Freitag, 27. März 2009

ஹீரோ - மலிவின் பயங்கரம்

முஞ்சாலின் கனவை நனவாக்குவதற்கு பஞ்சாபின் காங்கிரஸ்வாலாக்கல் ஓடோடி வந்தார்கள். லூதியானாவில் இருபோகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் சுமார் 50 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து வம்படியாக பிடுங்கி பேருக்கு நிவாரணத்தொகை கொடுத்துவிட்டு மலிவு விலைக்கு முஞ்சாலிடம் விற்றார்கள். இதுபோக முஞ்சாலுக்கு சில கோடி கடன், மற்ற சலுகைகள் என தீபாராதனை திவ்யமாக நடந்தது. என்ன ஏது என தெரியாமல் தமது நிலங்களை காங்கிரஸ் அரசு பிடுங்கியதைக் கண்ட விவசாயிகள் அதை எதிர்த்து போர்க்குணத்துடன் போராடினார்கள். அதையும் மீறி முஞ்சால், தமது பங்காளி காங்கிரஸுடன் இணைந்து ஆலையை நிறுவினார்.

ஆக ஊரைக் கொள்ளையடித்து ஆடம்பரத் திருமணத்தில் கிடா வெட்டி மக்களுக்கு இலவச விருந்து அளிக்கும் கதைதான் இங்கும் நடந்திருக்கிறது. இவ்வளவு சலுகைகள், கடன் தொகை, இலவசமான அடிப்படை வசதிகள் எல்லாம் இருந்தால் ஹீரோ சைக்கிளை ஒரு ஆயிரம் ரூபாய்க்கு பதில் இலவசமாகவே அளிக்கலாமே? ஆம் சைக்கிளுக்கு நாம் கொடுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு பின்னால் நமது பணம் இரண்டு ஆயிரம் ஏற்கனவே பிடுங்கப்பட்டிருக்கிறது.

ஹீரோ சைக்கிள் ஆண்டுக்கு 2.50 இலட்சம் சைக்கிள்களும், பின்னர் அது 5 இலட்சமாக உயர்த்தி உற்பத்தி செய்யப்படுமாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் திட்டமும் உண்டு.

விவசாயிகளுக்கும், சிறு தொழில் செய்யும் முதலாளிகளுக்கும், கல்விக்காக மாணவர்களும் கடனுக்காக வங்கி சென்றால் ஆயிரம் கேள்விகளையும், அலைக்கழிப்புக்களையும் சந்திக்கும் மக்கள் இருக்கும் நாட்டில் ஒரு முதலாளிக்கு மின்னல் வேகத்தில் எவ்வளவு பெரிய சலுகைகள், கடன்கள்?

ஹீரோ சைக்கிளின் பின்னே இப்படி அப்பட்டமான கொள்ளையும், சுரண்டலும் இருப்பதுதான் அதன் மலிவு விலைக்கு காரணம். பொதுத் துறைகளை தனியார் முதலாளிகளுக்காக நசிய விட்டு பின்னர் தவிட்டு ரேட்டில் விற்பனை செய்யும் நாட்டில் ஒரு முதலாளிக்கு ஒரு கோடி ரூபாய் இனாமென்றால் இந்த நாட்டை ஆள்வது யார்? தரகு முதலாளிகளா, இல்லை ‘ மக்களால்’ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா?

தனது விளம்பரத்தில் பல வசதிகள் இருப்பதாக புனைந்துரைக்கும் முஞ்சாலின் ஹீரோ சைக்கிள் crash test எனப்படும் விபத்து சோதனையை மட்டும் செய்து சான்றிதழ் வாங்கவில்லையாம். இதன் பல உறுப்புக்கள், இணைப்புக் கருவிகள் மலிவான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருப்பதால் டாடா இந்த சோதனைக்கு தயாராக இல்லை. அதாவது இந்தக் சைக்கிளை ஒரு ஆள் கல்லை போட்டுக்கூட மோதி பொடிப்படியாக நொறுக்கி விடலாம். ஏழை வர்க்கம் சுலபமான வழியில் பரலோகம் செல்லும் வசதியை ஹீரோ சைக்கிள் ஏற்படுத்தித் தருகிறது.

உலகமெங்கும் பொருளாதார வீழ்ச்சிக்காக தொழில்துறையே நசிந்து வரும வேளையில் ஹீரோ சைக்கிள் அறிமுகம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். மேலும் இந்த சைக்கிளை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் முஞ்சாலுக்கு இருக்கிறதாம். 2011 ஆம் ஆண்டு விபத்து சோதனை உட்பட எல்லா சோதனைகளிலும் வென்று ஐரோப்பாவின் மலிவான சைக்கிள் என நானோ விற்கப்பட இருக்கிறதாம். வெள்ளைக்காரனது உயிருக்கு மட்டும் அவ்வளவு எச்சரிக்கைகள்! அதை பரிசோதிப்பற்கு இந்தியனின் உயிர்! பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களது சோதனைகளுக்கு இந்திய மக்களை எலிகளைப் போலப் பயன்படுத்துவது போல முஞ்சாலும் செய்கிறது.

இந்தியாவின் பொதுப்போக்குவரத்திற்கு பயன்படும் வாகனங்கள் மொத்த வாகனங்களில் ஐந்து சதவீதமென்றால் இதைப் பயன்படுத்தும் மக்களின் சதவீதம் 70. ஆனால் மொத்த வாகனங்களில் 70 சதவீதததைப் பிடித்திருக்கும் தனியார் வாகனங்கள் அல்லது சைக்கிள்கள் இன்று மக்களில் 1 சதவீதம் பேருக்குத்தான் பயன்படுகிறது. எனில் ஹீரோ சைக்கிளால் ஏமாறப்போவது பெரும்பான்மை மக்கள்தான். அடுத்த வேளை சாப்பாட்டுக்கே லாட்டிரி அடித்துக்கொண்டிருக்கும் ஏழைகள் ஆயிரம் ரூபாய் கொடுத்து சைக்கிள் வாங்கப்போகிறார்களா? யாருக்கு இந்த திட்டங்கள்?

அமெரிக்காவின் போர்டு முதலாளிக்காக அங்கே பொதுப் போக்குவரத்து திட்டமிட்டே ஒழிக்கப்பட்டு கார் என்பது அத்தியாவசியப் பொருளாக மாற்றப்பட்டது. அப்போதும் திவால் நிலைக்கு வந்திருக்கும் போர்டு கம்பெனிக்கு அமெரிக்க அரசு நிவாரணத் தொகை வழங்கி காப்பாற்றுகிறது. இந்தியாவில் தொழிலை ஆரம்பிப்பதற்கே அரசு போட்டி போட்டுக்கொண்டு பணத்தை வழங்குகிறது. இரண்டிற்கும் பெரிய வேறுபாடில்லை.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஹீரோ சைக்கிளின் மலிவும், அரசியலும், திரைமறைவுச்சதிகளும், ஒன்றை வெளிப்படையாக தெரிவிக்கின்றன. அது இந்திய மக்களை அவர்களுக்கே தெரியாமல் சுரண்டுவதில் வலதும் இடதும் சேர்ந்து தரும் ஆதரவில் முதலாளிகளின் ஆட்சிதான் இங்கு நடக்கிறதென உணர்த்துகின்றது.

ஆயிரம் ரூபாய்க்கு சைக்கிளா என வாய் பிளப்பவர்களின் மூளைக்கு இந்த விளம்பரத்தையும் , கட்டுரையையும கொண்டு செல்லுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.




பின்னூட்டங்கள்.
commie.basher, மேல் மார்ச் 25th, 2009 இல் 14:28 சொன்னார்:
ஏழைகளை ஏழைகளாக வைத்திருந்தால் தான் கம்யூனிசம், சோசியலிசம் போன்ற கொள்கைகள் உயிருடன் இருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் உங்களைப்போன்ற ஏழைகளின் “தோழர்கள்” ஹீரோ சைக்கிளுக்கு காட்டும் எதிர்ப்பு.




rudhran, மேல் மார்ச் 25th, 2009 இல் 14:59 சொன்னார்:
“ஏழைகளை ஏழைகளாக வைத்திருந்தால் தான் கம்யூனிசம், …”
ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு ஏழைகள் காத்திருந்தால், நாடு நலம் பெறும் என்று நம்புவோர்க்கு, என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது..சங்கு ஊதுவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை




kalagam, மேல் மார்ச் 25th, 2009 இல் 15:25 சொன்னார்:
டாக்டர்,

அருமையான பதில்.செருப்பால அடிச்சமாதிரி.

ஏழைகளை ஏழைகளா வச்சுருக்கிறதுதான் கம்யூனிசம்மாம்- என்னதத்துவம்
ஆமா முதலாளத்துவத்துலதான் ஏழைகளே கிடையாதோ. வேலை கொடுன்னு கேட்டா அது தப்பு, நாட்டை ஏண்டா அன்னியனுக்கு விக்குறன்னு கேட்டா தப்பு,விவசாய நிலத்த பறிக்காதன்னு சொன்னாதப்பு இல்லையா, கண்ணு ஆயிர ரூபா சைக்கிளை கண்ணுல காட்டிட்டு கண்ண(விவசாயத்த) புடிங்கிட்டு போயிட்டானே முஞ்சால். இப்புடி அவுனுக்கு ஜால்ராதட்டுறீங்கலே விவசாயத்த அழிச்சபின்னாடி என்னயா தின்னுவீங்க , நீங்க போடச்சொல்லுறீங்களே அந்த காட்டாமணக்க கரைச்சுதான் உங்க வாயில ஊத்தணும்



அர டிக்கெட்டு !, மேல் மார்ச் 25th, 2009 இல் 15:12 சொன்னார்:
//ஒரு பக்கப் பார்வை என்பது தெளிவாக விளங்குகிறது.//

மன்னிக்கவும் ராஜாநடராஜன், இது எப்படி ஒரு பக்கப்பார்வையாகும்… ஆயிரம் ரூபாய் சைக்கிள்..ஆஹா ஓஹோ என புகழ்வது ஒரு பக்கம்…அதன் பின்ன்னியை விளக்கும் இந்த பதிவு மறுபக்க பார்வையல்லவா? இதில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களை மறுக்க முடியுமா? இத்தனைக்கும் பஞ்சாபில் நடந்த அக்கிரமங்களை முழுவதுமாக கூறவில்லை இந்த பதிவு….! அப்படியே ஒரு தலைபட்சம் என நீங்கள் கருதினால் அது எது என எழுதுங்கள் அல்லது நடுநிலையாக நீங்கள் கருதுவதை எழுதுங்கள். உங்களிடமிருந்து இது போன்ற ஆக்கங்களைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.



commie basher sucks !, மேல் மார்ச் 25th, 2009 இல் 15:31 சொன்னார்:
//ஏழைகளை ஏழைகளாக வைத்திருந்தால் தான் கம்யூனிசம், சோசியலிசம் போன்ற கொள்கைகள் உயிருடன் இருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் உங்களைப்போன்ற ஏழைகளின் “தோழர்கள்” ஹீரோ சைக்கிளுக்கு காட்டும் எதிர்ப்பு.//

யோவ் அனானி என்னையா தமாசு இது? எந்த ஏழைய்யா ஆயிரம் ரூவா குடுத்து சைக்கிள் வாங்கரான்? இல்ல ஆயிரம் ரூபா இருந்தா சைக்கிள்தான் வாங்குவானா? இல்ல ஆயிரம் ருவா சைக்கிள் வாங்குனா அவன் ஏழ்மை போயி பணக்காரன் ஆயிடுவானா? உங்களுக்கு சோசலிசம் மேல காண்டா இருக்கலாம் அதுக்காக இப்படி வந்து உளரக்கூடாது. போய் பதிவ படிச்சிட்டு விவரங்கள சேலஞ்சு பண்ணு…ம் டைம் ஆவுது!


பாலா, மேல் மார்ச் 25th, 2009 இல் 19:34 சொன்னார்:
அட்டகாசமான பதிவு… ஒரு ரூபாய்க்கு புளுத்த அரிசி திங்குற மக்கள் இருக்குற நாட்டுல என்ன **ருக்குடா ஆயிரம் ரூபா சைக்கிள்? வயிறு எரியுது…இதவிட நம்மள கேவலப்படுத்த முடியாது!



- மா.சே -, மேல் மார்ச் 25th, 2009 இல் 20:20 சொன்னார்:
நச்!


ரிலையன்ஸ் சேர்மேன், மேல் மார்ச் 26th, 2009 இல் 00:32 சொன்னார்:
யோவ் டுபுக்குபிதா,

5லட்ச ரூபாய்க்கு கார் தயாரிக்குற உன்டாய் கம்பேனியிலேயே 1000 பேர் வேல செய்யல நீ இன்னா பிலிம் காட்ற..

நீ முஞ்சால் கம்பெனி டைரக்டரா? போடாங்…

- ரிலையன்ஸ் சேர்மேன்



vanthiyan, மேல் மார்ச் 27th, 2009 இல் 12:48 சொன்னார்:
அட‌ வீணாப்போன‌வ‌னே. நீயெல்லாம் என்னத்த ப‌டித்து என்னத்த‌ செய்ய? என்ன‌மோ முஞ்சால் அவ‌ன் கையில் உள்ள‌ ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து ஒரு ஆயிரம் ரூபாய் சைக்கிள் கொடுப்ப‌துபோல் பேசுகிறாய்? எல்லாம் ந‌ம்ம‌ ப‌ண‌ம்.
உங்க‌ வீட்டிலிருந்து அரிசி கொண்டுவா நான் உமி கொண்டுவாரேன் அப்புறம் ஊதி பிரிச்சு ஆளுக்குப் பாதி இந்த‌ செல‌வுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் போதும் அப்ப‌டின்னு சொன்னா இந்தியா முன்னேறுகிற‌து. அரிசி[கார்] ஏற்றும‌தி அதனால புள்ளி உய‌ருது, அத‌னால‌ நாட்டில் வ‌றுமை இல்லாம‌ல் 30கோடிப்பேர் வ‌றுமை கோட்டிற்கு கீழ் வாழ்வார்க‌ள், இதெல்லாம் ஏன்? என்று கேட்டால் இந்த‌ புத்திசாலி, அவ‌ர்க‌ளெல்லாம் உயிரோடு தானே இருக்கிறார்க‌ள்.. என்று ப‌தில்சொல்லும். சும்மா குருட்டும‌ன‌ப்பாட‌ம் செய்யாம‌ல் கொஞ்ச‌ம் புரிந்துப‌டி…

பதில்


Dharan, மேல் மார்ச் 26th, 2009 இல் 06:07 சொன்னார்:
வெளிநாட்டுக்காரன் முதலீடு செய்தால் காலனியாக்குகிறார்கள் என்று கூப்பாடு.

உள்நாட்டுக்காரன் முதலீடு செய்தால் முதலாளித்துவம் என்று கூப்பாடு.

இதற்குப் பெயர்தான் கம்யூனிசமோ??

பதில்


வேலன், மேல் மார்ச் 26th, 2009 இல் 06:55 சொன்னார்:
ஹீரோ சைக்கிள்
- மத்திய தர மக்கள் நா anti-ஹீரோ சைக்கிள் என சொல்லும் நாள் விரைவில் வரும். கெட்டிகாரன் புளுகு எட்டுநாளைக்கு என்பார்கள். பார்ப்போம்.தங்கள் கட்டுரையும் விளக்கமும் சூப்பர்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

பதில்


தமிழ்குறிஞ்சி, மேல் மார்ச் 27th, 2009 இல் 17:46 சொன்னார்:
//ஒரு ஆயிரம் ரூபாய்க்கு சைக்கிளா என வாய் பிளப்பவர்களின் மூளைக்கு இந்த விளம்பரத்தையும் , கட்டுரையையும கொண்டு செல்லுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.//
இக்கட்டுரையை “தமிழ்குறிஞ்சியில்” வெளியிட்டுள்ளோம்.



21 Comments:

said...

//அமெரிக்காவின் போர்டு முதலாளிக்காக அங்கே பொதுப் போக்குவரத்து திட்டமிட்டே ஒழிக்கப்பட்டு கார் என்பது அத்தியாவசியப் பொருளாக மாற்றப்பட்டது.//

இது வினவு எழுதியது.

அப்படியானால் ஸ்டாலினும் குற்றவாளியா?

The place of Gorkovsky (Gaz) automobile works is in the front rank. Started in 1929 the works soon signed an agreement with American Ford Motors on technical help and cooperation to produce Ford-A class passenger cars in the Soviet Union.
1928இல் ஸ்டாலின் போர்டுக்கு தந்தி அடித்து அய்யா இங்கே வந்து இரண்டு கார் கம்பெனிகளை உருவாக்குங்கள். உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் நான் தருகிறேன் என்று ஒப்பந்தம் போட்டான்.

உண்மையா இலலையா?
அப்போது விவசாயிகள் எதிர்த்தார்களா?
ஸ்டாலினை விவசாயிகள் எதிர்த்தால் என்ன செய்வான் இசுடாலின்?

இப்போ கவுந்து படுத்துக்கொள்ளுங்கள்.

valsa said...

செருப்படி பதிவு.

ஆனால் இதனால் எல்லாம் வினவு கும்பல் திருந்தும் என்று எதிர்பார்க்கிறீர்களா?அது தானே நடக்காது.

said...

நன்றி

said...

வினவு கும்பல் (!) தொழிலாளிக்கு, விவசாயிகளுக்கு பிரதிநிதிகள் என அறிவித்து, செயல்படுகிறார்கள். அதனால், கவலைப்படுகிறார்கள்.

நீங்கள் யார்? தரகு முதலாளிகளுக்கு பிரதிநிதியா? அதை அவர்கள் போல நீங்களும் அறிவிக்கலாமே?

said...

நொந்தகுமாரன், இந்தாளு ஒரு காமெடி பீசு, இவனுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டு பெரியாளாக்காதீங்க... (அவனே அவனுக்கு போட்டுக்குவான் சுய;-) )மாப்ளே தமிளு மன்னி .. என் ஆதர்சன காமெடியன் கவுண்டமனி இப்போ தமிளுமணி அந்த எடத்த புடிச்சிருவாரு போலகீதே?

said...

ஆமா அர டிக்கட்,

நொந்த குமாரம், அரடிக்கட் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டதும் நானே. :-))

வினவு என்ற அசுரன் என்ற ....,

ஏன் அர டிக்கட் என்ற பெயரில் இங்கே புலம்பவேண்டும்.

சொந்தபெயரிலேயே இந்த விமர்சனங்களை எதிர் கொள்ளலாமே?

said...

வினவு என்கிற அர டிக்கட்,

இதுக்கு பதில் சொல்லுங்களேன்...

---
//அமெரிக்காவின் போர்டு முதலாளிக்காக அங்கே பொதுப் போக்குவரத்து திட்டமிட்டே ஒழிக்கப்பட்டு கார் என்பது அத்தியாவசியப் பொருளாக மாற்றப்பட்டது.//

இது நீங்கள் எழுதியது

அப்படியானால் ஸ்டாலினும் குற்றவாளியா?

The place of Gorkovsky (Gaz) automobile works is in the front rank. Started in 1929 the works soon signed an agreement with American Ford Motors on technical help and cooperation to produce Ford-A class passenger cars in the Soviet Union.
1928இல் ஸ்டாலின் போர்டுக்கு தந்தி அடித்து அய்யா இங்கே வந்து இரண்டு கார் கம்பெனிகளை உருவாக்குங்கள். உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் நான் தருகிறேன் என்று ஒப்பந்தம் போட்டான்.

உண்மையா இலலையா?
அப்போது விவசாயிகள் எதிர்த்தார்களா?
ஸ்டாலினை விவசாயிகள் எதிர்த்தால் என்ன செய்வான் இசுடாலின்?

said...

நொந்த குமாரன்,

ஸ்டாலின் ஒரு தரகு முதலாளியா?

Anonym said...

Excellent exposure, Tamil.

Great job

Anonym said...

For every "+", there is an equal and opposite "_"

said...

so?

வீரமணி said...

ஹா ஹா ஹா ... சூப்பர்.

முதலில் ஒன்னுமே புர்யலை.. அப்புறம்தான் வினவுக்கு விட்ட டோஸ் என்று புரிந்தது.

கெளப்பிட்டீங்க...

இதுமாதிரி செருப்படி அடிச்சா அவன் ஏன் எதிர்த்து - ஓட்டு போடமாட்டான்.

said...

நன்றி வீரமணி
..

அரடிக்கட் என்னும் வினவு

..
சொல்லுங்கள் போர்டு கம்பெனியை கூப்பிட்டு ஏராளமாய் அள்ளிக்கொடுத்த ஸ்டாலின் தரகுமுதலாளிகளின் அரசியல்வாதியா? அல்லது ஊழல் பெருச்சாளியா? அல்லது மாமாவா?

சொல்லுமய்யா..

Anonym said...

www.vinavu.wordpress.com

said...

மிஷ்டர் மன்ணி போய் தூங்குங்க டைம் ஆவுது... எத்தினி தபா நீங்களே புன்னூட்டம் போட்டுகினு ஓட்ட குத்திகினு இருப்பீங்க... அதான் எவனும் சீன்டல இல்ல விடுங்க...இது பழைய காலம் இல்ல உங்கள மாதிரி கோமாளிக்கெல்லாம் பதில் சொல்ல..

said...

...............................
என்ன செய்வான் இசுடாலின்?

வினவு என்ற அசுரன் என்ற ....,

ஏன் அர டிக்கட் என்ற பெயரில் இங்கே புலம்பவேண்டும்.

ஸ்டாலின் ஒரு தரகு முதலாளியா?

இதுமாதிரி செருப்படி அடிச்சா அவன் ஏன் எதிர்த்து - ஓட்டு போடமாட்டான்.

ஸ்டாலின் தரகுமுதலாளிகளின் அரசியல்வாதியா? அல்லது ஊழல் பெருச்சாளியா? அல்லது மாமாவா?
..................

தமிளு மன்ணி டென்சன் பண்ணுறாராம்!!! கிக்கிக்கி!!!

said...

என்னாச்சி?
கால்டிக்கட் ஆயாச்சா?

said...

//தமிளு மன்ணி டென்சன் பண்ணுறாராம்!!! கிக்கிக்கி!!!
//

ஆஹா .. உங்களது மறுக்கமுடியாத எதிர்வாதம் என் வாயை அடைத்துவிட்டது..

:-)))))))

said...

ஸ்டாலின் தரகுமுதலாளிகளின் அரசியல்வாதியா? அல்லது ஊழல் பெருச்சாளியா? அல்லது மாமாவா?

said...

ஸ்டாலின் தரகுமுதலாளிகளின் அரசியல்வாதியா? அல்லது ஊழல் பெருச்சாளியா? அல்லது மாமாவா?

Anonym said...

நல்ல கேள்வி.