சீனாவில் பாலும் தேனும் ஓடுகிறது என்று கும்மியடித்து, சீனாவுக்காக இந்தியாவை காவு கொடுக்க துடிக்கும் சிபிஎம் கட்சியும்,
சீன கம்யூனிஸ்டுகள் தங்கள் ஏழ்மையை விட்டுவிட்டு பொருளாதார வளர்ச்சி செய்ய கிளம்பிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டிக்கொண்டே, திபெத் மக்களின் உரிமையா அல்லது சீனாவின் அடக்குமுறையா என்றால் சீனாவின் அடக்குமுறைக்கு ஆதரவளிக்கும் நக்ஸல்பாரி, மக இக, எஸ்.ஓ.ஸி கும்மிகளும் பார்க்க விரும்பாத சீனாவின் வறுமைப்படங்கள் இங்கே.
இவ்வாறு ஏழைகள் இருக்கும்போது, ராக்கெட், அணு உலைகள், அணு ஆயுதங்கள் எல்லாம் தேவையா இந்த சீன அரசாங்கத்துக்கு? இந்த சீன அரசாங்கத்தை போட்டு கொளுத்தணும்யா என்று எந்த அறிவுஜீவியும் எழுதிவிடுவார்கள் என்று கனவிலும் நினைக்காதீர்கள்.
சரி இதனை பார்ப்போம்.
சீனாவில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களின் அடிமைகளாக ஏராளமான ஏழை உழைப்பாளிகள் எந்த விதமான உரிமையுமில்லாமல் வேலை செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு புரட்சிகர மாவோயிஸ சீன கம்யூனிஸ தலைவனின் செங்கல் சூளையில் அடிமைகளாக இருந்தவர்கள் ஒரு (வெளிநாட்டு) பத்திரிக்கையாளரின் செய்தி விபத்து காரணமாக வெளியே தெரியவந்து விடுவிக்கப்பட்டார்கள்.
இதுதான் இன்று ஏழைகளை வைத்து கும்மியடிக்கும் கம்யூனிஸ்டுகளின் எதிர்கால நோக்கம்.
Freitag, 27. Juni 2008
சீனாவில் வறுமை - சிபிஎம்முக்கும் நக்சல் கும்பலுக்கும் கேள்வி
Eingestellt von தமிழ்மணி um 06:48
Abonnieren
Kommentare zum Post (Atom)
6 Comments:
இந்தியாவில் வறுமை இருக்கிறது என்பதும், அதனை போக்க இப்போதுதான் பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதும் என்பதுமே உண்மை.
சோசலிஸ வறுமையை மீண்டும் கொண்டுவர துடிக்கும் கம்யூனிஸ்டுகள் இப்போது வறுமையில் உள்ளவர்களை உபயோகப்படுத்திக்கொண்டு கும்மி அடித்து பதிவு போடுகிறார்கள்.
அந்த இழிவுக்கு காரணமே இவர்களது கொள்கைதானே?
அது ஏன் அவர்கள் தலையில் ஏறமாட்டேன் என்கிறது?
-வீ
First of all, I dont think any Naxal or their supporters will accept chinese rule as Soicialist/Communist... Its fake socialistic rule. China embraced to capitalism long ago, i dont know why u people always point it as communist state..
Next, If econimc freedom is given to indian poor.. then why more than 300 Million people live less than 1 USD per day... Child mortality and mal nutrition rate is high...
அன்புள்ள அனானி,
நீங்கள் சொல்வதைத்தான் நான் மேலே குறித்துள்ளேன். கவனிக்கவும். ஒரு பக்கம் அது முதலாளித்துவ பாதையில் சீரழிகிறது என்று சொல்லிக்கொண்டே திபெத் பிரச்னையில் சீனாவை ஆதரிக்கிறார்கள் நக்ஸல்கள். ஏனென்று அவர்கள்தான் சொல்லவேண்டும்.
பொருளாதார சுதந்திரம் நரசிம்மராவ் காலத்தில்தான் மெதுவாக திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார சுதந்திரத்தை சீனா 1970இல் செய்தது. இந்தியாவின் சோசலிச்டுகள், கம்யூனிஸ்டுகள் உபயத்தால் பொருளாதார சுதந்திரம் திறந்துவிட 1990களில்தான் முடிந்தது.
அதனால் சீனா சுமார் 20 ஆண்டுகால முன்னேற்றத்தில் உள்ளது.
இதனை ஒப்புக்கொள்ள இந்திய கம்யூனிஸ்டுகள் எவர் தயார்?
நீங்கள் வருவதற்கு முன்னர் இவர்களது ஆட்டம் தாங்க முடியாமல் இருந்தது.
இப்போது கூவி அழைத்தாலும் யாரும் பதில் சொல்ல வர மாட்டேன் என்கிறார்களே?
கம்யூனிஸம் குறையுள்ளதுதான். அதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் முதலாளித்துவம் குறையே இல்லாததா?
முதலாளித்துவ நாடுகளில் ஏழைகளே இல்லையா?
முதலாளித்துவ நாடுகளின் ஆதிக்க எண்ணத்தால் சுரண்டப்பட்ட நாடுகளின் மக்களுக்கு தமிழ் மணியும், அவரது சக சி்ந்தனையாளர்களும் என்ன பதில் சொல்கிறார்கள்?
ஆப்பிரிக்க நாடுகள், ஆப்கன், ஈராக் உள்ளிட்ட நாடுகளின் வறுமைக்கு என்ன காரணம்? அவை பொதுவுடைமை நாடுகள் அல்லவே!
அன்பின் அனானி
//கம்யூனிஸம் குறையுள்ளதுதான். அதை யாரும் மறுக்க முடியாது. //
நன்றி.
ஒரு ஐடியை வைத்துக்கொண்டு வாருங்கள்.
மற்ற விஷயங்களை
விவாதிக்கலாம்.
Post a Comment