Samstag, 4. Juli 2009

கம்யூனிஸ மேதை கிம் இல் ஜாங்கின் இரண்டு பிறப்புகள்

கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த காவிரி இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி உலகை நிறைத்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்தது.

இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள்?

எல்லோரும் சிரிப்போம். இது என்ன அபத்தகளஞ்சியம் என்று திமுக காரர்களே சொல்லுவார்கள். அதிமுகவினர் தங்களது தொலைக்காட்சிகளில் விமர்சனம் செய்வார்கள். எல்லோரும் இது போன்ற அபத்தங்களை பள்ளிக்கூட பாட புத்தகங்களில் சிறுவர் படிக்கவேண்டுமா என்று கேட்பார்கள்.

ஆனால் பிரகாஷ் காரட், என்.ராம் நடத்தும் தி ஹிந்து, சிபிஐ, சிபிஎம், மக இக மருதையன், வினவு , அசுரன், ஏகலைவன், கும்பலுக்கெல்லாம் இதுவே சரியான வரலாறு எழுதும் முறை என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்குமா?

ஆமாம்.

உலகத்தில் இருக்கும் கம்யூனிஸ நாடுகளாக இவர்கள் பாராட்டுவது வடக்கு கொரியா. அதற்கடுத்து கியூபா. போனாற்போகிறது என்று வெனிசூவெலா( ஹியூகோ சாவஸ்). சீன எச்சக்கலை பொறுக்கி பிரசண்டா அய்யர் நேபாளத்தை நிர்வகித்தது வரை நேபாளம் (இப்போது இல்லை. சீனா கம்யூனிஸ்டு நாடு இல்லை என்பார்கள். ஆனால் சீன எச்சக்கலை பொறுக்கி பிரசண்டாவை ஆதரிப்பார்கள்.. இது எப்படி என்பது அவர்களிடம்தான் கேட்கவேண்டும்)

வடக்குகொரியாவில் கிம் இல் ஜுங் என்ற கழண்ட கேஸ் ஆட்சி செய்கிறது. இவரது அப்பா ஒரு கழண்ட கேஸ். இவரும் இவரது அப்பாவும் கம்யூனிஸ நாடுகளுக்கே உரிய தனிநபர் வழிபாட்டை வடக்கு கொரியாவில் கொடிகட்டி பறக்க வைத்தார்கள்.மேலே இருக்கும் வீடியோவில் கிம் இல் ஜுங்கின் உண்மையான பிறப்பும், அவரது அதிகாரப்பூர்வமான பிறப்பும் பார்க்கலாம்.

மருதையன் அல்லது பிரகாஷ் காரட் இந்தியாவின் ஜனாதிபதியாகவோ, அல்லது சர்வாதிகாரியாகவோ ஆனால், இது போன்றதொரு கஷ்டகாலத்தை பார்க்கலாம்.

ஆனால் அப்போது எதிர்க்க எவருக்கும் சொந்தமாக தொலைக்காட்சியோ, பத்திரிக்கைகளோ இருக்காது. தெருமுனையில் கூட மூன்றுபேர் சேர்ந்து அரசியலை பற்றி பேச முடியாது.

ஆனால் வர்க்க பேதம் இல்லை என்று அறிவித்துவிடுவார்கள். வர்க்கபேதம் இருக்கிறதோ இல்லையோ வர்க்க எதிர்கள் என்று பெயர் சூட்டப்பட்டு பல கோடி இந்தியர்களை கொன்றுவிடுவார்கள் எனப்துமட்டும் வர்லாறு தரும் பாடம்.


இந்த மாதிரி முகஸ்துதி போஸ்டர்கள் மட்டுமே இந்த கம்யூனிஸ்டுகளின் சொர்க்க பூமியான வடக்கு கொரியாவில் வரையலாம். வெறெதையும் வரைந்தால் நீங்கள் வர்க்க விரோதி என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுவீர்கள்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் என்று பெயர் வைத்திருக்கிறார்களே அதற்கு என்ன அர்த்தம்?

இதேதான் மற்ற கம்மூனிஸ்டுகளும் சொல்வார்கள். சிபிஎம் சிபிஐ எல்லோரும் கலை மக்களுக்கு சேவை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்பார்கள்.

அதற்கு பொருள் என்னவென்றால், இவர்கள் ஆட்சிக்கு வரும் வரைக்கும் எல்லோரும் பட்டினி பஞ்சையில் கிடந்து சாவதாகவும் புழுப்போல நெளிந்து அடக்குமுறையில் அழிவதாகவும் எழுதவேண்டும். இவர்கள் அதாவது முன்னோடிகள் (பயனீர்கள்) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், அதாவது கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் தலைவர்கள் மட்டுமே உலகத்தை சரியாக புரிந்து ஒளி தருகிறார்களாம். அதனை பாராட்டி கட்டுரை, கதை கவிதை ஓவியங்கள் வரையவேண்டும்.

ஆனால் கம்மூனிஸ ஆட்சி வந்ததும் ஒரே பாலும் தேனும் தெருக்களில் பெருக்கெடுக்கும் (ஆனால் ஈ எறும்பு இந்த தேனை பாலை மொய்க்காது.. அப்படி ஒரு தேனும் பாலும்!) அதனை பாராட்டி இதற்கெல்லாம் காரணம் பிரகாஷ் காரட் என்ற தெய்வம்தான், அல்லது மருதையர் என்ற மாபெரும் தலேவர்தான் என்று (யார் மற்றவரை கொல்வதில் முந்திக்கொள்கிறார்களோ அவர்கள்) என்று பாராட்டி கதை, தொடர்நாவல், கவிதை, சிறு கட்டுரை, பெருங்கட்டுரை, புத்தகம் ஓவியம் எல்லாம் எழுதவேண்டும். இது போல வடக்கு கொரியாவில் கம்மூனிஸ்டு அப்பனும் கம்மூனிஸ்டு பிள்ளையும் அடிக்கும் கூத்தைத்தான் மேலே படங்களில் பார்க்கிறீர்கள்.

8 Comments:

Anonym said...

good article exposing commies

said...

thanks

said...

pls see my comments at :

http://www.vinavu.com/2009/06/23/j-p-r-strikes-back/

said...

Thanks Athiyaman
I will see that

said...

அன்புள்ள அதியமான்,

கார்ல் மார்க்ஸ், லெனின் மாவோ எழுதுவதை படிப்பவன் கம்யூனிஸ்டாக இருப்பான்.

அப்படி படித்ததை புரிந்துகொள்பவன் கம்யூனிஸ்டாக இருக்கமாட்டான்.

உங்களுக்கும் எனக்கும் தெரிந்த அளவுக்குக்கூட அரை டிக்கட்டுக்கும், மாசெ, வினவு பைத்தியங்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரியவேண்டிய அவசியமும் இல்லை. இவர்களிடம் பொறுமையாக எப்படி ஒரு தெருவிளக்கு போடுவாய் என்று கேட்டதற்கு இன்னும் பதில் வருகிறது! நீங்கள் என்னடாவென்றால் இவர்களுக்கு புரியவைக்க முயற்சிக்கிறீர்கள்.

புதிய கலாச்சாரத்திலும்/ ஜனநாயகத்திலும் வருவதை வாந்தி எடுத்தாலே தன்னை பெரிய் அறிவாளியாக அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். எப்போதாவது புதியஜனநாயகத்திலும் புதிய கலாச்சாரத்திலும் வருவதை இவர்களில் யாராவது விமர்சித்து பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவே முடியாது. இவர்களுக்கும் எம்ஜியாரின் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் என்ன வித்தியாசம்?

புதிய ஜனநாயகமும், புதிய கலாச்சாரமும் சீனா சொல்வதுபடி எழுதப்படுகிறது. அதற்கும் சொந்த புத்தி கிடையாது. அதுவும் காசுக்கேத்த ஜால்ரா.

இவர்களை தொடர்ந்து எக்ஸ்போஸ் பண்ணிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

bala said...

புதிய கலாச்சாரத்திலும்/ ஜனநாயகத்திலும் வருவதை வாந்தி எடுத்தாலே தன்னை பெரிய் அறிவாளியாக அவர்கள் நினைத்துக்கொள்வார்கள்.//

oru kumbal theekkathir vaanthi, innoru kumbal puja.putha vaanthi..

onnum viththiyasam illai.

said...

அதே

said...

pls also see :

http://pitchaipathiram.blogspot.com/2009/07/blog-post_07.html

also my comments at :

http://suunapaana.blogspot.com/2009/07/blog-post.html

and at :

http://www.vinavu.com/2009/06/22/mp/