
நேபாள மாவோயிஸ்டுகள் சேர்வதும் பிரிவதும் நடந்து முடிந்து அதில் ஒரு குழு இன்று ஆட்சியை பிடித்துள்ளது.
ஆட்சியை பிடித்துள்ள மாவோயிஸ்டு பிரிவு ரிம் என்ற அமெரிக்க அமைப்பின் பணம், வளம் உதவி ஆகியவற்றோடு இன்று ஆட்சியை பிடித்துள்ளது.
ரிம் என்பது என்ன?
இது அமெரிக்க சி.ஐ.ஏவின் உதவியோடு உருவாக்கப்பட்ட ரெவலூஷனரி இண்டர்நேஷனலிஸ்ட் மூவ்மெண்ட் என்று கருதுகிறார்கள். நான் அப்படி கருதவில்லை. அமெரிக்க கம்யூனிஸ்டுகள் சிலரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பின்னால், சி.ஐ.ஏவால் உபயோகப்படுத்தப்படுகிறது என்று கருதலாம்.
இவ்வாறு அமெரிக்காவுக்கு விலை போன மாவோயிஸ்டுகள் பற்றி இதர மாவோயிஸ்டுகளின் புலம்பல் கீழே
http://monkeysmashesheaven.wordpress.com/2006/10/16/disband-the-rim/
இதே ரிம் அமைப்பில் உள்ள ஈரானிய மாவோயிஸ்டுகள் தற்போது ஈரானின் அரசுக்கு எதிராக அமெரிக்க உளவு நிறுவனங்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருவது ஊரறிந்த ரகசியம்.
ஏன் அமெரிக்கா மாவோயிஸ்டுகளுக்கு உதவ வேண்டும்? வியத்நாம் போரின் தோல்வியின் முடிவில் பல சிந்தனை போக்குகள் அமெரிக்க உளவு நிறுவனங்களில் இருந்திருக்கலாம். அவற்றில் ஒன்று, அமெரிக்காவே மாவோயிஸ்டுகளை உருவாக்கி அவர்கள் மூலம் தாங்கள் விரும்பும் நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அவர்கள் மூலம் அவற்றை அமெரிக்காவின் (அரை) காலனி நாடுகளாக ஆக்குவது.
இதற்காக தமிழகம் உட்பட பல இந்திய மாநிலங்களில் கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் பணம் கொட்டப்பட்டு அவை கம்யூனிஸ இயக்கங்களை தோற்றுவிக்க உதவின. கம்யூனிஸ அமைப்புகளுக்கு நேரடியாக பணம் உதவி செய்வது பல பிரச்னைகளை அமெரிக்காவுக்கு தோற்றுவிக்கும் என்பதால் இந்த வழிமுறை பின்பற்றப்பட்டது. 1980களில் இந்த முறையில் இங்கு வந்த பணத்தின் அளவும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட என்.ஜி.ஓக்களும் எண்ணிலடங்கா.
(மக இகவின் செயல்திட்டம், வரவு செலவு கணக்கு ஆகியவற்றை பொதுவில் வையுங்கள் என்று நான் கேட்பதன் காரணம் இதுதான்)
ஒரு புறம் அமெரிக்காவுக்கு எதிராக வாய்சவடால் அடித்துக்கொண்டே இருந்தாலும், ம க இ க போன்ற மாவோயிஸ்டு அமைப்புகளின் அடிப்படை நோக்கமே இந்திய ஜனநாயகத்தை உள்ளிருந்தே அழிப்பது. இந்திய ஜனநாயக அமைப்பின் பிதாமகர்களாக போற்றப்படும் தலைவர்களை தூற்றுவதன் மூலம், இந்திய ஜனநாயக அமைப்பின் அடிப்படை பிம்பங்களை உடைப்பது.
இதுவே காந்தியை கேவலப்படுத்துவது, பாரதியை கேவலப்படுத்துவது, நேருவை கேவலப்படுத்துவது, இந்திய கலாச்சாரத்தை கேவலப்படுத்துவது என்று திட்ட நோக்கில் செயல்படுத்தப்படுகின்றன.
இதன் பொருள் காந்தி, நேரு, பாரதி ஆகியோரை விமர்சிக்கக்கூடாது என்பதல்ல. காந்தி, நேரு பாரதி போன்றோரை படு கேவலமாக திட்டுவதன் மூலம் பிம்பங்களை உடைப்பது. இந்திய ஜனநாயகத்தை கேவலப்படுத்துவது. இந்திய ஜனநாயகத்தின் மூலம் பிரச்னைகளை தீர்க்க முடியாது என்று மக்களை நம்ப வைப்பது.
தான் ஒரு திறந்த புத்தகம் என்று தனது சுய சரிதையையும் அதில் தான் செய்த தவறுகள் உட்பட எழுதி வைத்த காந்தியை, அவர் எழுதி வைத்த தவறுகளினால் அவரை கேவலமாக திட்டுவது என்று செயல்படும் இவர்கள் தங்கள் செயல்திட்டத்தையோ, வரவு செலவு கணக்கையோ வெளியில் வைப்பதில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
காந்தியை விமர்சிக்கும் சிபிஎம், கண்ணியமான முறையில்தான் அவரை விமர்சிக்கிறது. ஆனால், கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களில் வளரும் தலித் சிறார்களிடம் காந்தியை கேவலமாக பாட்டுப்பாடி வெறி ஏற்றும் மக இக அமைப்புகள் செய்யும் வேலையை அது என்ன எதிர்பார்த்து இவ்வாறு செய்கிறது என்று கவனிக்க வேண்டும்.
இன்று பாராளுமன்றத்தில் தனது திட்டங்களை அரசு பேசுகிறது. அதன் திட்டங்களை எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன. பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெரும்பான்மை உள்ள கட்சி கூட பெரும்பான்மை மக்கள் விருப்பத்துக்கு எதிராக செயல்படாத ஒரு சூழ்நிலை இருக்கிறது.
ஆனால், மக இக போன்ற ரகசிய கட்சிகள், வன்முறை மூலம் தங்களை வலிமையாக்கிக்கொள்ளும் கட்சிகள், ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு பயப்படுவார்களா? நிச்சயம் மாட்டார்கள்.
சீன கம்யூனிஸ்டுகள் அமெரிக்காவின் காலில் விழுந்து கெஞ்சியபோது, சீன மக்களிடம் சீன கம்யூனிஸ்டு கட்சி அனுமதி கேட்டதா? நிச்சயம் இல்லை.
இதுதான் நேபாள கம்யூனிஸ்டுகளின் நிலையும். நேபாள மக்களின் நிலையும். நேபாள கம்யூனிஸ்டுகள் சொல்லும் ஒரு வார்த்தையையும் நம்ப முடியாது. அவர்கள் நேற்று சொன்னதை இன்று பின்பற்றுவதில்லை. இன்று சொன்னதை நாளை பின்பற்றபோவதில்லை.
கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் மூலம் பணம் பெற்று பலம் அடைந்த நேபாள கம்யூனிஸ்டுகள் மதச்சார்பற்ற அரசு என்று சொல்வதன் மூலம் மக்களை கிறிஸ்துவ மதமாற்றம் செய்யத்தான் போகிறார்கள். (நேபாளிகள் கிறிஸ்துவர்களாக ஆனால் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை). ஆனால் இதனை அவர்கள் வெளியே சொல்வதில்லை. இதுதான் பிரச்னை.
நீண்டகாலத்தில் நாகாலாந்து போலவும், மேகாலயா போலவும் கிறிஸ்துவ பெரும்பான்மை நிலங்களை இங்கு உருவாக்கி வைப்பது அமெரிக்காவின் பாப்டிஸ்டு அமைப்புகளின் நோக்கம். அதன் நீட்சியே சி.ஐ.ஏ உருவாக்கும் அமைப்புகள் (நாகாலாந்து தீவிரவாத குழுக்கள் ஒரே நேரத்தில் கம்யூனிஸம் என்றும் கிறிஸ்துவம் என்றும் பேசுவதை கவனிக்கலாம்)
சீனாவும் அமெரிக்காவும் இன்று வெளியே முனகிக்கொள்வது போல தோற்றமளித்தாலும் பொருளாதார சார்பினால், ஒருவரை விட்டு ஒருவர் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க தொழிலதிபர்களும் சீன கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் அவ்வளவு நெருங்கிய உறவு கொண்டுள்ளனர்.
அதனால்தான் பிரசண்டா தன்னுடைய பிரதிநிதியாக தன் மகன் பிரகாஷ் தஹாலை சீனாவுக்கு அனுப்பி வைக்கிறார். (புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியில் தன் மகனை விட வேறொருவரை பிரசண்டாவால் நம்ப முடியவில்லையா? அல்லது அங்கும் வம்சாவளி அரசியலா? மக இக ஆட்கள் பதில் கூறலாம்). சீனாவின் தற்போதைய ஆளும் வர்க்கம் அனுமதி தந்தால்தான் நேபாளில் எந்த செயலையும் மாவோயிஸ்டுகளால் செய்ய முடியும். அது கிடக்க, என்னிடம் கேட்டால், தற்போதைய நேபாள அரசர் ஆட்சியா, மாவோயிஸ்டுகள் ஆட்சியா என்று கேட்டால் மாவோயிஸ்டு ஆட்சியே என்று சொல்லிவிடுவேன். அது வேறு விஷயம். ஆனால், மாவோயிஸ்டுகளின் ஆட்சியின் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட துயரத்தை நேபாளிகள் அடையப்போகிறார்கள் என்ற எதிர்காலம் எனக்கு தெரியாது. ஆனால், கம்யூனிஸ்டு ஆட்சிகளின் பழைய கணக்குகளை எடுத்து பார்த்தால் எந்த வித நம்பிக்கையும் எனக்கு கிடையாது.
இதனையும் பாருங்கள்
அவர்களின் நீண்டகால திட்டங்களில் பலியாகப்போகும் ஏராளமான நேபாளிகளுக்காக நான் இன்று சிந்தும் கண்ணீரை தேக்கி வைத்து நாளை பலியாகப்போகும் ஏராளமான இந்தியர்களுக்காகவும் சிந்த வேண்டும்.
-
உபரி:
ரிம் அமைக்கும் வளையத்தை பாருங்கள்.
http://revcom.us/i/graphpage/rimmap.htm
இந்தியாவை சுற்றியும் எப்படி ஒரு வளையம் அமைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக பார்க்கலாம். வடக்கில் நேபாளம். கிழக்கில் பங்களாதேஷ், மேற்கில் ஆப்கானிஸ்தானம், தெற்கில் இலங்கை ஆகிய நாடுகளில் ரிம் ஆதரவுடன் மாவோயிஸ்டு கட்சிகள் தங்களை விஸ்தீரணம் செய்துகொண்டுள்ளதை பார்க்கலாம். இந்தியாவுக்குள்ளும் ரிம் ஆதரவு அளிக்கும் மாவோயிஸ்டுகள் இயங்குகிறார்கள். ஆனால், வெளிப்படையாக அதனை இப்போது எழுதுவதில்லை.
அடுத்து இந்த ரிம் அமைப்பின் ஆதரவில் இயங்கும் எல்லா நாடுகளும் (இத்தாலி ஒன்றைத்தவிர) மூன்றாம் உலக நாடுகளிலேயே இயங்குவதையும் பார்க்கலாம்.
மூன்றாவது, ஈரானில் உள்ள ரிம் ஆதரவு மாவோயிஸ்டு கட்சி தற்போது அமெரிக்கா ஈரானில் தாக்குதல்களை நிகழ்த்த ஆதரவுடன் இயங்குகிறது. இதனை விமர்சித்து ஒரு இந்திய மாவோயிஸ்டு பேசியிருப்பதைத்தான் மேலே இணைப்பில் பார்த்தீர்கள்.
நான்காவது திபெத் பிரச்னையில் பிரசண்டாவின் கட்சி தெளிவாக சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது ஆச்சரியத்துகுரியதில்லை என்றாலும், இது மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவளிக்கும் சக்திகளின் எதிர்பார்ப்பை பிரசண்டா கட்சி பொய்க்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். திபெத் பிரச்னை இந்தியாவின் பிரச்னை. திபெத் பிரச்னை அதிகரித்து அது சீனாவிலிருந்து பிரிவதை பல மேற்கு சக்திகள் விரும்பவில்லை. சீனாவுக்கு திபெத் ஒரு தொந்தரவு தரும் நிலையில் இருப்பதைத்தான் அவைகள் விரும்புகின்றன. திபெத் பிரச்னை தீவிரமடைந்தால், மேற்கு நாடுகளின் உற்பத்தி தொழிற்சாலையாக இருக்கும் சீனாவின் நிலை மோசமடைந்தால், மேற்கு நாடுகளின் வளமை பாதிக்கப்படும். அதனை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. திபெத் தனிநாடாக ஆனால், அது இந்திய ஆதரவுடன் இருக்கும் என்பதால்தான் இடையே செருகப்படும் கத்தி போன்று நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் ஆட்சி.
அப்போது திபெத்துக்கு ஒரு பக்கத்தில் சீனாவும் மறு பக்கத்தில் நேபாளும் இருந்து நெருக்கலாம். மேலும் நேபாள் மூலமாக இந்தியாவையும் தொந்தரவு செய்யலாம்.
இதெல்லாம் புரியாமல் விரல் சப்பிக்கொண்டு புரட்சி கனவு காணும் இந்திய மாவோயிஸ்டுகளை பார்த்து ஒரு பக்கம் பரிதாபம் பட்டாலும் மறுபக்கம் இதெல்லாம் புரியாத ஒரு கூட்டம் இந்தியாவையும் ஆண்டுகொண்டிருக்கிறதே என்று கோபமே படவேண்டியிருக்கிறது.
இந்த ஏகாதிபத்திய நாடகங்கள் மூலம் துன்பத்தை அடையும், அடையப்போகும் நேபாள மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் கண்ணீர் சிந்துவதன்றி என்னாலும் என்ன செய்ய முடியும்?
Samstag, 19. April 2008
| [+/-] |
நேபாள மாவோயிஸ்டுகள்- அமெரிக்காவின் இன்னொரு முகம் |
| [+/-] |
நண்பர் சந்திப்பு பதிவில் எழுதிய மறுமொழி |
அழுகி வரும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை!
At 10:02 AM, தமிழ்மணி said...
அன்புள்ள சந்திப்பு,
கம்யூனிஸ தத்துவம் மீது எனக்கு விமர்சனம் இருந்தாலும், சிபிஎம் சிபிஐ கம்யூனிஸ்டுகள் பகிரங்கமாக தங்கள் கொள்கைகளை கூறி பொதுக்கூட்டம் நடத்தி தங்கள் கொள்கைகளை பிரச்சாரம் செய்கின்றனர் என்பதால் அவர்கள் மீது என்னைப்பொன்ற சாதாரண தமிழர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. என்னைப் போன்ற சாதாரண தமிழருக்கு பிடிக்காத கொள்கை உடையவர்கள் என்றால் தமிழ்நாட்டில் எல்லா கட்சியினருமே இருக்கிறார்கள். யாருக்கு ஓட்டு போடுவது என்று நாங்கள் ஒவ்வொரு தேர்தலும் கட்சி மாறுவோம். ஆனால், ஜனநாயக ரீதியில் மக்களை சந்தித்து (அதனால்தான் சந்திப்பா?) அவர்களிடம் ஆதரவு கோரும் அனைவரையும், கருத்துகள் தாண்டி, என்னைப்போன்ற சாதாரண தமிழர்கள் மதிக்கின்றனர்.
நன்றி
தமிழ்மணி
--
இந்த பதிவில் நண்பர் சந்திப்பு அவர்களை நண்பர் ஏகலைவன் விவாதத்துக்கு அழைக்கிறார்
:-))


