Samstag, 19. April 2008

நேபாள மாவோயிஸ்டுகள்- அமெரிக்காவின் இன்னொரு முகம்


நேபாள மாவோயிஸ்டுகள் சேர்வதும் பிரிவதும் நடந்து முடிந்து அதில் ஒரு குழு இன்று ஆட்சியை பிடித்துள்ளது.

ஆட்சியை பிடித்துள்ள மாவோயிஸ்டு பிரிவு ரிம் என்ற அமெரிக்க அமைப்பின் பணம், வளம் உதவி ஆகியவற்றோடு இன்று ஆட்சியை பிடித்துள்ளது.

ரிம் என்பது என்ன?

இது அமெரிக்க சி.ஐ.ஏவின் உதவியோடு உருவாக்கப்பட்ட ரெவலூஷனரி இண்டர்நேஷனலிஸ்ட் மூவ்மெண்ட் என்று கருதுகிறார்கள். நான் அப்படி கருதவில்லை. அமெரிக்க கம்யூனிஸ்டுகள் சிலரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பின்னால், சி.ஐ.ஏவால் உபயோகப்படுத்தப்படுகிறது என்று கருதலாம்.


இவ்வாறு அமெரிக்காவுக்கு விலை போன மாவோயிஸ்டுகள் பற்றி இதர மாவோயிஸ்டுகளின் புலம்பல் கீழே
http://monkeysmashesheaven.wordpress.com/2006/10/16/disband-the-rim/

இதே ரிம் அமைப்பில் உள்ள ஈரானிய மாவோயிஸ்டுகள் தற்போது ஈரானின் அரசுக்கு எதிராக அமெரிக்க உளவு நிறுவனங்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருவது ஊரறிந்த ரகசியம்.

ஏன் அமெரிக்கா மாவோயிஸ்டுகளுக்கு உதவ வேண்டும்? வியத்நாம் போரின் தோல்வியின் முடிவில் பல சிந்தனை போக்குகள் அமெரிக்க உளவு நிறுவனங்களில் இருந்திருக்கலாம். அவற்றில் ஒன்று, அமெரிக்காவே மாவோயிஸ்டுகளை உருவாக்கி அவர்கள் மூலம் தாங்கள் விரும்பும் நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அவர்கள் மூலம் அவற்றை அமெரிக்காவின் (அரை) காலனி நாடுகளாக ஆக்குவது.

இதற்காக தமிழகம் உட்பட பல இந்திய மாநிலங்களில் கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் பணம் கொட்டப்பட்டு அவை கம்யூனிஸ இயக்கங்களை தோற்றுவிக்க உதவின. கம்யூனிஸ அமைப்புகளுக்கு நேரடியாக பணம் உதவி செய்வது பல பிரச்னைகளை அமெரிக்காவுக்கு தோற்றுவிக்கும் என்பதால் இந்த வழிமுறை பின்பற்றப்பட்டது. 1980களில் இந்த முறையில் இங்கு வந்த பணத்தின் அளவும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட என்.ஜி.ஓக்களும் எண்ணிலடங்கா.

(மக இகவின் செயல்திட்டம், வரவு செலவு கணக்கு ஆகியவற்றை பொதுவில் வையுங்கள் என்று நான் கேட்பதன் காரணம் இதுதான்)

ஒரு புறம் அமெரிக்காவுக்கு எதிராக வாய்சவடால் அடித்துக்கொண்டே இருந்தாலும், ம க இ க போன்ற மாவோயிஸ்டு அமைப்புகளின் அடிப்படை நோக்கமே இந்திய ஜனநாயகத்தை உள்ளிருந்தே அழிப்பது. இந்திய ஜனநாயக அமைப்பின் பிதாமகர்களாக போற்றப்படும் தலைவர்களை தூற்றுவதன் மூலம், இந்திய ஜனநாயக அமைப்பின் அடிப்படை பிம்பங்களை உடைப்பது.

இதுவே காந்தியை கேவலப்படுத்துவது, பாரதியை கேவலப்படுத்துவது, நேருவை கேவலப்படுத்துவது, இந்திய கலாச்சாரத்தை கேவலப்படுத்துவது என்று திட்ட நோக்கில் செயல்படுத்தப்படுகின்றன.

இதன் பொருள் காந்தி, நேரு, பாரதி ஆகியோரை விமர்சிக்கக்கூடாது என்பதல்ல. காந்தி, நேரு பாரதி போன்றோரை படு கேவலமாக திட்டுவதன் மூலம் பிம்பங்களை உடைப்பது. இந்திய ஜனநாயகத்தை கேவலப்படுத்துவது. இந்திய ஜனநாயகத்தின் மூலம் பிரச்னைகளை தீர்க்க முடியாது என்று மக்களை நம்ப வைப்பது.

தான் ஒரு திறந்த புத்தகம் என்று தனது சுய சரிதையையும் அதில் தான் செய்த தவறுகள் உட்பட எழுதி வைத்த காந்தியை, அவர் எழுதி வைத்த தவறுகளினால் அவரை கேவலமாக திட்டுவது என்று செயல்படும் இவர்கள் தங்கள் செயல்திட்டத்தையோ, வரவு செலவு கணக்கையோ வெளியில் வைப்பதில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

காந்தியை விமர்சிக்கும் சிபிஎம், கண்ணியமான முறையில்தான் அவரை விமர்சிக்கிறது. ஆனால், கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களில் வளரும் தலித் சிறார்களிடம் காந்தியை கேவலமாக பாட்டுப்பாடி வெறி ஏற்றும் மக இக அமைப்புகள் செய்யும் வேலையை அது என்ன எதிர்பார்த்து இவ்வாறு செய்கிறது என்று கவனிக்க வேண்டும்.

இன்று பாராளுமன்றத்தில் தனது திட்டங்களை அரசு பேசுகிறது. அதன் திட்டங்களை எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன. பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெரும்பான்மை உள்ள கட்சி கூட பெரும்பான்மை மக்கள் விருப்பத்துக்கு எதிராக செயல்படாத ஒரு சூழ்நிலை இருக்கிறது.

ஆனால், மக இக போன்ற ரகசிய கட்சிகள், வன்முறை மூலம் தங்களை வலிமையாக்கிக்கொள்ளும் கட்சிகள், ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு பயப்படுவார்களா? நிச்சயம் மாட்டார்கள்.

சீன கம்யூனிஸ்டுகள் அமெரிக்காவின் காலில் விழுந்து கெஞ்சியபோது, சீன மக்களிடம் சீன கம்யூனிஸ்டு கட்சி அனுமதி கேட்டதா? நிச்சயம் இல்லை.

இதுதான் நேபாள கம்யூனிஸ்டுகளின் நிலையும். நேபாள மக்களின் நிலையும். நேபாள கம்யூனிஸ்டுகள் சொல்லும் ஒரு வார்த்தையையும் நம்ப முடியாது. அவர்கள் நேற்று சொன்னதை இன்று பின்பற்றுவதில்லை. இன்று சொன்னதை நாளை பின்பற்றபோவதில்லை.

கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் மூலம் பணம் பெற்று பலம் அடைந்த நேபாள கம்யூனிஸ்டுகள் மதச்சார்பற்ற அரசு என்று சொல்வதன் மூலம் மக்களை கிறிஸ்துவ மதமாற்றம் செய்யத்தான் போகிறார்கள். (நேபாளிகள் கிறிஸ்துவர்களாக ஆனால் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை). ஆனால் இதனை அவர்கள் வெளியே சொல்வதில்லை. இதுதான் பிரச்னை.

நீண்டகாலத்தில் நாகாலாந்து போலவும், மேகாலயா போலவும் கிறிஸ்துவ பெரும்பான்மை நிலங்களை இங்கு உருவாக்கி வைப்பது அமெரிக்காவின் பாப்டிஸ்டு அமைப்புகளின் நோக்கம். அதன் நீட்சியே சி.ஐ.ஏ உருவாக்கும் அமைப்புகள் (நாகாலாந்து தீவிரவாத குழுக்கள் ஒரே நேரத்தில் கம்யூனிஸம் என்றும் கிறிஸ்துவம் என்றும் பேசுவதை கவனிக்கலாம்)

சீனாவும் அமெரிக்காவும் இன்று வெளியே முனகிக்கொள்வது போல தோற்றமளித்தாலும் பொருளாதார சார்பினால், ஒருவரை விட்டு ஒருவர் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க தொழிலதிபர்களும் சீன கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் அவ்வளவு நெருங்கிய உறவு கொண்டுள்ளனர்.

அதனால்தான் பிரசண்டா தன்னுடைய பிரதிநிதியாக தன் மகன் பிரகாஷ் தஹாலை சீனாவுக்கு அனுப்பி வைக்கிறார். (புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியில் தன் மகனை விட வேறொருவரை பிரசண்டாவால் நம்ப முடியவில்லையா? அல்லது அங்கும் வம்சாவளி அரசியலா? மக இக ஆட்கள் பதில் கூறலாம்). சீனாவின் தற்போதைய ஆளும் வர்க்கம் அனுமதி தந்தால்தான் நேபாளில் எந்த செயலையும் மாவோயிஸ்டுகளால் செய்ய முடியும். அது கிடக்க, என்னிடம் கேட்டால், தற்போதைய நேபாள அரசர் ஆட்சியா, மாவோயிஸ்டுகள் ஆட்சியா என்று கேட்டால் மாவோயிஸ்டு ஆட்சியே என்று சொல்லிவிடுவேன். அது வேறு விஷயம். ஆனால், மாவோயிஸ்டுகளின் ஆட்சியின் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட துயரத்தை நேபாளிகள் அடையப்போகிறார்கள் என்ற எதிர்காலம் எனக்கு தெரியாது. ஆனால், கம்யூனிஸ்டு ஆட்சிகளின் பழைய கணக்குகளை எடுத்து பார்த்தால் எந்த வித நம்பிக்கையும் எனக்கு கிடையாது.

இதனையும் பாருங்கள்

அவர்களின் நீண்டகால திட்டங்களில் பலியாகப்போகும் ஏராளமான நேபாளிகளுக்காக நான் இன்று சிந்தும் கண்ணீரை தேக்கி வைத்து நாளை பலியாகப்போகும் ஏராளமான இந்தியர்களுக்காகவும் சிந்த வேண்டும்.

-
உபரி:

ரிம் அமைக்கும் வளையத்தை பாருங்கள்.
http://revcom.us/i/graphpage/rimmap.htm



இந்தியாவை சுற்றியும் எப்படி ஒரு வளையம் அமைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக பார்க்கலாம். வடக்கில் நேபாளம். கிழக்கில் பங்களாதேஷ், மேற்கில் ஆப்கானிஸ்தானம், தெற்கில் இலங்கை ஆகிய நாடுகளில் ரிம் ஆதரவுடன் மாவோயிஸ்டு கட்சிகள் தங்களை விஸ்தீரணம் செய்துகொண்டுள்ளதை பார்க்கலாம். இந்தியாவுக்குள்ளும் ரிம் ஆதரவு அளிக்கும் மாவோயிஸ்டுகள் இயங்குகிறார்கள். ஆனால், வெளிப்படையாக அதனை இப்போது எழுதுவதில்லை.

அடுத்து இந்த ரிம் அமைப்பின் ஆதரவில் இயங்கும் எல்லா நாடுகளும் (இத்தாலி ஒன்றைத்தவிர) மூன்றாம் உலக நாடுகளிலேயே இயங்குவதையும் பார்க்கலாம்.

மூன்றாவது, ஈரானில் உள்ள ரிம் ஆதரவு மாவோயிஸ்டு கட்சி தற்போது அமெரிக்கா ஈரானில் தாக்குதல்களை நிகழ்த்த ஆதரவுடன் இயங்குகிறது. இதனை விமர்சித்து ஒரு இந்திய மாவோயிஸ்டு பேசியிருப்பதைத்தான் மேலே இணைப்பில் பார்த்தீர்கள்.

நான்காவது திபெத் பிரச்னையில் பிரசண்டாவின் கட்சி தெளிவாக சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது ஆச்சரியத்துகுரியதில்லை என்றாலும், இது மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவளிக்கும் சக்திகளின் எதிர்பார்ப்பை பிரசண்டா கட்சி பொய்க்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். திபெத் பிரச்னை இந்தியாவின் பிரச்னை. திபெத் பிரச்னை அதிகரித்து அது சீனாவிலிருந்து பிரிவதை பல மேற்கு சக்திகள் விரும்பவில்லை. சீனாவுக்கு திபெத் ஒரு தொந்தரவு தரும் நிலையில் இருப்பதைத்தான் அவைகள் விரும்புகின்றன. திபெத் பிரச்னை தீவிரமடைந்தால், மேற்கு நாடுகளின் உற்பத்தி தொழிற்சாலையாக இருக்கும் சீனாவின் நிலை மோசமடைந்தால், மேற்கு நாடுகளின் வளமை பாதிக்கப்படும். அதனை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. திபெத் தனிநாடாக ஆனால், அது இந்திய ஆதரவுடன் இருக்கும் என்பதால்தான் இடையே செருகப்படும் கத்தி போன்று நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் ஆட்சி.

அப்போது திபெத்துக்கு ஒரு பக்கத்தில் சீனாவும் மறு பக்கத்தில் நேபாளும் இருந்து நெருக்கலாம். மேலும் நேபாள் மூலமாக இந்தியாவையும் தொந்தரவு செய்யலாம்.

இதெல்லாம் புரியாமல் விரல் சப்பிக்கொண்டு புரட்சி கனவு காணும் இந்திய மாவோயிஸ்டுகளை பார்த்து ஒரு பக்கம் பரிதாபம் பட்டாலும் மறுபக்கம் இதெல்லாம் புரியாத ஒரு கூட்டம் இந்தியாவையும் ஆண்டுகொண்டிருக்கிறதே என்று கோபமே படவேண்டியிருக்கிறது.

இந்த ஏகாதிபத்திய நாடகங்கள் மூலம் துன்பத்தை அடையும், அடையப்போகும் நேபாள மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் கண்ணீர் சிந்துவதன்றி என்னாலும் என்ன செய்ய முடியும்?

26 Comments:

Anonym said...

A1
you should write in English.

said...

//இதெல்லாம் புரியாத ஒரு கூட்டம் இந்தியாவையும் ஆண்டுகொண்டிருக்கிறதே என்று கோபமே படவேண்டியிருக்கிறது.//

தமிழ்மணி அய்யா,

ஒரு கூட்டம் ஆண்டு கொண்டிருக்கிறதே என்று தப்பா சொல்லாதீங்க.இத்தாலிகாரியும்,மஞ்சதுண்டும் இந்தியாவை விற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தின் தலைவர்கள் ஆவர்.தவறை திருத்திக் கொள்ளுங்கள்.

பாலா

said...

நன்றி அனானி
உங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றி

Anonym said...

ஆப்கானிஸ்தானில் தாலிபான் - ரஷ்ய யுத்தத்தின் போது ஒரு அமெரிக்க அதிகாரி இந்தியா டுடேவிடம் சொன்னார் " மக்கள் பத்திரிக்கை மூலம் அறிவது பூராவும் நாங்கள் விடும் புருடாக்களைத்தான். உண்மையை சிஐஏ மட்டும்தான் அறியும்".

உங்கள் யூகம் முழு உண்மையாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம். ஆனாலும் அமெரிக்க திருவிளையாடல்கள் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

உங்கள் யூகம் முழு உண்மையாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம். ஆனாலும் அமெரிக்க திருவிளையாடல்கள் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

said...

Thanks Bala

said...

Thanks anony

Mine is not yoogam.

said...

No Thamiz,

I don't belvie Ma.Ka.I.Ka is funded by US / CIA. They are a poor and struggling outfit with pitable fund postion. Anyway their reach and influnce is very limited.
and most of its members are poor and mis-guided idealists ; mostly youth and not many members over age 45. the raw idealism of the youth. that is all..

May be CPI / CPM gets the funding :)))) to continue as pollis !!

said...

நண்பர் அதியமான்,

மக இகவில் உள்ள தொண்டர்களில் (அல்லது தோழர்கள்!) பெரும்பாலோர் அப்படிப்பட்ட ஏழைகள் என்பது உண்மையாக இருக்கலாம். திமுகவின் தொண்டன் ஏழையாக இருந்தாலும் திமுக தலைமையோ அல்லது திமுக கட்சியோ பஞ்சை பண்ணாடை கட்சி என்று கூறிவிட முடியுமா?

நான் 1980களிலிருந்து தீ. கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகளை பார்த்து வந்திருக்கிறேன்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது மக இக தலைமைக்கு புரியும்.

Anonym said...

அன்புள்ள எழில்,
இங்கே ஆணித்தரமான விவரங்களை கொடுத்துள்ளீர்கள். அதிர்ச்சியாக இருக்கிறது.

இங்கே மக இக மட்டுமல்ல, இந்த பார்வையில் சிபிஎம், சிபிஐ போன்றவை சீனாவுக்கு பிரச்சார பீரங்கி போல இந்தியாவில் செய்ல்படுகின்றன. அதன் இந்து பத்திரிக்கை இந்தியாவில் இந்தியாவை பற்றியே விஷம் பரப்புகிறது. சீனாவில் பாலும் தேனும் ஓடுவதாக புளுகுகிறது.

காங்கிரஸ் தலைமை பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது?

இந்திய மக்கள் இன்னொரு காலனியாதிக்கத்துக்கு தூங்கிக்கொண்டே சென்று மாட்டிக்கொள்ள இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவு

said...

உங்கள் கருத்துக்கு நன்றி ராஜேஷ்.

Sleepwalking into another Colonial rule என்பதை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் விவாதிக்கலாம் வாருங்கள் என்று அழைத்து விவாதிக்கும்போது தாங்கள் தோற்கிறோம் என்றதும், என்னை கேவலமாக திட்டிவிட்டு ஓடினார்கள். என்னுடைய பதிலைக்கூட அவர்களது பதிவில் அனுமதிப்பதில்லை. இவர்கள் நண்பர் சந்திப்பை விவாதத்துக்கு அழைக்கிறார்களாம்.

இதில் கேவலம் என்னவென்றால், ஏகாதிபத்தியத்துக்கு விலை போவதாக இந்திய கட்சிகளை குற்றம் சாட்டுபவர்களின் பின்னே இருப்பதே ஏகாதிபத்தியத்தின் பணம் தான் என்பது. அமெரிக்க கிறிஸ்துவ தொண்டு நிறுவனன்ங்களில் வழியே கொட்டப்படும் பணத்தில் கம்யூனிஸம் வளர்ப்பதாய் பம்மாத்து பண்ணுவதை எதிர்த்து வெளியே வந்தவர்கள் ஏராளம். காசுக்காக கும்மி அடித்துக்கொண்டு கிறிஸ்துவம், கம்யுனிஸம் என்று கும்மி அடிப்பவர்கள் ஏராளம். இதில் வாங்கும் காசை வாங்கிக்கொண்டு அங்கங்கு தொழில்களில் மூதலீடு செய்து தொழிலதிபர்கள் ஆன முன்னாள் நக்ஸல் கம்யுனிஸ்டுகளும் அடக்கம்.

இங்கே எவனோ காசு பண்ணுகிறான். வேறெவனோ போராட்டம் பண்ணி சாகிறான்.

Anonym said...

நேபாள மாவோயிஸ்ட்டுகளை - சிறுமைப்படுத்த அவர்களை அமெரிக்காவின் முகம் என்கிறபோது தெரிகிறது கவலைக்கொண்ட உங்களின் ‘காவி' முகம்..

உலகில் இருந்த ஒரே இந்து நாட்டுக்கு ஆப்பு வைத்த - அகண்ட பாரத கணவுக்கு வேட்டு வைத்த நேபாள மாவோயிஸ்ட்டுகளின் வெற்றி - இந்தியாவிலும் தொடரும்..

அமெரிக்காவிலிருந்து காசு வரவில்லையென்றால் - வந்தேறி சங்பரிவாரிகள் - கால் நடைகளை ஒட்டிக்கொண்டு ‘கைபர்' ‘போலன்' வழியாக செல்லவேண்டியதுதான்...

புரட்சி ஓங்குக..புரட்டு ஒழிக..

said...

தமிழ்மணி அய்யா,

அய்யோ, என்ன ம க இ க கும்பல் அமெரிக்காவிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு நாட்டை கூட்டி கொடுக்கிற வில்லன் பார்ட்டிகளா?நான் இந்த மூஞ்சிங்க ஏதோ சாதரண வில்லனோட அடியாட்கள்னு நினைத்திருந்தேன்.நீங்க என்னாடான்னாக்க இவங்க அலிஸ்டர் மக்லீன் கதையில வர்ர சூப்பர் வில்லன் பார்ட்டீங்க மாறின்னு ,வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

தோழர் மருதையன்,அசுரன்,சம்பூகன்,பனியன் தியாகு,ஸ்பார்ட்டகஸ்,ஏகலைவன் போன்ற ஆசாமிகள் அமெரிக்க சி ஐ ஏ வின் கூலிகளா?கடைசியில் அமெரிக்க ஏகாதிபத்ய திராவிடீயத்தின் அடிவருடிகளா?இவங்க கேவலமான பொறிக்கி கும்பல்னு ஓரளவுக்கு தெரிந்திருந்தாலும்,இவ்வளவு மோசமான பார்ர்டீங்கன்னு யாருக்கும் தெரியாம டிராமா போடறாங்களே,இவங்க படே கில்லாடிதான்.இங்க என்னடான்னாக்க இவிங்க எம் மக்களை மிரட்டி சந்தா வசூல் செய்து ஓசி சிகரெட்/சாராயம்/பிரியாணி அடிப்பது ஒரு பக்கம்;இன்னொரு பக்கம் அமெரிக்க திராவிடீயமிருந்து, கோடி கோடியா பணம் வாங்கிக் கொண்டு இந்தியாவுக்கு ஆப்பு வைப்பது.எம காதகனுங்க இந்த ஏகலைவன் கும்பல்.

பாலா

Anonym said...

அய்யோ பவம்..நேபாள மாவோயிஸ்ட்டுகள்.. இப்படி பொலம்ப விட்டுவிட்டானுகளே.. தங்களின் வயிற்றெரிச்சல் புரிகிறது..
தயவு செய்து தூக்கு மாட்டிக்கொண்டோ அல்லது விஷம் குடித்தோ ‘தற்கொலை' முயற்சியில் இறங்கவேண்டாம்..இந்த் பதிவை தயவு செய்து தேவ பாசையான் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்து எழுதுங்கள் .

said...

அனானிகளே,

நான் எழுதிய ஒன்றைக்கூட உங்களால் மறுக்க முடியவில்லை. உடனே அவதூற்றில் இறங்குகிறீர்கள்.

மக இகவின் வரவு செலவுக்கணக்கை எடுத்து மக்கள் முன்னால் வையுங்கள்.

கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் மூலம் பெற்ற பணம் எவ்வளவு என்பதை எடுத்து வையுங்கள்.

ரிம் எவ்வளவு கொடுத்துள்ளது என்பதை எடுத்து வையுங்கள். பிறகு தேவபாடையை பற்றி பேசலாம்.

இன்னும் சொல்வதற்கு இருக்கிறது. அவை நாகரிகம் கருதி இங்கே தொட விரும்பவில்லை.

said...

கைபர் போலன் வழியாக என்னை துரத்த போகிறார்களாம்.

அப்படி அமெரிக்காவின் தகிடுதித்தங்கள் வெற்றி பெற்றால், கைபர் போலன் என்ன? எது வழியாகவும் ஓடமாட்டேன். இங்கே இருந்து இன்னும் அதிகமாக போராடுவேன்.

ஆமா, பட்டாரை, பிரசண்டா எல்லோரையும் கம்யூனிஸ புனித நீர் தெளித்து திராவிடராக ஆக்கிவிடுவீர்களா?

பெரியார் சொன்னாரே?

வைதீக பார்ப்பானை நம்பினாலும் லௌகீக பார்ப்பானை நம்பாதே என்று?

அதனை காற்றில் பறக்க விட்டுவிடுவீர்களா?

Anonym said...

தமிழ் மணி,

மகஇக மேல் உங்களுக்கும் சந்தேகம் உண்டா? நன்றி..

/படகோட்டி.

said...

நண்பர் படகோட்டி,

என்ன சந்தேகம்?

ஒரு ஐடியை உருவாக்கிகொண்டு பதில் எழுதுங்கள்.

Anonym said...

நீங்கள் சொல்லி வாய்மூடவில்லை. நேபாளத்தை அமெரிக்காவுக்கு திறந்துவிட அச்சாரம் செய்தாகிவிட்டது.
இப்போது நேபாளத்தில் முதலாளித்துவத்தை வளர்க்கப்போகிறார்கள் மாவோயிஸ்டுகள்.

http://www.hindu.com/thehindu/holnus/000200804232073.htm

said...

தமிழ்மணி,
உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது, உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 'குருதிப்புனலின்' உங்கள் புரிந்துகொள்ளுதலை எழுதியிருக்கிறீர்கள், இங்கே உண்மை என்பது கொஞ்சம் தலைசுற்றும் ஒன்றுதான் என்றாலும் நீங்கள் எழுதியது அத்தனையும் உண்மையா என்பதை யாரும் சிந்திக்கப் போவதில்லை.

நீங்கள் அளித்திருந்த url-இல் http://revcom.us/i/graphpage/rimmap.htm அமெரிக்காவும் உள்ளது, ரெவ்காம் அமெரிக்காவிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், மதப் பழமைவாதங்களையும் எதிர்த்து அடிக்கடி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இங்கே சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், www.worldcantwait.net/

பிகு.
அவர்களின் சில போராட்டங்களை நேரிலும் இங்குள்ள வானொலி மூலமாகவும் அறிந்திருக்கிறேன்.

said...

நண்பர் நம்பி,
நிச்சயமாக அமெரிக்காவில் மையம் வைத்துள்ளவர்கள் அமெரிக்காவிலும் "போராட்டம்" நடத்தாமல் இருந்தால் எப்படி?
:-))

said...

நன்றி அனானி,

தனியார் மயத்தை ஒரு சர்வாதிகாரத்தனத்தோடு செய்வதன் பெயர் பாஸிஸம் (ஒரிஜினல் இத்தாலிய பாஸிஸம். நம் ஊரில் மற்றவனை திட்ட உபயோகப்படுத்தும் பாஸிஸம் அல்ல)

இந்த வழியில் தற்போது நடைபோடுபவர்கள் சீன கம்யூனிஸ்டுகள். அடுத்து அமெரிக்காவின் வேட்டை நேபாளத்தில் ஆரம்பம்.

said...

எந்த பத்திரிக்கையிலும், எந்த சானல்களிலும் கேட்டறியாத, பார்த்தறியாத கண்ணோட்டத்தில், வித்தியாசமாக எழுதுகிறீர்கள்.

பாலா ஏற்கனவே அவர் சொல்கிற கருத்துகளால், பேசுகிற பேச்சுகளால் அரை லூசு என்று அறியப்பட்டவர்.

அவரை கூட்டு சேர்த்து கொள்ளாதீர்கள். பிறகு, உங்களையும் தப்பாக நினைக்கப் போகிறார்கள்.

said...

நண்பர் நொந்தகுமாரன்,

யார் என்ன எங்கே எழுதுகிறார்கள் என்பதையெல்லாம் நான் பார்ப்பதில்லை. அவரை மற்றவர்கள் எனன் சொன்னார்கள் என்பதையெல்லாம் நான் பார்ப்பதில்லை.

பாலா என்னுடைய பதிவில் எழுதியுள்ளவை அவருடைய கருத்துக்கள்.

அந்த கருத்துக்களை சொல்ல அவருக்கு உரிமை உண்டு.

என் பதிவில் என்னை ஆபாசமாக திட்டுபவர்களையே வெளியிடுகிறேன். (பழைய பதிவுகளில் ஜமாலன், தியாகு போன்றோர் எப்படி என்னை திட்டியிருக்கிறார்கள் என்று படிக்கலாம்)

அவர்களை ஒப்பிடும்போது பாலா மிக நாகரிகமாகவே எழுதுகிறார்.

Anonym said...

தமிழ்மணி சொல்லியிருப்பது பற்றி எனக்கு நேரடியான அனுபவம் உண்டு. எனக்குத்
தெரிந்த ஒரு கிறித்துவ தம்பதியினர் ஒரு என்.ஜி.ஓ தொடங்கினர். கணவர்
பாதிரியார் பயிற்சியிலிருந்து வெளியேறி திருமணம் செய்துகொண்டவர், ஆனால்
லிபரேஷன் தியாலஜியில் நம்பிக்கை உள்ளவர். மனைவியோ இடதுசாரி சிந்தனை
உள்ளவர்.

அப்போதே அவர்களைப் பார்க்க அடிக்கடி மிஷனரிகளும், வெளிமாநிலத்தவர்களும்
வருவார்கள் - ஆனால், அவர்கள் மறந்தும் கூட மதமாற்றத்தில் ஈடுபடவில்லை.
அவர்கள் வீட்டில் வேலை செய்துவந்த பெண் கிறித்துவராக மதம்மாறவிருப்பது
தெரிந்தவுடன் அதை மறுத்து அந்தப் பெண்ணை வேலையிலிருந்து
அனுப்பிவிட்டார்கள்.

இவர்களுக்கு அப்போது (அதாவது ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு)
பீகாரிலிருந்து நிதியுதவி வந்து கொண்டிருந்தது. ஓட்டாண்டியாக
இருந்தவர்கள் ஓரிரு வருடங்களிலேயே மிகவும் வளமான வாழ்க்கைக்கு
மாறினார்கள். இன்று அவர்களுக்கு பெரிய நெட்வொர்க் இருக்கிறது.
கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல் அவர்களிடம் பணிபுரிகிறார்கள் -
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து அப்போது தமிழகமெங்கும்
நடத்தப்பட்ட எதிர்ப்பில் இவர்கள் திரட்டிய கிராமவாசிகள், படித்த இளைஞ
இளைஞிகள் கலந்து கொண்டார்கள். அப்போதுதான் கவனித்தேன், இப்படித்
திரட்டப்பட்ட கூட்டமனைத்தும் இப்படிப்பட்ட என்.ஜி.ஓக்கள் மூலம்
வந்திருப்பதை.

இந்த என்.ஜி.ஓக்கள் பெரிய தளத்தை அமைத்துக் கொடுக்கின்றன, இதன் மூலம்
வெளிநாட்டு சக்திகள் இங்கிருக்கும் ஜனநாயக அமைப்புகளை மிரட்டவும்
அடிபணியவும் வைக்கின்றன என்பது அப்போது புரிந்தது. இப்போதோ இது மாலே, மக
இக, லிபரேஷன் தியாலஜி மிஷனரிகள், தேச துரோக அமைப்புகள் என ஒரு பெரிய
நெட்வொர்க்காக நாடெங்கும் விரிந்து பல விஷயங்களை இந்த வெளிநாட்டு உளவு
அமைப்புகள் செய்வதற்கு ஏதுவாக இருக்கின்றது என்பது புலனாகிறது.

இப்போது அவர்கள் துவங்கிய என்.ஜி.ஓ பலருக்கும் வேலைவாய்ப்பளிக்கும்
வரப்பிரசாதமாகவும், நம்முடைய அரசாங்கத்திலிருந்தே நிதியுதவி பெற்று அதன்
மூலம் நமது அமைப்பை குலைக்கும் ஜனசக்தியை உருவாக்கும் அமைப்பாகவும் ஆகி
எங்கள் பக்கத்தில் ஒரு ஐம்பது அறுபது கிராமங்களில் பாரிய அளவில் இளைஞ
இளைஞிகளை இன்ஃப்ளூயன்ஸ் செய்வதாக இருக்கின்றது. முதலில் அவர்கள்
மதமாற்றத்தில் இறங்குவார்கள் என்று ஐயுற்ற இந்துத்துவ அமைப்புகள் கூட
நாளாவட்டத்தில் அவர்களால் எவ்வித மதமாற்றமும் நடைபெறவில்லை
என்பதையுணர்ந்து அமைதியாகிவிட்டன.

இப்படியாக, மிகவும் நுணுக்கமாக, ஆழ்ந்து ஊடுறுவிவிட்டார்கள், எவ்வித
பெரிய எதிர்ப்புமில்லாமல். அவர்கள் உருவாக்கிய தளம் ஒரு sleeping cell ஆக
செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் கூட எனக்கு இன்றும் இருக்கிறது.
எதோ ஒரு சந்தர்ப்பத்தில் இம்மாதிரி என்.ஜி.ஓக்கள் அனைத்தும் இணைந்து
நேபாள புரட்சி போன்றோ, அரசாங்கத்தை கவிழ்க்கிற செயலிலோ ஈடுபடலாம். அல்லது
ஒரு கட்டத்தில் திடீரென்று இந்த ஐம்பது அறுபது கிராமங்களும் கூட்டாக
கிறித்துவத்தை தழுவலாம்.

யோசித்துப் பார்தால், நமது சமுதாயத்துக்கு எத்தனை ஆபத்துகள், நம்மை
நோக்கி எத்தனை தாக்குதல்கள், இதையெல்லாம் நம்மால் தாக்குப் பிடிக்க
முடியுமா என்ற பயம் ஏற்படுகிறது.

said...

http://www.gulf-daily-news.com/Story.asp?Article=216309&Sn=WORL&IssueID=31044

US-Maoist talks 'positive'

KATHMANDU: The US ambassador to Nepal has met the country's Maoist former rebel chief, the first official meeting of a senior American official with a group that Washington still labels terrorists.

A US embassy statement said yesterday Ambassador Nancy Powell met Pushpa Kamal Dahal or Prachanda, on Thursday to discuss the outcome of the April 10 election in which the Maoists emerged as the largest party.

"The meeting occurred in advance of Powell's return to the US for consultations on US-Nepal relations," it said.

"Powell provided an overview of current US government assistance to Nepal designed to help create a more prosperous, democratic and stable Nepal."

A Maoist politburo member said the meeting was an indication Washington wanted to mend fences now that they had won the election.

"All the signals are positive that they will remove the terrorist tag on us soon," Dinanath Sharma said. "How can they not recognise the fact that we won a free and fair election?"

Analysts too agree the US had moved to break the ice with the former rebels.

"It is the beginning of the US recognition of the Maoists as a democratic force," said Yubnath Lamsal, the chief editor of the Rising Nepal daily.

Powell sought assurances that the new government would respect donor agreements and ensure the safety of those implementing them.

The envoy urged the Maoists to show their commitment to the political process through their words and actions.

The Maoists say they are committed to the peace process but cannot yet renounce violence completely, a stance that analysts say is more aimed at browbeating political opponents than a real threat.

said...

பார்ப்பன சங்க கூட்டத்தில் கலந்துகொள்ளும் நேபாள மாவோயிஸ்டுகள்.

இதனை சொன்னால், நம் ஊர் மருதையன் கும்பலுக்கு கோபம் வருகிறது. பார்ப்பனனாக பிறந்துவிட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கேட்கிறார்கள். ஆனால் பார்ப்பனர் என்று மற்றவர்களை தூற்ற தயங்குவதில்லை.

http://www.indiaenews.com/nepal/20080508/116627.htm

Nepal Maoist chief attends meet honouring Hindu icon

EmailPrintDownload PDFComments (0)
By Sudeshna Sarkar. Kathmandu, Nepal, 12:04 PM IST


Nepal's Maoists fought a bloody war for 10 years to unseat the king, once revered as the incarnation of Hindu god Vishnu, and establish a secular, classless republic. However, their chief Prachanda saw no irony in attending an event honouring another incarnation of the same god, symbolising the supremacy of Brahmins and men.

Prachanda, the possible future prime minister of Nepal, and his deputy Baburam Bhattarai Wednesday attended a programme organised here by the Nepal Marwar Brahman Seva Sangh to celebrate the 'birth anniversary' of Hindu icon Parashuram.

A mythical Brahmin saint, Parashuram is described by Hindu epics as having been one of the 10 incarnations of Hindu god Vishnu.

Depicted as wielding an axe, the icon is said to have unleashed a campaign to kill all warriors in the world - called Kshatriyas in the Vedic age - to avenge himself on a king who had slighted him, and to establish the supremacy of Brahmins.

The Hindu icon is also said to have killed his mother at his father's command, though later he asked for her to be resurrected.

Two years ago, the Maoists spearheaded a campaign to turn Nepal, the only Hindu kingdom in the world, into a secular state.

Incidentally, both Prachanda and Bhattarai are Brahmins, so are other top leaders of the party.

Indeed, a parallel can be drawn between Parashuram and Prachanda.

Just as the former took up arms though traditionally weapons are to be wielded only by Kshatriyas, Prachanda, a former schoolteacher, conceived the idea of staging an armed revolt and himself learnt the basics of warcraft, including firing a gun and making bombs.

In the past, the Marwari community, people of Indian origin known for their business acumen, were an easy target for the underground Maoist guerrillas, who funded their civil war through extortion.

Now, however, with the Maoists having signed a peace pact and slated to lead the next government, the former guerrillas are wooing the community.

At the programme, Prachanda gave his assurance that though his party did not believe in religion, it would respect other people's religious beliefs.

All religions and cultures would have equal rights under the principle of secularism, he said.

Sharing the dais with the Maoist chief was Hindu holy man Sadananda Maharaj, who compared the Maoist 'People's War' with Parashuram's bloody campaign.

'When the war was going on in Nepal, I used to tell my disciples that it would establish peace and justice,' he said.

Ironically, in the past, Hindu leaders, especially from neighbouring India, supported King Gyanendra's army-backed coup and absolute reign that sought to exterminate the Maoists.