Freitag, 9. Mai 2008

நக்ஸல்களை ஒடுக்க அனைத்துக் கட்சிகளும் பாடுபட வேண்டும் - கலைஞர் கோரிக்கை


கலைஞர் கோருவதற்கு முழுமனதாக ஆதரவு தரவேண்டும் என்று அனைத்து கட்சியினரிடமும் கோரிக்கை வைக்கிறேன்

--
http://thatstamil.oneindia.in/news/2008/04/22/tn-cm-seeks-cooperation-from-political-parties.html

நக்ஸல்களை ஒடுக்க அனைத்துக் கட்சிகளும் பாடுபட வேண்டும்-கருணாநிதி
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 22, 2008



சென்னை: தீவிரவாதப் பாதையில் இளைஞர்கள் செல்வதைத் தடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், புரட்சி செய்யும் இளைஞர்களை சீர்திருத்தி புதிய நிலையை உருவாக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

சட்டசபையில் இன்று கொடைக்கானலில் நகஸலைட்கள் பிடிபட்டது, நவீன் என்ற நக்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்மீது பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர்.

அதிமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கடந்த 19ம் தேதியன்று கொடைக்கானல் மலைப்பகுதியில் நவீன் என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பலர் தப்பி ஓடி விட்டதாகவும் செய்தி வந்துள்ளது. இதில் 2 மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ஏற்கனவே 12ம் தேதி பலர் பிடிப்பட்டதாகவும் அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றபோது தப்பி ஓடியதாகவும் அதில் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. அரசு இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

இதையடுதது பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரும் பேசினர்.

இதற்கு பதிலளித்து முதல்வர் அமைச்சர் கருணாநிதி கூறியதாவது:

தீவிரவாதம் என்பது ஒரு கட்சி இன்னொரு கட்சியை குற்றம் கூறுவதற்காக எழுப்பப்படும் சொற்றொடர் அல்ல. அரசுக்கு எதிராக எழுப்பப்பட்ட வார்த்தையும் அல்ல. ஆட்சியில் உள்ளவர்களும் எதிர்க்கட்சியினரும் பொது மக்கள் உள்பட எல்லோரும் தீவிரவாதத்தின் பலனை அனுபவிக்க வேண்டியது இருக்கும்.

வெள்ளம், புயல் பெருமழை, பூகம்பம் ஏற்பட்டால் எல்லா கட்சியினரும் ஒன்றாக சேர்ந்து பாதுகாப்பான நடவடிக்கைகளை எடுத்து பொது மக்களை காப்பது போல் தீவிரவாதத்தை தவிர்ப்பதும் தடுப்பதும் எல்லா கட்சிகளுக்கும் எல்லோருக்கும் பொதுவானது என்று கருதி தடுக்க முன்வர வேண்டும்.

இங்கு ஒன்றிரண்டு சம்பவங்களை சுட்டிக்காட்டி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு காவல் துறை மூலமும் அரசு அதிகாரிகள் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை அறிக்கையாக தாக்கல் செய்கிறேன்.

இந்த அரசு பதவி ஏற்றது முதல் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது. அதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்குள் பரவ முயலும் நக்சலைட்டுகளை தடுப்பது, காடுகளிலும், கடலோர பகுதிகளிலும் மாநில எல்லைகளிலும் சோதனை சாவடிகளை ஏற்படுத்தி அடிக்கடி காவல் துறையினர் சோதனை நடத்தி தீவிரவாத சக்திகள் வேரூன்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2006ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணபிரகாசம் மாவட் டங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து ராக்கெட் லாஞ்சர்கள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதை தயாரித்த எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2003ம் ஆண்டு முதல் இந்த கடத்தல் நடைபெற்றது விசாரணையில் தெரிய வந்தது.

2007ம் ஆண்டு ஜூலை மாதத்தில் முருகமலை காட்டில் நக்சலைட்டு கைது செய்யப்பட்டார். அதே போல சுந்தர மூர்த்தி என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டார். ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல டிசம்பர் மாதத்திலும் தீவிரவாதிகள் பிடிபட்டனர்.
கடந்த 19ம் தேதி கொடைக்கானல் பகுதியில் தீவிரவாதிகள் இருக்கும் தகவல் அறிந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைக்க முயன்ற போது துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் போலீசாரை தாக்கியுள்ளனர்.

போலீசார் பாதுகாப்புக்காக சுட்டபோது நவீன் என்ற தீவிரவாதி குண்டு பாய்ந்து இறந்திருக்கிறார். இவர் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்.

இந்த அரசு சட்டம்- ஒழுங்கை பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஜாதி, சமய மோதல் இல்லாமல் அமைதியான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. இலங்கை பிரச்சினை, நாட்டின் மதவாதம், பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதம் என்ற சூழ்நிலையில் தீவிரவாத செயல்கள் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள 24 நக்சலைட்டுகளில் 8 பேர் தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டப்படி காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் 2001 முதல் 2006 வரை 56 பேர் தீவிரவாத நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரையும் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யவில்லை.

கடந்த ஆட்சி காலத்தின்போது, 29.11.2002, 8.5.2005, 24.11.2005 ஆகிய நாட்களில் நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த ஆட்சி காலத்திலும் நக்சலைட்டுகள் ஊடுருவல் இருந்தது. இந்த ஆட்சி காலத்திலும் இருக்கிறது என்று வக்காலத்து வாதம் செய்ய விரும்பவில்லை.

இயற்கை சீற்றம் வரும்போது எப்படி எல்லோரும் கூடி அதை எதிர்கொள்ள வேண்டுமோ அதுபோல தீவிரவாதத்தை எல்லோரும் எதிர்கொள்ள வேண்டும். ஆயுதத்தில் அல்ல, வன்முறையால் அல்ல, அவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் என்பதை கண்டு பிடித்து ஆணிவேரை அகற்றி தீர்வு காண வேண்டும்.

மக்கள் நலமாக அமைதியாக வாழ, புரட்சி செய்யும் இளைஞர்களை சீர்திருத்தி புதிய நிலையை உருவாக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அவர்கள் தேவை என்ன என்பதை கண்டறிந்து நிறைவேற்றி அமைதியை நிலை நாட்டுவது நமது கடமை என்றார் கருணாநிதி.

2
நன்றி


http://thatstamil.oneindia.in/news/2008/05/09/tn-more-vigil-in-tn-to-stop-terrosists-infiltratio.html

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை- கருணாநிதி உறுதி
வெள்ளிக்கிழமை, மே 9, 2008

சென்னை: தமிழக பாதுகாப்புக்கும், அமைதிக்கும் அச்சுறுத்தலாக விளங்கக்கூடிய சவால்களை சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்துள்ளார்.

சட்டசபையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்புகளை முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழக காவல்துறை ஒரு சிறந்த காவல்துறை என்ற தனிப்பெருமையை பெற்றுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் பிரச்னை ஏதுமின்றி பொது அமைதி காக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாத செயல்கள் தலைதூக்கியுள்ள போதிலும் தமிழகத்தி்ல் காவல்துறை மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கை காரணமாக வன்முறை செயல்கள் தடுக்கப்பட்டுள்ளன.

அண்டை மாநிலங்களில் இருந்து தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற முயன்றபோது உடனுக்குடன் அவை தடுத்து நிறுத்தப்பட்டன. 2007ம் ஆண்டில் மாவோயிச குழுவை சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து வரும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கைக்கு பொருட்களைக் கடத்திய 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். 2008 மார்ச் 31ம் தேதிவரை 14 இலங்கைத் தமிழர்கள் உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டு, 30 தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

அரசு எடுத்துவரும் கடும் நடவடிக்கை காரணமாக 48 இலங்கை தீவிரவாதிகள் உள்பட 139 கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடத்தல் நடவடிக்கைகளும் தீவிரவாத ஊடுருவலும் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளன.
காவல்துறையை நவீனமயமாக்க கடந்த நிதியாண்டில் ரூ.101 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.68 கோடிக்கு திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

காவல்துறையின் அனைத்து செயல்பாடுகளும் திருப்திகரமாக உள்ளது. என்றாலும் பாதுகாப்புக்கும், அமைதியான சூழலுக்கும் அச்சுறுத்தலாக விளங்கக்கூடிய சவால்களை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
காவல்துறையினர் மக்களிடம் நட்போடு பழகும் முறையே அடிப்படை கொள்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

20 Comments:

Anonym said...

திமுக எதிரிகளை கூட கலைஞருக்கு ஆதரவாக திருப்பிவிடுவீர்கள் போலிருக்கிறதே!

said...

டாக்டர் கலைஞர் கூறியது கட்சி மனமாச்சரியங்களை கடந்து அனைவரும் ஆதரிக்க வேண்டியது.

-

இன்னொன்று,
சம்பூகன் என்ற பெயரில் எழுதுபவர் தனது பழைய பதிவுகளை மீண்டும் பிரசுரிக்கிறார்.

வெறும் மொழி, இன, ஜாதி வெறுப்பியல் கருத்துக்களை நான் நிராகரிக்கிறேன். பெரியார் கூறிய கருத்துக்களுக்கும், இவர்கள் பெரியாரின் கருத்துக்களை எடுத்தாள்வதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. சம்பூகன் என்ற பெயரில் பெரியாரிஸ்டுகளை கம்யூனிஸ்டுகளாக ஆக்க முயற்சிக்கும் முயற்சிகளின் ஊற்று மக இகவிலிருந்து வருகிறது.

இப்படிப்பட்ட வெறுப்பியல் கருத்துக்கள், சாதாரண கருத்துசுதந்திரத்தை தாண்டி, கொலைவெறி தத்துவங்களாகவே பரிணமித்துள்ளன என்பது மார்க்ஸ், ஹிட்லர்,லெனின், ஸ்டாலின், மாவோ, போல்போட் வரலாறுகள் தரும் பாடம்.

அதே வெறுப்பியல் பாதையில் தமிழர்களை இட்டுச்செல்லும் கம்யூனிஸ்டுகளை இனம் கண்டு அனைத்து தமிழர்களும் நிராகரிக்கவேண்டும்.

said...

நண்பர் சந்திப்பு அவர்களை அவதூறு செய்து நண்பர் ஏகலைவன் எழுதியதற்கு மறுமொழியாக சந்திப்பு பதிவில் எழுதியது.

--
நண்பர் ஏகலைவன்,

நீங்கள் என்னைப்பற்றி கூறும் அவதூறுகளுக்கு நான் பதில் ஏதும் எழுதப்போவதில்லை. விவாதம் என்னைப் பற்றியதல்ல. விவாதம் கம்யூனிஸம் பற்றியது. அதனை விவாதியுங்கள். உங்கள் கும்பல் விவாதத்தில் தோற்கிறது என்று உணர்ந்ததும், அவதூற்றை ஆரம்பித்துள்ளீர்கள். ஆகவே அவற்றை உதாசீனம் செய்கிறேன்.

சிபிஎம்- சிபிஐ போன்ற கட்சிகள் மீது எனக்கு எந்தவிதமான பாசமும் இல்லை.
ஆனால், மக இக போன்ற கட்சிகளை என்னை போன்ற பொதுமக்கள் வெறுப்பது போன்று அவைகளை வெறுப்பதில்லை. சிபிஎம் சிபிஐ போன்றவைகள் நந்திகிராமத்தில் வெறியாட்டம் ஆடுகின்றன என்று நான் விமர்சித்திருக்கிறேன். நான் மட்டுமா விமர்சித்திருக்கிறேன்? ஏராளமான இடதுசாரி சிந்தனையாளர்களே விமர்சித்துள்ளார்கள்.

ஆனால், வன்முறையே வழி என்று சொல்லும் மக இக, எஸ் ஓ ஸி, சிபிஐ எம் எல் மாவோயிஸ்டு ஏ பி சி டி போன்றவைகளுக்கு சிபிஎம்மை விமர்சிக்க அருகதை உண்டா?

சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் ஒரு காலத்தில் வன்முறையில் இருந்திருக்கலாம். தற்போது வன்முறை வழியை விட்டுவிட்டு, மக்களிடம் பிரச்சாரம், பாராளுமன்ற வழியில் உடனடி மக்கள் பிரச்னைகளை தீர்ப்பது என்று இறங்கியுள்ளார்கள். அதனை அவர்கள் "இந்திய சூழ்நிலைக்கு" ஏற்ப நடைமுறைக்கு கொண்டுவருவது என்று கூறுகிறார்கள். அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். ஆனால், அவர்கள் வன்முறையை தங்களது முக்கியமான வழிமுறையாக கட்சி திட்டத்தில் ஏற்காதவரை அவர்களது தலைவர்கள், தொண்டர்கள் செய்யும் தவறுகளை மன்னித்தே ஆகவேண்டும். அவர்கள் வன்முறையில் இறங்கினால், அவர்களது குற்றங்களை இந்தியாவின் நீதிமன்றங்கள் விசாரிக்கவேண்டும். தண்டனை வழங்கப்பட வேண்டும். அதனை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். சிபிஎம் தொண்டர் செய்த கொலைக்கு தண்டனை கொடுக்கக்கூடாது என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். ஆகவே அவர்களது வழிமுறைக்காக நன்றி செலுத்தவே வேண்டும். ஆனால் நக்ஸல்கள் செய்யும் கொலைகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லத்தயாரா?

இல்லாத பொற்காலத்துக்காக பிரச்சாரம் செய்வது மன்னிக்கக்கூடியது. இல்லாத பொற்காலத்துக்காக இன்று இருக்கும் ஆட்களை கொல்லுவது மன்னிக்கவே முடியாதது.

மேலும் நான் ஏற்கெனவே விவாதத்தில் கலந்துகொள்ள சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அவரை நீங்கள் நிர்பந்திக்க முடியாது. எந்த நேரத்தில் கலந்துகொள்ளவேண்டும், எந்த நேரத்தில் தன் தனிப்பட்ட வேலையை பார்க்கவேண்டும் என்று அவருக்கு தெரியும் அல்லவா? ஆகவே விவாதத்தில் கலந்துகொள்ள என்ன முறைகள், எவ்வாறு அவதூறுகள் இல்லாமல் விவாதிப்பது என்பதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். வெறும் அவதூறுகளும் அசிங்கமான திட்டுகளுமே விவாதங்கள் ஆகாது. அது உங்கள் பக்கம் ரொம்ப வீக் என்னும் எண்ணத்தைத்தான் படிப்பவர்களின் மனத்தில் தோற்றுவிக்கும்.

நன்றி
தமிழ்மணி

said...

தமிழ்மணி அண்ணா,

நன்னா ஜொன்னேள் போங்கோ.

பெரியாரிஸ்டுகளெல்லாம் கம்யூனிஸ்டுகள் இல்லை என்று நீங்கள் இங்கே சொல்லியிருப்பதைப் பார்த்தால் உமது தாக்குதல் மகஇகவைத் தாண்டி இப்போதுதான் பெரியாரிஸ்டுகள் வரை நீண்டிருப்பது போல் தோன்றுகிறது. பேஷ்! பேஷ்!!

சரி யாரையெல்லாம் கம்யூனிஸ்டுன்னு நீர் அங்கீகரிப்பேள்? அய்யா சந்திப்பு மாதிரி ஏதோ ஒரு கம்யூனிஸ்டு (அப்படியின்னு சொலிக்கொள்கிற) கட்சியில் உறுப்பினராக இருப்பவரைத்தானா? பெரியாரும் பெரியாரியவாதிகளும் மிகமிகத் தெளிவாக மார்க்சிய கருத்துக்களையும், கம்யூனிச கருத்துக்களையும் ஆதரித்துதான் செயல்பட்டார்கள்.

அவர்களின் கம்யூனிச எதிர்ப்பு என்பது, (மகஇகவின் மீதான உமது காழ்ப்புணர்ச்சியினைப் போலில்லாமல்) இந்திய போலி கம்யூனிசக் கும்பலைப் பற்றியதாகத்தான் இருந்தது, என்பது ன்னோக்கு தெரிந்திருக்க வாய்பில்லை ஓய்.

நீர் நேர்மையான ஆளாயிருந்தாக்கா சம்பூகனுக்கு இங்கே வந்து பதில் சொல்வதைவிட அவரது தளத்திலேயே சென்று விவாதிக்கலாமே.

said...

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பர் பகத்,
//பெரியாரிஸ்டுகளெல்லாம் கம்யூனிஸ்டுகள் இல்லை என்று நீங்கள் இங்கே சொல்லியிருப்பதைப் பார்த்தால் உமது தாக்குதல் மகஇகவைத் தாண்டி இப்போதுதான் பெரியாரிஸ்டுகள் வரை நீண்டிருப்பது போல் தோன்றுகிறது. பேஷ்! பேஷ்!!
//

உங்களது சிந்தனை திறமை நன்றாக தெரிகிறது.

பரிதாபப்படுகிறேன். ஏன் உங்களால் நான் எழுதுவதை புரிந்துகொள்ளமுடியவில்லை என்று இப்போது புரிகிறது.

தமிழே புரியவில்லை!

said...

சந்திப்பு பதிவில் நண்பர் ஏகலைவனின் பதில்
--
At 5:28 PM, ஏகலைவன் said...
///நீங்கள் என்னைப்பற்றி கூறும் அவதூறுகளுக்கு நான் பதில் ஏதும் எழுதப்போவதில்லை. விவாதம் என்னைப் பற்றியதல்ல. விவாதம் கம்யூனிஸம் பற்றியது. அதனை விவாதியுங்கள். உங்கள் கும்பல் விவாதத்தில் தோற்கிறது என்று உணர்ந்ததும், அவதூற்றை ஆரம்பித்துள்ளீர்கள். ஆகவே அவற்றை உதாசீனம் செய்கிறேன். ///

அய்யா பார்ப்பன 'டும்மி'மணி அவர்களே,

உங்களோடு போதுமான அளவுக்கு விவாதங்களை நடத்தியாகிவிட்டது. சம்பூகன் உம்மைத் திரைகிழித்து காட்டிய பிறகு, இதுவரை அவற்றுக்கு பதில் சொல்லாத நீ இங்க வந்து ஒப்பாரி வக்கிறத்து கேவலமா இருக்குது. என்ன செய்யறது ஒனக்கும் இந்த சி.பி.எம். கோமாளியவிட்டா வேறுயாரும் ஒத்தாசைக்குக் கிடையாது பாவம்.

///ஆனால், வன்முறையே வழி என்று சொல்லும் மக இக, எஸ் ஓ ஸி, சிபிஐ எம் எல் மாவோயிஸ்டு ஏ பி சி டி போன்றவைகளுக்கு சிபிஎம்மை விமர்சிக்க அருகதை உண்டா?///

மகஇக, வன்முறையே வழி என்று செயல்படுவதாக உன்னிடத்தில் சொன்ன அந்த கேனையப் போயி கேளு மாப்ள.

ஆர்.எஸ்.எஸ். ஷாகா வைப் போன்று, மகஇக குண்டர்படை தயாரிப்புப் பிரிவு என்று எதுவும் நடத்துகிறதா?

குஜராதில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் என்ன, மோடியும் இந்துத்துவ ரவுடிகளும் பூப்பந்து விளையாட்டின்போது இடையில் மாட்டி இறந்து போனார்களா?

//சிபிஎம்மை விமர்சிக்க அருகதை உண்டா?//

இந்த ஒரு வரி போதும்யா, ஒங்களோட கூட்டுக் களவானித்தனத்த அம்பலப்படுத்த.
(மேலும் தோழர் கார்க்கி மிக அற்புதமாக இதனைக் கோடிட்டுக் காட்டி அம்பலப்படுத்தியிருக்கிறார்.)

//தற்போது வன்முறை வழியை விட்டுவிட்டு, மக்களிடம் பிரச்சாரம், பாராளுமன்ற வழியில் உடனடி மக்கள் பிரச்னைகளை தீர்ப்பது என்று இறங்கியுள்ளார்கள்.///

எந்த வழியிலயாவது போய்த் தொலைக்கட்டும். தாம் ஆளாத மாநிலங்களில் மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதுவும்!!!, ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்களைத் தீர்பதுவும் எவ்வளவு அற்(ப)புதமான கொள்கை போங்கள்.

// அதனை அவர்கள் "இந்திய சூழ்நிலைக்கு" ஏற்ப நடைமுறைக்கு கொண்டுவருவது என்று கூறுகிறார்கள். ///

அதாவது பனம்பழம் கனிந்து விழும்போது காக்கையைப் போல வருவார்கள், அப்படித்தானே?!

///அவர்கள் வன்முறையில் இறங்கினால், அவர்களது குற்றங்களை இந்தியாவின் நீதிமன்றங்கள் விசாரிக்கவேண்டும். தண்டனை வழங்கப்பட வேண்டும்.//

நீதிமன்றம் என்ன பரம யோக்கியமா? வெறும் நாற்பதாயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, குஜராத் மாநில அகமதாபாத் நீதிமன்ற நீதிபதி இந்திய ஜனாதிபதிக்கே (ஜனாதிபதியின் யோகியதை ஒருபுறம் இருக்கட்டும்) வாரண்ட் பிறப்பிக்கவில்லையா?

அரசியல்வாதிகள் அதிகாரிகளைக்காட்டிலும் லஞ்சத்தில் ஊறித்திளைப்பவர்கள் இந்த நீதிபதிகள் என்பது பல கோணங்களில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சொல்லும் தீர்ப்பைத்தான் மதிக்கவேண்டுமாம்.

///நக்ஸல்கள் செய்யும் கொலைகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லத்தயாரா?///

இந்திய ஆளும்வர்க்க ஆதரவோடும், இந்துவெறி பாசிசவாதிகளின் ஒத்துழைப்போடும் செயல்பட்டுவரும் ரண்வீர்சேனா குண்டர்களையும், சல்வாஜூடும் குண்டர்களையும் கண்டிக்க நீங்கள் தயாரா அம்பி?

அப்பாவி மக்களைக் கொன்று குவித்துவிட்டு நக்சல்கள்தான் செய்ததாக ஜோடிக்கும் இந்த பேடிகளைப் பற்றி உமக்குத் தெரியுமா அம்பி? இவர்களை அம்பலப்படுத்தியதற்காக தண்டிக்கப்பட்ட 'பிநாயக்சென்' என்பவரைப்பற்றியாவது தெரியுமா?

ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார கும்பல் பொதுமக்களை (அவர்கள் இந்துவானாலும் முசுலீமானாலும்)கொன்று குவித்ததை தெகல்கா அம்பலப்படுத்தியதே, அதைக் கண்டிக்கத் துப்பில்லாத நீ, நக்சல்களைப் பற்றி பேசலாமா?
(நக்சல்கள் மீதான எமது விமர்சனங்களை மேலேயுள்ள annoy தோழர் எளிமையாக சுட்டியிருக்கிறார், கவனிக்கவும்.)

///இல்லாத பொற்காலத்துக்காக பிரச்சாரம் செய்வது மன்னிக்கக்கூடியது. இல்லாத பொற்காலத்துக்காக இன்று இருக்கும் ஆட்களை கொல்லுவது மன்னிக்கவே முடியாதது. //

உன்னைப் பொறுத்தவரை அது இல்லாத பொற்காலமாகவே இருக்கலாம், அதுபற்றி நீ மல்லுகட்டிக்கொண்டு எழுதித் தீர்ப்பது ஏன்? அதற்குபதில் நீ, இப்போ இருக்கிற இந்துவெறி பாசிசத்தையும் கொஞ்சம் எழுதிக் கிழிக்கலாமே!? நீ எழுதமாட்ட ஏனென்றால் அதில்தான் உனது பூணூல் இழைப் பின்னல் ஒளிந்திருக்கிறது.

///மேலும் நான் ஏற்கெனவே விவாதத்தில் கலந்துகொள்ள சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அவரை நீங்கள் நிர்பந்திக்க முடியாது. எந்த நேரத்தில் கலந்துகொள்ளவேண்டும், எந்த நேரத்தில் தன் தனிப்பட்ட வேலையை பார்க்கவேண்டும் என்று அவருக்கு தெரியும் அல்லவா?///

இதை அவரே சொல்லலாமே, நீர் என்ன அவருக்கு எடுப்பாடா அம்பி?

///ஆகவே விவாதத்தில் கலந்துகொள்ள என்ன முறைகள், எவ்வாறு அவதூறுகள் இல்லாமல் விவாதிப்பது என்பதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். வெறும் அவதூறுகளும் அசிங்கமான திட்டுகளுமே விவாதங்கள் ஆகாது. அது உங்கள் பக்கம் ரொம்ப வீக் என்னும் எண்ணத்தைத்தான் படிப்பவர்களின் மனத்தில் தோற்றுவிக்கும்.///

இதப்பத்தி நீ சொல்றதுதான் வேடிக்கை. பழைய அனானி, பஞ்சாங்க அனானி, பொறுக்கி அனானின்னெல்லாம் பெயர் வச்சிக்கிட்டு நீரே வந்து அவதூறு பிரச்சாரங்களை போட்டுக் கொள்வது, மிகவும் யோக்கியமான விவாதத் தந்திரமாடா அம்பிகளா?
விவாதத்தைப் பற்றிப் பேச ஒங்க கூட்டத்துக்கு எதுவும் யோக்கியதை உண்டா?
மொதல்ல நீ சம்பூகனின் கேள்விக்கு போயி பதிலச்சொல்லிட்டு வாடா அம்பி,
பொறவு பேசுவோம் நெறயா.

ஏகலைவன்.

said...

நண்பர் ஏகலைவன்,

எல்லா பதிலும் சொல்லியாகிவிட்டது. பதில் சொல்ல நீங்கள்தான் பாக்கி

//ரண்வீர்சேனா குண்டர்களையும், சல்வாஜூடும் குண்டர்களையும் கண்டிக்க நீங்கள் தயாரா அம்பி?
/

நிச்சயம் தயார். எந்த கொலையும் கண்டிக்கப்படவேண்டியதுதான்.

சரி
நீங்கள் போல்போட், லெனின், ஸ்டாலின், மாவோ போன்றோர் செய்த கொலைகளை கண்டிக்க தயாரா?

முதலில் அவற்றை கண்டித்து அறிக்கை விடுங்கள்.
பிறகு பார்க்கலாம்.

Anonym said...

தமிழ்மணி,

ஏகலைவன் தொடர்ந்து பார்ப்பன மொழியிலும், "அம்பி" என்று ஏசியும் தொடர்ந்து உங்களை அவதூறு செய்துவருகிறார். நீங்கள் மிகவும் நாகரிகமாக அதனை உதாசீனம் செய்து பதில் எழுதிவருகிறீர்கள்.

நீங்கள் ஒரு பார்ப்பனராக இல்லாமல் இருப்பதால், அது உங்களுக்கு பெரியதாக தோன்றாமல் இருக்கலாம்.

ஆனால், இவ்வாறு பேசுவது, பிறப்பின் காரணமாக பிராம்மண குடும்பங்களில் பிறந்தவர்களை இழிவு படுத்துவது தமிழ்நாட்டில் வெகுகாலமாகவே நடந்துவருகிறது.

இவ்வாறு பிறப்பின் காரணமாக இழிவு படுத்துவதை தினந்தோறும் செய்துவரும் இவர்கள் உங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.

//பிறப்பை வைத்து மட்டும் ஒருவனை அவனுடைய சாதியைச் சொல்லி இழிவுபடுத்துவதுதான் பார்ப்பனீயத்தின் அடிப்படை. //

என்று சொல்லிவிட்டு அதே வரியில் அம்பி என்று பிறப்பை வைத்து சாதியை சொல்லி இழிவு படுத்தும் இவர்கள் யார்?

இவர்களிடம் விவாதம் செய்வதே தேவையற்றது. தெருநாய் குலைத்துக்கொண்டிருக்கட்டும் என்று விட்டுவிட்டு போய்விடவேண்டும்.

said...

தமிழ்,

இந்த ஆர்குட் இழையில் 'பெரியாரிஸமும் மார்க்ஸிசமும்' என்ற விவாததையும்
பாருங்களேன் :

http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=37515815&tid=2599080185670138181&na=1&nst=1

said...

தமிழ்மணியாகவும், அனானிகளாகவும் வந்து எழுதிக்கலக்கும் பார்ப்பனீய மணிகளே,

சட்டீஸ்கர் மாநில அரசின் ஆயுத/பொருளுதவிகளைப் பெற்றுக் கொண்டு செயல்படும் கூலிப்படையான சல்வாஜூடும் குண்டர்கள், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொண்று குவித்துவிட்டு, பழியை நக்சல்களின் மேல் திருப்பிவிடுகிறது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்த உண்மை.

அப்பேர்ப்பட்ட கொலை பாதகர்களை 'Peace Misson' என்று பெருமை பொங்க பேசும் 'Wikipedia'வின் கருத்துக்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் உங்கள் கூட்டத்தோடு எதை விவாதிப்பது?

said...

நண்பர் ஏகலைவன்,

முதலில் எந்த அடிப்படையில் இந்த அரசியலை நடத்துகிறீர்களோ அந்த அடிப்படையை பற்றி பேசுவோம்

அது சரியானதா, அது அறிவியற்பூர்வமானதா என்று பேசுவோம்.

பிறகு இன்றைய பிரச்னைகள் அதனை தீர்க்கும் வழிகள் என்று பேசுவோம்.

உங்களது தீர்ப்பும், பிரச்னையை புரிந்துகொள்ளும் உங்களது அடிப்படைகளும் குப்பை என்பதுதான் இந்த தளத்தின் வாதம்.

said...

///முதலில் எந்த அடிப்படையில் இந்த அரசியலை நடத்துகிறீர்களோ அந்த அடிப்படையை பற்றி பேசுவோம்

அது சரியானதா, அது அறிவியற்பூர்வமானதா என்று பேசுவோம்.

பிறகு இன்றைய பிரச்னைகள் அதனை தீர்க்கும் வழிகள் என்று பேசுவோம்.///

எல்லாவற்றையும் விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம், தொடர்ந்தும் விவாதிப்போம். ஆனால் அதற்கு முன்பாக உமது பார்ப்பன முகமூடியை, பொதுப்புத்தியிலிருந்து பேசுபவனாக சொல்லிக்கொள்வதைச் சற்று கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் பிறகு பேசுவோம். அல்லது உமது பார்ப்பன பயங்கரவாத பின்புலத்தை அம்பலப்படுத்துகிற சம்பூகனின் கேள்விகளுக்காவது அறிவு நாணயத்தோடு பதில் சொல்லிவிட்டு வாருங்கள், பிறகு பார்ப்போம்.

அதைவிடுத்து நீர் எவ்வளவுதான் சந்திப்பின் துணை கொண்டு கம்யூனிசத்தை வசைபாடினாலும், அவை மேலும் மேலும் உமது பார்ப்பன அரிப்பையே வெளிக்காடுவதாகவேதான் இருக்கும்.

///உங்களது தீர்ப்பும், பிரச்னையை புரிந்துகொள்ளும் உங்களது அடிப்படைகளும் குப்பை என்பதுதான் இந்த தளத்தின் வாதம்.///

நீரும் உமது பார்ப்பனீயத்தில் ஆழத் தோய்த்தெடுத்த கம்யூனிச அவதூறுகளும், சம்பூகனின் பதிலடிக்குப் பிறகு குப்பைத்தொட்டியிலேதான் வீசப்பட்டிருக்கின்றன, இந்த லட்சனத்துல இதுவேற, த்த்தூ....

ஏகலைவன்.

said...

நன்றி சம்பூகன்,

உங்கள் இஷ்டம்.

நான் கழற்ற எந்த முகமூடியும் இல்லை. நான் ஏற்கெனவே எழுதிவிட்டேன்.

எல்லா பயங்கரவாதங்களையும் எதிர்க்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

ஆனால், இன்னும் உங்களிடமிருந்து ஒரு வார்த்தையாவது கம்யூனிஸ பயங்கரவாதங்களை எதிர்த்து வரவில்லை.

மனிதர்களின் உயிர் உங்களுக்கு அவ்வளவு மதிப்பில்லாமல் இருக்கும்போது உங்களுடன் பேசுவதும் வீண்.

நன்றி

said...

//மனிதர்களின் உயிர் உங்களுக்கு அவ்வளவு மதிப்பில்லாமல் இருக்கும்போது உங்களுடன் பேசுவதும் வீண்.///

அதைப் பற்றித்தான் நானும் எழுதிவருகிறேன். தமிழ்மணி என்கிற பெயரில் எழுதிவரும் நீங்கள் இந்துத்துவ பயங்கரவாதி என்பதையும், ஆர்.எஸ்.எஸ்.சின் கூஜா தூக்கிகள் என்பதையும் வெளிப்படையாக ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியாகி விட்டது. அதை மறுக்கத் திராணியற்ற நீங்கள் கம்யூனிசம் என்று அரற்றுவதன் உள்நோக்கம் இங்குள்ள அனைவருக்கும் (உமது பார்ப்பன டும்மி கும்பலைத்தவிர) தெளிவாகவே தெரியும்.

குஜராத்திலும், பம்பாய், கோவை குண்டுவெடிப்புகளிலும் பலியான அப்பாவிகளையும், அவற்றில் பலியான உயிகளெல்லாம் என்ன ஆடுமாடுகளா? ஏன் அவற்றைப்பற்றியும் விவாதிப்போமே?!

உமது பேராதரவு பெற்ற நேபாள இந்து ராச்சியதின் மன்னரால் கொலைசெய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் பட்டியலை மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ளார்களே, உமது மன்னர் என்ன கம்யூனிஸ்டா?!

மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ என்று நீளும் எமது கம்யூனிசத் தலைவர்களை, ஏகாதிபத்திய முதலாளிகளின் கையாளாக வெளிப்படையாக செயல்படும் wikipediaவை கையில் வைத்துக் கொண்டு, ஆஹா கம்யூனிஸ்டுகள் மக்களைக் கொண்றுவிட்டார்கள் பாருங்கள் என்று நீர் ஒப்பாறி வைப்பது மிகுந்த கேலிக்கூத்து.

ஸ்டாலின் ஆட்சியின் போது களையெடுக்கப்பட்ட துரோகிக் கும்பலை, அவர் ஏதோ ஒரு இரவில் வைத்து முடித்து விடவில்லை. அதற்கு 'மாஸ்கோ விசாரணை" எனும்பேரில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையிலும், உலகின் பல முன்னனி பத்திரிக்கையாளர்களின் முன்னிலையிலும்தான் விசாரணை முடிக்கப்பட்டு, அங்கேயே தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த மாஸ்கோ விசாரணையில் பங்கெடுத்த அமெரிக்க, பிரிட்டன் பத்திரிக்கையாளர்கள் பலர் அப்போதே தத்தமது பத்திரிக்கைகளில் குறிப்பிட்டு எழுதியும்விட்டனர்.

சும்மா நீர் இங்கே வந்து அங்கப்பாரு வெள்ளக்காக்கா பறக்குதுன்னு சொல்லுவ, அதயே நானும் வழிமொழியனுமா? அதுக்கு அடிப்படை அரசியலற்ற சந்திப்புங்கிற கேனை வேனா ஒம்பின்னாடி வரும், வேறுயாரும் உமது கருத்துக்களை ஆமோதிக்க மாட்டார்கள்.


ஏகலைவன்.

said...

நன்றி நண்பர் ஏகலைவன்,

கொலை செய்பவர்கள் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் அல்ல.

ஆனால் கம்யூனிஸ்டுகள் எல்லோருமே மற்ற எந்த கொலைகாரனை விடவும் அதிகமாக கொலைகள் புரிந்தவர்கள். காரணம்?

தான் செய்வது எதிர்கால பொன்னுலகம் என்னும் ஆம்லட்டை உருவாக்குவதற்காக இன்று ஏராளமான முட்டைகளை உடைக்கலாம் என்று நீங்களே வைத்துக்கொண்டுள்ள கொள்கை!


இந்த பக்கத்தின் மேலே ஸ்டாலின் நடத்திய பஞ்சத்தின் விவரம் இருக்கிறது. இது விக்கிபீடியா சமாச்சாரம் அல்ல.

உக்ரேன் மக்களே தங்களுக்கு நடந்த அவலத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

லெனினின் ஆவணங்கள் மாஸ்கோவாலேயே வெளியிடப்பட்டிருக்கின்றன.

மாவோவின் அராஜக போக்கை சீனாவே வெளியிட்டிருக்கிறது. மாவோவின் காலத்தில் சீனாவில் நடத்தப்பட்ட பெரும் பஞ்சத்துக்கு காரணம் தவறான சிந்தனைகள் என்பதை சீனாவே ஒப்புக்கொண்டுள்ளது.

அதற்கான ஆவணங்கள் வெளியிடப்பட்ட்டுள்ளன.

இவை விக்கிபீடியாவில் ஏதோ செருகப்பட்டுள்ள பொய்த்தகவல்கள் அல்ல.

ஸ்டாலின் அராஜகத்தையும் அசிங்கத்தையும் குருச்சேவும், அவருக்கு பின் வந்தவர்களும் அப்போதே வெளியிட்டுவிட்டார்கள். இது கம்யூனிஸ்டுகளான குருச்சேவ் அமெரிக்காவின் காசு வாங்கிக்கொண்டு வெளியிட்ட தகவல்கள் அல்ல.

அவற்றை எல்லாம் பொய்த்தகவல்கள் என்று கூசாமல் சொல்லும் நீங்கள் ஒரு ஆச்சரியமான பிரகிருதி!

போல்போட்டின் அராஜகம் இன்று எலும்புக்கூடுகளாக மியூஸியமாகி இருக்கிறது.

கண்ணின் முன்னால் இவ்வளவு நடந்தும் கூசாமல் கம்யூனிஸம் பேசும் உங்களிடம் இன்னும் என்ன சொல்வது?

செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளக்கூட மனமில்லை உங்களுக்கு.

said...

தமிழ்மணி அய்யா,
நம் நாட்டில் என்று மக்கள் புரட்சி வெடித்து,போலி கம்யூனிஸ்ட் பொறிக்கி வெறி நாய்களான ம க இ க போன்ற நக்சல் கும்பலும்,உண்மையான ஒரிஜினல் கம்யூனிஸ்ட் பொறிக்கி நாய்களான சி பி எம்,சி பி ஐ கும்பலும்,விரட்டப்பட்டு நாடு தூய்மைப் படுத்தப்படும்?

பாலா

said...

நீர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் டிராட்ஸ்க்கி ,குருஷேவ் என நீளும் ஏகாதிபத்திய கைக்கூலிகளின் பட்டியல் வெகு நீளமானது, அது சீனாவின் இன்றைய முதலாளித்துவ கம்யூனிஸ்ட்!! கட்சியின் தலைமைவரை விரிவடைகிறது. தமக்குப் பிஸ்கட் போடும் முதலாளிகளுக்கு வாலாட்டும் நாய்களாகத்தான் அவர்களும் இருந்துள்ளனர். அது மாஸ்கோவானாலும் சரி, சீனாவானாலும் சரி.

முதலாளித்துவத்தின் பேரிரைச்சல்களுக்கு இடையிலேயும், இப்பேர்ப்பட்ட கைக்கூலி அரசியலும் காலத்தால் மிகவும் உறுதியாகவே பதிவு செய்யப்படுள்ளது.

பார்ப்பன டும்மிமணியாகிய உன்னை, மதவெறியினைத் தூண்டி, ஆயிரமாயிரம் அப்பாவி உழைக்கும் மக்களைக் கொன்று குவிக்கும் இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளைக் கண்டிக்காதது ஏன்? என்று கேட்டால், "கொலை என்பதை யார் செய்தாலும் நான் கண்டிக்கிறேன்" என்கிற உனது பசப்பல் வாதம் எப்படிப்பட்டது?

பண்டைக்கால மன்னர்களுக்கும், இப்போதைய ஏகாதிபத்திய/முதலாளிய மன்னர்களுக்கும் மாமா வேலை பார்ப்பதையே பெரிய நிர்வாகத் தந்திரமாகச் சொல்லிக் கொள்ளும் பார்ப்பன, பனியாக் கும்பல், தமக்குள் நடத்தும் அதிகாரப் போட்டியின் விளைவுதான் இந்த கேடுகெட்ட மதவெறியாட்டம்.

இந்தக் கேவலத்திலிருந்து உழைக்கும் சாதாரண மக்களை மீட்க களத்தில் நின்று போராடும் புரட்சியாளர்களை, பார்ப்பனீய, போலிகம்யூனிச முகாமைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பதுவும் தூற்றுவதும் மிகவும் சரியானதே.

பெரியாரைப் பார்ப்பான் கடுமையாக வசைபாடவேண்டும் என்பதில்தான் பெரியாரின் வெற்றி அடங்கியிருக்கிறது. ஏகாதிபத்திய முதலாளிகளின் கைக்கூலிகளும் பார்ப்பனிய பயங்கரவாதிகளும் கீழ்மைப் படுத்துவதில்தான் நக்சல்பாரிகளான எமது மேன்மை அடங்கியிருக்கிறது.

சிபிஎம்மின் போலித்தனமும் 'கோமாளி'சந்திப்பின் முற்போக்கும், பார்ப்பனீயக் கும்பலைச் சேர்ந்த உம்மோடு நட்பு கொண்டதனால்தான் அம்மனமாக நிற்கிறது.

சொகுசான வாழ்க்கையும், மூனுவேளைச் சோறும் கிடைத்துவிட்ட திமிரில், உனது கவலையெல்லாம் 'கம்யூனிச சமூகத்தில் கார் ஓடுமா?' என்பதையே சுற்றிச் சுற்றி வருகிறது. ஆனால் ஒருவேளை சோறு கூட இல்லாத, ஒதுங்க ஒரு நிழல் கிடைக்காத, இந்திய மக்கள் தொகையில் சரிபாதி உழைக்கும் மக்கள், இந்த கேடுகெட்ட சமூகம் ஒழியாதா என்றுதான் ஏங்குகிறார்கள்.

இவர்களை மதமெனும் வலைக்குள் சிக்கவைத்து பன்னாட்டு/இந்நாட்டு முதலாளிகளுக்கு பலிகொடுக்கத்தான் அனைத்து மதங்களுமே அலைந்துகொண்டிருக்கின்றன. காலைச் சுற்றும் பாம்பாக உழைக்கும் மக்களை வளைத்து நிற்கும் இந்த பாசிச மதவெறி நிறுவணங்களை இல்லாதொழிக்கிற போராட்டத்தில் முன்னிற்கும் கம்யூனிசத்தை இழிவுபடுத்த முதலாளிகள் தங்கள் ஏவல் நாய்களின் மூலமாக அவதூறுகளைப் பரப்பிவருவது வரலாறு நெடுகிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

எதிர்கொள்வோம் வெல்வோம்!
ஏகலைவன்.

said...

நண்பரே,

கம்யூனிஸ அமைப்பில் கார் இருக்குமா என்ற கேள்வி ஒரு thought experiment. அதற்கு பதிலாக நீங்கள் வேறு எந்த வாகனமும் வைத்துக்கொள்ளலாம்.

அந்த கேள்வி கம்யூனிஸ சமுதாயத்தில் எப்படி சட்டங்களை உருவாக்குவீர்கள், எப்படி அமல் படுத்துவீர்கள், சட்டங்களை மீறியவர்களுக்கு என்ன தண்டனை தருவீர்கள் என்ற கேள்விகளை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கேள்வி.

அரசு உதிர்ந்துவிடும் என்று சொன்னீர்களே எப்படி அரசு உதிறும் என்பதனை ஆராய்வதற்காக கேட்கப்பட்ட கேள்வி.

அந்த கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் சொல்லப்படவில்லை என்பதனை மீண்டும் குறிக்கிறேன்.

கார் என்று ஒன்றே இல்லாமல் எல்லோரும் காலால்தான் நடந்து போகவேண்டும் என்று கம்யூனிஸ நாட்டில் சட்டம் போட்டாலும் இந்த கேள்விகள் எல்லாம் இருக்கும்.

சட்டம் என்பது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு தேவைப்படும் வசதிகளை தருவதற்கு அமைப்பு தேவைப்படுகிறது. பூகம்பம் போன்ற பேரிடர் காலத்தில் உதவுவதற்கு நாடு தழுவிய அமைப்பு ஒன்று தேவைப்படுகிறது. அதில் தொழில்நுட்பம் மேலாண்மை ஆகியவை தேவைப்படுகின்றன. மருத்துவமனை எங்கே எந்த இடங்களில் கட்டப்படவேண்டும் என்பவைகள் தீர்மானிக்கப்படவேண்டும். மக்களின் தேவை என்னவென்ன இருக்கின்றன என்பதை கண்டறிய அமைப்பு தேவைப்படுகிறது. இவை காலையில் மீன்பிடித்து மதியம் பியானோ வாசித்து மாலையில் அணு உலை விஞ்ஞானியாக இருக்கும் தனிப்பட்ட மனிதனை தாண்டிய விஷயங்கள்.

இப்படிப்பட்ட அமைப்புகளின் மேலாளராக யார் யாரால் நியமிக்கப்படுவார்கள்?

said...

//நீர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் டிராட்ஸ்க்கி ,குருஷேவ் என நீளும் ஏகாதிபத்திய கைக்கூலிகளின் பட்டியல் வெகு நீளமானது, அது சீனாவின் இன்றைய முதலாளித்துவ கம்யூனிஸ்ட்!! கட்சியின் தலைமைவரை விரிவடைகிறது. தமக்குப் பிஸ்கட் போடும் முதலாளிகளுக்கு வாலாட்டும் நாய்களாகத்தான் அவர்களும் இருந்துள்ளனர். அது மாஸ்கோவானாலும் சரி, சீனாவானாலும் சரி.
//

ஆக, சீனாவும் சோவியத் ரஷியாவும் வெளியே கொண்டுவந்த அத்தனை ஆவணங்களும் போலி என்று சொல்கிறீர்கள்.

இந்த ஆவணங்கள் தவிர பல கோடிக்கணக்கான மக்கள் தங்களது அனுபவங்களை பதிந்து எழுதிய புத்தகங்கள், அனைத்தும் போலி என்று சொல்கிறீர்கள்.

நீங்கள் மோடிக்கு வேலையாளாக போகலாம்.

said...

நண்பர் சந்திப்பு பதிவில் எழுதியது.

--

சல்வா ஜுடும் தவறான அடிப்படையில் உருவாக்கப்பட்ட தவறான அமைப்பு.

அதனை நீங்கள் ஆதரிப்பது அதிர்ச்சியை தருகிறது.

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மலைவாழ் பழங்குடியினர் ஆயுதம் ஏந்த வைப்பது தவறான முன்னுதாரணம். மாவோயிஸ்டுகளை கைது செய்யமுடியாத போலீஸின் கையாலாகாததனத்தை இப்படி மலைவாழ் மக்களின் உயிருக்கு ஆபத்தாக விளைவிக்கிறீர்கள்.

மாவோயிஸ்டுகள் சாதாரணமாக 10 மலைவாழ் மக்களை கொன்றால், இப்போது 1000 மலைவாழ் மக்களை கொல்வார்கள். இந்த கொலைகளுக்கு இந்த சல்வா ஜுடும் அமைப்பை ஆதரிக்கும் நீங்களும் குற்றவாளி ஆவீர்கள்.