ஜமாலனின் பின்னூட்டம் இங்கே. (முந்தைய பதிவிலும் அவரது பின்னூட்டம் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளது)
அதற்கான அனானி 1இன் பதில் இங்கே
Anonym said...
அன்புள்ள ஜமாலன்,
வணக்கம். நான் பழைய அனானி.
அனானிகளையும் இந்தப் பின்னூட்டத்தில் நீங்கள் இழுத்து ரெண்டு சாத்து சாத்தியிருப்பதால் இந்தக் கடிதம்.
உங்கள் பின்னூட்டத்தின் முதல் பாரா தி மு க மேடைப்பேச்சின் "அழகையும்" " ஆணவத்தையும்", " அவசரத்தையும் " ஒருங்கே கொண்டிருந்தது. அபத்தத்தைக் கூட ரசிக்கும்படியாய் வெளிப்படுத்தமுடியும் என்ற தி மு க தத்துவத்தை முதல் பாராவில் நிரூபித்திருக்கிறீர்கள்.
1. ஓட்டை ஜனநாயகத்தின் கீழ் தான் "தெஹல்கா" நடத்திய ஆய்வு வெளிவந்திருக்க முடிந்திருக்கிறது. ரஷ்யாவில் ஓட்டை ஜனநாயகம் வந்தபிறகு தான் கொஞ்சமேனும் ஸ்டாலின், லெனின் அட்க்குமுறைகள் "தெஹல்கா" ஆய்வு போல வெளிவந்திருக்கின்றன. எனவே ஓட்டை ஜனநாயகம் ஆதரிக்கத் தக்கதே. சர்வாதிகாரத்தின் கீழ் சீனாவில் தியனன்மன் அடக்குமுறை, ஃபலுன் காங் அடக்குமுறை , திபெத் ஆக்கிரமிப்பு பற்றிய "தெஹல்கா" ஆய்வு வரவேண்டுமெ என்றால் சீனாவில் குறைந்தபட்ச ஓட்டை ஜனநாயகமாவது வரவேண்டும் என்று நீங்கள் சொல்வதாய் இதை நான் புரிந்து கொள்கிறேன். அதற்கு முயலுங்கள் அல்லது முயலும் சக்திகளுக்குத் துணையாய் இருங்கள். சர்வாதிகாரத்துக்கும் , ஓட்டை ஜன்நாயகத்திற்கு போட்டி என்றால் ஓட்டை ஜனநாயகத்திற்கே நாம் ஓட்டுப் போட வேண்டும் இல்லையா? ஏனென்றால் ஓட்டை ஜனந்நயகத்திலிருந்து உண்மையான ஜனநாயகத்திற்கு எப்போதாவது போகலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சர்வாதிகாரத்தின் கீழ் அந்த வாய்ப்பு இல்லை.
2. பொது மக்கள் என்று யாரும் இல்லை என்று தெரிவித்த கருத்துக்கு நன்றி. இனிமேலேனும், மக்கள் கலை இலக்கியம், மக்கள் ஜனநாயகம் என்ற வார்த்தையை விட்டு விடச் சிபாரிசு செய்யுங்கள். சோஷலிசத்தின் கீழ் யாருமே மலம் அள்ள வேண்டியிருக்காது, ஏனென்றால் எல்லொருக்குமே நிரந்தர மலச்சிக்கல் இருக்கும் என்று புரிந்து கொண்டேன்.
3. அப்பாவி மக்களை நக்சல்பாரிகள் கொன்றதில்லை என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டீர்கள். செத்தவர்களை விசாரிக்கவா முடியும்? நக்சல்பாரிகள் கொன்றால் அவர்கள் மக்கள் விரோதிகள் தான் என்று லேபல் ஒட்டிவிடலாம்.
4. உங்கள் வன்முறைப் பட்டியல் சுவாரஸ்யமானது. இந்திய சர்வதேச கொலைப் பட்டியலை விடவும் ஸ்டாலின் , மாஒ கொன்றவர்களின் எண்ணிக்கை அதிகம் அல்ல என்பதால், மாஒ ஸ்டாலின் செய்த கொலைகளைப் பற்றிப் பேசக் கூடாது என்பதும் கூட தர்க்க ரீதியாய்ச் சரியாய்த்தானிருக்கும். ஆனால் உங்கள் பட்டியலில் பாருங்கள் மிக கவனமாக தாலிபன் அரசு நிஅகழ்த்திய படுகொலைகளும், பாகிஸ்தானிலும் காஷ்மீரிலும் ஜிகாதிகள் பண்ணிய கொலைகளும் விடுபட்டிருக்கின்றன. ஒருவேளை ஸ்டாலின் ,மாஒ போல இஸ்லாமிய பயங்கரவாதிகளும் "எதிரிகளை" உன்னத நோக்கத்திற்காகக் கொல்வதாய் நீங்கள் நினைக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளலாமா?
5. நீங்கள் இட்ட கொலைப் பட்டியலில் இரண்டு விதமான கொலைகள் உள்ளன. ஒன்று போரின் போது நிகழ்ந்த கொலைகள் . இரண்டாவது தன்னுடைய மக்களை - ஏதோ ஒரு காரணத்திற்காக, முக்கியமாய் தம்மைக் காட்டிலும் கீழானவர்கள் (யூதர்கள், நாட்டின் பூர்வகுடிகள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் ) என்ற இனவாதக் காரணத்திற்காகக் கொல்லப் பட்டவர்கள். இப்படிப் பட்ட இனவாதக் கோட்பாட்டின் ஓர் அங்கம் தான் கம்யூனிசக் கொலைகள். யூதன் என்று ஒரு லேபிளுக்காக அல்லது சோஷலிச விரோதி என்ற லேபிலுக்காகக் கொல்லப் பட்டவர்கள் எல்லாம் தனக்குத் தான் மற்றவனின் உயிரை எடுத்து உலகைக் காப்பாற்றும் உரிமை இருக்கிறது , என்ற கோட்பாட்டின் கீழ்க் கொல்லப் பட்டவர்கள். போரில் கொல்லப் பட்டவர்களை இந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. ஏனென்றால் போர்க் கொலைகள் வரலாற்றில் நெடுக நிகழ்ந்து வருபவை.
6. மக்கள் நலனில் நாட்டம் உள்ள அரசு ராணுவத்திற்கும், காவல் துறைக்கும் எப்படி செலவு செய்யாமல் இருக்க முடியும்? நக்சல்பாரிகளின் கொலை வெறியிலிருந்து, திருட்டு, கொள்ளை போன்றவற்றிலிருந்தும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இல்லையா? சோஷலிச அரசில் ராணுவமும், காவல்துறையும் உதிர்ந்து போயிற்றா? சிறைச்சாலைகள் மூடப்பட்டு விட்டனவா?
7. இன்றைய வாழ்கை சிறந்தது என்று யாரும் வாதிடவில்லை. நிச்சயம் உழைக்கும் மக்கள் மட்டுமல்ல எல்ல மக்களும் வாழ்க்கை வசதிகள் பெற்று வாழ உரிய முயற்சிகள் செய்யப் படவேண்டும். ஆனால் வன்முறை மூலம் அந்த முயற்சிக்கான தடைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதால், மக்கள் வரிப்பணம், மக்கள் நலனிற்குச் செலவிட வேண்டிய வரிப்பணம், காவல் துறை முயற்சிகளில் வீணாகிறது.
8. என் கேள்வி ஏன் வாக்குரிமை அரசியலையும் உங்கள் ஆயுதமாய் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான். ஏற்கனவே பீஹார் போன்ற மாநிலங்களில் நக்சல்பாரிகள் வாக்குப்பெட்டி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்களே.
9. மார்க்சியம் மத நம்பிக்கையாய் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று நீங்கள் சொல்வது ஒப்புக் கொள்ளத்தக்கதே. மதம் வெறியாய் மாறி பயங்கரவாத தாலிபனாய் உருவாகாத வரையில் நிச்சயம் நம்பிக்கைகளுக்கு - அவை மூட நம்பிக்கையாய் இருந்தாலும் - ஜனநாயகத்தின் கீழ் இடம் உண்டு. ஜனநாயக சமூகம் நம்பிக்கைகளில் எது சரி எது தவறு என்று தீர்மானிப்பதில்லை.
நன்றி
பழைய அனானி.
12. November 2007 08:05
Montag, 12. November 2007
| [+/-] |
நண்பர் ஜமாலனுடன் அனானி1இன் கம்யூனிஸ விவாதம் |
Donnerstag, 25. Oktober 2007
| [+/-] |
நண்பர் ஜமாலனுடன் விவாதம் |
ஜமாலன் said...
//கம்யூனிஸ அமைப்பில்
சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்?
மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், "மக்கள்" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்?//
இது எனது பதில்:..
கம்யூனிஸ சமுகம் என்பது மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சமூகம். அதில் இதுபோன்ற அபத்தமான விதிமுறை பிரச்சனைகள் எல்லாம் வராது. மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வது என்றால்.. அறங்களை ஒழுங்குகளை தாங்களே பயின்றவர்கள் அல்லது அதற்கான சிந்தனை முறைகளைக் கொண்டவர்கள் என்று பொருள். வர்க்க சமூகம்தான் இதுபோன்ற ஏற்றத்தாழ்வான பொருத்ததமற்ற சிந்தனைகளை உருவாக்கும். அரசற்ற புராதன சமூகங்களில் மனிதகுலம் வாழ்ந்து தழைத்ததால்தான் இன்று இங்கு வந்து நம்மால் மணி ஆட்ட முடிகிறது. அல்லது கடவுள் படைக்கம்போதே ஆரசன் அடிமை என்று இரண்ட மனிதனை படைத்திருக்க வேண்டும். ஏன் அவர் ஒன்ற படைத்தாராம்? அன்றே ஒருவரை ஒருவர் இன்றுபோல் காலை வாருவது உயர்வு தாழ்வு பார்ப்பது சுரண்டுவது என்கிற வர்க்க அமைப்பாக இருந்தால் குறைவான மக்களைக் கொண்ட அந்த சமூகம் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு செத்திருக்கும். இப்ப யாரும் இங்கு வந்து அணாணியாகி ஜோக் அடித்துக் கொண்டு சைபீரியா என சல்லி அடித்துக் கொண்டிருக்க முடியாது.
நன்றி.
24. Oktober 2007 06:53
என் பதில்
தமிழ்மணி said...
ஜமாலன்,
உங்கள் கருத்துக்கு நன்றி
//
கம்யூனிஸ சமுகம் என்பது மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சமூகம். அதில் இதுபோன்ற அபத்தமான விதிமுறை பிரச்சனைகள் எல்லாம் வராது.
//
வரலாமே? ஒரு கார் அல்லது ஒரு பொருள் என்று வந்துவிட்டால், அதனை எப்படி உபயோகிப்பது என்பது எல்லோரும் எப்படி தெரிந்திருக்க முடியும்?
இப்படித்தான் இந்த கருவி உபயோகிக்கப்படவேண்டும் என்று விதிமுறைகளை எழுதித்தானே ஆகவேண்டும்?
//
மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வது என்றால்.. அறங்களை ஒழுங்குகளை தாங்களே பயின்றவர்கள் அல்லது அதற்கான சிந்தனை முறைகளைக் கொண்டவர்கள் என்று பொருள்.
//
ஒன்றே போல அறங்களையும் சிந்தனை முறைகளையும் பயின்றவர்கள் ஒரே கருத்து கொண்டவர்களாக இருக்க முடியுமா?
ஒரே இயற்பியல் பயின்றவர்கள் கருந்துளைபோன்ற விஷயங்களில் வெவ்வேறு கருத்து கொண்டிருந்ததை பார்த்தோமே? அந்த கருத்துக்கள் அவர்கள் எந்த வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்பதாலா வந்தது? சாதாரண கருத்து வேறுபாடு தானே?
// வர்க்க சமூகம்தான் இதுபோன்ற ஏற்றத்தாழ்வான பொருத்ததமற்ற சிந்தனைகளை உருவாக்கும்.
//
கருத்து வேறுபாடு என்று இருந்தாலே ஒருவருக்கு மற்றவர் கருத்து பொறுத்தமற்ற்தாகத்தானே தெரியும்.
// அரசற்ற புராதன சமூகங்களில் மனிதகுலம் வாழ்ந்து தழைத்ததால்தான் இன்று இங்கு வந்து நம்மால் மணி ஆட்ட முடிகிறது.
//
புராதன சமூகங்களில் எத்தனை பேர் வாழ்ந்தார்கள் ?
நவீன சமூகங்களில் எத்தனைபேர் வாழ்கிறார்கள்?
இன்றைக்கும் இருக்கும் புராதன சமூகங்களில் எத்தனை பேர் வாழ்கிறார்கள்?
எந்த சமூகத்தில் மக்கள் பெருக்கம் ஏற்படுகிறது என்பதை ஆதாரத்துடன் காட்டுங்கள்.
24. Oktober 2007 10:53
ஜமாலன் said...
இங்கு நடப்பது விவாதமல்ல.. முன்முடிவுகளை தீர்மானமாக பிறர் மண்டைக்குள் திணிக்கும் ஆத்திரமும் அவசரமும்தான். எதற்கும் ஆதாரம் காட்டாதபோது... விவாதிப்பதில் அர்த்தமில்லை.
சோற்றுக்கு வழியற்ற நிலையில் கார் பற்றி விவாதம் துவக்கியபோதே.. இதனை நிறத்தியிருருக்க வேண்டும். தோழர் ஆசாத் உணர்ச்சி வசப்பட்டு விட்டார்.
தியாகு கூறியதுபோல். மாற்று என்ன என்பது குறித்து விவாதியுங்கள் அதைவிட்டவிட்டு அவதூறு பரப்ப வேண்டாம். கம்யூணிஸம் இல்லாமல் மக்கள் 'சுபிட்சமாக' வாழ என்ன திட்டம் உள்ளது?
நன்றி.
24. Oktober 2007 23:37
தமிழ்மணி said...
ஜமாலன்,
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி
//ஜமாலன் said...
இங்கு நடப்பது விவாதமல்ல.. முன்முடிவுகளை தீர்மானமாக பிறர் மண்டைக்குள் திணிக்கும் ஆத்திரமும் அவசரமும்தான். எதற்கும் ஆதாரம் காட்டாதபோது... விவாதிப்பதில் அர்த்தமில்லை.
//
எனக்கு அவசரமில்லை. மெதுவாகவே விவாதிக்கலாம்.
//
சோற்றுக்கு வழியற்ற நிலையில் கார் பற்றி விவாதம் துவக்கியபோதே.. இதனை நிறத்தியிருருக்க வேண்டும். தோழர் ஆசாத் உணர்ச்சி வசப்பட்டு விட்டார்.
//
கார் வெறும் உதாரணம் மட்டுமே.
//
தியாகு கூறியதுபோல். மாற்று என்ன என்பது குறித்து விவாதியுங்கள் அதைவிட்டவிட்டு அவதூறு பரப்ப வேண்டாம். கம்யூணிஸம் இல்லாமல் மக்கள் 'சுபிட்சமாக' வாழ என்ன திட்டம் உள்ளது?
நன்றி.
//
கம்யூனிஸத்தின் மூலம் மக்கள் சுபிட்சமாக வாழ முடியுமா என்று நான் தெரிந்துக்கொள்ளலாமே?
நன்றி
25. Oktober 2007 12:57
Abonnieren
Posts (Atom)