Mittwoch, 13. Februar 2008

கம்யூனிஸ்டுகளின் முஸ்லீம்கள் ஆதரவின் உள்ளே என்ன இருக்கிறது?

ஒரு மதத்தை பின்பற்றுபவர்கள் அந்த மதத்தை பரப்ப உரிமை பெற்றிருக்க வேண்டுமா?

நான் நாத்திகனாக இருந்தாலும், ஆத்திகர்களுக்கு தங்கள் கட்சியை கூற சுதந்திரம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்

சோவியத் யூனியனில் இஸ்லாமை பிரச்சாரம் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்று. பிறகு சீனாவிலும் அப்படியே.

ரஷியர்கள் பின்பற்றுவது ஆர்தடாக்ஸ் கிறிஸ்டியானிட்டி என்ற பிரிவு. ஆகவே மசூதிகளை இடித்து அதன் மீது ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்டியன் சர்ச்சுகளை கட்டினார்கள்.

வருகிறது பார் புரட்சி என்று டுமீல் விட்டுக்கொண்டிருந்தபோது, இந்த ஒடுக்கப்பட்ட முஸ்லீம்களிடம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு மத சுதந்திரம் கொடுப்போம், நீங்கள் மீண்டும் மசூதிகளை கட்டலாம் என்று வழக்கம்போல வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள்.

ஆனால், சோவியத் புரட்சிக்கு பின்னர் எல்லா வாக்குறுதிகளும் கிழித்தெறியப்பட்டன. எல்லா மதத்தலைவர்களும் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். மத பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மிலிடண்ட் அதீயிஸம் என்ற பெயரில் மதத்தலைவர்கள் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது போர் செய்ய ஆள் வேண்டுமே என்பதற்காக இந்த விதிமுறைகள் சற்று தளர்த்தப்பட்டன.

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் மீண்டும் "மீண்டும் லெனினின் பாதையில்" என்ற பெயரில் இஸ்லாம் மீதான ஒடுக்குமுறை ஆரம்பித்து தொடர்ந்தது. ஆனால், பிரச்சாரத்துக்கு வேண்டுமே என்பதற்காக அரசாங்கம் அனுமதிக்கும் ஒரு சில கம்யூனிஸ்டுகள் இஸ்லாமிய தலைவர்களாக காட்டப்பட்டார்கள்.

ஏராளமான மசூதிகள் இடிக்கப்பட்டன. ஜாரின் பேரரசில் 28000 மசூதிகள் இருந்தன. அது இப்போது வெறும் 400ஆக குறைந்துவிட்டது.

இதுதான் கம்யூனிஸம் கொடுக்கும் மத சுதந்திரம்.

தனக்கு மத சுதந்திரம் இல்லை என்பதை கூறக்கூட சுதந்திரமில்லாத அமைப்பு கம்யூனிஸ அமைப்பு.

இன்று இஸ்லாமியரை ஏமாற்ற கம்யூனிஸ்டுகளால் முடியாது என்றே நான் கருதுகிறேன். ஆகவே இதனை இங்கே எழுத காரணம் எந்த அளவுக்கு பொய் வாக்குறுதிகளை வீசுவதிலும், மனதறிந்து பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலைகளிலும் கம்யூனிஸ்டுகள் இறங்குவார்கள் என்பதை நண்பர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இங்கே எழுதுகிறேன்.

என்னுடைய வேலை இங்கே உண்மையை பதிவது. என் மீது வீசப்படும் அவதூறுகளை தாண்டி, இவற்றை சுயமாகவே வாசகர்கள் ஆராய்ந்து பார்க்கட்டும்.

THE PRESENT SITUATION OF THE SOVIET MUSLIMS:
THE EXAMPLE OF KAZAN TATARS

by
Dr. N. Devlet
(Originally Published in 1986)


(This is a summary of the article developed by Dr. A. Zahoor.)
Books and E-Books
On Muslim History and Civilization

Islam arrived in the Volga-Ural region a little over a thousand years ago. The Bulgars of Chan Almas had officially accepted Islam on 16 Muharram 310 (16 May 922). Approximately 70 years before the Russians adopted Christianity as their official religion, Islam had been recognized as the state religion by the then Turkic Bulgar state. The Tatars and Bashkirs, the Muslim people of the Volga-Ural region, were the first to fall under Russian domination 433 years ago [1552 C.E.] and were heavily suppressed by the Orthodox Russians. Mosques were destroyed or converted into Orthodox churches, and the Russian Orthodox church forcibly baptized Muslims. In the year 1756, eighty percent of all mosques in the province (gubirna) of Kazan were destroyed.
After Catherine II's reforms in 1780, the Muslims began reproducing mainly religious literature and distributing it among the population. During the first year of the Bolshevik revolution (1917), the Soviet government promised the Muslim workers freedom of religion and practice of their manners and customs without restrictions. However, after gaining power, the Soviet government broke all promises - religious leaders were persecuted, religious institutions were closed, religious education was not permitted. This was followed by anti-religious propaganda by the "Union of Militant Atheists." During World War II, the Soviet government revised its policy of persecution against religion and Islam. But after the war in 1953 Chrushvhov continued with administrative and psychological attacks under the motto "back to Lenin."

The Muslim population of the Soviet Union is between 45 and 50 million, making it the sixth largest in the world (1980 data). The majority of the Soviet Muslims are of Turkic ethnic origin. They live in the Volga-Ural region, Northern Caucasus, Central Asia and other parts of the Soviet Union. There are approximately 6.5 million Tartar and Bashkir Muslims in the Volga-Ural region. In 1982, only 17 mosques were operating in Tataristan and there is no madrasah in Kazan today.

Anti-Islamic, atheistic propaganda and measures taken by the state, which have lasted more than 70 years, have made the observance of Islam impossible and the number of practicing Muslims has decreased. In the Soviet Union, a religious person is not popular and has minimum chances for a promotion. And to propagate Islam is strictly forbidden while atheistic propaganda is an obligation for all. In one form or other, all public organizations and mass media promote the doctrine of atheism. The Soviet regime preserves the officials of religious capacity purely for propaganda purposes. Of the 28,000 mosques from the Russian Empire period only about 400 mosques remain today.

3 Comments:

said...

பெரியாரிஸ்டாக வேஷம் போடும் கம்யூனிஸ்ட் ஒருவர், முஸ்லீம்களுக்கு அந்த துன்பம் நடந்ததே அதனை கண்டித்தாயா? இந்த கட்சியை கண்டித்தாயா? என்ற ரீதியில் வழக்கம்போல திசை திருப்பும் உத்தியை பரிசோதித்து பார்க்கிறார்.

அவர் புரியாத மாதிரி நடித்தாலும்,மீண்டும் சொல்கிறேன்.

இன்று இப்படிப்பட்ட செய்திகள் இந்தியாவில் சுதந்திர பத்திரிக்கைகளில் வருகின்றன. அதனை சுதந்திரமாக மக்கள் படிக்கிறார்கள். தங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று போராடுகிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். அதற்கான வழிமுறை இந்த ஜனநாயகம்.

இந்த சுதந்திர அமைப்பில் பத்திரிக்கைகள் தரும் செய்திகளைத்தானே நண்பர் அசுரன் உபயோகப்படுத்துகிறார்?

இந்த அமைப்பு தரும் சுதந்திரத்தை பயன்படுத்தித்தானே புதிய ஜனநாயகம், புதிய கலச்சாரம் என்று சர்வாதிகாரத்தை பிரச்சாரம்செய்துகொண்டிருக்கிறீர்கள்?

ஆனால், இவர்கள் சொல்லும் கம்யூனிஸத்தில் எவன் சுதந்திரமாக பத்திரிக்கை நடத்த முடியும்? எவன் சுதந்திரமாக செய்தி சேகரிக்க முடியும்? எவன் சுதந்திரமாக மேடை போட்டு அரசாங்கத்தை எதிர்த்து பேச முடியும்? இத்தனை மசூதிகள் சோவியத் யூனியனில் இடிக்கபப்ட்டுள்ளன. இவை என்ன கம்யூனிஸ நாட்டு பத்திரிக்கைகளில் வந்தனவா?

விவாதம், முஸ்லீம்களின் உரிமை பற்றியதல்ல. முஸ்லீம்கள் தங்களுக்கு உரிமை இல்லை, தாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்று உணர்ந்தால், அதற்காக போராட இருக்கும் சுதந்திரம். அதற்கான களம் அமைத்து தரும் ஜனநாயகம்.

அதுதான் விவாதம்.

said...

பழைய அனானி anticommies.blogspot.com இல் எழுதிய மறுமொழி

Anonymous said...
நான் பழைய அனானி.
உங்களது பக்கத்தில் கருத்து எழுத முடியாததால் இங்கே எழுதுகிறேன்.

சம்பூகன் எழுதியதையும், ரயாகரன் எழுதியதையும் நான் படித்தேன். எந்த வாதமும், தர்க்கமும் இல்லாமல் மூச்சுக்கு மூச்சு பார்ப்பனர் என்று சொன்னால் போதும் என்பதற்கு மேல் எதுவும் இருப்பதாய் எனக்குப் படவில்லை. சம்பூகன் பட்டவர்த்தனமாய் ஆபாச விமர்சனத்தில் ஈடுபடிம்போது, ரயாகரன் அதே விஷயத்தைப் பூசி மெழுகினாற்போல சொல்கிறார். அவ்வளவு தான்.
பெரியார் தான் தேர்தலில் நிற்கவில்லையே தவிர தேர்தலில் நின்றவர்களுக்கு ஆதரவு அளித்தார், எனவே ஓட்டுப் பொறுக்கிகள் என்று கலைஞரையும், அண்ணாவையும், காமராஜரையும் திட்டுவதை ஒப்புக் கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு சம்பூகனிடமிருந்து பதில் இல்லை. சம்பூகன் திராவிடர் கழக முகமூடி அணிந்த கம்யூனிஸ்ட் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. சுப்பு, கணேஷ் போன்றவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து காங்கிரசுக்குள் ஊடுருவியது போலத்தான் இது. சிலர் கம்யூனிஸ்டுகளின் உளவாளிகளாய்க் கூட மர்ற கட்சிகளில் இருந்தார்கள்.
ரசியா வந்தால் கூட பரவாயில்லை கம்யூனிசம் இங்கு வரவேண்டும் என்று பெரியார் சொன்னார் என்று கூறும் ரயாகரன் இது பெரியார் மீதான எப்படிப்பட்ட விமர்சனத்தை எழுப்பும் என்று கூட உணரவில்லை. ஹங்கேரி, செக்கோஸ்ல்கோவேக்கியா, கிழக்கு ஜெர்மனி போல ரஷ்யாவின் அடிமை நாடாக தமிழ்நாட்டை ஆக்க பெரியார் விரும்பியிருப்பாரா? பெரியாரை கம்யூனிஸ்ட் என்று அழைப்பது, கருணாநிதி காமராஜ் ஆட்சியை நான் தான் அமைத்தேன் என்று சொல்லிக் கொள்வது போலத்தான். காமராஜ் ஆட்சியை அமைத்துவிட்டேன் என்று சொல்பவர் காங்கிரசில் சேர்ந்து விட்டாரா என்ன? இல்லையே. அதுபோல் தான் பெரியாரும். ஜீவானந்தம் பெரியார் மீது கொள்கை விமர்சனங்கள் வைத்து கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்த போது, ஆமாம் நான் கம்யூனிஸ்ட் தான் என்று தி கவைக் கலைத்து விட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவில்லையே அவர்.
கம்யூனிஸ்டு கோட்பாடுகளையும், கம்யூனிஸ்ட் செயல்முறைகளையும் எதிர்த்தால், கம்யூனிஸ்டுகள் லட்சக் கணக்கில் முஸ்லீம்களை ஆ·கானிஸ்தானத்தில் கொன்றதைக் கோடிட்டுக் காட்டினால், அது பார்ப்பன அடிவருடித் தனம். ஸ்டாலின், மாஒ கொலைகளைப் பூசி மெழுகினால் அது முற்போக்கு . அமெரிக்கா ஈராக் மீது போர்தொடுத்தால் அது ஆக்கிரமிப்பு, ரஷ்யா ஆ·ப்கானிஸ்தானின் மீது படையெடுத்தால், திபெத்தை சீனா ஆக்கிரமித்தால் அது புரட்சி. என்னய்யா இது?
பழைய அனானி

February 16, 2008 7:56 AM

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.