Sonntag, 24. Februar 2008

பாமகவும் விடுதலை சிறுத்தைகளும் ஒருவரோடு ஒருவர் போரிடவேண்டுமா?




"ஒடுக்குபவனும், ஒடுக்கபடுவனும் இரட்டை குழந்தைகள்" - ராமதாஸ் & திருமா அறிவிப்பு

'முத்துராமலிங்க தேவர்' என்ற சாதிவெறியனுக்கு 'அரசு விடுமுறை' அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றியும், வன்னியர்களுடன் தமிழ் பாதுகாப்பு என்று கூட்டனி அமைத்தும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை பாதுகாக்கும் திருமா தற்போது வன்னியர்களும் நாங்களும் இரட்டை குழல் துப்பாக்கிகள் என கோஷம் போடுகிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை இந்த 'சந்தர்ப்பவாதி' மூலம் பெற முடியும் என யோசிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதே திருமாவின் அறிவிப்புகள், செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.


இப்படி எழுதியிருக்கிறார் ஒரு மக இக கம்யூனிஸ்டு. அவரது மற்ற உளறல்களையும் அவரது தளத்தில் படித்து பார்க்கலாம். பாராளுமன்ற கூடுகிறது என்பதை பன்றித்தொழுவம் கூடுகிறது என்று எழுதியிருப்பதையும் பார்க்கலாம். ஏன் பன்றித்தொழுவம்? ஏன் அது மாட்டுத்தொழுவம் இல்லை, அல்லது ஆட்டு தொழுவம் இல்லை, அல்லது ஏன் கோழிக்கூண்டு இல்லை என்பதற்கெல்லாம் ஒரே விடைதான்.பாராளுமன்றத்தை பன்றித்தொழுவம் என்றுதான் கூறவேண்டும் என்று கட்சியில் கூறிவிட்டார்கள். ஆகவே அதனை பன்றித்தொழுவம் என்றுதான் இவர் கூறுவார். அந்த அளவுக்கு சொந்த புத்தி. இந்த லட்சணத்தில் மற்றவர்களை சிந்திக்கவேறு அழைப்பார்!

சரி விடுதலை சிறுத்தைகள், பாமக கூட்டணி பற்றி பேசுவோம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் அவர்கள் தங்கள் உரிமைகளை ஜனநாயகம் மூலம் பெற முடியுமே தவிர "புரட்சி வீரர்கள் போடும் பிச்சையில்" வராது.

கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் வன்னியர்களும் ஒரே வளங்களுக்கு போராடுபவர்கள் என்பதாலும், வன்னியர்களது பொருளாதார நிலைமைக்கும் தாழ்த்தப்பட்டவர்களது பொருளாதார நிலைக்கும் அதிக வேறுபாடு இல்லையென்றாலும், வன்னியர்கள் தாழ்த்தப்பட்டவர்களைவிட சற்று பரவாயில்லை என்ற நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

பல கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குபவர்களாக வன்னியர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

ஆனால், திருமாவளவனும் பாமகவும் கொண்ட ஒரு வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி, அப்படிப்பட்ட போட்டிகளை குறைத்து அதன்மூலம் வரும் வன்முறையை குறைத்து ஒரு கூட்டணியை கிராம அளவில் ஏற்படுத்த முயன்று வருகிறது.

மேலும் எல்லா வன்னியர்களும், ஏன் மற்ற சாதியினரும் ஜாதிவெறியர்கள் அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். தங்களுக்கு ஒருவர் நல்லது செய்யமுடியும் என்றால், ஜாதிகளை கடந்து அவருக்கு ஓட்டு போடவும் தயங்காதவர்கள்.

திருமாவளவன் ஒரு தேர்தலில் நின்றபோது அவருக்கு விழும் ஓட்டுகள் அனைத்தும் தாழ்த்தப்பட்டவர்கள் போடும் ஓட்டுக்கள் மட்டுமே அல்ல. தாழ்த்தப்பட்டவர்கள் போடும் ஓட்டுகள் மூலமாக மட்டுமே திருமா ஜெயிக்க முடியாது. அது மட்டுமல்ல, பல்வேறு தொகுதிகளில் பாமகவும் மற்ற ஜாதியினர் ஓட்டுக்கள் இல்லாமல் ஜெயிக்கவும் முடியாது. ஆகவே பாமக வன்னியர் கட்சி அல்ல. விடுதலை சிறுத்தைகள் தாழ்த்தப்பட்டவர் கட்சியும் அல்ல.

இது எல்லோருக்கும் தெரியவும் தெரியும். விடுதலை சிறுத்தைகளும் பாமகவும் கரம் கோர்த்து தேர்தலில் அணி சேர்வது இருவருக்குமே பலம் சேர்க்கும். அரசியல் ரீதியில் தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் பலம் பெறுவது அவர்களது பொருளாதார நிலையையும் உயர்த்தும், அவர்களது சமூக அந்தஸ்தையும் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.

ஆனால், கேள்வி இப்போது இதுதான்.

ஏன் கம்யூனிஸ்டுகள் இப்படி வன்னியரும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒருங்கிணைவதை எதிர்க்கின்றனர்?

இந்த கேள்விக்கு விடையை அறிய, கம்யூனிஸ்டுகளின் அடிப்படை குறிக்கோள் என்னவென்று புரிந்துகொள்ளவேண்டும்.

கம்யூனிஸ்டுகளின் குறிக்கோள் தாழ்த்தப்பட்டவர்களும் வன்னியர்களும் இன்னும் பல பொருளாதார நிலையிலும் சமூக நிலையிலும் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் பலம் பெறுவது அல்ல.

உண்மையிலேயே அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களும் வன்னியர்களும் வலிமை பெறவேண்டுமென்றால், இந்த கூட்டணியை ஆதரிக்கத்தானே வேண்டும்? ஏன் ஆதரிப்பதில்லை? சமூகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்தாலும், இருவரும் சமூக வளங்களுக்கு போரிடுவதால் அவர்களது ஆக்கப்பூர்வமான சக்தி வீணாகி, அழிவு பாதைக்கு தானே இழுத்து சென்றிருக்கிறது?

அப்படிப்பட்ட நிலையிலிருந்து இந்த இரண்டு சமூகங்களையும் மீட்டு அவர்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முனையும் இந்த இரண்டு தலைவர்களை போற்றத்தானே வேண்டும்?

ஏன் கம்யூனிஸ்டுகள் இருவரையும் திட்டுகின்றனர்? ஏன் ஒருவரை ஒடுக்குபவனாகவும் மற்றவரை ஒடுக்கப்படுகின்றனவராகவும் சித்தரிக்கின்றனர்? ஏன் இருவரையும் மோத விடுவதில் தீவிரமாக இருக்கின்றனர்?

மாவோவின் வழி இது!

வர்க்க முரண்பாடுகளை தீவிரப்படுத்துவது என்பது இவர்களது குறிக்கோள். ஒரு பெரும் கலாட்டா, பெரும் போர், பெரும் கலவரத்தை உருவாக்குவதுதான் இவர்களது குறிக்கோள். அதில் வர்க்க முரண்பாடுகள் தீவிரமடைந்து அரசு செயலற்று போகும் போது இவர்கள் போய் அங்கே உட்கார்ந்து கொள்வார்களாம். அப்போது வர்க்க உணர்வு பெற்ற கம்யூனிஸ்டு கட்சிதொண்டர்கள் இந்த கலவரத்தை தீவிரப்படுத்தி அதன் மூலம் ஆட்சியை கைப்பற்றுவார்களாம்.

இவர்களது குறிக்கோள் மக்களது நல்லிணக்கமான வாழ்வு அல்ல. மக்கள் ஒருவரோடு ஒருவர் போரிடுவது, மற்றவர் மீது காழ்ப்புணர்வு, வெறுப்பு ஆகியவைதான் கம்யூனிஸ்டுகள் விரும்புவது.

மக்கள் இப்போது நல்லிணக்கமான வாழ்வு வாழக்கூடாது. இப்போது மக்கள் சொல்லவொண்ணா கொடுமையிலும் இழிவிலும் வாழ்வதாக மக்கள் நினைக்கவேண்டும். இந்த சமூகத்தை திருத்துவதோ, இதில் உள்ள குறைகளை களைவதோ சாத்தியப்படாது என்று மக்கள் நம்பவேண்டும். மக்கள் ஒருவரோடு ஒருவர் போரிட வேண்டும். இதற்கு சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், பெரும்பான்மை சமூகத்திலும் ஏழையாக உள்ளவர்கள், இன்னும் யார் யாரெல்லாம் கிடைக்கிறார்களோ அவர்களை எல்லாம் இந்த அரசாங்கத்துக்கு எதிராக தூண்டவேண்டும்.

அவர்களை ஆயுதம் ஏந்தி போராடும் படி தூண்டி அவர்கள் மூலம் கலவரங்களை உருவாக்க வேண்டும். அந்த கலவரங்களை அடக்க போலீஸ் போன்ற அரசு அமைப்புகள் இறங்கும்போது அதன் உள்ளே புகுந்து போலீஸை தாக்கவேண்டும். போலீஸாரை திரும்பி தாக்கவைத்து மக்களை கொல்லவேண்டும். கலவரத்தை அதிகரித்து போலீஸ் மூலமாக ஏராளமான மக்கள் இறந்தார்கள் என்று மக்களிடையே போலீஸுக்கு எதிரான உணர்வை அதிகரிக்க வேண்டும்.

நடுவே கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரத்தில், "புரட்சி வந்தால் பாலும் தேனும் ஓடி தெருவெல்லாம் ஈ மொய்க்கும்" என்று மக்கள் நம்பவேண்டும். அப்போதுதான் கம்யூனிஸ புரட்சிக்கு மக்கள் தயாராக ஆவார்கள். இதுதான் புரட்சிக்கு மக்களை தயார் படுத்துதல்...

புரிகிறதா?

இதுதான் கம்யூனிஸ்டுகளின் திட்டம்.

இந்த கம்யூனிஸ்டு திட்டங்களை மனதில் வைத்துக்கொண்டு நண்பர் அசுரன், தியாகு, செய்தி விமர்சனம் என்ற பெயரில் விஷம் கக்கும் எழுத்துக்களை எழுதும் கம்யூனிஸ்டுகளின் எழுத்துக்களை படித்து பாருங்கள்.

ஏன் அப்படி எழுதுகிறார்கள் என்பது புரியும்.

இதனால்தான் நல்லிணக்கத்தை உருவாக்க முனையும் எல்லா அரசியல்வாதிகளை எதிர்க்கிறார்கள். அவர்களை "கூட்டிக்கொடுப்பவர்களாக" சித்தரிக்கிறார்கள்.

உண்மையிலேயே மக்களுக்கு உழைத்த பெரும் தலைவர்களை கேவலமாக சித்தரிக்கிறார்கள். குடிகாரன், இரண்டு மனைவிக்காரன், மகனுக்கு ஆட்சி கொடுக்கிறவன், இன்னும் என்னவெல்லாம் எழுதுகிறார்கள் என்று பாருங்கள்.

அரசியல்வாதிகள் வேறு யாரும் அல்ல. அது நாம்தான். நம்மிடம் எந்த குறைகள் உண்டோ ,எந்த நிறைகள் உண்டோ அவைகள்தாம் நம்மை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளிடமும் இருக்கும். அதனால்தான் அவர்கள் நமது பிரதிநிதிகள்.

எல்லா குறைகளையும் தாண்டி கலைஞர் ஒரு பெரும் தலைவர்.

அவரது எல்லா குறைகளையும் தாண்டி அறிஞர் அண்ணா மாபெரும் தலைவர்.

அவரது எல்லா குறைகளையும் தாண்டி மகாத்மா காந்தி மாபெரும் மக்கள் தலைவர்.

அவர்களது எல்லா குறைகளையும் தாண்டி சிதம்பரம், ஸ்டாலின், மருத்துவர் அய்யா, தொல் திருமாவளவன், சரத்குமார், விஜயகாந்த், ஜெயலலிதா ஆகியோரும் சிறந்த மக்கள் தலைவர்களே. அவர்களிடம் இருக்கும் குறைகளை மட்டுமே பார்த்தால், நான் அவர்களது எதிர்கட்சிக்காரனாக இருப்பேன். அவர்களது நிறைகளை மட்டுமே பார்த்தால், அவர்களது கட்சிக்காரனாக இருப்பேன். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி இவர்கள் மக்களை பிரதிநிதித்துவம் செய்கிறவர்கள். மக்கள் இவர்களுக்கு ஓட்டுப்போடுகிறார்கள். நான் அந்த மக்களை மதிப்பவனாக இருந்தால், அந்த மக்களின் தேர்வையும் நான் மதித்தே ஆகவேண்டும்.

நான் மக்களை மதிக்கிறேன். ஆகவே மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியையும் நான் மதிக்கிறேன். அதே மக்கள் அதே அரசியல்வாதிகளை உதாசீனம் செய்வார்கள். ஓட்டுப்போட மறுப்பார்கள்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் நானும் மக்கள் தீர்ப்புக்கு சிரம் தாழ்த்துக்கிறேன்.

மக்கள் தீர்ப்பை மதிக்காத இந்த கம்யூனிஸ்டுகள் மக்களுக்காக போராடுகிறார்களாமா?

நிரூபிக்க முடியாத ஒரு குப்பை கொள்கையை வைத்துக்கொண்டு ஆயுதம் தாங்கி "நான் சொல்வதை ஒப்புக்கொள், இல்லையேல் உன்னை கொன்றுவிடுவேன்" என்று சொல்லும் இவர்கள் மக்களுக்காக போராடுகிறார்களாமா?

7 Comments:

said...

விடுதலை சிறுத்தைகள், பாமக கூட்டணி நிச்சயம் சமூக மறுமலர்ச்சிக்கு வழி வகுக்கும்.(அவர்கள் உண்மையிலேயே அவர்களது சமூக முன்னேற்றத்துக்கு பாடு பட்டால்!)

said...

நன்றி சதுக்கப்பூதம்

Anonym said...

இதே சம்பந்தமாக குழலி ஒரு பதிவு எழுதியிருந்தார்.

said...

நன்றி அனானி,

இது பரவலாக தெரிந்த விஷயம்தான். தலித்துகள் வன்னியர் கூட்டணி அமையக்கூடாது என்று பல்வேறுவகையான பிரஷர்கள் வருகின்றன. தொல். திருமாவளவனையும் மருத்துவர் அய்யாவையும் மோதவிட்டு பார்ப்பதில் ஒரு சிலருக்கு அலாதி ஆர்வம் இருக்கிறது.

பல இடங்களில் வன்னியருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் போட்டி இருப்பது உண்மைதான் என்றாலும், அதனை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்று இருவரையும் போரிட வைக்க, சிறு சிறு சண்டைகளை ஊதி பெரிசு படுத்தி பெரும் கலவரமாக்க முயல்கின்றனர்.

அண்ணன் திருமாவும், மருத்துவர் அய்யாவும் இவற்றையெல்லாம் கண்டு கலங்காமல் இந்த இரு மக்களும் ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்யவேண்டும்.

Anonym said...

நல்ல கட்டுரை.

இந்த 2 கட்சிகள் மீது எனக்கு பெரிய பாசம் ஏதுமில்லை என்றாலும், உங்களது பார்வையை புரிந்துகொள்கிறேன்.

Anonym said...

தமிழ்மணி, தங்கள் பதிவை படித்து வருபவன் நான். கம்யூனிஸத்தின் தத்துவ கட்டுமானத்தை உடைக்கும் விதமாக தங்கள் விவாதங்கள் உள்ளன. சிறப்பான பணி.

மேலும், அவற்றின் அடிப்படையை கட்டுடைத்தலும் அவசியம் அல்லவா? உதாரணமாக, Dialectics என்ற விஷயத்தை. "கருத்து மோதல்கள்" என்ற விஷயத்தில் Dialectics-ஐ அமல்படுத்தலாம், ஆனால் சமூக அளவில், அதாவது இரு வேறு சமூகங்களை மோதவிட்டு அதில் உன்னதமான சமூகத்தை நிலைக்க செய்யும் அவர்களின் முயற்சியையும் கட்டுடைப்பது அவசியம் என்று கருதுகிறேன். அது குறித்து ஒரு கட்டுரையை அவசியமாக கொணருங்கள்.

said...

புருஷ்

எழுத முயற்சிக்கிறேன்