Montag, 8. November 2010

நான் ஏன் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல = பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்

'மனிதாபிமானவர்களாகவும் புத்திசாலியாகவும் தென்படுகிறவர்கள் ஏன் ஸ்டாலின் ஏற்படுத்திய பிரம்மாண்டமான அடிமைக்கூடாரங்களில் பாராட்டும்படிக்கு அப்படி எதைப் பார்க்கிறார்கள் என்பது எனக்குக் கொஞ்சம் கூடப் புரிவதே இல்லை '


எந்த ஒரு அரசியல் கோட்பாட்டையும் எடுத்தால் இரண்டு கேள்விகளைத்தான் கேட்க வேண்டும். 1) இதன் அடிப்படை கருத்துக்கள் உண்மையா ? 2) இதன் நடைமுறைக் கொள்கை மனித மகிழ்ச்சியை அதிகப்படுத்துமா ? எனது சிந்தனைப்படி, கம்யூனிஸத்தின் அடிப்படை கருத்துக்கள் பொய்யானவை. அதன் நடைமுறையோ மனித சோகத்தை பலமடங்கு அதிகப்படுத்துபவை.

கம்யூனிஸத்தின் அடிப்படை கருத்துக்கள் பெருமளவு மார்க்ஸிடமிருந்து பெறப்பட்டவை. எனக்கு மார்க்ஸிடம் இரண்டு வகையான ஆட்சேபங்கள் இருக்கின்றன. ஒன்று அவர் குழப்பவாதி. இரண்டாவது அவரது சிந்தனை முழுவதும் வெறுப்பினால் உணர்ச்சிவசப்பட்டவை.

முதலாளித்துவத்தின் கீழ் கூலியாட்கள் சுரண்டப்படுவதை நிரூபிக்க தயாரிக்கப்பட்ட 'உபரி மதிப்பு ' என்ற கோட்பாடு, அ) மால்தூஸின் மக்கள்தொகைக் கோட்பாட்டை ரகசியமாக ஒப்புக்கொண்டும் (மால்தூஸின் மக்கள்தொகைக் கோட்பாட்டை மார்க்ஸ் அவரது சீடர்கள் எல்லோரும் வெளிப்படையாக மறுக்கிறார்கள்) ஆ) ரிக்கார்டோவின் மதிப்பு பற்றிய கோட்பாட்டை கூலிக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டு ஆனால் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு பயன்படுத்தாமல் உருவாக்கப்பட்டது. விளைவைப்பற்றி மார்க்ஸ் திருப்தி பட்டுக்கொள்கிறார். அதன் காரணம் அது உண்மையாக இருப்பதாலோ தர்க்க ரீதியாக இருப்பதாலோ அல்ல. அது கூலிவாங்குபவர்களின் கோபத்தை அதிகப்படுத்தும் என்று கணக்கு போடப்படுவதால்தான். வர்க்கப்போராட்டங்களே வரலாற்றின் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் என்ற மார்க்ஸின் கோட்பாடு இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் நடந்த சில நிகழ்ச்சிகளை உலகம் முழுமைக்குமானதாக, அவரசப்பட்டும், பொய்யாகவும் நீட்டி விட்டதன் விளைவு. மனிதர்களின் சுய சிந்தனை என்னவாக இருந்தாலும் அவர்கள் என்ன செய்தாலும், உலகத்தில் இருக்கும் Dialectical Materialism என்ற பிரபஞ்ச சக்தி தான் உலக வரலாற்றை நிர்ணயிக்கிறது என்பதும் வெறும் மாயாஜாலம்தான். அவரது முக்கிய எண்ணம் அவரது எதிரிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பது. அந்த ஆசையில் அவர் செய்த கோட்பாட்டுத் தவறுகள் முக்கியமில்லாமல் போயிற்று. இந்தத் தவறுகளினால் அவரது நண்பர்களுக்கு நடந்த விபரீதம் பற்றி அவருக்குக் கவலையில்லாமல் போயிற்று.

மார்க்ஸின் கோட்பாடே தவறு. அதற்கு மேலாக லெனினுக்கும் ஸ்டாலினுக்கும் கீழ்நடந்த விஷயங்கள் இதை இன்னும் மோசமாக்கி விட்டன. உள்நாட்டுக்கலவரத்தின் பின்னர் நடக்கும் தொழிலாளர்களின் புரட்சிக்குப் பின்னர் ஒரு புரட்சிகர மாறுதல் காலம் ( revolutionary transitional period) இருக்கும் என்றும், எல்லா உள்நாட்டுக்கலவரங்களுக்குப் பின்னாலும் நடப்பது போல தோற்றவர்களிடமிருந்து அரசியல் சக்தி பிடுங்கப்பட்டுவிடும் என்றும் சொல்லிக்கொடுத்திருந்தார். இந்த காலம் தொழிலாளர்களின் சர்வாதிகாரம் என்றிருக்கவேண்டும். மார்க்ஸின் தீர்க்க தரிசனத்தின்படி, நாட்டின் பெரும்பகுதி மக்கள் தொழிலாளர்களான பின்னால் தான் இந்தப் புரட்சியும், தொழிலாளர்களின் சர்வாதிகாரமும் வரவேண்டும். எனவே மார்க்ஸ் சொன்ன தொழிலாளர்களின் சர்வாதிகாரம் என்பது அடிப்படையில் ஜனநாயக எதிர்ப்பு அல்ல. ஆனால் ருஷ்யாவில், 1917இல், தொழிலாளர்கள் மக்கள்தொகையில் மிகச்சிறிய பங்கினர். பெரும்பாலான் மக்கள் விவசாயிகள். வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களின் பகுதியே போல்ஷவிக் கட்சி என்பதும், அந்த கட்சியில் வர்க்க உணர்வு பெற்றவர்களே அந்த கட்சியின் தலைவர்கள் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது. எனவே, தொழிலாளர்களின் சர்வாதிகாரம், ஒரு சிறு குழுவின் சர்வாதிகாரமாகி, அதற்கும் பின்னர் ஸ்டாலின் என்ற ஒரு தனிஆளின் சர்வாதிகாரமாகி விட்டது. வர்க்க உணர்வு பெற்ற ஒரே தொழிலாளரான ஸ்டாலின், கோடிக்கணக்கான விவசாயிகளை பசியால் கொன்றார், பல கோடிக்கணக்கான தொழிலாளர்களை அடிமைக்கூடாரங்களில் (concentration camp) அடைத்து கட்டாய வேலை வாங்கினார். இன்னும் ஒரு படி அதிகமாகச் சென்று, இதுவரை இருந்த மாதிரி அல்லாமல், (laws of heredity )பிறப்பு விதிகள் இனி வேறு மாதிரி இயங்க வேண்டும் என்றும் சட்டம் போட்டார். பிற்போக்குப் பாதிரியார் மெண்டல் சொன்னமாதிரி இல்லாமல் சோவியத் முறையில் இந்த பிறப்பு விதிகள் இயங்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார். மனிதாபிமானவர்களாகவும் புத்திசாலியாகவும் தென்படுகிறவர்கள் ஏன் ஸ்டாலின் ஏற்படுத்திய பிரம்மாண்டமான அடிமைக்கூடாரங்களில் என்னத்தை பாராட்டும்படிக்கு பார்க்கிறார்கள் என்பது எனக்கு முழுக்க முழுக்க புரிவதே இல்லை.

நான் எப்போதுமே மார்க்ஸை விமர்சித்து வந்திருக்கிறேன். எனது முதல் எதிர்ப்பு விமர்சனம் 1896இல் பிரசுரிக்கப்பட்டது. நவீன மார்க்ஸியம் பற்றிய எனது விமர்சனம் மார்க்ஸ் பற்றிய எனது ஆட்சேபங்களைத் தாண்டிச் செல்கிறது. முக்கியமாக, ஜனநாயகத்தை உதறிவிடுவது, எனக்கு மிக மோசமாகத் தென்படுகிறது. ஒரு சிறுபான்மையினர் ஒரு ரகசியப்போலீஸ் வைத்துக்கொண்டு எல்லா அதிகாரத்தையும் வைத்துக்கொண்டிருப்பது எனக்குப் பிற்போக்கானதாகவும், கொடுமையானதாகவும், அடக்குமுறையாகவும் இருக்கிறது. 18, 19ஆம் நூற்றாண்டில் பொறுப்பற்ற முழு அதிகாரம் எவ்வளவு ஆபத்தானது என்பது உணரப்பட்டது. முடியாட்சியின்போது நடந்த விஷயங்களை மறந்து போனவர்கள் இன்று மீண்டும் அதே மத்திய இருண்டகாலத்தின் மோசமான பக்கங்களை முன்னேற்றத்தின் முன்னோடி என்று பிதற்றுகிறார்கள்.

பல காலம் கழிந்த பின்னர் ருஷ்யாவின் அரசு சற்று சுதந்திரத்தை அனுமதிக்கலாம் என்பதற்கான குறிகள் தென்படுகின்றன. அதற்கான வாய்ப்பு இருக்கிறதே தவிர, நிச்சயமில்லை. இதே வேளையில், கலையையும், அறிவியலையும் மதிக்கிறவர்கள், சற்றே போதுமான உணவும், தன் குழந்தை பள்ளி ஆசிரியரிடன் தன்னைப்பற்றி சொல்லிவிட்டால் சைபீரியப்பாலைவனத்தில் கட்டாய வேலை செய்ய வேண்டும் என்ற பயமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், தங்கள் நாட்டில் வளமையையும், அடிமைத்தனமில்லாத வாழ்க்கையையும் அதிகப்படுத்த வேண்டும். கம்யூனிஸத்தின் கொடுமைகளை எதிர்ப்பவர்கள் இந்த தீமையை எதிர்க்க உலகப்போரே ஒரே வழி என்று முடிவு செய்துவிட்டார்கள். ஒரு காலத்தில் அது நடக்கக்கூடியதாக இருந்திருக்கலாம். இப்போது கம்யூனிஸம் மிகுந்த சக்தி வாய்ந்ததாக ஆகிவிட்டது. உலகப்போர் நடந்தால் என்ன மிஞ்சும் என்று யாராலும் சொல்ல முடியாது. எது மிஞ்சினாலும் அது குறைந்தது இன்றைய கம்யூனிஸத்துக்கு சமமாக மோசமாகவே இருக்கும். மிக அழிவு ஏற்படுத்தும் ஹைட்ரஜன் அணு குண்டுகள் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளையோ, கோபால்ட் குண்டுகள் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளையோ அல்லது புத்திசாலித்தனமாக உருவாக்கப்படக்கூடிய தொத்துநோய்களையோ சார்ந்து இல்லை. கம்யூனிஸத்தை எதிர்ப்பதற்கு வழி போர் அல்ல. கம்யூனிஸ்ட்கள் மேற்கைத் தாக்காதவாறு போர்த் தளவாடங்களை உருவாக்கி வைப்பதோடு, கம்யூனிஸம் இல்லாத நாடுகளில் வளமையையும், மக்கள் துயர் கொள்ளும் சாத்தியங்களைக் குறைப்பதும்தான் முக்கியம். மேற்கத்திய நாடுகள் முடிந்த அளவுக்கு ஆசிய நாடுகளில் வறுமையை குறைக்க முயற்சி செய்யவேண்டும். நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆசியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்ததனால் ஆசியாவில் ஐரோப்பா பற்றிய மிகுந்த கசப்புணர்வு இருக்கிறது. பொறுமையுடன் வெள்ளை மேலாதிகமின்றி அங்கு உதவிகள் செய்யப்பட வேண்டும். கம்யூனிஸம் வெறுப்பிலும், வறுமையிலும், கலவரத்திலும் தோன்றிய தத்துவம். இதன் பரவலை நிறுத்த வேண்டுமென்றால், வறுமையையும், வெறுப்பையும் குறைப்பதன்மூலமே செய்ய முடியும்.

***

ஞாபகத்திலிருந்து ஓவியங்கள் (Portraits from Memory published in 1956)

--
நன்றி திண்ணை



இது ரஸ்ஸலை அவதூறு சொல்வதன் மூலமாக மட்டுமே அவரது வாதங்களுக்கு பதில் சொல்லிவிடலாம் என்று நினைக்கும் சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கிகளுக்கு.

தமிழ்நாட்டு சிந்தனையை மீண்டும் நினைவு படுத்துகிறேன்

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

அவர் யாரை வைத்துகொண்டிருந்தார், என்ன ஜாதி, தண்ணி அடிப்பாரா என்பதையெல்லாம் வைத்து விவாதம் பண்ணும் வினவு, மக இக கைக்கூலி கும்பல்களுக்கு இந்த வாதங்களெல்லாம் பிரயோசனமில்லை.

சரியாக விவாதம் செய்ய மூளை வேண்டுமே. அதுதான் அந்த கைக்கூலி கும்பலிடம் கிடையாதே.

3 Comments:

ரகுவீர் said...

ஆழமான கருத்துக்கள்.

தேடி எடுத்துகொடுத்த உங்களுக்கு நன்றி

ஏழர said...

அவருதான் ஒரு உளவாளின்னு சொல்லிட்டமில்லை? அப்புறம் என்ன?

said...

சரிங்கண்ணா.. ஆனா பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் என்ன சொன்னாருன்னு படிச்சிங்களாண்ணா?