http://www.marxists.org/archive/marx/works/1884/origin-family/index.htm
The Origin of the Family, Private Property and the State
என்ற அபத்தமான புத்தகத்தை என்னிடம் நண்பர் தியாகு பரிந்துரைத்துள்ளார்.
படித்தேன்.
அதுவே நான் சில நாட்கள் எழுதாமல் இருந்த காரணம்.
இந்த புத்தகத்தின் விமர்சனம் இங்கே
.
முதலாவது
I. Stages of Prehistoric Culture என்ற அத்தியாயம் அப்படியே Lewis H. Morgan என்ற அமெரிக்க ஆய்வாளரின் புத்தகத்தினை அப்படியே ஒப்புக்கொண்டு எழுதப்பட்டுள்ளது.
இந்த அத்தியாயத்தில் மனித வரலாற்றின் சமூகம் மூன்று நிலைகளில் உள்ளது என்று கூறுகிறார்.
முதலாவது சேவேஜரி Savagery என்னும் நிலை. இந்த கால கட்டத்தில் மனிதன் உணவை அதன் அடிப்படை அமைப்பிலேயே சாப்பிடுகிறானாம் . அதாவது பழத்தை பழமாகவே, கனியை கனியாகவே சாப்பிடுகிறான் . குரங்கிலிருந்து சற்றே முன்னேறிய நிலை.
அடுத்து பார்பரிஸம்
Barbarism இந்த காலத்தில் கால்நடைகளை பழக்கி விவசாயம் செய்கிறான். மேன்மேலும் அதிக பொருட்களை மனித செயல்பாட்டின் மூலம் உருவாக்குகிறான்
அடுத்து சிவிலைசேசன்
- தொழில்சாலை ஆகியவற்றை செய்வது
இது சுத்த பேத்தல் என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும்
. முதலாவது இவ்வாறு மாறுவதை சமூக பரிணாமம் என்று கூறுவதை போல பேத்தல் எதுவும் இல்லை .
ஏனெனில், பரிணாமம் என்பது வளர்ச்சியை கூறுவதல்ல. மாறாக எந்த சூழ்நிலையில் அந்த பொருள் இருக்க வசதியாக இருக்கிறது என்பதை பொறுத்தது . தொழிற்சாலைகள் வைத்திருந்த நாட்டில் மீண்டும் சேவேஜரி வரலாம். விவசாயம் வைத்திருக்கும் சமூகம் (இது பார்பாரிசமாம் அதாவது காட்டுமிராண்டித்தனம் என்ற் தமிழில் சொல்வது ) தொழில்ற்சாலைகள் இருக்கும் சிவிலைசேசனுக்குத்தான் போகவேண்டும் என்ற் ஒரு கட்டாயமும் இல்லை. அது அப்படியே இருக்கவும் இருக்கலாம் . ஏன் சாவேஜரி நிலைக்கு போகவும் போகலாம்.
நேர்கோட்டில் பரிணாமம் வேலை செய்யாது.
இதில் நண்பர் தியாகு கூறிக்கொண்டிருந்த புராதன பொதுவுடமை சமுதாயம் என்பது சேவேஜரி என்பதுதான் என்று கூறுகிறார்.
பொதுவுடமை சமுதாயம் என்ற "உன்னதமான" நிலையிலிருந்து ஏன் இழிந்து பார்பாரிசம் ஆகும் என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை . முதலில் அது பொதுவுடமை சமுதாயமே அல்ல. ஆயிரக்கணக்கான பழங்குடி சமுதாயங்கள் எதிலும் பொதுவுடமை சமுதாயம் என்று இவர்கள் கற்பனை செய்யும் எதனையும் பார்க்கவே முடியாது .
அடுத்து குடும்பத்தின் தோற்றம் என்று எங்கல்ஸ் பிதற்றுவதை பார்ப்போம்.
இதுவும் லூயிஸ் மார்கன் கூறியதே. இதுவும் எங்கல்ஸ் சொந்தமாக கண்டுபிடித்ததோ அல்லது ஆராய்ந்ததோ அல்ல .
லூயிஸ் மார்கன் கூறியது வெறும் அறிவியல் தேற்றம் என்று மட்டுமே இருந்தால் யாரும் அதனை எவ்விதமாகவும் மாற்றலாம், தொடர்ந்து அதனை விவாதிக்கலாம் . அது குப்பை என்று தூக்கிப்போட்டுவிட்டும் போகலாம். சொல்லப்போனால் , லூயிஸ் மார்கனை இப்போது எத்தனை பேருக்குத் தெரியும்? ஏனெனில் அது குப்பை என்று அவருக்கு பின்னே வந்த ஏராளமான ஆய்வாளர்கள் தூக்கி எறிந்துவிட்டு போய்விட்டார்கள் .
ஆனால், அது ஒரு அரசியல் கட்சியின் கொள்கையின் அடித்தளமாக ஆகிவிட்டது என்றால், எங்கல்ஸ் ஞான திருஷ்டியில் கண்டுபிடித்து கூறியதை அப்படியே ஒப்புக்கொள்ளவும், அது விஞ்ஞானம் என்று வாதிடவும் , ஒரு பெரும் கூட்டம் கிளம்பிவிடும்.
சரி மார்கன் கூறியதை பார்ப்போம். (அதாவது எங்கல்ஸ் சுட்டு போட்டதை பார்ப்போம்)
The Consanguine Family
This is the first stage of the family and as such a primary indicator of our superior nature in comparison with animals. In this state marriage groups are separated according to generations. The husband and wife relationship is immediately and communally assumed between the male and female members of one generation. The only taboo is a sexual relationship between two generations (ie father and daughter, grandmother and father)..
எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் கூட்டாக யார் வேண்டுமானாலும் யாருடனும் செல்லலாம் என்ற நிலையில் உள்ள குடும்ப அமைப்பாம். பெற்றோர் குழந்தைகளுடன் உறவு வைத்துக்கொள்வது மட்டும் தடை செய்யப்பட்டதாம் . அதாவது ஒரு பழங்குடி சமூகத்தில் உள்ள எல்லோரும் யாருடன் வேண்டுமானாலும் இன்று படுத்துக்கொள்ளலாம். நாளை இன்னொருவருடன் படுத்துக்கொள்ளலாமாம்.
இது குடும்ப அமைப்பின் முதல் படியாம். இதுதான் புராதன பொதுவுடமை சமுதாயமான சேவேஜரி சமூகத்தின் குடும்ப அமைப்பாம் .
என்ன எழவுடா சாமி இது? பறவைகள் கூட ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பதை பார்க்கிறோம். குரங்குகளில் பல இனங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்கிறது. அதெல்லாம் தனியுடமை சமுதாயத்தின் கீழேதான் வருகிறதா ? என்ன எழவுடா இது?
The Punaluan Family
The second stage extends the incest taboo to include sexual intercourse between siblings, including all cousins of the same generation. This prevents most incestuous relationships. The separation of the patiarchal and matriarchal lines divided a family into gentes. Interbreeding was forbidden within gens, although first cousins from separate gentes could still breed.
சகோதர சகோதரிகளுடன் உறவை தடுக்கும் உறவுமுறை
The Pairing Family
The first indications of pairing are found in families where the husband has one primary wife. Inbreeding is practically eradicated by the prevention of a marriage between two family members who were even just remotely related, while relationships also start to approach monogamy. Property and economics begin to play a larger part in the family, as a pairing family had responsibility for the ownership of specific goods and property. Polygamy is still common amongst men, but no longer amongst women since their fidelity would ensure the child's legitimacy. Women have a superior role in the family as keepers of the household and guardians of legitimacy. The pairing family is the form characteristic of barbarism, as group marriage is characteristic of savagery and monogamy of civilization. However, at this point, when the man died his inheritance was still given to his gens, rather than to his offspring. Engels refers to this economic advantage for men coupled with the woman's lack of rights to lay claim to possessions for herself or her children (who became hers after a separation) as the overthrow of mother-right which was "the world historical defeat of the female sex". For Engels, ownership of property created the first significant division between men and women in which the woman was inferior.
The Monogamous Family
This form evolved out of the pairing family in the transitional period between the middle and upper stages of barbarism at the dawn of civilization. It is based on the supremacy of the man, the express purpose being to produce children of undisputed paternity. Such paternity is demanded because these children are later to come into their father's property as his natural heirs. The wife has become more subservient and the dissolution of the marriage is only possible by the will of the husband. While we cannot speak of monogamy yet in the modern sense of the word, since men were still free to have extra-marital sex as much as they wished to, Xenophon in his Oeconomus pointed out that such behavior was seen as degrading for men, and that it could harm their public image as it was frowned upon. While the Monogamous Family is not yet based on "sex-love", and is better referred to as hetaeristic, its emphasis on legitimacy and inheritance did form the basis for the monogamous relationship.
மேலே எல்லாம்
stages என்று எழுதியிருப்பதை பாருங்கள். இவ்வாறு குடும்ப அமைப்புகளை பிரிப்பதே தவறு . குடும்ப அமைப்புகள் ஒரே காலகட்டத்தில் பல்வேறுவிதமான முறைகளில் இருக்கலாம். இப்போதும் உலகெங்கும் பல்வேறுவிதமான குடும்ப அமைப்புகள் இருக்கின்றன. ஏன் தொழில்மயமான ஐரோப்பாவிலும் , அமெரிக்காவிலும் பல்வேறுவிதமான திருமண உறவுகளை பார்க்கலாம். polyandry, polygamy, polyamorous என்று பலவிதமான முறைகளில் திருமணமும் குடும்பங்களும் இருக்கின்றன . ஏன் ஓரின சேர்க்கையாளர்கள் திருமண உறவுகொண்டு குடும்பம் நடத்துவதும் அமெரிக்காவில் காணக்கூடியதே .
இவைகளை குடும்பத்தின் பரிணாம நிலைகள் என்று சொல்வது போல அபத்தம் ஏதுமில்லை!
இதைவிட பெரும் அபத்தம், குடும்பத்தையும் சொத்தையும் இணைத்து, தனியுடமைக்காகத்தான் குடும்பம் உருவானது என்ற் பிதற்றுவது.
சுருக்கமாக விக்கியில் உள்ளதை இங்கே மேற்கோள்
Family and property
Engels' ideas on the role of property in the creation of the modern family and as such modern civilization begin to become more transparent in the latter part of Chapter 2 as he begins to elaborate on the question of the monogamous relationship and the freedom to enter into (or refuse) such a relationship. Bourgeois law dictates the rules for relationships and inheritances. As such, two partners, even when their marriage is not arranged, will always have the preservation of inheritance in mind and as such will never be entirely free to choose their partner. For Engels, a relationship based on property rights and forced monogamy will only lead to the proliferation of immorality and prostitution.
The only class, according to Engels, which is free from these restraints of property, and as a result from the danger of moral decay, is the proletariat, as they lack the monetary means that are the basis of (as well as threat to) the bourgeois marriage. Without property to consider, the proletariat (male and female) is free to enter as well as dissolve any marriage whenever they wish to. Monogamy is therefore guaranteed by the fact that theirs is a voluntary sex-love relationship.
The social revolution which Engels believed was about to happen would eliminate class differences, and therefore also the need for prostitution and the enslavement of women. If men needed only to be concerned with sex-love and no longer with property and inheritance, then monogamy would come naturally.
தனியுடமைக்கும் குடும்பத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த கற்பனைகள் எங்கல்ஸ் தன்னுடைய பொதுவுடமை கனவுக்காக , கிடைத்த ஆராய்ச்சிகளை கழுத்தை பிடித்து நெரித்து வளைத்து தன் கொள்கைக்கு ஆதாரம் காட்டுகிறார்.
கணவன் மனைவி விவாகரத்து ஆகும்போது யாரிடம் என்ன சொத்து போகலாம் என்று
"பூர்ஷ்வா" க்கள் சட்டம் எழுதுவது, தனியுடமையை காப்பாற்றுவதற்காக குடும்பம் இருக்கிறது என்பதன் நிரூபணமாம் . அட கண்றாவியே.
குழந்தைகள் , பெண்கள் ஆகியோரை பாதுகாக்கத்தானே இந்த சட்டங்கள் இருக்கின்றன?
இதிலும் பெரிய கண்றாவி இருக்கிறது. அதாவது தொழிலாளர்கள் கையில் எந்த விதமான சொத்தும் இல்லாமல் இருப்பதால் , அவர்கள் திருமண உறவு கொள்வது மட்டுமே அன்பு, காதல், பாலுறவு மீது அமைந்த புனிதமான திருமணமாக இருக்குமாம்.
எப்போதையா தொழிலாளர்கள் எந்தவிதமான சொத்தும் இல்லாமல் இருந்தார்கள்?
எப்போதையா தொழிலாளர்கள் எந்தவிதமான சொத்தும் இல்லாமல் இருப்பார்கள்
( ஓகே ஓகே, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் போலிட்பரொ உறுப்பினர்கள் தவிர மற்றெல்லோருக்கும் சொத்து கிடையாது .. சரியா ?)
எத்தனைதான் சொத்து இல்லாமல் இருந்தாலும், கணவன் மனைவி உழைத்து சேமித்த பணத்தில் வாங்கிய பொருட்களை பிரித்துக்கொள்ள ஒரு அமைப்பும் சட்டமும் விதிமுறைகளும் வேண்டுமே ?
கம்யூனிஸ புரட்சி வந்ததும், வர்க்க பேதங்கள் அழிந்து, விபச்சாரம் செய்வதற்கு தேவையில்லாமல் , பெண்ணடிமை இல்லாமல் போய்விடுமாம்.
போனபோ என்று ஒரு குரங்கினம் இருக்கிறது. அந்த குரங்கினத்தில் பெண் குரங்குகள் பாலுறவை தங்களுக்கு வேண்டிய பொருட்களை பெற்றுக்கொள்ள உபகரணமாக உபயோகிக்கிறார்கள் . படித்துப்பாருங்கள்.
அந்த குரங்கினங்களில் வர்க்க பேதம் இருக்கிறதா? என்னய்யா கூத்து இது?
இந்த உளறலையா இந்த கம்யூனிஸ்டுகள் தினந்தோறும் தெண்டனிட்டு வணங்குகிறார்கள்? கஷ்டம் கஷ்டம் !
Dienstag, 27. November 2007
| [+/-] |
குடும்பம் தனியுடமை அரசு ஆகியவற்றின் தோற்றம்- எங்கல்ஸ் புத்தக விமர்சனம் |
Abonnieren
Posts (Atom)