடன் சமரசம் செய்து கொண்ட
இனக்குடும்பங்கள்..
இது அடிப்படை..
(ஆஹா! நேத்துவரைக்கும் கன்னட, மலையாள ஆந்திராவை திராவிட இனம்னு சொல்லி
அவர்களை பழங்குடிகள்னு சொல்லிக்கிட்டிரீந்தீங்க.. இப்போ வெறும் தமிழர்கள்
மட்டும்தான் பழங்குடியினரா? அப்ப படுகர்கள், தோடர், இருளரெல்லாம்
என்னாங்கண்ணா? அவங்களோட இடத்தை பிடித்த மற்ற தமிழர்களை துரத்தி படுகர்
தோடர் இருளர்கிட்ட தமிழ்நாட்டை கொடுக்கணுமே. அதனால நீங்க தமிழ்நாட்டை
விட்டு ஓடுங்கண்ணா... )


தியாகு: ம்ம்
(போச்சுடா!)

அருணபாரதி: இந்திய அரசு ஆரியப் பார்ப்பனர்களின் தலைமையிலான அரசு..
ஆரியத்துடன் சமரசம் கொள்ளாத அரசுகள் மட்டுமே இந்தியாவை எதிர்ப்பது ஏன்
என்று யோசிசத்துண்டா..?
தமிழர்கள் தமிழர் மரபினம்..
காசுமீரகள் தனித்த மரபினம்..
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மங்கோலிய மரபினம்..
(ஆமாங்கண்ணா. தமிழர்கள் தோன்றிய குரங்கினம் தனி குரங்கினம்.. காசுமீரிகள்
தோன்றிய குரங்கினம் இன்னொரு தனி குரங்கினம். வட கிழக்கு மாநில மக்கள்
தோன்றிய குரங்கினம் மங்கோலிய குரங்கினம்... பிச்சு உதற்றீங்க.. சூப்பர்
இப்படியே உளறிகிட்டு இருங்க.. ரொம்ப காமெடியா இருக்கு!)

தியாகு: தனிதனி இனமாக இருப்பதால் புரட்சி தனிதனியாத்தான் நடத்த முடியும்
என்பது எப்படி சாத்தியம் இல்லை ஏனென்றால் தமிழ்நாட்டில் புரச்சி
நடக்கும்போது இந்திய் அரசு அப்படியேதான் இருக்கும் அது எளிதாக தமிழ்
நாட்டில் நடக்கும் புரட்சியை நசுக்கும் அல்லவா
(தமிழ்நாட்டில புரச்சி நடக்கும்போது.... ஆஹா... தமிழ்நாட்டில புரட்சி
நடக்குதுன்னு உங்களுக்கு எப்படிங்கண்ணா தெரியும்? மருதையன் மிலிட்டிரி
டிரஸ்ல நடந்துவருவாரா? )



(தொடரும்!!!!)

நம் ஊரில் காமெடியன்களுக்கு பஞ்சமேது?

இது கொஞ்சம் வக்கிர காமெடி! அவ்வளவுதான்.

10 Comments:

Anonym said...

நச்!

Anonym said...

தமிழ் மணி,

தோழர் மருதையன் மிலிடரி ட்ரெஸ்ஸில் பவனி வரும் கண் கொள்ளா காட்சியை என்று காண்போம்.

கூட பொலிட் பீரோ மெம்பர் வினவு,வெளியே முதக்கும் அய்யா போன்றவர்களூம் கோஷம் போட்ட படி வருவார்களா?

said...

எஸ் எஸ் சந்திரன் போலீஸாக சினிமாவில் வரும் காட்சியை கற்பனை செய்துகொள்ளுங்கள்..
அதுதான்

said...

தமிழ்மணி அய்யா,

அடப் பாவி;

தோழர் மருதையன், எஸ்.எஸ்.சந்திரன் போலிஸ் வேஷத்தில் வருவது போல் வருவாரா?அப்பm வினவு கோவை சரளா பெண் போலிஸ் போல் வேஷமா?மிதக்கும் வெளி வடிவேலுவா, கஞ்சா கருப்பா?

பாலா

said...

புல் புடுங்கி ஆராய்ச்சி செய்யும் செந்திலை மறக்கமுடியுமா? அது மாதிரி நெறைய அலைவதே பிரச்னை!

Anonym said...

ஒருபுறம் 'தன்னார்வ நிறுவனங்கள் ஏகாதிபத்திய கைக்கூலிகள்' என்று புத்தகம் போட்டு தமிழக உழைக்கும் மக்களிடம் காசு கறந்து கொண்டு, இன்னொரு புறம தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியரான கலையரசனோடு இணைந்து கொண்டும், வினவு - ம.க.இ.க கும்பல் நடத்தும் புரட்சி சூர்ப்பரோ சூப்பர்.. இதனை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திறகாக ம.க.இ.கவின் பிரான்ஸ் முகவரான இரயாகரன் மூலமாக 'இனியொரு' இணையத்தின் மீது தாக்குதல் நடத்துவது அதனினும் சூப்பர். ச்சீ இதுவும் ஒரு பிழைப்பா?

http://inioru.com/?p=7440

Anonym said...

ஒருபுறம் 'தன்னார்வ நிறுவனங்கள் ஏகாதிபத்திய கைக்கூலிகள்' என்று புத்தகம் போட்டு தமிழக உழைக்கும் மக்களிடம் காசு கறந்து கொண்டு, இன்னொரு புறம தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியரான கலையரசனோடு இணைந்து கொண்டும், வினவு - ம.க.இ.க கும்பல் நடத்தும் புரட்சி சூர்ப்பரோ சூப்பர்.. இதனை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திறகாக ம.க.இ.கவின் பிரான்ஸ் முகவரான இரயாகரன் மூலமாக 'இனியொரு' இணையத்தின் மீது தாக்குதல் நடத்துவது அதனினும் சூப்பர். ச்சீ இதுவும் ஒரு பிழைப்பா?

http://inioru.com/?p=7440

said...

You will not be dissapointed reading this - Vinavayanam - Part 1 and Part 2 @ http://nonono-no-no.blogspot.com/

nandri

said...

நன்றி நோநோ

ரகுவீர் said...

haa haa... நச்சுன்னு அடிச்சிங்க தமிழ்...

இன்னும் இரண்டு மாதத்துக்கு இவனுங்க கிட்டேயிருந்து சத்தெமே இருக்காது