கீழ்க்கண்ட தலைப்பில் நண்பர் அசுரன் என்னுடைய முந்தைய பதிவுக்கு பதில் எழுதியிருந்தார்.
இந்த பதில் அவரது பதிவிலும் மறுமொழியாக கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவுடமை சமூகமும், அல்பவாத தவளையின் கிணற்று விட்டமும்!!
தமிழ்மணி என்பவர் பொதுவுடமை சமூகம் குறித்து அசுரனில் வந்த கட்டுரை ஒன்றுக்கு பதில் என்ற பெயரில் ஒரு எதிர்வினை எழுதியுள்ளார். அவரது இன்னபிற உளறல்களுடன் ஒப்பிடும் பொழுது இந்த கட்டுரையில் ஓரளவு முயற்சி செய்துள்ள அதே வேளையில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் வேலையையும் செய்துள்ளார் என்பதால் இந்த வாய்ப்பை பய்ன்படுத்திக் கொள்ளும் முகமாக இந்த எதிர் கட்டுரை. அவரது சேறடிக்கும் கயமையான முயற்சி குறித்து நாம் வைத்த அனைத்து விமர்சனங்களையும் உண்மையாக்கும் வகையில் அவரது இந்த கட்டுரை இருப்பதுடன். பொதுவுடமை குறித்து அவர் எழுப்பிய அல்பத்தனமான கேள்விகளின் அடிப்படையில் ஒரு உருப்படியான சுற்றுலா செல்லும் வகையிலும் இருப்பதால இந்த கட்டுரை. மற்றபடி விவாதம் செய்யும் நோக்கம் அவருக்கு கிஞ்சித்தும் கிடையாது. அப்படி ஒரு நேர்மையான அணுகுமுறையில் இருப்பவர் என்றால் ஸ்திரமாக நின்று விசயங்களில் விவாதம் செய்ய வேண்டும். அப்படி ஒரு நடைமுறையை அவர் இது வரை காட்டவில்லை. இந்த கட்டுரையில் எழுப்பியுள்ள அடிப்படை கேள்விகளில் விவாதம் செய்ய இங்கேயே வரலாம். பிறரது பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது. அவர் வரலாம். ஏனேனில் அவரது எதிர்வினைகளைப் போலவே அவரது அனானி ஆட்டங்களும் நேர்மையின்றி உள்ளன.
தமிழ்மணியின் கட்டுரை: http://thamizmani.blogspot.com/2007/12/blog-post.html
எனது பழைய கட்டுரை: டோண்டுவின் போலித்தனம் - கம்யுனிசம்
மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு என்பதை ரொம்ப மேலோட்டமாக புரிந்து கொண்டு அவர் முதலில் பதில் சொல்கிறார். அவர் எதிர்வினை புரிந்த அசுரன் கட்டுரையின் கீழேயே கம்யுனிச சமூகத்தில் மனிதர்களிடையே எந்த அம்சங்களில் வேறுபாடு இருந்தது என்பதும் எந்த அம்சத்தில் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்(இதற்க்கும் தமிழ்மணி எதிர்வினை புரிந்துள்ளார்). குறிப்பாக ஏற்றத்தாழ்வு என்ற சொல்லாடலே தவறு.
முதலில் நன்றி
//முதல் விசயம், மனிதர்களிடையே வேறுபாடு இருந்திருக்குமா? இருந்திருக்கலாம். ஆனால் இங்கு புரதான கம்யுனிச சமூகம் என்ற அம்சத்தில் நாம் குறிப்பிடும் விசயம் இவர்கள் சொல்கின்ற வேறுபாடுகள் அல்ல. ஒரு புரதான பொதுவுடைமை சமூக கூட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினனும் கிட்டத்தட்ட ஒரே விதமான உடல், அறிவு பலமே கொண்டிருப்பர். பெரிய வேறுபாடெல்லாம் வெளி தெரிந்திருக்கக் கூடிய அளவு அங்கு நவீனமான உற்பத்தியோ வேறு நடவடிக்கைகளோ கிடையாது என்கிற போது இவர்கள் குறிப்பிடுகிற வேறுபாடுகள் குறித்த கேள்விக்கே இடமில்லை. இதே விசயம் நவீன விஞ்ஞான பொதுவுடைமை சமுதாயத்தில் எப்படி இருக்கும் என்பதை தனியாக பார்க்கலாம். புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை அப்படியே பயன்படுத்திக் கொள்வதும், வேட்டைத் திறன், இயற்கை குறித்த அறிவு உள்ளிட்டதும் மட்டுமே அங்கு அ செவர்களிநயே ஏற்படுத்தும் வேறுபாடு. இதுவும் பிரதானமாக அனுபவம் சார்ந்தது.//
இந்த வரி வரைக்கும் அவர் என்னை திட்டிக்கொண்டுதான் இருந்தாரே தவிர, வாதத்தை வைக்கவில்லை. இந்த வரி முதல்தான் அவர் வாதம் ஆரம்பிக்கிறது. ஆகவே அவர் சொல்லும் "முதல் விஷயம்" தொட்டு, என் மறுமொழியை ஆரம்பிக்கிறேன்.
முதலில் புராதன பொதுவுடமை சமுதாயம் என்பதே இல்லை என்பதுதான் என் வாதம். ஆனால் இருப்பது போல கற்பனை செய்துகொண்டு அவர் எழுதுவதை எடுத்துக்கொண்டாலும், அவர் சொல்லும் புராதன் பொதுவுடமை சமுதாயத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரே விதமான உடல், அறிவு பலமே கொண்டிருப்பர் என்று கூறுகிறார். இது நடந்திருக்கக்கூடியதா என்று சற்றே சிந்தித்துப்பாருங்கள். இன்றைக்கும் ஒரே வீட்டில் பிறக்கும் மூன்று சகோதரர்கள் ஒரே மாதிரியான உடல் பலமோ அல்லது அறிவு பலமோ கொண்டிருக்கிறார்களா? இப்படிப்பட்ட தடாலடி வரிகள் மீதுதான் கம்யூனிஸ சித்தாந்தமே அமைக்கப்பட்டிருப்பதால்தான், முதல் கோணல் முற்றும் கோணலாகிறது.
அடுத்து "பெரிய வேறுபாடெல்லாம் வெளி தெரிந்திருக்கக் கூடிய அளவு அங்கு நவீனமான உற்பத்தியோ வேறு நடவடிக்கைகளோ கிடையாது என்கிற போது இவர்கள் குறிப்பிடுகிற வேறுபாடுகள் குறித்த கேள்விக்கே இடமில்லை." என்று இன்னொரு தடாலடி வார்த்தை. ஹண்டர் கேதரர் என்று வழங்கப்படும் பழங்குடி சமூகத்திலும் ஒரு சிலரிடமே (ஷாமன்) தாவரங்கள், மிருகங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு இருக்கிறது. அது அவர்கள் வழியாக பரம்பரை பரம்பரையாகவும், அவர்கள் தலைமையின் கீழும், அந்த அறிவு மற்றவர்களிடம் கொடுக்கப்படுகிறது.
//அதாவது வளங்களின் மீதான பகிர்வு, பொது அறிவு இவை குறித்தானதாக இருக்கீறது சம்த்துவம் என்ற வார்த்தைப் பயன்பாடு. தமிழ்மணியோ அவற்றை பாத்ரூம் போவது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தி அதனை வாதம் என்ற பெயரில் வைக்கீறார். இந்த அம்சத்தில்தான்(வளங்களின் மீதான பகிர்வு, பொதுஅறிவு) மனிதர்களிடையேயான வேறுபாடு தனியுடைமை சமூகத்தில் ஏற்படுகீறது. இந்த வேறுபாடு பொதுவுடைமை சமூகத்தில் இருக்காது. பொது அறிவு விசயத்தில் இன்றைய சமூக அளவுகோல் கொண்டே அவரும் பேசுகிறார். அதாவது மனிதர்களிடையே அறிவு ஓப்பீடை வைத்து புத்திசாலி, முட்டாள் என்று பிரிக்கும் தனியுடைமை சமூக ஒப்பீடு அவரது சிந்தனைக்கு அடிப்படை. உண்மையில் இந்த ஒப்பீடு மனிதர்களிடையே முரன்பாடு இருப்பதானேலேயே உருவாகிறது. பொதுவுடைமை சமூகத்தில் இயற்கையுடனே முரன்பாடு இருக்கும். அங்கு புத்திசாலி, முட்டாள் என்று மனித்ர்களை த்ரம் பிரிக்கும் அவசியம் இருக்காது. ஏனேனில் அங்கு தனிமனிதன் என்று ஒருவனை அடையாளப்படுத்துவதற்க்கான் சமூக பொருளாதார அடிப்படைகள் தகர்க்கப் பட்டிருக்கும். அந்தளவில் அந்த சமூகத்தினுடைய பண்பாட்டு வளர்ச்சியிருக்கும்(ஒரு ஆண்டான் அடிமை சமூக பண்பாடுகள் எப்படி நமக்கு ஒவ்வாத பண்பாடோ அப்படி).//
ஏதோ ஒரு பழங்குடி சமூகத்தில் வளங்களின் மீதான பகிர்வு. பொது அறிவு என்பதில் சமத்துவம் இருக்கிறது என்று இன்னொரு தடாலடி அடிக்கிறார்கள். அப்படி இருக்குமாயின், ஏன் பல்வேறு பழங்குடி சமூகங்களின் மத்தியில் போர்கள் தோன்றுகின்றன? ஒரு பழங்குடி இனமும் மற்றொரு பழங்குடி இனமும் தங்களது ஏரியாவுக்காகவும், வளங்களுக்கான போட்டிகளுக்காகவும் போரில் இறங்குகிறார்கள். இத்தனைக்கும் ஹண்டர் கேதரர் சமூகங்கள். ஒவ்வொரு பழங்குடி சமூகமும் தங்கள் பரப்புக்காக போரில் இறங்கவும், தங்கள் ஏரியாவை காப்பாற்றிக்கொள்ளவும் போரில் இறங்கும் நிலை இருக்கும்போது, எவ்வாறு வளங்களின் மீதான பகிர்வு எண்ணமோ, அல்லது பொது அறிவில் இருக்கும் சமத்துவமோ இருக்கிறது என்று கூறவியலும்?
//ஒரு குரங்கு நெருப்பில் விழுந்த கறியின் சுவை அறிந்து அதனை விரும்பி உண்ணும் அறிவை கற்றுக் கொள்ளலாம் ஆனால் நெருப்பில் வெந்த கறியை சுவைத்த பிற்பாடு அது ஏன் அவ்வாறு சுவைக்கீறது என்று ஆய்வு செய்து நெருப்பை உருவாக்க குரங்கால் முடியுமா? மிருகங்கள் இயற்கையுடன் முரன்படுவதும் அதனை தமது தேவைக்காக வளைப்பதும் முற்றிலும் வெளி சூழ்நிலைகளால் அவற்றின் ஜீன்களில் திணிக்கப்பட்டவை. ஆனால் மனிதன் அவ்வாறல்ல வெளிச் சூழ்நிலையின் பல்வேறு அனுபவங்களை தொகுத்து ஒரு கலெக்டிவ் அனுபவத்தை வந்தடையும் ஆறாவது அறிவு பெற்றவன். இதுதான் இய்ற்கையுடன் அவன் முரன்படுவது என்ற சொற்றொடரின் அர்த்தம். இயற்கையுடன் மனிதன் முரன்படுவது என்ற இந்த கேள்வி குழந்தைகளுக்கான அறிவியல் பாடங்களில் கூட விரிவாக எளிமையாக விவரிக்கப்படும் விசயம்தான். இவையெல்லாம் தமிழ்மணிக்கு தெரியுமா என்றால், பதில் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவருககு இல்லை. ஏனேனில் நேர்மையாக விவாதம் செய்பவனுக்குத்தான் அது அவசியம். சும்மா வார்த்தைகளின் மீது தமது கருத்துக்களை திணித்து அழிவு வேலை செய்ய உத்தேசித்தவர்களுக்கு அது தேவையில்லை.//
இயற்கையுடன் முரண்படுவது என்பதற்கான புது விளக்கத்தை அவர் அளித்துள்ளார். ஜீன்கள் மூலம் கொடுக்கப்பட்டால் அது இயற்கையுடன் முரண்படுவது இல்லை. தன் அனுபவ ரீதியாக ஒருவன் கற்றறிந்த விஷயங்களை வைத்து அதன் மூலமாக அவன் செய்யும் விஷயங்கள்தான் இயற்கையுடன் முரண்படுவது என்று கூறுகிறார். நமது மூளையும் ஜீன்களால் கொடுக்கப்பட்டதுதான். அனுபவங்களை தொகுத்து சிந்திக்கும் அமைப்பும் ஜீன்களால் கொடுக்கப்பட்டதுதான். அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட கற்றுக்கொள்ளும் திறன் மனிதர்களுக்கு மட்டுமல்ல, குரங்குகளுக்கும், யானைகளுக்கும்,மற்ற விலங்கினங்களுக்கும் உண்டு. தன் அனுபவத்தின் வழியே எந்த வழியை தேர்ந்தெடுப்பது தனக்கு பிரயோசனமானது என்பது நாய்களுக்கும் தெரியும். பாவ்லோவ் பரிசோதனைகளை ஞாபகப்படுத்துகிறேன்.
அதுமட்டுமல்ல, கருவிகளை உபயோகிக்கும் விலங்குகளையும் சுட்டிக்காட்டியிருந்தேன். அவை கற்றுக்கொண்ட விஷயங்கள். ஆராய்வது என்பது மூளையின் திறனை பொறுத்தது. மூளை எங்கிருந்தோ தானாக வந்து குதிக்கவில்லை. அது ஜீன்களின் வெளிப்பாடுதான். ஆகவே குரங்குகளுக்கு ஆராயத் தெரியுமா என்பது கேள்வி அல்ல. குரங்குகளுக்கு ஆராயும் திறனுள்ள மூளை இருக்கிறதா, அந்த மூளையை உற்பத்தி செய்யும் ஜீன் உள்ளதா என்பதுதான் கேள்வி. மேலும் எல்லா மனிதர்களும் ஆராய்ச்சி செய்பவர்கள் அல்ல. உலகத்தில் முக்கால்வாசிப்பேர் முன்னோர் சொன்ன வார்த்தையை ஆராய்ச்சி செய்யாமல் பிடித்து தொங்குபவர்கள். எல்லா மனிதர்களும் நெருப்பை கண்டுபிடிக்கவில்லை. எல்லா மனிதர்களும் சக்கரத்தை கண்டுபிடிக்கவில்லை. எல்லா மனிதர்களும் ரேடியோ கண்டுபிடிக்கவில்லை.
//குடும்பம் என்கிற விசயத்தில் அந்த கட்டுரையிலிருந்த மைய்யமான ஒரு விசயத்தை வெகு வசதியாக மறைத்துவிட்டே அவர் பேசுகிறார். இதற்க்கு குரங்குகளிடையே கட்டற்ற பாலுறவு கிடையாது என்று வாதம் வைக்கிறார். ஆனால் அசுரன் கட்டுரை எந்த அம்சத்தில் பேசுகிறது என்பதை வார்த்தைகளை பிய்த்து போட்டு மறைக்கிறார். மிருகங்கள் இயற்கை தேர்வின் அடிப்படையில் பல்வேறு வடிவங்களில் தமது சமூக அமைப்புகளையும் உட்பிரிவுகளையும் வைத்துக் கொள்கின்றன. ஆனால் உடலுறவு விசயத்தில் தாயை புணர்வது தவறு, தந்தையை புண்ரக் கூடாது, தங்கை தம்பியை புணரக்கூடாது என்று விதிகள் வகுத்துக் கொண்ட வளர்ச்சி என்பதே இன்றைய குடும்பம் என்ற வடிவத்தின் ஆதி வடிவம். இந்த வடிவம் மனிதனையும் மிருகங்களையும் பிரித்துக் காட்டும் முக்கிய அம்சம் என்ற அடிப்படையில் அந்த வாதத்தை வைத்திருந்தேன். ஆனால் அதனை தனது திரிபுக்காக பயன்படுத்திக் கொண்டார் தமிழ்மணீ. எதையும் ஆழமாக படிக்காமல் சேறடிக்கும் நோக்கத்துடன் அவர் பேசுகிறார் என்று அவர் மீது வைத்த விமர்சனத்தை மேலும் மேலும் உண்மையாக்கி வருகிறார் தமிழ்மணி. கட்டற்ற பாலுறவு என்கிற அம்சத்தை எந்த விதத்தில் அசுரன் கட்டுரை அணுகுகிறது. அதை எப்படி மிருகங்களுக்கும் மனிதனுக்கும் பொருத்தி வேறுபடுத்துகிறது என்பதையெல்லாம் உள்வாங்காமலேயே வார்த்தைகளை பார்த்தவுடன் சேறடிக்க வாய்ப்பு கிடைத்த பரவசத்தில் எழுதி இப்படி அசிங்கப்படுகீறார் தமிழ்மணி. ஆக, இந்த உடலுறவு கட்டுப்பாடுகளில் மனிதன் அது வரையில் இயற்கையிலிருந்த வழக்கத்துக்கு மாறாக சென்றான் என்பதை குறித்தே இந்த பகுதி வருகிறது.//
அதற்குத்தான் மீண்டும் வருகிறேன். மிருகங்கள் போலவே மனிதனும் இயற்கை தேர்வின் அடிப்படையில்தான் தன் குடும்பத்தை அமைத்துக்கொண்டான். ஏதோ மனிதனுக்கு இயற்கை தேர்வின் தேவைகள், கட்டுப்பாடுகள் இல்லாமல் தானாக சிந்தித்து குடும்ப விதிகளை அமைத்துக்கொண்டான் என்று நினைப்பது பேதைமை. அவனது சிந்தனையும் ஜீன்களின் கட்டளைகள் மூலம் தான் அடிப்படையும் வடிவமைப்பும் நடத்தபப்டுகின்றன.
இது புரிந்துகொள்ளாமல், மார்க்ஸிஸ்டுகள், கட்டற்ற பாலுறவு சரியானதுதான், குடும்பம் அழிக்கப்படவேண்டியது, பழையவற்றை அனைத்தையும் உடைத்து தள்ளுவோம், புதியவனவற்றை கட்டுவோம் என்று ஆரம்பித்தார்கள். பழையவனவை உடைந்துதான் மிச்சம், பிறகு காலம் கடந்து பழையனவற்றை மீட்டெடுக்க ஆரம்பித்தனர்.
//
//பூகோளம், நிறம், உடலியல் ரீதியான சிறுசிறு மாற்றங்களே, ஏற்றத்தாழ்வுகளே, மிகப்பெரிதாக ஆம்ப்ளிபை ஆகி பெரிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். //
ஆம் உண்மை இது ஆதிகால இயற்கைக்கு உட்பட்டு வாழ்ந்த மனிதனிடம் இன்றைய மனிதன் இயற்கையை ஆளுமை செய்யும் அளவு வலிமை பெற்றவன். எனவே இந்த அம்சம் அவனிடம் ஏற்படுத்தும் பாதிப்பு ஓப்பிட்டளவில் குறைவே. இத்தனைக்கும் இன்றைய சமூகத்தில் மனிதன் இயற்கையுடன் முரன்படுவது தனது அறிவியல் பலத்திலும் ஓரளவு அமைப்பாக திரண்ட சமூக பலத்திலுமே. விஞ்ஞான பொதுவுடைமை சமூகத்தில் இந்த இரண்டு அம்சத்திலும் மனிதன் ஒரு சமூகமாக இன்னும் அதீதமான பலம் பெற்றிருப்பான் எனும் பொழுது இந்த அவரது எதிர் வாதத்தின் பொருத்தப்பாடு இல்லாமல் போகிறது. அவர் வரலாற்று பொருள்முதல்வாதம், இயங்கியல் குறித்து படித்தால் ஆய்வு செய்யும் முறை குறித்த அறிவு ஓரளவு கிட்டும். மற்றபடி பொதுவுடமை சமூகம் என்பதே இயற்கையுடனான முரன்பாட்டை மட்டுமே கொண்ட ஒரு சமூகம் என்ற அடிப்படையிலேயே இந்த கட்டுரை முழுவதும் உள்ளது. இதன் அர்த்தம் இயற்கையின் நேச்சுரல் செலக்ஸனுக்கும் மனிதன் ஒரு சமூகம் என்ற அளவில் அவனது அறிவு பலத்திற்க்குமான முரன்பாடே கம்யுனிச சமூக வளர்சிக்கான அடிப்படை இயங்கியல் என்பதே ஆகும்.//
எப்போதும் இருக்கமுடியாது. கற்பனையில் உருவாகும் கம்யூனிஸ சமூகங்களில் கூட சூழ்நிலை, பௌதீக பாதிப்பில்லாத மனிதன் இருக்கமுடியாது. சமூக விதிகள் பலம் பெற பெற, மனிதனின் பலம் குறைந்துகொண்டேதான் போகுமே அன்றி அதிகரிக்காது. சோசலிஸ சமூகங்களில் மனிதன் பலம் பெறுவான் என்ற வாதம், அந்த சோசலிஸ தலைவர்கள் அதிகமான சர்வாதிகாரம் பெற்றதில்தான் முடிந்ததே தவிர மனிதன் பலம் பெறவும் இல்லை. ஏன் அடிப்படை சுதந்திரம் கூட மறுக்கப்பட்டான்.
இந்த வரலாற்று பொருள்முதல்வாதம், இயங்கியல் எல்லாம் சுத்த டுபாக்கூர். வேண்டுமானால் தனியாக விவாதம் வைத்துக்கொள்வோம்.
//இங்கு தனியுடைமை என்பதை மனிதன் ஒரு சமூகம் என்ற அளவில் பொருத்திக் காட்டியே குறிப்பிடுகிறேன். ஒரு சமூக கூட்டம் என்ற அளவில் மனிதன் தனது சமூகத்துக்கு உட்பட்ட எல்லா வளங்களையும் பொதுவிலேயே வைத்துக் கொண்டான். யாரும் எதற்க்கும் சொந்தம் கொண்டாடவில்லை. ஆக இந்த அம்சத்திலும் பரவசத் திலகம் தமிழ்மணி அவுட் ஆப் கண்டக்ஸ்டிலேயே பேசுகிறார். இதனை குறிப்பிட்டு டார்வினுடைய கட்டுரை பகுதி ஒன்றையும் குறிப்பிட்டுருந்தேன். அதிலுள்ள கருத்தை விமர்சிக்க பயந்த தமிழ்மணி அதனை முன்னிட்டு முதலாளித்துவம் என்று நான் குறிப்பிட்டிருந்ததை மட்டும் சுட்டி செல்கிறார். ஒருவேளை டார்வின் அசுரனைப் போல அனானி அல்ல என்ற பயமாக இருக்கலாம். அதாவது அசுரனைப் பேசினால் அசுரன் சார்ந்த ஆட்கள் மட்டுமே வாதாடுவார்கள் டார்வினை விம்ர்சிப்பது என்பது அப்படிப்பட்டதல்ல அல்லவா?//
எந்த காலத்திலும் மனிதன் எல்லா வளங்களையும் பொதுவில் வைக்கவில்லை. அதுதான் முன்னரே சொன்னேன். குரங்குகள் டெரிடோரியல் விலங்குகள். அவைகளிலிருந்துவந்த மனிதன் எப்போது பொதுவுடமை வாதியாக இருந்தான்? வேதப்புத்தகத்தை ஓதுவதுபோல ஓதிக்கொண்டே இருந்தால் ஒப்புக்கொண்டுவிடுவேனா? ஆதாரம் காட்டுங்கள்.
அது டார்வின் எழுதியது என்று முதலில் நிரூபியுங்கள். அது டார்வின் எழுதியது அல்ல என்று நான் நிரூபிக்கிறேன்
அது டார்வின் கட்டுரையின் பகுதி அல்ல. டார்வினின் கட்டுரையாக இருந்தாலும் கூட, டார்வின் சொன்னார் என்பதாலேயே அதனை ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் எவருக்கும் இல்லை. அறிவியல் மத வெறி அல்ல. டார்வின் எழுதியது வேதமும் அல்ல.
//கடைசிவரை அசுரன் கட்டுரை எந்த அம்சங்களில் பேசுகீறதோ அது எதையும் பேசாமல் வெறுமே வார்த்தைகளை பிய்த்துப் போட்டு கம்யுனிசத்துக்கு எதிரான தனது மன அரிப்பை சொறிந்து தீர்த்து கொள்ளும் ஒரு மனநோயாளியாகவே தெரிகிறார் தமிழ்மணி.//
தவறான மேற்கோள்கள், அவசரகுடுக்கை புரிதல்கள், அறிவியல் ஆய்வை சமூகத்தின் மீது சர்வாதிகாரம் செலுத்தவும், மக்களது தனித்தன்மையை மறுத்து அவர்களை எந்திரங்களாக பார்க்கும் சமூக பரிசோதனைகளுக்கும் உபயோகப்படுத்தும் கூறுகெட்ட தனம் இவையெல்லாம் கொண்ட மனநோயாளிகளான போல்போட், ஹிட்லர், லெனின், மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரை பார்க்கும் போது என்னை மனநோயாளி என்பதை சொல்லும் இவர் நகைப்புக்கிடமானவராகத்தான் தெரிகிறார்