இந்தியாவில் ஜனநாயகத்தை ஒழித்து துண்டுதுண்டாக சிதறடித்து ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டு மாளவேண்டும் என்று சீனா மிகவும் முனைந்துள்ளது. இதற்காக இந்தியாவில் பல கட்சிகளுக்கு பணப்பட்டுவாடா செய்வது மட்டுமின்றி நக்ஸல்களுக்கு ஆயுத சப்ளையும் செய்கிறது.
இந்த சீன கைக்கூலி நக்ஸலைட்டுகள் ஏழை குடியானவர்களுக்காக போராடுகிறோம் என்று நவீன ஆயுதங்களை வைத்துக்கொண்டு ஏழை குடியானவர்களை கொன்று தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள். ரயில் தண்டவாளங்களை தகர்க்கிறார்கள். டெலிபோன் கம்பங்களை வீழ்த்துகிறார்கள்.
ஒரிஸ்ஸாவில் பாக்ஸைட் சுரங்கத்தின் மீது தாக்குதல், பிகாரில் போலீஸாரையும் பொதுமக்களையும் கொல்வது என்று இவர்களது கொலைவெறி அத்துமீறிக்கொண்டிருக்கிறது.
மாவோயிஸ்டுகள் இந்த தேர்தலை நிறுத்த கடும் பிரயத்தனம் எடுத்து வருகிறார்கள். ஜார்க்கண்ட், பிகார், சட்டிஸ்கார் மாநிலங்களில் தேர்தல் அலுவர்களை தாக்கி சுமார் 17 பேர்களை கொன்றிருக்கிறார்கள் இந்த ரத்தவெறி பிடித்த கோழைகள்.
ஒரு சில அரசியல்வாதிகளின் ஊழலை பெரிதாக்கி எல்லா அரசியல்வாதிகளையும் கொல்லவேண்டும் என்று மக்கள் நினைப்பது போல பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதில் கைக்கூலி மருதையனும் அவனது மக இக அமைப்பும் தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்கின்றன. இவர்களது பண வரவையும் செலவுக்கணக்கையும் பகிரங்கப்படுத்துங்கள் என்று பலமுறை கோரியிருக்கிறேன். இவர்கள் பணவரவு செலவுக்கணக்கை காட்டுவதில்லை. ஆனால், சொத்துக்கணக்கை காட்டி இந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகளை கேவலப்படுத்த இவர்கள் தயங்குவதில்லை. என்ன ஒரு கயமைத்தனம்!
சீன ஆயுதங்களுடன் பயிற்சி எடுக்கும் சீன கைக்கூலி நக்ஸலைட்டுகள்
இவர்களது பொன்னுலக பூமியான கியூபா, வடக்கு கொரியா, சீனா எல்லாம் ஊழலில் எந்த நிலையில் இருக்கின்றன என்று பார்ப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
உலகத்திலேயே ஊழல் மிகுந்த நாடு சீனா. அங்கு கம்யூனிஸ்டு கட்சி அதிகாரிக்கு லஞ்சம் வெட்டாமல் மலஜலம் கூட கழிக்க முடியாது. இந்த கம்மனாட்டிகள் இந்தியாவில் ஊழலைப்பற்றி பேசுகிறார்கள். இந்தியாவில் ஊழல் நடந்தால் அந்த ஊழலை பற்றி சுதந்திரமாக பத்திரிக்கைகள் எழுதலாம். சீனாவில் எழுத முடியுமா? கேனை கம்யூனிஸ்டுகளிடம் கேளுங்கள்.
இந்தியாவில் தேர்தல் நடப்பதும் ஜனநாயகம் இருப்பதும் அகில உலக ரீதியில் சீனாவுக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறது. உலகத்தில் உள்ளவர்கள் இந்தியாவை மதிக்கிறார்கள். சீனாவை வெறுக்கிறார்கள். அதற்கு சீனாவுக்கு தெரிந்த வழி இந்தியாவில் ஜனநாயகத்தை உடைத்து நாட்டையும் தூள்தூளாக உடைப்பது.
ஒரிஸ்ஸாவில் கொல்லப்பட்ட ஜில்லா பரிசத் தலைவர்
அதற்குத்தான் மருதையன் ஆனந்தவிகடனில் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பேசுகிறார். இந்தியாவில் மக்கள் தேர்தலை புறக்கணித்து புரட்சி பண்ணி இவர்களை ஆட்சியில் உட்கார வைக்கவேண்டுமாம். பிறகு இவர்கள் ஒரு புது ஜனநாயகத்தை உருவாக்கி மக்களுக்கு ஓட்டு கொடுப்பார்களாம். எப்படிப்பட்ட ஜனநாயகம். சீனாவில், கியூபாவில், வடக்கு கொரியாவில் உள்ளது போன்ற ஜனநாயகம்.
இந்தியாவில் ஜனநாயகம் சுதந்திரம் இருப்பதால், மருதையன் தமிழ்நாட்டின் முன்னணி பத்திரிக்கையில் தேர்தலை புறக்கணியுங்கள் என்று தாராளமாக பேசமுடிகிறது.
இதே போல சீனாவில் ஜனநாயக தேர்தல் வேண்டும் என்று ஒரு சீனர் பத்திரிக்கையில் பேச முடியுமா? அல்லது எழுத முடியுமா? அதுதான் மருதையன் காட்டும் ஜனநாயகம்!
இன்று சீனர்களை கட்டிப்போட்டிருப்பது சீன தேசிய வெறி. ஜனநாயகம் அல்ல. இப்படிப்பட்ட சீன தேசிய வெறியை சீனா ஊட்டி வளர்க்கலாம். அது ஓக்கே.
ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் வேண்டும் என்றோ அல்லது தேர்தலில் அடுத்த அரசை தேர்ந்தெடுங்கள் என்று பேசுவதோ அல்லது இந்திய மக்களுக்கு சார்பாக பேசுவதோ இந்திய தேசிய வெறியாம். அது கூடாதாம்! இந்திய தேசியம் என்று பேசினால் அது பாசிசம். ஆனால் சீனா ஊட்டி வளர்க்கும் சீன தேசிய வெறி கம்யுனிஸம்! என்னங்கடா கூத்து இது?
காஷ்மீரில் மக்கள் ஓட்டுப்போட்டு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதும் பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதும், இந்திய பாசிசம்.
ஆனால், திபெத்தில் திபெத்தியர்களுக்கு ஓட்டு கூட இல்லாமல், சீன கவர்னரை வைத்து சீனர்களை குடியேற்றி திபெத்தியர்களையே அங்கு சிறுபான்மையினராக ஆக்கி சர்வாதிகாரம் செய்வது கம்யூனிஸம், பாட்டாளி வர்க்க ஜனநாயகம்!
உகெர் முஸ்லீம் மக்களை மெக்காவுக்கு கூட போக அனுமதிக்காமல் குரானை படிக்கக்கூட அனுமதிக்காமல் அங்கே சீனர்களை குடியேற்றி ஆக்கிரமித்து அராஜகம் செய்வது பாட்டாளி வர்க்க ஜனநாயகம்!
என்ன புண்ணாக்குடா இது? இதுக்கு கூட நின்று ஜால்ரா போட்டு, நக்கி விடுவது மருதையன், இந்து ராம், சுப்பிரமணிய சுவாமி!
இவனுங்க பின்னாடியும் ஒரு மூளை கெட்ட கும்பல்.
44 Comments:
http://naxalwatch.blogspot.com/
அருமை நண்பரே, சேவை மனப்பான்மையோடு செயல்படும் உங்களைப்போன்ற ஆர.எஸ்.எஸ் சகோதரர்களால்தான் நமது நாட்டில் இன்னமும் ஜனநாயகம் இருக்கின்றது
சரியாக சொன்னீர்கள் அனானி, இந்த நக்சலைட்டு மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள், போலி செக்குலர்வாதிகள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை என்வோ தீவிரவாத
இயக்கம் போல சித்தரிக்கின்றனர்,
வலையுலகத்திலும இவர்கள் ஆதிக்கமே. வஜ்ரா, சீரா, தமிழ்மணி போன்ற செயல்வீரர்கள்தாம் இவர்களை எதிர்த்து போராடி வருகின்றனர்
இந்தியா எப்ப அடுத்தவர் விசயத்தில் மூக்கு நுழைக்காமல் தன்னுடைய விசயத்தில் மட்டுமே கவனம்செலுத்தினால் மட்டுமே இவைகளை நிறுத்தாலும். ஈழத்தமிழர்களின் ஆவி சும்மா விட்டுடுமா? என்ன ? இந்தியாவும் அடுத்த சோவியத் ஒன்றியமாய் மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை....
இந்த முசுலீம் ஜால்ராக்களுக்கு செருப்படி கொடுத்தீர்கள்
மேலே உள்ள அனானி,
விவரம் புரியாமல் பேசாதீர்கள். விடுதலை புலிகள் ஒழிவதுதான் நமது நாட்டுக்கு நல்லது. ஏனென்றால் அவர்களும் சீனாவுடன் கூட்டணி அமைத்து விடுவார்கள் என்பது நிச்சயம். இந்தியா இலங்களை அரசுக்கு உதவுவதே சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை காப்பாற்றத்தான். இதை தமிழ்மணி போன்றோர் உலகுக்கு உணர்த்த வேண்டும்.
கேடுகெட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தானுக்கு மகுடம் ஒரு கேடா? இனி தமிழ்மணத்தை அமிலம் ஊற்றித்தான் சுத்தம் செய்ய வேண்டும்
மதவெறி பிடித்த இந்திய கிறித்து்வர்களும் இஸ்லாமியர்களும் எப்படி அவர்கள் சார்புடைய வசதி படைத்த அந்நிய நாடுகளின் உதவியுடன் பாவப்பட்ட தலித்துக்களை பண ஆசைகாட்டி பாதுகாப்பின்மை என்கிற இல்லாத பயங்களை அவர்கள் மனங்களில் உருவாக்கி தங்களது மதங்களுக்கு இழுக்கின்றனரோ அதேபோல்தான் இந்த அரைவேக்காடு அறிவுகெட்ட கம்யூனிஸ்டுகளும் இந்தியாவிலும் மற்றும் உலகம் முழுதிலும் உள்ள ஏழைகளிடம் மதவாதிகள் செய்யும் அதே மனோவசிய முறையில் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் பலவகையான பயங்களையும் பீதிகளையும் கிளப்பிவிட்டு அமைத்திக்கு பங்கம் விளைவித்து சமுதாயத்தை இரண்டாக்கி இடையில் கூத்தடிக்கும் பேடிகள். இந்த கம்யூனிஸ்டுகளுக்கு ஏழைகளின் சமுதாயம்தான் தொழில் மூலதனம். ஏழைகள் இல்லாவிட்டால் இவர்கள் கதி அதோகதிதான். இவர்கள் பாட்படுவதாக கூறிக்கொள்வது எழைகளற்ற சமுதாயத்திற்காக அல்ல. மாறாக, ஏழைகளின் வர்க்கம் அழியாத சமுதாயத்தை உருவாக்குவதற்காகத்தான் இவர்கள் இவ்வளவு பந்தா கட்டுவதும். இலங்கையில் சிங்கள அரசுடன் கூடிக்கொண்டு தமிழர்களை அழித்து இப்பிராந்தியத்தில் அமைதி கெடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பதும் சீன நாய்கள்தான். பாக்கிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்து இங்கும் அமைதி கெடுத்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுப்பதும் இதே சீன கம்யூனிஸ பொறுக்கிகள்தான். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகைளைப்போல் வெறிபிடித்த மத தீவிரவாதிகளுக்கும் கம்யூனிஸ வெறிபிடித்த சொறி நாய்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஒருவன் கடவுள் என்றும் மற்றவன் மாவோ லெனின் என்றும் ஊரை ஏமாற்றுகிறான்.
அடுத்து தேசிய நலத்தில் அக்கறை கொண்ட பாரதிய ஜனதாவின் ஆட்சி என்பது நிச்சயம். அப்போது உங்களைப் போன்ற போலி செக்குலர்வாதிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கும். நண்பரே தயாராய் இருங்கள்
வாங்க மாசிலா அண்ணே, நீங்க இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் த்தை தாங்கு தாங்கு என தாங்குவது எங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே.
தெரியாதவர்களுக்கு
http://naalainamathae.blogspot.com/2009/02/blog-post.html
உலகின் ஒரே பெரிய உன்னத ஜனநாயக நாடான இந்திய தேசத்தை கண்டு சீன கைகூலி நாய்களுக்கு சொறிபிடிக்க ஆரம்பித்துவிட்டது. சொறிபிடித்தவன் கை சும்மா இருக்குமா என்ன? அதுதான் பாவப்பட்ட மக்களை சுட்டொழிக்கின்றனர். வாழ்க தன்நிகரற்ற அரிய இவ்வுலகத்தின் உண்மையான ஒரே பெரிய இந்திய ஜனநாயகம். எத்தனை வகை இனங்கள்! எத்தனை வகை மொழிகள்! எத்தனை வகை கலைகள்! எத்தனை வகை கலாச்சாரங்கள்! எத்தனை வகை மக்கள்! எத்தனை வகை மதங்கள்! அத்தனை வகை வழிபாடுகள்! அத்தனையும் ஒருசேர ஒற்றுமையுடன் இணைந்து உலகிற்கே ஜனநாயக பாடம் கற்பிக்கும் அற்புத இந்தியாவிற்கு சீன நாய்களும் அதன் கைகூலிகளும் சதா வேதனைகள் கொடுத்துக்கொண்டிருப்பது இந்நாய்களின் பயத்தையும் பலவீனத்தைத்தான் காட்டுகிறது.
ஆமாம் மாசிலா நீங்கள் சொல்வது மிகவும் சரி, வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ் நாய்களை இந்தியாவில் வளர்ப்தே சீனா என நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருகின்றன
புதிய ஈழவன் : //வாங்க மாசிலா அண்ணே, நீங்க இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் த்தை தாங்கு தாங்கு என தாங்குவது எங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே.//
புதிய ஈழவன் ஐயா, மறுபடியும் ஒருமுறை எனது 'அந்த' பதிவினை அமைதியுடன் படித்து அதன் ஆழக்கருத்தை சரிவர கிரகித்துக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன். எவரொவரும் தனது தாய்நாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் நோக்கில் யார் எழுதினாலும் அதை கண்டிப்பது ஒரு கடமையே. இது உங்களுக்கும் பொருந்தும் என நினைகிறேன். மேற்கொண்டு, தமிழ்மணியின் இப்பதிவின் கம்யூனிஸ கருவை திசைதிருப்பும் நோக்கில் உங்களுடன் இவ்வாதம் செல்வதால் இத்துடன் இங்கு முடித்துக்கொள்கிறேன்.
உண்மையை சொன்னால் பயந்து ஓடுவது ஏனோ? நீங்கள் சொன்ன அதே தாய்நாட்டு பற்று சீனாவுக்கு கூட பொருந்தும் அல்லவா அப்போது எது சரி எது தவறு என்று ஒன்று இல்லாமலே போய்விடும். இந்தியனுக்கு இந்தியா செய்வது சரி, சீனனுக்கு சீனா செய்வது சரி, இலங்கையனுக்கு இலங்கை செய்வது சரி ஆக இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதோ, சீனா இந்தியாவுக்கு பிரச்சனை கொடுப்பதோ, இலங்கை இராணுவம் தமிழ் மக்களை கொல்வது என எல்லாமே சரியானவையென்றால் பின் சீனாவை ஏன் கண்டித்து பேசுகிறீர்கள்?
ஒருவன் தலித் இனத்தை சார்ந்தவனாக இருக்கலாம், மதங்கங்களை வெறுப்பவனாக இருக்கலாம், கடவுள்களை தூற்றுபவனாக இருக்கலாம் அதே சமயத்தில் அவன் ஜனநாயகத்தை விரும்புபவனாகவும், இந்தியாவை நேசிப்பவனாகவும், கம்யூனிசத்தை வெறுப்பவனாகவும் இருக்கமுடியும் என்பதை ஏந்தான் இந்த சமுதாயம் ஏற்க மறுக்கிறதென்று புரியவில்லை. சாதாரண எளிய மக்களுக்கு சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாதென்று சில அதிமேதாவிகளும் புத்திசாலிகளும் தாமாகவே அவ்வெளியவர்களுக்காக சிந்திக்கவும் முடிவெடுக்கவும் அரசாங்க அத்தாட்சி பெற்ற அதிகாரிகள்போல் நடந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். இங்கு கம்யூனிஸத்தை தாக்கி எழுத ஆரம்பித்தவுடன் 'இந்து மதம், ஆர்.எஸ்.எஸ்' போன்ற மதசார்பு வர்க்கங்களின் வட்டத்திற்குள் அடைத்து வாதங்களின் நேரடி கருத்துப் பறிமாற்றங்களின் போக்கை திசை திருப்பி மூச்சையடைக்க முயற்சிப்பது என்பது கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் தெரியாதவர்களின், உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களின் மாற்று உத்திகளே.
'இந்து மதம், ஆர்.எஸ்.எஸ்' போன்ற மதசார்பு வர்க்கங்களின் வட்டத்திற்குள் அடைத்து வாதங்களின் நேரடி கருத்துப் பறிமாற்றங்களின் போக்கை திசை திருப்பி மூச்சையடைக்க முயற்சிப்பது.......
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் பாராட்டி உச்சி முகர்பவர்கள் ஆர்.எஸ்.காரர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொள்கிறார்களே.. அதுபற்றி மௌனம் ஏனோ?
ஒரு போலி செக்குலர்வாதி :// நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் பாராட்டி உச்சி முகர்பவர்கள் ஆர்.எஸ்.காரர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொள்கிறார்களே.. அதுபற்றி மௌனம் ஏனோ? //
ஐயா, எனக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது அதில் ஈடுபாடும் கிடையாது. ஈவிரக்கமற்ற எவ்வகை தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் அவைகளை அடியோடு வெறுப்பவனே நான். ஆர்.எஸ்.எஸ். இதற்கு விதிவிலக்கல்ல.
நானும் உங்களைச் சொல்லவில்லை.
//இந்தியாவில் ஜனநாயகத்தை ஒழித்து//
//எல்லா அரசியல்வாதிகளையும் கொல்லவேண்டும்//
இந்த பதிவில் பல இப்படி பல காமெடிகள்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்.
கேட்பவன் கேனை பயலா இருந்தா, எருமை ஏரோப்பிளான் ஓட்டுவதா சொல்வாங்களாம்.
//பண வரவையும் செலவுக்கணக்கையும் /
மக்கள் கலை இலக்கிய தொண்டர்களை ரயிலில், பேருந்தில் தங்களுடைய அமைப்பு பெயர்களை சொல்லி, தாங்கள் எடுக்கும் இயக்கங்களின் முக்கியத்துவத்தைச் சொல்லி, மக்களிடம் பணம் வசூலிக்கிறார்கள்.
உங்களுக்கு வருகிற ஆத்திரம், ஆர்.எஸ்.எஸ். அம்பிகளுக்கு வருகிற கோபமாக இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.க்கு பல புரவலர்கள் டாட்டா, அம்பானி, பிர்லா போன்ற பெரிய கைகள் இருக்கும் பொழுது, பாவப்பட்ட மக்களிடம் வசூலிக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய கணக்கை பகிரங்கப்படுத்துமா!
மாசிலா நீங்கள் நினைப்பது தவறு. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எனபது ஒரு தீவிரவாத அமைப்பு இல்லை அது தீவிர தேசப்பற்று அமைப்பு. ஒரு இந்திய தேசிய அபிமானி என்ற வரையில் உங்களை நான் நண்பனாகவே கருதுகிறேன்.
மாசிலா: ஹிட்லரை சர்வாதிகாரி என தூற்றுபவர்கள் அவரின் கீழ் ஜெர்மனி அடைந்த வளர்ச்சியை பற்றி பேசுகிறார்களா? மாட்டார்கள்
இஸ்ரேலை திட்டுபவர்கள் அந்நாடு தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதை பற்றி பேசமாட்டார்கள்.. இந்தியாவை பாருங்கள் எவ்வளவு தீவிரவாத தாக்குதல்கள். இதையெல்லாம் ஒழித்துகட்ட வேண்டாமா. நாட்டை ஜெர்மனி போல, இஸ்ரேலைப் போல வளர்க்க வேண்டாமா?அப்படி செய்தால் தீவிரவாதியா?
எனது பெரை சுட்டினால் வரும் தமிழ் இந்து தளத்தை படித்து பாருங்கள் உங்களுக்கு பல உண்மைகள் புரியும்
ஐயா ம.க.இ.க அபிமானி நொந்தகுமாரா... தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.இன் முதல் எதிரி மக்கள் கலை இலக்கிய கழகம் தான் என எப்போதோ பிரகடனப்படுத்திவிட்டோம். எப்படியும் மத்தியில் பா.ஜ.கவும் மாநிலத்தில் அ.தி.மு.க வும் தான் வரும். அப்போது நமது 'கணக்கை' தீர்த்துக்கொள்ள்ளாமே!
சரியான கேள்வி நொந்தகுமாரன். இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் பொய்யிலேயே புளுத்து வாழ்கிற கூட்டம்
யோவ் ஆதி கொஞ்சம் அடுங்கு.
இட்லரு பட்லருங்கற அவன் கொன்றொழிச்ச லட்சக்கணக்கான யூத மக்களை அப்படியே மறந்திட்டியே. ஆதி = பாதி பொய்+பாதி புரட்டு
Excellent Tamil
ஆர்.எஸ்.எஸ் விரோதிகளுக்கு செருப்படி கொடுதுள்ளீர்கள்
பேச்ச கொறைங்கடா வெட்டிப்பசங்களா
ஆ! அசின்
இந்தக் கட்டுரைக்கு ‘காட்மண்டுவில் கஜினிகள்’ என்றுதான் தலைப்பு வைக்க இருந்தேன். முன்னாள் இந்துதேசம் நேபாளத்தில், இந்துக்களின் மிகப் புனித ஆலயம் பசுபதிநாத் சிவன் கோவில் தாக்கப்பட்டு களங்கப்படுத்தப்பட்டது. இந்தியன் என்ற ஒரே காரணத்தால், தலைமை அர்ச்சகர் தாக்கப்பட்டு, வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சார்ந்திருக்கும் உணர்வு நேபாளத்தில் ஒருகாலத்தில் மதிப்பும், புகழும் தருவதாய் இருந்தது. இப்போது, இந்திய அடையாளம் உள்ளவர்கள் அனைவரும் அவமதிப்பும், அவமானமும் அடைகிறார்கள். இந்த அராஜகத்தை நடத்துவது யார் தெரியுமா? இடது, வலது, நடு எல்லாச் சார்பு இந்துக்களாலும் ராச மரியாதை பெற்ற, தெற்கு அலுவகத்தின் (பிரதம மந்திரி அலுவலகம்) டார்லிங் அன்புத்தோழர் பிரசந்திரா என்கிற திருவாளர் புஷ்ப கமல் தகால். அவர் கடந்த பத்தாண்டில் 15,000 நேபாள இந்துக்களை “வெட்டித்தீர்த்தவர்” என்று தெரிந்திருந்த டெல்லிக்காரர்கள் அவருடன் கைகுலுக்க ஆவலாக இருந்தார்கள். இதுதான் நமது லட்சணம்!
ஆக, இந்த ‘கசாப்புக்காரர்’ எல்லா புகழாரங்களையும் பெற்றுக்கொண்டார்; “நம் உறவுகள் அயோத்தியா முதல் ஜனக்பூர் வரை, சுமுகமானவை, நாகரீகமானவை” என்றெல்லாம் இனிய வசனங்களைச் சொன்னார்; (அதாவது, ராம் – அயோத்தி, சீதை - ஜனக்பூர் பிணைப்பு இந்தியா-நேபாள உறவில் இருக்கிறதாம்!). ஆகாகா!
பின்னர், காட்மண்டு அலுவலகத்தில் சிரித்துக்கொண்டார். தன் பதவி அடிப்படையில் பசுபதிநாதர் கோயிலின் தர்மகர்த்தாவாக இருப்பதால், தலைமை அர்ச்சகர் நேபாளியாக மட்டுமே இருக்கவேண்டும் என்று ஆணையிட்டார். அவருடைய குண்டர் படை, இளைஞர் கம்யூனிஸ்ட் லீக், கோயிலுக்குள் புகுந்து, பிரதான வாசலை உடைத்துத் திறந்து, தலைமை அர்ச்சகரை அவமதித்து, புதிதாகக் கொண்டுவந்த பிஷ்ணு தஹால் என்பவரை தலைமை அர்ச்சகராக்கியது. ஆகா! ஒரு புரட்சி தொடங்கிவிட்டது.
பாரம்பரியமான, நேபாளத்தின் அடையாளம் என்று சொல்லப்படும் இந்தக்கோயிலில் பூசை நின்று மூன்று நாட்கள் ஆகிவிட்டன. நான்கு வாசல்களில் ஒன்றைத்தவிர எல்லாம் மூடப்பட்டுவிட்டன. நீக்கப்பட்ட தலைமை அர்ச்சகர் மகாபலேஸ்வர் பட் அவர்களுடன் நான் பேசினேன். அவர் வீட்டில் சிறைப்படுத்தப்பட்டதுபோல பயந்திருந்தார் என்று தோன்றியது. “இல்லையில்லை” என்றார் அவர். “நானே சுயமாக ராஜினாமா செய்தேன். தலைமை அர்ச்சகரின் கடும் வேலைகளைச் செய்ய என் உடல்நிலை ஒத்துவரவில்லை. எல்லாம் சரியாகிவிடும். நான் பசுபதிநாதரை நம்புகிறேன்” என்று போனை வைத்துவிட்டார். பின்னால், நான் காஞ்சி சங்கராச்சாரியரிடம் பேசினேன். அவர் விரக்தியிலும், சோகத்திலும் இருந்தார். புதிய அர்ச்சகரை நியமிக்கவேண்டுமானால் பூசைகளை நிறுத்தாமல், வழிபாட்டு முறைகளில் நன்கு தேர்ந்த ஒருவரைத்தான் நியமிக்கவேண்டும் என்றார் அவர்.
பாரதத்தின் இந்துக்கள் காஞ்சி சங்கராச்சாரியரின் மதிப்பையே காப்பாற்ற முடியாதவர்கள். அவர்கள் பக்கத்து நாட்டின் பசுபதிநாதர் கோயிலின் பெருமையைக் காப்பாற்றுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஊடகங்களும், டிவி சானல்களும் இந்த நிகழ்ச்சியை அடக்கி வாசித்தன. யோசித்துப்பாருங்கள், இதே நாத்திக கம்யூனிஸ்டுகள் (போப்பாண்டவர் வசிப்பிடமான) வாடிகனை தாக்கி உட்புகுந்தாலோ அல்லது சவுதி ஷேக் எதிர்ப்பாளர்கள் மெக்கா மசூதியில் “வெளிநாட்டவரை” அகற்ற முயற்சித்திருந்தாலோ உலகத்தின் எதிர்வினை என்னவாக இருக்கும்?
அர்ச்சகரை மாற்றக்கூடாது என்ற நேபாள சுப்ரீம்கோர்ட்டின் தடையை மீறி இது நடந்திருக்கிறது. இதை எதிர்த்து நேபாள விஷ்வ ஹிந்து மகாசங்கம் பத்திரிக்கையாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்தபோது அதே இளைஞர் கம்யூனிச குண்டர்களால் தாக்கப்பட்டது. பா.ஜ.பா. தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு மட்டும்தான் நேபாள ஜனாதிபதி, பிரதம மந்திரிகளுடன் பேசி கோயிலின் ஆக்கிரமிப்பில் குறித்த இந்துக்களின் ஆழ்ந்த வருத்தத்தைச் சொல்ல முனைப்பு இருந்திருக்கிறது. ஆனால், வேறு இந்துக்கள் இல்லையா என்ன? அவர்கள் நம் பிரதம மந்திரியையோ, சூப்பர் பிரதம மந்திரியையோ கேட்க முடியாதா? அவர்கள் ஏன் மௌனமாய் இருந்தனர்? நேபாளத்தில் ஒரு பாழடைந்த மசூதி தகர்க்கபட்டிருந்தால் சும்மா இருந்திருப்பார்களா? அல்லது, உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், இம்மாதிரி நிகழ்ச்சி இந்துக்கள் அல்லாதவர்களுக்கு டென்மார்க்கில் நடந்திருந்தால் சும்மா இருப்பார்களா?
ஆக, நான் கஜினிக்கு வருகிறேன். கஜினி தன் பெயரின் மறுபாதி தர்மாத்மா என்று விளங்கமுடியாத பெயர் வைத்துக்கொண்டவன். இது மொமெண்டொ ஆங்கிலப்படத்தின் அற்புதமான தழுவல். அதன் ஹீரோ சஞ்சய் (அமீர்கான் ஏற்றிருக்கும் பாத்திரம்) கஜினி தர்மாத்மா என்னும் கொடிய, அருவருப்பான வில்லனால் தன் காதலி கல்பனா (வசீகரம் பொங்கும் அசின் நடித்தது) கொல்லப்பட்டதில் ஆழ்ந்து பாதிக்கப்படுகிறான். பின், ஹீரோ குறுகியகால மறதி நோய் (anterograde amnesia) கொண்டிருந்தாலும் பழி தீர்க்கிறான். பிறர் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தன் வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு அழகான, பணக்கார இளைஞன் ஒரு தவறும் செய்யாமல் பெரிய ஊனமுறுகிறான். இந்த கொடிய உலகில் எதிலுமே விருப்பமில்லாமல் தனியாளாய், விரக்தியடைந்து விடுகிறான். பாதிக்கப்பட்டவன். தன் காதலியைக் கொன்றவர்களைப் பழிவாங்க முடிவு செய்கிறான்.
அசின், படத்தில் கல்பனா என்கிற பாத்திரம், எல்லோரையும் நம்புகிறாள், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்கிறாள், தன் காதலனுடன் சேர ஆசைப்பட்டுக்கொண்டே கடைசியில் இறந்தும் போகிறாள். சஞ்சய்க்கும் பல கொடுமைகள் நடந்தாலும் மறதிநோய் வந்து பிழைத்துக்கொள்கிறான். தன் எதிரி யாரென்று தெரியாமல் எதிரியின் உத்தரவுகளையே பின்பற்றுகிறான். ஆனால், கடைசியில் ஒரு நண்பனால் சரியான வழி காட்டப்பட்டு, பழி வாங்கி பார்ப்போர் கைதட்டலைப் பெறுகிறான்.
கஜினியில் எனக்கு ஒரு பாடம் கிடைத்தது. இந்துக்களான நாம் குறுகியகால மறதிநோயால் பரிதாபமாய் பாதிக்கப்பட்டுள்ளோம். நாம் நம்பும் நம் தலைவர்கள் நமக்கு ஒன்றும் செய்வதில்லை என்பதை மறந்துவிடுகிறோம். ஆனாலும், வருடம் தவறாமல் அவர்களுக்கு ஓட்டுப் போடுகிறோம். பசுபதிநாதர் கோயில் தாக்கப்பட்டது சிறிய செய்தியாகிறது. சங்கராச்சாரியாரின் கைதும் அவமானமும் செக்குலர் கொண்டாட்டமாகிறது, குண்டு வைக்கப்பட்ட கோயில்கள் மறக்கப்படுகின்றன, தேசப்பற்றுள்ளவர்கள் அகதிகளாவது ஜனநாயகத்தின் தேவையாகிறது. பழிக்குப் பழி கிடையாது. நாம் நூற்றாண்டுகளாய்த் தாக்கப்பட்டு அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், நம்மைத் தாக்குவோரை நேசிக்கிறோம். குறுகியகால மறதியா? பழிக்குப் பழியா? அதெல்லாம் சினிமாவிற்குதான். நம்மைப்போன்ற நல்லவர்கள் பெரிய மனதும், சகிப்புத்தன்மையும் காட்டவேண்டும்! கல்பனா கொல்லப்பட்டாலும் சகிக்கவேண்டும்.
இம்மாதிரி நேரங்களில், அசினின் வசீகரம் நம்மை சாந்தப்படுத்தி எதிர்காலத்தின் மீது நம்பிக்கை தருகிறது. நம் வேதனைகளை தேர்தல் தினத்திற்காக விட்டுவைப்போம்.
நம் முற்றங்களில் குவியும் சீனக் கூளம்
போன வருடத் தொடக்கம். நண்பனது நான்கு மாதக் குழந்தையை முதன்முறையாகப் பார்க்கப் போகும்போது அதற்கேற்றவாறு ஏதாவது பரிசு வாங்கிச் செல்ல வேண்டும் என்று கடைக்குள் நுழைந்தோம். குழந்தையின் தொட்டிலில், தலைமாட்டில் கட்டுவதற்கேற்றவாறு சிறு மணிகள் அசையும், சின்னச் சின்ன பொம்மைகள் சுற்றிவரும் அந்த விளையாட்டுப் பொருளை வாங்கலாம் என்று மனைவி சொன்னாள். சரியென்று தேடி சில மாடல்களைப் பார்த்தோம். கடைசியில் ஒன்றைத் தேர்வு செய்து வாங்கப் போகும் சமயம் லேபிளைப் பார்த்தேன், சீனத் தயாரிப்பு என்று போட்டிருந்தது. கூடுமானவரை சுதேசிப் பொருட்களை வாங்குவதைப் பழக்கமாகக் கொண்டிருப்பது எங்கள் குடும்பம். அதனால், இது ஒன்றும் பெரிய ராக்கெட் விஞ்ஞானப் பொருள் இல்லையே இதே மாதிரி இந்தியத் தயாரிப்பு கிடைக்கிறதா என்று கடை முழுதும் வலைவீசித் தேடினோம். ம்ஹூம், ஒன்றும் அகப்படவில்லை. மூன்று நான்கு கடைகள் ஏறி இறங்கியும் இதே அனுபவம் தான். இந்த விளையாட்டுப் பொருள் என்று இல்லை. எல்லாக் கடைகளிலும் அநேகமாக 80 சதவீதம் விளையாட்டுப் பொருட்கள் சீனச் சரக்குகள் தாம். இந்த விளையாட்டு உற்சாகம் தருவதாயில்லை, வெறுப்பும், சலிப்புமே மிஞ்சியது.
உலக நாகரீகத்தில் முதன்முதலாக குழந்தைகள் விளையாடச் சொப்புகள் செய்து, வரலாற்றின் புதைகுழிகளில் எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்து நாம் காண்பதற்காக விட்டுச் சென்ற எனது சிந்துச் சமவெளி மூதாதைகள் நினைவில் வந்தார்கள். “மிருச்ச கடிகம்” என்ற பழைய காவிய நாடகத்திற்குப் பெயர் தந்த அந்த மண் இயல் சிறு தேர் மனதில் ஓடியது.
கிருஷ்ணா கிருஷ்ணா என்று சுஜாதா 80களில் எழுதிய ஒரு நாடகம். அதில் ஒரு பொம்மை கம்பனிக்காக, அது ஆரம்பித்த காலம் தொட்டு, பாட்டுப் பாடிக் கொண்டே ஒவ்வொரு கிருஷ்ணர் பொம்மையையும் ஆத்மார்த்தமாக ஒரு குழந்தையை உருவாக்குவது போல் செய்துவருவார் ஒரு கைவினைஞர். தலைமுறை மாறுகிறது, முதலாளியின் மகன் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின், உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதாக உணர்கிறான். கைவினைஞர் விசுவாசி, அவரை வெளியில் தள்ளவும் முடியாது, உற்பத்தியும் உயரவேண்டும். ஜப்பானில் இருந்து ஒரு இயந்திரத்தை வரவழைக்க, அது அவர் செய்த ஒரு கிருஷ்ணர் பொம்மையை அச்சில் வார்த்து விடுகிறது, அதற்குப் பிறகு, அவரது வேலை ரொம்பவும் சுளுவாகி விடுகிறது. ஆத்மார்த்தமாக ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு பொத்தானை அமுக்குகிறார். கிருஷ்ணர்கள் நிமிடத்திற்கு டஜன் கணக்கில் தயாராகிறார்கள்! தொழில்மயமாதலின் போது மதிப்பீடுகள் மாறுவதை உணர்ச்சிபூர்வமாகச் சித்தரிக்கும் ஒரு நல்ல நாடகம் இது.
இப்போது இது போன்று ஒரு நாடகம் எழுதினால், கண்டிப்பாக அதன் களமாக எந்த இந்திய நகரமும் இருக்காது, அது நிகழுமிடம் தென்சீன மாகாணத்தில் ஏதாவது ஒரு நகரமாகத் தான் இருக்கும்! ஏனென்றால் 2500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய விளையாட்டுப் பொருள்கள் சந்தையில், இப்போது 70லிருந்து 80 சதவீதம் சீனச் சரக்குகள் தான் என்று புலம்புகிறார்கள் இந்திய விளையாட்டுப் பொருள் தயாரிப்பாளர்கள். இந்தியப் பொம்மைகள் விற்கும் விலையில் பாதிக்கும் கம்மியாக்கி சீனத் தயாரிப்புப் பொம்மைகளை குப்பையைக் குவிப்பது போல இந்தியக் கடைகள் எங்கும் கொண்டு வந்து கொட்டுவதால், இந்தப் போட்டியை எப்படிச் சமாளிப்பது என்று திணறுகிறார்கள் அவர்கள்.
எனது கடுப்புக்குக் காரணம், இந்தச் சரக்குகளின் குவிப்பு மட்டுமல்ல, அவற்றின் சாதாரணத்தனம், மிக மலிவான தரம், அன்னியத் தனம் எல்லாம் கூடத் தான். கொஞ்சம் கொஞ்சம் மாறுதல்களுடன், ஏறக்குறைய ஒரே அச்சில் வார்த்த்து போன்ற புசுபுசு டெடி கரடிகள் – எல்லாக் குழந்தைகளும் இந்த ஒன்றைத் தான் கொஞ்சி விளையாட வேண்டும் என்பது அராஜகம் இல்லையா? இந்தியத் தன்மையும், கலை உணர்வும், அழகியலும் கிஞ்சித்தும் இல்லாத மிருக பொம்மைகள்.. யானையைக் கூட ஒல்லியான உடலுடன், சிறு குழாய் அளவில் தும்பிக்கை, சொங்கிக் கை கால்களுடன் டெடி கரடி உட்கார்ந்திருக்கும் அதே போஸில் புசுபுசு பொம்மையாக செய்கிறார்கள். பார்க்க யானை போன்றே இல்லை. பிளாஸ்டரில், மரத்தில் வரும் பல கடவுளர் சிலைகள் கூட இப்போது டிராகன் தேசத்தில் தான் ஜனிக்கின்றன. நம் மண்ணின் திருவிழாவான விநாயக சதுர்த்தியில் கூட, சீனக்களிமண் பிள்ளையார்கள் தொகை வருடாவருடம் சீனமக்கள் தொகை போன்றே அதிகமாகிக் கொண்டிருக்கிறது. என்னதான் முயற்சி செய்து அவர்கள் இந்தத் திருவுருவங்களைக் காப்பியடித்தாலும், பலவற்றில் (குறிப்பாக பிளாஸ்டர் பொம்மைகள்) மூக்கும், முழியுமே காட்டிக் கொடுத்து விடுகிறது.
அது தவிர, முக்கியமாக இந்த விளையாட்டுப் பொருள்களால் உருவாகும் உடல்நலம் மற்றும் சுற்றுப் புறச்சூழல் கேடுகள் அபாயகரமானவை. எந்த விதத் தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கும் உட்படுத்தப் படாமல் தயாராகும் குழந்தைகளுக்கான இந்தப் பொருட்களை நம் சந்தைகளில் ஊடுருவ விட்டது அரசு செய்த பெரும் தவறு.
இதனை சரிசெய்யும் வண்ணமாக இந்திய அரசு 2009 ஜனவரி மாதம் சீன விளையாட்டுப் பொருட்களின் இறக்குமதியை ஆறு மாதங்களுக்கு முற்றிலுமாகத் தடை செய்த்து மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளித்தது. ஆனால் இதனை எதிர்த்து உலக வர்த்தக மையத்தில் (WTO) முறையீடு செய்யப் போவதாக சீனா மிரட்டியதை அடுத்து மார்ச் மாதமே இந்தத் தடை உத்தரவை இந்தியா மாற்றவேண்டியதாயிற்று - உலக அளவிலான தரக் கட்டுப்பாடு நிறுவனங்களின் சான்றிதழ்கள் பெற்ற விளையாட்டுப் பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப் படும் என்று இந்தியா கூறியது. முன்பு வந்ததில் 10 சதவீத பொருட்களே இதில் தேறும் என்பதால் தரமான பொருட்கள் மிதமான அளவிலேயே இனிமேல் உள்ளே வரும் என்று சொல்லப் படுகிறது. சட்டம் மற்றும் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் நமது அரசின் மெத்தனம் நாடறிந்தது. பார்க்கலாம்.
விளையாட்டுப் பொருட்கள் தெளிவாகத் தெரியும் ஒரு உதாரணம். பாலியஸ்டர் லினன் இழைகள், பாட்டரி, பல்புகள், டயர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டுத் தளம் போடும் டைல்ஸ் என நம் அன்றாட உபயோகப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டால் அதில் சீனப் பொருட்களின் பங்கு சமீப காலங்களில் அசுரத் தனமாக வளர்ந்து வருகிறது.
2008 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்ட்த்தில் சீனப் பொருட்களின் இறக்குமதி 38 சதவீதம் உயர்ந்துள்ளது, குறிப்பாக கெமிக்கல் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், இயந்திரங்கள், பட்டு.
சீன இரும்பு எஃகு இறக்குமதி இதே காலகட்ட்த்தில் 44 சதவீதம் உயர்ந்துள்ளதாக டாடா, ஜிண்டால் போன்ற முன்னணி நிறுவனங்கள் கூறுகின்றன.
தரம் குறைந்த சீனப்பொருட்கள் உள்நாட்டு வணிகர்கள், கைவினைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, தேசத்தின் ஒட்டுமொத்த தொழில்துறையின் செயல்திறனையே பாதிக்கின்றன.
சமீபத்தில் டாங்க் ஃபாங்க் என்ற சீனக் கம்பெனியிடமிருந்து வாங்கிய பழுதுபட்ட இயந்திரங்கள் துர்காபூர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மின்சார பவர் பிளாண்டையே செயலிழக்கச் செய்தன. (இந்த உயர்தர பவர் பிளாண்ட் எல் அண்ட் டி நிறுவனம் உருவாக்கியது).
புகழ்பெற்ற வோக்ஹார்ட் மருத்துவ நிறுவனம் வருடத்திற்கு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வைட்டமின் சி மற்றும் அசிட்டிக் ஆசிட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை சமீபத்தில் இழுத்து மூடியது. சீன இறக்குமதி வெள்ளம் பாய்ந்து அதை மூழ்கடித்து விட்டது.
உலக ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தக நெறிமுறைகளின் படி, இதில் அங்கம் வகிக்கும் எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டிலிருந்து இறக்குமதியை முழுமையாகத் தடைசெய்ய முடியாது தான். அது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால், இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்துறைகள் பலவற்றை ஒரேயடியாக அழித்தொழிக்கும் வகையில் இந்த இறக்குமதி இருந்தால்? அது தான் இப்போது கவலை தரும் விஷயம் என்று இந்திய வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக, உலகப் பொருளாதாரம் மநத நிலையில் இருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளில் சீனப் பொருள்களின் வரத்து எதிர்பார்ப்பை விட மிக்க் குறைவாக இருக்கிறது. சீனா ஏராளமான அளவில் பொருட்களை உற்பத்தி செய்து தனது கிட்டங்கிகளில் வைத்திருக்கிறது. இவை ஏற்றுமதியாகாமல் தேங்கினால், அது சீனப் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கும் என்பதால், இப்போது பெரிய அளவில் இந்திய வர்த்தகத்தை சீனா குறிவைக்கிறது.
இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் சமீபகாலமாக சராசரியாக ஆண்டுக்கு 50 சதவீதம் என்ற கணக்கில் வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த வர்த்தகம் சீனாவுக்கே முற்றிலும் சாதகமாக இருக்குமாறு சீனா காய் நகர்த்துகிறது.
2008ஆம் ஆண்டு ஜனவரி-செப்டம்பர் மாதங்களூக்கு இடைப்பட்ட காலத்தில் இரு நாடுகளுக்கிடையேயான மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 42 பில்லியன் டாலர்கள் (இதற்கு முந்தைய ஆண்டை விட 55 சதவீதம் அதிகம்). ஆனால் இதில் இந்தியா கணக்கிலான வர்த்தக மீதத்தில் (balance of trade) 16 பில்லியன் டாலர் பற்றாக்குறை (defecit) உள்ளது! அதாவது இந்தியா ஏற்றுமதி செய்து கணக்குத் தீர்க்கும் அளவை விட மிக அதிக அளவில் விலையும், தரமும் குறைந்த பொருட்களை சீனா இந்தியாவில் கூளமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது.
சீன அரசு தனது ஏற்றுமதியாளர்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கியும், மற்றும் பல வசதிகள் செய்தும் ஏற்றுமதி வெள்ளம் அடங்காமல் பொங்கிக் கொண்டிருக்கும் வகையில் பார்த்துக் கொள்கிறது. இதனால் உலக சந்தையில் பல இந்திய ஏற்றுமதியாளர்கள் தரம் உயர்ந்த தங்கள் பொருட்களை 10-15 சதவீதம் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். இப்படிச் செய்யாவிட்டால் அவர்கள் சந்தையை விட்டே வெளியே போகவேண்டியது தான் என்ற நிலை!
விளையாட்டுப் பொருட்கள் விஷயத்தில் கொஞ்சம் வளைந்து கொடுத்திருக்கும் இந்திய அரசு இனி வரும் காலங்களில், சீனக் கூளங்கள் இந்தியாவில் குவிவதை சட்டரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முனைந்து தடுக்கும் வழிமுறைகளை மேற்கொண்டேயாக வேண்டும். 2008ல் காலாவதியான சீனப் பட்டு மீதான சுங்க வரியை அரசு மீண்டும் விதித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது.
இன்றைக்கு இந்திய தொழில்துறை நிறுவனங்கள், உழைப்பாளிகள், பாட்டாளிகள், நுகர்வோர் என்று அனைவரையும் கடுமையாக பாதிக்கும் இந்த பிரசினை பற்றி அரசியல் கட்சிகள் போதுமான அளவு கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக தங்களை இந்திய உழைக்கும் வர்க்கத்தின் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளூம் இடதுசாரிகள் இந்த விஷயத்தில் முற்றிலுமாக இந்திய சமூக நலன்களுக்கு எதிராகவும், சீன அடிவருடிகளாகவுமே நடந்து கொள்கிறார்கள் என்பது கண்கூடு.
வர்த்தகம் மட்டுமல்ல, அருணாசலப் பிரதேசத்தை தங்கள் பகுதி என்று பூடகமாக சொந்தம் கொண்டாடுதல், திபெத் போன்ற அரசியல் பிரசினைகளிலும் அதிகார விரிவாக்க விழைவை அப்பட்டமாக செயல்படுத்தும் சீனா என்கிற சர்வாதிகார நாடு இந்தியாவை துச்சமாக மதித்தே செயல்பட்டு வருகிறது.
அரசியல், ஊடகங்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு கடையிலும் சீன ஆக்கிரப்பின் கரங்களைப் பார்க்க நேரும் ஒரு சராசரி இந்தியன் மனதில் சீனாவைப் பற்றிய எத்தகைய அச்சமூட்டும் பிம்பம் உருவாகி வரும் என்பதை எண்ணிப் பாருங்கள். அது இன்றைய சீனாவுக்கு முற்றிலும் பொருந்துவதே.
நண்பர் ஒருவரின் வீட்டில் அமர்ந்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். நிமிர்ந்து பார்க்கிறேன். ஒரு கணம் நெருப்புமிழும் டிராகன் கொடுங்கண்களுடன் வாலைச் சுழற்றிப் பாய்வது போல் தோன்றுகிறது. எதிரே கைகளை உயர்த்திக் கொண்டு சீன வாஸ்து பொம்மை ஒரு அர்த்த புஷ்டியுடனான புன்னகையுடன் நின்று கொண்டிருக்கிறது.
பகைவனும் பாராட்டும் பகழி
ராம ராவண யுத்தம் ஆரம்பமாகிறது. முதல்நாள் போருக்கு ராவணனே வருகிறான். ராமனும் ராவணனும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். ராமன் ராவணன் வில்லை அறுத்தபின், இன்னொரு கணையால் மகுடங்களை யெல்லாம் கீழே தள்ளி விடுகிறான். கடைசியாக எல்லாவற்றையும் இழந்து வெறுங்கையோடு நிற்கும் இராவணனை “இன்று போய் போர்க்கு நாளை வா” என்று அருள் செய்கிறான்.
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மௌலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு
வெறுங்கையோடு இலங்கை செல்கிறான் இராவணன். ஜானகி இதைக் கேட்டால் சிரிப்பாளே என்று நாணத்தால் நிலைகுலைந்து போகிறான். நிகழ்ந்ததைக் கேள்விப்பட்ட பாட்டன் மால்யவான் ராவணனிடம் வந்து மெதுவாக, “ஐயா! என்ன நடந்தது? உன் முகம் வாடியிருக்கிறதே?” என்று கேட்கிறான். தன் மனதில் உள்ளதைக் கொட்டுகிறான் என்றே சொல்லலாம். இளையவன் தனக்கும் ஆற்றாது நம் பெருஞ்சேனை என்று இலக்குவனுக்கும் புகழ்மாலை சூட்டுகிறான். முன்பு ‘மனிசர்’ என்று யாரை இகழ்ந்தானோ அவர்கள் இருவரையும் புகழ்கிறான் இப்போது. ராமனுடைய கோதண்டத்தை நினைத்துப் பார்க்கிறான். வில்தானா அது! கொஞ்சம் கூட சிரமமேயில்லாமல் சினமும் இல்லாமல் எவ்வலவு அநாயாசமாகத் தன்னைச் சூழ்ந்திருந்த அரக்க வெள்ளத்தை அப்படியே அழித்து விட்டான்! ராவணேச்வரனாகிய என்னையே அது என்ன பாடு படுத்திவிட்டது?
அன்றொரு நாள் கூனியின் முதுகிலே வில் உண்டையால் வேடிக்கையாக அடித்தானாமே, அதேபோல் வேடிக்கையாக என் மார்பிலே பாணங்களைப் போட்டு விட்டானே! என் வீரர்களின் ஆவியையும் அதேபோல் வேடிக்கையாகப் பறித்து விட்டானே! ராமபாணம் உலகம் எல்லாம் புகுந்து சென்று போகுமே தவிர அது ஓய்ந்து போகும் என்று தோன்றவில்லை அப்பாணம் “ஊழித் தீயையும் தீய்க்கும், செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும் வாயையும் தீய்க்கும், உன்னின் மனத்தையும் தீய்க்கும்” வலிமையுடையது.
இன்று இப்படியெல்லாம் ராமன் புகழ்பாடும் ராவணன் அன்று சீதையிடம் எப்படிப் பெருமையடித்துக் கொண்டான். மேருமலையைப் அப்படியே பறித்து எடுக்க வேண்டுமா? ஆகாயத்தை இடிக்க வேண்டுமா? கடல்கள் ஏழையும் கலக்க வேண்டுமா? பூமியை எடுக்க வேண்டுமா? இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அதனையும் செய்யக் கூடிய வலிமை இந்த ராவணனுக்கு உண்டு. என்றான். இன்று ராம பாணம் தந்த அனுபவம் இப்படிப் பேச வைக்கிறது!
மேருவைப் பிளக்கும் என்றால், விண் கடந்து ஏகும் என்றால்
பாரினை உருவும் என்றால், கடல்களைப் பருகும் என்றால்
ஆறுமே அவற்றின் ஆற்றல், ஆற்றுமேல் அனந்த கோடி
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும் அன்றே
அன்றே சீதை இதே கருத்தைச் சொன்னபோது ராவணன் எவ்வளவு சீற்றம் அடைந்தான்? ராவணனுடைய வார்த்தைகளாலேயே அவனை மடக்கிப் பேசியதும் ராவணன் சீற்றம் கொண்டு அவளைக் கவர்ந்து வந்தான். ஆனல் இப்பொழுது ராமபாணத்தின் வலிமையை ஒப்புக் கொண்டு பாட்டனிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறான். “தாத்தா! அந்த பாணங்கள் தான் எவ்வளவு வேகமாக வருகின்றன. அவன் நினைப்பதுதான் தாமதம், எங்கும் பார்க்கும் இடமெல்லம் பாணங்களால் நிரம்பி விடுகின்றன. என்ன வேகம்! இந்திரனுடைய குலிசமும் பரமேச்வரனின் திரிசூலமும், மாயவன் சக்கரமும் சேர்ந்து ஒன்றாக வருவது போலல்லவா ராமபாணம் புறப்பட்டு வருகிறது! வேதங்கள் கூடப் பொய்யாகிப் போனாலும் போகலாம். ஆனால் இந்தக் கோதண்ட்த்திலிருந்து புறப்பட்டு வரும் பாணங்கள் ஒன்றுகூடத் தப்புவதில்லை. அந்தப் பாணங்கள் என் செருக்கையே அடக்கி விட்டதென்றால் வேறு என சொல்ல இருக்கிறது! தாத்தா! அந்தப் பாணங்கள் எங்கிருந்து வருகின்றன என்றே தெரியவில்லை. கிழக்கிலிருந்தா, மேற்கிலிருந்தா, பூமியிலிருந்தா, ஆகாயத்திலிருந்தா, எல்லா இடங்களிலிருந்தும் வருகிறதா என்றே கண்டு பிடிக்க முடியவில்லை. அவ்வளவு ஏன்? அவனுடைய வில் அவனுக்கு இடப் பக்கத்திலிருக்கிறதா அல்லது வலப்பக்கதில் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை என்று அதிசயித்துப் பேசுகிறான். கடைசியாக ஒன்று சொல்கிறான்.
வாசவன், மாயன், மற்றும் மலருள்ளோன், மழுவாள் அங்கை
ஈசன் என்று இனைய தன்மை இனி வரும் இவரால் அன்றி
நாசம் வந்துற்ற போதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்
என்று மனச் சமாதானம் அடைகிறான். நான் தோல்வி அடைந்தாலும் நல்லதோர் பகைவனை, சரிக்குச் சரியானவனிடம் தான் தோல்வி அடைந்திருக்கிறேன். குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வது போல “நாசம் வந்துற்ற போதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்” என்று தோல்வியிலும் பெருமிதம் கொள்கிறான். இப்படி ஒரு புகழ் மாலையை ராவணனைப் போன்ற ஒரு வீரனிடமிருந்து, எதிரியிடமிருந்து பெறக்கூடிய ராமனின் வில்லாற்றலை என்னென்பது! மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று மனமாரப் பாரட்டும் ராவணனின் வீரத்தையும் இங்கே பார்க்கிறோம்.
வருண் வருகையும் சோனியா கலக்கமும்
பிலிபிட் - உத்தரப் பிரதேச மாநிலத்தின் இந்திய-நேபாள எல்லையில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி. இங்கே இந்திரா காந்தியின் மருமகளும், சஞ்சய் காந்தியின் மனைவியுமான மேனகா காந்தி 1996-ஆம் வருடத்திலிருந்து தொடர்ந்து வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஆரம்ப காலத்தில் சுயேச்சையாக இருந்து பின்னர் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து மத்திய அமைச்சராகவும் இருந்தவர். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தன் மகனான வருண் காந்தியை, தான் இத்தனை வருடங்களாகக் கட்டிக் காத்து வந்த பிலிபிட் தொகுதியில் தன் கட்சியின் அனுமதியுடன் வேட்பாளராக நியமித்துள்ளார்.
வருண் காந்தி, பட்டம் படித்தவர், மேற்படிப்புக்குச் சென்றவர்; நன்றாகக் கவிதையும், உரைநடையும் எழுத வல்லவர்; ஓரளவு திறமையான பேச்சாளரும் கூட. இருபத்து ஒன்பது வயதேயான இளைஞர். குழந்தைப் பருவத்திலேயே தந்தையான சஞ்சய் காந்தியைப் பறிகொடுத்தவர் ஆதலால், இவர் வளரும்போது, நேரு குடும்பத்திற்கே உரியதான, போலி மதச்சார்பின்மையும், ஹிந்து வெறுப்பும், வெளிநாட்டு மோகமும், இவரிடம் ஒட்டவில்லை. இவரது தாயார் மேனகா காந்தி சீக்கிய வம்சாவளியில் வந்த காரணத்தால் இவரை வீரம் உள்ளவராகவும், தைரியம் மிக்கவராகவும் வளர்த்தார் என்றே சொல்ல வேண்டும்.
வருண் காந்தி, தான் பிலிபிட் தொகுதி வேட்பாளர் என்பது உறுதியானவுடன், தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்தத் தொகுதி ஹிந்துக்களும், முஸ்லீம்களும் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி. நேபாள எல்லையில் இருப்பதால் இஸ்லாமியத் தீவிரவாதிகள் எல்லை தாண்டி வந்து நம் நாட்டிற்குள் புக வசதியாக இருக்கின்ற ஒரு தொகுதி. அவ்வாறு நம் எல்லைக்குள் வருகின்ற தீவிரவாதிகளுக்கு சில உள்ளூர் மதவாதிகள் இடமும் கொடுத்து உதவியும் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி இத்தொகுதியில் பசு வதை, ஹிந்துப் பெண்கள் கடத்தல் மற்றும் கற்பழிப்பு, ஹிந்துக்கள் வீட்டில் கொள்ளை போன்ற பயங்கர சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. ஹிந்துக்கள் எப்போதும் ஒரு பயத்திலேயே உயிர் வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டுள்ளனர். (இந்த உண்மைகளை எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திரு தருண் விஜய் சமீபத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் தெளிவு படுத்தியுள்ளார்). உத்திரப் பிரதேசத்தை ஆண்டுவரும் முலாயம் (5 ஆண்டுகள்) மற்றும் மாயாவதி (2 ஆண்டுகள்) ஆகியோரின் போலி-மதச்சார்பின்மை அரசுகள் இப்பிரச்சனையைக் கண்டு கொள்ளவே இல்லை.
தொகுதியில் ஹிந்துக்களின் நிலையைக் கண்டு கொதித்துப்போன வருண் காந்தி, தன் கட்சித் தொண்டர்களின் கூட்டத்தில், “ஹிந்துக்களுக்குத் துரோகம் இழைப்பவர் எவராயிருந்தாலும் அவர்களை அழிப்பேன். எவரேனும் ஹிந்துக்கள் மீது கை வைத்தால் அவர் கையை வெட்டுவேன். பாகிஸ்தான் தீவிரவாதிகளையும், அவர்களுக்கு உதவும் நபர்களையும், அவர்கள் ஹிந்துக்களாக இருந்தால் கூட, பகவத் கீதையில் சொன்னபடி அவர்களை அழிக்கத் தயங்க மாட்டேன்” என்று உணர்ச்சி மேலிட்டு முழங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.
அந்த வீடியோவில் இருப்பது தன் குரலல்ல என்று வருண் கூறியுள்ளார்.
தன் பேச்சில் அவர் முஸ்லீம்கள் என்று ஒரு சமுதாயத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதாகவோ அல்லது அவர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகவோ தெரியவில்லை. ஆனால் அப்படிப் பேசியதாக நாடெங்கும் உள்ள பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் செய்திகள் பரப்பின. மத நல்லிணக்கத்திற்கு எதிராக, இரு மதத்தினரிடையே பகைமையை வளர்க்க, நாட்டின் அமைதியைக் கெடுக்கவேண்டி அவர் வேண்டுமென்றே பேசியதாக இவை விடாமல் கூறி வருகின்றன. போலி மதச்சார்பின்மை பேசி, எப்பொழுதும் ஹிந்துக்களுக்கு எதிராகவே கருத்துக்களைக் கூறிவரும் ஊடகங்களின் விஷமப் பிரச்சாரத்துக்கு மதிப்பளித்து, தேர்தல் ஆணையம், ‘இந்திய தண்டனைச் சட்டம்’ (IPC) 153A பிரிவின் கீழும். ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்’ (Representation of People Act) 125 பிரிவின் கீழும் வருண் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்திரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு அளித்தது. அதன்படி அவர் காவல்துறைக்குப் புகார் அளிக்க, உத்திரப் பிரதேசக் காவல் துறையும் முதல் தகவல் அறிக்கை தயார் செய்தது.
இங்கே நாம் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, ஊடகங்களின் விஷ(ம)ப் பிரச்சாரம். இரண்டாவது, தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்.
முதலாவதாக, பல ஊடகங்கள் நேரு குடும்பத்தின் அடிவருடிகளாக இயங்குவது நமக்குப் புதிதல்ல. இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவை நேரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஒரே காரணத்துக்காக பாரதப் பிரதமராக்க வேண்டிப் படாத பாடுபட்ட ஊடகங்கள், இந்திய சட்டப்படி அது இயலாது என்று தெரிந்தவுடன், இந்திய மற்றும் இத்தாலி ஆகிய இரண்டு தேசத்துக் குடியுரிமையும் கொண்டுள்ள பிரியங்கா மற்றும் ராகுல் ஆகியோரைப் பிரதமராக்கத் துடித்தன. பிரியங்காவும் தனக்கு ஆர்வமில்லை என்று சொல்லி விட்டதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ராகுல் காந்தியை மக்கள் முன்னால் நிறுத்த அனைத்து முயற்சியும் எடுத்து வருகின்றன. உருப்படியான கல்வி அறிவு, நாட்டு நடப்புகளை கவனித்து அவற்றை ஆராய்ந்து பார்க்கும் திறன், பேச்சுத் திறன், எனப் பல தேவையான தகுதிகள் இல்லாததால் ராகுல் காந்தியால் மக்கள் மனதில் இடம் பிடிக்க இயலவில்லை.
அவரை முன்நிறுத்திப் பிரச்சாரம் செய்த எந்த மாநிலத் தேர்தலிலும் காங்கரஸ் கட்சியினால் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும், “இந்தியாவைக் கண்டுபிடித்தல்” (Discovering India) என்று அவர் நாடகத் தன்மையுடன் கூடிய ஒரு பிரயாணம் மேற்கொண்ட போது, அதன் மூலம் மக்கள் மனதில் அவர் இடம் பிடிக்க ஏதுவாக, அவர் தலித் மக்களுடன் ஒரு நாள் இரவு குடிசையில் தங்கியதையும், ஒரு நாள் மதிய உணவு அருந்தியதையும், தலித் குழந்தைகளுடன் ஒரே ஒரு நாள் விளையாடியதையும், பெரிதுபடுத்திக் காண்பித்து, அவற்றைப் பற்றிக் கட்டுரைகள் எழுதி மக்களிடையே ராகுல் காந்தியை “இந்தியாவின் இளவரசன்” என்பதான ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயன்றன ஊடகங்கள். இந்த முயற்சியிலும் தோற்றுப்போயின.
பின்னர் அவர் தன்னுடைய செயலர்கள் எழுதிக் கொடுத்த பேச்சைப் பாராளுமன்றத்தில் தட்டுத் தடவிப் படித்ததை ஒரு மாபெரும் சொற்பொழிவாகக் காட்ட முயற்சித்தன. அதிலும் அவை வெற்றி பெற முடியவில்லை. இந்த ஊடகங்கள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போயிருக்கின்றன என்றால், ராகுல் காந்தி காலையில் கண் விழிப்பதையும், பல் தேய்ப்பதையும், குளியலறை போவதையும் தான் முக்கியச் செய்தியாக (breaking news) போடுவதில்லை. மற்றபடி அவர் எது செய்தாலும் அது முக்கியச் செய்திதான்!
இவ்வாறு ராகுல் காந்தியை இந்திய மக்களின் மீது பிரதமராகத் திணிக்க ஊடகங்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும் முயற்சி செய்யும் வேளையில், மேனகா காந்தியின் மைந்தர் வருண் காந்தி ஹிந்துக்களின் பிரதிநிதியாகவும், பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய வேட்பாளராகவும், தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்குவதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் நேரு குடும்பத்திலிருந்து ஓர் இளைஞர் இந்த தேசத்தின் உண்மையான பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், மத உணர்வுகளையும் புரிந்து கொண்டு அவற்றைக் காக்கும் பொருட்டு அரசியலில் இறங்குவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வருண் காந்தி ராகுல் காந்தியை அரசியல் களத்தில் எளிதில் தோற்கடித்து விடுவாரோ என்கிற அச்சம் வெளிப்படையாகவே தெரிகிறது. கடந்த இரண்டு வாரங்களாக ஊடகங்கள் வருண் காந்தி மீது சேற்றை வாரி இறைக்க முயற்சி செய்து வருவதன் காரணம் இதுதான்.
பிலிபிட் தொகுதியின் அதிகாரபூர்வ வேட்பாளராக வருண் காந்தி தேர்தல் ஆணையத்தினால் அங்கீகாரம் செய்யப்படாத நிலையில், மேலும் தன்னுடைய வேட்பு மனுவை அவர் இன்னும் தாக்கல் செய்யாத நிலையில், தேர்தல் ஆணையம் அவர்மீது நடவடிக்கை எடுத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அது தன் எல்லையை மீறி நடந்துகொண்டுள்ளதாகவும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களே தெளிவு படுத்தியுள்ளார்கள். காவல்துறைக்கு மட்டுமே வருண் காந்தி மீது நடவடிக்கை எடுக்க தற்போது அதிகாரம் இருக்கின்ற நிலையில், வருண் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, காவல்துறையின் அறிக்கையின் படி தேர்தல் ஆணையம் வேட்புமனுவை நிராகரித்திருக்கலாம். அல்லது தேவையான நடவடிக்கைகளை அப்போது எடுத்திருக்கலாம்.
மேலும், வருண் காந்தி, தான் அவ்வாறு மத வெறியுடனோ, இரு மதத்தாரிடையே பகைமை ஏற்படுத்திக் கலவரம் ஏற்படும் விதமாகவோ பேசவில்லை என்றும், அந்த ஒலி/ஒளி மின்வட்டுக்கள் திருத்தம் செய்யப்பட்டவை என்றும், தனக்கு எதிராக நடந்த அரசியல் சதி என்றும் கூறியுள்ளதை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யவில்லை. அவர் தன் பக்கத்து நியாயங்களை எடுத்துச் சொல்ல அவருக்கு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அதோடு நில்லாமல் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துவிட்டு, பா.ஜ.க.வுக்கு வருணை வேட்பாளராக நியமிக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியிருப்பதும் ஒரு அதீதமான செயல்பாடு என்று கருத இடமிருக்கிறது. இதுவரை இந்தியாவில் நடந்திராத விதமாகத் தேர்தல் ஆணையம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏப்ரல் 20-ம் தேதி முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி ஏற்கப் போகும் திரு நவீன் சாவ்லா அவர்களும், மற்றொரு ஆணையர் திரு கொரேசி அவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதே. தற்போது உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் திரு கோபாலஸ்வாமி அவர்கள் திரு நவீன் சாவ்லா காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் பலமுறை நடந்து கொண்டதாகவும் அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் அரசியல் சாசனத்தின்படி பரிந்துரை அளித்ததை நாம் அறிவோம். மேலும், வருண் விஷயத்தில் தேர்தல் ஆணையம் அவசர கதியில் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, நமக்குச் சந்தேகம் உறுதியாகிறது. அதாவது ராகுல் காந்திக்குப் போட்டியாக வருண் வந்துவிட்டால், ராகுலின் அரசியல் வாழ்வு அதோகதியாகிவிடும் என்கிற பயம் காரணமாக காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவியும், நவீன் சாவ்லா மூலமாக வருணின் அரசியல் வாழ்க்கை தொடங்கு முன்னரே முடமாக்கிவிட முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. இதற்கு ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன என்பதும் விளங்குகிறது.
இதனிடையே வழக்குகள் போடப்பட்டதால், தன்னுடைய முன்ஜாமீன் காலாவதியாகிவிட்ட நிலையில், நம் நாட்டு சட்டத்திற்கு மதிப்பளித்து, வருண் காந்தி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அப்போது அவருடன் வந்த அவரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மீது காவல் துறை தடியடி, மற்றும் ரப்பர் குண்டுகள் அடங்கிய துப்பாக்கிப் பிரயோகம் ஆகிய நடவடிக்கை எடுத்து ஒரு கலவரம் ஏற்பட வழிவகை செய்துள்ளது. மேலும் சம்பந்தமே இல்லாமல் வருண் மீது கொலை முயற்சி, கலவரம் ஏற்படுத்தியது, போன்ற பல பொய் வழக்குகள் போட்டுள்ளது மாயாவதி அரசு. அதோடு நிறுத்தாமல் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையும் அவர்மீது ஏவி விட்டிருக்கிறது. நம் நாட்டுச் சட்டப்படி சரண் அடைய நீதி மன்றத்திற்குச் சென்ற ஒருவரின் மீது, அபாண்டமான குற்றச்சாட்டுகள் சொல்லிப் பொய் வழக்குகள் போடுவதன் மூலம் மாயாவதியும் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புகளைக் கண்டு பயப்படுகின்றார் என்பது தெரிகிறது. இவருக்கும் சோனியாவுக்கும் ஒரு ரகசிய உடன்படிக்கை உள்ளதோ என்றும் சந்தேகம் எழுகிறது.
எப்பொழுதுமே இந்தியாவிற்கு எதிராக நடந்து கொள்ளும் கம்யூனிஸ்டுகளும், மற்ற போலி மதச்சார்பின்மை பேசும் கட்சிகளும் வருண் காந்தியின் அரசியல் பிரவேசத்தைக் கண்டு அச்சம் கொண்டு அவர் மீது சேற்றை வாரியிரைப்பதைப் பார்க்கும் போது, இந்த நாட்டில் பெரும்பான்மை சமுதாயமாக இருக்கும் ஹிந்துக்களின் சார்பாக யார் முன் வந்தாலும் அவர்களை மத வெறியர்களாகச் சித்தரித்து அவர்களின் அரசியல் வாழ்க்கைக்குத் தடங்கல்கள் ஏற்படுத்தும் போக்கு நன்றாகவே தெரிகிறது. அதாவது, இந்த நாட்டில் ஹிந்துக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருக்க வேண்டும்; சிறுபான்மை இன மக்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட வேண்டும்; அவர்களை ஓட்டு வங்கிகளாக வைத்துக் கொண்டு, ஹிந்துக்களை ஜாதி வாரியாகப் பிரித்து, தமது சுயநல அரசியல் நாடகங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இவர்களது தாரக மந்திரமாக இருக்கிறது. தங்கள் சுயலாபத்துக்காக, இந்த நாட்டின் இறையாண்மையைப் பற்றியும், பாதுகாப்பைப் பற்றியும், கலாசார சீரழிவைப் பற்றியும், பொருளாதார சீர்கேட்டைப் பற்றியும், துளியும் கவலைப் படாமல் நாட்டைக் குட்டிச் சுவராக்கும் இந்த அரசியல் வியாதிகள் இருப்பது நமக்குப் பெரும் அவமானமும் அபாயமும் ஆகும்.
சரி, விஷயத்திற்கு வருவோம். தன்னுடைய இருபத்தி ஒன்பதாவது வயதில், அரசியல் பிரவேசத்தைத் தொடங்கும் ஒரு இளைஞர், ஹிந்துக்களுக்கு ஆதரவாக களம் இறங்குவதாலும், நேரு குடும்பத்திலிருந்தே வந்து ராகுல் காந்திக்கு எதிராகக் களம் இறங்குவதாலும், ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே வருண் மீது சேற்றை வாரி இறைக்கின்றன ஊடகங்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும். பல அரசியல்வாதிகள் இதற்கு முன்னால் இந்துக்களுக்கு எதிராகப் பேசியபோதும், செயல்பட்ட போதும் ஏன் இவர்கள் மௌனமாக இருந்தார்கள்? தேர்தல் ஆணையம் அப்போது ஏன் வாய் மூடி இருந்தது?
உதாரணத்திற்கு, தமிழக முதல் அமைச்சரான கருணாநிதி, தன்னுடைய ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், சட்டசபையில் பொன்விழா கண்டதாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல் வாழ்க்கையில், 365 நாளும் ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்துக் கோவில்கள், ஹிந்து மதம், ஹிந்து பழக்க வழக்கங்கள், ஹிந்து மத நூல்கள் என்று எல்லாவற்றின் மீதும் வசை பாடியே வாழ்ந்துள்ளார்! எந்த ஊடகமாவது அவரை விமரிசித்தது உண்டா? தேர்தல் ஆணையம் அவர் மேல் நடவடிக்கை எடுத்ததுண்டா? சமீபத்தில் கூட, ராமாயணத்தையும், ராமர் பாலத்தையும், ராமரையும், அசிங்கமாகப் பேசிப் பல கோடி ஹிந்துக்கள் மனத்தைப் புண்படுத்தும் விதமாகப் பேசினாரே! தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது? இதுவரை, ஒரு எச்சரிக்கை அறிக்கையாவது அவருக்கு அனுப்பியதுண்டா? கருணாநிதிக்கு ஒரு சட்டம், வருண் காந்திக்கு ஒரு சட்டமா?
சோனியா தான் போகின்ற இடங்களிலெல்லாம், ஒவ்வொரு முறை பேசும்போதும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை ஹிந்துத் தீவிரவாதிகள் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார். இவை ஒரு குறிப்பிட்ட மதத்தினரைத் தாக்கும் பேச்சு இல்லையா? கடந்த குஜராத் சட்ட மன்றத் தேர்தலின் போது ஹிந்துத் தலைவர்களை பொய்யர்கள், திருடர்கள், மரணத்தின் தூதுவர்கள் என்றெல்லாம் பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன வழக்குப் போட்டது? சோனியா காந்திக்கு ஒரு சட்டம், வருண் காந்திக்கு ஒரு சட்டமா?
அதே குஜராத் தேர்தலின் போது, காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் “குஜராத்தில் உள்ள ஹிந்துக்கள் தீவிரவாதிகள்” என்று பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்தது? அவருக்கு ஒரு சட்டம், வருணுக்கு ஒரு சட்டமா?
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேசிய மாநாடுக் கட்சியின் தலைவர் பாஃரூக் அப்துல்லா, பாராளுமன்றத் தாக்குதலில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதி அப்சல் குருவுக்காகப் பரிந்து பேசியபோது, “அவரைத் தூக்கிலிடுங்கள்! அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்! இந்த நாடு பற்றி எரியும்! ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை சீரழியும்! தண்டனை அளித்த நீதிபதிகள் கொல்லப் படுவார்கள்!” என்று பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது?
தற்போது கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மதானியுடன் கூடிக் குலாவுகின்றனர்! மதானிக்கு எதிரான தடயங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அங்கே எதிர்க்கட்சியாக இருக்கின்ற காங்கிரஸ் ஏன் வாயைப் பொத்திக் கொண்டு இருக்கிறது? ஹிந்துக்களுக்கு ஒரு சட்டம், முஸ்லீம்களுக்கு ஒரு சட்டமா? பா.ஜ.க.வுக்கு ஒரு சட்டம், கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு சட்டமா? மதானியை விடவா வருண் காந்தி மோசமாகப் போய்விட்டார்?
சமீபத்தில் சண்டிகார் நகரில் காங்கிரஸ் தலைவர் இம்ரான் கித்வாய் “நான் ஒரு முப்தியாக இருந்திருந்தால், பா.ஜ.க.வுக்கு முஸ்லீம்கள் ஓட்டுப் போடுவது காபிஃர்களுடன் (ஹிந்துக்களை தரக்குறைவாகச் சொல்லும் வார்த்தை - காபிஃர்) நட்பு வைத்துக் கொள்வதற்கு சமம், என்று ஒரு பஃட்வா கொடுத்திருப்பேன். நான் முப்தியாக இல்லையே என்று வருந்துகிறேன்” என்று பேசியுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் அவர்மீது பா.ஜ.க. புகார் கொடுத்துள்ளது. அவர் பேச்சு அடங்கிய ஒலி நாடாவையும் கொடுத்துள்ளது. ஆனால் இன்னும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்?
2007 ஜனவரி மாதம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவரை உயிருடன் திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று சவால் விட்டனரே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர்! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது? தௌஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாகர் சமீபத்தில் மதுரையில் ஒரு பொதுக் கூட்டத்தில் “வருண் காந்தி தமிழகம் வந்தால் உயிருடன் திரும்ப முடியாது” என்று பேசியுள்ளார். அது “வின்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டதே! என்ன செய்து கொண்டிருந்தது தேர்தல் ஆணையம்? அந்தப் பேச்சுக்கள் வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் இல்லையா? அவர்களுக்கு ஒரு சட்டம் வருணுக்கு ஒரு சட்டமா?
இந்த மாதிரிப் பல உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது வருண் காந்தி மேல் போடப்பட்டிருக்கும் அத்தனை வழக்குகளும் மேற்சொன்ன அத்தனைத் தலைவர்கள் மேலும் போட்டிருக்க வேண்டுமே!
இவற்றையெல்லாம் பார்க்கும் போது என்ன தெரிகிறது? ஹிந்துக்களுக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சியும் செயல் படக்கூடாது; ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கின்றன போலி மதச்சார்பின்மை பேசும் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும். இவ்வுண்மையை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தீய சக்திகளை இந்துக்கள் நிராகரிக்க வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்து செயல் படவேண்டும்.
குஜராத் கலவரம்: அவிழ்ந்து சிதறிய புளுகு மூட்டை!
குஜராத் கலவரம்: அவிழ்ந்து சிதறிய புளுகு மூட்டை!
குஜராத் கலவரம்: அவிழ்ந்து சிதறிய புளுகு மூட்டை!
பிப்ரவரி 27, 2002-ல் குஜராத் மாநிலத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் வண்டியில் இரண்டு பெட்டிகளுக்கு ஜிகாதிகள் வைத்த தீயில் குழந்தைகள் பெண்கள் உட்பட 59 ஹிந்துக்கள் கருகிச் செத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு எதிர்வினையாக நடந்த கலவரத்தில் சுமார் 250 ஹிந்துக்களும், 750 முஸ்லீம்களும் உயிரிழந்ததும் நமக்குத் தெரிந்ததே.
ஆனால் அப்போது குஜராத்தில் ஆட்சி செய்தது பா.ஜ.க. அரசாங்கம் என்ற ஒரே காரணத்தினால், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகளும், அறிவுஜீவிகளும், ஊடகங்களும், 3000-க்கும் அதிகமான முஸ்லீம்கள் ஹிந்துக்களால் கொல்லப் பட்டதாகவும், பல பெண்கள் கற்பழிக்கப் பட்டதாகவும், இன்றுவரை பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாகத் தேர்தல் சமயங்களில், பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில், படு தீவிர எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. ஆனாலும் குஜராத் மக்கள் 2002 சட்டமன்றத் தேர்தலிலும், 2004 பாராளுமன்றத் தேர்தலிலும், 2007 சட்டமன்றத் தேர்தலிலும், பா.ஜ.க.வுக்கே அமோக ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.
டீஸ்டா செதல்வாட் திருவிளையாடல்கள்:
குஜராத் கலவரம் சம்பந்தமாகப் போடப்பட்ட பல வழக்குகள், இந்தப் போலி மதச்சார்பின்மை வாதிகளால் வேறு மாநிலங்களுக்கு மாற்றப் பட்டுள்ளன. தொடர்ந்து பிரச்சாரம் செய்து, உச்ச நீதிமன்றத்தில் குஜராத் மாநிலக் காவல் துறைக்கு எதிராக வழக்குகள் போட்டு, ஒரு தனி ‘சிறப்புப் புலனாய்வுக் குழு’ (Special Investigation Team) ஒன்றை உச்ச நீதிமன்றமே அமைக்குமாறு செய்தனர். இப்போலி மதச்சார்பின்மை வாதிகள். இவர்களில் முக்கியமானவராகவும், மோடிக்கும் குஜராத் ஹிந்துக்களுக்கும் எதிராகப் பல காரியங்கள் செய்பவராகவும் இருப்பவர், ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்’ (Citizens for Justice and peace) என்ற அரசு சாரா அமைப்பை (NGO) நடத்தி வரும் திருமதி டீஸ்டா செதல்வாட் என்பவர். ஒரு முஸ்லீமை மணந்த இந்துப் பெண்மணியான டீஸ்டா, தன்னை ஒரு மனித உரிமை இயக்கவாதியாகக் காண்பித்துக் கொள்கிறார்.
கடந்த ஏழு வருடங்களாக மோடிக்கு எதிராக இவர் விஷ(ம)ப் பிரசாரங்கள் செய்துவருவதோடு மட்டுமல்லாமல், கலவரத்தில் பாதிக்கப் பட்ட முஸ்லீம்களுக்கு உதவுகின்ற போர்வையில் பல வேலைகள் செய்து வருகிறார். குஜராத் காவல் துறையை அவதூறு செய்து, உச்ச நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கக் காரணமாய் இருந்தவரும் இவரே. இந்தப் புலனாய்வுக் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய உளவுத் துறை தலைவர் திரு ஆர்.கே. ராகவன் நியமிக்கப் பட்டார். இக்குழு உடனடியாகத் தன் வேலையில் இறங்கியது. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர், குல்பர்கா சொஸைட்டி, நரோடா காவுன், நரோடா பாடியா, சர்தார்புரா ஆகிய இடங்களில் நடந்த கலவரங்களைப் புலனாய்வு செய்யத் துவங்கியது. புலனாய்வை முழுவதுமாகச் செய்து முடித்த இக்குழு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளது. அவ்வறிக்கை டீஸ்டா செதல்வாட்டின் பல பித்தலாட்டங்களை அம்பலப் படுத்தியுள்ளது.
1. டீஸ்டா செதல்வாட்டின் அமைப்பின் மூலம் 22 சாட்சியங்கள் கொடுத்துள்ள கோர்ட்-மனுக்கள் (affidavits) அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்ட பொய் சாட்சியங்களே. அவை ஒரே மாதிரி தயாரிக்கப்பட்டு, ஒரே மாதிரி தட்டச்சு செய்யப்பட்டு, ஒரே கணினியிலிருந்து அச்செடுக்கப்பட்டவை என்பதும், சாட்சியங்கள் அனைவரும் பொய் சொல்லப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கலவரங்களின்போது நடந்த சம்பவங்களைப் பற்றிய தகவல்கள் எதுவுமே அவர்களுக்குத் தெரியவில்லை என்பதும், பலருக்கு அச்சம்பவங்கள் நடந்ததாகவே தெரியவில்லை என்பதும் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவரும் பொய் சாட்சியங்களானபடியாலும், சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் நடக்காத படியாலும், பாதிக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளவர்களும் பொய்யாகவே இருக்க வேண்டும்.
2. கௌஸர் பானு என்கிற கர்ப்பிணிப் பெண்ணை ஹிந்துக்கள் பலர் சேர்ந்து கற்பழித்ததாகவும், அவர் வயிற்றை வாளினால் கிழித்து உள்ளிருந்த பாதி வளர்ந்த கருவை வெளியே எடுத்துக் கொன்றதாகவும் ஒரு சம்பவத்தை டீஸ்டா செடல்வாட்டும், அருந்ததி ராயும், மற்றும் பல போலி மதச்சார்பின்மை வாதிகளும் ரத்தக் கண்ணீர் விட்டுப் பிரச்சாரம் செய்தனர். தற்போது அம்மாதிரியான ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று தெரியவந்துள்ளது.
3. அகமதாபாத் அருகில் உள்ள நரோடா பாடியா என்ற இடத்தில் பல முஸ்லீம்களைக் கொன்ற ஹிந்துக்கள் அவர்களின் உடல்களை ஒரு கிணற்றில் போட்டு மூடியதாக ஒரு சம்பவம் ஜோடித்துச் சொல்லப்பட்டது. அதற்கு சாட்சியங்களாக சிலரைத் தயார் செய்திருந்தார் ‘மனித உரிமைக் காவலர்’ டீஸ்டா! தற்போது அனைத்துச் சாட்சியங்களும் பொய் என்பதும் அவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
4. கலவரத்தின் போது ஆங்கிலேயர் ஒருவரைக் கொன்ற கொலையாளிகளுக்கு சாதகமாக குஜராத் காவல் துறை செயல்பட்டது என்ற குற்றச் சாட்டும் போலியானது என்று தெரியவந்துள்ளது.
5. அகமதாபாத் காவல் துறை ஆணையராக இருந்த பி.சி. பாண்டே என்பவர், குல்பர்கா சொசைடியில் நடந்த கலவரத்தின் போது, முஸ்லீம்களைத் தாக்கும் ஹிந்துக்களுக்கு பெரிதும் உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டும் பொய் என்று தெரியவந்துள்ளது. சொல்லப் போனால் அவரது பதவியைப் பறிக்கும் அளவிற்குப் பொய்ப் பிரச்சாரம் செய்தனர் டீஸ்டாவும் அவரது ‘மதச்சார்பற்ற’ கும்பலும். அக்குற்றச்சாட்டு தவறு என்பதும் வெளியாகியுள்ளது. உண்மையில் அவர் அச்சமயத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்காக மருத்தவமனையில் பல உதவிகள் செய்து கொண்டிருந்தார், பாதிக்கப் பட்டவர்கள் அனுமதிக்கப் படுவதை மேற்பார்வை செய்துகொண்டிருந்தார் என்பதும் உறுதி செய்யப் பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப் பட்டவை குஜராத் காவல் துறையினால் சொல்லப் பட்டவை அல்ல. டீஸ்டாவின் வேண்டுகோளின்படி உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் சொல்லப் பட்டவை. எனவே டீஸ்டா இவ்வறிக்கையின் மீது அவதூறு சொல்ல முடியாது.
டீஸ்டாவின் மற்றோர் அசுர முகம்
ஐந்து மாதங்களுக்கு முன்னால், டீஸ்டாவின் மற்றோர் அசுர முகம் வெளியே தெரிந்தது. டீஸ்டாவின் அகமதாபாத் அலுவலகத்தை ரயீஸ் கான் என்பவர் நிர்வகித்து வந்தார். சாட்சியங்கள் தயாரிப்பதிலிருந்து, கோர்ட்-மனுக்கள் தயார் செய்வது வரை அனைத்தையும் டீஸ்டாவின் சொல்படி செய்து வந்தார். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில், நரோடா காம் என்ற இடத்தில் நடந்த கலவரத்தைப் பார்த்ததாக கூறிய ஆறு சாட்சியங்கள் பொய்யானவை, அவர்களின் மனுக்களில் உண்மைக்குப் புறம்பாகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது. புலனாய்வுக் குழு ரயீஸ் கானை நெருக்கியபோது, அவர் தனக்கு ஒன்றும் தெரியாது, டீஸ்டா செய்யச் சொன்னதைத் தான் செய்ததாகக் கூறிவிட்டார். மேலும் சாட்சிகளின் கோர்ட்-மனுக்களை டீஸ்டா மும்பையிலிருந்து கணினி வழியே அனுப்பியதாகவும், தான் அகமதாபாத் அலுவலகத்தில் அச்செடுத்துத் தயார் செய்து, சாட்சிகளிடம் கையொப்பம் இடச் சொன்னதாகவும் உண்மையைக் கக்கிவிட்டார்.
உடனே ரயீஸ் கானை போன் மூலமும், ஆள் வைத்து நேரிலும் மிரட்டியுள்ளார் டீஸ்டா. பின்னர் அகமதாபாத் வந்த டீஸ்டா, ரயீஸ் கானை வேலையிலிருந்து நீக்கிவிட்டு, அலுவலகத்தைப் பூட்டிவிட்டு, அங்கு இருந்த ரயீஸ் கானின் கணினி மற்றும் பேக்ஸ் ஆகிய சாமான்களை எடுத்துச் சென்று விட்டார். ரயீஸ் கான் தனக்கு வரவேண்டிய இரண்டு மாதச் சம்பளத்தையும், கணினி, பேக்ஸ் ஆகியவற்றையும் கேட்டதற்கு, “திரும்பி வரமுடியாத இடத்திற்கு உன்னை அனுப்பிவிடுவேன்” என்றும் மிரட்டியுள்ளார். டீஸ்டா அரசியல் பலம் வாய்ந்தவர், மத்திய அரசுடன் நெருங்கிய பழக்கம் உள்ளவர், அவரிடம் பகைமை பாராட்ட வேண்டாம் என்று விஷயம் தெரிந்தவர்கள் கூறியதையும் கேட்காமல், ரயீஸ் கான் ரகியால் காவல் நிலையத்தில் டீஸ்டாவிற்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளார்.
பொய்ச் சாட்சிகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அன்பளிப்பு
டீஸ்டாவின் மற்றொரு திருவிளையாடலும் சுவாரஸ்யமானது. குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி நிதி திரட்டியது. அந்நிதியைப் பட்டுவாடா செய்யும் பணியை டீஸ்டாவின் அமைப்பு ஏற்றுக்கொண்டது. டீஸ்டா தான் ஏற்கனவே பாதிக்கப் பட்டவர்களையும், சாட்சியங்களையும் தயார் செய்து விட்டாரே! உடனே அவர்கள் பெயரை மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டார். பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து, டீஸ்டா, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பிருந்தா காரட், மற்றும் டீஸ்டாவின் உதவியாளர் ரயீஸ் கான் ஆகிய மூவரும் நிதியைப் பட்டுவாடா செய்தனர். எப்படி தெரியுமா? பாதிக்கப் பட்டவர்களுக்கு 5000 ரூபாயும், சாட்சியங்களுக்கு 50000த்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரையிலும்! இதிலிருந்தே தெரியவில்லையா சாட்சியங்களும், பாதிக்கப் பட்டவர்களும் எப்பேர்ப்பட்டவர்கள், எப்படித் தயார் செய்யப்பட்டவர்கள் என்று?
இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், “எனக்கு ஒன்றும் தெரியாது, நிதி மார்க்சிஸ்ட் கட்சி திரட்டியது, பட்டுவாடா செய்த அந்த விழாவில் நான் பங்கு கொண்டேன் அவ்வளவுதான்” என்று டீஸ்டாவும், “நாங்கள் நிதி திரட்டியது உண்மைதான். ஆனால் எந்த நீதிமன்ற வழக்கைப் பற்றியும் நாங்கள் கவலைப் படவில்லை. பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்று பிருந்தாவும் பொன்மொழிகளை உதிர்த்ததுதான்! பணம் பெற்றுக் கொண்ட அனைவரும், டீஸ்டா, பிருந்தா, ரயீஸ் கான் மூவருக்கும் நன்றி தெரிவித்துக் கடிதம் அனுப்பியுள்ளனர் என்பதும் உண்மை தான். நல்லெண்ணத்தோடு மக்கள் அளிக்கும் உதவிப் பணம் எப்படி, யாருக்கு, யார் மூலம் போய்ச் சேருகிறது பாருங்கள்! இதில் மற்றொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் நிஜமாகவே கலவரத்தில் குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்ததா, பாதிக்கப் பட்டவர்களும் சாட்சியங்களும் உண்மையானவர்களா, என்றெல்லாம் நீதிமன்றம் தீர்மானித்து, வழக்கு முடிவில் தீர்ப்பு வருவதற்கு முன்னால் உதவித் தொகை கொடுக்கப் பட்டுவிட்டது.
தற்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரனையில் மேற்கண்டபடி நிகழ்ச்சிகள் நடக்கவில்லை, சாட்சியங்கள் பொய் என்றெல்லாம் தெரியவந்துள்ள நிலையில், எதோ தங்கள் சொந்தப் பணம் போல பொதுமக்கள் பணத்தை அள்ளி வீசிய மூவரும் திருப்பித் தருவார்களா? எப்பேர்ப்பட்ட அயோக்கியத் தனம் இது?
இதனிடையே, மதச்சார்பின்மை, மனித உரிமை என்றெல்லாம் பேசிய இந்த செக்யூலர் கூத்தாடிக்கு, உலக மகா ஏமாற்றுப் பேர்வழிக்கு, கடந்த ஏழு வருடத்தில் என்னவெல்லாம் விருதுகள் கொடுக்கப் பட்டுள்ளன என்று பாருங்கள்:
2003
ந்யூயெர்ன்பர்க் மனித உரிமை விருது (The Nuernberg Human Rights Award)
ஜனநாயகக் காவலர் விருது (Defender of Democracy-Award) from Parliamentarians for Global Action
2004
எம்.ஏ. தாமஸ் தேசிய மனித உரிமை விருது (M.A.Thomas National Human Rights Award from the Vigil India Movement)
2006
நானி ஏ. பால்கிவாலா விருது (The Naani A Palkivaalaa Award)
2007
பத்மஸ்ரீ (Padmasri)
தற்போது ‘பத்மஸ்ரீ’ டீஸ்டாவின் மதச்சார்பின்மை, மனித உரிமை சாயங்களெல்லாம் வெளுத்துப் போன நிலையில், இவர் எப்பேர்பட்ட தேசத் துரோகி என்றும், ஹிந்துக்களுக்கு (குறிப்பாக குஜராத் மக்களுக்கு) எதிராக எவ்வளவு பயங்கரமான விஷப் பிரச்சாரம் செய்துள்ளார் என்றும் தெரிந்துவிட்ட நிலையில், விருது வழங்கியவர்கள் (இந்திய அரசாங்கம் உட்பட) விருதுகளைத் திருப்பி எடுத்துக் கொள்வார்களா? இந்திய அரசாங்கம் இவர்மீது நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குமா?
அவ்வாறெல்லாம் நடக்கும் என்று நினைத்தால் நம்மைப் போல முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்று பாருங்கள்:
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை மீது உச்ச நீதிமன்றத்தில் விவாதம் நடந்த போது நீதிபதி அரிஜித் பசாயத் அவர்கள், “இந்த மாதிரி கலவர வழக்குகளில் புகார்களும் எதிர் புகார்களும் வரத்தான் செய்யும். அதிலெல்லாம் நீதிமன்றம் நேரத்தை விரயம் செய்து கொண்டிருந்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது தாமதமாகும். எனவே சீக்கிரம் நீதி விசாரணை முடிக்கும் வழியைப் பார்க்கவேண்டும்” என்று சொல்லி வழக்கைத் தள்ளி வைத்துள்ளார். டீஸ்டாவைப் பற்றியோ, அவரின் பித்தலாட்ட அமைப்பைப் பற்றியோ, அவர் செய்துள்ள அயோக்கியத்தனத்தைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை!
மேலும் டீஸ்டா மத்திய அரசாங்கத்திற்கும், குறிப்பாக சோனியாவிற்கும் மிகவும் வேண்டப் பட்டவர் என்று செய்திகள் வருகின்றன. அடுத்த முறை காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர் அமைச்சராகக் கூட வாய்ப்பு உண்டு என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.
இந்நிலையில் இவர் தண்டனைக்கு உள்ளாக்கப் படுவார் என்று நாம் எதிர்பார்க்கலாமா? ஆனால், பா.ஜ.க. மற்றும் ஹிந்து-தேசிய வட்டாரங்களில் இவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படவேண்டும் என்று பேசுவதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே இவரின் உதவியாளர் ரயீஸ் கான் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை இருக்கின்றபடியாலும், குஜராத் கலவர வழக்குகளில் இவரின் கூத்துகள் வெளிப்பட்டுள்ளமையாலும், குஜராத் நீதிமன்றத்திலேயே இவருக்குத் தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர். தற்போது ‘தேசியப் பாதுகாப்புச் சட்டம்’ மிகவும் பிரபலமாக இருக்கின்ற படியால், அச்சட்டத்தின் கீழ் இவரை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’, ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ போன்ற முதுமொழிகளில் நமக்கு நம்பிக்கை உண்டு. டீஸ்டா கடுமையாகத் தண்டிக்கப் படுவார் என்றும், இவர் போன்ற மதச்சார்பின்மை-மனித உரிமை கழைக் கூத்தாடிகளும் சாயம் வெளுக்கப்பட்டு தண்டிக்கப் படுவார்கள் என்றும் நம்புவோமாக.
ம்யூனிக்’ முதல் மாலேகாவ் வரை - 1
இந்தியத் திரைப்படங்கள் தீவிரவாதம் கதைக்கருவாக அமையும் போது காமெடிப் படங்களை மிஞ்சும் விதத்திலேயே இருக்கிறது. ஒரு முஸ்லீமைத் தீவிரவாதியாகக் காட்டினால் ஏதோ பாவம் செய்ததுபோல எண்ணி, அதற்குக் கழுவாயாக, பிற முஸ்லீம்களைத் தியாகிகளாகச் சித்தரித்து விடுவார்கள். ஏதோ சிறிய எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் மட்டுமே தீவீரவாதிகளாகச் செயல்படுவது போலவும், அவர்களை முஸ்லீம் சமுதாயம் ஆதரிக்காதது போலவுமே சித்தரிக்கிறார்கள். தீவீரவாதிகளை அழிக்கும் ஹீரோக்களோ அநியாயத்துக்குக் காமெடி செய்கிறார்கள். என்றைக்குமே தீவீரவாதிகள் குறித்த படங்கள் யதார்த்தத்துடன் எடுக்கப்படுவதே இல்லை. மலையாளத்தில் சில படங்களும், ப்ளாக் ஃப்ரைடே போன்ற சில படங்களும் மட்டுமே விதிவிலக்குகளாக இருக்கின்றன.
பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து தப்பி ஓடிவரும் எம்ஜிஆர், இந்திய எல்லை என்றொரு வேலியை நோக்கி ஓடிவருவார். வேலியைத் தாண்டிக் குதித்தவுடன் தமிழ்நாட்டின் எல்லை வந்துவிடும். அவ்வளவுதான் நம் சினிமாக்காரர்களின் பூகோள அறிவும் பொது அறிவும். எம்ஜிஆர் தொடங்கி விஜயகாந்த் வரை இத்தகைய அபத்தங்களுக்கு எல்லையே இல்லை. தீவீரவாதிகளைச் சித்தரிக்கும் யதார்த்தமான சினிமாக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காணலாம்.
அதற்கு முன்பாக ‘இந்துத் தீவீரவாதிகள்’ என்னும் முரண்தொடர் குறித்துச் சில வார்த்தைகள்:
இஸ்லாமியத் தீவிரவாதம் குறித்த இணையப் பதிவுகள், செய்தித்தாள் கட்டுரைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் சிலர் இந்திய முஸ்லிம்கள் வறுமையில் வாடுவதாகவும் அல்லது அவர்கள் பெரும்பான்மை இந்துக்களிடம் அஞ்சி வாழ்வதாகவும் சித்தரிக்கின்றனர். முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கும் இவையே காரணமாக அமைவதாகச் சாக்குக் கூறுகின்றனர். இது உண்மைக்கு முரணானது.
எது அச்ச உணர்வில் செய்வது?
அமெரிக்காவில் செப்டம்பர் 11-ல் விமானத்தைக் கொண்டு இடித்து ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்ற தீவிரவாதிகள், பணக்கார அரபிக்கள் எந்த விதமான அச்ச உணர்வில் வாழ்ந்தார்கள்? காஷ்மீரப் பழங்குடியினரான பண்டிட்களைக் கொன்று, கற்பழித்துக் கொள்ளையடித்துத் துரத்தி இன்று அகதிகளாக வாழ வைத்திருக்கிறார்களே அந்தக் காஷ்மீரி முஸ்லீம்கள் எந்த விதமான அச்ச உணர்வில் வாழ்கிறார்கள்?
ஒரு சில முன்னாள், இந்நாள் ராணுவ அதிகாரிகளும் ஒரு சில இந்துத்துவத் தொண்டர்கள் மீதும் குண்டு வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இன்னும் எதுவும் நிரூபிக்கப் படவில்லை. அதற்குள் அவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று இந்தியாவின் அனைத்து பீ-செக்குகளும் (pseudo-secularists), மவுண்ட் ரோடு மாவோக்களும், அறிவு ஜீவிகளும் கருவிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப் பட்டாலும் அவர்களுக்குச் சட்டத்தின்படிதான் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் அப்படி அவர்கள் செய்திருக்கும் குற்றம்தான் என்ன? இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கில் இந்துக்கள் உடல் சிதறிச் சாகிறார்கள். காசியிலும், டெல்லியிலும், மும்பையிலும், அகமாதாபாத்திலும், அஸ்ஸாமிலும் நம் அருமைச் சகோதரர்கள் கொடூரமான முறையில் உயிர் இழக்கிறார்கள்.
பொதுமக்களின் உயிரைக் காக்க வேண்டிய அரசாங்கமோ வேடிக்கை பார்க்கிறது. இஸ்லாமியத் தீவீரவாதிகளைக் கண்டுகொள்ளாமல் நடந்து கொள்கிறது. போலீஸார் கைது செய்து சுப்ரீம் கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்ட தூக்கு தண்டனை கைதியைக் கூட தண்டனை அளிக்காமல் இஸ்லாமிய ஓட்டுக்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் இந்துக்களின் உயிரையும் உடமையையும் பாதுகாப்பதில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் ஒரு சில இந்துக்கள் எத்தனை நாள்தான் பொறுப்பது என்று சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்து கொடூரமான சிமி தீவீரவாதிகளைக் கொல்ல முயன்றனர் என்பதுதான் இப்பொழுது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றசாட்டே.
சிமி என்ற இஸ்லாமிய அமைப்பு பல்லாயிரக்கணக்கான இந்துக்களின் உயிர்களைக் கொடூரமான முறையில் பறித்து வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்கமோ வேடிக்கை பார்க்கிறது. அரசில் பங்கு வகிக்கும் முலாயம், லல்லு பிரசாத், சூர்ஹாட் லாட்டரி புகழ் அர்ஜுன் சிங் ஆகியோர் தீவீரவாதிகளுக்குப் பரிந்து அவர்களுக்காக வாதாடுகிறார்கள். ஒட்டுமொத்த இந்திய அறிவுஜீவிகளும் சிமிக்காகப் பரிதாபப் படுகிறார்கள். ஆனால் உடல் சின்னபின்னமான, உயிரை இழந்த இந்துக்களுக்காகப் பரிதாபப்பட ஒரு ஜீவனும் இந்தியாவில் இல்லாமல் போனார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசாங்கமும், போலீஸும் நடவடிக்கை எடுத்து இந்துக்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் அரசும் போலீசும் இஸ்லாமிய, கிறிஸ்தவத் தீவீரவாதிகளுக்கே ஆதரவாக இயங்குகின்றன. பிரதம மந்திரியோ ஆஸ்திரேலியாவில் கைதான இஸ்லாமியத் தீவிரவாதிக்காக உறக்கத்தை இழக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில் ஒரு சில தேசபக்தர்களும் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வீரர்களும் தீவீரவாதிகளை அழிக்கும் கடமையை தங்கள் கைகளில் எடுத்ததாகச் சொல்லப்படுவதே இப்பொழுது மிகப் பெரிய குற்றமாகிப் போனது. பத்ரி சேஷாத்ரிகளும், லல்லுக்களும், ராஜ்தீப் சர்தேசாய்களும் ‘இந்துத் தீவிரவாதிகளைக் கொல்’ என்று உச்சபட்ச டெசிபல்களில் கூக்குரல் இடுகிறார்கள்.
இந்தியா துணிவுடன் நடந்திராத தருணங்களின் பொழுது ‘இஸ்ரேலைப் பார் எப்படி துணிவுடன் எதிரிகளைத் தண்டிக்கிறது!’ என்று சொல்வது ஒரு ஃபேஷனாகிப் போனது. இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்கள் கொல்லப்பட்ட பொழுது இஸ்ரேலும் அதன் இரும்புப் பெண்மணியான கோல்டா மேயரும் எப்படி நடந்து கொண்டனர்? தேசநலன் கருதித் தீவிரவாதிகளை ஒழிக்க முயன்றதாகச் சொல்லப் படும் இன்னும் விசாரணையில் இருக்கும் உறுதிப் படுத்தப் படாத செயலை அங்கே ஓர் அரசாங்கமே மேற்கொண்டு செய்துள்ளது. எப்படிச் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? பார்க்கலாமா?
ம்யூனிக் (2005)
அசாதாரணமான படங்களையே எடுக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் மற்றுமொரு பிரமாதமான படம் 2005 ஆண்டு வெளிவந்த ம்யூனிக். ஹாலிவுட் பிரமாண்டங்களை அள்ளித் தந்த இதே இயக்குனர் ஒரு சர்ச்சைக்குரிய, தன் இனத்தாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த அரசியல் திரில்லரைக் கொடுத்தார்.
கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். 1972ம் ஆண்டு ஒலிம்பிக்கின் பொழுது 11 இஸ்ரேலிய தடகள வீரர்கள் அரேபியத் தீவீரவாதிகளால் முதலில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். பின்னர் ஜெர்மன் போலீஸ் செய்த குளறுபடிகளால் அனைவரும் கொலை செய்யப்பட்டனர். இஸ்ரேலுக்குப் படுகொலைகளும் கடத்தல்களும் துரோகங்களும் புதிதல்லதான். ஆனால் நாட்டுக்காக விளையாடச் சென்ற வீரர்களின் சிதறிய உடல்கள் யூதர்களிடம் கடுமையான கோபத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. பிரதமர் கோல்டா மேயர் ஓர் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுகிறார். இஸ்ரேலிய ஒலிம்பிக் போட்டியாளர்களின் கோரக் கொலையைச் செய்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அனைவரையும் அழிக்க முடிவு செய்யப்படுகிறது. பழிக்குப் பழிதான்.
இஸ்ரேலின் பிரதமர் இரும்புப் பெண்மணி கோல்டா மேயர், உலக நாடுகளின் போலி நாகரீகங்களைப் புறக்கணித்துவிட்டு, தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, என்ன செய்தால் தன் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குச் சமாதானம் கிட்டுமோ, எதைச் செய்தால் இஸ்ரேலை அழிக்க நினைக்கும் எதிரிகளுக்குத் தன் நாட்டின் இருப்பை அறியச் செய்யுமோ அதைச் செய்யுமாறு உத்தரவிடுகிறார். தீவீரவாதிகளைத் தேடிப் பிடித்து வேட்டையாடக் கட்டளையிடுகிறார், பிரதமரும், மொஸாட் மற்றும் ராணுவத் தலைவர்களும் தங்கள் ரகசிய ஆலோசனைக்குப் பின், பிரதமரின் முன்னாள் பாதுகாவலரும் ஒரு மொஸாட் ஏஜெண்டுமான அவ்னெரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கின்றனர்.
அதிகாரபூர்வமற்ற ஒரு தீவீரவாத ஒழிப்புப் படை உருவாக்கப் படுகிறது. எவ்வளவு செலவானாலும் சரி, விளையாட்டு வீரர்களின் கொலைக்குக் காரணமான 11 இஸ்லாமியத் தீவீரவாதிகளையும் கண்டுபிடித்துக் கொல்லும் பணி 5 பேர் கொண்ட ரகசியக் குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்களும் 11 பேர்களில் 9 பேர்களைப் பல நாடுகளுக்கும் சென்று வேட்டையாடுகின்றனர். எஞ்சியவர்களை இஸ்ரேல் தொடர்ந்து கொல்ல உறுதி பூணுகிறது.
ஏபிசி வர்ணனையாளர் பீட்டர் ஜென்னிங்ஸின் நிஜமான, நெஞ்சை உறைய வைக்கும் வர்ணனையோடு படம் தொடங்குகிறது. பாலஸ்தீனியத் தீவீரவாதிகளால் ‘ப்ளாக் செப்டம்பர்’ என்று பெயரிடப்பட்ட பயங்கரச் செயலை, பணயக் கைதிகளாக எடுக்கப்பட்டுப் பின்னர் கொலை செய்யப் படுவதை வர்ணிக்கிறார் பீட்டர் ஜென்னிங்ஸ்.
ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் எடுத்து யூதர்களின் பாராட்டைப் பெற்ற இணையற்ற இயக்குனர் ஒரு யூதர். இந்தப் படத்தில் இஸ்ரேலின் முடிவுகளைக் கேள்விக்கு உள்ளாக்கி அவர்களது கடுமையான அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாகத் தெரிகிறது. ஸ்பீல்பெர்கின் துடிப்பான இயக்கத்தில் ஒரு தத்ரூபமான திகில் படம் உருவாகியுள்ளது. படத்தின் முன்னே இயக்குனர் இது ஒரு டாக்குமண்டரி அல்ல. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப் பட்ட தி வெஞ்சன்ஸ் என்ற 1984ல் வெளிவந்த புத்தகத்தை ஆதாரமாக வைத்து எடுக்கப்பட்ட பரபரப்பான அரசியல் படுகொலைத் திரைப்படமே என்கிறார். இதில் தான் எந்த நீதியையையும் சொல்ல முயலவில்லை, யாரையும் ஆதரித்தோ எதிர்த்தோ எடுக்கவில்லை, நடந்த சம்பவங்களை மக்களின் பார்வைக்கு வைக்கிறேன், எது சரி, எது தவறு என்பதை அவர்கள் முடிவு செய்யட்டும் என்றும் கூறுகிறார். இந்தப் படத்தின் மூலம் எந்தத் தீர்வையும் கொடுக்க முயலவில்லை, அது தன் வேலை அல்ல என்றும் திட்டவட்டமாக அறிவிக்கிறார். ஸ்பீல்பெர்கின் இயக்கத்தில் அழிப்புப் படைத் தலைவன் அவ்னெராக எரிக் பானா அற்புதமாக நடித்துள்ளார்.
நமக்குப் புதிய ஜேம்ஸ்பாண்டாக அறிமுகமாயிருக்கும் டேனியல் கிரெய்க், குறிபார்த்துச் சுடும் மொஸாட் வீரராகவும், லின் கோகன் என்ற பிரபல டி.வி. நடிகை இஸ்ரேலியப் பிரதமராகவும் பிரமாதமாக நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதை வசனத்தை ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் படத்தின் வசனகர்த்தாக்களான டோனி கிரெக், எரிக் ரோத் அமைத்துள்ளனர். இந்தப் படம் மூன்று உண்மைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்கிறார் இயக்குனர். 11 தடகள வீரர்கள் கொல்லப்பட்டது உண்மை, அதற்கு பதிலடியாக கோல்டா மெயர் நடவடிக்கை எடுத்தது உண்மை, 12 தீவீரவாதிகளில் 10 பேர் கொல்லப்பட்டது உண்மை. இந்த உண்மைகளின் அடிப்படையில் பல்வேறு சங்கடமான கேள்விகளை எழுப்புகிறார் இயக்குனர், பதிலைப் பார்வையாளர்களிடமே விட்டு விடுகிறார்.
கைகழுவி விடப்பட்ட படை
அவ்னெர், தன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தேசத்தின் கட்டளையை ஏற்று எதிரிகளை ஒழிக்கும் பொருட்டு இஸ்ரேலை விட்டு நாடு நாடாகச் செல்கிறார். அவர் கிளம்பும் முன்பு இஸ்ரேலின் மொஸாடுக்கும் அவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு, பதவி விலக்கப்பட்டே அனுப்பப்படுகிறார். இந்தக் குழு எந்த நாட்டிலாவது கொலைக் குற்றத்துக்காக பிடிபட்டாலும் இஸ்ரேலுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்றும், இஸ்ரேல் சட்டத்தை மீறித் தன் ஒற்றர் படையைப் பிற நாடுகளுக்கு அனுப்பாது என்று காட்டவும் இந்தக் குழு ஆரம்பத்திலேயே கைகழுவி விடப்படுகிறது. விளையாட்டு வீரர்களின் படுகொலைக்குக் காரணமான தீவீரவாதிகள் எப்படியாவது கண்டுபிடிக்கப் பட்டு கொல்லப்பட வேண்டும்; உலகிற்கு இஸ்ரேலின் இரும்புக் கை புலப்பட வேண்டும்; அதே நேரத்தில் இஸ்ரேல் மீது உலக நாடுகள் எவ்விதக் குற்றசாட்டும் வைத்துவிடக் கூடாது என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது. அவ்னெருக்கான பணம் ஒரு ஸ்விஸ் வங்கியில் ரகசியமாக வைக்கப்படுகிறது, செலவாகும் ஒவ்வொரு பைசாவுக்கும் துல்லியமாகக் கணக்கும் ரசீதும் இருக்கவேண்டும், ஊதாரித்தனமான செலவுகளுக்கு இஸ்ரேல் அரசின் கஜானாவில் இடமில்லை என்றும் கறாராகச் சொல்லப்படுகிறது. “We deposit money from a fund that does not exist, into a box that we dont know about, in a bank that we never set our foot in” என்கிறார் மொஸாட் தலைவர் எப்ராகிம்.
இந்தப் பணியை ஆவ்னெரோ அவரது குழுவோ ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; மிகவும் ஆபத்தான பணி; அரசின், ராணுவத்தின் உதவியும் கிடைக்காது; எவ்வித பாராட்டோ, பதக்கமோ கிடைக்காது; செத்துப் போனால் எடுத்துப் போட நாதி கிடையாது; பேரும் புகழும் கிடைக்காது; இவர்களின் பணி ரகசியமாகவே வைக்கப்படும்; பெரும் பதவிகளோ, செல்வமோ, செல்வாக்கோ இருக்காது; உயிரைப் பணயம் வைத்து அந்தச் சிறிய குழு மேற்கொள்ளப் போகும் பணி ஒரு ஈ, காக்கைக்குத் தெரியப் போவதில்லை, பதவி உயர்வு இருக்காது, இலக்கில் வெற்றி பெற்றால் ஒரு நன்றி, ஒரு கை குலுக்கல் அதோடு சரி, மறு நாள் அவர்கள் சாதாரணர்கள். இருந்தாலும் இஸ்ரேலுக்கு, தங்கள் தாய்நாட்டுக்கு, செய்ய வேண்டிய கடமையைக் கேள்வி கேட்காமல் உயிரைப் பணையம் வைத்துச் சிரமேற்கொண்டு செய்கிறார்கள் தங்கள் நாட்டுக்காகத் தங்கள் உடல், பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்ட அந்த 5 தேசபக்தர்கள். பதவிக்காகவோ, பணத்திற்காகவோ, அல்லது யாரும் சொல்லிக் கொடுத்தோ வருவதில்லை அவர்களது தேசபக்தி.
தார்மீகக் குழப்பம்
பழிவாங்கும் கடமையினை ஏற்றுக்கொண்ட யூதர்கள் அது தமது ஒவ்வொருவரின் தாய்நாட்டை நிலை நிறுத்திக் கொள்வதின் ஓர் அங்கம் என்பதை மறுக்கவில்லை, ஆனால் ஸ்பீல்பெர்க் என்ற இயக்குனர், பழிவாங்குவதிலும், மரண தண்டனையிலும் எவ்விதப் பயனும் விளையப் போவதில்லல, அமைதியும் கிட்டப் போவதில்லை, பழி வாங்குதல் மேலும் மேலும் அழிவைத்தான் வளர்க்கும், கண்ணுக்குக் கண் என்றால் உலகமே குருடாய் விடும் என்னும் தன் காந்தியவாத சிந்தனைகளைப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மூலம் படம் பார்ப்பவர்களிடம் வெளிப்படுத்துகிறார். தீவிரவாதிகளை அழிக்கக் கிளம்பும் 4 பேர்களிடம் பெருத்த சஞ்சலம் நிலவுவதாகக் காட்சிகளையும் வசனங்களையும் அமைத்துள்ளார். தங்கள் தாய்நாட்டின் கட்டளையை எப்படியாவது செயல்படுத்தவேண்டும் என்பதில் அவர்களுக்கு அசாத்திய உறுதி இருக்கிறது.
ஆனால் தாம் செய்வது சரியான காரியம்தானா? சட்ட விரோதக் கொலையல்லவா? தர்மம்தானா? மனசாட்சிக்கு நியாயமான செயல்தானா? கொல்லப்போகும் அரபுத் தீவீரவாதிகள்தான் நிஜமாகவே அந்த விளையாட்டு வீரர்களின் கொலைக்குக் காரணமானவர்களா? அல்லது இஸ்ரேல் தங்கள் அரசியலுக்குத் தமது சேவையைப் பயன்படுத்திக் கொள்கிறதா? தீவிரவாதிகளின் அருகில் வேறு யாரும் இருந்தால் அவர்களைக் கொல்லுவது தர்மம்தானா என்று அர்ஜுனனுக்கு ஏற்பட்ட குழப்பம்போல் முழுவதும் அவ்னெரின் குழுவினருக்குச் சுய விசாரணைகள் நடைபெறுவதாக இயக்குனர் ஸ்பீல்பெர்க் அமைத்துள்ளார்.
உண்மையில் இந்தக் கடமையை மேற்கொண்ட வீரர்கள் அப்படி எந்தவொரு சஞ்சலத்துக்கும் உள்ளாகவில்லை, மிகத் துணிவாகவும், உறுதியுடனும், தாங்கள் செய்யும் கொலைகளின் நியாயத்தை உணர்ந்தும், தங்கள் தாய்நாட்டின் இருப்புக்காக இதைச் செய்ய வேண்டியதன் அவசியத்தைத் தெரிந்தும்தான் எதிரிகளை அழித்தனர். ஸ்பீல்பெர்க் தேவையில்லாமல் தனது கருத்துக்களை இஸ்ரேல் வீரர்கள்மேல் ஏற்றித் தவறான செய்தியைச் சொல்லியுள்ளார் என்று இஸ்ரேல் தரப்பு ஸ்பீல்பெர்க்மீது தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. அங்குதான் வருகிறது அவர்மேல் வரும் சுயவிமர்சனக் குற்றசாட்டுக்கள். இந்தப் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தேசபக்த யூதர்கள் நிஜமாகவே அவ்வாறு நினைத்திருப்பார்களா? இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். நமக்குத் தெரியாது. ஆனால் அவ்விதக் குழப்பம் ஒவ்வொரு கொலையை, ஒவ்வொரு பழிவாங்கலை நிகழ்த்துமுன் அந்தக் குழுவினருக்கு ஏற்படுவதாகக் காட்டுகிறார் ஸ்பீல்பெர்க். அதுபோன்ற தார்மீகக் குழப்பம் சாத்தியம்தான்.
நிச்சயம் சுயமாய் சிந்திக்கத் தெரிந்த எந்தவொரு யூதருக்கும் அவ்விதமான குழப்பங்கள் ஏற்பட்டிருக்க அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளனதான். ஒவ்வொரு கொலையின் போதும் ஒரே ஒரு யூதரைத் தவிர, தலைவன் உட்படப் பிறருக்கு தர்ம சங்கடங்களும், சுய பரிசோதனைகளும், நியாய அநியாய, தர்க்க விவாதங்களும் நிகழ்கின்றன. அதுபோல் கேள்வி எழுப்பும் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் கொலையும் செய்யப்படுகின்றனர். அதுபோன்ற கொலைகளை இஸ்ரேல் செய்கிறதா எதிரிகள் செய்கிறார்களா என்பதை ஸ்பீல்பெர்க் கூறுவதில்லை. அதைப் பார்வையாளர்களின் தீர்வுக்கு விடுகிறார். பழிவாங்கும் பணியை ஏற்கும் தலைவனுக்கும் அவ்வித ஆத்ம பரிசோதனைகள் நிகழ்கின்றன. இருந்தாலும் அவன் தாய்நாட்டின் கட்டளையை எந்தவொரு சமயத்திலும் மறக்காமல் தன் கடமையில் உண்மையானவனாக இருக்கிறான்.
(இன்னும் வரும்…)
பகிர்வுக்கு நன்றி அனானி நண்பரே நல்ல தேர்ந்தெடுத்த கட்டுரைகளை கொடுத்திருக்கிறீர்களே
Fantastic Tamil This Post is superb
HOT NEWS - BJP LEADING IN THE FIRST PHASE
HOT NEWS - BJP LEADING IN THE FIRST PHASE
அனானி காணும் கனவு.. பரவாயில்லை கனவில்தானே பி.ஜெ.பி ஜெயிக்கமுடியும்
இதுதான் சீன கைக்கூலி மாவோயிஸ்டுகள் தேர்தல் புறக்கணிப்பு பண்ணவைக்கும் திறமை!
http://www.dailypioneer.com/170019/No-ink-on-our-fingers-plead-voters.html
No ink on our fingers, plead voters
PNS | Malkangiri
Polling officers at many booths in Malkangiri district faced a peculiar situation on Thursday. The voters requested them not to put ink mark on their fingers, which could not be erased for at least 15 days.
The indelible ink, a heady mix of chemicals, dyes, aromatic materials and silver nitrate, is a singular commodity that is exclusively used in elections.
The voters feared that if their hands carried the proof of voting, they would face persecution by Maoists. The voters' turnout was much low in this worst Maoist-hit district in the district.
As many as 10 polling booths came under attack of the ultras, who had given a call for boycott of poll and threatened to chop off hands of voters. They set afire some polling booths, vehicles and electronic voting machines (EVMs) and other poll materials in polling stations where could not be held, said an official.
இதுக்கு கூட நின்று ஜால்ரா போட்டு, நக்கி விடுவது மருதையன், இந்து ராம், சுப்பிரமணிய சுவாமி!
--
Exactly!
நக்சலைட் பொட்டைகளை பற்றி எழுதி நேரத்தை வீணடிக்கிறீர்கள். அவர்கள் எல்லாம் வேசி மகன்கள். இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்டுகள் நல்ல அப்பனுக்கு பிறந்தவர்கள் அல்ல.
Post a Comment