Dienstag, 29. Januar 2008

கோவில்பட்டி தட்டியில் சமஸ்கிருத ஆதரவு வரிகள்!

நண்பர் அசுரன் வழக்கம்போல, ஹை பிளட் பிரஷரில் பதிவு போட்டிருக்கிறார். கண்ணில் தென்படும் அனைத்தையும் நைய புடைப்பது, கொல்லுவது, கழுத்தை நெரிப்பது போன்றவைகளை செய்யவேண்டும் என்று மிகுந்த அவா கொண்டிருக்கிறார். அவரது வழக்கமான ஹை பிளட் பிரஷர் பதிவு கீழே.

அதற்கு பதில் ஊடாக.

//
கோவில்பட்டியில் பீறிட்டோடும் பார்ப்பன இன வெறி!!
Posted by newscap on January 28, 2008

//


பீறிட்டோடுவது ஏதோ ஆறோ, ஓடையோ என்று பார்த்தால் வெறும் போர்டு. நடுத்தெருவில் அனாதையாக போவோர் வருவோர் துப்புவதற்கும் காகம் பேளுவதற்கும் தோதாக நின்றுகொண்டிருக்கிறது.

//
தமிழ்நாட்டின் மொழியாம் தமிழ்மொழியில் வழிபடு என்று சொன்னால் அது மொழி வெறியாம் ஏனெனில் தமிழ் நம்முடைய மொழியாம் ஆனால் சமஸ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், உலகத்தவர்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய பொதுவான மொழியாம் அந்த வகையில் அது உயர்ந்ததாம்.கடவுளின் மொழி சமஸ்கிருதம் உலகம் முழுவதற்க்கும் புரிந்த மொழி அதுதான் எனவே அந்த மொழியில் கடவுளிடம் பேசு என்று மொழி வெறியில் அல்ல பார்ப்பன பண்பாட்டு வெறியில் ஒரு தட்டி போர்டு எழுதி அதை தைரியமாக பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர் கோவில்பட்டியில். எனது மொழி என்பது வெறும் எனது மொழி மட்டும்தானாம் அதில் அதற்க்கு மேல் ஒன்றும் கிடையாதாம். மாறாக சம்ஸ்கிருதம்தான் அதி சிறந்ததாம். ஏன் இந்த தட்டி போர்டையே சம்ஸ்கிருதத்தில் எழுதி வைத்திருக்கலாமே?
//


தமிழ்நாட்டின் மொழி தமிழா? அட எனக்கு தெரியவில்லையே? அட ஞான சூனியமே என்று என் தலையிலேயே தட்டிக்கொண்டேன். முஸ்லீம்கள் உருதுவில் பேசுகிறார்கள். அரபியில் சாமி கும்பிடுகிறார்கள். தெலுங்கு செட்டியார்கள் தெலுங்கும் தமிழும் கலந்த ஒரு கலவையில் பேசுகிறார்கள். தமிழ் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் அவ்வப்போது லத்தீன் பூஜை வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் கன்னடம் பேசும் மக்கள் வீட்டில் கன்னடம் பேசுகிறார்கள். கன்னட பாடல்களை பாடுகிறார்கள். ஈவே ராமசாமி கூட வீட்டில் அப்படி கன்னடம் பேசியவர்தான் என்று சொல்லுகிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகள் வீட்டில் மலையாளம் பேசுகிறார்கள். அது கிடக்கட்டும். என் நண்பர் பஞ்சாபி. வீட்டில் ஆங்கிலம் பேசுகிறார். ரஜினிகாந்த் ரசிகர். மனைவி தெலுங்கர். அவருக்கு தமிழும் தெரியாது, பஞ்சாபியும் தெரியாது. இருவருக்கும் பொதுமொழி ஆங்கிலம்தான். அவரது சகோதரர் தமிழ் தெரியாத ஆனால் கன்னடம் மட்டுமே பேசவும் எழுதவும் தெரிந்த தமிழ் பெண்ணை பெல்காமில் திருமணம் செய்திருக்கிறார். எல்லோரும் சென்னையில்தான் வசிக்கிறார்கள். இதுபோல தேடிப்பார்த்தால், தமிழ்நாட்டில் வீட்டிலும் வெளியிலும் தமிழ் மட்டுமே பேசத்தெரிந்த "தமிழர்கள்" தமிழ்நாட்டில் சிறுபான்மையாகத்தான் இருப்பார்கள். அப்படி பேசும் தமிழர்களின் பூர்வீகத்தை ஆராய்ந்தாலும், அது எங்கோ வடக்கில் சிந்து மாகாணத்திலோ, இன்னும் பின்னால் போனால், ஆப்பிரிக்காவிலோதான் நிற்கும். தமிழ்மொழி தமிழ்நாட்டில் வாழும் பெரும்பான்மையானவர்கள் புரிந்துகொண்டு ஒருவரோடு ஒருவர் உறவாட உள்ள மொழி.

அது மட்டுமல்ல, இதே விஷயம்தான் கேரளாவிலும், கர்நாடகாவிலும், ஆந்திராவிலும், ஏன் எல்லா இந்திய மாநிலங்களிலும் இருக்கும். மக்கள் சுதந்திரமாக எல்லா நகரங்களிலும் போய் வேலை தேடுகிறார்கள். மனைவி தேடுகிறார்கள். தங்குகிறார்கள். தங்கும் இடத்தை செழிப்பாக்குகிறார்கள்.

சன் டிவியிலும் விஜய் டிவியிலும் ஏன் முக்கால்வாசி பெண்களும் ஆண்களும் அரைகுறை தமிழும் அரைகுறை ஆங்கிலமும் கலந்து பேசுகிறார்கள் என்றால், ...

அதுதான் அவர்கள் மொழி. அது மக்களின் மொழி. மொழி புலவர்களுக்காகவோ, அல்லது அரசியல்வாதிகளுக்கோ காத்திருப்பதில்லை. அது ஒரு உயிருள்ள ஜீவன். அது தொடர்ந்து வளர்ந்து மாறுதல் அடைந்துகொண்டே செல்கிறது. உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் போடும் வெட்டி கோஷத்தால் வளர்ச்சியும் நிற்பதில்லை. மாறுதலும் நிற்பதில்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் குஜராத்தி ஜைனர்கள் குஜராத்தியில் கும்பிடுவார்கள். அவர்களிடம் போய் தமிழில் வழிபடு என்று சொன்னால், அது மொழி வெறி இல்லையா? முதலில் மனிதர்களின் சுய தேர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை பாடம். நீங்கள் கம்யூனிஸத்தை (அது எவ்வளவுதான் அராஜக, தவறான, குரூரமான, ஜனநாயக விரோத,மக்கள் விரோத கொள்கையாக இருந்தாலும்) நல்ல கொள்கை என்று நம்புவதற்கு உங்களுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அதன் கொள்கையைபிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறதோ அதே போல, சமஸ்கிருதம், அரபி ஆகியவற்றில்தான் இறைவனை தொழ வேண்டும் என்று கூறவும் மக்களுக்கு (அவர்கள் எந்த மக்களாக இருந்தாலும்) உரிமை உண்டு. அதனை பிரச்சாரம் செய்யவும் உரிமை உண்டு.

ஏன், தமிழ்மொழி தமிழ்நாட்டில் யாரும் பேசவேண்டாம், உங்கள் வீடுகளிலும், உங்கள் வேலைக்காரர்களிடமும் ஆங்கிலமே பேசுங்கள் என்று தமிழில் பிரச்சாரம் செய்யவும் ஒருவருக்கு இங்கே உரிமை உண்டு. (அவ்வாறு பேசிய தமிழ்நாட்டு பெருந்தலைவர் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்)

//யாருமே பேசாத மொழியாம் சம்ஸ்கிருதத்தில் வழிபடு என்று தைரியமாக சொல்வதோடல்லாமல் தமிழில் வழிபடு என்று சொல்வது இனதுவேசத்தால் என்கிறார்கள்? அதாவது எனது மொழியில் எனது கடவுளை கும்பிடுவேன் என்று விரும்புவது சம்ஸ்கிருத இனத்தின் மீதான துவேசத்தாலாம். அதாவது எனது மொழியை நான் விரும்பக் கூடாதாம். இனத் துவேசம் என்றால் எந்த இனத்தின் மீதான துவேசத்தால்? அப்படியானால் சம்ஸ்கிருதத்திற்க்கு என்று இனம் உள்ளதா? அப்படியானல் அந்த தட்டி போர்டே சொல்வது போல அது எல்லா இனத்திற்க்குமான மொழியில்லையா? யாருமே பேசாத மொழி எந்த இனத்திற்க்குரியாதாக இருக்க முடியும். பித்தலாட்டக்கார பார்ப்பன பண்பாட்டு வெறியர்களுக்கும் இவையெல்லாம் தெரியாமலில்லை. பார்ப்பன பண்பாட்டு அடிமைகளுக்கோ இவற்றை பகுத்தாராயும் மனிதனுக்குரிய அறிவு இல்லை.//


சமஸ்கிருதத்தில் வழிபடு என்று அவர்கள் சொல்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவுக்கு அதில் வழிபடாதே என்று சொல்லவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், வழிபடுபவன் எதனையாவது தேர்வு செய்யும்போது அதனை தடுக்கவோ, அல்லது அவனது உரிமையை பறிக்கவோ உங்கள் இருவருக்கும் இடமில்லை. சமஸ்கிருதத்திலோ, அல்லது அரபியிலோ, அல்லது லத்தீனிலோ வழிபடு என்று சொல்பவனை தெருவில் நைய புடைக்கவும் உங்களுக்கு உரிமை இல்லை.

//
எனது கடவுளை எனக்கு தெரிந்த மொழியில் வழிபடுவது எனது உரிமை என்று கோரினால் அவ்வாறு கேட்பவர்கள் கடவுள் பக்தியில்லாத அரசியல் பிழைப்புவாதிகளாம். சிதம்பரத்தில் தமிழில் வழிபடும் உரிமை கோரி போராடும் ஆறுமுகச்சாமி என்னும் சிவனடியாரும் இவர்கள் கணக்கில் கடவுள் பக்தியில்லாதவர். உண்மையில் அவரை அப்படித்தான் நடத்தினார்கள் தில்லைவாழ் தீட்சிதர்களும், அவர்களின் அல்லக்கையான நீதிமன்றமும். அதாவது பார்ப்பனியத்தின் பண்பாட்டு மேன்மையை ஏற்றுக் கொள்ளாத யாரும் இவர்கள் கணக்கில் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்தான். அதாவது பார்ப்பான்தான் கடவுள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த வெறியர்கள்.
//


ஆறுமுகசாமி செய்வது இன்னொரு அபத்தம். சிவாச்சாரியார் பூஜாரியாக இருக்கும் கோவிலில் நான் எப்படி என் கடவுளை வழிபடலாம் என்பது அவருக்கும் அவரது கோவிலுக்கு வருகிறவர்களுக்குமான ஒரு எழுதப்படாத ஒப்பந்தம். அந்த கோவிலில் இப்படி வழிபடுவேன் என்று தெரிந்துதான் பக்தன் அங்கே வருகிறான். அவனுக்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று போர்டு மாட்டியிருப்பது தெரியும். தமிழில் அர்ச்சனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டால், அந்த அர்ச்சகர் தமிழிலும் அர்ச்சனை செய்வார். மக இக ஆட்சிக்கு வந்ததும், அங்கு ரஷிய மொழியில் அர்ச்சனை செய்யப்படும் என்று வேண்டுமானாலும் போர்டு வைக்கச்சொல்லுங்கள். எந்த பக்தராவது கேட்டுக்கொண்டால், உங்களால் நியமிக்கப்படும் ரஷிய மொழி அர்ச்சகர் ரஷிய மொழியில் அர்ச்சனை செய்து தருவார்.

விளையாட்டுக்கோ அல்லது கேலிக்கோ சொல்லவில்லை. உண்மையிலேயே ரஷியாவில் இந்துமதம் பரவி அங்கிருந்து மயிலாப்பூர் கோவிலுக்கு ரஷிய மொழி பக்தர்கள் வந்தால் என்ன செய்வது? மக இக சொல்லாமலேயே திமுக அரசு அந்த போர்டை மாட்டும். கவலையே வேண்டாம்.

ஆறுமுகசாமிக்கு தமிழில் பாடவேண்டும் என்று ஆசையிருந்தால், அவருக்கு ஒரு சிதம்பர கோவில் கட்டித்தாருங்கள். அங்கு அவரை பாடச்சொல்லுங்கள்.

//தமிழ் வழிபடுவதற்க்கான மொழியில்லை என்று வரலாற்றை திரித்துக் கூறும் இந்த பார்ப்பனியர்கள் இதன் மூலம் தமிழ் நீச மொழி என்பதை வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள். தமிழ் வழிபாட்டு மொழி என்ற வரலாற்றிற்க்கும் கூட தில்லையே ஆதரமாக இருக்கிறது. சிவாலயங்கள் அங்கு வழிபடும் சைவர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் இவர்கள் சைவர்கள் என்று யாரைச் சொல்வார்கள் எனில் பார்ப்பனியத்தை சுவீகரித்துக் கொண்டவர்களைத்தான். ஏனேனில் பார்ப்பனியத்தை எதிர்த்து நிற்க்கும் ஆறுமுகச்சாமி என்ற சிவனடியாருக்கு இவர்கள் குரல் கொடுப்பதில்லை.

சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்குமான சநாதன தர்மம் என்று வெளிப்படையாக பார்ப்பனியத்தை பேசுகிறது இந்த தட்டி போர்டு.

மானங்கெட்ட இந்த தட்டி போர்டு ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும், அவர்களின் மொழியையும், பண்பாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொதுச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதை தட்டிக் கேட்பதுடன் அல்லாமல் பார்ப்பன் பண்பாட்டு வெறியர்களையும், அவர்களின் அல்லக்கை அடிமைகளையும் நடு ரோட்டில் வைத்து நையப் புடைக்க வகையின்றி தமிழ் சமுதாயம் இருப்பது ஆக அவமானகரமானது.

இமெயிலில் செய்தி: குருசாமி, கோவில்பட்டி.
செய்திரசம்.
//


ஏன் இஸ்லாம் பாரத தேச மக்களுக்கு அனைவருக்குமான அரபி மதம் என்றுகூட தட்டி வைக்கலாம். அல்லது எல்லோரும் மாவோ லெனின் ஸ்டாலின் வழியில் பக்கத்துவீட்டுக்காரர் எல்லோரையும் சுட்டுபொசுக்கவேண்டும் என்றுகூட நீங்கள் தட்டி வைக்கலாம். என்ன பிரச்னை? வையுங்கள். நாங்கள் விரும்பும் கம்யூனிஸ்டு புரட்சி நட்ந்தால், எல்லா எஞ்சினியர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், கல்வி கற்றவர்கள் எல்லோரையும் சுட்டுத்தள்ளுவோம் என்று தட்டி வையுங்கள். யார் கண்டார்? பைத்தியக்காரனை சுற்றியும் பத்துபேர் என்பார்கள். உங்களுக்கும் கூட்டம் வந்தால் வரலாம்.

தமிழில் வழிபடு என்று சொல்ல ராமானுஜருக்கு எப்படி உரிமை இருந்ததோ அதே போல அதனை பின்பற்றாமல் சமஸ்கிருதத்தில் வழிபடவும் மற்றவர்களுக்கு உரிமை உண்டு. ஆறுமுக சாமி தனியே கோவில்கட்டி அதில் அவர் தமிழில் பாசுரம் பாடட்டும். ராமானுஜர் தன்னை பின்பற்றியவர்களிடம் திருப்பாவை முதல் எடுத்து இறைவனை பாடச்சொன்னார். (தமிழில் பாடாதவர்களை நடுத்தெருவில் நையப்புடைத்து தன் ஆணைகளை நிறைவேற்றிக்கொள்ளவில்லை) ஆந்திராவில் தமிழ் ஒருவார்த்தை தெரிந்திராத தெலுங்கு பூசாரிகள் தமிழில் திருப்பாவை பாடித்தான் திருப்பதியில் ஆரம்பிக்கிறார்கள். அங்கு சென்று தெலுங்கில் பாடு, தமிழில் பாடாதே என்று போரிடப்போகிறீர்களா? அல்லது அந்த பூசாரிகளை நடுத்தெருவில் இழுத்து போட்டு நைய புடைக்கப்போகிறீர்களா? தமிழில் பாடியதற்காக அந்த பூசாரிகளை மாவோயிஸ்டுகள் செய்வது போல கழுத்தை வெட்டி துண்டாக்கப்போகிறீர்களா?

--

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்பது சரியான விஷயம். ஏனெனில், அதுவே பெரும்பான்மையான மக்களின் தொடர்பு மொழி.

அதே போல, பண்டைய இந்தியாவின் தொடர்பு மொழியாக இருந்தது சமஸ்கிருதம். இன்று தொடர்பு மொழியாக இருப்பது ஆங்கிலம். இரண்டின் மீது வெறுப்பு கொண்டிருப்பவர்களும் மக்கள் விரோதிகளே.

மொழிவெறி, இனவெறி என்று சிவாச்சாரியார்கள் எழுதியது உண்மைதான். தமிழ்நாட்டில் தமிழில்தான் பேசவேண்டும், கும்பிடவேண்டும் என்று ஆணையிட நீங்கள் யார்? தமிழ்நாட்டின் பன்மைத்தன்மையை, இந்தியநாட்டின் பன்மைத்தன்மையை மறுத்து அதன் மீது ஒற்றை அடையாளத்தை திணிக்கும் அனைத்து விஷயங்களும் எதிர்க்கப்படவேண்டியவையே.

ஆனால், மற்ற கட்சிகளுக்கும் உங்களுக்கும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. இதே போன்று ஒற்றை அடையாளத்தை தூக்கி நிறுத்தும் திமுக வன்முறை கட்சி அல்ல. அந்த கட்சியில் உள்ளவர்கள் சில வேளைகளில் வன்முறையில் இறங்கியிருக்கலாம். ஆனால், கட்சியின் கொள்கையில் வன்முறை இல்லை. வன்முறையை நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால், கம்யூனிஸ்டுகள் அப்படியல்ல. வன்முறையை நியாயப்படுத்துபவர்கள். கையில் ஏகே47 வைத்திருப்பவனிடம் என்ன வாதிட முடியும்? திமுக, பிரச்சாரம் செய்து தன் இருப்பை உறுதிசெய்கிறது. அந்த பிரச்சாரம் எடுபடவில்லை என்றால் தோற்கிறது. தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ள ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைக்கிறது. திமுகவின் கொள்கை சரி, அவர்கள் சொன்னது சரி என்று மக்கள் தேர்தலில் ஆமோதித்தால், திமுக என்ன வாக்குறுதியை மக்களிடம் கூறியதோ அதனை நிறைவேற்றலாம் (லாம்தான்).

நீங்களோ பாராளுமன்றம் பன்றித்தொழுவம், பாராளுமன்றத்துக்கு போகிறவர்கள் பன்றிகள். புரட்சிப்பாதையே (அதாவது ஏகே47, சுட்டுத்தள்ளும் பாதை) உங்கள் பாதை என்று பகிரங்கமாக அறிவிப்பவர்கள். மக்களின் பன்மைத்தன்மை, அவர்களது வெவ்வேறுவிதமான கருத்துக்கள், அந்த பன்மைத்தன்மையை பிரதிபலிக்கும் அவர்களது தேர்வுகள், ஓட்டுகள் அனைத்தையும் நிராகரிப்பவர்கள்.

அதனால்தான், நீங்கள் ஆபத்தானவர்கள், மக்கள் விரோதிகள், ஜனநாயக மறுப்பாளர்கள்.

இப்படிக்கு
செய்தி மோர்க்குழம்பு

//

தட்டி போர்டில் உள்ளது:

சைவப்பெரியோர்களே!

சமீப காலமாக தெய்வ நம்பிக்கை சிறிதும் இல்லாத நாத்திகர்கள் சிலர், தமிழ் வேதம் என்ற போர்வையில், சைவ சமயத்துள்ளும், சிவாலயங்களில் செய்யப்பட்டுவரும் ஆகம வழிபாட்டு முறைகளிலும், பல குழப்பங்களைச் செய்து வருகிறார்கள். நம்முடைய சைவ மடாதிபதிகளை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்தியும் வருகிறார்கள். இவர்கள் கூற்று, தமிழ் மொழியால் மட்டுமே அர்ச்சனை, மற்றும் நித்திய நைமித்திக பூஜைகள், கும்பாபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்பது. இவர்கள் கூற்று சைவ சமயப்பற்றினாலோ, தமிழ் மொழிப்பற்றினாலோ எழுந்தது அல்ல. சம்ஸ்கிருத மொழி துவேசத்தாலும், இன துவேசத்தாலும் எழுந்தது. தமிழ் மந்திரங்கள் தமிழ் அர்ச்சனை என்பது ஒரு மாயை.

சிவாலயங்கள் அங்கு வழிபாடு செய்யும் சைவர்களுக்கு மட்டுமே உரிமையுடையது. அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு தெய்வ நம்பிக்கையே இல்லாத இவர்கள் யார்? அவர்கள் நோக்கமெல்லாம் இது போன்ற குழப்பங்களைச் செய்து, மொழி வெறியைத் தூண்டி, சுய விளம்பரமும், அரசியல் ஆதாயமும் தேடுவது தான். இவர்களிடம் சைவ மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களின் சாதுர்யப் பேச்சுக்களை உதாசீனம் செய்யுங்கள்.

சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்கும் உரிய பொதுவான சநாதன தர்மம், அதைத் தோற்றுவித்தவரும், வேத ஆகமங்களை அருளிச் செய்தவரும், அனாதி மூத்த சித்துரு ஆகிய சிவபெருமானாரே.

சைவம் நம்முடைய சமயம், தமிழ் நம்முடைய மொழி, சமஷ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், எல்லா உலகத்தவர்களுக்கும், எல்லா இனத்தவர்களுக்கும் உரிய பொதுமொழி, மொழி வெறியைத் தூண்டி நம்முடய சமயத்தை அழிக்க முயலும் வேடதாரிகளை ஒதுக்கித் தள்ளுங்கள்.

இது பற்றிய விரிவான உண்மைகளை அடியோங்கள் 14-4-1998ல் வெளியிட்ட “சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்! ஏன்?” என்ற வெளியீட்டில் கண்டு தெளிக.

இப்படிக்கு
திருமறை மன்றம், கோவில்பட்டி
ஸ்ரீ அப்பரடிகள் சிவாலய உழவரப்பணித் திருக்கூட்டம், கோவில்பட்டி
ஸ்ரீ மாணிக்கவாசகர் சைவ சபை, கோவில்பட்டி
//

55 Comments:

Anonym said...

!

Great piece of writing..

Enlightening..

Anonym said...

மானம் கெட்ட மட சாம்பிராணியே! கோயம்புத்தூர் பீளமேட்டைச் சேர்த தேவர்ஜாதி நாயான டாலர் செல்வனே, உனக்கு ஏன் இந்த ஈனப் பிழைப்பு? ஏற்கெனவே முத்தமிழ், பண்புடன் என எல்லா இடமும் பாப்பார நாய்களுக்கு கொட்டை தாங்கி மகிழ்வது போதாதென தமிழ்மணை என்று இன்னுமொரு ஈனப் பிழைப்பா? அடச்சீப்ப்போ தூர நாயே.

சேகுவாரா மூத்திரம் குடித்தாலும் உனக்கு துளிகூட அறிவு ஏறாது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழில் பேசி தமிழில் பதிவு எழுதிக் கொண்டு தமிழையும் தமிழனையும் திட்டும் உன் அம்மா உன்னை எம்மொழிக் காரனுக்குப் பெற்றாள்? நினைத்துப் பாரடா பாப்பார அடிவருடி நாயே!!!

Anonym said...

வேற மொழியில் பிளாக் எழுதினா யார் என்று கண்டு பிடிக்க முடியாதுன்னு நெனைச்சியாடா பரதேசிப்பய மகனே.

நீ பாப்பானுக்கு கொட்டை தாங்குறே. மஞ்சூர் ராசா பயல் உனக்கு கொட்டை தாங்குறான். எனவே நீ கம்யூனிஸ்ட்டுகளை ஆபாசமா திட்டுறே.

இழுத்து வெச்சு செப்பறைச்சலா அறைஞ்சா அப்போ தெரியும்டா கம்மனாட்டி. கோயம்புத்தூரில் நீ ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு சேர்ந்து கொண்டு வீட்டுக்கு வீடு குண்டு வெச்சது தெரியாதுன்னு நெனைக்கிறியா? அடுத்தமுறை நீ அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும்போது உனக்கு இருக்குதுடா சுளுக்கு!

நீ உன் அப்பனுக்குத்தான் பிறந்தது உண்மை என்றால் நேருக்கு நேர் மோதிப்பாருடா தேவர் ஜாதி நாயே. நானும் கோவையில்தான் இருக்கேன்.

தியாகராஜன்

said...

பரிதாபம்.. பரிதாபம்..

தியாகராஜன்,

இங்கே எழுதியிருக்கிற கருத்துக்களுக்கு பதில் எழுதுங்கள்.

எதற்கு வீணாக செல்வனை இழுக்கிறீர்கள்?

கம்யூனிஸ்டுகளால் இதுதான் முடியுமா? ஏகே47ஆல் மட்டும்தான் அவர்களுக்கு பேச தெரியும் என்பதையே மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள்.

Anonym said...

\\ஏன், தமிழ்மொழி தமிழ்நாட்டில் யாரும் பேசவேண்டாம், உங்கள் வீடுகளிலும், உங்கள் வேலைக்காரர்களிடமும் ஆங்கிலமே பேசுங்கள் என்று தமிழில் பிரச்சாரம் செய்யவும் ஒருவருக்கு இங்கே உரிமை உண்டு. (அவ்வாறு பேசிய தமிழ்நாட்டு பெருந்தலைவர் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்)//

Onion maNdi owner!!!

Anonym said...

உட்டது சிவப்பு குரூப் புதுப்பெயர் வச்சிண்டு வந்துட்டேளா ?

நன்னா அடிச்சு ஆடுறேள்

Anonym said...

இக்கட்டுரையில் வரிக்கு வரி அபத்தம், பொய், புரியாமை, புரட்டு தான் இருக்கிறது. வரிக்கு வரி உங்களுக்கு விளக்கம் தர சலிப்புதான் ஏற்படும். அடிப்படை கேள்வி இது தான்.

தமிழில் இரண்டாயிரம் ஆண்டுக்கும் முற்பட்ட இலக்கியங்கள் காணக் கிடைக்கிறது. இன்றும் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மொழியாக இருக்கிறது. ஆனால் கோவில்களில் சமஸ்கிருத வழிபாடுதான் நடக்கிறது. எப்படி? ஏன்? தேவை என்ன?

சமஸ்கிருதம் எப்போது தமிழ்நாட்டில் மக்கள் மொழியாக இருந்தது?

இக்கேள்வி உங்கள் பதிலுக்காக அல்ல. உங்கள் தெளிந்த சிந்தனைக்காக.

உடனே மற்ற மதங்களை இழுத்து பதில் 'கேள்வி' கேட்காமல் உண்மையாக "விடைகான" முற்படுங்கள்.

இழுத்தால் பதில் ஒன்று தான் - மற்ற மதங்கள் எப்படி தமிழ்நாட்டில் தோன்றவில்லையோ இந்து மதமும் அப்படித்தான். மற்ற மதங்கள் எல்லாம் வருவத்க்கு முன்பே தமிழர்கள் அனைவரையும் இந்துக்கள் என முத்திரை குத்தி வர்னாசிரமப்படி அதிகாரம் செலுத்தும் பார்ப்பனியமே சமஸ்கிருத திணிப்பு.

said...

//ஆனால் கோவில்களில் சமஸ்கிருத வழிபாடுதான் நடக்கிறது. எப்படி? ஏன்? தேவை என்ன?
//

இல்லை.
சரியாக படியுங்கள். நான் இங்கே சொல்வது சம்ஸ்கிருத வழிபாடுதான் நடக்கவேண்டும் என்றோ, நடக்கக்கூடாது என்றோ கூறவில்லை.

அந்த தேர்வை செய்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு என்று சொல்கிறேன்.

யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி சமஸ்கிருதம் சொல்லும் கோவிலுக்கு போய்த்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்த முடியாது. இந்துவாகத்தான் இருக்கவேண்டும் என்றும் வற்புறுத்த முடியாது. தமிழில் பாடும் வைணவ கோவிலுக்கு போவதோ அல்லது தமிழில் பூசை செய்யும் சைவக்கோவிலுக்கு போவதோ மக்கள் விருப்பம், அவர்கள் உரிமை.

அப்படி உங்களுக்கு தமிழில் பூசை செய்ய விருப்பம் இருக்கிறதா? உங்களுக்கான கோவிலை கட்டிக்கொள்ளுங்கள். உங்களை பின்பற்றுகிறவர்களிடம் சமஸ்கிருத கோவிலுக்கு போகாதே என்று கூறுங்கள்.

ஆனால், சமஸ்கிருதத்தில் பாடுபவனை இழுத்து போட்டு அடிப்பேன், கழுத்தை வெட்டுவேன் என்பது உங்களது பாசிஸ குணத்தையே காட்டும்.

Anonym said...

அம்பி,

இந்தியாவை விடுங்க ஓய்,
வெளிநாட்டில் இந்து கோவில்கள் இருக்கின்றன, அதில் வெள்ளைக்காரன் வந்து செல்கிறான், அவனுக்காக ஆங்கில அர்சனை செய்வதற்கு எதாவது தட்டி இருக்குதா ?

அவன் காசை வாங்கி வயிறு வளர்கிறவர்கள் ஆங்கிலத்தில் அர்சனை செய்து கொடுப்பார்களா ?

said...

ஏன் செய்தால் என்ன? தாராளமாக ஆங்கிலத்தில் செய்யட்டுமே.

ஆங்கிலேயன் இந்துக்கோவில் கட்டி அதில் ஆங்கிலத்தில் பூசை செய்தால் உங்களுக்கென்ன போச்சு?

Anonym said...

//தமிழ்மணி said...

ஏன் செய்தால் என்ன? தாராளமாக ஆங்கிலத்தில் செய்யட்டுமே.

ஆங்கிலேயன் இந்துக்கோவில் கட்டி அதில் ஆங்கிலத்தில் பூசை செய்தால் உங்களுக்கென்ன போச்சு?
//

இந்த பதிவினை நோண்டு ராகவன் எழுதுவது போல் தெரிகின்றது!!!

Anonym said...

தமிழ்மணி hat gesagt...
ஏன் செய்தால் என்ன? தாராளமாக ஆங்கிலத்தில் செய்யட்டுமே.

ஆங்கிலேயன் இந்துக்கோவில் கட்டி அதில் ஆங்கிலத்தில் பூசை செய்தால் உங்களுக்கென்ன போச்சு?
//

தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்கள் எல்லாம் சமஸ்கிரதம் பேசும் பார்பனர்கள் கட்டியதா? என்ன ஓய் உளரல்?

பாப்பான் வியர்வை சிந்தி பார்த்திருக்கிறீரா நீய்யீ. தமிழ்நாட்டில் தமிழர்களுக்காக கட்டிய கோவிலில் பாப்பான் கவுரவ பிச்சை எடுக்கிறான். உரிமை என்று பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லை? சதுர்வேதி மங்கலம் எப்படி வந்தது தெரியுமா ஓய்?

Anonym said...

நான் எழுதிய மொத்த பத்தியுமே அடிப்படையில் ஒரே கேள்வியைத்தான் எழுப்புகிறது. இதில் உங்கள் வசதிக்கு இரண்டு வரிகளை பிரித்துதெடுத்து வாதம் செய்வதை என்னவென்று சொல்வது?

உங்கள் பதில் கூறும் ஆர்வமும் 'போலி ஜனநாயகத்' தன்மையும் தான் தெரிகிறது. சிந்தனை துளியுமில்லை.

மீண்டும் ஒருமுறை 'புரிந்து' படியுங்கள். வேறென்ன சொல்ல.....

/தமிழில் இரண்டாயிரம் ஆண்டுக்கும் முற்பட்ட இலக்கியங்கள் காணக் கிடைக்கிறது. இன்றும் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மொழியாக இருக்கிறது. ஆனால் கோவில்களில் சமஸ்கிருத வழிபாடுதான் நடக்கிறது. எப்படி? ஏன்? தேவை என்ன?

சமஸ்கிருதம் எப்போது தமிழ்நாட்டில் மக்கள் மொழியாக இருந்தது?/

Anonym said...

உயர உயர பறந்தாலும் ஊர் குருவி வல்லூறாகாது!
தமிழகத்தில் அனைவராலும் தமிழ் பேசப்பட்டாலும் - ஒருக்காலும் சமஸ்கிருதத்திற்கு ஈடு-இணை தமிழ் ஆகாது!

இராம கோபால தாசன்

said...

ஏன் தெலுங்கர்கள் கோவில்கட்டி அதில் திருப்பாவை பாட வைக்கிறார்கள்? அது என்ன தமிழ் ஆதிக்கமா? அல்லது தமிழர்கள் வேர்வை சிந்தி கட்டிய கோவில்களா?

பார்ப்பனர் மட்டுமல்ல, எல்லா மனிதர்களுக்கும் வேர்வை வரத்தான் செய்யும்.

யோசித்துப்பாருங்கள்.

Imagined victimhood is a bad politics.

said...

நண்பரே,
நான் அதற்கு முன்னரே பதில் கூறிவிட்டேன். படியுங்கள். இந்துமதம் வெளியிலிருந்து வந்தால் என்ன உள்ளேயிருந்து வந்தால் என்ன?

இந்துக்கள் என்று உங்கள் மீது யாரேனும் முத்திரை குத்தினால் நீங்கள் ஏன் ஒப்புக்கொள்ளவேண்டும்?

தமிழில்தான் தமிழர்கள் வழிபாடு செய்யவேண்டும் என்று சொன்னால், தமிழர்கள் அனைவரும் சிதம்பரம் கோவிலுக்கு போகவேண்டும் என்று சொல்கிறீர்களா? அது தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று சொல்கிறீர்களா? அப்படியென்றால், பார்ப்பனர்கள் செய்ததாக நீங்கள் சொல்லுவதற்கும், நீங்கள் இப்போது செய்வதற்கும் வித்தியாசமென்ன?

said...

இராம கோபால தாசன்,

உங்களது வஞ்சப்புகழ்ச்சி உருவேற்றத்தை எல்லாம் வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த விவாதம் உங்களுக்கு புரியாது.

Anonym said...

//அப்படி உங்களுக்கு தமிழில் பூசை செய்ய விருப்பம் இருக்கிறதா? உங்களுக்கான கோவிலை கட்டிக்கொள்ளுங்கள்.//

சமஸ்கிருதமணியின் மணியான கேள்வி, மணியான பதில். அதன் அர்த்தம் என்னவென்றால், சமஸ்கிருதத்தில் பூஜை நடக்கும் கோவில்களெல்லாம், சமஸ்கிருதத்தில் பூஜை செய்ய விரும்பியவர்கள் அவர்களாக கட்டிக்கொண்டவை. பாம்பு புற்று கட்டிய கதை கேள்விபட்டிருக்கிறீர்களா? அது மாதிரி.

Anonym said...

மீண்டும் உங்கள் பதில் கூறும் ஆர்வமும் 'போலி ஜனநாயகத்' தன்மையும் தான் தெரிகிறது. சிந்தனை துளியுமில்லை.

பார்ப்பனர்கள் செய்தது சூழ்ச்சி, அயோக்கித்தனம். அடுத்தவர்கள் மீதான அதிகாரம்.
நாங்கள் செய்வது அதற்கெதிரான, எங்கள் சுய உரிமைக்கான போராட்டம்.
அம்புட்டுதே.....

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...

//அப்படி உங்களுக்கு தமிழில் பூசை செய்ய விருப்பம் இருக்கிறதா? உங்களுக்கான கோவிலை கட்டிக்கொள்ளுங்கள்.//

செல்வன்,

அப்போ கோவில்களில் சமஸ்கிருதம் சொல்கிறானே பாப்பான், தற்போதுள்ள எல்லா தமிழக கோயில்கள் அனைத்தும் பாப்பான் கட்டியதா?

ஹாஹாஹாஹா

பேசுவதற்கு முன் என்ன பேசுகின்றோம் என்று தெளிவாக பேச முயற்சி செய்யவும். என்ன மப்பா செல்வன்?

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...

//தமிழில்தான் தமிழர்கள் வழிபாடு செய்யவேண்டும் என்று சொன்னால், தமிழர்கள் அனைவரும் சிதம்பரம் கோவிலுக்கு போகவேண்டும் என்று சொல்கிறீர்களா? அது தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று சொல்கிறீர்களா? அப்படியென்றால், பார்ப்பனர்கள் செய்ததாக நீங்கள் சொல்லுவதற்கும், நீங்கள் இப்போது செய்வதற்கும் வித்தியாசமென்ன?//

செல்வன்,

சிதம்பரம் கோயில் தீட்ஷிதர்கள் தங்கள் சொந்த உழைப்பினால் சொந்த பணத்தைப்போட்டு கல்லும் மண்ணும் சுமந்து கட்டிய திருக்கோயில் என்று கருதுகின்றீர்களா? மறைக்காமல் உண்மையைச் சொல்லுங்கள்.

பார்ப்பனரல்லாத உங்களுக்கு ஏன் இந்த பார்ப்பன ஆதரவு? RSS என்ற தீவிரவாத கோவை பிரிவில் நீங்கள் இருப்பதாலா?

said...

சில தேவையற்ற பதில்களை நீக்குகிறேன்

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...

//அப்படி உங்களுக்கு தமிழில் பூசை செய்ய விருப்பம் இருக்கிறதா? உங்களுக்கான கோவிலை கட்டிக்கொள்ளுங்கள். உங்களை பின்பற்றுகிறவர்களிடம் சமஸ்கிருத கோவிலுக்கு போகாதே என்று கூறுங்கள்.//

தற்போது தமிழ்நாட்டில் ஏன் உலகத்தில் உள்ள எல்லா கோவில்களும் பார்ப்பனர் கட்டிய கோயில்கள் அதனால்தான் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதப்படுகிறது என்று சொல்கிறீர்களா செல்வன்?

//ஆனால், சமஸ்கிருதத்தில் பாடுபவனை இழுத்து போட்டு அடிப்பேன், கழுத்தை வெட்டுவேன் என்பது உங்களது பாசிஸ குணத்தையே காட்டும்.//

பாபர் மசூதியை உடைத்த பார்ப்பனர்களையும் இந்து வெறியர்களின் செயலையும் சரி என்றா சொல்கிறீர்கள்? கோத்ரா ரயிலில் மக்களை உயிரோடு எரித்த பாதகர்களை நல்லவர் என்றா சொல்கிறீர்கள்? அப்பாவி முகமதிய இளைஞனை கொலை செய்த நரேந்திர மோடி என்னும் அரக்கனை நல்லவன் என்றா சொல்கிறீர்கள்? இங்கே உள்ள எல்லா பார்ப்பனர்களும் அவர்களின் அடிவருடிகளும் அப்படித்தானே சொல்கின்றனர்!

said...

நண்பர்களே கவனியுங்கள்.

சமஸ்கிருதத்தில் நடக்கிறது, அரபியில் நடக்கிறது, தமிழில் நடக்கிறது, லத்தீனில் நடக்கிறது என்று ஒவ்வொருவரையும் விரோதிகளாக உருவகிக்காதீர்கள்.

அவைகளுக்கு ஆயிரத்தெட்டு காரணங்கள். வரலாற்று காரணங்கள், கலாச்சார காரணங்கள், பண்பாட்டு காரணங்கள், ஆன்மீக காரணங்கள், அடையாள காரணங்கள் என்று ஆயிரம்.

உங்களால் முடிந்தால், உங்களுக்கான மாற்றத்தை நோக்கிய பிரச்சாரத்தை மேற்கொள்ளுங்கள். அல்லது மாற்று வழிகளை, மாற்று இடங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளுக்கு நான் ஆதரவானவன். வன்முறைக்கும், அடிதடிக்கும், கழுத்தை நெரி, நடுத்தெருவில் கொல்லு ஆகிய வசனங்களுக்கு அல்ல.

இந்த கட்டுரை கம்யூனிஸ்டுகளின் ஜனநாயக எதிர்ப்பு உணர்வுக்கு மட்டுமே எதிரானது. சமஸ்கிருதத்துக்கு ஆதரவோ, எதிர்ப்போ இதில் இல்லை. நீங்களாக உருவகித்துக்கொண்டு எழுதினால், பலனில்லை.

தமிழ்மொழி தமிழ்நாட்டில் யாரும் பேசவேண்டாம், உங்கள் வீடுகளிலும், உங்கள் வேலைக்காரர்களிடமும் ஆங்கிலமே பேசுங்கள் என்று தமிழில்தான் ஈவெரா பெரியார் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரம்தான் செய்தார். ஆனால், ஆங்கிலத்தில் பேசாத தமிழர்களை எல்லாம் கொல்ல கிளம்பவில்லை.

இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே எழுதியது போல, நீங்கள் நம்புவதை உரத்து சொல்லுங்கள்.

ஆனால், அதனை ஒருவன் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், கொல்ல வராதீர்கள். அவ்வளவுதான் நான் சொல்லுவது.

said...

நான் செல்வன் இல்லை.

said...

//அதே போல, பண்டைய இந்தியாவின் தொடர்பு மொழியாக இருந்தது சமஸ்கிருதம். இன்று தொடர்பு மொழியாக இருப்பது ஆங்கிலம். இரண்டின் மீது வெறுப்பு கொண்டிருப்பவர்களும் மக்கள் விரோதிகளே.//

நீங்கள் கூறுவது தமிழ் நாட்டு கோவில் பற்றி.சமஸ்கிருதம் எந்த காலத்தில் தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக இருந்தது?இந்த பதிவின் மூலம் உங்களுடைய உண்மையான கம்யூனிச எதிர்ப்பின் அடிப்படை காரணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

said...

I dont know when it was language of the court. Neither I care. But I do know it was the communication language of ancient India as seen in the history books.

What I personally think about Sanskrit is immaterial for this discussion as I wrote earlier.

People would see what they want to see. It is difficult to force them to see a different perspective, when all their mind is already made up on something else.

This prevalent anti-sanskrit feeling is what communists want to utlize for their benefit.

said...

Sanskrit was never a spoken language, rather it was a language which was common among the various scholars of Ancient India. As these scholars were of different mother tongue they used sanskrit to record their knowldege such that it can be perpetuated & shared among the fellow Indians. If one say that Sanskrit was never an official language of Tamilnadu, I agree with them completly. But If u say that tamilians never had any relation with Sanskrit, then I pity u. If it is so, then how it was possible for Kamban to translate Valmiki Ramayan to tamil. Alike Kamban, there are a plenty of tamil scholars who had a good command over Sanskrit & that helped them in interacting with other scholars of different mother tongue.

Also, by repeated false propagandas, these pity guys want to perpetuate a myth that tamil were never a Hindu. Let me ask a question to these guys, "Sir, If that is so, then what is ur say on 'Dravida Rig' which is part of Rig Veda?". If u suspect the info that I have provided, u can confirm with ur "God-Father" Mr.PeriyarDaasan in this regard. Wait, are u thinking of calling him as "Paarpaana Adivarudi"? :))

said...

வாழு வாழவிடு என்று நீங்கள் சொல்லவருவதை எடுத்துக் கொள்ளாமல் சமஸ்கிருதம் தமிழ் என சண்டைக்கு வருகிறார்கள்.

பாவம் இவர்கள்

said...

Coming to the issue, Archanai done in Tamil is never/ever inferior in Hinduism. But u can't demand that it should be done only in Tamil. Guys, it is upto the belivers/worshippers to choose their language. Moreover, if u say "Tamil" should be the medium in Hindu Temples, y can't u request the same with other religions too. Do u dare to do? Every religion(except Hinduism) has their own reservations, either in-favour(or)against, in regard to some issues. Say for Muslims, arabic is the sacred, for Chrisitans, Jews & Judaism are the one they hate most(But, they have forgot(or)they don't want to remember, that their Bible was written in Hebrew :))) ).

But Hinduism is never been such. It has accepted all languages & all forms, even the stupid way of approach like urs(Commies/Fake Dravidians/Anti-Hindu), which is known as "Charvaka".

Moreover, even in lieu with contemporary philosophies or with the thinking pattern, what u guys do is an absolute example of "Identity violence". You have no right to enforce ur identity on others. For more explanation on "Identity violence", u can contact Mr.A.Marx, he can arrange u a crash-course on these.

/*சதுர்வேதி மங்கலம் எப்படி வந்தது தெரியுமா ஓய்?*/

Here is one another fake claim, thanks to Prof. A.Sivasubrmaniam. Enough proofs & explanations have been provided to prove the above statement as a false one. I dunno y u guys repeatedly come out with the same old arguments. here is the link that gives the exact picture of சதுர்வேதி மங்கலம் :

http://www.sishri.org/av.html

Also, one more question, y u guys never speak abt Prof. A.Sivasubrmaniam's book, "கிறித்துவமும் சாதியும்"?

I would recommens u guys to read my post regarding this book.
http://hariinvalaipoo.blogspot.com/2007/11/blog-post_13.html

Finally, I have small piece of advice for u all(Commies/Fake Dravidians/Anti-Hindu), "Don't scream with false claims & propagandas. Just Grow up"

said...

Instead of Sanskrit, if it is Arabic or Latin or English, My stand would be same.

I respect people's choice. No more, no less. Period.

said...

நண்பர் சம்பூகன் இங்கே அனானியாக எழுதிய பலரின் கருத்தை பிரதிபலித்து என்னை பார்ப்பனமணி என்று அழைத்துள்ளார்.

அவரது கருத்துக்களுக்கு நன்றி.

அவை இங்கே இருக்கின்றன.

http://sampoogan.blogspot.com/2008/01/blog-post_30.html

said...

It is intresting to read my hometown issue have been discussed in blogger world .

Coming to the issue:

I am a hindu and never belive in sanskrit but i accept the fact that freedom of worship has to be excericed. I think we have to change the langauge of choice board in all temples as " here if people wish sanskrit puja will be provided " will shut the people to interfer the regilion activity .

Keep in mind all Hindu people dont know why sanskrit is language of communication between them and god. Lot of divine scripts are in sanskrit but nowadays lot of them coming in form of other languages . Given chance , tamil can be medium for puja and if devotee wish sanskrit can be performed. People who are against sanskript pujas please work for translations to tamil .


FYI:
Do you know in Kovilpatti are , more than 50 % people speak other language than TAMIL ( telugu ? ) In census they say Mother tongue is Tamil but in home they never speak tamil.

said...

Tamilblog

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.

உங்கள் கருத்துக்களை முழுவதும் ஒப்புக்கொள்கிறேன்.

மதச்சுதந்திரம் என்பதை கம்யூனிஸ்டுகள் ஒப்புக்கொள்வதில்லை.

கோவிலுக்கு போகிறவர்கள் வர்க்க எதிரிகள், பிற்போக்காளர்கள், கொல்லப்படவேண்டியவர்கள் என்பது கம்யூனிஸ்டுகளின் கொள்கை.

சீன கம்யூனிஸ்டு கட்சி எவ்வாறு பாலுங் காங் என்ற மதத்தினரை ஒடுக்குறார்கள் என்பதை வலைப்பதிவில் பார்க்கலாம்.

அந்த கம்யூனிஸ்டு கட்சி கொள்கைகளையே தமிழ்நாட்டு மாவோயிஸ்டுகளான மக இக, மாவோயிஸ்டு சிபிஐ ஆகிய கட்சிகள் கொண்டிருக்கின்றன.

said...

// Hari said...
Coming to the issue, Archanai done in Tamil is never/ever inferior in Hinduism. But u can't demand that it should be done only in Tamil. //

fine Hari. agree to that point. what we can do is...v can have board in all temples saying "இங்கு வடமொழியிலும் (வேணும்னா சமஸ்கிருதம்னும் போட்டுக்கலாம்) அர்ச்சனை செய்யப்படும்". anybody willing to do archana in sankskrit can opt for that.

லத்தீனில் அரபியில் கதையெல்லாம் வேலைக்கு ஆகாதுங்க. அது வேறொரு நம்பிக்கை. இந்து என்று மதத்தின் பெயரைப் போட்டுக்கொண்டிருக்கும் நான் விரும்புகிறேன் இது இப்பிடி இருக்க வேண்டும் என்று. அதற்கு என்ன பதில்?

ஏதோ பழைய முறை என்று கதை சொல்ல வேண்டாம். "கொழுவிடை குருதியொடு விரவிய செந்நெல்"...என்னன்னு பாக்குறீங்களா? திருப்பரங்குன்றம் முருகன் கோயில்ல குடுத்த பிரசாதமாம். நக்கீரர் சொல்றாரு. அது இப்ப இருக்குறத விட பழைய வழிபாட்டு முறை போலத் தெரியுதே. அப்ப அதுக்கு மாறீருவோமா?

// தமிழ் மொழியால் மட்டுமே அர்ச்சனை, மற்றும் நித்திய நைமித்திக பூஜைகள், கும்பாபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்பது. இவர்கள் கூற்று சைவ சமயப்பற்றினாலோ, தமிழ் மொழிப்பற்றினாலோ எழுந்தது அல்ல. சம்ஸ்கிருத மொழி துவேசத்தாலும், இன துவேசத்தாலும் எழுந்தது. //

அப்படியா? அப்படீன்னா குறிச்சிக்கோங்க ஜிரான்னு சொல்லப்படுறா கோ.இராகவனுக்கும் சம்ஸ்கிருத மொழித் துவேசம்னு. அடப்போங்கய்யா... ஒங்க கருத்துக்கு ஒத்து வரலைன்னா.... வெறியனா..."சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ"ன்னு படிச்சவங்க நாங்க. நீங்களும் வேண்டாம் ஒங்க கோயிலும் வேண்டாம். நெஞ்சகமே கோயில். நினைவே சுகந்தம். அன்பே மஞ்சன நீர். பூசை கொள்ளப் பராபரம் வரும். அதுக்குத் தெரியும் எங்களுக்கு இருக்குறது துவேசமா அன்பான்னு.

said...

G Ragavan,
Thanks for the timely comments.

Anonym said...

enna germano yedho puriyadha bashai varudhu .nanganallur kootu padhivaa idhu ?

samanam , boutham idheyellam azhika saivam endhamozhiyai payanpaduthiyadhu? samskridham?

indha chozha raja koyil kattiya kaalathilirundhe samskridha poojaidhan nadandhadha?

arumugasami naathigara???communistaa? ?

show democracy by publishing this comment.


you are right about one thing. in communist russia, people could not go to church without getting in trouble with kgb.

said...

தொடர்பு மொழியை ஆட்சி மொழியாக குழப்பிக் கொண்டுள்ளார் சதுக்க பூதம்.

உதாரணத்துக்கு இங்கிலாந்தில் ஒருகாலத்தில் (14-ஆம் நூற்றாண்டு) அரசவை மொழியாக ஃபிரெஞ்சும், மக்கள் தொடர்பு மொழியாக ஆங்கிலமும் இருந்திருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

சிதம்பரம் கோயில் மற்ற சிவாலயங்க்ளை போல் அரசின் நேரடி கட்டுப்பபாட்டில் இல்லாமல், தீக்சிதர்கள் வசமே பல நூற்றாண்டுகளாக (எதோ ஒரு காலகட்டத்தில் இருந்து) இருக்கிறது. இருந்தாலும் மக்களின் வரி பணத்திலும், உழைப்பினாலுமே இது கட்டபட்டிருக்கிற்து (மற்ற கோவில்க்ளைப் போலவே).

தமிழில் அர்சனை செய்யமாட்டோம் /அல்லது ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்கமட்டோம் என்று தீக்ஷிதர்கள் பிடிவாதாமாக இருப்பது ஜனனாயகமாகத் தெரியவில்லை. (பெரியாரிய வாதிகளை எதிர்பதே ஒன்றே அவரிகளின் நோக்கம் போல் தோன்றுகிறாது. ஆகம விதிகளோ, ஆன்மீக காரண்ங்களோ காரணாமில்லை போலவே தெரிகற்து) தமிலிலும், சமஸ்ஹிருததிலும் மாறி மாறி அர்சனை செய்ய அவர்கள் ஒத்துக்கொள்வதே தீர்வாகும். (மற்ற கோவில்கள் போல). முக்கியமாக யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல், ஓதுவார்களோ, மற்ற பக்தர்களோ தமிழ் திருமுறைகளை பாட அனுமதிக்க வேண்டும். தீக்சிதர்களின் பிடிவாது வேண்டும் என்றே செய்வதாகவே தோன்றுகிறது. சிவனுக்கு மொழி கிடையது (அனைத்து தெய்வங்களுக்கும்தான்). பெருவாரியான மக்கள் விரும்பினால் தமிழில் அர்ச்சனை மற்றும் திருமறை ஓதுதலை அனுமதித்த‌லே ஜனனாயகம் என்பதே என் புரிதல்.

said...

தமிழ் அரசர்களில் ஆற்றல் மிக்கவர்கள் என்று பார்க்கும் போது சோழர்கள்... குறிப்பாக ராஜ ராஜ சோழன், ராஜேந்திரசோழன் போன்ற அரசர்கள்.

கடாரம் எனும் இன்றைய பிலிப்பைன்ஸ் வரை படைதிரட்டிக் கடல் கடந்து சென்று பல தேசங்களை வென்றான் தமிழனான சோழ மன்னன்.
இன்றைக்கு மணிக்கு 900 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக அதிநவீன போயிங் 777 ஏர்பஸ் 330 விமானங்களில் பயணித்தால் தஞ்சையிலிருந்து சுமத்ரா(இந்தோநேசியா) கடாரம்(பிலிப்பைன்ஸ்) செல்ல 6 மணிநேரம்ஆகிறது. 5000 கிமீ தூரம் கடலில் செல்லத் தக்க "Sea worthyness" நிறைந்த போர்க்கப்பல் தயாரித்து அதில் பயணித்துச் சென்று வெற்றி பெற்ற தமிழ் அரசன் ராஜ ராஜ சோழன் ஆவான்.

ராஜராஜ சோழன் தனதுஆட்சியின் வெற்றியைப் பறைசாற்ற, சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரான தஞ்சையில் ஆகம விதிகளுடன் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவிலை மாஸ்டர் பீஸாக நிறுவினான்.

இத்தனை நுணுக்கமான செயலாற்றல் கொண்ட தமிழ் அரசன் ராஜராஜன் சமஸ்கிருத அறிஞர்களை வடக்கு பாரதத்தில் இருந்து விரும்பி வரவழைத்து பல நல்ல அறிவுபூர்வமான விவாதங்களை சோழதேசத்தில் நிகழ்த்தி ஆட்சி நடத்தினான்.

இன்றைக்கும் தமிழ்பிராமணர்களில் ஒருபகுதியினர் "வடமா" என்று அழைக்கப் படுபவர்கள் இருக்கின்றார்கள்.

கருணாநிதி மாதிரி அரசியல் திரா"விடப்" பெத்தடின் ஊசி குத்தும் கயவர்கள் தமிழகத்தின் ஆட்சியாளர்களாகி, கழகத்தின் உடன்பிறப்பு அல்லக்கைகளால் நவீன ராஜராஜன் என்று அழைத்துக்கொண்ட படியே தமிழர்கள் இரண்டாயிரன் ஆண்டுகளுக்கு பிராமணராலும், சமஸ்கிருதத்தாலும் ஒடுக்கப்பட்டனர் என்று கூக்குரலிடுவது கோமாளித்தனமாகவும், ராஜராஜன் போன்ற ஆற்றல் மிக்க சோழ மன்னர்கள் ஆண்ட வரலாற்றை உடைய தமிழர்களின் பாரம்பரியத்தை கேவலப்படுத்துகிறது.

காற்றடித்து குப்பை கோபுரத்தில் அமர்ந்தாலும் குப்பையே. ஈவெரா,கருணாநிதி போன்ற அரசியல் திரா"விடப்" பெத்தடின்களால் கரிய வரலாற்றை மட்டுமே தர முடியும்!

இந்தியாவில் சமஸ்கிருதம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழ்ந்த அறிஞர்கள் அனைவரையும் இணைக்கின்ற பாலமாக இருந்தது!
கோவில்களில் சம்ஸ்கிருதம் சொல்லப்பட்டன.

வடக்கே காசியில் விஸ்வநாதராகவும், தெற்கே இராமநாதராகவும் இருந்த கடவுளுக்கு பிராந்தியம் தாண்டியும் ஒரே மொழியாக இருந்து இணைத்தது சமஸ்கிருதமே.

தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, ஒரியா, மராட்டி,ஹிந்தி,பெங்காலி, பிகாரி என அனைத்து பிராந்திய மொழிகளையும் விட அறிஞர்கள், கற்றவர்களை இணைக்கும் மொழியாக சமஸ்கிருதம் இருந்தது.

இதனாலேயே ஆங்கிலேயர்கள் சமஸ்கிருதத்தையும் , சமஸ்கிருதம் வாயிலாக ஒன்றிணைந்த அறிஞர்களையும் ஒதுக்கும்படியான பிராச்சாரம், கருத்து, பிரித்தாளும் யுக்திகளை பரவலாகக் கையாண்டனர்.

இன்றைக்கு ஐந்து நூற்றாண்டுகளில் சம்ஸ்கிருதம் திட்டமிட்டு வழக்கொழிக்கப்பட்டு செத்தமொழியாக்கப்பட்டு அந்த இடத்தில் ஆங்கிலம், ஆங்கிலவழி அறிஞர்கள் இணைப்பு என்று மாறி ஆங்கிலேய அடிவருடிகளாக ஆகியிருக்கிறது!

பாரதத்தின் அக்மார்க் பாரம்பரியமான சமஸ்கிருதத்தினை மீட்டெடுக்க வேண்டியது இந்தியாவில் பிறந்த அனைவரது கடமை!

said...

/*fine Hari. agree to that point. what we can do is...v can have board in all temples saying "இங்கு வடமொழியிலும் (வேணும்னா சமஸ்கிருதம்னும் போட்டுக்கலாம்) அர்ச்சனை செய்யப்படும்". anybody willing to do archana in sankskrit can opt for that.*/

ur point is out of comparision between two languges. You want to hold one language as superior than other. I will never scream that my language is superior than anyother language. Having love for ur language is different, but what u do is not the same. But, I still stand for, If the archakar says that he won't spell the Tamil devotional hymns, then it has to be condemned.

Moreover, Sanskrit can't be called as "வடமொழி", as I said earlier, it was common for all thru out India.

/* நீங்களும் வேண்டாம் ஒங்க கோயிலும் வேண்டாம். நெஞ்சகமே கோயில். நினைவே சுகந்தம். அன்பே மஞ்சன நீர். பூசை கொள்ளப் பராபரம் வரும்.*/

As I said earlier, Even this is allowed in Hinduism. No one drags u to temple or compels u to go to temples on sunday's & friday's.

said...

ஜனனாயக வழியில் ஒரே வழி :

பார்பனரல்லாத அனைத்து பக்தர்களும்,மக்களும், டூரிஸ்டுகளும் சிதம்பரம் கோயிலை முழுமையாக பாய்காட் செய்தாலே போதும். ஒரே வாரத்தில் 'கலெக்சன்' 95 % விழுந்துவிடும். பிறகு தீக்சிதர்கள் 'வழிக்கு' வந்து விடுவார்கள். 'இனி சமஸ்கிருதமே வேண்டாம், தமிழ் என்ன, மெட்ராஸ் பாசயிலே கூட அர்சனை செய்யத் தயார்' என்று கூட சொல்லலாம். :)))))

said...

:-))

Why ? What is wrong in worshipping in Madras Tamil?

said...

/*பார்பனரல்லாத அனைத்து பக்தர்களும்,மக்களும், டூரிஸ்டுகளும் சிதம்பரம் கோயிலை முழுமையாக பாய்காட் செய்தாலே போதும். ஒரே வாரத்தில் 'கலெக்சன்' 95 % விழுந்துவிடும். பிறகு தீக்சிதர்கள் 'வழிக்கு' வந்து விடுவார்கள். 'இனி சமஸ்கிருதமே வேண்டாம், தமிழ் என்ன, மெட்ராஸ் பாசயிலே கூட அர்சனை செய்யத் தயார்' என்று கூட சொல்லலாம். :))))) */

This sort of thinking pattern is too bad. Plz grow-up

said...

பொதுவாக பிராம்மணர்கள் கோவிலில் பூஜை செய்வது ஏதோ பண இலாபத்துக்காக என்கிற அடிப்படையில் சில கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. பிராம்மணர்கள் பூஜை செய்யும் சமுதாய கோவில்கள் பலவும் அவற்றின் சொத்துக்கள் பலவும் பிராம்மணரல்லாத சாதியினர் கையில் இருக்கும் போது இது ஏதோ பிராம்மணன் பிழைக்க செய்த தந்திரம் என்பது தவறானது. வரலாற்றை பார்த்தாலும் கோவில் அக்கிரகாரத்தை விட்டுவிட்டு நகரத்துக்கு பிழைப்பு தேடி வந்த பிராம்மணன் தான் வாழ்க்கையிலும் அந்தஸ்திலும் உயர்ந்தானே தவிர கிராமங்களில் கோவில் பூசாரியாக வாழும் பிராம்மணன் பிழைப்பு போல படு தரித்திரமான பிழைப்பு காணமுடியாதது. பல பழமை வாய்ந்த பிரபலமடையாத கிராம கோவில் பிராம்மணர்கள் இந்து அறநிலைய துறையால் பணி நிரந்தரம் கூட செய்யப்படாமல் தினசரி கூலிக்காரர்களாக இருக்கின்றனர். சரித்திர பழமை வாய்ந்த பல கோவில்களில் ஒற்றை விளக்கெரிய ஒருகால பூஜை மட்டும்தான். தினப்படி சம்பளம் 15 ரூபாய். நிற்க. படையெடுப்புகள் நேர்ந்த போது தமிழகத்தின் ஆன்மிக-கலை பெருமையாக விளங்கும் தெய்வ செப்புத்திருமேனிகள் பஞ்சலோக சிலைகள் ஆகியவற்றை காப்பாற்ற கடும் சித்திரவதைகளை தாங்கி ஒரு வார்த்தை கூட பேச மறுத்து உயிர் விட்ட நூற்றுக்கணக்கான அந்தணர்களை குறித்து இன்றைக்கு குலப்பெருமை பேசும் குறிப்பு அந்தணர்களிடம் இல்லை. மாறாக படையெடுத்து வந்த மாற்று மத அரசர்களின் வரலாற்றாசிரியர்களின் விவரணங்கள் அந்த தியாகங்களை வர்ணிக்கின்றன. எனவே கலெக்ஷன் விழுந்தால் போதும் உடனே சரண்டராகிவிடுவார்கள் என்பது போன்ற ஸ்டீரியோடைப்புகள் அபத்தமானவை.

said...

Aravindan,

yes. the conditions of rural remple priests are indeed pathetic and near poverty.

but that has nothing to do with the
stubborn obsitinacy of the Chidambaram Diksidar's in not allowing Tamil in Natarajar Temple. Is this temple special or different from the thousands of other Shiva temples in TN ? Does Thillai Natarajar allow only sanskrit ? then how come so many lyrics about him in TAMIL bakthi literature ?

why this partiality ? any basis in
aakama rules, etc ? stupid traditions that alienates many people like me who are belivers.

said...

//கடாரம் எனும் இன்றைய பிலிப்பைன்ஸ் //

இது எப்போதிலிருந்து?

கேக்குறவன் கேணையனா இருந்தா கேரளா குட்டிக்கு நாலு காலு - அப்படின்னு கத்துவீங்க போல இருக்கு.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-98)

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...

இங்குள்ள தமிழ் மீது உள்ள வெறுப்பை பார்த்தல் ‘தமிழனா’ என சந்தேகம் வருது.
இல்லையென்றால் தமிழ்நாட்டுக்கு குடிவந்த தெலுங்கா இந்திக்காரரா?

தமிழ் OBC பட்டியல் இடம் பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
முஸ்லிம்கள் - இந்தி !

தமிழ் பிராமணர்கள் வீட்டில் கருணாநிதியை போல தெலுங்கு பேசுவதில்லை.

நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

வந்ததா? இல்லை.

இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.


உத்தப்புரத்தில் பாப்பான் வந்தானா ? இல்லை
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்? இல்லை..
கீரிப்பட்டியில் ? இல்லை

ஏன்? எப்படி? தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு அரசியல் வாதிகளுக்குத்தான் தெரியணும்...

said...

----------------------------------------------------

வாதீடு: 094

"உலகின் ஆதிமொலி ஆவது யாதோ?"

பொருல்:
உலகின் ஆதி காலத்தில் தோன்ரிய மொலியில், ஒரே ஒரு "க-ச-ட-த-ப, ன-ர-ல" எலுத்து வகய்யே இருந்திருக்க வேன்டும். அப்படிப்பட்ட தொன்மய்யான மொலியாக, தென்புலத்தின் தமிலு மொலி வெலங்கலாகுது என்ப.

இப்பொலுதய்ய கனினி உலகத்துக்கும், தமிலு போன்ர எலுத்து என்னிக்கய்க் குரய்வாகக் கொன்ட (19 எலுத்து) விசய்ப்பலகய்யே, விரய்வான செயல்பாட்டுக்குத் தேவய்யாக உல்லது என்ப. சிரப்பு எலுத்துக் குரியீட்டய், அரிவியல் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துதல் வேன்டும்.

----------------------------------------------------

வாதீடு: 095

"உலகின் ஆட்சிமொலி ஆவது யாதோ?"

பொருல்:
உலகின் ஆட்சி மொலி ஆவதில்,
1) அடிப்படய்யான எலுத்து விடுபடாமல் இருத்தல் வேன்டும்
(எடுத்துக்காட்டு: எ/ஏ, ஒ/ஓ),
2) எலுத்தின் என்னிக்கய் குரய்வாக இருத்தல் வேன்டும்
(எடுத்துக்காட்டு: N = ன/ண, R = ர/ற, L = ல/ள/ழ),
3) எலுத்தின் ஒரு வரி வடிவுக்கு ஒரு ஒலி வடிவம் மட்டும் இருத்தல் வேன்டும்
(எடுத்துக்காட்டு: I = அ, E = இ, U = உ, A = எ, O = ஒ),
4) ஒரு சொல்லுக்கு ஒரு பொருல் மட்டும் இருத்தல் வேன்டும்,
5) கர்ப்பதுக்கு மிகச் சுலபமானதாக இருத்தல் வேன்டும்.

----------------------------------------------------

வாதீடு: 096
"மொலியின் தனித்தன்மய் இன்பமா, துன்பமா?"

பொருல்:
1) "ஒரு மொலியில்
னானான்கு_க,
னானான்கு_ச,
னானான்கு_ட,
னானான்கு_த,
னானான்கு_ப,
உன்டு என்ப."

2) "ஒரு மொலியில்
F, Z,
உன்டு என்ப."

3) "ஒரு மொலியில்
ற, ழ,
உன்டு என்ப."

அவ்வாரு ஒவ்வொரு மொலியும் தன்னிடத்தில் சிரப்பு எலுத்தய்க் கொன்டு தனித் தன்மய்யுடன் வெலங்கினால், உலக மொலியாக, ஆட்சி மொலியாக, இனய்ப்பு மொலியாக எந்த மொலியய் ஏர்க்க இயலும்?

உலக மொலி அனய்த்திலும் உல்ல பொதுவான எலுத்தய் மட்டும், எந்த மொலி கொன்டுல்லதோ, அந்த மொலியே உலக மொலியாக, ஆட்சி மொலியாக, இனய்ப்பு மொலியாக ஆதலும் கூடும் என்பதில் அய்யம் ஏதும் உன்டோ? அப்படிப்பட்ட மொலியாக, தனித்தன்மய் னீக்கப்பட்ட மொலியாக, சிரப்பு எலுத்து னீக்கப்பட்ட மொலியாக தமிலு மொலி உல்லது.

சிரப்பு எலுத்துக் குரியீட்டய், அரிவியல் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துதல் வேன்டும்.

----------------------------------------------------

said...வாதீடு: 097
"எலுத்துப் பிலய், மொலியின் குட்ரமே"

"I (=அ), E (=இ), U (=உ), A (=எ), O (=ஒ)" என்பதே, சரியான ஒலிப்பு முரய் ஆகலாம். எந்த ஒரு மொலியின் வரி வடிவுக்கும், ஒலி வடிவுக்கும் இடய்யே குலப்பமும் வேருபாடும் இருந்திட்டால், அதிகம் படித்த மேதய்யரின் எலுத்திலேயும் கூட பிலய் ஏர்ப்படலாகும். எலுத்துப் பிலய் என்பது, மொலியின் குட்ரமே ஆகும்.

அ = I = Ice,
ஆ = II,
இ = E = English,
ஈ = EE,
உ = U = Union,
ஊ = UU,
எ = A = Age,
ஏ = AA,
ஒ = O = One,
ஓ = OO,
--------------------
க = K,
ங = G (NG),
ச = S,
ஞ = J (NJ),
ட = T,
ன = N,
த = D,
ந = H (NTH),
ப = P,
ம = M,
ய = Y,
ர = R,
ல = L,
வ = V,
--------------------
தமிலு மொலியில் ஆக மொத்த எலுத்து = 24.
இதில், உயிர் எலுத்தின் இரட்டிப்பு னெடில் எலுத்து ஆதலாலும், மெய்யெலுத்துடன் உயிரெலுத்தின் சேர்க்கய் உயிர்மெய்யெலுத்து ஆதலாலும், கனினித் தமிலு மொலியின் விசய்ப்பலகய் எலுத்து = 19 ஆகும்.

----------------------------------------------------

வாதீடு: 098
"எ-ஏ, ஒ-ஓ ஒலினுட்பம் தேவய்யே?"

பொருல்:
உலக மொலி, ஆட்சி மொலி, இனய்ப்பு மொலி எது ஆனாலும், அனய்த்துக்கும் எ-ஏ, ஒ-ஓ குரில்-னெடில் ஒலி னுட்பம் மிகத் தேவய்யானது ஆகும். இந்த ஒலி னுட்பம் ஆனது, பேச்சு உனர்தலில் (Speech Recognition) மிக முக்கியமானது ஆகும்.

உலக மொலி, ஆட்சி மொலி, இனய்ப்பு மொலி என்ரு போட்ரப்படும் மொலியில், அ_ஆ, இ_ஈ, உ_ஊ என்னும் எலுத்து வேருபாடு இருப்பது உன்டு. அது போன்ரு எ_ஏ, ஒ_ஓ என்னும் எலுத்து வேருபாடும் இருத்தல் வேன்டாமா? எ_ஏ, ஒ_ஓ எலுத்து வேருபாடு இருந்தால்தானே "எடு_ஏடு, கெடு_கேடு, ஒடு_ஓடு, கொடு_கோடு, தொடு_தோடு, எட்டு_ஏட்டு, கெட்டு_கேட்டு, தெக்கு_தேக்கு, ஒட்டு_ஓட்டு, கொட்டு_கோட்டு, தொட்டு_தோட்டு" ஆகிய சொல்லின் பொருல் வேருபாட்டய் உனர்த்துதல் இயலும்.

உலக மொலி, ஆட்சி மொலி, இனய்ப்பு மொலி எது ஆனாலும், அதிலே எ-ஏ, ஒ-ஓ குரில்-னெடில் ஒலி னுட்பம் இல்லாவிட்டால், எடு = ஏடு ஆகி, ஒடு = ஓடு ஆகி, கொடு = கோடு ஆகி, தொடு = தோடு ஆகி, எட்டு = ஏட்டு ஆகி, கெட்டு = கேட்டு ஆகி, தெக்கு = தேக்கு ஆகி, ஒட்டு = ஓட்டு ஆகி, கொட்டு = கோட்டு ஆகி, தொட்டு = தோட்டு ஆகி மொலியிலே பெருங் குலப்பம் ஏர்ப்படலாகுமே.

----------------------------------------------------

said...


----------------------------------------------------

வாதீடு: 099
"ன_ண, ர_ற, ல_ள_ழ தேவய்யோ?"

பொருல்:
எது சுலபமான மொலி ஆதல் கூடுமோ, அதுவே உலகின் பொதுவான மொலி ஆதல் கூடும் என்பதில் அய்யம் ஏதும் உன்டோ?

"WONDER" என்ர சொல்லய் = "WOன்DER, WOண்DER" என்ரும்,
"WORLD" என்ர சொல்லய் = "WOர்LD, WOற்LD" என்ரும்,
"WORLD" என்ர சொல்லய் = "WORல்D, WORள்D, WORழ்D" என்ரும்,
ஒலி னுட்ப வேருபாட்டுடன் எலுதிட்டாலும், பொருல் வேருபாடு உன்டாவது இல்லய். அதனால்
"N" என்ர எலுத்துக்கு, = "ன், ண்" என்ரும்,
"R" என்ர எலுத்துக்கு, = "ர், ற்" என்ரும்,
"L" என்ர எலுத்துக்கு, = "ல், ள், ழ்" என்ரும்,
வரி வடிவ வேருபாடு தேவய் இல்லய். அது போன்ரு

"கப்பல்" என்ர சொல்லய் = "Kaப்பல், Gaப்பல், Haப்பல்" என்ரும்,
"சங்கு" என்ர சொல்லய் = "CHaங்கு, Jaங்கு, Saங்கு" என்ரும்,
"கடல்" என்ர சொல்லய் = "கTaல், கDaல்" என்ரும்,
"தலய்" என்ர சொல்லய் = "THaலய், DHaலய்" என்ரும்,
"படம்" என்ர சொல்லய் = "Paடம், Baடம், Faடம்" என்ரும்,
ஒலி னுட்ப வேருபாட்டுடன் எலுதிட்டாலும், பொருல் வேருபாடு உன்டாவது இல்லய். அதனால்
"க" என்ர எலுத்துக்கு = "Ka, Ga, Ha" என்ரும்,
"ச" என்ர எலுத்துக்கு = "CHa, Ja, Sa" என்ரும்,
"ட" என்ர எலுத்துக்கு = "Ta, Da" என்ரும்,
"த" என்ர எலுத்துக்கு = "THa, DHa" என்ரும்,
"ப" என்ர எலுத்துக்கு = "Pa, Ba, Fa" என்ரும்,
வரி வடிவ வேருபாடு தேவய் இல்லய்.

----------------------------------------------------

வாதீடு: 100
"மொலியின் வலர்ச்சிக்கு எல்லய் உன்டோ?"

பொருல்:
சுலபமான, விரய்வான கருத்துப் பரிமாட்ரத்துக்கு ஏட்ரவாரு, சிந்தனய்க் கருவி ஆகிய மொலியய்க் காலம்தோரும் மேம்படுத்தி வருதல் வேன்டும். பனய் ஓலய்யிலும், பொன் ஏட்டிலும் எலுதப்பட்டக் காலம் கடந்து, இன்ரு கனினிக் காலம் தோன்ரி உல்லது. கனினியின் செயல் திரனய் விரய்வுபடுத்தும் வகய்யில், எலுத்தின் வரிவடிவ என்னிக்கய் மிகாதவாரு, மொலியய்ப் பேனுதல் வேன்டும்.

தமிலு மொலியில் உயிர் எலுத்தின் இரட்டிப்பு னெடில் எலுத்து ஆதலாலும், மெய்யெலுத்துடன் உயிரெலுத்தின் சேர்க்கய் உயிர்மெய்யெலுத்து ஆதலாலும், கனினித் தமிலு மொலியின் விசய்ப்பலகய் எலுத்து = 19 ஆகும். அவய் வருமாரு:
உயிர்க் குரில் எலுத்து = 5,
மெய் வல்லின எலுத்து = 5,
மெய் மெல்லின எலுத்து = 5,
மெய் இடய்யின எலுத்து = 4.

----------------------------------------------------