ஒடுக்கப்பட்ட ஆண்களே, பொங்கியெழுங்கள். இழப்பதற்கு மனைவியை தவிர வேறில்லை. வெல்வதற்கு ஒரு ஆம்லெட் உண்டு.
ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக கேட்கிறேன்.. ஆம்லெட் ஆம்லெட்
நசுக்கப்பட்டவர்கள் சார்பாக கேட்கிறேன்... ஆம்லெட் ஆம்லெட்
குத்தப்பட்டவர்கள் சார்பாக கேட்கிறேன்... ஆம்லெட் ஆம்லெட்
இன்று ஒரு ஆம்லெட் தின்ன முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. காரணம் என்ன? மனைவிகளின் ஏகாதிபத்தியம் நம் நெஞ்சில் குத்துகிறது.
தரகு முதலாளிகள் விற்கும் முட்டையை ஆம்லெட்டாக நாம் அடைய முடியாமல் இன்று மனைவிகளின் அரைக்காலனியவாதம் சதி செய்கிறது. நாம் வாங்கிக்கொடுக்கும் காலணியில் அரைக்காலணி நம்மையே பதம் பார்ப்பதையே அரைக்காலனியவாதம் என்று ஆசான் எங்கல்ஸ் அன்றே முழங்கியிருக்கிறார்.
ஒரு தனிமனிதனுக்கு ஆம்லெட் இல்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்று புறப்படுவோம் முனியாண்டி விலாஸ் நோக்கி.
ஆம்லெட் புரட்சி பொங்கி எழும் இந்த வேளையில் ஆம்லெட்டுக்காக குத்துப்பட்ட தோழர் ரவிக்கு நமது வீர வணக்கத்தை செலுத்துவோம்
வாருங்கள் தோழர்களே.. ஒன்றிணைவோம். போராடுவோம்.. ஆம்லெட் நமக்கே!
Freitag, 8. Februar 2008
| [+/-] |
ஒடுக்கப்பட்ட ஆண்களே, பொங்கியெழுங்கள். இழப்பதற்கு மனைவியை தவிர வேறில்லை. வெல்வதற்கு ஒரு ஆம்லெட் உண்டு. |
Abonnieren
Posts (Atom)